சனி, 12 ஜூலை, 2025
இந்துத்துவத் திரைப்படங்களில் நாஜி பிரச்சாரத்தின் தாக்கம்!
மின்னம்பலம் - Kavi : ஹர்ஷ் மந்தர்
இந்திய மக்களுக்கும் அவர்களின் பிரபலமான சினிமாவுக்கும் இடையே உள்ள தனித்துவமான உறவு காரணமாக, திரைப்படங்கள் பெரும்பாலும் ஒரு காலக்கட்டத்தின் ஆதிக்கச் சித்தாந்தத்தைப் பிரதிபலிக்கின்றன. அவை அரசியல், சித்தாந்தச் செய்திகளைக் கொண்டுள்ளன. influence of Nazi propaganda on Hindutva films
1950களிலும் 60களிலும், இந்தி சினிமா நல்லிணக்கம், பன்முகத்தன்மை, அநீதிகளை எதிர்த்தல் ஆகியவற்றைக் கொண்டாடி, மென்மையான சோஷலிசம், காந்திய மனிதநேயம் ஆகியவற்றைப் பிரதிபலித்தது. ‘மதர் இந்தியா’, ‘ஆவாரா’, ‘தர்மபுத்ரா’ போன்ற பிரபலமான திரைப்படங்கள், இடதுசாரிக் கவிஞர்களின் பாடல்களைக் கொண்டு, மதச்சார்பின்மை, இந்து-முஸ்லிம் ஒற்றுமை, சமூக நீதியை முன்னிறுத்தின.
அகமதாபாத் விமான விபத்து: போயிங் விமானங்களின் எரிபொருள் சுவிட்ச் குறித்து 2018-லேயே எச்சரித்த அமெரிக்கா
மாலை மலர் : 270 பேர் உயிரிழந்த அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இந்த 15 பக்க அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பிரிவு வெளியிட்டுள்ளது.
விபத்து நடந்த இடத்தின் ட்ரோன் புகைப்படம் மற்றும் வீடியோகிராஃபியை ஆய்வு செய்து விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் அதிகபட்ச வேகமான 180 நாட்களை எட்டியது. இதைத் தொடர்ந்து, விமானத்திற்கு எரிபொருளை வழங்கிய இரண்டு சுவிட்சுகளும் அணைக்கப்பட்டன.
ஏர் இந்தியா - - ஏன் எரிபொருள் வால்வை அடைத்தீர்கள்? விபத்து நடந்தது இதனால் தான்
மாலை மலர் : குஜராத் மாநிலம் ஆமதா பாத்தில் இருந்து கடந்த 12-ந்தேதி லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 2 நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் 270 பேர் உயிரிழந்தனர். இங்கிலாந்து சேர்ந்த விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்ற பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
இந்த விபத்து தொடர்பாக விமான விபத்து புலனாய்வு அமைப்பின் (ஏ.ஏ.ஐ.பி.) சிறப்புக் குழு விசாரணை நடத்தியது. இதில் இந்திய விமானப்படையின் மூத்த விமானிகள், அமெரிக்க தேசிய பாதுகாப்பு வாரியத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள், ஐ.நா. சபையின் சர்வதேச விமான போக்குவரத்து கழகத்தின் வல்லுநர்கள் இடம் பெற்றனர்.
வெள்ளி, 11 ஜூலை, 2025
மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனை! மகாராஷ்ட்ரா : பள்ளி முதல்வர் உள்பட 5 பேர் கைது
மாலை மலர் : தானே மாவட்டம் சகாப்பூர் பகுதியில் ஆர்.எஸ். தமானி என்ற தனியார் பள்ளி உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறையில் ரத்தக்கறை படிந்து இருந்ததாக கூறப்படுகிறது. கழிவறையை ரத்தக்கறையாக்கிய மாணவியை கண்டறிய பள்ளி ஆசிரியைகள் விசித்திர செயலை அரங்கேற்றினர்.
