![]() |
Vasu Sumathi : மனசாட்சியை சிதறடிக்கும் இந்த செய்தியில் இரண்டு பகுதிகள்...
ஒரு 5 வயது பச்சை குழந்தை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறாள்..
அந்த சிறுமி அரசு மருத்துவமனையில் 10 மணி நேரம் கவனிப்பாரற்று கிடந்த அவலம்!
வன்கொடுமைக்கு ஆளான அந்த குழந்தை பிலிபித் மாவட்ட பெண்கள் அரசு மருத்துவமனையில் அன்றிரவு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
ஆனால் அந்த குழந்தைக்கு உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய எந்த மருத்துவ பரிசோதனையும் செய்யாமல், 10 மணி நேரத்திற்கும் மேலாக கேட்பாரற்று கிடந்திருக்கிறார். இது குழந்தையின் உடல்நலத்தை மிகவும் பாதித்துள்ளது. மேலும் இது தொடர்பான வழக்கின் தடயவியல் ஆதாரங்களும் அழிந்துள்ளனவாம்.