சனி, 29 ஜனவரி, 2022

திமுக தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளார்கள்? சமூக ஊடகலீக்ஸ்

May be an image of 4 people, people standing and text

 Rajkumar Rajkumar  · : திமுக இணையதள நண்பர்கள்
பழைய மனைவிக்கு பல்லு போய் விட்டது என புது மனைவியை தேடி வந்த புதுமாப்பிளை போல
இன்று திமுகவில் புது வரவுகளாக *இணைந்து வருகின்றனர்.*
கடந்த மே 7 வரை நம் திமுக வை தோற்கடிக்க வரிந்து கட்டி வேலை பார்த்தவர்கள்.
திமுக வென்று வெற்றி வாகை சூடிய பின் சூழ்ந்து கொண்டனர்
தங்கள் வருமானத்தை பெருக்கி கொள்ளவும் வருமானம் தேடவும்
பத்தாண்டு ஆட்சியில் இல்லாத நேரத்தில் அதிமுக வினரின் மிரட்டுலுக்கும் அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது தன் கொள்கையை நெஞ்சில் நிறுத்தி கொண்டு திமுக கரை வேட்டியை தன் இடுப்பில் கட்டிக் கொண்டு உழைத்த உண்மை கழக தொண்டர்கள் இன்று வரை அடைந்த பலன் என்ன ??

தனுஷ் - ஐஸ்வர்யா விவகாரம் ..இறுதிவரை ரஜினிக்கு தெரியாமல் மூடி மறைத்த லதா!

ladha-rajinikanth

cinemapettai.com  -Sarath  :  ரஜினிகாந்திற்கு சமீப காலமாக தொடர்ந்து வேதனையில் வந்து கொண்டிருக்கின்றன.  இதனால் ரஜினிகாந்த் தற்போது என்ன செய்வதென தெரியாமல் மன அமைதியைத் தேடி அலைகிறார். இருந்தாலும் இவருக்கு தொடர்ந்து வேதனை கொடுக்க கூடிய சம்பவங்கள் தான் காதுக்கு வருகிறது.
ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் இணைந்து காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவரது வாழ்க்கையில் சந்தோசமாக 18 வருடங்கள் சென்றது. மேலும் இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் புரிந்து வாழ்ந்து வந்தனர். தற்போது இவர்கள் புரிதல் திசைமாறி விவாகரத்து வரை சென்றுள்ளது.
அதாவது சமீபகாலமாக தனுஷ் ஐஸ்வர்யா இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஒரு சில நாட்களாக இருவரும் சண்டை போட்டுள்ளனர். இந்த விஷயம் லதா ரஜினிகாந்துக்கு ஏற்கனவே தெரிந்துள்ளது. இதனை ரஜினிகாந்திடம் கூறியுள்ளார்.

உ.பி தேர்தல்;"குஜராத்தில் இருந்துதான் உண்மையான ஆச்சரியம் வரப்போகிறது" - அகிலேஷ் யாதவ்!

 நக்கீரன் செய்திப்பிரிவு உத்தரப்பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல், மார்ச் 7 ஆம் தேதிவரை ஏழு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ராஷ்டிரிய லோக் தளத்தின் தலைவர் ஜெயந்த் சவுத்ரியுடன் சேர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், உத்தரப்பிரதேச தேர்தலில் எந்த ஆச்சரியமும் நிகழாது என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது; பாஜக ஏற்கனவே தோற்றுவிட்டது. மகாத்மா காந்தியின் கொலையாளிகளை கவுரவிப்பவர்களுக்கு வாக்காளர்கள் பாடம் புகட்டுவார்கள். உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகள் மாநிலத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

டிஜிட்டல் திண்ணை: காங்கிரசுக்கு ஸ்டாலின் கொடுத்த உத்திரவாதம்!

டிஜிட்டல் திண்ணை:  காங்கிரசுக்கு ஸ்டாலின் கொடுத்த உத்திரவாதம்!

மின்னம்பலம் : "உள்ளாட்சித் தேர்தல் பரபரப்பு அனைத்து கட்சிகளிடமும் தொற்றிக் கொண்டிருக்கிறது. முக்கிய அரசியல் கட்சிகள் தங்களது நிர்வாகிகளுடனும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் ஜனவரி 27 ஆம் தேதி திமுக எம்பியான டிகேஎஸ் இளங்கோவன் இல்ல திருமண விழாவில் திமுகவின் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய காங்கிரஸ் தலைவர் கே .எஸ் .அழகிரி, 'முதல்வர் ஸ்டாலின் இப்போது அதிகமாகப் பேசுவதில்லை. கூட்டணி கட்சி தலைவர்கள் கூட அவரிடம் அதிகமாக பேச முடிவதில்லை' என தனது ஆற்றாமையை வெளியிட்டிருந்தார். இந்த விழாவிலேயே முதல்வர் ஸ்டாலின், 'நான் பேசுவதைக் காட்டிலும் எனது திறமையை செயலில் காட்ட விரும்புகிறேன்' என்று பதில் அளித்திருந்தார்.

இரு பிள்ளைகளையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட இலங்கையர். அவுஸ்திரேலியாவில்

Indika Gunathilaka, and his son Kohan, 6, and daughter Lily,

tamil.adaderana.lk: 40 வயதுடைய இலங்கையர் இந்திகா குணாதிலகா தனது இரண்டு பிள்ளைகளை ( கோஹன் - லில்லி)   கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் வசிக்கும் இலங்கையர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
படுகொலை செய்யப்பட்ட சிறுவனுக்கு 6 வயதும் சிறுமிக்கு 4 வயதும் என அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 smh.com.au   : ‘Sorry for not being able to save you’: Two children killed by father in WA
By Heather McNeill and Holly Thompson

நடுக்கடல் விபத்தில் தப்பி, கவிழ்ந்த படகில் தத்தளித்த இளைஞர் - உலகை உலுக்கும் புகைப்பட பின்புலம்

.hindutamil.in : அமெரிக்காவின் புளோரிடா நடுக்கடலில், கவிழ்ந்த படகின் மேலே தனி ஆளாக அமர்ந்து வந்த இளைஞரின் புகைப்படம், உலகம் முழுவதும் கடந்த சில தினங்களாக பரவி, மனதை உலுக்கி வருகிறது. அந்தப் புகைப்படத்திலிருந்தவர் கொலம்பியாவைச் சேர்ந்த 22 வயது இளைஞரான ஜுவான் ஸ்டிபன் மோண்டோயா. இந்தப் பயணத்தின் பின்புலமும் வலி மிகுந்தது.
விபத்துக்குள்ளான படகில் பல மணி நேரமாக நடுக்கடலில் பயணித்து வந்த ஜுவான், அமெரிக்க கடற்படையால் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டபோது, அவரது உடலில் இருந்த அனைத்து நீர்ச்சத்தும் இழந்து மிகவும் சோர்வாகக் காணப்பட்டார். உடனடியாக ஜுவானுக்கு அமெரிக்க கடற்படை தண்ணீரும் உணவும் அளித்து அவரை மீட்டனர்.

நடிகர் ராதாரவி மீது பல கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு!.. டப்பிங் கலைஞர்கள்

 மின்னம்பலம் : நடிகர் சங்கத்தை போலவே டப்பிங் கலைஞர்கள் சங்கத்திலும் ஊழல் குற்றச்சாட்டுக்கு நடிகர் ராதாரவி ஆளாகியுள்ளார்.
புகார் குறித்து தொழிலாளர் நலத்துறையின் அறிக்கையை தொடர்ந்து, ராதாரவி மீது நடவடிக்கை எடுக்கக்கூடும் என்கின்றனர் டப்பிங் கலைஞர்கள்.
சங்க நிர்வாகத்தில் 10 ஆண்டுகளாக வெவ்வேறு பதவிகளை வகித்தவர் நடிகர் ராதாரவி. நடிகர் சங்க பொறுப்பிலும் இருந்த இவர் மீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது.
அதேபோல் டப்பிங் கலைஞர்கள் சங்கத்திலும், பல கோடி ரூபாய் ஊழல் புகார் கூறப்படுகிறது.

அய்யா வெற்றிக்கொண்டான் நினைவு நாள் இன்று.

 ராதா மனோகர் : அய்யா வெற்றிகொண்டான் அவர்களின் இந்த காணொளியை எப்போதும் கேட்டாலும் உள்ளத்தை தொட்டுவிடும். கேட்டுப்பாருங்கள் !
ராஜாஜி கல்கத்தாவில கவர்னராகவும் இருந்தாரு  இங்கே முதலமைச்சராகவும் இருக்கிறாரு ..    அப்பத்தான் பெரியாறு நினைசாரு ..
அடேய் இவனுக குடுமியையும் பிடிசுகிரானுக  காலையும் பிடிசுக்கிராணுக .  இதுக்கொரு வழி பண்ணல இனிமே இந்த ஜனங்களை காப்பாத்த முடியாது ..
அப்போ ஒரு கோஷத்தை கொண்டுவாறாரு ... பச்சை தமிழன் ஆட்சியை கொண்டுவருவேன் .
பண்டித நேருவா காமராஜரை கண்டுபிடிச்சாரு ? இல்லை வெள்ளைக்காரனா கண்டு பிடிச்சாங்க ?

ஹோலி கிராஸ் பெண்கள் பள்ளி / கல்லூரி இல்லையென்றால் சீதாலட்சுமி பள்ளி/கல்லூரி என்று ஒன்று ....?

May be an image of 2 people, motorcycle and outdoors

சுமதி விஜயகுமார்  :     சென்ற வாரம் வாட்ஸாப்ப் செயலியில் ஒரு காணொளி வந்தது.
 அதில் ஒருவர் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இந்தியர்கள் எப்படி சுரண்டப்பட்டார்கள் என்று பட்டியலிட்டார். அப்போது ஒன்றை குறிப்பிட்டார்.
ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிய பொழுது இந்தியர்களின் கல்வி விழுக்காடு வெறும் 19% மட்டுமே இருந்தது என்று குற்றம் சாட்டினார்.
ஆனால் அந்த 19% தில் எவ்வளவு விழுக்காடு பார்ப்பனர்கள் இருந்தார்கள் என்றோ,
 ஆங்கிலேயர்கள் ஆட்சி முன்பு இந்திய பரப்பளவில் எத்தனை விழுக்காடு கல்வி கற்றவர்கள் இருந்தார்கள் என்றோ,
 அப்படி கல்வி கற்றவர்கள் கூட என்ன விதமான கல்வியை கற்றார்கள் என்றோ குறிப்பிடவில்லை.

திருப்பதி கோயில் உண்மையில் சமண தீர்த்தங்கரர் நேமிநாதரின் கோயில்? TIRUPATI - BALAJI- IS A JAIN TEMPLE OF DRAVID CIVILIZATION.

Neminath High Resolution Stock Photography and Images - Alamy
நேமிநாத தீர்த்தங்காரர்

 ராதா மனோகர் : திருப்பதி வெங்கடாசலபதி அலைஸ் பாலாஜி என்று அழைக்கப்படும் திருப்பதி கோயில் ஒரு சமண கோயில் என்று ஜெயின் ஆராய்ச்சியாளர்கள் அறுதி இட்டு கூறுகின்றனர்
எட்டாம் நூற்றாண்டளவில் ராமானுஜரும் சங்கராச்சாரியும் ஏராளமான சமண பௌத்த கோயில்களை இந்து கோயில்களாக மாற்றியுள்ளனர்
திருப்பதி வெங்கடாசலபதியின் சிலையை பல தடவைகள் எந்தவித ஆபரணங்களும் இல்லாமல் புகைப்படம் எடுத்துள்ளனர்
அவற்றில் மிக தெளிவாக இந்த உண்மை தெரிகிறது
வெங்கடாசலபதியின் முகத்தை மறைக்கும் அளவுக்கு நாமம் போடுவதன் ரகசியம் இதுதான்
நாமம் முழு முகத்தையும் மறைத்துவிடும்  . இதன் காரணமாகவே ஒருவரை ஏமாற்றுவது என்றால் நாமம் போடுவது என்றா சொல்தொடர் உருவாகி இருக்கலாம் .
இந்த கருத்தை மறுப்பது மிகவும் சிரமம் . இதை நம்புவதற்கு போதியளவு முகாந்திரம் உள்ளது
அந்த சிலை  சமணர்களின் மூன்றாவது தீர்த்தங்கரர் என்று கருதப்படும் நேமிநாதரின் சிலையாகும்   click - link tirupati jain-temple

வெள்ளி, 28 ஜனவரி, 2022

.திராவிடம் ஒரு மாநிலத்துக்கான சித்தாந்தம் அல்ல.. Loganayaki Lona

May be an image of 1 person and text that says 'BEST Frienas குடியர நான் அணி குப்பு விடுதலைப் போரில் தமிழகம்'

Loganayaki Lona  : ஓட்டரசியலில் என்னை வாழவைக்கும் கட்சி என்று சொல்வதற்காக தலித் ப்ரதிநிதிகளுக்கு சமூகநீதிகட்சிகள் பதவி தருவதில்லை.
எப்போது  தலித்  அரசியல் அதிகாரம் பெற்று விடுகிறாரோ அவர் தன் சமூக மக்களிடம்  ஒடுக்கப்பட்டவராக இருக்கப்போவதில்லை.
மாறாக மாற்றுகட்சியில் இருக்கும் தன் சமூக மக்களை கிடைத்த அதிகாரத்தால் மிக எளிதாக ஒடுக்கிவிட முடியும்.இதைத்தான் திமுகவின் வெகு சில பஞ்சாயத்து தலைவர்கள்  மாற்றுக்கட்சியிடம் செய்கின்றனர்.அவர்கள் வாரிசுகள் இணைய ரவுடிசம் செய்து சிறை சென்றனர்.எதிர்கட்சியாக இருக்கும் போது கூட அப்படி செயல்பட்டவர்கள் திமுக என்பதாலேயே இப்போது புனிதர்களாகிவிட முடியாது.

தமிழ்நாடு குடியரசு நாள் அலங்கார ஊர்திகள் கண்களுக்கு விருந்து கருத்துக்கு மருந்து

ஒன்றிய அரசினால் புறக்கணிப்பட்ட குடியரசு நாள் அலங்கார ஊர்திகள்
தனிவழி கண்டு தமிழ் நாடெங்கும் பவனி வரும் அழகு காட்சி
கண்களுக்கு விருந்து
கருத்துக்கு மருந்து

நெட்ஃபிளிக்ஸ்: "கோடிகளை போட்டோம், லாபம் இல்லை" கவலையில் தலைமை

  சௌதிக் பிஸ்வாஸ்  -     BBC -இந்திய நிருபர்  : 2018ஆம் ஆண்டு 'சேக்ரட் கேம்ஸ்' மூலம் ஒரு தாக்கத்தை உருவாக்கியது நெட்ஃபிளிக்ஸ். இந்த சீரிஸ், ஒரு விறுவிறுப்பான கேங்க்ஸ்டர் கதை.
2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், டெல்லியில் நடந்த உலகளாவிய வணிக உச்சிமாநாட்டில் ஸ்ட்ரீமிங் நிறுவனத்தின் அடுத்த 100 மில்லியன் சந்தாதாரர்கள் "இந்தியாவில் இருந்து வருவார்கள்" என்று நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரீட் ஹேஸ்டிங்ஸ் கூறினார்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அதே ரீட் ஹேஸ்டிங்ஸ் அவ்வளவு உற்சாகமாக இல்லை. கடந்த வாரம், முதலீட்டாளர்கள் கூட்டத்தில் கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம், இந்தியாவில் வெற்றிபெறவில்லை என்று வருத்தமாக பேசியுள்ளார்.
"நாம் முக்கிய சந்தைகள் அனைத்திலும் வெற்றிப்பெற்றோம் என்பது நல்ல செய்தி. இந்தியாவில் நாம் ஏன் வெற்றிபெறவில்லை என்பதுதான் நம்மை விரக்தியடைய வைக்கும் விஷயம். ஆனால், நாம் நிச்சயமாக இங்கு நிலைத்திருப்போம்," என்று அவர் கூறினார்.

எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யா தூக்குப் போட்டு தற்கொலை

 maalaimalar :சௌந்தர்யா, சக மருத்துவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்திருந்தார். அவர்களுக்கு ஆறு மாத குழந்தை உள்ளது.
பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யா(வயது 30) பெங்களூருவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சௌந்தர்யா உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எடியூரப்பாவின் மூத்த மகள் பத்மாவின் மகளான சௌந்தர்யா, பெங்களூரில் உள்ள எம்எஸ் ராமையா மருத்துவமனையில் மருத்துவராக இருந்தார்.

புதிதாக கண்டறியப்பட்ட ‘நியோகோவ்’ வைரஸ் : பயங்கர உயிர்க்கொல்லி என எச்சரிக்கை..!

 மாலைமலர் : ஒமைக்ரான் வைரஸ் தொற்று உலக அளவில் மிக வேகமாக பரவி வரும் நிலையில், கொடிய உயிர்க்கொல்லி தன்மையுடன் உருமாற்றம் அடைந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
சீனாவின் வுகான் நகரில் முதன்முதலில் 2019-ம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அதில் இருந்து தற்போது வரை உலக நாடுகள் நிம்மதியற்ற நிலையில் உள்ளன. அதற்கு காரணம் கொரோனா வைரஸ் தொற்றின் அடுத்தடுத்த உருமாற்றம்தான்.

பெண்களுக்கான இடங்கள்: கனிமொழி கோரிக்கையை ஏற்ற ஸ்டாலின்

பெண்களுக்கான இடங்கள்: கனிமொழி கோரிக்கையை ஏற்ற ஸ்டாலின்

மின்னம்பலம் : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில்... ஆளும்கட்சியான திமுகவின் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை காணொலி வாயிலாக நேற்று (ஜனவரி 27) கூட்டினார் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின்.
கடந்த டிசம்பர் 18ஆம் தேதி கூட்டப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில்... உள்ளாட்சித் தேர்தல் பற்றி சில முக்கியமான ஆலோசனைகளை, உத்தரவுகளை மாவட்டச் செயலாளர்களுக்குப் பிறப்பித்திருந்தார் ஸ்டாலின். ஒவ்வொரு வார்டுக்கும் 2 வேட்பாளர்களையும் மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் ஆகிய பதவிகளுக்கு மூன்று பெயர்களையும் பரிந்துரை செய்து, பட்டியல் அனுப்புமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு அப்போது உத்தரவிட்டிருந்தார் ஸ்டாலின்.

வியாழன், 27 ஜனவரி, 2022

ரிசர்வ் வங்கி முன்பாக டி. வேல்முருகன் தலைமையில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்த தமிழக வாழ்வுரிமை கட்சியினர் - BBC

  ஆ. விஜயானந்த் -    பிபிசி தமிழ்  :  தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை சாத்தியமா? சட்ட வல்லுநர்கள் சொல்வது என்ன?
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நிற்காமல் அவமதித்ததைக் கண்டித்து அந்த ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல அலுவலகத்தை டி. வேல்முருகன் தலைமையில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்த தமிழக வாழ்வுரிமை கட்சியினர்
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நிற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ` மாநில அரசோடு மத்திய அரசு மோதல்போக்கைக் கடைபிடிக்கிறது என்றால், அதிகாரிகளும் அதே பாணியில் செயல்படுவதையே இது காட்டுகிறது' என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.

டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணுக்கு செருப்பு மாலை!பெண்களே செய்த கொடூரம்.

Vigneshkumar -  Oneindia Tamil :   டெல்லி: தலைநகர் டெல்லியில் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட பெண் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு வீதியில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்பது தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதைத் தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கும் போதிலும், இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்தே வருகிறது.
இந்தச் சூழலில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணுக்கு அப்பகுதியில் உள்ள பெண்களே செருப்பு மாலை அணிவித்து, ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூர சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது.

தமிழ்நாடு கொரானா கட்டுப்பாடுகள் விபரம் அறிவிப்பு! இரவு நேர ஊரடங்கு நீக்கம்

 கலைஞர் செய்திகள் : ஞாயிறு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ள போதும் தமிழ்நாட்டில் தொடரும் கொரோனா கட்டுப்பாடுகள் என்னென்ன என்பதை இந்த செய்தி தொகுப்பின் மூலம் தெரிந்துகொள்ளல்லாம்.
1. சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை தொடரும்.
2. நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்தினால் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற வேண்டும்.
3. மழலையர் விளையாட்டு பள்ளிகள் (Play Schools), நர்சரி பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை.
4. பொருட்காட்சிகள் நடத்த அனுமதி இல்லை.
5. அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் அனைத்து கலை விழாக்களுக்கும் அனுமதி இல்லை.
6. உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு யதார்த்தம் புரிகிறது! ஆனால் சுயநல அரசியல்வாதிகள் ஆதாயம் தேடுகிறார்கள்

May be an image of 1 person, sky and body of water

Douglas Devananda  : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு புரிந்தது யதார்த்தம் - ஆனால்
ஆதாயம் தேடுகின்றனர் சுயநல அரசியல்வாதிகள்!
இலங்கையில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள இந்தியக் கடற்றொழிலாளர்களின் மீன் பிடிப் படகுகளை ஏலம் விடுவது தொடர்பாக இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளை சேர்ந்த  சில அரசியல் பிரதிநிதிகளினால் வெளியிடப்படுகின்ற கருத்துக்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை கடற்பரப்பில் சட்ட விரோத மீன் பிடியில் ஈடுபட்டிருந்த நிலையில் 2017 ஆம் ஆண்டிற்கு முன்னர் கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட பல மீன்பிடிப் படகுகள் உரிமையாளர்களினால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

மேயர் பதவி முதல் பேரூராட்சி தலைவர் பதவி வரை மறைமுகத் தேர்தல்.. கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி

tamil.indianexpress.com : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பில், மேயர், சேர்மன், பேரூராட்சி தலைவர் பதவிகள் அனைத்தும் கவுன்சிலர்களால் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் திமுக கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
திமுக கூட்டணிக் கட்சிகள் ஷாக், மேயர், சேர்மன், பேரூராட்சி தலைவர், மேயர் சேர்மன் பேரூராட்சி தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல், DMK, cpm, cpi, congress, vck, tamilnadu, urban local body polls
திமுக கூட்டணிக் கட்சிகள், மேயர், சேர்மன் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பில், மேயர், சேர்மன், பேரூராட்சி தலைவர் பதவிகள் அனைத்தும் கவுன்சிலர்களால் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் திமுக கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

புலிகள் இயக்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சி - தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ) தெரிவித்துள்ளது.

 Mathivanan Maran - Oneindia Tamil  : டெல்லி: போலி இந்திய ஆவணங்களை உருவாக்கி  புலிகள் இயக்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சிகள் நடைபெறுவதாக தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ) தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் லட்சத்தீவுகள் அருகே ஒரு படகை இந்தியகடலோரக் காவல் படையினர் சோதனை செய்தனர்.
அதில் துப்பாக்கிகள், தோட்டாக்கள், 300 கிலோ ஹெராயின் போதைப் பொருள் உள்ளிட்டவற்றை கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.
மேலும் படகில்இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கையை சேர்ந்த அவர்கள், பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை இலங்கைக்கு கடத்திச் செல்ல முயன்றனர் எனவும் கூறப்பட்டது.
இவர்கள் மீது கடந்த ஆண்டு மே மாதம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர்.

