மாலை மலர் : சென்னை நாடு முழுவதும் வருகிற 15-ந்தேதி நடைபெற உள்ள சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாநிலங்களிலும் உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதைத்தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற வேட்டையில் ஐ.எஸ். பயங்கரவாதியான ரிஸ்வான் அலி என்பவர் கைது செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக ரிஸ்வான் அலி டெல்லியில் முக்கிய பிரமுகர்களின் வீடுகளை நோட்டமிட்டது தெரிய வந்ததையடுத்து டெல்லி முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.
சனி, 10 ஆகஸ்ட், 2024
ஐ எஸ் தீவிரவாதி கைது .. தமிழகத்தில் சுதந்திர தின பாதுகாப்புக்கு 1 லட்சம் போலீசார்
திருகோணேஸ்வரம் கோயிலில் பல கோடி ரூபா பெறுமதியான தாலி கொள்ளை!
தமிழ் மிரர் : திருகோணமலை – திருகோணேஸ்வரம் ஆலயத்தில் தொல்பொருள் பெறுமதியான பல கோடி ரூபா பெறுமதியான தாலி கொள்ளையிடப்பட்டுள்ளது.
சோழர் காலம் முதல் திருகோணேஸ்வர ஆலயத்தில் இருந்து வந்த குறித்த தாலி, போர்த்துக்கேயர் காலத்தில் ஆலயம் உடைக்கப்பட்ட போது சைவ சமயத்தினாரால் பல உயிர் தியாகங்கள் செய்யப்பட்டு காப்பாற்றப்பட்டு பாதுகாப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு பாதுகாக்கப்பட்டு வந்த தாலி, கடந்த வாரம் பகலில் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பகின்றது.
இதனை தொடர்ந்து பொது மக்கள் குரலெழுப்ப தொடங்கிய நிலையில், ஆலய நிர்வாகத்தினர் இவ்விடயத்தை அமைதிப்படுத்தி பொதுமக்களை சமாதானம் செய்ய முயன்றனர்.
வியாழன், 8 ஆகஸ்ட், 2024
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுமா? நாளை தீர்ப்பளிக்கும் சென்னை உயர்நீதிமன்றம்
tamil.oneindia.com - Vigneshkumar : சென்னை: சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாய் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார். இதற்கிடையே இந்த வழக்கில் நாளை காலை தீர்ப்பளிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண் போலீசாரை அவதூறாகப் பேசியதாகக் கைது செய்யப்பட்ட யூ டியூபர் சவுக்கு சங்கரைக் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது தாய் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
ஆம்ஸ்ட்ராங் மகள் பிறந்தநாள் விழாவில் கைதான அஸ்வத்தாமன்.உடனிருந்தே உயிரை பறித்த...
tamil.oneindia.com - Vigneshkumar : சென்னை: பிஎஸ்பி கட்சியின் தமிழ்நாடு தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே இந்த அஸ்வத்தாமன் ஆம்ஸ்ட்ராங் மகளின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட போட்டோ இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
பகுஜன் சமாஜ் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி சென்னையில் அவரது இல்லத்தின் அருகிலேயே வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
தேசிய கட்சியின் மாநில தலைவர் ஒருவரே படுகொலை செய்யப்பட்டது நாடு முழுக்க அப்போது பேசுபொருள் ஆனது. ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தினர்.
திவ்யா சத்யராஜ் : மாதவிடாய் வலியால் துடித்த என்னை! சொந்தக்காரர்களே ஆள் வைத்து அடித்தனர்!
tamil.oneindia.com - Vishnupriya R : கோவை: நான் வளர்ந்த விதத்தை எனது உறவினர்கள் சிலர் அவமானப்படுத்தி பேசி, என்னை கூலிக்கு ஆள் வைத்து அடித்தனர்.
