வெள்ளி, 11 நவம்பர், 2016

புது ரூபாய் நோட்டுகள் மாற்றம் - 6 பேர் உயிரிழப்பு! மேலும் பலர் கவலைக்கிடம்..

மோடி அறிவித்த ரூபாய் நோட்டு திடீர் அறிவிப்பால் நாடே அலைமோதுகிறது. இந்நிலையில், புதிய ரூபாய் நோட்டுகளை மாற்ற செல்லும் மக்கள் அதிர்ச்சியில் உயிரிழந்து வருகின்றனர். இரண்டு நாட்களில் ஆறு பேர் இறந்துள்ளனர்.
கடந்த 8-ஆம் தேதி இரவு பிரதமர் மோடி ’இரவு முதல் 500 மற்றும் 1000 ருபாய் நோட்டுகள் செல்லாது’ என திடீர் அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து, வங்கிகள் மற்றும் ஏடிஎம் மூலம் புதிய ரூபாய் நோட்டுகள் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பொதுமக்கள் ஏடிஎம் மற்றும் வங்கிகளுக்கு சென்று பல மணிநேரம் கூட்ட நெரிசலில் நின்று பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகின்றனர். இதில், மக்களுக்கு சரியாக பணம் கிடைக்கவில்லை என்றாலும் கூட்ட நெரிசலால் அதிகளவு பாதிப்பு ஏற்படுகிறது.

இந்நிலையில், கேரள மாநிலம், தலச்சேரி பகுதியில் உள்ள புதிய பஸ் நிலையம் அருகே இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் திருவிதாங்கூர் கிளையில் இன்று 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற ஏராளமான கூட்டம் திரண்டிருந்தது.அப்போது தலச்சேரி மாவட்டத்துக்குட்பட்ட பேரலச்சேரி பகுதியில் உள்ள கேரள மாநில மின்சார வாரிய அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த கே.கே.உன்னி(48) என்பவர் அரசுக்கு சொந்தமான சுமார் 5.5 லட்சம் ரூபாய் நோட்டுகளை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்ற சென்றுள்ளார்.பணத்துடன் மூன்றாவது மாடியில் உள்ள எஸ்பிடி வங்கிக்கு சாய்தளம் மூலம் சென்றபோது, தவறிவிழுந்த உன்னி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவரைத் தவிர வங்கியில் பணம் மாற்ற சென்ற ஆழப்பூலா மாவட்டத்தை சேர்ந்த கார்த்திகேயன்(73) என்பவர் வரிசையில் நின்றுக் கொண்டிருக்கும் போது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். மேலும் மும்பையில் பழைய நோட்டுகளை மாற்றச் சென்ற 73 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதுபோன்று நேற்று உத்தரபிரதேச மாநிலம் கோராக்பூரை சேர்ந்தவர் தித்ரஜி (40). என்பவர் வங்கியின் வாசலில் மயங்கி விழுந்து உயிழந்தார். உத்தரபிரதேசம், மஹுவா மஃபி கிராமத்தில், 8 வயது சிறுமிக்கு மருத்துவ சிகிச்சைக்கு அவர் தந்தை அழைத்து செல்லும் போது, வண்டியில் பெட்ரோல் தீர்ந்ததையடுத்து 1,000 ரூபாய் நோட்டைக் கொடுத்து பெட்ரோல் நிரப்பச் சென்றபோது , பெட்ரோல் பங்கில் 1000 ரூபாய் நோட்டை வாங்க மறுத்துள்ளனர். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் காலதாமதம் ஏற்பட்டு சரியான நேரத்தில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்க முடியாத காரணத்தால் அவர் அங்கேயே உயிரிழந்தார். ஆந்திரா மெகபூபாபாத் மாவட்டம் சனிகாபூரை சேர்ந்த விநோதா என்னும் பெண். அவருடைய 12 ஏக்கர் நிலத்தை விற்ற 55 லட்சம் ரூபாயை மாற்ற முடியாதோ என்ற பதற்றத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை மோடீயின் திடீர் அறிவிப்புக்கு ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.  மின்னம்பலம்,காம்

கருத்துகள் இல்லை: