சனி, 24 அக்டோபர், 2020

பெண் = lust. பவுத்தமோ, சமணமோ, ஹிந்து மதத்தின் பல்வேறு கிளைகளோ இதையே தான் வெவ்வேறு மொழியில் Let's move on..

Narain Rajagopalan : · “உன்னுடைய ஆண்குறி எழுச்சி அடைந்தால் அதை கொண்டு போய் விஷமிருக்கும் பாம்பின் வாயிலோ (அ) கொதித்து கொண்டு இருக்கும் கரியின் உள்ளோ நுழை. பெண்ணின் புழையில் அல்ல” இது ஏதோ மூன்றாம் தர தளமோ, கடுப்பில் காய்ந்து போய் இருக்கும் ஒரு ஆணோ சொன்னதில்லை. இதை சொன்னது பவுத்தம். பவுத்ததின் அடிப்படை முப்பீடகம் என்று சொல்லப்பட்ட மூன்று பாதங்கள். இது அதில் முதலும், சிறியதுமான வினய பீடகம் என்பதில் வருவது.
மனுஸ்மிருதியிலிருந்து மேற்கோள் காட்டும் தலைவர்கள், ஆரம்ப காலத்தில் புத்தரும், பவுத்தமும் பெண்களையும், பெண்மையையும் எப்படி கையாண்டு இருக்கிறார்கள் என்பதையும் விளக்குவார்களா?
பவுத்தத்தின் “தம்மம்” என்பதே பெண், இச்சை, செக்ஸ், பாலியல் துய்ப்பு என உழலும் “சம்சாரத்திலிருந்து” விடுதலை பெறுவதே. ”நிர்வாணம்” என்பதே ஆசையை மறப்பதிலிருந்து இருந்து தான் ஆரம்பிக்கிறது, அதில் பெண்ணாசையும் உண்டு.
The point is, ஹிந்துத்துவமோ, பவுத்தமோ, சமணமோ, சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பான பிற மத வழிபாட்டு முறைகளோ, எல்லாமே பெண்களை second class citizenகளாக தான் வைத்து இருந்தார்கள்.
ஆப்ரஹேமிய மதங்களில் இருந்து உருவான கிறிஸ்துவமும், இஸ்லாத்திலும் கூட அதன் கூறுகள் உண்டு. பழைய ஏற்பாட்டில் சொல்லப்படுவது “மனிதன் (ஆண்) தனியாக இருப்பது நல்லதல்ல. அவனுக்கு துணை செய்வதற்காக நான் ஒன்றை (பெண்) உருவாக்கி தருவேன்.”

"விகதகுமாரன்" மலையாளத் திரையுலகின் முதல் படம் மறைக்கப்பட்ட கதை! தலித் என்பதால் அடித்து விரட்டப்பட்ட நாயகி

பாண்டியன் சுந்தரம் : · சாதீயம் படுத்தியபாடு: மலையாளத் திரையுலகின்
 
vikatha kumaran

முதல் படம் மறைக்கப்பட்ட கொடுமை; தலித் என்பதால் அடித்து விரட்டப்பட்டு நாயகி ஓடிய ஓட்டம்! இயக்குநர் தமிழர் டேனியல் பெயரை மறைக்க நடந்த முயற்சி! கேரளத் திரையுலகம் தொடக்கத்தில் எதிர்கொண்ட இன்னல்கள் ஏராளம். மலையாளத் திரையுலகின் முதல் நாயகி பி.கே.ரோசி, ஊராரின் எதிர்ப்புக்குப் பயந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர். ஏழ்மையான பின்னணி, சமூகப் புறக்கணிப்பு என்று பல்வேறு தடைகளைத் தாண்டி திரைக்கு வந்த அந்த முதல் நாயகிக்கு இன்று மரியாதை செய்திருக்கிறது மலையாளத் திரையுலகின் பெண்கள் அமைப்பான 'விமன் இன் சினிமா
J.C.Daniel

actress rossi

கலெக்டிவ்'.இதன் சார்பில் கொச்சியில் துவக்கப்பட்ட ஒரு அமைப்பின் பெயர் 'பி.கே.ரோசி பிலிம் சொசைட்டி'
1913-இல் இந்தியாவின் முதல் திரைப்படத்தை தாதா சாகேப் பால்கே உருவாக்கினார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பால்கேவைப் போன்றே, 1920-இல் தமிழின் முதல் ஊமைப்படத்தை இயக்கிய நடராஜ முதலியாரையும், 1931-இல் வெளிவந்த தமிழின் முதல் பேசும்படமான காளிதாசை இயக்கிய ஹெச்.எம்.ரெட்டியையும் சினிமாவுலகம் நன்கறியும். 
இதேபோன்று மலையாளத்தின் முதல் திரைப்படம் "பாலன்" என்றும் அதனை மாடர்ன் தியேட்டர்ஸ் உரிமையாளர் சேலம் டி.ஆர்.சுந்தரம் தயாரித்தார் என்றும் நீண்ட காலமாக சொல்லப்பட்டு வந்தது.

1991-இல் ராஜீவ் படுகொலை.. 1992-இல் பாபர் மசூதி இடிப்பு.... இரண்டிலும் அதிகமாக அரசியல் அறுவடைகள் செய்தவர்கள் யார் ?

Narain Rajagopalan : · ஒரு அரசியல் கொலை நிகழ்த்தப் படுவதற்கான காரணம் இரண்டே இரண்டு தான் 1 ) தங்களுக்கு தடையாக இருக்கும் ஒரு ஆளுமையை முழுமையாக அகற்றுவது. அதன் மூலம் அந்த ஆளுமை சார்ந்த கட்சி / இயக்கத்தினை குழப்பி அதில் கரையேறுவது 2 ) ஒரு அரசியல் ஆளுமையை நீக்குவதன் மூலம் தங்களுடைய வலிமையை பறைசாற்றி, வெற்றிடத்தினை உருவாக்குவது
தெளிவான காரணங்களும், அரசியல் இலாபங்களும் இல்லாமல் உலகில் எந்த அரசியல் படுகொலைகளும் நிகழ்த்தப் படுவதில்லை. ராஜீவின் கொலை அத்தகையது. அதில் இலாபம் பார்த்தவர்கள் யார் என்பது தான் முக்கியமான கேள்வி.
1991 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இந்தியாவில் இரண்டு இடைநிலை அரசாங்கங்கள் இருந்தன. வி.பி.சிங் பாஜகவின் வெளி ஆதரவோடு நடத்திய ஆட்சி. அதற்கு பின்பு சந்திரசேகர் காங்கிரசு ஆதரவோடு நடத்திய ஆட்சி (தேர்தல் நடக்கும் போது சந்திரசேகரின் அரசு தான் காபந்து அரசாங்கம்)
ராஜீவ் மக்களோடு மக்களாக கலந்து கூட்டங்களில் பங்கு பெறுவதை பார்க்கும் யாசர் அராபத் ராஜீவ் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று எச்சரிக்கிறார். யாசர் அராபத் இலங்கை இனப் பிரச்சனையில் புலிகளுக்கு ஆதரவாக நின்றவர் என்பதும், 1997ல் சமரச பேச்சுவார்த்தையை தானே முன்னின்று நடத்த முன்வந்தவர் என்பதும் இங்கே முக்கியமானது.
மார்ச் 1991-இல் அப்போது தி இண்டூவில் உயர்பணியில் இருந்த மாலினி பார்த்தசாரதியும், காசி அனந்தனும், மறவன் புலவு சச்சிதானந்தனும் ராஜீவ் காந்தியை சந்திக்கிறார்கள். ராஜீவ் “I am misguided" என்று சொன்னதாக மூவருமே வெவ்வேறு காலங்களில் பதிகிறார்கள்.

மாணவர்களின் கல்விக்கு ஆளுநர் தடையாக நிற்கிறார்! அதை திசை திருப்புகிறதா திருமாவின் மனுவுக்கு எதிரான போராட்டம் ?

Prabhu Rajadurai: · உடல் முழுவதும் கொழுப்பும், மனதில் வெறுப்பும் சுமந்து

கொண்டு ஒரு தனி நபர் ‘கிராமப்புற ஏழை மாணவர்களின் நலனுக்காக’ இயற்றப்பட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தடையாக நின்று கொண்டிருக்கிறார்; தமிழகத்தின் பொது விவாதம் மனு ஸ்மிருதியை சுற்றி நடந்து கொண்டிருக்கிறது பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறிய இரு நாட்களில், குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்கிறது. அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று பல அரசியல் சட்ட நிபுணர்களால் கருதப்பட்டாலும், அதை நீதிமன்றம் சொன்ன பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நடைமுறைக்கு வந்து, பல நூறு கல்லூரி இடங்களும் வேலை வாய்ப்புகளும் தினந்தோறும் உருவாக்கித் தரப்பட்டுக் கொண்டிருக்கிறது.
-oOo-
மனு ஸ்மிருதியை தடை செய்ய வேண்டும் என்ற விடுதலை சிறுத்தைகளின் கோரிக்கை வேடிக்கையாக இருக்கிறது. இந்து திருமண சட்டமும், வாரிசுரிமை சட்டமும் 1955-56ல் இயற்றப்பட்ட பிறகு மனுநீதிக்கு நமது நீதிமன்றங்களில் வேலையே இல்லாது போயிற்று.   
மனு நீதிக்கு தடை என்றால் 1956க்கு முன்பு வந்த நீதிமன்ற தீர்ப்புகளையும் தடை செய்தால், எனது அலுவலகத்தில் ஒரு முழு அலமாரி காலியாகி விடும்.
ஒன்றிரண்டு பிராமண உபாசகர்கள்தாம், இன்னமும் மனு ஸ்மிருதியை பிடித்துக் கொண்டு மற்ற பார்ப்பனர்களை சங்கடப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். திருமாவளவன் சொல்கிறாரே என்று நான் கூட நேற்றுப் படித்தேன். பெண்களைப் பாதுகாப்பதில் மனுவிற்கு இருந்த பதட்டம், இனத்தூய்மையை பேணுவதான நாஜித்தனம்.

முஸ்லிம் எம்.பிக்களாலேயே ’20’ நிறைவேறியது! முஜிபூர் ரஹ்மான் MP

kuruvi.lk : முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன்தான் ’20’ஆவது திருத்தச்சட்டமூலத்தை அரசாங்கம் நிறைவேற்றியது. எனவே,  கொரோனா

வைரஸ் தாக்கத்தால் முஸ்லிம் மக்கள் எவராவது உயிரிழந்தால்  சடலத்தை அடக்கம் செய்வதற்கு இனியாவது அனுமதி வழங்கவேண்டும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (23) நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கொரோனா வைரஸ் பரவலையடுத்து உலக சுகாதார அமைப்பால் கடந்த மார்ச் 20 ஆம் திகதி வழிக்காட்டல்கள் அறிக்கையொன்றை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கைதான் இன்னும் நடைமுறையில் உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் எவராவது உயிரிழந்தால் அவரின் சடலத்தை எரிக்கலாம் அல்லது அடக்கம் செய்யலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடிகை விஜயலட்சுமி வாடகை செலுத்தவில்லை ஏமாற்றுகிறார்... காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் !

    newstm.in ப்ரெண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை விஜயலட்சுமி. இவர் இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக புகார் கூறி வருகிறார்.  அன்மையில் தான் அதிகளவில் மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளதாக வீடியோ வெளியிட்டிருந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

அவர் வெளியிட்டிருந்த விடியோவில், சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினரை குற்றம்சாட்டியிருந்ததோடு, சீமான் மற்றும் ஹரி நாடாரைக் கைது செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து பல்வேறு தகவல்களை அவ்வப்போது கூறி வந்த விஜயலட்சுமி தற்போது ஒரு புகாரில் சிக்கியுள்ளார்.  

சென்னை  திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள  தங்கும் விடுதியில் நடிகை விஜயலட்சுமி தனது தாயாருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு திருவான்மியூர் காவல் நிலையத்தில் விடுதியின் உரிமையாளர் சமீர் என்பவர், நடிகை விஜயலட்சுமி மீது பரபரப்பு புகார் ஒன்று அளித்துள்ளார்.

மட்டக்களப்பில் சிறுமி துஷ்பிரயோகம் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை

newsfirst.lk :மட்டக்களப்பு – வெள்ளாவெளி பகுதியில் 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவருக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி N.M.M. அப்துல்லா இன்று இந்த தீர்ப்பை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.  2009 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வெள்ளாவெளி பகுதியில் 13 வயது சிறுமியை 21 வயதான அம்பாறையை சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.      சுற்றிவளைப்பு கடமையின் போது துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி குறித்த சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பிரதிவாதிக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டமையால், 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

திமுக கூட்டணியை உடைக்க என் மீது பழி- திருமாவளவன் பேட்டி

maalaimalar : மகளிரை இழிவுபடுத்திப் பேசியதாக அரசியல் ஆதாயத்துக்காக சிலர் தவறாக சித்தரிக்கின்றனர் என்று திருமாவளவன் கூறியுள்ளார். சென்னை: மனுஸ்மிருதி என்ற நூலை தடை செய்ய கோரி சென்னை வள்ளூவர் கோட்டத்தில் திருமாவளவன் எம்பி தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் திருமாவளவன் கூறியதாவது, மகளிரையும் மனிதகுலத்தையும் இழிவுபடுத்தி உரைக்கும் மனுதர்ம நூலை தடை செய்ய வேண்டும். மகளிரை இழிவுபடுத்திப் பேசியதாக அரசியல் ஆதாயத்துக்காக சிலர் தவறாக சித்தரிக்கின்றனர்.

பெண்களை நான் இழிவுபடுத்திவிட்டாக என் மீது அபாண்டமாக பழி சுமத்துகின்றனர். இணையவழி கருத்தரங்கில் 40 நிமிடம் ஆற்றிய என் உரையில் 40 நொடியை துண்டித்து எனக்கெதிராக சனாதள சக்திகள் திரித்து வெளியிட்டுள்ளன. 

'20' குறித்து சுமந்திரன் உரை... அரசியலமைப்பில் இருபதாம் திருத்தம்

/tamil.theleader.lk  :ராஜபக்சர்களின் எதிர்கால குடும்ப சக்தியை உறுதிப்படுத்த அரசியலமைப்பில் இருபதாம் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இருபதாம் திருத்தத்திற்கான வாக்கெடுப்பு இன்று இரவு (22) நடைபெற உள்ளது.

ஆனால் 20 ஆவது திருத்தத்தில் இரட்டை குடியுரிமை தொடர்பான அரசாங்கத்தின் தேசியவாத நிலைப்பாடு, அமெரிக்க-இலங்கை குடிமகனான பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்குள் நுழைய அனுமதிப்பதா இல்லையா என்பது குறித்து இனவாதிகளின் கருத்து பாதிப்பை ஏற்படுத்தும் என தெறிய வருகின்றது .  20 இரட்டை குடியுரிமை தொடர்பான பிரிவுக்கு இதுவரை இருபத்தொரு அரசு எம்.பி.க்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இரட்டை குடியுரிமை விதிக்கு எதிராக ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷவுக்கும் அரசாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே நேற்று இரவு (21) நடந்த கலந்துரையாடல் சில உடன்படிக்கைகளுடன் முடிவடைந்துள்ளதாக தெறிய வருகின்றது.

பாலசிங்கம் வீட்டில் குண்டு வைக்கப்பட்ட சம்பவம் : வி.கே.டி.பாலன் மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு!

nakkheeran.in - அதிதேஜா : விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகரான பாலசிங்கத்தை, குண்டுவெடிப்பு நிகழ்த்தி கொல்ல முயன்றதாக தொடரப்பட்ட வி.கே.டி.பாலன் மீதான வழக்கை ரத்து செய்ய, சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கத்தைக் கொலை செய்யும் நோக்குடன், கடந்த 1985- ஆம் ஆண்டு, சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டது. இந்த குண்டுவெடிப்பில் யாரும் காயமடையவில்லை.இந்தச் சம்பவம் தொடர்பாக, கந்தசாமி, வி.கே.டி.பாலன், ரஞ்சன், மணவை தம்பி, பவானி, பிரேம்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.<>இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கந்தசாமி மற்றும் பிரேம்குமார் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். ரஞ்சன், மணவைதம்பி ஆகியோர் இறந்துவிட்டனர். ராதாகிருஷ்ணன் அப்ரூவராக மாறிவிட்டார். வி.கே.டி பாலன் மட்டும் வழக்கை எதிர் கொண்டுள்ளார்.

ஆளுநர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும்: எழுந்த கோரிக்கை!

 ஆளுநர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும்: எழுந்த கோரிக்கை!

minnambalam : ஆளுநர் 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமென அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.   நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்து மற்ற மாநிலங்கள் மருத்துவக் கலந்தாய்வுக்கு தயாராகிவிட்ட நிலையில், தமிழகம் இன்னும் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு மசோதாவிற்கான ஆளுநர் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. அதே சமயம், மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க தனக்கு 3-4 வாரங்கள் அவகாசம் தேவை என ஸ்டாலினுக்கு பதில் கடிதம் எழுதினார் ஆளுநர்.

சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரலில் ஒப்புதல் அளிக்கக் கோரி வலியுறுத்தியும் ஆளுநர் தாமதப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திரும்பப் பெற குடியரசுத் தலைவருக்கு விசிக தலைவர் திருமாவளவன் கடிதம் எழுதினார். அதேபோன்ற கோரிக்கை தற்போது வலுக்கத் துவங்கியுள்ளது.

வெள்ளி, 23 அக்டோபர், 2020

டொனால்டு டிரம்ப் : இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவில் காற்று "அசுத்தமாக" உள்ளது

  BBC : இன்று நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல் விவாதத்தில் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியதை ஆதரிக்கும் வகையில் பேசிய டொனால்டு டிரம்ப், இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவில் காற்று "அசுத்தமாக" உள்ளது என தெரிவித்துள்ளார். 

அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறும் சூழலில் வியாழனன்று மாலை இந்த விவாதம் நடைபெற்றது. 90 நிமிடங்கள் நடைபெற்ற இந்த விவாதத்தில் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கு பொது முடக்கத்தை கொண்டு வருவதிலிருந்து பருவ நிலை மாற்றம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் விதத்தில் எரிபொருள் தொழிற்சாலைகளை மூடுவது வரை என அனைத்தும் விவாதிக்கப்பட்டது. 

திருமாவளவன் மீது வழக்குப்பதிவு .. "மனுதர்மத்தில் இந்து பெண்கள்" என்ன பேசினார் திருமா முழு தொகுப்பு!

maalaimalar விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெண்களை கொச்சைப்படுத்தி பேசிய வீடியோ: திருமாவளவன் மீது வழக்குப்பதிவு ிடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சமூக வலைதளத்தில் பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக எதிர்ப்புகள் கிளம்பின. இதற்கிடையில் பா.ஜனதாவை சேர்ந்த அஸ்வத்தாமன் ஆன்லைன் மூலம் புகார் அளித்தார். இந்நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெண்களை கொச்சைப்படுத்தி பேசிய வீடியோ காரணமாக பல்வேறு தரப்பில் இருந்து புகார் வந்ததன் மூலம நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தீபாவளி .. தமிழகத்தில் இறப்போரை இகழ்ந்து பண்டிகையாகக் கொண்டாடும் மரபு சமீபத்தில்தான் விதைக்கப்பட்டது

எதிரியாகவே இருந்தாலும், அவர்களின் இறப்பைக் கொண்டாடுவது தமிழ்

மரபு அல்ல! மனித நேயமுள்ளவர்கள் தீபாவளியைக் கொண்டாடுவதில்லை!
Dhinakaran Chelliah : · தீபாவளி எதற்காக கொண்டாடுகிறோம் என்பதை முழுமையாகத் தெரியாமலேயே கொண்டாடுகிறவர்கள் நாம். இது வைதீகர்களின் பண்டிகை.எதிரியாகவே இருந்தாலும், அவர்களின் இறப்பைக் கொண்டாடும் மரபு தமிழ் மரபு அல்ல என்பதையும் மறந்துவிடலாகாது. இறப்போரை இகழ்ந்து அதைப் பண்டிகையாகக் கொண்டாடும் மரபு தமிழ் மண்ணில் சமீப காலங்களில்தான் விதைக்கப் பட்டது.    வதம் மற்றும் புராணங்கள் வர்ணிக்கும் தஸ்யூக்கள் தாசர்கள் சண்டாளர்கள் அரக்கர்கள் அசுரர்கள் ராட்சஷர்கள் நமது மூதாதையர்கள் என்பதை வேத மற்றும் புராண கதைகள் மூலம் புரிந்து கொள்ள இயலும். அசுர வதத்தை கொண்டாடுவதுதான் தீபாவளியின் நோக்கம் என்பதே புராண கதைகள் வெளிப்படுத்தும் உண்மை.கொல்லப்பட்ட நரகாசுரனின் வேண்டுதலின் படியே தீபாவளி கொண்டாடப்படுகிறதே என்பவர்கள் ஒன்றை சிந்திக்க வேண்டும் நரகாசுரனின் வதம் மட்டுமல்ல பத்மாசுரன் முதல் மகிஷாசுரன், இரண்யகசிபு, இராவணன், மகாபலி போன்ற பல அசுரர்களின் இறப்பும் கொண்டாடப்படுகிறது என்பதை மறந்துவிடக் கூடாது. 


பிகார்: சிறையில் இருந்து லாலு பிரச்சாரம்!

minnampalam : ிகார் சட்டமன்றத் தேர்தல் அக்டோபர், நவம்பரில் இரு கட்டங்களாக நடக்க இருக்கும் நிலையில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம்- பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைமையிலான மகா கத்பந்தன் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதற்கு இடையே ராம்விலாஸ் பாஸ்வான் மகன் சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி மத்தியில் பாஜகவோடு கூட்டணி, மாநிலத்தில் தனியாக நின்று என இரட்டை நிலைப்பாட்டோடு தேர்தலை சந்திக்கிறது.கடந்த சில நாட்களாக பிகார் தேர்தல் பரப்புரை கொரோனா ஊரடங்கையெல்லாம் மதிக்காமல் பரபரப்பாக பெருங்கூட்டத்தோடு நடைபெற்று வருகிறது. இன்று (அக்டோபர் 23) முதல் பிரதமர் மோடி பாஜக சார்பில் பிரசாரம் செய்ய இருக்கிறார்.

பெருங்காயம் இந்தியாவில் விளைவிக்கப்படுவதில்லை தெரியுமா?

அபர்ணா அல்லூரி பிபிசி நியூஸ், டெல்லி : பெருங்காயம். இந்திய
பெருங்காயம்

சமையலறைகளில் பல தசாப்தங்களாக அதிகம் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்று. ஆனால், இது இந்தியாவில் பயிரிடப்படுவது கிடையாது என்று தெரியுமா? கடந்த வாரம்தான் இந்தியாவின் இமயமலை தொடர்களில் உள்ள லாஹல் மற்றும் ஸ்பிட்டி பள்ளத்தாக்கில் ஆராய்ச்சியாளர்கள், சுமார் 800 பயிர்களை பயிரிட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இரானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு ஆறு வகை பெருங்காய விதைகளை நட இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி அளித்தது. இது நல்ல முடிவை தரும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம்" என ஆய்வகத்தில் இந்த பயிரை முளைக்க வைத்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான அசோக் குமார் கூறுகிறார். 

வ்வொரு 100 விதைகளில் 2 மட்டுமே முளைக்கும் என்பதால் இது அவசியமாகிறது என்கிறார் அவர். இல்லையென்றால் அந்த விதையே செயலற்றதாகிவிடும்.

தமிழக அரசு மீது பாமக நிறுவனர் ராமதாஸ் திடீர் தாக்கு.. அணி மாற தயாராகிவிட்டார்?

 

dhinakaran :சென்னை: இங்குள்ள ஆட்சியாளர்கள் எதையும் கண்டுகொள்வதில்லை என தமிழக அரசு மீது பாமக நிறுவனர் ராமதாஸ் திடீரென குற்றம்சாட்டியுள்ளார். மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பதற்கு முன்பு அதிமுக அரசை பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாக விமர்சித்து வந்தார். அதிமுக அரசு மக்கள் நலத்திட்டங்களை சரிவர செய்வதில்லை என்றும், ஊழல் அரசாகவே இந்த அரசு செயல்படுவதாகவும் தொடர் குற்றச்சாட்டுக்களை வைத்து வந்தார். இந்தநிலையில், 2019 மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் பாமக திடீரென கூட்டணி அமைத்தது. அதிமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை ராமதாஸ் தொடுத்து வந்த நிலையில் திடீரென கூட்டணி வைத்தது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது.

உலக பத்திரிகையாளர் அமைப்பு இந்தியாவுக்கு கண்டனம்

பாலகணேசன் அருணாசலம் :  · ஆஸ்திரியாவை தலைமையிடமாகக்


கொண்ட சர்வதேச பத்திரிகை நிறுவ னம் (ஐபிஐ) மற்றும் மற்றொரு ஐரோப்பி ய நாடான, பெல்ஜியத்தை தளமாகக் கொண்ட சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு (ஐஎஃப்ஜே) ஆகியவை மோடிக்கு இக்கடிதத்தை எழுதியுள்ளன. சுதந்திரமான மற்றும் விமர்சன ஊடக வியலாளர்களை துன்புறுத்துவதற்கு தேசத்துரோக சட்டங்கள் பயன்படுத்தப் படுகிறது. 

