சனி, 9 ஜூலை, 2011

"சத்து மாவு தொழில் குடும்பத்துக்கு தெம்பு கொடுத்தது!'

சத்து மாவு தயாரிப்பில் வெற்றி பெற்றுள்ள, இயற்கை மகளிர் சுய உதவிக் குழுவின் தலைவி சுகந்தி: இரண்டு வயதாகியும், என் மகன் நடக்க சிரமப்பட்டான். என் பாட்டி சொன்ன வைத்தியம் தான், எங்கள் குழுவின் வளர்ச்சிக்கு ஆணி வேர். "கம்பு வறுத்து, திருகையில் திரிச்சு, பொரிகடலை, நிலக்கடலை இடிச்சு, அதை மல்லு துணியில் போட்டு சலித்து எடுத்து, அதில் கருப்பட்டியை கொஞ்சம் கலந்து, சுடு தண்ணீரில் பிசைஞ்சு பிள்ளைக்கு கொடுத்தா, சூம்பின பிள்ளைங்க விரைப்பா வந்துடும்' என்றார். நானும், அதோ போல் செய்து, என் மகனுக்குக் கொடுத்தேன். ஒரு மாதத்தில் தெளிந்து, எட்டு நடக்க ஆரம்பித்து விட்டான். எங்கள் ஊரில் பலரும் இதுபற்றி கேட்க, அவர்களுக்கும் செய்து கொடுத்தேன். இதையே ஒரு தொழிலாக தொடங்கலாம் என நினைத்து ஆரம்பித்தேன். கடந்த, 2003ல், மகளிர் சுய உதவிக் குழு துவங்குவதற்காக ஊருக்கு வந்த அதிகாரிகள், பெண்கள் தொழில் செய்தால், அரசு உதவும் என்று சொல்ல, சத்து மாவு பற்றி அவர்களிடம் கூறினேன். இதை தொழிலாக செய்தால், வங்கி மூலம் கடன் பெற்றுத் தருவதாகக் கூறினர். அதன்பின், நான்கு பெண்கள் சேர்ந்து குழுவை ஆரம்பித்து, தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வணிக வளாகத்தில், "இயற்கை சத்து மாவு' என்ற பெயரில் தொழில் ஆரம்பித்தோம். அரசு சார்பிலும் பயிற்சி கொடுத்தனர். அதன் மூலம், சில புது விஷயங்களையும் கற்றுக் கொண்டோம். சுய உதவிக்குழு தயாரித்த பொருட்களுக்கான விற்பனைக் கண்காட்சி, சென்னையில் நடந்தது. அங்கு, "இயற்கை சத்து மாவு' ஸ்டால் போட்டோம். அதில், எங்க மாவின் தரம் குறித்து சோதித்த அரசு அதிகாரிகள், மாதம் 500 கிலோவுக்கு ஆர்டர் கொடுத்தனர். மாதம் எங்களுக்கு, 30 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது.

6,000 ராணுவ வீரர்கள் ஆந்திரா விரைந்தனர் ஜெய்ப்பால் ரெட்டி பிரதமருடன் சந்திப்பு


ஆந்திராவை பிரித்து தனி தெலங்கானா மாநிலம் அமைக்க வலியுறுத்தி, அப்பகுதியை சேர்ந்த மாநில அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இந்நிலையில் ஆந்திர மூத்த காங்கிரஸ் தலைவரும் பெட்ரோலியத் துறை அமைச்சருமான ஜெய்ப்பால் ரெட்டி, டெல்லியில் நேற்று பிரதமர் மன்மோகனை சந்தித்து 40 நிமிடங்கள் பேசினார்.

அப்போது ஆந்திராவில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், ஐதராபாத் மற்றும் தெலங்கானா பகுதியில் உள்ள 9 மாவட்டங்களில் மக்களின் மனநிலை, அவர்களுடைய சென்டிமென்ட் போன்ற விவரங்களை விரிவாக எடுத்துரைத்து, தனி தெலங்கானா மாநிலம் அமைக்க கோரியதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

தெலங்கானா பகுதியில் உள்ள செல்வெலா நாடாளுமன்ற மக்களவை தொகுதி எம்.பி.யாக ஜெய்ப்பால் பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், தெலங்கானா தொடர்பாக ஆந்திராவில் போராட்டம் வலுத்துள்ளதால், கூடுதல் பாதுகாப்புக்கு துணை ராணுவ வீரர்கள் 6 ஆயிரம் பேரை மத்திய அரசு அனுப்பி உள்ளது. மாநிலத்தில் ஏற்கனவே உள்ள 4 ஆயிரம் சி.ஆர்.பி.எப் வீரர்களுடன் இவர்கள் கூடுதலாக ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.
ஆந்திரா தெலுங்கனா பிரிவினை போராட்டம் பெரும் கலவரமாக வெடிக்கப்போகிறது. இந்தியா சந்திக்கபோகும் மிகபெரும் பிரச்சனையாக இது இருக்கபோகிறது. நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்த பல்வேறு சமுக பிரச்சனைகளின் காரணமாக இது பிரிவினை வடிவமெடுத்து இருக்கிறது.
ராணுவ ஆட்சி விரைவில் வரும் சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது. ஆந்த்ராவில் ராணுவ ஆட்சி என்றதும் என்னவோ எதோ என்று எண்ணி விடாதீர்கள்? அனேகமாக காஷ்மீரில் நடப்பது போன்ற ஒரு நிலைமையை தான் நாம் ராணுவ ஆட்சி என்று குறிப்பிட்டோம்.

ரூ.3 கோடியில் சச்சின், டோனிக்கு கோயில்

கிரிக்கெட் நட்சத்திர வீரர் சச்சின், கேப்டன் டோனிக்கு, ரூ.3 கோடி செலவில் கோயில் கட்ட உள்ளதாக போஜ்புரி நடிகர் மனோஜ் திவாரி கூறியுள்ளார். பீகாரில் கைமூர் மாவட்டத்தில் தனது சொந்த ஊரான அதர்வாலியா கிராமத்தில் இந்த கோயிலை கட்ட உள்ளதாகவும், அங்கு இரு வீரர்களின் சிலைகள், 2011 உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களின் ஓவியங்கள் இடம் பெறும் என்று தெரிவித்தார்.

HABHUA: Bhojpuri actor Manoj Tiwari said he will construct a temple for the 'God of Cricket' Sachin Tendulkar and Team India captain Mahendra Singh Dhoni at his native village Atarwalia in Bihar's Kaimur district. The avid cricket fan said he has identified the site for the construction of the temple, which will be built at a cost of Rs 3 crore.
Asked, Tiwari said he was building a temple for the two cricketers as they have 'provided entertainment and pleasure to cricket lovers akin to that one gets from God'.
 very soon india would become super power because of proposed temple

கற்பழித்த 8 பேரை அடையாளம் காட்டிய சிறுமி.அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது

கேரளத்தில் நூற்றுக்கணக்கானோரால் செக்சுக்கு இறையாக்கப்பட்ட 9ம் வகுப்பு மாணவி, தன்னை பாலியல் பலாத்காரம் செய்த 8 பேரை அடையாளம் காட்டினார்.

நூற்றுக்கும் மேற்பட்டோரால் இந்த சிறுமி சிதைக்கப்பட்ட சம்பவம் கேரளாவை மட்டுமல்லாமல் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சிறுமியின் வாழ்க்கை இப்படி பாலியல் கொடுமைகளுக்குள்ளாக அவரது தந்தையே காரணம். அவரை கேரள போலீஸார் ஏற்கனவே கைது செய்துள்ளனர். பணத்துக்கு ஆசைப்பட்டு தங்களது 18 வயது மகளை பலருக்கும் உல்லாசமாக இருக்க அனுப்பி அந்தச் சிறுமியை நாசம் செய்துள்ளான் இந்த படுபாவி.

இந்த வழக்கில் முதலில் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையைச் சேர்ந்த காண்டிராக்டர் மணிகண்டன் என்பவர் கைது செய்யப்பட்டார்.அவரிடம் நடத்திய விசாரணையில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பல அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் தொடர்பு கொண்டிருப்பது தெரிய வந்தது.

அவர்களைப் பிடிக்க கொச்சி போலீஸார் தனிப் படையை அமைத்துள்ளனர். இவர்கள் கோவை, பெங்களூர் உள்ளிட்ட பல இடங்களுக்கும் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் இதுவரை 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாணவியை தான் மட்டும் பலத்காரம் செய்ததோடு தன்னோடு நெருக்கமாக இருந்த அதிகாரிகள் பலருக்கும் மணிகண்டன்,மாணவியை சப்ளை செய்துள்ளார். சுமார் 100 பேர் வரை மாணவியை பலத்காரம் செய்ததாக கொச்சி குற்றப்பிரிவு போலீசார் பட்டியல் தயாரித்தனர்.

இதில் குற்றவாளிகளை உறுதிப்படுத்த கேரள மாநிலம் அலுவா துறை சிறைச்சாலையில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. அப்போது போலீசார் நிறுத்தியிருந்த சுமார் 100 பேரில் 8 பேரை அடையாளம் காட்டினார் சிறுமி.

இதில் மணிகண்டன், சிபிஎம் தலைவரான தாமஸ் வர்கீஸ், உன்னிகிருஷ்ணன், விஜய்குமார், மனோஜ் கோபி, முருகேசன், நோபி, ஸ்வராஜ் ஆகியோர் அடங்குவர்.

இந் நிலையில் இந்த கற்பழிப்பில் தொடர்புடைய பழனியைச் சேர்ந்த முகுதீஸ்வரன் (32), பாலக்காட்டைச் சேர்ந்த ஸ்வாமிதாசன் (61), கேரள மாநிலம் பரவூரைச் சேர்ந்த ராஜசேகரன் நாயர் (40), செபின் பிரான்சிஸ் (28), எர்ணாகுளத்தைச் சேர்ந்த பெண்ணான ஜூலி ஆகியோரை நேற்று கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.

இதில் நாயர் முன்னாள் கடற்படை அதிகாரியாவார்.
 

கழுத்து வலி மற்றும் தோள்பட்டை வலியால் கனிமொழி அவதி

டெல்லி: கழுத்து வலி மற்றும் தோள்பட்டை வலியால் கனிமொழி அவதிப்படுகிறாராம். இதற்கு நிவாரணம் தேடுவதற்காக மருத்துவ முறையிலான தலையணை மற்றும் படுக்கை தருமாறு கோரி அவர் சிறப்பு சிபிஐ கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், தனக்கு கழுத்து வலி, தோள்பட்டை வலி இருப்பதாகவும், அதை சரி செய்ய மருத்துவ ரீதியிலான படுக்கை மறறும் தலையணை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை நேற்றுப் பரிசீலித்த சிறப்பு சிபிஐ கோர்ட் நீதிபதி ஓ.பி.ஷைனி, சிறை விதிமுறைகளுக்குட்பட்டு இந்தக் கோரிக்கையைப் பரிசீலிக்குமாறு திஹார் சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

இதுகுறித்து விரைவில் பரிசீலித்து திஹார் சிறை நிர்வாகம் முடிவெடுக்கும் என்று தெரிகிறது. நேற்று கோர்ட்டுக்கு வந்திருந்த கனிமொழி கழுத்து வலி காரணமாக கழுத்தை அடிக்கடி பிடித்தபடியும், நீவி விட்டபடியும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2 மாதங்களாக சிறையில் அடைபட்டுள்ளார் கனிமொழி. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அவர் கூட்டுச் சதியாளராக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
2g scam accused Kanimozhi has appealed to give her medical bed and pillow. In her petition with the spl CBI court she had said that, she is suffering from neck and shoulder pain. Court has asked the Tihar jail to look into this matter.

1,600 குடும்பங்களுக்கு கறவை மாடுகள்: 1,600 பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கப்படும்: ஜெயலலிதா

முதல் அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

எனது தலைமையிலான அரசு மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு அதற்குண்டான திட்டங்களைத் தீட்டி மக்கள் வாழ்வு வளம் பெறவும், அவர்கள் நலன் பேணிப் பாதுகாக்கப்படவும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.  இதன் முதற்கட்டமாக, நான் முதலமைச்சராக பதவியேற்று கொண்ட அன்றே மக்கள் பயன் பெறத்தக்க திட்டங்களில் கையெழுத்திட்டேன்.
ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் உயர அவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும்; அதே
நேரத்தில் அரசால் வழங்கப்படும் சலுகைகளை மட்டும் சார்ந்து இல்லாமல், வாழ்வில் வளம் பெற அவர்கள் தங்கள் சொந்தக் கால்களில் நிற்க வேண்டும் என்பதும், அதற்கான பொருளாதார வளர்ச்சியை அவர்கள் பெற வேண்டும் என்பதும் எனது அரசின் குறிக்கோளாகும்.அதே போன்று, மனிதவளம் மேம்படவும் நடவடிக்கைகள் எடுத்தால் தான் அனைவரும் பயன்பெறத் தக்க வகையில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்பதும் எனது திடமான எண்ணமாகும்.  இந்த அடிப்படையிலே தான், பல சலுகைகளை வழங்கும் அதே நேரத்தில், மனிதவளத்தை மேம்படுத்தும் வகையில் மாணவ, மாணவியருக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செப்டம்பர் 15 ஆம் நாள் முதல் துவங்கிட ஆணையிட்டுள்ளேன்.
குடும்ப அளவில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும் பல திட்டங்களை எனது அரசு செயல்படுத்த துவங்கியுள்ளது. இந்த அடிப்படையில், தமிழகத்தில் மீண்டும் ஒரு வெண்மை புரட்சியை உருவாக்கும் வகையில், தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிக்கேற்ப, 60,000 கறவை மாடுகளை இலவசமாக வழங்க நான் முடிவெடுத்துள்ளேன்.  அதன் முதல் கட்டமாக, பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் நாள் 1,600 குடும்பங்களுக்கு கறவை மாடுகள் இலவசமாக வழங்கப்படும்.இந்தத் திட்டத்தின் கீழ் கலப்பின ஜெர்சி பசுக்கள் வழங்கப்படும்.  பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு
சங்கங்கள் எதுவும் இல்லாத கிராமங்களில் உள்ள ஏழைகளுக்கு இந்தப் பசுக்கள் வழங்கப்படும். இந்த கிராமங்களில் புதிய பால் கூட்டுறவு சங்கங்கள் ஏற்படுத்தப்படும். இந்தத் திட்டத்திற்கான பயனாளிகள் கிராம சபையால் தேர்ந்தெடுக்கப்படுவர்
பயனாளிகளில் 30 சதவீதம் பேர் ஆதி திராவிட சமூகத்தைச் சார்ந்தவர்களாக இருப்பர். பசுக்களை இலவசமாக பெறும் பயனாளிகள் முழு திருப்தியடைவதை உறுதி செய்யும் பொருட்டு, பயனாளிகளே அரசு அலுவலர்களுடன் நேரடியாக அருகில் உள்ள மாநிலங்களில் உள்ள கால்நடை சந்தைகளிலிருந்து பசுக்களை வாங்குவதற்கு வழிவகை செய்யப்படும்.  அவ்வாறு வாங்கப்படும் பசுக்களை காப்பீடு செய்வதற்கும்,

பசுக்களை அண்டை மாநிலங்களிலிருந்து கொண்டு வருவதற்கும் அரசே நிதியுதவி செய்யும். மேலும், பசுக்களை பயனாளிகள் எளிதாக அடையாளம் காணும் வகையில் அடையாளச் சின்னம் இடவும் அரசு உதவி செய்யும். இது மட்டுமல்லாமல், இனி வரும் ஆண்டுகளில் மாநில கால்நடைப் பண்ணைகளில் இருந்தும் இந்த கலப்பின பசுக்களைப் பெறும் வகையில் மாநில கால்நடைப் பண்ணைகளை வலுப்படுத்தவும் அரசு நிதியுதவி செய்யும்.
அதே போல், ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் உடனடி நடவடிக்கையாக, வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள அடித்தட்டு குடும்பங்களுக்கு 4 ஆடுகள்
இலவசமாக வழங்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தோம்.

இந்த அடிப்படையில், வரும் 5 ஆண்டுகளில், ஊரகப் பகுதிகளில் மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள 7 லட்சம் குடும்பங்களுக்கு, அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில், குடும்பத்திற்கு 4 ஆடுகள் வீதம் இலவசமாக வழங்கப்படும். 

கிராம சபையால் தேர்ந்தெடுக்கப்படும், நிலமற்ற ஏழை எளிய மக்களே இத்திட்டத்தின் பயனாளிகளாக இருப்பர்; இலவச பசுமாடு பெற்றவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள். பயனாளிகளே அவர்கள் விருப்பத்திற்கேற்ப ஆடுகளை அருகில் உள்ள

சந்தைகளிலிருந்து, ஆடுகள் வாங்க அமைக்கப்படும் குழுக்கள் மூலம் வாங்கிக் கொள்ளலாம்.  4 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரை வயதுள்ள ஆடுகளுக்கான விலை, ஆடுகளை பயனாளிகள் இருப்பிடங்களுக்கு கொண்டு வருவதற்கான போக்குவரத்துச் செலவு ஆகியவற்றை அரசே ஏற்கும்.  இந்தத் திட்டத்திலும் முதற் கட்டமாக பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் நாள் 1,600 பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கப்படும்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் நாள் முதல் செயல்படுத்தப்படும் இந்த இரண்டு உன்னதத் திட்டங்களும் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இந்த இரண்டு திட்டங்களின் மூலம் வழங்கப்படும் கால்நடைகளுக்கு குறைவின்றி பசுந்தீவனம் கிடைக்கும் வகையில், மாநிலத்தில் கால்நடைத் தீவனப் பயிர் பெருக்கத் திட்டம் ஒன்றை வகுக்குமாறும் நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல் அமைச்சர் ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

திமுக பேராட்டத்தில் ஈடுபடும்: மு.க.ஸ்டாலின் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த தவறினால்

சமச்சீர் கல்வியை நிறுத்தி வைக்க முயற்சி மேற்கொள்ளும் அதிமுக அரசுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த தவறினால் திமுக போராட்டத்தில் ஈடுபடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
திமுக உயர்நிலை செயல்திட்ட தீர்மானம் விளக்க பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்,
சமச்சீர் கல்வியை இந்த கல்வியாண்டில் தொடங்குவதற்காக பல தமிழ் அறிஞர்களை கொண்டு பாடதிட்டங்ங்கள் தயாரிக்கப்பட்டன. 200 கோடி ரூபாய் செலவில் புத்தங்கள் அச்சடிக்கப்பட்டு தயாராக இருந்த நிலையில், சமச்சீர் கல்வி ரத்து சென்று அதிமுக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீதிமன்ற உத்தரவுபடி சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த தவறினால் திமுக போராட்டத்தில் ஈடுபடும் என்றார்.

ராசாவுக்குப் பதில் பாலு, ஏ.கே.எஸ். விஜயன்-பழனி மாணிக்கத்துக்குப் பதில் டி.கே.எஸ்.இளங்கோவனுக்கு பதவி?

