Rishvin Ismath : Birds of a feather flock together என்று சொல்வார்கள்.
அதே போன்று Coming events cast their shadows before என்றும் சொல்வார்கள்.
இவற்றைச் சொல்லி விட்டதால் சபரிமாலாவை ஜிஹாதி என்றோ, பயங்கரவாதி என்றோ சொல்லிவிட்டேன் என்று தயவு செய்து யாரும் தப்பாகக் கருதிவிட வேண்டாம்.
எனினும் இஸ்லாம் மதத்தைப் பின்பற்ற முற்படும் ஒருவர், தனது பின்பற்றுதலை மக்கா இஸ்லாத்துடன் மட்டுப் படுத்திக் கொள்ளாமல்,
இஸ்லாத்தின் இறைதூதர் என்றும், அழகிய முன்மாதிரி என்றும் சொல்லப்படுகின்றவரின் மதீனா வாழ்க்கையையும் சேர்த்துத் தீவிரமாகப் பின்பற்ற முயலும் பொழுது,
அவர் தன்னை அறியாமலே ஜிஹாதியாக மாறிவிடுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகின்றது என்ற எச்சரிக்கையை விடுக்காமல் இருக்க முடியாதுள்ளது.