புதன், 31 டிசம்பர், 2014

மீண்டும் மருதநாயகம் வருகிறார்? லண்டன் தயாரிப்பாளர் காலி?


இங்கிலாந்து ராணியை வரவழைத்து 1997ம் ஆண்டு ‘மருதநாயகம்' படத்தை தொடங்கினார் கமல். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் பைனான்ஸ் பற்றாக்குறையால் நின்றுபோனது. இந்நிலையில் அப்படத்தை மீண்டும் தொடர்வதுகுறித்து ஆலோசனை நடத்தி வந்தார் கமல். பெரிய பட்ஜெட் படம் என்பதால் இதுவரை அதற்கான தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. இந்நிலையில், ‘மருதநாயகம் படம் கைவிடப்பட்டுவிட்டதா?' என்று கேட்டபோது கமல் பதில் அளித்தார். அவர் கூறும்போது,‘இது நிறைவேறும் காலம் நெருங்கி வந்திருக்கிறது. லண்டனை சேர்ந்த எனது நண்பரும், பெரிய தொழில் அதிபருமான ஒருவர் இப்படத்தை தயாரிக்க தயார் என்று என்னிடம் கூறி இருக்கிறார். இதற்கான பட்ஜெட் பெரிய அளவில் செலவாகும் என்றேன். அதுபற்றி கவலை இல்லை. எவ்வளவு செலவானாலும் அதை என்னால் தாங்க முடியும் என்று கூறி உள்ளார்' என்றார்.இதையடுத்து 2015ம் ஆண்டு மருதநாயகம் படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை கவனிக்கிறார் கமல்..tamilmurasu.org

நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்: மம்தா பானர்ஜி அதிரடி?

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அவசரச் சட்டத்தை மேற்கு வங்க மாநிலத்தில் அமல்படுத்தமாட்டோம் என்று அம்மாநில முதலமைச்சரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார். கார்காபூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மம்தா பானர்ஜி கூறுகையில், “நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்தத்துக்கான அவசரச் சட்டம் கொண்டுவருவது நியாயமற்ற செயல். நாடு முழுவதும் ஜனநாயகத்தை மத்திய அரசு நசுக்கி வருகிறது. ஒட்டுமொத்த நாட்டிலும், நரேந்திர மோடி அரசு உருவாக்கியுள்ள சூழ்நிலை நாட்டில் அவசர நிலையை விட மோசமானது. நிர்ப்பந்தம் காரணமாகவே, நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முயற்சிக்கிறது” என்று மம்தா பானர்ஜி  கூறினார்.மம்தாஜி இதுவுல  நீங்க உறுதியா நின்னா அடுத்த  பிரதமர் நீங்கதான் 

PK திரைப்பட தியேட்டர்கள் மீது இந்து பயங்கரவாத பஜ்ரங்தள் அமைப்பினர் தாக்குதல்

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், அமீர்கான், அனுஷ்கா சர்மா, சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் பி.கே.இப்படம்  வெளியான ஒன்பதே நாட்களில் சுமார் 200 கோடி ரூபாய் வசூலை அள்ளி சாதனை படைத்துள்ளது. இந்தப் படத்தை ‘ரீமேக்’ செய்து தமிழில் வெளியிடவுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், இந்தப் படத்தில் இந்து கடவுள்களை அவமதிப்பதைப் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் இதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரி பஜ்ரங் தள் அமைப்பினர், இப்ப்டம் வெளியிடப்பட்ட  தியேட்டர்களை அடித்து நொறுக்கினர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சிட்டி கோல்டு மற்றும் சிவ் தியேட்டரில் இப்படம் திரையிடப்பட்டது. அங்கு சுமார் 20 பேர் கொண்ட குழுவுடன் வந்த பஜ்ரங் தள் அமைப்பினர், தியேட்டர் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். தியேட்டரின் டிக்கெட் கவுண்டர் உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கினர்.இந்த சம்பவத்தையடுத்து நவராங்புரா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் தாக்குதல் நடத்திய அமைப்பினர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

நடிகை சார்மி : மேக்கப் இல்லாமல் இலியானாவை பார்க்க சகிக்காது! அப்படி என்னதாய்ன் கோபம்?

இலியானாவை கலாய்த்த சார்மி! இலியானா ரியாக்‌ஷன்?>டிகைகளுக்குள் போட்டி இருக்கலாம். ஆனால் பொறாமை இருக்கக்கூடாது என்று சொல்லிவிட முடியாது. பொறாமையும் இருக்கலாம், ஆனால் அது மனதிற்குள் இருக்கவேண்டும். இப்படி டி.வி நிகழ்ச்சிகளெல்லாம் கொட்டி தீர்த்துவிடக்கூடாது என்று நடிகை சார்மியை பொருமிக்கொண்டிருக்கிறது தெலுங்கு திரையுலகம். அப்படி என்ன செய்துவிட்டார் சார்மி?டி.வி. நிகழ்ச்சி ஒன்றிற்கு பேட்டியளித்த சார்மியிடம் ‘ மேக்-அப் இல்லாமல் இவரை பார்க்கவே முடியாது என நீங்கள் நினைக்கும் ஹீரோயின் யார்?’ என்ற கேள்வியை கேட்டிருக்கிறார்கள். இந்த கேள்விக்கு சிறிதும் யோசிக்காமல் சார்மி “இலியானா தான். அவரை மேக்-அப் இல்லாமல் பார்க்க சகிக்காது. அவர் எங்கு போனாலும் மேக்-அப் சாதனங்களை மறக்காமல் எடுத்துக்கொண்டு போகச் சொல்லவேண்டும்” என்று ஓபன் கமெண்ட் அடித்துவிட்டார்.சார்மி இந்த அளவிற்கு இலியானாவை இடித்துப் பேச காரணம் என்ன என்று விசாரித்தால் கதை கதையாஇ சொல்கிறது டோலிவுட்.அடடே மேக்கப் இல்லாமலே காருக்கு வெளியே இலியான நன்றாகவே இருக்கிறார் ஆனா நீங்க காருக்குள்ளேயே மேக்கப்போட இருந்தும்....

காமுகனை அடிக்க முடியாத ஆத்திரத்தில் காவல் நிலைய வாகனம் எரிப்பு: போலீசார் குவிப்பு பதட்டம் நீடிப்பு

திருவண்ணாமலை சாரோன் பகுதியை சேர்ந்த ஒரு ஆசிரியரின் மகள் சௌமியா ( பெயர் மாற்றம் செய்யபட்டுள்ளது ). திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.29ந்தேதி இரவு டியூஷன் சென்றுவிட்டு இரவு 7 மணியளவில் வீட்டுக்கு நடந்து வந்துள்ளார். அப்போது ஆட்டோவில் வந்த இரு இளைஞர்கள் சாரோன் சர்ச் அருகே அந்த பெண்ணை ஆட்டோவில் கடத்திக்கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.செய்துவிட்டு இதை யாரிடமும் சொல்லக்கூடாது என அடித்து உதைத்து எடப்பாளையம் கிராமத்தில் கொண்டு வந்துவிட்டுள்ளனர். அந்த பெண் வீட்டுக்கு செல்கிறாளா அல்லது வேறு எங்காவுது செல்கிறாளா என பின் தொடர்ந்துள்ளனர். அப்போது ஒருவர் பார்த்து எதுக்குடா அந்த பெண்ணை கிண்டல் செய்றிங்க என விரட்டியுள்ளார். அழுதுக்கொண்டே வீட்டுக்கு சென்ற அந்த பெண் தன் பெற்றோரிடம் அதுப்பற்றி முறையிட அவர்கள் காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளனர்.

செவ்வாய், 30 டிசம்பர், 2014

போலி என்கவுண்டர் கேசில் இருந்து அமித் ஷா விடுவிக்கப்பட்டார்!

மும்பை: குஜராத்தில், 2005ம் ஆண்டில் நடைபெற்ற, போலி என்கவுன்டர் வழக்கிலிருந்து, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, விடுவிக்கப்பட்டார். அவருக்கும், இந்த வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்து, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நேற்று அவரை விடுவித்தது.
குஜராத்தில் தாதாவாக வலம் வந்த சொராபுதீன் ஷேக், போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு மற்றும் அவன் கூட்டாளி துளசிராம் பிரஜாபதி படுகொலை வழக்கில், குஜராத் மாநில உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷா பெயர் சேர்க்கப்பட்டது; இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரித்து வந்தது.சி.பி.ஐ., சிறப்பு நீதிபதி, எம்.பி.கோசாவி பிறப்பித்த உத்தரவில், 'சொராபுதீன் என்கவுன்டர் வழக்கில், அமித் ஷா மீது தொடரப்பட்ட வழக்கிற்கு ஆதாரம் இல்லை. எனவே, அவரை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கிறேன்' என, உத்தரவிட்டார்.

ஏர் ஏசியாவை குறி வைக்கும் "கருப்புக் கரம்"... முன்கூட்டியே எச்சரித்த சீன பிளாக்கர்!

பெய்ஜிங்: இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் கிளம்பி பாதி வழியிலேயே கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகி 162 பேரின் உயிரைப் பறித்துள்ள ஏர் ஏசியா விமானம் விபத்துக்குள்ளாகும் என்று முன்கூட்டியே தனது பிளாக்கில் எழுதிய சீனரால் புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது. ஏர் ஏசியா விமானத்தை ஒரு "கருப்புக் கரம்" குறி வைத்துள்ளதாக டிசம்பர் 15ம் தேதி தனது பிளாக்கில் எழுதியுள்ளார் இந்த பிளாக்கர். இவரது பெயர் விவரம் தெரியவில்லை. இவரே மர்ம மனிதராகவும் இருக்கிறார். இவரது பிளாக்கில் உள்ள எழுத்துக்கள்தான் இப்போது பெரும் பரபரப்பாகியுள்ளன. ஏர் ஏசியாவை குறி வைக்கும் டிசம்பர் 15ம் தேதி இவர் வெளியிட்ட ஒரு போஸ்ட்டில், ஏர் ஏசியாவை ஒரு நிழல் அமைப்பு (கருப்புக் கரம் என்று அதை இவர் குறிப்பிடுகிறார்) குறி வைத்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும், இதற்கு முன்பு பாதிப்புக்குள்ளான எம்.எச். 17 மற்றும் எம்.எச் 370 ஆகிய விமானங்களையும் ஒரு கூட இதே குழுதான் குறி வைத்துத் தாக்கியதாகவும் இவர் கூறியுள்ளார்.

Air Asia கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானம்!

கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானத்தில் இருந்த 40 உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக இந்தோனேசிய கடற்படை தெரிவித்துள்ளது. கடந்த 28ஆம் தேதி காணாமல் போன இந்த விமானத்தின் பாகங்கள், ஜாவா கடற்பகுதியில் கண்டெடுக்கப்பட்டன என்றும் தெரிவித்துள்ளது.ஏர்பஸ் ஏ320 ரகத்தைச் சேர்ந்த கியூஇசட் 8501 என்ற எண் கொண்ட ஏர் ஏசியா விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை 5.31 மணிக்கு இந்தோனேசியாவின் சுரபயா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. சிங்கப்பூரைச் சேர்ந்த அந்த விமானத்தை முதன்மை விமானி இரியாண்டோ இயக்கினார். அவருடன் இணை விமானி ரெமி இம்மானுவேல் ப்லீசெல் இருந்தார்.இந்தோனேசியாவைச் சேர்ந்த 144 பேரும், சிங்கப்பூர், மலேசியா, பிரான்ஸ், தென்கொரியா, இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என காணாமல் போன ஏர் ஏசியா விமானத்தில் மொத்தம் 162 பேர் பயணம் செய்தனர்.ஞாயிற்றுக்கிழமை காலை 5.31 மணிக்கு புறப்பட்ட விமானத்தை இயக்கிய விமானி, ஜகர்டா வானூர்தி பகுதியில் உள்ள போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தை காலை 6.13 மணிக்கு கடைசியாக தொடர்பு கொண்டு, மேகம் சூழ்திருப்பதால் 34 ஆயிரம் அடி உயர்த்திற்கு மேல், மாற்றுப் பாதையில் திசை மாறி செல்வதாக தெரிவித்துள்ளார். காலை 6.16 மணி வரை விமான போக்குவரத்தை கண்காணிக்கும் ரேடார் கருவியுடன் தொடர்பில் இருந்த அந்த விமானம், ஞாயிற்றுக்கிழமை 6.17 மணிக்கு ரேடார் தொடர்பை இழந்தத  nakkheeran.in

ஏர் ஏசியா விமானம் ? உடல்கள் கடலில் மிதப்பதாக தகவல் !

சுமத்ரா: இந்தோனேஷியாவில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு, மாயமான ஏர் ஏசியா கியூஸ் 8501விமானம் 62 மணி நேரத்திற்கு பின்னர் ஜாவா கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு உயர் அதிகாரிகள் விரைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்து சுர்பையா விமான நிலையத்தில் உறவினர்கள் பலர் கதறி அழுதபடி நிற்கின்றனர். 95 சதவீதம் இது மாயமான விமானத்தின் பாகங்களே என்றும் கூறப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை புறப்பட்ட ஏர் ஏசியா கியூஸ் 8501 ( மலேசியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது ) சுர்பயா விமான நிலையத்தில் இருந்து ஞாயிறு காலை புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் மாற்று பாதையில் திரும்பியது. காலை 7.42 க்கு தொடர்ந்து தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்த விமானத்தில் 149 இந்தோனேஷியர்கள், 3 கொரியர்கள், 1 சிங்கப்பூரியன், 1 பிரிட்டன் , 1 மலேசியன், 7 விமான ஊழியர்கள் இருந்தனர்.

