சனி, 21 ஜூன், 2025

திரு அல்பிரட் துரையப்பாவை எதிர்ப்பதற்காக தமிழரசும் காங்கிரஸும் ஒன்று சேர்ந்த வரலாறு

May be an image of text that says '۴۴ யாம்ப்பாணம் தரைராசா ஒந்மணி மூதல் வியாமன் பெற்று முடிந்ததும் பேச்சுவார் த்சைகள் நடைபபற்றுவந்த போலிலும் Guit லும் செய்ய்ப உடன்பாடு ஏற் படாமல் இறத்ிநேரத்தில் இருந்நது ஏர் நேற்திப் பிற்படல் မက தமிழரசு- தமிழ்க்ால் உடன்பாடே பளவிலரற்படட 60a7 வம் மென்றும் இென் தமிழாசுக்கடசியி.் pui தலலவர் திரு. எஸ் ව නනි பர் செல்வநாயகம் J பகல் யாழ்பபாண திரு. எஸ். บ னரே இந்த டைசி பட்டதென்றும் வருடகால்த்துக்கு கரதி கிற்து. சலதாலும் மேய்ராகப் T மேயர் தெரிவு சம்பந்தமாக வகிப்பாச் என்று என் தெரி மாநகரசபைத் தேர் தல் நடைிறது. 感动 CADI வரை தரைரசோர yOPOr Boи ബி அறியப்படு TEE.'
May be an image of 1 person and smiling

ராதா மனோகர் : தமிழ் தேசியத்தை தோண்ட தோண்ட கிடைப்பது எல்லாம் சுயநல அடையாள வரலாற்று வடுக்கள் மட்டுமே! 
இன்றுவரை புகழ் பெற்ற வட்டுக்கோட்டை தீர்மானம் என்பது தமிழ் தேசியத்தின் அடுத்த கட்ட பாய்ச்சல் என்றுதான் பலரும் நம்பி கொண்டிருக்கிறார்கள். 
அது உண்மையில் தேர்தல்களில்  தோற்றுப்போன ஏழு தலைவர்களின்  நாடாளுமன்ற மீள் வரவுக்கானது மட்டுமே! 
அன்று வரை பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் ஒரு போதும் ஒன்றாக சேராது என்று சொல்லி வந்த   எஸ்ஜேவி.செல்வநாயகம்,
திரு   ஜி ஜி பொன்னம்பலத்தின் வீடு தேடி சென்று ஒற்றுமையை வலியுறுத்தியதாக கதை அளப்பார்கள்!
வட்டுக்கோட்டை தீர்மானம் என்பது தமிழரின் உரிமை போராட்டத்தின் மைல் கல் என்று நம்பினார்கள் பலர்!

8ம் நாள் இஸ்ரேலை துவம்சம் செய்யும் ஈரான்! ‘கிளஸ்டர் குண்டு’ என்றால் என்ன?

 மாலைமலர் : இன்றுடன் போர் 8வது நாளை எட்டியிருக்கும் நிலையில், தற்போது ஈரானின் கை ஓங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
அணு ஆயுத விவகாரம் தொடர்பாக, ஈரானைக் குறிவைத்து இஸ்ரேல் கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. அதாவது, அணு ஆயுதத்தைத் தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி ஈரான் மீது ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் கடந்த ஜூன் 13ஆம் தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இதற்குப் பதிலடியாக ஈரானுமும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. தற்போது இருநாடுகளும் மாறிமாறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தாக்குதலில் ஈரானில் அதிகமான பலி எண்ணிக்கை ஏற்பட்டுள்ளது. முக்கியமாக, அந்நாட்டின் தளபதிகள், அணு விஞ்ஞானிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

வெள்ளி, 20 ஜூன், 2025

சன் டிவி கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் அனுப்பிய வக்கீல் நோட்டீஸ்- யார் அந்த 8 பேர்?

 minnambalam.com  : சன் டிவி குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரது சகோதரரும் மத்திய சென்னை தொகுதி திமுக எம்பியுமான தயாநிதி மாறன், வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். Sun TV: Kalanidhi Maran Receives Legal Notice from Dayanidhi Maran – Who Are the 8 People Named?
சன் டிவி விவகாரங்கள் தொடர்பான இந்த வழக்கறிஞர் நோட்டீஸில் மொத்தம் 8 பேர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தயாநிதி மாறன் அனுப்பிய நோட்டீஸில் இடம் பெற்றுள்ள 8 பேர் குறித்த விவரங்கள்:
    கலாநிதி மாறன் – தயாநிதி மாறனின் சகோதரர்
    கலாநிதி மாறன் மனைவி காவேரி
    ரவி ராமமூர்த்தி

டூரிஸ்ட் பேமிலி போன்ற படங்கள் ஓடும்! இனி சங்கர் எல்லாம் படமெடுக்க முடியாது

Shyam  · ஷங்கர் இனி படமெடுக்க முடியாது 
வேள்பாரிக்கெல்லாம் இனி வாய்ப்பே இல்லை... ?
ஷங்கர் விஷயத்தில் அலார்ட்டான தயாரிப்பாளர்கள்!
கேம்சேஞ்சர் படத்துக்கு ஒரு வருஷமா எடிட் பண்ணினார்களாம்.
 ஏழரை மணி நேரமாக ஃபுட்டேஜ் கொடுத்தாரு. 
அதை என்னதான் குறைச்சாலும் 3 மணி நேரத்துக்கு மேல குறைக்க முடியல அப்படின்னு அந்தப் படத்தை விட்டே ஷமீர் வேணாம்னு போயிட்டாரு.
அவரு என்ன சொல்றாருன்னா ஷங்கர் பக்கத்துலயே இருந்து இந்த ஆர்டர், அந்த ஆர்டர்னு மாத்தி மாத்தி சொல்லிக்கிட்டு இருந்தாரு.

அதனாலயே அவர் அந்தப் படத்தை விட்டுப் போயிட்டாரு. 
அவர் மலையாளத்துலயே 50 படங்களுக்கு மேல பணியாற்றியுள்ளார். 
இப்போ ஸ்பாட் எடிட்டிங் இருக்கு. 
அந்த வகையில் எடிட்டர் ஷமீருக்கு அதெல்லாம் தெரியும். நினைச்சதை எல்லாம் எடுத்துட்டு வந்து கொடுக்காரு. 

சிறுவர் பாதுகாப்பு பெல்ட் .. ஸ்கூட்டர் மோட்டார் சைக்கிள்களில் பின்புறம் அமர்ந்து செல்லும் சிறுவர் பாதுகாப்பு ...

No photo description available.

 ராதா மனோகர் : ஸ்கூட்டர்,  மோட்டார் சைக்கிள்,  சைக்கிள்  போன்றவற்றின்  பின்னால் அமர்ந்து செல்லும் சிறுவர்களின் பாதுகாப்பு மிகவும் கேள்விக்குறியாக உள்ளது.
ஒரு சிறிய பெல்ட் இந்த சிறுவர்களின் பாதுகாப்பை ஓரளவாவது உறுதி செய்யும் என்று நம்புகிறேன் 
ஆனால் பலருக்கும்  இப்படி ஒரு பாதுகாப்பு பெல்ட் இருக்கும் விடயமே இங்கு தெரியாது ,
எதுவித பாதுகாப்பு பெல்டும் அணியாமலே தினமும் ஆயிரக்கணக்கான சிறுவர் குழந்தைகள்  மோட்டார் சைக்கிள் அல்லது ஸ்கூட்டரின் பின்னே அமர்ந்து பயணிக்கிறார்கள். 
படத்தில் இருப்பது போல ஒரு சாதாரண பெல்ட் இவர்களது பாதுகாப்புக்கு பெரிய உதவியாக இருக்கும் 
நானும் எத்தனையோ பேரிடம் இங்கு இதைபற்றி பேசி பார்த்துவிட்டேன் 

ஸ்கூட்டரில் இருந்து விழுந்த சிறுமி சவுமியா லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு! சென்னை

 இந்து தமிழ் : சென்னை: தாயுடன் பள்ளிக்குச் சென்ற, பள்ளி மாணவி ஸ்கூட்டரிலிருந்து தவறி விழுந்து, லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். 
கொளத்தூர், பொன்னியம்மன் மேடு பகுதியை சேர்ந்தவர் யாமினி. இவரது 10 வயது மகள் சவுமியா புரசைவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். 

வியாழன், 19 ஜூன், 2025

அல் ஃபடா: இஸ்ரேல் மீது நொடிக்கு 5 கி.மீ வேகத்தில் செல்லும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ஏவியதா ஈரான்?

 BBC News தமிழ் : ஜூன் 18 புதன்கிழமை அன்று இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்திய இரான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் ஹைப்பர்சோனிக் ஃபடா ஏவுகணைகளை பயன்படுத்தியதாகக் கூறியுள்ளது.
இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஐ.ஆர்.ஜி.சி.) இந்த ஏவுகணைகளை இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவை நோக்கி ஏவியதாக குறிப்பிட்டுள்ளது.
இரானின் அரசு ஊடக முகமையான மெஹர் மற்றும் அரசு தொலைக்காட்சியான பிரஸ் டிவி, ஃபடா 1 ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டதாக ஐ.ஆர்.ஜி.சி. கூறியதாக தங்களின் செய்திகளில் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை முன்னாள் அமைச்சர் கெஹெலியவின் இரு மகள்கள், மருமகன் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது

 தமிழ் மிரர் : முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புல்வெல்லவின் இரு மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் இன்று (19) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மித்ரி ஜயனிகா ரம்புக்வெல்ல, அமலி நயனிகா ரம்புக்வெல்ல மற்றும் அமலி ரம்புக்வெல்லவின் கணவர் இசுரு புலஸ்தி பண்டார பொல்கஸ்தெனிய ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் நேற்று (18) கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இஸ்ரேலிய உளவாளிகளாக 73 இந்தியர்கள்! ஈரான் அறிவிப்பு

Showketh Hussain :  ஈரானால் பிடிக்கப்பட்ட 73 இஸ்ரேலிய உளவாளிகளில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்பதை இந்திய Analysts ஒப்புக் கொள்கிறார்கள்…! 
மோடியின் இந்துத்துவா சித்தாந்தம் உலக அமைதிக்கு அச்சுறுத்தல் மற்றும் ஆபத்தான பாதையாகும். 
இது உலகம் முழுவதும் இந்தியாவின் நற்பெயரை கெடுக்கிறது என்று இந்திய ஆய்வாளர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.
ஆர்எஸ்எஸ் எப்போதும் ஒரு அடிமையாகவே இருந்து வந்திருக்கிறது. இந்திய சுதந்திர போராட்டத்தின் போது அவர்கள் பிரிட்டிஷ் பக்கம் நின்றனர். இதுவொரு மோசமான அடிமை மனநிலை; 
அது எப்போதும் சற்று உயர் நிலையில் இருப்பர்களுக்கு மண்டியிடுகிறது . 

புதன், 18 ஜூன், 2025

இந்த Israel அக்கிரமத்தில் அமேரிக்கா பங்காளியாக வேண்டாம்

 ராதா மனோகர் : இந்த 2025 ஆம் ஆண்டில்உலக நாடுகள் எல்லாம் கூடி  இயற்கை சூழல் பாதுகாப்பு பற்றி பேசகைகூடும் 
எதிர்காலத்தில் ஏற்பட கூடிய பேரழிவு தொற்றுக்கள் பற்றியும் அதிலிருந்து மக்களை எப்படி பாதுகாப்பது என்பது பற்றி பேசக்கூடும்
மக்களிடையே பெரிய அளவில் இருக்கும்  பொருளாதார ஏற்ற தாழ்வுகளை எப்படி சரி செய்வது என்பது பற்றி பேசக்கூடும் 
உலகம் முழுவதும் உள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை எப்படி உயர்த்துவது என்பது பற்றி பேசக்கூடும் 
என்றெல்லாம் எண்ணி இருப்போம் 
ஆனால் இன்று நடப்பது அதற்கு நேர் எதிராகவே உள்ளது 
உலகில் உள்ள பெரிய சவால்களுக்கு முகம் கொடுப்பதற்கு பதிலாக 
உக்கிரேனில் மோசமான போரை புட்டின் ஆரம்பித்தது வைத்தார் 
கடந்த மூன்று ஆண்டுகளில் இலட்சக்கணக்கான மக்களின் உயிரை அது பழிவாங்கி விட்டது 
காஸாவில் மிகவும் பயங்கரமான போரை பார்த்து கொண்டிருக்கிறோம்.
இஸ்ரேலின் சட்ட விரோத மனிதாபிமானமற்ற போரினால் ஆயிரக்கணக்கான பலஸ்தீன சிறுவர்கள் பட்டினி சாவை எதிர்கொள்கிறார்கள் 

ஏர் இந்தியா விமான விபத்துக்கு அதிக எடை காரணம்? - முன்னாள் விமானி அதிர்ச்சி கருத்து!

 தினமணி : அகமதாபாத் விமான விபத்துக்கு விமானத்தின் அதிக எடை காரணமாக இருக்கலாம் என்று முன்னாள் விமானி ஒருவர் கூறியுள்ளார்.
குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு 230 பயணிகள், 12 ஊழியா்களுடன் கடந்த ஜூன் 12-ஆம் தேதி பிற்பகல் 1.39 மணிக்கு புறப்பட்ட ஏா் இந்தியா போயிங் 787 ட்ரீம்லைனா் ரக விமானம் ஏஐ 171, புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மேகானி நகரில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது மோதி வெடித்துச் சிதறியது.
இந்த விபத்தில் ஒரே ஒரு பயணி தவிர விமானத்தில் இருந்த 241 பேரும் விமானம் விழுந்த இடத்தில் மருத்துவ மாணவா்கள் என 270-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனா்.

திருச்சி சிவா எச்சரிக்கை! கீழடி விவகாரம்... நாடாளுமன்றத்தை முடக்குவோம்!

 மின்னம்பலம் - Selvam : கீழடி ஆய்வறிக்கையை ஏற்காவிட்டால் நாடாளுமன்றத்தை முடக்குவோம் என்று திமுக மாநிலங்களை தலைவரும் துணை பொதுச்செயலாளருமான திருச்சி சிவா இன்று (ஜூன் 18) தெரிவித்துள்ளார்.
மத்திய பாஜக அரசு கீழடி ஆய்வறிக்கையை அங்கீகரிக்க மறுப்பதாக திமுக மாணவரணி சார்பில் மதுரையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி சிவா பேசும்போது, Trichy siva says we will freeze parliament
“ஹரப்பா கலாச்சாரம் தான் இந்தியாவின் மூத்த கலாச்சாரம் என்று சொல்லப்பட்டது. அந்த அகழ்வாராய்ச்சியின் முடிவு சிந்துவெளி நாகரிகம் கிறிஸ்துவுக்கு 300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று தெரிவித்தது. ஆனால், கீழடி ஆராய்ச்சி முடிவுகள் தமிழர்களின் நாகரிகம் கிறிஸ்துவுக்கு 600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை நிரூபித்திருக்கிறது.

திமுக கூட்டணியில் ஓட்டை..!- அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் வைகைச் செல்வன்!

 மாலை மலர்  : காஞ்சிபுரம் மாநகராட்சியின் குடிநீர், சொத்து வரி உயர்வு உள்ளிட்டவற்றைக் கண்டித்து இன்று காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டச் செயலாளர் சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. 
இதில் அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வைகைச் செல்வன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வாலாஜாபாத் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Sen. Bernie Sanders : Don't Drag the US Into Netanyahu's War with Iran!

கீழடி அகழாய்வு : அமர்நாத் ராமகிருஷ்ணா பணியிட மாற்றம்!

 மின்னம்பலம் -Kavi  :  கீழடி அகழாய்வு மேற்கொண்ட தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா நொய்டாவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். Amarnath Ramakrishna transferred
2014-ஆம் ஆண்டு முதல் சிவகங்கை மாவட்டம் கீழடியில் இந்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. 2023-ஆம் ஆண்டு 982 பக்க ஆய்வறிக்கையை தொல்லியல் துறை நிபுணர் அமர்நாத் ராமகிருஷ்ணன், இந்திய தொல்லியல் துறை இயக்குனரிடம் சமர்ப்பித்தார். 
ஆனால் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறிய மத்திய அரசு, திருத்தம் செய்ய கோரி அந்த அறிக்கையை மாநில அரசுக்கு திருப்பி அனுப்பியது.

கடந்த 6 நாட்களில் 83 ஏர் இந்தியா விமானங்கள் நிறுத்தம் . இன்று ஒரே நாளில் 5 பயணங்கள் நிறுத்தம்

 மாலை மலர் : இன்று (செவ்வாய்க்கிழமை) ஒரே நாளில் ஏர் இந்தியா விமான நிறுவனம் 5 விமானங்களை ரத்து செய்தது.
ஏர் இந்தியாவின் AI143 டெல்லி-பாரிஸ் விமானம் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக நிறுத்தப்பட்டது!
விமானப் பயணத்திற்கு முந்தைய ஆய்வின் போது சில சிக்கல்கள் கண்டறியப்பட்டன, அவை பின்னர் தீர்க்கப்பட்டன. இருப்பினும், பாரிஸ் விமான நிலையத்தில் இரவு நேர கட்டுப்பாடுகள் காரணமாக விமானம் நிறுத்தப்பட்டது.
முன்னதாக, அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குப் புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானம் AI 159 ரத்து செய்யப்பட்டது. வான்வெளி கட்டுப்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை சோதனைகள் காரணமாக விமானம் கிடைக்காததால் விமானம் நிறுத்தப்பட்டது.

செவ்வாய், 17 ஜூன், 2025

: மீண்டும் அண்ணாமலை? அதிமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

 மின்னம்பலம் :  ‘அதிமுகவுக்கு அதிர்ச்சி வெயிட்டிங்- அண்ணாமலையை களமிறக்கும் பாஜக!
தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட பின்னர் கொஞ்சம் அசந்துதான் போனார் அண்ணாமலை. அரசியலில் ஒரு கால் இருந்தாலும் அதற்கு அப்பாலும் சில முயற்சிகளில் தீவிரமாக இருந்தார் அண்ணாமலை.
சர்வதேச அளவில் உடல் வலிமையானவர்களுக்கான Iron Man டைட்டில் வெல்கிற முயற்சிதானாம் அது. Iron Man டைட்டில் வெல்வதற்கு குறிப்பிட்ட நேரத்துக்குள் கடலில் நீந்தி, பின்னர் சைக்கிளிங், ரன்னிங் ஆகியவற்றையும் முடிக்க வேண்டும். இதற்கான பயிற்சிகளில்தான் அண்ணாமலை முழு வீச்சில் ஈடுபட்டு வந்தாராம். ஒவ்வொரு நாளும் 50 கிமீ, 100 கிமீ தொலைவு சைக்கிள் ஓட்டும் பயிற்சியையும் அண்ணாமலை மேற்கொண்டிருந்தாராம்.

80 வயது மூதாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை - வழக்கில் தொடர்புடைய ஒருவரை சுட்டுப்பிடித்த போலீசார்

 மாலை மலர் :  பண்ருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவர் நேற்று மதியம் 3 மணி அளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக அதே பகுதியில் உள்ள சவுக்கு தோப்புக்கு சென்றார். அப்போது அங்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க 4 பேர் கொண்ட கும்பல் திடீரென அந்த மூதாட்டியை தாக்கினர். பின்னர் அவர்கள் மூதாட்டியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. 
இதில் மூதாட்டியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மூதாட்டி அணிந்திருந்த ¾ பவுன் நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து அந்த கும்பல் தப்பி சென்றது.

திராவிடம் இல்லா தமிழகம்’ பிரச்சார இயக்கம்: அர்ஜூன் சம்பத் தகவல்

 hindutamil.in : கும்பகோணம்: ‘திராவிடம் இல்லா தமிழகம்’ என்ற பிரச்சார இயக்கம் ஜூலை 20-ம் தேதி தொடங்கப்படும் இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.
இந்து மக்கள் கட்சியின் தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயற்குழுக் கூட்டம், கும்பகோணத்தில் நேற்று நடைபெற்றது. 
இக்கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியது:
மதுரையில் ஜூன் 22-ம் தேதி நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டுக்கு தமிழக அரசு அனுமதி மறுத்து, பல்வேறு வகையில் இடையூறு செய்து வருகிறது. இந்த மாநாடு, தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும்.

திங்கள், 16 ஜூன், 2025

பூவை ஜெகன்மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு- கடத்தல் வழக்கு

 இந்து Tamil :  சென்னை: கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமன் ஆகியோர் இன்று மதியம் 2.30 மணிக்கு நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 
இந்நிலையில், பூவை ஜெகன்மூர்த்தி நேரில் ஆஜராவதற்காக வழக்கு விசாரணை 45 நிமிடங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜெகன் மூர்த்தி கடத்தியதாக புகார் எழுந்தது.

தமிழக முகாம் வாழ் மக்களின் வாழ்வோடு விளையாடும் இலங்கை தமிழ் அரசியல்வாதிகள்

 தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழ் மக்களின் விவகாரம் பற்றி இதுவரை இது போன்ற ஒரு தெளிவான காணொளி வெளியாகவில்லை!
இந்த மக்களை தங்களின் அரசியல் வியாபாரத்திற்காக பயன் படுத்தும் இலங்கை தமிழ் தேசிய அரசியல்வாதிகளின் சுயநல நோக்கத்தை மிக தெளிவாக எடுத்து காட்டுகிறது இந்த காணொளி 
தோழர் சரவணனை பேட்டி கண்டு தெளிவாக விடயங்களை வெளிக்கொண்டு வந்த தோழர் ஜெயபாலனுக்கு மிகவும் நன்றி!

போயிங் Boing விமானங்களில் உள்ள பாதுகாப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஜான் பார்னெட் உயிருடன் இல்லை.

May be an image of 2 people, aircraft and text that says 'QBOEING HASSSTE ABDEING Q BDEING'

 மருது பாண்டியன்.  :  Arunachalam R :  அகமதாபாத் விமான விபத்து உணர்த்தும் உண்மைகள்!
உலகின் மிகப்பெரிய பயங்கரவாதியான அமெரிக்காவை சேர்ந்த ராணுவ கார்ப்பரேட் நிறுவனமான போயிங் உலகின் விமான உற்பத்தி பணியிலும், ராணுவ தளவாடங்கள், ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் ராணுவ பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை தயாரிப்பதில் முன்னிலையில் உள்ளது.
தற்போது அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கி பயணம் செய்வதற்கு இருந்த விமானம் போயிங் ரக விமானம்தான். இத்தகைய போயிங் ரக விமானங்கள் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகளைக் கொண்டுள்ளது என்று பல காலகட்டங்களில் அதன் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்ட போதிலும், தொடர்ச்சியாக இந்திய ஒன்றிய அரசாங்கம் அது ஏற்கனவே ஆண்ட காங்கிரசானாலும் சரி, தற்போது ஆண்டு வருகின்ற பாசிச பாஜகவானாலும் சரி போயிங் நிறுவனத்துடன் ஒப்பந்தங்களை போட்டுக் கொண்டு ராணுவங்கள் தளவாட உற்பத்தி முதல் பயணிகள் விமானங்கள் வரை அனைத்தையும் வாங்கி குவிக்கின்றனர்.

ஞாயிறு, 15 ஜூன், 2025

ஈரான்! கைகோர்த்த மதவாதிககளும் சி ஐ ஏயும் .. Iran Before and after 1979

ராதா மனோகர் : ஈரான் .. கல்வியும் செல்வமும் மகிழ்ச்சியும் காணமல் போன கதை .
.கைகோர்த்த மதவாதிககளும் சி ஐ ஏயும் .. Iran Before and after 1979
ஒரு பூலோக சொர்க்கம் போலிருந்த தேசம்தான் ஈரான் . செல்வமும் கல்வியும் நல்ல பண்பும் வரலாற்று பாரம் பரியம் கொண்டிருந்த அறிவார்ந்த மக்களின் தேசம் அது .
அமெரிக்காவுக்கே கடன் கொடுத்த தேசம் அது. மத்திய கிழக்கு நாடுகள் எல்லாம் வெளிநாட்டு தொழிலாளர்களை பணிக்கு அழைக்கு முன்பே அதை ஆரம்பித்து வைத்த தேசம் அது. .. அதுவும் நல்ல சம்பளத்தில் கௌரவமாக பண்பாக நடத்தினார்கள்.
படிக்கும் மாணவர்கள் எல்லோருக்கும் அவர்கள் விரும்பிய நாடுகளுக்கு பணம் கொடுத்து அரசாங்கமே உயர்படிப்புக்கு அனுப்பியது .
அப்படி படிக்க போன மாணவர்கள் மேற்கு நாடுகளின் மாய வலையில் விழுந்து இஸ்லாமிய அடிப்படைவாதிகளாக நாடு திரும்பி நாட்டையே சின்னாபின்னமாக்கினர் .

ஜெயமோகன் : ஏர் இந்தியா என்றால் பயணம் ரத்து = அமெரிக்கா வரப்போவதில்லை! உறுதியாகச் சொல்லிவிட்டேன்.

https://jemo.sgp1.cdn.digitaloceanspaces.com/wp-content/uploads/2025/06/hq720.jpg

 jeyamohan.in  :  ஏர் இந்தியா விபத்து!  ஏர் இந்தியா விமானம் அகமதாபாதில் விபத்துக்கு உள்ளானது ஒரு நடுக்கத்தை உண்டாக்கியது. 
ஏனென்றால் என் அகத்தில் இந்த பயம் இருந்துகொண்டே இருந்தது.
 ஏர் இந்தியாவின் விமானங்களின் மிக மோசமான நிர்வாகம், சொல்லப்போனால் இப்படி ஒரு நிர்வாகம் இருக்கமுடியும் என்பதே நிர்வாகவியல் நிபுணர்களுக்கு அதிர்ச்சியூட்டுவதாக இருக்கலாம், எனக்கு நன்றாகத் தெரிந்த ஒன்றாக இருந்தது.
சென்ற முறை நான் அமெரிக்கா சென்றபோது நண்பர் விஸ்வநாதன் எனக்கும் அருண்மொழிக்கும் ஏர் இந்தியாவில்தான் டிக்கெட் போட்டிருந்தார். அதை சரியாகக் கவனிக்கவில்லை. டிக்கெட்டை பார்த்து ஏர் இந்தியா என்றதுமே ஏர் இந்தியா என்றால் பயணம் ரத்து, அமெரிக்கா வரப்போவதில்லை என்று உறுதியாகச் சொல்லிவிட்டேன். அருண்மொழி விஸ்வநாதனிடம் சொல்லி டிக்கெட்டை ரத்துசெய்து எமிரேட் விமானத்தில் டிக்கெட் போட்ட பின்னரே கிளம்பினேன்.