சனி, 24 ஏப்ரல், 2021

தமிழ்நாட்டின் மருத்துவ வளர்ச்சியின் வரலாறு . கல்லூரிகளின் பட்டியல்

A Sivakumar : இனி யாராவது அதிகமாக தமிழ்நாட்டுல மருத்துவக்கல்லூரிகள் கட்டியது யார் என்றால் இதை பயன்படுத்தக் கொள்ள விழைகிறேன். திமுகவும் தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளும் >ஆங்கிலேயர் காலத்தில் உருவான மருத்துவக் கல்லூரிகள் : 3
♦ மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்
♦ ஸ்டேன்லி மெடிக்கல் காலேஜ்
♦ கோயம்புத்தூர் மெடிக்கல் காலேஜ்
காங்கிரஸ் ஆட்சியில் திட்டம் தீட்டி, MCI அனுமதி பெற்று, பட்ஜெட் ஒதுக்கி, அடிக்கல் நாட்டி, கட்டப்பட்டு திறக்கப்பட்ட மருத்துவக்கல்லூரிகள் : 5
♦ மதுரை மெடிக்கல் காலேஜ்
♦ தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ்
♦ கீழ்ப்பாக்கம் மெடிக்கல் காலேஜ்
♦ திருநெல்வேலி மெடிக்கல் காலேஜ்
♦ செங்கல்பட்டு மெடிக்கல் காலேஜ்
திமுக ஆட்சியில் திட்டம் தீட்டி, MCI அனுமதி பெற்று பட்ஜெட் ஒதுக்கி, அடிக்கல் நாட்டி, கட்டப்பட்டு திமுக ஆட்சியில் திறக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் : 5
♦ திருச்சி மெடிக்கல் காலேஜ்
♦ தூத்துக்குடி மெடிக்கல் காலேஜ்
♦ திருவாரூர் மெடிக்கல் காலேஜ்
♦ தர்மபுரி மெடிக்கல் காலேஜ்
♦ விழுப்புரம் மெடிக்கல் காலேஜ்

தமிழ்நாட்டு வளர்ச்சியை வடநாடுகள் நெருங்க இன்னும் பல ஆண்டுகள் தேவை .. குஜராத் உத்தரபிரதேசம்... ...

May be an image of text that says 'சங்கி கி சங்க'
A Sivakumar : *சமூகவளைதளங்களும் சங்கிகளும்* 1947ல் காங்கிரஸ் இந்த தவறை செய்தது
1958ல் பெரியார் இந்த தவறை செய்தார்
1960ல் திராவிடர் கழகம் இந்த தவறை செய்தது
1967ல் அண்ணா இந்த தவறை செய்தார்
1970ல் திமுக இந்த தவறை செய்தது
1997ல் கலைஞர் இந்த தவறை செய்தார்
2007ல் மு.க.ஸ்டாலின் இந்த தவறை செய்தார்
என்றெல்லாம் எதையாவது தூக்கிக்கொண்டு வந்து நம்மிடம் நாயடி பேயடி வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தவர்கள் தான் சங்கிகள்.   2014ல் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்த பின்பு ஆரம்பித்த இந்த யுத்தம் 2019ல் தமிழ்நாட்டில் முழுமையாக தோல்வி அடைந்த பின் ஏறத்தாழ நின்றே விட்டது.
நம்மை நோக்கி வரிசையாக கேள்வி கேட்டவர்கள் கூடவே குஜராத்தில் நாங்கள் இதை செய்திருக்கிறோம்,  மத்தியபிரதேசத்தில் நாங்கள் அதை செய்திருக்கிறோம் என்று கலர் கலராக கயிறு திரித்துக்கொண்டிருந்தார்கள்.
எல்லாமே பொய்...
நீங்க வெறும் சோற்றாலடித்தப் பிண்டங்கள் தான்...
வளர்ச்சியில் எங்களை நெருங்க இன்னும் 100 வருசமானாலும் முடியாது,

திருணமூல் காங்கிரசை அழிக்க தேர்தல் ஆணையம் சதி: வாட்ஸப் ஆதாரம் காட்டும் மம்தா?

திருணமூல் காங்கிரசை அழிக்க தேர்தல் ஆணையம் சதி: வாட்ஸப் ஆதாரம் காட்டும் மம்தா?

minnampalam : சிறப்பு தேர்தல் கண்காணிப்பாளர்கள் மூலம் திருணமூல் காங்கிரஸ் என்ற கட்சியையே அழிக்க தேர்தல் ஆணையம் சதி செய்கிறது என்று அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்காளத்துக்கு என நூற்றுக்கணக்கான தேர்தல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையிலும், அண்மையில் தேர்தல் ஆணையம் மூன்று சிறப்பு தேர்தல் கண்காணிப்பாளர்களை மேற்கு வங்காளத்துக்கு என்று நியமித்தது.

பிகார் முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி அஜய் நாயக், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் விவேக் துபே, ம்ன்ரல் காந்தி தாஸ் ஆகியோர்தான் அந்த மூன்று சிறப்பு தேர்தல் கண்காணிப்பாளர்கள். மாநிலம் முழுதும் எங்கே எந்த நேரத்திலும் போலீஸ், துணை ராணுவப் படைகளை அனுப்பவும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் இந்த மூன்று கண்காணிப்பாளர்களுக்கு முழு அதிகாரம் கொடுத்திருக்கிறது தேர்தல் ஆணையம்.

NEP மொழிபெயர்ப்பில் தமிழ் மொழி புறக்கணிப்பு” - மீண்டும் வேலையைக் காட்டிய மோடி அரசு!

May be an image of outdoors and text that says 'NEWS AMK JUSTIN புறக்கணிக்கப்பட்ட தமிழ்! புதிய கல்விக் கொள்கையை கன்னடம், மலையாளம், மராத்தி உள்ளிட்ட 17 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டது மத்திய அரசு; தமிழ் மொழி இடம்பெறவில்லை! 24 APRIL 2021 191 071 08R'

kalaignarseithigal.com - Vignesh Selvaraj : மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு தமிழ்நாட்டின் மீதும், தமிழர்களின் மீதும் விரோதப் போக்கை கையாண்டு வருகிறது. அதற்கு இன்னொரு சாட்சியாக, தேசிய கல்விக் கொள்கை மொழிபெயர்ப்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை மாநில மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தமிழ் மொழி திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிய தேசிய கல்வி கொள்கையை உருவாக்குவதற்காக கஸ்தூரி ரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, 484 பக்கங்கள் கொண்ட வரைவை 2019 ஆம் ஆண்டு சமர்ப்பித்தது. வரைவை வெளியிட்ட மத்திய அரசு அதுதொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று கூறியிருந்தது.

புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்ற மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட அம்சங்களுக்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்வி கொள்கை வரைவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

எனது ஆடையைக் கிழித்து நிர்வாணமாக்கி வீடியோ எடுத்தார்!” - நடிகை ஜெனிபர் பரபரப்பு புகார்!

Actress Janifer complaint and press meet
nakkheeran.in - நக்கீரன் செய்திப்பிரிவு :

சென்னை மணலி சின்ன சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிபர் (வயது 24). இவர் 23ஆம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அந்தப் புகார் மனுவில் கூறியிருப்பதாவது:"நான், எனது பெற்றோர் மற்றும் சகோதரி, சகோதரனுடன் வசித்து வருகிறேன். கடந்த 5 ஆண்டுகளாக சின்னத்திரையில் நடித்து வருகிறேன். எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த சரவணன் என்பவரை காதலித்து 25.08.2019 அன்று திருமணம் செய்து கொண்டேன். பிறகு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டோம். விவாகரத்து வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், தொலைக்காட்சி தொடர் துணை இயக்குநர் நவீன்குமார் என்னை காதலிப்பதாகக் கூறினார். அதற்கு, நான் எனது முதல் திருமணம் பற்றியும், விவாகரத்துப் பற்றியும் கூறினேன்.

கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது அரசு .. தமிழகத்தை மிரட்டும் கொரோனா..

May be an image of 1 person and text that says 'CORONA UPDATE SUN NEWS உலக சுகாதார அமைப்பு கருத்து! "கொரோனா வைரஸ் பேரழிவை உண்டாக்கும் என்பதற்கு இந்தியாவே சான்று; இந்தியாவின் நிலை கவலை அளிக்கிறது!" 24APRIL2021 SUNNETAIL SUNNEWS sunnewslive.in'
maalaimalar : தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏப் 26- ந்தேதி முதல் இந்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருக்கின்றன. சென்னை:தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, தனியார், அரசு பேருந்துகளில் இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி.100%;"> *ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பேர் மட்டுமே பயணிக்கலாம்.
*ஐடி நிறுவனங்களில் குறைந்தபட்சம் 50% பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவது கட்டாயம்.
*கோல்ஃப், டென்னிஸ் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு சங்கங்கள் செயல்பட அனுமதி இல்லை.
*சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளுக்கு மட்டும் அனுமதி.
 *திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்க கூடாது.
*இறுதி ஊர்வலம், சடங்குகளில் 25 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதி இல்லை.
*அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
*உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு மட்டும் நடத்த அனுமதி.
*உணவகங்கள், டீக்கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி.

குஜராத்தில் பா.ஜ.கவின் 25 வருட ஆட்சியில் ஒரு அரசு மருத்துவமனை கூட கட்டவில்லை” இதுதான் குஜராத் மாடல்’

 கலைஞர் செய்திகளை  :இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு, ஆக்சிஜன் பற்றாக்குறை ஆகியவற்றை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் சுகாதாரத்துறையின் படுதோல்வியால், உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டு வருகின்றன.
பிற மாநிலங்களை விட பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் கொரோனா பாதிப்பும், இறப்பும் அதிகரிப்பதற்கு மோசமான மருத்துவக் கட்டமைப்பே காரணம் என விமர்சனம் எழுந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை மீட்டு வருவதாக பேசி வரும் பிரதமரின் சொந்த ஊரில் தான் கொரோனாவை கடுப்படுத்த முடியாமல் அம்மாநில அரசு திணறி வருகிறது.
மோடி முதன்முதலாக மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, தேர்தல் பிரச்சாரங்களில், அனைத்து மாநிலங்களையும் குஜராத் போல மாற்றுவேன்.
இந்தியாவிற்கே குஜராத் ஒருமுன்மாதிரி மாநிலம் எனக் கூறி. ‘குஜராத் மாடல்’ என்ற வெற்று விளம்பரத்தை நாடுமுமுவதும் பரப்பி ஆட்சியைப் பிடித்தார்.
பிரதமர் மோடி பிறந்த குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க சுமார் 25 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்தது.

உலகளவில் தினசரி பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் . 3,45,147 பாதிப்புடன் தொடர்ந்து புதிய உச்சம்!

  Rayar A - /tamil.oneindia.com/ :  வாஷிங்டன்: இந்தியாவில் கொரோனா தொடர்ந்து உலகளவில் முதலிடம் பிடித்து தொடர்ந்து விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 3,45,147 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 2,621பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 65,971 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் மேலும் 2,866 பேர் உயிரிழந்துள்ளனர்
கொரோனா அதிகரிப்பு உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தியா, அமெரிக்க உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் பராசபட்சம் இல்லாமல் கொரோனா தாக்கி வருகிறது.
உலகம் முழுவதும் 146,218,354 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உலகம் முழுவதும் 3,098,835 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 124,320,293 பேர் குணமடைந்துள்ளனர்.
பிரேசிலில் அதிக உயிரிழப்பு அமெரிக்காவில் கொரோனா கொஞ்சம் ஓய்வு எடுத்து வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலையை அரசே கையகப்படுத்தி ஆக்சிஜன் தயாரிக்கலாமே: உச்ச நீதிமன்றம் கேள்வி

May be an image of text that says 'ஆக்சிஜனை உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட்டை அனுமதிக்கலாம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு தரப்பு தகவல் BREAKING NEWS பாடம் கற்கவில்லை மத்திய அரசு சோனியா காந்தி மத்திய அரசின் கொள்கையால் மாநில அரசுகளும் பெரும் SÚN NEWS'

Vivekanadan T :  சென்னை அரசு பொது மருத்துவமனையில் கூட ஆக்சிஜன் சிறிய அளவில்  தயாரிக்கும் கட்டமைப்பு இருக்கிறது....
திராவிட இயக்க தலைவர்கள்  எங்களுக்காக செய்த சாதனை அது ....
ஆனால் மருத்துவ உள்கட்டமைப்பு என்பதையே அறியாத மத்திய பாசிச  ஆட்சியாளர்களால் ,
அரசு மருத்துவ நிறுவனங்களை செயல்படுத்தி தடுப்பூசிகளை தயாரிப்பதை மறுத்து,
தனியார் முதலாளிகளிடம் எல்லா ஒப்பந்தத்தை கொடுத்திவிட்டு,  
பின்பு மத்திய அரசுக்குக் கொடுக்கும் 50% தடுப்பூசிக்கு பழைய விலையான ரூ.150 வசூலிக்கப்படும் என்றும்,
மீதமுள்ள 50% தடுப்பூசிகளுக்கு மாநில அரசுகளுக்கு டோஸ் ஒன்றிற்கு ரூ.400 என்ற விலையிலும், தனியார் மருத்துவமனைகளுக்கு டோஸ் ஒன்றிற்கு ரூ.600 என்ற விலையிலும் விற்கப்படும் என்று சொல்லுவதை எப்படி எடுத்துக்கொள்வது ..?