சென்னை: பதவி விலகிய தயாநிதி மாறன், ராசாவுக்குப் பதில் டி.ஆர்.பாலு, ஏ.கே.எஸ். விஜயனுக்கு அமைச்சர் பதவி தருமாறு காங்கிரஸிடம் திமுக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம், நிதித்துறை இணை அமைச்சராக உள்ள பழனி மாணிக்கத்தை நீக்கி விட்டு அவருக்குப் பதில் டி.கே.எஸ். இளங்கோவனுக்கு அந்த பொறுப்பை தர வேண்டும் என்றும் திமுக தரப்பு கோரியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

டி.ஆர்.பாலுவுக்கு மத்திய அமைச்சர் பதவியை வாங்கித் தர ஆரம்பத்திலிருந்தே கடுமையாக முயன்று வருகிறது திமுக. ஆனால் பாலு மீது பிரதமர் அதிருப்தியில் இருப்பதால் பாலுவுக்கு அமைச்சர் பதவி கிடைக்காத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தயாநிதி மாறன் பதவி விலகிய நிலையில் அவருடைய இடத்திற்கு பாலுவின் பெயரையே திமுக பரிந்துரைத்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இம்முறையும் பாலுவுக்குப் பதவி தர பிரதமர் தரப்பு தயாராக இல்லை என்று கூறப்பட்டது.

இதையடுத்து ராசா, தயாநிதி மாறனுக்குப் பதில் யாரையும் நியமிப்பதில்லை என்று திமுக முடிவெடுத்ததாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் தற்போது வேறு ஒரு செய்தி உலா வருகிறது. அதாவது, ராசா, தயாநிதி மாறனுக்குப் பதில் டி.ஆர்.பாலு, ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோருக்கு பதவி தர வேண்டும். ஜவுளித்துறையை பாலுவுக்குத் தரலாம், தொலைத் தொடர்புத் துறையைத் தராவிட்டாலும் கவலை இல்லை என்று திமுக தரப்பில் காங்கிரஸுக்குத் தெரிவித்திருப்பதாக அந்த செய்தி கூறுகிறது. அதேபோல நிதித்துறை இணை அமைச்சர் பழனி மாணிக்கத்தை நீக்கி விட்டுஅவருக்குப் பதில் டி.கே.எஸ்.இளங்கோவனை அமைச்சராக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தரப்பிடம் திமுக வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து இன்று சென்னை வந்து கருணாநிதியை சந்திக்கவுள்ள பிரணாப் முகர்ஜியிடம் திமுக தரப்பு தெரிவிக்கும் என்று தெரிகிறது. பாலு குறித்து சமரசம் செய்து கொள்ளும்திட்டம் இல்லை என்றும் அப்போது தெரிவிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை பாலுவுக்கு அமைச்சர் பதவி தர காங்கிரஸ் மறுத்தால், யாரையும் அமைச்சரவையில் சேர்ப்பதில்லை என்ற முடிவை திமுக தெரிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
DMK may nominate T.R.Baalu and AKS Viayan as replacements for Dayanidhi Maran and Raja. And also DMK has expressed its willingness to sack Minister of State Pazhani Manickam and replace him with TKS Elangovan. DMK's decision will be conveyed to Finance Minister Pranab Mukherjee when he meets Karunanidhi in Chennai today.

பாடசாலைகளில் யோகா வகுப்புக்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது

4 முறை மட்டும் கூடி 10000 பக்கங்களை படித்தார்களா? சமசீர்கல்வியை புதைக்க முதலாளிகள் முயற்சி

சமச்சீர் கல்வி தரம் குறைவானது” என திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறுகளை கேள்வியேதும் கேட்காமல் ஏற்பவர்கள் இந்த கட்டுரையை வாசித்து பயன்பெறட்டும் !மச்சீர்கல்வி பற்றிய விவாதங்களில் ஒன்றைக் கவனிக்க முடிந்தது. சமச்சீர் கல்வி வேண்டாம் எனச் சொன்னவர்கள் ‘சமச்சீர் கல்விப் பாடப்புத்தகங்களின் தரம் குறைவானது’ எனச் சொன்னார்கள். குறைந்தது 10 பேராவது இதனை என்னிடம் சொல்லியுள்ளனர். அவர்களிடம் அந்த நூல்களை வாசித்தீர்களா எனக்கேட்டேன். ஒருவரும் இல்லை என்றார்கள். மேலும் தரம் குறைவானதென எல்லோரும் சொல்கின்றனர் என்பதால் அவர்களும் அவ்வாறு சொல்வதாக ஒப்புக் கொண்டனர். அப்படி என்றால் சமச்சீர் கல்விப்பாட நூல்களில் என்ன சொல்லப்பட்டுள்ளன என்பதை அறிவதுதான் முதன்மையானதெனக் கருதி அரசின் இணையதளத்தில் போய்ப் பார்த்தேன். அதிலிருந்து பாடநூல்கள் எடுக்கப்பட்டு விட்டன. கூகிளில் தேடி ஒரு தனிநபரது இணையதளத்தில் இருந்து 5,7,8,9,10 ஆம் வகுப்புகளுக்கான பாடநூல்களை மட்டுமே எடுத்துப் படிக்க முடிந்தது. அவற்றில் கணக்குப் பாடங்களைத் தவிர பிறநூல்கள் அனைத்தையும் வாசித்ததில் இருந்து சில அம்சங்களைச் சொல்லலாம் எனக் கருதுகிறேன்.
பாடத்திட்டங்களை அனைத்துத் தரப்பினரின் பங்கெடுப்போடுதான் நூல்களாக்கி உள்ளனர். மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியன்டல், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் இணைந்துதான் நூல்களை உருவாக்கி உள்ளனர். பல நூல்களின் ஆசிரியர் குழுக்களில் தமிழகத்தின் சிறந்த கல்லூரிகளின் பேராசிரியர்களும் இடம்பெற்றுள்ளனர். 10 ஆம் வகுப்பு அறிவியல் நூலுக்கு தலைமை வகித்தவர் சென்னை ஐஐடி பேராசிரியர் ஆவார்.
பாடப்புத்தகங்கள் மனப்பாடம் செய்ய என இல்லாமல் சிந்திக்க, கலந்துரையாட, சுகமான வாசிப்புக்கு எனும் நோக்கில் வண்ணப்படங்கள், எளிய வரைபடங்கள் மூலம் அழகிய லே-அவுட்டில் அருமையாக இருந்தது.
பாட வாரியாக அவற்றில் நான் கண்ட நிறை குறைகளை இனி பார்ப்போம்.
1) Touching on factual incorrectness of the content, the committee cited the example of Social Science textbook for class VII. In the lesson on “Changing face of Earth’s surface” (pg no 75), a statement is given as “the continuous freezing and melting of water.” It is a factual error because water cannot melt, only ice can, the report said.
 உறைபனி சிதைவு பற்றிய இந்தப் பத்தி:
 சிலநேரங்களில் விரிசல் உள்ள பாறைகளின் மழைப்பொழிவின் காரணமாக நீரானது நிரம்புகிறது. இரவு நேரங்களில் நிலவும் வெப்பநிலை காரணமாக இந்த நீரானது உறைந்து பனிக்கட்டியாக மாறும் மற்றும் பகல் நேரங்களில் உருகும்.பனிக்கட்டியானது திடப்பொருளாக இருப்பதால் பாறைகளின் உடைபட்ட பகுதிகளில் அது அதிக அழுத்தத்தை உருவாக்கும்.
 
SCIENCE

2)   Content is too heavy. In Class 8, unit 10 of the book deals with atomic structure and concepts such as laws of chemical combination, electrical nature of matter, discovery of fundamental particles, properties of cathode rays and discovery of protons
 இதெல்லாம் ரொம்ப ஓவர்..1980களில் படித்தபோதும் இதே பருண்மைமாறாவிதியையும், டால்ட்டனின் அணுக் கொள்கையையும் 9ஆம் வகுப்பில் இதே அளவுதான் படித்தோம்..இப்போது அவை 8ஆம் வகுப்பில்..
 ரொம்ப கொஞ்சமா படிக்கிறாங்க ஸ்டேட் போர்டுல..அப்படின்னு சொல்லி மெட்ரிக் வியாபாரிகள் தங்கள் சரக்கை உயர்ந்ததென்று கடைகட்டிக் கொண்டிருந்தாங்க…பெரிதாக மாற்றம் ஏதும் இல்லாத இந்த அத்தியாயத்தை முன்வைத்து, சிலபஸ் ரொம்ப அதிகம்னு புளுகுறாங்க..

3) Syllabus has no analytical activities. In Class 9, students could have been given the opportunity to study the unit ‘Matter’ through experiential learning rather than by rote இது அப்பட்டமான பொய். பருப்பொருள் பற்றிய இப்பாடத்தில் இடம்பெற்றுள்ள செய்முறைகள் பின்வருவன. (பக்கம் 152 முதல்)
 4)  Syllabus does not integrate life skills with contents or activities. In Class 1, in the unit ‘Science in Everyday Life’,
everyday practices such as ‘not to spit or litter in public places’, ‘respecting others’ and ‘solving problems’ have not been considered
 இதெல்லாம் ஒரு காரணம்னு சொல்ல அவங்களுக்கே கூச்சமா இருந்திருக்காதா?
 
SOCIAL SCIENCE

5)   Syllabus deals with concepts that are too complex for a student of that age group. Ideas such as the Universe, stars and the solar system are dealt in the lesson ‘Wonders in the Sky’ in Class 3
 இதில் என்ன விந்தை இருக்க முடியும்? சூரியக்குடும்பம், விண்மீன்கள் பற்றி எல்லாம் சென்ற தலைமுறை மாணவர்கள் கூட 4ஆம் வகுப்பில் படித்தவைதானே..1980களின் ஆரம்பத்திலேயே இவை ஸ்டேட் போர்டில் இப்படித்தான் இருந்தன.. எவருக்கும் புரிதலில் சிக்கல் எல்லாம் இல்லை.
Instead of introducing chapters on the Union government and the state government before human rights and the United Nations, the chapters are introduced the other way round in Classes 8 and 9
எட்டாம் வகுப்பில் சொல்லித்தரப்பட்டிருப்பது மனித உரிமைகளும், மனித உரிமைகள் பற்றிய ஐ.நா.தீர்மானங்களும். இவை தவிர பெண்கள் உரிமைகள் என பன்னாட்டு அமைப்புகள் வரையறுத்தவையும், மனித உரிமை ஆணையங்கள் இந்தியாவில் செயல்படுவதும், அவற்றின் அதிகாரங்களும் இவற்றில் இடம்பெற்றுள்ளன.
ஒன்பதாம் வகுப்பில் சொல்லித்தரப்பட்டிருப்பவையோ, எவ்வாறு மத்திய மாநில அரசுகள் இயங்குகின்றன, தேர்தல் முறை என்ன போன்றவைதான்.
மனித உரிமைகள் பற்றிய ஐ.நா.தீர்மானங்களுக்கும் மத்திய மாநில அரசமைப்புகளுக்கும் முன் பின் எனும் தொடர்ச்சி தேவையே இல்லை..
இந்த பாடங்களைப் படிக்காமலேயே, தலைப்புகளை மட்டும் பார்த்துவிட்டு மாநில அரசு->மத்திய அரசு -> ஐ நா சபை எனும் கற்பனைப் புரிதலோடு இந்த விமர்சனத்தை வைத்துள்ளனர்.
6) There is no meaningful link between the history units as they are not logically arranged. The Class 8 history syllabus begins with a unit on the ‘Advent of Europeans’ and ends with ‘Indian Independence’
இதில் என்ன தவறு இருக்க முடியும்?
ஏழாம் வகுப்பு வரலாற்றுப் பாடத்தில் ராஜபுத்திரர்களின் வரலாறு தொடங்கி விஜயநகரப் பேரரசு வரை விளக்கி உள்ளனர். அதன் தொடர்ச்சியாக 16ஆம் நூற்றாண்டின் முகலாயர் ஆட்சியில் தொடங்கி, மராத்தியர் ஆட்சி, ஐரோப்பியர் வருகை, கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சி, அதன் தொடர்ச்சியாக இந்திய சுதந்திரப் போரை விளக்கி உள்ளனர். இதில் தொடர்ச்சி ஏதும் அறுபடவில்லை..அதுவரை மத்திய, வட இந்திய வரலாறு விளக்கப்பட்ட பின், தமிழ்நாட்டில் நாயக்கர், மராட்டியர் ஆட்சியும் அதன் பின்னர் 19ஆம் நூற்றாண்டில் நடந்த வேலூர் புரட்சியும் தொடர்ச்சியாகத்தானே எழுதப்பட்டிருக்கின்றது?
சமச்சீர் கல்வி குறித்த வழக்கில் உச்சநீதிமன்ற உத்திரவுப்படி தமிழக அரசு அமைத்த ‘நிபுணர்’ குழு உயர்நீதிமன்றத்திடம் அறிக்கையை அளித்து விட்டது. சாரமாகச் சொன்னால் முந்தைய அரசால் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வி தரமற்றது என்று கூறிவிட்டது. இந்த மூன்று வாரத்தில் அதிலும் நான்கு முறை மட்டும் கூடி 10,000த்திற்கும் மேற்பட்ட சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் பக்கங்களை இவர்கள் படித்திருக்க வாய்ப்பே இல்லை. எல்லாம் ‘அம்மாவின்’ விருப்பத்திற்கேற்ப எழுதப்பட்ட திரைக்கதைதான். இனி இதை வைத்து சென்னை உயர்நீதிமன்றம் அம்மாவின் விருப்பத்தையே நடைமுறைப்படுத்த நிறைய வாய்ப்பிருக்கிறது.
உண்மையில் இந்த சமச்சீர் கல்வி எப்படி தயாரிக்கப்பட்டிருக்கிறது, அதில் என்ன இருக்கிறது என்பதே பலருக்கும் தெரியாது. இங்கு தோழர் இரணியன் சமச்சீர் கல்வி குறித்த பாடத்திட்டங்களை விரிவாக படித்து விட்டு தனது கருத்துக்களை இங்கே பகிர்ந்திருக்கிறார். இதிலிருந்து சமச்சீர் கல்வி தரமற்றது என்று மூடநம்பிக்கை போல பரப்பப்படும் கருத்துக்களை வாசகர்கள் உணர்ந்து கொள்ள முடியும்.
- வினவு
இதுபற்றி வினவு இணையத்தளத்தில் மிக விரிவாக எழுதியுள்ளார்கள் அதை முழுதுமாக பிரசுரிக்க இடம் போதாமையால் சுருக்கி உள்ளோம் தயவு செய்து அந்த தளத்திற்கு விஜயம் செய்யவும்.www.vinavu.com

கே.பி. தொடர்ந்தும் கைதியாகவே உள்ளார்-தினேஷ் குணவர்தன!

கே. பி. குறித்து தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதோடு அவர் குறித்த அறிக்கை கிடைத்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளும் தரப்பு பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

குமரன் பத்மநாதன் வெளியில் சுதந்திரமாக இல்லை. அவர் கைதியாகவே உள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார். வாய் மூல விடைக்காக ரவி கருணாநாயக்க எழுப் பியிருந்த கேள்விக்குப் பதி லளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது:- கே. பி. கைது செய்யப்பட்டு பல்வேறு விசாரணைகளுக்குட் படுத்தப்பட்டு வருகிறார். இது குறித்துப் பல தடவை பாராளுமன்றத்தில் அறிவித் துள்ளேன் என்றார். கே. பி. வெளியில் இருக்கையில் யுத்தத்துக்கு தலைமை தாங்கிய சரத் பொன்சேகா சிறையில் இருப்பதாக ரவி கருணாநாயக்க எம். பி. குறுக்கிட்டு கேள்வியொன்றை எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க பல தலைவர்கள் தலைமை வகித்தனர். மேலும் பலர் போரில் ஈடுபட்டனர். ஆனால் புலிகளை முற்றாக ஒழிப்பதற்கு வேறு யாரும் தலைமை வகிக்கவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே புலிகளை முற்றாக ஒழிக்க தலைமை வகித்தார். சரத் பொன்சேகா குறித்து வழக்கு விசாரணை நடக்கிறது. இந்த நிலையில் அவர் குறித்து யாருக்கும் இறுதி முடிவுக்கு வரவோ பாராளுமன்றத்தில் பேசவே முடியாது

கனரக ஆயுதங்களுடன் யுத்தத்தை நடத்துமாறு வலியுறுத்திய ஜே.வி.பி.யினர்

 இன்று பாதிக்கப்பட்டோர் குறித்து பேசுகின்றனர் : அமைச்சர் விமல் வீரவன்ச!

அன்று கனரக ஆயுதங்களைக் கொண்டாவது யுத்தத்தை நடத்துமாறு ஜனாதிபதியை வற்புறுத்திய ஜே.வி.பி.யினர் இன்று எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெற்றோரை இழந்த பிள்ளைகள், கணவரை இழந்த மனைவி, மனைவியை இழந்த கணவன் பற்றி பேசுகின்றனர் என்று அமைச்சர் விமல் வீரவன்ச வியாழக்கிழமை சபையில் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற வடக்கு, கிழக்கு நிலைவரம் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் பேசும்போதே விமல் வீரவன்ச இந்தக் கேள்வியை எழுப்பினார்.அவர் அங்கு மேலும் பேசுகையில்;
“”யுத்தத்தினால் பெற்றோரை இழந்த பிள்ளைகள், கணவரை இழந்த மனைவி, மனைவியை இழந்த கணவர், சேதமடைந்த வீடுகள் என அநுர குமார திசாநாயக்க புள்ளிவிபரங்கள் வாசிக்கிறார்.
எனினும், ஜனாதிபதி விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்தாமல் இருந்தபோது ஏன் என்று தான் கேட்க, எதைக்கொண்டு தாக்குதல் நடத்துவதென ஜனாதிபதி கேட்க, எதைக்கொண்டாவது தாக்குதல் நடத்துங்கள் என்று தான் பதிலுக்குக் கூறியதாகவும் அன்று காலியில் நடைபெற்ற கூட்டமொன்றில் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அன்று கனரக ஆயுதங்களைக் கொண்டாவது தாக்குதல் நடத்துங்கள் என்று ஜனாதிபதியை வற்புறுத்தியவர்கள்தான் இன்று யுத்தத்தினால் ஏற்பட்ட இந்த இழப்புகள் பற்றியும் பேசுகின்றனர். இவர்கள் இவற்றை எந்த முகத்தை வைத்துக்கொண்டு பேசுகின்றார்கள் என்று தெரியவில்லை.
இதேநேரம், வடக்கு, கிழக்கு வீடமைப்பு திட்டங்களில் பெரும்பான்மையின மக்களுக்கு அதிகமாக வழங்கப்படுவதாக சம்பந்தன் எம்.பி. தெரிவிக்கிறார். இதுதான் துரதிர்ஷ்டம். உங்களுக்கு ஏன் இந்த மனநிலை?
அப்படியென்றால் புறக்கோட்டைப் பகுதியில் பெரும்பாலான வர்த்தக இடங்கள் தமிழ் மக்களின் கட்டுப்பாட்டின் கீழேயே இருக்கின்றன. அப்படி நோக்கும்போது மேல் மாகாணம் சிங்கள மக்கள் அதிகமாக வாழும் பிரதேசம். அதில் எப்படி தமிழ் மக்கள் இடங்களை வாங்க முடியும் என்று நாம் எங்காவது வந்து கேட்கிறோமா?
நீங்கள் சொல்வதைப் போன்று பார்த்தால் வத்தளைப் பகுதியில் புதிதாக காணிகள், வீடுகள் வாங்கிய தமிழ் மக்களின் விபரப் பட்டியலை சேகரித்து வந்து வாசிக்க முடியும். ஆனால் நாம் அப்படி செய்யவில்லை. நீங்கள் பழைய மனநிலையில் இருக்கின்றீர்கள். அதில் மாற்றம் வரவேண்டும். தமிழ், முஸ்லிம், சிங்களம் என சகல இன மக்களும் இலங்கையின் எப்பகுதியிலும் வாழக்கூடியதாக இருக்கவேண்டும்” என்றார்.

சானல்-4 க்கு வீடியோ வழங்கிய தமிழர் கைது'

பி.பி.சி
இலங்கையில் போர்க் குற்றம் இடம்பெற்றதாக ஆவணப்படம் ஒன்றை வெளியிட்ட சானல்-4 தொலைக்காட்சிக்கு வீடியோ பிரதிகளை வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பிரிட்டனில் இருந்து இலங்கை சென்ற ஒரு தமிழர் இலங்கை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நந்தவனம் ஜெகதீஸன் என்பவரே இவ்வாறு கண்டியில் வைத்து கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இலங்கை இராணுவத்தினருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையிலான போலியான வீடியோக்களை இவர் சானல-4 தொலைக்காட்சிக்கு வழங்கினார் என்றும், பிரிட்டனில் இருந்து இலங்கை வந்த இவரை கண்டியில் வைத்து கடந்த ஜூன் 30 ஆம் திகதி கைது செய்ததாகவும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர். பாதுகாப்பு அமைச்சின் செயலரின் உத்தரவின் பேரில் இவர் பற்றிய மேலதிக விபரங்கள் அடங்கிய ரகசிய அறிக்கை ஒன்றையும் பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, அவரை தடுத்து வைப்பதற்கான அனுமதியை கோரியிருந்தனர். அதனையடுத்து அவரை 90 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க கொழும்பு மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டுள்ளார்.

சன் "டிவி' நிர்வாகி மீது மோசடி புகார்கள்... சினிமாத்துறையினர் போலீசுக்கு படையெடுப்பு

"எந்திரன்' பட வர்த்தக ஒப்பந்தப்படி, 1.55 கோடி ரூபாயை தராமல் இழுத்தடிக்கும், "சன் பிக்சர்ஸ்', ஐயப்பன் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை பெற்றுத் தரும்படி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம், தியேட்டர் உரிமையாளர்கள் ஆறு பேர், மனு அளித்துள்ளனர்.திரைப்பட தயாரிப்பு, வினியோகம் உள்ளிட்டவற்றை செய்து வருகிறது "சன் பிக்சர்ஸ்'. இந்த நிறுவனத்தின் சார்பில், "தீராத விளையாட்டு பிள்ளை' படம் வினியோகம் செய்யப்பட்டது. இப்படத்தை, சேலம் பகுதியில் உள்ள தியேட்டர்களில் வினியோகிக்க, செல்வராஜுடன் ஒப்பந்தம் செய்த சன் பிக்சர்ஸ் நிறுவனம், 1.25 கோடி ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக புகார் எழுந்தது.

இதன் பேரில், சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, சண்முகவேல் என்பவர் நேற்று முன்தினம் அளித்த புகாரின் அடிப்படையில் சக்சேனாவும், அவரது கூட்டாளியான ஐயப்பனும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், "எந்திரன்' படத்திற்கான வர்த்தக ஒப்பந்தப்படி தங்களுக்கு சேர வேண்டிய, 1.55 கோடி ரூபாயை சன் பிக்சர்ஸ், ஐயப்பன் மற்றும் ஜெமினி பிக்சர்ஸ் நிறுவனத்தினர் தராமல் இழுத்தடிப்பதாக, ஆறு தியேட்டர் உரிமையாளர்கள், கமிஷனர் திரிபாதியிடம் புகார் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக, தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்க இணைச் செயலர் ஸ்ரீதர் கூறியதாவது:"எந்திரன்' படம், கடந்த எட்டு மாதங்களுக்கு முன் வெளியானது. தமிழகத்தில் உள்ள 1,500க்கும் மேற்பட்டவற்றில், 400 தியேட்டர்களில், "எந்திரன்' திரையிடப்பட்டது. இப்படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து, வினியோகித்தது. இப்படத்தை, திரையிட சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு, தியேட்டர் வைத்திருக்கும் நாங்கள், ஒப்பந்தப்படி நிர்ணயிக்கப்பட்ட தொகையை கொடுத்தோம்.தற்போது, இதில், எங்களுக்கு வரவேண்டிய பணத்தை தராமல், சன் பிக்சர்ஸ் நிர்வாகம், அதில் தொடர்புடைய ஐயப்பன் மற்றும் ஜெமினி பிக்சர்ஸ் நிறுவனத்தினர் ஏமாற்றி வருகின்றனர்.

குறிப்பாக, பொள்ளாச்சி, ஏ.டிஎஸ்.சி. தியேட்டர் உரிமையாளர் ரகுபதிக்கு, 40 லட்சத்து 10 ஆயிரத்து 761 ரூபாயும், திருப்பூர் கே.எஸ்.தியேட்டர் உரிமையாளர் குமாருக்கு, 10 லட்சத்து 32 ஆயிரத்து 956 ரூபாயும், கஜலட்சுமி தியேட்டர் சீனிவாசனுக்கு, 28 லட்சம் ரூபாயும், பழனி, சினி வள்ளுவர் விஷ்ணுவுக்கு, 21 லட்சத்து 83 ஆயிரத்து 600 ரூபாயும், ராமநாதபுரம் ரமேஷ் தியேட்டர் ரமேஷ் பாபுவுக்கு, 27 லட்சத்து 16 ரூபாயும், ராஜபாளையம் ஜெய ஆனந்த் தியேட்டர் ஆனந்த்திற்கு, 27 லட்சத்து 89 ஆயிரத்து 144 ரூபாயும் என, ஒரு கோடியே 55 லட்சத்து16 ஆயிரத்து 431 கோடி ரூபாய் தரவேண்டியுள்ளது. தரவேண்டிய பணத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் கேட்டால், வினியோகஸ்தர் போல் செயல்பட்ட ஐயப்பனிடம் கேட்கச் சொல்கின்றனர். அவரிடம் கேட்டால், ஜெமினி பிக்சர்ஸ் நிறுவனத்தில் கேட்கச் சொல்கின்றார். இதுவரையில் பணத்தை தரவில்லை.இவ்வாறு ஸ்ரீதர் கூறினார்.

கேபிள் ஆபரேட்டர் புகார்:திருச்சி, சன், "டிவி' நிர்வாகி மீது, தோகைமலையைச் சேர்ந்த, கேபிள் ஆபரேட்டர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த தோகைமலை வேதாச்சலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கிலிமுத்து, 43. இவர் அதே பகுதியில், "ஸ்ரீ அம்மன் கேபிள் நெட்வொர்க்' என்ற பெயரில் கேபிள் தொழில் செய்து வருகிறார். மேலும், சன், "டிவி' நிர்வாகம் மூலம் கட்டணச் சேனல்களுக்கான, "டீகோடர்' பெற்றுள்ளார்.சங்கிலிமுத்து, கடந்த 29ம் தேதி கரூர் எஸ்.பி., நாகராஜனிடம் புகார் மனு அளித்துள்ளார். அதில், "திருச்சி ஒத்தக்கடை பகுதியில் செயல்பட்டு வரும், சன், "டிவி' அலுவலகத்தில் நிர்வாகியாக உள்ள செந்தில் முருகன், மார்ச் 26ம் தேதி என்னை திருச்சிக்கு அழைத்து, வெறும் பேப்பரில் கையெழுத்து பெற்றுக்கொண்டார். 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு வழங்கப்பட்ட டி.டி.,க்கு எந்த ரசீதும் தரவில்லை. கடந்த 28ம் தேதி தோகைமலைக்கு வந்த செந்தில் முருகன், மேலும் பாக்கித் தொகை உள்ளதாகக் கூறி கொலை மிரட்டல் விடுத்தார்' என, தெரிவித்துள்ளார்.
புகாரை பெற்றுக் கொண்ட எஸ்.பி., நாகராஜன், புகார் மீது வழக்கு பதிவு செய்ய தோகைமலை போலீசாருக்கு உத்தரவிட்டார்.

சன் "டிவி' மீது சிவசேனா புகார்:சன் "டிவி' நிஜம் நிகழ்ச்சி மூலம், பிரிவினையை தூண்டி இந்துக்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும், சன் "டிவி' ஒளிபரப்பை தடை செய்வதுடன், சன் குழும தலைவர் கலாநிதி, சக்சேனா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கமிஷனரிடம், சிவசேனா தமிழக தலைவர் குமாரராஜா, மனு அளித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:கடந்த சில ஆண்டுகளாகவே இந்து மத பற்றுடைய சாமியார்கள், துறவிகள், அருள்வாக்கு சொல்வோர், இந்து கோவில்களில் நடக்கும் கொடைவிழா, தீமிதி விழா மற்றும் இதர நிகழ்ச்சிகள் குறித்து, சன் "டிவி'யில் விமர்சனம் என்ற பெயரால் இந்துக்களையும், இந்து கடவுள்களையும், தொடர்ந்து கேலி செய்து வருகின்றனர். கடந்த மாதம் 13ம் தேதி முதல், 22ம் தேதி வரை, இரவு 10:30 மணிக்கு, நிஜம் நிகழ்ச்சியில், உ.பி., மாநிலம், காசியில், இந்துக்களின் முக்தி ஸ்தலம் என்று போற்றப்படும் காசி விஸ்வநாதர் கோவிலையும், கங்கை நதியை பற்றியும், சன் "டிவி'யில் மிக கேவலமாக, விமர்சனம் என்ற பெயரால் கேலி செய்து அநாகரிகமாக நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இது, இந்துக்களை இழிவுபடுத்தும் செயலாகும்.

இந்துக்களின் நம்பிக்கை, பழக்க வழக்கங்களை சீர்குலைக்கும் தீய நோக்கத்தில் மிக கேவலமான முறையில், தொடர்ந்து இந்துக்களின் கோவில்கள், மடாதிபதிகள் குறித்தும், துறவியர், பக்தர்களை கேவலமான வார்த்தைகளால் விமர்சனம் செய்து, தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கச் செய்யும் இதுபோன்ற தொடர் விமர்சனத்தால் மன உளைச்சல் ஏற்படுகிறது.எனவே, அநாகரிகமான செய்திகள் தயாரித்து வரும், சன் "டிவி' ஒளிபரப்பை தடை செய்ய நடவடிக்கை எடுப்பதுடன், அதன் செயல் அலுவலர் சக்சேனா, சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தள்ளுபடி:"சன் பிக்சர்ஸ்' தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனாவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தும், சக்சேனா மற்றும் அவரது கூட்டாளி அய்யப்பன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் இருவரையும் 15 நாள் சிறையில் வைக்க, சைதாப்பேட்டை கோர்ட் மாஜிஸ்திரேட் அகிலா ஷாலினி நேற்று உத்தரவிட்டார்.சேலத்தைச் சேர்ந்த திரைப்பட வினியோகஸ்தர் செல்வராஜ். இவர், சென்னை கே.கே., நகர் போலீஸ் ஸ்டேஷனில், சக்சேனா மீது மோசடி புகார் கொடுத்தார். அப்புகார் தொடர்பாக சக்சேனாவை போலீசார் கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர். அவ்வழக்கு தொடர்பாக புலன் விசாரணை நடத்துவதற்கு, சக்சேனாவை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர்.

நேற்று முன்தினம் கோர்ட்டில் சக்சேனாவை போலீசார் ஆஜர்படுத்தினர்.சக்சேனாவுக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்ற மனு, சைதாப்பேட்டை 23வது கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அவ்வழக்கு தொடர்பான சாட்சிகளை கலைத்துவிடும் வாய்ப்பு இருப்பதால், சக்சேனாவுக்கு ஜாமின் வழங்கக் கூடாது என, அரசு வழக்கறிஞர் கோபிநாத் ஆட்சேபனை செய்தார். அவரது வாதத்தை ஏற்றுக்கொண்டு, ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து, மாஜிஸ்திரேட் அகிலா ஷாலினி நேற்று உத்தரவிட்டார்.

வெள்ளவத்தையிலிருந்து புறப்படக்கூடாது,Colombo Jaffna பஸ்கள்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சேவையிலீடுபடும் தனியார் பஸ்கள் வெள்ளவத்தையிலிருந்து புறப்படக்கூடாது என்று பொலிஸார் உத்தரவு பிறப்பித் துள்ளனர். நேற்று முன்தினம் முதல் இந்த நடைமுறை அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் இத்தகைய நடவடிக்கையினால் வெள்ளவத்தையிலிருந்து யாழ். நோக்கி புறப்படும் பஸ்களின் உரிமையாளர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் பெரும் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. வெள்ளவத்தையிலிருந்து பயணிகளை தனியார் பஸ்கள் ஏற்றக்கூடாது என்றும் புறக்கோட்டையிலிருந்தே ஏற்றிச்செல்ல வேண்டுமென்றும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

இதனால், நேற்று முன்தினமும் வெள்ளவத்தையில் தரித்து நின்று பயணிகளை ஏற்றிச்செல்வதற்கு தனியார் பஸ்களுக்கு அனுமதி வழங்க முடியாதென பொலிஸார் அறிவித்திருந்தனர். இதனையடுத்து தனியார் பஸ் உரிமையாளர்கள் பொலிஸ் நிலையம் சென்று பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கமையவே தாம் செயற்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புறக்கோட்டையில் பஸ்கள் தரித்து நிற்பதற்கு போதியளவு இடமில்லாத சூழ்நிலை காணப்படுகின்றது. இதனைவிட வெள்ளவத்தை பகுதியிலிருந்து புறப்படும் தமிழ் மக்கள் புறக்கோட்டை பகுதிக்கு வருவது என்பது பெரும் சிக்கலான விடயமாக அமையும். எனவே, வெள்ளவத்தை பகுதியிலிருந்தே பஸ்கள் புறப்படுவதற்கு அனுமதிக்க வேண்டுமென்று தனியார் பஸ் உரிமையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு செல்லும் வகையிலேயே தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் நாம் வீதி அனுமதி பத்திரங்களை பெற்றுள் ளோம். எனவே, அதற்கு இணங்க சேவையில் ஈடுபடுவதற்கு எம்மை அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். வெள்ளவத்தையிலிருந்து புறப்படுவதற்கு அனுமதி மறுக்கப்படுமானால் தாம் சேவை நிறுத்தத்தில் ஈடுபடவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என்றும் பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நடிகை நிலா கைதாகிறார் கள்ளக்காதலரின் மனைவி கொலை

நடிகை பிரியங்கா சோப்ராவின் ஒன்றுவிட்ட சகோதரியும், தமிழ்-தெலுங்கு நடிகையுமான மீரா சோப்ரா என்கிற நிலாவைக் கைது செய்ய ஹரியானா போலீஸார் டெல்லி விரைந்துள்ளனர்.

நடிகை நிலாவுடன் இருந்த கள்ளத்தொடர்பால் தனது தங்கை ருச்சியை அவரது கணவர் கொலை செய்து விட்டார் என்று ஹரியானா மாநிலம் குர்காவ்னைச் சேர்ந்த ருச்சியின் சகோதரி ஷெபாலி போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து நிலாவைக் கைது செய்ய போலீஸார் விரைந்துள்ளனர்.

குர்காவ்னைச் சேர்ந்தவர் ருச்சி (28). அவரது கணவர் சுமித் புட்டன். இருவரும் ஏஞ்சல் புரோகரேஜ் எனும் நிறுவனத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 6ம் தேதி ருச்சி தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

இது குறித்து தகவல் அறிந்த குர்காவ்ன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ருச்சியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் ருச்சியின் கணவர் சுமித் தான் அவரைக் கொன்று, தூக்கில் தொங்கவிட்டது தெரிய வந்தது. இதையடுத்து நேற்று சுமித் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து ருச்சியின் சகோதரி ஷெபாலி கூறுகையில், சுமித் ருச்சியைக் கொன்று, தூக்கில் தொங்கவிட்டுள்ளார். சுமித்துக்கும், நடிகை பிரியங்கா சோப்ராவின் ஒன்றுவிட்ட சகோதரியும், நடிகையுமான மீரா சோப்ராவுக்கும் (நிலா) கள்ளத்தொடர்பு உள்ளது.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் ருச்சிக்கும், சுமித்துக்கும் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த நாளில் இருந்தே சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் சுமித்தும், அவரது குடும்பத்தாரும் ருச்சியைக் கொடுமைப்படுத்தி வந்தனர். இவ்வாறு சித்ரவதை செய்து கொண்டே இருந்தால் ருச்சி விவாகரத்து வாங்கிக் கொண்டு சென்றுவிடுவார் என்பது அவர்கள் எண்ணம்.

அவர் இறப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன் எங்கள் தாயாருடன் போனில் பேசியுள்ளார். தன்னை குர்காவ்னில் இருந்து அழைத்துச் செல்லுமாறு கெஞ்சியுள்ளார் என்றார்.

இந்த சம்பவம் குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,

வரதட்சணைக் கொலை மற்றும் கிரிமினல் சதி செய்ததற்காக சுமித்தை இபிகோ பிரிவு 304 பி மற்றும் 120 பி ஆகியவற்றின் கீழ் கைது செய்துள்ளோம். இந்த வழக்கின் அடுத்த முக்கிய குற்றவாளியான மீரா சோப்ராவை கைது செய்ய போலீ்ஸ் படை டெல்லி விரைந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

ருச்சி இறப்பதற்கு முன்பு அவருடன் வாக்குவாதம் செய்ததாக ஒப்புக் கொண்டாலும், அவரைத் தான் கொல்லவில்லை என்கிறார் சுமித். மேலும் அவர் கூறுகையில், வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி எனக்கும், எனது மனைவிக்கும் இடையே சுமூகமான உறவு தான் இருந்து வந்தது. கடந்த வாரம் எங்கள் புரோக்கரேஜ் ஹவுஸ் பெருத்த நஷ்டம் அடைந்தது. அந்த நஷ்டத்தால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றார்.

சமீபத்தில்தான் தனக்கு ஒருவர் ஆபாச இமெயில்களை அனுப்பி வருவதாக டெல்லி சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுத்திருந்தார் நிலா என்பது நினைவிருக்கலாம். தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களி்ல நடித்து வந்த நிலா, பின்னர் வாய்ப்பு குறைந்ததால் டெல்லி போய் செட்டிலாகி விட்டார். தமிழில் இவர் எஸ்.ஜே.சூர்யா மூலம் அன்பே ஆருயிரே படத்தின் மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாருக்கும் பதவியில்லை-திமுக முடிவு!ராசா, தயாநிதிக்கு பதில்

சென்னை: தயாநிதி மாறன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதால், அவருக்குப் பதில் திமுகவிலிருந்து யார் அமைச்சராக்கப்படவுள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், காலியாகவுள்ள ராசா மற்றும் தயாநிதி மாறன் ஆகியோரின் இடங்களுக்கு திமுக சார்பில் யாரையும் பரிந்துரைப்பதில்லை என்ற முடிவுக்கு திமுக தலைவர் கருணாநிதி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

5 ஆக சுருங்கிய திமுகவின் பிரதிநிதித்துவம்

மத்திய அமைச்சரவையில் திமுகவுக்கு மொத்தம் 3 கேபினட் அமைச்சர்கள் மற்றும் 4 இணை அமைச்சர்கள் இருந்தனர். இவர்களில் தற்போது தயாநிதி மாறன், ராசா ஆகிய இரு கேபினட் அமைச்சர்களும் ராஜினாமா செய்து விட்டனர். மு.க.அழகிரி மட்டுமே கேபினட் அமைச்சராக இருக்கிறார். 7 பேராக இருந்த திமுக அமைச்சர்களின் எண்ணிக்கை தற்போது 5 ஆக குறைந்து விட்டது.

இந்த நிலையில் ராசாவுக்குப் பதில் வேறு யாரையும் திமுக சார்பில் மத்திய அமைச்சரவையில் இதுவரை சேர்க்கவில்லை. அதே நேரத்தில் தயாநிதி மாறனுக்குப் பதில் வேறு ஒரு திமுக எம்.பிக்கு பதவி தர காங்கிரஸ் தயாராக உள்ளது. அதற்கான பெயரைப் பரிந்துரைக்குமாறு திமுகவுக்கு அது கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.

பாலு மீது பிரதமர் அதிருப்தி

திமுக சார்பில் டி.ஆர்.பாலுவை கேபினட் அமைச்சராக விருப்பம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பாலுவுக்கு அமைச்சர் பதவி தர பிரதமர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக இருந்தவர் பாலு. ஆனால் 2வது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவையில் அவரை சேர்க்க பிரதமர் மறுத்து விட்டார். அதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ஆதரவு தெரிவித்ததால் பாலுவுக்கு பதவி கிடைக்கவில்லை. மு.க.அழகிரி அமைசசரவையில் சேர்க்கப்பட்டதால்தான் பாலுவுக்கு இடமில்லாமல் போனதாகவும் கூறப்பட்டது.

தற்போது மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதால் பாலுவை அந்த இடத்திற்குக் கொண்டு வர திமுக நினைத்ததாக கூறப்பட்டது. ஆனால் இப்போதும் பாலு மீது பிரதமர் அதிருப்தியில் உள்ளதால் மீண்டும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஒரு காலத்தில் டெல்லியில் திமுகவின் முகங்களாக திகழ்ந்தவர்கள், நேற்று பதவியை ராஜினாமா செய்த தயாநிதி மாறனின் தந்தை முரசொலி மாறனும், டி.ஆர்.பாலுவும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

யாரையும் சேர்ப்பதில்லை

பாலுவைச் சேர்க்க காங்கிரஸ் மற்றும் பிரதமரிடம் தயக்கம் காணப்படுவதால் பேசாமல் யாரையும் சேர்க்க வேண்டாம் என்ற முடிவுக்கு திமுக தலைமை வந்து விட்டதாக கூறப்படுகிறது.

எனவே ராசா மற்றும் தயாநிதி மாறனுக்குப் பதில் வேறு யாரையும் திமுக பரிந்துரைக்காது என்று கூறப்படுகிறது.

'கனிமொழியைக் காப்பாற்றுவதே முக்கியம்'

திமுகவின் இப்போதைய முக்கிய கவனம் கனிமொழியை ஸ்பெக்ட்ரம் வழக்கிலிருந்து மீட்டுக் கொண்டு வருவதுதான் என்று திமுக தலைமை நினைப்பதாக கூறப்படுகிறது.

அமைச்சர் பதவியைப் பெறுவது குறித்து இப்போது கவலைப்படத் தேவையில்லை. கனிமொழி, ராசா உள்ளிட்டோரை மீட்டு கொண்டு வருவது குறித்து மட்டுமே இப்போதைக்கு தீவிர கவனம் செலுத்துவோம் என்று திமுக முன்னணித் தலைவர்கள் கருதுகிறார்களாம். கருணாநிதியும் கூட கனிமொழி குறித்துத்தான் பெரும் கவலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

திமுக பொதுக்குழுவில் முக்கிய முடிவு:

கோவையில் இந்த மாத இறுதியில் தி்முகவின் செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. அப்போது காங்கிரஸுடனான உறவு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அமைச்சரவையில் திமுக அமைச்சர்கள் விவரம்:

ரசாயாணத்துதறை அமைச்சர் மு.க.அழகிரி, நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன், சமூக நீதித்துறை இணை அமைச்சர் நெப்போலியன், சுகாதாரத் துறை இணை அமைச்சர் காந்திசெல்வன்.
English summary
After Dayanidhi Maran resigned as Union Textile Minister yesterday, it's widely expected that DMK leader TR Baalu will join the Cabinet as his replacement. But PM is against making Baalu as minister again. Now DMK has only 5 ministers in union cabinet with Azhagiri as the only cabinet minister.

வெள்ளி, 8 ஜூலை, 2011

வடிவேலு - சிங்கமுத்து பிரச்சனை : குறுக்கு விசாரணை
நடிகர் வடிவேலுவுக்கும், நடிகர் சிங்கமுத்துவுக்கும் இடையே நடந்த பிரச்சனை வழக்க்கு விசாரனை இன்று சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் நடந்தது.
நடிகர் வடிவேலு அலுவலகம் சென்னை விருகம்பாக்கம் வேதாசலம் தெருவில் உள்ளது. இந்த அலுவலகத்தில் கடந்த ஆண்டு மே மாதம் 14-ந்தேதி நடிகர் சிங்கமுத்துவும் அவருடன் சிலரும் சேர்ந்து தாக்கினார்கள். இது தொடர்பாக வடிவேலுவின் மானேஜர் சங்கர் விருகம் பாக்கம் போலீசில் புகார் செய்தார்.

இந்த வழக்கு விசாரணை சைதாப்பேட்டை 23-வது கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. மாஜிஸ்திரேட்டு அகிலா ஷாலினி முன்னிலையில் நடிகர் சிங்கமுத்து ஆஜர் ஆனார்.

இந்த வழக்கில் நடிகர் வடிவேலுவின் மானேஜர் சங்கரிடம் சிங்கமுத்து வக்கீல் அறிவழகன் குறுக்கு விசாரணை செய்தார்.

அப்போது சம்பவம் நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியை வடிவேலு சந்தித்தது தெரியுமா? என்று கேட்டார். அதற்கு சங்கர் தெரியும் என்று பதில் அளித்தார்.

நடிகர் வடிவேலு தூண்டுதலின் பேரில் பொய்யான புகார் தந்து நீங்கள் சாட்சி சொல்கிறீர்கள் என்று வக்கீல் கேட்டதற்கு இல்லை என்று சங்கர் கூறினார். சம்பவம் நடந்தபோது வடிவேலு எங்கு இருந்தார் என்று கேட்டதற்கு கொடைக்கானலில் படப்பிடிப்பில் இருந்ததாக தெரிவித்தார்.

இந்த சம்பவத்திற்கு முன்னால் அதே தெருவில் வசிக்கும் படத்தயாரிப்பாளர் கண்ணன் வீட்டில் பட்டாசு வெடித்ததற்கான வழக்கு இருப்பது தெரியுமா? என்று கேட்டதற்கு தெரியும் என்றார்.

பட்டாசு வெடிப்பு வழக்கிற்கு பிறகு வடிவேலு அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததே என்பதற்கு அது எனக்கு ஞாபகம் இல்லை என்றார். தொடர்ந்து விசாரணை நடைபெற்றது.

11 வயது பெண்ணை மணந்த 50 வயது நரிக்குறவர்.தடுக்க வேண்டிய போலீசாரே சீக்ரம் முடியுங்க என்ற கொடுமை

2 பிராந்தி பாட்டில்; ஒரு பீர் பாட்டில் சீர் கொடுத்து
11 வயது பெண்ணை மணந்த 50 வயது நரிக்குறவர்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகேயுள்ள மேலானூர் கிராமத்தில் வசித்துவரும் ஜெயபால்சிங் (50) என்ற நரிக்குறவர் பெரணமல்லூர் காவல் நிலையம் அருகே மூலிகை மருந்து தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்.
இவருக்குத் திருமணமாகவில்லையாம். 3 கணவர்களை இழந்த ஒரு பெண்ணுடன் தாலி கட்டாமல் குடும்பம் நடத்தி வந்தாராம். இவர்களுக்கு 3 பெண், 4 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இதனால் நரிக்குறவர் சமுதாயத்திலிருந்து இவர்களது மகன் மற்றும் மகள்களுக்கு யாரும் பெண் கொடுப்பதும் இல்லை. பெண் எடுப்பதும் இல்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நரிக்குறவர்கள் சங்க சமுதாய தலைவர் ஒருவரை ஜெயபால்சிங் சந்தித்து தனது வேதனையைக் கூறியுள்ளார்.

இதற்கு பரிகாரமாக நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த பருவம் அடையாத பெண்ணை திருமணம் செய்துகொண்டால் உன்னுடைய பிரச்னைகள் எல்லாம் தீர்ந்து போகும் என்று அந்த சமுதாய தலைவர் கூறியுள்ளார்.
இதனால் ஜெயபால்சிங் உடனடியாக காஞ்சிபுரம் சென்று அங்கு வசித்துவரும் லட்சுமணன்-பேபி என்ற நரிக்குறவ தம்பதியரின் 11 வயது மகள் ராதிகாவை திருமணம் செய்துகொள்ள நிச்சயம் செய்துள்ளார்.

இதற்காக பெண் வீட்டாருக்கு ரூ.30 ஆயிரம், இரு பிராந்தி பாட்டில்கள், ஒரு பீர் பாட்டில் சீர் கொடுத்து நிச்சயதார்த்தத்தை முடித்ததாகத் தெரிகிறது. மேலும், வியாழக்கிழமை காலை பெரணமல்லூர் காவல் நிலையம் அருகே ஜெயபால்சிங், ராதிகாவின் கால் விரலில் மோதிரம் அணிவித்து திருமணம் செய்துகொண்டாராம்.

தனக்கு திருமணம் நடந்ததுகூட தெரியாத ராதிகா, அங்குள்ள சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

ஊருக்கு மத்தியில், காவல் நிலையம் அருகேயே இச்சம்பவம் நடைபெற்றது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டிய போலீசார், திருமணத்தை முடித்துக்கொண்டு சீக்கிரம் இடத்தை காலி செய்யுங்கள்' என்று கூறியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

“தொடைகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் நரகம்” - Female genital mutation

பெண் உறுப்பு சிதைப்பு - வாரிஸ் டேரியின் கதை3000 ஆண்டுகால கருப்பின அடிமை வரலாறு!

