சுக்ராமினை பார்க்கிறார். சுக்ராம், அப்போது இந்திய ஒன்றியத்தின் தொலை தொடர்பு துறை அமைச்சர். 9 வட்டங்களுக்கான தொலைத் தொடர்பு ஒப்பந்தம் அவருக்கு போகிறது, ஆனாலும் அந்த ஒப்பந்தத்தினை நிறைவேற்ற முடியவில்லை. திரும்பவும் சுக்ராம் உள்ளே நுழைந்து, குழப்பி, கட்டிங் வாங்கி, பின்னாளில் சுக்ராம் ஊழல் என்கிற பெயரோடும் நிறைய சுகரோடும் செத்து போனார். 2010
அந்த நிறுவனம் தொலை தொடர்பு துறை ஏலம் எடுக்க வருகிறது. அது குறிப்பிடும் தொகை பழம் தின்று கொட்டை போட்ட நிறுவனங்களுக்கே அதிர்ச்சியை தருகிறது. 12,848 கோடிகள். யாரும் அவ்வளவு விலை கொடுத்து அந்த அலைக்கற்றையை எடுக்க மாட்டார்கள். ஏலத்தின் முடிவில் இந்தியா முழுமைக்குமான BWA (Broadband Wireless Access) தொலை தொடர்பு அந்த நிறுவனத்துக்கு போகிறது. இந்திய ஒன்றிய அரசு ஒப்புதல் கொடுத்த அதே நாள் மாலையில் அந்த நிறுவனத்தின் 95% பங்கினை ஒருவர் வாங்குகிறார். அதற்கு அவர் கொடுக்கும் விலை 4,800 கோடிகள்.