வியாழன், 18 மே, 2023

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை இல்லை.. தமிழ்நாடு அரசின் சட்டத்தை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

 மாலைமலர் - Murugesan : புதுடெல்லி  தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பொதுமக்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்திய நிலையில், தமிழ்நாடு அரசு அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்தது.
இதன் காரணமாக தற்போது தமிழர் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.
அதேசமயம், ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரி விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த மனுக்களை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த ஆண்டு நவம்பர் 23-ந் தேதி விசாரிக்க தொடங்கியது.

சித்தராமையா முதலமைச்சர் , துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்! கர்நாடகா - காங்கிரஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 மாலைமலர் Murugesan ; பெங்களூரு  கர்நாடகா சட்டசபை தேர்தலில் 135 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தபோதிலும் முதலமைச்சர் பதவியை ஏற்கப்போவது யார் என்பதை தீர்மானிக்க முடியாமல் திணறியது.
கடந்த 13ம் தேதி பிற்பகல் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதியான நிலையில் முதலமைச்சர் பதவிக்கு சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் விருப்பம் தெரிவித்தனர்.
இதையடுத்து யாரை முதலமைச்சராக தேர்வு செய்வது என்பது குறித்து புதிய எம்.எல்.ஏ.க்கள் அனைவரிடமும் எழுத்துப் பூர்வமாக கருத்து கேட்கப்பட்டது.
அவை அனைத்தும் டெல்லி கொண்டு செல்லப்பட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரையும் காங்கிரஸ் மேலிடம் டெல்லிக்கு வரவழைத்தது.

கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா- வரும் 20ம் தேதி பதவியேற்பு விழா

 maalaimalar.com -Isaivani  :  கர்நாடகா சட்டசபை தேர்தலில் 135 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ள போதிலும் முதலமைச்சர் பதவியை ஏற்கப்போவது யார் என்பதை தீர்மானிக்க முடியாமல் திணறியது.
கடந்த 13ம் தேதி பிற்பகல் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதியான நிலையில் முதலமைச்சர் பதவிக்கு சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் விருப்பம் தெரிவித்தனர்.
இதையடுத்து யாரை முதலமைச்சராக தேர்வு செய்வது என்பது குறித்து புதிய எம்.எல்.ஏ.க்கள் அனைவரிடமும் எழுத்து பூர்வமாக கருத்து கேட்கப்பட்டது. அவை அனைத்தும் டெல்லி கொண்டு செல்லப்பட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரையும் காங்கிரஸ் மேலிடம் டெல்லிக்கு வரவழைத்தது. நேற்று அவர்கள் இருவரையும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது வீட்டுக்கு வர வழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

புதன், 17 மே, 2023

டிகே சிவக்குமார் டிமாண்ட்.. உச்சகட்ட தலைவலியில் காங் தலைமை!

 tamil.oneindia.com  -  Vignesh Selvaraj   :  பவர் ஷேரிங் ஓகே.. ஆனால் ஒரு ‘ட்விஸ்ட்’.. டிகே சிவக்குமார் டிமாண்ட்.. உச்சகட்ட தலைவலியில் காங் தலைமை!
டெல்லி : கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்வதில் காங்கிரஸ் தலைமை தலையைப் பிய்த்துக்கொண்டிருக்கும் சூழலில், 5 ஆண்டு கால ஆட்சியில் ஆளுக்கு 2.5 ஆண்டுகாலம் முதலமைச்சராக இருக்கலாம் என்ற யோசனையை தலைமை முன்வைத்தது. இந்த டீலுக்கு டிகே சிவகுமார் ஓகே சொல்லி இருந்தாலும், டிகே சிவக்குமார் ஒரு 'ட்விஸ்ட்'டான டிமாண்டை வைத்துள்ளதால் உச்சகட்ட குழப்பம் நீடிக்கிறது.
கர்நாடகாவின் 224 தொகுதிகளுக்கு மே 10ஆம் தேதி நடந்த தேர்தலில் 135 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி தலைதூக்கத் தொடங்கியது.