எனக்கு மாதவிடாயின் போது அதிக உதிரப்போக்கு இருந்தது, அங்கிருந்து எப்படியாவது தப்பி சென்னை வந்துவிட வேண்டும் என தைரியமாக போராடி வந்துவிட்டேன் என திவ்யா சத்யராஜ் தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனை தொடர்ந்து அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நீதிமன்றம்
மின்னம்பலம் Kavi : அமலாக்கத் துறை தன்மீது தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய கோரி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
திமுக அமைச்சரவையில் மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் பதவி வகித்து வருகிறார்.
இவர் 2001 – 2006 ஆம் ஆண்டில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2006 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. 2022 ஆம் ஆண்டு அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 6.5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
Bangaladesh முகம்மது யூனுஸ் வங்கதேச இடைக்கால பிரதமராக பதவி ஏற்கிறார் - நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணா்
dinamani.com : வங்கதேச இடைக்கால அரசின் தலைவராகவுள்ள நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணா் முகமது யூனுஸ் இன்று பிற்பகல் தலைநகர் டாக்கா வந்தடைந்தார்.
வங்கதேசத்தில் போராட்டங்கள் வன்முறையாக மாறியதையடுத்து, பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். பின்னர் வங்கதேச நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபர் முகம்மது ஷஹாபுதீன் அறிவித்தார்.
முன்னாள் பிரதிப் பொலிஸ் மாஅதிபருக்கு மரண தண்டனை
தினகரன் : – மனுக்களை தள்ளுபடி செய்து தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம்
– மாணவர் ஒருவரை கடத்திய சம்பவத்திற்கு 4 வருட சிறை
முன்னாள் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் வாஸ் குணவர்த்தன உள்ளிட்ட 6 பேருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை உயர்நீதிமன்றம் இன்று (08) உறுதி செய்துள்ளது.
2013 ஆம் ஆண்டு வர்த்தகர் மொஹமட் ஷியாம் கடத்தப்பட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன அவரது மகன் ரவிந்து குணவர்தன மற்றும் 4 பொலிஸ் அதிகாரிகள் என ஆறு பேருக்கு நீதிமன்றம் மரண தண்டனையை விதித்திருந்தது.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன்
சிவில் அமைப்புகளின் ஒருங்கிணைவுடன் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பொதுச்சபையின் ஏழு பிரதிநிதிகளும் தமிழ்த் தேசிய அரசியல்கட்சிகள் ஏழினது பிரதிநிதிகளும் கூட்டிணைந்து தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பை உருவாக்கியிருந்தனர்.
அவ்வாறு உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை கூடி தமிழ் பொது வேட்பாளரை அறிவித்துள்ளனர்.
புதன், 7 ஆகஸ்ட், 2024
கலைஞரின் 6 ஆண்டு நினைவு நாள்!
ராதா மனோகர் : சுமார் ஒரு நூற்றாண்டு வரலாற்றை சுமந்து சென்ற கலைஞர் கருணாநிதி என்ற மாமனிதர் பற்றி ஆயிரம் கதைகள் கூறலாம்!
ஆனால் கலைஞரின் ஒட்டு மொத்த வரலாறும் ஏறக்குறைய ஒரே ஒரு மையப்புள்ளியை சுற்றியே சுழன்று அடித்ததாகதான் கருதுகிறேன்!
அவரின் வாழ்க்கை வரலாற்று தொடக்கப்புள்ளி என்னவோ திருகுவளையில் நிகழ்ந்த அவரின் பிறப்பில்தான் தொண்டங்கிற்று.
அது ஒரு குழந்தையின் பிறப்பு மட்டுமே.
ஆனால் கலைஞர் என்ற சுயமரியாதைக்காரரின் வரலாற்று திருப்பு முனை என்பது ஒரு பள்ளிக்கூட வாயிலில்தான் தோன்றியது!
அந்த திருக்குவளை பள்ளிக்கூடத்தில்,
கருணாநி உன் மேலங்கியை கழற்றி விட்டு பள்ளிக்கூடத்திற்கு வா என்று ஒரு ஆசிரியரால் கூறப்பட்டது அல்லவா?
அதற்கு அந்த சிறுவன் ,
எனது மேலங்கியை கழற்ற மாட்டேன்,
டாக்டர் அர்ச்சுனா ராமநாதன் பிணையில் விடுதலை!