சுந்தர் பிச்சை மீது 'Ek Haseena Thi Ek Deewana Tha'. திரைப்பட இயக்குநர் வழக்குப் பதிவு! யூடிபில் சட்டவிரோத பதிவேற்றம்

 கலைஞர் செய்திகள் : கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை மீது மும்பை போலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளார்.
மும்பையைச் சேர்ந்த பிரபல பாலிவுட் இயக்குநர் சுனில் தர்சன். இவர் 2017ம் ஆண்டு இயக்கி வெளியான படம் 'Ek Haseena Thi Ek Deewana Tha'. இதில் நடிகர்கள் சிவ தர்ஷன், நடாஷா பெர்னாண்டஸ் மற்றும் உபென் படேல் உட்படப் பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை மர்ம நபர்கள் சட்ட விரோதமாக யூடிபில் பதிவேற்றம் செய்துள்ளனர். இதையடுத்து இதை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர். அதேபோல் இயக்குநர் சுனில் தர்சன் இப்படத்திற்கான காப்புரிமை இதுவரை யாருக்கும் கொடுக்கவில்லை.

பனையோலை தயாரிப்புகளையும் மஞ்சப்பை போல் அரசு ஊக்குவிக்க வேண்டும்!

மஞ்சப்பை போல் பனையோலை தயாரிப்புகளையும் அரசு ஊக்குவிக்க வேண்டும்!

மின்னம்பலம் : தமிழக அரசு ‘மஞ்சப்பை’ திட்டத்தை மீண்டும் தொடங்கியிருப்பது போல பனையோலை தயாரிப்புகளை ஊக்குவிப்பதுடன் இந்தத் தொழில் மேம்பாடு அடைய அரசு, சிறுதொழில் கடன் வழங்கிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பனையோலை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கிராமப்புறங்களில் பனையோலைப் பெட்டிகள் இல்லாத மிட்டாய்க் கடைகளைப் பார்க்க முடியாது.தின்பண்டங்களைச் சாப்பிட்டுத் தீர்ந்த பிறகு அதே பெட்டிகளுக்குள் கருப்பட்டியை வைத்து பாதுகாத்து பயன்படுத்துவார்கள். மேலும் இறைச்சிக் கடைகளில்கூட பனையோலைப் பெட்டிகள் பயன்பாட்டில் இருந்தன.

All India Federation For Social Justice! . "ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ் தென் கலைஞர்"

May be an image of 1 person and text

Sowmian Vaidyanathan  : எந்த நேரத்தில் இதைச் சொன்னாரோ...?! அல்லது எதைப் புரிந்து கொண்டு இதைச் சொன்னாரோ....?
சில மாதங்கள் முன்பாக எச். ராஜா சொன்னதை இன்றைக்கு மோடி, அமித்ஷா உள்ளிட்ட இந்தியா முழுமைக்கும் உள்ள நாக்பூரிஸ்ட்டுகள் அனைவரும் சற்று முன்பாக ஒரே குரலில் கோரஸாக சொல்லி படபடத்திருப்பார்கள்...
ஆம்... "ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ் தென் கலைஞர்"  என்று..!
இப்படி ஒரே காணொளி மூலம் ஒட்டுமொத்த சங்கிக் கூட்டத்தையும் அலறவிடும் அளவிற்கு அப்படி எதைத்தான் பேசிவிட்டார், திமுகழக தலைவர் என்று கேட்பீர்களேயாயின்...
ஒரு சின்ன AV எனப்படும் ஏரியல் வியூ வரலாற்றை பார்த்து விட்டு வந்தால் மேற் சொன்ன வாக்கியத்துக்கான அர்த்தத்தை முழுமையாக வாசகர்களால் உள் வாங்க முடியும்..!

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க மறுத்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள்..

 Rayar A  -  Oneindia Tamil :  சென்னை: நாட்டின் 73-வது குடியரசு தின தின விழா இன்று கோலாகலமாக கொண்டாப்படுகிறது.

இதனையொட்டி மத்திய, மாநில அரசுகளின் சார்பிலும், அனைத்து அலுவலகம், அனைத்து பள்ளி, கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் தேசிய கொடியேற்றி கொண்டாடப்பட்டது.
சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் குடியரசு தின தின விழா கொண்டாடப்பட்டது.
ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனர் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியின் இறுதியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு -

திருமாவும் ரவிக்குமாரும் நல்லபோலீஸ் கெட்டபோலீஸ் ஆட்டத்தை 25 ஆண்டுகளாக? .... சமூகவெளி லீக்ஸ்

 LR Jagadheesan : Dedicated to all திராவிட திம்மிகள் who parrot again and again “ரவிக்குமாரை திருமா கண்டிக்கணும்”. Now, will you ask Thiruma to condemn Thiruma? You are a bunch of jokers. Sorry to say this. But that's what you are. I have been watching them, their casteist political philosophy and inherent hatred towards whom they claim their fellow Dalits -- Arunthathiyars and the Dravidian movement and its leaders. What Dr Ramadoss to Vanniyars these two are for Adidravidars. Nothing more nothing less.
திராவிட அரசியலை பகையாடியும் எதிர்ப்பார்கள். உறவாடியும் கெடுப்பார்கள். திராவிடம் அழிந்தால் தான் தலித்தியம் என்கிற பெயரில் தாங்கள் முன்னெடுக்கும் தங்களின் சுயஜாதி அரசியலுக்கு வசதிப்படும் என்பதில் ராமதாசைப்போலவே திருமாவும் மிகத்தெளிவாக இருப்பவர். ஒரே வித்தியாசம் தனது சுயஜாதி அரசியலை ரவிக்குமார் வெளிப்படையாக சொல்கிறார். திருமா வெளியில் சொல்லாமல் செயலில் செய்துகாட்டுகிறார்.

புதன், 26 ஜனவரி, 2022

அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பை உருவாக்குவோம் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின்

BBC  : அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பிரதிநிதிகள், தலைவர்களை இணைத்து அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பை உருவாக்கப்போவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டுமென சமீபத்தில் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை ஒட்டி, தி.மு.கவின் சார்பில் "சமூக நீதிப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுதல்" என்ற பெயரில் தேசிய அளவிலான இணைய கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

021 தமிழ் வளர்ச்சித்துறை விருது பெறுபவர்கள் பட்டியல் அறிவிப்பு

மின்னம்பலம் : 2021 ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளை முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்தார்.
தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழ்ப் பண்பாட்டு மேன்மைக்கும் தொண்டாற்றிடும் தமிழறிஞர்கள், கவிஞர்கள் என சிலரைத் தேர்வு செய்து சான்றோர்கள் பெயரில் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் 2021ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளை 16 பேருக்கு முதல்வர் அறிவித்துள்ளார்.
அதன்படி, 2021ஆம் ஆண்டிற்கான,
1. பேரறிஞர் அண்ணா விருது - நாஞ்சில் சம்பத்,
2. மகாகவி பாரதியார் விருது - பாரதி கிருஷ்ணகுமார் ,
3.பாவேந்தர் பாரதிதாசன் விருது - புலவர் செந்தலை கவுதமன்,
4. சொல்லின் செல்வர் விருது - சூர்யா சேவியர்,
5.சிங்கார வேலர் விருது - கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம்,
6.தமிழ்த்தாய் விருது - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்,
7.அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் விருது - முனைவர் இரா. சஞ்சீவிராயர் ,

ஒரே கட்டமாக வாக்குப்பதிவு! தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு

 மாலைமலர் : தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் அனைத்துக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்காக பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.  
ஆனால், கொரோனா 3-வது அலை தீவிரமாக உள்ளதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தலை தள்ளிவைக்க முடியாது என்றும் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து தேர்தலை நடத்தலாம் என்றும் உத்தரவிட்டது. எனவே, தேர்தலை நடத்துவதற்கான முட்டுக்கட்டை நீங்கியது.

கனடா உறைபனியில் இறந்த குஜராத்திகள்: வெளிநாடு செல்வதே தொழிலாக கொண்ட கிராமம்

The Gujarati Family That Froze to Death in Search of the 'American Dream'

டிங்குச்சா,

ராக்ஸி காக்டேகர் சாரா & பார்கவ் பாரிக்  -     பிபிசி குஜராத்தி : டிங்குச்சா, என்.ஆர்.ஐ.களின் கிராமம் என்று அறியப்படுகிறது.
குஜராத்தில், காந்திநகர் மாவட்டம், கலோல் வட்டத்தில் உள்ள டிங்குச்சா கிராமத்தில் நுழைந்தவுடன், ஆளரவமற்ற ஒரு பங்களா எல்லோரையும் வரவேற்கும். கடந்த சில நாள்களாக இந்த பங்களா ஊடகத்தினர் சூழ்ந்து நிற்கும் பரபரப்பான இடமாக ஆகியிருக்கிறது.
காரணம், இந்த வீட்டைச் சேர்ந்த 4 பேர் கனடா நாட்டில் காணாமல் போயிருக்கின்றனர். இவர்கள் நான்கு பேரும் சட்டவிரோதமாக கனடாவில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றபோது மைனஸ் 35 டிகிரி பனியில் உறைந்து இறந்து போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
ஜகதீஷ் பட்டேல், அவரது மனைவி வைஷாலி பட்டேல், அவர்களது மகள் விஹாங்கா மற்றும் 3 வயது மகன் தார்மிக் ஆகியோர்தான் அந்த 4 பேர். கவலை தோய்ந்திருக்கும் அந்த கிராமத்துக்கு பிபிசி குழு சென்றது.

பெரியார், கப்பலோட்டிய தமிழன் , வேலு நாச்சியார் . தீரன் சின்னமலை .. தமிழ்நாடு ஊர்திகளில் இடம்பெற்ற சிலைகளின் விபரம்

 Shyamsundar  - Oneindia Tamil  :  சென்னை: சென்னை குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசு சார்பாக 3 அலங்கார ஊர்திகள் காட்சிப்படுத்தப்பட்ட உள்ளது.
டெல்லி குடியரசுத் தின அணிவகுப்பில் பங்குபெற இருந்த தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி இந்த முறை நிராகரிக்கப்பட்டுள்ளது.
வ.உ.சி, வேலுநாச்சியார், பாரதியார் ஆகியோரை மையமாக வைத்து வாகனம் உருவாக்கப்பட்டது.
ஆனால் மத்திய அரசின் நிபுணர் குழு இந்த அலங்கார ஊர்திக்கு அனுமதி அளிக்கவில்லை.
தமிழ்நாடு அரசு இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியும் கூட அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
புதுடில்லியில் குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அலங்கார ஊர்திகள் காட்சிப்படுத்தப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

ஷேர் ஆட்டோ ஓட்டுநர் மட்டுமல்ல,பேராசிரியர்! தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரவின் புகழுரைக்கு உரிய அண்ணாத்துரை

May be an image of 1 person
May be an image of 1 person

பாண்டியன் சுந்தரம்  : ஷேர் ஆட்டோ என்றாலே நம் கண் முன் வரும் ஒரே காட்சி ஒருவர் மடியில் ஒருவர் ஏறி இடித்தபடி விழிபிதுங்க உட்கார்ந்து நெரிசலாக அமர்ந்து செல்லும் பரிதாப பாவப்பட்ட பயணிகளின் முகங்கள் தான்.
ஆனால், சென்னையைச் சேர்ந்த அண்ணாதுரை என்ற இளைஞரின் ஷேர் ஆட்டோவில் பயணிக்கப் போட்டி போட்டுக்கொண்டு மக்கள் காத்திருப்பது,
வாடிக்கையாகவே இருக்கிறது. அப்படி என்ன விசேஷம் அந்த ஆட்டோவில்?
அந்த அளவு இவர் தன் ஆட்டோவில் ஏராள  வசதிகளைச் செய்து அசத்தி இருக்கிறார்; பயணிப்பது ஆட்டோவா அல்லது சொகுசு விமானமா என எண்ணி வியக்கும் அளவுக்கு இன்றும் நிற்காமல் பயணித்துக் கொண்டு இல்லை இல்லை பறந்து கொண்டு இருக்கிறார் அண்ணாதுரை.
சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் இவரது ஆட்டோவை நீங்கள் பார்த்திருக்கலாம். அண்ணாதுரை தனது ஆட்டோவை சொகுசு ரதமாகவே வடிவமைத்து இருக்கிறார்.

செவ்வாய், 25 ஜனவரி, 2022

நேதாஜியை நம்பிய இட்லரின் 4000 இந்திய வீரர்களுக்கு என்ன நேர்ந்தது?

ராதா மனோகர் : நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை நம்பிய அந்த 4000 இந்திய வீரர்களுக்கு என்ன நேர்ந்தது?  
ஹிட்லரின் நாசிகளோடு கூடி குலாவி பாசிச அரசியலை முன்னெடுத்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்  பற்றிய வரலாறுகள் ஒவ்வொன்றாக வெளிகொண்டுவர வேண்டிய வரலாற்று தேவை இன்று இருக்கிறது.
பிரித்தானிய படைகளிடம் இருந்து ஜெர்மனிய ராணுவம்  கைப்பற்றிய ஆயிரக்கணக்கான இந்திய போர்வீரர்கள் உட்பட,
ஜெர்மனியில் இருந்த இந்தியர்களிடம் ஒரு ஹீரோவுக்கு உரிய பிம்பத்தோடு வலம்வந்தார் சுபாஷ் சந்திர போஸ்.
அங்கு இவர் ஆரம்பித்த இந்திய தேசிய ராணுவத்தில் சுமார் 4000 இந்தியர்கள் சேர்ந்தனர்
ஹிட்லரின் ஜெர்மன் படைகளோடு தோளோடு தோளாக நின்று ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்
அதாவது நாசிகளோடு கூட்டாளிகளாக மனித குலவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்
ஹிட்லரின் உதவியோடு இந்திய சுதந்திரம் என்ற போதயை சுபாஷ் சந்திர பாஸ் இவர்களுக்கு வழங்கி இருந்தார்

11 மணிநேரமாக விமானத்தின் முன்பக்க சக்கரத்தில் பயணித்த நபர் உயிருடன் மீட்பு

 virakesari.lk/ : நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் ஷிபோல் விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை, சரக்கு விமானம் தரையிறங்கியபோது அதன் முன்பக்க சக்கரத்தில் மறைந்திருந்த நபர் ஒருவரை விமான நிலைள அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இருந்து விமானம் புறப்பட்டதில் இருந்து 11 மணி நேரத்திற்கும் மேலாக அந்த நபர் முன்பக்க சக்கரப் பகுதியில் தலைமறைவாக இருந்ததாக ஷிபோல் விமான நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் மற்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த  நபர் தற்போது வரை அடையாளம் காணப்படாத நிலையில், அவர் 16-35 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை சிறையில் உள்ள 55 தமிழ்நாடு மீனவர்கள் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு

 மாலைலமலர் : இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டு  மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
வங்கக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் 55 பேரை எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேத நூல்களிலேயே பிராம்மணர்கள்,க்ஷத்ரியர்கள்,வைசியர்கள் ஏன் மேலானவர்கள், சூத்திரன் ஏன் அவர்களைவிட கீழானவன் என்பதற்கான விரிவான...

May be an image of text that says 'சூத்திரன் ஏன் அடிமையானான்?! பிரம்மன் காலிலிருந்து இருபத்தொரு முறை ஸ்தோமத்தை உணடாக்கினன்.பிறகு, 'அநுஷ்டுப், என்னுஞ் சந்தத்தையும், வைராஜம், என்னுஞ் சாமப் பாடலையும், பிறகு, மனிதர்களுக்குள் சூத்திரரையும், விலங்குகளுக்குள் குதிரையையும் படைத்தனன்.சூத்திரரும் சூத்திரரும் குதிரையும் ஒருவருக்கு உட்பட்டிருப்பவைகள். அதாவது, மூவருணத்தார்கட்குப் பணிவிடை செய்வதால் சூத்திரர்களும், தாங்கிச் செல்வதால் குதிரையும் உட்படுகின்றவைகள் என்பதாம். மற்றும், இங்கு மேற்கூறிய விடங்களிலிருந்து தேவதைகள் உண்டானது போல் பிரமனுடைய காலிலிருந்து ஒரு தேவதையும் உண்டாகாமையின் சூத்திரர்கட்கு யக்ளம் உரியதன்றாம். TSXC Irceso1e S அ்வேகும் லேுக் -யஜூர் வேதம்(கிருஷ்ண வேதம்( யஜூர்,7 வது காண்டம், காண்டம்,பிரபாடகம்1) பிரபாடகம்'

Dhinakaran Chelliah  : புருஷசூக்தம்  மனிதநேய விரும்பிகள் வாசிக்க வேண்டுகிறேன்
இந்தப் பதிவு அதிமுக்கியமான விழிப்புணர்வுப் பதிவு,தயவு செய்து மற்ற பதிவுகளைப் போன்று கடந்து செல்ல வேண்டாம்.
வேத காலத்தில் வர்ணாஸ்ரம பாகுபாடுகள் இல்லையென்பதும் ஹிந்த்துவவாதிகள் முன்னெடுத்துவரும் முக்கியமான பொய்ப்பிரச்சாரம்.வேத நூல்களில் புருஷ சூக்தம் பகுதி தவிர வேறெங்கும் வர்ணாஸ்ரம குறிப்புகள் இல்லையென்பதும் வேதாந்திகளின் தொடர் வாதம்.
//புருஷனின்(இறைவன்) கால்களில் தோன்றியவர்கள் என்பதால் சூத்திரர்கள் தொடர்ந்து இழிவுற்றனர், அடிமைப் படுத்தப் பட்டனர் என்று ஒரு வாதம் வைக்கப் படுகிறது. அதுவும் தர்க்க பூர்வமாக இல்லை//
இப்படியாக,தமிழ் ஹிந்து நாளிதழில் “ஜடாயு” எனும் புனைப்பெயரில் எழுதும் கட்டுரையாளர்  புருஷ சூக்தம் பற்றிய கட்டுரையில் தனது கருத்தை முன்வைத்திருந்தார்.

“புருஷ சூக்தம்”பற்றிய எனது அடுத்த பதிவு இது... Dhinakaran Chelliah :

May be an image of text that says 'பிரம்மாவின் காலில் உருவான பூமியை வணங்கும் நீங்கள், அதை விட்டுவிட்டு தலையிலிருந்து உருவான சொர்க்கத்திற்குப் போக வேண்டும் என ஏன் ஆசைப்படுகிறீர்கள்?, அதையே பிறவியின் குறிக்கோளாகவும் ஏன் எண்ணுகிறீர்கள்?!'

Dhinakaran Chelliah  : “புருஷ சூக்தம்”பற்றிய எனது அடுத்த பதிவு இது.
கொஞ்சம் விரிவான பதிவு,சாதிப் பிரச்சனையின் ஆரம்பப்புள்ளியைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் தயவு செய்து வாசிக்கவும்.
“புருஷ ஸூக்தம்” பற்றிய வியாக்யான நூல்களில் முக்கியமானது,
ஶ்ரீ உ.வே.K.ஶ்ரீநிவாஸய்யங்கார் ஸ்வாமி அவர்கள் எழுதிய “புருஷ ஸூக்த வ்யாக்யானம்”  நூல். இவர் “ஶ்ரீ வைஷ்ணவ ஸுதர்சனம்”
எனும் மாதப் பத்திரிக்கையின் ஆசிரியரும் கூட. இவர் எழுதிய மற்ற நூல்களும் உண்டு.
“எவனொருவன் ஸாங்கமாக வேதாத்யனம் செய்த ப்ராஹ்மணனை அடைந்து,பணப்பாட்பட்டு அவனைக் கொன்றானோ,அவன் ஜலத்தில் நின்றுகொண்டு ஹரியை நினைத்துக் கொண்டு புருஷ ஸூக்தத்தைப் படிக்கக் கடவன்” என நூலின் ஆரம்ப பக்கங்களில் உள்ளது.

தமிழ்நாடு குடியரசு அணிவகுப்பில் தந்தை பெரியார், முத்துராமலிங்கம் ரெட்டை மலை சீனிவாசன், கொடி காத்த குமரன் உள்ளிட்டோர்

May be an image of 2 people, sculpture, monument and outdoors

Kuttimani Thala : தமிழ்நாடு அரசின் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க வாய்ப்பு மறுக்கப்பட்ட ஊர்திகளோடு சேர்த்து புதிய 2 ஊர்திகள் இணைக்கப்பட்டுள்ளன
அதில் தந்தை பெரியார், முத்துராமலிங்கம் ரெட்டை மலை சீனிவாசன், கொடி காத்த குமரன் உள்ளிட்டோரின் சிலைகள் இடம்பெற்றுள்ளன.

நக்கீரன் செய்தியாளர் அருள்குமார் காலமானார்! ஜாக்கியின் ஈஷா, பொள்ளாச்சி பாலியல், கொடநாடு, கோவை சின்மயா வித்யாலயா ...அம்பலமாக்கியவர்

hhhhhhhh

நக்கீரன் செய்திப்பிரிவு : நக்கீரன் கோவை செய்தியாளர் அருள்குமார். 46 வயதான அருள்குமார் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர்.
சமூகத்தில் நடக்கும் பல அவலங்களை நக்கீரனில் வெளிக்கொண்டு வந்துள்ளார். கோவை ஈஷாவில் நடக்கும் விதி மீறல்கள், பொள்ளாச்சி பாலியல் கொடூரங்கள், கொடநாடு சம்பவங்கள், கோவை சின்மயா வித்யாலயா பள்ளியில் மாணவிக்கு நேர்ந்த கொடுமை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை புலனாய்வு செய்து நக்கீரனில்  செய்தியாக்கி உள்ளார்.

விசிகவில் உள்வீட்டு போர்? ரவிகுமாரின் அரசியல் பற்றி கேள்வி எழுப்பும் ஆளூர் ஷா நவாஸ்

May be an image of 1 person and text that says 'Aloor Sha Navas 11 hrs தலைவருக்கு எழுதிய கடிதத்தை பொதுவில் வைத்ததில் தோழர்கள் பலருக்கும் வருத்தம். அதைப் புரிந்து கொண் நீக்கியுள்ளேன் எனினும், பிரச்சனையின் அடிப்படையே பொதுச்செயலாளர் பொதுவில் வைத்த கருத்துகள்தான். அதற்கு எதிர்வினை பொதுவில் வரும்போது அதைப் பற்றி அதே தளத்தில் பேச வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது'

ஆளூர் ஷாநவாஸ்   :  அன்புள்ள தலைவர் அவர்களுக்கு,
நம் கட்சி பொதுச்செயலாளரின் செயல்பாடுகள் மிகுந்த வேதனையை அளிக்கின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய், பிரதமர் மோடி ஆகியோர் சராசரி அரசியல்வாதிகள் அல்ல. பதவிக்காக பா.ஜ.க.வில் இணைந்து முன்னேறியவர்களும் அல்ல.
சாதியைப் பாதுகாக்கும் இந்துத்துவத்தை கொள்கையாக ஏற்றுக் கொண்டு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உருவாகி அரசியலுக்கு வந்தவர்கள்.
அவர்கள் சிரித்தாலும், அழுதாலும், சிந்தித்தாலும், எழுதினாலும், பேசினாலும், செயல்பட்டாலும் அனைத்திலுமே ஆர்.எஸ்.எஸ்ஸின் வேர் இருக்கும்.
அவர்களின் அசைவுகள் ஒவ்வொன்றையும் தீர்மானிப்பது ஆர்.எஸ்.எஸ்.தான்.
இது உலகறிந்த உண்மை என்பதாலேயே அவர்கள் எந்த வேடமிட்டு வந்தாலும் அதை ஜனநாயக முற்போக்கு சக்திகள் நிராகரித்து வருகின்றனர்.

ஊழலில் சிக்கிய தொல்லியல் பெரியவர் காஞ்சி சங்கர் மூலம் எம்ஜியார் சலுகையால் தப்பினார்! Flashback

May be an image of 2 people, people sitting and sunglasses
May be an image of 1 person

LR Jagadheesan  :; நடந்தது என்ன?  பேராசிரியர்.மு.நாகநாதன்:
நாகசாமி மறைந்து விட்டார்.
ஆழ்ந்த அனுதாபங்கள்.
சிலர் இவரின் தமிழர் விரோதப் போக்கை அறியாமல் சில கருத்துக்களைப் பதிவிட்டுள்ளனர்
1980 ஆம் ஆண்டுகளில் பேராசிரியர்.ந.சஞ்சீவி அவர்களை மாலை நேரத்தில் பல்கலைக்கழகப் பணி முடித்து, சந்திப்பேன்.
அப்போது ஒரு முறை நாகசாமி அவர்களைச் சந்தித்துள்ளேன்.
பேராசிரியர்.ந.சஞ்சீவியிடம் மிகவும் பணிவாக நடந்து கொள்வார்.
நாகசாமி சென்றவுடன் பேராசிரியர்.ந.சஞ்சீவி சொன்னார்.
இவர் திறமையே தமிழுக்கு எதிராகச் செயல்படுவது தான் என்றார்.
சமஸ்கிருதம் உயர்ந்த மொழி என்பார்.

திங்கள், 24 ஜனவரி, 2022

யோகி ஆதித்யநாத்தை சட்டப்பேரவைக்கு வரவிடக்கூடாது - களமிறங்கும் பீர் ஆர்மி ஆசாத்!

Vignesh Selvaraj கலைஞர் செய்திகள்  : 1998 முதல் 2014ஆம் ஆண்டு வரை 5 முறை கோரக்பூர் மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று எம்.பி ஆனவர் யோகி ஆதித்யநாத். அவரது தொகுதியில்தான் களமிறங்குகிறார் சந்திரசேகர் ஆசாத்.
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக அவரது தொகுதியில் எதிர்த்துக் களமிறங்குகிறார் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத்.
உத்தர பிரதேச தேர்தலில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் புறநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து 'பீம் ஆர்மி' தலைவர் சந்திரசேகர் ஆசாத் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

 மாலைமலர் :அகில இந்திய ஒதுக்கீடு போக, தமிழக மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 6,999 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.
சென்னை:   தமிழ்நாட்டில்  எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2021-22-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் செயல்முறை கடந்த டிசம்பா் 19-ம் தேதி தொடங்கி ஜனவரி 7-ம் தேதி வரை நடைபெற்றது.
இதில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25,511 பேரும், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 14,777 பேரும் என மொத்தம் 40,288 போ் விண்ணப்பித்தனர்.

2047-க்குள் புதிய இந்தியாவை உருவாக்க இலக்கு'.. நேதாஜி சிலை திறப்பு விழாவில் பிரதமர் மோடி சூளுரை

 Rayar A  -  tamil.oneindia.com  :  டெல்லி: 2047-க்குள் புதிய இந்தியாவை உருவாக்க இலக்கு வைத்துள்ளோம் என்று நேதாஜி சிலை திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேசினார்.
தலைநகர் டெல்லியில் முப்பரிமாண ஒளி வடிவ நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்
ஆங்கிலேயர்களுக்கு எதிராக துணிச்சலுடன் போராடி தேசத்தின் விடுதலைக்கு மிக முக்கிய பங்காற்றியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.
 முதன் முதலாக இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
நேதாஜியின் 'ஹாலோகிராம்' சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..

ஒமைக்ரான் அலை, கொரோனாவுக்கு முடிவு கட்டும் - மருத்துவ நிபுணர் நம்பிக்கை

 தினத்தந்தி : புனே, கொரோனாவின் கவலைக்குரிய மாறுபாடாக அறியப்படும் ஒமைக்ரான் வைரஸ், இந்தியாவில் சமூக பரவலாக மாறியிருக்கிறது. இது அரசுகளையும், மருத்துவ நிபுணர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கும் நிலையில், இந்த தொற்றால் நன்மையும் ஏற்படக்கூடும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
அதாவது ஒமைக்ரான் அலையால் கொரோனாவே முற்றிலும் முடிவுக்கு வரும் என பிரபல மருத்துவ நிபுணரான டாக்டர் நரேஷ் புரோகித் கூறியுள்ளார்.

ஐஏஎஸ் பணி விதிகளில் திருத்தம்: எதிர்க்கும் மாநிலங்கள்!

 மின்னம்பலம் : ஐஏஎஸ் அதிகாரிகளை ஒன்றிய பணிக்கு இடமாற்றம் செய்யும் வகையில் ஐஏஎஸ் விதிகள் 1954இல் திருத்தங்கள் மேற்கொள்ள ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய ஆட்சிப் பணி விதிகள் 1954 விதி 6இன் படி மாநில அரசுகளின் கீழ் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை ஒன்றிய அரசுப் பணிகளுக்கு மாற்ற வேண்டுமானால் அதற்கு மாநில அரசின் சம்மதம் வேண்டும்.
ஆனால் தற்போது மாநில அரசு ஒப்புதல் இல்லாமலேயே ஒன்றிய அரசு இந்த அதிகாரிகளை ஒன்றிய அரசுப்பணிக்கு அழைத்துக் கொள்ளும் வகையில் 1954 விதி 6இல் திருத்தம் மேற்கொள்ளவுள்ளது.
இதற்கு பல்வேறு மாநிலங்களின் அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

சுபாஸ் சந்திர போஸ் ஒரு நாசி போர் குற்றவாளி? .....நேரு உண்மையில் நேதாஜியை காப்பாற்றினார்?

நேதாஜியும் - ஹிம்லரும்
ராதா மனோகர் : நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் விமான விபத்தில் மரணமாக வில்லை.அந்த விபத்து சம்பவம் நடந்ததா இல்லையா என்ற வாதப்பிரதி வாதங்கள் ஒரு புறம் இருக்க இப்படித்தான் நடந்திருக்கும் என்று பலராலும் யூகிக்கப்படும் தியரி ஒன்று உலவுகிறது, அது நேதாஜிக்கு பெருமை சேர்ப்பதாக இல்லை.

என்னதான் சுதந்திரம் அவசியம் என்றாலும் அவர் ஹிட்லரோடு மிகவும் அன்னியோன்னியமாக உறவாடி உதவி கேட்டமை
நாகரிக உலகில் யாராலும் மன்னிக்க முடியாத ஒரு போர் குற்றம் ஆகும்.
இன்றும் கூட பழைய நாசிகளை உலக நாடுகள் வேட்டை ஆடிக்கொண்டுதான் இருக்கின்றன. ஹிட்லரின் நாசிப்படையினரின் கொடிய போர்குற்றம் இழைத்ததாக நூரம்பெர்க் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஆயிரக்கணக்கான பழைய நாசிப்படையினர் இன்றும் கூட வேறு வேறு

ரயிலில் சத்தமாக பாட்டு கேட்டால் பயணிகளுக்கு தண்டம் அறவிடப்படும்! நிர்வாகத்தின் புதிய உத்தரவு

கலைஞர் செய்திகள் :  ரயில் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
சத்தமாக பாட்டு கேட்டால் அபராதம்.. ரயில்வே நிர்வாகத்தின் புதிய உத்தரவால் பயணிகள் அதிர்ச்சி!
ரயில் பயணத்தின் போது சத்தமாகப் பேசினாலோ அல்லது பாட்டுக் கேட்டாலோ அபராதம் வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
இது குறித்து ஒன்றிய ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளில், "ரயில்களில் பயணம் செய்பவர்கள் சத்தமாகப் பேச மற்றும் செல்போனில் சத்தமா பாட்டுக் கேட்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  விதியை மீறி செயல்பட்டால் அபராதம் வசூலிக்கப்படும்.

மாணவி லாவண்யாவின் பெற்றோர் நீதிபதியிடம் தனித்தனியாக வாக்குமூலம் அளிப்பு!

h

பகத்சிங் -  நக்கீரன் செய்திப்பிரிவு :    அரியலூர் மாவட்டம் வடுகர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் - கனிமொழி தம்பதியின் மகள் லாவண்யா (17). கனிமொழி இறந்துவிட்டதால் முருகானந்தம் சரண்யா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
லாவண்யா 8 வகுப்பு முதல் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள மைக்கேல்பட்டியில் உள்ள ஒரு கிருத்துவ பள்ளி விடுதியில் தங்கி படித்து வருகிறார்.

இஸ்லாமிய பாடநூல்களை மீளப் பெறுமாறு இலங்கை அரசு பாடநூல் வெளியீட்டு துறை அறிவிப்பு

எழுகதிர் : பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இஸ்லாம் பாடநூல்களை மீளப் பெறுமாறு கல்வி வெளியீட்டு திணைக்களம் அறிவித்துள்ளது. மாகாணக் கல்வி பணிப்பாளர்கள், வலயக் கல்வி பணிப்பாளர்கள் ஊடாக இதற்கான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனக் கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் அயிலப்பெரும தெரிவித்தார்.
‘ஒரு நாடு – ஒரு சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணியிடமிருந்து கிடைத்த பரிந்துரைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் கல்வி வெளியீட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடசாலை மாணவர்களுக்கான இஸ்லாம் பாடப்புத்தகங்களை பரிசீலித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு தமக்கு அறிவிக்கப்பட்டது எனவும் கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.

ஞாயிறு, 23 ஜனவரி, 2022

தொல்லியல் ஆய்வாளர் டாக்டர் நாகசாமி சென்னையில் காலமானார்.

May be an image of 1 person
dinamaolar :முதுபெரும் தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் டாக்டர் நாகசாமி சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91. 1966 முதல் 1988 வரை தமிழக அரசின் தொல்லியல் துறையின் முதல் இயக்குநராக பணியாற்றியவர். இவருக்கு கடந்த 2018 ம் ஆண்டு மத்திய அரசு,பத்ம பூஷண் விருது வழங்கியிருந்தது. இவரது மறைவுக்கு முக்கிய தலைவர்கள் உட்பட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 திருக்குறளில் வேதங்களின் கருத்துக்கள்தான் இருக்கிறது என்று ஒரு புரளியை கிளப்பி விட்ட திரு நாகசாமி இன்று காலமானார்
தொல்லியல் துறையில் எந்த ஒரு வரலாற்று சான்று பொருள் கண்டு பிடிக்கப்பட்டாலும் அதை முதலில் காஞ்சி சங்கர ஆச்சாரியிடம் கொண்டுபோய் காட்டிவிடுவார் இந்த நாகசாமி என்று கூறப்படுவதுண்டு .
அவர் அது சமஸ்கிருதத்திற்கு பின்பு வந்ததாக இருந்தால் அது உலகுக்கு அறிவிக்கப்படும் .. ஆனால் அதுவே சமஸ்கிருதத்திற்கு முந்தைய தமிழ் அகாழாய்வு பொருளாக இருந்தால் அது மறைக்கப்பட்டுவிடும். யார் ஆட்சியில் இருந்தாலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த தொல்லியல் துறை இப்படி நடந்து கொண்டிருக்கிறது.

பண்ணை வீட்டில் நடிகர்களின் பிணங்களா? சல்மான் கான் மீது பக்கத்து வீட்டுக்காரர் பகீர் குற்றச்சாட்டு

 Mari S  -  tamil.filmibeat.com  :மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கானின் பண்ணை வீட்டில் நடிகர்களின் பிணங்கள் புதைக்கப்பட்டு வருவதாக பகீர் கிளப்பும் குற்றச்சாட்டுக்களை அந்த பண்ணை வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் நபர்கள் சுமத்தி இருப்பது பாலிவுட்டையே அதிர்ச்சியடைய செய்துள்ளது.
நடிகர் சல்மான் கானின் பன்வெல் பண்ணை வீடு அவரது சகோதரி அர்பிதாவின் பெயரில் உள்ளது.
சமீபத்தில் அந்த தோட்டத்தில் தான் நடிகர் சல்மான் கானை பாம்பு கடித்தது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட்டின் வசூல் மன்னன் சல்மான் கான் ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளை அந்த பண்ணை வீட்டில் தான் பார்ட்டி நடத்தி கொண்டாடி வருகிறார். இந்த ஆண்டு நடைபெற்ற தனது 56வது பிறந்தநாளையும் நடிகர் சல்மான் கான் அங்கே தான் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற பணியாளர்கள் 875 பேருக்கு கரோனா... பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்குமா..?

 நக்கீரன் செய்திப்பிரிவு  :  விரைவில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் நாடாளுமன்ற பணியாளர்கள் 875 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31ம் தேதி துவங்க உள்ளதாக மத்திய அரசு சில வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.
இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த சூழ்நிலையில் கரோனா பாதிப்பு கடந்த இரண்டாம் அலையை போல் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்பாக அங்கு பணியாற்றும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் 875 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இடதுசாரி மற்றும் திராவிட, முற்போக்கு இயக்கங்களுக்குள் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஊடுருவல் .. எச்சரிக்கும் முன்னாள் முஸ்லீம் றிஷ்வின்

 Rishvin  ismath  : பச்ச சங்கிகளின் ஊடுருவல் பரவலாகி வருகின்றது.
இடதுசாரிய, கம்யூனிஸ, முற்போக்குவாத பரப்புகளுக்குள் மிக நேர்த்தியாகத் திட்டமிட்டு இஸ்லாமியவாதிகளும், ஜிஹாதிகளும் ஊடுருவியுள்ளனர்,
தொடர்ந்தும் ஊடுருவி வருகின்றனர்.
 'எக்காரணம் கொண்டும் இஸ்லாம் விமர்சிக்கப் பட்டுவிடக் கூடாது,
முஹம்மது நபி பற்றிய உண்மைகளை மக்கள் அறிந்துகொள்ள விடக் கூடாது',
ஆகிய முக்கிய நோக்கங்களை செயற்படுத்துவதற்காக இந்த திட்டமிட்ட ஊடுருவல் பரவலாக இடம் பெற்று வருகின்றது.
பகலில் அரிவாள், சுத்தியலுடன் சிவப்புச் சட்டை போட்டு முதலாளித்துவத்திற்கு எதிராகப் பேசுவதாக படம் காட்டும் இந்த பச்ச சங்கிகள், இரவில் பிறை, கொலை வாளுடன் பச்சைச் சட்டை போட்டு முதலாளித்துவ மதமான இஸ்லாத்திற்காக ஜிஹாத் பேசுவார்கள்.
அம்பேத்கர் எப்பொழுது அல்லாஹ்தான் இறைவன் என்று சொன்னார்?
இதே போன்று தான் பெரியாரும் கூட இஸ்லாமியவாதிகளால் அவர்களின் இஸ்லாமிய அஜென்டாவுக்காகப் பயன்படுத்தப் படுகின்றார்.