இது சர்வதேச கடமைகளை இந்தியா மீறுவதற்கு ஒப்பாகும். எந்த வொரு விமர்சனத்தையும் மவுனமாக்கு வதற்கான அரசின் முயற்சிதான் இது. பத்திரிகை வேலையை தேசத்துரோகம் என்ற பிரிவின்கீழ் கொண்டு சென்று உட்படுத்துவதும், நாட்டின் பாதுகாப்புக் கே ஊறு என கூறுவதற்கும் முகாந்திர மே கிடையாது.          மார்ச் 25ம் தேதிமுதல் இதுவரை கொரோ னா காலத்தில், 55 பத்திரிக்கையாளர் கள் குறி வைக்கப்பட்டுள்ளனர் என்று, ஆஆர்ஏஜி குரூப் ஆய்வில் தெரியவந்து ள்ளது 

தமிழ் தொலைக்காட்சியில் அதிக டி.ஆர்.பி ரேட்டிங் பெற்றுள்ள படங்கள்

tamil.filmibeat.com :தமிழ் முன்னணி நடிகர்களின் படங்கள் ரசிகர்களால் திரையரங்குகளில் கொண்டாடப்பட்டு வெற்றி பெறுவதை தொடர்ந்து தொலைக்காட்சிகளிலும் பல ரசிகர்களால் பார்க்கப்பட்டு பிரபலமாகிறது. டி.ஆர்.பி (தொலைக்காட்சி மதிப்பீட்டு புள்ளி)-க்கு தொலைக்காட்சி சேனல்கள் போட்டியிடுவது பொதுவானது. டிஆர்பி-க்கு பதிலாக டி.வி.டி (ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி பார்வையாளர்கள்) இப்போது உள்ளது. டிஆர்பி இப்போது இந்த மதிப்பீட்டின் பயன்பாட்டைக் குறைத்துள்ளது, ஏனெனில் டிஆர்பி பார்வையாளர்களுக்கு செட்-அப் பெட்டிகளில் மட்டுமே மதிப்பீட்டை வழங்குகிறது. அதற்கு பதிலாக, விளம்பரதாரர்கள் டி.வி.டி (அனைத்து சாதனங்களிலும் நிகழ்ச்சியைப் பார்க்கும் நபர்கள்) அடிப்படையிலான மதிப்பீட்டைக் கருத்தில் கொண்டுள்ளனர். தமிழ் சேனல்களில் சிறந்த டிவிடி மதிப்பீடு பெற்றுள்ள திரைப்படங்கள் இந்த பட்டியலில் உள்ளன.

1. விஸ்வாசம் (TVT: 1,81,43,000)

விமர்சகர்கள் கருத்து வகை Action வெளியீட்டு தேதி

செல்ஃபோன் கொள்ளையில் மத்தியப்பிரதேச கும்பலுக்குத் தொடர்பு? கிருஷ்ணகிரி ... 10 கோடி ரூபாய்

nakkheeran.in - elayaraja">இளையராஜா ..கிருஷ்ணகிரி அருகே, கண்டெய்னர் லாரியைக் கடத்தி, பத்து கோடி ரூபாய் பெறுமானமுள்ள செல்ஃபோன்களை கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கும்பலுக்குத் தொடர்பு இருக்கலாம் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சென்னையில் உள்ள தனியார் செல்ஃபோன் கம்பெனியில் இருந்து, மும்பையில் உள்ள ஷோரூம்களுக்கு விநியோகம் செய்வதற்காக ஒரு கண்டெய்னர் லாரியில் 10 கோடி ரூபாய் பெறுமானமுள்ள ரெட்மி ரக செல்ஃபோன்கள் ஏற்றப்பட்டன. இந்த லாரி, அக். 20- ஆம் தேதி இரவு புறப்பட்டது. சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த சதீஷ்குமார் (29), கோவையைச் சேர்ந்த அருண் (26) ஆகியோர் ஓட்டுநர்களாக இருந்தனர்.  

பிரான்ஸ ஆசிரியர் கொலை ..15 மாணவர்களும் சிறைக்கு அனுப்பப்பட்டனர்

thinakkural - பரிஸிலிருந்து அருண் சண்முகலிங்கம் : இஸ்லாமிய தீவிரவாதிகளால் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட கல்லூரி ஆசிரியர் Samuel Paty அவருடைய முகம் பிரெஞ்சுக் குடியரசின் முகம் என்று பிரான்ஸ் நாட்டின் அதிபர் Emmanuel Macron தெரிவித்துள்ளார். Sorbonne பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த அஞ்சலி கூட்டத்தில் முன்னாள் அதிபர் François Holland, பரிஸ் நகரத்தின் முதல்வர் Anne Hidalgo, முன்னாள் பிரதமர்களான Edouard Philippe, Manuel Valls Bernard Cazeneue, Jean Marc Ayrault ஆகியோருடன், அழைக்கப்பட்ட 400 முக்கிய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இதேவேளை,

ஆசிரியர் Samuel Paty அவர்களின் கொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களில் 14 வயது 15வயது மாணவர்கள் நீதிபதியினால் சிறைக்கு அனுப்பப்பட்டு உள்ளார்கள்.   இந்த மாணவர்கள்தான் ஆசிரியரை கொலையாளிக்குக் காட்டிக் கொடுத்தார்கள்.  இந்த மாணவர்களுக்குக் கொலையாளி பணம் வழங்கி ஆசிரியரைக் காட்டித்தருமாறு கேட்டிருந்தார்.

7.5 சதவிகித இட ஒதுக்கீடு ... ஒரு மாதம் அவகாசம் கேட்ட ஆளுநர்: ஆர்ப்பாட்டத்தில் திமுக!

 ஒரு மாதம் அவகாசம் கேட்ட ஆளுநர்: ஆர்ப்பாட்டத்தில் திமுக!

minnambalam :7.5 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதில் கடிதம் எழுதியுள்ளார்.

மருத்துவக் கலந்தாய்வுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழகத்தில் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு மசோதா மீதான ஆளுநரின் முடிவு வரும் வரை, கலந்தாய்வு நடத்த மாட்டோம் என தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்கால நலன் கருதி உடனடியாக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க தமிழக அரசு தரப்பில் ஐந்து அமைச்சர்கள் ஆளுநரை நேரில் சந்தித்து அழுத்தம் அளித்தும், எதிர்க்கட்சித் தலைவர் கடிதம் எழுதியும், அனைத்து கட்சிகளும் வலியுறுத்தியும் ஆளுநர் இன்னும் முடிவு எடுக்கவில்லை. முன்னேறிய சாதியினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினால்தான் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என ஆளுநர் தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டதாகவும் ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

வியாழன், 22 அக்டோபர், 2020

நிர்வாணமாக கால்வாயில் மிதந்து வந்த இளம் பெண் உடல்.. உ.பியில் இன்னும் ஒரு கொடூரம்..

Hemavandhana - tamil.oneindia.com : லக்னோ: நிர்வாணமாக இளம்பெண்ணின் சடலம் கால்வாயில் மிதந்து வந்ததை பார்த்து ஊர்மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.. 

கொடுமையின் உச்சமான உபியில்தான இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. நாளுக்கு நாள் வடமாநிலங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது.. படிப்பறிவில்லாத காரணங்கள், அதீத மூடபழக்கவழக்கங்கள், நாகரீக வளர்ச்சி இல்லாதவை, சாதீய உக்கிரம் போன்ற காரணங்களால் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகமாக கட்டவிழ்த்துப்பட்டு கொண்டே இருக்கின்றன. இன்னும் ஹத்ராஸ் சம்பவத்துக்கே விடிவு கிடைக்காத நிலையில், அடுத்தடுத்த நிகழ்வுகள் நடந்து மக்களை நிலைகுலைய வைத்து வருகின்றன.. இப்போது மீண்டும் ஒரு சம்பவம் நடந்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.பராபங்கி மாவட்டத்தை சேர்ந்த 17 வயசு இளம்பெண் அவர்.. அதே பகுதியில் வசிக்கும் ஒரு இளைஞரை காதலித்து வந்தார்.. இருவருமே உயிருக்கு உயிராக காதலித்தவர்கள்.. .அதனால் ஹோட்டல்,சினிமா என்று ஜாலியாக சுற்றி வந்தனர்.. இந்த விஷயம் பெண்ணின் வீட்டிற்கு தெரிந்துவிட்டது. 

புலிகள் மீதான தடை நீக்கப்படுவதை எதிர்த்து இலங்கை மேல்முறையீடு...!!!

zeenews.india.com :கொழும்பு: பிரிட்டனின் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் மேல்முறையீட்டு ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து இலங்கை மேல்முறையீடு செய்துள்ளது.  அந்த ஆணையம், தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பை பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது.

2000 ஆம் ஆண்டின் இங்கிலாந்து பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் சேர்க்கப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பை, நீக்க வேண்டும் எனக் கோரி, 2019, மார்ச் 8, 2019  அன்று பிரிட்டிஷ் உள்துறை, வெளியுறவுத்துறை செயலாளரின் முடிவை எதிர்த்து, LTTE  அமைப்பு மேல்முறையீடு செய்தது. 

ஆணைக்குழுவில் நடந்த இந்த வழக்கில், இலங்கை (Srilanka) சம்பந்தப்படவில்லை என்றாலும்,  விடுதலை புலிகளின்  பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து தகவல்களை வழங்குவதன் மூலம் இலங்கை அரசு பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு உதவியது.

ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீர் மரணம்

webdunia :பிரேசிலா:கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 1 மற்றும் 2 ஆம் கட்ட மனித பரிசோதனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

மேலும், இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் இறுதிகட்ட மருத்துவ பரிசோதனை இங்கிலாந்து, இந்தியா, பிரேசில், தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த பரிசோதனையில் ஆயிரக்கணக்கான தன்னாவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பிரேசில் நாட்டில் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீரென உயிரிழந்துள்ளார். ரியோ டி ஜெனிரோ நகரில் வசித்துவந்த அந்த தன்னார்வலரின் வயது 28 என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு

 maalaimalar : தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கான சட்டமன்ற தொகுதிகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு சென்னை: தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கான சட்டமன்ற தொகுதிகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 சட்டப்பேரவை தொகுதிகள்: சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டம்: ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய 4 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

திருப்பத்தூர் மாவட்டம்: வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 4 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

வேலூர் மாவட்டம்: காட்பாடி, வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், கீழவைத்தியனாங்குப்பம் ஆகிய 5 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

ராணிப்பேட்டை மாவட்டம்: அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய 4 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

விழுப்புரம் மாவட்டம்: செஞ்சி, மைலம், திண்டிவனம், வானூர், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர் ஆகிய 7 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

திராவிட சித்தாந்தத்தால் தமிழ்நாட்டில் பொருளாதார பரவல்! Consumers + Manufacturers ஒரு சங்கிலித் தொடர்.

Kandasamy Mariyappan : · திராவிட சித்தாந்தத்தால், தமிழ்நாட்டில் பொருளாதார பரவல், ஒரு எளிய விளக்கம்: 1995ல் எனது நண்பர் திரு.K.நடராஜன் அவர்கள் பொருளாதாரம் பற்றி ஒரு எளிமையான விளக்கத்தை கொடுத்தார். ஒரு TV விற்கப்படுகிறது என்றால், நேரடி பயனாளிகள், 1. கடை முதலாளி,
2. Distributor,
3. வாகன முதலாளி,
4. C&F முதலாளி,
5. வாகன முதலாளி,
6. பொருள் தயாரிப்பாளர் (Brand Owner),
7. உதிரி பாகங்கள் தயாரிக்கும் முதலாளி,
8. வாகன முதலாளி,
9. Raw material supplier.
அடுத்து மறைமுக பயனாளிகள்
1. Raw material தரும் தொழிலாளர்கள்,
2. உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள்,
3. உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள்,
4. வாகன தொழிலாளர்கள்,
5. C&Fல் வேலை பார்க்கும் தொழிலாளர்கள்,
6. Distributor இடத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள்,
7. வாகன நிறுவனத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள்.
8. விற்பனை கடையில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள்.
இது, வாங்குபவர்களுக்கும் (Consumers) உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கும் (Manufacturers) உள்ள ஒரு சங்கிலித் தொடர்.

இந்தியா, சீனா போருக்கு வித்திட்ட "1959" எல்லை மோதல் - அதிகம் அறியப்படாத அதிர்ச்சிப் பின்னணி

எம்.ஏ. பரணி தரன் பிபிசி தமிழ் : பட மூலாதாரம், crpf படக்குறிப்பு, ஹாட் ஸ்பிரிங்ஸ் முகாம் தளம். கடந்த 1959ம் ஆண்டு அக்டோபரில் லடாக் பகுதியில் சீன படை வீரர்கள், இந்தியப் பகுதிகளை அத்துமீறி ஆக்கிரமித்ததை எதிர்கொண்டபோது ஏற்பட்ட சண்டையில் இந்திய காவலர்கள் பத்து பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, ஆண்டுதோறும், அக்டோபர் 21ஆம் தேதி தேசிய காவலர் வீர வணக்க நாள் ஆக கடைபிடிக்கப்படுகிறது. தற்போது இந்திய முப்படைகளில் பணியில் உயிர்த்தியாகம் செய்தவர்களுக்காக டெல்லி இந்தியா கேட் பகுதியில் அமர் ஜவான் ஜோதி என்ற பெயரில் நினைவிடம் உள்ளது.
இந்திய படையினர் சடலங்களை திருப்பி தந்த சீனா: 1959 நிகழ்வு

அதைச்சுற்றிய தூண்களின் சுவர்களில் இந்தியாவுக்காக உயிர்த் தியாகம் செய்த முப்படை வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கும். இவர்களுக்காக தேசிய அருங்காட்சியகமும் அருகே கட்டப்பட்டுள்ளது.

