சனி, 4 ஏப்ரல், 2020

தென்காசியில் ஊரடங்கு உத்தரவை மீறி மசூதியில் தொழுகை: போலீஸார் விரட்டியடிப்பு


tenkasi-people-gathered-in-mosque-to-offer-prayerhindutamil.in : கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டம் கூடுவதால் சமூக தொற்று பரவும் அபாயம் இருந்ததால் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன.
மசூதிகளில் தொழுகைக்கு தடை விதிக்கப்பட்டது. இஸ்லாமிய மத தலைவர்களும் முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே தொழுகை நடத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினர்இந்நிலையில், தென்காசி நடுப்பேட்டை பள்ளிவாசலில் அனுமதி இன்றி இன்று முஸ்லிம்கள் ஏராளமானோர் தொழுகைக்கு கூடியதாகக் கூறப்படுகிறது.

கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிப்பு? எலியைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வெற்றி

northceylon.com - Gary Gnanasangary : கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை
அமெரிக்காவில் உள்ள Pittsburgh மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாகவும் எலியைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வெற்றி கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
பேராசிரியர் ஆன்ட்ரியோ கம்போட்டா (Andrea Gambotto), லூயிஸ் ஃபாலோ உள்ளிட்டவர்கள் தலைமையிலான நிபுணர்கள் குழு இந்த மருந்தை உருவாக்கியுள்ளது.
இதே குழுவினர் 2003 ஆம் ஆண்டு சார்ஸ் நோய்க்கும் 2014 ஆம் ஆண்டு மெர்ஸ் நோய்க்கும் மருந்து கண்டுபிடித்தனர்.
தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் சார்ஸ் மற்றும் மெர்ஸ் குடும்பத்தை சேர்ந்ததாகும். எனவே, கடந்த கால மருந்து கண்டுபிடிப்பு முறையிலேயே நிபுணர்கள் குழு கொரோனாவிற்கும் மருந்து கண்டுபிடிக்க ஆய்வு நடத்தியது. அதில் அவர்கள் வெற்றி கண்டுள்ளனர்.
இந்த தடுப்பு மருந்தை எலிக்கு செலுத்தி பரிசோதித்துள்ளனர். அது வெற்றிகரமாக செயற்படுகிறது. அதாவது உடலில் கொரோனா வைரஸ் கிருமியை எதிர்த்து போராடும் ஆற்றலை உருவாக்கி அதை அழிக்கிறது. எனவே, இந்த மருந்தை மனிதனுக்கு பயன்படுத்தினால் நோய் தாக்குதலை தடுத்து விடலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

தூனீசியா ஊரடங்கை கண்காணிக்கும் ரோபோக்கள் .. இயந்திர போலீஸ்

போலீஸ் ரோபோஊரடங்கை மீறுவோரை தடுத்து நிறுத்தும் போலீஸ் ரோபோ... துனிசியாவில் புதிய முயற்சி  மாலைமலர் :துனிசியாவில் ஊரடங்கு உத்தரவை மீறும் பொதுமக்களை தடுப்பதற்காக ரோந்துப் பணியில் போலீஸ் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. துனிஸ்: கொரோனா வைரஸ் உலக நாடுகளை புரட்டிப் போட்டுள்ளது. சமூக விலகலைக் கடைப்பிடித்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்ற நிலை உள்ளது. இதற்காக பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன. இதனையும் மீறி பொதுமக்கள் பல்வேறு இடங்களில் தேவையில்லாமல் நடமாடுவதை காண முடிகிறது. அவர்களை ஒழுங்குபடுத்த போலீசார் படாதபாடு படுகின்றனர்.
இந்நிலையில், துனிசியா நாட்டின் தலைநகரில் ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் கடைபபிடிப்பதை உறுதி செய்வதற்காக ரோந்துப் பணியில் போலீஸ் ரோபோக்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. 4 சக்கரங்கள் கொண்ட இந்த போலீஸ் ரோபோக்கள் முக்கிய தெருக்களில் நிறுத்தப்பட்டுள்ளன.

சுவாமி விவேகானந்தர்: தென்னிந்தியாவில் உள்ள மக்களேதான் குரங்குகளாகவும் அரக்கர்களாகவும் வர்ணிக்கப்பட்டார்கள்!

Dhinakaran Chelliah : ராமாயணம்_பற்றி தலைவர்களின் கருத்து:
மகாத்மா காந்தி: "என்னுடைய ராமன் வேறு, அயோத்தி ராமன் வேறு. என் ராமன் சீதையின் கணவனல்ல-தசரதன் மைந்தனல்ல. ராமாயணக் கதையில் வரும் ராமனை நான் பூசிக்கவே மாட்டேன்".
சுவாமி விவேகானந்தர்: "தென்னிந்தியாவில் உள்ள மக்களேதான் குரங்குகளாகவும் அரக்கர்களாகவும் வர்ணிக்கப்பட்டார்கள்".
ஜவகர்லால் நேரு: "ஆரிய திராவிடப் போராட்டமே ராம-ராவண யுத்தம்.'இராமாயணம், மகாபாரதம் இவை அரேபிய இரவுகள் போன்ற கதைகளே தவிர வேறல்ல".
இராஜகோபாலாச்சாரியார்:"இராமன் கடவுளல்ல. அவன் ஒரு கதாநாயகன்".
கலியுக கம்பன் டி.கே.சிதம்பரநாதர் : "இராமயணம் தெய்வத்தின் கதை அல்ல. அது ஓர் இலக்கியம்".
ஹென்றி ஸ்மித்: "ராமாயணத்தில் குடிகாரர்களை சுரர்களென்றும் குடியாதவர்களை அசுரருகள் என்றும் கூறப்பட்டிருக்கிறது".
ரமேசு சந்திரதத்: "ராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ள குரங்குகள், கரடிகள் என்பவை தென்னிந்தியாவில் உள்ளவர்களை, ஆரியர் அல்லாதவர்களைக் குறிப்பதாகும்".
பண்டிதர் பி பொன்னம்பலம்: "ராமாயணக் கதையானது ஆரியர்களை மேன்மையாக கூறவும் திராவிடர்களை இழிவுபடுத்திக் கூறவும் எழுதப்பட்ட நூலாகும்".
சி. ஜே. வர்க்கி: "ராமாயணம் தென்னிந்தியாவில் ஆரியர் பரவியதையும் அதை கைப்பற்றியதையும் உணர்த்தும் நூல்".

ப்ளாக் பஸ்டர் பட வரிசையில் அதிக வசூல் சாதனை செய்த சிறு பட்ஜெட் படங்கள்

tamil.filmibeat.com/movies/ :தமிழ் திரையுலகில் சில முன்னணி நடிகர்களின் படங்கள் அதிக விளம்பரங்களோடு வெளியாகி பல ரசிகர்களால் அறியப்படுகிறது, ஆனால் சில சிறு பட்ஜெட் படங்கள் போதிய வரவேற்புகள் மற்றும் விளம்பரங்கள் இல்லாமல் திரையில் வெளியாகி வெற்றி/ தோல்வி அடைகின்றது. படத்தின் கதைக்கரு மற்றும் திரைக்கதையின் அழுத்தத்தை மட்டும் கருத்தில் கொண்டு உருவாகும் சிறு பட்ஜெட் படங்கள் மிகக்குறைவான திரை ரசிகர்களால் அறியப்பட்டாலும் பெரும்பாலும் தோல்வியை சந்திக்கிறது. இங்கு தொகுக்கப்பட்டுள்ள பட்டியலில் குறைத்த பொருட் செலவில் உருவாகி தமிழ் ரசிகர்களை கவர்ந்து அதிக வசூல் செய்து ப்ளாக் பஸ்டர் படமாக வெற்றி பெற்ற சில தமிழ் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழ் திரையுலகில் சிறு பட்ஜெட் படமாக உருவாகி அதிக வசூல் சாதனையில் வெற்றி பெற்ற சுந்தர பாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணாம், திரௌபதி ஆகிய படங்கள் உள்ளன.
;சூது கவ்வும்
(பட்ஜெட் - 2c வசூல் - 20c)

ஐவாமேக்டின் .. ஒட்டுண்ணி மருந்து கொரோனவை குணப்படுத்தும்? புதிய ஆய்வு.


 மாலைமலர் : உலகம் முழுவதும் கிடைக்கும் ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தினால் கொரோனா வைரஸை அழிக்க முடியும் என மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் உலகளவில் மிகப்பெரிய மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. உலக அளவில் 59 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த தொற்றுநோய்க்கு பலியாகி உள்ளனர்.
தற்போது இந்த நோய்க்கான தடுப்பூசியோ சிகிச்சையோ இல்லை. மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் உலகளவில் கிடைக்கக்கூடிய அங்கீகரிக்கப்பட்ட ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தான ஐவர்மெக்டின், கோவிட் -19 வைரசுக்கு எதிராக மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கண்டறிந்துள்ளதாக ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சி முடிவை வெளியிட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அமைந்துள்ள மோனாஷ் பல்கலைக்கழகத்தின் பயோமெடிசின் டிஸ்கவரி நிறுவனத்தின் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ஐவர்மெக்டின் என்ற மருந்தானது, சார்ஸ்- கோவ் 2 வைரஸை அழிக்க கூடும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நிவாரணத் தொகை ரூ.1,000 வீடு வீடாக நாளை விநியோகம்

ration cardதினமணி : தமிழகத்தில் நியாயவிலைக்கடைகள் மூலம் கரோனா நிவாரணத் தொகை ஆயிரம் ரூபாய் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 5) ஒரே நாளில் வீடு வீடாக விநியோகிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் மட்டுமே விநியோகம் செய்யப்பட உள்ளன.
இதற்கான சுற்றறிக்கையை தமிழக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஆணையா் சஜன்சிங் சவாண் வெள்ளிக்கிழமை பிறப்பித்தாா். அதன் விவரம்:-
தமிழகம் முழுவதும் உள்ள 2.01 கோடி குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நோய்த்தொற்று நிவாரணத் தொகையாக ரூ.1000 மற்றும் ஏப்ரல் மாதத்துக்கான பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதில், சா்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்கள் மட்டுமே அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், நிவாரண உதவித் தொகையை வீடு வீடாக விநியோகம் செய்ய வேண்டும்.

பிரான்சில் ஒரே நாளில் ஆயிரத்து 120 பேர் உயிரிழப்பு .. ஸ்பெயின் இத்தாலி இங்கிலாதிலும் இறப்புக்கள் அதிகம்..