‘நான் கீழ குனிந்து என் கால்களுக்கு நடுவில் பார்த்தேன். மருத்துவச்சி உக்கார்ந்து கொண்டிருந்தாள். பிளேடின் ஓரங்கள் காய்ந்துபோய், ரத்தக்கறை படிந்திருந்தன.
‘த்துப்..’
பிளேடின் மீது எச்சில் துப்பினாள் மருத்துவச்சி.
அடுத்த நொடி, ‘சர்ர்க்’ என்று ஒரு சத்தம்.
படக்கூடாத இடத்துல பிளேடு பட்டு, என் பிறப்புறுப்பு கிழிவது நன்றாகத் தெரிந்தது. நரநரவென்று முன்னும் பின்னுமாக இழுத்தாள்.  அந்தக் கிழவியின் அருகில் அக்கேசியா மரத்தின் முட்கள், குவியல் குவியலாகக் கிடந்தன.  அவள் கைகள் முழுக்க ரத்தம்.
ஒரு கோழியை வெட்டி, மீதியை விட்டிருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ரத்தச் சகதியோடு இருந்தது பாறை. என் பிறப்புறுப்பின் உணர்ச்சிமிக்க பாகங்கள் வெயிலில் காய்ந்துகொண்டிருந்தன.’’
-வாரிஸ் இப்படிச் சொன்னபோது, லாராவால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தேம்பித், தேம்பி அழ ஆரம்பித்தார்.
வாரிஸின் நெருங்கிய நண்பர்கள்கூட அறிந்திராத அந்த உண்மையை, அன்றுதான் உலகம் தெரிந்து கொண்டது.
வாரிஸ் டைரி! உலகின் முன்னணி ஆஃப்ரிக்க மாடல் அழகி. லாரா ஸிவ், உலகின் முன்னணி ஃபேஷன் பத்திரிகையான ‘மேரி க்ளேய்ர்’ நிருபர்.
வாரிஸ், தன் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறார்.
‘‘சோமாலியாவில், கரடுமுரடான ஒரு பாலைவனக் கிராமத்தில்தான் நான் பிறந்தேன். எங்களது நாடோடிக் குடும்பம். இங்குள்ள பாத்ரூமைவிட மிகச் சிறியது எங்கள் குடிசை. பசுமையே பார்த்திராத கண்கள் என்றாலும், எல்லா குழந்தைகளையும்போல நானும் சந்தோஷமாகத்தான் இருந்தேன். ஆடு மாடுகளை மேய்ப்பேன். வரிக்குதிரைகளோடு ஓடுவேன். ஒட்டகச்சிவிங்கிகளை துரத்துவேன். பாட்டுப் பாடுவேன்.
ம்ஹ்ம்… இந்த சந்தோஷமெல்லாம் கொஞ்ச நாட்களுக்குத்தான். எனக்கு மட்டுமில்லை. சோமாலியாவில் பிறந்த எல்லா பெண்களுக்குமே இப்படித்தான்.
ஆஃப்ரிக்காவைப் பொறுத்தவரை பெண்கள்தான் எல்லாமே. ஆண்களைவிட அவகள் கடினமாக உழைக்கிறார்கள். வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால், என்ன செய்து என்ன? எந்த உரிமையும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. காலம் முழுக்க ஆண்களுக்கு அடிமையாக இருந்தே சாகவேண்டும்.
என் வாழ்க்கை ஐந்தோடு முடிந்தது.
எங்களது நாடோடிக் குடும்பமில்லையா? அங்கே, ‘கல்யாணமாகாதவள்’ என்கிற பேச்சுக்கே இடமில்லை. பாடையோ, பரதேசியோ! எவன் கையிலாவது எங்களை பிடித்துக் கொடுத்துவிடவேண்டும். அதுவும் கன்னித் தன்மையோடு. அதுதான் அவர்களின் வாழ்க்கை லட்சியம்.
பெண்களைப் பொறுத்தவரை, சோமாலியர்களின் ஞானம் ரொம்பவே வித்தியாசமானது. எல்லா கெட்ட விஷயங்களும் பெண்களின் தொடைகளுக்கு நடுவில் ஒளிந்து கிடப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள்.
இதற்காக அவர்கள் செய்கிற அக்கிரமம் இருக்கிறதே…
அப்போது, எனக்கு ஐந்து வயது இருக்கும். ஒரு சாயங்கால நேரம்.
அம்மா என்னிடம் வந்து, ‘‘உங்கப்பா, மருத்துவச்சியை பாக்கப் போயிருக்கார். அந்தப் பொம்பள எப்ப வேணாலும் வீட்டுக்கு வரலாம்’’ என்றார்.
அன்றைக்கு, என்றும் இல்லாத கவனிப்பு எனக்கு. போதுமான அளவுக்கு சாப்பிடக் கொடுத்தார்கள்.
‘‘பாலையும் தண்ணியையும் அதிகம் குடிச்சிறாதடி’’ -அம்மா அறிவுரை சொன்னாள்.
சாப்பிட்டு முடித்து, போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு சந்தோஷமாக படுத்தேன். முழிப்பு வந்தப்போது, வானம் இருட்டாக இருந்தது. மீண்டும் படுத்துவிட்டேன்.
‘‘வாரிஸ்’’
அம்மா திடீரென்று எழுப்பினாள்.
நாங்கள், தூரத்துல் தெரிந்த குன்றை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.
‘‘இப்படி உக்காருவோம். அவ வருவா.’’ என்றார் அம்மா.
வானம் நன்கு விடிந்திருந்தபோது, ‘சர்க், சர்க்’ என்று செருப்பு சத்தம் கேட்டது. மருத்துவச்சி வந்துவிட்டிருந்தாள்.
படுக்கை மாதிரி இருந்த ஒரு பாறையைக் காட்டி, ‘‘அங்க போய் உக்காரு’ என்றாள். அம்மாதான் என்னை பாறை மேல் படுக்க வைத்தார்கள். அங்கே, பேச்சுக்கே இடமில்லை. என்னை படுக்க வைத்துவிட்டு.. அம்மா, என் தலைக்குப் பின்னால் உக்கார்ந்துகொண்டாள். என் தலையை இழுத்து அவள் மடியில் வைத்துக்கொண்டு, தன் கால்களை எடுத்து என் கைகள் மீது போட்டாள். நான் அம்மாவின் தொடைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டேன்.
பிறகு ஒரு மரத்துண்டை எடுத்து என் வாயில் வைத்தாள்.
‘‘இறுக்கமா கடிச்சுக்க. அம்மாவ பாரு. எவ்ளோ தைரியமா இருக்கேன். அதுபோல நீயும் இருந்தா, சட்டுனு முடிஞ்சிடும்.’’
நான் கீழ குனிந்து என் கால்களுக்கு நடுவில் பார்த்தேன். பழைய கைப்பை ஒன்றை வைத்துக்கொண்டு அந்த மருத்துவச்சி உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவள் கண்ணில் அப்படியொரு பேய்த்தனம்.
பைக்குள், தன் விரல்களைவிட்டு அரக்கப் பரக்க எதையோ தேடினாள். இறுதியாக ஒரு ரேசர் பிளேடு வந்தது. ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்பது மட்டும் புரிந்தது.
பிளேடின் ஓரங்கள் காய்ந்துபோய், ரத்தக்கறை படிந்திருந்தன.
‘த்துப்..’
பிளேடின் மீது எச்சில் துப்பினாள் மருத்துவச்சி. அதை, தன் துணியில் துடைத்தாள். அவள் துடைத்துக்கொண்டிருக்கும்போதே, அம்மா தன் கைகளை எடுத்து என் கண்களை மூடினாள்.
நான், உலகமே இருண்டதுபோல் உணர்ந்தேன்.
அடுத்த நொடி…
‘பர்ர்க்’ என்று ஒரு சத்தம்.
படக்கூடாத இடத்தில் பிளேடு பட்டு, என் சதை கிழிவது நன்றாகத் தெரிந்தது. எந்த காலத்து பிளேடோ? துருபிடித்து, பற்களோடு இருந்திருக்கவேண்டும். நரநரவென்று மேற்கொண்டு முன்னும் பின்னுமாக இழுத்தாள் அந்தக் கிழவி.
‘அய்யோ…!’ -நரக வேதனை.
அசையக்கூடாது. அசைந்தால், வலி இன்னும் கொடூரமாகும். பற்களைக் கடித்துக்கொண்டு படுத்துக்கிடந்தேன். என் தொடைகள் நடுங்கின.
‘கடவுளே! இந்த நரகத்திலிருந்து என்னைக் காப்பாற்ற மாட்டாயா?’
ஒரு வழியாக அம்மா என் கண்களை விடுவித்தாள். வெளிச்சத்துக்கு பழகியதும் பார்க்கிறேன். அந்த கிழவியின் அருகில் அக்கேசியா மரத்தின் முட்கள். குவியல் குவியலாகக் கிடந்தன. அவள் கைகள் முழுக்க ரத்தம். அக்கேசியா முட்களைத்தான் ஒவ்வொன்றாக என் பிறப்புறுப்பில் குத்தியிருக்கிறாள். பிறகு கடினமாக வெள்ளை நூல் கொண்டு உறுப்பை தைத்திருக்கிறாள்.
சிறுநீர் கழிக்க ஒரே ஒரு துவாரம் வைத்துவிட்டு மீதி உறுப்பு மூடப்பட்டுவிட்டது. என் கன்னித் தன்மையும், ஒரு இனத்தில் கவுரவமும் காப்பாற்றப்பட்டுவிட்டது. இதற்கு, நான் செத்துப்போய் இருக்கலாம்.
தையல் முடிந்ததும் கிழவி போய்விட்டாள். நான் எழுந்திருக்க முயன்றேன். என்னால் அசையக்கூட முடியவில்லை. என் இரண்டு கால்களும் துணிப்பட்டையால சுற்றப்பட்டிருந்தன. அம்மா என்னை நகர்த்தியதும் பாறையைத் திரும்பிப் பார்த்தேன்.
ஒரு கோழியை வெட்டி, மீதியை விட்டிருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ரத்தச் சகதியோடு இருந்தது பாறை. என் பிறப்புறுப்பின் உணர்ச்சிமிக்க பாகங்கள் வெயிலில் காய்ந்துகொண்டிருந்தன.
காற்று, நெருப்பு மாதிரி வீசிக்கொண்டிருந்தது. என்னால் சித்திரவதையைத் தாங்க முடியவில்லை. ஒருவழியாக அம்மாவும் அக்காவும் சேர்ந்து பக்கத்தில் இருந்த மர நிழலுக்கு என்னை இழுத்துக்கொண்டு போனார்கள். அங்கே, சிறிய குடிசை ஒன்று வேயப்பட்டிருந்தது. காயம் குணமாகிறவரை அங்கேதான் இருந்தாகவேண்டும்.
முதன் முதலாக எனக்கு சிறுநீர் வெளியேறியது நன்றாக நினைவிருக்கிறது. அந்த இடத்தில் அமிலத்தை ஊற்றினால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது. உயிரே போய்விடும்படி எரிச்சல்… திகுதிகுவென தீப்பற்றி எரிந்தது பிறப்புறுப்பு. தையல் போடப்பட்டிருந்த பொத்தல்களின் வழியே தீக்குச்சி இறைத்தார்போல் சிறுநீர் வெளியேறியது.
மரண வேதனை.
இதனால், சிறுநீர் வந்துவிடுமோ என்கிற பயத்தில், தண்ணீர் குடிக்கவே பயந்தேன். பல நாட்கள் இப்படித்தான் வாழ்ந்தேன். திடீரென்று ஒருநாள் கிருமித்தொற்று ஏற்பட்டு கடுமையான காய்ச்சல் அடிக்க ஆரம்பித்தது. அம்மாதான் பார்த்துக்கொண்டாள். அந்த வயதில், எனக்கு செக்ஸ் என்றால் என்னவென்றே தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் தெரியும். ஒவ்வொரு தாயின் ஆசீர்வாதத்தோடுதான் இந்த சடங்கு நடைபெறுகிறது.
என் பெண்மை சிதைக்கப்பட்டது கொடூரமான விஷயம்தான். ஆனால், மற்ற பெண்களைக் காட்டிலும் நான் அதிர்ஷ்டசாலி என்றே சொல்லவேண்டும். பல சிறுமிகள் அதிர்ச்சியினாலும், ரத்தப்போக்கு, நோய்த்தொற்று காரணமாவும் இறந்து போய்விட, நான் மட்டும் உயிரோடு பிழைத்துக்கொண்டேன்.
நாட்கள் ஓடின.
நான் பதிமூன்று வயதை நெருங்கிக்கொண்டிருந்தேன். ஒரு நாள், மாலை நேரம்… ஆடுகளை அதன் பட்டியில் அடைத்துவிட்டு, வீட்டிற்குள் நுழைந்தேன்.
‘‘வாரிஸ்! இங்க வாம்மா’’ -அப்பா அன்போடு அழைத்தார்.
தன் மடிமேல் என்னை உட்காரவைத்துக்கொண்டார். வழக்கமாக அவர் குரலில் கடுமை இருக்கும்.
‘‘ஒண்ணு தெரியுமா? நீ ரொம்ப நல்ல பொண்ணு. ஆம்பளைங்களைவிட அதிகமா உழைக்கிற. மந்தையை ஒழுங்கா கவனிச்சுக்கிற. ஆனா… உன்னை பிரியப்போறதை நெனச்சா எனக்கு வருத்தமா இருக்கு’’
அப்பா, சம்பந்தமே இல்லாத வார்த்தைகளைப் பேசினார்.
‘அடடா! அக்கா மாதிரி நானும் ஒடிடப்போறேன்னு பயப்படுறாரோ!’
நான் அவரை கட்டிப்பிடித்துக்கொண்டு,
‘அப்பா. நீங்க நினைக்கிற மாதிரி நான் எங்கேயும் ஓடிப்போக மாட்டேன்’’ என்றேன்.
அவர் என் முகத்தை திருப்பி,
‘‘எனக்கு தெரியும். நீ என் பொண்ணு. அப்பா உனக்கு ஒரு மாப்பிள்ளை பாத்திருக்கேன்!’’ என்றார்.
எனக்கு தூக்கிவாரிப் போட்டது.
‘‘அப்பா. எனக்கு கல்யாணத்துல விருப்பமில்லை.’’
நான் கொஞ்சம் தைரியமாக வளர்ந்தவள். இப்போது பலவீனமாக உனர்ந்தேன்.
அடுத்த நாள் காலை. நான், பால் கறந்துகொண்டிருந்தேன்.
‘‘வாரிஸ்.. இங்க வா. இது நான் நீ…’’ அப்பா அழைத்தார்.
அவரோடு அவரைவிட மூத்த ஒருவன் உட்கார்ந்துகொண்டிருந்தான்.
அப்பா சொன்னதை நான் காதிலேயே வாங்கவில்லை. அவனும் அவன் மூஞ்சியும்! ஆட்டுக்கெடா மாதிரி தாடியை தொங்கப் போட்டுக்கொண்டு… 60 வயதிருக்கும் அவனுக்கு.
‘‘வாரிஸ்! வந்திருக்கிறவங்களுக்கு முதல்ல வணக்கம் சொல்லு.’’
‘‘வணக்கம்.’’
நான் எவ்வளோ முடியுமோ அவ்வளவு குழைந்து சொன்னேன். அந்தக் கிழட்டு ஓநாய், என்னைப் பார்த்து பல் இளித்துக்கொண்டே உட்கார்ந்திருந்தது. அவனை கொலைவெறியோடு முறைத்துவிட்டு, என் ஆப்பாவைப் பார்த்தேன். அப்பாவுக்கு புரிந்துவிட்டது.
சிரித்தவாறே… ‘‘சரி, சரி, போய் வேலையைப் பாரு’’ என்று சமாளித்தார்.
நான் மீண்டும் பால் கறக்க போய்விட்டேன்.
மறுநாள் காலையில் அப்பா கூப்பிட்டார்.
‘‘வாரிஸ். அவர்தான் நீ கட்டிக்கப்போற புருஷன்.’’
‘‘அப்பா! அந்தாள் ரொம்பக் கிழவனா இருக்கான்’’
‘‘அதுதாம்மா உனக்கு நல்லது. வயசான மனுஷன் இல்லையா! உன்னை விட்டு எங்கேயும் போகமாட்டார். உன்னை நல்லா பாத்துக்குவார். ஒண்ணு தெரியுமா? மாப்ள நமக்கு… அஞ்சு ஒட்டகம் குடுத்திருக்காரு’’ அப்பா, வாயை பிளந்துகொண்டு பெருமை பேசினார்.
அன்று முழுக்க நான் ஆட்டு மந்தையையே வெறித்துக்கொண்டிருந்தேன். மனதில் ஆயிரம் சிந்தனைகள். பாழும் பாலைவனத்தில் ஒரு கிழவனிடம் வாழ்க்கைப்படுவதை நினைத்துப் பார்த்தேன்.
‘த்தூ..
இந்த வாழ்க்கைக்கு, நாண்டுகிட்டு சாகலாம்.’ -ஒரு முடிவுக்கு வந்தேன்.
அன்று இரவு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது வீடு.
நான் அம்மாவை நெருங்கி,
‘‘எனக்கு இங்கிருக்கப் பிடிக்கல. நான் ஓடப்போறேன்.’’ என்றேன்.
‘‘அடிப்பாவி. எங்க ஓடுவ?’’
‘‘மொகாதிஷு. அக்கா வீட்டுக்கு.’’
‘‘முதல்ல போய் படு’’ -பல்லைக் கடித்தவாறு அம்மா சொன்னாள்.
நான் கையை தலைக்கு வைத்துக்கொண்டு தூங்கப் போய்விட்டேன். திடீரென்று கை முட்டியில் யாரோ தட்டினார்கள்.
அம்மாதான்.
‘‘அந்தாள் முழிச்சிக்கிறதுக்குள்ள எழுந்து ஓடு’’ -கிசுகிசுத்தாள்.
நான் சுற்றி முற்றி பார்க்கிறேன். எடுத்துச் செல்ல உணவோ, தண்ணீரோ, ஒட்டகப் பாலோ எதுவுமே இல்லை. நான் எழுந்து அவளை அணைத்துக்கொண்டேன். அந்த இருட்டிலும், அவள் முகத்தைப் பார்க்க முயற்சித்தேன். முடியவில்லை. தாரை தாரையாக கண்ணீர் மட்டுமே வழிந்தது.
‘‘எதுக்கும் கவலைப்படாத. நீ எங்க இருந்தாலும் நல்லா இருப்பே. அம்மாவை மட்டும் மறந்துடாதே’’ என்றாள்.
‘‘சத்தியமா’’
சொல்லிவிட்டு ஓட ஆரம்பித்தேன்.
பாலைவனம் முழுக்க ஒரே கும்மிருட்டு.
எவ்வளவு தூரம் ஓடினேன் என்பது தெரியவில்லை. ஆனால், கொஞ்சமும் ஈவிரக்கமில்லாத கரடு முரடான பாலைவனம் அது.
அந்தப் பயணம், முடிவில்லாத ஒன்றாக எல்லையற்று நீண்டிருந்தது. பசியும் தாகமும் என்னை சோர்வடையச் செய்தன. பொழுது விடிந்தபோது, என்னுடைய ஓட்டம் முற்றிலும் தளர்ந்துபோய் இருந்தது.
‘’வாரிஸ், வாரிஸ்’’
திடீரென்று என் தந்தையின் குரல் கேட்பதை உணர்ந்தேன். பயத்தில் என் உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது. என்னை அவர் பிடித்துவிட்டால்?
இப்போது மீண்டும் ஆரம்பத்திலிருந்தே தொடங்கவேண்டும்.
நான் ஓடத் துவங்கினேன். பயம், என் ஓட்டத்தை வேகப்படுத்தியது. அதி பயங்கரமாக ஒரு துரத்தல் காட்சி அது. பல மணி நேரங்களுக்கு இது தொடர்ந்தது. சூரியன் மறையும்வரை நான் ஓடிக்கொண்டிருந்தேன். என் அட்ரினல் சுரப்பிகள் ஒழுங்காக வேலை செய்திருக்கவேண்டும்.
அப்பா தோற்றுவிட்டார்.
சூரியன் வேகமாக மறையத் தொடங்கியது.
ஆனால், இது நேற்றைய இரவைப்போல் இல்லை. பசி, வயிற்றை எரிக்க ஆரம்பித்தது. சோர்வும் மயக்கமும் ஒருசேர, அங்கிருந்த மரத்தடி ஒன்றில் அமர்ந்தேன். மெல்ல என் கால்களை எடுத்துப் பார்க்கிறேன்…
‘உஃஃப், உஃஃப்…’
வெப்பத்தில் கொப்பளித்து, பாறைகளில் மோதி, ரத்தச் சகதியாய் காட்சியளித்துக் கொண்டிருந்தது கால்கள்.
அப்படியே தூங்கிவிட்டேன்.
சூரியன் கண் திறந்திருக்கவேண்டும். என் கண்கள் கூச ஆரம்பித்தன. சுற்றி முற்றிப் பார்க்கிறேன். யாரும் இல்லை. இந்த இடம் பாதுகாப்பானதல்ல.
நடக்க ஆரம்பித்தேன். எத்தனை நாட்கள் நடந்தேன், எவ்வளவு தூரம் நடந்தேன் என்பதெல்லாம் தெரியாது. பசி, தாகம், பயம், வலி எல்லாம் சேர்ந்து என்னை வாட்டியது. எப்போதெல்லாம் இருள் சூழ்கிறதோ, அப்போதெல்லாம் பயணத்தை நிறுத்திவிடுவேன். வெயில் கடுமையாக இருந்தால், மரத்தின் கீழ் ஓய்வெடுப்பேன்.
அப்படித்தான் ஒருநாள் மரத்தடியில் படுத்துக்கிடந்தேன். அருகில் யாரோ குரட்டைவிடுவதுபோல் இருந்தது.
‘அப்பாவாக இருக்குமோ?!’
பதறியடித்து எழும்பினால், ‘கடவுளே..! அது ஒரு சிங்கம்.’
என்னை முறைத்தபடி இருந்தது. நான் எழுந்து ஓட முயற்சித்தேன். ஆனால், கொலை பட்டினி  என் கால்களை பலவீனமாக்கி இருந்தது. கொடூரமான ஆஃப்பிரிக்கச் சூரியனிடமிருந்ந்து எந்த மரம் எனக்கு அடைக்கலம் கொடுத்ததோ, அதன் கீழ் தலைக்குப்புற விழுந்தேன்.
நீண்ட நெடிய என் பாலைவனப் பயணம் முடிவுக்கு வரப்போகிறது.
இப்போது எனக்கு துளிகூட பயமில்லை. நான் சாகத் தயாராக இருக்கிறேன்.
‘‘வா! வந்து என்னைச் சாப்பிடு.’’ -சுரத்தில்லாத குரலில், நான் சிங்கத்தை அழைத்தேன்.
எச்சி ஊறும் நாக்கால் தன் உதடுகளை தடவியபடி, என்னை முன்னும் பின்னும் அது சுற்றி வந்தது. இதோ! ஒரே நொடியில் என்னைக் கவ்விக் கடித்து விழுங்கப்போகிறது. நான் கண்களை மூடிக் காத்திருந்தேன்.
‘ஹ.. ஹ…’ என்ன நினைத்ததோ, சிங்கம் பின்வாங்கிவிட்டது.
சந்தேகமே இல்லை. என்னிடம் சாப்பிடத் தகுந்த அளவுக்கு சதை இல்லை. நான் எதற்கும் பயனில்லாதவள்.
அப்படியானால்?
கடவுளின் திட்டம் வேறாக இருந்திருக்கவேண்டும். எதற்காகவோ என்னை விட்டு வைத்திருக்கிறார்.
‘அது என்னவாக இருக்கும்?’
நம்பிக்கையுடன் மீண்டும் நடக்க ஆரம்பித்தேன்.
வீட்டை விட்டு ஓடி வரும் முன்பு, குடும்பம் ஒன்றுதான் எனக்கு வாழ்க்கை. எங்கள் தினசரி வாழ்க்கை, ஒட்டகத்தின் கையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அங்கே தண்ணீர் கிடையாது. காலை எழுந்தாலும் சரி, இரவு படுத்தாலும் சரி, ஒட்டகப்பால்தான் நாங்கள் உயிரோடு இருக்கக் காரணம். நான் தூங்கி எழுந்ததும் சுமார் 60, 70 செம்மறி ஆடுகளை ஓட்டிக்கொண்டு பாலைவனத்தை நோக்கிக் கிளம்பிவிடுவேன். வழி நெடுக பாடிக்கொண்டே செல்வேன். ஆடுகளை வழிநடத்த ஒரே ஒரு குச்சி வைத்திருப்பேன். ஆடுகள் மேய்ச்சலில் இருக்கும்போது ஏராளமான வேட்டை விலங்குகளைப் பார்த்திருக்கிறேன். வழி தெரியாமல் சிதறும் ஆட்டுக்குட்டிகள் மீது ஹெய்னாக்கள் பதுங்கிச் சென்று பாயும். சிங்கங்கள் வந்து போகும்.
வீடு வந்ததும், இரவில் நட்சத்திரங்களுக்கு கீழ் குழந்தைகளெல்லாம் ஒன்றாகப் படுப்போம். எங்களுக்கு பாதுகாப்பாக அப்பா இருப்பார்.
அப்பா, ஆறடி உயரத்தில் அம்மாவைவிட கொஞ்சம் வெள்ளையாக, ரொம்பவும் அழகாக இருப்பார். அம்மாவும் அழகில் குறைந்தவள் இல்லை. கருப்பாக இருந்தாலும் கரும் பளிங்கு சிற்பம்போல் இருப்பார். தோல் மிருதுவாகவும் மினுமினுப்பாகவும் இருக்கும். ஆனால், ரொம்ப அமைதி. பேச ஆரம்பித்தால், குலுங்கக் குலுங்க சிரிக்க வைத்துவிடுவாள்.
மொகாதிஷுவில் செல்வாக்குமிக்க வசதியான குடும்பத்தில் பிறந்தவள் அம்மா. மாறாக, எப்போதும் பாலைவனத்தில் அலைந்து திரியக்கூடிய நாடோடி, என் அப்பா. அம்மாவை கல்யாணம் செய்துகொள்ள அவர் விருப்பம் தெரிவித்தபோது, ‘வாய்ப்பே இல்லை’ என்று என் பாட்டி விரட்டிவிட்டாராம். எப்படி இருந்தால் என்ன? அம்மாவுக்கு 16 வயதாகும்போது, அவரும் வீட்டைவிட்டு ஓடி வந்துதான் அப்பாவை கல்யாணம் செய்திருக்கிறார்.
அம்மா எப்போதும் என்னை ‘அவ்டஹொல்’ என்றுதான் கூப்பிடுவார். அவ்டஹொல் என்றால், ‘சின்ன வாய்’ என்று அர்த்தம். ஆனால், ‘வாரிஸ்’ என்பதுதான் என் உண்மையான பெயர். வாரிஸ் என்றால் ‘பாலைவனப் பூ’ என்று அர்த்தம்.
நான் ஓடி வந்த கதையை விட்டுவிட்டேனே! சுமார் 300 மைகள் கடந்து, புண்ணாகிப்போன கால்களுடன் ஒரு வழியாக நான் மொகாதிஷுவுக்கு வந்து சேர்ந்திருந்தேன். அது, இந்தியப் பெருங்கடலில் ஒரு அழகான நகரம். அந்த நகரத்தை சுற்றி நிறைய பனைமரங்களும் கலர் கலரான பூச்செடிகளும் இருந்தன. அங்கிருந்த வீடுகளும் கொள்ளை அழகு. அவற்றில் பெரும்பாலானவை இத்தாலியர்களால் கட்டப்பட்டிருந்தன. மொகாதிஷு ஒரு காலத்தில் இத்தாலியர்களின் தலைநகரமாக இருந்ததே இதற்குக் காரணம். ஒரு கொக்கு மாதிரி கட்டடங்களை எட்டி, எட்டி பார்த்துக்கொண்டு நடந்தேன்.
ஒரு மார்கெட் வந்தது. அங்கிருந்த பெண்களிடன் ‘எங்க அக்கா அமென் தெரியுமா?’ என்று விசாரித்தேன்.
‘‘உன்னை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே!’’ -யோசித்த ஒரு பெண்மணி, தன் மகனை அழைத்து,
‘‘இவளைக் கொண்டுபோய் அமென் வீட்டில் விடு’’ என்றாள்.
நான் அக்கா வீட்டுக்குள் நுழைந்தபோது, அவள் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தாள்.
நல்லவேளையாக அவளுக்கு நல்லதொரு கணவன் கிடைத்திருந்தான். அவர்கள் தமது முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருந்தார்கள். நான் வீட்டு வேலைகள் முழுவதையும் பார்த்துக்கொண்டேன். கொஞ்ச நாள் கழித்து அக்காவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. நான்தான் அவளையும் பார்த்துக்கொண்டேன். அதன் பிறகு அக்காவுக்கும் எனக்கும் ஒத்துப்போகவில்லை. ஒரு முதலாளிபோல் என்னிடம் நடந்துகொண்டாள்.
மொகாதிஷுவில் எனக்கு வேறு சில சொந்தங்களும் இருந்தன.
நான் என் சித்தி வீட்டுக்குப் போய், ‘‘கொஞ்ச நாள் இங்கேயே தங்கிக்கவா?’’ என்றேன்.
எதிர்பார்த்ததைவிட அவர்கள் அன்பானவர்களாக இருந்தார்கள்.
‘தாராளமா தங்கிக்கோ. உனக்கு இங்க ஒரு பிரண்டுகூட இருக்கா.’ என்றார்கள்.
வழக்கம்போல், அங்கேயும் நான்தான் வீட்டு வேலைகளை கவனித்துக்கொண்டேன்.
அம்மாவை தனியாக விட்டுவிட்டு வந்தது எனக்கு வருத்தமாக இருந்தது. பாவம்! எல்லா வேலைகளையும் அவள் ஒருத்திதான் செய்தாக வேண்டும்.
‘நான் ஏதாவது செய்தாகவேண்டும். பணம் சம்பாதித்து அவளுக்கு அனுப்பவேண்டும்.’ என்று தீர்மானித்தேன்.
பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால், வேலைக்குப் போகவேண்டுமே. தேடினேன். ஒரு இடத்தில் சித்தாள் வேலை கிடைத்தது. ரொம்பவும் கடினமான வேலை.  எல்லோரும் நான், ஓடிப்போய்விடுவேன் என்றுதான் நினைத்தார்கள். ஆனால், கடுமையாக உழைத்தேன். 60 டாலர்கள் கிடைத்தது.
நாட்கள் ஓடியது…
ஒரு நாள் சித்தி வீட்டில், வீட்டு வேலைகளை செய்துகொண்டிருந்தேன். ஊரிலிருந்து முகம்மது சித்தப்பா வந்திருந்தார். என் இன்னொரு சித்தியின் வீட்டுக்காரர்.
‘‘அடுத்த நாலு வருஷமும் லண்டன்லதான் இருக்கப்போறேன். வீட்டு வேலைக்கு ஆள் வேணும். யாராவது நல்ல பொண்ணா இருந்தா சொல்லு’’ -முகம்மது சித்தப்பா, சித்தியிடம் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது. அவர், லண்டனில் சோமாலியத் தூதரகத்தில் வேலை பார்ப்பவர்.
நான், மெல்ல என் சித்தியை கூப்பிட்டு,
‘‘நான் வேணும்னா, அவர் வீட்டுக்கு போறேனே.. ப்ளீஸ்’’ என்று கெஞ்சினேன்.
சித்தி, ஒரு நிமிஷம் யோசித்துவிட்டு, ‘‘ஏன் நீங்க வாரிஸை கூட்டிட்டுப் போகக்கூடாது. இவ ரொம்ப சுத்தமா வேலை செய்வா.’’ என்றார்.
சித்தப்பா என்னை உற்றுப் பார்த்தார்.
‘‘ஓகே. நாளைக்கு மதியம் ரெடியா இரு. நாம லண்டன் கிளம்பறோம்.’’
மறுநாள், என்னுடைய பாஸ்போர்ட் வந்தது. எனக்கு பயங்கர ஆச்சர்யம்! முதன் முதலாக என்னுடைய பெயர் அச்சில் வார்க்கப்பட்டிருந்தது.
ஒரு வழியாக லண்டன் வந்தாகிவிட்டது. ஆடம்பரமான மாளிகைகள், வெள்ளை வெளேர் மனிதர்கள், விழுகின்ற வென் பனி என முற்றிலும் புதிதாக, முழுவதும் அந்நியமாக இருந்தது லண்டன். சித்தப்பாவுக்கும் அழகான ஒரு மாளிகை ஒதுக்கப்பட்டிருந்தது.
மரியம் சித்தி, என்னை முகம் மலர வரவேற்றார். அவரை ஓடிச் சென்று கட்டிப்பிடிக்க எண்ணினேன். ஆனால், அவரது நவநாகரீக உடை என்னை அச்சம் கொள்ளச் செய்தது. சித்தி எனக்கு பெட்ரூமை திறந்து காட்டினாள். ‘அம்மாடி!’ அவ்வளவு பெரிய படுக்கை அறையை நான் கனவிலும் கண்டதில்லை. என் வீட்டைவிட பெரியதாக இருந்தது. சொகுசான மெத்தை. அப்படியொரு சொகுசை என் வாழ்நாளில் அனுபவித்ததே இல்லை. அன்றிரவு சொர்க்கத்தில் உறங்கினேன்.
அடுத்த நாள்…
பெருக்குவது, துடைப்பது, துவைப்பது, கழுவுவது என்று வழக்கம்போல் என் வேலைகள் தொடர்ந்தன. எப்படி சமைக்கவேண்டும் என்பதை சித்தி எனக்கு கற்றுக்கொடுத்தாள்.
எனக்கு 16 வயது இருக்கும்போது, முகம்மது சித்தப்பாவின் சகோதரி இறந்துபோய்விட, அவளது மகள் எங்களோடு வந்துவிட்டாள். நான்தான் அவளை கான்வென்ட்டுக்கு அழைத்துச் செல்வேன். ஒருநாள் ஸ்கூல் வாசலில் வைத்து ஒரு ஆள், என்னை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கு சுமார் 40 வயசு இருக்கும். இப்படி முறைத்துப் பார்ப்பது குறித்து அவர் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளவில்லை.
நான், குழந்தையை ஸ்கூலில் விட்டுட்டு திரும்புகிறேன், திடீரென்று அந்த ஆள் என் பக்கத்தில் நிற்கிறார். எனக்கோ ஆங்கிலம் தெரியாது. அவர் என்ன பேசுகிறார் என்பதும் புரியவில்லை. நான் பயந்துகொண்டு வீட்டுக்கு வந்துட்டேன். அந்த ஆளின் மகளும் அதே ஸ்கூலில்தான் படித்தாள்.
பிறகு, எப்போதெல்லாம் என்னை பார்க்கிறாரோ, அப்போதெல்லாம் சிரித்து வைப்பார். ஒரு நாள், தன் விசிட்டிங் கார்டை என்னிடம் நீட்டினார். நான் வேண்டா வெறுப்பாக வாங்கிக்கொண்டேன்.
வீட்டுக்கு வந்ததும், என் சித்திப் பெண்ணிடம் காட்டி, ‘‘என்னதிது?’’ என்றேன்.
‘‘இதுவா? இந்த ஆள் ஒரு போட்டோகிராபராம்’’
‘போட்டோகிராபருக்கு நம்மகிட்ட என்ன வேலை?’
ம்ம்… நான் அதை மறந்துவிட்டேன்.
இதற்கிடையே சோமாலியாவில் உள்நாட்டுக் கலவரம் தீவிரமடைந்திருந்தது. பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சோமாலிய அரசாங்கம் சொல்லிவிட்டது. சித்தப்பா, குடும்பத்துடன் மறுநாளே ஊருக்குத் திரும்பியாகவேண்டும். இதை நினைக்கும்போதே, எனக்கு அடி வயிறு கலங்கியது.
‘‘சித்தப்பா! என் பாஸ்போர்ட்டை எங்கேயோ தொலைச்சிட்டேன்’’ -நான் வேண்டுமென்றே பொய் சொன்னேன்.
பயணத்துக்கான எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு. திடீர்னு இப்படிச் சொன்னா என்ன அர்த்தம்?’’ சித்தப்பா கோபப்பட்டார்.
‘‘பரவாயில்லை சித்தப்பா. நீங்க கிளம்புங்க. நான் எப்படியாவது சமாளிச்சுக்கிறேன்’’
என்னால் நம்ப முடியவில்லை. அதிர்ஷ்டவசமாக சித்தப்பா என்னை விட்டுவிட்டுக் கிளம்பினார்.
‘யாருமற்ற அநாதையாய், லண்டனை எதிர்கொள்ளவேண்டும்’
எனக்குள் பயம் பரவத் தொடங்கியது.
அடுத்த நாள் கடை வீதி ஒன்றில் ‘ஹல்வு’வைச் சந்தித்தேன். உயரமாக, கவர்ச்சியாக இருந்தாள்.
‘‘என்ன பண்ற வாரிஸ். எப்படி இருக்கே?’’ என்றாள் சோமாலியில்.
நாங்கள் முன்பின் அறிமுகமானவர்கள் இல்லை.
‘‘என்னத்தைச் சொல்ல! என் சித்தப்பா தூதரக அதிகாரியா வேலை பார்த்தார். இத்தனை நாள் அவரோடுதான் இருந்தேன். இப்போ அவர் வேலை முடிஞ்சு சோமாலியா போய்ட்டார். எங்க தங்கறது, எப்படி சாப்பிடுறதுன்னு இப்பவரை தெரியலை’’
ஹல்வு, என்னை அமைதியாகப் பார்த்தாள்.
‘‘ஒய்.எம்.சி.ஏ-ல எனக்கு ஒரு ரூம் இருக்கு. இன்னிக்கு ராத்திரி அங்கேயே தங்கிக்கோ’’
இப்போது, நானும் ஹல்வுவும் நெருங்கிய நண்பர்கள் ஆகியிருந்தோம்.
‘‘மெக் டொனால்டில் வேலைக்குப் போறியா?’’ -ஹல்வு கேட்டாள்.
‘‘சான்ஸே இல்லை. எனக்கு இங்கிலிஷ் தெரியாது. என்கிட்ட வொர்க் பெர்மிட்டும் இல்லை’’
ஹல்வு என்னை விடவில்லை. என்னை மெக்டொனால்டில் வேலைக்குச் சேர்த்துவிட்டாள். பாத்திரங்களைக் கழுவுவது, தரையைத் துடைப்பது, குப்பைகளை அள்ளுவதுதான் என் வேலை.
வார இறுதியில், ஹல்வு என்னை டிஸ்கொதேவுக்கு அழைத்துச் சென்றாள். அதுதான், கட்டுப்பட்டியான ஆஃப்ரிக்க வளர்ப்பிலிருந்து நான் வெளியேற உதவியது. கருப்பு, வெள்ளை, ஆண், பெண் எல்லோரிடமும் பேசினேன். ஜஸ்ட் பேசினேன். அவ்வளவுதான். இந்தப் புதிய உலகில் எப்படி வாழ்வது என்பதை ஹல்வு மூலமாக கற்றுக்கொண்டேன்.
இனிதான், என் வாழ்க்கையின் இரண்டாவது அத்தியாயம் ஆரம்பம்.
‘‘இந்த ஆளுக்கு என்னதான் வேணுமாம்?’’ ஓய்வு நேரம் ஒன்றில், போட்டோகிராபரின் விசிட்டிங் கார்டை காட்டி ஹல்வுவிடம் கேட்டேன்.
‘‘அதை அவர்கிட்டயே கேளு. போனைப் போடு’’
‘‘நான் பேசுறது மொக்க இங்கிலீஷ். நீயே பேசு’’
‘‘‘மைக் கோஸ்.’ அவர்தான் அந்த அன்புக்குரிய போட்டோகிராபர். அன்று, மைக்கின் ஸ்டுடியோவுக்குள் நுழைந்தபோது, நான் வேறொரு உலகத்தில் விழுந்ததுபோல் உணர்ந்தேன். சுவர் முழுக்க அழகழகான பெண்கள் தொங்கிக்கொண்டிருந்தார்கள்.
மைக் என்னிடம், ‘‘யூ ஹேவ் தெ மோஸ்ட் பியூட்டிஃபுல் ப்ரொஃபைல். நான் உன்னை போட்டோ எடுக்க விரும்புகிறேன்’’ என்றார்.
‘‘இதைப் போலவா? இந்த பொண்களைப் போலவா?’’
‘‘ஆமாம்’’
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
‘‘எவ்ளோ பணம் தருவீங்க?’’
‘‘ஹ.. ஹ..! வா, இப்படி வந்து நில்லு’’ மைக், தன் காமிராவை கையில் எடுத்தார்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு… ஸ்பான்ச், பிரஷ், க்ரீம், பெயின்ட், பவுடர். எல்லாம் என் முகத்தில் விளையாட ஆரம்பித்தன. எனக்கு மேக்கப் போட்ட பெண், சற்று பின் நகர்ந்து சென்று என்னை பார்த்தாள்.
‘‘ஒகே. போய் கண்ணாடியைப் பார்’’
‘‘வாவ்…! நானா இது?’’ பட்டுப்போன்ற மேனி, பளபளக்கும் கன்னம்… அங்கிருந்த வெளிச்சத்தில் நான் தங்கம்போல மின்னினேன்.
‘‘ஓகே வாரிஸ். லிப்ஸை இப்படி வச்சிக்கோ, இங்க பார்… க்ளிக், க்ளீக், க்ளிக்…’’ -மைக்கின் விரல்கள் க்ளிக்கொண்டே இருந்தன.
வேலைக்கார வாரிஸ், இப்படியாகத்தான் ஒரு மாடல் அழகியாக மாறினாள்.
சில நாட்களுக்குப் பிறகு… ஒரு மாடலிங் ஏஜென்சி என்னை அழைத்திருந்தது. அழகழகான பெண்கள் அங்கே கூடியிருந்தனர்.
‘‘இங்கே என்ன நடக்குது?’’
‘‘பைரேலி காலண்டர்’’
‘‘ஓ… சூப்பர். அப்டினா, என்ன?’’
போட்டோகிராபர் ‘டெரன்ஸ் டொனோவன்’தான் கடந்த ஆண்டுக்கான பைரேலி காலண்டரை என் முன் எடுத்துப் போட்டார்.
‘ஸ்டன்னிங் பியூட்டிஃபுல்.’
ஒவ்வொரு பக்கத்திலும், துக்கிச் சாப்பிடக்கூடிய அழகிகள் ஆக்கிரமித்திருந்தார்கள்.
‘‘இந்த வருடம், வித்தியாசமா ஒரு ஆஃப்ரிக்கன் மாடலை வைத்துச் செய்யப்போகிறோம். நீதான் அந்த மாடல்’’ –டெரன்ஸ், ஒவ்வொன்றாக என்னிடம் விளக்க ஆரம்பித்தார்.
ஷூட்டிங் முடிந்தபோது என் படம் ‘அட்டை’க்குத் தேர்வாகி இருந்தது.
ஒரு மாடலாக, நான் வேகவேகமாக வளர்ந்தேன். பாரிஸ், மிலன், நியூயார்க் என்று பறந்தேன். பணம், மழைபோல் கொட்ட ஆரம்பித்தது. மிகப்பெரிய கமர்ஷியல் விளம்பரங்கள் தேடி வந்தன. ‘ரெவ்லான்’ விளம்பரத்தில் சின்டி கிராவ்ஃபோர்டு, கிளாடியா ஸ்கிஃபர், லாரன் ஹுட்டன் ஆகியோருடன் காட்சியளித்தேன். எல்லீ, கிளாமர், இத்தாலியன் வாக்ய் மற்றும் பிரிட்டிஷ், அமெரிக்கன் வாக்ய் போன்ற உலகின் முன்னணி ஃபேஷன் பத்திரிகைகளில் இடம் பிடித்தேன். ஜேம்ஸ்பான்ட் படத்தில்கூட நடித்தேன்.
www.vinavu.com

கூட்டணி சிக்கல்-கருணாநிதியை சந்திக்கும் பிரணாப்

சென்னை: மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி விரைவில் சென்னை வந்து திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசவிருக்கிறார்.

2ஜி விவகாரத்தில் சிக்கிய தயாநிதி மாறன் தனது அமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். முன்னதாக இதே 2ஜி ஊழலி்ல் சிக்கிய முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசாவும் தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து ஸ்பெக்ட்ரம் ஊழலில் திமுக முக்கியத் தலைகள் கைதாகி வருவதும், விலகி வருவதாலும், திமுக, காங்கிரஸ் இடையிலான உறவு மிகவும் மோசமான நிலைக்குப் போய் விட்டது.

திமுக தலைவர் கருணாநிதி 2 முறை டெல்லி போயும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவர் சந்திக்கவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு தர்மசங்கடமாகியுள்ளது. இந்த நிலையில் திமுக தலைமையை சந்தித்து உறவு குறித்து நம்பிக்கை கொடுப்பதற்காக பிரணாப் முகர்ஜியை சோனியா காந்தி சென்னைக்கு அனுப்பவுள்ளார்.

தயாநிதி மாறன் ராஜினாமா செய்த பிறகு காங்கிரஸ் மற்றும் திமுக தலைவர்கள் சந்தித்து பேசவிருப்பது இது தான் முதல் முறை.

தயாநிதி மாறன் ராஜினாமாவால் காங்கிரஸ்-திமுக உறவில் எந்தவித மாற்றமும் ஏற்படாது என்று கூறப்படுகிறது. 2ஜி விவகாரத்தில் மாறன் பெயர் அடிபட்டதுமே அவரை அமைச்சர் பதவியில் இருந்து தூக்க காங்கிரஸ் முடிவு செய்திருந்தது. இந்நிலையில் காங்கிரஸுக்கு வேலை கொடுக்காமல் தயாநிதி மாறனே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

அதே நேரத்தில் தயாநிதி மாறனின் ராஜினாமாவால் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றே தெரிகிறது.

திமுக மத்தியிலும், மாநிலத்திலும் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. திமுக முன்னாள் அமைச்சர் ராசா, எம்.பி. கனிமொழி ஆகியோர் திஹார் சிறையில் உள்ளனர்.

தமிழகத்திலும் நாளும் ஒரு திமுக நிர்வாகி கைதாகி வரும் நிலையில் திமுக, காங்கிரஸுடனான உறவை முறித்துக் கொள்ளத் தயாராக இல்லை என்று தெரிகிறது.

தயாநிதி பிரச்னை .கருணாநிதியை காங்கிரஸ் தலைவர் சோனியாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும் தொடர்பு

தயாநிதி விவகாரத்தால், தனது அரசுக்கு ஏற்படப்போகும் புதிய நெருக்கடியை உணர்ந்த பிரதமர் மன்மோகன் சிங் நேற்று முன்தினம் இரவு தி.மு.க., பார்லிமென்ட் கட்சித் தலைவர் டி.ஆர்.பாலுவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த ஜே.பி.சி., விசாரணைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டில்லியில் பாலு முகாமிட்டுள்ள சூழ்நிலையில், அவரிடம் தயாநிதி பிரச்னை குறித்து பிரதமர் பேசினார். "சி.பி.ஐ., தனது விசாரணை அறிக்கையில், தயாநிதி பங்கு தெரிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இதுகுறித்து உடனடியாக அடுத்த கட்ட நடவடிக்கையை தி.மு.க., மேற்கொள்ள வேண்டும்' என, கேட்டுக் கொண்டார்.பிரதமரின் இந்த தகவலை உடனடியாக, டி.ஆர்.பாலு, சென்னையில் உள்ள தி.மு.க., தலைவர் கருணாநிதியை தொடர்பு கொண்டு தெரிவித்து விட்டார். அந்த இரவிலேயே தி.மு.க., தலைமையும், தயாநிதி தரப்பும் மாறி மாறி பேசி ஆலோசனை நடத்தினர். ஒரு கட்டத்தில், கருணாநிதியை காங்கிரஸ் தலைவர் சோனியாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும் தொடர்பு கொண்டு பேசினர். நேற்று காலையில் தயாநிதி இல்லத்திற்கு டி.ஆர்.பாலு விரைந்தார். "நீங்கள் ராஜினாமா செய்வதைத்தவிர வேறு வழியில்லை' என, அப்போது தயாநிதியிடம் பாலு தெரிவித்தார். இதற்கிடையில், பிரதமர் மன்மோகன் சிங்கும், அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, சிதம்பரம் மற்றும் அட்டர்னி ஜெனரல் வாகனவதி ஆகியோரையும் அழைத்து அவசர ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனையில், விசாரணை அறிக்கையில் பெயர் இருந்தால் அது எப்.ஐ.ஆர்., அறிக்கை போல கருதிவிட முடியுமா என்று ஆலோசிக்கப்பட்டது.
பிறகு, மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற துவங்கியது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தனது இல்லத்தில் இருந்து வழக்கம்போல தயாநிதி கிளம்பிச் சென்றார். கேபினட் கூட்டத்தில் இவர் பங்கேற்பது போல வெளியில் ஒரு தோற்றம் காட்டப்படவே, ராஜினாமா செய்தியில் திடீர் குழப்பம் ஏற்பட்டது. அமைச்சரவை கூட்டத்தில் தயாநிதி பங்கேற்றாரா, இல்லையா என்று கூட்டத்தின் முடிவில், அமைச்சர் அம்பிகா சோனியிடம் கேட்டபோது, அவர் பங்கேற்றார் என்றார். ஆனால், உண்மையில் அமைச்சரவை கூட்டத்தில் தயாநிதி பங்கேற்கவில்லை .
பிரதமரை நேரில் சந்தித்து தனது ராஜினாமாவை தள்ளிப்போடச் செய்ய முயற்சி எடுத்தார். "ராஜினாமா செய்ய தயார் என்றும், அதற்கு ஒரு மாதகால அவகாசம் வேண்டும்' என்று பிரதமரிடம், தயாநிதி கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இதே கோரிக்கையை ஏற்கனவே தி.மு.க., தலைவரான கருணாநிதியிடமும், தயாநிதி வைத்தார். அது முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. கடைசி முயற்சியாக காங்கிரஸ் தலைவர் சோனியாவையும் தொடர்பு கொள்ள முயற்சித்து, அவரது ஆலோசகர் அகமது படேலுடனும், தயாநிதி தரப்பு பேசியும் எந்த பலனும் கிடைக்கவில்லை.

இவ்வாறு அனைத்து தரப்புமே தன்னை கைவிட்டுவிட்ட நிலையில், வேறு வழியில்லை என்ற நிலை தயாநிதிக்கு ஏற்பட்டது. இதையடுத்து, மீண்டும் இரண்டாவது முறையாக பிரதமரின் ரேஸ்கோர்ஸ் இல்லத்திற்கு நேற்று பிற்பகல் தயாநிதி சென்றார். அரசு வாகனத்தை தவிர்த்துவிட்டு, தனது சொந்த பி.எம்.டபிள்யூ., காரில் தயாநிதி சென்றார். அந்த சந்திப்பின் போது, தனது பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை பிரதமரிடம், தயாநிதி அளித்தார். இந்த ராஜினாமாவால், இரண்டாவது முறையும் தயாநிதி , ஐந்து ஆண்டுகள் முழுமையாக அமைச்சராக இல்லாமல் துரதிர்ஷ்டவாசியாக வெளியேறியுள்ளார்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த விசாரணையின் நிலைமை என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று சி.பி.ஐ.,க்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து, இந்த ஊழலில் இதற்கு முன்பும் விசாரணை அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., தாக்கல் செய்தது. குறிப்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு தாமதம் ஏற்படும் சமயங்களில் எல்லாம் விசாரணை அறிக்கையை மட்டுமாவது தாக்கல் செய்ய வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது.
சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட விசாரணை அறிக்கையில், தயாநிதியின் பெயரை சி.பி.ஐ., குறிப்பிட்டிருந்தது. "ஏர்செல் கம்பெனியை விற்பதற்கு நெருக்கடி அளித்து, அதன் நிறுவனர் சிவசங்கரனை தயாநிதி மிரட்டியது உண்மைதான்' என்று குற்றம்சாட்டியிருந்தது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் தயாநிதியின் பங்கு இருப்பதை சி.பி.ஐ., உறுதி செய்தது.இந்த குற்றச்சாட்டை அடுத்து தயாநிதி மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்கும்படி தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட பலரும் கோரிக்கை வைத்தனர்.

-நமது டில்லி நிருபர்-

contempt of court அரசு மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாது?


சமச்சீர் கல்வி வழக்கு: பழைய பாடத் திட்ட நூல்களை அச்சடித்தது ஏன்? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்விசமச்சீர் கல்வி வழக்கு தொடர்பான விசாரணையின் போது சென்னை உயர்நிதிமன்ற தலைமை நீதிபதி தமிழக அரசுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வழக்கு நடைபெறும்போது பழைய பாடத்திட்ட புத்தகங்களை அச்சிட நடவடிக்கை எடுத்தது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள தலைமை நீதிபதி, தமிழக அரசு மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடரக்கூடாது என்றும் கூறினார்.

உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் சமச்சீர் கல்வி திட்டம் குறித்து ஆராய தமிழக அரசு நியமித்த 9 பேர் கொண்ட குழு அண்மையில் தமது அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

தமிழ் படிக்கவே தெரியாதவர்களும், கல்வி வணிகர்களையும் கொண்ட இந்த குழு சமச்சீர் கல்வியை குழி தோண்டி புதைக்கும் விதமாக அறிக்கை தயாரித்திருப்பதாக, அரசியல் பாகுபாடின்றி அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த அறிக்கை மீதான வழக்கறிஞர்களின் வாதம் தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் கொண்ட முதண்மை அமர்வு முன்பாக உயர்நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது.
அதிமுக அரசு சார்பாக உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிபி ராவ் தமது வாதத்தை எடுத்துரைத்தார். அப்போது குறிக்கிட்ட தலைமை நீதிபதி இக்பால், வழக்கு விசாரணை முடிவற்கு முன்னதாகவே, பழைய பாடத்திட்டத்தின் நூல்களை அச்சிட தமிழக அரசு டெண்டர் விடுத்தது ஏன்? இதற்காக அரசு மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினார்.
நீதிமன்றத்தை தமிழக அரசு கேலிக்கூத்தாக்குவது வேதனையளிக்கிறது என்றும் தலைமை நீதிபதி கூறினார். நூல்களை அச்சிடுவதை ராவ் ஒப்புக்கொண்டதையும் நீதிபதி பதிவு செய்து கொண்டார்.
சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாத், மாநில கல்வி திட்டம் பற்றி எதுவும் அறியாதவர்கள் அடங்கிய குழுவின் அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
இந்த வழக்கின் விசாரணை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முருகதாஸ் படப்பிடிப்பில் அசிட் வீச்சு 7 ஆஸ்பத்திரியில்

7 துணை நடிகர்கள் மருத்துவமனையில் அனுமதி

ரமணா, கஜினி ஆகிய படங்களை டைரக்டு செய்தவர், ஏ.ஆர்.முருகதாஸ். இவர் சொந்த பட நிறுவனம் தொடங்கி,  எங்கேயும் எப்போதும்' என்ற பெயரில் ஒரு புதிய படத்தை தயாரித்து வருகிறார். ஜெய் அஞ்சலி ஜோடியாக நடிக்கும் இந்த படத்தை சரவணன் டைரக்டு செய்கிறார்.
படத்தின் பெரும்பகுதி காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன. இறுதிக்கட்ட படப்பிடிப்பு, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் 07.07.2011 அன்று நடந்தது. துணை நடிகர் நடிகைகள் 150 பேர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி கொண்டிருந்தன
அப்போது ஆஸ்பத்திரி நிர்வாகிகளுக்கும், படப்பிடிப்பு குழுவினருக்கும் இடையே படப்பிடிப்பு கட்டணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு குழுவினரை வெளியே போகும்படி, ஆஸ்பத்திரி நிர்வாகிகள் கூறியதாகவும், படப்பிடிப்பு குழுவினர் வெளியேற மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து அந்த இடத்தில் யாரோ  ஆசிட்'டை எடுத்து வந்து வீசியதாக கூறப்படுகிறது. இதனால், அங்கு நின்று கொண்டிருந்த துணை நடிகர் நடிகைகள் 7 பேருக்கு வாந்தி மயக்கம் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

உடனடியாக அந்த 7 பேரும் பக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்கள். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதொடர்பாக, படப்பிடிப்பு குழுவினர் வளசரவாக்கம் போலீசில் புகார் செய்து இருக்கிறார்கள்.

இலங்கைக்கு எதிரான வெளிநாட்டு சக்திகள் !


02 (1)
4 பேரை குறிவைத்தே பிரசாரம்
நான்கு முக்கியஸ்தர்களைக்  குறிவைத்தே இலங்கைக்கு எதிரான வெளிநாட்டு சக்திகள் சர்வதேச ரீதியில் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாட்டின் ஜனாதிபதி  பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ பொருளாதார அபிவிருத்தித் துறை அமைச்சர் பசில் ராஜபக்ஷ மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவை ஆகியோரை  இலக்கு வைத்தே அந்த சக்திகள் செயற்படுகின்றனரென்றும் மற்ற அரசாங்கத் தலைவர்கள் மீது எவ்வித குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லையென்றும்  ஜனாதிபதி குறிப்பிட்டார்.
எங்களிடம் மறைக்கும் இரகசியங்கள் எவையும் இல்லை என்று தெரிவித்த

ஜனாதிபதி  சிலகாலத்திற்கு முன்னர் இராணுவத்தினர் சிலர் பெண்கள் மீது பாலியல் துஷ்பிரயோகத்தை மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின் மீது விசாரணை நடத்தி தண்டித்திருக்கிறோம் என்று சொன்னார்.
அது போன்று திருகோணமலையில் சில இளைஞர்களை சுட்டுக்கொன்ற ஒரு பொலிஸ் படைப்பிரிவையே தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் பல மாதங்கள் நாம் தடுத்து வைத்திருந்தோம். த.வி.கூ. தலைவர் ஆனந்தசங்கரி இவர்கள் நிரபராதிகள் என்று தெரிவித்ததை அடுத்தே என்னால் விடுவிக்கப்பட்டனர் என்றும் கூறினார்.
யுத்தம் நடந்து கொண்டிருந்த போது இராணுவத்தினர் பெண்களை மானபங்கப்படுத்தினார்கள் என்றும் சர்வதேச ரீதியில் குற்றங்கள் சுமத்தப்படுகின்றன. யுத்தம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் ஒரு இராணுவ வீரன் தனது உயிரை பணயம் வைத்து இத்தகைய கொடுமைகளில் ஈடுபடுவானா? என்று நாம் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.
எனவே இவ்வாறாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இராணுவத்தின் மீது சுமத்துபவர்கள் அது நடை முறையில் சாத்தியப்படுமா என அவதானித்த பின்னர் செயற்படுவது புத்திசாலித்தனமானது என்று ஜனாதிபதி ஊடக முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின் போது தெரிவித்தார் .

சிவராசா துஷ்யந்தன் ஒலிம்பிக் நிகழ்வில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்

வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஊனம் ஒரு தடை, குறை இல்லை

வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஊனம் ஒரு தடை, குறை இல்லை

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவராசா துஷ்யந்தன் என்ற மாணவன் கிறீ நாட்டின் தலைநகர் எதென்ஸில் இடம்பெற்ற வலுவிழந்தோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றி அஞ்சலோட்ட நிகழ்வில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

இவர் பிறவியிலேயே வாய் பேச முடியாத, செவிப்புலனற்ற வலுவிழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் கோண்டாவிலில் அமைந்துள்ள சிறுவர் மனவிருத்திக்கான, சிவபூமி பாடசாலையைச் சேர்ந்த இவர் தனது சாதனையின் மூலம், இலங்கைக்கு சர்வதேச ரீதியில் பெருமை சேர்த்துள்ளார்.

இவரது பாடசாலையும், யாழ் கல்விச் சமூகத்தினரும் இவருக்கு செங்கம்பள வரவேற்பளித்து கௌரவித்துள்ளனர்.

விளையாட்டில் ஆர்வம் மிகுந்த துஷ்யந்தன் பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் மிகுந்த ஆர்வம் காட்டி முன்னணியில் திகழ்ந்ததையடுத்து, கிறீஸ் நாட்டில் நடைபெற்ற வலுவிழந்தவர்களுக்கான ஒலிம்பிக் போட்டி பற்றி அறிந்து, அதில் அவரைப் பங்கு பெறச் செய்வதற்கான முயற்சிகளை அவரது ஆசிரியர்கள் மேற்கொண்டனர்.

ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னோடியாக கொழும்பில் நடைபெற்ற தேசிய ரீதியிலான நீளம் பாய்தல், 100 மீற்றர் ஓட்டம், அஞ்சலோட்டம் ஆகிய போட்டிகளில் பங்குபற்றி முதலிடங்களைத் தட்டிக்கொண்டதையடுத்து, வலுவிழந்தோருக்கான இலங்கையின் ஒலிம்பிக் குழு இவரை எதென்ஸ் நகரத்திற்கு அழைத்துச் சென்றது. அங்கு அவரது குழு 4x400 மீட்டர் அஞ்சலோட்டப் போட்டியில் இரண்டாமிடத்தைப் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றது.

இவரது இந்தச் சாதனைக்கு சிவபூமி மனவிருத்தி பாடசாலை ஆசிரியர்களும் யாழ் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வித்துறையினரும் பெரும் துணை புரிந்ததாக சிவபூமி பாடசாலையை நிறுவியவரும் நிர்வாகியுமாகிய ஆறு. திருமுருகன் கூறினார்.