முப்படையினரைப் போலவே, காவல் துறையினருக்கும் அத்தகைய கெளரவம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் டெல்லியில் காவலர் நினைவிடம் அமைக்க அடல் பிஹாரி வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது, அடிக்கல் நாட்டப்பட்டது.

கொங்கு வெற்றிக்கு திமுகவின் மாற்று வியூகம்!

டிஜிட்டல் திண்ணை: கொங்கு வெற்றிக்கு திமுகவின்   மாற்று வியூகம்!

minnambalam :மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ்அப் ஆன்லைனில் வந்தது."திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அக்டோபர் 21ஆம் தேதி காலை கொங்கு மண்டல திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.

ஏற்கனவே கோவை மாவட்டத்திற்கான ஆய்வுக் கூட்டத்தை தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் கே. என். நேரு நேரடியாக சென்று நடத்தினார். இதேபோல திருப்பூர் மாவட்ட திமுக ஆய்வு கூட்டத்தையும் நேரு நடத்தினார். அவர் நடத்திய ஆய்வின் அடிப்படையில் கோவை மாவட்ட திமுக , இரு சட்டமன்ற தொகுதிகள் ஒரு மாவட்டமாக பிரிக்கப்பட்டது. இதேபோல கொங்கு பகுதியில் மற்ற மாவட்டங்களும் பிரிக்கப்படுமென திமுகவினர் எதிர்பார்த்திருந்தனர்.

பீகார் நிதிஷ் குமாருக்கு பின்னடைவு .. சட்டசபைத் தேர்தல் கருத்துக் கணிப்பு டைம்ஸ் நவ் - சி வோட்டர்

Vishnupriya R- tamil.oneindia.com : டெல்லி: பீகார் சட்டசபைத் தேர்தல் தொடர்பாக டைம்ஸ் நவ் - சி வோட்டர் எடுத்துள்ள கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி முதல்வர் நிதீஷ் குமார் யாத அரசின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என்று வாக்கெடுப்பில் கலந்து கொண்டவர்கள் அதிக அளவில் தெரிவித்துள்ளனர். பீகாரில் 3 கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்ட தேர்தல் அக்டோபர் 28ம் தேதியும், 2வது கட்டத் தேர்தல் நவம்பர் 3ம் தேதியும், 3வது கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 7ம் தேதியும் நடைபெறவுள்ளன. நவம்பர் 10ம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன.
இந்த நிலையில் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. அதன்படி இன்று டைம்ஸ் நவ் டிவியும்- சிவோட்டர்ஸும் இணைந்து எடுத்த கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின. முதலில் முதல்வர் நிதீஷ் குமார் அரசின் செயல்பாடுகள் எப்படி இருந்தன என்ற முடிவு வெளியிடப்பட்டது. அதில் நிதீஷ் குமாரின் செயல்பாடுகள் முதல்வராக சரியாக இல்லை என்று 41.22 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். 29.2 சதவீதம் பேர் ஓரளவு திருப்தி என்று கூறியுள்ளனர். மிகவும் திருப்தி என்று சொன்னோர் எண்ணிக்கை 28.77 சதவீதமாகும்.  

நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு வலைத்தளத்தில் பாலியல் மிரட்டல் விடுத்த நபர் இலங்கையில்

   dailythanthi.com  நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு சமூக வலைத்தளத்தில் பாலியல் மிரட்டல் விடுத்த நபர் இலங்கையில் இருப்பது கண்டுபிடிப்பு கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை நடிகர் விஜய்சேதுபதி, முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் 800 வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதாக இருந்தது. இதற்கு தமிழ் பிரபலங்கள், அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாக மாறியது. இதுகுறித்து விஜய்சேதுபதி கருத்து எதுவும் தெரிவிக்காமல் தவிர்த்து வந்தார். ஆனால் இறுதியாக அப்படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலகியுள்ளார். இந்நிலையில், விஜய்சேதுபதியின் மகளுக்கு டுவிட்டர்வாசி ஒருவர் பாலியல் ரீதியாக மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டுவிட்டரில் ரித்திக் என்ற பெயர் கொண்ட நபர் இந்த மிரட்டலை விடுத்துள்ளார். இதற்கு பிரபலங்கள், நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

புதன், 21 அக்டோபர், 2020

வெற்றிவேல் இடத்தில் அடுத்து யார்?

minnambalam :அமமுகவின் பொருளாளராகவும், அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் தளபதியாகவும் இருந்த வெற்றிவேல், கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு காலமானார்.

வெற்றிவேலின் இடத்தை நிரப்பப் போவது யார் என்பது குறித்த விவாதங்கள் அமமுக தலைமையிலும், அதன் நிர்வாகிகள் இடையிலும் ஆரம்பித்துவிட்டன. அமமுகவின் பொருளாளர், சென்னை மண்டலப் பொறுப்பாளர் , வடசென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் என முப்பெரும் பொறுப்புகளை கட்சியில் வகித்த வெற்றிவேல் தினகரனுக்கு மிகவும் நெருக்கமானவர்.  கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சென்னையை ஒட்டிய தொகுதிகளின் தேர்தல் செலவுக்காக ஒரு, பெரும் தொகையை வெற்றிவேலிடம் கொடுத்திருக்கிறார் தினகரன். தேர்தல் முடிந்ததும் அதற்கான கணக்கு வழக்குகளை எழுதிக் கொண்டு தினகரனை சந்தித்திருக்கிறார் வெற்றிவேல். ‘சார்...எலக்‌ஷன் செலவுக் கணக்கெல்லாம் இதுல இருக்கு’ என்று ஒரு ஃபைலை கொடுக்க, ‘அதெல்லாம் இப்ப யாரு உங்ககிட்ட கேட்டா?’என்று அதை வாங்கவே மறுத்துவிட்டார் தினகரன். அந்த அளவுக்கு வெற்றிவேல் மீது அபார நம்பிக்கை வைத்திருந்தவர் தினகரன். அதேபோல வெற்றிவேலும் சசிகலா, தினகரனுக்கு பெரிய விசுவாசியாக இருந்தவர். கடைசியாக சில மாதங்களில் தினகரனை வெற்றிவேலால் சந்திக்க முடியவில்லை. ஆனாலும் அவரது உத்தரவுக்கிணங்க மாவட்ட செயலாளர்கள் கூட்டங்களை சென்னையில் தலைமை அலுவலகத்தில் நடத்தினார் வெற்றிவேல். 

பிளாஸ்டிக் டிரம்மில் இருந்து அழுகிய நிலையில் திருநங்கை உடல் மீட்பு : கோவையில் பயங்கரம்!!

m.dailyhunt.in : கோவை சாய்பாபா காலனி பகுதியில் அழுகிய கோவைநிலையில் திருநங்கையின் உடல் மீட்கப்பட்டுள்ளது. கோவை சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையின் அருகில் பிளாஸ்டிக் டிரம் ஒன்றில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் சாய்பாபாகாலனி போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் அந்த பிளாஸ்டிக் டிரம்மைிறந்து பார்த்த போது அதனுள் அழுகிய நிலையில் சடலம் ஒன்று இருந்தது.

விஜய் மக்கள் இயக்கம் தேவைப்படும்போது அரசியல் கட்சியாக மாறும் – எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்

tamil.indianexpress.com P நடிகர் விஜயின் தந்தை, இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் மக்கள் இயக்கம் தேவைப்படும்போது அரசியல் கட்சியாக மாறும் என்றும் கூறியுள்ளார். சில ஆண்டுகளாக நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் தங்கள் விருப்பங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். விஜய் நடித்த தலைவா படத்தின்போது ஏற்பட்ட நிகழ்வுகளால் விஜயின் அரசியல் பிரவேசம் பற்றி பேசப்பட்டுவருகிறது. நடிகர் விஜய் மாஸ்டர் படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிருந்தபோது, விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தினார். இதனால், விஜயைப் பற்றிய அரசியல் பேச்சுகள் அதிக அளவில் கிளம்பியது. ஆனால், விஜய், மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் எதுவும் பேசவில்லை. இதனால், நடிகர் விஜய் அரசியலில் இருந்து பின்வாங்குகிறாரா என்றும் பேச்சுகள் எழுந்தன. இதனிடையே சிலர், விஜயின் தந்தை பாஜகவில் இணைய உள்ளதாக வதந்திகள் பரவியது.

கதறி அழுத வனிதா.. ஹெலன் சொன்னதெல்லாம் உண்மைதான்.. குடிகாரன் பீட்டர் பால்.. ஏமாந்து போய்ட்டேன்

Mari S - tamil.filmibeat.com :    சென்னை: பீட்டர் பாலுக்கும் தனக்கும் நடந்த பிரச்சனை குறித்து விரிவாக வீடியோ வெளியிட்டு கதறி அழுதுள்ளார் நடிகை வனிதா விஜயகுமார். தற்போது உண்மையை சொன்ன Vanitha | Filmibeat Tamil வனிதா விஜயகுமார் தனது மூன்றாவது கணவர் பீட்டர் பாலை அடித்து துரத்தியது உண்மை தான் என தயாரிப்பாளர் ரவீந்திரன் போட்ட பதிவை கொரோனா வைரஸை விட வேகமாக பரவியது. இந்நிலையில், தனக்கும் பீட்டர் பாலுக்கு இடையே பிரிவு ஏற்பட்டு விட்டதாக ட்வீட் போட்ட வனிதா, அது தொடர்பாக வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

கடந்த ஜூன் 27ம் தேதி கொரோனா லாக்டவுனிலும் முத்த மழை பொழிந்தபடி ஷாம்பைன் பொங்க, வயதுக்கு வந்த தனது இரு மகள்களையும் வைத்துக் கொண்டு நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பால் எனும் விஷுவல் எடிட்டரை திருமணம் செய்து கொண்டார். அந்த திருமண சந்தோஷம் முடிவதற்குள் சர்ச்சைகள் கிளம்பின. சட்ட விரோதமாக சட்ட விரோதமாக பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன், தன்னை விவாகரத்து செய்யாமலே நடிகை வனிதாவை பீட்டர் பால் திருமணம் செய்து கொண்டார் என ஹெலன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஹெலனுக்கு ஆதரவாக லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், கஸ்தூரி சங்கர் உள்ளிட்டோர் ஆஜராக அனைவரையும் போட்டா போட்டி பேட்டியால் பந்தாடினார் வனிதா

அதிமுகவுடன் இணைந்து போராட தயார்: மு.க.ஸ்டாலின்

minnambalam : 7.5 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பாக ஆளுநருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 2017ஆம் ஆண்டில் நீட் தேர்வு வந்த பிறகு அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேருவது மிகவும் குறைந்தது. இதனால், நீதிபதி கலையரசன் குழு அறிக்கையின்படி, அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு கொண்டு வரும் சட்ட மசோதா சட்டமன்றத்தில் நிறைவேறியது. ஆனால் தமிழக அரசு, அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தும் எழுவர் விடுதலை பரிந்துரையைப் போலவே 7.5 சதவிகித சட்ட மசோதாவுக்கும் ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்தி வருகிறார். ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் மருத்துவக் கலந்தாய்வை நடத்தப்போவதில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு இன்று (அக்டோபர் 21) கடிதம் எழுதியிருக்கிறார். அதில், “கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் மருத்துவராகும் கனவை நீட் தேர்வு தடை செய்வதால், அதனை ரத்துசெய்ய வேண்டுமென திமுக கோரி வருவது உங்களுக்கு தெரியும் என நம்புகிறேன்

புலிகளை தடைசெய்தது தவறு: இங்கிலாந்து நீதிமன்றம்

minnambalam :விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை தொடர்பாக இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், எவ்விதமான பயங்கரவாத செயற்பாடுகளிலும் விடுதலைப்புலிகள் ஈடுபடவில்லை எனச்சுட்டிக்காட்டி, தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்கள் பட்டியலில் இருந்து விடுதலை புலிகள் பெயரை நீக்குமாறு இங்கிலாந்து உள்துறை அமைச்சரிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியிருந்தது. இதனை 2019 மார்ச் மாதம் அந்நாட்டு உள்துறை அமைச்சகம் நிராகரித்திருந்த நிலையில், தடையை நீக்கும் பொருட்டு Proscribed Organisations Appeal Commission (‘POAC’) ஆணையத்திடம் நாடு கடந்த அரசு வழக்கு தொடர்ந்தது. 

அதில், விடுதலைப் புலிகள் மீதான தடை என்பது தமிழர்களின் பேச்சு சுதந்திரத்துக்கும், கருத்து சுதந்திரத்துக்கும் இடையூறானது என தமிழீழ அரசின் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

பெரியாரிய உணர்வாளர்களின் கூட்டமைப்பு வெளியிட்ட தமிழ்நாடு கொடி

Raj Dev : · பெரியாரிய உணர்வாளர்களின் கூட்டமைப்பு வெளியிட்டு இருக்கிற தமிழ்நாடு கொடி விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. வெள்ளை நிறப்பின்னணியில் சிவப்பு வண்ணத்தில் தமிழ்நாடு வரைபடம் தான் கொடி. பெரியார் என்று சொல்லி விட்டு கருப்பு இல்லாமல் எப்படி? 

திராவிடம் என்ற பெயர் எங்கே? என்றெல்லாம் குறைபடுகிறார்கள். சிதறிய சிறுக் குழுக்களாக இருந்த பல அமைப்புகள் ஒன்று கூடி ஒரு குடை அமைப்பின் கீழ் ஒருங்கிணைந்து இருப்பதே முக்கிய மாற்றம் என்பதை உணர வேண்டும். இந்த ஒருங்கிணைப்பை சாத்தியப்படுத்தியிருப்பது ஏதும் அகவய விருப்பு என்று கூட சொல்ல முடியாது; சாதிய/மதவாத சக்திகள் ஏற்படுத்திய புறநிலை நெருக்கடி எனபது முக்கியமானது. எனவே இப்படி ஒரு ஒருங்கிணைவின் தேவை ஒரு அவசியத்தின் பால் எழுந்தது என்பதை முதலில் உணர வேண்டும்.       இந்த கூட்டமைப்பில் இணைந்திருக்கும் கட்சிகளுக்கு தனித்தனிக் கொள்கைகள் உண்டு. மார்க்சியம், பெரியாரியம், தலித்தியம் போன்றவற்றை அவை தனித்தனியே வலியுறுத்துபவை. தமிழ்நாட்டில் இருப்பதால் தந்தை பெரியார் பெயரை கூட்டமைப்புக்கு வைத்திருப்பது முக்கிய அம்சம். 

UP: 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 7 வயது சிறுவன்..!

Agra: A 7-year-old boy from Aligarh, Uttar Pradesh allegedly raped a 5-and-a-half-year-old girl. The accused boy was produced before the Juvenile Justice (JJ) Board on Tuesday. The girl had gone to take her ball from the accused's house when he allegedly raped her.  

zeenews.india.com உ.பி-யில் 7 வயது சிறுவன் மைனர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது..! 

அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவத்தில், அலிகரில் 7 வயது சிறுவன் தனது ஐந்தரை வயது அண்டை வீட்டார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் ஒரு போக்ஸோ வழக்கை (POCSO case) பதிவு செய்துள்ளனர். கவர்சி காவல் நிலையத்தில் IPC-யின் பிரிவு 376 (கற்பழிப்பு வழக்கு') மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் சட்டத்தின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் செவ்வாய்க்கிழமை சிறார் நீதி மன்றத்தின் (JJ) முன் ஆஜர்படுத்தப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு (குற்ற) அரவிந்த்குமார் தெரிவித்தார்.குழந்தை நல அலுவலருக்கு அவர் அளித்த அறிக்கையில், பாதிக்கப்பட்ட பெண் தனது பந்தை மீட்க தனது பக்கத்து வீட்டுக்குச் சென்றபோது சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறினார். 

இலங்கைக்கு கடத்தவிருந்த 500 கிலோகிராம் மஞ்சள் பறிமுதல்.. இராமேஸ்வரம் கடல் பகுதியில்

 

எஸ்.றொசேரியன் லெம்பேட்   :  இலங்கைக்குக் கடத்த இருந்த 500 கிலோ கிராம் மஞ்சள் மூட்டைகளை, இராமேஸ்வரம் கடல் பகுதியில் வைத்து படகுடன் இன்று (20) அதிகாலை இந்திய சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய வேதாளைப் பகுதியைச் சேர்ந்த மூவரைக் கைது செய்து, இந்திய சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் முக்கிய குற்றவாளிகள் குறித்து வேதாளை, தனுஸ்கோடி, மரைக்காயர்பட்டிணம், கீழக்கரைப் பகுதிகளில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன என இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. tm.lk

பஞ்சாப் சவால் ! வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் சட்டசபையில் 4 மசோதாக்கள் நிறைவேற்றம்

dailythanthi.com : மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை முறியடிக்கும் வகையில் 4 மசோதாக்கள் பஞ்சாப் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன. சண்டிகார், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை முறியடிக்கும் வகையில் 4 மசோதாக்களும், தீர்மானமும் பஞ்சாப் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன. மசோதாக்களுக்கு விரைவாக ஒப்புதல் அளிக்குமாறு கவர்னரை சந்தித்து முதல்-மந்திரி அமரீந்தர் சிங் வலியுறுத்தினார். விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு கடந்த மாதம் 3 வேளாண் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. ஜனாதிபதி ஒப்புதலுடன் அம்மசோதாக்கள் சட்டவடிவம் பெற்றுள்ளன. இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகளும், சில விவசாய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் ரெயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

செவ்வாய், 20 அக்டோபர், 2020

விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்தவர் மீது 153, 294பி, மற்றும் 67 ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு சைபர் கிரைம்

webdunia : முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்படமான ‘800’ என்ற திரைப்படத்தில் நடிக்க முடிவெடுத்த விஜய் சேதுபதிக்கு கண்டனங்கள் குவிந்தது என்பதும், அதன்பின்னர் அவர் ‘நன்றி வணக்கம்’ என்று கூறி அந்த படத்தில் இருந்து விலகினார் என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் 800 பட விவகாரத்தின்போது ஒருசில நெட்டிசன்கள் விஜய் சேதுபதி மகளுக்கு சமூக வலைதளங்களில் பாலியல் மிரட்டல் விடுத்தனர். இதற்கு கடுமையான கண்டனங்களை கனிமொழி எம்பி உள்பட பலர் தெரிவித்தனர். இந்த நிலையில் விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து 153, 294பி, மற்றும் 67 ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது

நடிகர் வடிவேல் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்!

dhinakaran :சென்னை : திரைத்துறையில் சில காலமாகத் தலைகாட்டாமல் இருந்த வடிவேலு தற்போது பாஜகவில் இணையவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக பாஜகவில் ஏராளமான தமிழக நடிகர், நடிகைகள் இணைந்துள்ளன. கங்கை அமரன், கஸ்தூரி, ராதாரவி, கெளதமி, நமீதா, விஜயகுமார், காய்த்ரி ரகுராம், பேரரசு, எஸ்.வி சேகர், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், குஷ்பு உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

விஜய் சேதுபதியின் மகளுக்கு வக்கிர மிரட்டல்: திமுக எம்.பி. கனிமொழி, உ.வாசுகி கடும் கண்டனம்

Kanimozhi (கனிமொழி) @KanimozhiDMK விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்ல மிகுந்த ஆபத்தானதும் கூட. பெண்கள் மற்றும் குழந்தைகளை மிரட்டுவதுதான், கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம். இதை செய்த நபர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

 Mathivanan Maran - tamil.oneindia.com :  சென்னை: நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு சமூக வலைதளங்களில் வக்கிர மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதற்கு திமுக எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கைப் படத்தில் விஜய்சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஈழத் தமிழர் போராட்டங்களை கொச்சைப்படுத்திய முரளிதரன் வாழ்க்கை படத்தில் விஜய்சேதுபதி நடிக்க கூடாது என எதிர்ப்பு எழுந்தது.
முரளிதரன் வேண்டுகோள் இதனால் முத்தையா முரளிதரனே ஒரு அறிக்கையில், என்னுடைய வாழ்க்கை படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிக் கொள்ளட்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்று விஜய்சேதுபதியும் முத்தையா முரளிதரன் தொடர்பான படத்தில் இருந்து விலகிவிட்டார்.
விஜய்சேதுபதி முடிவு விஜய்சேதுபதி முடிவு ஆனால் இதை முழு விளக்கமாக விஜய் சேதுபதி விவரிக்காமல் நன்றி வணக்கம் என மட்டும் பதிவிட்டிருந்தார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின் போதும் இதேபோல ஒரு பதிலை சொல்லி இருந்தார் விஜய்சேதுபதி. இதனால் இந்த பட விவகாரத்தில் விஜய்சேதுபதி காட்டிய அணுகுமுறை விமர்சிக்கப்பட்டு வருகிறது.

30 லட்சத்தை இழந்தேன்: ஆன்லைன் சூதாட்டத்தால் தீக்குளித்து இறந்த இளைஞர்!

  minnambalam: பலரைப் போலவே இவரும் ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அதற்கு அடிமையாகவே மாறிய அவர், தன்னுடைய சேமிப்பு பணத்தை கட்டி அதனை இழந்ததோடு மட்டுமல்லாமல், கடன் வாங்கியும் விளையாடி இருக்கிறார். இந்த வகையில் சுமார் 30 லட்சம் ரூபாயை கடனாக வாங்கி இழந்திருக்கிறார். கடன் தொகை அதிகமானதால் மனமுடைந்த விஜயகுமார், தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

அதற்கு முன்பாக தனது மனைவிக்கு வாட்ஸ் ஆப்பில் அவர் அனுப்பிய உருக்கமான ஆடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அதில், “என்னை மன்னிச்சிடு மதி. என்னால ஒன்னும் பண்ண முடியல மதி. தூங்காம கண்ணெல்லாம் மங்கலா தெரியுது. உடம்பெல்லாம் போயி வீக் ஆயிடுச்சி மதி. நான் ஒரு ரூபா ரெண்டு ரூபா விடல மதி. கணக்குப் பாத்தா 30 லட்ச ரூபாய்க்கு மேல விட்ருக்கேன். தப்புதான். போதைமாதிரி விளையாடிட்டே இருந்துட்டேன். ஒரு நாளைக்கு ரூ.50,000 ஜெயிச்சாக்கா மத்த மூனு நாள்ல நம்மக்கிட்ட இருந்து ரெண்டு லட்ச ரூபா வெளில போயிடுது.

ஸ்டாலின் Vs குஷ்பு - உதயநிதி Vs அண்ணாமலை - தேர்தலில் போட்டியிடும் திட்டம்!

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் Vs  குஷ்பு -  உதயநிதி Vs அண்ணாமலை - புதிய திட்டம்!

minnambalam :மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ்அப் ஆன்லைனில் வந்தது.  “தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்குக் கட்சிகள் தத்தமது வியூகங்களைக் கூர் தீட்டி வருகின்றன. இந்த வகையில் பாஜக வரும் சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கூட்டணியில் போட்டியிடப் போகிறது என்பது தெரியாத நிலையிலும் திமுக எதிர்ப்பு என்ற ஒற்றை வியூகத்தில் உறுதியாக இருக்கிறது.எல்லா தொகுதிகளிலும் போட்டியிடும் அளவுக்கு பாஜக பலமாக இருக்கிறது என்று பாஜகவின் பொதுச்செயலாளர் சிடி ரவி தெரிவித்திருப்பது பாஜக தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்குமா அல்லது அதிமுக கூட்டணியில் அதிக இடங்களுக்கான அழுத்தம் கொடுக்குமா என்ற விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இது ஒருபக்கம் இருந்தாலும் திமுக எதிர்ப்பிலும் ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுப்பது என்பதிலும் பாஜகவின் பார்வை தெளிவாக இருக்கிறது. அதன் ஓர் அம்சமாக ஸ்டாலினுக்கு எதிரான ஒரு வழக்கை தூசு தட்டத் தொடங்கியுள்ளது.

சர்வாதிகாரிகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிட்ட கொரோனா வைரஸ் தொற்று

.tamilmirror.lk - -என்.கே. அஷோக்பரன் : அதிகாரத்தைத் தக்கவைக்கும் அரசியலை, நிக்கோலோ மாக்கியாவலி என்ற இத்தாலிய அரசியல் சிந்தனையாளர் ‘இளவரசனுக்கு’ சொல்லிக்கொடுத்தார். ‘மனிதர்கள், தாம் அச்சம் கொள்பவர்களை விட, தாம் நேசிப்பவர்களை அவமதிக்கக் குறைவான தயக்கத்தையே காட்டுவார்கள். ஏனெனில், நேசம் என்பது கடப்பாட்டுச் சங்கிலியால் பிணைக்கப்பட்டதாகும். ஆயினும், சுயநலம் மனிதனின் தன்மையாதலால், சுயநலம் குறுக்கீடு செய்யும் போது, அந்தச் சங்கிலி தகர்ந்துவிடும். ஆனால், தண்டனை கிடைக்கும் என்ற அச்சம், எப்போதும் பலமாக இருக்கும்’ என்று, தன்னுடைய ‘இளவரசன்’ நூலில் குறிப்பிடுகிறார். அதிகார அரசியலின், சர்வாதிகாரிகளுக்கான பாலபாடம் இது. ஜனநாயகத்தின், குறிப்பாக, தாராளவாத ஜனநாயகத்தின் முக்கிய கூறுகளானவை, அரசமைப்பு ரீதியான ஜனநாயகம், சட்டவாட்சி, அதிகாரப் பிரிவினை, தடைகளும் சமன்பாடுகளும், அடிப்படை மனித உரிமைகள், மக்கள் இறைமை, நீதி மறுசீராய்வு, சுயாதீன ஊடகத்துறை, சிவில் சமூகச் செயற்பாடு போன்றவை, சர்வாதிகாரத்தை விரும்பும் தலைமைகளுக்கு மிகக்கசப்பான விடயங்களாகும்.

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. கடற்கரை பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை.

Arsath Kan  - /tamil.oneindia.com :P அலாஸ்கா: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் கடற்கரை பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணங்களில் அலாஸ்காவும் ஒன்று. மக்கள் அடர்த்தி மிகுந்த இந்த மாகாணத்தின் தென் கிழக்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் சாலைகளில் தஞ்சம் .
அலாஸ்காவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து கடற்கரை பகுதியில் சுனாமி ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பசிபிக் நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் ரிங் ஆஃப் பயர் பகுதியில் அமைந்துள்ள அலாஸ்காவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் கடந்த ஜூலை மாதமும் கடந்தாண்டு நவம்பர் மாதமும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

மகாராஷ்டிரா கைதி சிறை கொடுமைகளை எழுதி விழுங்கி விட்டு தற்கொலை அதிகாரிகள் அதிர்ச்சி

வெப்துனியா: மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சிறையில் ஒரு கைதி தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்தக் கடிதத்தில் தற்கொலை செய்யும் முன் கைதியை சிறைக்காவலர்கள் கொடூரமாகச் சித்ரவதை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதில் முக்கியமாக அந்தச் சிறையில் உள்ள 5 முக்கிய அதிகாரிகளின் பெயரும் இதில் தெரிவிகப்பட்டிருந்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தான் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் வெளியுலகிற்குத் தெரிய வேண்டுமென்பதற்காகவே அவர் ஒரு கவரில் சுற்றப்பட்ட கடிதத்தை விழுங்கியுள்ளதாகத் தெரிகிறது.

இந்த ஒரு பக்க நீட் விடைத்தாளில்தான் நம் பிள்ளைகளின் மருத்துவ கனவுகள்...

Prabhu Rajadurai : · இவ்வளவுதாங்க, இந்த ஒரு பக்க தாளில்தான் நம்

பிள்ளைகளின் மருத்துவ கனவுகள் முடிவு செய்யப்படுகிறது. நீட் விடைத்தாளை இன்றுதான் முதன் முதலாகப் பார்க்கிறேன். மூன்று மூன்றாக மொத்தம் ஒன்பது மணி நேர எழுத்துத் தேர்விலும், கூடுதலாக செய்முறைத் தேர்விலும் கண்டுபிடிக்காத தரத்தையா, வெறும் 180 ஒற்றை வார்த்தை பதில்களில் கண்டு பிடித்து விடப் போகிறார்கள் இது ஏதோ வாக்குப் பெட்டி எண்ணிக்கையை ஒதுக்கி விட்டு கருத்துக்கணிப்பை வைத்து தேர்தல் வெற்றியை முடிவு செய்வது போல இருக்கிறது<

விஜய் சேதுபதி 800 இல் நடிப்பார் ? 23-11-2020 அன்று படப்பிடிப்பு ஆரம்பம்?

nakkheeran.in - நக்கீரன் செய்திப்பிரிவு : முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிப்பதற்கு உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் தங்களின்

கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.  இந்நிலையில், தமிழ்நாட்டின் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை. அதுமட்டுமில்லாது விஜய் சேதுபதி அவர்களின் கலை பயணத்தில் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் எற்பட்டுவிட கூடாது என்பதையும் கருத்தில்கொண்டு இத்திரைப்படத்திலிருந்து விலகிக்கொள்ளுமாறு அவரை கேட்டுகொள்கிறேன் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 அவரது முழு அறிக்கையில், “என்‌ மீதுள்ள தவறான புரிதலால்‌ '800' படத்திலிருந்து விலக வேண்டும்‌ என நடிகர்‌ விஜய்‌ சேதுபதிக்கு சிலர்‌ தரப்பில்‌ இருந்து கடுமையான அழுத்தம்‌ தருவதை நான்‌ அறிகிறேன்‌. எனவே என்னால்‌ தமிழ்‌நாட்டின்‌ ஒரு தலைசிறந்த கலைஞன்‌ பாதிப்படைவதை நான்‌ விரும்பவில்லை. அது மட்டுமல்லாது விஜய்‌ சேதுபதியின்‌ கலைப் பயணத்தில்‌ வருங்காலங்களில்‌ தேவையற்ற தடைகள்‌ எற்பட்டுவிடக்கூடாது என்பதையும்‌ கருத்தில்‌ கொண்டு இத்திரைப்படத்தில்‌ இருந்து விலகிக்‌ கொள்ளுமாறு அவரைக் கேட்டுக்கொள்கிறேன்‌.  

இனி பேசவேண்டாம்' கோபமும் வெறுப்புமாகக் கணவரிடம் தெரிவித்த குஷ்பு! கட்சித்தாவலின் பரபரப்பு பின்னணி!

khushbu
nakkheeran.in/- இரா. இளையசெல்வன் : "மயிலுக்கு சோறு போடும் மோடி, மனிதர்களுக்கு சோறு போடுவாரா? மோடியின் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை" என்று அக்டோபர் 6-ஆம் தேதி வடசென்னை காங்கிரஸ் கூட்டத்தில் பேசியவர் குஷ்பு. அதற்கடுத்த ஆறாவது நாளில் (அக்டோபர் 12-ஆம் தேதி), அதே குஷ்பு, காங்கிரசிலிருந்து விலகி பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டதுடன், "மோடியே அனைத்து மக்களுக்கும் காவலர்; நாட்டை நல்வழியில் நடத்திச் செல்கிறார் பிரதமர்' என்று அதிரடி காட்டினார்.

  கட்சித்தாவல் என்பது குஷ்புக்கு புதிதல்ல. தி.மு.க.வில் ஓரங்கட்டப்பட்டபோது காங்கிரசுக்குத் தாவினார். காங்கிரசிலிருந்து பா.ஜ.க.வுக்குத் தாவியுள்ளார். எனினும், 'பா.ஜ.க. தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட மிரட்டல்தான் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்புவின் கட்சித் தாவலுக்குப் பின்னணி' என்கின்றன டெல்லி தகவல்கள்.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பாடத்திட்டங்களை குறைப்பது பற்றி 10 நாளில் முடிவு - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பாடத்திட்டங்களை குறைப்பது பற்றி 10 நாளில் முடிவு - அமைச்சர் செங்கோட்டையன்
அமைச்சர் செங்கோட்டையன்
.dailythanthi.com: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பாடத்திட்டங்களை குறைப்பது பற்றி 10 நாட்களில் முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். சென்னை, தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக பள்ளி கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தமிழகத்தில் கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு அக்டோபர் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வப்போது பல்வேறு துறைகளில் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது.

பட்டினி இந்தியாவில் பாழாகும் நெல் மணிகள்! என்ன தான் தீர்வு?

சாவித்திரி கண்ணன்

aramonline.in : ஒரு பக்கம் பட்டினி வறுமை குறித்த நெஞ்சை கனக்க வைக்கும் செய்திகள், மறுபக்கம் தஞ்சை தரணியில் ஒரு லட்சம் நெல் மூட்டைகள் நெல் கொள்முதல் நிலையங்களில் மழையால் நனைந்து வீணான செய்திகள்…என இரு வேறு இந்தியாவை பார்க்கிறோம்! ஒரு வாரத்திற்கு முன்பு மதுரை மாவட்ட திறந்த வெளி குடோனில்9,492 மெட்ரிக் டன் நெல்மூட்டைகள் நனைந்து வீணான செய்தி,அதைத் தொடர்ந்து,கடலூர்,திருநெல்வேலி…என ஒவ்வொரு இடத்திலும் பாழாகும் நெல்மணிகள் குறித்த செய்திகள்…என வந்து கொண்டே இருந்தன!

இந்த ஆண்டு என்றில்லை, ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறு சில லட்சம் நெல்மூட்டைகள் வீணாகும் செய்திகள் வந்து கொண்டே தான் இருக்கிறது..?

ஏன் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க மறுக்கிறார்கள்?

ஏன் இருக்கும் நெல் கொள்முதல் மையங்களில் விவசாயிகள் தரும் நெல்மணிகளையோ, நெல் மூட்டைகளையோ பாதுகாப்பாக வைக்க அறைகள் கட்டப்படுவதில்லை?  இத்தனை வருடங்களில் வீணான நெல் மூட்டைகளின் மதிப்பை கணக்கிட்டால் தமிழகத்தில் சுமார் ஆயிரம் இடங்களில் அரண்மனைகளையே கட்டியிருக்கலாம்!

திங்கள், 19 அக்டோபர், 2020

பச்சை அடிப்படைவாதம், பிற்போக்குவாதம், சறுக்கல், கூட்டுத்தோல்வி. ஒரு MOB (கும்பல்) மனநிலை

Amudhan Ramalingam Pushpam : · விஜய்சேதுபதி முரளிதரன் விவகாரத்தில் 'பற்றாளர்கள்' வெற்றி பெற்றுவிட்டதால் இனிமேல் என் கருத்துக்களை

நிதானமாகப் படிக்கவும். எல்லா வரலாற்றுக் கதாபாத்திரங்களுக்கும் இருண்ட பக்கங்கள், சறுக்கல்கள் உண்டு. அந்த நபர்களைப் பற்றிய சினிமாவில் நடித்தாலே அவர்களை ஆதரிக்கவேண்டும் என்று அர்த்தமில்லை. முரளிதரன் பற்றிய சினிமா எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அதற்குள் நாம் ஒரு முன்முடிவுக்கு வந்து அந்தப்படம் அவரைக் கொண்டாடும் படமாக மட்டுமே இருக்கும் என்றும் அந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடித்தால் அது தமிழர்களுக்கு எதிராக இருக்கும் என்றும் அவர் இனத்துரோகி என்றும் அவரைப் புறக்கணிப்போம் என்றும் பலர் அவருக்கு அழுத்தம் கொடுத்து இறுதியில் அவரை முரளிதரனே அந்தப் படத்தில் இருந்து வெளியேற்றிவிட்டார். ஒரு நல்ல நடிகருக்கு ஒரு முரண்பாடான கதாபாத்திரத்தில் நடிப்பது என்பது நல்லதொரு வாய்ப்பு. இந்தப்படத்தின் மூலம் விஜய் சேதுபதி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கக்கூடும். அதன் மூலம் கிரிக்கெட் வீரர் முரளிதரன் சறுக்கிய, சமரசம் செய்த இடங்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கும். இதனால் எல்லோருக்கும் நல்லது தானே!
தோட்டத்தொழிலாளர்கள் தான் இலங்கையில் அதிகம் சுரண்டலுக்கு ஆளாகும் தமிழர்கள் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. அவர்கள் சாதி ரீதியாக சூத்திரர்களாகவோ, தலித்துகளாகவோ தான் இருக்கமுடியும். அந்தச்சூழலில் இருந்து வந்த ஒரு தமிழர் இலங்கைக் கிரிக்கெட் அணியில் விளையாடி, மாபெரும் வெற்றி பெற்று உலகச்சாதனை புரிந்திருக்கிறார். (அவருக்குச் சமகாலத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் பார்ப்பனர்கள் மட்டுமே இடம் பெற முடிந்தது).

அதானிக்கு விமான நிலையம் குத்தகை அளித்ததற்கு எதிர்ப்பு; கேரளாவின் வழக்கு தள்ளுபடி

tamil.indianexpress.com : திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியார்மயமாக்கியதற்கு எதிராக கேரளா அரசால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை அம்மாநில உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது. இது கேரள அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியார்மயமாக்கியதற்கு எதிராக கேரளா அரசால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை அம்மாநில உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது. இது கேரள அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. கேரளாவில் உள்ல திருவனந்தபுரம் விமான நிலையத்தின் செயல்பாடு, மேலாண்மை மற்றும் மேம்பாட்டை அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு 50 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட மத்திய அரசு எடுத்த முடிவுக்கு எதிராக மாநில அரசு நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தது. தனியார்மயமாக்கல் வசதிகளைப் பெறும் 6 விமான நிலையங்களில் ஒன்றான திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை அதானி குழுமம் 2019 பிப்ரவரி மாதம் குத்தகை மற்றும் பராமரிப்புக்கான ஏலங்களை எடுத்தது.

தஞ்சையின் மனிதநேய மருத்துவர் மறைந்தார்!

 தஞ்சையின் மனிதநேய மருத்துவர் மறைந்தார்!

 minnambalam : தஞ்சையில் மூன்று தலைமுறைகளாக மருத்துவ சேவை ஆற்றிவரும் குடும்பம் அது. ராமநாதன் ஆஸ்பத்திரி என்றால் டெல்டா மாவட்டங்களில் அறியாதவர்கள் கிடையாது. வெறும் பேருந்து நிறுத்தம் அல்ல அது. 90 ஆண்டுகளுக்கும் மேலாக லட்சக்கணக்கான ஏழை எளிய மக்களின் நோய்தீர்த்த புனித இடம்.   இன்றைக்கு மருத்துவ உலகம் என்கிறார்கள். ஆனால் உலகமே அறியாத பாமர மக்களுக்கு தான் கற்ற மருத்துவத்தை தொழில் பக்தியோடு தந்துகொண்டிருக்கும் அந்த குடும்பத்தின் தலைவரை, வறியவர்கள் வசதிபடைத்தவர்கள் என்ற பாகுபாடெல்லாம் பார்க்காத மாமனித மருத்துவரை நேற்று (அக்டோபர் 18) காலம் தன் கையில் வாங்கிக் கொண்டது. மரு. குமார் அவர்களை தஞ்சை மக்கள் இழந்துவிட்டார்கள்.

திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை சீட்? சென்னையில் முகாமிடும் பிகே திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை சீட்? சென்னையில் முகாமிடும் பிகே

 திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை சீட்?   சென்னையில் முகாமிடும் பிகே

 minnambalam : திமுகவின் தேர்தல் உத்தி வகுப்பாளராக வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள பிரசாந்த் கிஷோர் , கடந்த வெள்ளியன்று சென்னை வந்திருக்கிறார். இங்கே சில நாட்கள் தங்க திட்டமிட்டிருக்கும் பிரசாந்த் கிஷோர், திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.      பிகேவின் இந்த சென்னை பயணத்தின் போது வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை இடங்கள் என ஸ்டாலினோடு ஆலோசனை செய்து ஒரு முடிவெடுத்துவிட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கூட்டணியில் இருக்கும் ஒவ்வொரு கட்சிக்கும் அவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளுக்கு ஏற்றவாறு சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று திமுக கூட்டணியில் பேசப்பட்டிருந்தது. அதாவது ஒரு எம்பி தொகுதியில் போட்டியிட்டார்கள் என்றால் அந்தக் கட்சிக்கு மூன்று சட்டமன்றத் தொகுதிகள் என்று ஒரு வரையறை செய்து வைத்திருந்தது திமுக. அந்த வகையில் இரு தொகுதிகள் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகளுக்கு 6 சட்டமன்றத் தொகுதிகள், ஒன்பது நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸுக்கு 27 இடங்கள் என்று ஒரு கணக்கு உத்தேசிக்கப்பட்டிருந்தது.

இலங்கை மலையக மக்கள் பற்றிய சில குறிப்புக்கள்

மலையக மக்களை தோட்டக்காட்டான் என்று தமிழகத்தில் இன்னும் குறிப்பிடுகிறார்களோ என்ற சந்தேகம் எழுவதால்  இது பற்றி ஒரு தெளிவான விளக்கம் அவசியம் என்று கருதுகிறேன் 

மலையக மக்கள் என்ற பெயரில்தான் குறிப்பிடுவார்கள்  மேற்படி சொல் சுமார் பல  ஆண்டுகளுக்கு முன்பே ஓரளவு  மறைந்து விட்டது என்றெண்ணுகிறேன்..     மேலும் வடக்கு கிழக்கில் மலையக மக்கள் முன்னணி வரும் தேர்தல்களின் போட்டியிட இருக்கிறது . கிளிநொச்சி முல்லைத்தீவு வவுனியா மன்னார் போன்ற பகுதிகளில் மலையக மக்களின் வாக்குவங்கி பெருமளவு அதிகரித்து அவர்கள் எம்பிக்களையும் மாகாண சபை உறுப்பினர்களையும் பெறக்கூடிய நிச்சயமான வாய்ப்பு தற்போது உள்ளது .ஏற்கனவே பல உள்ளூராட்சி சபைகளில் இந்த வடமாவட்டங்களில் உள்ள பல உள்ளூராட்சி மன்றங்களில் அவர்கள் பிரதிநிதியாக உள்ளார்கள் .

இளைய தலைமுறையினர் பலருக்கும் இந்த வார்த்தையே தெரியாது .இலங்கையின் எந்த ஊடகங்களிலும் சரி முகநூல் போன்ற சமூக ஊடகங்களிலும் சரி இந்த வார்த்தை இடம் பெறுவதில்லை  . இந்த வார்த்தையை மீளுருவாக்கம் செய்வது முழு மலையக மக்களையும் நோகடிக்க செய்யும் என்றெண்ணுகிறேன் . மேலும் சுமார் இருப்பது இலட்ச்சத்தையும் தாண்டிய மலையக மக்களில் தோட்டங்களில் வேலை செய்வோர்கள் மிகவும் அருகிவிட்டது . சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் மட்டுமே தோட்டங்களில் வேலை செய்கிறார்கள்  

800 படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி


maalaimalar :முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக உள்ள ‘800’ படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகி உள்ளார். 800 படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’ என்கிற படம்
உருவாகவுள்ளது. ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு வெளியானதில் இருந்தே இப்படத்திற்கான எதிர்ப்பும் அதிகரித்தது.  படத்தில் அரசியல் சார்ந்த காட்சிகள் இல்லை என 800 படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே உறுதி அளித்தது.  

இருப்பினும் ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்களுக்கு முத்தையா முரளிதரன் ஆதரவளித்தவர் என்பதால் படத்தில் நடிக்கும் முடிவை விஜய் சேதுபதி கைவிட வேண்டும் என இயக்குனர் பாரதிராஜா, சேரன் பாடலாசிரியர் வைரமுத்து, தாமரை உள்ளிட்டோர் கோரிக்கை வைத்திருந்தனர்.  

டிஆர்பி என்றால் என்ன?.. ஒரு நிமிடத்துக்கும் மேல் யாரெல்லாம் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை....

hindutamil.in : what-is-trp

எளிமையாகச் சொல்வதென்றால், ஒரு நிமிடத்துக்கும் மேல் யாரெல்லாம் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்க்கிறார்களோ அவர்கள் அந்நிகழ்ச்சியின் பார்வையாளர்களாகக் கருதப்படுவார்கள். ஒரு பார்வையாளர் இரண்டு வயதுக் குழந்தையாகவும் இருக்கலாம். டிஆர்பி அல்லது ‘டார்கெட் ரேட்டிங் பாய்ன்ட்’ என்பது, தொலைக்காட்சிப் பார்வையாளர்களை மதிப்பிடுவதற்கு, சந்தைப்படுத்தல் முகமைகளும் விளம்பர முகமைகளும் பயன்படுத்தும் அளவீடு ஆகும். இந்தியாவில், டிஆர்பியானது ‘பிராட்காஸ்ட் ஆடியன்ஸ் ரிசர்ச் கவுன்சி’லால் (பிஏஆர்சி - பார்க்) பதிவுசெய்யப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வீடுகளின் தொலைக்காட்சிகளில் பார்-ஓ-மீட்டர்களை நிறுவுவதன் மூலம் இது பதிவுசெய்யப்படுகிறது. இதுநாள் வரை, பார்க் அமைப்பானது இந்த மீட்டர்களை நாடெங்கும் 44 ஆயிரம் வீடுகளில் நிறுவியிருக்கிறது. காணொளிகள் ஒளிபரப்பப்படுவதற்கு முன்பு அவற்றில் அடையாள சமிக்ஞை ஒலிகள் பதிவிடப்படும். இந்த ஒலிகள் மனிதக் காதுக்குக் கேட்காது. ஆனால், இவற்றுக்கு உரிய மென்பொருளும் வன்பொருளும் இவற்றைக் கண்டறிந்துவிடும். எந்த நிகழ்ச்சியைப் பார்வையாளர்கள் பார்க்கிறார்கள் என்ற தகவலை பார்-ஓ-மீட்டர்கள் பதிவுசெய்வதைப் போல, அடையாள சமிக்ஞை ஒலிகளையும் அவை பதிவுசெய்துவிடும்.

உடல்நிலை, விடுதலை: மின்னம்பலத்துக்கு சசிகலா அனுப்பிய கடிதம்!

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சுதாகரன், இளவரசி ஆகியோரோடு கடந்த நான்கு வருடங்களாக இருக்கிறார் சசிகலா. அவரது விடுதலை தேதி தொடர்பாகவும், உடல்நலம் தொடர்பாகவும் அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த வகையில் கடந்த 25-9-2020 அன்றைய மின்னம்பலத்தில் சசிகலாவின் உடல்நிலை தொடர்பாக ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம். அதில் சசிகலாவுக்கு சர்க்கரை பாதிப்பு இருப்பதால், சிறையில் கிடைக்கும் சிகிச்சைகள் போதாமல் வெளியே மருத்துவமனையில் சிகிச்சையளிக்க அவரது உறவினர்கள் விரும்புவதாகவும், “வெளியே இருந்த வரைக்கும் சசிகலா சர்க்கரை வியாதிக்கு போதுனைப்படியான உணவு முறைகளை தொடர்ந்து பின்பற்றி வந்தார். ஆனால் மான மாத்திரைகள், ஊசிகள், அவ்வப்போது மருத்துவரின் ஆலோசசிறைக்குள் வெளியே இருப்பது போன்ற இந்த முறைகளை அவரால் பின்பற்ற முடியவில்லை. இத்தகைய காரணங்களால் சசிகலாவுக்கு சிறுநீரக பாதிப்பும் ஏற்படத் தொடங்கியிருக்கிறது என்று சொல்லும் அவரது உறவினர்கள் இதனால் பதற்றப்பட ஆரம்பித்துள்ளார்கள். சசிகலாவை விரைவிலேயே வெளியே கொண்டு வந்து விட்டால் தரமான மருத்துவ சிகிச்சைகள் மூலம் அவரது சிறுநீரகத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு, டயாலிசிஸ் வரைக்கும் செல்வதிலிருந்து தவிர்த்துவிட முடியும்” என்று அவர்கள் கூறுவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

இந்தியாவுக்கு மட்டுமான கண்டுபிடிப்பாளர்கள் பார்பனர்கள்..!!!

தி மல்லிகா : · இந்தியாவுக்கு மட்டுமான கண்டுபிடிப்பாளர்கள் பார்பனர்கள்..!!! இவர்கள் கண்டுபிடிப்பவை எல்லாம் இந்தியாவுக்கும் இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானவை! மற்றநாடுகள் இந்த கண்டுபிடிப்புகளுக்கு எந்தவகையிலும் சொந்தங்கொண்டாட முடியாது! அர்ச்சனை செய்தால் வேலை கிடைக்கும்
அபிஷேகம் செய்தால் மாப்பிள்ளை கிடைக்கும்
கும்பாபிஷேகம் செய்தால் மழை பெய்யும்
தீபாராதனை செய்தால் நல்ல பெண்கிடைக்கும்
ஹோமம் செய்தால் செல்வம் பெருகும்
யாகம் செய்தால் பதவி கிடைக்கும்
அங்கப்பிரதட்சணம் செய்தால் நோய்தீரும்
சகஸ்ரநாமம் சொன்னால் படிப்பு வரும்
ராமநாமம் சொன்னால் தைரியம் வரும்
கோயிலுக்குப்போனால் பாசிட்டிவ் எனர்ஜி கிடைத்து நிம்மதி வந்து மனநோய் தீரும்

நியூசிலாந்து ஜெசிந்தா ஆர்டெர்ன் மீண்டும் பிரதமராகிறார் நியூ ஸிலாந்தின் முதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் வனுஷா ராஜநாயகம்

நியூ ஸிலாந்தில் அண்மையில் நடந்த தேர்தலில் இலங்கை மானிப்பாய் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் வழக்கறிஞர் வனுஷா சீதாஞ்சலி வால்டர் ராஜநாயகம் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார் .. நியூ ஸிலாந்தின் முதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் வனுஷா ராஜநாயகத்திற்கு வாழ்த்துக்கள் Vanushi Sitanjali Walters Rajanayagam from Manipay jaffna .Srilanka .. New Zealand's Labour Party  


BBC :நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தலைமையிலான தொழிலாளர் கட்சி அந்த நாட்டில் நடந்த பொதுத் தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றுள்ளது .நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் பெரும்பாலும் எண்ணப்பட்டுவிட்ட நிலையில், ஜெசிந்தாவின் தொழிலாளர் கட்சி 49 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இதன் மூலம், நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையுடன் இவர் மீண்டும் ஆட்சியமைப்பார் என்று கருதப்படுகிறது.இன்று (சனிக்கிழமை) நடந்த வாக்கெடுப்பில் 27 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ள எதிர்க்கட்சியான மைய - வலதுசாரி கொள்கை கொண்ட தேசிய கட்சி, தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளது.

ம.பி.யில் மானபங்க வழக்கில் ராக்கி கட்டினால் ஜாமீனா?- உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

hindutamil.in/ : மத்திய பிரதேசம் உஜ்ஜயினியைச் சேர்ந்த விக்ரம் பத்ரி கடந்த ஏப்ரல் மாதம் ஒரு பெண்ணை மானபங்கம் செய்துள்ளார். இதுதொடர்பாக அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில் விக்ரம் பத்ரி கைது செய்யப்பட்டார்.

அவர் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த தனி நீதிபதி, கடந்த ஜூலை 30-ம் தேதி விநோத உத்தரவைப் பிறப்பித்தார். அதில், "திருமணமான விக்ரம் பத்ரியும் அவரது மனைவியும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு நேரில் செல்ல வேண்டும். அங்கு பாதிக்கப்பட்ட பெண், விக்ரம் பத்ரிக்கு ராக்கி கயிறு கட்ட வேண்டும். அந்தப் பெண்ணுக்கு அவர் ரூ.11,000 அன்பளிப்பாக வழங்க வேண்டும்" என கூறிய தனி நீதிபதி, விக்ரம் பத்ரிக்கு ஜாமீன் வழங்கினார்.

லாக்டவுன் காலத்து உணர்வுகளை பயன்படுத்தி ஒரு கும்பல் திட்டம்போட்டு பணம் ...... ?

Sarav Urs : · லாக்டவுன் காலத்துல நிறைய பேர் சாப்பாட்டுக்கு கஷ்டப்படுறாங்க அவங்களுக்கு உதவணும்ன்னு க்ரூப் மூலமா ஏற்பாடு செய்திட்டிருந்தோம். அப்ப ஏற்பட்ட ஒரு அனுபவம் இது... காட்சி 1: சென்னையில ஒரு ட்ரஸ்ட்ல இருந்து ஆனாதை குழந்தைகள் 40 பேர் இருக்காங்க, எல்லோருக்கும் சாப்பாட்டுக்கு வழி இல்லை உதவுங்கன்னு ஒரு மெசேஜ் பேஸ்புக்ல இருந்து ஒரு நண்பர் ஷேர் செய்திருந்தார். யார் என்னன்னு விசாரி உதவலாம்ன்னு விஜிட்ட சொல்லிருந்தேன். நேரில் பார்க்கணும்ன்னு சொன்னதுக்கு வாங்கன்னு சொல்லிட்டாங்க. ஆனால் நேரில போனப்போ கொரானாவை காரணம் காட்டி குழந்தைகளை பார்க்க முடியாதுன்னு ட்ரெஸ்ட் ஆபீஸ்ல வச்சே பேசினாங்க... நாங்க மளிகை சாமான் ஒரு மாசத்துக்கு எவ்ளோ வரும்ன்னு கேட்டு அதை வாங்கி கொடுக்கிறோம்ன்னு சொன்னோம். ஆனால் மறுபடியும் கோவிட்டை காரணம் காட்டி பொருட்கள் மூலமா கிருமி பரவிடும் பணம் தான் வேண்டும்ன்னு சொல்லிட்டாங்க. வேற வழி இல்லாம பணமா கொடுத்துட்டு வந்தோம்.
அதுக்கு அப்புறமா ஒவ்வொரு வாரமும் விடாம பல்வேறு நம்பர்களில் இருந்து எங்களுக்கு கால் வந்துட்டே இருக்குது. இந்த மாதத்துக்கு உதவி வேணும், சாப்பாட்டுக்கு கொடுங்க, ட்ரெஸ் வாங்க குடுங்கன்னு.... எங்களுக்கு பாவமா இருக்கு... ஆனால் நேர்ல பார்க்காம குடுக்க வேணாம்ன்னு இப்போ கொடுக்கல.  

டானிஷ்க் விளம்பரம் : இந்துத்துவக் கும்பல் கதறுவது ஏன் ?


வினவு செய்திப் பிரிவு  :  விளம்பரத்தில் கூட இந்து முசுலீம் ஒற்றுமை என்பது ஒரு எதார்த்த அனுபவமாக, மக்களின் மனதில் பட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக நிற்கிறது சங்க பரிவாரக் கும்பல் !  உறவு கொஞ்சம் புதிதாகவே இருக்கிறது. தறியில் கோர்த்த நூலினைப்போல, இன்னும் பிணைந்து கொண்டிருக்கிறது. நாம் அதை அன்பாலும் ஒருமித்த மனதாலும் வலுவாக்குவோம். நாம் அனைவரும் சேர்ந்து அந்த உறவினைப் பின்னுவோம். அன்பின் பிணைப்பினால், நாம் ஒரு முனையை மற்றொரு முனையுடன் இணைப்போம். வலுவான பிணைப்போடு அவற்றை ஒன்று சேர்ப்போம்..” என்று பின்னணி குரல் ஒலிக்க கர்ப்பிணியாக இருக்கும் தனது இந்து மருமகளை வளைகாப்பு நிகழ்ச்சிக்கு அழைத்து செல்கிறார் ஒரு முஸ்லீம் பெண்.

”அம்மா, இது உங்கள் வீட்டின் வழக்கம் இல்லையே!” என்கிறார் அந்த பெண். அதற்கு அந்த முஸ்லீம் பெண், ”ஆனால், தன் மகளை சந்தோஷமாக வைத்திருப்பது எல்லா வீட்டின் வழக்கம்தானே?” என்று கேட்கிறார். இப்படி இந்து-முஸ்லீம் ஒற்றுமையை பிரதிபலிக்கச் செய்கிறது டாடா குழுமத்துக்கு சொந்தமான தனிஷ்க் நகைக்கடையின் விளம்பரம்.

தமிழர் வரலாறு: ஈழத் தமிழர்களின் பழங்கால குலதெய்வ வழிபாட்டின் தொல்லியல் ஆதாரங்கள்

பழங்கால ஈழத் தமிழர்களின் நாக வழிபாடு: புதிய தொல்லியல் ஆதாரங்கள்

BBC : இலங்கையின் வடக்கு பகுதியில் நாக வழிபாட்டை குலமரபுத் தெய்வ வழிபாடாக மக்கள் கொண்டிருந்தமை தொடர்பிலான தொல்லியல் ஆதாரங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.     யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை, தொல்லியல் துறையின் மூத்த பேராசிரியர் புஷ்பரட்ணம் இதனை கண்டுபிடித்துள்ளார்.

இந்த நிலையில், நாக பாம்பை பானையில் வைத்து வழிபாடுகளை செய்தமைக்கான ஆதரங்களும் கிடைக்கப் பெற்றுள்ளதாக பேராசிரியர் புஷ்பரட்ணம் தெரிவிக்கின்றார்.  வட இலங்கை மக்களிடையே நாகத்தை பானைகளில் வைத்து வழிபாடு செய்த தொன்மையான வரலாறு தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

தெற்காசியாவில் தொன்மையான நாட்டுப்புற வழிபாடுகளில் ஒன்றாக நாக வழிபாடு காணப்படுகின்றது. நாகங்கள் பூமிக்குள் இருந்து வந்து, மீண்டும் பூமிக்குள் மறைந்து போவதனால், ஆதி காலத்து மக்கள் அவற்றை மண் புற்றுக்குள் வைத்து வழிபாடுகளை நடத்தியுள்ளமைக்கான சான்றுகளும் காணப்படுவதாக அவர் கூறுகின்றார்.

ஞாயிறு, 18 அக்டோபர், 2020

ECR சென்னை ஈசிஆர்... திருவான்மியூர் முதல் அக்கரை வரை ஆறுவழிச் சாலை அமைக்க அரசு முடிவு

murugan P   - tamil.oneindia.com  :  சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் திருவான்மியூர் முதல் அக்கரை வரை ஆறுவழிச் சாலை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது முதல் கட்ட நிலம் எடுப்பு பணிக்காக 778 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க இறுதிக்கட்ட நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். 

சென்னை திருவான்மியூரில் இருந்து தொடங்குகிறது கிழக்கு கடற்கரை சாலை (ஈசிஆர்). இந்த சாலை சென்னையில் இருந்து 60 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மாமல்லபுரம் வழியாக புதுச்சேரி வரை சுமார் 135 கி.மீ தூரம் நீள்கிறது. சென்னையில் திருவான்மியூர் முதல் மாமல்லபுரம் வரை பல ஐடி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு மையங்கள், சுற்றுலாத்தலங்கள் உள்ளன. சென்னையில் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் உற்காகமாக பொழுதை கழிக்க கிழக்கு கடற்கரை சாலைக்கு பல்லாயிரம் பேர் சென்றுவருவார்கள். இது தவிர மாமல்லபுரத்துக்கு வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் சுற்றுலாவுக்காக ஈசிஆர் சாலையில் தான் வந்து செல்கின்றனர். பாண்டிச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்ல இந்த சாலை தான் பிரதானமாக பயன்படுத்தபப்டுகிறது. தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலையில் செல்கின்றன.

இராவணன் சீதையை சிறைவைத்த இலங்கையில் அயோத்தி ராமர் கோயில் கட்டுகிறார்களாம் சீதாஎலியவில்

Esther Nathaniel : · பாராளுமன்ற உறுப்பினர் திரு இராதாகிருஸ்ணன் இலங்கை

மலையகம் நுவரெலியாவிலிருந்து புனிதக்கல்லை அயோத்தி ராமர் கோயில் கட்ட அனுப்ப போவதாகவும் புனிதக்கல்லை வைத்து இவ்வளவுகாலம் விசேட பூஜைகளோடு வழிபட்டு வருவதாகவும் சொன்னார்.இராவண்ன் சீதையை சிறைவைத்த இடம்தான் சீதாஎலிய. இங்கே சீதை வந்ததாகவும் இராமன் இவ்விடத்தில் வந்த போது தன் கால் பதித்த அச்சுக்கல்லையே புனிதக்கல் என்கிறார்கள் இங்கே நான் மதத்தை பேசவில்லை மதவாதிகள் வரிஞ்சுக்கட்டி வரவேண்டாம் இராமாயணத்தில் சீதைக்கு இலங்கை வந்ததால் கோயிலே கட்டுகிறீர்கள் ஏன் இந்தியாவில் கற்புக்கரசியான சீதையைக் கண்டுகொள்ளவே மாட்டேன்கிறார்கள் மாறாக மதுரையை கொளுத்திய கண்ணகிக்கு சிலை வைத்துள்ளார்கள் சீதைக்கும் ஜோடியாக மோடி அவர்கள் கோவில் கட்டதானே வேண்டும் பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன் நான் கல்விகற்கும் காலத்திலிருந்தே பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கிறார் கல்வி இராஜாங்க அமைச்சராக கணிசமான வேலைகளை மலையகத்தில் செய்துள்ளார் பாராட்டுக்கள் ஆனால் இராதாகிருஸ்ணன் அவர்களே கல்லு எப்படி புனிதமாகும்

800 முரளிதரனின் கிரிக்கெட் கதை கதையல்ல படிக்கவேண்டிய வரலாறு ... முரளிதரனின் கிரிக்கெட் கதை கதையல்ல படிக்கவேண்டிய வரலாறு ...

கிரிக்கெட் பக்கமே தலைவைத்து படுக்காத என்னையே வெறும் ஒரு திரைப்பட  மோர்சன்  டீசரை பார்த்தே புல்லரிக்க வச்சுட்டீங்களே படுபாவி பசங்களா ..    முரளிதரனின் கிரிக்கெட் கதை   கதையல்ல படிக்கவேண்டிய  வரலாறு ...   எந்த இடத்தில பிறந்து வந்து எந்த உயரம் எட்டி இருக்கிறார் ..  தமிழர்களின் ஒரிஜினல் உலகநாயகன் முத்தையா முரளிதரன்தான் .  இவரின் கதை வெறும் விளையாட்டால்ல ..  அதற்குள் மறைந்திருக்கும் ஆழ்கடலுக்குள் சுழியோடி பார்ப்பதற்கு நிறைய விடயம் இருக்கிறது ..  மதம் மொழி நிறம் தேசம் ஜாதி எல்லாம் இருக்கிறது ..  எல்லாவற்றையும் தாண்டி குதித்து வந்திருக்கிறார் ..வெற்றி பெற்றிருக்கிறார் .. நிச்சயமாக இந்த படம் மலையடிவாரங்களுக்குள் வாழ்க்கையை தொலைத்து கொண்டிருக்கும்  உள்ளங்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தை கொடுக்கும் .. பார்ப்பவர் எல்லோருக்கும் வாழ்வில் நம்பிக்கையை கொடுக்கும் ..  800 மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை அடிக்கப் பாய்ந்தாரா நிர்வாகி?

webdunia :கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை அதிமுக அதிமுக ஒன்றியச் செயலாளர் ஒருவர் அடிக்க பாய்ந்ததாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் வேடசந்தூர் அருகே சிட்கோ அமையவுள்ள இடத்தை பார்வையிட கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வருகை தந்திருந்தார். அப்போது அங்கு அதிமுக ஒன்றியச் செயலாளர் மலர்மன்னனும் வந்ததாக தெரிகிறது இந்த நிலையில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் ஒரு கட்டத்தில்பெண் எம்.பி. என்றும் பாராமல் தோள்களை திமிறிக்கொண்டு அடிப்பது போல் அதிமுக நிர்வாகி மலர்மன்னன் வந்ததாகவும் கூறப்படுகிறது. அதிமுக ஒன்றியச் செயலாளர் மலர்மன்னன் செயலால் ஆர்.கோம்பை கிராமமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கிராமத்து மக்கள் காவல்துறைக்கும் தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது