சனி, 15 மே, 2021

ஏ...அண்ணாச்சி சிவா... போய் வாருங்கள்... Surya Xavier

May be an image of 1 person

Surya Xavier  :   ஏழு வருடங்களுக்கு முன்பு என நினைக்கிறேன்.
அனந்தபுரி விரைவு ரயிலில் திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு சென்றேன். இரண்டாவது குளிரூட்டப்பட்ட பெட்டியில் என் எதிரே தொப்பி போட்டு அமர்ந்திருந்தார்.
தன்னை யாரும் அடையாளம் கண்டுவிடக்கூடாது என்ற நோக்கம் அதில் இருந்தது.
நான் அவரை உற்றுப் பார்த்து சிரித்தவுடன் சிரித்துவிட்டார்.
ஏ நீங்க சிரிப்பு நடிகர் அண்ணாச்சி சிவா தானேன்னு சொன்னேன்.
ஏ..பேசாம இருங்க என்று சொன்னார்.
பணகுடி அவரது சொந்த ஊர். அந்த ஊரின் வரலாறைச் சொன்னேன். பனை மரங்களுக்கு இடையே வாழ்ந்த குடிகள் என்பதால் பனைகுடி. அதன் பிறகு பனை கொடுத்த செல்வத்தால் பணகுடியாக மாறிப்போனது. மேற்குத் தொடர்ச்சி மலையின் காற்று சுகமானது. மலை அடிவாரத்தில் இருந்தாலும் அந்த ஊரில் காற்று வீசாது. அந்த ஊருக்கு காற்று வரவிடாமல் பெரும் மலை ஒன்று அருகே தடுத்து நிற்கும்.

 

"வாக்கு எண்ணிக்கை மோசடி".. கமல் தொகுதியிலிருந்து பாய்ந்தது முதல் வழக்கு.. மீண்டும் எண்ணிக்கை..வானதியின் பதவி தப்புமா? ?

May be an image of 2 people, people standing and text that says 'மொத்த வாக்குகள்:251389 பதிவானவை:60.72%=152644 நோட்டா உட்பட, மொத்த வேட்பாளர்களும் பெற்ற வாக்குகள்: 154765 152643-154765 2121 வாக்குகள் அதிகப்படியாக இருக்கே அதெப்படி..?! (நம்மவர் 1728 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்) கடைசி முக்கால் மணி நேரத்தில் நடந்தது என்ன? கமல் தோற்றதில் உள்ள உண்மைகளைப் பேச கமலும் தயாரில்லை.மய்யத்துத் தொண்டர்களும் தயாரில்லை.தேர்தலுக்குமுன் டார்ச் அடித்து சவடால் பேசியவர்களின் டார்ச் இப்போ ஏன் வெளிச்சம் தரவில்லை. தரவில்லை..பேட்டரியை பாஜக கழற்றி வாங்கிக் கொண்டதா?'

Hemavandhana - //tamil.oneindia.com : சென்னை: கமல் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது..
இதையடுத்து கோவை தெற்கு தொகுதி மீண்டும் கவனத்தை பெற்றுள்ளது..!
கோவை தெற்கு தொகுதி ஆரம்பத்தில் இருந்தே பரபரப்பில் வாக்காளர்களை வைத்திருந்த தொகுதியாகும்.. நாளுக்கு நாள் இந்த தொகுதியின் பிரச்சாரங்கள் வைரலாகின..
தேர்தலுக்கு முந்திய மற்றும் பிந்தைய கருத்து கணிப்புகள் பல வெளிவந்தாலும், இந்த தொகுதியின் வெற்றி குறித்து கடைசிவரை யாராலும் எதையும் உறுதியாக சொல்ல முடியாமலேயே இருந்தது.
சறுக்கல் அதனால், இந்த தொகுதியின் ரிசல்ட் அளவுக்கு அதிகமாகவே எதிர்பார்க்கப்பட்டது..
அதுவும் ரிசல்ட் தினத்தன்று, மக்களுக்கே பிரஷர் எகிறிவிட்டது..
ஆனால் கமல் சறுக்கலை சந்தித்தார்.. அதிலும் நூலிழையில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டார்.. அதுவும் கடைசி நேரத்தில் தவறவிட்டார்.
அப்செட் வானதி சீனிவாசன் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் கமல்ஹாசனை வீழ்த்தினார்.
அதனால்தான், மய்ய உறுப்பினர்களால் இந்த தோல்வியை இப்போது வரை ஜீரணிக்கவே முடியவில்லை.. கமல் ரொம்ப அப்செட் ஆகிவிட்டதாகவும் தகவல்கள் வந்தன.

கொரோனா உயிரிழப்புகளை அடுத்த ஒருமாதகாலத்துக்குள் கட்டுக்குள் கொண்டுவருவது மட்டுமே திமுக அரசின் முதல் குறிக்கோள்.

May be an image of 1 person, standing and indoor

LR Jagadheesan  :    1. தமிழ்நாட்டு அரசின் கொரோனா war roomக்கும் Ambulance Service சேவைக்குமான தொலைபேசி சேவைகளில் தொடர்புகொள்ள முடிகிறதா? இரண்டு தொலைபேசி எண்களிலும் உண்மையான காத்திருப்பு நேரம் என்ன? உண்மையிலேயே இந்த இராண்டு சேவைகளை தொடர்புகொண்டவர்கள் அதனால் பலன்பெறரவர்கள் யாரேனும் இருந்தால் அவர்கள் தங்கள் அனுபவங்களை கூறுங்கள். எனக்குத்தெரிந்தவர்களின் நேரடி அனுபவங்கள் அவ்வளவு உவப்பானவை அல்ல.
2. தலைநகர் சென்னையில் தனியார் மருத்துவமனைகளில் நேற்று முழுக்க ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவும் சூழலில் அந்த தனியார் மருத்துவமனைகள் ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளை அரசுமருத்துவமனைகளுக்கு அனுப்பக்கூடாது என்று எச்சரித்த தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் அந்த தனியார் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் அனுப்ப எடுத்த முயற்சிகள் என்ன?

பட்டியலின முதியவர்களை காலில் விழவைத்தவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் .. கொரோனா கட்டுப்பாட்டை மீறினார்களாம்

நடராஜன் சுந்தர் - பிபிசி தமிழுக்காக : விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பகுதியில் உள்ள ஒட்டனந்தல் என்ற ஊரில் நடத்தப்பட்ட உள்ளூர் பஞ்சாயத்தில்,
பட்டியல் வகுப்பைச் சேர்ந்த மூன்று பெரியவர்கள், ஆதிக்க சாதியினர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பது போலத் தோன்றும் காணொளி,  சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவின.
இதற்குக் காரணமானவர்கள் என்று சந்தேகிக்கப்படுவோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தலித்துகள் மீது எதிர்த் தரப்பினர் தந்த புகாரின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து கேட்டறிய விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணனை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது.அப்போது பேசிய அவர், "ஒட்டனந்தல் கிராமத்தில் கடந்த 12ஆம் தேதி கோயில் திருவிழா நடைபெற்றது.
கொரோனா நோய்த் தொற்று தீவிரமாக உள்ள இந்த சூழலில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதை காவல்துறையினர் சுட்டிக்காட்டியதை அடுத்து கோயில் திருவிழாவை எளிய முறையில் அவர்கள் நடத்தி முடித்தனர்.

புயலில் சிக்கி நடுகடலில் மாயமான பத்து மீனவர்கள்; கதறி அழுத உறவினர்கள்..!

Ten fishermen stranded in the middle of the sea caught in a storm; Relatives to cry
nakkheeran.in - செல்வகுமார் :நாகை மீனவர்களின் படகு நடுக்கடலில் கவிழ்ந்ததால் நடுக்கடலில் உயிருக்கு போராடும் 10 மீனவர்களை இந்திய கடலோர காவல்படை கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர் கொண்டு மீட்க வேண்டும் என நாகை சாமந்தான்பேட்டை மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கொச்சி மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாகை மாவட்டம் சாமந்தான்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மணிகண்டன் உள்ளிட்ட அவரது தந்தை இடும்பன், சகோதரர்கள் மணிவேல் உள்ளிட்ட 10 மீனவர்கள் கடந்த 29 ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

5 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய டெண்டர் வெளியிட்டது தமிழ்நாடு அரசு

 மாலைமலர் :தடுப்பூசி கொள்முதல் தொடர்பான டெண்டர் எடுப்பதற்கு ஜூன் 5-ம் தேதி காலை 11 மணிக்குள் நிறுவனங்கள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசு கூறி உள்ளது.
சென்னை:   கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டியதன் அவசியத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அனைத்து மாநிலங்களிலும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு தடுப்பூசிகளை வழங்கி வருகிறது.
18 வயதில் இருந்து 45 வயது வரை உள்ளவர்களுக்கு, மாநில அரசுகளே தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்திற்கு சுமார் 13 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த ஒதுக்கீடு, 18 வயதில் இருந்து 45 வயது வரை உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு போதிய அளவில் இல்லாததால், உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் (டெண்டர்) மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்து பயன்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.

எனது முதல் பணி ... வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும். திரு. பிடிஆர்பி. தியாகராஜன், நிதி, மனிதவள மேம்பாட்டு அமைச்சர்,

May be an image of 1 person and text that says 'Umpire'

Fazil Freeman Ali  : க‌டைசியா பொருளாதார‌ம் தெரிந்த‌ நிதிய‌மைச்ச‌ர்
எனது முதல் பணி எனக்கு நானே ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்.
ஒரு MLA-யாக‌,  முன்னாள் வங்கியாளராக, வங்கி ஒன்றின் முன்னாள் மேலாண் இயக்குநராக இருக்கும் நானே, நமது மாநிலத்தின் நிதி நிலையை புரிந்து  கொள்ளவில்லை என்றால் சாதாரண குடிமகன் எவ்வாறு அதைப் புரிந்து  கொள்வார்.
துறைக்குள்ளேயே சீராய்வு கூட்டம் நடத்தி அந்த விவரங்களை  பொதுமக்களுக்கு வெளியிடாமல்
இருக்க முடியும். ஆனால், எனது தலைவர் எம்.கே.ஸ்டாலின் மிகவும் தெளிவாக  சொல்லி விட்டார். இந்த அரசு வெளிப்படையாக செயல்பட வேண்டும் என்றும் மக்களுடன் இணைந்து
செயலாற்ற வேண்டும் என்று.
எனவே, மாநிலத்தின் உண்மையான நிதி நிலையை அறிந்து  கொள்ள ஒரு வெள்ளை அறிக்கையை தயாரித்து எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ அவ்வளவு விரைவில் வெளியிட நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

தமிழ்நாட்டில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்!

 நக்கீரன் செய்திப்பிரிவு :   கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்த புதிய கட்டுப்பாடுகள் இன்றுமுதல் (15.05.2021) அமலுக்கு வந்தன.
அதன்படி, காய்கறி, மளிகை மற்றும் இறைச்சிக் கடைகள் பிற்பகல் 12.00 மணிக்குப் பதில் காலை 10.00 மணிவரை மட்டுமே செயல்படும்.
அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற மின் வணிக நிறுவனங்கள் மதியம் 02.00 மணிமுதல் மாலை 06.00 மணிவரை செயல்படும்.
'DUNZO' போன்ற மின் வணிக நிறுவனங்கள் காலை 06.00 மணிமுதல் காலை 10.00 மணிவரை இயங்கலாம்.
மக்கள் கூடுவதைத் தடுக்க தமிழகத்தில் தேநீர் கடைகள் இயங்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகளும் செயல்பட அனுமதி இல்லை.
தமிழகத்தில் ஏ.டி.எம். மையங்கள், பெட்ரோல், டீசல் பங்க்குகள் எப்போதும்போல செயல்படும்.
ஆங்கில மற்றும் நாட்டு மருந்துக் கடைகளைத் திறக்க வழக்கம்போல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை மறுநாள் (17/05/2021) முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் செல்ல இ - பதிவு கட்டாயம். திருமணம், மருத்துவ சிகிச்சை, இறப்பு, முதியோர் தேவை போன்றவற்றுக்கு இ - பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருவோருக்கும் இ - பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இரவு 10.00 மணிமுதல் காலை 04.00 மணிவரையிலான ஊரடங்கு அமலில் இருக்கும்.
 தமிழகத்தில் ஏற்கனவே ஞாயிற்றுக்கிழமைகளில் அமலில் உள்ள முழு ஊரடங்கு மே 23ஆம் தேதி வரை அமல்படுத்தப்படுகிறது.  

 

மராட்டிய மாநிலத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 52 பேர் பலி

தினத்தந்தி : மும்பை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் “மியூக்கோர்மைகோசிஸ்” என்ற கருப்பு பூஞ்சை நோய்க்கு ஆளாகி வருகின்றனர்.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் அல்லது கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் அதிகப்படியான ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக் கொண்டதன் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அவர்களை கருப்பு பூஞ்சை நோய் தாக்குவதாக கூறப்படுகிறது.
இந்த நோய் பாதிப்பு அதிக உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியது.
தலைவலி, காய்ச்சல், சைனஸ் மண்டலத்தில் பாதிப்பு, கண்களுக்கு கீழ் வலி மற்றும் பகுதியளவில் பார்வை குறைபாடு ஏற்படுவது போன்றவை இந்த பூஞ்சை பாதிப்புக்கு முக்கிய அறிகுறியாகும்.

தமிழ் மருத்துவமும் மருத்துவ சுவடிகளும்... மத்திய மாநில அரசுகள் முன் வர வேண்டும்..

May be an image of text that says 'LOVE KARAIKUDI பாதுகாக்கும்'
No photo description available.

Sundar P  : தமிழ் மருத்துவமும் மருத்துவ சுவடிகளும் !
தமிழ் மருத்துவம் (சித்த மருத்துவம்)  தொன்மையானது என்பதற்குச் சிந்துவெளியில் கிடைத்த  முத்திரைகள்,  தொல்காப்பியம், சங்க -  ஐம்பெருங் காப்பியங்கள்,  திருக்குறள் போன்ற இலக்கியங்களில் அமைந்துள்ள. மருத்துவக் குறிப்புகளும், நோய் பற்றிய செய்திகளும், மூலிகை பற்றிய குறிப்புகளுமே சான்றுகள்
சங்க காலத்தில் தோன்றிய மருத்துவத் தனி நூல்கள் எதுவும்  நமக்குக் கிடைக்கவில்லை; .என்றாலும், சங்க காலப் புலவரால் இயற்றப் பெற்ற ஆற்றுப்படை என்னும் மருத்துவ நூலின் ஒரு பகுதி கிடைத்துள்ளது. சங்க காலத்தில் மருத்துவ நூல்கள் தோன்றின என்பதற்குச் சான்றாகிறது.
சங்க காலத்தில் ‘கலைக்கோட்டுத் தண்டார்’ என்னும் முனிவர் இருந்திருக்கிறார்.
அவர், ஒரு இலட்சம் பாடல்களைக் கொண்ட மருத்துவ நூலை இயற்றியிருக்கின்றார்.
இதுஅந்த சுவடி, ஜெர்மனி நாட்டிற்குச் சென்றிருக்கிறது. அதன்பின்னால், ஜெர்மனி மருத்துவத் துறையில் முன்னிலை பெற்றுள்ளது என்று, ஜெர்மனி நாட்டுத் தமிழறிஞர் கருத்து தெரிவிக்கிறார்.

பாரிசாலன் – ஹீலர் பாஸ்கர்களை நாம் எப்படி கையாள வேண்டும் ?

 பாரிசாலன் – ஹீலர் பாஸ்கர்களை நாம் எப்படி கையாள வேண்டும் ?
சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்கள் அதில் உணர்வுரீதியான முதலீடு (emotional investment) செய்திருக்கிறார்கள். கட்டிவைத்து அடித்தாலும் மூளையில் கரண்ட் shock குடுத்தாலும் மாறப் போவதில்லை. emotional investmentயை தற்காத்துக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்வார்கள்.
By வினவு செய்திப் பிரிவு - August 13, 20180177
பாரி சாலன் இலுமினாட்டிகளை எப்படி கண்டு பிடிக்கிறார்  ? பாகம் – 3
பாரிசாலன் தொடர்ந்து இலுமினாட்டிகளை கண்டுபிடித்து கொண்டேயிருப்பார். ஏனென்றால் இலுமினாட்டிகள் பரிசாலனுக்குள்தான் மாடு மேய்த்துக் கொண்டிருக்கிறார்கள், அங்கேயே வசிக்கிறார்கள்.
110010001111
இந்த எண்களில் உங்களால் ஒரு pattern இருப்பதை கவனிக்கமுடிகிறதா? உங்களால் இதில் ஒரு pattern இருப்பதாய் நம்பவோ, உணரவோ, காணவோ, சந்தேகிக்கவோ முடிகிறதா? உண்மையில் நான் என்போக்கில் கோர்த்த எண்கள் அவை.
ஆனால் நமது மனம் ஏற்கனவே சொன்னதுபோல காணும் எல்லாவற்றிலும் pattern (படிவம்) தேடும் இயல்புடையது. இந்த இயல்புதான் சதியாலோசனை கோட்பாடுகளுக்கான மைய புள்ளி.

சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு!

 நக்கீரன் : தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை காரணமாக நாளுக்கு நாள் வைரஸ் பாதிப்பும், உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 10-ஆம் தேதி காலை 04.00 மணி முதல் மே 24ஆம் தேதி காலை 04.00 மணிவரை 15 நாட்களுக்குத் தமிழகத்தில் இந்த ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31,892 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று சென்னையில் ஒரே நாளில் 6,581 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.
அதன்படி, நாளை முதல் தமிழகம் முழுவதும் தேநீர் கடைகள் இயங்க அனுமதி இல்லை. காய்கறி கடைகள், மளிகை கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும்.

10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

 தினத்தந்தி :சென்னை,   புதிய புயல் காரணமாக தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.
இன்று மேலும் வலுவடைந்து காற்றுழுத்த தாழ்வு மண்டலமாகவும் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாகவும் அதனை தொடர்ந்து அடுத்து வரக்கூடிய 12 மணி நேரத்தில் புயலாகவும் வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இதன்காரணமாக இன்றைய தினம், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் இடி மின்னலுடன் சூறைக்காற்றுடன் அதி கன மழை பெய்யும் எனவும் தென்காசி,கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் திருப்பூர்,நாமக்கல் , சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் எனவும் வரும் 17 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அகதி முகாம் தமிழர்களின் வாழ்வு! நாம் தமிழரும் ஈழத்தமிழரும் IBC Tamil டிவியில் விவாதிக்க விரும்பாத விடயம்

 Maha Dev  :    நாம் தமிழர் கட்சியும் ஈழத்தமிழர்களும் ..   எனும் தலைப்பில் நடந்த உரையாடலில் ஒரு வரி கூட தமிழக அகதிகள் குறித்து உரையாடப்படவில்லை.
உண்மையில் நெறியாளரிடமும் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக பேசுபவருக்கும் இங்கு தமிழகத்தில் முகாம்களில் உள்ள அகதிகள் பற்றி தெரியமா அல்லது தெரியாதா ?
திராவிடம், தமிழ் தேசியம், இந்திய ஒன்றியம், தமிழக அரசு குறித்தெல்லாம் உரையாடும் உங்களது கருத்து பரிமாற்றங்களில் அகதிகள் குறித்து பேசுவதற்கான இடமே இல்லையா ?
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஈழப்பிரச்சினை தீர்க்கபடுமா எனும் கேள்வி கேட்க தெரிந்த உங்களால், நிச்சயம் வெளியுறவு கொள்கையில் மத்திய அரசுடன் பேசி மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பிருக்கு எனும் பதிலளிக்கும் உங்களால்,
தமிழக அகதி முகாம்களில் உள்ளவர்கள் எதிர்காலம் பற்றியோ, அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி என்ன செய்யும், அவர்களின் இந்திய குடியுரிமை கோரிக்கை பற்றி நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு என்ன, அல்லது  அவர்களுக்கு ஒரு நிரந்தர தீர்வாக நாம் தமிழர் கட்சி என்ன திட்டம் வைத்திருக்கிறது  என ஒன்றைப்பற்றிக்கூடவா உங்களால் சிந்திக்க முடியவில்லை.

வெள்ளி, 14 மே, 2021

இலங்கையில் சிங்களவர்-இந்திய இன தொடர்ச்சியும் தென்னிந்திய பண்பாட்டு நீட்சியும்

May be an image of text that says 'இலங்கையில் சிங்களவர் இந்திய இனத் தொடர்ச்சியும் தென்னிந்தியப் பண்பாட்டு நீட்சியும் பக்தவத்சல பாரதி'

 Subashini Thf   : நூல் திறனாய்வு: இலங்கையில் சிங்களவர்-இந்திய இன தொடர்ச்சியும் தென்னிந்திய பண்பாட்டு நீட்சியும்
நூலாசிரியர்: பக்தவச்சல பாரதி
முனைவர்.க.சுபாஷிணி
பகுதி 1
மானுடவியல் துறையில் சீரிய வகையில் செயலாற்றிக் கொண்டிருக்கும் ஆய்வாளர்களும் ஒருவர் பக்தவச்சல பாரதி. இவரது ஏனைய நூல்களான தமிழர் மானிடவியல், பண்பாட்டு மானிடவியல், தமிழகப் பழங்குடிகள் போன்ற ஏனைய சில நூல்களின் பட்டியலில் இணைவது தான் `இலங்கையில் சிங்களவர்` என்ற தலைப்புடன் வெளிவந்திருக்கும் இந்த நூல். ஏறக்குறைய 200 பக்கங்களைக் கொண்டிருந்தாலும் இந்த நூல் சிங்களவர் வரலாறு, பண்பாடு, சமூக நிலை, மரபணு ஆய்வு என்று நுணுக்கமாக பல தகவல்களை வழங்குவதால் இந்த நூல் கூறும் முக்கிய விஷயங்களைத் தனித்தனியே ஆராய்வது அவசியமாகின்றது.

திமுக இணைய போராளிகளை தக்கவைக்க வழக்கறிஞர் அணி என்ன செய்யவேண்டும்? வரும் காலம் டிஜிட்டல் உலகம் ... நினைவிருக்கட்டும்

 Kandasamy Mariyappan  :   அன்பின் திமுக வழக்கறிஞர்கள் அணி நண்பர்களே...!
முன்பெல்லாம், நடுநிலையாளர்கள் மட்டுமே திமுகவிடம் புனிதத்தை எதிர்பார்ப்பார்கள்.!
தற்பொழுது திமுகவும் புனிதமாக நடந்துகொள்கிறதோ என்று தோன்றுகிறது.!
இவ்வளவு நாட்களாக சமூக வலைதளங்களில் களமாடிய இளைஞர்கள் எல்லாம்...
ஏதோ தன்னை, தனது குடும்ப உறுப்பினர்களை திட்டியதற்காகவோ, தனது அரசியல் சுய லாபத்துக்காகவோ களமாடவில்லை.!
தான் சார்ந்த இயக்கத்தை, அந்த இயக்கத்தின் செயல்பாடுகளை, தனது தலைவனை, தன் தலைவனின் மகனை, தலைவனின் மகளை கேவலமாக பேசுகின்றனரே என்று தன்னெழுச்சியாக தங்களது நேரத்தை செலவழித்து சமூக வலைதளங்களில் களமாடி வந்தனர்.!
ஒன்றை உணர்ந்து கொள்ளுங்கள்,
இனிவரும் காலம், டிஜிட்டல் உலகம் (Digital world). கட்சிகளின் செயல்பாடுகளையும், கொள்கைகளையும் மக்களிடம் எடுத்துச் செல்ல மாவட்ட செயலாளர்களோ ஒன்றிய செயலாளர்களோ கிளை செயலாளர்களோ தேவையில்லை.!
டிஜிட்டல் அணி (IT Wing), பூத் ஏஜென்ட்டுகள் மட்டுமே போதும்.!

சிந்துவெளியில் தமிழ் ஊர்ப்பெயர்கள் – 463 ஆந்திர ஊர்களின் பெயர்கள் அப்படியே நைஜீரியாவிலும்....

May be an image of map and text

Palanisamy Balakrishnan  :    சிந்துவெளியில் தமிழ் ஊர்ப்பெயர்கள்
– ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.
தற்போது தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றி வரும் ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.  சிந்துசமவெளி பற்றிய ஆய்வில் முக்கியமானவர்
மானுட வரலாறு என்பது பயணங்களால், இடப் பெயர்வுகளால் ஆனது. மனிதன் ஒரு ஊரை விட்டு இடம்பெயரும்போது, அவனது நினைவுகளைச் சுமந்து செல்கிறான்.
புதிய இடத்தில் குடியேறும்போது, பழைமையுடன் தொடர்புகொள்ளும் விதத்தில் தன் ஊர்ப் பெயரை அங்கே வைக்கிறான்.
இது ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருகிற சமூக உளவியல். அப்படி அவன் விட்டுச் சென்ற ஊர்ப்பெயர்களும், சுமந்து சென்ற ஊர்ப் பெயர்களும் சொல்வது மனித குலத்தின் வரலாறு.
ஈரானில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஏராளமான ஊர்ப் பெயர்கள், அப்படியே ஒரிசாவில் கொனார்க்கில் உள்ள சூரியக்கோயிலைச் சுற்றியுள்ள ஊர்களில் இருப்பதைக் கண்டேன். இதன் சாத்தியம் என்னை ஆச்சரியப்படுத்தியது.

தோழர் கெளரியம்மா இந்தியாவில் முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் அமைச்சர்

 Sundar P  : கெளரியம்மா - இந்தியாவில் முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் அமைச்சர் கெளரியம்மா உயிரிழந்தார்
கேரளாவின் கம்யூனிஸ்ட்களின் முதல் அமைச்சரவையில் அமைச்சராக இடம்பெற்ற மூத்த கம்யூனிஸ்ட் கெளரியம்மா என்றழைக்கப்படும் கெளரி இயற்கை எய்தினார்.
காய்ச்சல், சுவாசக் கோளாறு மற்றும் சிறுநீர்த் தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஏப்-22ம் தேதி முதல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கெளரியம்மா சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
கேரளத்தின் நவீன சமுக வளர்ச்சியிலும், பெண்களின் வளர்ச்சியிலும் அவரது பங்கு இன்றியமையாதது ஆகும்.
ஈழவ சமூகத்தின் முதல் சட்டப் பட்டதாரி
கெளரியம்மா, ஆலப்புழை மாவட்டத்திலுள்ள செர்தாலாவில் ஜூலை 14, 1919 அன்று பிறந்தார்.
பிற்படுத்தப்பட்ட ஈழவ சமூக, செல்வச் செழிப்பான குடும்பம் கெளரியம்மாவினுடையது.

மத்திய பிரதேசம் கொரோனா வார்டில் பெண் கற்பழிப்பு... 24 மணி நேரத்தில் உயிரிழப்பு

 தினமலர் :பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றவாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
:நாட்டில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தொற்று பரவும் அபாயம் இருப்பிலும், உரிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி அவர்களுக்கு மருத்துவ சமூகம் அளிக்கும் சேவையை பாராட்ட வார்த்தைகளே கிடையாது.
அதேசமயம் ஒரு சிலரின் கொடூரமான மற்றும் கீழ்த்தரமான செயல்களால் மருத்துவ சமூகத்தின் மீதுள்ள மரியாதையும் நம்பிக்கையும் குறைகிறது.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு முன்பு, கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. போபால் நினைவு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 43 வயது நிரம்பிய பெண் நோயாளியை, ஆண் செவிலியர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பின்னர் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட அந்தப் பெண் அடுத்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளார்.

ஹரிநாடார்- கோடிக்கணக்கில் மோசடி… கேட்டால் கொலை மிரட்டல்! சிக்கியது எப்படி?

 விகடன்  :எம்.பி-யாக இருந்த சசிகலா புஷ்பாவுக்கு டெல்லியில் கிடைத்த மரியாதையைப் பார்த்த ஹரி நாடாருக்கு அரசியல் ஆசை துளிர்விட்டது.
வெள்ளை நிற ஜிப்பாவுக்குள் உடைசலான தேகம், நீண்ட தலைமுடி, கழுத்து நிறைய நகை… இதுதான் ஹரி நாடாரின் அடையாளம். நடமாடும் நகைக்கடையாக வலம்வந்த அவரை, கர்நாடக போலீஸார் மோசடி வழக்கில் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
ராக்கெட் ராஜாவின் தலைமையிலான பனங்காட்டுப்படை கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஹரி நாடார், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு 37,727 வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.
அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கொலை முயற்சி என ஹரி நாடார் மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், தற்போது பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபரான வெங்கட்ராமன் சாஸ்திரி என்பவரிடம் 7.2 கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கைதாகியிருக்கிறார்.

லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்

jjlதினத்தந்தி :ஜெருசலேம்,   இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது.
பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை பகுதி உள்ளது.
இந்த காசா முனை பகுதியை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது.
இந்த போராளிகள் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது.
இந்த காசாமுனை பகுதியில் இருந்து இஸ்ரேல் நாட்டின்மீது ஹமாஸ் அமைப்பினர் அவ்வப்போது ராக்கெட் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்துவது வழக்கம். ஹமாஸ் பயங்கரவாதிகளில் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவமும் தக்கபதிலடி கொடுத்து வருகிறது.
இதற்கிடையில், ஜெருசலேமில் உள்ள அல்-அக்‌ஷா மத வழிபாட்டு தளத்தில் கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு - இடைக்கால அறிக்கை தாக்கல்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு- இடைக்கால அறிக்கை தாக்கல்
malaimalar : ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையையும் முதலமைச்சரிடம் வழங்கினார்.
ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தார்
 சென்னை:   தூத்துக்குடியில் 2018-ம் ஆண்டு நடந்த போலீஸ் துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிர் இழந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்தது.
இதைத்தொடர்ந்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.

தமிழகத்தில் முதலீடு செய்யும் ஆக்சிஜன் உற்பத்தியாளர்களுக்கு மூலதன மானியம்”- சலுகைகளை அறிவித்த தமிழக அரசு!

kalaignarseithigal.com கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், மருத்துவ ஆக்சிஜன் கிடைப்பதில் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் வேகமாகப் பரவி வரும் கொரோனா நோய்த் தொற்றினைக் கட்டுப்படுத்திட, தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகளுக்கு அவசியமான மருத்துவ ஆக்சிஜன் கிடைப்பதில் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதனைக் கருத்தில்கொண்டு, மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியில் தமிழகம் தற்சார்பு அடைவதற்கான வழிமுறைகள் குறித்து முதல்வர் விரிவான ஆலோசனைக் கூட்டத்தை மே 11 அன்று நடத்தினார்.

அக்கூட்டத்தில், முதல்வர் அறிவுறுத்தலின்படி, மருத்துவ ஆக்சிஜன் மற்றும் தொடர்புடைய உபகரணங்கள் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசு பின்வரும் சிறப்புத் தொகுப்பு சலுகைகளை அறிவித்துள்ளது:

இன்று முதல் கடுமையான முழு ஊரடங்கு!

இன்று முதல் கடுமையான முழு ஊரடங்கு!

minnambalam : முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த முதல்வர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மே 24ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், மக்கள் ஊரடங்கு விதிகளை மீறி வெளியே சுற்றுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.   இந்த நிலையில் நேற்று (மே 13) மாலை முதல்வர் ஸ்டாலின் தலைமையில், சட்டப்பேரவை அனைத்துக் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய முதல்வர், தொழில் மற்றும் வர்த்தகம் பாதிக்கக் கூடாது என்பதற்காக சில தளர்வுகள் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மக்கள் ஊரடங்கு விதிகளை மீறுகிறார்கள். எனவே ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது அதில் மாற்றங்கள் செய்யலாமா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

கொரோனாவைத் தடுக்க, இந்திய ஒன்றிய பட்ஜெட்டில் நிதியே ஒதுக்காத மோடி ஆட்சி. அதிர்ச்சி தகவல்.

Raja Arunmozhi : இந்தக் கொடூரச் செயலை என்னவென்று சொல்வது? கொரோனாவைத் தடுக்க, இந்திய ஒன்றிய பட்ஜெட்டில் நிதியே ஒதுக்காத மோடி ஆட்சி. அதிர்ச்சி தகவல்.கொரோனா தடுப்பூசி போடுவதற்கும், கொரோனா நோய் தடுப்புக்கும் நடப்பு நிதியாண்டில் ஒன்றிய அரசு சமர்பித்த நிதி நிலை அறிக்கையில் ஒரு காசு கூட நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்ற அதிர்ச்சியான தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது.
இன்றைய (12-05-21)
இந்து ஆங்கில நாளேட்டில் நடுப்பக்கத்தில் பிரவீன் சக்ரவர்த்தி என்பவர் எழுதியுள்ள'Covid Mishandling Foretold in the budget' என்ற கட்டுரையில் இந்த அதிர்ச்சியான தகவலை அவர் ஆதாரத்துடன் எழுதியிருக்கிறார்.
நிதி நிலை அறிக்கையை கடந்த ஜனவரி மாதம் சமர்ப்பித்த நிர்மலா சீதாராமன், 35 ஆயிரம் கோடி ரூபாயை கொரோனா தடுப்பூசிக்காக ஒதுக்கியிருக்கிறோம் என்று கூறியிருந்தார். இந்தியாவில் உள்ள மக்களுக்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு மக்களுக்கும் நாம் உதவ முடியும் என்று அவர் பெருமையுடன் தம்பட்டம் அடித்தார்.

கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை - அமெரிக்கா அறிவிப்பு

 தினத்தந்தி : அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்கள் பெரும்பாலான இடங்களில் முகக்கவசம் அணிய கட்டாய தேவையில்லை என்று அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது.
வாஷிங்டன்,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஒரே வழியாக உள்ள தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் நடவடிக்கையில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.
அமெரிக்காவிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. இதனால், அந்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் பெருமளவில் குறைந்துள்ளது.
அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் 46 சதவிகிதம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அதாவது, சுமார் 15 கோடியே 40 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அதேவேளை 11 கோடியே 70 லட்சம் பேருக்கு கொரோனா தடுபூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டு விட்டது.

தமிழ் தேசியம் என்பது தமிழ்நாட்டில் ஒரு அரசியல் பண்டம் அல்ல

May be an image of 2 people

செல்லபுரம் வள்ளியம்மை: நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பல செய்திகளை கூறியிருக்கிறது.
தமிழ் தேசியம் என்பது தமிழ்நாட்டில் ஒரு அரசியல் பண்டம் அல்ல என்பது அழுத்தம் திருத்தமாக பதியப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டு மக்கள் தமிழ்நாட்டு நலனுக்கே முதலிடம் கொடுப்பார்கள் ,
இந்திய உபகண்ட நலம் என்பது கூட தமிழ்நாட்டு நலன்களுக்கு அப்பால்தான் என்பதை முதல் தடவையாக தமிழக வாக்காளர்கள் பிரகடன படுத்தி உள்ளார்கள்.
இனி வரும் காலங்களில் இந்த தேர்தல் தெளிவாக்கிய கருத்துக்கள் அடிப்படையில்தான் எந்த ஆய்வையும் மேற்கொள்ள முடியும்.
தமிழ்நாட்டு வாக்காளர்கள் பெரிய அளவில் ஒரு அரசியல் விழிப்புணர்வு பெற்றுள்ளார்கள் என்பதை இத்தேர்தல் காட்டியுள்ளது ..
தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாப்பதில் திமுகவுக்கே மக்கள் முதலிடம் கொடுத்துள்ளார்கள்.

இந்தியாவில் கரோனா 57அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோ பைடனுக்கு கடிதம்

 nakkeeran : இந்தியாவில் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, இந்தியாவின் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பல்வேறு சர்வதேச நாடுகளும் உதவி அளித்து வருகின்றன. அந்தவகையில், அமெரிக்காவும் தடுப்பூசி தயாரிப்புக்கான மூலப் பொருட்களை இந்தியாவிற்கு வழங்கியதோடு, ஆக்சிஜன் செறிவூட்டி மற்றும் பிற மருத்துவ உபகரணங்களையும் இந்தியாவிற்கு அளித்துள்ளது. மேலும், இந்தியாவிற்குத் தொடர்ந்து உதவுவதாக உறுதியளித்துள்ளது.

 இந்தநிலையில் இந்தியாவில் நிலவும் கரோனா பாதிப்பு தொடர்பாக 57அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் அவர்கள், "கரோனா  பாதிப்பின் அதிகரிப்பு இந்தியாவின் சுகாதார அமைப்பை மூழ்கடித்துள்ளது. 

அமித்ஷா-வை காணவில்லை என்று டெல்லி போலீசில் புகார்

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா-வை காணவில்லை என்று டெல்லி போலீசில் புகார்
daylithanthi ": புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமடைந்து வருகிறது. வைரஸ் பரலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதற்கிடையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு தோல்வியடைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷாவை காணவில்லை என்று டெல்லியில் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

வியாழன், 13 மே, 2021

செய்தி வர்த்தகத்தில் பெரும் பின்னடைவு .. தமிழ்நாட்டு ஊடகத்துறையின் பரிதாப நிலை

செல்லபுரம் வள்ளியம்மை: செய்தி வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் ஊடக நிறுவனங்களுக்கு கொஞ்சம் இக்கட்டான காலம்.
உலகம் முழுவதும் இதுதான் நிலைமை என்றாலும் நான் இங்கே குறிப்பிடும் விடயம் தமிழ்நாட்டு ஊடக வியாபாரத்தின் மந்த நிலை பற்றியதாகும்
பேனை பெருமாளாக்கும் ஊடகங்கள் திமுக ஆட்சின் அதிரடிகளால் திணறி போய் உள்ளன. எதிர்ப்பதற்கு ஏதுமில்லை என்ற நிலை ஒரு புறம் இருக்கிறது .
சரி ஏதாவது பொய்யயான பிரசாரங்களை அவிழ்த்து விடுவோம் என்றால் மக்களே மைக்கை பிடுங்கி உதைத்து விடுவார்கள் என்ற பயம் வேறு .
சமூகத்தின் ஒவ்வொரு மூலை முடுக்குகளாக நுணுக்கமாக பார்த்து பார்த்து செய்யும் ஆட்சி இயந்திரம் ஊடகங்களின் தவறுகளையும் நுணுக்கமாக பார்க்கும் தவறுகளுக்கு தண்டனையும் கிடைக்கும் என்ற பயம் வேறு.
சமூக பிரச்சனைகளை செய்திகளாக்கிதான் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என்ற நிலை இல்லை. அப்படி ஒருவேளை செய்திகளாக்கினாலும் அடுத்த வினாடியே அவை அரசின் உரிய கவனத்தை  பெற்றுவிடுகிறது  எனவே மேற்கொண்டு அதை ஒரு செய்தி மூலதனமாக்கி கடைவிரிக்கவும் முடியாமல் போய்விடுகிறது .. 

இஸ்ரேல் பலஸ்தீன் - 14 குழந்தைகள் உட்பட 53 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளன

Karthikeyan Fastura :   ஜெருசலேமில் மேற்குக் கரையை ஒட்டியுள்ள பகுதியிலிருந்து திடீரென்று பாலஸ்தீனியர்களை வெளியேற கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள் இஸ்ரேலிய ராணுவத்தினர்.
அதற்குக் காரணம் அந்த நிலத்தின் உரிமையாளர் ஒரு இஸ்ரேலியர்.
பன்னெடுங்காலமாக அந்த இடத்திலிருந்து பாலஸ்தீனியர்கள் திடுதிப்பென்று வெளியேறுங்கள் என்ற இராணுவ நடவடிக்கையால் பொறுக்கமுடியாமல் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.
அவர்களுக்கு ஆதரவாக மேற்குக் கரையில் மேலும் பாலஸ்தீனியர்கள் கூடி போராட்டத்தில் ஈடுபடவே, ரொம்ப காலமாக அமைதியாக இருந்த ஹமாஸ் ஆயுதப் போராட்டத்தில் இறங்கியதாக தெரிகிறது. இதுதான் சாக்கு என்று இஸ்ரேலிய ராணுவம் வான்வெளி தாக்குதல் நடத்தியிருக்கிறது.
இதனால் 53 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 14 குழந்தைகளும் அடங்குவர்.
300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கொரோனா கூட குழந்தைகளை கொல்வதில்லை. மனிதர்களுக்குத் தான் அந்த வித்தியாசம் தெரிவதில்லை.
இஸ்ரேலிய ராணுவம் தங்கள் தரப்பில் ஆறு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 1500க்கும் மேற்பட்ட ராக்கெட் தங்கள் மீது வீச பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

அதிர வைத்த 2k கிட்ஸ் லவ்வு.. வீட்டுக்கு ஓடிவந்த ஆணையம்

 Hemavandhana  - //tamil.oneindia.com : சென்னை: 15 வயசுகூட ஆகல.. மொளைச்சி மூணு இலையே விடல, லவ்வு கேக்குதா என்று சோஷியல் மீடியாவில் சிறுவன், சிறுமியின் வீடியோ,
வைரலாக பரவிய விவகாரத்தில் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குழு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்துள்ளது.
ட்ரெண்ட் ஆக வேண்டும் என்ற பேராசை இளைய சமுதாயத்திடம் தலைதூக்கி உள்ளது..
அந்த வகையில், கிட்டத்தட்ட 15 வயதுடைய மீசை கூட முளைக்காத சிறுவனும், சிறுமியும் வீடியோ காலில் பேசிய வீடியோ ஒன்று கடந்த வாரம் சோஷியல் மீடியாவில் வைரலாகியது..
இருவரும் டூயட் பாடி இன்ஸ்டாகிராமில் பதிவுகளை போட்டு வந்தனர்..திடீரென ஒரு வீடியோவில், இந்த சிறுவன் கண்ணீர் விட்டு அழுகிறார்..

அரசு பேருந்துகளில் ஆக்சிஜன் வசதி.. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு கேமரா

kalaignarseithigal.com : தமிழக போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பதவியேற்ற பின்பு சென்னை பல்லவன் இல்லத்தில் நடைபெற்ற முதல் ஆய்வு கூட்டத்தில் போக்குவரத்துத்துறை மண்டல மேலாண் இயக்குநர்கள், போக்குவரத்து நிதி மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் , சாலை போக்குவரத்து நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தில், போக்குவரத்து துறையின் செலவீனங்களை குறைத்து வருவாய் அதிகரித்தல், சுகாதார வழிமுறைகளை பேருந்துகளில் சீராக கடைபிடித்தல், 14வது ஊதிய ஒப்பந்தம் மற்றும் 'நிர்பயா' திட்டத்தினை விரைந்து செயல்படுத்துதல் , கிராம புறங்களில் பேருந்து தேவையை பூர்த்தி செய்ய கூடுதல் பேருந்து இயக்கம் தொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

மேலும், டெல்லி மற்றும் மேற்குவங்க மாநிலங்களை போல பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என தமிழகத்தில் தொடங்கப்பட்ட திட்டத்தினை விரிவு படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கை நீட்டிக்கலாமா?: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆலோசனை!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று (மே 13) மாலை 5 மணிக்கு நடைபெறவிருக்கிறது. இதில் அனைத்துக் கட்சியினரிடம் ஊரடங்கை நீட்டிக்கலாமா என்பது உட்பட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

கொரோனாவின் இரண்டாம் அலை மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக, மே 10ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை 14 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு மாநகர, நகர, கிராமப்புறங்களிலும் ஊரடங்கு அமலில் உள்ளதா எனக் கேள்வி எழுப்பும் வகையில் மக்கள் நடமாட்டத்தையும், வாகனங்கள் செல்வதையும் காணமுடிகிறது. இந்நிலையில், ஊரடங்கைக் கடுமையாக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

மனம் திறக்கும் துர்கா ஸ்டாலின்.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்...

May be an illustration of 1 person, standing and text that says 'MAN WITH THE PLAN RIGHT HERE மு.க.ள் முதலமைச்'

விகடன்  : மனம் திறக்கும் துர்கா ஸ்டாலின்!
கணவரின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி, மகனது வெற்றி, வாக்கு எண்ணிக்கை நாளின் மனநிலை என்று தன் எண்ணங்களை விகடனுடன் முதல்முறையாக விரிவாகப் பகிர்ந்து கொள்கிறார் துர்கா ஸ்டாலின். VikatanExclusive
தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டுவிட்டார். வாழ்த்துகளால் நிரம்பி வழிகிறது  தமிழகமுதல்வர் ஸ்டாலின் இல்லம்.
`முத்துவேல் கருநிதி ணாஸ்டாலின் எனும் நான்' என்ற வார்த்தைகளை ஸ்டாலின் உச்சரித்து முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட அந்தத் தருணத்தில் முன் வரிசையில் அமர்ந்திருந்த அவரின் மனைவி துர்கா ஸ்டாலின் வெடித்துக் கண்கலங்கிய காட்சி, அரசியல் தாண்டி அனைவரையும் நெகிழச் செய்த தருணம்.
பத்து வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் அரியணையில் அமர்ந்து மொத்த இந்தியாவையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அவரது வெற்றியில் மனைவி துர்கா ஸ்டாலினுக்கும் நிச்சயம் பெரும் பங்குண்டு. கணவரின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி, மகனது வெற்றி, மக்களின் மனநிலை என்று தன் எண்ணங்களை மூத்த பத்திரிகையாளர் மற்றும் முன்னாள் பத்திரிகை ஆசிரியர் #லோகநாயகியிடம் பிரத்யேகமாகப் பகிர்ந்துகொள்கிறார்

மதுரை மயானங்களில் குவியும் சடலங்கள்...24 மணிநேரமும் எரியும் சுடுகாடுகள் - வைரல்

Jeyalakshmi C  - tamil.oneindia.com :  மதுரை: வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சடலங்கள்... ஒரு பக்கம் எரிந்து கொண்டிருக்கும் உடல்கள் என காணும் இந்த காட்சிகள் டெல்லியோ, உத்தரபிரதேசமோ அல்ல தமிழகத்தில் மதுரையில்தான்.
கொரோனா மரணங்கள் ஒரு பக்கம், உடல் நலக்குறைவினால் ஏற்பட்ட மரணங்களும் அதிகரிக்கவே இப்போது மயானங்களில் சடலங்கள் குவியத் தொடங்கியுள்ளன.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த லாக்டவுன் அமல்படுத்தப்பட்டாலும் பலரும் கட்டுப்பாடின்றி சுற்றி வருகின்றனர்
மதுரையில் மருத்துவமனைகளில் பல மணிநேரம் ஆம்புலன்சில் நோயாளிகள் காத்திருக்கின்றனர். கொரோனாவால் ஏற்படும் மரணங்களும் அதிகரித்து வருகிறது.

120 உழவர் சந்தைகள் திறக்கப்பட உள்ளன” - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேட்டி!

“தமிழகத்தில் 120 உழவர் சந்தைகள் திறக்கப்பட உள்ளன” - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேட்டி!
kalaignarseithigal.com : தமிழகத்தில் புதிதாக 120 க்கும் மேற்பட்ட உழவர் சந்தைகள் திறக்கப்பட உள்ளன; பண்ருட்டி பலாப்பழங்களை விவசாயிகள் தடையின்றி சென்னை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என செம்மொழிப் பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட பிறகு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.தமிழக வேளாண்துறை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் சென்னை தேனாம்பேட்டை யில் அமைந்துள்ள செம்மொழிப் பூங்காவில் ஆய்வு மேற்கொண்டார். பூங்கா வளாகத்தில் மகாகனி (swietenia mahagoni) மரக் கன்று ஒன்றை நடவு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது, "முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு மக்கள் எதிர்பாராத பல சலுகைகளையும் வழங்கி வருகிறார். 2010 ல் முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது ரூ.8 கோடி அளவில் 7.92 ஏக்கரில் சென்னையில் செம்மொழி பூங்காவை, கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டின் நினைவாக உருவாக்கினார்.

மேற்கு வங்காளம்: இரண்டு பா.ஜனதா எம்எல்ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்தனர்

மேற்கு வங்காளம்: இரண்டு பா.ஜனதா எம்எல்ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்தனர்
ராஜினாமா கடிதம் கொடுத்த எம்.எல்.ஏ.க்கள்
மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்காள சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. கொரோனா தொற்று ஒருபக்கம் தலைவிரித்தாட மறுபக்கம் மக்கள் வாக்களித்தனர். மே 2-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் 210-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. பா.ஜனதா 70-க்கும் மேற்பட்ட இடத்தில் வெற்றி பெற்றது.
ஏற்கனவே நாடாளுமன்ற எம்.பி.யாக இருந்த பா.ஜனதாவின் ஜெகனாத் சர்கார், நிசித் பிரமானிக் ஆகியோர் முறையே சாந்திபூர், தின்ஹட்டா ஆகியோர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ-வாக தேர்வு செய்யப்பட்டனர்
ஒருவர் ஒரு பதவியை மட்டுமே வகிக்க முடியும் என்பதால், இருவரும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். இதற்கான கடிதத்தை இன்று சபாநாயகர் பிமான் பானர்ஜியிடம் வழங்கினர்.

புதிய நாடாளுமன்ற கட்டட நிதியை தடுப்பூசிக்கு செலவிடவும்: எதிர்கட்சிகள் கோரிக்கை

'BBC :சென்ட்ரல் விஸ்டா' எனப்படும் புதிய நாடாளுமன்றம் உள்ளிட்ட மத்திய செயலக கட்டடங்களை கட்டுவதற்காக ஒதுக்கிய நிதியை கொரோனா தடுப்பூசி, ஆக்ஸிஜன் ஆகியவற்றை வாங்க செலவிட வேண்டும் என்று காங்கிரஸ், தி.மு.க., திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதியுள்ளன. "கோவிட் - 19 பெருந்தொற்று நமது நாட்டை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மனிதப் பேரழிவுக்கு இட்டுச் சென்றுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் குறித்து தனித்தனியாகவும் இணைந்தும் கடந்த காலத்தில் உங்களுடைய கவனத்திற்குக் கொண்டுவந்திருக்கிறோம். துரதிருஷ்டவசமாக உங்களுடைய அரசு அவற்றைக் கண்டுகொள்ளவில்லை அல்லது செய்ய மறுத்துவிட்டது. இது நிலைமையை மோசமாக்கி இவ்வளவு பெரிய மனிதப் பேரழிவில் கொண்டுபோய் நிறுத்தியுள்ளது.

சிகிச்சைக்காகக் காத்திருந்து ஆம்புலன்ஸிலேயே உயிரை இழந்த 6 கரோனா நோயாளிகள்

nakkeeran : தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை காரணமாக நாளுக்கு நாள் வைரஸ் பாதிப்பும், உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 10-ஆம் தேதி காலை 04.00 மணி முதல் மே 24ஆம் தேதி காலை 04.00 மணிவரை 15 நாட்களுக்குத் தமிழகத்தில் இந்த ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் ஒரே நாளில் 30,355 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இன்று சென்னையில் ஒரே நாளில் 7,564 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 19,508 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் 293 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 16,471 ஆக அதிகரித்துள்ளது.

இன்று முதல் TamilNadu is a state within State

 Umamaheshvaran Panneerselvam  :   இதுகாறும் உணர்வுகளைத் தூண்டிவிட்டு


வியாபாரம் பார்த்த கட்சிகள், இயக்கங்கள், புரோக்கர்களுக்கு படியளந்து தமிழர்களின் வாழ்வு தாழ காரணமாக இருந்த NRI மக்கள், புலம்பெயர்ந்தோர் தங்களது தவறுகளைத் திருத்திக்கொள்ள நல்ல வாய்ப்பு.
தமிழ்நாடு கொரோணாவிலிருந்து மீள தமிழக அரசுக்கு நேரடியாக உதவுங்கள். இடைத்தரகர்கள், நானே போய் நேரா நோயாளிக்கிட்ட கொடுக்கிறேன் சார், "கார்ட் மேலே உள்ள 16 டிஜிட் நம்பர் சொல்லுசார்" வகை கூட்டத்திடம் காசை அழாமல் , வெளிப்படையாக கணக்கு காட்டும் தமிழக அரசுக்கு கொடுத்து உதவுங்கள்.
இது முதற்படி மட்டுமே. நாளை இந்திய ஒன்றியத்தை எதிர்நோக்காமல் பல்வேறு திட்டங்கள், வேலைவாய்ப்புகளுக்கு நாம் அயல்நாடுகளுடன் உரையாட வேண்டிய தருணம் நெருங்கிவருவது கண்கூடு.
பொருளாதார வலிமை,தன்னிறைவு பொருளாதாரம் என பீடுநடைபோட காலம் வருகிறது .
பலமுறை எழுதியும் பேசியும் வந்ததைத் தான் மீண்டு பகர விழைகிறேன். இந்திய ஒன்றியத்தில் நமக்காக பங்கைவிட Aisa-pacific பகுதியில் தமிழ்நாட்டின் குவி மையம் இனி இருக்கப்போகும் காலம் வருகிறது. அதன் முதற்படி தான் அமைந்துள்ள இந்த அரசு.

பிரிட்டன் கொரோன தொற்றில் இருந்து பாதி கிணறு தாண்டிவிட்டது

May be an image of text that says 'Coronavirus alert levels in UK Stage of outbreak Risk of healthcare services being overwhelmed Measures in place 5 Extremely strict social distancing Transmission is high or rising exponentially Social distancing continues Virus is in general circulation 3 Gradual relaxation of restrictions Number of cases and transmission is low 2 Minimal social distancing, enhanced tracing Covid-19 no longer present in UK 1 Routine international monitoring Source UK government BBC'

May be an image of one or more people and text that says 'bbc.co.uk Home BBC NEWS More Health Menu Covid alert level reduced as lockdown set to ease By Michelle Roberts Health editor, BBC News online minutes ago Coronavirus pandemic STAYIN ALER) PA MEDIA'LR Jagadheesan : பாதி கிணறு தாண்டியிருக்கிறது பிரிட்டன். கொரோனாவை சமாளிக்க முடியாமல் துவக்கத்தில் இந்தியாவைவிட மிக மோசமாக திணறிய பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்த மேற்குல நாடுகளில் பிரிட்டனும் ஒன்று.
ஆனால் கொள்ளைநோயின் பிற்பகுதியில் தடுப்பூசியை இலவசமாகவும் விரைவாகவும் பொதுமக்களுக்கு கொடுத்ததனால் தனது முந்தைய தவறுகளையும் கடந்து முழு முடக்கத்தில் இருந்து பிரிட்டன் பெருமளவு வெளியில் வந்திருக்கிறது.
இதற்கான காரணிகளில் முதன்மையான காரணி பரவலான இலவச தடுப்பூசி விநியோகமே. அதுவும் உலக அளவில் அதிகபட்ச விமர்சனங்களை இன்றளவும் எதிர்கொண்டுவரும் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிதான் இங்கே பிரிட்டன் பிரதமர் உள்ளிட்ட அதிகம் பேருக்கு கொடுக்கப்பட்டது.

திமுகவின் ஒவ்வொரு சிறப்பான ஆட்சிக்கு பின்பும் ஏன் தோல்வி அடைகிறது அல்லது மிதமான வெற்றியை மட்டுமே பெறுகிறது!

Sivakumar Nagarajan : திமுக ஆட்சிக்கு பின் ஒன்று திமுக படு தோல்வி

அடைகிறது அல்லது மிதமான தோல்வி அடைகிறது (1971 தேர்தல் தவிர). ஏனென்று பார்த்தால் ... ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.
எங்கள் பள்ளியில் 11ம் வகுப்பு ஆரம்பித்து அமைதியாக போய்க்கொண்டிருந்தது...அதுவரை அறிவிக்கப் படாத ஒரே அறிவாளி கேங் என் தலைமையிலான 5 பேர் சிறு கூட்டம் தான்.
ஒரு மாதம் கழித்து ஒரு ஆசிரியரும் அவரது தம்பியும் பெங்களூரில் இருந்து வந்தார்கள்.
அந்த தம்பி ஒரு கல்லூரி பட்டம் பெற்றவன் என்று நாங்கள் நினைக்கையில் அவன் எனது வகுப்பில் மாணவனாக சேர்ந்தான்.
எங்களுக்கு ஆச்சரியம். அவனுக்கு தெரிந்த விஷயங்களில் 5% கூட எங்களில் யாருக்கும் தெரியவில்லை. எல்லா விதத்திலும் ரொம்பவே உயர்ந்த நிலையில் இருந்தான்.
பேசுறது பூரா இங்கிலீஷ் வேற. தமிழ் தெரிந்தாலும் ஆசிரியர்களிடம் மட்டும் தான் பேசுவான்.
தவிர உடல் அமைப்பு வேறு வித்தியாசம். அவன் அப்பவே 6 அடி இருந்தான். எங்களில் மற்றவர்கள் எல்லாம் 5 அடிதான் இருந்திருப்போம். தவிர ஆண்கள் பள்ளியாக இருந்தாலும் சனி, ஞாயிறுகளில் பார்வையாளர்கள் பள்ளி விடுதிக்கு வருவார்கள். பல பெண்களும் தான். இவர்களின் பார்வை எல்லாம் அந்த பையன் மேலயே இருக்கும். அவனுக்கு பணத்துக்கும் குறைவில்லை. அவனது அண்ணனே வாத்தியார் என்பதால்.

புதன், 12 மே, 2021

பெங்களூரு கொரோனா அதிர்ச்சி அளிக்கும் புள்ளிவிபரங்கள்

tamil.samayam.com :  கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நினைத்து பார்க்காத வகையில் அதிகரித்து ஒட்டுமொத்த நாட்டிற்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.
தகவல்தொழில்நுட்ப தலைநகரத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று
நாட்டிலேயே அதிகபட்ச வைரஸ் பாதிப்பு கொண்ட மாவட்டமாக மாறியது
இரண்டாவது அலையை அரசு தவறான கணித்ததே காரணம் என குற்றச்சாட்டு
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்ற, இறக்கங்களுடன் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகளைக் கொண்ட மாநிலங்களாக மகாராஷ்டிரா(51.4 லட்சம்), கர்நாடகா(19.7 லட்சம்), கேரளா(19.3 லட்சம்), தமிழ்நாடு(14 லட்சம்), உத்தரப் பிரதேசம்(15.2 லட்சம்), மேற்குவங்கம்(10.1 லட்சம்), ஆந்திரப் பிரதேசம்(13.2 லட்சம்), டெல்லி(13.3 லட்சம்) ஆகியவை உள்ளன.

அமரர் ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த சி பி ஐ . ரகோத்தமன் மறைவு! Sundaram Oyyanan

May be an image of 1 person
Sundaram Oyyanan : விரல் வலிக்கின்ற போதெல்லாம்  உம் நினைவு வரும் ரகோத்தமன்!.போய்விட்டீரே! இராஜீவ் காந்தி கொலையின் குற்ற வழக்கில், தமிழ்நாட்டில் முதல் நபராகக் கைது செய்யப்பட்டவன் நான்,
1991 ஜூன் இரண்டாவது வாரத்தில்! நாளேடுகள் அனைத்தும் எட்டு காலச் செய்தியாக்கி, நீட்டி முழக்கி எனது 'பெரு மைகளை' வெளியிட்டு, குடும்பத்தினர் நிழற் படங்கள் பிரசுரித்துத் தீவிரவாதி யாக்கி, சட்ட விரோதக் காவலில் வைத்த பொழுதுகள் அவை!
கிழக்குக் கடற்கரைச் சாலை, வெட்டு வாங்கேணியில் அமைந்திருந்த எனது எளிய இல்லத்தை அதிரடிப் படையோடு சுற்றி வளைத்து, சி.பி.ஐ அதிகாரிகள் ராஜூ, பாஸ்கரன், சிவாஜி, 'அடியாள்' மாதவன் உள்ளிட்ட குழுவினர் உள்ளே பாய்ந்து எனைக் கைது செய்த போது,
அந்தக் குழுவில் இருந்தவர்களில் ஒருவர் தான் திரு.ரகோத்தமன்!
எத்தனை எத்தனை நெருப்பு வளை யத்துள் நிற்கின்ற நிலை வந்த போதும், அப்போதே பீறிட்டு வரும் நகைச்சுவை உணர்வுகள்..'மைன்ட் வாய்ஸ் ஆக' இன்ற ளவும் எனக்குள் ஊறி வருவது இயல்பு!

Sonu Sood என்னும் மாய பிம்பம்

May be an image of 1 person and text that says 'Producer files criminal complaint against Sonu Sood By Mumbai Mirror Vickey Lalwani Feb 9, 2013, 11:39 IST f P Next'
May be an image of 3 people, people standing and text

Bapeen Leo Joseph. : Sonu Sood  பஞ்சாப் மாநிலம் மோகா என்னும் இடத்தில் 1973ல் பிறந்தார்.
தந்தை சக்தி சாகர் சூட் ஒரு துணி வியாபாரி. தாயார் ஆசிரியை. மிக சாதாரண குடும்பத்தில் எளிய வாழ்க்கை வாழ்ந்தார்.
பஞ்சாபில் பள்ளி படிப்பை முடித்து கல்லூரி படிப்பை நாக்பூர் Yeshwantrao Chavan College of Engineeringல் முடித்தார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டே மாடலிங் செய்து வந்தார்.
1996ல் கல்லூரி காலத்தில் காதலித்த சொனாலி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். 1999ல் கள்ளழகர் படம் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார். அதன்பின் தெலுங்கு தமிழ் ஹிந்தி என நடித்து பெயர் பெற்றார்.
சிறிது சிறிதாக வளர்ந்து வந்த அவர் வாழ்க்கையை திருப்புமுனையாக்கும் நாள் 2009ல் அமைந்தது. தான் நாக்பூரில் படித்த Yeshwantrao Chavan College of Engineering இன் Alumni meetக்கு அந்த வருடம் சோனு சூடை அழைத்திருந்தனர்.
வழக்கமாக மந்தமாக செல்லும் Alumni விழா சினிமா பிரபலத்தின் வருகையால் களை கட்டியது. 

அழிந்து போன டோடோ பறவைகள் போலவே தமிழர்களும் ... எதிர்ப்பு காட்டாமல் ஆரியரை வரவேற்ற..

May be an image of 1 person and text that says 'டோடோ பறவையும்... ஆதி தமிழரும்...'

Fazil Freeman Ali  :  டோடோ ப‌ற‌வையும் ஆதித்த‌மிழ‌ரும்
16-ம் நூற்றாண்டின் துவ‌க்க‌த்தில், 1507-ல் அதுவரை மனிதர்க‌ள் வாழ்ந்திராத‌, இய‌ற்கை கோலோச்சிய‌, அழ‌கான‌ தீவு ஒன்றில் ஒரு போர்த்துகீசிய கப்பல் தள்ளாடியபடி கரை ஒதுங்கிய‌து
அடிமை வியாபார‌த்தில் அப்போதெல்லாம் கொடி க‌ட்டிப் ப‌ற‌ந்திருந்த‌ அரேபிய‌ரும் இத்தாலிய‌ரும் இந்த‌ தீவில் அடிமைக‌ளாய் பிடித்து விற்க‌ ம‌னித‌ர்க‌ள் இல்லாத‌தால் ஏமாற்ற‌த்தோடு சென்றிருந்த‌ன‌ர்.
அந்த தீவில் மனிதர்கள்தான் இல்லையே தவிர, அங்கு ஏக‌ப்ப‌ட்ட‌ உயிரின‌ங்க‌ள் வாழ்ந்திருந்த‌ன‌, குறிப்பாக‌ பெரும் எண்ணிக்கையில் அந்த‌ ம‌ண்ணின் மைந்தர்களாக ஒரு பெயரிடப்படாத பறவை இனம் அத்தீவு முழுக்க நிரம்பி இருந்தது.
வாத்து அல்ல‌து அன்ன‌ம் போன்ற தோற்ற‌த்தில் அதைவிட‌ பல‌ மடங்கு பருத்து சுமார் 20 கிலோ எடை கொண்டிருந்த‌, தத்தித் தத்தி நடக்கும் பறக்கும் தன்மையற்ற  அப்பறவை, நிலத்திலும் நீரிலும் வாழும் தன்மை கொண்டதாக இருந்தது.
பெய‌ரிடப்ப‌டாத‌ அந்த‌ தீவில் அப்போதைக்கு வேறு யாரும் குடியேறி வாழ்ந்திருக்க‌வில்லை.

அனைத்து மருத்துவர்களுக்கும் Group Term Life Insurance Policy செலவு குறைவு பாதிப்புக்க 25 லட்சத்திற்கு பதிலாக ஒரு கோடிக்கு மேல் கொடுக்கவும் முடியும்.

 Karthikeyan Fastura  :  உயிரிழப்புகள் ஏற்படும் என்று அறிந்தும் எதிர்த்து போராடுவதால் தான் ராணுவவீரர்களின் இறப்புக்கு ராணுவமரியாதை கொடுக்கப்படுகிறது.
கண்ணுக்கு தெரிந்த எதிரியை விட தெரியாத எதிரியான இந்த வைரஸை எதிர்த்து போராடி பல உயிர்களை காக்கும் மருத்துவ முன்களபணியாளர்களுக்கும் அதேவிதமான மரியாதையும், இழப்பீடும் கொடுக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வெகுநாளாக பலரால் எழுப்பப்பட்டு வந்தது.
அதனை ஒன்றிய அரசும், இதற்கு முன்பிருந்த மாநில அரசும் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. இப்போதுள்ள திமுக அரசு கொரோனாவினால் இறக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களபணியாளர்களுக்கு 25லட்சம் அறிவித்திருப்பது சிறப்பு. அவர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்திருப்பது அதனினும் சிறப்பு.
உண்மையில் இது நோயாளிகளுக்கு தான் பெரும் பயனை கொண்டுபோய் சேர்க்கும்.
தமிழ்நாடு அரசிற்கு ஒரு யோசனை. இதுவரை அரசு பணியாளர்களுக்கு  Medical Insurance எடுத்து கொடுத்திருப்பீர்கள். அது மருத்துவ செலவுகளை ஈடுகட்ட உதவும். உயிரிழப்பிற்கு அல்ல. உயிரிழப்பிற்கு Term Life Insurance  எடுக்க வேண்டும்.

கொரோனா பணியில் உரிழந்த இளம் கர்ப்பிணி டாக்டர் சண்முக பிரியா .. தேனீ மாவடடம் சின்ன மனூர்

 மாலைமலர் : வேலைக்கு செல்ல வேண்டாம் என குடும்பத்தினர் சொல்லியும் மருத்துவ சேவை ஆற்றி கொரோனாவுக்கு கர்ப்பிணி பெண் டாக்டர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் சின்ன மனூரைச் சேர்ந்தவர் சண்முகபிரியா (வயது 32). இவர் மதுரை அனுப்பானடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணிபுரிந்து வந்தார்.
இவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இருந்த போதிலும் கொரோனா தொற்று காலத்திலும் அவர் வழக்கம்போல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு டாக்டர் சண்முக பிரியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

கொரோனா பணியில் உயிரிழந்த மருத்துவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

 கலைஞர் செய்திகள் :"கொரோனா சிகிச்சைப் பணியில் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு - இரண்டாம் அலையில் பணியாற்றி வரும் மருத்துவப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்" என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளித்து அவர்களைக் காப்பாற்றும் அரும்பணியில், கடந்த ஓராண்டாக மருத்துவர்களும், செவிலியர்களும் இதரப் பணியாளர்களும் அயராது அரும்பணியாற்றி வருகின்றனர்.

வீட்டில் இருந்து.. கட்டில் கொண்டு சென்றால்தான் அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. இது உ.பி.யின் அவலம்!

 tamil.oneindia.com   -   Rayar A   :  லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் பல நோயாளிகள் தங்கள் வீட்டில் இருந்து கட்டில் கொண்டு சென்று அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மாநில தலைநகர் லக்னோ, கான்பூர் நகர், புனித நகரமான வாரணாசி, பிரயாகராஜ் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் தொற்று வேகமாக பரவி வருகிறது.

இதில் தலைநகர் லக்னோவுக்கு அடுத்து மிக மோசமாக பாதிக்கப்பட்டது மீரட் மாவட்டமாகும்.. மீரட் மாவட்டத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 1,368 புதிய பாதிப்புகள் பதிவாகின. 13,941 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 2,974 படுக்கைகள் உள்ளன, அவற்றில் 1,672 ஆக்ஸிஜன் மற்றும் 583 ஐசியு படுக்கைகள் ஆகும்.

இரு மே.வங்க எம்பிக்கள் ராஜினாமா செய்ய பாஜக தடை..இடைத்தேர்தலை சந்திக்க பயம் ?

மேற்கு வங்க தேர்தல்: வாக்குச்சாவடியில் முகாமிட்ட மமதா - பாஜகவினருடன்  நேருக்கு நேர் வாக்குவாதம் - BBC News தமிழ்

hindutamil.in : மேற்கு வங்கத்தில் வெற்றி பெற்ற தன் இரண்டு எம்எல்ஏக்களை அவர்களது பதவியை ராஜினாமா செய்து மக்களவை எம்.பி.க்களாகத் தொடர பாஜக உத்தரவிட்டுள்ளது.
இதன்மூலம், பாஜக மக்களவை இடைதேர்தலில் தோல்வி ஏற்படும் என அஞ்சுவதாகக் கருதப்படுகிறது.
சமீபத்தில் மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் 213 பெற்று மூன்றாம் முறையாக ஆட்சி அமைத்தது. இதன் 294 தொகுதிகளில் பாஜகவிற்கு 77 கிடைத்தன.
இந்தமுறை பாஜக மக்களவையின் தனது 4 எம்.பிக்களை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வைத்தது. இவர்களில், மக்களவையின் ஹுக்லி எம்.பியான லாக்கெட் சட்டர்ஜியும், ஆசனோல் எம்.பியும் மத்திய இணை அமைச்சருமான பாபுல் சுப்ரியோவிற்கு தோல்வி கிடைத்தன.
மாநிலங்களவையின் எம்.பியாக இருந்த ஸ்வப்னதாஸ் குப்தா தனது பதவியை ராஜினாமா செய்து போட்டியிட்டும் பலன் இல்லை. எனினும், மற்ற 2 பாஜக எம்.பிக்களில் சாந்திபூர் தொகுதியில் ஜகன்நாத் சர்கார், 15,878 வாக்குகளில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்தார்.

எதிர்காலத்தில் அமைச்சரவை மாற்றங்கள்? பல புதியவர்களுக்கு வாய்ப்புக்கள் வழங்கப்படும்! முதல்வர் ஸ்டாலின்...

ஸ்டாலின்

விகடன் -உமர் முக்தார்  :   133 எம்.எல்.ஏ-க்களைப் பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்திருக்கிறது தி.மு.க. 100-க்கு 85 சதவிகித எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவியைக் கொடுத்துவிட வேண்டும் என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறாராம்.
தி.மு.க சீனியர் ஒருவர் நம்மிடம், “சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க அறுதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
முதல்வராக வேண்டும் என்கிற ஸ்டாலினின் அரை நூற்றாண்டு கனவு நனவாகிவிட்டது. இந்த மகிழ்ச்சியைத் தன்னோடு மட்டும் வைத்துக்கொள்ளாமல் சட்டமன்ற உறுப்பினர்களோடும் பகிர்ந்து கொள்ளும் மனநிலையில் இருக்கிறார் முதல்வர்.

கொரோனா தடுப்பூசிகள் இறக்குமதி! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிரடி!

மாலைமலர் : மத்திய அரசு ஒதுக்கியுள்ள தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாததால், இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள் என்று மத்திய அரசு தெரிவித்தது. மாநில அரசுகளும் 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் மே 1-ந்தேதியில் இருந்து தடுப்பூசி வழங்க தயாராக இருந்தன. ஆனால் மத்திய அரசு போதுமான தடுப்பூசி டோஸ்களை ஒதுக்கவில்லை.

ரங்கசாமியை காப்பாற்ற ஸ்டாலினால் மட்டுமே முடியும்… ஸ்கெட்ச் போடும் அமித்ஷா - வீரமணி!

malaimurasu.com :  புதுவையைக் காப்பாற்றி (அடுத்த கட்டமாக) ஜனநாயகத்தைக் காப்பாற்றிட தி.மு.க.வினால் மட்டுமே விடியலை ஏற்படுத்த முடியும்! என திராவிட கழக தலைவர் வீரமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் 2ஆம் தேதி மே 2021இல் வெளி வந்தன. அதன்படி, என்.ஆர்.காங்கிரஸ்-10 இடங்கள்; பா.ஜ.க – 6 இடங்கள்; தி.மு.க- 6 இடங்கள்; சுயேச்சைகள் – 6 இடங்கள்; காங்கிரஸ் – 2 இடங்கள்; மொத்தம் – 30 இடங்கள்   புதுவை சட்டப் பேரவைக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய ஜனநாயக முன்னணி என்ற N.D.A.யில் இடம் பெற்றதாக அறிவிக்கப்பட்ட என்.ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் கட்சி 10 இடங்களையும், பா.ஜ.க. 6 இடங்களையும் பெற்றுள்ளதால், 30-இல் 16 பெரும்பான்மை என்பதால் அவர் தான்தான் முதல் அமைச்சர், தனது கட்சிதான் ஆட்சி அமைக்கும் என்று கூறி, பா.ஜ.க.வுக்கு அமைச்சரவையில் இடம் தர ஒப்புக் கொண்டார்; ஆனால், பா.ஜ.க.வுக்குத் துணை முதல் அமைச்சர் பதவி என்பதை மனதார அவரோ, அவரது கட்சியினரோ ஏற்கவில்லை.

இன்று எஸ் ஜே சாதிக் பாட்சா அவர்களின் நினைவு நாள்..... திமுக பொருளாளர், அமைச்சர், எம் எல் ஏ

May be an image of 2 people, people sitting and indoor
எஸ் ஜே சாதிக் பாட்சா

Siddique Kovai : இன்று எஸ் ஜே சாதிக் பாட்சா அவர்களின் நினைவு நாள்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் முக்கிய தூணாக விளங்கிய சாதிக் அய்யாவை பற்றிய சில குறிப்புகள் .
மூன்று முறை உடுமலைப்பேட்டை தொகுதியிலிருந்தும் ஒருமுறை ஆயிரம்விளக்கு தொகுதியிலிருந்தும் சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
சட்ட மேலவை உறுப்பினராகவும் பணியாற்றியவர்..
அண்ணா மற்றும் கலைஞர் தலைமையிலான அமைச்சரவைகளில் அமைச்சராகப் சிறப்பாக பணியாற்றினார்.
அரசு பதவியை எந்தக் காரணத்துக்காகவும் தன் சொந்த இலாபத்துக்காகப் பயன்படுத்தாதவர்.
மூன்று முறை அமைச்சராக இருந்தபோதிலும் சென்னை பட்டினப்பாக்கத்தில் அரசு குடியிருப்பில் வாடகை வீட்டில் குடியிருந்தவர்.

அன்று கலைஞர் வழங்கிய இலவச தொலைக்காட்சியில்... இன்று ஜோராய் ஒளிபரப்பாகும் கல்வி தொலைக்காட்சி..

அரசுப் பள்ளி
கொரோனா வைரஸ்

Arsath Kan - /tamil.oneindia.com :  சிவகங்கை: கொரோனா பரவல் காரணமாக கல்வித் தொலைக்காட்சி மூலம் கல்வி கற்பிக்கப்படும் நிலையில் அதற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
இன்று யூடியூப், ஆன்லைன் , ஸ்கைப் உள்ளிட்ட இன்னும் எத்தனையோ தொழில்நுட்ப வசதிகள் வந்துவிட்டாலும் கூட இன்னும்  கலைஞர் கொடுத்த இவலச வண்ண தொலைக்காட்சி மூலம் கல்வி கற்கும் மாணவர்களும் தமிழகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
கொரோனா வைரஸ் கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழகத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகள் மட்டும் ஆன்லைன் கிளாஸ் என்ற பெயரில் யூடியூப், ஸ்கைப் மூலம் தினமும் ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை பாடம் எடுத்து வருகிறார்கள்.
ஆனால் இத்தகைய வசதியும், கல்வி கற்கும் வாய்ப்பும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிட்டியதா என்றால் முழுமையாக இன்னும் கிட்டவில்லை என்றே கூறலாம்.

சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து நாடுகள் அனுப்பி வைத்த மருத்துவ உபகரணங்கள் இந்தியா வருகை

சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து நாடுகள் அனுப்பி வைத்த மருத்துவ உபகரணங்கள் இந்தியா வருகை

தினத்தந்தி : டெல்லி, இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையில், கொரோனாவை கட்டுப்படுத்த போராடி வரும் இந்தியாவிற்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
அந்த வகையில் ரஷியா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, பெல்ஜியம், ருமேனியா, லக்சம்பர், சிங்கப்பூர், போர்ச்சிகல், ஸ்வீடன், நியூசிலாந்து, குவைத் உள்பட பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு உதவி வழங்கியுள்ளன.

மே 16ஆம் தேதி ஊரடங்கு ரத்து: தமிழக அரசு திடீர் அறிவிப்பு - பொது மக்கள் மகிழ்ச்சி!

 /tamil.samayam.com : கொரோனா நிவாரண நிதிக்கான டோக்கன் ஞாயிற்றுக் கிழமையும் விநியோகம் செய்யப்படும்
ஞாயிறு காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை கொரோனா நிவாரண தொகைக்கான டோக்கன் வழங்கப்படும்
ரேஷன் கடை ஊழியர்களுக்கான விடுமுறை நாள் பின்னர் அறிவிக்கப்படும்
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் இரவு 10 முதல் காலை 4 மணி வரை இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் ஏற்கனவே அமலில் உள்ளன. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் மே 1ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால், கடந்த 10ஆம் தேதி வருகிற 24ஆம் தேதி காலை 4 மணி வரை இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு கூடுதல் கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின், பதவியேற்றவுடன் முதல் கையெழுத்தாக, 2.07 கோடி அரிசி ரேஷன் கார்டுகளுக்கு கொரோனா நிவாரண நிதி தலா ரூ.4000 வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டார்.
முதல் தவணையாக ரூ.2,000 நிவாரணத் தொகை இம்மாதமே வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அடுத்த மாதம் மீதமுள்ள ரூ.2000 வழங்கப்படவுள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் ராக்கெட் வீசி தாக்குதல் - கேரளாவை சேர்ந்த பெண் உள்பட 3 பேர் பலி

இஸ்ரேல் மீது ஹமாஸ் ராக்கெட் வீசி தாக்குதல் - கேரளாவை சேர்ந்த பெண் உள்பட 3 பேர் பலி

மாலைமலர் :இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய ராக்கெட் தாக்குதலில் கேரளாவை சேர்ந்த 31 வயது பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடுமையான மோதல் நிலவி வருகிறது.
இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள அல் அக்‌ஷா வழிபாட்டு தளத்தில் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடந்த திங்கட்கிழமை மோதல் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா முனையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது  நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியது.

நகைக்கடை ஊழியரை கொன்று 1½ கிலோ நகை கொள்ளை கார் டிரைவர் உள்பட 7 பேர் கைது

நகைக்கடை ஊழியரை கொன்று 1½ கிலோ நகை கொள்ளை கார் டிரைவர் உள்பட 7 பேர் கைது

தினத்தந்தி :திருச்சி புத்தூர் மதுரைவீரன் சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் மார்ட்டின் ஜெயராஜ் (வயது 42).
இவர் திருச்சி கரூர் பை-பாஸ் ரோட்டில் உள்ள பிரபல நகைக்கடையில் கொள்முதல் பிரிவில் கடந்த 6 வருடங்களாக வேலை செய்து வந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு மார்ட்டின் ஜெயராஜ் நகைகள் வாங்குவதற்காக சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஒரு நகைக்கடைக்கு வாடகை காரில் புறப்பட்டு சென்றார்.
1½ கிலோ நகை
அந்த காரை திருச்சி மாம்பழச்சாலை தாத்தாச்சாரியார் கார்டனை சேர்ந்த சண்முகம் மகன் பிரசாந்த் (26) என்பவர் ஓட்டினார்.
சென்னை வந்ததும் மார்ட்டின் ஜெயராஜ் நகைக்கடையில் இருந்து 1 கிலோ 598 கிராம் நகைகளை வாங்கி கொண்டு காரில் திருச்சிக்கு புறப்பட்டார்.
ஆனால் அவர் திருச்சி செல்லவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது.

நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா காலமானார்

Nellai siva
BBC :பிரபல நகைச்சுவை நடிகரான நெல்லை சிவா மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவருக்கு வயது 69.கொரோனா பெருந்தொற்று காரணமாக சமீப காலங்களில் தமிழ்த்திரையுலகில் பிரபலங்களின் இறப்பு செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
நடிகர் விவேக், பாண்டு, இயக்குநர் கே.வி. ஆனந்த் என அடுத்தடுத்து பல பிரபலங்கள் கொரோனா தொற்றாலும், உடல்நலக்குறைவு காரணமாகவும் காலமாகினர்.

ஊரடங்கு காரணமாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள்” - தமிழக முதல்வர் அறிவிப்பு!

 கலைஞர் செய்திகள் :கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள முழு ஊரடங்கை செயல்படுத்துவது குறித்து தொழில் மற்றும் வணிக சங்க அமைப்புகளுடன் கடந்த 9-5-2021 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் சென்னையில் கலந்தாலோசனைக் கூட்டம் நடந்தது.
அந்தக் கலந்தாலோசனைக் கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் பின்வரும் முடிவுகளை மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.
1. சுயமுதலீட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியம் வழங்க இந்த நிதியாண்டில் முதலீட்டு மானியத்திற்கான திட்டமதிப்பீடு ரூ.280 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 60 விழுக்காடு தொகை (ரூ.168 கோடி) நிறுவனங்களுக்கு உடனடியாக விடுவிக்கப்படும். இதன் மூலம் நிலுவையில் உள்ள தகுதியானஅனைத்து நிறுவனங்களுக்கும் மானியம் கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது.

2. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் உதவி பெறும்போது செலுத்தவேண்டிய முத்திரைத் தாள் பதிவுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து 31-3-2021 வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது டிசம்பர் 2021 வரை நீட்டிக்கப்படுகிறது.

CFL சி எப் எல் பல்புகள் உடைந்துவிட்டால் அவ்விடத்தை விட்டு தூர விலகவேண்டும்

No photo description available.

N.K. Kajarooban  :    சி. எஃப். எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டால் , உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது .
ஏனென்றால் இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம் , ஆர்சனிக் , துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மையுள்ளது .
இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சருமத்தில் பட்டாலோ , மைக்ரோன் தலைவலி , மூளை பாதிப்பு  உடல்அசைவுகள் , பாதிக்கப்பட்டு நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம் .
அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு சரும பாதிப்புகளும் ஏற்படுமாம் .
சி. எஃப். எல் .பல்புகள் உடைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் ?
01. உடனே அந்த அறையிலிருந்து வெளியேறி விட வேண்டும் . அந்த நெடி மூக்கில் ஏறக்கூடாது . பதினைந்து நிமிடங்கள் ஆனபின் அப்புறப்படுத்தலாம் . நொருங்கிக் கிடக்கும் கண்ணாடித் துகள்கள் காலில் படாமல் பார்த்துக் கொள்ளவும் .

செவ்வாய், 11 மே, 2021

தமிழ்நாடு சட்டமன்ற அவைத்தலைவரின் அதிகாரங்கள் என்னென்ன?

 BBC :தமிழ்நாட்டின் 16வது சட்டப்பேரவையின் தலைவராக மு. அப்பாவு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். சட்டப்பேரவையின் மிக முக்கியமான இந்தப் பதவியின் அதிகாரங்களும் பொறுப்புகளும் என்னென்ன?
இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மாநில அரசின் சட்டமன்றத்திற்கும் பொதுத் தேர்தல் முடிவடைந்த பிறகு, தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களில் இருந்து ஒருவர் சட்டப் பேரவைத் தலைவராக தேர்வு செய்யப்படுகிறார்.
பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு, சட்டப்பேரவை, அதன் அலுவலகம் ஆகியவற்றின் மீது முழு அதிகாரம் இருக்கும். பேரவைத் தலைவர்தான் சட்டமன்றக் கூட்டத்திற்குத் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பார் என்பதோடு, அவையில் பேசும் உறுப்பினர்களின் கருத்துக்களை பதிவேடுகளில் சேர்க்கவும் தேவையற்ற கருத்துக்களை நீக்கவும் அதிகாரம் கொண்டவர்.

அதேபோல, உறுப்பினர்கள் மீது புகார்கள் தெரிவிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களைத் உறுப்பினர்களை தற்காலிகமாகவோ கூட்டத் தொடர் முழுமைக்குமோ கலந்து கொள்ளத் தடைவிதிக்கும் அதிகாரமும் சபாநாயகருக்கு உண்டு.

தமிழ்நாடு சட்டமன்ற எம் எல் ஏக்கள் பதவி ஏற்பு

 zeenews.india.com :தமிழக சட்டமன்ற  (TN Assembly) முதல் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) கலைவாணர் அரங்கில் நடக்கிறது.
இந்த கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுக்கொள்கின்றனர்.
அவர்கள் பதவியேற்றுக்கொள்வதற்கு வசதியாக தற்காலிக  அவைத் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கு.பிச்சாண்டியை கவர்னர் பன்வாரிலால் புரோகித் (Banwarilal Purohit) நியமித்துள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கும் சட்டமன்ற  கூட்டத்தில் கு.பிச்சாண்டி முன்னிலையில் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்று கொள்கின்றனர். நாளை (புதன்கிழமை) சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்

மருத்துவமனைகளில் மூன்று வேளையும் இலவச உணவு!

minnambalm : தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மூன்று வேளையும் இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று கொண்டதையடுத்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 14 நாட்கள் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் உணவு, சிகிச்சை, படுக்கை வசதிகள், ஆக்சிஜன் தேவை போன்றவற்றை கண்காணிக்க வேண்டும். மேலும் மருத்துவமனையில் பணியாற்றும் முன்கள பணியாளர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா? என்பதையும் அமைச்சர்கள் கண்காணிக்க வேண்டும் என்று முதல்வர் தெரிவித்திருந்தார்.

சட்டமன்ற அவைத் தலைவராக அப்பாவு போட்டியின்றி தேர்வு

May be an image of one or more people and text

மாலைமலர் :சட்டமன்ற  பொதுத்தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அப்பாவு போட்டியிட்டார். இதில் அவர் அமோகமாக வெற்றி பெற்றார்.
சென்னை:     தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை கலைவாணர் அரங்கில் கூடியது. தற்காலிக அவைத் தலைவர்  கு.பிச்சாண்டி சட்டசபையை நடத்தினார்.
சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற அனைத்து கட்சிகளை சேர்ந்த புதிய எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். இதற்காக அனைத்து எம்.எல்.ஏ.க்களும் வெற்றிச் சான்றிதழ்களுடன் வந்திருந்தனர்.
முதலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பின்னர் அமைச்சர்கள் ஆகியோர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதன்பிறகு எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி மற்றும் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் உறுதிமொழி ஏற்றனர். அகர வரிசைப்படி புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு கு.பிச்சாண்டி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

அதிக கட்டணம் வசூலித்த 304 ஆம்னி பேருந்துகளிடமிருந்து 40 லட்சம் ரூபாய்கள் வரை அபராதம்! 25 பஸ்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளது

May be an image of text that says 'அதிக கட்டணம் வசூல் செய்த தனியார் பேருந்துகள்: உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து திமுக அரசு அதிரடி! 09:02:45 am- May 10, 2021 TRAYSLI ×××ב NKV Sharocsh'

tamilminutes.com :  பயணிகளிடம் அதிகக் கட்டணம் வசூலித்த 304 ஆம்னி பேருந்துகளிடமிருந்து 40 லட்சம் ரூபாய்கள் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 25 பஸ்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளன. இப்படி ஒரு செய்தி இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை.
அதே அதிகாரிகள்தான், அதே சட்டங்கள்தான். அமுல்படுத்தும் முறை மட்டும் இரண்டே நாட்களில் அதிரடியாகிவிட்டது. ஏனெனில் மக்களின் அவசரத் தேவையைப் பயன்படுத்திக் கொள்ளையடிப்பது இழவு வீட்டில் பணம் பிடுங்குவதற்குச் சமம். ஆம்னி பஸ்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்றால் அதுவும் இல்லை. நீங்கள் மதுரை மாட்டுத் தாவணி பஸ் ஸ்டாண்டில் வெறும் கையுடன் சென்று இறங்கினாலும் ஐந்தாறு பேர் வரை 'ஸார், சென்னையா?' என்று உங்களை அணுகுவார்கள். லாபம் கொழிக்காமல் இத்தனை ஏஜெண்ட்கள் சாத்தியமில்லை.

கங்கை ஆற்றில் மிதந்து வரும் கொரோனா பிணங்கள்! பிகார் - உத்தர பிரதேச அவலங்கள்

 Aazhi Senthil Nathan  : கங்கைச் சமவெளி என்னும் உலகின் கடைசி அநாகரீக தேசம்...
அந்தப் புகைப்படங்களைப் பகிர விரும்பவில்லை. கங்கை ஆற்றின் கரைகளில், பிஹாரின் பக்சர் அருகே, நூற்றுக்கணக்கான பிணங்கள் ஒதுங்கியிருக்கின்றன எனச் செய்திகள் வருகின்றன.
ஒரு டஜன் சடலங்கள் ஒதுங்கி அலையும் காட்சிகள் அதிர்ச்சியாக உள்ளன.
இந்தப் பிணங்கள் அருகேயுள்ள கிழக்கு உத்தரப் பிரதேசப் பகுதியிலிருந்து வருகின்றன என பிஹாரும், அவை பிஹாரின் பிணங்கள்தான் என உத்தரப் பிரதேசமும் அடித்துக் கொள்ளத் தொடங்கியுள்ளன.  கோவிட் தொற்று ஏற்பட்டு இறந்தவர்கள் நூற்றுக்கணக்கில் கங்கையில் எறியப்படுகிறார்கள் என்கிற அச்சம் இப்போது இந்தியாவை உறையச் செய்திருக்கிறது.
ஆனால், டேமேஜ் கன்ட்ரோலில் இறங்கியுள்ள மோடி மீடியா, "இல்லை இல்லை, இது வழக்கமாக நடைபெறுவதுதானே, கேட்பாரற்றச் சடலங்களை நாங்கள் இப்படித்தானே வீசுவது வழக்கம்" என்று சமாளிக்கத் தொடங்கியுள்ளன.  மனிதத்தன்மையற்று நடந்துகொள்வதுதானே நமது வழக்கம் என்கிற பதிலைக் கொண்டே சங்கிகள் நம் வாயை அடைக்கக்கூடும். இல்லையா பின்னே!

லஞ்ச ஒழிப்புத்துறை டி ஜி பி -கந்தசாமி - அமித் ஷாவையே கைது செய்தவர் ! 16 ஆண்டுகள் காத்திருந்து கன்னியாஸ்திரி வழக்கை தூசி தட்டியவர்! . முன்னாள் மாண்புகளே கேட்கிறதா?

May be an image of 2 people and text that says 'THIS IS CALLED REAL "MASTERSTROKE" P. Kandasamy, The Then IG In CBI Who Arrested Amit Shah In Sohrabuddin Fake Encounter Case Has Now Been Appointed As New Director General Of Vigilanct & Anti Corruption In Tamilnadu By MK Stalin Govt. INQUILAB INDIA BURNOL MOMENT FOR BJP & BHAKTS'

tamil.samayam.com/ : கந்தசாமி ஐபிஎஸ்  :   வலுவான ஆதரங்களை திரட்டி அமித்ஷாவை கைது செய்தவர்
கன்னியாஸ்திரி வழக்கை 16 ஆண்டுகள் கழித்து கையில் எடுத்து கண்டுபிடித்தவர்
கந்தசாமி ஐபிஎஸ் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் ஸ்டாலின் பதவியேற்றதில் இருந்து, அரசு அதிகாரிகள் மட்டத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார்.
முதல்வரின் முதன்மை செயலாளராக உதயசந்திரன் ஐஏஎஸ், தமிழக அரசின் தலைமை செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் உள்ளிட்டவர்கள் நியமனம் பாராட்டுகளை பெற்று வருகிறது.
அந்த வகையில், தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக சிறப்பு டிஜிபியாக (நிர்வாகத்துறை) இருந்த கந்தசாமி ஐபிஎஸ், காலியாக இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளது தற்போது உற்று நோக்கப்படுகிறது.

புதுசேரியில் ரங்கசாமி அரசுக்கு எந்நேரமும் ஆபத்து ! பாஜகவின் பலம் 9 ஆக உயர்வு

 Mathivanan Maran  - /tamil.oneindia.com :  புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபைக்கு 3 நியமன எம்.எல்.ஏக்களை மத்திய அரசு நியமித்தது மூலம் பாஜகவின் பலம் 9 ஆக உயர்ந்துள்ளது.
இதனால் புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசுக்கு எந்த நேரத்திலும் ஆபத்து காத்திருக்கிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
30 இடங்களைக் கொண்ட புதுச்சேரி சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான பாஜக 6 இடங்களிலும் வென்றது.
திமுக 6 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றது.
இந்த முறை புதுச்சேரி சட்டசபை தேர்தலில் 6 சுயேட்சைகள் வெற்றி பெற்றனர்.
இதனடிப்படையில் புதுச்சேரி சட்டசபையில் என்.ஆர். காங்கிரஸ்- பாஜக அணிக்கு 16 எம்.எல்.ஏக்களும், திமுக அணிக்கு 8 எம்.எல்.ஏக்களும் உள்ளனர்.
அத்துடன் 6 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் இருப்பதால் புதுவை அரசியலில் எதுவும் எந்த நேரத்திலும் நிகழலாம் என்கிற நிலைமைதான்.

பாஜக அடாவடி இப்படியான அரசியல் நிலையற்ற தன்மைக்கு மத்தியில்தான் புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பொறுப்பேற்றார். அதேநேரத்தில் 6 எம்.எல்.ஏக்களைக் கொண்டிருக்கும் பாஜக, துணை முதல்வர் பதவி மற்றும் 2 அமைச்சர்கள் பதவி எனவும் தன்னிச்சையாகவே முடிவு செய்து கொண்டது. இது என்.ஆர். காங்கிரஸை அதிருப்தி அடைய செய்தது. இதுதான் ரங்கசாமி அரசுக்கான பாஜகவின் முதல் நெருக்கடி.

அண்ணா பல்கலைக் கழகத்தில் மீண்டும் தேர்வு'' - அமைச்சர் பொன்முடி தகவல்!!

nakkeeran :கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பி.இ அரியர் தேர்வு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் சென்னை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். அதேபோல், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளும் ஆலோசனையில் பங்கேற்றனர். பி.இ அரியர் தேர்வு முறையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு உள்ளிட்டவை குறித்து இந்த ஆலோசனையில் ஆலோசிக்கப்பட்டது.