மருத்துவர் அர்ச்சுனா அவர்கள் நீதிமன்றினால் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தீர்ப்பானது இன்று (7.8.2024) மன்னார் நீதவான் நீதிமன்றினால் வழங்கப்பட்டுள்ளது.
மன்னார் மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அனுமதி இன்றி நுழைந்து கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடமையில் இருந்த மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை சுமத்தி மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தது.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர், கடந்த சனிக்கிழமை மருத்துவர் அர்ச்சுனாவை கைது செய்தனர்.
2026 இல் மீண்டும் திமுகவை அரியணை ஏற்றப்போகும் 16 முக்கிய குறிப்புக்கள் முதல்வர் ஸ்டாலினிடம் கையளிப்பு
tamil.oneindia.com - Rajkumar R : சென்னை: காலை உணவு திட்டத்தின் மூலம் மாணவர்களின் வருகை முழுமை அடைந்துள்ளது என்பதை விட மகிழ்ச்சியான செய்தி இருக்க முடியாது.
மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் பெண்களின் பொருளாதார சுதந்திரம் அதிகரித்துள்ளது எனவும், மக்கள் நல திட்டங்கள் குறித்த அறிக்கை தான் எனக்கு கிடைக்கும் மார்க் ஷீட் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சரும் மாநில திட்டக்குழுவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் மாநில திட்டக் குழுவின் ஐந்தாவது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணைத் தலைவர் ஜெயரஞ்சன், அமைச்சர் தங்கம்
தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வட மாகாண முன்னாள் உறுப்பினர் டெனீஸ்வரனுடன் 22 சட்டத்தரணிகள் அர்சுனாவுக்கு எதிராக வாதிட்டனர்!!
டெனீஸ்வரன் ex Minister of NPC |
Telo MP Adaikalanathan |
newtamils1 : வட மாகாண முன்னாள் உறுப்பினர் டெனீஸ்வரனுடன் 22 சட்டத்தரணிகள் அர்சுனாவுக்கு எதிராக வாதிட்டனர்!!
இதன் காரணமாக வைத்தியர் ராமநாதன் அர்ஜுனாவின் பிணை மறுக்கப்பட்டது
அர்ஜுனாவின் பிணை மனுவுக்கு எதிராக மன்னார் எம்பி அடைக்கலநாதனின் மருமகன் டெனீஸ்வரன் உட்பட 22 தமிழ் சட்டத்தரணிகள் வழக்கில் வாதிட்டனர்
மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையில் குழப்பம் ஏற்படுத்தியதான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப் பட்டுள்ள வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவின் பிணை மனு மன்னார் நீதிவான் நீதிமன்றத்தால் இன்று நிராகரிக்கப் பட்டது.
மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலைக்குள் அத்துமீறி உள் நுழைந்து குழப்பம் ஏற்படுத்தியதான குற்றச்சாட்டில்எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் அர்ச்சுனாவுக்குப் பிணை வழங்க வேண்டும் எனக் கோரி இன்று சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் ஒரு நகர்த்தல் பத்திரத்தைத் தாக்கல் செய்தார்.
திங்கள், 5 ஆகஸ்ட், 2024
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி, நாட்டை விட்டு வெளியேறினார்
பங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலகுமாறு கோரி அந்த நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்ற நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 14 காவல்துறை உத்தியோகத்தர்களும் உள்ளடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன், ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்காக பங்களாதேஷ் காவல்துறையினர் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை நடத்தியிருந்தனர்.
மன்னார் மருத்துவமனையில் இளம் தாய் உயிரிழப்பு! மருத்துவர்களின் அலட்சியமே காரணம்.. மக்கள் கொந்தளிப்பு
Thampi Thambirajah : மன்னார் தாயின் மரணம் சம்பந்தப்பட்டவர்கள் உடன் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும்... சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன்.
மன்னார் வைத்தியசாலையில் கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட இளம் தாயின் இறப்புக்கு காரணமான குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் மன்னார் வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் பல வருட காலமாக இடம் பெற்று வரும் தென்பகுதியில் உள்ள வீட்டில் இருந்துகொண்டு சம்பளம் பெறும் மற்றும் மேலதிக நேரத்துக்கான கொடுப்பனவாக பல இலட்சம் ரூபாய்கள் மோசடி செய்யப்படும் ஊழலை அண்மையில் எனது "மருத்துவ மாபியா" கட்டுரையில் அம்பலப்படுத்தியிருந்ததுடன் ஊறுபடும் நிலையில் உள்ள நோயாளிகளை குறிப்பாக இரவில் உடனடியாக வைத்தியர்கள் கவனிக்காவிட்டால் மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிவித்து இருந்தேன்.
ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2024
வங்கதேசத்தில் வன்முறை 32 பேர் உயிரிழப்பு!
மாலைமலர் : வங்காளதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. போராட்டக்காரர்களுக்கும் ஆளுங்கட்சியினரின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் சிக்கி இதுவரை 32 பேர் பேர் உயிரிழந்துள்ளனர். இதன் எதிரொலியால், அங்கு நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ல் நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேசத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருக்கிறது என மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
சென்னை 5 ஸ்டார் ஹோட்டல்களுக்கு பார் உரிமம் ரத்து.. அரசு அதிரடி!
tamil.oneindia.com - Vignesh Selvaraj : சென்னை: சென்னையில் 5 ஸ்டார் ஹோட்டல்களின் பார் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஹையத் ரீஜன்சி, தி பார்க், ரட்டா சோமர்செட், தாஜ் கிளப் ஹவுஸ், விவிஏ ஹோட்டல்ஸ் (ரேடிசன் ப்ளு) ஆகிய 5 ஹோட்டல்களின் பார் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நட்சத்திர விடுதிகள் சட்ட விதிகளை மீறியதால் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை ஆணையர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
சென்னை மாநகரில் நட்சத்திர ஹோட்டல்களில் மதுபான பார் நடத்த அரசு உரிமம் வழங்குகிறது.
அதன்படி, நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவோர், இந்த பார்களை பயன்படுத்தலாம்.
இந்நிலையில், நட்சத்திர விடுதிகள், விதிமுறைகளை மீறி வருவதாக புகார்கள் எழுந்தன.
அருந்ததியர் 3% இடஒதுக்கீடு... ஸ்டாலினுக்கு பாராட்டு விழா!
மின்னம்பலம் -Selvam : அருந்ததியர்களுக்கு 3% உள் இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்ததற்கு அருந்ததியினர் சமூகத்தின் சார்பில் ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் உள்ளிட்ட தலைவர்கள் முதல்வர் ஸ்டாலினை இன்று (ஆகஸ்ட் 3) சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் கடந்த 2009-ஆம் ஆண்டு பட்டியல், பழங்குடியினருக்கான 18 சதவிகித இட ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு 3 சதவிகித உள் இட ஒதுக்கீடு வழங்க அப்போதைய முதல்வர் கலைஞர் உத்தரவிட்டார். ஆனால், தமிழ்நாடு அரசு வழங்கிய அனுமதி செல்லாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மன்னாரில் டாக்டர் அர்ச்சுனா கைது! இறந்த பெண்ணுக்கு நீதி கேட்டார்!
தமிழ் மிரர் : மன்னாரில் டாக்டர் அர்ச்சுனா கைது! இறந்த பெண்ணுக்கு நீதி கேட்டார்
மன்னார் வைத்தியசாலை வைத்தியர்கள் மேற்கொண்ட முறைப்பாட்டை தொடர்ந்து வைத்தியர் அர்ச்சுனா இன்று சனிக்கிழமை (3) மதியம் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் (2) இரவு மன்னார் பொது வைத்தியசாலைக்குள் நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்தியதாக மன்னார் வைத்தியசாலை நிர்வாகம் மன்னார் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டை தொடர்ந்து இன்றைய தினம் காலை வைத்தியர் அர்சுனா மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.