ஞாயிறு, 28 டிசம்பர், 2025

சவுதி அரேபியாவில் இருந்து இந்தியர்கள் திருப்பி அனுப்பிவைக்கப்படுகிறார்கள் .. அமெரிக்காவை விட அதிக அளவில்

 tamil.goodreturns.in  -Prasanna Venkatesh  : அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட (Deportation) விஷயம் இந்த ஆண்டு உலகம் முழுவதும் பேசப்பட்டது, 
குறிப்பாக விமானத்தில் இந்தியர்களை கொண்டு வந்த விதம் குறித்து கடும் விமர்சனம் எதிர்கொண்டது. 
இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டவர்கள் பெரும்பாலானவர்கள் முறையான ஆவணங்கள் இன்றி 'டான்கி ரூட்' (Donkey route) போன்ற ஆபத்தான வழிகளில் எல்லையைக் கடந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்கள் தான். 
இன்னும் சிலர் விசா காலம் முடிந்தும் தங்கியிருப்பது (Visa overstay) மற்றும் மாணவர் விசா விதிகளுக்கு மாறாக பகுதிநேர வேலைகளில் ஈடுபடுவது போன்ற குற்றத்திற்காகவும் நாடு கடத்தப்பட்டனர்.

திமுக அதிமுக பாஜகவோடு ஒரே நேரத்தில் பேச்சு வார்த்தை நடத்தும் பிரேமலதா கட்சி

 மின்னம்பலம் -Mathi  :  “2026 தேர்தல் சுவரு இன்னும் எத்தனை விசித்திரங்களைத் தருமோ” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
திமுக, அதிமுகன்னு ரெண்டு பக்கமும் தேமுதிக விடாம பேசிகிட்டுதான் இருக்கு..
இந்த களேபரத்துல விஜயகாந்தின் 2-வது வருஷ நினைவு நாளை குருபூஜையா நடத்துது தேமுதிக.. இதுக்கு சிஎம் ஸ்டாலின், இபிஎஸ்-ன்னு எல்லா கட்சித் தலைவர்களுக்கும் நேரில் போய் சுதீஷ் இன்விடேஷன் கொடுத்துகிட்டு இருக்காரு..
இதுக்கு நடுவுலதான், “தேசிய ஜனநாயக கூட்டணியில எங்களுக்கு 6 சீட் மட்டுமே ஒதுக்க முடியும்னு தகவலை வெளியிட்ட கட்சி அழிந்தே போகும்னு” பிரேமலதா சாபம் கொடுக்க பரபரப்பாகிடுச்சு.
பொறுய்யா… தேமுதிக யாரோடதான் கூட்டணி வைக்குமாம்? பிரேமலதா ஏன் சாபம் விட்டாங்களாம்?