கர்நாடக முதல்வராக சித்ராமய்யாவுக்கே வாய்ப்பு அதிகம்! ஏன்? எப்படி?

 tamil.oneindia.com -    noorul Ahamed Jahaber Ali  : பெங்களூரு: கர்நாடகா முதலமைச்சராக சித்தராமையாவை காங்கிரஸ் கட்சி மீண்டும் தேர்வு செய்து இருப்பதற்கான காரணம் என்ன? டிகே சிவக்குமாரை விட சித்தராமையாவிடம் இருக்கும் பிளஸ் என்ன என்று விரிவாக பார்ப்போம்.
கர்நாடகா மாநில சட்டசபைத் தேர்தல் கடந்த மே 10 ஆம் தேதி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றது.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபையில் 113 இடங்களில் பிடிக்கும் கட்சி பெரும்பான்மை பலத்து ஆட்சியை பிடிக்கும்.
கடந்த மே 13 ஆம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி 136 இடங்களில் வென்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றி உள்ளது.
காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றாலும் யார் முதலமைச்சர் என்ற குழப்பம் தொடர்ந்து வருகிறது. அதற்கு காரணமாக அம்மாநில காங்கிரஸ் கட்சியில் பெரும் தலைகளாக இருக்கும் மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் மாநில தலைவர் டிகே சிவக்குமாரும் இடையே நிலவி வரும் போட்டி.

பலரும் குடும்பங்களோடு கும்மி அடித்தால் மக்கள் என்ன முட்டாள்களா.!

Kandasamy Mariyappan :  திமுக என்ற கட்சி சனாதனத்தை எதிர்த்து போர் புரியும் வேளையில்...
கட்சியை விமர்சிப்பது எதிர்கட்சிகளுக்கு சாதகமாக அமையும் என்ற புரிதல் கூட இல்லாத அரை வேக்காடுகளின் பொதுவெளி பதிவுகள் வேதனையை தருகிறது என்று பல நண்பர்கள் கூறுகின்றனர்.!
சனாதனம் என்றால்...
எல்லா வளங்களும் ஒரு சிலருக்கு மட்டும் என்பதுதானே.!
ஆண்டான் அடிமை சிந்தனை என்பதுதானே.!
தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு, ஒதுங்கி போ என்பதுதானே.!
கோவிலுக்குள் வராதே, குளத்தில் இறங்காதே என்பதுதானே.!
இப்போது திமுகவில் என்ன வாழுது.!
அய்யா, சாமி, கும்பிடுறேன் சாமி என்று இல்லையே ஒழிய...
சனாதனத்தை அதிகம் கடைப்பிடிக்கும் கலாச்சார அமைச்சர்கள், இரண்டாம் கட்ட தலைவர்கள், கவுன்சிலர்களாகத்தானே இருக்கின்றனர்.!
கலைஞர், பேராசிரியர் மற்றும் அவர்களது சகாக்களின் செயல்பாடுகள் வேறு.!
இன்று தலைவர் திரு. முக. ஸ்டாலின் தவிர்த்து அவரது சகாக்களின் செயல்பாடுகள் வேறு.!

செந்தில்பாலாஜி, செஞ்சி மஸ்தானை நீக்குக” - முதல்வருக்கு அண்ணாமலை வலியுறுத்தல்

hindutamil.in  :  “அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, செஞ்சி மஸ்தானை நீக்குக” - முதல்வருக்கு அண்ணாமலை வலியுறுத்தல்
சென்னை: "டாஸ்மாக் மூலம் தமிழக சகோதரிகளின் தாலியைப் பறிப்பது போதாதென்று, கள்ளச் சாராய விற்பனைக்கும் துணை செல்லும் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி மற்றும் செஞ்சி மஸ்தான் ஆகிய இருவரையும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மரக்காணம் அருகே கள்ளச் சாராயத்திற்கு 19 உயிர்கள் பலியாகியிருக்கின்றன. முப்பதுக்கும் அதிகாமானோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில், கள்ளச்சாராயத்திற்குப் பலியானவர்களை, அவர்கள் குடும்பத்தினருக்குக் கூடத் தெரியாமல் காவல்துறையே அடக்கம் செய்த அவலமும் நிகழ்ந்துள்ளது.