அதன்படி மாதவிடாய் இருப்பதாகக் கூறிய மாணவிகளின் இடது கை ரேகையை பதிவு செய்தனர்.
அதே நேரத்தில் மாதவிடாய் இல்லை எனக்கூறிய மாணவிகளை கழிவறைக்கு அழைத்து சென்று நிர்வாணப்படுத்தி சோதனை நடத்தி உள்ளனர்.
திரு .அல்பிரட் துரையப்பாவின் தலைமீது எஸ்ஜேவி ல்செவநாயகம் வைத்த முள்கிரீடம்
![]() |
![]() |
ராதா மனோகர் யாழ்ப்பாண பல்கலை கழகம் உருவாவதை எஸ்ஜேவி செல்வநாயகமும் அவரின் தமிழரசு கட்சியும் ஏன் மூர்க்கத்தனமாக எதிர்த்தார்கள்?
தமிழர்களின் கல்வி சார்ந்த இவ்விடயத்தை வரலாற்று ஆய்வுக்கு உட்படுத்த வேணடும்,.
தமிழரசு கட்சியின் மேட்டுக்குடி பாசிசம் அம்பலமாகுவதை தெளிவாக காணலாம்!
ஆரம்பம் முதலே யாழ்ப்பாண பல்கலை கழகம் அமைவதை இவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள் என்பதை இப்போது நம்புவது மிகவும் சிரமமாக இருக்கும்.
அந்த அளவு இவர்கள் மோசமானவர்களா என கருத தோன்றும் ,
இது ஒரு அதிர்ச்சி அளிக்கும் விடயமாகும்!
இலங்கை தமிழ் தேசியர்கள் அடிப்படையில் சித்தாந்த ரீதியில் வெறுமையானவர்கள் என்பதை முதலில் ஞாபகத்தில் இருத்தி கொள்ளவேண்டும்.
இவர்களின் வெறுப்பு அரசியல் சித்தாந்தத்திற்கு மக்கள் கல்வி அறிவு பெறுவது என்பது உகந்தது அல்ல என்பதுவும் ஒரு முக்கிய காரணமாகும்..
தமிழரசு கட்சியின் அசல் வாரிசுகளான புலிகள் இயக்கம் கல்வியாளர்களை வகை தொகை இல்லாமல் கொலை செய்த்தை அவ்வளவு சுலபத்தில் கடந்து போக முடியாது அல்லவா?
வியாழன், 10 ஜூலை, 2025
அதிமுக நிர்வாகியின் திருமண மண்டபத்தை இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு! அனுமதி பெற்றது குடோனுக்கு
Hindu Tamil : அனுமதி பெற்றது குடோனுக்கு, கட்டியது மண்டபம்: அதிமுக நிர்வாகியின் திருமண மண்டபத்தை இடிக்க ஐகோர்ட் உத்தரவு
மதுரை: திருப்புவனத்தில் குடோன் கட்ட அனுமதி பெற்று, திருமண மண்டபம் கட்டிய விவகாரத்தில் 12 வாரத்தில் திருமண மண்டபத்தை இடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த செந்தில்குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: திருப்புவனம் சுவாமி சன்னதி தெருவில் அதிமுக ஒன்றிய செயலாளர் புவனேந்திரன் என்பவருக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. இந்த இடத்தில் குடோன் கட்ட அனுமதி பெற்று திருமண மண்டபம் கட்டியுள்ளார்.
மாத்தையாவான மல்லை சத்யா- வைகோ பகிரங்கப் பேட்டி! சத்யா ஆவேச பதில்!
மின்னம்பலம் : பிரபாகரனுக்கு எதிராக மாத்தையா எவ்வாறு துரோகம் செய்தாரோ, அதேபோல தனக்கு எதிராக மல்லை சத்யா துரோகம் செய்திருக்கிறார் என்ற தொனியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கொடுத்த பேட்டி அக் கட்சிக்குள் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. vaiko Mallai Sathya
கடந்த ஜூலை 3 ஆம் தேதி மின்னம்பலத்தில், ’திமுகவோடு தொடர்பு… எனக்கு எதிராக லாபி… வெளியே போங்க… மல்லை சத்யாவை எச்சரித்த வைகோ’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதில் ஜூன் 29ஆம் தேதி மதிமுக நிர்வாக குழு கூட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவை, பொதுச் செயலாளர் வைகோ நேருக்கு நேராக கடுமையாக விமர்சித்து பேசியதை பதிவு செய்திருந்தோம்.
