சனி, 29 ஏப்ரல், 2017

ஜெ., சொத்து ஆவணங்கள் கொள்ளை ? கோடநாடு எஸ்டேட்டில் புது, புது மர்மம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான, கோடநாடு பங்களாவில் இருந்து முக்கிய சொத்து ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல் பரவி வருகிறது. ஊட்டி: கோடநாட்டில் உள்ள ஜெ.,வுக்கு சொந்தமான பங்களாவில் இருந்து முக்கிய சொத்து ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக தற்போது ஒரு புதிய தவகல் பரவியுள்ளது. கடந்த 24 ம் தேதி இங்கு காவலாளி ஓம் பகதூர் என்பவர் மர்ம நபர்களால் கழுத்தை நெறித்து கொல்லப்பட்டார். இந்த கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம நபர்கள் திருடும் விதமாகவே இங்கு வந்துள்ளனர். இந்நேரத்தில் கொலை நடந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.  மத்திய-மாநில நிர்வாகம்?ரெண்டுமே கூட்டு களவாணிகள் .ஜெவின் முக்கால்வாசி சொத்துக்கள் சொத்துக்குவிப்பு சம்பந்தப்பட்டவை இவை தமிழக அரசுக்குதான் சொந்தம் என்பது தீர்ப்பு தீர்ப்பு வந்து பல மாதங்களாகியும் அரசு எடுத்துக்கொள்ளாதது சந்தேகத்தை தருகிறது

இங்கிட்டு அதிமுக அணிகள் ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் ! . அங்கிட்டு 185 தொகுதிகள்?

திமுக ,காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், சிபிஐ, சிபிஎம், தமுமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி தேர்தலுக்கு தயாராகின்றன. பன்னீர் செல்வம் பழனிசாமி அணிகள் இணைப்புக்கு அல்லது சிறைவாசத்துக்கு தயாராகின்றன ?

 “இன்று பிற்பகலில் இருந்து வீனஸ் காலனியில் உள்ள தனது வீட்டில் நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார் ஓ.பி.எஸ். இரு அணிகளின் இணைப்பு பேச்சுவார்த்தை குழு டீம் முனுசாமி, மதுசூதனன், மாஃபா பாண்டியராஜன், செம்மலை, மனோஜ் பாண்டியன் உட்பட சில முக்கிய நிர்வாகிகள் மட்டும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பேசிய செம்மலை, ‘நேற்று சேலத்தில் நான் நமது கட்சி நிர்வாகிகளுடன் பேசினேன். ஆனால் யாருக்கும் அந்த அணியுடன் இணைவதில் விருப்பம் இல்லை. எல்லோருமே சொல்வது, சசிகலா குடும்பத்துடன் இணைந்து அமைச்சர்கள் நாடகம் நடத்துகிறார்கள். நாம் இணைந்தபிறகு அந்தக் குடும்பம் உள்ளே வந்துவிடும் என்பதுதான். கட்சிக்காரங்க விருப்பத்தைக் கேட்காம நாம இப்படி ஒரு முடிவெடுத்ததே தப்புதான். அதனால அவசரம் எதுவும் இல்லாம திரும்பவும் நிதானமா யோசிக்கலாம். அவங்களும் நமக்கு முதல்வர் பதவியையும் விட்டுத் தரமாட்டேங்குறாங்க. பொதுச்செயலாளரையும் விட்டுத் தரமாட்டாங்களாம். அப்புறம் எதுக்கு நாம அங்கே போகணும். நாம தைரியமா எதிர்த்து நின்றதால்தான் இப்போ நம்மை தேடி வர்றாங்க. நாம அவங்களுக்கு பணிஞ்சு போக வேண்டியது இல்லை’ என்று சொல்லியிருக்கிறார். மாஃபா பாண்டியராஜணும் இதே கருத்தைத்தான் சொல்லியிருக்கிறார்.

போலீசில் சரணடைய வந்த ஜெயாவின் வாகன ஓட்டுனர் வீதியில் கொலை?

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்குத் தொடர்பாக தேடப்பட்டு வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் நேற்றிரவு விபத்தில் மர்மமாக இறந்ததையடுத்து, அந்த விபத்து தற்செயலாக நடந்ததா அல்லது திட்டமிட்டு கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
கொல்லப்பட்டாரா ஜெயலலிதா டிரைவர் ?கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில், ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் என்பவரை போலீசார் தேடி வந்தனர். கனகராஜ் கார் ஓட்டுவதில் மிகுந்த திறமையானவர் என்பதால் ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட் -க்கு வரும்போதெல்லாம், அவரது காரை ஓட்டுவதுக்கு கனகராஜ் அழைக்கப்படுவது வழக்கம். கனகராஜை ஜெயலலிதாவின் கார் டிரைவர் வேலைக்குச் சிபாரிசு செய்தது ராவணன். சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்து அதன் பின்னர், அங்கிருந்து காரில் ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட் செல்லும்போது கனகராஜ்தான் மிகுந்த கவனமாக காரை ஓட்டிச் சென்றுள்ளார். ஜெயலலிதா மட்டுமன்றி சசிகலாவும் தனியாக கொடநாடு எஸ்டேட்-க்கு வரும்போது அவருக்கும் கனகராஜ்தான் கார் ஓட்டிச் சென்றுள்ளார். இப்படிப்பட்ட கனகராஜ், சேலம் அருகே ஆத்தூரில் நேற்று இரவு (28.4.2017) விபத்தில் சிக்கி மரணமடைந்தார்.

பிளாஸ்டிக் முட்டை: உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிளாஸ்டிக் முட்டை: உயர்நீதிமன்றம் உத்தரவு!
மின்னம்பலம் : உலகளவில், அனைத்து மக்களும் ஊட்டச்சத்துகளுக்காகவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் முட்டையை அதிகளவு உண்ணத் தொடங்கியுள்ளனர். ஆனால் சமீபகாலமாக உணவு கலப்படம் பெரும்பாலான நாடுகளில் அதிகரித்து வருகிறது. சில மாதங்களுக்குமுன் பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை மற்றும் முட்டைகோஸ் உள்ளிட்டவை தயாரிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தின.
இந்நிலையில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் முட்டை மற்றும் காய்கறிகள் இந்தியாவில் அதிகளவு விற்பனை செய்யப்படுவதாக, டெல்லி உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் சந்த் ஜெயின் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

ஆம் ஆத்மி தவறு செய்துவிட்டது : கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி தவறு செய்துவிட்டது : கெஜ்ரிவால்
மின்னம்பலம் :  டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சில தவறுகளை செய்ததால் எளிதில் வெற்றிபெற வேண்டியதை விட்டுவிட்டு தோல்வியைத் தழுவியுள்ளது என, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் சமீபத்தில் நடந்த மாநகராட்சி தேர்தலில் ஆளும்கட்சியான ஆம் ஆத்மி படுதோல்வியை சந்தித்தது. இந்தத் தேர்தலில், டெல்லியில் உள்ள 3 மாநகராட்சியையும் பாஜக தொடர்ந்து 3வது முறையாகக் கைப்பற்றி அமோக வெற்றிபெற்றது. மொத்தம் உள்ள 270 வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சியால் வெறும் 48 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.

எடப்பாடி பழனிசாமி அரசு 2 மாதங்களில் ரூ380 கோடி சுருட்டியது ? டெல்லி தொலைபேசியில் வந்த பேதி!

தமிழக அரசை தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதில் டெல்லி மத்திய அரசு தொடர்ந்து தீவிரமாகவே இருந்து வருகிறது.
சென்னை: "நீங்கள் 24 மணிநேரமும் கண்காணிக்கப்படுகிறீர்கள்... 2 மாதங்களில் ரூ380 கோடி பணப் பரிமாற்றம் செய்துள்ளதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன என்று டெல்லியில் இருந்து வந்த போன்கால் தகவலால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிர்ந்து போனார் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.
அதிமுக இணைப்பு பேச்சுவார்த்தை, தினகரனை ஒதுக்கி வைப்பது நடவடிக்கைகளால் பாஜக இனி தலையிடாது என நினைத்துக் கொண்டிருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதனால் டெல்லியில் முகாமிட்டிருந்த டிடிவி தினகரனுடன் தயக்கமே இல்லாமல் போனில் பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
தினகரனுடனான செல்போன் பேச்சு முடிந்த நிலையில் டெல்லியில் இருந்து மீண்டும் ஒரு போன்கால் வந்துள்ளது. அதில் பேசிய மூத்த அதிகாரி, இனி உங்களுக்கு ஒரு பிரச்சனையுமே இல்லைன்னு நினைச்சு ஹாயாக இருக்காதீங்க...

ஜெயாவின் வாகன ஓட்டுனர் கனகராஜ் மரணம் .... வீதி விபத்தாம் ?

எடப்பாடியை சேர்ந்த கனகராஜ் ஜெயலலிதாவிடம் 2 வருடங்களாக கார் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது ஜெயலலிதாவுடன் அடிக்கடி கொடநாடுக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது..
கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் மர்ம நபர்களால் கொடூரமாக கொலை தொடர்ந்து கனகராஜ் சரண் அடைய முடிவு செய்து நேற்று இரவு மோட்டார் சைக்கிளை சேலம் மாவட்டம் ஆத்தூர் போலீசாரிடம் சரண் அடைய சென்றார்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சொகுசுகார் அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கனகராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். பலியான கனகராஜூக்கு கலைவாணி என்ற மனைவியும், 1 வயது பெண் குழந்தையும் உள்ளனர்.அவரது உடலை கைப்பற்றிய போலீசார் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சைதாபேட்டை . தாய் தங்கையை வெட்டி கொன்ற எஞ்சினியர் .. மன அழுத்தம் ,, தந்தை இறந்த சோகம் ..


balamurugan_17121  'தாயையும், தங்கையையும் ஏன் கொன்றேன்?'   - கைதான இன்ஜினீயர் சொல்லும் பரிதாப காரணம் balamurugan 17121சைதாப்பேட்டையில் தாயும், மகளும் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைதான இன்ஜினீயர், தாயையும் தங்கையையும் ஏன் கொலை செய்தேன் என்று பரபரப்பான வாக்குமூலத்தை போலீஸாரிடம் கொடுத்துள்ளார். அந்தக் காரணத்தை கேட்ட போலீஸாரே அதிர்ச்சி அடைந்தனர். சென்னை, சைதாப்பேட்டை  கே.பி.கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கீழ்தளத்தில் குடியிருந்தார் ஹேமலதா. இவர், சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்தார். இவரது கணவர் சண்முகம் ஏற்கெனவே இறந்து விட்டார். ஹேமலதாவுக்கு பாலமுருகன் என்ற மகனும், ஜெயலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.
இதில் பாலமுருகன் இன்ஜினீயரிங் படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். ஜெயலட்சுமி, இன்ஜினீயரிங் படித்துக்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் ஹேமலதா வீடு நேற்று காலை முதல் திறக்கப்படவில்லை. இதனால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சைதாப்பேட்டை போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர்.

எடப்பாடி பழனிசாமியை கைது செய்ய பன்னீர்செல்வம் அணி தீர்மானம்!

சேலம்: 'முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச் சர்களை பதவி நீக்கம் செய்து, கைது செய்ய வேண்டும்' என, சேலத்தில், பன்னீர் அணி நடத்திய ஆலோசனை கூட்டத்தில், அதிரடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.r />சேலம், ஒருங்கிணைந்த மாவட்ட, அ.தி.மு.க., பன்னீர் அணியின் ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. அமைப்பு செயலர் செம்மலை தலைமை வகித்தார்.தீர்மானங்கள் விபரம்: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், 200 கோடி ரூபாய் பணம் பட்டுவாடா செய்த முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்கி, கைது செய்ய வேண்டும்.சசிகலா குடும்பத்தால் நியமிக்கப்பட்ட முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், கொள்ளையடித்த பணத்தை காப்பாற்றிக் கொள்ள, கட்சி இணைப்பு என்ற பெயரில் நாடகம் நடத்துகின்றனர். எனவே, சசிகலா பினாமி அரசின் கொள்ளையர்கள் கூடாரத்துடன் இணைய கூடாது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.    ஒருவேளை இந்த ரெண்டு குரூப்பும் துட்டை வாங்கிட்டு இப்படி பிலிம் காட்டுறாய்ங்களோ.....
 சேரணும்னு பேச்சு ஓடிக்கிட்டே இருக்கணும், ஆனா சேரக்கூடாது.....  பிஜேபி எப்போ சொல்லுதே அப்போ தான் பேச்சு வார்த்தை நடக்கும்...

உச்சநீதிமன்றம் : அமைச்சர் காமராஜ் மீது பண மோசடி வழக்கு ..தமிழக அரசுக்கு எச்சரிக்கை

சென்னை: திருவாருர் மாவட்டத்தை சேர்ந்தவர் எஸ்.வி.எஸ் குமார். இவரிடம் கடந்த 2011ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது நன்னிலம் தொகுதியில் வேட்பாளாரகாக போட்டியிட்ட தற்போதைய உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தேர்தல் செலவுக்காக ரூ.30 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.
அதற்கு கைமாறாக காமராஜ், குமார் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தருவதாக உறுதியளித்துள்ளார். இதை நம்பி கமராஜிடமும், அவரது உறவினர் ராமகிருஷ்ணனிடமும் குமார் பணத்தை கொடுத்துள்ளார். இதன்பின்னர் தேர்தலில் வெற்றி பெற்ற காமராஜ் நீண்ட நாட்களாகியும் குமாரின் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. அதனால் குமார் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். பணத்தை திருப்பி கேட்ட காரணத்திற்காக அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது உறவினர் ராமகிருஷ்ணன் ஆகியோர் குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் ஒரு விவ்சாயிகூட வறட்சியால் தற்கொலை செய்துகொள்ளவில்லை! உச்ச நீதிமன்றத்தில் பொய்யுரைத்த தமிழக அரசு !

தமிழகத்தில் ஒரு விவசாயி் கூட வறட்சியால் தற்கொலை செய்துக் கொள்ளவில்லை என்ற கருணையற்ற பதிலை தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு இந்தியாவில் 12,602 விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் தற்கொலை செய்துக் கொண்டனர். இதில் 606 தற்கொலைகள் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ளதாக தேசிய குற்றப்பதிவு ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. விவசாயிகள் தற்கொலையில் தமிழகம் எட்டாவது இடத்தில் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகமும் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட வறட்சி காரணமாக கடந்த நான்கு மாதங்களில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டனர். இந்நிலையில், தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக தமிழ்நாடு பொதுநல வழக்கு மையம் சார்பில் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். ஆனால் அவர் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த ஏப்ரல்-13 ஆம் தேதி நீதிபதி தீபக் மிஷ்ரா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அதிமுக தலித் எம் எல் ஏக்களின் உரிமைக்குரல் பின்னணியில் சபாநாயகர் தனபால்?

அதிமுகவுக்குள் அன்றாடம் நடக்கும் நல்லது கெட்டது எல்லாவற்றையும் மறுநாள் காலையில் சசிகலாவுக்கு அப்டேட் செய்வது விவேக். ஒவ்வொரு நாளும் என்ன நடக்கிறது என்பதைத் தவறாமல் கேட்டு அடிக்கடி அழ ஆரம்பித்து விடுகிறாராம் சசிகலா. அவருக்கு இப்போதைய ஆறுதல் அவரது சகோதரர் திவாகரன்தான். அவரிடம் சொல்லச் சொல்லி தினமும் பல விஷயங்களை விவேக் மூலமாகச் சொல்லி அனுப்புகிறாராம் சசிகலா. அதேபோல தினகரன் சொல்லும் தகவல்களையும் சசிகலாவுக்கு சொல்லும் போஸ்ட் மேனாக விவேக் செயல்படுகிறார். சசிகலா சிறைக்குள் இருந்தாலும் அவருக்கு மூன்று வேலை உணவுகளும் வெளியில் இருந்துதான் போகிறது. கார்டனில் ரெகுலராக சமையல் செய்து வந்தவர் தற்போது பெங்களூரு அருகே உள்ள ஒரு வீட்டுக்கு மாற்றப்பட்டு இருக்கிறார்.
அந்த வீட்டில் இருந்துதான் சசிகலாவுக்கு சாப்பாடுத் தயாராகிறது. தினமும் மூன்று வேளையும் இங்கிருந்துதான் சசிகலாவுக்கும், இளவரசிக்கும் சாப்பாடு போகிறது. ஒருவேளைக்கு 10 பேர் சாப்பிடும் அளவுக்கான சாப்பாடு ஜெயிலுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சசிகலா, இளவரசி சாப்பிட்டது போகத் தினமும், அவர்கள் சாப்பிடும் சாப்பாட்டைச் சாப்பிடும் இன்னொரு நபர் பாமீலா.

சரத்குமார் ச. ம. கட்சியைக் கலைத்துவிட்டு அதிமுகவில் ஐக்கியம்? ராஜ்யசபா எம்பி பதவி?

புதிய கோஷ்டி Prabha" சென்னை: ஓபிஎஸ், எடப்பாடி கோஷ்டிகள் இணையும் நிலையில் சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு கூண்டோடு அதிமுகவில் இணைய முடிவு செய்துள்ளாராம் நடிகர் சரத்குமார்.
அதிமுக தற்போது ஐந்து கோஷ்டிகளாக சிதறிப் போயுள்ளது. ஓபிஎஸ், எடப்பாடி, திவாகரன் கோஷ்டி இணைவதற்கான பேச்சுகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கு எதிராக தினகரன் கோஷ்டி எம்.எல்.ஏக்கள் குறுக்குசால் ஓட்டி வருகின்றனர். இதனிடையே ஐந்தாவது கோஷ்டியாக தலித் எம்.எல்.ஏக்கள் ஒருங்கிணைந்து தங்களுக்கு கூடுதல் அமைச்சர் பதவி வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றன.

BBC.COM : கீழடியில் தமிழ் தெரியாத அதிகாரி... தமிழர் வரலாற்றுக்கு நாமம் போட முயற்சி ?

<; "மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒருவர் ஒரே இடத்தில் பணிபுரியக்கூடாது என்ற விதிமுறை தற்போதுதான் அகழ்வாராய்ச்சித் துறையில் கொண்டுவரப்பட்டிருக்கிறது. முதல் ஆளாக அமர்நாத்தை மாற்றியிருக்கிறார்கள். இஸ்ரோ போன்ற இடங்களில் பணியாற்றும் விஞ்ஞானிகளை இப்படி மாற்ற முடியுமா?
மதுரை நகருக்கு அருகில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அகழ்வாராய்ச்சித் தலத்தைப் பார்வையிட வந்த மத்திய அமைச்சர்கள் மகேஷ் சர்மா, நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்களை பா.ஜ.கவினர் கைகளில் கட்டைகளுடன் துரத்தியதாக தமிழ் அமைப்பினர் குற்றம்சாட்டுகின்றனர். மதுரை நகரத்திற்கு தென்கிழக்கில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கீழடி கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலிருந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களுடன் கூடிய நகரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தப் பகுதியில் மேலும் ஆய்வுகளை மேற்கொள்ள கீழடியின் அகழ்வாராய்ச்சி கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா விண்ணப்பித்திருந்த நிலையில், அவர் அங்கிருந்து ஒரிசாவுக்கு மாற்றப்பட்டார்.

தமிழிசை சவுந்தரராஜன் , நிர்மலா சீதாராமன் தலைமையில் ரவுடிகள் கல்வீசி வெறியாட்டம் ... தமிழ் வரலாறு மீது போர் தொடுத்த பாஜக ..

கீழடி அகழ்வாராய்வு பணியை பார்வையிட வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு எதிராக கருப்பு கொடி காட்டி மக்கள் விடுதலை கட்சியின் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான முருகவேல்ராஜன், தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கண்டன கோஷம் செய்தனர். ஆனால் அவர்கள் கோஷம் போட்டதைப் பார்த்ததும், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தலைமையில் வந்த 100க்கும் மேற்பட்டவர்கள், ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். போலீசார், முருகவேல்ராஜன் தலைமையில் வந்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதாக கூறி கைது செய்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், தாக்கப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக மு.ருகவேல்ராஜன் நிருபர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக தமிழ் இயக்கங்கள் சொல்லும் மத்திய அரசு மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானது என்றும் “அந்த ஒரு ஆளுதான் நியாயமாக வேலைப் பார்ப்பார். மற்றவர்கள் பார்க்க மாட்டார்கள் என்றால் என்ன அர்த்தம்” என்று கூறினார்.

வெள்ளி, 28 ஏப்ரல், 2017

சசிகலாவை பயன்படுத்திய ஜெயலலிதா ... ஆசைகாட்டி, பினாமி ஆக்கி ,, கணவனை பிரித்து .. இறுதியில் சிறையில் ..?

சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்த பிறகு... ஜெயலலிதா சமாதிக்குச் சென்று மூன்று முறை ஓங்கியடித்து சபதம் செய்தார் சசிகலா. அப்போது, ‘இந்த பெண்மணி இவ்வளவு உறுதியாக இருக்கிறாரே?' என்று எதிர்முகாமில்கூட முணுமுணுப்புகள் எழுந்தன.
ஆனால், இப்போது அதிமுக-வில் நடக்கும் நிகழ்வுகளை அறிந்து சிறையில் உடைந்து விம்மி வெடித்து அழுது கொண்டிருக்கிறார் சசிகலா.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவை, அனைவரும் நிழல் முதல்வராகத்தான் பார்த்தார்கள். கட்சியினரும், அதிகாரிகளும், மந்திரிகள், எம்.எல்.ஏ-க்கள் என அனைவரும் ஜெயலலிதாவுக்குப் பயந்தார்களோ இல்லையோ, சசிகலாவுக்குப் பயந்தார்கள். கும்பிடு போட்டார்கள். விசுவாசத்தைக் காட்டினார்கள். ஆனால், அனைத்தும் போலியானது என்று இப்போதுதான் முழுமையாக உணர்ந்து கொண்டிருக்கிறார் சசிகலா.

கோமாதாக்களின் குலத்தையே அழிக்கும் ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல் !

கடந்த 2017 மார்ச் மாதம் குஜராத் அரசு தனது மாநிலத்தின் ’விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தில்’ ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. பசுவைக் கொல்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க இச்சட்டத் திருத்தம் வழிவகை செய்கிறது. அதே போல, பசுப்பாதுகாப்பு குறித்து சமீபத்தில் பேசியுள்ள சட்டீஸ்கர் முதல்வர் இராமன் சிங், பசுவைக் கொல்பவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். அவருக்கு ஒரு படி மேலே போய் பாஜக எம்.எல்.ஏ. ஒருவர், பசுவுக்கு அவமரியாதை செய்பவனின் கைகளை உடைப்பேன் என கூவியுள்ளார்.
பசு வதையைத் தடுப்பதாகக் கூறிக் கொண்டு சட்டரீதியாகவும், தாத்ரி, அல்வார் சம்பவங்கள் போன்று சட்டவிரோதமாகவும் பாஜக மற்றும் சங்க பரிவாரக் கும்பல்கள் எடுத்து வரும் நடவடிக்கைகள், மாட்டுக்கறி மற்றும் தோலுறிக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் இசுலாமியர்கள் மற்றும் தலித்துகளை மட்டும் பாதிப்பதாகப் பலர் கருதுகின்றனர். ஆனால் இந்நடவடிக்கைகள் பசுக்களை வளர்க்கும் பெரும்பாண்மை விவசாயிகளுக்குத் தான் மிகப் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

கீழடியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ! தமிழர் வரலாற்றை குழிதோண்டி புதைக்க நிர்மலா சீதாராமன் RSS...

பாதியில் நிறுத்தம் சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஆய்வு மேற்கொள்ள வந்த மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு கடும் எதிர்ப்பை பொதுமக்களும் மக்கள்தேசம் அமைப்பினர் தெரிவித்தனர். இதனால் அங்கு பதற்றம
Amudhavalli : மதுரை: கீழடியில் நடைபெற்ற அகழாய்வை பாதியில் நிறுத்தியதற்கும், அதன் தலைவராக பணியாற்றிய அமர்நாத்தை அசாம் மாநிலத்திற்கு இடமாற்றம் செய்ததற்கும் கண்டனம் தெரிவித்து மக்கள் தேசம் அமைப்பினர் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3ம் கட்ட ஆய்வு மதுரை அருகே கீழடியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட போது அங்கு சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் வரலாற்று பொக்கிஷம் கண்டுபிடிக்கப்பட்டது.
சுமார் 5300 பண்டைய பொருட்களும் அங்கே கண்டறியப்பட்டன. மேலும், அகழாய்வு குழியின் இடை அடுக்கில் எடுக்கப்பட்ட பொருட்களில் நடத்தப்பட்ட கரிம பகுப்பாய்வு சோதனையில் கீழடி நகர நாகரீகம் கி.மு. 2ம் நூற்றாண்டுக்கு முந்தையது என்பது உறுதிபடுத்தப்பட்டது.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் .. 7 முக்கிய தீர்மானங்கள் ... தற்கொலை செய்த 400 விவசாயிகளின்

 கருணாநிதிக்கு பாராட்டு விழா: திமுக தீர்மானம்!
திமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை(இன்று) காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.மேலும்,பொதுச் செயலாளர் அன்பழகன், துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முதன்மை செயலாளர் துரைமுருகன் மற்றும் தலைமை நிலையச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தக் கூட்டத்தில் இந்தக்கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தீர்மானம் : 1
சட்டப்பேரவைச் சரித்திரத்தில் வைரவிழா காணும்
தலைவர் கலைஞர்!
தமிழ்நாடு, தமிழ், தமிழர் நலன் என மொழி - இனப் பெருமை காக்கும் திராவிடப் பேரியக்கமாம் கழகத்தின் சீரிய வரலாற்றில் ஒவ்வொரு நாளுமே சிறப்புமிக்கதுதான்.

வரதட்சணை ..3 தலாக் கூறிய புரட்சிப் பெண்! ஜார்கண்ட் திருமண தினத்திலேயே ...

ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியைச் சேர்ந்த இஸ்லாமியரான அன்சாரி என்பவருக்கும், ராஞ்சி அருகில் உள்ள சந்வே கிராமத்தைச்சேர்ந்த, ருபானா பர்வீனுக்கும் திருமணம் நடைபெற்றது.
இதில் திருமணம் முடிந்த கையோடு ருபானா பர்வீனின் தந்தை, தன் மருமகனுக்கு ஒரு பைக்கை திருமணப் பரிசாகக் கொடுத்தார். ஆனால், மருமகன் அன்சாரியோ...தனக்குப் பிடித்த 'பல்சர் பைக்' தான் வேண்டும் என்று, திருமணத்திற்கு வந்தவர்களின் முன்னிலையில் வாக்குவாதம் செய்தார்.
இதையறிந்த மணப்பெண் ருபானா பர்வீன், தன் வீட்டினரின் உணர்வுகளை மதிக்காத அன்சாரியிடம் விரக்தியில் மூன்று முறை தலாக் கூறி திருமணபந்தத்தை முறித்தார். இதையடுத்து பெரியோர்கள் முன்னிலையில் முறைப்படி தலாக் வழங்கப்பட்டது. பின்னர், மணப்பெண்ணின் வீட்டார், திருமணத்துக்காக செலவளித்த 7.25 லட்ச ரூபாயை திருப்பிக் கேட்டனர். ஆனால், அதற்கு மணமகன் வீட்டார் திட்டமிட்டு தர மறுத்தனர்.
இதனால் மணப்பெண்ணின் வீட்டைச் சேர்ந்தவர்கள், அன்சாரி மற்றும் அவரது உடன்பிறந்தவர்களின் தலையை உடைத்து, மொட்டையடித்தனர். பின்னர் அவர்களுக்குச் செருப்பு மாலை அணிவித்து, 'வரதட்சணையில் பேராசைக்காரன்' என்ற வாசகத்தை அட்டையில் எழுதி, அவர்களது கழுத்தில் தொங்கப்போட்டனர்.

வினுச்சக்ரவர்த்தி: நம் மூதாதையரை நினைபடுத்திய கலைஞர்!

மகுடேசுவரன்:t; எண்பதுகளின் திரைப்படங்களைப் பார்த்து வளர்ந்த தலைமுறையினராகிய நாங்கள் நம்பியாரைப் பார்த்தோ மனோகரைப் பார்த்தோ பயப்பட்டவர்கள் அல்லர். மண்வாசனையின் பஞ்சாயத்து போர்டு பிரசிடெண்டைப் பார்த்துத்தான் பயப்பட்டோம். “யோவ் கோணைவாத்தி… இது ஒன்னும் கவர்மெண்ட்டுப் பள்ளிக்கூடம் இல்லய்யா… கர்ரஸ்பாண்ட்டுப் பள்ளிக்கூடம்… கர்ரஸ்பாண்ட்டு… பார்த்து நடந்துக்குங்க…” என்று பேசுகையில்தான் பயந்தோம்.
அந்த நடிகர் பெயர் வினுச்சக்ரவர்த்தி என்பதுகூட வளர வளரத் தெரிந்துகொண்டதுதான்.”மண்வாசனை” திரைப்படத்திற்கு என் பட்டியலில் எப்போதும் இடமுண்டு. கரிசல்பட்டியும் காக்கிநாடன்பட்டியும் அடித்துக்கொள்ளும் அந்தப் படத்தில் காக்கிநாடன்பட்டி பஞ்சாயத்துத் தலைவர்தான் வினுச்சக்ரவர்த்தி. “என் தம்பி மட்டும் மருந்து வெக்கலைன்னா அந்த மாட்டை உங்க ஊரு ஆளு தொட்டிருக்க முடியுமா ?” என்று சாராயக்கடைக்காரி கேட்க, “இதா பாரு… மாட்டைப் புடிச்சது நாங்கதான்னு ஊர் முழுக்க மார்தட்டிப்புட்டோம். இனிமே முன்வெச்ச கால பின்ன வெச்சோம்… எங்க ஊர் மானமே போயிடும்.

ஒரு இளைஞனின் வாழ்வை குலைக்கும் பரபரப்பு வியாதி பத்திரிக்கை .. 99 wiki என்ற காவி இணையத்தின் விஷம் பொய் பித்தலாட்டம் !

கருப்பு கருணா  :  இன்னமும் இந்த மக்கள் பத்திரிகைகளில் வரும் செய்திகளை உண்மையென்றே நம்புகிறார்கள்.அத்தகைய இடத்தில் இருக்கும் பத்திரிகைகள் தங்களின் பரபரப்பு அரிப்புக்காகவும் விற்பனைக்காகவும் மேஜையில் உட்கார்ந்து கொண்டு எழுதும் செய்தியால் எவ்வள்வு பேர் பாதிக்கப்படுவார்கள் என அவர்கள் உணர்கிறார்களா..?
இந்த கொடுமையான செய்தியை பாருங்கள்.
திருவண்ணாமலையை சேர்ந்த இளைஞர் ஷேக் ஹூசைன்.படித்த..முற்போக்கு சிந்தனை கொண்ட இளைஞர். நகரில் நடக்கும் நியாயமான போராட்டங்களில் முன்வரிசையில் நின்று குரல் கொடுக்கும் இளைஞர்.பெரியாரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர்.மார்க்சிய,அம்பேத்காரிய இயக்கங்களுடன் நல்லுறவுடன் இருப்பவர்.
இவரைப்பற்றி ” விவசாயிகள் போர்வையில் தீவிரவாதி ? ” என்று தலைப்பிட்டு தமிழக அரசியல் என்ற வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

செய்தியாளர்களை அறையில் வைத்து பூட்டி விட்டு எடப்பாடியை வெளியே அழைத்துச்சென்ற அதிகாரிகள்!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆலோசனைக் கூடத்தில், இன்று காலை 10-00, மணிக்கு, முல்வர் எடப்பாடி பழனிசாமி தலமையில் மாவட்ட அலுவலர்கள் கூட்டம் நடந்தது. கூட்ட முடிவில், செய்தியாளர்களுடன் முதல்வர் சந்திப்புக்கு திட்டமிட்ட மக்கள் தொடர்பு அலுவலர் சாமிநாதன், ஆட்சியர் அலுவலகத்தின் கீழ் தளத்தில் முதல்வர் உட்கார நாற்காலி போட்டு வைத்தனர். மதியம் ஒரு மணிக்கு கூட்ட அரங்கிலே செய்தியாளர்கள் சந்திப்பு நடக்கவுள்ளதாக கூறி செய்தியாளர்கள் அனைவரையும் மேலே உள்ள கூட்ட அறைக்கு அழைத்துச் சென்றனர். பிறகு, கூட்ட அரங்கில் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த அறிக்கையை முதல்வர் படித்து முடித்தார். முதல்வர் பேசி முடித்து வெளியே செல்லும்போது, அவருடன் பின்னாலேயே சென்று, அரசின் திட்டம் தவிர வேறு கேள்விகள் கேட்கக்கூடாது என்ற நோக்கத்தில், குறிப்பாக, கொடநாடு பங்களா காவலாளி மரணம் மற்றும் இரு அணிகள் இணைப்பு, தினகரன் கைது குறித்த கேள்விகளை நேருக்கு நேர் கேட்டு மைக்கை நீட்டிவிடக்கூடாது என்பதற்காக, செய்தியாளர்கள் இருந்த அறையை வெளிப்பக்கமாக பூட்டி விட்டு, முதல்வரை வெளியே அழைத்து சென்றனர். காலை 10. 00 மணியில் இருந்து முதல்வரிடம் மனு கொடுக்க காத்திருந்த 50-க்கும் அதிகமான மக்களிடமும் முதல்வர் மனு வாங்காமலே காரில் ஏறிச்சென்றார். - சிவசுப்பிரமணியன் நக்கீரன்

எடப்பாடி பழனிச்சாமியை சேலத்தில் முடக்குவது யார் ? ஏன்? பின்னணியில் எந்த சக்தீ?

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது சொந்த ஊரான சேலத்திற்கு நேற்று வருகை தந்தார். இன்று அரசுத்துறை அதிகாரிகளோடு வறட்சி சம்மந்தமான ஒரு கூட்டத்தை மட்டும் நடத்தினார். நாளை அவர் படித்த பள்ளியான ஈரோடு மாவட்டம், சித்தோட்டில் உள்ள வாசகி கல்லூரியின் பொன்விழா நிகழ்ச்சியிலும் கலந்துகொள்கிறார். இந்த இரண்டு நிகழ்ச்சிகள்தான் வேறு எதுவும் அதிகாரப்பூர்வமாக நிகழ்ச்சிகள் உள்ளதாக தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் ஒரு வாரம் சேலத்திலேயே தங்கியிருக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அநேகமாக ஞாயிறு அல்லது திங்கள் கூட அவர் சென்னை கிளம்பக் கூடும் என தெரிகிறது.
அதிமுகவில் ஏற்பட்டுள்ள இரண்டு அணி இணைப்பு விவகாரம், அதில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள், அடுத்து தினகரன் கைது, போலீஸ் காவல் விசாரணை என்ற அரசியல் பரபரப்புகள் தமிழகத்தில் தொற்றி நிற்கிறது. ஆனால், சென்னையில் இருந்து ஆட்சிப் பணியை செய்ய வேண்டிய முதல் அமைச்சர் பழனிச்சாமி திடீரென நேற்று சேலத்திற்கு வந்துவிட்டார். எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் தங்கியிருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்புவதாக அதிமுக எம்எல்ஏக்களே கூறுகிறார்கள்.

அப்போலோவில் பிரியாணி ,சினிமா .. மட்டற்ற மகிழ்ச்சியில் சசி குடும்பம் .. அம்பலப்படுத்திய போலீஸ்காரர் !

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது சசிகலா குடும்பம் அரங்கேற்றிய பகீர் கூத்துகளை பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அம்பலப்படுத்தியுளனர். By: Devarajan சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போதும் அவரது மறைவின் போதும் சசிகலா குடும்பத்தினர் அரங்கேற்றிய பகீர் கூத்துகளை அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பகிரங்கப்படுத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சை பெற்றபோது அங்கு சசிகலா குடும்பத்தினர் அரங்கேற்றிய ஆட்டங்கள் தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் நமது ஒன் இந்தியா தமிழுக்கு தெரிவித்த தகவல்கள் அத்தனையுமே பகீர் ரகம்தான்... இப்படியெல்லாம் கூடவா ஆடுவார்கள் என அதிர வைக்கிறது அந்த தகவல்கள். அந்த தகவல்களின் தொகுப்பு: செப்டம்பர் 22-ந் தேதி இரவில் ஜெயலலிதா அப்பல்லோவுக்கு கொண்டுவரப்பட்டார். ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட வார்டின் வாசலில் ஒரே ஒரு துப்பாக்கி ஏந்திய போலீஸ் மட்டுமே பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டார். ஜெயலலிதாவின் அறைக்கு உள்ளே சசிகலா மற்றும் டாக்டர் சிவகுமார் உள்ளிட்ட சிலர் மட்டுமே சென்று வந்தனர்.

ஜெயாவின் கொடநாடு பங்களா கொலை சந்தேகநபர் கேரளாவில் கைது .

ஜெயலலிதாவின் கொடநாடு பங்களா காவலாளியை கொன்ற கொலையாளியின் படத்தை கம்யூட்டர் மூலம் வரைந்து போலீசார் தேடி வந்த நிலையில், தனிப்படைப் போலீசார் கேரளாவில் கொலையாளி ஒருவரை கைது செய்துள்ளனர். By: Amudhavalli
கோத்தகிரி: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் என்பவர் அடித்து படுகொலை செய்யப்பட்டார். இந்த பெரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் போது மற்றொரு காவலாளியான கிஷன்பகதூர் என்பவர் படுகாயங்களுடன் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தக் கொலை குறித்து விசாரிக்க டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கொலையாளிகளை தேடி தனிப்படைகள் தீவிர வேட்டையில் ஈடுபட்டன.

தினகரனுக்கு 50 கோடி கொடுத்த திருச்சி தொழிலதிபர் .. வேட்டையாடும் டெல்லி போலீஸ் ..

இரட்டை இலை சின்னத்தை பெற தினகரனுக்கு ரூ.50 கோடி தொகையை கொடுக்க முன் வந்தது திருச்சியைச் சேர்ந்த தொழிலதிபர் என்று டெல்லி போலீஸாருக்கு துப்பு கிடைத்துள்ளது.
By: Lakshmi Priya சென்னை: இரட்டை இலை சின்னத்தை பெற தினகரனுக்கு ரூ.50 கோடி தொகையை வழங்க முன் வந்தது திருச்சியைச் சேர்ந்த தொழிலதிபர் என்று டெல்லி போலீஸாருக்கு துப்பு கிடைத்துள்ளது. இதனால் அவரை தூக்கவும் டெல்லி போலீஸ் முடிவு செய்துள்ளது. இரட்டை இலை சின்னத்தை குறுக்கு வழியில் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக புரோக்கர் சுகேஷ் சந்திரா, தினகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட தினகரனை 5 போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிபதி அனுமதித்தார். அதன்படி சுகேஷிடம் கைப்பற்றப்பட்ட ரூ.1.30 கோடி பணத்தை ஹவாலா கும்பல் மூலம் கைமாற்றப்பட்டது குறித்து விசாரணை நடத்த டிடிவி தினகரன், நண்பர் மல்லிகார்ஜுனன் ஆகியோருடன் டெல்லி போலீஸார் சென்னைக்கு நேற்று வந்தனர்.

அ. தி.மு.கவுக்குள் பாஜகவின் நச்சுபாம்புகள் .. ரத்தத்தின் ரத்தங்களே தூங்காதீர் தூங்கினால் இனி விழிக்கவே முடியாது!

டெல்லியில் கோலோச்சும் பார்ப்பன அதிகார வர்க்கத்திற்கு தமிழகத்தின் மீது ஏனிந்த கொலைவெறி...?
நீதிக்கட்சி தொடங்கி திராவிட சிந்தனையாளர்களால் , தங்கள் பார்ப்பனிய மேலாண்மை சித்தாந்தம் கேள்விக்குள்ளாக்க படுவதால் உண்டான காழ்புர்ணச்சிதானே...!
கடந்த 65 ஆண்டுகளாக ஒரு கட்சி தமிழகத்தின் தனித்துவத்தை விட்டுக்கொடுக்காமல், இந்தியாவின் பன்மைக் கலாச்சாரத்தின் காவலனாக வலம் வருவதும் , அரசியலில் மக்களால் ஆரியத்திற்கெதிரான கேடயமாக முன்நிறுத்தப் படுவதும் அதிகார வர்க்கத்தின் கண்களை உறுத்துகிறது.
தி.மு.க. வை முடக்க அவர்கள் நடத்திய நாடகங்கள் எல்லாம் தொடர் தோல்விகளை சந்திக்கும் போது , தி.மு.க. வின் நிலைத்தன்மை உறுதியாவதும், போலி திராவிடத்தின் நிலைத்தன்மை நிலைகுலைந்து கிடப்பதும் அவாள்கள் நெஞ்சில் தனலாய் கொதிப்பது தெரிகிறது...
அதனால் தமிழக மக்களின் கவனத்தை திசை திருப்பி, அவர்களின் வாழ்வாதாரங்களின் உரிமைக்காக அவர்களை தங்களிடம் கையேந்த வைப்பதும், வளர்ச்சி என்ற பெயரில் தமிழகத்தை அணு உலைகளாலும், நியூட்ரினோ ஆய்வு கூடங்களாலும், இயற்கை எரிவாய்வு வயல்களாகவும் மாற்றி பெரு முதலாளிகளின் வேட்டைக் காடாக மாற்றுவதும்தான் தமிழினத்துக்கு தாங்கள் கொடுக்கும் தண்டனை என்று மத்திய ஆளும் வர்க்கம் முடிவு செய்து விட்டது.

Late ஜெயலலிதாவின் ஊழல் அழுக்கை கழுவ துடியாய் துடிக்கும் பார்ப்பனர்கள் !

தினகரன் விசயத்தில் மத்திய அரசு நடக்கும் விதம் அராஜகமானது என்பதில் ஐயமில்லை. லஞ்சம் வாங்க முயன்றவர் யார் என்பதைப் பற்றி கேள்வி கேட்காமலேயே விசாரணை போகும் பாதை நிச்சயம் எதிர் கட்சிகளுக்கு கடும் எச்சரிக்கை..
அதே நேரத்தில் தினகரன் ஊட்டி வளர்த்த, தன் சாதி பாசத்திற்கு உரியவர்கள் நன்றிக் கெட்டு, துரோகம் செய்துக் கொண்டிருப்பது ஆண்ட சாதிகளின் செயல்களில் அடிப்படையானது.
நன்றிக் கெட்டவர்கள், துரோகிகள்தான் அரசாள வாய்ப்புப் பெறுகிறார்கள் என்பது தமிழ் நாட்டின் வரலாற்றுச் சாபம்..
விடியுமா..?
சன்னா
Gowthama Sanna
Prakash JP தமிழகத்தின் ஒரே தீயசக்தி ஜெ. அரசியலில் ஈடுபட்ட நாள் முதல், ஜெ.வின் அல்லக்கைகளாகச் செயல்பட்டு இதே. நடராஜன், தினகரன், திவாகரன்  கோ எத்தனை ஆட்களுக்கு, எத்தனை இடங்களில் கையூட்டு கொடுத்திருப்பார்கள். நீதியைக் கேலிக் கூத்தாக்கிய குமாரசாமி உட்பட... இந்தியாவைப் பொறுத்தவரையில் அயோக்கியத்தனம், நாதாரித்தனம் பண்ண ஒரே ஒரு பிரிவினருக்கு மட்டுமே அனுமதி உண்டு. இதே அயோக்கியத்தனத்தை ஜெ. பண்ணினால் , இந்தியாவிலேயே கேள்வி கேட்பார் இல்லை.

பஹுபாலி 2 ... கொண்டாட படவேண்டிய ராஜமவுலி... ஸ்டான்லி ராஜன்

உலகெல்லாம் பாகுபலி II மழை பெய்ய தொடங்கிவிட்டது, எல்லோரையும்
போல நனைந்துவிட வேண்டும்
பாகுபலி எப்படி வென்றது?
அரசர் படங்கள் ஒன்றும் புதிதல்ல, பேசும் படங்கள் வந்த காலத்திலிருந்து வருபவைதான், ஆனால் பாகுபலி எப்படி பெரும் அடையாளமாயிற்று என்றால் அதில் டைரக்டரின் தேடலும், ஆர்வமும் தெரிந்தது, சந்தேகமின்றி சொல்லலாம் இன்றைய ஆசியாவின், ஆசியா என்ன? உலகின் மிக சிறந்த டைரக்கடர்களில் ராஜமவுலியும் ஒருவர்
எல்லோரும் அரசர் கதை எடுக்கலாம், மனோகரா, காஞ்சி தலைவன் என பல வரலாம் ஆனால் வரலாற்றினை 100% கூர்ந்து படிக்காமல் இப்படி ஒரு படம் எடுக்கமுடியாது,
அரசாங்கம், குடும்பம், துரோகம், விசுவாசம், பகை, வஞ்சகம், அரியணை ஆபத்து, உடனிருந்தே கொல்லும் பகை,வீரம், அச்சம், உளவாளிகள் என பலவற்றை தாண்டித்தான் ஆட்சி உண்டு, எக்காலமும் அப்படியே, அந்த விஷயங்களை அப்படியே கொண்டுவந்தார்

குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக அதிமுக, பிஜு ஜனதா தள் உடைப்பு?.

Marx Anthonisamy : உ.பியில் பெரு வெற்றி அடைந்த பின்னும்
கூட நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் வெற்றி பெறுவதில் சிக்கல் உள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தொகுதியில் உள்ள மொத்த வாக்குகள் 10,98,882. வெற்றி பெறத் தேவையான வாக்குகள் 5,49,442. எனவே பா.ஜ.க வெற்றி பெற அதற்கு இன்னும் 24,552 வாக்குகள் தேவைப்படுகின்றன.
மோடி - அமித்ஷா கும்பல் இந்த 24,552 வாக்குகளை 'வாங்கு'வதற்கு தொலை நோக்குடம் பிளவு வேலைகளைச் செய்து வருகிறது. பிஜு ஜனதா தளத்தை உடைக்க அவர்கள் செய்துவரும் சதி குறித்து அந்தக் கட்சியின் நாடாளுமன்றக் கொரடா புலம்பியுள்ளதை நான் ஏற்கனவே இங்கு பதிவிட்டுள்ளேன். சந்திரசேகர் ராவின் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதியும் குறி வைக்கப்பட்டுள்ளது.

இந்தி நடிகர் வினோத் கன்னா காலமானார்

இந்தியாவின் பிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா காலமானார். 1970களில் மிகவும் பிரபலமான நடிகரான வினோத் கன்னா, பாஜகவால் முன்னிறுத்தப்பட்டு, பஞ்சாப் நாடாளுமன்ற தொகுதியில் நான்கு முறை வெற்றி பெற்றவர். 1970 மற்றும் 1980களில் இவர் நடித்த பாலிவுட் படங்கள் பெரும் வெற்றி பெற்றன. 1968ல் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய இவர், 1990களில் அரசியலில் நுழைவதற்கு முன் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தார். நீண்ட நாட்கள் உடல் நிலை சரியில்லாமல் காலமான வினோத் கன்னாவுக்கு பலரும் அஞ்சலி செலுத்திவருகின்றர்  மாலைமலர்

வியாழன், 27 ஏப்ரல், 2017

வினு சக்கரவர்த்தி காலமானார் .. நடிகர் கதை வசனகர்த்தா தயாரிப்பாளர்!


சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல குணசித்திர நடிகர் வினுசக்கரவர்த்தி இன்று காலமானார். அவருக்கு வயது 72. குரு சிஷ்யன்', 'அண்ணாமலை' உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் வினு சக்ரவர்த்தி (72). உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு அதிகரிப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மாலை 7 மணியளவில் மரணம் அடைந்தார். அவரது மனைவி பெயர் கர்ணப்பூ. மறைந்த வினுசக்கரவர்த்திக்கு சரவணன், சண்முகப்பிரியா என்கிற மகன், மகள் உள்ளனர். 1945 ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிறந்தவர்

திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டு ஆட்சி : நிதி நெருக்கடியிலும் வளர்ச்சி.. BBC.Com

தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி 50 ஆண்டுகள் நிறைவடையும் இந்த ஆண்டில் , திராவிடக் கட்சிகளின் ஆட்சி தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கம் குறித்த பல்வேறு பரிமாணங்களை ஆராயும் பல கட்டுரைகளை தொடர்ச்சியாக பிபிசி தமிழ்.காம் வெளியிடுகிறது. அதில் முதல் கட்டுரை இங்கு பிரசுரமாகிறது-- பிபிசி தமிழ்) சமூக நீதிக்கு திராவிட ஆட்சிகளின் பங்களிப்பு 100 ஆண்டுகள் நிறைவெய்தியுள்ள திராவிட இயக்கத்தின் முதல் அரசியல் அடையாளம் நீதிக்கட்சி ஆகும்.
மாகாணங்களுக்குக் குறைந்த அதிகாரங்களே வழங்கப்பட்ட நிலையிலும் 1921இல் ஆட்சி அமைத்த நீதிக்கட்சி அனைத்துத் தரப்பினருக்கும் கல்வி வேலைவாய்ப்புகளை வழங்கும் முதல் இடஒதுக்கீடு ஆணையை 1921இல் பிறப்பித்தது. 1927முதல்1947 வரை இடஒதுக்கீடு ஆணை பின்பற்றப்பட்டது.
ஆளுமைமிக்க ஐசிஎஸ் அலுவலர் கே.பி.எஸ்.மேனன் எழுதிய "இந்தியா:நேற்று-இன்று-நாளை" என்ற நூலில் நீதிக்கட்சியின் தலைவர்களின் பிராமணரல்லாத சமூகச் சிந்தனையை உணர்ந்த அன்றைய பெரும்பான்மையான பிராமண உயர் அலுவலர்கள் , தங்கள் பெயரோடு இணைத்திருந்த அய்யர், அய்யங்கார் பெயர்களை அரசாணைகள் வழியாக நீக்கிவிட்டனர், என்றார்.

பிட்டி தியாகராஜர். திராவிட வரலாற்றில் மறக்க முடியாத... இன்று பிறந்த நாள்!

Image may contain: 1 person, hat and closeupதமிழகத்தில் திராவிட குரல்கள் முதலில் 1900களிலே கேட்க தொடங்கின, அது பிரமணர் அல்லாதோர் சங்கம் என்றே தொடங்கபட்டது, அதில் பல சிந்தனையாளர்கள் இருந்தனர், பின் அது நீதிகட்சி என பயணித்தது
அந்த நீதிகட்சியினை அக்காலத்தில் தொடங்கியர்களில் ஒருவர்தான் தியாராய செட்டி அல்லது பிட்டி தியாகராயர், வழக்கறிஞர், தொழிலதிபர் என பன்முகம் கொண்டவர்.
நடேச முதலியார், டி.எம் நாயர் ஆகியோருடன் சேர்ந்து 1916ல் நீதிகட்சியினை தொடங்கினார்
மற்ற சாதி மக்களின் உரிமைகளுக்காக முதலில் குரல் கொடுத்தது நீதிகட்சிதான், அது 1920ல் சென்னை மாகாண ஆட்சியினையும் பிடித்து அசத்தியது, அதாவது அன்றைய கேரளா, ஆந்திரம் என பிரிக்கபடாத சென்னை மாகாணம்..
அக்கட்சியின் பன்னீர்செல்வம் போன்றவர்கள் பெரும் வரலாற்றளர்கள், அக்காலத்திலே லண்டனில் பிரிட்டிசாரிடம் பிராமணர் அல்லோதார் சார்பாக மநாட்டில் பேசியவர்கள்..

ஷாலின் மரிய லாரன்ஸ் : மனசாட்சியுள்ள ,நேர்மையான 'மீன்காரியாக ' இருந்துவிட்டுப் போகிறேன் .

Image may contain: 1 person
(நன்றி குமுதம், issue date :April 13th 2017)

நான் ஆங்கிலோ இந்தியன் கான்வென்டில் படிக்கும் காலத்தில் பெண்கள் மற்ற பெண்களை கீழ்த்தரமாக சித்தரிக்க வேண்டுமென்றால் "Fisher woman " (மீன்காரி ) என்று அழைப்பார்கள். சில வருடங்கள் முன்பு வரை கூட ஒரு விதமான கொண்டை அணியும்போது எனது சில கார்பொரேட் நண்பர்கள் "மீன்காரி கொண்ட " என்று அடிக்கடி கிண்டல் செய்வது வழக்கம் அப்பொழுது கூட நான் அதைப் பற்றி பெரிதாய் சிந்தித்து இல்லை .
ஆனால் சமூகநீதிக்காக பாடுபட ஆரம்பித்ததிலிருந்து விளிம்பு நிலை மனிதர்களின் ,ஒடுக்கப்பட்டவர்களின் தோற்றத்தை வைத்து இழிவுபடுத்துவது மிகப்பெரிய அட்டூழியங்களில் ஒன்று என்று அறிந்துகொண்டேன் .அதிலிருந்து தோற்ற ரீதியிலான சாதிய /வர்க்க அடக்குமுறைகளை இன்று வரை எதிர்த்துப் போராடி வருகிறேன் .

மூத்த பத்திரிகையாளர் அன்பழகன் கைது ..கண்டனக் கூட்டம்! நாளை மாலை பத்திரிகையாளர் மன்றத்தில் !

Image may contain: 1 personமூத்த பத்திரிக்கையாளர் அன்பழகன் கைதும் அரசியலும்.
மூத்த பத்திரிக்கையாளர் அன்பழகன், கோவை கார்ப்பரேஷன் பொறியாளர் பார்த்திபன் என்பவரை மிரட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
பத்திரிக்கையாளர்களுக்குள் இருக்கும் அரசியலின் காரணமாக, சில பத்திரிக்கையாளர்கள் அன்பழகனின் கைது குறித்து மகிழ்ச்சியாக செய்தி பரிமாறிக் கொள்வதையும் பார்க்க முடிகிறது. இப்படி பரிமாறிக் கொள்பவர்களின் யோக்கியதையை ஆராய்ந்தால் அவர்களைப் பற்றி சொல்ல பல கதைகள் இருக்கின்றன.
அன்பழகன் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பல்வேறு ஊழல்களை வெளிக் கொணர்ந்தவர். சென்னை உயர்நீதிமன்றத்தில் தன் சொந்த பணத்தை செலவு செய்து ஊழலை வெளிக்கொணர பொது நல வழக்குகள் தாக்கல் செய்தவர். இவரின் கைது குறித்து மகிழும் பத்திரிக்கையாளர்களில் ஒருவர் கூட, ஊழலுக்கு எதிராக ஒரு துரும்பைக் கூட தூக்கிப்போட்டவர்கள் அல்ல.

25 ஆயிரம் டன் மாங்காய்கள் உதிர்ந்தன- கிலோ ரூ.1-க்கு விற்பனை.. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் மழை

கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் டன் கணக்கில் கீழே விழுந்த மாங்காய்கள். கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் டன் கணக்கில் கீழே விழுந்த மாங்காய்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூறாவளிக் காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையால் 25 ஆயிரம் டன் மாங்காய்கள் உதிர்ந்தன. கிலோ ரூ.1-க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் கடும் நஷ்டத்துக்கு ஆளாகி உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. அல்போன்சா, மல்கோவா, பங்கனப் பள்ளி, பெங்களூரா, பீத்தர், செந் தூரா, நீலம் வகை மாம்பழங்கள் அதிக அளவில் விளைவிக்கப் படுகின்றன. நிகழாண்டில் ஏற்பட்ட கடும் வறட்சியிலும் மா மரங்களில் பூக்கள் அதிக அளவில் பூத்தன. போதிய மழையின்றி மரங்களும், பூக்களும் கருகும் நிலையில், டிராக்டர் மூலம் தண்ணீரை விலைக்கு வாங்கி மரத்தையும் விவசாயிகள் பராமரித்து வந்தனர்.

பி.எஸ்.வீரப்பாவின் மகன் வறுமையில் ! கலைப்புலி தாணு உதவி..

Kalaipuli S Thanu helps Rs 1 lakh late to PS Veerappa sonதிரையில் நடித்து உழைத்த பணத்தை வைத்து ஏராளமான படங்கள்  தயாரித்து பின்பு ஏழ்மை நிலைக்கு வந்துள்ளது மாபெரும் நடிகர்  பி எஸ் வீரப்பாவின் குடும்பம்    பிஎஸ் வீரப்பாவை நினைவிருக்கிறதா… மகாதேவி, மன்னாதி மன்னன், வஞ்சிக்கோட்டை வாலிபன், மீனவ நண்பன், மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் போன்ற படங்களில் கம்பீர வில்லனாக வந்து பின், பிஎஸ்வி பிக்சர்ஸ் என்ற பேனரில் ஆந்த ஜோதி, ஆலயமணி, ஆண்டவன் கட்டளை, நட்பு உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர்.

பிஎஸ்வி பிக்சர்ஸ் பேனரில் வெற்றி, சபாஷ், சாட்சி உள்பட அடுத்தடுத்து 4 படங்களை இயக்கியவர் இன்றைய டாப் ஸ்டார் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் என்பது குறிப்பிடத்தக்கது. .. வீரப்பாவின் மகன் பிஎஸ்வி ஹரிஹரன். இவரும் தயாரிப்பாளர்தான். ஆனால் பிஎஸ் வீரப்பாவின் மறைவுக்குப் பிறகு, படங்கள் தயாரிப்பதை நிறுத்திவிட்டார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டையில் அம்மா .. இன்று உச்சத்தை நெருங்குகிறார்?

காக்கா முட்டையில் இரண்டு சிறுவர்களின் அம்மாவாக நடித்து ஏகப்பட்ட அப்பளாஸ்களை அள்ளியவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது நடிப்புக்கு தேசிய விருதே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. விருது மயிரிழையில் தப்பியது. ஆனால் அடுத்த படமான 'ஹலோ நான் பேய் பேசுறேன்' படத்தில் குத்தாட்டம் போட்டு ரசிகர்களின் பிபி-யை எகிறவைத்தார். அவரால் எந்தவிதமான கதாபாத்திரத்திலும் நடித்து முத்திரை பதிக்க முடியும் என சமீபத்தில் நிரூபித்த படம் 'தர்மதுரை'. மூன்று கதாநாயகிகள் உள்ள அப்படத்தில், காமக்காபட்டி அன்புச்செல்வி என்னும் கதாபாத்திரம் அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்தது.

நல்லகண்ணு :தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு!

தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு: நல்லக்கண்ணு
மத்திய அரசு தொடர்ந்து தமிழக அரசை புறக்கணித்து வருகிறது என்று கூறியிருக்கிறார் நல்லக்கண்ணு. நாகர்கோவிலில் இன்று (27.4.2017) இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் விவசாயிகள் பிரச்னைக்காக அனைத்து வியாபாரிகளும் கடைகளை அடைத்து ஆதரவு கொடுத்து உள்ளனர். விவசாயிகளுக்காக பொதுமக்கள் வீதியில் இறங்கி போராடி வருகிறார்கள்.
தமிழகத்தில் தற்போது வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. 140 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வறட்சி தற்போது ஏற்பட்டு உள்ளதாக அரசே ஒப்புக்கொண்டு உள்ளது. தமிழகத்திற்கு வந்த மத்திய குழு இங்கு நிலவும் வறட்சிக்கு போதுமான நிதி அளிக்கவில்லை. இதற்காக டெல்லியில் போராடிய விவசாயிகளை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணுவை பிரதமர் சந்திக்கவில்லை. மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.

நாஞ்சில் சம்பத்: தினகரன் ஆதாரம் இல்லாமல் கைது செய்ப்பட்டுள்ளார்


சென்னையில் அதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் வியாழக்கிழமை மாலை செய்தியாளர்களை சந்தித்தார்.&அப்போது அவர், டிடிவி தினகரன் மீதான வழக்கு குறித்து எதுவும் சொல்ல விரும்பவில்லை. வழக்கு விசாரணைக்கு யாரும் இடையூறாக இருக்க மாட்டோம். தினகரனும் அதனை விரும்பமாட்டார். அவரை காப்பாற்றுவதற்கு எந்த விலையும் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.&கேள்வி : சுகேஷ் சந்திராவிடம் தினகரன் பேசியதாக செய்தி வெளியானதே? செய்திதான். பொதுவாழ்வில் இதுபோன்ற செய்திகள் வரும். நீங்க இதனை பெரிதாக எடுத்துக்கொள்கிறீர்கள். நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

கேள்வி : தினகரன் ஏன் முன்ஜாமீன் எடுக்கவில்லை?

பதில் : தேவையில்லை

கேள்வி : உங்கள் சந்தேகப் பார்வை யார் மீது உள்ளது?

பதில் : டெல்லி.. டெல்லி.. .டெல்லி.. 

தினகரன் சென்னை வீட்டில் சோதனை .. விசாரணை!


டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட டி.டி.வி. தினகரனை பெசன்ட் நகரில் உள்ள ராஜாஜி பவனில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் அடையாறில் உள்ள அவரது வீட்டிற்கு அவரை அழைத்துச் சென்ற போலீசார், அங்கு வைத்து விசாரணை மேற்கொண்டனர். இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற தேர்தல் ஆணையத்திற்கே லஞ்சம் கொடுக்க முயன்றதாக எழுந்த புகாரில் தினகரன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரை 5 நாள் காவலில் எடுத்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொச்சி மற்றும் பெங்களுரு அழைத்துச் செல்லப்படுவார் என்று கூறப்படுகிறது. இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் கமி‌ஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. (அம்மா) அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

28 அதிமுக தலித் எம்.எல்.ஏ-க்கள் ரகசியக்கூட்டம்

அதிமுக தலித் எம்.எல்.ஏ-க்கள் ரகசியக்கூட்டம்:  ஆட்சியைக் கவிழ்க்க திட்டமா?
அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்களின் கூட்டம் நடைபெற்று வந்த நேரத்தில் அதிமுக-வின் தலித் எம்.எல்.ஏ-க்கள் 28 பேர் சென்னையிலுள்ள நட்சத்திர விடுதியில் ரகசியக் கூட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தினகரன் மற்றும் அவருடைய குடும்பத்தினரை கட்சியிலிருந்து ஒதுக்கிவைக்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். மேலும், இரு அணிகளும் இணைவதற்காகப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இரு அணிகளும் ஒன்றிணைவதற்காகப் பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பிலும் குழு அமைக்கப்பட்டது. இன்னும் சில நாள்களில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக இரு அணியின் முன்னணி தலைவர்களும் கூறி வருகின்றனர். தற்போதுள்ள சூழ்நிலையில் இரு அணிகளும் இணையும் சூழ்நிலையே உருவாகியுள்ளது. மேலும் ஏப்ரல் 25ஆம் தேதி (நேற்று) எடப்பாடி அணியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டமும் நடைபெற்றுள்ளது.

சைதாப்பேட்டையில் தாய், மகள் படுகொலை

சைதாப்பேட்டை : சைதாப்பேட்டையில் தாய், மகள் படுகொலை செய்யப்பட்டனர். சென்னை, சைதாப்பேட்டை, கே.பி.கோவில் தெருவில், அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சண்முகம். இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவர் மனைவி ஹேமலதா, 47; அண்ணா பல்கலையில் பேராசிரியர் மற்றும் அறிவியலாளராக பணியாற்றி வந்தார். இவர் மகள் ஜெயலட்சுமி, 21; அண்ணா பல்கலையில், பி.இ., சிவில் படித்து வந்தார். இந்நிலையில், இருவரும் வீட்டிற்குள் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தனர். நேற்று இரவு, 7:00 மணிக்கு, அவரது வீட்டிற்கு உறவினர்கள் வந்து பார்த்த போது, தாய், மகள் கழுத்தறுக்கப்பட்டு இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.சைதாப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இந்திய நீதிமன்றம் அந்நிய முதலீட்டாளர்களின் (Suzuki) கைக்கூலிப்படையா ?

ஜப்பானிய நிறுவனமான சுசுகியைத் திருப்திபடுத்துவதற்காகவும், தொழிலாளி வர்க்கத்தை எச்சரிப்பதற்காகவுமே மாருதி தொழிலாளர் வழக்கில் 13 தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது. மாருதி தொழிலாளர்களுக்கு எதிரான கிரிமினல் குற்றவழக்கில் மார்ச் 18-ஆம் தேதியன்று குர்கான் செசன்ஸ் நீதிபதி கோயல் தீர்ப்பு வழங்கி விட்டார். குற்றம் சாட்டப்பட்ட 148 பேரில் 117 தொழிலாளர்கள் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டு விட்டார்கள். ஆனால், 13 தொழிலாளிகளுக்கு கொலைக் குற்றத்துக்காக ஆயுள் தண்டனையும், கொடும் காயம் விளைவித்த குற்றத்துக்காக 14 பேருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டிருக்கிறது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 13 பேரில் 12 பேர் சங்க நிர்வாகிகள். ஒருவர் சம்பவ நாளன்று மேலாளரால் சாதிரீதியாக இழிவுபடுத்தப்பட்ட ஜியாலால் என்ற தொழிலாளி.  கொலைக் குற்ற வழக்கில் ஆதாரமின்றித் தண்டிக்கப்பட்ட மாருதி தொழிலாளர்கள். “148 தொழிலாளிகள் சேர்ந்து அவனிஷ் குமார் தேவ் என்ற அதிகாரியைக் கொலை செய்தார்கள் என்பது வழக்கு.

புதன், 26 ஏப்ரல், 2017

கேரளா அமைச்சர் மணி தமிழ் பெண்களை தவறாக பேசவில்லை ! ... இதோ ஆதாரம், ... காபரெட் சதி அம்பலம்


பிரதாபன் ஜெயராமன்   : கேரளா அமைச்சர் தமிழ்பெண்களை விபச்சாரி என்று கூறி பொய்பிரச்சாரத்தில் ஈடுபடும் இடதுசாரி எதிர்பாளர்களே இந்தவீடியோ காட்சிகளை பாருங்கள் மலையாளம் மொழிதெரியாவிட்டால் தெரிந்தவரிடம் விளக்கம்கேளுங்கள் இல்லையென்றால் விளக்கிதரகடமைபட்டுள்ளோம் இதில் எந்தஇடத்தல் அமைச்சர் தமிழ் பெண்களை இழிவுபடுத்தினார் என்றுஉங்களால் கூறமுடியுமா? அவர் அன்றைய அதிகாரிகளை விமர்சித்தை திசைதிருப்பி தமிழ்பெண்களை இழிவுபடுத்தினார் என்று பொய் சொல்லி ஆதாயம்அடைய பார்க்கும் எந்தவொரு சுயநலவாதிக்கும் மணியைகுறித்து விமர்சிக்கதகுதி உண்டா? முகநூல் பதிவு

விவசாயத்துக்கு வருமான வரி விதிக்கும் யோசனையில் மத்திய அரசு ?

மத்திய அரசுக்கு அதிகாரம் கிடையாது பொருளாதாரச் சர்வே வரி விதிக்கப்படாது வருமான வரி வரம்பு மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்டெல்லி: விவசாயம் மூலம் பெறப்படும் வருமானத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டும் என்ற திட்டத்தை மத்திய அரசுக்கு இன்று நிதி ஆயோக் உறுப்பினர் பிபேக் டெப்ராய்ப் பரிந்துரைத்துள்ளார். இந்தச் செய்து ஊடகங்களுக்குக் கிடைத்ததை அறிந்த நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அதற்கு உடனே மறுப்பு தெரிவித்தார். வருமான வரிச் செலுத்துபவர்களை மேலும் அதிகரிக்கும் விதமாக நிதி ஆயோக் உறுப்பினர் பிபேக் டெப்ராய் கிராமம் மற்றும் நகர வாழ்க்கையில் நாம் எந்த வித்தியாசமும் பார்க்கக் கூடாது என்றும் விவசாயத்தில் இருந்து பெறப்படும் வருமானத்திற்கும் வரி விதிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்து இருந்தார். டிவிட் இந்தச் செய்து ஊடங்களுக்கு வெளியாகிய உடனே மறுப்பு தெரிவித்த நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மத்திய அரசுக்கு விவசாயம் மூலமாகப் பெறப்படும் வருவாய்க்கு வரி விதிக்கும் எந்த எண்ணமும் இல்லை என்று டிவிட் செய்தார்.

அதிமுகவில் 28 MLAகளுடன் புதிய அணி .. ரகசிய ஆலோசனை! ஜாதீ ....


சென்னையில் நட்சத்திர ஓட்டலில் குறிப்பிட்ட சாதியை சேர்ந்த 25 எம்எல்ஏக்களும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 25 எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதால் அதிமுக கட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
New Team emerges in ADMKசென்னை: அதிமுக கோஷ்டிகள் இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் அக்கட்சியின் 28 எம்.எல்.ஏக்கள் திடீரென புதிய கோஷ்டியாக உருவெடுத்து ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி கோஷ்டிகள் பேச்சுவார்த்தைக்கு தயாராகிவிட்டன. சசிகலா, தினகரன் இல்லாத அதிமுகவை உருவாக்குவதில் இரு கோஷ்டிகளும் மும்முரமாக இருக்கின்றன.

இளங்கோவன் :4½ வருடங்களில் சேர்ந்து கூட்டுக் கொள்ளையடிக்க இணைப்பு பிணைப்பு எல்லாம்

மனதில் பட்டதை மறைக்காமல் பேசி, அரசியல் களத்தை தெறிக்கவிடுபவர் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். தற்போதைய அரசியல் சூழல் குறித்த நக்கீரன் கேள்விகளுக்கு அவர் தந்த பதில்கள்.     

அ.தி.மு.க.வுக்குள் நிலவிவரும் குழப்பங்களுக்கு பா.ஜ.க.தான் காரணம் என்கிறார்களே?  முதல் காரணம், ஜெயலலிதாவின் மரணம்தான். அதனைத்தொடர்ந்து, பாரதீய ஜனதா கட்சி, அ.தி.மு.க.வை ஆட்டுவிக்கவேண்டும் என்பதற்காகவும்; தனக்கு ஜால்ரா போடுகிறவரை, தனக்கு தலையாட்டுகிறவரை பதவியில் அமர வைக்கவேண்டும் என்பதற்காகவும்தான் இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.

சசிகலா குடும்பத்தை ஓரங்கட்டிவிட்டு ஓ.பி.எஸ். அணியும் இ.பி.எஸ். அணியும் ஒன்றுசேருவதை ட்ராமா என்று விமர்சிக்கிறது பா.ஜ.க. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இரட்டை இலையை மீட்பதற்காக தேர்தல் கமிஷனுக்கு தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றார் என்ற குற்றச்சாட்டால் அவரை விலக்கி வைப்பதாக சொல்கிறார்கள். அதே, தினகரனின் பணத்தை ஆர்.கே.நகரில் பட்டுவாடா செய்த பட்டியலில் கிட்டத்தட்ட ஏழு அமைச்சர்கள் இருக்கிறார்கள். தினகரனை விலக்கவேண்டும் என்பவர்கள் முதலில்... விஜயபாஸ்கர், எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையன் போன்ற அமைச்சர்களை எல்லாம் பதவியிலிருந்து தூக்கியெறியவேண்டும்.