கோவையில் பெண் அணிந்திருந்த தங்க செயினை பறிக்க முயன்றவர் கைது . சிசிடிவி காட்சி

 கோவையில் நடைப்பயிற்சி சென்ற பெண் அணிந்திருந்த தங்க செயினை பறிக்க முயன்றவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை பீளமேடு பகுதியை சேந்த கௌசல்யா அவர் வசிக்கும் பகுதிக்கு அருகே உள்ள ஜி.வி.ரெசிடென்ஸி பகுதியில் நேற்று நடைப்பயிற்சி சென்றிருந்தார்.
அப்பொது அங்கு தனியாக சென்று கொண்டிருந்த கௌசல்யா பின்னால் காரில் வந்த கொள்ளையர் செயினை பறிக்க முயன்றார்.
இதில் கௌசல்யா கீழே இழுத்து தள்ளப்பட்டார். இருப்பினும் தனது செயினை இறுக்கிப் பிடித்திருந்ததால் கொள்ளையர்களால் செயினை பறிக்க முடியாமல் தப்பித்துச் சென்றுவிட்டனர்.

செவ்வாய், 16 மே, 2023

சென்னை நகைக்கடை தொடங்கிய 2 ஆண்டில் ரூ.13 கோடி சுருட்டிய சகோதரர்கள்- பணத்தை இழந்த 925 பேர் போலீசில் புகார்

நகைக்கடை தொடங்கிய 2 ஆண்டில் ரூ.13 கோடி சுருட்டிய சகோதரர்கள்- பணத்தை இழந்த 925 பேர் போலீசில் புகார்

Maalaimalar : போரூர சென்னை முகப்பேர் பகுதியில் ஏ.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் நகைக்கடை மற்றும் ஏ.ஆர்.டி. டிரஸ்டட் பிராப்பிட் உள்ளிட்ட பெயர்களில் நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன.
இதனை சகோதரர்களான ஆல்வின் ஞானதுரை, ராபின் ஆரோன் ஆகியோர் இணைந்து நடத்தி வந்தனர்.
இவர்கள் கவர்ச்சி கரமான பரிசு பொருட்களுடன் கூடிய தீபாவளி சீட்டு, நகைச்சீட்டு, ரூ.1 லட்சம் செலுத்தினால் ரூ.1½ லட்சத்துக்கு நகை வாங்கி கொள்ளலாம், முதலீடு செய்யும் தொகைக்கு வாரம் தோறும் 3 சதவீதம் வட்டி, ரூ.10 ஆயிரம் செலுத்தினால் 12 மாதத்தில் ரூ.2.40 லட்சத்துக்கு நகை வாங்கிக் கொள்ளலாம், வட்டியில்லாத நகைக்கடன், குலுக்கல் சீட்டு உள்ளிட்ட கவர்ச்சியான அறிவிப்புகளை வெளியிட்டனர்.

Karnataka பதவிக்காக முதுகில் குத்த மாட்டேன்’: உறுதியளித்த டி.கே. சிவகுமார்

மின்னம்பலம் - christopher :  கட்சி மேலிடம் தன்னை விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் பதவிக்காக நான் முதுகில் குத்தவோ, மிரட்டவோ மாட்டேன் என்று டி.கே. சிவகுமார் இன்று (மே 16) உறுதியளித்துள்ளார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 135 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
எனினும் அடுத்த முதல்வர் யார் என்பதில் முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இதுதொடர்பாக முடிவெடுக்க இருவரையும் டெல்லிக்கு வருமாறு காங்கிரஸ் மேலிடம் அழைப்பு விடுத்தது.
அதன்படி சித்தராமையா நேற்று மாலை டெல்லி சென்று காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்களை சந்தித்தார்.  ஆனால் உடல்நிலை காரணமாக சிவக்குமார் டெல்லி செல்லவில்லை.

கள்ளச்சாராய உயிரிழப்பு எண்ணிக்கை 17 ஆக உயர்வு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அரசு உத்தரவு

 தினத்தந்தி  :  விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயத்துக்கு மக்கள் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்வலையும் ஏற்படுத்தியுள்ளது.
கள்ளச்சாராயம் விற்றவர்கள், கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய போலீசார் மீது கடும் நடவடிக்கைகளை அரசு தற்போது எடுத்து உள்ளது.
இதற்கிடையே கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை 17 ஆக நேற்று உயர்ந்தது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 பேரும், விழுப்புரம் மாவட்டத்தில் 12 பேரும் பலியாகி இருக்கிறார்கள்.
இது பற்றிய விவரம் வருமாறு:-
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கடற்கரையோர மீனவ கிராமமான எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ந் தேதி இரவு 50-க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் வாங்கி குடித்துள்ளனர்.

மம்தா காங்கிரசுக்கு ஆதரவு .. 200 தொகுதிகளில் காங்கிரசுக்கு ஆதரவு?

 Maalaimalar - Paramasivan  :   கொல்கத்தா சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. 36 ஆண்டுக்கு பின் அங்கு 137 இடங்களைக் கைப்பற்றி காங்கிரஸ் கட்சி பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்காள முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ள இடங்களில் அவர்களை மாநில கட்சிகள் ஆதரிப்பதில் தவறில்லை. அதேபோல் மாநில கட்சிகள் வலுவாக உள்ள இடங்களில் காங்கிரஸ் கட்சியும் ஆதரவு அளிக்க வேண்டும்.

சித்தராமையாவுக்கு முதல்வர் பதவியை விட்டு கொடுக்க தயாராகும் டிகே சிவக்குமார்? .. கர்நாடக...

 tamil.oneindia.com  - Mani Singh S  :  பெங்களூர்: கர்நாடகாவில் முதல்வர் பதவியை யாருக்கு என்பதை கட்சி மேலிடம் இன்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில், தனக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறிய சித்தராமையாவிற்கு வாழ்த்துக்கள் என்று முதல்வர் பதவிக்கு போட்டி போடும் டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டமன்றத்திற்கு கடந்த 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 13 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியானது. இதில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.

திங்கள், 15 மே, 2023

கள்ளச்சாராய விற்பனை.. தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் - முதலமைச்சர் அதிரடி!

 Kalaignar Seithigal  -  Prem Kumar  : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (15.5.2023) விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று, அங்கு சிகிச்சை பெற்றுவருபவர்களை சந்தித்து, ஆறுதல் கூறி, பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து, அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்திட அறிவுறுத்தினார்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் ஒன்பது நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இச்சம்பவம் நடைபெற்ற பகுதியைச் சேர்ந்த மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் வடிவழகன், உதவி ஆய்வாளர் தீபன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் திருமதி.மரியா சோபி மஞ்சுளா மற்றும் உதவி ஆய்வாளர் வகுருநாதன் ஆகியோர் ஏற்கனவே தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Siddaramiah CM? கர்நாடக புதிய முதலமைச்சராக திரு .சித்தராமையாவுக்கே அதிக வாய்ப்பு

 மாலைமலர் : கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது.
ஆனால் முதல்-மந்திரி பதவியை பெறுவதற்கு காங்கிரஸ் தலைவர்கள் சித்தராமையா, டி.கே.சிவக்குமாருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இவர்களில் யாரை முதல்-மந்திரியாக தேர்வு செய்வது என்பது குறித்து நேற்று பெங்களூரில் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தினார்கள். மாலை 6.30 மணிக்கு தொடங்கிய ஆலோசனை நள்ளிரவு 1.30 மணி வரை நீடித்தது.
5 நட்சத்திர ஓட்டலில் நடந்த அந்த ஆலோசனை கூட்டத்தில் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரும் கலந்து கொண்டனர்.
அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரிடமும் யாரை முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்கள் என்று எழுத்து பூர்வமாக எழுதி தரும்படி கேட்கப்பட்டது.

கர்நாடக முதல்வர் பதவிக்கு வரப்போவது யார்? காங்கிரஸ் தலைமை யாரை தேர்ந்தெடுக்கும்?

கர்நாடக தேர்தல்

BBC News - அபிநவ் கோயல்  ;  கர்நாடகாவில் வாக்காளர்கள் காங்கிரஸ் கட்சிக்கு தனிப்பெரும் பான்மையை அளித்துள்ளனர். தற்போது காங்கிரஸ் முழு பெரும் பான்மையுடன் மாநிலத்தில் ஆட்சி அமைக்க உள்ளது.
முடிவுகள் வந்துவிட்டபோதிலும் முதல்வர் நாற்காலியில் யார் அமர்வார்கள் என்ற ஒரு கேள்வி இப்போது எல்லோர் மனதிலும் இருந்து கொண்டே இருக்கிறது.
இந்தப் பந்தயத்தில் மூன்று பெயர்கள் அடிபடுகின்றன.
அவர்கள் முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே.

ஞாயிறு, 14 மே, 2023

இஸ்லாமிய சமூகம் பற்றிய நல்ல படங்களுக்கு ஆரம்ப புள்ளி ‘ஃபர்ஹானா’: நெல்சன்

மின்னம்பலம் - christopher : நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஃபர்ஹானா. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படம் மே 12 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது.
ஏற்கனவே கேரளா ஸ்டோரி திரைப்படம் பற்றிய விவாதங்கள், எதிர் போராட்டங்கள் நடைபெற்றுவந்த நிலையில் வெளியான ’ஃபர்ஹானா’ திரைப்படமும் இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பு சுழலில் சிக்கி கொண்டது.
அதன் விளைவாக ஃபர்ஹானா திரைப்படத்தை திரையிட அனுமதிக்கக்கூடாது என தமிழ்நாடு அரசுக்கு இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை விடுத்தனர். ஃபர்ஹானா மத உணர்வுகளுக்கு எதிரானது அல்ல!

இந்நிலையில், அப்படம் குறித்து தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஆர்.பிரபு வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், “எங்கள் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம், கைதி, அருவி, தீரன் அதிகாரம் ஒன்று, ஜோக்கர் ஆகிய வெற்றிப்படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளது.

திருமாவளவன் : பா.ஜனதா கூட்டணியை அ.தி.மு.க. மறுபரிசீலனை செய்ய வேண்டும்-

 மாலைமலர் :  விடுதலை சிறுத்தைகள்  பிரசாரம் செய்யப்பட்ட 11 தொகுதிகளில் எட்டு தொகுதிகளை காங்கிரஸ் வென்றிருக்கிறது என்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
    கர்நாடகாவில் பா.ஜ.க. தோற்கடிக்கப்பட்டதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவிலும் பா.ஜ.க. முற்றிலும் துடைத்தெறியப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரான தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்று ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. பா.ஜ.க.வின் ஊழல் ஆட்சியையும், மதவெறி அரசியலையும் மரண அடி கொடுத்து வீழ்த்தியுள்ளனர்.

கர்நாடக படுதோல்வி அடைந்த 14 பா.ஜ.க அமைச்சர்கள் - பெயர் பட்டியல்!

கலைஞர் செய்திகள  - Lenin  : கர்நாடக தேர்தலில் 14 பா.ஜ.க அமைச்சர்கள் படுத் தோல்வியடைந்துள்ளனர்.
கர்நாடக சட்டப்பேரவையின் 224 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மே 10ம் தேதி நடைபெற்றது.
இதில் ஆளும் பா.ஜ.க, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்பட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியிலிருந்து எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 121 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மேலும்15 இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது.
அதேபோல் பா.ஜ.க கட்சி 48 இடத்திலு வெற்றி பெற்று 16 இடங்களில் முன்னிலை. மதச்சார்பற்ற ஜனதா தளம் 16 இடங்களில் வெற்றி பெற்று 4 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

மம்தா பானர்ஜி : 2024 பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வின் வீழ்ச்சி ஆரம்பம் -

மாலை மலர் :  கொல்கத்த கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 10-ம் தேதி நிறைவடைந்தது. அதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.
137 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது.
பா.ஜ.க. 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றியது. இதனால் தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடைந்துள்ளது.
இதனை தொடர்ந்து, கர்நாடக முதல் மந்திரி மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவரான பசவராஜ் பொம்மை, ராஜ் பவனில் கவர்னர் தாவர் சந்த் கெலாட்டை இன்று நேரில் சந்தித்து தனது பதவி விலகல் கடிதத்தினை வழங்கினார்.
இந்நிலையில், கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, தென்மாநில தேர்தல் முடிவுகள் 2024 பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வின் வீழ்ச்சி ஆரம்பமாகி உள்ளது. கர்நாடக மக்களுக்கும், அனைத்து வாக்காளர்களுக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன் என தெரிவித்தார்.