படப்பிடிப்பின் நடுவில் தம்பியை எண்ணி அழுத கேத்ரின் தெரசா

மெட்ராஸ்‘ படத்தில் நடித்தவர் கேத்ரின் தெரசா. இவரது தம்பி சமீபத்தில் பெங்களூருவில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். சமீபகாலமாக படப்பிடிப்பில் கலந்துகொள்ள வரும் கேத்ரின் தம்பியின் மரணத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் அவ்வப்போது கதறி அழுகிறாராம். இது பற்றி அவர் கூறியது: என்னுடைய தம்பி கிறிஸ்டோபரை நான் இழந்துவிட்டேன். இந்த இழப்பை வார்த்தைகளால் ஈடு செய்ய முடியாது. நானோ என் குடும்பத்தினரோ கிறிஸ்டோபரின் இந்த பரிதாப முடிவுக்கு என்ன காரணம் என்பதை அறிந்துகொள்ள முடியவில்லை. இது தாங்கமுடியாத வேதனையை தந்துள்ளது. அவன்தான் எங்கள் வீட்டில் கடைக்குட்டி. எங்களுக்கு ரொம்பவும் முக்கியமானவன். கடந்த 2 வருடமாக எனது பெற்றோரின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கவில்லை. இதனால் அவனது படிப்பில்  ஆர்வம் குறைந்தது.

நிர்மலா புலம்பல்: குவிந்தது அன்னிய நேரடி முதலீடு: 7 மாதங்களில் ரூ.1 லட்சம் கோடி!

புதுடில்லி: நடப்பு 2014 - 15ம் நிதியாண்டில், ஏப்., - அக்., வரையிலான ஏழு மாதங்களில், 1 லட்சம் கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீடு குவிந்துள்ளது என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.டில்லியில், 'இந்தியாவில் தயாரிப்போம்' என்ற பயிலரங்கை, அவர் துவக்கி வைத்து மேலும் பேசியதாவது: தயாரிப்புத் துறையில், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் தேவை. நாட்டில் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கில், 'இந்தியாவில் தயாரிப்போம்' என்ற கொள்கை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அரசு அலுவலகங்களில், 'சிவப்பு நாடா' முறையை ஒழித்து, தற்போதைய முரண்பாடான விதிகளில் சீர்திருத்தம் செய்து, தகவல் தொழில்நுட்ப வசதியை பரவலாக்க, அரசு முனைந்துள்ளது. இதன் மூலம் நிர்வாக நடைமுறை, ஆக்கப்பூர்வமாகவும், சுலபமானதாகவும் ஆகியுள்ளது. 
இந்தம்மா சும்மா சாமியாடாம இருக்கமாட்டாய்ங்க ? 83 லட்சம் முதலீடு உள்ள நாட்டில் ஒரு லட்சம் வருவது போவது ஒன்றும் பெரிய செய்தி இல்லை. நோக்கியா  foxon தமிழகத்தில் மூடுகிறார்கள். ஏனெனில் அவர்களின் சலுகை காலம முடிந்து விட்டது. அது போல எவ்வளவு முதலிடு திருப்பி சென்றுள்ளது. ? கூடவே வெளி நாட்டு பொருட்களும் இறக்குமதியாகும்.... உள்ளூர் தொழில் நலிவடையும்.....

சுபவீ :சாதியை கட்டிப்பிடித்து காப்பாற்றும் கயிறுதான் பகவத் கீதை?

கீதை - யாருக்குப் புனித நூல் என்னும் என் கட்டுரையைத் தொடர்ந்தும், கீதை குறித்த என் உரையைத் தொடர்ந்தும், நம் வலைப்பூவில் ஒரு நீண்ட விவாதம் நடைபெற்றது. அதில் நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர் என்றாலும், வினோத், கணேஷ்வேல், விருபாக்ஷன்  ஆகிய மூவரும் குறிப்பிடத் தக்கவர்கள். அறிவார்ந்த முறையிலும், நாகரிகமாகவும் தங்கள் வாதங்களை முன்வைத்த அம்மூவருக்கும் முதலில் என் நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.கிருஷ்ணதாஸ் என்று ஒரு நண்பர் இடையில் தன் கருத்துகளை வெளியிட்டுள்ளார். கீழ்த்தரமான, குறுக்குப்புத்தி கொண்டவன் என்று என் மீது தனி மனிதத் தாக்குதலை அவர் தொடுத்துள்ளார்.

RSS தலித் பாசம்? இஸ்லாமியர்களுக்கு எதிராக அவர்களை யூஸ் பண்ணத்தாய்ன்?

பையாஜி ஜோஷி

 ஒருகாலத்தில் அவர்ணர்களாக சமுதாயத்திற்கு வெளியே நிற்கவைக்கப்பட்ட தலித்துகளையும் பழங்குடியினரையும் இன்றைக்கு “நீங்களும் இந்துக்கள் தான்” என்று அழைப்பதே அப்பாவி இசுலாமியர்களுக்கு எதிராக கொலைவாளை ஏந்தும் கூலிகளாக அவர்களை அமர்த்திக் கொள்வதற்காகத் தான்.
முசுலீம் ஆட்சியாளர்களும் மாட்டுக் கறி தின்பவர்களுமான அந்நிய படையெடுப்பாளர்கள் சன்வார்வன்ஷிய ஷத்ரியர்களின் ஹிந்து பெருமிதத்தை உடைப்பதற்காக மாட்டைக் கொல்வது, அதன் தோலை உரிப்பது, அதன் மீதங்களை கண்காணாத இடத்தில் எறிவது போன்ற கீழ்த்தரமான வேலைகளைச் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தினார்கள். பெருமிதம் மிக்க ஹிந்து கைதிகளுக்கு இந்த மாதிரியான வேலைகளைக் கொடுத்ததன் மூலம் தோலை உரிக்கும் (charma-karma) சாதி என்ற பிரிவையே அந்நியப் படையெடுப்பாளர்கள் தான் உண்டாக்கினர்” – இது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அதிகார வரிசையில் இரண்டாம் இடத்திலிருக்கும் அதன் பொதுச் செயலாளர் பையாஜி ஜோஷியின் வார்த்தைகள். சகல ஜாதி கொடுமைகளுக்கும் மூல காரணம் பார்ப்பான்தான் !ஆனால் அதே  பார்ப்பான் ஒதுங்கி நின்று சேதாரம் இல்லாம  கூத்து பார்ப்பான்

திக்விஜய் சிங் : மத சுதந்திர சட்டம் நாட்டுக்கு மிக அவசியம்.மதமாற்ற தடை தேவையில்லை

போபால்: நாட்டிற்கு தற்போது தேவைப்படுவது மத சுதந்திர சட்டம் தானே ஒழிய மதமாற்ற தடை சட்டம் அல்ல என  காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு பதிலடி கொடுத்துள்ளார்.உத்தரபிரதேசம், குஜராத், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அண்மைக்காலமாக நடைபெற்று வரும் மதமாற்ற சம்பவங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. இதுகுறித்து பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரையே ஸ்தம்பிக்கச் செய்தனர். இந்த சூழலில் மதமாற்ற தடைச் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என ஆர்எஸ்எஸ், விஎச்பி உள்ளிட்ட இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் நேற்று உத்தரபிரதேசம் லக்னோவில் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரவேண்டும்.

திங்கள், 29 டிசம்பர், 2014

AirAsia காணாமல்போன ஏர்ஏஷிய விமானம் கடலுக்கடியில்? BBC News

காணாமல்போன இந்தோனேஷியாவின் ஏர்ஏஷிய விமானம் (எண்:QZ8501) கடலின் ஆழத்தில் இருக்கக்கூடும் என்று இந்த விமானத்தை தேடுவதற்கான இந்தோனேஷிய தேடுதல் மற்றும் மீட்புக்குழுவின் தலைவர் தெரிவித்திருக்கிறார். இந்த விமானம் காணாமல் போனதற்கு முன்பாக கடைசியாக அந்த விமானத்திலிருந்து கிடைக்கப்பெற்ற ஒருங்கிணைப்புத் தகவல்களின் அடிப்படையிலேயே தாம் இந்த அனுமானத்திற்கு வந்திருப்பதாக பாம்பாங் சொய்லிஸ்டோ தெரிவித்தார்.
162 பயணிகளுடன் இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்த இந்த ஏர் பஸ் A320-200 ரக விமானம் காணாமல் போய் ஒரு நாள் முடிந்துவிட்டநிலையில் அதனைத்தேடும் பணிகள் தொடர்கின்றன. ஆனால் அது எங்கே இருக்கிறது என்பதற்கான எந்த தடயமும் இதுவரை கிடைக்கவில்லை.

தேர்தல் பிரசார கூட்டங்களில் தமிழில் பேசும் ஜனாதிபதி ராஜபக்ஸ: இந்தியா என் உறவு; சீனா என் நண்பன்’’


அதிர்ச்சியில் உறையவைக்கும் தலித்பெண் வன்கொடுமைகள் : தமிழக பகீர்!

தமிழ்நாட்டில் 2012-ல் 34 தலித் பெண்கள் மட்டுமே பாலியல் வன்முறைக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்று தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. ஆனால்,  ‘எவிடன்ஸ்’அமைப்பு தமிழ்நாடு முழுக்க நடத்திய ஆய்வில் 124 தலித்பெண்கள் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டி ருக்கிறார்கள் என்று ஆதாரப்பூர்வமான தகவலை வெளியிட்டு அதிர்ச்சியூட்டிள்ளது. இதில்,  பாதிக்கப்பட்ட 29 சதவீதம் பெண்கள் பாலியல் வண்புணர்ச்சிக் குள்ளாக்கப் பட்டிருக்கிறார்கள். அதுவும், 124 வன்கொடுமை  சம்பவங்களில் 1 சம்பவத்தில் மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது என்கிற  ‘எவிடன்ஸ்’அமைப்பின் ஆய்வு... இதற்கு ஆதாரமாக சுமார் 6500 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை சேகரித்துள்ளது!அதிர்ச்சியில் உறையவைக்கும்  தலித்பெண் வன்கொடுமைகள் சில...

நாகர்கோவில் பணத்துக்காக ஒரு குடும்பத்தையே கொன்ற ஒரு எம்.ஏ. பி.எட். பட்டதாரி

A customs employee,wife and adopted daughter found dead
ஆன்லைன் வர்த்தகத்தில் எனக்கு ரூ.35 லட்சம் லாபம் கிடைத்ததாகவும், அந்த பணத்தை பாதுகாப்பாக வைக்கும்படி சுப்பையாவிடம் கூறினேன். அதற்காக இணையதளத்தில் போலி கணக்கு தொடங்கி எனக்கு ரூ.35 லட்சம் வருவாய் வந்ததுபோல தகவலை அனுப்பி அதனை சுப்பையாவிடம் காண்பித்தேன். 
நாகர்கோவிலை அடுத்த வெள்ளமடம் வேம்பத்தூர் ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் சுப்பையா (வயது 58). நெல்லை சுங்க இலாகா அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி வசந்தி (53). இவர்களது வளர்ப்பு மகள் அபிஸ்ரீ (12).
இவர்கள் 3 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டனர். வசந்தி, அபிஸ்ரீ ஆகிய இருவரும் வீட்டுக்குள்ளேயே பிணமாக கிடந்தனர். சுப்பையாவின் உடல் 2 நாட்களுக்கு முன்பு முப்பந்தல் அருகே அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளியை கண்டுபிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டது.

சகாயம் அதிர்ச்சி! சிட்டிசன் படக்கதை போல் காணமல் போன கிராமங்கள் மனிதர்கள் .....

புதுத்தாமரைப்பட்டி அருகே கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்ட குவாரியை ஆய்வு செய்கிறார் சட்ட ஆணையர் உ.சகாயம். படம்: ஆர்.அசோக். கிரானைட்-தொழிலுக்காக-கிராமங்கள்-முற்றிலும்-அழிப்பு-ஆய்வுக்குச்-சென்ற-ஐஏஎஸ்-அதிகாரி-சகாயம்-அதிர்ச்சி/
புதுத்தாமரைப்பட்டி அருகே கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்ட குவாரியை ஆய்வு செய்கிறார் சட்ட ஆணையர் உ.சகாயம். படம்: ஆர்.அசோக்.
கிரானைட் தொழிலுக்காக கிரா மங்கள் இருந்த சுவடே தெரியாமல் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக சட்ட ஆணையர் உ.சகாயத்திடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதை நேரில் பார்வையிட்ட சகாயம் அதிர்ச்சியடைந்தார்.
மதுரை மாவட்டத்தில் நடை பெற்ற கிரானைட் முறைகேடுகள் குறித்து சகாயம் விசாரணை நடத்தி வருகிறார். இதற்காக திருமோகூர், புதுத்தாமரைப்பட்டி ஊராட்சிகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

ஐஐடி டெல்லி இயக்குநர் பதவி விலகினார்! சுப்பரமணியம் சாமியின் மிரட்டல் காரணம்?

டெல்லி: தனக்குரிய சம்பளப் பாக்கி ரூ. 70 லட்சத்தை வழங்குமாறு சுப்பிரமணியன் சாமி கொடுத்த நெருக்கடி காரணமாக, தனது பதவிக்காலம் முடிய இன்னும் 2 வருடம் இருக்கும் நிலையில் டெல்லி ஐஐடியின் இயக்குநர் ரகுநாத் செவ்கோங்கர் பதவி விலகியுள்ளார். இவரது விலகல் குறித்து மத்திய மனிதவளத்துறை இன்னும் உறுதி செய்யவில்லை. ஆனால் செவ்கோங்கர் பதவி விலகி விட்டதாக மூத்த ஐஐடி அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். இவரது விலகலுக்கு முக்கியக் காரணமே சுப்பிரமணியன் சாமி கொடுத்த பிரஷர்தான் காரணம் என்கிறார்கள். சம்பளப் பாக்கி கேட்டு சாமி, டெல்லி ஐஐடியின் முன்னாள் டி பிரிவு ஆசிரியராக இருந்தவர். இவர் அங்கு ஆசிரியராக இருந்தபோது அதாவது 1972ம் ஆண்டு முதல் 1991ம் ஆண்டு வரை தனக்குரிய சம்பளப் பாக்கித் தொகையான ரூ. 70 லட்சத்தை வழங்குமாறு ஐஐடியை தொடர்ந்து நெருக்கி வந்துள்ளார் சாமி.

400 சாமியார்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு? ப்ரீயா செக்சில் ஈடுபடலாம் ஜனத்தொகையும் பெருகாது!

 புதுடில்லி:பஞ்சாப் மற்றும் அரியானாவில் செயல்படும், 'தேரா சச்சா சவுதா' என்ற மத அமைப்பின் தலைவர் குர்மித் சிங், தன் ஆதரவாளர்களான சாமியார்கள், 400 பேருக்கு, ஆண்களுக்கான கட்டாய குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது; குர்மித் ராம் ரஹீம் சிங் மீது, இன்று வழக்கு பதிவு செய்ய உள்ளது.சீக்கிய மதத்தினர் அதிகம் வாழும், பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில், அந்த மதத்தின் ஒரு பிரிவு என, தேரா சச்சா சவுதா என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் தலைவராக தன்னைத் தானே அறிவித்து, 'நானே கடவுள்' என கூறி வருகிறார்,  இதுவெல்லாம் ஆஷ்ரமம் என்று ஒன்று ஏற்படுத்தி கூட்டு கும்மாளம் போடுவதற்கு தயார் செய்தது..

சவுக்கு : 2000 கோடிக்கு குன்ஹாவின் தீர்ப்பு என்று ஒரு16 பக்க ஆவணத்தை .... நம்பிய மன்னார்குடி மாபியா

வெங்கடாச்சலம், சசிக்கலா, இளவரசி ஆகியோர் எப்படியாவது பெங்களுரு சிறப்பு நீதிபதி குன்ஹாவை விலைக்கு வாங்கி விடலாம் என்று கடும் முயற்சி எடுத்ததாகவும், அவர்களின் விரக்தியை பயன்படுத்திக் கொண்ட கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு மோசடிப் பேர்வழி, 2000 கோடி வாங்கிக் கொண்டு, குன்ஹாவின் தீர்ப்பு இதுதான் என்று ஒரு 16 பக்க ஆவணத்தை வழங்கியதாகவும், அதை அப்படியே நம்பிய மன்னார்குடி மாபியா கூட்டம், அதை ஜெயலலிதாவிடம் காண்பித்ததாகவும், உலகில் பணத்துக்கு விலைபோகாத நபர்கள் ஒருவர் கூட இருக்க முடியாது என்ற இறுமாப்பிலேயே வளர்ந்த ஜெயலலிதா, அதை அப்படியே நம்பியதாகவும், அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே, 27 செப்டம்பர் அன்று பரப்பன அக்ரஹாரா சென்று நீதிமன்ற வாசலில் இறங்கியதும், கைக்கடியாரத்தில் மணியைப்பார்த்து விட்டு, நாம் 12.30 மணிக்கு கிளம்பப் போகிறோம் என்று வாகன ஓட்டுனரிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது. இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால் சரியாக 11.04 மணிக்கு நீதிபதி குன்ஹா ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவித்ததும், அடுத்த வினாடி, சசிகலாவை பார்த்து முறைத்திருக்கிறார். அப்போது நீதிமன்றத்தில் இருந்தவர்களுக்கு, அது வரை, தாம் தண்டிக்கப்படப் போகிறோம் என்பதே ஜெயலலிதாவுக்கு தெரியாது என்பதையும் ....
 தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ? என்றான் பாரதி. இதே போன்ற வேதனையான நிலையில்தான் தமிழகம் இன்று இருக்கிறது. இந்தியாவில் எங்கும் காணப்படாத வகையில் ஒரு அசாதாரண சூழல் தமிழத்தில் நிலவுகிறது. ஒரு மாநிலத்தின் முதல்வர், முதல்வர் பதவியைக் கூட ராஜினாமா செய்யாமல், குற்றம் சாட்டப்பட்டவராக நீதிமன்றம் செல்கிறார்.

தமிழர்களுக்கு எதிராக என்னால் செயல்படவே முடியாது தந்தி டி.வி.க்கு ராஜபக்சே சிறப்பு பேட்டி

‘‘தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கும், இலங்கை அரசுக்கும் தொடர்பு இல்லை’’ என்றும், என்னால் தமிழர்களுக்கு எதிராக செயல்படவே முடியாது என்றும் தந்தி டி.வி.க்கு அளித்த சிறப்பு பேட்டியில் இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.
ராஜபக்சே பேட்டி இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் முன்கூட்டியே நடைபெற உள்ள பரபரப்பான சூழ்நிலையில், இலங்கை அதிபர் ராஜபக்சேவை தந்தி டி.வி.யின் சிறப்பு செய்தியாளர் எஸ்.ஏ.ஹரிஹரன் சிறப்பு பேட்டி கண்டுள்ளார்.
அவர் கேட்ட சுறுசுறுப்பான கேள்விகளுக்கு, ராஜபக்சே விறுவிறுப்பாக பதில் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:–
நரேந்திரமோடிக்கு நன்றி கேள்வி:– சமீபத்தில், சார்க் மாநாட்டின்போது நீங்களும், இந்திய பிரதமர் நரேந்திரமோடியும் சந்தித்தீர்கள். இலங்கை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய மீனவர்களை விடுவித்ததற்கு மோடி நன்றி தெரிவித்தார். இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நல்லெண்ண நடவடிக்கையாகக்கூட இது கருதப்பட்டது. மீனவர்களும் வரவேற்றார்கள். ஆனால், இந்த பிரச்சினை தீர்ந்தபாடில்லை. மீனவர் கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன.

ரயில்வே தொழிலாளர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம் செய்ய முடிவு

மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.ரயில்வேயில் அந்நிய நேரடி முதலீடு, தனியார்மயம், ஆட்குறைப்பு, 100 சதவீத அக விலைப்படி இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை எஸ்.ஆர்.இ.எஸ். தொழிற்சங்கம் வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் நாடு தழுவிய வேலை நிறுத்தம் செய்வது பற்றி பெரம்பூர் ஒற்றுமை நிலையத்தில் பணிமனை கோட்ட செயலாளர் எம்.சூரியபிரகாஷ் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

தமிழகம் முழுவதும் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல்

மதுரை மாட்டுத்தாவணியில் கல்வீசி அரசு விரைவுப் பேருந்தின்  கண்ணாடி உடைக்கப்பட்டது.    பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே  வந்த பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.  சென்னைக்கு புறப்பட்ட பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலால்  பயணிகள் தவித்து வருகின்றனர். நெல்லையிலும் பேருந்து மீது கல்வீச்சு நெல்லை: நெல்லையிலும் வடக்கு புறவழிச்சாலையில் 2 அரசு விரைவுப் பேருந்துகள் மீது கல்வீசப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புதுச்சேரிக்கு சென்ற பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் பெண் பயணி ஒருவர் படுகாயமடைந்துள்ளனர்.

மரண தண்டனை நிறைவேற்றத்தை நிறுத்த முடியாது: பாகிஸ்தான் திட்டவட்டம்

பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனைகளின் நிறைவேற்றத்தை நிறுத்த முடியாது என அந்நாடு திட்டவட்டமாகத் தெரிவித்தது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் தஸ்நீம் அஸ்லாம் தனது சுட்டுரை வலைதளத்தில் பதிவு செய்துள்ள கருத்தில், பயங்கரவாதிகளுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றுவது எந்த சர்வதேச சட்டத்தையும் மீறும் செயலாக கருத முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
"உலக நாடுகளின் கருத்துக்கு பாகிஸ்தான் மதிப்பளிக்கிறது. பாகிஸ்தான் தற்போது மிகவும் அசாதாரணமான சூழலைக் கண்டு வருகிறது. இதனை எதிர்கொள்ள அசாதாரணமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது.

பெங்களூரில் குண்டு வெடிப்பு: சென்னையை சேர்ந்த பெண் பலி

பெங்களூரு:பெங்களூரில், நேற்று இரவு, குண்டு வெடித்ததில், சென்னையை சேர்ந்த பெண் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இரண்டு பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.பெங்களூரு, பிரிகேட் ரோடு அருகிலுள்ள சர்ச் தெருவின் நடைபாதையில், நேற்றிரவு, 8:30 மணிக்கு, பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில், சென்னையை சேர்ந்த பவானி, 38 என்ற பெண், பலத்த காயமடைந்தார்; உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், அங்கு, சிகிச்சை பலனின்றி இறந்தார். பெங்களுருவை சேர்ந்த கார்த்திக் என்பவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். குண்டு வெடித்த பகுதியில், ரெஸ்டாரெண்டு, பார், 'பப்'கள் அதிகமாக உள்ளன. தினமும், நள்ளிரவு முதல், அதிகாலை, 3:00 மணி வரை, இப்பகுதி பரபரப்பாக காணப்படும். நேற்று, ஞாயிற்றுகிழமை என்பதால், கூட்டம் அதிகமாக இருந்தது. குண்டு வெடித்தவுடன், ரெஸ்டாரெண்ட், 'பப்'களில் இருந்தவர்கள், பதட்டத்துடன் வெளியேறினர். அப்பகுதி முழுவதும், போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

மைனா கும்கி கயலை விட பிரபு சாலமன் இயேசு அழைக்கிறார் எடுக்கலாம்

கயல்: கதறுகிறது காதல்; காப்பாற்றுங்கள் சினிமாக்காரர்களிடமிருந்து.. இந்திரனின் பொம்பள பொறுக்கித் தனத்தினால், அவனைக் கவுதம முனி, ‘உடலெல்லாம் பெண்குறியாகப் போகட்டும்’ என்று சபித்தான். அதுபோல் தமிழ் சினிமாவை, ‘காலம் முழுவதும் காதலை மட்டும் தான் சொல்லித் தொலைக்க வேண்டும். வேறு எதையாவது சொன்னாலும் அதையும் காதல் வழியாகத்தான் சொல்லவேண்டும்’ என்று எந்த முனிவன் சபித்தானோ தெரியவில்லை. இந்திய மற்றும் உலகச் சினிமாக்கள் எவ்வளவோ மாற்றங்களைக் கடந்து மக்களின் அரசியல், எளிய மக்களின் வாழ்க்கை; காதலன் – காதலி, கணவன் – மனைவி, சகோதர-சகோதரிகள், தாய் – மகன் இப்படியாக ‘ஆண்-பெண்’ உறவில் சமூகம் மற்றும் பொருளாதராத்தை ஒட்டி எழுகிற பிரச்சினைகள், மனப் பிரச்சினைகள், சிக்கல்கள், தீர்வுகள் என்று பயணிக்கிறது; ஆனால், தமிழ் சினிமாக்காரர்களோ, ‘காதல் கோடு’ தாண்ட முடியாமல் தவிக்கிறார்கள். இதிகாசகாலத்திலேயே, ‘பத்தினி சீதை’ கூடத் தன் ‘அவதாரபுருஷன்’ போட்ட ‘கோட்’ டை தாண்டியிருக்கிறார். இந்த நவீன காலத்தில் இதிகாசகாலத்தை விடப் பிற்போக்காக இருக்கிறார்கள் நம்ம சினிமாக்காரர்கள விடலைத் தனமான ரசிகர்களின், காதல் குறித்த அறியாமையை நியாயப்படுத்தி,

AirAsia விமானம் ஜாவா கடலில் விழுந்தது? இந்தோனேஷியா விமானம் மீட்பு பணியில் தீவிரம்!

Indonesian military is deploying forces to search for the plane, after alleged report of plane crashing in the sea between Java and Kalimantan, military sources said.
Meanwhile, AirAsia said in a statement that the search and rescue operations were in progress and promised to "keep all parties informed as more information becomes available."

மாயமான விமானம் ஏர் ஏசியா விமானம் ஜாவா கடலில் விழுந்தது என்று சி.சி.டி.வி. செய்தி வெளியிட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. பெலிடன் கடற் பகுதியில் விமானத்தின் பாகங்கள் கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் விமானம் இந்தோனேசியா ஜுவான்டா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு ஏர் ஏசியாவிற்கு சொந்தமான ஏர்-பஸ் A320-200 விமானம் காலை 5:30 மணிக்கு புறப்பட்டு சென்றது. விமானத்திவிமானத்தில் 155 பயணிகளும், 7 ஊழியர்களும் பயணத்தினர். ஏர்ஏசியா விமனத்தின் எண் QZ8501 ஆகும். விமானம் சிங்கப்பூர் விமான நிலையத்திற்கு வழக்கமாக காலை 8;30 மணிக்கு சென்றடையும்.  ஆனால் இன்று வழகத்திற்கு மாறாக விமானத்தின் தொடர்பு துண்டித்தது.

மோடி மனைவிக்கு பதில் அளிக்க போலீஸ் மறுப்பு ! பாதுகாப்பு பற்றி கேள்வி தகவல் அறியும் உரிமை சட்டம் ஜசொதாவுக்கு இல்லையே?

Modi's wife Jashodaben denied information under RTI  பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி ஜசோதா பென். இவர் மோடியுடன் திருமணமான சில நாட்களில் பிரிந்து விட்டார். குஜராத்தில் ஆசிரியையாக வேலை பார்த்தார். மோடியுடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்தார்.
இதற்கிடையே மோடி பிரதமராக பதவி ஏற்ற பின்பு அவருக்கு மனைவி இருப்பது பற்றிய தகவல் நாடு முழுவதும் தெரிய வந்தது. மோடி பிரதமரானதால் ஜசோதா பென்னுக்கு பிரதமர் மனைவி என்ற அடிப்படையில் குஜராத் போலீசார் சிறப்பு பாதுகாப்பு அளித்து வருகிறார்கள்.
இதற்கிடையே ஜசோதா பென் தனக்கு எந்த அடிப்படையில் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. தனக்கு எந்தெந்த சலுகைகள் உள்ளன என்பன உள்ளிட்ட தகவல்களை அளிக்குமாறு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் குஜராத் போலீசுக்கு மனு அனுப்பி இருந்தார்.

AirAsia 4.5 மணி நேரம் பறப்பதற்கு மட்டுமே எரிபொருள் ? 8 மணிநேரம் ஆகியும் தகவல் இல்லை?