ரிதன்யா தற்கொலை: ரிதன்யாவின் அம்மா சொன்ன இரகசிய தகவல்; செக்ஸாலஜிஸ்ட் விளக்கம்!
vikatan : ”மனைவியின் கையை, காலை கட்டிப்போட்டுவிட்டு, அடித்தபடி செக்ஸ் செய்வார்கள். இப்படி செய்தால்தான் அவர்களுக்கு உச்சக்கட்டம் கிடைக்கும்.”
வரதட்சணைக் கொடுமையை ஒட்டிய தற்கொலை என பதைபதைக்க வைத்த ரிதன்யா மரணம், அதன்பிறகு அவருடைய அம்மாவின் பேச்சுகளின் வழியே அதில் ‘மேரிட்டல் ரேப்’ (‘Marital rape’) என்கிற பிரச்னை இருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்பது தெரிய வந்தது.
இதற்கு முன்னரும் எத்தனையோ பெண்களின் உடலையும் மனதையும் நோகடித்த பிரச்னைதான் இது.
புதன், 9 ஜூலை, 2025
China ஜி ஜின்பிங் முதுகில் குத்திய ஆதரவாளர்.. சீனாவின் அடுத்த அதிபர் யார்? லிஸ்ட்டில் 2 தலைகள்.. பின்னணி
BBC : பெய்ஜிங்: சீன அதிபராக ஜி ஜின்பிங் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் பொதுவெளியில் அதிகம் வருவது இல்லை.
சீனாவில் அதிபராக இருக்கும் நபர் பொதுவெளியில் தோன்றவில்லை என்றால் அதிகார மாற்றம் ஏற்படும் என்பது கடந்த கால வரலாறு.
இதனால் ஜி ஜின்பிங் விரைவில் அதிபர் பதவியில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
இது நடக்கும் பட்சத்தில் சீனாவின் புதிய அதிபராக யார் வருவார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதில் ஜி ஜின்பிங் முதுகில் குத்திய ஜாங் யூக்ஸியா மற்றும் வாங் யாங் ஆகியோரின் பெயர்கள் டாப்பில் உள்ளனர்.
செவ்வாய், 8 ஜூலை, 2025
குலக்கல்வியை இலங்கையில் முன்னெடுத்த தமிழரசு கட்சி - எஸ்ஜேவி செல்வநாயகம் - 1960
![]() |
ராதா மனோகர் குழந்தைகளுக்கு படிப்பிப்பதோடு (குல) தொழிலையும் சொல்லியும் தரவேண்டுமாம்!
குல தொழிலில் என்ன வசை இருக்கிறது ?
1960 ஆம் ஆண்டு எஸ்ஜேவி செல்வநாயகத்தின் இலங்கை தமிழரசு கட்சி,
தமிழர் உரிமைக்காக மாபெரும் சத்தியா கிரக போராட்டம் நடத்தியதாக கூறப்படும்,
அந்த காலகட்டத்தில் தமிழரசு கட்சியின் சுதந்திரன் பத்திரிகையில் வந்த செய்தி இது!
அப்போது சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியர் பெயர் மகேஸ்வர சர்மா.
குலுக்க பட்டர்களின் அசல் வாரிசுகள் இவர்கள்
அழிந்து கொண்டிருக்கும் ஜாதியை அழியவிடாமால் பாதுகாப்பதற்கு குழந்தைகளுக்கு குலத்தொழிலை கற்பிப்பதுதான் ஒரே வழி என்று ராஜாஜி முன்னெடுத்து செருப்படிவாங்கியது வரலாறு!
அன்று ராஜாஜி முன்னெடுத்த குலத்தொழில் சதி முயற்சியை முறியடித்தது திராவிட இயக்கம்!
திங்கள், 7 ஜூலை, 2025
இலங்கை முஸ்லிம் சிறுமிகளிடம், விருத்தசேதன தாக்கம் - ஆய்வில் தெரிய வந்த விடயங்கள்
![]() |
ஜாப்னா முஸ்லீம் : இலங்கை முஸ்லிம் சிறுமிகளிடம், விருத்தசேதன தாக்கம் - ஆய்வில் தெரிய வந்த விடயங்கள்
“நான் பெண் குழந்தைகளுக்கான விருத்த சேதனம் பற்றிய ஆய்வாளர்களில் ஒருவராக ஆய்வினை மேற்கொண்டேன். இவ்வாய்வினைச் செய்யத் தொடங்கிய பிறகே, இது இஸ்லாத்தில் இல்லாத ஒன்று எனவும், அல் குர்ஆன் மற்றும் ஹதீஸிலோ கூறப்பட்டவில்லை என்பதோடு, மூடநம்பிக்கைகள், சமூக வழக்காறுகளிலிருந்து மட்டுமே பரம்பரை பரம்பரையாக இவை பின்பற்றப்படுகின்றன என்ற உண்மையை நான் அறிந்து கொண்டேன். அதனால், நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். கத்னா பற்றிய விளக்கமின்றி நான் எனது மகளுக்கும் கத்னாவைச் செய்து அவளுடைய பாலியல் ரீதியான உணர்வைக் கட்டுப்படுத்தக் காரணமாக இருந்துள்ளேன் என்பதை நினைக்கும்போது கவலையாக உள்ளது. என்னுடைய மன நிலையினை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இனிவரும் சந்ததிக்கு இவ்வாறான அநீதி இடம்பெறும்போது, அதிலிருந்து அவர்களைப் பாதுகாப்பேன்.”
இலங்கை தமிழர் முகாம்களில் கட்டப்பட்ட 729 வீடுகளை திறந்து வைத்த முதல்வர்-
மாலை மலர் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 36 கோடியே 62 லட்சம் ரூபாய் செலவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூடுதல் கட்டடம்,
17 கோடியே 52 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் செலவில் 4 வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் 65 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் செலவில் 2 வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டடங்கள், என மொத்தம் 54 கோடியே 80 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப் பட்டுள்ள கட்டிடங்களை திறந்து வைத்தார்.
அமேரிக்கா டெக்ஸாஸ் வெள்ளப்பெருக்கு பலர் உயிரிழப்பு சேதம் அதிகம்
tamil.oneindia.com -Rajkumar : அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பெய்த பருவ மழையால் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்தது. இதில் 21 குழந்தைகளும் அடங்குவர் என அதிகாரிகள் உறுதி செய்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், டெக்சாஸ் வெள்ளம் இதுவரை கண்டிராத பேரழிவு என வேதனையுடன் கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.
அமெரிக்காவின் தெற்கு மத்திய டெக்ஸாஸ் மாகாணத்தில் கடந்த சில நாட்களாகவே இடி மின்னலுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் புயலும் வீசி வரும் நிலையில், நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
ஞாயிறு, 6 ஜூலை, 2025
மதுரை அரசு மருத்துவமனையில் அஜித்குமார் தம்பி நவீன்குமார்-!
மின்னம்பலம் - மதி : திருப்புவனம் போலீசார் தாக்குதலில் உயிரிழந்த அஜித்குமாரின் தம்பி நவீன்குமாருக்கு இன்று ஜூலை 6-ந் தேதி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. Custodial DeathAjith Kumar Naveenkumar
சிவகங்கை மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார், திருப்புவனம் போலீசாரின் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சி அடைய வைத்தது. நகை திருட்டு தொடர்பான விசாரணையின் போது அஜித்குமார் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் 5 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.