மாலைமலர் : பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 120 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரான்சை புரட்டி எடுக்கும் கொரோனா - ஒரே நாளில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலி கொரோனாவுக்கு கிருமி நாசினி தெளிக்கும் காட்சி பாரிஸ்: சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 204 நாடுகளுக்கு பரவியுள்ளது.
தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஐரோப்பிய நாடான இத்தாலியில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள கொரோனா தற்போது பிரான்சில் நிலைகொண்டு வருகிறது. பிரான்சில் 64 ஆயிரத்து 338 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்நிலையில், அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் வைரஸ் தாக்குதலுக்கு ஆயிரத்து 120 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவை ஒழிக்க ஒன்றுபடுவோம்: ‘நாளை இரவு 9 மணிக்கு வீட்டு வாசலில் ஒளிவிளக்கு ஏந்தி நில்லுங்கள்’ - நாட்டு மக்களுக்கு மோடி வேண்டுகோள்

கொரோனாவை ஒழிக்க ஒன்றுபடுவோம்: ‘நாளை இரவு 9 மணிக்கு வீட்டு வாசலில் ஒளிவிளக்கு ஏந்தி நில்லுங்கள்’ - நாட்டு மக்களுக்கு மோடி வேண்டுகோள் நடந்து ஊருக்கு செல்ல முயன்ற
குடும்பம்..
பட்டினியால் தற்கொலை....
மதவாத அரசியலால் மக்களின் பிரச்சனைகளை புரிந்து கொள்ள முடியாது!
(குஜராத்-சூரத்.)
தினத்தந்தி : கொரோனாவை ஒழிக்க ஒன்றுபடும் வகையில், மக்கள் அனைவரும் நாளை இரவு 9 மணிக்கு தங்கள் வீட்டு வாசலில் ஒளிவிளக்கு ஏந்தி நிற்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்து உள்ளார். புதுடெல்லி, கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இது தொடர்பாக பிரதமர் மோடி அவ்வப்போது மாநில முதல்-மந்திரிகளை தொடர்பு கொண்டு பேசி வருகிறார். நேற்று முன்தினமும் அவர் சில மாநிலங்களின் முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் பேசினார்.
இந்த நிலையில் நேற்று காலை தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:-
இன்று கொரோனா தொற்றுக்கு எதிரான நாடு தழுவிய அளவில் கடைப்பிடிக்கப்படும் ஊரடங்கின் 9-வது நாள். இந்த காலகட்டத்தில் நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து கடைப்பிடித்த கட்டுப்பாடு மற்றும் சேவை மனப்பான்மை ஆகியவை வரலாறு காணாதது. இவை இரண்டின் உருவகமாக நீங்கள் அனைவரும் விளங்கினீர்கள்.

அம்பேத்கர் பனியனை அணிந்ததால் இளைஞனை தாக்கிய போலீஸ் ஈஸ்வரன்

ரீகன் நெ : செங்கம் தோக்கவாடியை சேர்ந்த கௌதமபிரியன் என்ற இளைஞர் அம்பேத்கர் படம் போட்ட பனியனை அணிந்துகொண்டு குப்பநத்தம் அடுத்த கிளையூர் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கு அவரது நண்பர்களை சந்தித்து பேசிக்கொண்டு இருந்துள்ளார்கள் .
அப்போதுஅந்த பகுதிக்கு வந்த காவல்துறையை சார்ந்த ஈஸ்வரன் என்கின்ற சாதி வெறியன் அம்பேத்கர் பனியனை அணிந்துகொண்டு இங்கு என்ன வேலை பறத் தேவிடியா பயலே என்று கூறி நடுத்தெருவில் முட்டி போட வைத்து இரும்பு பைப் கொண்டு தாக்கியுள்ளார் . மின்சார வயரை கொண்டும் தாக்கி உள்ளார் ...
கௌதம பிரியன் அணிந்திருந்த அம்பேத்கர் படம் போட்ட பனியனையும் கிழித்து கொளுத்தியுள்ளான்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையிடம் மனு அளித்தும் இதுவரை எந்தவிதமான விசாரணையும் நடத்தாமல் டிஎஸ்பி சின்னராஜ் என்பவர் காலதாமதம் செய்கிறார் அதோடு அந்த இளைஞனின் குடும்பத்தை மிரட்டி வருகிறார்

வெள்ளி, 3 ஏப்ரல், 2020

BBC: நாய், பூனை கறிக்கு தடை விதித்த சீன நகரம் துணி முகக்கவசங்களை பரிந்துரைக்கும் அமெரிக்கா

. நாய், பூனை கறிக்கு தடை விதித்த சீன நகரம் ஷென்ஸென் சீனாவில் பூனை மற்றும் நாய் இறைச்சி வாங்கவும் விற்கவும் தடை செய்த முதல் நகரமாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதை வன விலங்குகளின் இறைச்சியை உண்பதுடன் தொடர்புபடுத்தபட்ட பிறகு சீன அதிகாரிகள் வன விலங்குகளின் இறைச்சியை விற்பதற்கு தடை விதித்தனர். ஷென்ஸென் நகரம், வன விலங்குகளோடு நாய் மற்றும் பூனை இறைச்சியையும் விற்கக் கூடாது என தடை விதித்துள்ளது. இந்த தடை மே 1 முதல் அமலுக்கு வர உள்ளது.
1 ..அமெரிக்காவில் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் வாழும் மக்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது துணியால் ஆன முகக்கவசங்களை அணிய பரிந்துரைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் முகக்கவசங்கள் அணிவது கட்டாயமில்லை. மக்கள் அணிய வேண்டும் என்றால் அணியலாம் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நியூயார்க் நகரத்தில் இதுவரை 1,562 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு வாழ்பவர்கள் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பல மாநிலங்களில் மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 75 சதவீதத்திற்கும் மேலான அமெரிக்கர்கள் வீட்டிலேயே முடக்கப்பட்டுள்ளனர். உலகிலேயே அதிகம் பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்காவாக உள்ளது. அங்கு 2,50,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1000பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6000த்தை கடந்துள்ளது.

தமிழகத்தில் 411 பேர் கொரோனா பாதிப்பு.. இந்திய அளவில் இரண்டாவது ?


மின்னம்பலம் : தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411ஆக அதிகரித்துள்ளதாகச் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
மோடி : கொரோனாவை ஒழிக்க விளக்கு பிடிக்குக 
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதலில் 50 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்த பிறகு, கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நேற்று வரையில், 309ஆக இருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று ஒரே நாளில் 411ஆக அதிகரித்திருக்கிறது. “இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள 102 பேரில், 100 பேர் டெல்லி சென்று வந்தவர்கள். ஆனால் இன்னும் தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை” என்று பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

500 கிலோ மீட்டர் நடந்து வந்த தமிழக தொழிலாளி உயிரிழப்பு.. நாக்பூரில் இருந்து நடந்தே

மத்திய பிரேதேசத்தில் டாக்டர்கள் உட்பட சுகாதார பணியாளர்களை அடித்து துவைக்கும் மக்கள் கூட்டம்

latest tamil news
latest tamil newsதினமலர் : ஐதராபாத்: ஊரடங்கால் மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்த தமிழக தொழிலாளி, 500 கி.மீ., நடைப்பயணமாக கிளம்பினார். இந்நிலையில், தெலுங்கானாவின் செகந்திராபாத் வரும்போது பரிதாபமாக உயிரிழந்தார்.
கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது. இதனையடுத்து அத்யாவசிய சேவைகள் தவிர அனைத்து போக்குவரத்தும் தடைப்பட்டது. இதனால், வெளிமாநிலங்களில் வேலை செய்துவந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்தனர். பலர், நடைபயணமாக சொந்த ஊர் திரும்பினர். ஆனால், இருக்கும் இடத்திலேயே அனைவரும் தனித்து இருக்குமாறும், சொந்த ஊருக்கு நடந்து செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த லோகேஷ் பாலசுப்ரமணி (வயது 23) என்பவர், மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். ஊரடங்கு அமலானதால், உணவின்றி தவித்த அவர் சொந்த ஊர் திரும்ப முடிவெடுத்து, 26 பேர் கொண்ட குழுவுடன் தமிழகத்திற்கு நடைபயணம் மேற்கொண்டனர். சுமார் 500 கி.மீ., தூரம் நடந்து சென்று தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை அடைந்துள்ளனர்.

டாக்டர் காதலியை கொன்ற ஆண் நர்ஸ்.. இல்லாத கொரோனாவுக்காக ... ஏதோ சொல்ல வந்தும் ... கேட்காத முட்டாள் காதலன்

 Hemavandhana - tamil.oneindia.com : ரோம்: "என் காதலி எனக்கு கொரோனாவை
தந்துட்டு போய்ட்டாள்.. அதான் அவளுடைய கழுத்தை நெரித்து கொன்றுவிட்டேன்" என்று இளைஞர் வாக்குமூலம் தந்துள்ளார்.. இத்தனைக்கும் இவர் ஒரு ஆண் நர்ஸ்!! கொரோனாவின் தாக்கத்தில் சீரழிந்து கொண்டிருப்பதில் முக்கிய முதன்மையானது இத்தாலி.. இங்குதான் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு போன் வந்துள்ளது.. அதில் பேசியவர். "என் பேர் அந்தோனியா, நான் ஒரு பிரைவேட் ஆஸ்பத்திரியில் நர்ஸ், நான் என் காதலியை கொன்னுட்டேன்" என்று வீட்டு அட்ரஸையும் சொல்லி போனை வைத்துவிட்டார்.
13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த ஆஸ்பத்திரியில் வைரஸ் தாக்கி இறந்துவிட்டனர். நாங்கள் எங்கள் வேலையை சேவையாக நினைத்து செய்தோம். ஆனால் குவாரண்டினா, ஒருநாள், தன்னையும் அறியாமல் எனக்கு வைரஸை பரப்பிவிட்டதாக சொன்னாள். இது எனக்கு ஷாக்-ஆக இருந்தது.. ஆத்திரத்தையும் தந்தது.. அதனால்தான் குவாரண்டினாவின் கழுத்தை என் கையாலேயே நெரித்து கொன்றேன்.

வியாழன், 2 ஏப்ரல், 2020

நேற்று மட்டும் அமெரிக்காவில் 1000, ஸ்பெயினில் 920, இத்தாலியில் 720 உயிரிழப்புக்கள் ... முதல் 10 நாடுகள் !

இத்தாலி 3வது இடம்   /tamil.oneindia.com :  ஜெனிவா: 203 நாடுகளில் பரவி உள்ள கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் 937,117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் இதுவரை 47, 266 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 4890 பேர் இறந்துள்ளனர்.
உலகிலேயே மிக அதிகபட்சமாக நேற்று அமெரிக்காவில் 1049 பேர் இறந்தனர். நேற்று அதிபட்ச உயிரிழப்பை சந்தித்த டாப் 10 நாடுகளை இப்போது பார்ப்போம்.
கொரோனாவின் மைப்புள்ளியாக மாறி உள்ளது அமெரிக்கா. அங்குதான் உலகிலேயே மிக அதிகபட்சமாக 215003 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு நேற்று ஒரே நாளில் 26473 பேருக்கு வைரஸ் பாதித்தது. 1049 பேர் ஒரே நாளில் இறந்தததால் உயிரிழப்பு எண்ணிக்கை 5102 ஆக உயர்ந்துள்ளது.

கொங்கு மண்டலமா.. கொரோனா மண்டலமா.. அதிர வைக்கும் பரவல்..

tamil.oneindia.com  : சென்னை: கொங்கு மண்டலமா.. கொரோனா மண்டலமா என தெரியவில்லை.. மொத்த பேரும் கலக்கத்தில் உள்ளனர்.. ஏற்கனவே ஹாட்
ஸ்பாட் என்று ஈரோடு, சென்னை அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில். கொங்கு மண்டலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கூடிவருவதால் தீவிரமான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 
சில தினங்களுக்கு முன்புதான் தமிழகத்தில் கொரோனா தொற்று நுழைந்துள்ளது.. அதன் துவக்க புள்ளி ஈரோடு என்றும் சொல்லப்பட்டது.. பிறகு அடுத்த சில தினங்களில் ஒரே நாளில் 57 பேருக்கு தொற்று என்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் அறிவித்தபோது உச்சக்கட்ட அதிர்ச்சி அனைவருக்குமே ஏற்பட்டது. இந்த சமயத்தில் கொரோனா ஹாட் ஸ்பாட் என்று ஈரோட்டையும் சென்னையும் அறிவித்தனர். ஒரு இடத்தில் அதிக நபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு.. அதன் மூலம் மற்றவர்களுக்கு பரவி ஆபத்தான சூழல் உருவானால்தான் அதன்பெயர்தான் ஹாட்ஸ்பாட்.
ஈரோடு அப்படித்தான் ஈரோட்டில் பலருக்கு கொரோனா பரவும் அபாயம் இருப்பது தெரிந்தது. கட்டுப்பாடுகள் அதிகமாக்கப்பட்டது.. தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமானது.. 75 வயது நபர் ஒருவர் கடந்த 21ம் தேதி டெல்லியில் இருந்து ஈரோடு வந்துளார்.. இவருக்குதான் தொற்று முதலில் ஏற்பட்டுள்ளது..