ஏர்ஏசியா விமானம் மாயமாகி 8 மணிநேரம் ஆகியும் விமானம் குறித்து எந்தஒரு தகவலும் வெளியாகவில்லை. மீட்பு மற்றும் தேடுதல் பணிக்கு உதவி செய்ய இந்தியா தயார் நிலையில் உள்ளது. இந்தோனேஷியாவின் சுரபயா நகரில் இருந்து அதிகாலை சிங்கப்பூருக்கு 162 பேருடன் புறப்பட்டு சென்ற ஏர்ஏசியாவின் ஏர்-பஸ் A320-200 விமானம் நடுவானில் மாயமானது. காலை 8:30 மணிக்கு சிங்கப்பூர் சென்றடைய வேண்டிய ஏர்ஏசியா விமானம், விமான கட்டுப்பாட்டு அறை தகவல் தொடர்பில் இருந்து விலகியது. காலை 7:24 மணியளவில் விலகி சென்றது. துண்டிப்பை அடுத்து மாயமான ஏர்ஏசியா விமானத்தை தேடும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கிடையே மாயமான ஏர் ஏசியா விமானம் ஜாவா கடல் பகுதியில் சென்றபோது மாயமானது.

நிலம் கையகப்படுத்த வசதியாக அவசர சட்டம் ! இன்சுரன்ஸ், சுரங்கத்தொழில், நிலம் ! அந்நியரே Take India ! மோடியின் புதிய கோஷம்?

புதுடில்லி : காப்பீடு, நிலக்கரி ஆகிய துறைகளை தொடர்ந்து, ரியல் எஸ்டேட் துறை சார்ந்த, நிலம் கையகப்படுத்தும் சட்ட திருத்தத்திற்கும் அவசர சட்டம் பிறப்பிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.லோக்சபாவில் நிறைவேறிய காப்பீட்டு மசோதாவை, ராஜ்யசபாவில் தாக்கல் செய்ய முடியாத வகையில், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், காப்பீட்டு துறையில் அன்னிய நேரடி முதலீட்டை, 26 சதவீதத்தில் இருந்து, 49 சதவீதமாக உயர்த்துவது; நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்வது ஆகியவை தொடர்பான சட்ட திருத்த மசோதாக்களை அமல்படுத்த, மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது.இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, அவை நடைமுறைக்கு வந்துள்ளன.இதையடுத்து, நிலம் கையகப்படுத்துதல் சட்ட திருத்த மசோதாவையும், அவசர சட்டம் மூலம் நடைமுறைக்கு கொண்டு வர, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.  மக்களின் சொத்து கார்பொரேட்கையில..நிலம் அபகரிப்பை எளிதாக்கும் வழி..அப்புடியே அந்நியரும் இந்தியாவை பகுதி பகுதியா வாங்க அனுமதிப்பாங்க போல.."டேக் இந்தியா" இதுதான் மோடி அரசின் அடுத்த கோஷம்..

இன்னொரு வருங்கால தமிழக CM நிர்மலா சீதாராமன் : தமிழகம் எனக்கு செய்த சேவை என்ன ? இந்தி படிக்கவிடல்லையே?

எந்த சபையிலும், அன்னிய பாஷையான ஆங்கிலத்தில் பயமின்றி பேச முடிகிற என்னால், இந்திய மொழியான இந்தியில் பேச பயமும், தயக்கமும் ஏற்படுகிறது. இதற்கு யார் காரணம்; என்ன காரணம்?'' என, ஆவேசமாக கேள்வி எழுப்பிய மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ''தமிழகத்திற்கும், தமிழ் மக்களின் வளர்ச்சிக்கும் இந்தி படிப்பது அவசியம்,'' என்றும் வலியுறுத்தினார். கோவையில் தொழில் அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்திருந்த, நிர்மலா சீதாராமன், 'தினமலர்' நாளிதழுக்கு, அளித்த சிறப்பு பேட்டி: ஒவ்வொரு கட்சியும், தனது கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாமல், அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்கிறது. அதன்படி பா.ஜ.,வும், தேசிய கட்சி என்ற முறையில், மொழிப் பிரச்னையை அணுகுகிறது.தமிழுக்கும், பா.ஜ.,வுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கின்றனர். ஒரு தேசியக் கட்சி என்ற முறையில், தமிழக மக்களை, அவர்களது உணர்வை பார்க்கிறோம். தமிழுக்கும், தமிழ் கலாசாரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, விரும்புகிறோம். அதற்கான நடவடிக்கைகளில் ஒன்று தான், வட மாநிலங்களில், திருவள்ளுவர் பிறந்த நாள் கொண்டாட்டம். தாய், தாய் மொழி, தாய் தேசம் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது என வலியுறுத்துகிறோம். இந்த அய்யங்கார  அம்மணி இப்படியே பேசினால் இனி பொன் ராதாகிருஷ்ணன்  கூட வெற்றி பெறமுடியாதுல ?

சம்மதத்துடன் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதை பலாத்காரமாக கருத முடியாது!

பெண்ணின் சம்மதத்துடன் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதை பலாத்காரமாக கருத முடியாது: மும்பை ஐகோர்ட் திருமணம் செய்வதாக கூறி பெண்ணின் சம்மதத்துடன் தாம்பத்திய உறவில் ஈடுபடுவது பாலியல் பலாத்காரமாகாது என்று மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.புனேவைச் சேர்ந்த ஒரு பெண், இளைஞர் ஒருவர் தன்னை திருமணம் செய்வதாக கூறி, பலாத்காரம் செய்து ஏமாற்றிவிட்டதாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், காதலிக்கும்போது பரஸ்பர சம்மதத்துடன் தாம்பத்திய உறவில் ஈடுபடுவது இந்தியாவின் பெரிய நகரங்களில் தற்போது இயல்பாகிவிட்டதாகவும், இந்த விதமான காதல் தோல்வியில் முடிவடைந்த பின்னர், காதலி தன்னை காதலன் பலாத்காரம் செய்துவிட்டதாக கூறுவதை ஏற்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.nakkheeran.in

AirAsia இந்தோனிசியாவில் இருந்து சிங்கப்பூர் சென்ற பயணிகள் விமானம் மாயம்?

An AirAsia flight travelling from the Indonesian city of Surabaya to Singapore has lost contact with air traffic control, the company has said.இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் சென்ற பயணிகள் விமானம் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாயமான ஏர் ஏசியா விமானத்தில் 155 பயணிகள் பயணம் செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.  காலை 8 மணிக்கு சிங்கப்பூர் சென்றடைய வேண்டிய விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனையடுத்து மாயமான விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமானம் வழக்கமான பாதையில் இருந்து விலகிச் சென்றதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். dinakaran.com

பாரதரத்னா :யார் இந்த மண்ணுருண்டை மாளவியா? பார்ப்பான் கடல் தாண்ட கூடாது என்பதால் மண் உருண்டையுடன் கப்பலில் சென்ற கில்லாடி!

மண்ணுருண்டை மாளவியா!இந்து  மத வருணாசிரமவாதி - காந்தியைப் படுகொலை செய்த இந்து மகாசபையைத் தோற்றுவித்த - ஒரு சனாதனவாதிக்குப் பாரத ரத்னா  விருது கொடுக்கப்படலாமா என்ற அடிப்படை வினாவை எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு:
இந்திய அரசின் தலைசிறந்த விருதான பாரத ரத்னா விருது வழமையாக குடிஅரசு நாளான - ஜனவரி 26இல் தான் - முதல் நாள் இரவு அறிவிப்பார்கள்.
ஆனால் இம்முறை - பிரதமர் மோடி அரசால், மாற்றப்பட்டு, வாஜ்பாயின் 90ஆவது பிறந்த நாளில் அவருக்கு வழங்கப்பட அறிவிக்கப்பட்டுள்ளது.
(அவர் நீண்ட காலம் உடல் நலக் குறைவுடன் உள்ளதாக செய்திகள் வரும் நிலையில் அவர் உடல் நலம்தேற - மனிதநேய அடிப்படையில் வாழ்த்துகிறோம் - அவருக்கு வழங்கியது  எந்த அளவுக்குச் சரி என்பதை ஒருபுறம் நாம் ஒதுக்கி வைக்கவே விரும்புகிறோம்).
அவருடன் இணைந்து மற்றொருவருக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்தான் பண்டிட் மதன்மோகன் மாளவியா; இவர் உத்தரப்பிரதேச காசிப் பகுதியைச் சார்ந்த உயர்ஜாதி  பார்ப்பனர் (வாஜ்பேயும் உயர்ஜாதி பார்ப்பனர்தான் - வாஜ்பேயம் என்ற யாகத்தை நடத்த உரிமை பெற்ற உயர் ஜாதியின் உயர் பரிஷத் இந்து சனாதன மதப்படி)

அரவிந்தரே உயிர்த்து வந்தாலும் கழுவ முடியாத பாவம் சூழ்ந்த அரவிந்தர் ஆஸ்ரம்?

- வா.மணிகண்டன் (எழுத்தாளர் )

லைப்புச் செய்தியாக இல்லாவிட்டாலும்கூட, ஒரு செய்தி கடந்த சில நாட்களாக சஞ்சலப்படுத்திக் கொண்டிருக்கிறது. அது,  அரவிந்தர் ஆசிரமத்தின் பிரச்னைகள்.
1926-ம் ஆண்டு அரவிந்தரால் புதுச்சேரியில் அமைக்கப்பட்ட ஆசிரமம், இப்பொழுதுதான் இவ்வளவு பெரிய சர்ச்சையில் சிக்குகிறது. பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்து, ஆசிரமத்தில் தங்கியிருந்த பீகாரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் இளைய பெண்ணான ஹேமலதா கர்ப்பம் அடைந்ததுதான் பிரச்னையின் ஆரம்பப்புள்ளி என்று ஆசிரம நிர்வாகிகள் சொல்கிறார்கள்.
அதே ஆசிரமத்தில் தங்கியிருந்த கிருஷ்ண பெல்லியப்பா என்பவருடன் ஹேமலதாவுக்கு தொடர்பு இருந்ததாகவும், இது ஆசிரம விதிகளுக்கு முரணானது என்பதால் வெளியேறச் சொன்னதாகவும் சொல்கிறார்கள்.
ஆனால், எல்லா செய்திகளுக்கும் இன்னொரு தரப்பு இருப்பதைப்போல, ஹேமலதாவின் குடும்பத்தினருக்கும் ஒரு தரப்பு இருக்கிறது. அந்தக் குடும்பத்தினர் ஆசிரமத்தின் நிர்வாகம் மீது குற்றச்சாட்டைச் சுமத்துகிறார்கள். நிர்வாகிகள் தங்களிடம் தவறாக நடந்து கொள்வதாக புகார் தெரிவித்திருக்கிறார்கள். உள்ளூர் அரசாங்கத்திலிருந்து உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், பெண்கள் கமிஷன் என்ற எந்த இடத்திலும் அவர்களால் இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை. அவர்கள் முறையிட்ட ஒவ்வோர் இடமும், ‘நீங்கள் ஆசிரமத்தை விட்டு வெளியேற வேண்டும்’ என்றே கெடு வைத்து உத்தரவிடுகிறார்கள்.  ஆசிரமம், பணம், அரசியல் சப்போர்ட், பாலியல் வக்கிரம், கொலை ! இந்த மாபியா கும்பலுக்கு அதிகார வர்க்கம் பாத பூஜை செய்திருக்கும் என்பதை யூகிக்க யாரும் ஒரு ஐன்ஸ்டீனாக இருக்க வேண்டியதில்லை ! பேசாம இழுத்து மூடுங்கப்பா உள்ளே போடுங்கப்பா

கராச்சியில் வசிக்கும் தாவுத் இப்ராகிமை இந்தியாவிடம் ஒப்படையுங்கள்’ மத்திய அரசு வற்புறுத்தல்

மும்பை தொடர் குண்டு வெடிப்புக்கு காரணமான தாவூத் இப்ராகிம் கராச்சி நகரில் வசிப்பதற்கான புதிய ஆதாரம் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து, அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பாகிஸ்தானை மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. புதுடெல்லி
1993–ம் ஆண்டு மார்ச் மாதம் 12–ந்தேதி மும்பை நகரில் அடுத்தடுத்து 13 குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன.
தாவூத் இப்ராகிம் இந்த குண்டுவெடிப்புகளில் 350 பேர் பலியானார்கள். 1,200–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு மும்பை நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிம் மூளையாக செயல்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை பிடித்து தங்களிடம் ஒப்படைக்கும்படியும் இந்திய அரசு பலமுறை பாகிஸ்தானை கேட்டுக் கொண்டது. அதற்கான ஆதாரங்களையும் வழங்கியது.

கவி.கா.மு.ஷெரீப் நூற்றாண்டு விழா! பாட்டும் நானே பாவமும் நானே !

கவிஞர் கா.மு.ஷெரீப். ‘சிவ லீலா’ என்னும் திரைப்படத்துக்கு எழுதிய பாடல்களைத்தான் திருவிளையாடல், திருவருட்செல்வர் ஆகிய படங்களுக்குப் பயன்படுத்தினார்கள் என்றும்,திருவிளையாடல் படத்தில் வரும் பாட்டும் நானே பாவமும் நானே என்றபாடல் இவரது பாடல்தான் .
கா.மு.ஷெரீப்பின் நூற்றாண்டையொட்டி, (26-12-2014) வெள்ளி மாலை, சென்னை ராணி சீதை மன்றத்தில் நூற்றாண்டு விழா நடைபெற்றது.கவிக்கோ அப்துல் ரகுமான், கவிப்பேரரசு வைரமுத்து, தமிழச்சி தங்கபாண்டியன், காவ்யா சண்முக சுந்தரம், வீரபாண்டியன், எம்.ஏ.முஸ்தபா, ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் உரையாற்றினர்.விழாவில், கா.மு.ஷெரீப் எழுதிய நூல்கள், நூற்றாண்டு மலர், கா.மு.ஷெரீப் திரை இசை முத்துக்கள் ஆடியோ குறுந்தகடு ஆகியன வெளியிடப்பட்டன.

சனி, 27 டிசம்பர், 2014

ஆலடி அருணா கொலையாளி ! சென்னையில் பட்டா கத்தியை காட்டி பட்டப்பகலில் வழிப்பறி செய்தவன்...

சென்னை துரைப்பாக்கத்தில் பட்டப் பகலில் பட்டாக் கத்தியைக் காட்டி ஆசிரியையிடம் வழிப்பறி செய்த கொள்ளையன் முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலையாளி என்று தெரியவந்துள்ளது. துரைப்பாக்கம் எம்.சி.என். நகர் 2 ஆவது சந்து பகுதியை சேர்ந்தவர் வேலம். தனியார் பள்ளி ஆசிரியையான இவர் கடந்த 21ஆம் தேதி பணி முடிந்து, தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பி சென்றார். அப்போது மோட்டார் பைக்கில் வந்த 2 பேர் ஆசிரியையின் வண்டி மீது மோதினர். இதில் நிலைதடுமாறி, வேலம் கீழே விழுந்தார். பைக் பின்னால் அமர்ந்து வந்த இளைஞர், பட்டாக் கத்தியை காட்டி மிரட்டி, தாலி செயின் உள்ளிட்ட 14 சவரன் நகைகளை வேலத் திடம் இருந்து பறித்துக் கொண்டு பைக்கில் தப்பினார்.  இந்த சம்பவத்தை அந்தப் பகுதியின் மாடி வீட்டில் இருந்த ஒரு பெண், செல்போன் மூலமாக வீடியோ எடுத்து தனது தோழிகளுக்கு அவர் வாட்ஸ் அப் மூலமாக அனுப்பினார். ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்களிலும் இந்த கொள்ளை வீடியோ பரவத் தொடங்கியது.

ஸ்டெம் செல்களில் இருந்து உயிரணு கரு முட்டைகள் தயாரித்தல் Scientists Produce Egg, Sperm From Stem Cells

Researchers say they have used human embryonic stem cells to create cells that develop into eggs and sperm.
லண்டன்,டிச.26 (டி.என்.எஸ்) மலட்டுத்தன்மை காரணமாக சிலர் குழந்தையின்றி தவிக்கின்றனர். அவர்களின் குறைகளை போக்க விஞ்ஞானிகள் ஸ்டெம் செல்களில் இருந்து உயிரணு மற்றும் கரு முட்டை தயாரித்து வியத்தகு சாதனை படைத்துள்ளனர்.தொடக்கத்தில் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் இஸ்ரேலில் உள்ள வெய்ஷ்மான் நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் எலி, முயல் உள்ளிட்ட கூர்மையான பற்கள் கொண்ட விலங்குகளின் ஸ்டெம் செல்களில் இந்த ஆய்வு மேற்கொண்டனர்.அவற்றின் உடலில் வளர்ச்சியின் தொடக்க நிலையில் உள்ள ஸ்டெம் செல்களில் இருந்து செக்ஸ் செல்களை விஞ்ஞானிகள் சேகரித்தனர். அதை மிகவும் கவனமாக ஒரு வாரம் ஆய்வு கூடத்தில் வைத்து பாதுகாத்தனர்.

நயன்தாரா : ஆண்டின்னு கூப்பிட்டா யாருக்குதான் கோபம் வராது?

நடிகை நயன்தாராவுக்கும் நடிகர் பிரேம்ஜி அமரனுக்கும் படப்பிடிப்பில் ‘திடீர்’ மோதல் ஏற்பட்டது. இருவரும் ‘மாஸ்’ என்ற படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இதில் கதாநாயகனாக சூர்யா நடிக்கிறார். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பிரேம்ஜி அமரன் படப்பிடிப்பில் ஜோக் அடித்து பேசுவது வழக்கம். சக நடிகர் நடிகைகளை தமாஷாக கேலியும் செய்வார். அது போல் நயன்தாராவையும் கேலி செய்தார். வயதான பெண்களை அழைப்பது போல் ‘ஆண்டி’ என்று நயன்தாராவை அழைத்தார். முதலில் இதை சாதாரணமாக நயன்தாரா எடுத்துக் கொண்டார். ஆனால் அடிக்கடி ஆண்டி, ஆண்டி என்றே கூப்பிட்டாராம். இது நயன்தாராவை எரிச்சல் படுத்தியது. தன்னை வேண்டும் என்று கேலி செய்வதாக நினைத்தார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து பிரேம்ஜி அமரனை கோபமாக திட்ட துவங்கினாராம். இனி ‘ஆண்டி’ என்று கூப்பிட்டால் நடப்பதே வேறு என்றும் எச்சரித்தாராம். நயன்தாராவின் கோபத்தை பார்த்து படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டது. பிரேம்ஜி அமரனும் அமைதியாகி விட்டார். மாலைமுரசு.com

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 100 நாள் தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட பணியை நிறுத்தாமல் தொடர்ந்து செயல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றிய குழு அலுவலகம் முன்பு நடைபெற்றது. ஒன்றிய தலைவர் குணசேகரன், ஒன்றிய செயலாளர் குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.nakkheeran.in

பாகிஸ்தானில் சுமார் 7000 தீவிரவாதிகள் கைது! படையினர் அதிரடி!

கடந்த வாரம் பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள பள்ளிக்கூடத்தில் நுழைந்த தலீபான் தீவிரவாதிகள் 132 குழந்தைகளை சுட்டுக்கொன்றனர். இந்த படுகொலை சம்பவத்துக்கு காரணமான யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை இந்த நிலையில் நாடு முழுவதிலும் 10–க்கும் மேற்பட்ட சிறு நகரங்களில் பாகிஸ்தான் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பெஷாவர் சம்பவத்தில் தொடர்பு கொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 7 ஆயிரம் பேரை அவர்கள் கைது செய்தனர். இவர்களில் 4 ஆயிரம் பேர் கைபர் பக்துகாவா பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். 109 பேர் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள்.மேலும் பாகிஸ்தான் முழுவதும் பதிவு செய்யப்படாமல் நடத்தப்பட்டு வந்த 10 மதபோதனை பள்ளிகளும் ‘சீல்’ வைத்து மூடப்பட்டன. கைது செய்யப்பட்ட அனைவரும் விசாரணைக்காக ரகசிய இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.dailythanthi.com

தமிழகத்தில் பறிபோகும் வேலைவாய்ப்புகள்! Nokia Foxconn... மூடுவிழா!

சென்னை ஸ்ரீபெரும்புதுார் - பெங்களூர் சாலையில் இருமருங்கிலும் காணப்பட்ட பெருமளவு தொழிற்சாலைகள், ஒன்றன்பின் ஒன்றாக மாயமாகி வருகின்றன.இதன் எதிரொலியாக, தமிழகத்தில் வேலை இழந்தோரின் எண்ணிக்கை, கணிசமான அளவில் அதிகரித்து வருகிறது.அதன்படி, இப்பகுதிகளில் செயல்பட்டு வந்த, மோட்டோரோலா, பீ.ஒய்.டி., ஜபில் மற்றும் நோக்கியா நிறுவனங்கள் ஏற்கனவே மூடுவிழா கண்டுள்ள நிலையில், தற்போது, பாக்ஸ்கான் நிறுவனமும் தன் செயல்பாட்டை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது.இதன் காரணமாக, கடந்த ஒரு சில மாதங்களில் மட்டும், 35 ஆயிரம் பணியாளர்களுக்கு மேல் தங்களது வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்; நோக்கியா, மோடோரோலா போன்ற நிறுவனங்கள் Smartphone பயன்பாட்டுக்கு வந்தவுடனே முற்றாக தங்க சந்தையை இழந்து விட்டன. மூடாமல் என்ன செய்வார்கள். சாம்சுங் நிறுவனத்தின் போட்டிக்கு ஆப்பிள் நிறுவனமே ஈடு கொடுக்க முடியாமல் திணறுகிறது.

வெள்ளி, 26 டிசம்பர், 2014

மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்று... லிங்கா படத்தைப் பார்த்தபடியே உயிரை விட்ட ரஜினி பைத்தியம்!

இந்த மாதிரி ரசிகர்கள் ஒரு வகையில் சமுக வியாதிகளே ! இவர்களை போன்றவர்கள் இருந்து என்ன பயன் ? சினிமாக்காரன் சம்பாதிக்க விளம்பரமாகி போன  வீண் மனிதர்கள் ,  கோவை அருகே சிகிச்சைப் பெற்று வந்த மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்று லிங்கா படம் பார்த்த ரஜினி ரசிகர், தியேட்டரிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை, பேரூரை அடுத்த செட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் ( 56). சிறுநீரக பாதிப்பு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரனுக்கு, டிரிப் மூலம் மருந்து செலுத்தப்பட்டு வந்தது.  இந்நிலையில், கடந்த 12ம் தேதி  லிங்கா படம் ரிலீசானது.  ரஜினி ரசிகரான ராஜேந்திரன் எப்படியும் லிங்கா படத்தைப் பார்த்து விட வேண்டும் என துடித்துள்ளார். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் அவரை வெளியில் அனுமதிக்க மறுத்து விட்டது. இதனால், மருத்துவர்களுக்குத் தெரியாமல் லிங்கா படத்தை ரகசியமாகச் சென்று பார்ப்பது என முடிவெடுத்தார் ராஜேந்திரன். அதன்படி, நேற்றிரவு கையில் குத்தப்பட்டிருந்த டிரிப் குழாய்களுடன் மருத்துவமனையில் இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறினார் ராஜேந்திரன். அங்கிருந்து எஸ்.பி.ஐ. ரோட்டில் உள்ள லிங்கா படம் ஓடும் தியேட்டருக்கு சென்று, 10 மணி காட்சிக்கான டிக்கட்டை எடுத்துள்ளார். பின்னர் உள்ளே சென்று லிங்கா படத்தைப் பார்த்து ரசித்துள்ளார். படம் முடிவடைந்த நிலையில் அனைவரும் வெளியேறி விட ராஜேந்திரன் மட்டும் சீட்டிலேயே அமர்ந்திருந்தது தியேட்டர் ஊழியர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. பின்னர் அருகில் சென்று சோதித்துப் பார்த்த போது ராஜேந்திரன் உயிரிழந்தது தெரிய வந்தது.

Sun டிவியின் முக்கியஸ்தர் பிரவீன் பாலியல் குற்றச்சாட்டில் கைது!

சன் நெட்வொர்க் நிறுவனத்தின் சி.ஓ.ஓ.-வாக பணியாற்றி வரும் பிரவீண் சதங்கதோடி இன்று சென்னையில் மத்திய குற்றப் பிரிவு காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.< சூர்யா தொலைக்காட்சி நிர்வாகத்தையும் கவனித்து வரும் பிரவீணுக்கு வயது 52 என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருந்த பெண் ஊழியரை 5 மாதங்களுக்கு முன்பு பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சம்பந்தப்பட்ட ஊழியர் அளித்த புகாரின் அடிப்படையில் பிரவீண் இன்று அவரது அண்ணா நகர் இல்லத்தில் கைது செய்யப்பட்டார். பெண் நிகழ்ச்சித் தயாரிப்பாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, கொச்சிக்கு அவரை பணியிட மாற்றம் செய்துள்ளார். இதனையடுத்து அந்தப் பெண் ஊழியர் தனது பணியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்கிறார் என்று அந்தப் பெண், சென்னை நகர காவல்துறையிடம் சில மாதங்களுக்கு முன்பு புகார் அளித்தார். மேலும், அவருக்குச் சேர வேண்டிய சம்பளம், பி.எஃப். என சுமார் ரூ.35 லட்சத்தை கொடுக்காமல் பிரவீண் நிறுத்தி வைத்ததாகவும் புகார் எழுப்பியுள்ளார் அந்த பெண் ஊழியர்.tamil.hindu.com

காஷ்மீரில் PDP கட்சிக்கு உமர் அப்துல்லா நிபந்தனை அற்ற ஆதரவு! பாஜகவின் ஆட்சிக்கனவு???

காஷ்மீர்: காஷ்மீரில் அரசு அமைக்க பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டிருந்த நிலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தனது பரம எதிரி கட்சியான மக்கள் ஜனநாயக கட்சிக்கு ஆதரவு அளிக்க உமர் அப்துல்லா கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாஜக உடன் ரகசிய பேச்சு நடத்தி வந்த நிலையில் உமர் அப்துல்லாவுக்கு திடீர் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக மக்கள் ஜனநாயக கட்சிக்கு உமர் அப்துல்லா கடிதம் எழுதியுள்ளார். இதனால் காஷ்மீர் அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.  மேலும் மதசார்பற்ற அரசை ஆதரிப்போம் என 3 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் அறிவித்துள்ளனர்.dinakaran.com

கலைஞர் அதிரடி: அவசர இன்சுரன்ஸ் சட்டத்திற்கு குடியரசு தலைவர் அனுமதி அளிக்க கூடாது!

DMK chief M Karunanidhi The former Tamil Nadu chief minister appealed President Pranab Mukherjee not to grant approval to the ordinance. Karunanidhi recalled that BJP as an opposition party had strongly opposed the insurance reforms and argued that there won't be any assurance that the investing firms will (dnaindia.com -சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள இன்சூரன்ஸ் அவசர சட்டத்துக்கு, திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்திருப்பதுடன், அதற்கு குடியரசு  தலைவர் பிரணாப் முகர்ஜி அனுமதி வழங்க கூடாது என தெரிவித்துள்ளார்.இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:மத்திய பாஜக ஆட்சியில்  அன்னிய முதலீட்டுக்கு அதிக வரவேற்பு அளிக்கப்படுகிறதே என்ற ஒரு கேள்விக்கு நான் பதிலளிக்கும்போது, அந்நிய முதலீட்டுக்கு வரவேற்பு, அரசு நிறுவனங்களின்  பங்குகள் தனியாருக்கு விற்பனை, பாதுகாப்புத் துறைக்குத் தேவையானவற்றை உற்பத்தி செய்வதற்குக் கூட தனியார் மயம் போன்ற நடவடிக்கைகள்  பிற்போக்குத்தனமானவை. நமது பொருளாதாரத்தைப் பெரிதும் பாதித்திடக் கூடியது என்று கருத்து தெரிவித்திருந்தேன்.இந்தக் கருத்துக்கு மாறாக, இன்சூரன்ஸ்  துறையில் அன்னிய மூலதனத்தை 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர்த்துவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக்  கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கலைஞர் இந்த அவசர  சட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்

கொல்லப்பட்ட ஜெயஸ்ரீ 21வயது – நீதி கேட்டு போராட்டம்

jeyashree-sliderவியாசர் பாடி – (யானைக்கவுனி) வால்டாக்ஸ் டு, உட்வார்பு பகுதியில் வசிக்கும் திருமதி சாந்தா என்பவரின் வளர்ப்பு மகள் ஜெயஸ்ரீ கடந்த 24.11.2014 முதல் காணாமல் போனார்.
ஜெயஸ்ரீ 21 வயதான கலகலப்பான பெண். எல்லோரிடமும் சகஜமாக பேசக்கூடிய பெண். யானை கவுனி அருகே ஒரு சிறு பட்டறையில் வேலை செய்திருக்கிறாள்.  ஆணுக்கு நிகராய் அத்தனை வேலைகளையும் செய்யக்கூடியவள்.

அப்பார்ட்மெண்ட் பிராமணர்கள்! இவங்க கிட்ட நாடோ, அதிகாரமோ இருந்தா எப்படி இருக்கும்?


எங்க மாவட்டங்கள்ல் அரிவாளத் தூக்குறவங்க ஒரு கணம்தான் மிருகமாக இருக்காங்க. இவங்களோ அரிவாளையும் தூக்குறதில்ல, ஆனா ஆயுசு பூரா மத்தவங்களை மிருகத்தனமா  துன்புறுத்துறாங்க.
அன்பு வினவு நண்பர்களுக்கு, வணக்கம்என்னை நினைவிருக்கிறதா? ஐந்தாண்டுகளுக்கு முன்பு நானும் ஒரு கட்டுரை அனுப்பினேன். அதில் மகளிர் தினம் பற்றி என் அனுபவங்கள் எழுதியிருந்தேன். தனிப்பட்ட விவரங்களை வெளியிடாமல் அதை மாற்றி எழுத கேட்டிருந்தீர்கள். அப்போது அதெல்லாம் எனக்குத் தெரியவில்லை. பிறகு நிறைய கற்றுக் கொண்டேன்.
இந்த ஆண்டுகளில் பெண் என்ற வரம்பைத் தாண்டி சுயமா வாழவும், போராடவும் நிறைய கற்றுக் கொண்டேன். கிடைக்கும் நேரத்தில் இணையத்தில் இருப்பேன், உங்க கட்டுரைங்களும் படிப்பேன்.
சமீபத்தில் பூர்வாசிரம பிராமணர் கடிதம் படித்தேன். அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் கலந்து ரசித்தேன். இந்த மாதிரி சமூகத்தில் ஒரு நண்பர் மாறி வந்து கலப்பு திருமணமெல்லாம் செய்ஞ்சாருன்னா நம்பவே முடியலை, வாழ்த்துக்கள்! அத்தோடு உங்கள மாதிரி தீவிர கொள்கைக்காரர்களோடு அவர் இணைந்திருப்பது இன்னும் மகிழ்ச்சி. சரி அதிர்ச்சி எதற்கு என்று கேக்குறீங்களா?
அதுக்குத்தான் இந்த கடிதம்.
கணவருக்கு சிறுசேரி ஐ.டி நிறுவனமொன்றில் வேலை. எனக்கு தி.நகர் தனியார் பள்ளியில் ஆசிரியர் வேலை. அப்போது எங்கள் குழந்தைக்கு வயது நான்கு. அடுத்த வருடம் அவனை ஒரு பள்ளியில் சேர்க்கணும். இதெல்லாம் யோசித்து ஒரு ஏரியாவில் வாடகை வீடு பார்த்து குடி போனோம். இதெல்லாம் மூணு வருடத்துக்கு முன்பு உள்ள நிலை.

சுபவீ : அய்யா நெடுமாறனின் வண்டவாளங்களை வெளிப்படுத்தவேண்டிய கடமை!

எப்போது பார்த்தாலும், கலைஞரின் கடந்த காலம் பற்றி விமர்சனம் செய்து கொண்டே இருக்கும் நீங்கள், என்றைக்காவது உங்களின் கடந்த காலத்தைத் தூசி தட்டி எடுத்துப் பார்த்ததுண்டா? இன்று  தமிழ்த் தேசியத்திற்காகவே வாழ்வதுபோல் காட்டிக் கொள்ளும் நீங்கள், கடந்த காலத்தில் தமிழ்த்தேசியத்திற்கும், தமிழ்மொழிக்கும் எதிராக நின்ற தருணங்களை என்றாவது எண்ணிப் பார்த்ததுண்டா? நீங்கள் மறந்து போயிருக்கலாம்! ஆனாலும், மறக்க முடியாத உங்களின் சில கடந்த கால நினைவுகளை இங்கே நினைவுபடுத்த வேண்டியுள்ளது.
1965ஆம் ஆண்டு, இங்கே இந்தி எதிர்ப்புப் போராட்டம் கொழுந்து விட்டு எரிந்ததே, அப்போது நீங்கள் எங்கே இருந்தீர்கள்? தீயிலே வெந்து போன சின்னச்சாமி, குண்டுக்கு மார்பு காட்டிய இராசேந்திரன், நஞ்சருந்திச் செத்த நற்றமிழர்கள் என்று அன்றைய தியாகிகளின் பட்டியல் விரிகிறதே. அந்த நாள்களில் நீங்கள் அவர்களின் பக்கம் இருந்தீர்களா, அவர்களின் சாவுக்குக் காரணமாக இருந்த அரசின் பக்கம் நின்றீர்களா? உங்கள் மனசாட்சியை ஒரு முறை கேட்டுப் பாருங்கள்.
1970 நவம்பர் 30 அன்று, தமிழ் வழிக் கல்விச் சட்ட முன்வடிவைத் தலைவர் கலைஞர் முன்மொழிந்தார். அதனை எதிர்த்து, டிசம்பர் 10ஆம் நாள் மதுரையில் மாணவர்களைக் கூட்டி, தமிழ்வழிக் கல்விக்கு எதிராகப் போராடத் தூண்டிய ‘தமிழ்த்தேசியத் தலைவர்’ யார் என்பதை அறிய வரலாற்றின் பக்கங்களை ஒரு முறை புரட்டிப் பாருங்கள்! பெருந்தலைவர் காமராசர் எதிர்த்த நெருக்கடி நிலைக்கு ஆதரவாக, அவர் மறைவுக்குப் பின் காங்கிரஸ் கட்சியை இந்திரா காந்தியின் தலைமையின் கீழ் இணைத்தவர் யார் என்று உங்கள் இதயத்தைக் கேட்டுப்பாருங்கள். கொடுமையான நெருக்கடி நிலைக்காலத்தை எதிர்த்துப் போராடிய போராளி யார், அதற்கு உறுதுணையாக இருந்த ‘காந்தியவாதி’ யார் என்பதை ஒருமுறை கண்மூடிச் சிந்தித்துப் பாருங்கள்!

சவுதியில் வாகனம் ஓட்டிய பெண்கள் தீவிரவாத நீதிமன்றத்தில்


சவுதி அரேபியாவில் அந்நாட்டின் சட்டத்தை மீறி வாகனம் ஓட்டியதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு பெண்கள் மீதான வழக்கு தீவிரவாத வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஆனால் இந்த முடிவுக்கு எதிராக அந்தப் பெண்களுக்கான வழக்கறிஞர்கள் மேல் முறையீடு செய்துள்ளனர்.
அந்த இரண்டு பெண்களில் ஒருவரான லுஜையின் ஹத்லௌல், அண்டைநாடான ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வாகனத்தை ஓட்டிச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டார்.
மைஸ்ஸா அலமௌதி என்னும் மற்ற பெண்ணோ, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் சவுதி ஊடகவியலாளர். அவர் ஹத்லௌல் கைது செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க எல்லைப்பகுதிக்கு வந்தபோது கைது செய்யப்பட்டார்.

கலைஞர்: பெரியாருக்கும் அண்ணாவுக்கும் பாரதரத்னா விருது வழங்கவேண்டும்! அவிங்க திராவிடரத்னா !

பாரத ரத்னா விருது பெற்ற, முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு திமுக தலைவர் கருணாநிதி, வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், பாரத ரத்னா விருதை அண்ணாவுக்கும், பெரியாருக்கும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், திமுக விடமும், குறிப்பாக என்னிடமும் நெருங்கிய அன்பு கொண்டவருமான, இந்தியாவின் முன்னாள் பிரதமர் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கும், சுதந்திர போராட்ட வீரர் மதன்மோகன் மாளவியாவுக்கும் “பாரத ரத்னா” விருது வழங்க மத்திய அரசு முன் வந்திருப்பதற்காக நன்றி கூறுவதோடு, விருது பெற்ற தலைவர்களுக்கு தி.மு.க. சார்பில் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.

வியாழன், 25 டிசம்பர், 2014

வளர்ச்சி... வளர்ச்சி என்று பேசிக்கொண்டேகாவிப்பாதையில் பயணிக்கும் மோடி!

வ.மணிகண்டன் (எழுத்தாளர்) :
மதமாற்ற கோஷம் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்து விட்டது. இந்தியாவில். மதச்சார்பற்ற நாடு என்று உருவாக்கப்பட்டிருந்த பிம்பம் அடித்து நொறுக்கப்படுகிறது. இது இந்துக்களின் தேசம் என்று பெருமையாக அறிவிக்கிறார்கள். பி.ஜே.பி.யின் எம்.பி.க்கள் பலரும் வெறியெடுத்துப் பேசுகிறார்கள். ஒரு பக்கம், அவர்களைக் கட்டுப்படுத்த லட்சுமண ரேகை வரைவதாகக் காட்டிக் கொள்கிறார் மோடி. மறுபக்கம், நடப்பதையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் புன்னகையோடு! எதிர்கேள்வி கேட்பவர்களிடம், இதுவரை மதச்சார்பற்ற நாடு என்ற பெயரில், பிற மதத்தினர்தான் சலுகைகளை அனுபவித்தார்களே தவிர, இந்துக்கள் எந்தப் பலனையும் அனுபவிக்கவில்லை என்று சண்டைக்கு வருகிறார்கள்.

சாமியார் ஆசாராம் பாபுவின் மீது பாலியல் குற்றம்சாட்டிய பெண் மாயம்! கொல்லப்பட்டாரா ?


சாமியார் அசரம் பாபு மீது பாலியல் வன்கொடுமை புகார் செய்த 33 வயது மதிக்கத்தக்க பெண்மணி கடந்த ஒரு வாரமாகக் காணவில்லை. தன்னுடைய கணவர் மற்றும் மகனுடன் மாயமாகியுள்ள அந்தப் பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அகமதாபாத்தில் அசரம் பாபுவின் ஆஸ்ரமத்தில் இருந்தபோது 1997 முதல் 2006ம் ஆண்டு வரை தன்னை தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி வந்ததாக அசரம் பாபு மீது பெண்மணி ஒருவர் கடந்த ஆண்டு புகார் செய்திருந்தார். அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் அசரம் பாபுவை போலீஸார் கைது செய்தனர். தற்போது அவர் ராஜஸ்தானில் உள்ள சிறை ஒன்றில் இருக்கிறார் இந்நிலையில், புகார் செய்த அந்தப் பெண்மணி கடந்த ஒரு வாரமாகக் காணவில்லை என்பது தெரியவந்துள்ளது. அவரின் பாதுகாப்புக்கு நான்கு போலீஸ் கான்ஸ்டபிள்கள் பணியமர்த்தப்பட்டனர்.

2ஜி Spectrum: பார்ப்பனக் கும்பலின் இரட்டை நாக்கு! முரளி மனோகர் ஜோஷி போன்ற பார்பனர்கள் .......


கருப்புப் பண விவகாரத்தில் மோடி அரசு அடித்த பல்டியை முட்டுக் கொடுக்க முன்வந்த துக்ளக் சோ, “இவ்விவகாரத்தில் முந்தைய காங்கிரசு அரசு கூறியதையெல்லாம் நம்பாமல், அக்கட்சிக்கு நாம் அநீதி இழைத்துவிட்டதாக”த் தனது ஏட்டில் தலையங்கமே எழுதி முதலைக் கண்ணீர் வடித்திருக்கிறார். இதேபோல நரேந்திர மோடியின் ஊதுகுழல்களுள் ஒன்றான இந்தியா டுடே இதழ், 2ஜி, நிலக்கரி ஊழல்களையும், கருப்புப் பண விவகாரத்தையும் ஆர்வக்கோளாறின் காரணமாக ஊடகங்கள் ஊதிப்பெருக்கிவிட்டதாகக் குறிப்பிட்டு கட்டுரையொன்றை வெளியிட்டிருக்கிறது. பார்ப்பன-பாசிச கும்பல் தனது சுயநலனுக்காக எப்படி வேண்டுமானாலும் புரட்டிப் பேசும் தன்மையும் வரலாறும் கொண்டது என்பதற்கு இவை மற்றுமொரு ஆதாரமாக அமைந்துவிட்டன.

2014.இல் தமிழில் அதிக படங்கள் மொத்தம் 212 ! சிறிய படங்கள் பெரிய சாதனை! கோலிசோடா ஹிட்!

212 direct tamil films released this year . small budget films like goli soda got staggering collection. 25 films are hits. இந்த வாரம் கிறிஸ்துமஸுக்கு வெளியான 4 படங்களையும் சேர்த்து மொத்தம் 212 படங்கள் இந்த ஆண்டு வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இது ஒரு சாதனை என்றுதான் சொல்லவேண்டும். இவை அனைத்துமே நேரடித் தமிழ் திரைப்படங்கள். டப்பிங் படங்களும் கணிசமாக வந்தன. அந்தக் கணக்கு தனி. இந்த 220 படங்களில் எத்தனைப் படங்கள் மெகா ஹிட்.. எத்தனைப் படங்கள் குறைந்த பட்ச லாபத்தோடு தப்பித்தன என்று பார்த்தால், பெருமைப்பட்டுக்கொள்ள பெரிதாக இல்லை என்பதுதான் உண்மை. அதே நேரம், கடந்த ஆண்டுகளோடு ஒப்பிட்டால் இந்த ஆண்டு சற்று அதிக எண்ணிக்கையிலான படங்கள் வெற்றி பெற்றுள்ளது ஆறுதலான விஷயம். இந்த ஆண்டில் முதல் பெரிய வெற்றியைப் பெற்ற படம் என்றால் அது கோலி சோடாதான். அஜீத் நடித்த வீரம், விஜய் நடித்த ஜில்லா ஆகிய படங்களுடன் வெளியானது நடுத்தர பட்ஜெட் படமான கோலி சோடா. ஆனால் வீரமும் ஜில்லாவும் பெறாத வெற்றியை இந்தப் படம் பெற்று, 2014-ம் ஆண்டின் முதல் வெற்றிப் படம் என்ற பெருமையைப் பெற்றது.

காஷ்மீரில் கூட்டணி மந்திரிசபை: பா.ஜனதா ஆட்சி அமைக்க உமர் அப்துல்லா ஆதரவு?

காஷ்மீர் மாநில சட்ட சபைக்கு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை வெற்றி கிடைக்க வில்லை. மொத்த உள்ள 87 தொகுதிகளில் மக்கள் ஜன நாயக கட்சி–28, பா.ஜ.க.–25, தேசிய மாநாட்டு கட்சி–15, காங்கிரஸ்–12 இடங்களில் வெற்றி பெற்றன.
காஷ்மீரில் ஆட்சி அமைக்க 44 இடங்கள் தேவையாகும். தேர்தலை சந்தித்த நான்கு முதன்மை கட்சிகளும் எதிரும், புதிருமான கொள்கைகளைக் கொண்டவை. இதனால் புதிய ஆட்சி அமைவதில் தெளிவற்ற நிலை காணப்படுகிறது.

ஐந்து லட்சம் லஞ்சம் வாங்கிய கர்நாடக நீதிபதி கைது! லஞ்ச ஒழிப்பு துறை கையும் களவுமாக...

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்ட சிவில் நீதிமன்ற நீதிபதி சரவணப்பா சஜ்ஜன், வழக்கொன்றில் ஒரு வருக்கு சாதகமாக நடந்துகொள் வதற்காக ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கியதால் கைது செய்யப்பட் டுள்ளார்.
இது தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் பி.ஏ.பாட்டில் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பீதர் மாவட்டத்தில் உள்ள பசவகல்யாண் சிவில் நீதிமன்றத் தில் சரவணப்பா சஜ்ஜன் மூத்த நீதிபதியாக பொறுப்பு வகிக்கிறார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட வரிடம் ரூ.5 லட்சம் பெற்றுள்ளார்.
லஞ்சம்பெறும்போது கர்நாடக உயர் நீதிமன்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்துள்ளன‌ர். தனது குற்றத்தை நீதிபதி சரவணப்பா சஜ்ஜன் ஒப்புக்கொண்டுள்ளார். அவர் காவல்துறையிடம் ஒப்படைக் கப்பட்டார். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

K.Balachandar தமிழ் சினிமாவின் ஹீரோ வேர்ஷிப் கலாசாரத்தின் கன்னத்தில் அறைந்தார்!

எம்ஜியார் சிவாஜி போன்ற சினிமா கடவுள்கள் தமிழ்நாட்டு ரசிகனை படு முட்டாள்களாக்கி கொண்டிருந்து ஒரு இருண்ட யுகத்தின் கருப்பு வெள்ளை விடிவெள்ளியாக பாலச்சந்தர் உருவானார். அபூர்வ ராகங்கள் வெளியான அன்றைய தேதியில் சிவாஜி எம்ஜியாரை விட நடிகை ஸ்ரீவித்தியா தமிழ் ரசிகரின் உள்ளத்தை கொள்ளை கொண்டிருந்தார் . இது பாலச்சந்தரின் சாதனை.ஒரு ஆணாதிக்க சமுகத்தில் இது உண்மையில் பெரும் மாறுதல்தான் .மாற்று சினிமாவை பலரும் ஆங்காங்கு பரீட்சார்த்தமாக உருவாக்கி கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் அதை வியாபார ரீதியாகவும் வெற்றியாக்கி காட்டியவர் பாலச்சந்தர்தான். சிவாஜியும் எம்ஜியாரும் தமிழ் ரசிகனின் ஆரோக்கியமான ரசனையை சுனாமி போன்று அழித்து கல்லா கட்டிய காலத்தில் அதை உடைத்தவர் . இதே புரட்சியை இவருக்கு முன்பாக புரட்சி டைரெக்டர் ஸ்ரீதரும் செய்தவர்தான். ஆனால் அவர் பிற்காலத்தில் அதே நாயக வழிபாட்டு கோஷ்டிகளிடம் சிக்கவேண்டிய நிதி நெருக்கடிக்கு ஆளாகிவிட்டது தமிழ் சினிமாவின் துரதிஷ்டம் .ஒரு அற்புத படைப்பாளி எம்ஜியாரின் நாலாந்தர மாசாலாவினால் ஒக்சிஜன் பெறவேண்டி ஏற்பட்டது.
பாலச்சந்தரும் கிட்டதட்ட அதே நிலைக்கு வந்து விட்டார் .ஆனாலும் சின்னத்திரை என்ற கட்டுமரம் கரை சேர்க்க ஏதோ நாயகவழிபாட்டு குற்ற சாட்டில் இருந்து கொஞ்சம் விடுபட்டுவிட்டார். ஆனாலும் இவரே உருவாக்கிய கதாபாத்திரங்கள் மூலம் புதிதாக ரஜனி கமல் என்ற நாயக வழிபாடுகள் ஆரம்பித்து விட்டன.திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. இங்கே நான் திருடன் என்று குறிப்பிட்டது ஹீரோ வேர்ஷிப்பை தண்ணீர் ஊத்தி ஊத்தி வளர்த்து காசு பார்க்கும் ரஜினி கமல் விஜய் அஜித் சூர்யா தனுஷ் சிம்பு வம்பு ............

ராம் விலாஸ் வேதாந்தி BJP MP: அயோத்தியில் 4 ஆயிரம் இஸ்லாமியர்கள் இந்து மதத்துடன் இணைப்பு ?

AYODHYA: The VHP will hold a 'ghar wapsi' programme for 4,000 Muslims in Ayodhya next month, saffron outfit functionary Ram Vilas Vedanti ...அயோத்தியில் அடுத்த மாதம் ஜனவரி 4 ஆயிரம் இஸ்லாமியர்கள் மதம் மாற்றும் நிகழ்ச்சி நடைபெறும் என முன்னாள் பாஜக
நாடாளுமன்ற உறுப்பினர் ராம் விலாஸ் வேதாந்தி தெரிவித்து உள்ளார். இஸ்லாமியர்கள் அவர்களாவே விருப்பமுடன் இந்த மதமாற்றத்திற்கு வருகின்றனர் என வேதாந்தி கூறியுள்ளார். ஆனால், அவர்கள்  குடும்பம் குறித்த அடையாளததை  வெளியிட வேதாந்தி மறுத்து விட்டார். பிறகு அவர்கள் இந்து மதத்தை தழுவ அனுமதிக்கபட மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் விளைவாக இந்த பகுதியில் மதக்கலவரத்தை உருவாக்க முயற்சி செய்பவர்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கபடும் என பைசாபாத் மாநகர இணை காவல் ஆணையர் சஞ்சய் காக்கர் தெரிவித்து உள்ளார்.

பொள்ளாச்சி சிறுமியர் பலாத்காரம் இரட்டை ஆயுள் தண்டனை!

கோவை : பொள்ளாச்சியில், விடுதி சிறுமியர் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட வீராசாமிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, கோவை மகளிர் கோர்ட் தீர்ப்பளித்தது.பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் அருகில், டி.இ.எல்.சி., சர்ச் வளாகத்தில் கிறிஸ்தவ அமைப்பினர் நடத்தி வந்த விடுதியில், ஏழை மாணவியர் தங்கி படித்து வந்தனர். 2014, ஜூன், 11 நள்ளிரவில், குடிபோதையில் விடுதிக்குள் புகுந்த ஆசாமி, 11 மற்றும் 12 வயது மதிக்கத்தக்க இரு மாணவிகளை, மறைவான இடத்திற்கு இழுத்துச்சென்று, பாலியல் பலாத்காரம் செய்தான்.விசாரித்த போலீசார், சிறுமியரை பலாத்காரம் செய்த, வால்பாறையை சேர்ந்த வீராசாமி, 23, என்பவனை கைது செய்தனர். பிடிபட்ட வீராசாமி மீது,திருட்டு, வழிப்பறி தொடர்பாக வழக்குகள் நிலுவையில் இருந்ததால், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டான்.

காந்தியை ஏன் சுட்டுக் கொன்றேன்: கோட்சே எழுதிய புத்தகம் மறுபதிப்பாகிறது

புதுடில்லி: மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் விநாயக் கோட்சேவின் சகோதரர் கோபால் கோட்சேயால் எழுதப்பட்ட, 'காந்தியை ஏன் சுட்டு கொன்றேன்?' என்ற புத்தகத்தை மறுபதிப்பு செய்ய உள்ளதாக, டில்லியைச் சேர்ந்த பார்சைட் பதிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்புத்தகம், நாதுராம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் உருவானதாகும்.காந்தியை பற்றிய பல்வேறு புத்தகங்கள் வெளிவந்துள்ள போதிலும், அவற்றிற்கு எதிர்மறையான கருத்துக்களை இப்புத்தகம் கொண்டுள்ளதால், அதை மறுபதிப்பு செய்ய முடிவு செய்துள்ளதாக அந்த பதிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும் என்பார்கள். இதில் எது தர்மம் எது சூது என்பதை எப்பொழுது தெரிந்து கொள்ள முடியும் என்று தான் தெரியவில்லை.

ஆசிட் வீச்சுக்கு தூக்குதண்டனை ! சட்ட திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு,

புதுடில்லி: 'ஆசிட்' வீச்சு போன்ற குற்றங்களை, கொடூரமான குற்றமாக கருதும் வகையில், சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, ஆசிட் வீசுவோருக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை வழங்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.சமீபகாலமாக ஆசிட் வீச்சு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அதிலும், பெண்கள் மீது, ஆசிட் வீசும் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி, குற்றவாளிகள் வழக்குகளில் இருந்து எளிதில் தப்பி விடுவதாக புகார் எழுந்து உள்ளது. 
நல்ல முடிவு...பெண்களின் முகத்தில் ஆசிட் ஊற்றுவது ஆதாரத்துடன் நிரூபிக்க பட்டால் தூக்கு நிச்சயம்...இந்த தண்டனை வரவேற்க தக்கது...பெண் வன் கொடுமை என்பது எக்காலத்திலும் சகித்து கொள்ள முடியாதது...அவன் ரோட்டுல எவளையாவது பாத்துட்டு இவள நான் உருகி உருகி காதலிக்கிறேன் என்ன கண்டுக்கவே மாட்டேங்கிறா, எனக்கு கிடைக்காத இவ இனி யாருக்குமே கிடைக்க கூடாதுன்னு தப்புன்னு ஆசிட்ட ஊத்திட்டு போயிடறாங்க...இதுல அந்த பொண்ணு மேல ஏதாவது தப்பு இருக்கா..இல்ல...ஒரு பெண்ணை காதலிக்கிறது எப்படி உன் தனிப்பட்ட உரிமையோ அப்படி தான் அந்த பெண்ணும் யாரை காதலிக்கனும்கிரது அவளோட தனிப்பட்ட உரிமை. இதில் வன்கொடுமை என்பது ஏற்று கொள்ள முடியாதது...இத மாதிரி ஆசிட் வீசுகிறவனை எல்லாம் தூக்குல போடணும்..

புதன், 24 டிசம்பர், 2014

காஷ்மீரில் மெஹபூபா ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு! குலாம் நபி ஆசாத் அறிவிப்பு


ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் அடுத்து ஆட்சியை அமைக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜ, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பிடிபிக்கு ஆதரவு அளிக்க தயாராக இருப்பதால் மெகபூபா முப்தி தலைமையில் ஆட்சி அமையுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஜார்கண்டில் பாஜ தலைவர் ரகுபர்தாஸ் முதல்வர் ரேசில் முந்துகிறார்.ஜம்மு- காஷ்மீரில் மொத்தமுள்ள 87 சட்ட மன்ற தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த தேர்தலில் பிடிபி கட்சிக்கு 28, பாஜவுக்கு 25, ஆளும் தேசிய மாநாட்டு கட்சிக்கு 15, காங்கிரசுக்கு 12 மற்றவர்கள் 7 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர். காஷ்மீரில் பிடிபி ஆட்சி அமைக்க விரும்பினால் ஆதரவு அளிக்க தயாராக இருக்கிறோம் என காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். காஷ்மீரில் பாஜ ஆட்சி அமைக்கும் என ராஜ்நாத்சிங்கும், அமித்ஷாவும் நம்பிக்கை தெரிவித்திருந்தனர். இதன் மூலம் பிடிபி கட்சிக்கு பாஜ ஆதரவு அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Punjab சாமியாரின் 400 சீடர்களுக்கு ஆண்மை நீக்கம் ! சிபிஐ விசாரணை?

சாமியாருக்கு எதிரான மனுவில் சிபிஐ விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு பஞ்சாப் மாநிலத்தில் ஆசிரமம் ஒன்றில் 400 சீடர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து அந்த ஆசிரம சாமியார் மீது சிபிஐ விசாரணை நடத்த பஞ்சாப் அரியானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.அரியானா மாநிலம் திரிசாவில் தேரா சச்சா சவுதா என்ற ஆன்மீக அமைப்பு மற்றும் ஆசிரமத்தை நடத்தி வருபவர் குருமேத் ராம் ரகீம். இவர் மீது இவரது முன்னாள் சீடர் சவுகான், பஞ்சாப் அரியானா உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், சாமியார் குருமேத் ராம் ரகீம், தனது 400 சீடர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்துள்ளதாகவும், இந்த ஆண்மை நீக்கம் ஆசிரமத்திற்கு உள்ளேயே நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.ஆண்மை நீக்கம் செய்தால்தான் கடவுளை சந்திக்க முடியும் என்று உறுதி அளித்து இதனை சாமியார் செய்ததாகவும், தனது மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சவுகான் கூறியுள்ளார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி கண்ணன், ஆண்மை நீக்கம் செய்ய சம்மந்தப்பட்டவர்கள் சம்மதம் கொடுத்திருந்தாலும், இது மனிதாபிமானமற்ற செயல் என்றார். இந்த மனு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார் இந்த நீதிபதிக்கு சட்டம் ? அனுமதி கொடுத்தாலும் amputation செய்ய சட்டத்தில் இடமில்லை  nakkheeran.in

பாகிஸ்தானில் கிறிஸ்தவ தம்பதியர் எரித்துக் கொலை: 2 மத குருக்கள் உள்ளிட்ட 59 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்


பாகிஸ்தானின் லாகூர் நகரின் அருகே கடந்த அக்டோபர் மாதம் கிறிஸ்தவ தம்பதியர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாகிஸ்தானின் லாகூர் நகரில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கசூர் மாவட்டம், சக் என்ற கிராமத்தில் இருக்கும் செங்கல் சூளையில் சஹ்ஜாத் மசி(35) மற்றும் அவரது மனைவி ஷமா(31) ஆகியோர் கூலித் தொழிலாளிகளாக பணியாற்றி வந்தனர். அந்த கிறிஸ்தவ தம்பதியர் இஸ்லாமியர்களின் வேதமான குர்ஆனின் பக்கங்களை தீயிட்டு கொளுத்தி, அந்த புனித நூலை அவமதித்து விட்டதாக சக் கிராமத்தில் உள்ள இரண்டு மசூதிகளின் மூலம் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடந்த மாதம் 4-ம் தேதி தகவல் பரவியது. இதைக் கேட்டு கொதித்தெழுந்த ஏராளமானவர்கள் உள்ளூர் மதத் தலைவரின் தலைமையில் முஹம்மத் யூசுப் குஜ்ஜாரின் செங்கல் சூளைக்கு விரைந்தனர். சஹ்ஜாத் மசியின் வீட்டுக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த அந்த கும்பல், அந்த தம்பதியரை குடிசையை விட்டு வெளியே இழுத்து, அடித்தும் உதைத்தும் சித்ரவதை செய்தது.இதிலும் ஆவேசம் தணியாத சிலர் சஹ்ஜாத் மசி மற்றும் அவரது மனைவி ஷமாவை தூக்கி கொழுந்து விட்டு எரிந்த செங்கல் சூளை தீக்குள் வீசினர். இதில் உடல் கருகி அந்த தம்பதியர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வினவு: எம்.ஜி.ஆர்: கவர்ச்சி மோகம் – பொறுக்கி அரசியலில் தமிழகத்தைத் தள்ளிய பாசிசக் கோமாளி!

ஐயா, தருமவானே, நீங்களாகப் பார்த்து ஏதாவது தான தர்மம் கொடுங்கள்” என்று கையேந்தி நிற்பவர்களுக்கு பரோபகாரியாகவும், “இது எங்கள் உரிமை” என்று போராடுபவர்களுக்குப் பரம எதிரியான பாசிஸ்டாகவும் விளங்கியவரே எம்.ஜி.ஆர்.!
இன்று ஜெயலலிதா நடத்திவரும் அடிமைக் கட்சிக்கும், அதன் இலஞ்ச ஊழல் முறைகேடுகளுக்கும், அடக்குமுறைக் காட்டாட்சிக்கும், பாசிச வக்கிரங்களுக்கும் வழிகாட்டி எம்.ஜி.ஆர். என்பதே உண்மை.
  தமிழ்ச் சமுதாயத்தைச் சீரழிக்கும்  சதிகாரி’ என்ற தலைப்பில் ஜெயலலிதாவைப் பற்றிய அட்டைப்படக் கட்டுரையை சென்ற இதழில் வெளியிட்டிருந்தோம்.  தமிழ்ச் சமுதாயத்தை  சுயமரியாதையற்ற கையேந்திகளாக, அரசியலற்ற மூடர்களாக,  சாராய போதையில் மூழ்கிக் கிடக்கும் அடிமைப் பிண்டங்களாக மாற்றி வருகிறார், ஜெயலலிதா என்று அக்கட்டுரையில் குற்றம் சாட்டியிருந்தோம்.

காதலியின் நிர்வாண படத்தை அப்லோடு செய்த பெங்களூரு ஐடி ஊழியர்!

பெங்களூரு: ஜாதியை காரணம் காண்பித்து காதலை புறக்கணித்த கல்லூரி மாணவியை பழிவாங்க அவரின் நிர்வாண படங்களை இணையதளத்தில் பரப்பிய சாப்ட்வேர் இன்ஜினியர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். பெங்களூரு பன்னேருகட்டா ரோடு பகுதியை சேர்ந்தவர் 20 வயது பெண் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஜெயநகரிலுள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தை செலவிடுவது கவிதாவின் வாடிக்கையாகும். பேஸ்புக்கில் இவர் பிசியாக இருந்தபோது, பழக்கமானவர் எல்.ஹர்ஷா. 24 வயது வாலிபரான இவர், தன்னை ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் என்று அறிமுகம் செய்து கொண்டு கவிதாவுடன் பழக ஆரம்பித்துள்ளார்.  படிப்படியாக கவிதாவின் வீட்டுக்கு வருமளவுக்கு பழக்கம் அதிகரித்தது. கவிதா உயர்ஜாதி என்று கருதப்படும் ஜாதியை சேர்ந்தவராம். எனவே, கவிதாவிடமும், அவரது பெற்றோரிடமும் தன்னையும் அதே ஜாதியை சேர்ந்தவன் என்று ஹர்ஷா அறிமுகம் செய்து ஏமாற்றியுள்ளார்.

பெருமாள் கோயில் உண்டசோறு! இது படத்தின் பெயர்!

பாய்ஸ் படத்தில் ஊர் முழுவதும் எந்த கோயிலில் என்ன பிரசாதம் தருவார்கள் என்று பட்டியலிட்டு வைத்திருக்கும் செந்தில் அதை வாங்கி சாப்பிட்டே பொழுதை கழிப்பார். இந்த காமெடிக் காட்சியின் பாதிப்பாக புதுமுகங்கள் நடிக்கும் படத்துக்கு ‘பெருமாள் கோயில் உண்டசோறு‘ என்று பெயரிடப்பட்டுள்ளது.இதுபற்றி இப்பட இயக்குனர் வி.டி.ராஜா கூறும்போது,‘மூன்று சகோதரிகளுடன் பிறந்த ஒருவன் எந்த வேலைக்கும் போகாமல் பெருமாள் கோயிலில் தரும் உண்டச் சோறு வாங்கி சாப்பிட்டே காலத்தை கடத்துகிறான். அவனது சகோதரிகளுக்கு தடபுடலாக திருமணம் நடக்கிறது.

முந்திரி, இரும்பு, அரிசி, அலுமினியம்... திருடியே கோடீஸ்வரர் ஆன தேமுதிக பிரமுகர்!

சென்னை: முந்திரிப் பருப்பைத் திருடியே பெரும் கோடீஸ்வரராக மாறியுள்ளார் ஒரு அரசியல் பிரமுகர் பெரும் பமக்காரராகியுள்ளார். அது மட்டுமா இவர் திருடாத பொருளே இல்லை. எதையும் விடாமல் தொடர்ந்து திருடி பெரும் கோடீஸ்வரராக மாறியுள்ள அந்த பிரமுகர் காவல்துறையினரையே அதிசயிக்க வைத்துள்ளார். கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் எழிலரசன் (31). இவர் கடந்த நவம்பர் மாதம் உயர்ரக முந்திரி அடங்கிய 750 பெட்டிகளை கத்தார் நாட்டிற்கு கப்பல் மூலம் ஏற்றுமதி செய்வதற்காக கண்டெய்னர் லாரியில் அனுப்பினார். ஆனால் லாரி டிரைவர் புழல் ஜெபஜெனில் (28) என்பவர் துறைமுகத்திற்கு கொண்டு செல்லாமல் செங்குன்றத்தை அடுத்த தீத்தங்கரைப்பட்டு இரும்பு வியாபாரி முருகன் குடோனுக்கு கொண்டு சென்றார். அங்கு சீலை உடைத்து கண்டெய்னரில் இருந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான 2,440 கிலோ கொண்ட 122 முந்திரி பெட்டிகளை திருடி மீண்டும் சீல் வைத்து கப்பலில் அனுப்பி வைத்துவிட்டார்.

தமிழகத்தில் மதசார்பற்ற சமூகநீதி கூட்டணி? திராவிடர் கழகம முயற்சி!

சென்னை, டிச.23- சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், சமூக நல்லிணக்கத்திற்கு அச் சுறுத்தலாக உள்ள ஆர்.எஸ்.எஸ்.-பாஜக இந்துத்துவ மதவெறி ஃபாசிசப் போக்குகளைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமா வளவன்  தலைமையில் இன்று (23.12.2014) நடைபெற்றது.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் ஆர்.நல்லகண்ணு, தமிழ் மய்யம் நிறுவனர் ஜெகத் கஸ்பார், தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் உஸ்மான் அலி, பேராசிரியர்கள் அருணன், அ.மார்க்ஸ், திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாறன், எஸ்டிபிஅய் தெகலான் பாகவி, விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்னியரசு உள்பட ஏராள மானவர்கள் பல்வேறு அமைப்புகளிலிருந்தும் ஆர்ப்பாட் டத்தில் பங்கேற்றனர்.

ஜெர்மனி: இஸ்லாத்துக்கு எதிரான பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

ஜெர்மனிய நகரான ட்ரெஸ்டனில், இஸ்லாமுக்கு எதிராக நடந்த பேரணியில் சுமார் 17,500 பேர் கலந்துக்கொண்டதாக உள்ளூர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். ட்ரஸ்டெனில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டவர்கள் பேரணியில் கலந்துக்கொண்ட போராட்டக்காரர்கள் கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடுவதிலும், குடிவரவு மற்றும் புகலிடம் கோருவோர் பற்றிய உரைகளை கேட்பதிலும் ஈடுப்பட்டனர்.
‘ஐரோப்பா இஸ்லாமிய மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தேசப்பற்று மிக்க ஐரோப்பியர்கள்’ அல்லது பெகிடா என்றழைக்கப்படும் இந்த அமைப்பினை சேர்ந்தவர்கள், கடந்த அக்டோபர் மாதம் முதல் வாரந்தோரும் இஸ்லாம் மதத்திற்கு எதிரான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீர் தேர்தலில் 32 முஸ்லிம்களை நிறுத்திய பாஜக! ஒருவர் மட்டுமே வெற்றி!!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 32 முஸ்லிம் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தியிருந்தது. இதில் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். 87 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. மக்கள் ஜனநாயகக் கட்சி 28 இடங்களையும் பாஜக 25 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.  இத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 40% முஸ்லிம்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளித்தது. அதாவது 32 முஸ்லிம் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தியது. இதில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் 25 பேர் பாஜக வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இவர்களில் அபுல் கனி கோஹ்லி என்பவர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.

பயங்கரவாதிகளுக்கு பயந்து யாஸிடி பெண்கள் கூட்டாக தற்கொலை


பெய்ரூட்: ஈராக்கில், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் வசம் சிக்கிய, யாஸிடி சிறுபான்மையின பெண்களை, அந்த பயங்கரவாதிகள், செக்ஸ் அடிமைகளாக பயன்படுத்திய கொடுமையும், அதற்கு அஞ்சி, ஏராளமான சிறுமியரும், பெண்களும் தற்கொலை செய்து கொண்ட தகவலும் தெரிய வந்துள்ளது.மேற்காசிய நாடுகளான சிரியா மற்றும் ஈராக்கின் பல பகுதிகளை கைப்பற்றியுள்ள, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், கிறிஸ்தவர்கள், ஷியா பிரிவு முஸ்லிம்கள், யாஸிடி இனத்தவர் போன்ற சிறுபான்மையினத்தவருக்கு சொல்லொணா துயரங்களை கொடுத்து வருகின்றனர்.குறிப்பாக, ஈராக்கின் வடக்கு பகுதியில் வாழும் யாஸிடி இனத்து ஆண்களை கொன்று குவித்த பயங்கரவாதிகள், அந்த இனத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமியரை பிடித்துச் சென்று, சண்டையில் ஈடுபடும் பயங்கரவாதிகளின் செக்ஸ் தேவைகளை பூர்த்தி செய்யும் செக்ஸ் அடிமைகளாக மாற்றினர்.இத்தகைய கொடுமைகளை செய்வது, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் சன்னி பிரிவினர் தான். அதுவும், வயது முதிர்ந்த பயங்கரவாதிகள் கூட, இளம் பெண்களையும், சிறுமியரையும் பலாத்காரம் செய்த கொடுமையும் நடந்துள்ளது.  இதுதான் இந்த மதவெறியர்கள் உலகிற்கு கூறும் ஒழுக்க நெறி. இன்று நேற்றல்ல பலநூறு ஆண்டுகளாக இந்த மத வெறியர்கள் பெண்களைப போகப் பொருளாகவே பார்த்துவருவதன் வெளிப்பாடுதான் யாசிடிப் பெண்களின் தற்கொலை.