உத்தர பிரதேசம்: வென்ட்டிலேட்டர் வசதி கிடைக்காமல் 6 பத்திரிகையாளர்கள் பலி

உத்தர பிரதேச அவலம்: வென்ட்டிலேட்டர் வசதி கிடைக்காமல் 6 பத்திரிகையாளர்கள் பலி

tamil.news18.com :உத்தரப் பிரதேச மாநிலத்தில் சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது, கடந்த 10 தினங்களில் வென்ட்டிலேட்டர் கிடைக்காமல் கொரோனா தொற்றுக்கு 6 பத்திரிகையாளர்கள் பலியாகியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் 2 ஆயிரத்து 263 பேர் உயிரிழந்துள்ளனர்.l
ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 920 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் நேற்று 568 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லியில் 306 பேரும், சத்தீஸ்கரில் 207 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 195 பேரும், குஜராத்தில் 135 பேரும், கர்நாடகாவில் 123 பேரும், ஜார்க்கண்டில் 106 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் உ.பி.யில் ஆறு பத்திரிகையாளர்களுக்கும் தொற்று ஏற்பட்டவுடன், மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

900 வருட வரலாறுள்ள பிரம்மாண்ட சொத்தினை இங்கிலாந்தில் வாங்கிய முகேஷ் அம்பானி..

May be an image of 1 person, standing, fire, outdoors and text that says 'Tp Jayaraman 11m ஹலோ மிஸ்டர் மோடி, நான்தான் அம்பானி பேசுறேன் நாட்டில் உள்ள எல்லா சுடுகாட்டையும் தனியார் மயமாக்கி என்கிட்டே கொடுத்துடுங்க. கூடவே ஒரு பிணம் எரிப்பதற்கான ரேட்டை அம்பானியோட கம்பெனிதான் முடிவு பண்ணும்னு அறிவிச்சிடுங்க"'

tamil.goodreturns.i - Pugazharasi S  :   இந்தியாவின் மிகப்பெரிய பில்லியனர் முகேஷ் அம்பானி 79 மில்லியன் டாலர் மதிப்பில். இங்கிலாந்தில் உள்ள ஸ்டோக் பார்க் லிமிடெட் நிறுவனத்தினை வாங்கியுள்ளது.
இது வெறும் வணிகம் மட்டும் அல்ல, வரலாறு. 900 வருட வரலாற்று பாரம்பரியம் மிக்க ஒரு இடமாகும். இது ஒரு வரலாற்று சின்னமாகவும் கருதப்படுகிறது.
இது சிறந்த சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதோடு மட்டும் அல்ல, சிறந்த விளையாட்டு துறை வசதிகளையும் கொண்டுள்ளதாம். இதன் இன்றைய இந்திய மதிப்பு சுமார் 590 கோடி ரூபாய்க்கு மேல். இத்தனை கோடிகள் கொடுத்து வாங்கும் அளவுக்கு இந்த ஹோட்டலில் என்ன சிறப்பம்சம், வாருங்கள் பார்க்கலாம்.
என்னென்ன வசதிகள்?
இங்கிலாந்தில் உள்ள இந்த ஸ்டோக் பார்க் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த, ஹோட்டலில் இரண்டு ஜேம்ஸ் பாண்ட் படம் எடுக்கப்பட்டுள்ளதாம். 900 வருட வரலாற்றினை கொண்டு இருந்தாலும், இது 1908 வரையில் ஒரு தனியார் வீடாகவே இருந்து வந்துள்ளது. இந்த ஹோட்டலில் 49 சொகுசு படுக்கையறைகள் மற்றும் suite அறைகள் உள்ளன.

இது தவிர 27 துளையுள்ள கோல்ப் மைதானத்தினையும் கொண்டுள்ளது. 14 டென்னிஸ் கோர்ட், 14 ஏக்கரில் தனியார் கார்டன்கள் உள்ளதாம். இது சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்க்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவுக்கு உதவ தயார் - சீனா அறிவிப்பு

  malaimalar  :இந்தியாவில் தற்போது கொரோனா 2-வது அலை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி இருப்பது தங்களுக்குத் தெரியும் என சீனா தெரிவித்துள்ளது. ிஜீங்: இந்தியாவில் தற்போது கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டி விட்டது.கொரோனாவால் தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகிறார்கள்.அமெரிக்காவுக்கு அடுத்த படியாக கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் இதுவரை 1.6 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீன நாட்டின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை.. நிர்வாண படம் எடுத்து மிரட்டுவதாக துணை இயக்குனர் மீது டி.வி. நடிகை புகார்

நிர்வாண படம் எடுத்து மிரட்டுவதாக துணை இயக்குனர் மீது டி.வி. நடிகை புகார்
சென்னை மணலி சின்ன சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிபர் (வயது 24). இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நான் வானத்தைபோல தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறேன். நான் கடந்த 2019-ம் ஆண்டு சரவணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். கருத்து வேறுபாடு காரணமாக அவரை நான் பிரிந்து விட்டேன். விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நலக் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இஸ்லாமிய நூல்கள் இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடுகள் ! இலங்கை அரசு அறிவிப்பு

 விடிவெள்ளி : (ஏ.ஆர்.ஏ.பரீல்)  : வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்குள் இஸ்லாமிய நூல்களை இறக்குமதி செய்வதற்கு இலங்கை அரசு  புதிய விதிகளை விதித்துள்ளது.
புதிய விதி­க­ளுக்­க­மைய இறக்­கு­மதி செய்­வ­தற்கு முன்பு அதற்­கான அனு­ம­தியைப் பெற்­றுக்­கொள்­ள­வேண்டும். முன் அ-னு­ம­தி­யின்றி இஸ்­லா­மிய நூல்கள் இறக்­கு­மதி செய்ய முடி­யாது.
நிறு­வ­னங்­களோ, அமைப்­பு­களோ,தனி­ந­பர்­களோ இஸ்­லா­மிய நூல்­களை இறக்­கு­மதி செய்­வ­தென்றால் அதன் பிர­தி­யொன்று முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­திடம் ஒப்­ப­டைக்­கப்­ப­ட­வேண்டும்.
அத்­தோடு நூலின் பெயர், நூலின் உள்­ள­டக்கம், ஆசி­ரி­யரின் பெயர், அவ­ரது பின்­னணி, நூலில் தீவி­ர­வாத கருத்­துக்கள் உள்­ள­டங்­கி­யுள்­ள­னவா-? அந்நூல் வெளி­நா­டு­களில் தடை செய்­யப்­பட்­டுள்­ளதா? எந்த நாட்­டி­லி­ருந்து நூல் இறக்­கு­மதி செய்­யப்­ப­ட­வுள்­ளது. எனும் விப­ரங்கள் இறக்­கு­ம­தி­யா­ளர்­களால் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வேண்டும்.
மேலு­ம் புத்­தகம் விலை கொடுத்து கொள்­வ­னவு செய்­யப்­ப­டு­கின்­றதா? அல்­லது நன்­கொ­டை­யாகக் கிடைக்­கப்­பெ­று­கி­றதா? நன்­கொ­டை­யென்றால் நன்­கொ­டை­யாக வழங்­கு­ப­வரின் விப­ரங்கள் என்­ப­னவும் தெரி­விக்­கப்­ப­ட­வேண்டும்.

வெள்ளி, 23 ஏப்ரல், 2021

ஜெயலலிதாவின் அண்ணா நூலக பயங்கரவாதமும் ஜெயவர்த்தனாவின் யாழ் நூலக பயங்கரவாதமும்

No photo description available.

தோழர் புலியூர் : ஒரு இனத்தை அழிக்க முற்படுபவர்கள் முதலில் அந்த இனத்தின் மொழியை அழிப்பார்கள். அப்படித்தான் இலங்கையில், யாழ் நூலகத்தைத் தீயிட்டுக் கொளுத்தியது ஜெ ஆர் ஜெயவர்த்தன  அரசு.
அதேபோல், கலைஞர் கட்டிய 'அண்ணா நூற்றாண்டு நூலகத்தை' பாழடையச் செய்தார் ஜெயலலிதா. குழந்தைகள் நல மருத்துவமனையாக இதை மாற்றப் போகிறேன் எனத் திமிராய்ப் பேசிய ஜெயாவை அடக்கிய நீதிமன்றம், நூலகம் தொடர வேண்டும் என்றது.

 178 கோடி செலவில் கட்டப்பட்ட, இந்தியாவின் பெரிய நூலகமான, தெற்காசியாவின் இரண்டாவது பெரிய நூலகமான, ஒரே நேரத்தில் 5000 பேர் அமர்ந்து படிக்கும் அளவிற்கு வசதிகள் கொண்ட மாபெரும் நூலகத்தை, நீதிமன்ற உத்தரவையும் மீறி திருமண நிகழ்விற்கு வாடகைக்கு விட்டார் பார்ப்பனத் திமிர் நிரம்பிய ஜெயலலிதா.
ஏராளமான போட்டித் தேர்வுகளுக்கு, மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவான விலையுயர்ந்த நூல்கள் செல்லரித்துப் போயின.
50000 க்கும் மேற்பட்ட நூல்கள் திருடு போயிருக்கின்றன. நூலகப் பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்ட பல கோடி ரூபாயையும் தன் போயஸ் தோட்டத்திற்குள் பதுக்கிக் கொண்டார் ஜெயா.

எங்கு திரும்பினும் ஓலம்... பிணங்களின் குவியல்; எரிந்து கொண்டேயிருக்கும் சுடுகாடுகள்!


May be an image of one or more people, people standing, road and text that says 'மும்பையில் தடுப்பூசி போடுவதற்காக வயதானவர்கள் காத்திருக்கின்றனர். குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் கொரோனா பரிசோதனைக்காக தனைக்காக வந்தவர்கள் நீண்ட வரிசையில் காரில் காத்திருக்கிறார்கள். உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் டலங்கள், ஹிண்டன் நதிக்கரைமில் சடங்குக்காக வரிசையில் காத்திருக்கின்றன. உத்தர பிரதேசம், என்பூரிலுள்ள பைரவ் காட் இந்து மயானத்தில் ஒரே நேரத்தில் பல கொரோனா நோயாளிகளின் சடலங்கள் எரிக்கப்படுகின்றன. டெல்லியிலுள்ள மாயபுரியில் ஆக்சிஜன் நிரப்பும் மையத்தில் காலி சிலிண்டர்களுடன் வரிசையில் நிற்கிறார்கள் நோயாளிமின் உறவினர்கள். தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள ரபரப்பால் டெல்லியில் ஆக்சிஜன்நி ஸ்டாக் இருக்கிறதா என்று முன்னெச் சரிக்கையாக விசாரிக்கிறார்கள் ஜம்முவில் கின் போது துக்கம் விழுந்த முதல் உதவி வளிக்கும் தடும்பத்தினர்'

tamil.samayam.com :கொரோனாவின் 2ஆவது அலையின்கீழ் இந்தியா தள்ளாடிக் கொண்டுள்ளது. பல மாநிலங்கள் அதிகரித்து வரும் தொற்றின் எண்ணிக்கையை சமாளிக்க முடியாமல் போராடி வருகின்றன. குறிப்பாக, இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப்பிரதேசம் நாட்டில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக இருக்கிறது.

அம்மாநிலத்தில் கொரோனா தொற்றின் நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து வரும் போதிலும், பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதுதான் நிதர்சனமாக உள்ளது. மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. கொரோனா தவிர வேறு சிகிச்சைகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கே சிகிச்சை அளிக்க போதிய வசதிகள் இல்லை என்பதுதான் உத்தரப்பிரதேசத்தின் கள நிலவரம்.கான்பூரை சேர்ந்த நிரஞ்சன் பால் சிங்கின் 51 வயதான தந்தை கடந்த வாரம் இதே நாள் ஒவ்வொரு மருத்துவமனையாக அலைக்கழிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே உயிரிழந்தார். படுக்கை வசதி இல்லாத காரணத்தால் சுமார் 4 மருத்துவமனைகளில் அவருக்கு அனுமதி கிடைக்காமல் கடைசியாக ஆம்புலன்ஸிலேயே அவர் உயிரிழந்தார்.

ட்ராபிக் ராமசாமி தீவிர சிகிச்சை பிரிவில் . எப்படி இருக்கிறார்? - அரசு மருத்துவமனையில்

டிராபிஃக் ராமசாமி உடல்நிலை இப்போது எப்படி இருக்கிறது? - அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

ஆ. விஜயானந்த் -     பிபிசி தமிழுக்காக : சமூக ஆர்வலர் டிராபிஃக் ராமசாமியின் உடல்நிலையில் கடும் பாதிப்பு ஏற்பட்டதால், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாள்களாக அவரது உடல்நிலையில் ஏற்ற இறக்கமான சூழல் நிலவுவதாகக் கூறப்படுகிறது. எப்படியிருக்கிறார் டிராபிஃக் ராமசாமி?
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வெள்ளை சட்டை, காக்கி உடுப்பில் வழக்குக் கட்டுகளோடு வலம் வரும் டிராபிஃக் ராமசாமியை பார்க்காதவர்கள் அரிது என்றே சொல்லலாம்.
சட்டையின் இரு பாக்கெட்டுகளிலும் வழக்குக் கட்டுகளை வைத்திருப்பது அவரது பழக்கம்.
ஹெல்மெட் விவகாரம், கட்அவுட் கலாசாரம், வரம்புமீறிக் கட்டப்படும் கட்டடங்கள், கட்டுப்பாடில்லாமல் சுற்றிய மீன்பாடி வண்டிகள் என டிராபிஃப் ராமசாமி கையாண்ட பொதுநல வழக்குகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுவது அவ்வளவு எளிதல்ல.

ஆக்சிஜனுக்காக ஸ்டேர்லைட்டை கைப்பற்றி ஏன் உற்பத்தி செய்யக்கூடாது? - தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!

ஆக்சிஜனுக்காக ஏன் ஸ்டேர்லைட்டை கைப்பற்றி உற்பத்தி செய்யக்கூடாது? - தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!

கலைஞர்செய்திகள் -Janani : கொரோனா பரவலின் இரண்டாவது அலை காரணமாக தினந்தோறும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
இதனால் மருத்துவமனைகளில் போதிய இடம் இல்லாததும், ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை ஏற்படுவதும் அதனால் மக்கள் கொத்து கொத்தாக மடிவது கடந்த நாட்களாக இந்தியாவின் குரல்களாக உள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதற்கடுத்த படியாக மத்திய அரசும் ஆக்சிஜன் தேவைக்காக ஆலையை திறக்க உத்தரவிடலாம் என்று நேற்று நீதிமன்றத்தில் கூறியிருந்தது. இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை இன்று தொடங்கியது.

அர்விந் கெஜ்ரிவால் : டெல்லி ஆக்சிஜன் லாரிகளை.. உ.பி.யும் ஹரியானாவும் பிடித்து வைத்துக் கொள்கின்றன..

 Vigneshkumar - /tamil.oneindia.com :   டெல்லி: உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் அரசு அதிகாரிகளும் போலீசாரும் ஆக்சிஜன் லாரிகளை பிடித்து வைத்துக் கொள்வதாக மத்திய அரசுக்கு டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கடிதம் எழுதியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் மிக மிக மோசமான நிலையில் உள்ளது.
கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளதால் அங்குள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
டெல்லியுள்ள சரோஜ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, டிராத் ராம் ஷா மருத்துவமனை, இங்கிலாந்து நர்சிங் ஹோம், ரதி மருத்துவமனை, சாண்டம் மருத்துவமனை,
ஹொலி ஃபேமலி மருத்துவமனை ஆகிய 6 தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் அரசு கூறியுள்ளது.
அண்டை மாநிலங்கள் இந்நிலையில், டெல்லிக்கு வர வேண்டிய ஆக்சிஜன் லாரிகளை அண்டை மாநிலங்களில் தடுத்து நிறுத்தப்படுவதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுவே எனது இறுதி காலை வணக்கமாக இருக்கலாம்” : இறப்பதற்கு முன்பு முகநூலில் பதிவிட்ட மும்பை மருத்துவர்!

'May Be Last Good Morning,' Doctor Posted, Died Of Covid Hours Later

kalaignarseithigal.com : இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அதிதீவிரமாகப் பரவி  வருகிறது. இதனால் தொற்றுப்பரவலின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது.

குறிப்பாக, மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தைக் கடந்துள்ளது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதனால் அங்குள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. அதிலும் பல இடங்களில் நோயாளிகளுக்கு படுக்கை கிடைக்காமல் காத்திருக்கும் அவலமும் ஏற்பட்டுள்ளது. அதாவது தற்போது வரையே 80 சதவீதமான படுக்கைகள் நிரம்பிவிட்டதாக அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

பன்னீர்செல்வம் தொகுதியில் இ.வி.எம். அறைக்கு வெளியே 96 தகரப் பெட்டிகள்; திமுக தங்க தமிழ்ச்செல்வன் சந்தேகம்

Bodinayakanur constituency, DMK candidate thanga tamilselvan, thanga tamilselvan rises lack of security issues, போடிநாயக்கனூர், தங்க தமிழ்ச்செல்வன், ஓ பன்னீர் செல்வம், theni vote counting centre, ஓபிஎஸ் தொகுதி போடிநாயக்கனூர், இ.வி.எம். அறைக்கு வெளியே 96 தகரப் பெட்டிகள், திமுக புகார், ops, o panneerselvam, bodinayakanur, dmk, admk, tamil nadu assembly elections 2021

tamil.indianexpress.com - Balaji Ellappan : “போலீசுக்கு உணவு எடுத்துச் செல்ல வந்த 2 வாகனங்களை பதிவு செய்யாமல் அனுப்பியிருந்தார்கள்.
இது போன்ற குறைபாடுகளை சொன்னால் சரி செய்கிறார்களே தவிர நடவடிக்கை எடுக்க மாட்டேங்கிறார்கள்.” என்று திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.
போடிநாயக்கனூர், தங்க தமிழ்ச்செல்வன், ஓ பன்னீர் செல்வம், theni vote counting centre, ஓபிஎஸ் தொகுதி போடிநாயக்கனூர், இ.வி.எம். அறைக்கு வெளியே 96 தகரப் பெட்டிகள், திமுக புகார்,
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில், இ.வி.எம். இயந்திங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக திமுகவினர் தொடர்ச்சியாக புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய பாகிஸ்தானிய பயணிகளுக்கு கனடா தடை 30 நாட்களுக்கு இந்த தடை என அறிவிப்பு

லங்கா ஸ்ரீ : இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து பயணிகள் விமானங்களை கனடா 30 நாட்களுக்கு தடை செய்துள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பாதிப்புகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. மக்கள் ஆக்ஸிஜன் மற்றும் அத்தியாவசிய மருந்துகளின் பற்றாக்குறையால் பரிதவித்து வருகின்றனர்.
நாளுக்கு நாள் இறப்பு எண்ணிக்கையும், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால், பல மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க முடியாமல் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளது.
தற்போது நாட்டின் முதன்மையான பல நிறுவனங்கள், ஆக்ஸிஜன் பற்றாக்குறையை ஈடுசெய்ய, தாமாகவே முன்வந்து இலவசமாக மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் வழங்கி வருகிறது.
பெடரல் அரசு கண்டுகொள்ளாத நிலையில், பொதுமக்கள் சக மனிதர்களுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.

டெல்லி மருத்துவமனையில் இரண்டு மணி நேரத்துக்கு மட்டுமே ஆக்சிஜன் உள்ளது

minnambalm :மருத்துவமனையில் இரண்டு மணி நேரத்துக்கு மட்டுமே ஆக்சிஜன் உள்ளது. இது தீர்ந்துபோகும் பட்சத்தில் நோயாளிகள் உயிரிழக்கக் கூடும் என டெல்லி சாந்தி முகந்த் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி சுனில் சாகர், தெரிவித்துள்ளார்.   ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சமாளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி டெல்லி பாலாஜி மருத்துவமனை சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கை நேற்று(ஏப்ரல் 21) நீதிபதிகள் விபின் சங்வி, ரேகா ஆகியோர் விசாரித்தனர். அப்போது, “டெல்லியில் ஆக்சிஜன் இல்லாமல் கொரோனா நோயாளிகள் பலர் உயிருக்குப் போராடி வருகின்றனர். ஆனால் நீங்கள் (மத்திய அரசு) ஆக்சிஜன் அனுப்பாமல் சுணக்கம் காட்டுகிறீர்கள். பல உயிர்கள் கொத்து கொத்தாக மடிவதை பார்க்க விரும்புகிறீர்களா?

வியாழன், 22 ஏப்ரல், 2021

இந்தியாவிலேயே ஒரு அரசு மருத்துவ மனையில் ஆக்சிஜன் தயாரிக்கும் வசதி . ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனை கலைஞர் சாதனை

May be an image of monument, outdoors and text that says 'ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை'
May be an image of 1 person and standing

பாலகணேசன் அருணாசலம்  : சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அந்த மருத்துவமனைக்கு தேவையான முழு அளவிளான ஆக்ஸிஜனையும்  தயாரிக்கும் வசதி இருக்கிறது.
இது நேற்றைய சன் டிவி விவாதத்தில் நெறியாளர் குணசேகரன் சொன்னப் பிறகு தான் வெளிச்சத்துக்கே வருது.
ஒரு அரசு மருத்துவமணைக்கு சொந்தமாக ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வசதி இருக்கிறது என்பதோ, அப்படி ஒரு தொலை நோக்கு திட்டத்தை தீட்டி செயல்படுத்தியவர் கலைஞர் என்பதையோ யாரும் பேசி இதுவரை நான்  கேள்விப்பட்டதில்லை
இப்படிப்பட்ட ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட திட்டத்தை தந்த தலைவரும் இதை பெரிதாக பேசவில்லை. நிச்சயம் உடன்பிறப்புகளுக்கான கடித்தத்தில் எழுதியிருப்பார். அந்த நேரத்தில் இதன் அருமை தெரியாத நாமும் அதை சாதாரணமாக கடந்துப் போயிருப்போம்.
இந்த தலைவரைத்தான்  இங்கேயே ஒரு கூட்டம் திட்டித் தீர்த்துக்கொண்டிருந்தது, கொண்டிருக்கிறது, அவர் மறந்த பின்பும் அது குறைந்தபாடில்லை.
ஆனால் அந்த தலைவர் தான் நாம் மூச்சு விட முடியாத போது கூட நமக்கு  துணையிருக்க கூடிய வகையிலான ஒரு கட்டுமானத்தை உருவாக்கி தந்துவிட்டு போயிருக்கிறார்

உலக அரங்கில் இந்தியாவின் பெயர் சரிகிறது? காரணம் கொரோனாவா? பாஜகவா?

First case of 'double mutant' COVID-19 variant confirmed in Quebec. (கியூபெக் மாகாண மொன்றியல் நகரம்)இன்று கனடாவில் பிரெஞ்சு மொழி தினசரியான ஜூர்னல் து மான்ரியல் பத்திரிகையில் கோவிட் வைரஸின் புதிய பரிமாண வைரஸால் பாதிப்புற்ற ஒருவர் பற்றிய செய்தி வெளியாகி உள்ளது இதில் ஒரு வில்லங்கமான உள்குத்து ஒன்றுள்ளது . இந்த பத்திரிகையின் முகப்பக்கத்தில் ஜஸ்டின் ட்ருடோ இந்திய உடையில் காட்சி தரும் படத்தை இந்த செய்தியை குறிக்கும் படமாக வெளியிட்டுள்ளது கொரோனா என்றாலே சீனர்கள்தான் என்று அவர்கள் மீதான ஒரு சமூக வெறுப்புணர்வு பல இடங்களிலும் இருக்கிறது
சீனர்களின் வியாபாரங்களுக்கு அதிக மக்கள் செல்வதில்லை
அதே போன்றதொரு நிலைமை மேற்கு நாடுகளில் உள்ள இந்தியர்களுக்கும் எதிர்காலத்தில் வரலாம்?
ஏற்கனவே கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மிகப்பெரும் தோல்வியை பாஜக ஆட்சியாளர்கள் மக்களுக்கு வழங்கியுள்ளனர்
மகாராஷ்ட்ரா குஜராத் உத்தர பிரதேசம் போன்ற வடஇந்திய மாநிலங்களில் நடக்கும் மனித அவலங்களை உலகம் முழுவதும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது.

திருமதி கனிமொழிக்கு திமுக தென்மண்டல அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்படலாம்?

ஹிந்தியை மொழிபெயர்க்கவில்லை: சர்ச்சை குறித்து கனிமொழி விளக்கம்- Dinamani

Hemavandhana - tamil.oneindia.com : சென்னை: திமுக எம்பி கனிமொழிக்கு புதிய பதவி குறித்த பேச்சு அடிபட்டு வருகிறது..
இதற்கு பின்னணி காரணங்களும் சில வெளியாகி வருகின்றன..!
நேற்று முதல், திமுகவின் கனிமொழிக்கு புதிய பதவி தரப்படும் என்ற செய்தி வட்டமடித்து கொண்டிருக்கிறது..
குறிப்பாக தென்மண்டல அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.
நடந்து முடிந்த தேர்தலில் திமுகவை பொறுத்தவரை ஐபேக் டீமின் பங்கு அளப்பரியது..
அந்த வகையில், வேலை பார்த்த இந்த ஒரு வருட காலத்தில் எத்தனையோ தகவல்களை தலைமைக்கு திரட்டி தந்துள்ளது ஐபேக்...
இதில் கனிமொழி குறித்த சில விஷயங்களையும் அனுப்பி வைத்ததாம்.
கனிமொழி கடந்த நவம்பர் 29-ம் தேதியே கனிமொழி தன்னுடைய பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார்.. அதிலும் தென்மாவட்டத்தை குறி வைத்தே பிரச்சாரத்தை துவக்கினார்..
இதன் காரணமாக, தென்மண்டலங்களில் திமுகவின் வாக்கு வாங்கி அதிகரித்துள்ளதாக தெரிகிறது.. வாக்குப்பதிவின்போது, பெருமளவு அதிமுகவின் வாக்குகள் திமுகவுக்கு டிரான்ஸ்பர் ஆனதில் மிக முக்கிய பங்கு கனிமொழிக்கு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை... ஐகோர்ட்டில் அரசு தகவல்

maalaimalar : சென்னை: ரெம்டெசிவிர் மருந்து தனி நபர்களுக்கு வழங்கப்படுவதாகவும், தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுவதாகவும், வென்டிலேட்டர் பற்றாக்குறை உள்ளது என்றும் ஒரு பத்திரிகையில் இன்று செய்தி வெளியானது. அந்த செய்தியை அடிப்படையாக வைத்து சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வு தாமாக முன்வந்து பொது நல வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது பின்னர், இன்று காலையில் கோர்ட்டு தொடங்கியதும், இதுகுறித்து அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணனிடம் நீதிபதிகள் தகவல் தெரிவித்தனர். மற்ற மாநிலங்களில் உள்ள நிலை தமிழகத்திலும் ஏற்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு தமிழகத்தின் நிலையை அறிய விரும்புவதாக அட்வகேட் ஜெனரலிடம் நீதிபதிகள் கூறினர். இந்த வழக்கு குறித்து தமிழக அரசிடம் விளக்கம் பெற்று, இன்று பிற்பகல் தெரிவிக்கும்படி கூறினர்.

சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மகன் ஆஷிஸ் யெச்சூரி கொரோனாவால் மரணம்

 Mathivanan Maran  - /tamil.oneindia.com :  டெல்லி: சி.பி.எம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகனும் பத்திரிகையாளருமான ஆஷிஸ் யெச்சூரி (வயது 34) கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா உச்சவேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்துள்ளது
ஒருநாள் கொரோனா மரணங்களும் 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகின்றன. இதுவரை 13 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இதனிடையே சி.பி.எம்.பொதுச்செயலாளரான சீதாராம் யெச்சூரியின் மூத்த மகனும் பத்திரிகையாளருமான ஆஷிஸ் யெச்சூரி, கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற நிலையில் இன்று காலையில் காலமானார்.
டெல்லி குருகிராம் மருத்துவமனையில் ஆஷிஸ் யெச்சூரி சிகிச்சை பெற்று வந்தார்

பிச்சை எடுங்கள், திருடுங்கள், எதையாவது செய்து உயிர்களை காப்பாற்றுங்கள்” – ஆக்சிஜன் தட்டுப்பாடு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம்

BBC :கொரோனா வைரஸ் உச்சத்தை தொட்டு கடுமையான தாக்கத்தை நாடு முழுவதும் பரவலாக ஏற்படுத்தி வரும் வேளையில்,
ஆக்சிஜன் மூலம் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உயிர்களை காக்க பிச்சை எடுத்தோ திருடியோ, எதையாவது செய்தோ உயிர்களை காப்பாற்றுங்கள் என்று உணர்ச்சிபூர்வமாக கருத்து தெரிவித்திருக்கிறது டெல்லி உயர் நீதிமன்றம்.
இது தொடர்பாக புதன்கிழமை மாலை மற்றும் இரவில் நடந்த விசாரணை முடிவில், தங்குதடையின்றி ஆக்சிஜன் சிலிண்டர்களை மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்ய மத்திய அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதையடுத்து,
 வழக்கின் விசாரணையை வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மூலம் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு நிலவும் தட்டுப்பாட்டை சமாளிக்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை மாலையில் அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது.

அய்யா ஆற்காடு வீராசாமி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் .

May be an image of 1 person
சாந்தி நாராயணன் : · 83 ஆம் அகவை நாளில் மிசாவின் கொடும் வேதனைகளை தாங்கியும் கழகம் காத்த முன்னோடி, கலைஞரின் தளகர்த்தர்களில் ஒருவர் அய்யா ஆற்காடு வீராசாமி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் . oOo ஆற்காடு வீராசாமி அவர்கள் பற்றி கலைஞர் வீராசாமி வாழ்நாளில் கண்ட துன்ப துயரங்கள், இன்ப நிகழ்வுகள் அவருடைய வாழ்க்கை சரித்திரத்தில் குறிப்பிடப்பட வேண்டியவை.
நெருக்கடி கால கொடுமைகள் அவரை எந்த அளவுக்குத் துளைத்தெடுத்தது?
மு.க.ஸ்டாலின் சிறைச்சாலையில் பட்ட துன்ப துயரங்களை அன்பழகன் எடுத்து சொன்னார்.
அந்த நேரத்தில் கொழு கொம்பாக இருந்து ஸ்டாலினைக் காப்பாற்றியவர்கள், சிறைச்சாலையிலிருந்து மீட்டுத் தந்தவர்கள் என்ற வரிசையில் முதலில் குறிப்பிடத்தக்கவராக விளங்கியவர்தான் ஆற்காடு வீராசாமி.
வீராசாமி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால்,
சிட்டிபாபு இல்லாமல் இருந்திருந்தால்,
சென்னை சிறைச்சாலையில் இருந்து மீண்டும் ஸ்டாலின் கிடைத்திருக்கமாட்டார்.

செபாஸ்டியன் சீமானின் ஜாதி பேத வியாதி அரசியல்!

Kandasamy Mariyappan : நாம் தமிழர் தம்பிகளிடையே உரையாடும் பொழுது, அவர்கள் கடைசியில் வந்து நிற்கும் இடம்... தமிழ்நாட்டில் தெலுங்கர்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளது, எல்லா பதவிகளையும் தெலுங்கர்களுக்கே கொடுத்து விட்டனர் என்பார்கள்..! சரி, உண்மையிலேயே அக்கறையோடு பேசுகிறார்கள் என்று நாமும் தொடர்ந்து உரையாடினால் திமுக மற்றும் கலைஞர் வீட்டில் வந்து நிற்பார்கள்..! நாம்தமிழர் தம்பிகளுக்கு...
கேரளாவில் பிறந்து 30 வயதுக்குப் பிறகு தமிழ்நாட்டுக்கு பிழைக்க வந்த திரு. ராமச்சந்திரன் மலையாளியாக தெரியமாட்டார்.!
மைசூரில் பிறந்து, பெங்களூரில் தனது ஆரம்பக் கல்வியை முடித்து பிழைப்புக்காக சென்னைக்கு வந்த செல்வி. ஜெயலலிதா கன்னடராக தெரியமாட்டார்..!
இவ்வளவு ஏன், கேரளத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் பிறந்து, தமிழ்நாட்டிற்கு பிழைக்க வந்த அவர்களின் தலைவர் திரு. சீமான் மலையாளியாக தெரியமாட்டார்...!
ஆனால், நமக்குத் தெரிந்து மூன்றாம் தலைமுறையாக தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த கலைஞர் மட்டுமே அவர்களுக்கு தெலுங்கராக தெரிவார்.!
ஏன் என்று ஆராய்ந்து பார்த்தால், நீதிக்கட்சி Founder டாக்டர். நடேசன் முதலியார் அவர்கள் கையில் எடுத்த ஆயுதம், தமிழ்நாடு முழுவதுமாக பார்ப்பனர்களின் ஆதிக்கம் தவிர்த்து ஒடுக்கப்பட்டவர்களுக்கும் அதிகாரம் வேண்டும் என்ற முழக்கம்.!

கல்லூரி மாணவியைக் கொன்று சாக்கு மூட்டையில் வீசிய காதலன்! புதுச்சேரி


nakkheeran.in - சுந்தர பாண்டியன் : புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள சந்தை புதுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராமன் - ராஜசேகரி தம்பதியினருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். ராமன் குவைத்தில் பணியாற்றி வருகின்றார். இவரது மகள் ராஜஸ்ரீ (17). இவர் சேதராப்பட்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகின்றார்.இந்நிலையில் நேற்று காலை கல்லூரிக்குச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு வெளியே சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து மாணவியின் பெற்றோர் காட்டேரிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

கருப்பையை அகற்றும் ஏழைப்பெண்கள் ஒப்பந்த பணிக்கு தடையாம் மருத்துவமும் முதலாளிகளும் கூட்டு கொடூரம் .. வடநாட்டு அவலம்

May be an image of one or more people and text

Fazil Freeman Ali  : பெண்மையை  ப‌லிகேட்கும் ஒப்ப‌ந்த‌ ப‌ணிமுறை
பணிக்குத் தடையாக மாதவிடாய் இருப்பதால் கருப்பையையே அகற்றிவிடும் ஏழைப் பெண்கள். ஒப்பந்ததாரர்களும் மருத்துவ முறைகேடுகள் கூட்டு சேர்ந்து அர‌ங்கேற்றிய‌ அவலம்.
"பெண்கள் மாதவிடாய் காரணமாக தம் பணியை இடையூறு இன்றி செய்ய முடியவில்லை,
இதனால் பணியிடங்களில் அபராதம் செலுத்த வேண்டியுள்ளது என்று கார‌ண‌ம் காட்டி,
கருப்பையையே அகற்றி விடுகிறார்க‌ள்" என்ற‌ அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாக, மகாராஷ்ட்ர மாநில மகளிர் ஆணையம் உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க பீட் மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் பணிக்குச் செல்லும் கிராமத்துப் பெண்கள் பணிக்கு இடையூறாக மாதவிடாய் இருப்பதாலும் இதனால் பணிக்குச் செல்ல முடியாமல் ஊதிய இழப்பு, அபராதங்கள் கட்ட நேரிடுவதாலும் கருப்பையையே அகற்றிவிடுகின்றனர்.
இந்த அவலம் குறித்து தி இந்து பிசினஸ் லைனில் அதிர்ச்சி செய்தி அறிக்கை வெளியானதை தொடர்ந்து மகளிர் ஆணையம் பீட் மாவட்ட அதிகாரிகளுக்கு விசாரிக்க உத்தரவிட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா ஆக்சிஜன் டேங்கரில் கசிவு; 22 கரோனா நோயாளிகள் உயிரிழப்பு

Tamil hindu /l மகாராஷ்டிரா நாசிக் நகரில் சோகம்: ஆக்சிஜன் டேங்கரில் கசிவு; சப்ளை நிறுத்தப்பட்டதால் 22 கரோனா நோயாளிகள் பலி... மகாராஷ்டிர மாநிலம், நாசிக் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கொண்டுவந்த டேங்கர் லாரியில் கசிவு ஏற்பட்டது. இதையடுத்து, கசிவை அடைக்க ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்பட்டதால், ஐசியூவில் சிகிச்சை பெற்றுவந்த கரோனா நோயாளிகள் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நகரில் ஜாகீர் ஹுசைன் நகராட்சி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சப்ளை செய்வதற்காக ஆக்சிஜன் டேங்கர் லாரி இன்று வந்தது. மருத்துவனையில் உள்ள ஆக்சிஜன் டேங்கருக்கு, லாரியிலிருந்து ஆக்சிஜனை மாற்றும்போது திடீரென வாயுக் கசிவு ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக ஆக்சிஜன் சப்ளை துண்டிக்கப்பட்டது.

புதன், 21 ஏப்ரல், 2021

கமலஹாசனுக்கு 200 கோடி, சீமானுக்கு 50 கோடி பாஜக + அதிமுக பட்டுவாடா!

 Karuppu Neelakandan  : ஒரு யூ ட்யூப் சேனல் இன்டெர்வியூவில் ஜெகத் கஸ்பர் திமுக வின் வெற்றிவாய்ப்புகளை குலைக்கும் விதமாக,
சிறும்பான்மையினரை முக்கிய தொகுதிகளில்  மநீம வேட்பாளராக நிறுத்தி பிரித்தாளும் சூழ்ச்சிக்காக  கமலஹாசனுக்கு 200கோடி ரூபாயை அதிமுகவின மூலம் பாஜக செட்டில் செய்துள்ளது என்கிறார். 

அதற்கேற்றார் போல கமலஹாசன்  கட்சியிலிருந்து ஒன்னே ஒன்னுகண்ணே கண்ணுவென இருந்த சிறும்பான்மையின பெண்மணியான கமீலா நாசரும் இன்று வெளியேற்றப் பட்டுள்ளார்.
அதே போன்று அதே போன்ற  அதே பிரித்தாளும் ஆர்எஸ்எஸ் அடியாள் வேலை பார்க்க சீமானிற்கும் அவரது சித்தப்பா தலைமையிலுள்ள அதிமுகவின் மூலமாக 50 கோடியை  பாஜக செட்டில் செய்துள்ளதாக ஜெகத்கஸ்பர் சொல்வியுள்ளார்.
 ஆட்சியை பிடித்தெல்லாம் சம்பாதிக்கும் முறையை விட இந்த சினிமாக்காரர்கள் சுலபமா சம்பாதித்துக்கொள்ளும் வித்தைத் தெரியாமல் கொஞ்சம் இளைஞர் இவர்கள் இருவரின் அரசியலிலும் சிக்கி சீரழிகிறார்கள்.

DrTrupti Gilada : நிலைமை மிகமோசம்; உங்களை நீங்களே சூப்பர் ஹீரோ என நினைக்க வேண்டாம்” : மும்பை மருத்துவரின் கண்ணீர் வீடியோ!

kalaingarseythikal - Prem Kumar : இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. இதனால் தொற்றுப்பரவலின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தை நெருங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அங்குள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. அதிலும் பல இடங்களில் நோயாளிகளுக்கு படுக்கை கிடைக்காமல் காத்திருக்கும் அவலமும் ஏற்பட்டுள்ளது. அதாவது தற்போது வரையே 80 சதவீதமான படுக்கைகள் நிரம்பிவிட்டதாக அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

கியூபாவில் காஸ்ட்ரோ குடும்பத்தின் ஆட்சி முடிவுக்கு வருகிறது! புதிய அதிபராக டயஸ்-கனல் தெரிவாகிறார்

soodram Lஅந்தவகையில், கியூபாவின் இரண்டு முக்கியமான பதவிகளான, கியூப கம்யூனிசக் கட்சியின் தலைவராகவும், கியூபாவின் ஜனாதிபதியாகவும் 60 வயதான டயஸ்-கனல் காணப்படுகின்றார்.
ஆக, மேலும் அதிகாரமிக்கவர்களால் ஆளப்படும் இடத்தை நிரப்ப வந்தவர் என்ற வதந்திகளை டயஸ்-கனல் முறியடித்துள்ளார்.   
பயிற்சியால் மின்னியல் பொறியலாளரான டயஸ் கனல், கட்சியில் துரித வளர்ச்சி கண்டவராக இருந்தபோதும் வாழ்க்கையில் பெரும்பாலான காலத்தில் கட்சிக்காக இயங்கியுள்ளார்.  
தனது சகோதரர் பிடலை கட்சியின் முதலாவது செயலாளராக தான் பிரதியிட்ட சிறிது காலத்தில், 2012ஆம் ஆண்டு டயஸ்-கனலை உப ஜனாதிபதியாக றாவுல் கஸ்ரோ நியமித்திருந்தார்.     
கியூபாவின் மிகவும் அதிகாரமிக்க பதவியான கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் முதலாவது செயலாளராக மிகேல் டயஸ்-கனல் பெயரிடப்பட்டுள்ளார்.
அந்தவகையில், 1959ஆம் ஆண்டு புரட்சிக்குப் பின்னர் கஸ்ரோவின் பெயரில்லாத முதலாமவராக கியூபாவை டயஸ்-கனல் ஆளவுள்ளார்.
பரவலாக எதிர்பார்க்கப்பட்ட குறித்த நகர்வானது நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.

வேலூர் மருத்துவமனையில் 7 நோயாளிகள் உயிரிழப்பு! ஆக்சிஜன் குழாயில் கசிவு

malaimalar : 7 நோயாளிகள் உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவ கல்வி இயக்குநர், வேலூர் அரசு மருத்துவமனை டீன் ஆகியோர் 2 வாரத்தில் பதிலளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை: வேலூர் அடுக்கும்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள் உயிரிழந்த விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.மருத்துவ கல்வி இயக்குநர், வேலூர் அரசு மருத்துவமனை டீன் ஆகியோர் 2 வாரத்தில் பதிலளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது . இதனிடையே, வேலூர் அடுக்கும்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 7 நோயாளிகள் உயிரிழந்தது குறித்து வெளியான செய்தியின் அடிப்படையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜார்ஜ் பிளாய்ட் கொலை ! போலீஸ் டெரிக் குற்றவாளி 40 ஆண்டு சிறை வழங்கப்படலாம்? Derek Chauvin found guilty of the murder of George Floyd

daylithanthi : வாஷிங்டன், அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நகரைச் சேர்ந்தவர் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் பிளாய்ட். லாரி டிரைவரான இவர் கடந்த ஆண்டு மே மாதம் 25-ம் தேதி மினியாபோலீஸ் நகரில் உள்ள ஒரு கடைக்கு சென்று பொருட்களை வாங்கினார்.‌அப்போது அவர் வழங்கிய பணத்தில் 20 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,500) கள்ளநோட்டு இருந்ததாக கடையின் ஊழியர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் தலைமையில் 4 போலீசார் அங்கு விரைந்தனர்.‌ பின்னர் அவர்கள் புகார் தொடர்பாக விசாரிக்க அழைத்தபோது பிளாய்ட் போலீஸ் வாகனத்தில் ஏற மறுத்ததாகத் தெரிகிறது. இதையடுத்து போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் ஜார்ஜ் பிளாய்ட்டை தரையில் கிடத்தி அவர் கழுத்தை கால் முட்டியால் அழுத்தினார். என்னால் மூச்சுவிட முடியவில்லை எழுந்திருங்கள் என ஜார்ஜ் பிளாய்ட் கெஞ்சிய போதும் விடவில்லை. சிறிது நேரத்தில் ஜார்ஜ் பிளாய்ட் உயிரிழந்தார்.

தலித் கலை இலக்கியச் செயல்பாடு என்பது புனிதப் பசு நிலையை அடைந்துவிட்டது. பட்டியல் வகுப்பினர் மட்டுமே படைக்கவும் விமர்சிக்கவும் முடியும்?

 Sathyaperumal Balusamy : தலித் கலை இலக்கியச் செயல்பாடு என்பது புனிதப் பசு நிலையை அடைந்துவிட்டது.
தலித் கலை இலக்கியத்தைப் பட்டியல் வகுப்பினர் மட்டுமே படைக்கமுடியும் என்ற நிலையிலிருந்து தலித் கலை இலக்கிய விமர்சனத்தையும் கூட பட்டியல் வகுப்பினர் மட்டுமே வைக்க வேண்டும் என்ற புனித நிலையை அடைந்திருக்கிறது.
தப்பித்தவறிப் பட்டியல் வகுப்பைச் சேராத யாராவதும் தலித் கலை இலக்கியச் செயல்பாட்டை எதிர்மறையாக விமர்சித்துவிட்டால் இருக்கவே இருக்கிறது அவருக்குப் பரிசளிக்கச் 'சாதிவெறியர்' என்ற பட்டம்!
தலித் அதாவது ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் சினிமாவாக முன்வைக்கப்படும் கர்ணன் திரைப்படத்தின் தொடக்கத்திலேயே சொல்லப்படும் மிக முக்கியமான செய்தி என்னவாக இருக்கிறது என்றால்,
அந்தப் பட்டியல் வகுப்பினருக்கும் ஒரு நாடாண்ட பெருமை இருந்தது என்பதாக இருக்கிறது.
யானையின் மீது அமர்ந்து வாளேந்திப் பாண்டிய நாட்டை அரசாண்ட பரம்பரை இப்படி அடங்கிக் கிடக்கிறதே என்ற ஆதங்கம் முன்வைக்கப்படுகிறது.
எந்த ஒரு ஆண்ட பரம்பரையும் தான் ஆளுங்காலத்தில் மற்றவர்களை அடக்கி ஒடுக்கியே வைத்திருக்கும். அதே போல இன்றைக்கு ஐராவதம் என்ற யானையை வாகனமாகக் கொண்ட தேவேந்திரனின் வம்சமாகச் சொல்லிக் கொள்ளும் பரம்பரையும் ஆண்ட பரம்பரையாக இருந்த பொழுது மற்ற பரம்பரையினரை அடக்கி ஒடுக்கியே தனது ஆளுகையை நிலை நாட்டியிருக்கும்.

கை கூப்பி கேட்கிறேன்... 3 கட்ட தேர்தல்களை ஒரே நாளில் நடத்துங்கள் - மமதா மீண்டும் கோரிக்கை

 Jeyalakshmi C  - tamil.oneindia.com  : கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் 3 கட்ட தேர்தல்களை ஒரே நாளில் நடத்த வேண்டும் என்று அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி தேர்தல் ஆணையத்திற்கு மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார்.
தேர்தல் ஆணையம் பொது சுகாதாரத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை விட பெரிய மாநிலம் மேற்கு வங்கம். அங்கு 294 தொகுதிகள் உள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில்தான் அதிகபட்சமாக 8 கட்டங்களாக நடைபெறுகிறது.
முதல் கட்ட வாக்குப் பதிவு மார்ச் 27 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது.
ஏப்ரல் 1, 6, 10, 17 ஆகிய தேதிகளில் 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
ஏப்ரல் 22 ஆம் தேதி 6ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
7ஆம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 26ஆம் தேதியும் 8 வது மற்றும் இறுதி கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 29 ஆம் தேதியும் நடைபெறுகிறது.

நடிகர் அஜீத்தை படமெடுத்ததால் அப்போலோவில் பணிநீக்கம் செய்யப்பட்ட பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம்.. இரக்கம் காட்டாத அஜீத்

ஜாதகப்படி அஜீத் அரசியலுக்கு வருவார்: பிரபல இயக்குனர் | According to  horoscope, Ajith'll enter politics: Director - Tamil Filmibeat
tamil.abplive.com/ : நடிகர் அஜீத்தை வீடியோ எடுத்ததால் சென்னை அப்போலோ மருத்துவமனையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு முன் சென்னை அப்பலோ மருத்துவமனையில் மருத்துவரின் உதவியாளராக பணியாற்றியவர் பர்ஷானா. மே மாதம் 23ஆம் தேதி மருத்துவமனைக்கு டாக்டர் கொண்டம்மாளை சந்திக்க வந்த நடிகர் அஜீத்தை ஆர்வ மிகுதியால் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதாக கூறி, அஜீத்தின் தரப்பு அளித்த புகாரின் அடிப்படையில் பர்ஷானவை அப்போலோ நிர்வாகம் வேலையை வீட்டு நீக்கியதாக கூறப்படுகிறது. 

 தான் எடுத்த வீடியோக்கு மன்னிப்பு கேட்டும், மீண்டும் தன்னை பணியில் சேர்த்துக்கொள்ளாததால், மனமுடைந்த பர்ஷானா, அஜித்தை சந்தித்து தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்கவும், மீண்டும் தனக்கு பணி கிடைக்க வாய்ப்பளிக்குமாறு கோரிக்கை வைக்க முடிவு செய்தார். கடந்த ஒரு வருடமாக அஜீத்தை சந்தித்து முறையிட அலைந்து வருகிறார் பர்ஷானா.

அஜித்தின் வீட்டு வாசலுக்கு பலமுறை சென்று, அங்கு காவலர்களால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பெஃப்சி யூனியன் மூலம் அஜித்தை சந்திக்க முயற்சி எடுத்துள்ளார். அது பலனளிக்க, பர்ஷானாவை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.

திராவிட கட்சிகள் எதுவும் ஏன் தமிழ்நாட்ட தாண்டலை.. கேரளா, கர்நாடகா, ஆந்திரா எல்லாம் தங்கள திராவிடம் என்று...?

திராவிடம் என்ற பெயரில் ஒரு நாடோ, ஒரு இனமோ, மொழியோ இருந்ததில்லை! -  AanthaiReporter.Com | Tamil Multimedia News Web

Skp Karuna :  ஒரு கேள்வி :   : "சேம்சைடு கோல்தான்... இருந்தாலும் கேக்குறேன்.. திராவிடம்னு பேர் வச்ச கட்சிகள் எதுவும் தமிழ்நாட்ட தாண்டலை.. கேரளா, கர்நாடகா, ஆந்திராக்காரனுகளும் தங்கள திராவிடன்னு சொல்லிக்கிறதில்லை.. பெறகெதுக்கு நாம மட்டும் அந்த பேர தூக்கிட்டு சுத்தணும்?"
எனது பதில் :
ஒரு பழைய்ய்ய்ய கிராமம். அந்த ஊர்லே ஒரு நாட்டாமை கிழவன், கடுமையா உழைச்சு ஊரிலேயே முதல் காரை வீடு கட்டுனான். அந்த பெருசுக்கு நாலஞ்சு பிள்ளைங்க பிறந்தது. அது செழிப்பான ஊர் என்பதால் பஞ்சம் பிழைக்க, வியாபாரம் பண்ண அவ்வப்போது வெளியே இருந்து சிலபேர் வந்து தங்குவாங்க. அவங்க எல்லாம் இவர்களை காரை வீட்டுக்காரங்க என்று அழைத்தார்கள்.
அந்த நேரத்திலே உலகம் எங்கிலும் ஓலைக் குடிசைதான் என்பதால் காரை வீடு என்பது பெரிய அடையாளம்தான். அரும்பாடுபட்டு வீடு கட்டிய பெருசும் நாளடைவில் மண்டையைப் போட, வளர்ந்து நின்ன பிள்ளைங்க எல்லாம் தனி அடுப்பு வச்சு பிழைக்கப் போனார்கள்.

வாரணாசியில் இறுதிச்சடங்கிற்கு 3 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரம் ரூபாயாக எகிறிய ரேட் . டிமாண்ட் அதிகமாம் From Rs 3000 to Rs 30,000, cost of cremation

May be a Twitter screenshot of text that says 'Purva Agarwala #JaiKisan @feignism In Meerut, the brahmins are demanding 25k+ to perform the last rites. Lots of ppl protested. Ultimately authorities had to be called. Finally the price was fixed at 7k for Corona patients and 5k for others. No brahmins are boycotting all cremations. No words. 7:23 pm. 19 Apr 21 Twitter Web App'

மோடியின் தொகுதியான வாரணாசி மற்றும் மீரட்டில் 25  ஆயிரத்துக்கு இறுதி சடங்கு செய்து பிணத்தை எரித்து வந்த புரோகிதர்கள், 

இப்போது அதிக பிணங்கள் வருவதால் 30 ஆயிரத்துக்கு உயர்த்தி விட்டார்களாம்.
புரோகிதர்களின் இந்தக் கொள்ளையால் அங்கு பிரச்சனை ஏற்பட்டு மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கொரோனா மரணத்துக்கு 7 ஆயிரம் மற்றவை 5 ஆயிரம் என நிர்ணயத்துள்ளது.

செவ்வாய், 20 ஏப்ரல், 2021

இவர்கள் உண்மையாகவே திருந்தினால் இவர்கள் செய்யவேண்டியது பிராயச்சித்தம் தவிர அரசியல் அல்ல

 இவர்கள் சீமானின் செயற்கை அடுப்பில் குளிர் காய்ந்தார்கள்  இப்போது இது வேலைக்கு ஆகாது என்பதை புரிந்துகொண்டுள்ளார்கள் ஆனாலும் இப்போதும் இவர்களின் அறிவு வளர்ச்சி அடைந்ததாக எந்த அடையாளமும் இல்லை.
இவர்கள் சீமானை வைத்து தமிழ்நாட்டில் தங்களின் இழந்து போன இமேஜை பில்டப் பண்ணலாம் என்று கனவு கண்டார்கள் அதற்காக தமிழ்நாட்டின் எல்லா பெரிய காட்சிகளையும் அமைப்புக்களையும் கிள்ளுக்கீரையாக நடத்தினார்கள் தூற்றினார்கள்  இந்த அறிவாளிகளுக்கு தங்களின் கணக்கு பிழைத்த விட்டது என்பது இப்போதுதான் புரிந்திருக்கிறது  
இவர்களின் போன சாயம் இனி மீண்டுவராது எத்தனை நாளைக்குதான் தமிழ்நாட்டை ஏமாற்ற முடியும்?
இவர்களுக்கு எல்லா வசதிகளும் எல்லா விளம்பரங்களும் இன்னும் என்னன்னவோ எல்லாம் கொடுத்த்தார்கள் இவர்களின் அத்தனை சகோதர படுகொலைகளையும் ராஜீவ் காந்தி கொலை உட்பட சகித்து கொண்டார்கள் எப்படியாவது ஈழம் மீழட்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காக எல்லாவற்றையும் தமிழகம் இழந்தது அதிலும் திமுக இழந்தது மிக மிக அதிகம்
ஆனால் நன்றி கெட்ட இவர்கள் ஆர் எஸ் எஸ் இன் கைப்பாவையாக மாறி அவர்களின் அத்தனை நிகழ்ச்சி நிரலையும் நிறைவேற்றினார்கள்
இப்போது முழுக்க முழுக்க ஆர் எஸ் எஸ் பாஜக அடியாட்களாகவே மாறியும் விட்டார்கள்

மதம் புகுந்த வீடும் ஜாதி புகுந்த வீடும் விளங்காது! ஹிந்து,கிறிஸ்தவம்,இஸ்லாம்,ஜாராஷ்டிரம் எதுவாயினும் சரி

May be an image of 3 people and text that says 'கோயில்களிலுள்ள குருக்கள் மாரைப் பார். கோயிலுக்குப் போவோரிடம் அவர்கள் எவ்வாறு பணம் பறிக்கிறர்கள்! கங்கைக் கரைக்குச் சென்றால்,ஏழைக் கிராமவாசிகள் தக்ஷிணை கொடுத்தாலொழிய ஒருவிதக் கிரியையும் செய்யமுடியாது என்று பிடிவாதம் செய்யும் பண்டாக்களைக்(புரோகிதர்க காணலாம். குடும்பத்தில் கலியாணமோ சாவோ எது நேர்ந்தாலும் புரோகிதன் வந்துவிடுறோன்.உடனே அவனுக்குத் தகூிணை கொடுத்துத்தான் ஆகவேண்டும். ஒவ்வொரு மதத்திலும் இப்படியேதான். கிறிஸ்தவம் இஸ்லாம் ஜாராஷ்டிரம் எதுவாயினும் சரி,இதற்கு விலக்கு இல்லை. -ஜவகர்லால் நேரு இந்திரா அம்மையாருக்கு எழுதிய கடிதத் தொகுப்பான 'Glimpses of World History" நூலிலிருந்து'

Dhinakaran Chelliah  :  குருட்டு நம்பிக்கையும் வெள்ளையுள்ளமும் படைத்த ஜனங்கள் எவ்வளவு தூரம் அக்கிரமத்தைப் பொறுத்துக் கொள்ளுகிறார்கள் என்பதை நினைக்கும்போது நமக்கு ஆச்சரியம் உண்டாகிறது.
இந்தக் காரணத்தால்தான் மதம் என்பது பல நாடுகளில் மிகுந்த பண வருவாயுடைய  பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது.
கோயில்களிலுள்ள குருக்கள் மாரைப் பார். கோயிலுக்குப் போவோரிடம் அவர்கள் எவ்வாறு பணம் பறிக்கிறர்கள்!
கங்கைக் கரைக்குச் சென்றால், ஏழைக் கிராமவாசிகள் தக்ஷிணை கொடுத்தாலொழிய ஒருவிதக் கிரியையும் செய்யமுடியாது என்று பிடிவாதம் செய்யும் பண்டாக்களைக் (புரோகிதர்கள்)காணலாம்.
குடும்பத்தில் பிரசவமோ, கலியாணமோ, சாவோ எது நேர்ந்தாலும் புரோகிதன் வந்துவிடுறோன்.உடனே அவனுக்குத் தக்ஷிணை கொடுத்துத்தான் ஆகவேண்டும்.
ஒவ்வொரு மதத்திலும் இப்படியேதான்.
ஹிந்து,கிறிஸ்தவம், இஸ்லாம்,ஜாராஷ்டிரம் எதுவாயினும் சரி,இதற்கு விலக்கு இல்லை. தன்னிடத்தில் நம்பிக்கை
கொண்டோரிடமிருந்து பணம் பறிப்பதற்கு ஒவ்வொன்றும் தனி முறைகளைக் கையாளுகிறது.
ஹிந்து மதத்தின் முறைகள் நமக்குத் தெரிந்தே இருக்கின்றன.
இஸ்லாம் மதத்தில் புரோகிதர்கள் இல்லை என்று கருதப்படுகிறது.
முற்காலத்தில் இது அம்மதத்தினரை மதச் சுரண்டலிலிருந்து ஓரளவு காப்பாற்றி வந்தது.
ஆனால், மத விஷயங்களில் தேர்ச்சிபெற்றவர்கள் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் மனிதர்களும் வகுப்புக்களும் தோன்றலானார்கள்.
அம்மத சாஸ்திர பண்டிதர்கள் மௌல்விகள் என்றும் முல்லாக்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

தேர்தலில் வெற்றிபெறுவதற்காக நாட்டு மக்களை கொல்லவும் துணிந்துவிட்டீர்கள்” - நடிகர் சித்தார்த்!

“தேர்தலில் வெற்றிபெறுவதற்காக  நாட்டு மக்களை கொல்லவும் துணிந்துவிட்டீர்கள்” - அமைச்சரை விளாசிய சித்தார்த்!

Siddharth @Actor_Siddharth · 9 You are not a Covid warrior @drharshvardhan .

You in fact are an ally of Covid. Keep on murdering people in the name of winning elections at all cost. Then murder more people with moronic overcrowded religious gatherings. History will never forget it forgive you. #Shame

kalaignarseithigal.com :மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், மன்மோகன் சிங்குக்கு எழுதிய பதில் கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஹர்ஷ்வர்தனை கடுமையாக விமர்சித்துள்ளார் நடிகர் சித்தார்த்.முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சமீபத்தில் பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி குறித்து எழுதிய கடிதத்தில் ஐந்து அம்ச யோசனைகளை முன்வைத்து நிறைவேற்ற வேண்டுமென்று கோரினார். அதில், தடுப்பூசி தட்டுப்பாடின்றி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தார்.

தாமதமாகும் தமிழகத் தேர்தல் முடிவு...? வாக்கு எண்ணும் மேஜைகள் குறைப்பு !

Vivekanadan T : அதாவது காலையில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்து நள்ளிரவு வரை செல்லும் போல... இப்படி தேர்தல் இறுதி முடிவு வெளியாவது மிக தாமதமாக போவதை அந்த சூழலை ஏற்றுக்கொள்வதா இல்லையா...? திமுக தலைமையும் மற்றும் அதன் கூட்டணி தலைவர்களும் இந்த விஷயத்தில் ஆணையத்திடம் இருந்து தெளிவான பதிலை எதிர்பாருங்கள்....குறிப்பாக ஏதாவது உள்குத்து இருக்கிறதா என்று ஆய்வு செய்யுங்கள்...
May be an image of text that says 'வாக்கு இயந்திரங்கள் அதிகம்- மேசைகள் குறைவு அதிக வாக்குச்சாவடிகள் கொண்ட தொகுதிகளில் 40 சுற்றுகளுக்கு மேல் வாக்கு எண்ணிக்கை நடத்த திட்டம்'

   :  

 நக்கீரன் :சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்து வாக்கு எண்ணிக்கைக்காக தமிழகம் காத்திருக்கிறது.
'ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் கட்டுப்பாட்டு அறையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
வரும் மே 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது.
இந்நிலையில், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாஹு தலைமையில் மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக இன்று நடைபெற்றது. இதில் கரோனா இரண்டாம் அலை பரவல் தீவிரம் அடைந்திருக்கும் சூழலில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தேர்தல் வாக்கு எண்ணும் ஒவ்வொரு மையத்திலும் வாக்கு எண்ணும் மேஜைகளைக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒரு தொகுதிக்கு 14 மேஜைகள் இருக்கும் நிலையில், கரோனா பரவல் காரணமாக சமூக இடைவெளியைப் பின்பற்றுவதற்காக, 7 அல்லது 10 மேஜைகளாகக் குறைக்கப்படவுள்ளது.
மேஜை எண்ணிக்கை ஏழா? அல்லது பத்தா? என்பதை வாக்கு எண்ணும் மையத்தின் பரப்பளவைப் பொறுத்து இறுதி செய்யப்பட உள்ளது. கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் கூடுதலாக 25 ஆயிரம் வாக்குச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டிருந்தது.

மஹாராஷ்டிராவுக்கு ரெம்டேசிவர் மருந்தை கொடுக்க மத்திய பாஜக அரசு முட்டுக்கட்டை! குஜராத்தி கம்பனிகளால் மருந்து பதுக்கல் கடத்தல்

May be an image of 1 person and text that says 'SHOCKING NEWS Mumbai Police Seized 4.5Cr Worth Of Remdesivir Stock That Were Being Secretly Moved By Gujarat Company. BJP Leader Devendra Fadnavis Claims, BJP Has Ordered This Stock From Daman & Gujarat. भाजप ाराष्ट्र INQUILAB INDIA Remdesivir DRUG While Maharashtra Govt Is Literally Begging Central For Remdesivir, BJP Leader Fadnavis Is Silently Procuring The Stock From Gujarat Firm Without Informing To State Govt & Planning To Distribute Them From His Party Office. BJP Is Playing Filthy Politics With The Lives Of Innocent People.'
Don VS : மஹாராஷ்டிரா மாநிலத்தில் ரெண்டு /மூன்று நாட்களுக்கு முன்னர் கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் ரெம்டேசிவர் மருந்து தட்டுப்பாட்டை போக்க பல்வேறு நிறுவனங்களை மஹாராஷ்டிரா அரசு விசாரித்து பார்க்கிறது. அப்போது, கிட்டத்தட்ட 12 மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் சொன்ன பதில், மத்திய பிஜேபி அரசு மஹாராஷ்டிராவுக்கு ரெம்டேசிவர் மருந்தை கொடுக்க தடை போட்டுள்ளது, ஒரு வேளை மீறி கொடுத்தால் தங்களது லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்பது. இந்த தகவலை மஹாராஷ்டிரா அமைச்சர் தனது டிவிட்டர் பக்கத்தில் சொல்லியிருக்கிறார். இதை தொடர்ந்து, பிரதமர் அலுவலதிற்கு ஆக்சிஜன் மற்றும் மருத்து தட்டுப்பாடு தொடட்பாக பேச மஹாராஷ்டிரா முதல்வர் போன் செய்கிறார். பிரதமர் அலுவலகம் சொன்ன அலட்சிய பதில், "பிரதமர் மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதால் , இப்போது அவரை தொடர்பு கொள்ள முடியாது என்பது.".

ஸ்டாலின் அமைச்சரவை இப்படித்தான் இருக்குமாம்: கொடைக்கானல் ஆலோசனை

tamil.indianexpress.com : தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளுக்காக தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள். இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை அறிவிப்பதற்கு 5 மாதங்களுக்கு முன்னதாகவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் தனது சூறாவளி பிரசாரத்தை தொடங்கினார். அப்போது தொடங்கிய தேர்தல் சூறாவளி பிரசாரப் பயணம் தேர்தல் அறிவித்த பிறகு உச்சத்தை அடைந்து வாக்குப்பதிவு முடிந்த பிறகுதான் முடிந்தது. 6 மாங்களுக்கு மேலாக, ஓய்வில்லாத தேர்தல் பிரசாரத்தில் ஏற்பட்ட அலைச்சலில் இருந்து ஓய்வெடுப்பதற்காக ஏப்ரல் 16ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் புறப்பட்டு சென்றார். கொடைக்கானலில் மு.க.ஸ்டாலின் அவரது மனைவி துர்கா, மகன் உதயநிதி, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் என குடும்பத்தினர் அனைவரும் கொடைக்கானலில் தனியார் விடுதியில் ஓய்வெடுத்து வருகிறார்கள்.

அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்று நம்புகிறார்களாம்! EVM பிராடு வேலை பார்த்துவிட்டார்களோ என்ற சந்தேகம் வருமா? வராதா?

ரிசல்ட்:  முதல்வர் கணிப்பில் முரண்படும் அமைச்சர்!

மின்னம்பலம்  : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (ஏப்ரல் 19) குடல் இறக்க அறுவை சிகிச்சைக்காக சென்னை அமைந்தகரையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது ஏற்கனவே மருத்துவர்களின் ஆலோசனையோடு திட்டமிடப்பட்ட ஒன்று என்கிறார்கள் முதல்வர் வட்டாரங்களில்.

இதற்கிடையே தேர்தலுக்குப் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு தரப்பினரிடமும் பேசி தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று தரவுகளையும் கள அனுபவம் மூலம் கிடைக்கும் தகவல்களையும் பெற்று வந்தார்.

முதல்வரின் தேர்தல் வியூக வகுப்பாளராகச் செயல்பட்டுவரும் சுனில், “அதிமுக கூட்டணி 85-90 இடங்களில் வெற்றிபெறுவது உறுதி. மேலும் ஒரு 27 தொகுதிகளில் கடுமையான இழுபறி நிலவுகிறது. அதிலும் அதிமுகவுக்கே அதிக தொகுதிகள் கிடைக்கும்” என்று முதல்வரிடம் ஒரு ரிப்போர்ட் அளித்திருந்ததாக ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.

டெஸ்லா மின்சார கார் தீப்பற்றி இருவர் உயிரிழப்பு! பேட்டரி வெடித்து கட்டுக்கடங்காத தீ ..4 மணித்தியாலங்களாக எரிந்த கார்

BBC tamil : அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஆளில்லா டிரைவர் ரக டெஸ்லா கார் வேகமாக மரத்தின் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் அதில் இருந்த இரண்டு பேரும் பலியாகினர். கடந்த சனிக்கிழமை இரவு நடந்த இச்சம்பவத்தின் மேலதிக தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. 2019ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்ட அந்த டெஸ்லா எஸ் ரக கார், ஸ்பிரிங் நகர சாலையின் வளைவில் மிக வேகமாக சென்றபோது தானியங்கியாக கட்டுப்பாட்டுக்கு வர இயலாமல் மரத்தில் மோதியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் காரில் பயணம் செய்த 50 வயதுகளில் இருந்த முன் பக்கத்தில் அமர்ந்தவரும் பின் பக்கத்தில் அமர்ந்திருந்தவரும் பலியானார்கள். நடந்த சம்பவம் தொடர்பாக டெஸ்லா நிறுவனத்திடம் கருத்து கேட்க பிபிசி முயன்றபோதும் அந்நிறுவனம் எந்த பதிலையும் தரவில்லை.

காவல்துறைக்கு கிடைத்த ஆதாரங்களின்படி, மரத்தின் மீது கார் மோதியபோது அதில் ஓட்டுநர் இருக்கையில் யாரும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது என்று ஹாரிஸ் கவுன்டி காவலர் மார்க் ஹெர்மன் கூறினார். இந்த வழக்கு தொடர்து விசாரணையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று ஸ்டாலின் கடிதம்.. இன்று மத்திய அரசு அறிவிப்பு.. இனி மாநில அரசுகளில் நேரடி தடுப்பூசி கொள்முதல்

மே 23க்கு பிறகு...தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின்! -செந்தில் பாலாஜி ஆருடம்  | dmk candidate senthil balaji says stalin became tn cm - The Subeditor  Tamil

Vigneshkumar -  tamil.oneindia.com :  டெல்லி: நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ள நிலையில்,
மாநில அரசுகளுக்கு தனியாக தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் தடுப்பூசிகள் மட்டுமே ஒரே நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
இதனால் தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவாக மேற்கொள்ள மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க உதவும் வகையில், தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உடனடி கடன் வழங்குவதாக அறிவித்துள்ளது.

சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு சீல்: 39 பேருக்கு கொரோனா!

சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு சீல்:  39 பேருக்கு கொரோனா!

 minnambalam  : சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோர்ஸில் பணியாற்றும் ஊழியர்களில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தினமும் 10 ஆயிரத்துக்கு குறையாமல் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றது. குறிப்பாக, பெரிய வணிக வளாகங்கள், துணிக்கடைகள், கோயம்பேடு சந்தை போன்ற பகுதிகளில் 2 வாரங்களுக்கு ஒருமுறை பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.   இந்நிலையில், புரசைவாக்கம் கரியப்பா தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸில் பணியாற்றும் 360 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த சனிக்கிழமை 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள், தண்டையார்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திங்கள், 19 ஏப்ரல், 2021

மும்பை ஓடிவரும் ரெயிலின் முன்பு பாய்ந்து சென்று குழந்தையை காப்பாற்றிய மனித நேயன்

May be an image of 1 person and beard

 Shahjahan R  : மும்பை ரயில்வே பாயின்ட்ஸ்மேன் மயூர் ஷெல்கே ஒரு குழந்தையைக் காப்பாற்றிய வீடியோவை முந்தைய பதிவில் பார்த்திருப்பீர்கள்.
அதில் இரண்டு விஷயங்கள்.
அம்மா அந்தக் குழந்தையைக் காப்பாற்ற முனையவில்லையே என்ற கேள்வி ஒன்று. திகிலடித்துப் போயிருக்கலாம் என்றுதான் நினைத்தேன்.
ஆனால், அந்தத் தாய் பார்வையற்றவர். அதனால்தான் பையனின் குரலைக் கேட்டு எங்கே எங்கே என்று தடுமாறுகிறார். (செய்தியில் பார்த்தேன்.)
இன்னொரு விஷயம் என் ஊகம். வீடியோவை கவனமாகப் பார்த்தபோது அதை கவனித்தேன் —
விழுந்தது தெரிந்ததும் ஓடி வருகிறார்.
ஆனால் ஓடிவரத் துவங்கியபிறகு தன் உயிர் பற்றிய அச்சம் வருகிறது.
ஒரு கணம், ஒரே ஒரு இமைப்பொழுது, தண்டவாளத்திலிருந்து அந்தப்பக்கம் போய்விடலாம் என்று நினைக்கிறார்.
ஆனால் மனதுக்குள் தொலைவையும் ரயில் வேகத்தையும் கணக்கிடுகிறார். காப்பாற்றிவிட முடியும் என்ற நம்பிக்கை வருகிறது.
மறுபடி ஓடுகிறார். அந்த நான்கைந்து விநாடிகளுக்குள் என்ன வேகமாக அவருடைய மனது கணக்குப் போட்டிருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன். அபாரமான presence of mind.
அந்த ஒரு கணத்தின் தடுமாற்றத்தை, அதை வென்று அவர் ஓடுவதை, வீடியோவில் 18-19ஆம் நொடிகளில் கவனிக்கலாம்.
#salute_mayur_shelke

மன்சூர் அலிகான் பேட்டியில் சில உண்மைகள் இருக்கத்தான் செய்கிறது?

May be an image of 1 person, standing and outdoors
Abilash Chandran : கொரோனா: தேசம் தழுவிய பீதியும் நிஜமும்.அண்மையில் நடிகர் விவேக் காலமானதை ஒட்டி மன்சூர் அலிகான் அளித்த ஆவேசப் பேட்டியை பார்த்திருப்பீர்கள். தடுப்பூசிக்கும், கொரோனா நோய்த்தொற்று மீதான அச்சத்துக்கும் எதிராக அவர் வைத்த குற்றச்சாட்டுகள், சதித்திட்ட கற்பனைகள் தவறாக பலருக்கும் பட்டது. கடுமையான கண்டனங்கள் எழுந்தன. இருந்தாலும், அவர் சொன்னதில் சிறிது உண்மை உள்ளதாகவே எனக்குத் தோன்றியது. இது நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருவது தான் - இதுவரை கொரோனாவால் நேரடியாக மரணமுற்றவர்களில் இளைஞர்கள், 60 வயதுக்குக் குறைவானவர்கள் சொற்பமே. Worldometer இணையதளத்தில் இருந்து புள்ளிவிபரத்தை தருகிறேன்:
கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள்: 15, 061, 919.
குணமானவர்கள்: 12, 953, 821
இறந்தவர்கள்: 1, 78, 793
அதாவது பெரும்பாலானோர் பிழைத்து விடுகிறார்கள்.
ஒரு சிறிய சதவீதத்தினர் பேர் மட்டுமே மரணமடைகிறார்கள்.
இருந்தும் நாம் ஏன் கொரோனா வந்தால் அடுத்த நிமிடமே மக்கள் விழுந்து துடிதுடித்து இறந்து விடுவார்கள் என அஞ்சுகிறோம்? விபத்திலும், பல்வேறு நோய்களாலும் இதை விட அதிகமானோர் தினசரி இறக்கும் போது ஏன் கொரோனாவுக்கு மட்டும் இவ்வளவு அஞ்சுகிறோம்?

பெரியார் ஈ.வெ.ரா சாலை : 4 அடியில் எழுதப்பட்டிருப்பதை அழித்து 40 அடிக்கு!

பெரியார் ஈ.வெ.ரா சாலை : 4 அடியில் எழுதப்பட்டிருப்பதை அழித்து 40 அடிக்கு எழுத வைத்தமைக்கு நன்றி!
kalaignarseithiga -Prem Kumar : பெரியார் சாலையை, “கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு” என்று பெயர் மாற்றம் செய்ததற்கு கடும் கண்டங்கள் எழுந்த நிலையில், பூந்தமல்லி செல்லும் சாலையில் “பெரியார் ஈ.வெ.ரா சாலை” என சுவற்றில் எழுதப்பட்டுள்ளது. சென்னை- பூந்தமல்லியை இணைக்கும் ஈ.வெ.ரா பெரியார் சாலை கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோடு என பெயர் மாற்றப்பட்ட புகைப்படம் இணையதளத்தில் வைரல் ஆனது. ஆங்கிலேயர்கள் காலத்தில் சென்னை ஜீரோ பாயிண்டிற்கும் பூந்தமல்லிக்கும் இடையே சாலை உருவாக்கப்பட்டு, அதற்கு கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோடு என பெயரிடப்பட்டது.

வேலூர் அடுக்கம்பாறையில் ஆக்சிஜன் குழாய் வெடித்தது . ஐந்து நோயாளிகள் உயிரிழப்பு!@ அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி

tamil.samayam.com :  வேலூர்மாவட்டம், அடுக்கம்பாறையில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கொண்டு செல்லப்படும் குழாய் திடீரென வெடித்தது

இதனால் ஆக்சிஜன் கொள்கலனிலிருந்து குழாயின் வழியாக ஆக்சிஜன் வீணாக வெளியேறியத. இதனால் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்காததால் காலை முதல் இதுவரையில் இம்மருத்துவமனையில் ராஜேஸ்வரி (68),பிரேம்(40) ,செல்வராஜ் (66),மற்றும் 28வயது மதிக்கதக்க பெண் உள்பட 5 பேர் பலியாகினர்.
உயிரிழப்பு எண்ணிக்கை உயரலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால் நோயாளிகளின் உறவினர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்கும் வகையில் இருந்தது.

அமித்ஷா : கொரோனாவைவிட தேர்தல் அரசியலே எங்களுக்கு முக்கியம் : பத்திரிகையாளர் சந்திப்பில் உண்மையை ..

kalaingarseythikal : தேர்தல் பிரச்சாரத்தையும், கொரோனா பரவல் அதிகரிப்பையும் இணைத்து பேசாதீர்கள்” என கொரோனா பரவல் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றின் அபாயகரமான பரவல் காரணமாக தமிழகம் உட்பட 16 மாநிலங்களில் நிலைமை மோசமாகி வருகிறது.                    மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், டெல்லி, சட்டீஸ்கர், கர்நாடகா, மத்தியபிரதேசம், கேரளா, தமிழ்நாடு, குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஒவ்வொரு நாளும் 80 முதல் 82 சதவீத புதிய நோயாளிகள் கொரோனாவால் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.                        இதனால் மாநிலத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க மாநில அரசு முடிவு செய்தது. இதனால் பல்வேறு மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அதேவேளையில் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் போதிய கட்டுப்பட்டாடு நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது

வாக்கு எண்ணிக்கை 2ந்தேதி காலை 8.30 மணிக்கு தொடங்கும்- தேர்தல் அதிகாரி தகவல்

May be an image of 2 people, people standing and text that says 'இருப்பது 783 ஓட்டுகள்.. பதிவான ஓட்டுக்கள் 873!! எக்ஸ்ட்ரா 90 எப்படி வந்துச்சு? மனு அளித்த தங்க தமிழ்ச்செல்வன்! 60 18 Apr 2021 16:24 போடி தொகுதிக்கு உட்பட்ட 3 வாக்குச்சாவடிகளில் மொத்தம் வாக்களித்த வாக்காளர்களின் எண்ணிக்கையை விட, பதிவான வாக்குகள் அதிகமாக இருப்பதால், சந்தேகத்தில் உள்ள திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தேனி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்துள்ளார்.'

maalaimalar : வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்றும் எங்கும் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார். சென்னை: தமிழகத்தில் கடந்த 6-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகள் அனைத்தும் தமிழகம் முழுவதும் 75 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகப்புடன் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் (மே) 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதுதொடர்பாக இந்திய தலைமை தேர்தல் அதிகாரி இன்று மாலையில் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடனும் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்துகிறார். 

இதுபற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியதாவது:-வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பாக உள்ளது. எங்கும் எந்த விதி மீறலும் நடைபெறவில்லை. வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தலைமை தேர்தல் ஆணையம் இன்று மாலையில் ஆலோசனை வழங்க உள்ளது.

திமுக கூட்டணிக்கு 205 இடங்கள்.. ஐபேக் நடத்திய எக்சிட் போல்!

minnambalam : ஏப்ரல் 6 ஆம் தேதிக்கும் மே 2 ஆம் தேதிக்குமான இடைவெளியில் தமிழக அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் வாக்குப் பதிவு சதவிகிதத்தையும், மற்ற கணக்குகளையும் வைத்துக் கொண்டு தலையை பிய்த்துக் கொண்டிருக்கின்றன....

வாக்குப் பதிவுகளுக்கு பிந்தைய கணிப்பான எக்சிட் போல் எனப்படும் முடிவுகளை வெளியிட ஏப்ரல் 29 வரை தடை இருப்பதால் முன்னணி செய்தி நிறுவனங்களுக்காக காத்திருக்காமல், கட்சிகளும் தங்களுக்குத் தாங்களே ஏஜென்சிகள் மூலமாக அந்த வேலையைச் செய்து வருகின்றன.... எக்சிட் போல் விஷயத்தில் ஐபேக் தனது அனுபவத்தை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு பணிகளைச் செய்துள்ளது. இது தொடர்பாக ஐபேக் வட்டாரத்தில் பேசியபோது,’  “இதற்கு முன்பு நடந்த தேர்தலில் தமிழகத்தில் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் எத்தனை ஓட்டுகள் இருக்கின்றன, எத்தனை ஓட்டுகள் பதிவாகின, அவற்றில் எந்தக் கட்சிக்கு எத்தனை ஓட்டுகள் விழுந்தன என்ற டேட்டா வெளிப்படையாகவே கிடைக்கிறது. இதன் அடிப்படையில் 2011, 2016 சட்டமன்றத் தேர்தலிலும்,2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் ஒவ்வொரு பூத்திலும் எவ்வளவு ஓட்டு பதிவாகியிருக்கிறது, யார் யாருக்கு எத்தனை ஓட்டுகள் பதிவாகியிருக்கிறது என்பதை எடுத்து வைத்துக் கொண்டோம்.

நடிகர் விவேக் திடீர் மரணம்... தடுப்பூசி சர்ச்சை... உண்மைக் காரணத்தைக் கண்டுபிடிப்பது எப்படி?

Vivek

vikatan   க.சுபகு ணம்  :  நடிகர் விவேக் மரணத்துக்கும், இறப்பதற்கு முந்தைய நாள் எடுத்துக்கொண்ட தடுப்பூசிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதற்கான ஆதாரங்களை ஏன் கண்டுபிடிக்கவில்லை?   நடிகர் விவேக் மரணம், தடுப்பூசியால் நிகழ்ந்திருக்குமா என்பதே இப்போது பலருடைய கேள்வியாக இருக்கிறது. விவேக், அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கே நேரடியாகச் சென்று, ''விவேக் மாரடைப்பால் பாதிக்கப்பட்டிருப்பதற்கும், நேற்று அவர் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை'' என்று டாக்டர்களை முன்னிலையில் பேட்டியளித்தார் தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்.

இந்நிலையில், சனிக்கிழமையன்று (17 ஏப்ரல் 2021) அதிகாலையில் விவேக் மரணமடைந்துவிட்டார் என்கிற செய்தியை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட பிறகு, அவருடைய மரணத்தையும் கொரோனா தடுப்பூசியையும் இணைத்து ஆங்காங்கே விவாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.