ஒரு ஆர் எஸ் எஸ்காரர் எப்படி எப்படி எல்லாம் சிந்திப்பார்? முதல்ல சிந்திப்பாரா?

டான் அசோக் : ஒரு சங்கி மூளை எப்படி வேலை செய்யும் என்பதற்கு ஒரு
அருமையான case study. யாருமே பாதிக்கப்படவில்லை என அந்த மூளை நிஜமாகவே நம்புகிறது. இதற்கு என்னவெல்லாம் காரணமாக இருக்கலாம்?
1) டீமானடைசேஷனின் தோல்வியை பரவலாக எடுத்துச் செல்லாத மீடியா. 2) ஏ.டி.எம் வாசல்கள் உயிரைவிட்ட பலர் அன்றாடங்காய்ச்சிகள், முதியவர்கள், குறிப்பாக இந்துக்கள்.
ஆனாலும் அதெல்லாம் கண்ணில் படவில்லை. தான் மட்டும்தான் உலகம் என சுயநலமாக மட்டுமே வாழும் போக்கு.

3) தொடர் மூளைச்சலவையால், கேள்விகளுக்கு அப்பாற்பட்டு மோடியை ஆதரிக்கும் போக்கு. (ஹிட்லரை ஜெர்மனி மக்கள் ஆதரித்ததைப் போல. ஹிட்லரும் தேர்தலில் நின்று வென்றவர்தான் என்பதை நாம் நினைவுகூற வேண்டும்.)
4) ஜெயலலிதாவின் வைரங்களுக்காக நடந்த சண்டை, பிடிபட்ட கண்டெயினர்கள் என எத்தனையோ செய்திகளை அந்த காலத்தில் படித்தோம். ஆனால் அதையெல்லாம் சொல்லாமல் திமுககாரர்கள் பணத்தை மாற்ற கஷ்டப்படுகிறார்களாம், வெளிநாட்டிலேயே தவிக்கிறார்களாம்.
5) இந்தியாவில் புழங்கும் கள்ளநோட்டுகளில் பெரும்பான்மை
கள்ளநோட்டுகள் 2000ரூ கள்ளநோட்டுதான் என்கிறது செய்திகள்.
 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அடித்துக்கொண்டவர்களுக்கு,
ரொம்ப கஷ்டப்படாதீங்கப்பா, ஒரே 2000 ரூபாய் நோட்டா அடிச்சுக்கங்க என உதவி பண்ணதை தவிர ஒரு எழவையும் இந்த டீமானடைசேஷன் பண்ணவில்லை என்பது கொஞ்சமே கொஞ்சம் அறிவு இருந்தாலும் புரியும்.

EMI இரண்டு மாதங்கள் செலுத்தாவிட்டால் அவற்றிக்கு வட்டியும் குட்டியும் சேர்த்தே ... மீட்டர் வட்டி?

Devi Somasundaram :  SBI  ல இந்த 3 மாத ஸ்கிப்க்கு நாம எழுதி குடுக்கனும் .அந்த அப்ளிகேஷன்ல sbi யோட எல்லா விதிமுறைக்கும் கட்டுபடறேன்னு ஒரு பாய்ண்ட் வரும்..அதோட வட்டி விகிதம் மாறுதலுக்கு உட்பட்டதுன்னு இருக்கும்...
அது எவிடன்ஸ்.. நம்ம தலைய நாமே கில்லட்ல தர அனுமதி தருவது தான்..
இந்த 3 மந்த் ஸ்கிப் emi பத்தி நிறைய குழப்பம் இருக்கு ..
அவுட் ஸ்டேண்டிங் அமவுண்ட் ஒரு லட்சத்திற்கு அதிகமா இருந்தா ஆட் ஆகப் போற டியுவுக்கு ஒரு வட்டி விகிதம், 5 லட்சம்ன்னா வேற ஒன்னுன்னு ஆகும்...
இப்ப நம்ம emi 10000 ரூபாய்ன்னா ஏப்ரல் மாதம் 10000 த்திற்கு வட்டி சேர்த்து 11000 வச்சுப்போம்...மே மாதம் 11000+10000+1000 ரூபாய்க்கு கூட்டு வட்டி ..அதுக்கு அடுத்த மாதம் அந்த வட்டிக்கும் வட்டி ..

2 மாதத்தை ஸ்கிப் செய்தா 10 மாதம் எக்ஸ்ட்ரா டியு கட்ற மாதிரி ஆகும் ...
வங்கி அதிகாரிகள் பலருக்கே தகவல் தெரியவில்லை ..sbi வெப்சைட்க்கு மத்திய அரசு எல்லா டீடெய்லும் அனுப்பி இருக்கும்,..அதை படிக்கவே அதிகாரிகளுக்கு நேரமிருக்காது .
இந்த டாக்குமெண்ட்ஸ் படிக்கன்னே சிலர் இருப்பாங்க ..உட்கார்ந்து ஒவ்வொரு பாய்ண்டா படிச்சு அர்த்தம் புரிஞ்சு அதை சொல்ல இன்னும் ஒரு மாதம் ஆகும் .
என் பெரியப்பா வங்கி அதிகாரி சொன்னது ரொம்ப யோசிக்காத emi அ கட்டிட்டு போ ..கார் லோன் தான் ...அதையே கட்ட சொல்றார்ன்னா ஹவுஸிங் லோன் மாதிரி பிக் அமவுண்ட்லாம் யோசிக்கவே வேணாம்...கட்டுவதே பெஸ்ட் .
எகனாமிக்ஸ் டைம்ஸ் கட்டுரை இணைப்பு கமண்ட்ல

(This story originally appeared in on Apr 02, 2020) Hit by the lockdown and faced with uncertainty, many people are looking to avail of the repayment relief that banks are offering. Although banks are yet to announce the details of the relief package and how it will work out, we do know that this is only a grace period and they are likely to charge interest for the unpaid a ..

சீனா கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையை மறைத்து உலகை .. அமேரிக்கா குற்றச்சாட்டு

hindutamil.in/  : கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேயில் உள்ள வூஹானில் தொடங்கிய கரோனா வைரஸ் இன்று உலகம் முழுதும் சுமார் 38,000 உயிர்களை பலி வாங்கியுள்ளது, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்குவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சீனாவில் சுமார் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுவதை அமெரிக்க எம்.பி.க்கள் சந்தேகிக்கின்றனர், மேலும் உளவுத்துறை தகவலையும் சுட்டிக்காட்டி சீனா உண்மையான எண்ணிக்கையை மறைக்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளனர்
இதனையடுத்து அதிபர் ட்ரம்ப் கூறும்போது, “நமக்கு எப்படி தெரியும்? அவர்கள் பலி எண்ணிக்கை கொஞ்சம் குறைவாகக் காட்டப்படுகிறது. மறைக்கிறார்கள், ஆனால் சீனாவுடனான நம் உறவு நல்ல முறையில்தான் உள்ளது” என்று கூறினார்.
அமெரிக்க ராணுவம்தான் கரோனா பரவலுக்குக் காரணம் என சீனா குற்றம்சாட்ட அமெரிக்காவோ சீனாதான் கொரோனா பரவலுக்குக் காரணம் என்று எதிர்க்குற்றச்சாட்டுகளை வைத்து இதன் மூலம் எழுந்த சர்ச்சைகளை நாம் அறிவோம். சதிக்கோட்பாட்டாளர்கள் சீனா தன் வர்த்தக நலன்களுக்காகவே இந்த வைரஸை பரப்பியது என்ற குற்றச்சாட்டுகளை வைத்தாலும் ஆதாரபூர்வமான தகவல்கள் எதுவும் இதுவரை இல்லை.

திமுகவிலிருந்து கே.பி.ராமலிங்கம் தற்காலிக நீக்கம்!

திமுகவிலிருந்து கே.பி.ராமலிங்கம் தற்காலிக நீக்கம்!மின்னம்பலம் : திமுகவிலிருந்து கே.பி.ராமலிங்கத்தை தற்காலிகமாக நீக்கம் செய்துள்ளார் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக வீடியோ கான்பரன்சிங் மூலம் அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுக்க, அது அவசியமற்றது என எதிர் அறிக்கை வெளியிட்டார் திமுகவின் விவசாயப் பிரிவு செயலாளராக இருந்த கே.பி.ராமலிங்கம்.

சட்டமன்றத்தை நோக்கி வைகோ மகன்!


சட்டமன்றத்தை நோக்கி வைகோ மகன்!

மின்னம்பலம் : மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு இன்று (ஏப்ரல் 2) 47 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதை இதுவரை இல்லாத அளவுக்கு சமூக தளங்களில் மதிமுகவினர் வாழ்த்துப் பதிவுகள் மூலம் கொண்டாடி வருகிறார்கள். மதிமுகவின் இரண்டாம் தலைமுறையே... கழகக் கண்மணிகளின் எதிர்பார்ப்பே என்றெல்லாம் மதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பல நிர்வாகிகள் துரை வையாபுரிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

ஈஷா யோகா மையத்தில் சோதனை..! – 150 பேரை தனிமைப்படுத்திய தமிழக அரசு..!

sathiyam.tv :  கோயம்புத்தூர்: கொரோனா அச்சம் காரணமாக கடந்த சிவராத்திரி அன்று ஈஷா யோகா மையத்தில் கலந்து கொண்ட 150 வெளி நாட்டினர்களை தமிழக அரசு தனிமைப்படுத்தி உள்ளது.
இந்தியாவில் கொரோனா தற்போதுதான் தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. பிப்ரவரி 15ம் தேதி கேரளாவில் முதல் நபருக்கு கொரோனா ஏற்பட்ட நிலையில் தற்போது ஒன்றரை மாதத்தில் நாடு முழுக்க 2018 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
இதுவரை இந்தியாவில் 67 பேர் பலியாகி உள்ளனர். முக்கியமாக டெல்லியில் மத கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டவர்களுக்கு அதிக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மத கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் தமிழகத்தில் மட்டும் 190 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் டெல்லி மத கூட்டம் குறித்த கேள்விக்கு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் விளக்கம் அளித்தார். அதில், டெல்லி மட்டுமின்றி தமிழகத்தில் நடந்த எல்லா மத கூட்டங்கள் குறித்தும் விசாரித்து வருகிறோம்.

கொரோனாவை வென்ற 93 வயது 88 வயது கேரள தம்பதி வென்றது எப்படி


BBC : இம்ரான் குரேஷி - பிபிசி இந்தி : ஒரே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் வெவ்வேறு அறையில் இருந்த இருவரும் மருத்துவர்களுக்கு ஒத்துழைக்கவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியவில்லை என்று அந்த தம்பதியனருக்கு எரிச்சல்.ஒரு வழியாக கண்ணாடியால் பிரிக்கப்பட்ட ஒரே அறையை மருத்துவர்கள் அவர்களுக்கு வழங்கினர். அதில் கணவருக்கு 93 வயது. அவரது மனைவிக்கு 88 வயது.இருவரும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து மீண்டு வந்தவர்கள். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், நீரிழிவு நோய், இருதய கோளாறு ஆகியோருக்கு இந்த கொரோனா வைரஸ் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.இந்நிலையில், இதிலிருந்து மீண்டு வந்த 93 வயது முதியவர், இந்த உலகத்தில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த இரண்டாவது முதியவர் என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. "இதற்கு முன்பு சீனாவில் 96 வயது முதியவர் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு குணமடைந்தார். அதற்கு பிறகு குணமான வயது முதிர்ந்த நபர் அப்பாதான்" என்கிறார் பிபிசியிடம் பேசிய கேரளாவின் கோட்டையம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி ஆர்.பி ரென்ஜின.அந்த தம்பதியினர், அம்மா, அப்பா என்று குறிப்பிட்டே மருத்துவமனையில் அழைக்கப்படுகிறார்கள்.

நிஜாமுதீன் தப்லிகி ஜமாத் கூட்டத்தில் பங்கேற்ற வெளிநாட்டினர் 275 பேரை பிடித்த போலீஸ்

நிஜாமுதீன் தப்லிகி ஜமாத் கூட்டத்தில் பங்கேற்ற வெளிநாட்டினர் 275 பேரை பிடித்த போலீஸ்  தினத்தந்தி :  நிஜாமுதீன் தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய கூட்டத்தில் பங்கேற்ற வெளிநாட்டினர் 275 பேரை டெல்லி போலீசார் இன்று பிடித்துள்ளனர்
நிஜாமுதீன் ஜமாத் கூட்டத்தில் பங்கேற்ற நபர்கள்
புதுடெல்லி:  டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் (நிஜாமுதீன் மர்காஸ்) தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் இஸ்லாமிய மத குருக்கள் பங்கேற்ற கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது.  அதில் தமிழகம், தெலுங்கானா, காஷ்மீர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், மலேசியா, சவுதி அரேபியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த மதகுருக்களும் பங்கேற்றனர். அந்தயில் பங்கேற்ற பின்னர் பலர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ளனர்.

BBC : கொரோனாவால் அமெரிக்காவில் 2,40,000 பேர் வரை இறக்கலாம்' - வெள்ளை மாளிகை எச்சரிக்கை


அமெரிக்காவின் வெள்ளை மாளிகை எச்சரிக்க. அமெரிக்காவில் அடுத்த சில வாரங்களில் மட்டும் 1 லட்சத்தில் இருந்து 2,40,000 பேர் வரை கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழக்க நேரிடும் என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை கணித்துள்ளது பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.அமெரிக்க மக்கள் கடுமையாக சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒருவருக்கு ஒருவர் தனித்து இருத்தல், வீட்டை விட்டு வெளியேறாமல் இருத்தல் உள்ளிட்ட அறிவுரைகளை பின்பற்றுவதை பொறுத்தே இந்த கணிப்பு நிஜமாகுமா அல்லது இந்த கணிப்பைவிட அதிகமான எண்ணிக்கையில் உயிரிழப்புகள் ஏற்படுமா என்பது தெரிய வரும் என அமெரிக்க சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர்

கனிமொழி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ... 610 கி.மீ. தூரம்..

one.india.com : சென்னை டூ தூத்துக்குடி... 610 கி.மீ. தூரம்.. சீறிப்பாய்ந்த கனிமொழியின் கார்...
திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி, தனி ஒரு ஆளாக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட்டு சென்று அங்கு கொரோனா நோய் தடுப்பு பணிகள் பற்றி மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டறிந்துள்ளார்.
இக்கட்டான இந்த பேரிடர் காலத்தில் தனது தொகுதி மக்களுடன் இருக்க வேண்டும் என்பதற்காக கனிமொழி சென்னையில் இருந்து சாலை வழியாக காரில் பயணித்துள்ளார்.
மாவட்ட எல்லைகள் அனைத்தும் மூடப்படுள்ள நிலையில், தனது தொகுதிக்கு செல்வதாக கனிமொழி கூறியதால் அவருக்கு காவல்துறையினர் வழி ஏற்படுத்திக் கொடுத்து அனுமதி அளித்தனர்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

புதன், 1 ஏப்ரல், 2020

இத்தாலி விரக்தியில் பணத்தை வீதிகளில் தூக்கி வீசிய மக்கள்..?


 மாலைமலர் : இத்தாலியில் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பொது மக்கள் பணத்தை வீதிகளில் தூக்கி வீசும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து வைரலாகும் பதிவுகளில் “இத்தாலியர்கள் தங்களது பணத்தை வீதிகளில் தூக்கி வீசுகின்றனர். அவர்களுக்கு இப்போது அது தேவையற்றதாகி இருக்கிறது..”
வைரல் புகைப்படங்களை ஆய்வு செய்ததில், அவை ஒரு வருடத்திற்கு முன் வெனிசுலாவில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. ரிவர்ஸ் சர்ச் செய்ததில், இந்த புகைப்படங்கள் மார்ச் 2019 முதல் வலம் வருவது கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் வெனிசுலாவின் பழைய பணத்தை மக்கள் வீதிகளில் வீசியிருக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெனிசுலாவில் ஆகஸ்ட் 2018 இல் பழைய ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மக்கள் பழைய நோட்டுக்களை வீதிகளில் வீசினர்.
வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்
மேலும் வெனிசுலா மக்கள் வங்கி ஒன்றை கொள்ளையடித்து அதில் இருந்து எடுத்த பணத்தை எரித்துவிட்டு, சிலவற்றை வீதிகளில் வீசியதாகவும் கூறப்படுகிறது. இதே தகவலினை பலர் தங்களது ட்விட்டர் அக்கவுண்ட்டில் புகைப்படங்களுடன் பதிவிட்டு இருக்கின்றனர்.

ஜாக்கியின் சிவராத்திரி .. 150 பேர்வழிகளின் கொரோனா .. ரகசியம் . Isha Maharathri : Statusquo of 150 foreigners Corona tests kept Confidential

21- 02 - 2020 இல் ஜாக்கியின் ஈஷா மகா சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொண்ட 119 வெளிநாட்டவர்கள் கொரோனா தொற்று தடுப்பில் உள்ளார்கள் என்று தெரிகிறது. இந்த நிகழ்வில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள்! அவர்களில் எவ்வளவு பேருக்கு கொரான வைரஸ் தொற்றி இருக்கிறது என்ற விபரங்கள் இன்னும் சரியாக வெளிப்படவில்லை . திட்டமிட்டு மறைக்க படுகிறது . இந்த செய்தியை மக்கள் அறிந்து விடக்கூடாது என்ற நோக்கத்திலேயே டெல்லி இஸ்லாமிய மத நிகழ்வு பற்றி பெரிய அளவில் ஊடகங்கள சத்தம் போடுகின்றன Image may contain: one or more people, people standing, crowd and meme, possible text that says 'JACKY REHEARSING CORONA ENGINEERING DANCE imgflip.cpm'

splco.me/en  : On Tuesday, Health Secretary Beela Rajesh said that the government was collecting details of foreigners and Indians who had come to the State after February 15 and foreigners at Isha Yoga were also in the checklist.
Music Performance By Foreigners At Maha Shivaratri 2020 Sadguru can be viewed here According to the Coimbatore district administration, the foreigners had come much before the government notification.

சென்னையின் அசோக் லேலண்ட்! 90% விற்பனை சரிவு


tamil.goodreturns.in : இந்தியாவில் கடந்த 2019-ம் ஆண்டில் இருந்தே, பல்வேறு காரணங்களால், ஆட்டோமொபைல் கம்பெனிகள் பெரிய சரிவைச் சந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள். தற்போது பற்றாக் குறைக்கு கொரோனா வைரஸ் வேறு ஒட்டு மொத்த உலகத்தையும் பிரட்டி எடுத்துக் கொண்டு இருக்கிறது. உலகில் சுமார் 8.80 லட்சம் பேர் இந்த கொடிய நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சுமார் 40,000 பேர் மரணித்து இருக்கிறார்கள்.
 இந்த எல்லா காரணிகளும் ஒன்று சேர்ந்து, தற்போது இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களின் விற்பனையை படு பாதாளத்துக்கு தள்ளி இருக்கிறது
இந்தியாவின் முன்னணி கண ரக மற்றும் வணிக ரக வாகனங்கள் தயாரிப்பு நிறுவனங்களில் அசோக் லேலண்டும் ஒன்று. இந்த நிறுவனம் சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் என்பதும் இங்கு தனியாக குறிப்பிட வேண்டிய ஒன்று.
சரி விற்பனை விவரங்களுக்கு வருவோம். அசோக் லேலண்ட் நிறுவனம் கடந்த மார்ச் 2019-ல் 21,535 வாகனங்களை விற்றது. ஆனால் இந்த மார்ச் 2020-ல் வெறும் 2,179 வாகனங்களைத் தான் விற்று இருக்கிறார்களாம்.

BBC கொரோனா: டெல்லி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவ இந்திய ராணுவத்தை அழைக்காதது ஏன்? - விரிவான தகவல்

ஜுகல் ஆர் புரோகித் பிபிசி : கொரோனா மெல்லப் பரவ தொடங்கிய போது வெளிநாடுகளில் சிக்கி இருந்த இந்தியர்களை அழைத்து வர இந்திய பாதுகாப்புப் படையின் அனைத்து பிரிவுகளும் பணியாற்றின. டெல்லியிலிருந்து கொத்து கொத்தாக வேறு மாநில தொழிலாளர்கள் வெளியேறிய போது பலரின் அரசின் செயலற்ற, பொறுப்பற்ற தன்மையை விமர்சித்தார்கள். அந்த சமயத்தில் இந்திய பாதுகாப்புப் படையைப் பயன்படுத்தி மக்கள் வெளியேற உதவி இருக்க முடியுமா? உள்நாட்டிலேயே புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ இந்திய பாதுகாப்புப் படையை அரசு எப்படிப் பயன்படுத்தி இருக்கலாம்? அவர்களுக்கு எவ்வாறான பணிகளைக் கொடுத்திருக்கலாம்?
இதுபோன்ற விவாதம் இப்போது வரை நடைபெறவில்லை. ஆனால், அப்படியான யோசனைகளைத் திறந்த மனதுடன் வரவேற்கிறோம் என்கிறார் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பிரிவின் (சி.ஆர்.பி.எஃப்) இயக்குநர் ஏ.பி. மகேஷ்வரி.
மத்தியிலிருந்து எந்த நேரடியான வழிகாட்டுதல்களும் இப்போது வரை இல்லாத போது, இந்தியாவின் ஒவ்வொரு படைப் பிரிவும் தங்களால் ஆன வகையில் மக்களுக்கு உதவ முயன்று வருகிறது.
சி.ஆர்.பி.எஃப் நாடு முழுவதும் உள்ள தங்களது அனைத்து பிரிவுகளுக்கும் அந்தந்த மாநில அரசுடன் தொடர்பில் இருக்குமாறு, அவர்களுக்கு உதவுமாறு கடிதம் எழுதி உள்ளது.
ஏ.பி. மகேஷ்வரி, "எங்களது வளாகத்தில் சமைத்து, தேவைப்படும் நபர்களுக்கு உணவு விநியோக. செய்து வருகிறோம். இந்த அசாதாரண சூழலில் எங்களால் முடிந்த வகையில் உதவி வருகிறோம்," என்கிறார் அவர்.
தேசிய பேரிடர் மீட்புப் படையும் தங்களால் இயன்ற வழிகளில் மாநில நிர்வாகத்திற்கு உதவி வருகிறது.
அதன் இயக்குநர் எஸ்.என் பிரதான், "உதவி கோரப்பட்டால் நாங்கள் உதவத் தயாராகவே இருக்கிறோம்." என்கிறார்.

மூன்றில் ஒரு பங்கு (மாநில) புலம்பெயர்ந்தோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுமா?


மின்னம்பலம் : சொந்த ஊர் திரும்பிய புலம்பெயர்ந்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்து பணியாற்றிவந்த தொழிலாளர்கள், கடந்த சில நாட்களாக சொந்த ஊர்களுக்கு திரும்ப ஆரம்பித்தனர். ஊரடங்கு காரணமாக அனைத்து விதமான போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டதால், நூற்றுக்கணக்கான கி.மீ தூரம் நடந்தே சென்றனர்.

மு.க.அழகிரி, ஜூன்-3ல் தனிக் கட்சி ? அரசியல் ஏரியாவில் எதிர்பார்ப்பு..

நக்கீரன் : கரோனா வைரஸ் தாக்கத்தால் யாரும் வெளியே வர முடியாத சூழல் உள்ள நிலையில், கட்சிப் பிரதிநிதிகளோடு மு.க.ஸ்டாலின் பேசுகின்ற வீடியோ கூட வெளியானது. வீட்டிலிருந்தபடியே எம்.எல்.ஏ, எம்.பி, மா.செ.க்கள் எல்லாரையும் தொடர்பு கொண்டு அவரவர் நடவடிக்கைகள் பற்றி விசாரித்துள்ளார்.
திருப்பூரில் மேற்கு வங்க மாநிலத் தொழிலாளர்கள் தவிக்கிறார்கள் என்று திரிணாமூல் எம்.பி. ஓ பிரையன் ட்வீட் செய்ய உடனே தி.மு.க சார்பில் அவங்களுக்கு உதவி செய்யப்பட்டது.
அதுபோல சென்னையில் பீகார் தொழிலாளர்கள் தவிப்பதை லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி ட்வீட் செய்ய, அவங்களுக்கு தி.மு.க. மா.செ. மா.சுப்ரமணியன் டீம் உதவி செய்தது. இளைஞரணியை உதயநிதி களமிறக்க, தி.மு.க மருத்துவரணி சார்பில் 70 டாக்டர்களை ஆன்லைன் மற்றும் நேரடி உதவிகளுக்கேற்றபடி 10 மண்டலங்களாகப் பிரித்து விட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
 அதேபோல் இந்த நேரத்தில் ஒழுங்கு நடவடிக்கையையும் ஸ்டாலின் மேற்கொண்டிருக்கார் என்கின்றனர். அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட வேண்டும் என்று ஸ்டாலின் கோரியபோது, அது தேவையில்லை என்று சொன்னதோடு பிரதமரையும் முதல்வரையும் பாரட்டிய தி.மு.க.வின் விவசாய அணி மாநிலச் செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான கே.பி.ராமலிங்கத்தைக் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டார் ஸ்டாலின்.

இலங்கை : கொரோணா அறிகுறிகள் தெரிந்தால் இனி மருத்துவமனைகளுக்கு செல்லாதீர்கள்

Jeevan Prasad : கொரோணா நோய் அறிகுறிகள் தெரிந்தால் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லாதீர்கள் - ஜீவன்
இதுவரை காலமும் கொரோணா அறிகுறியுள்ளோரை வைத்தியசாலைகளுக்கு வரச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது நிலை வேறுபட்டுள்ளது. அதாவது வைத்தியசாலைகளுக்கு வராதீர்கள். வந்தால் வழக்கு தொடுப்போம் என போலீஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். எனவே இனி உங்கள் நிலை மோசமானால் அன்றி யாரையும் பிடித்துக் கொண்டு போக மாட்டார்கள். சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவித்தால் அவர்கள் உங்களை கண்காணிப்பார்கள். பரிசோதிப்பார்கள். உண்மையிலேயே கொரோணா இருந்தால் மட்டுமே சிகிச்சைக்காக போக வேண்டி வரும். எனவே சந்தேகப்பட்டவர்களை பிடித்துக் கொண்டு போவார்கள் என அஞ்ச வேண்டியதில்லை.
கடந்த சில நாட்களாக நடந்த விடயங்களை வைத்து அரசும் , பாதுகாப்பு துறையும் புதியதொரு அணுகுமுறையை பின்பற்றத் தொடங்கியுள்ளது.
கொரோணா அறிகுறியுள்ளவர்கள் தங்களது உண்மையான நிலையை தெரிவிக்காமல் , தனியார் மற்றும் அரச வைத்தியசாலைகளுக்கு சென்று சிகிச்சை பெற முயன்றமையால் பல வைத்தியசாலைகளும் , சுகாதார தரப்புகளும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
அதாவது வைத்தியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் நோயாளிகளுக்கு சேவை செய்ய முடியாத நிலையில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். தள்ளப்பட்டுள்ளார்கள். இது ஒரு சோகமான நிலையாகும். இந்த நடவடிக்கைகளால் சுகாதார பகுதிகளை மூடும் நிலை எழுந்துள்ளது. இந் நேரத்தில் இது ஒரு மிக மோசமான விடயமாகும்.
இப்படி மக்கள் நடந்து கொண்டால் சுகாதார துறை பாரிய பின்னடைவை சந்திக்கும். உயிரை பணயம் வைத்து சேவை செய்யும் , சேவையாளர்கள் மக்களுக்கு பணி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள். அவர்களும் உங்களைப் போன்ற மனிதர்கள்தான். அவர்களுக்கும் குடும்பங்கள் உள்ளன. அதை மறக்க வேண்டாம். அவர்களாலும் அவர்களது சக்திக்கு மேல் ஓரளவுதான் உழைக்க முடியும். அவர்கள் தளர்ந்து விட்டால் நிலை மிக ஆபத்தாகிவிடும்.

கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியது ... உலக அளவில்

தினத்தந்தி : உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
பாரீஸ், உலக அளவில் கொரோனா வைரசுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகிறார்கள். அந்த வகையில் நேற்று ஒரே நாளில் சுமார் 4,000 பேர் பலியாகினர். இதில், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பலியானவர்கள் மட்டும் பாதிக்கும் மேற்பட்டோர் ஆவர்.
 இதன் மூலம் உலக அளவில் கொரோனா வைரசுக்குப் பலியானோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி 42,130 பேரை கொரோனா வைரஸ் பலியாக்கியிருக்கிறது.
அதே போல் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,57 லட்சத்தைக் கடந்துள்ளது. சுமார் 1,77 ஆயிரம் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இத்தாலியில் மட்டும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.
 ஸ்பெயின் நாட்டில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியானார்கள். கிட்டதட்ட 96 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,88 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,883- ஆக உள்ளது. வைரசின் பிறப்பிடமான சீனாவில், இன்று புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை.

டெல்லியில் இருந்து வந்த 50 பேருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது

News18 Tam : 515 பேர் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களைத் தேடும் பணி நடைபெற்றுவருகிறது.
அந்த டெல்லி கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தாங்களாக முன்வரவேண்டும்’என்று பீலா ராஜேஷ் தெரிவித்திருக்கிறார் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124-ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் நேற்று தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், ‘தமிழகத்தில் ஏற்கெனவே 74 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று, புதிதாக கொரோனா பாதித்த 57 பேரில் 50 பேர் டெல்லி நிஜாமுதின் ஜமாத் மதக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.
டெல்லி மதக் கூட்டத்தில் பங்கேற்றவர்களில் 1,131 பேர் தமிழகத்துக்கு வந்துள்ளனர். அவர்களில் 515 பேர் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களைத் தேடும் பணி நடைபெற்றுவருகிறது. அந்த டெல்லி கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தாங்களாக முன்வரவேண்டும்’என்று தெரிவித்தார்.
>டெல்லி மேற்கு நிஜாமுதீனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தப்லிகி ஜமாத் (Tablighi Jamaat) தற்போது பேசுபொருளாகியுள்ளது. மார்ச் மாதம் இந்த ஜமாத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பலருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு இன்று அமல்

10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு இன்று அமல் தினத்தந்தி :  புதுடெல்லி, வளரும் பொருளாதாரத்தின் தேவைகளை பூர்த்தி செய்யவும், உலக அளவில் பெரிய வங்கிகளாக உருவாக்கவும் பொதுத்துறை வங்கிகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவை பேங்க் ஆப் பரோடாவுடன் இணைக்கப்பட்டன. இந்நிலையில், மேலும் 10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அந்த இணைப்பு இன்று (புதன்கிழமை) அமலுக்கு வருகிறது. அதன்படி, இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இன்று இணைகிறது. இனிமேல், அலகாபாத் வங்கிக்கிளைகள், இந்தியன் வங்கிக்கிளைகளாக செயல்படும்.
கார்ப்பரேசன் வங்கி, ஆந்திரா வங்கி ஆகியவை யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைகின்றன. அதனால், கார்ப்பரேசன் வங்கி, ஆந்திரா வங்கிக்கிளைகள், இனிமேல் யூனியன் பேங்க் ஆப் இந்தியா கிளைகளாக செயல்படும். சிண்டிகேட் வங்கி, இன்று கனரா வங்கியுடன் இணைகிறது. இனிமேல், சிண்டிகேட் வங்கிக்கிளைகள், கனரா வங்கிக்கிளைகளாக செயல்படும்.

கொரோனாவும் தூய்மை பணியாளர்களும் .. எங்களுக்கெல்லாம் இது என்ன புதுசா?

நந்தினி வெள்ளைச்சாமி : ஒட்டுமொத்த இந்தியாவும் ஊரடங்குக்குள் முடங்கி இன்றுடன் மூன்றாவது நாள். இந்த நாட்களில், நம் அன்றாட வாழ்வில் மிகவும் அவசியமான மனிதர்களின் முக்கியத்துவம் நமக்குப் புரிய
ஆரம்பித்திருக்கிறது. முன்பெல்லாம் “இது அவருடைய வேலை, கடமை. அவர்தான் செய்ய வேண்டும்” என மிகச் சாதாரணமாகச் சொல்லிவிட்டுக் கடந்துவிடுவோம். கரோனா பெருந்தொற்றின் முன்பு அச்சத்துடன் தங்கள் கடமைகளைச் செய்துவரும் துப்புரவுப் பணியாளர்கள், பக்கத்து தெரு மளிகை கடைக்காரர், காவலாளி, மளிகைப் பொருட்கள் டெலிவரி செய்பவர், போக்குவரத்து ஊழியர்கள் என, அத்தனை சாமானியர்களின் கடமையையும், தேவையையும் நாம் உணரத் தொடங்கியிருக்கிறோம்.

செவ்வாய், 31 மார்ச், 2020

ஜாக்கியின் சிவராத்திரிக்கு வந்த வெளிநாட்டினர் இன்னும் தமிழகத்தில் உள்ளனரா?

M S Rajagopal  : பிப்ரவரி 21 ஆம் தேதி ஜக்கி மகாசிவராத்திரி இரவை லட்சக்கணக்கான இந்துக்களுடன் நடனமாடி களித்தார்.
பிப்ரவரி 23,24 டிரம்ப் வருகையையொட்டி லட்சக்கணக்கான மக்கள் மோடி ஏற்பாட்டின் பேரில் குஜராத்தில் குவிந்தார்கள்.
பிப்ரவரி 24 ஆம் தேதி டில்லியில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் பங்கேற்ற தப்லீக் ஜமாத் மாநாடு நடந்தது.
பிப்ரவரி இறுதியில் கோவா தேவாலயத்தில் ஆயிரக்கணக்கான கிறித்தவர்கள் பங்கேற்ற விழா நடந்தது.
மார்ச் 21 ஆம் தேதி வரை திருப்பதி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் தரிசனத்திற்கு சென்று வந்துள்ளார்கள்.
மார்ச் 20 ஆம் தேதி அயோத்தியில் இராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் லட்சக்கணக்கான இந்துக்கள் பங்கேற்றனர்.
மார்ச் 22 ஆம் தேதி மாலை 5 மணிக்கு இந்துக்கள் ஊரடங்கு வெற்றிகரமாக நடந்ததற்காக வடமாநிலங்களில் தெருவில் நடனமாடினார்கள். > மார்ச் 24 ஆம் தேதி அரசின் தவறான முடிவு காரணமாக கோயம்பேட்டில் ஒன்றரை லட்சம் மக்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக ஒன்று திரண்டனர்.

ஈரோடு தமிழகத்தின் கொரோனா எபி-சென்டர்? வூகானை போல மாறுமா?.. தனிமைப்படுத்தப்படும் மக்கள்!


ஈரோடு தமிழகத்தில் கொரோனா பரவலின் மையமாக மாறுவதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கி உள்ளது.
 Hemavandhana - /tamil.oneindia.com :  சென்னை: ஒட்டுமொத்த மாநிலத்திலும் ஒரு பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது... காரணம் "ஈரோடு" மாவட்டம்.. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் அதிக எண்ணிக்கை உள்ள மாநிலமாக உருவெடுத்துள்ளது ஈரோடு.. இதன்காரணமாக முழு மாவட்டமும் கண்காணிப்பு வளைத்துக்குள் தீவிரமாக கொண்டுவரப்பட்டுள்ளன!  ஏற்கனவே 6 பாசிட்டிவ் கேஸ்கள் ஈரோட்டில் உள்ள நிலையில்,
டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்களையும் கொரோனா பீடித்துள்ளது.. இதன்மூலம் ஈரோட்டில் 24 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உலகம் முழுவதும் பீதியை கிளப்பிவிட்டு வரும் எதற்காக டெல்லி மாநாட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும்? அதுவும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது ஏன்? டெல்லி அரசு இந்த விஷயத்தில் கவனக் குறைவாக இருந்துவிட்டதா? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.. ஆனால், இன்று தமிழ்நாட்டுக்குள் தீவிரமாக கொரோனா நுழைந்துள்ளது.. இதன் தீவிரம் தமிழகத்தின் ஈரோட்டிலேயே துவங்கியதுதான் அதிர்ச்சியாக உள்ளது

சென்னையில் இருந்த ஜெர்மன் தூதரக அதிகாரிகள் தனி விமானம் மூலம் பிராங்க்பேர் புறப்பட்டனர்

தினகரன் : சென்னை: சென்னையில் இருந்து ஜெர்மன் தூதரக அதிகாரிகள் பிராங்க்பேர்ட் புறப்பட்டனர். தூதரக அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினர் உட்பட 159 பேர் தனி விமானத்தில் சென்றனர். மருத்துவ பரிசோதனைக்கு பின் ஏர் இந்தியாவின் தனி விமானம் மூலம் புறப்பட்டனர். மத்திய அரசின் ஏற்பாட்டின்படி 159 பேரும் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

திமுக உயர் பொறுப்புக்களுக்கு துரைமுருகன் டி ஆர் பாலு கே என் நேரு.. ஊரடங்கு நேரத்தில் உலவும் சில குரல்கள்!

திமுக பொருளாளர் நேரு? ஊரடங்கு நேரத்தில் உலவும் சில குரல்கள்!மின்னம்பலம் :
சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் பண்ணை வீட்டில் தனித்திருந்து சமூக விலகல் கொள்கையை கடைபிடித்து வரும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்ட செயலாளரிடமும் கொரோனா தொற்று பற்றிய நிலவரத்தை வீடியோ கால் மூலம் கேட்டு தெரிந்து கொண்டு வருகிறார்.இது மட்டுமன்றி தினந்தோறும் பல்வேறு மாவட்ட செயலாளரிடமும் மாநில நிர்வாகிகளிடமும் வாட்ஸ்அப் காலில் பேசி வரும் ஸ்டாலின்... தமிழக அரசு இந்த அசாதாரண நிலையை எவ்வாறு கையாண்டு வருகிறது என்றும் அதன் அரசியல் லாப நஷ்டங்கள் என்ன என்றும் விரிவாக விவாதிக்கிறார்.
இது ஒரு பக்கம் நடக்க இன்னொரு பக்கம் திமுக மாவட்ட செயலாளர்கள் தங்களுக்குள் வாட்ஸ்அப் கால்களில் பேசி கட்சியின் போக்கு பற்றியும் விவாதித்து வருகிறார்கள்.கடந்த மார்ச் 29ஆம் தேதி கூடியிருக்க வேண்டிய திமுக பொதுக்குழு பொதுச் செயலாளராக துரை முருகனையும் பொருளாளராக டிஆர் பாலுவையும் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்.ஆனால் கொரோனா  பீதி காரணமாக ஒட்டுமொத்த இந்தியாவும் முடக்கப்பட்டதால்  திமுக பொதுக்குழுவும் தள்ளி வைக்கப்பட்டது.

கொரோனா தனிமை முகாமாகும் கலைஞர் அரங்கம் ...ஸ்டாலின் அறிவிப்பு !

கொரோனா தனிமை முகாமாகும் கலைஞர் அரங்கம்! மின்னம்பலம் :  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க கலைஞர் அரங்கத்தை பயன்படுத்தலாம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதுவரை 74 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர். வீடு, வீடாகச் சென்று கொரோனா பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க அதிகமான இடங்கள் தேவைப்படுகிறது. எனவே பயன்படுத்தாத வீடுகள், விடுதிகள் இருந்தால் மாநகராட்சிக்கு தற்காலிகமாக கொடுத்து உதவலாம் என்று சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்தது.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷை இன்று (மார்ச் 31) சந்தித்த திமுக மாவட்டச் செயலாளர்கள் மா.சுப்பிரமணியம், சேகர்பாபு ஆகியோர், அண்ணா அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கை தனிமைப்படுத்துதல் முகாமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ஸ்டாலின் அளித்த கடிதத்தை சமர்ப்பித்தனர்.

டெல்லி நிசாமுதீன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை தேடும் அதிகாரிகள் - நடந்தது என்ன?


BBC : டெல்லி நிசாமுதீனில் நடைபெற்ற மத நிகழ்ச்சி ஒன்றில் கலந்த கொண்ட பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சி அதிகாரிகள் அவர்களைத் தேடி வருகின்றனர். டெல்லி நிசாமுதீனை தலைமையகமாகக் கொண்ட தப்லிக் ஜமாத் அமைப்பால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு உட்பட ஆறு மாநிலங்களிலிருந்து மக்கள் கலந்து கொண்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்தோனீசியா மதகுருவால் பிறருக்கு கொரோனா தொற்று பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மசூதி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது ஆனால் தங்கள் மீது எந்த தவறும் இல்லை என அவர்கள் கூறுகின்றனர்.
20ஆம் நூற்றாண்டின் இஸ்லாமிய அமைப்பான தப்லிக் ஜமாத்தால் நடத்தப்பட்ட இந்த மத வழிபாடு நிகழ்ச்சிகள் பிப்ரவரி மாத கடைசியிலும் மார்ச் மாத தொடக்கத்திலும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு டிக்கெட் மூலம் கூட்டம் வந்ததா அல்லது ஒருங்கிணைப்பாளர்கள் அட்டவணைப்படி விருந்தினர்களை அழைத்தனரா என்பது தெரியவில்லை. இந்த நிகழ்ச்சி வந்த சிலர் நிசாமுதீன் பகுதியிலேயே தங்கியிருக்க வேறு சிலர் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

வீட்டு வாடகை வசூலிக்கக்கூடாது; தமிழக அரசு உத்தரவு

latest tamil news
தினமலர் : சென்னை: கொரோனாவால் ஊரடங்கு, தொழில்கள், கல்வி நிறுவனங்கள் மூடல் காரணமாக, தமிழகம் உள்ளிட்ட வெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்களிடம், மார்ச் மாதத்திற்கான ஒரு மாத வாடகையை வசூலிக்க வேண்டாம் என தமிழக அரசு, வீட்டு உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. வீட்டு வாடகை கேட்டு யாரும் தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனாவால் தமிழகத்தில் 74பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நாடு முழுவதும் ஊரடங்கு, தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. வருமானம் இன்றி தவிக்கும் தொழிலாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு , அரசு உத்தரவிட்டடுள்ள விபரம்:

லாக்-டவுன் நடந்து சென்ற 22 பேருக்கு மேல் உயிரிழப்பு லி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீட்டிற்கு செல்லும் வழியில் ///

Covid-19: லாக்-டவுன் அடுத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீட்டிற்கு செல்ல முயன்றபோது குறைந்தது 22 பேர் பலிtamil.cdn.zeenews.com- சிவா முருகேசன் : ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீடு திரும்ப முயற்சியில் அவர்களில் பலர் இறந்துவிட்டனர். இதுவரை 22 புலம்பெயர்ந்தோரின் இறப்புகள் ஆவணப்படுத்தப்பட்டாலும், உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. டெல்லி:
கொரோனா வைரஸின் பரவலைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்ட 21 நாள் லாக்-டவுனுக்கு மத்தியில், நகரங்களில் வேலை செய்த ஏழை தொழிலாளர்கள் பலர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல மாநில எல்லைகளில் இருந்து பல நூறு கிலோமீட்டர் தூரத்தை கடந்து ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீடு திரும்ப முயற்சித்து வருகின்றனர். தற்போது அவர்களில் பலர் இறந்துவிட்டனர். இதுவரை 22 புலம்பெயர்ந்தோரின் இறப்புகள் ஆவணப்படுத்தப்பட்டாலும், உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
வணிகங்கள், நிறுவனங்கள் மூடப்பட்டதும், ஏராளமான தினசரி கூலித் தொழிலாளர்கள், அவர்களில் பலர் தாங்கள் பணிபுரிந்த இடத்திலேயே வசித்து வந்தனர். திடீரென்று அவர்களுக்கு பெரிய நகரங்களில் எந்தவிதமான வாழ்வாதாரமும் தங்குமிடமும் இல்லாமல் போய்விட்டனர். அவர்களில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் குடும்பங்கள் உட்பட, மாநிலங்களுக்கு இடையேயான நெடுஞ்சாலைகளில் தங்கள் வீடுகளுக்கு நோக்கி அணிவகுத்துச் சென்றனர். அவர்கள் செல்லும் வழியில், பலரும் தாக்கப்பட்டனர் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் சமூக தொலைதூர விதிகளை மீறியதற்காக காவல்துறையினரால் எல்லைகளிலிருந்து அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

டெல்லி ஜமாத் நிகழ்ச்சியில் பங்கேற்ற தெலுங்கானவைச் சேர்ந்த 6 பேர் கொரோனா வைரஸ் உயிரிழப்பு

Velmurugan P  -  /tamil.oneindia.com  : :   ஹைதராபாத்: டெல்லியில் நடந்த மத வழிபாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற தெலுங்கானாவைச் சேர்ந்த 6 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்திருப்பதாக அம்மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ள நிலையில் அங்கு தற்போது 6 பேர் உயிரிழந்துள்ளனர். 
இது தொடர்பாக தெலுங்கானா முதல்வர் அலுவலக வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 6 பேர் தற்போது உயிரிழந்துள்னர். உயிரிழந்த ஆறு பேரும் டெல்லி நிஜாமுதினில் மார்ச் 13 முதல் 15 வரை ஒரு குறிப்பிட்ட மதத்தின் வழிபாட்டு கூட்டத்தில் பங்கேற்றவர்கள் ஆவர். 
கொரோனா: வுகானில் செத்து மடிந்தது 3,200 இல்லையாம்.. 42,000 பேர் பலியாகி இருக்கலாம் என அச்சம்! 
 ஆறு பேரில் இருவர் ஹைதராபாத்தில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவமனையிலும், தலா இரண்டு பேர் தனியார் மருத்துவமனைகளிலும், நிஜாமாபாத் மற்றும் கட்வால் நகரங்களில் தலா ஒருவரும் இறந்துள்ளனர். மாவட்ட ஆட்சி தலைவர்களின் கீழ் உள்ள சிறப்பு குழுக்கள் இந்த நபர்களுடன் தொடர்பு கொண்ட நபர்களை அடையாளம் கண்டு மருத்துவமனைகளில் வைத்து தீவிரமாக கண்காணித்து வருகிறது. டெல்லியில் நடந்த மத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து குடிமக்களுக்கும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்குமாறு அரசு அறிவுறுத்தி உள்ளது. 

திங்கள், 30 மார்ச், 2020

கொரோனா வைரஸ்: வளைகுடா நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன?


bbc.com :; உலகம் முழுக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸின் தாக்கம், எண்ணெய் வளம் அதிகமுள்ள வளைகுடா நாடுகளையும் விட்டு வைக்கவில்லை. வளைகுடா நாடுகளில் அதிக அளவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் வேலை செய்து வருவதால், அந்த நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் எப்படி உள்ளது? என்பதை அறிந்து கொள்ள மக்கள் தனிக்கவனம் செலுத்தி வருகின்றனர். தற்போதைய சூழலில் பெரும்பாலான வளைகுடா நாடுகள், தேசிய அளவிலான ஊடரங்கை பிறப்பிக்கவில்லை என்றாலும் பகுதி நேரமாக குறிப்பாக இரவு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி வருகின்றன. கொரோனா அச்சம் காரணமாக ஏற்கனவே கச்சா எண்ணெய் தேவை குறைந்து வருவது, உள்நாட்டு வர்த்தக நடவடிக்கைகளைக் குறைத்துள்ளது ஆகியவற்றினால் அடுத்து வரும் மாதங்களில் பொருளாதார ரீதியான தாக்கத்தை வளைகுடா நாடுகள் சந்திக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

புலிகளின் கந்தன் கருணை படுகொலைகள்....‘பிணங்களுடன் கிடந்து மீண்டேன்’ 1987 மார்ச் 30


ilankainet.com : பிணங்களுடன் கிடந்து மீண்டேன்’ புலிகளின் ” கந்தன் கருணை படுகொலை” … 1983 கறுப்பு ஜூலையை ஒத்த “1987 மார்ச் 30 இல் ” கந்தன் வைக்கப்பட்டிருந்த தமிழ்க் கைதிகள்.
இந்த வீட்டில்தான் கொலைகள் நடந்தன

கைதிகள் என்போர் குற்றவாளிகள். அல்லது குற்றத்துக்காக சந்தேகிக்கப்படுவோர். ஆம் இவர்களும் அத்தகைய ஒரு குற்றத்துக்கு உரியவர்களே! அது என்னவென்றால், தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடப் புறப்பட்டதுதான்! விடுதலைப் புலிகள் செய்த அதே காரியம் ஏன் அவர்களாலேயே குற்றமாக்கப்படுகிறது என்றால்…
அதை விளக்க அவர்களின் பக்கவாத்தியக்காரர்களால் தான் முடியும்!
சில புலி ஆதரவாளர்களுக்கு இது மிகச் இலகுவான காரியமாக இருக்கலாம். ஆனால், ஒன்று இங்கு கைதிகளாக வைக்கப்பட்டிருந்தவர்கள் யாவரும் தமிழ் தாயின் புத்திரர்கள், ஒருவேளை இவர்களின் சகோதர சகோதரிகள் யாரும் புலிகள் இயக்கத்தில் கூட இருந்திருக்கலாம்.

கருணை படுகொலை” இரவுகள் பொதுவாக ஒரே மாதிரித்தான் இருளும் மௌனமும் துயிலும். ஆனால் அன்றைய இரவு 1987 மார்ச் 30ம் திகதிய யாழ்ப்பாணத்து இரவு அப்படி இருக்கவில்லை. அது ஒரு கோர இரவு அது படு கோரமாகத் தமக்கு அமையப் போகின்றது என்பதை உணராமல், நாளாந்தம் கடந்து போகும் சாதாரண இரவு போலக்கருதி மறுநாளைத் தரிசிக்கத் துயில்வதற்காகத் தமது இரவு உணவைப் புசித்து கொண்டிருந்தார்கள்… அவர்கள் புலிகள் இயக்கத்தினால் தடுத்து

எங்களுக்கு எதுவும் வேண்டாம்.. வெளியே விட்டா போதும்.. கதறும் பீகார் தொழிலாளர்கள்.. வீடியோ!


tamil.oneindia.com : விதிமுறை பிகே வெளியிட்ட இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.. இதையடுத்து சிவான் பகுதி போலீஸ் அதிகாரி அபினவ் குமார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு இதை பற்றி சொல்லும்போது, "அவர்களுக்கு ஸ்கிரீனிங் செய்ய வேண்டும்.. சாப்பாடு தரப்பட்டு, அதற்கு பின்னர்தான் அனுப்ப வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.. ஆனால் அவர்களோ அவசரப்படுகிறார்கள்" என்றார். பிகே போட்ட இந்த வீடியோ மிகுந்த கவனத்தை ஏற்படுத்தி வருகிறது.
பாட்னா: "எங்களுக்கு ஒன்னுமே வேணாம்.. தயவுசெய்து வெளியே விட்டால் போதும்" என்று அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பீகார் தொழிலாளர்கள் கண்ணீருடன் கெஞ்சும் வீடியோவை பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அத்துடன், "இன்னொரு அதிர்ச்சி காட்சி.. தொழிலாளர்களின் இதயத்தை கலங்கடிக்கும் சமூக விலகல்... தனிமைப்படுத்தல் ஏற்பாடு" என்று பதிவிட்டுள்ள பிரசாந்த் கிஷோர், நிதிஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று ஹேஷ்டேக் போட்டு வலியுறுத்தியும் உள்ளார்! ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோதே பிரசாந்த் கிஷோர் ட்விட்டரில் ஒரு பதிவு போட்டிருந்தார்.. "ஊரடங்கு என்பது வேண்டுமானால் சரியான முடிவாக இருக்கலாம்.. ஆனால் 21 நாட்கள் என்பது மிக நீண்டகாலம்..இந்த ஊரடங்கிற்கு பின்னால் ஒருவர் தகுந்த விலை கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

கொரோனாவால் அல்ல, பசியால் இறந்துவிடுவோம்: தகிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்!


கொரோனாவால் அல்ல, பசியால் இறந்துவிடுவோம்: தகிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்!மின்னம்பலம் : கிழக்கு டெல்லியின் ஆனந்த விகார் பகுதியில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் கனமான பைகளுடனும் தங்களது பச்சிளம் குழந்தைகளை தலையில் சுமந்துகொண்டு சிறுவர்கள், வயதானவர்களுடன் இடைவிடாமல் அணிவகுத்துச் சென்ற காட்சியை கடந்த இரண்டு நாட்களில் நாம் பார்க்காமல் இருந்திருக்கமாட்டோம். கொரோனா வைரஸ் பெருந்தொற்றிலிருந்து தப்பிக்க இவ்வளவு வேகமாக அவர்கள் செல்லவில்லை. பசி, பட்டினியிலிருந்து தப்பிக்க தங்கள் சொந்த ஊரை நோக்கி விரைகிறார்கள்.
ஊரடங்கால் தொழிலாளர்களின் வேலை ஒரே இரவில் முடிவுக்குவந்துவிட்டது. வருமானம் இல்லை, அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை, தங்கியிருக்கும் இடத்துக்கு வாடகை செலுத்த பணம் இல்லை உள்ளிட்ட காரணங்களால் நூற்றுக்கணக்கான மைல்கள் இருந்தாலும் சொந்த ஊருக்கு சென்றுவிடுவது என தீர்மானித்து நடைபயணமாகவே சென்றுகொண்டிருக்கின்றனர்.

கொரோனா: அதிக ஆபத்து மிக்க நகரங்கள் பட்டியலில் சென்னை- இலங்கை அரசு அறிவிப்பு..!


tamil.news18.com :சென்னையில் இருந்து இலங்கை திரும்பிய 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து அதிக ஆபத்து மிக்க நகரங்களில் ஒன்றாக சென்னை இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இலங்கையில் இதுவரை 115 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில், சென்னையில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா பாதித்திருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.
ஏற்கனவே இந்த வார தொடக்கத்தில் சென்னையில் இருந்து வந்த இருவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 14 நாட்களில் சென்னை சென்று திரும்பியவர்கள் தாங்களாகவே விபரங்களை தெரிவிக்கும்படி இலங்கை சுகாதார சேவைகள் இயக்குநர் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு ஒரு லட்சத்தைத் தாண்டும் - அதிரவைத்த ட்ரம்ப் வீடியோ


tamil.news18.com : அமெரிக்காவில் வரும் இரண்டு வாரங்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை உச்சத்தில் இருக்கும் என்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஊஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்திவருகிறது. உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸுக்கு எதிராகப் போரிட்டுவருகின்றனர். உலக அளவில் அமெரிக்காவில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. அமெரிக்காவில் இதுவரையில் கொரோனாவால் 1,40,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,500-யை நெருங்கி உள்ளது. இந்தநிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் ட்ரம்ப், ‘கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை 100,000-த்துக்குள் கட்டுப்படுத்துவதே பெரிய விஷயம். கொரோனா பரவல் தொடர்ந்து இருப்பதான் காரணமாக நாடு முழுவதுமான ஊரடங்கு ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. ஜூன் 1-ம் தேதி முதல் நாடு இயல்புநிலையை அடையும் என்று நம்புகிறேன். அமெரிக்காவில் அடுத்து வரும் இரண்டு வாரங்களில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை உச்சத்தில் இருக்கும்’என்று தெரிவித்துள்ளா

குவைத்.. 5000 இலங்கையர்களை வெளியேறுமாறு உத்தரவு

Jeevan Prasad : விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் வீசா
இல்லாத 5000 இலங்கையர்களை குவைத்திலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது. வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறவும் முடியாத அவலம்!
விசா இல்லாத அனைத்து இலங்கையர்களுக்கும் நாட்டை விட்டு வெளியேற குவைத் அரசு உத்தரவிட்டுள்ளது.
குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் அதிகாரி ஒருவர் குவைத்தில் விசா இல்லாத சுமார் 5,000 இலங்கையர்கள் இருப்பதாக தெரிவித்தார்.
கோவிட் 19 வைரஸ் காரணமாக குவைத் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது மற்றும் விசா இல்லாத அனைத்து இலங்கையர்களுக்கும் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 30 வரை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது.
குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் இதற்கிடையில் குவைத்தில் உள்ள இலங்கையர்கள் வெளியேறாவிட்டால், அவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள் என்று கூறுகிறது.

உபியில் ஊர் திரும்புபவர்களை மொத்தமாக உட்கார வைத்து மருந்து ஸ்பிரே .. நாஸி படைகள் செய்த அதே அட்டூழியம்...


Karthikeyan Fastura :; 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது "செயல்திட்டம் இல்லாத இந்த லாக்டவுன் கொரோனாவை விட அதிக இறப்புகளை உருவாக்கும்" என்று எழுதினேன். இன்று வடமாநிலங்களில் இருந்து வரும் செய்திகள் அதை தான் சொல்கின்றன. மிக கேவலமான அரசாங்கத்தை நாம் கொண்டிருக்கிறோம். உபியில் ஊர் திரும்புபவர்களை மொத்தமாக உட்கார வைத்து மருந்தடித்து அனுப்புகிறார்கள். சட்டென்று நாஸி படைகள் செய்த இதே அட்டூழியம் கண் முன் வந்தது. டெல்லியில் இருந்து தத்தம் ஊருகளுக்கு பசியிலும் பட்டினியிலும் பல மைல் தூரங்கள் வெயிலில் நடந்த களைப்பில் பல பேர் உயிர்விட்டிருக்கிறார்கள். இது மீடியா கவர் செய்த ஒரு பானைக்கு ஒரு சோறு பதமாக ஒரு சிறு பகுதி. ஆனால் கணக்கில் வராத பயணங்களும் பலிகளும் எத்தனை எத்தனை ? இப்பவும் இந்த அரசிற்கு முட்டு கொடுப்பதை விட்டுட்டு அறிவுடன் அறத்துடன் பேசுவது நல்லது.
ஏனென்றால் இது இதோடு முடிந்துவிடாது. ஏப்ரல், மே மாதம் தான் இதன் உச்சகட்டத்தை பார்க்கப்போகிறோமோ என்று அஞ்சுகிறேன். இதில் பாதிக்கப்படபோவது அனைவருமே. மனிதர்களுக்கு இடையேயான வலைப்பின்னலில் தான் இந்த உலகம் ஒரு குறையும் இல்லாமல் சென்று கொண்டிருந்தது. இன்று அந்த சங்கிலி முற்றிலுமாக உடைத்து போடப்பட்டுள்ளது.

இந்தியாவில் அடுத்த சில மாதங்களில் 24 கோடி பேருக்கு கொரோனா?

Muralidharan Pb : · ஒரு செய்தியை கண்டேன் புதிய தலைமுறை தொலைக்காட்சியில். அதிர்ந்து போனேன். இந்தியாவில் அடுத்த சில மாதங்களில் 24 கோடி பேருக்கு கொரோனா தோற்று ஏற்படும் என்ற திடுக்கிடும் தகவல் தான் அந்த அதிர்ச்சி. அது வெறும் அச்சுறுத்தலாக இருக்க வேண்டும். இது நடக்கக்கூடாது. நடக்கவேண்டாம் என்று தான் இந்தியர்கள் அனைவரும் வேண்டுவோம். நடக்கப்போதில்லை என்று நம்மால் அறதியிட்டு கூறமுடியாததை உணர்த்தியது தலைநகரில் நடந்த நிகழ்வுகள். அரசு சரியாக முயற்சி மேற்கொள்ளவில்லையா நிச்சயமாக ஒன்றிய, மாநில அரசுகள் முயற்சியில் எந்தவித விமர்சனமும் இல்லை. ஆனால் நடக்க வேண்டிய அடுத்தடுத்த நடவடிக்கைகள் அச்சமூட்டும்படியாக இருக்கின்றது.
லாக் டௌன் சரிதானே?
நிச்சயமாக. லாக் டௌன் நல்ல தீர்வு. முற்றிலும் சரி. ஊரடங்கினால் மட்டுமே தான் மாற்று மருந்து இல்லாத நிலையில் நோய் பரவாமல் தடுக்க முடியும்.
மருத்துவப் பணிகளில் குறையிருக்கா?
என் சாமான்யா அறிவுக்கு எட்டியவரை ஒன்றிய மாநில அரசுகள் சிறப்பாகவே செயலாற்றுகிறது.இந்த விஷயத்தில் மட்டும்.
அன்றாடப் பொருட்கள் கிடைக்கிறதா?
கிடைப்பதில் சிக்கல் இருக்கா?
கிடைக்கிறது. அதிலும் எந்த சிக்கலும் இல்லை.
என்னதான் பிரச்சனை? எங்கே சறுக்கப்போகிறோம் என்று நாம் கருதுவது?
ஓன்றிய அரசு, வழக்கம் போல அவசர கோலத்தில் அள்ளி தெளித்ததாக தோன்றுகிறது. தொலைக்காட்சியில் தோன்றி அறிவிக்கும் முன்பு எல்லாமே சரியாக இருக்கிறதா என்று இன்னும் கூட தீர்க்கமாக சிந்தித்து செயல் பட்டிருக்கலாமோ எனத் தோன்றுகிறது.

‘வெளிமாநில தொழிலாளர்களை தடுத்து நிறுத்துங்கள்’: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு - எல்லை தாண்டி சென்றால் 14 நாள் தனிமைப்படுத்தாவும்

தினத்தந்தி : கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில், வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் செல்வதை தடுத்து நிறுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. அவ்வாறு எல்லை தாண்டி செல்பவர்களை பிடித்து 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கவும் கட்டளையிடப்பட்டு இருக்கிறது. புதுடெல்லி,பரவுவதை தடுக்க நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 14-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் நாடு முழுவதும் பால் சப்ளை, மருத்துவம் போன்ற அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து பணிகளும் முடங்கி உள்ளன. கடைகளை குறிப்பிட்ட நேரம் மட்டுமே திறந்து வைக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. பஸ், ரெயில், விமான சேவைகள் நிறுத்தப்பட்டு உள்ளன. அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. போக்குவரத்தை கட்டுப்படுத்த மாவட்ட, மாநில எல்லைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளா போன்ற மாநிலங்களில் வசிக்கும் பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இந்த ஊரடங்கு உத்தரவால் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் ஆங்காங்கே உள்ள சமுதாய நல கூடங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு அரசின் சார்பில் உணவு வழங்கப்படுகிறது.

நியூயார்க்கில் 52,000 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு ... லாக்டவுன் கிடையாது .. பங்கு மார்கெட் சரியுமோ?


தினத்தந்தி :அமெரிக்காவை மிரட்டும் கொரோனா தொற்று; நியூயார்க நகரை சீனா உகான் நகரைப்போல் தனிமை படுத்த டிரம்ப் அதிரடி திட்டத்தில் இருந்து பின்வாங்கினார்.
நியூயார்க்  அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துவிட்ட நிலையில், இதில் நியூயார்க்கில் மட்டும் 52,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றின் மையமாக நியூயார்க் இருப்பதால், வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அந்நகரத்தை தனிமைப்படுத்துவது குறித்து சிந்திப்பதாக அமெரிக்க ஜனாதிபதிடொனால் டிரம்ப் கூறி உள்ளார். ஆனால், அதிபர் டிரம்பின் இந்த யோசனையை நியூயார்க் ஆளுநர் கடுமையாக விமர்சித்தார். இது ''விபரீதமானது'', ''அமெரிக்காவிற்கு எதிரானது'', ''போர் அறிவிப்பு போன்றது'' என்று நியூயார்க் ஆளுநர் ஆன்ட்ரு தெரிவித்தார்.

கொரோனாவினால் பிரான்சில் மகனும், சுவிஸில் தந்தையும் இறப்பு .. இலங்கை தமிழர்கள்

Jeevan Prasad : கொரோனாவினால் பிரான்சில் மகனும், சுவிஸில் தந்தையும் மரணம்!
“கொரானா வைரஸ்” உலகளாவிய ரீதியில் வேகமாக பரவி குறுகிய காலப்பகுதிக்குள்ளேயே இன்றுவரை தினம்தினம் மக்கள் உயிரிழந்து வரும் நிலையில், சுவிட்சர்லாந்தில் புங்குடுதீவைச் சேர்ந்த 59 வயது நிரம்பிய திரு. சதாசிவம் லோகநாதன் என்பவர் நான்கு தினங்களுக்கு முன்னர் உயிரிழந்தது நீங்கள் அறிந்ததே..
அதேபோல் பிரான்சில் கொரோனாவினால் அண்மையில் பலியான யாழ். தாவடி கொக்குவில் வேம்படி முருகமூர்த்தி கோயிலடியைச் சேர்ந்த கீர்த்தி எனும் திரு. குணரட்ணம் கீர்த்திகனின் தந்தையார் திரு. குணரட்ணம் அவர்களும் இன்றையதினம் சுவிஸ் நாட்டில் கொரோனாவிற்குப் பலியாகியுள்ளதாக அவருடைய உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கீர்த்திகன் இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னரே சுவிஸ் நாட்டிலுள்ள லங்கேந்தால் எனுமிடத்தில் உள்ள சகோதரி வீட்டுக்குச் சென்று தந்தையைப் பார்த்து வந்ததுடன் அங்கு நடைபெற்ற குடும்ப நிகழ்விலும் கலந்து கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை சுவிஸில் உள்ள சகோதரிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும் தெரிய வருகிறது.

தோழர் ஃபாரூக்கிற்கான மேடையில், முஹம்மதியர்களுக்கு ஆதரவாக CAA எதிர்ப்பு பரப்புரை. இது வேடிக்கையாக தெரியவில்லையா?


தஜ்ஜால் அழிப்பவன் is with Rishvin Ismath. : தம்பி ஃபாரூக் படுகொலை செய்யப்பட்ட தினம் (16-03-2020)இன்று.
குர்ஆன் 5:33 அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டனை இதுதான்; (அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்; இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்; மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு.
குர் ஆன் 9:05. சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள்,...
முஹம்மது என்ற மூடன் அவிழ்த்துவிட்ட கட்டுக்கதைகளை நம்பிய கூட்டம்தான் அந்தப் படுபாதகச் செயலைச் செய்தது. நாங்கள் இப்படிப் பேசும்பொழுதெல்லாம், "இது போர்ச் சூழல்களுக்காகச் சொல்லப்பட்டது; எங்கள் மதம் அன்பையும் கருணையையும் மட்டுமே போதிகிக்கின்றதென" ஒரு கூட்டம் முட்டுக்களை தூக்கிக் கொண்டுவரும். (இன்னொரு அறிவார்ந்த கூட்டம் இருக்கின்றது அவர்களை பற்றி பதிவின் இறுதியில் குறிப்பிட்டிருக்கிறேன்). "யாரோ ஒருசிலரின் செயல்களுக்களுக்கு எப்படி ஒரு சமுதாயத்தையே எப்படி நீங்கள் குற்றவாளியாக்கலாம் "என்றும் அந்த அறிவார்ந்த கூட்டத்தின் ஆதரவுடன் கூக்குரலிடும்.
எங்களை நோக்கி "இஸ்லாம் என்றால் சமாதானம், எங்கள் மார்க்கம் அன்பை போதிக்கிறது ஆட்டுக்குட்டியை மேய்க்கிறது " என்று வகுப்பெடுப்பதைவிட இதை உங்களைச் சார்ந்தவர்களை அதாவது உங்களிலுள்ள 'அந்த யாரோ சிலரை' நோக்கிக் கூறியிருந்தால் அவர்கள் எப்படி தம்பி ஃபாரூக்கை படுகொலை செய்திருப்பார்கள்?

பசியால் வாடும் குழந்தைகளையும் ஏழை தொழிலாளர்களையும் மோடி அரசு கைவிட்டுவிட்டது? சிதம்பரம் அதிரடி!

tamil.oneindia.com - mathivanan-maran.: சென்னை: கொரோனா லாக்டவுனால் பசியால் வாடும் குழந்தைகளையும் ஏழைத் தொழிலாளர்களையும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கைவிட்டுவிட்டதா? என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் இருந்து வெளியேறும் உ.பி. இளைஞர்கள்... அதிர வைக்கும் வீடியோ
இது தொடர்பாக ப. சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
தொலைக்காட்சியில் பார்க்கும் பசியில் வாடும்