பொன்னுத்துரையின் புரட்டல்கள்தான் அவரது வரலாற்றில் வாழ்தல்

- முருகபூபதி
 வாழ்நாள் பூராவுமே ஒருவன் பொய்பேசியும் செல்லும் இடமெல்லாம் அவதூறுகளைப்பரப்பியும் பித்தலாட்டங்கள் புரிந்தும் வருவானென்றால் நிச்சயமாக அவன் கலகக்காரனாக இருக்கமாட்டான். மனநோயாளியிடம்தான் இத்தகைய பண்புகள் அதிகமாக இருக்கும். தகுந்த சிகிச்சை கிட்டாதுபோனால் தனக்குத்தானே பகைவனாகி தானும் சீரழிந்து தனது ஊக அடிப்படையிலான பிதற்றல்களுக்கு பலியாகிப்போகின்றவர்களையும் சோர்வடையச்செய்து மனநோயாளியாக்கிவிடுவான்.
 இங்கே தன்னை ஒரு கலகக்காரன் என்று சொல்லிக்கொண்டு வாய்க்கு வந்தபடி புலம்பித்திரியும் ஒருவர் பற்றித்தான் பதிவுசெய்கின்றேன். அந்த நபர் எஸ்.பொன்னுத்துரை.
கனடாவில் சமீபத்தில் தனக்கு வழங்கப்பட்ட இயல் விருதுபெற்று சிலநாட்களுக்குள்ளாகவே தன்னை இந்த விருதுக்கு தெரிவுசெய்தவர்களை   நபுஞ்சகர்கள் என்று கற்சுறாவுக்கு தெரிவித்ததிலிருந்தே இந்நபரின் குண இயல்புகளை புரிந்துகொள்ளமுடியும்.
ஊரில் சொல்வார்கள் ‘விருந்து கொடுத்த இலையிலேயே மலம் கழித்துப்போகின்றவன்’ என்று அத்தகைய மனிதன்தான் இந்த எஸ்.பொ.
நாம் இலங்கையில் நீண்டகாலம் திட்டமிட்டு நடத்தி முடித்த முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கு எதிராக கற்சுறா சொல்வதுபோன்று முதல் கொள்ளி வைத்தவர்தான் இந்த மனிதர். வாழ்நாள் பூராவுமே மற்றவர்களுக்கு எதிராக குறிப்பாக நண்பர்களுக்கு எதிராக அவதூறுகளைப்பரப்பிவிட்டு அந்த அவதூறுகள் தவறானவை என்று நிரூபிக்கப்பட்டதும் ஊகத்தின் அடிப்படையில் சொன்னேன் என்று தப்பித்து ஓடும் இந்நபரின் வரலாற்றில் வாழ்தல் அத்தகையதே.
காலம்பூராவும் பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி, மௌனகுரு, டானியல், மல்லிகை ஜீவா, பிரேம்ஜி ஞானசுந்தரன் உட்பட பலரை கேவலமாகத்திட்டியும் அவதூறு பொழிந்தும் காலத்தைக்கடத்தினார்.
 ஜீவாவுக்கும் டானியலுக்கும் தான்தான் எழுதிக்கொடுத்தேன் அவர்களின் பெயரையே தனது புனைபெயராக்கி எழுதி அவர்களுக்கு பிரபலம் தேடிக்கொடுத்தேன். படைப்பு இலக்கியத்தில் தான்தான் அவர்களுக்கு குதிரை ஓடினேன் என்றெல்லம் அறிக்கை விட்டவருக்கு அரசாங்கப்பரீட்சையில் யார் குதிரை ஓடினார்கள் என்று நாமும் இவரைப்போன்று  ஊகத்தின் அடிப்படையில் கருத்துச்சொல்ல முடியும்.
எமது சர்வதேச எழுத்தாளர் மாநாடு தொடர்பாக இவரிடம் ஆலோசனை கேட்க பலமுறை தொடர்பு கொண்டபோதும் தந்திரமாக தவிர்த்துக்கொண்டு தனது சென்னை மித்ர பதிப்பக விற்பனை தொடர்பான பிஸினஸ் டீல் முறிவடைந்ததைத்தொடர்ந்து சுமார் ஆறுமாதம் கழித்து குமுதம், விகடன், கீற்று இணையத்தளம் ஆகிய குழுமங்களிடம் அவதூறு பரப்பி கொள்ளிவைத்து அந்த நெருப்பில் குளிர்காய்வதற்கு தம்மோடு பலரையும் அழைத்துக்கொண்டவர். இப்போது ‘ஊகம்’ பற்றி சொல்லப்புறப்பட்டுள்ளார். இவரது மாநாட்டு எதிர்ப்பின் ரிஷி மூலம் விரைவில் ஆதாரங்களுடன் அம்பலமாகவிருக்கிறது.
இம்மாநாடு தொடர்பாக  2010 ஜனவரி 3 ஆம் திகதி கொழும்பில் ஆலோசனைக்கூட்டம்  நடந்தகாலப்பகுதியில்  இலங்கையில் நின்றவர்கள்தான்   ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியமும்,  நடேசனும். இவர்கள் மட்டுமல்ல அவுஸ்திரேலியாவிலிருந்து மாவை நித்தியானந்தன், சட்டத்தரணி ரவீந்திரன், டொக்டர் வாமதேவன், ஜெயந்தி விநோதன்,     மங்களம் ஸ்ரீநிவாசன்( லக்ஷ்மண ஐயரின் மகள்) ஆகியோரும் கொழும்பில் இருந்தனர். இவர்கள் அனைவரும் எனது அழைப்பை ஏற்று அந்தக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இவர்கள் அனைவருமே எனது நண்பர்கள். அவர்களது அரசியல் இலக்கிய கருத்துக்களுக்கு அப்பால் அவர்கள் எனது நண்பர்கள்.   சகிக்கவே முடியாத கருத்துக்களைச்சொல்லும் எஸ்.பொ.வும்  ஒருகாலத்தில் எனது  நண்பராக இருந்தவர்தான். பொன்னுத்துரைக்கு அவதூறு பொழிவதற்கு  பல சாட்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. அதற்காக நடேசன், ரஜேஸ்வரியின் பெயர்களை பயன்படுத்துகிறார். 
 பல வருடங்களுக்கு முன்னர் மல்லிகைக்காரியாலயத்தில் மாநாட்டு யோசனை முன்வைக்கப்பட்டபோது கூட அவர்களுக்கு இந்த மாநாட்டுடன் எத்தகைய தொடர்பும் இருக்கவில்லை. பொன்னுத்துரையிடம் ஆலோசனை கேட்க முயன்றது போலவே அவர்கள் உட்பட இலங்கையிலும் வெளிநாடுகளிலும் நூற்றுக்கணக்கானோரிடமிருந்து ஆலோசனைகள் பெறப்பட்டன. கற்சுறா குறிப்பிடுவதுபோன்று பொன்னுத்துரைக்கு, காசி. ஆனந்தன் உட்பட பலரை திருப்திப்படுத்தவேண்டியிருந்தது அவரது காலத்தின் சோகம்.
இதே காசி ஆனந்தனை, அமிர்தலிங்கம் 1977 இல் நடந்த பொதுத்தேர்தலின்போது மட்டக்களப்பு தொகுதியில் இராஜதுரைக்கு எதிராக நிறுத்தியபோது, அந்த உணர்ச்சிக்கவிஞரின் தமிழ்த்தேசியத்திற்கு எதிராக இராஜதுரைக்கு ஆதரவாக மேடைகளில் தோன்றி பேசியவர்தான் இந்தப் பொன்னுத்துரை.
அதிலே பிரசித்தி பெற்ற பொன்னுத்துரையின் வசனத்தை சமீபத்திலும் இலங்கையில் ஒரு இதழ் பதிவு செய்தது. “ இராஜதுரை போக்கிலி. அவரைவிட கடைகெட்ட போக்கிலிதான் காசி ஆனந்தன்.” இதுவே பொன்னுத்துரை மலர்ந்தருளிய வாசகம். இராஜதுரை பிரதேச அபிவிருத்தி அமைச்சரானதும் அவரது பொறுப்பிலிருந்த பனம்பொருள் அபிவிருத்திச்சபையின் தலைவர் பதவிக்கு கனவு கண்டவர்தான் இவர். அந்தக்கனவு பலிக்காமல் நைஜீரியா சென்றார்.
 இனச்சங்காரம் புரிந்த ஒரு அரசில் பதவிக்கு காத்திருந்தவர்  விடுதலைப்போரில் தன்னை ஆகுதியாக்கிக்கொண்ட புதல்வனின் பெயரில் குதிரை ஓடுகிறார்.
 புலிகள் இல்லாத ஒரு கட்டத்திலே சர்வதேச தலைமைத்துவத்தைப்பெற்றுக்கொள்ளும் ஒரே ஒரு ஆசைக்காகத்தான் இந்த மாநாட்டிலே நான் முன்னிற்று உழைத்ததாகவும் கற்சுறாவுக்குச்சொல்கிறார் இந்தப்பொய்யர்.
 புலிகள் வாழ்ந்த காலத்திலேயே நான் இலங்கையில் யாழ்ப்பாணம் சென்று 1986 இல் நல்லூரில் நடந்த மாநாட்டில் கலந்து பேசியிருக்கின்றேன். புதுவை இரத்தினதுரையும் எம்முடன் இணைந்திருந்தார். கவியரங்கில் பங்கேற்றார். கவிஞர் சேரனும் அந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்தான். அச்சந்தர்ப்பத்தில் நானும் பிரேம்ஜியும் மல்லிகை ஜீவாவும் புலிகளுடன் உரையாடியும் இருக்கின்றோம்.
 அவுஸ்திரேலியாவிலும் புலிகளுக்கு மத்தியில் இலக்கிய விழாக்கள் நடத்தியிருக்கின்றேன். பொன்னுத்துரையையும் அழைத்து பேசவைத்துள்ளேன். அவரை பாராட்டி கௌரவித்துமிருக்கின்றோம்.  ஆனால் இங்கிருந்த புலிகள் ஆயுதம் ஏந்தாதவர்கள். கழுத்தில் சயனைற் அணியாதவர்கள். அதாவது பொன்னுத்துரையைப்போன்று.
 இந்தப்பொன்னுத்துரை 1989 ஜனவரி 19 ஆம் திகதி எனக்கு எழுதிய கடிதம் இப்பொழுதும் என்னிடமிருக்கிறது. அந்தக்கடிதம் எனது கடிதங்கள் நூலிலும் இடம்பெற்றுள்ளது. அக்கடிதத்தில் தனது மனச்சோர்வு குறித்து பின்வருமாறு எழுதியிருந்தார்:- “நைஜீரியாவிலே மிகவும் ஓய்வான- மிகவும் மெதுவாகச்செல்லும் ஒரு வாழ்க்கைக்கு பழக்கப்பட்டவன் நான். ஆனால் இங்கு (அவுஸ்திரேலியாவில்) எந்திரகதியில் நடமாடுபவர்ளுக்கு மத்தியிலே செயற்கையான புன்னகைகளை உதட்டிலே ஏந்திக்கொண்டு நடமாடுபவர்களுக்கு மத்தியிலே வாழ்வதற்கு கஷ்டமாக இருக்கின்றது.
 நாம் எப்படிவேண்டுமானாலும் நைஜீரியாவிலே வாழலாம். யாரும் எதையும் கண்டுகொள்ள மாட்டார்கள். குடி- கூத்தி என்பன ஆண்மையின் பிரிக்க முடியாத அம்சம் என்று அவர்களாலே அங்கீகரிக்கப்படுகின்றது.  நெடுஞ்சாலை ஓரமாக மல-சலம் கழித்தல் அங்கே மனிதனுடைய அடிப்படை உரிமையாகும். இங்கு எனது குசினியில் சமைக்கும் கறியின் மணம் அடுத்த அறையிலே வாழ்பவனுடைய மூக்கினைத் தொடக்கூடாதாம்.
 இங்குள்ள எழுத்தாளர் அமைப்புகளுடன் தொடர்புகொண்டு என் நோக்கிலே அவுஸ்திரேலியாவை சுயம்புவாக தரிசிக்க முடியுமல்லவா? இவை குறித்து உங்களாலே பயனுள்ள குறிப்புகள் தரமுடியுமாயின் மிக்க உதவியாக இருக்கும். இதனை நீங்கள் எஸ்.பொ.வுக்குச்செய்யும் தனிப்பட்ட உதவியாக மட்டும் கொள்ளாது, தமிழ் எழுத்துப்பணிக்குச்செய்யும் பங்களிப்பாகவும் கருதி உதவ முன்வருவீர்கள் என்று நம்புகின்றேன்.”  
பொன்னுத்துரையின் குண இயல்புக்கு இக்கடித வரிகள் பதச்சோறு. தனக்கு அடைக்கலம் கொடுத்த அவுஸ்திரேலியாவுக்கே விசுவாசம் இல்லாத இவர் இந்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் ஓய்வூதியம் பெற்றுக்கொண்டுதான் அவதூறு எழுத்தூழியம் தொடர்கின்றார்.
நைஜீரியாவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு வந்து சோர்ந்துபோய் முடங்கிக்கிடந்தவரை 1989 நடுப்பகுதியில் மெல்பனில் நடந்த எனது சமாந்தரங்கள் கதைத்தொகுப்பு நூல்வெளியீட்டில் பேசுவதற்கு அழைத்தேன். அதுதான் அவர் அவுஸ்திரேலியாவில் முதல் முதல் தோன்றிய மேடை.
அச்சமயம் தானும் ஒரு மாவீரர் குடும்பத்தைச்சேர்ந்தவர் என்பதை கச்சிதமாக சொல்லிவிட்டார். வருடாந்தம் மாவீரர் நிகழ்வு நடத்துபவர்களுக்குத்தோதான ஒரு பேச்சாளர் கிடைத்தார். 
1991 ஆம் ஆண்டு மாவீரர் தின விழாவிலும் மெல்பன் எழுத்தாளர்கள் பற்றி அவுதூறு பரப்பினார். கரகோஷத்திற்காகவும் விசிலுக்காகவும் எதுவும் பேசக்கூடிய நபர்தான் இந்தப்பொன்னுத்துரை. அன்றைய மாவீரர் நிகழ்விலே ஜெயலலிதாவை ஒரு பெண் என்றும் பாராமல் இவர் கேவலமாகப்பேசிய பேச்சை  குறிப்பிட்ட நிகழ்வு பதியப்பட்ட ஒளிநாடாவில் பார்க்கலாம். அதற்காக கற்சுறா மெல்பன் தமிழர் ஒருங்கினைப்புக்குழுவினரை தொடர்புகொள்ள வேண்டும்.
நான் ஏதோ வாழ்விழந்து போயிருந்ததாகவும் எனக்கு புதுவாழ்வு கொடுப்பதற்காகத்தான் சிட்னியில் நடந்த தமது நூல்களின் வெளியீட்டு விழாவுக்கு தலைமை தாங்க அழைத்ததாகவும் வேறு கதையளக்கின்றார்.
1996 இல் எதிர்பாரதவிதமாக எனது வாழ்வில் ஒரு திருப்பம் நேர்ந்தது. அதற்காக நான் தலையிலே துண்டைப்போட்டுக்கொண்டு ஓடி ஒளியவில்லை. எனது குழந்தைகளை தன்னந்தனியனாக சொந்த பந்தங்கள் இல்லாத ஒரு தேசத்தில் பராமரித்து காப்பாற்றி கரைசேர்த்திருக்கின்றேன்.
பொன்னுத்துரை சொல்லும் விதமாகப்பார்த்;தால் நான் எப்படி அதன் பிறகு 1997 இல் எனது இலக்கியப்பிரவேச வெள்ளிவிழாவை முன்னிட்டு நடத்திய நிகழ்வில் பொன்னுத்துரை, கவிஞர் அம்பி, அண்ணாவியார் இளைய பத்மநாதன், ஓவியர் செல்லத்துரை ஆகிய மூத்தவர்களை அழைத்து பாராட்டி கௌரவம் வழங்கியிருக்கமுடியும்.
 1988 இல் ஆரம்பித்த இலங்கை மாணவர் கல்வி நிதியத்தையும் 2001 இல் தொடங்கிய எழுத்தாளர் விழா இயக்கத்தையும் அல்லவா கைவிட்டு ஓடி  வாழ்விழந்திருக்கவேண்டும். 2002 இல் நாம் சிட்னியில் நடத்திய இரண்டாவது எழுத்தாளர்விழாவிலும் பொன்னுத்துரை கலந்துகொண்டார்.
அதன் பிறகுதான் பொன்னுத்துரையின் வரலாற்றில் வாழ்தல், அம்பியின் அந்தச்சிரிப்பு, தமிழச்சியின் எஞ்சோட்டுப்பெண், நடேசனின் வண்ணாத்திக்குளம் ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா சிட்னியில் நடந்து நான் தலைமை தாங்கச்சென்றேன்.
 என்மீது சேறு பூசும் இவர் பிரதேசவாதம் கக்கும் அளவுக்கு தரம் தாழ்ந்துபோனார். நான் தமிழீழப்பகுதிகளின் பிரதிநிதியாக என்னை அடையாளப்படுத்திக்கொள்ள பிறப்பாலும் உரிமையற்றவன் என்றும் கற்சுறாவுக்குச் சொல்கின்றார்.
 இதன் அர்த்தம் என்ன?
இலங்கையின் மேற்கு கரையில் நீர்கொழும்பிலும் தமிழர்கள் வாழ்ந்தார்கள். வாழ்கிறார்கள். அங்கே தமிழ் இருப்பதனால்தான் 1960 களில் பொன்னுத்துரை, மகாகவி உருத்திரமூர்த்தி, கனகசெந்திநாதன், ஏ.ரி.பொன்னுத்துரை உட்பட பல இலக்கியவாதிகளை அழைத்து மூன்று நாட்கள் எமது ஊர் மக்கள் தமிழ் விழா எடுத்தார்கள். அப்போது எனக்கு பதினொரு வயது.
  வடக்கிலே கிழக்கிலோ பிறந்தால்தான் தமிழ் உணர்வு, தமிழ் அறிவு, தமிழ் இலக்கிய பிரக்ஞை வரும் என்பதில்லை. பொன்னுத்துரைக்கு இதற்குமேலும் பதில் சொல்லி எனது காலத்தை விரயம் செய்யவிரும்பவில்லை.
 அவர் செல்லாத வாதங்களை கொண்டு திரிகின்றார்.
வயது போவதனால் ஞாபகக்குறைவு ஒருவருக்கு ஏற்படலாம். அதற்காக தனது ஞாபக மறதி பலவீனத்தை மறைக்க மற்றவர்களின் மீது சேறு பூசுவதற்கு முனையக்கூடாது.
எமது மாநாட்டை கொச்சைப்படுத்துவதற்காக பலவகையான பிரயத்தனங்களையும் மேற்கொண்டவர் இந்த பொன்னுத்துரை. முதலில் இலங்கை அதிபரிடம் லஞ்சம் பெற்றோம். என்றார் (கீற்று இணையம்) பிறகு, அவுஸ்திரேலியா இன்பத்தமிழ் வானொலியில் நாம் குமரன் பத்மநாதன் ஊடாக கோடிகோடியாக பணம் பெற்றுள்ளோம் என்றார்.
பிறகு கைலாசபதி, சிவத்தம்பியினால் மூளைச்சலவை செய்யப்பட்டடவர்களினால் மாநாடு நடத்தப்படுகிறது என்றார். இந்தியாவின் தயவில் வாழ்ந்து தனது விஸாவை தக்கவைத்துக்கொள்தற்காக எமது மாநாட்டுக்குப்பின்னால் சீனா இருக்கிறது என்றார்.
இப்போது கற்சுறாவுக்கு சொல்லும்போது டக்ளஸ் தேவானந்தா எமக்குப்பின்னால் இருந்தார் என்று சொல்கிறார். இவரது எந்தக்கூற்றுக்கும் ஆதாரம் இல்லை. எழுந்தமானத்தில் குறிசுடும் இவர் தனது வாழ்நாள் பூராகவும் இவ்வாறு பிதற்றிப்பிதற்றியே தன்னை ஒரு கலகக்காரன் என்று சொல்லிக்கொள்வதில் சிறிதளவும் வெட்கப்படுவதில்லை.
இவரது வராலாற்றை கவனித்தால் எமது காலத்தில் இப்படியும் ஒரு  மனிதன் வாழ்ந்திருக்கிறான் என்று நாம்தான் வெட்கப்படவேண்டும்.
1970 களில் பொன்னுத்துரை எழுதிய இஸ்லாமும் தமிழும் நூலில் எம்.எஸ்.எம். இக்பால், எம்.எச். எம்.சம்ஸ். ஏ. இக்பால் ஆகியோரை மிகவும் தரக்குறைவாக எழுதினார். இரசிகமணி கனக செந்திநாதனின் ஈழத்து இலக்கிய வளர்ச்சி நூலில் அவருக்குத்தெரியாமல் தனது கைச்சரக்கை திணித்தார்.
சிலரது நூல் வெளியீட்டில், குறிப்பாக சில மொழிபெயர்ப்பு நூல்களின் பதிப்பில் செய்த பாரதூரமான மோசடிகள் தொடர்பாகவெல்லாம் நாமும் ஊகங்களுடன் எழுத முடியும்.;. பேசவும் முடியும். அவ்வாறு வாழ்ந்தால் நாமும் இந்தப்பத்தியின் தொடக்கத்தில் குறிப்பிட்ட நிலைக்கே தள்ளப்படுவோம்.
 இந்த மனிதர் இந்த அந்திம காலத்திலாவது திருந்தவேண்டும். வரலாற்றில் வாழ்தல் எழுதிவிட்டால் மாத்திரம்போதாது தனது வாழ்வை தானே சுயவிமர்சனம் செய்துகொள்ளவேண்டும். தனது வாழ்நாளில் எத்தனைபேரை காயப்படுத்தியிருக்கிறார். எத்தனைபேருக்கு வீண் பழி சுமத்தியிருக்கிறார் என்பதை திரும்பிப்பார்க்கவேண்டும்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா.