சனி, 30 ஜூலை, 2016

வாங்கிய பிஸ்கெட்டுகளின் உறை பிரிக்கப்படும் முன்பே அவர்கள் கொல்லப்பட்டார்கள்”: 15 ரூபாய் கடனுக்காக கோடாலியால் கொல்லப்பட்ட தலித் தம்பதி

உத்திரபிரதேசம் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளை அரங்கேற்றுவதில் பெயர்போன மாநிலம். உ.பி. மெயின்புரியில் ரூ. 15 கடன் பாக்கி வைத்ததற்காக தலித் தம்பதியை ஒரு வெறிபிடித்த கடைக்காரர் கோடாலியால் வெட்டிக் கொன்றிருக்கிறார்.
விவசாயக் கூலிகளாகப் பணிபுரியும் தலித் தம்பதி, வெறும் ஐந்து ரூபாயை வைத்துக்கொண்டு பணிக்குச் சென்றிருக்கிறார்கள். அந்த ஐந்து ரூபாய் ஒரு பிஸ்கெட் பாக்கெட் வாங்கிக்கொண்டிருப்பதை பார்த்த,கடைக்காரர் நேற்று வாங்கிய பொருட்களுக்காக ரூ. 15 தரவேண்டுமே அதைக் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார். அதைத் தந்துவிடுகிறோம் பொறுத்துக்கொள்ளுங்கள் என சொன்ன தம்பதியை கீழ்த்தரமான வார்த்தைகளால் வாட்டியிருக்கிறார் கடைக்காரர் மிஸ்ரா. தம்பதி அப்படி பேச வேண்டாம் எனக் கூறியதைப் பொறுக்க முடியாமல், வீட்டிலிருந்த கோடாலியைக் கொண்டுவந்து அவர்களைத் தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே தம்பதி இறந்தவிட்டனர்.

யாகூப் மேமனோடு தூக்கிலடப்பட்ட பதிலில்லா கேள்விகளில் சில!

1) ஒரு குற்றவாளி இத்தனை முறை தான் கருணை மனு விண்ணப்ப முடியும் என்று இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா?
2) சத்ருகன் சவுகான் தீர்ப்புப்படி கருணைமனு தள்ளுபடி செய்யப்பட்ட நாளிலிருந்து தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் நாள் வரைக்கும் 14 நாட்கள் உறுதியளிக்கப்பட்டுள்ளதை ஏன் பின்பற்றவில்லை?
3) கருணை மனுவின் எண்ணிக்கை மீதான கட்டுப்பாடின்மையை முறைப்படுத்த உச்ச நீதிமன்றம் ஏதேனும் வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறதா? கண்டிப்பாக இல்லை. ஏனெனில் அவ்வாறு செய்வது இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானதாகும்.
4) யாகூப் மேமன் அண்மையாக அளித்த கருணை மனுவில், ஏற்கனவே அவரது கருணை மனுவை பரிசீலித்து 2014-இல் தான் வழங்கியதே இறுதியான முடிவு எனக் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டிருந்தாரா?

ஜெயலலிதாவை குஷிப்படுத்த திருச்சி சிவாவின் கன்னத்தில் அறைந்த சசிகலா புஷ்பா,அதிமுக எம்பி


டெல்லியிலிருந்து சென்னைக்கு செல்ல தி.மு.க எம்.பி திருச்சி சிவாவும், அ.தி.மு.க எம்.பி சசிகலா புஷ்பாவும் இன்று பிற்பகல் விமான நிலையத்துக்கு வந்தனர். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒருவொருக்கொருவர் ஒருமையில் பேசிக் கொண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விமான நிலைய காவலர்கள் இருவரையும் சமரசப்படுத்தினர். இதனால் இருவரும் பயணத்தை ரத்து செய்து விட்டு, மீண்டும் டெல்லியில் உள்ள தங்களது வீட்டிற்கு சென்று விட்டனர்.  அடிமைகளின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா .Flashback : சசிகலா புஷ்பாவின்  ஒரு நல்ல டெலிபோன்  பேச்சு இவரின் அரசியல் கருத்துக்களை தெளிவாக தெரியப்படுக்றது.  

ஆந்திர தடுப்பணையில் தமிழக விவசாயி தற்கொலை !


தமிழக - ஆந்திர எல்லைப்பகுதியில் பாலாற்றின் குறுக்கே ஆந்திரா கட்டும் தடுப்பணையில் விவசாயி ஒருவர் தண்ணீரில் விழுந்து உயிரிழந்தார். வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தமிழக - ஆந்திர எல்லையில் புல்லூரில், பெரும்பள்ளம் பகுதியில் ஐந்து அடி உயரத்துக்கு இருந்த தடுப்பணையை, ஆந்திர அரசு 12 அடியாக உயர்த்திக் கட்டியது. குப்பம் வரையில் ஐந்து இடங்களில் பெரிய தடுப்பணைகளும், பல இடங்களில் சிறிய தடுப்பணைகளையும் ஆந்திர அரசு கட்டியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகள் மற்றும் அரசின் எதிர்ப்பையும் மீறி ஆந்திர அரசு தடுப்பணைகளைக் கட்டியுள்ளது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக ஆந்திர மாநிலம் குப்பம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக, 12 அடி உயரத்துக்கு உயர்த்தப்பட்ட பெரும்பள்ளம் தடுப்பணை முழுவதுமாக நிரம்பியுள்ளது.

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி அரசு பேருந்தில் பயணம்


கொல்லத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்குச் செல்ல அவசர அவசரமாக ரயில் நிலையம் செல்கிறார் அவர். ஆனால், நூலிழையில் ரயிலைத் தவற விடுகிறார். என்ன செய்யலாம் என்று யோசித்து சில நிமிடங்களில் பேருந்து நிலையம் சென்று அரசு பேருந்தில் ஏறுகிறார். வண்டி பரபரப்பு முடிந்து சற்று ஆயாசமாக, அதன்பின்தான் தன் அருகில் சிலர் ஆச்சர்யமாக நின்றுக் கொண்டிருப்பதை பார்க்கிறார். ‘சார் ஒரு செல்ஃபி’ என அன்போடு அவர்கள் கேட்க, வியர்த்து விறுவிறுத்து இருந்தாலும் அன்புக்கு மதிப்பு கொடுத்து செல்ஃபி எடுத்துக் கொள்கிறார்

குஜராத் தலித் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்.. இறந்த கால்நடைகளை தூக்கவோ சும்மக்கவோ மாட்டோம்!

குஜராத் மாநிலத்தில், இறந்த கால்நடைகளை இனி தூக்கிச் சுமக்கவோ, அவற்றை அப்புறப்படுத்தவோ மாட்டோம் என்று தலித் அமைப்புகள் கடந்த ஒரு வாரமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.பசுவைக் கொன்று அதன் தோலை உரித்ததாகச் சொல்லி, குஜராத் மாநிலம் உனா நகரில் தலித் இளைஞர்கள் 4 பேரை, ஆர்எஸ்எஸ் சங்-பரிவாரத்தைச் சேர்ந்தவர்கள், நடுரோட்டில் வைத்து இரும்புக் கம்பிகளால் அடித்துத் தாக்கினர்.அவர்களை அரை நிர்வாணமாக்கி ஊர்வலமாகவும் அழைத்துச் சென்றனர். அவமானப்பட்ட அந்த தலித் இளைஞர்கள் விஷமருந்தி தற்கொலைக்கும் முயன்றனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தோனேசியாவில் 6 புத்த கோவில்கள் எரிப்பு..

Indonesia detains 7 after attacks on Buddhist temples
இந்தோனீஷியாவில் சிறுபான்மையின மக்களான சீனர்கள் பயன்படுத்தி வந்த 6 கோயில்களை முஸ்லிம் குழு ஒன்று கொளுத்தியதை தொடர்ந்து, போலிசார் 7 பேரை தடுப்புக்காவலில் வைத்துள்ளனர். சுமத்ரா தீவில், தன் வீட்டுக்குஅருகே இருந்த மசூதியிலிருந்து அதிக சத்தம் வருவதாக சீன பெண் ஒருவர் போலிசில் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, புத்த மற்றும் கன்ஃபூசியர்களின் கோயில்கள் தாக்கப்பட்டன. முஸ்லிம்கள் வசிக்கும் பெரும்பான்மையான நாடு இந்தோனீஷியா. ஆனால், பெருமளவில், பல்வேறு மதங்களைச் சேர்ந்த சிறுபான்மையின மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இது சில நேரங்களில் அங்கு பரபரப்பை ஏற்படுத்தும். கடந்த காலங்களில், இன வன்முறைகளுக்கும் வழிவகுத்துள்ளது. bbc.com

ஜெய(சுய)மோகன் பார்வையில் டி,எம். கிருஷ்ணா ஒரு பார்ப்பன துரோகி.. மனுஷ்ய புத்திரன்

thetimestamil.com :கர்நாடக இசைப்பாடகர் டி. எம். கிருஷ்ணாவுக்கு ரமோன் மகஸேசே விருது அளிக்கப்பட்டிருப்பது குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் விமர்சித்து எழுதியிருந்தார். இந்தப் பதிவுக்கு எதிர்வினையாற்றி இருக்கிறார் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன். தனது முகநூல் எழுதியுள்ள பதிவில்,
“ஜெயமோகனை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஒருவர் நிதானமிழக்கும்போது எந்த அளவிற்கு செல்வார் என்பதற்கு திரும்பத் திரும்ப காணக்கிடைக்கும் உதாரணமாக அவர் இருக்கிறார். டி.எம்.கிருஷ்ணாவுக்கு மகஸேசே விருது அளிக்கப்பட்டதை அவர் கடுமையாக தாக்குகிறார். ’’சஞ்சய் சுப்ரமணியம் அமர்ந்து எழுந்த நாற்கலியில் அமரும் தகுதிகூட இல்லாதவர்’’ என்று எழுதுகிறார். ஜெயமோகனைபோலவே எனக்கும் இசை பற்றி எதுவும் தெரியாது என்பதால் இதைப்பற்றி நான் பேச விரும்பவில்லை. ஆனால் இந்த விருது இசையில் டி,.எம் கிருஷ்ணா நிகழ்த்திய சாதனைகளுக்காக அல்ல மாறாக ஒரு பிரபல இசைக்கலைஞராக சமூக நல்லிணகத்திற்காகவும் நீதிக்காகவும் பொது வெளியில் அவர் எழுப்பிய குரலுக்காக்காகவே இந்த விருது வழங்கபட்டிருக்கிறது.

முஸ்லிம் மதத்துக்கு மாறுவோம்! : நாகை தலித் மக்கள் அறிவிப்பு


வழிபாட்டு உரிமையும், கோயிலில் சமத்துவமும் மறுக்கப்படும் தலித் மக்கள், இந்து மதத்தில் இருந்து வெளியேறி பிற மதங்களில் இணைகின்றனர். நாகப்பட்டினம் கோவில் ஒன்றில் திருவிழா நடத்த அனுமதி மறுத்த சாதி இந்துக்களுக்கு எதிராக, முஸ்லிம் மதத்துக்கு மாறுவோம் என்று அறிவித்துள்ளனர் நாகப்பட்டினம் அருகே உள்ள பழங்கள்ளிமேடு கிராம மக்கள்.
நாகை அருகேயுள்ள பழங்கள்ளிமேடு கிராமத்தில் பத்ரகாளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் 5 நாள் கோவில் திருவிழா நடைபெறுகிறது. இதில், ஒரு நாள் கோவில் திருவிழாவை நடத்தும் உரிமையைக் கோரி நிற்கிறார்கள் தலித் மக்கள். அது மட்டுமல்லாமல், கோவில் மண்டகப்படி ஏறும் உரிமை மறுக்கப்படுவதாகவும், தலைமுறை தலைமுறையாக மறுக்கப்படும் உரிமையை இனி அனுமதிக்க முடியாது, சரிக்குச் சமமான வழிபாட்டு உரிமை வேண்டும் அல்லது முஸ்லிம் மதத்துக்கு மாறுவோம் என்றும் அறிவித்துள்ளனர்.

ஓசூரில் பெருமழை.. 20 வருடங்களில் காணாத வெள்ளம்..


கடந்த 20 வருடங்களாக காணாத பெரு மழையை ஓசூர் தற்போது நேருக்கு நேர் சந்தித்து வருகிறது. இயற்கையை எதிர்த்து யாராலும் வெற்றி பெற முடியாது என்ற யதார்த்தத்துக்கு ஓசூர் மட்டும் விதிவிலக்கா என்ன? கடந்த சில தினங்களுக்கு முன்னதாக மழை வெள்ளத்தின் முழு கட்டுப்பாட்டுக்குள் ஓசூர் கொண்டு வரப்பட்டு விட்டது. இந்த பெருவெள்ளத்தில் மூன்று பேர் பலியாகி இருக்கின்றனர். சென்னை மழை கற்று தந்த பாடத்தை அண்டை மாவட்டங்கள் கவனிக்கவில்லை. மாநகரமே அந்தப் பாடத்தை மறந்து மீண்டும் நீர்நிலைகளை ஆக்ரமிக்கும் இயல்பு வாழ்க்கைக்கு வெகு சீக்கிரம் திரும்பி விட்டபோது, மாநிலத்தின் மற்ற பகுதிகள் மட்டும் அதை நினைவில்வைத்து தன் தவறுகளை சரி செய்து கொள்ளுமா என்ன? இதன் விளைவு… இதோ, மழைநீரில் ஓசூர் மிதந்து கொண்டிருக்கிறது.

கபாலி மலாய் மொழி டப்பிங் 400 அரங்குகளில் ரிலீஸ் ... மலாய் மொழி டீசர் சாதனை

சென்னை: கபாலி படத்தின் மலாய் வெர்ஷன் 400 திரையரங்குகளில் இன்று ரிலீஸ் செய்யப்படுவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கபாலி'. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை தாணு தயாரித்திருக்கிறார். கபாலி திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கடந்தவாரம் வெள்ளிக்கிழமை ரிலீசானது.தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் 'கபாலி' படத்துக்கு ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருந்தது. தமிழ்நாட்டில் திரையிடப்பட்ட தியேட்டர்களில் பெரும்பாலானவை 'ஹவுஸ்புல்' காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றன.

மலேசியா தமிழர்கள்... ஒரு வரலாறு வெளியே வருகிறது!

கபாலி திரைப்படம் வெளியானதை அடுத்து மலேசிய வாழ் தமிழர்கள் தங்களது வம்சாவளி மக்களை குறித்தான தேடலில் இறங்கியுள்ளதாக அங்குள்ள தமிழர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். கபாலி திரைப்படம் கடந்த வாரம் 22ஆம் தேதி [வெள்ளிக்கிழமை] வெளியானதை அடுத்து படம் குறித்த விமர்சனங்கள் பலவாறு பறந்து கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றி தோல்வி குறித்து ஒருபுறம் விவாதமும், கபாலி படம் தலித் மக்களைப் பற்றி பேசுகிறது என்று படத்தின் அரசியல் தன்மை ஒருபுறமும், வைரமுத்து, சாரு நிவேதிதா, மிஷ்கின், சமுத்திரகனி போன்றோரின் விமர்சனம் ஒரு பக்கமும், ரஞ்சித் மீதான விமர்சனம் ஒருபுறமும் அனல் பறந்து கொண்டிருக்கிறது.

தியேட்டரில் 'கபாலி' வசனங்களுக்கு சென்சார்.. ஆப்பரேட்டர்கள் கைவரிசை.. ஆடியோ மியுட் செய்யப்படுகிறது.. ஜாதி ஜாதி

போன ஞாயிற்றுக்கிழமை பழனியிலுள்ள 'வள்ளுவர்' தியேட்டரில் தன் மனைவியுடன் மாலையில் 'கபாலி' படம் பார்க்க சென்றுள்ளார் ஒரு தோழர். படத்தில் ராதிகா ஆப்தே 'யார் எந்த உடை போடனும்னு யார் முடிவு செய்றது?' என்று பேசும் இடத்தில் மட்டும் ஆடியோ 'மியூட்' செய்யப்பட்டுள்ளது. முதலில் ஏதாவது தொழில்நுட்பக் கோளாராய் இருக்கும் என்று நினைத்துள்ளார் தோழர். அந்த திரைப்படத்தில் மிகவும் முக்கியமான 'காந்தி சட்டையை கழட்டினதுக்கும், அம்பேத்கர் கோர்ட் போட்டதுக்கும் பின்னால் நிறைய காரணம் இருக்கு' என்று ரஜினி பேசும் காட்சியிலும் ஆடியோ மியூட் செய்யப்பட்டு உடனே அடுத்த காட்சியில் ஆடியோ சரியாக வந்த போது தான் இது திட்டமிட்டு செய்யப்படுவதாக உணர்ந்துள்ளார். இது குறித்து தியேட்டர் நிர்வாகத்திடம் முறையிட முயன்றபோது அவர் மனைவி தடுத்துள்ளார். ஆனாலும் அந்த தியேட்டர் காண்டீனில் இருந்தவரிடம் 'இது சரியில்லை. திட்டமிட்டு ஆடியோவை குறைப்பது நல்லதல்ல. அடுத்த எங்காவது நடந்தால் நான் புகார் செய்வேன்' என்று கூறியுள்ளார்.

இமயமலையில் ரோடியோலா மூலிகை .. அனுமானின் சஞ்சீவினி.. புலுடா விடும் பாஜக


இமயமலையில் உயிர் வாழ்வதற்கு மிகவும் சிரமப் படும் ஒரு பகுதியில் உயிர்களைப் பாதுகாக்க உதவும் ரோடியோலா என்ற ஓர் அதிசய மூலிகையை அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் இந்த மூலிகை சோலோ என்று அழைக்கப்படுகிறது. இந்த மூலிகையின் அரிய குணங்கள் குறித்து இன்னும் தெளிவாகக் கண்டறியப் படவில்லை என்றாலும், லடாக் பகுதிவாசிகள் இதன் இலைகளை உணவுப் பொருளாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
லே பகுதியில் உள்ள மலைப்பகுதி ஆய்வுக்கான ராணுவ அமைப்பின் விஞ்ஞானிகள் இந்த மூலிகையின் மருத்துவ குணங்களை ஆராய்ந்து வரும் நிலையில் விஞ்ஞானிகள் இது பற்றிக் கூறுகையில், இந்த மூலிகை உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகிறது. கதிரியக்கத்தின் விளைவுகளில் இருந்தும் உயிர்களைப் பாதுகாக்கிறது. மன உளைச்சல், கவலை ஆகியவற்றுக்கு சிறந்த நிவாரணியாகவும், உடலில் ஜீரண சக்தியை மேம்படுத்தும் தன்மையும் இந்த மூலிகைக்கு இருப்பது தெரியவந்துள்ளது என்று கூறுகின்றனர்.

ஈரான் ஆண்கள் பர்தா அணிந்து போராட்டம் Men in Iran are wearing hijabs in protest..

parthaass  இஸ்லாமிய பெண்களின் ‘பர்தாவை’ உடுத்தி ஆண்கள் போராட்டம்: காரணம் என்ன? parthaass
Iranian men are taking a stand for the rights of the women and girls by covering up. Men are posting photos online of themselves wearing hijabs (headscarves) in protest of Iran‘s strict morality codes that force women to keep their hair covered when they’re out in public.
ஈரான் நாட்டில் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவது கட்டாயம் என பொலிசார் வலியுறுத்தி வருவதால் அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் தற்போது பர்தா அணிந்து போராடி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் நாட்டில் கடந்த 1979ம் ஆண்டில் நிகழ்ந்த இஸ்லாமிய புரட்சியை தொடர்ந்து பொது இடங்களில் பெண்கள் கட்டாயம் தலையை மறைக்கும் பர்தாவை அணிவது அவசியமாகி வருகிறது."இஸ்லாமிய பெண்களின் ‘பர்தாவை’ உடுத்தி ஆண்கள் போராட்டம்: காரணம் என்ன?"எனினும், அண்மைக் காலங்களில் பெண்கள் பர்தா அணிவது கட்டாயமாக்கியுள்ளதுடன், இதனை பின்பற்ற தவறும் பெண்களுக்கு அபராதம் மற்றும் சிறை என கடுமையான தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. மேலும், பர்தா அணியாத பெண்கள் பாலியல் தாக்குதலுக்கும் உள்ளாக வாய்ப்புள்ளதால் அதனை அவசியம் பெண்கள் அணிய வேண்டும் என பொலிசார் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த வாரம் முதல் தங்களுடைய மனைவி, சகோதரி, தோழி உள்ளிட்ட பெண்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஆண்களும் பர்தா அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். என்ற பெண் ஊடகவியலாளர் வலியுறுத்தியுள்ளதை தொடர்ந்து தற்போது ஈரான் நாட்டு ஆண்கள் இந்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இலக்கியாஇன்போ .காம்

தமிழச்சி தங்கபாண்டியன் வீட்டு திருமணத்தில் அழகிரி ஸ்டாலின் கண்ணாமூச்சி?

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது ‘எந்த கட்சிக்கு வேணாலும் ஓட்டுப் போடுங்க… தி.மு.க-வுக்கு வாக்களிக்காதீங்க..!’ என்று உத்தரவு போட்ட  மு.க. அழகிரி, இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார்? ஒரு காலத்தில் கட்சி நிகழ்ச்சிகளில் பரபரப்பாக கலந்து கொண்டவர், இப்போது காதுகுத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். மஞ்சள் நீராட்டு விழாவிலும் மறக்காமல் கலந்து கொள்கிறார். மதுரையில் மொய் வசூல் செய்வதற்காக ‘இல்ல விழா’ என்றொரு நிகழ்ச்சி நடத்துவார்கள். சமீபத்தில் தனது ஆதரவாளர் நடத்திய இல்ல விழாவிலும் கலந்து கொண்டு சிறப்பித்து இருக்கிறார். கடந்த  10-ம் தேதி, தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சகோதரி தமிழச்சி தங்கபாண்டியன் மகள் சரயுக்கும், காங்கிரஸ்  தலைவர்களின் ஒருவரான என்.எஸ்.வி. சித்தன் பேரனுக்கும் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் திருமணம் நடந்தது.

மலேசியத் தமிழ்த் தொழிலாளர்களை நேசித்த பெரியார்! - மறக்கக்கூடாத வரலாறு

மலே(சி)யா தமிழ்த் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்ட தமிழகத் தலைவர்களில் தந்தை பெரியாரின் இடத்தை எவராலும் இட்டு நிரப்ப முடியாது.>1929-30ம் ஆண்டில் முதல் முறையும்; 1954 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையும் அவர் நேரில் சென்று அங்கு வாழும் தமிழர்களை சந்தித்தார். பெரியாருக்கு எதிராக அங்கும் இந்து சனாதனிகள் வரிந்து கட்டினார். சுயமரியாதை இயக்கத்திற்கு எதிராக மகம்மதிய அமைப்பினர் சிலரும் கண்டனம் தெரிவித்தனர். எதிர்ப்புகளை, மயிரைப் பொசுக்கும் நெருப்பாக எதிர்கொண்டு, தன் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார் பெரியார்.அந்நாட்டில் வாழும் பல தரப்பு தமிழ் மக்களிடமும் அவருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தபோதும், அவர் அதிக மகிழ்ச்சி அடைந்தது தோட்டத் தொழிலாளர்களுடனான சந்திப்பில்தான்.>இதுகுறித்து 1955ல் வெளியான பதிவு…புக்கிட்  ராசா லெட்சுமித் தோட்டத்தின்  வாயிலெல்லாம் தோரணங்கள் அலங்கரிக்க, வழியெல்லாம்  தொண்டர்கள் அணிவகுத்து  நிற்க, தொழிலாளர்களும் அவர்களுடைய  குடும்பத்தினரும்  வாழ்த்தொலி  எழுப்பி மகிழ்வு  முகம் காட்டி  சமூக  சீர்திருத்தச் செம்மலை வரவேற்றனர்.

வெள்ளி, 29 ஜூலை, 2016

சுவாதி தீவிரவாதிகளோடு தொடர்பில் இருந்தாரா? அதிர்ச்சி செய்திகள் டிவி பேட்டியில் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி


தமிழ் தொலைக்காட்சி ஒன்று வெளியிட்ட நிகிழ்ச்சி ஒன்றில் சுவாதியை ஒரு குழுவினர் பல்வேறு சட்டவிரோத செயலில் ஈடுபட உபயோகித்தனர் என்ற அதிர்ச்சி தகவலை கூறியுள்ளனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து ஏதாவது சட்டவிரோத செயலில் ஈடுபட்டார்களா, இளைஞர்களை மூளைசலவை செய்யும் கும்பல், தீவிரவாதிகள் நாட்டின் இறையாண்மைக்கு, பாதுகாப்புக்கு எதிராக பயன்படுத்தியிருக்கலாம் என வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி சந்தேகத்தை எழுப்புகிறார். சுவாதியின் மடிக்கணினி உள்ளவற்றை பார்த்தால் தான் இவற்றை உறுதிப்படுத்த முடியும் என கூறுகிறார் வழக்கறிஞர்.
மேலும், பெங்களூரில் சுவாதி பணிபுரிந்த போது தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புகொள்வதற்காக ஒரு மென்பொருளை திருடிக்கொண்டு வரும்படி அந்த குழுவினர் மிரட்டியதாக சொல்லப்படுகிறது.

கபாலி ரஜினியை டைகர் ஹரி சுட்டானா? பெயரையும் முகபாவத்தையும் பார்த்தா என்ன தோன்றுகிறது?

மெட்ராஸ் படத்தில் ஜானி கதாபாத்திரத்தில் நடித்த ஹரி கபாலியில் டைகர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டாரை கிளைமேக்ஸில் இவர் சுடுவாரா? இல்லையா? என்பது போல் காட்டப்பட்டிருந்தது. இதுக்குறித்து இவர் கூறுகையில் ‘ரஜினி சார் நான் சுட்டனா? இல்லையா? என்பதற்கு உங்கள் பார்வை தான் பதில், ஒருவேளை அவர் என்னை சுட்டு இருக்கலாம், அல்லது நான் பின்னால் இருப்பவர் யாரையாவது சுட்டு இருக்கலாம். மேலும் படத்திலேயே ஒரு நண்டுக்கதை வரும் அப்படி ஒரு நண்டு தான் நான்’என கலகலப்பாக கூறிவுள்ளார்.  தமிழர் வரலாறு அதானே?

இந்தியா 2,130 கோடி நிதியுதவி.. இலங்கை ரெயில்வேயை மேம்படுத்த..

இலங்கை ரயில்வேயை மேம்படுத்த இந்தியா 2,130 கோடி நிதியுதவி : செய்தி இந்திய ரயில்ல கக்கூஸ்ல ஒரு டப்பா வைக்க வக்கில்ல இலங்கை ரயிலுக்கு 2,130 கோடி..

15 ரூபாய்க்காக தலித் தம்பதிகள் வெட்டி கொலை

;குர்ரா பகுதியில் உள்ள லக்மிபூர் கிராமத்தில் உள்ள வயலில் காலையில் வேலைக்கு சென்ற பாரத் நாட் மற்றும் அவரது மனைவி மம்தா ஆகியோரை உயர் ஜாதியை சேர்ந்த அசோக் மிஸ்ரா தடுத்து அவர்களிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார்;அவர்கள் பணம் இல்லை என்று மறுத்ததும் அவர்களுடன் அசோக் மிஸ்ரா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் இருவரையும் அசோக் மிஸ்ரா வெட்டி கொன்றுள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறை ஆணையர் மற்றும் மாவட்ட நீதிபதி பி.சி.குப்தா ஆகியோர் அடித்துக்கொல்லப்பட்ட தலித் ஜோடியை பார்த்தனர்.பின்னர் மளிகை கடையில் இருந்த அசோக் மிஸ்ராவை காவல்துறை கைது செய்தனர். 15 ரூபாய் தர மறுத்த தலித் ஜோடி உயர் ஜாதி ஒருவரால் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெப்துனியா .காம்

மாட்டுக்கறி, தலித், முஸ்லீம், அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., பார்ப்பனீயம், இந்துமதம், விவசாயக் கடன், அம்பானி, இசட்+ பாதுகாப்பு, மோடி,

செய்தி: குஜராத் மாநிலம், கிர் சோமநாதர் மாவட்டத்தில் உள்ள உனா நகரில் பசுவின் தோலை உரித்ததாக தலித்துகள் தாக்கப்பட்டது தொடர்பான போலீசார் விசாரணையில், அந்தப் பசுக்களை சிங்கம் கொன்றதாகவும், பசுக்களின் உடலை அகற்றுவதற்காகவே தலித்துகள் வரவழைக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
நீதி: இது காவி குரங்களுக்கு தெரியவில்லை என்பதல்ல பிரச்சினை! குரங்குகளை ஊரை விட்டு இன்னும் நாம் துரத்தவில்லை என்பதே பிரச்சினை!
 
செய்தி: இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முன்னணியில் இருக்கும் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானிக்கு கடந்த சில ஆண்டுகளாக ‛இசட்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரது மனைவி நினா அம்பானிக்கு மத்திய அரசு ‛ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது.
நீதி: நிர்பயாக்கள் பயந்து வாழும் நாட்டில் நினாக்களின் பாதுகாப்பிற்காக மோடி அரசு எவ்வளவு பாடுபடுகிறது பாருங்கள்!

வணக்கம் மதுரை .. இல்லை இல்லை நமஸ்தே மதுரை .. வோக்ஸ்வாகன் ஹிந்தி பிரசாரம்

அண்ணே மதுரையில் போக்ஸ் வேகன் கார் கம்பெனியின் அலுவலக முகப்பில்என்று எழுதி வைத்திருக்கிறார்கள். அந்த அலுவலகம் சென்று கண்டிக்க வேண்டும்’ என்று தம்பி அமர்நாத் (Amarnath Pitchaimani) சொன்னார்.
மதுரையிலிருந்து பொதுக்கூட்டத்திற்காக அத்திப்பட்டி செல்லும் வழியிலிருந்த அந்த நிறுவனத்திற்கு 23 ஆம் தேதி மாலை திராவிட இயக்கத் தமிழர் பேரவை, திராவிடர் கழகத் தோழர்களுடன் சென்றோம். உடன் தோழர் அன்புமதியும் (Anbu Mathi) வந்திருந்தார். ‘மோடி, ராகுல் வந்தாலே வணக்கம் மதுரை என்றுதான் சொல்கிறார்கள். இது முறையல்ல.’ என்று எங்கள் எதிர்ப்பை தெரிவித்து, அதை ‘வணக்கம் மதுரை’ யாக மாற்ற வேண்டும் என்றோம். ‘மாற்றுவதாக’ உறுதியளித்தார் அதன் மேலாளர். மதிமாறன்.wordpress.com

குளச்சல் துறைமுக திட்டத்தை கைவிடமுடியாது .. கேரளா முதல்வருக்கு பிரதமர்

தமிழகத்தில் குளச்சல் துறைமுகம் நிறுவப்படும் என கடந்த 2013 ம் ஆண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். நீண்ட போராட்டத்திற்கிடையில் மத்திய அமைச்சரவை அண்மையில் இதற்கு ஒப்புதல் அளித்தது. ஆனால் இதற்கு கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே, குளச்சல் துறைமுகம் அமைப்பதற்கு அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் கேரள சட்டப்பேரவையில் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், குளச்சல் துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான குழு பிரதமர் மோடியை இன்று சந்தித்தது. கேரள மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அக்குழுவில் இடம் பெற்று இருந்தனர்.  நாடாளுமன்ற வளாகத்தில் இந்த குழு பிரதமரை சந்தித்தது. அப்போது, பினராயி விஜயனின் கோரிக்கையை கேட்ட பிரதமர், குளச்சல் துறைமுக திட்டத்தை கைவிட முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டார் என்று சொல்லப்படுகிறது.

துருக்கி: 45 செய்தி தாள்களும் 16 தொலைக்காட்சிகளும் தடை செய்யப்படுகிறது

துருக்கியில் 45 செய்தி தாள்களையும், 16 தொலைக்காட்சியும் மூட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. துருக்கியில் கடந்த 15-ம் தேதி இரவு ராணுவத்தின் ஒரு பிரிவினர் அதிபர் எர்டோகனின் ஆட்சியை அகற்ற முயன்றனர். ஆனால் அந்த ராணுவ புரட்சியை எர்டோகனின் ஆதரவாளர்கள் முறியடித்தனர். இதில், புரட்சி படையைச் சேர்ந்த 100 வீரர்களும் எர்டோகனின் ஆதரவாளர்கள் 208 பேரும் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து மூத்த ராணுவ தளபதிகள் உட்பட 3000 வீரர்களும் நீதித் துறையைச் சேர்ந்த 2750 நீதிபதிகளும் கைது செய்யப்பட்டனர். அந்த வரிசையில் மூத்த அரசு அதிகாரிகள் உட்பட 8777 அரசு ஊழியர்களை அந்த நாட்டு உள்துறை அமைச்சகம் பணிநீக்கம் செய்தது.

கபாலி 4000 டிக்கெட்டுகளை தாணுவிடம் வாங்கிய வைரமுத்து.. பிளாக் டிக்கெட் வியாபாரமும் செய்கிறாரோ?

 vairamuthu watch kabali with bharathirajaசென்னை: கபாலியை பார்க்காமலேயே விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்கிய கவிஞர் வைரமுத்து, இயக்குனர் பாரதிராஜவுடன் முதல் முறையாக கபாலி படத்தை பார்த்துள்ளார் கபாலி தோல்விப் படம் என வைரமுத்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. கபாலி படத்துக்கு பாடல் எழுதும் வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் வைரமுத்து இப்படி பேசுவதாக கபாலி படத் தயாரிப்பாளர் தாணு பதிலடி கொடுத்திருந்தார். கவிஞர் வைரமுத்துவின் இந்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் கடுமையான பதிலடி கொடுத்திருந்தனர். அதேநேரத்தில் சமூக வலைதளங்களிலும் வைரமுத்துக்கு எதிராக கடும் எதிர்ப்புகளையும் பதிவு செய்திருந்தனர் ரஜினி ரசிகர்கள்.

கபாலி ! கவிஞர் வைரமுத்துவின் விஷம சிரிப்பு .. சுப்பிரமனியம் சுவாமியின் விஷம சிரிப்பு.. வித்தியாசம் உண்டா?

வாசுகி பாஸ்கர்
வைரமுத்து பேசியதை நானும் கூட ரொம்ப லைட் டோன்ல
எடுத்துகிட்டோமோ என தோணியது, அதற்கு காரணம் இருக்கு, வைரமுத்து ஒரு முற்போக்குவாதி, திராவிட அரசியல் சார்பு கொண்டவர், இறை மறுப்பாளர், என்கிற விவகாரங்களால் அவர் பேசியதில் மிஞ்சி போனால் வெறும் வாய்ப்பு மறுக்கப் பட்ட தொனி மட்டுமே என விட்டு விடலாமா என்கிற போது தான் அந்த வீடியோவில் அந்த நமட்டு சிரிப்பு, ஏளன சிரிப்பு, என்னை உருத்திக் கொண்டே இருக்கிறது!
இளையராஜாவுக்கும், வைரமுத்துவுக்குமான பிரச்சனை கூட வெறும் ஈகோ என்கிற புள்ளியில், இளையராஜா கொஞ்சம் ஈகோ அதிகம் இருப்பவர் என்கிற காரணத்தினால் பிரச்சனையின் பின்னணியில் ராஜாவுக்கு அதில் அதிக பங்கு இருக்கும் என்பது பொது அபிப்பிராயம். காரணம் அதற்கும் மேல் என்பது தான் ராஜா வட்டத்தினுள் நான் நெருங்கிய போது தெரிந்துக் கொண்டது!

மனிதர்கள் மலக்குழிக்குள் இறங்குவதை ஒழிக்கப் போராடி வரும் பெஜவாடா வில்சனுக்கு ரமோன் மகசசே விருது


இந்தியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பெஜவாடா வில்சனுக்கும் ரமோன் மகசசே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த பெஜவாடா வில்சன், மனிதக் கழிவை மனிதர்களே அள்ளும் முறைக்கு எதிராக 30 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகிறார்.‌ இதற்காக, சஃபாய் கர்மசாரி அந்தோலன் என்ற மனித உரிமை அமைப்பை உருவாக்கியுள்ள வில்சன், தலித் மக்களின் மேம்பாட்டிற்காக போராட்டங்களை நடத்தி வருகிறார்.
கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் பிறந்தவரான பெஜவாடா வில்சனின் தந்தையும் சகோதரரும் உறவினர்கள் பலரும் துப்புரவுத் தொழிலாளர்களாக பணிபுரிந்தவர்கள். இளமைக்காலத்தில் விடுதியில் தங்கிப்படித்தபோது, பெஜவாடா வில்சனின் சாதியைக் குறிப்பிட்டு மனிதக்கழிவை அகற்றுபவர் என சக மாணவர்கள் கேலி செய்துள்ளனர்.

மஞ்சள் பத்திரிகை’: தி டைம்ஸ் தமிழுக்கு லீனா மணிமேகலையின் ‘பாராட்டு’

எழுத்தாளர் ப்ரேம் மீது நடத்திய நிகழ்த்திய ஆணவத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் கூட்டறிக்கையை தி டைம்ஸ் தமிழ் வெளியிட்டது. லீனாவின் ஆணவத் தாக்குதல் எத்தகைய தருணத்தில், எப்படி வெளிப்பட்டது என்பதையும் தி டைம்ஸ் தமிழ் ஆவணப்படுத்தியிருக்கிறது. முகநூல், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் இடம் பெறும் விவாதங்கள், சர்ச்சைகளை ஒட்டி ஊடகங்கள் செய்தியாக்குவது உலகம் முழுக்கவும் நடைமுறையில் இருக்கிறது. சமூக ஊடகங்களில் எழுதப்படும் பதிவு குறித்து, தொடர்புடைய பிரபலத்திடம் கருத்து கேட்டு வாங்கிப் போடுவது அவசியம் கருதி செய்வதோ, தவிர்ப்பதோ சூழ்நிலையைப் பொறுத்து ஊடகங்கள் செய்கின்றன. அர்னாப் கோஸ்வாமி குறித்து பர்கா தத் கருத்து தெரிவிக்கும் முகநூல் பதிவு செய்தியாகிறது.
இதுகுறித்து மேலதிக செய்திகளைக் கொடுங்கள் என்று கேட்டு ஊடகங்கள் காத்திருப்பதில்லை. அதுபோல ஏராளமாகச் சொல்லலாம். சமூக ஊடகத்தில் விவாதிக்கப்படும், வைரலாகும் செய்திகளுக்கென்றே தனித்த இணையதளத்தை நடத்துகிறது இண்டிபெண்டண்ட் இதழ்.

அர்னாப் கோஸ்வாமி, நீங்கள் பத்திரிகையாளர் தானா?”: பர்கா தத்

பத்திரிகையாளர் பர்கா தத் சக பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி மீது மிகக் கடுமையான விமர்சனங்களை வைத்திருக்கிறார். காஷ்மீரில் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக நடந்துவரும் போராட்டங்கள், கிளர்ச்சிகள் அங்கு வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கையை பெருமளவில் பாதித்திருக்கிறது. குழந்தைகள், இளைஞர்கள் பெல்லட் குண்டுகளால் பார்வை இழப்புகளுக்கும் ஆளாகியிருக்கிறார்கள். 47 பேர் இந்தப் போராட்டங்களின் போது
உயிரிழந்துள்ளனர். இத்தகைய சூழலில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் அர்னாப் கோஸ்வாமி, பத்திரிகையாளர்கள் சிலர் ஜம்மு காஷ்மீர் பிரச்சினையில் கிளர்ச்சியாளர் ஊக்கப்படுத்துவதாக தொடர்ந்து குற்றம்சாட்டிக்கொண்டிருந்தார். அத்தகைய பத்திரிகையாளர்கள் தண்டிக்க வேண்டும் எனவும் பேசியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக தனது முகநூலில் பர்கா தத்,

மலேசியா தமிழர்களுக்கு நேரடியாக உதவி செய்த ஒரே இந்திய தலைவர் தந்தை பெரியார்தான்.. மன்னிப்பு கேட்கும் ரஞ்சித்

மலேஷியாவுக்கு தொழிலாளர்களாக இடம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கபாலி திரைப்படத்தில் விவேகானந்தர், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ், பாப்மார்லே, என பல அரசியல் தலைவர்களின் படங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் மலேஷிய தமிழர்களுக்காக போராடிய தந்தை பெரியாரின் படம் இடம் பெறவில்லை. கபாலி படத்தில் பயன்படுத்தியிருக்கும் தலைவர்கள் மிக முக்கியமானவர்கள்தான் என்றாலும் அவர்களை விட மலேஷிய தமிழர்களுக்காக நேரடியாக போராடியவர் தந்தை பெரியார் ஒருவரே!

ஒரு இசைக்கலைஞனுடன் பேசுவதற்கே ஜாதி தடையாக இருக்கிறது... மாக்சாசே விருது பெற்ற டி.எம்.கிருஷ்ணா

இந்த விருது பெரும்பாலும் சிறந்த சமூக சேவைக்காக வழங்கப்படும். கர்நாடக இசையை சமுதாயத்தில் வெகுஜன மக்களிடம் எடுத்துச்சென்று சர்வதேச அங்கீகாரம் பெற்ற இசைக்கலைஞரான உங்களுக்கு இந்தமுறை விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. உங்களைப்போல இந்த முயற்சியைத் தொடர ஆதரவில்லாதநிலையில், இதுபற்றிய உங்கள் கருத்தென்ன? இந்த விருது உங்கள் இலக்கை நோக்கிப் பயணிக்க எவ்வாறு உதவும் என நினைக்கிறீர்கள்?
எனக்குக் கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரத்துக்கான காரணம், கர்நாடக இசையையும் தாண்டிய ஒன்றாக இருக்குமென்று கருதுகிறேன். மனிதன் உருவாக்கிய சேரிகள் எனும் விலங்கை உடைத்தெறியும் முயற்சிக்கு கிடைத்த அங்கீகாரம். என் நிலை வழக்கத்துக்குமாறாக இருக்கலாம். சொல்லப்போனால், இப்போது இசை ரசிகர்கள் மற்றும் மற்றவர்களிடமிருந்து கிடைத்திருக்கும் ஆதரவால், என் இசையின்மூலம் நான் செய்ததை நினைத்து அதீத மகிழ்ச்சியுடன் நினைக்கிறேன்.

உங்களுக்கு வசந்தகாலம்! 31,834 புதிய அடிமைகளை வரவேற்ற bogusvotescm ஜெயலலிதா

விழாக்கோலம்போல காட்சி தந்தது ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம். பல்வேறு கட்சிகளில் இருந்தும் அதிமுக-வில் இணைய திரண்டிருந்தனர். சமீபத்தில், மதிமுக-வில் இருந்து வெளியேறிய மதிமுக-வின் மத்திய சென்னை முன்னாள் மாவட்டச் செயலாளர் ரெட்சன் அம்பிகாபதியுடன் ஆயிரக்கணக்கான மதிமுக-வினர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுக-வில் இணைந்தனர். திமுக, காங்கிரஸ், தமாகா, மார்க்சிஸ்ட், தேமுதிக கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அதிமுக-வில் இணைய அவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கினார் முதல்வர் ஜெயலலிதா. அவர்களை வரவேற்றுப் பேசிய முதல்வர் ஜெயலலிதா, ‘உங்கள் அனைவரையும் வருக வருக என்று அழைக்கிறேன். ஒரு நல்ல இடத்தில் அனைவரும் இணைந்துள்ளீர். பல்வேறு கட்சியில் இருந்து 31,834 பேர் அதிமுக-வில் இணைந்ததன்மூலம் உங்களுக்கு புது வசந்தகாலம் அமைந்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றிபெறும். அதிமுக வெற்றிக்கு கட்சியினர் நீங்கள் தீவிரமாக உழைக்க வேண்டும் என்றதோடு, விழா முழுக்க புன்னகையோடு உற்சாகமாகக் காணப்பட்டார் முதல்வர் ஜெயலலிதா.  minnambalam.com

தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்.. விமர்சிப்பது எதிர்கட்சிகளின் உரிமை ! விஜயகாந்த் பிரேமலதா அவதூறு வழக்கு...

இரு தினங்களுக்குமுன்பு தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் பிரேமலதாவுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்திருந்தது நீதிமன்றம். இதையொட்டி, உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது விஜயகாந்த் தரப்பு. திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் தேமுதிக பொதுக்கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா பேசும்போது, தமிழக அரசு வழங்கிய இலவசப் பொருட்கள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த விமர்சனங்கள் தமிழக முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும்வகையில் இருந்ததாகக்கூறி, விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதாமீது திருப்பூர் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. அப்போது, இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தேமுதிக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதாமீதான அவதூறு வழக்குகளை விசாரிக்க இடைக்கால தடை விதித்தது.

பாஜகவின் எம்பி கிரிகெட் வீரர் சித்து ஆம் ஆத்மியில் சேர்கிறார் Navjot Sidhu likely to join AAP next month as 'star campaigner'

பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங் சித்து பா.ஜனதா சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி மேல்–சபைக்கு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏற்கனவே அவர் 2 முறை பாராளுமன்ற எம்.பி. ஆகவும் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் அவர் டெல்லி மேல்–சபை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். அவர் பா.ஜனதாவில் இருந்து விலகி கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் இணையப் போவதாகவும் செய்திகள் உலா வந்தன. ஆனால், இது குறித்து எந்த தகவலையும் சித்து தெரிவிக்காத நிலையில், தற்போது வரும் சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15-ல்) ஆம் ஆத்மி கட்சியில் சித்து இணையவுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் சட்டத் திருத்தம்?

குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களுக்கு இந்திய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், அதுகுறித்து கடும் விமர்சனங்கள் எழுப்பப்பட்டுள்ளன. மேலும், 15 முதல் 18 வயதுடையவர்கள் செய்யக்கூடாத வேலைகள் என்ற பட்டியலில் இருந்த பல வேலைகள் நீக்கப்பட்டுள்ளன. இந்தச் சட்டத் திருத்தம், ஏழைக் குடும்பங்கள் வருமானம் ஈட்டவும், குழந்தைகள் தங்கள் திறனை வளர்த்துக் கொள்ளவும் உதவும் என்று இந்திய அரசு கூறுகிறது. ஆனால், ஐ.நா.வின் குழந்தைகளுக்கான அமைப்பான யுனிசெப் மற்றும் நோபெல் பரிசு பெற்ற சமூக சேவகர் கைலாஷ் சத்யார்த்தி ஆகியோர் இந்த சட்டத்தை விமர்சித்துள்ளனர்.

வியாழன், 28 ஜூலை, 2016

கவிஞர் ஞானக்கூத்தன் மறைவு

ஓவியம் Ravi Palette
பிரபல தமிழ்க் கவிஞர்களில் ஒருவரான  ஞானக்கூத்தன் உடல்நலக்குறைவால் நேற்று இரவு சென்னையில் மரணடைந்தார். அவரது மறைவுக்கு இலக்கியவாதிகள் பலரும் தங்கள் கண்ணீராஞ்சலியை செலுத்திவருகின்றனர். அவர்களில் சிலரின் கண்ணீர்ப் பதிவுகள் இங்கே....கவிக்கோ அப்துல்ரகுமான்>தமிழ்க்கவிதை உலகில் தனித்தன்மை கொண்டவராகத் திகழ்ந்தவர் ஞானக்கூத்தன். புதுக்கவிதையை மரபில் எழுதியவர் அவர். அது தமிழில் புதுமையானது.‘எனக்கும் தமிழ்தான் மூச்சு"
ஆனால்;அதைப் பிறர்மேல் விடமாட்டேன்;-என்பதுபோன்ற கவிதைகள், அவருடைய பாணியை வெளிப்படுத்தக் கூடியவை.  தமிழ்ப் புதுகவிதை வரலாற்றில், ஞானக்கூத்தனுக்கு முக்கியமான இடம் உண்டு. அவருடைய மறைவு தமிழ்க்கவிதை உலகில் ஒரு சோக நிகழ்ச்சி.

அர்விந்த் கெஜ்ரிவால் மோடியால் கொலை செய்யப்படாலாம் என்று பயப்படுவது ஏன்?

‘மோடி என்னைக் கொலைச் செய்யலாம்’ என்று கெஜ்ரிவால் பத்து நிமிடம் பேசி வெளியிட்ட வீடியோ அகில இந்தியளவில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியினரிடையே பாஜக-வுக்கு எதிரான கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது. ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களுக்காக கெஜ்ரிவால் பேசிய அந்த 10 நிமிட வீடியோவில் என்ன இருக்கிறது?
“வணக்கம். ஆம் ஆத்மியின் தொண்டர்கள், எம்எல்ஏ-க்கள், அமைச்சர்கள் என அனைவரிடமும் நான் சொல்ல விரும்புவது... நாம் இப்போது நெருக்கடியான காலக்கட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை தான். எதிர்வரும் நாட்களில் இந்த நெருக்கடி மேலும் அதிகரிக்கும்.

மலேசியாவில் கபாலி இறுதிகாட்சிகள் மாற்றப்பட்டது... விபரம்

BBC.COM :ரஜினிகாந்த் நடிப்பில், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்ட கபாலி திரைப்படத்தின் மலாய் மொழி பதிப்பில், இறுதிக் காட்சிகள் மாற்றப்பட்டதால் மலேசிய ரசிகர்கள் ஏமாற்றமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. மலாய் மொழியில் வெளியான கபாலியில் மாறுபட்ட கிளைமேக்ஸ் மலேசிய செய்தித்தாளான 'தி மலாய் மெயில்' பத்திரிக்கையில், மலேசியவில் வெளியான கபாலி மலாய் பாதிப்பு முற்றிலும் மாறுபட்ட முடிவுடன் கூடியதாக இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளதாக, பிபிசி மானிட்டரிங் பிரிவு தகவல் கூறுகிறது.
கபாலி திரைப்படத்தின் மூல பதிப்பான தமிழில், கபாலி என்ற தாதா கதாபாத்திரத்தை ஏற்று நடித்த ரஜினிகாந்த்தை சுட்டுவிடுமாறு ஒரு கதாபாத்திரத்திடம் போலீஸ்காரர் ஒருவர் தூப்பாக்கியை அளிப்பது போல ஒரு காட்சி அமைந்திருக்கும்.
துப்பாக்கியை எடுத்துக் கொண்டு காஃபி ஷாப்பிற்குள் நுழைந்த அந்த நபர், கபாலியை நோக்கி விரையும் கணத்தில், கூட்டத்தினரின் கூச்சலுடன் சேர்ந்து ஒரு துப்பாக்கி குண்டு வெடிக்கும் சத்தத்துடன், நடந்தது என்ன என்று பார்ப்பவர்களின் யூகத்திற்கு விட்டு விட்டு, திரையில் இருள் சூழ திரைப்படம் முடிந்துவிடும்.

கபாலி : காந்தி சட்டைய கழட்டுனதுக்கும் அம்பேத்கர் கோட் போட்டதுக்கும்... மதிமாறன்

கபாலி; திரைப்படத்தைத் தாண்டியும் அதைக் கடுமையாக ஆதிக்க ஜாதியினர்  எதிர்ப்பதற்கு முக்கியக் காரணம் ‘காந்தி-அம்பேத்கர் உடை ஒப்பீடு வசனம்’தான்.
‘எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வைச்சோம்’ என்று நுற்றாண்டு அடிமைப் புத்தியேடு பணக்கார கவுண்டராக நடித்த ரஜினிகாந்தைப் பார்த்து மக்கள் பாடுவதுபோல் வந்தபோது, வராத கோபம்,
‘காந்தி சட்டைய கழட்டுனதுக்கும் அம்பேத்கர் கோட் போட்டதுக்கும் உள்ளாற இருக்கிற அரசியல் உங்களுக்குப் புரியாது’ என்ற தெளிவான அரசியல் கண்ணோட்டத்திற்கு வருகிறது என்றால்,
இன்னும் நீங்கள் ‘தேவர் காலடி மண்ணே..’ என்ற ஜாதிய பின் புல திரைப்பட உணர்வுகளிலிருந்து மீளவில்லை என்பதையே காட்டுகிறது.
பெரியார் எதிர்ப்பிற்காகவே ‘தலித் ஆதரவு அரசியல்’ பேசுகிற பார்ப்பனர்கள், இந்த முறை இடைநிலை ஜாதி உணர்வு நிலையில், ‘தலித் எதிர்ப்பு அரசியல்’ பேசுகிறார்கள்.
கோட் – சட்டை வசனத்திற்காகவே பார்ப்பன ஜாதி உண்ர்வு, இடைநிலை ஜாதிக்கார்களின் முதுகில் சவாரி செய்கிறது.
‘சொல்லுங்க கவுண்டர் வாள்..’ சொல்லுங்க முதலியார் வாள்’ ‘சொல்லுங்க தேவர் வாள்’ என்று சொல்லுகிற பார்ப்பனர்களால்;

முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் : பிரதமர் மோடி என்னை கொலை செய்தாலும் ஆச்சர்யம் இல்லை

புதுடில்லி:''பிரதமர் மோடி, என்னை கொலை செய்தாலும் ஆச்சர்யமில்லை,'' என, டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான கெஜ்ரி வால் கூறியுள்ளார். டில்லியில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமை யிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. கெஜ்ரி வால், முதல்வராக பதவியேற்றதிலிருந்து, மத்திய அரசுடன் மோதல் போக்கை பின்பற்றி ;வருகிறார். பிரதமர் மோடியையும், கடுமை யாக விமர்சிக்கிறார்.
இதற்கிடையே, பல்வேறு குற்றச்சாட்டுகளால், டில்லி அமைச்சர்களும், ஆம் ஆத்மி கட்சி தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், 'ஆன்லைனில்' வீடியோ ஒன்றை, கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார்அதில் அவர் கூறியுள்ளதாவது:ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள், தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த கைது நடவடிக்கைகளுக்கு, மூளையாக செயல்படுவது, பிரதமர் மோடி தான். இதை, நான் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பது இல்லை.   அர்விந்த் கேஜிரிவால் கூறுவது உண்மைதான்... பாஜகவின் முதல் எதிரியாக அர்விந்த் கேஜ்ரிவால் விளங்குகுகிறார்  பார்பனர்கள் எல்லாம் கேஜிரிவாலை மிக மோசமாக விமர்சிப்பது இங்கே கவனிக்க தக்கது .

பழங்குடி பெண்கள் மீது அத்துமீறி நடந்த வனச்சரக அதிகாரிகள்

கம்பம் கிழக்கு வனச்சரகம் பெரிய சுருளி மலைப்பகுதியில் கடந்த 16–ந் தேதி, தேன் மற்றும் வேர்க்கிழங்குகளை சேகரித்துக்கொண்டு பழங்குடிகளான ஐந்து ஆண்களும், நான்கு பெண்களும் திரும்பி வந்துகொண்டு இருந்தனர். அப்போது சுருளிப்பட்டிக்கு அருகே வனச்சரக காவலர்கள் 5 பேர் அவர்களை மறித்து, அவர்களிடம் இருந்த தேன், கடுக்காய், நன்னாரி வேர் மற்றும் இதர மலைப்பொருட்களைப் பறித்துக்கொண்டனர். சோதனை செய்வதாக கூறி பெண்கள் கட்டியிருந்த சேலையை அவிழ்க்க செய்து, அவர்களிடம் அநாகரிகமான முறையில் நடந்து கொண்டனர். ஆண்களையும் உள்ளாடையுடன் நிற்க வைத்து கேவலப்படுத்தியுள்ளனர். நியாயம் கேட்ட பழங்குடியின ஆண்களை அடித்து துன்புறுத்தி இருக்கின்றனர். ( கோப்பு படம் )

உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள்...

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 12 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 6,471 ஊராட்சி ஒன்றியங்கள், 12,524 ஊராட்சிகள் உள்ளன. ஆகஸ்டு மாத இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான வெற்றிகளைப் பெற வேண்டும் என்று பிரதான கட்சிகள் திட்டமிட்டுள்ளன. பாமக தலைமை, வரும் உள்ளாட்சித் தேர்தலில் வடமாவட்டங்களில், மாவட்டத்தில் ஒரு நகராட்சி சேர்மேன், ஊராட்சி ஒன்றிய சேர்மேன் பதவியைப் பிடிக்கவேண்டும் என்று ஆலோசனையில் இருந்துவருகிறது. அரியலூர், கடலூர், விழுப்புரம், வேலுர், சேலம், தர்மபுரி மாவட்டங்களில் உள்ள நகராட்சி, ஊராட்சி ஒன்றியம் பகுதிகளில் ரிப்போர்ட் கேட்டுள்ளார்கள்.  

புதன், 27 ஜூலை, 2016

கபாலி என்ன ஜாதி? கேடுகெட்ட தமிழ் திரையுலகின் கள்ள மௌனமும் காய்ச்சலும்

பாலசந்தர்,மணி ரத்தினம் மற்றும் சங்கர் படம் என்றால் - அய்யர் அல்லது அய்யங்கார் தான் முக்கிய பாத்திர படைப்பு.
பாரதிராஜா படம் என்றால் - தேவர் ஜாதி தான் முக்கிய பாத்திர படைப்பு.
ஹரி படம் என்றால் - நாடார் ஜாதி தான் முக்கிய பாத்திர படைப்பு.
தங்கர் பச்சன் படம் என்றால் - வன்னியர் ஜாதி தான் முக்கிய பாத்திர படைப்பு.
மற்றும் ஆதிக்க ஜாதிகளை சேர்ந்த ஒவ்வொருவரும் கவுண்டர் மற்றும் எல்லா ஜாதிகளை பற்றியும் சுய தம்பட்டம் அடிக்கும் போது "இன்னும் சமூககத்தால் அங்கீகரிக்க படாத தலித் இன மக்களின் குரல் ஒழிக்க கூடாது என்று நினைக்கும்" சமூகத்தை நினைக்கும் போது தான் வெறுப்பாக இருக்கிறது.

அப்ப எல்லாம் வராத கோவம் இப்ப கபாலி படத்துக்கு வர காரணம் என்ன???  முகநூல் உபயம்  திராவிட கிளி Sumi B ,....   Ponn Senthil Salem :

அறிவாலயத்திற்கு வந்த 'அமெரிக்க அழைப்பு.....இளம் தலைவர்கள் மாநாட்டில் பிரசன்னா!

மெரிக்காவில் ஒருமாத காலம் நடக்கவிருக்கின்ற 'இளம் அரசியல் தலைவர்கள் மாநாட்டில்' பங்கேற்கத் தேர்வாகி இருக்கிறார் தி.மு.கவின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா.  ' இதன் மூலம் அமெரிக்க அரசின் வெளிப்படைத்தன்மையான நிர்வாகத்தை நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது' என்கிறார் அவர். அமெரிக்க நாட்டின் கல்வி மற்றும் கலாசாரத் துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் 'இளம் அரசியல் தலைவர்கள் மாநாடு' நடைபெறுவது வழக்கம். கடந்த 74 ஆண்டுகளாக இந்த மாநாடு நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை மாநாடு நடைபெற இருக்கிறது. அரசியல், ஊடகம், கல்வி, பொருளாதாரம், பொது சுகாதாரம், மனித உரிமை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களை அமெரிக்க அரசு தேர்வு செய்கிறது. இந்தமுறை ஜெர்மனி, இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட 21 நாடுகளைச் சேர்ந்த இளம் அரசியல் தலைவர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். இந்தியா சார்பில் தமிழரான பிரசன்னா மட்டுமே பங்கேற்கிறார்.

ஐசிசி-யின் ‘ஹால் ஆப் ஃபேம்’ பட்டியலில் முத்தையா முரளிதரன்.. முதல் தமிழன்

ஐசிசி-யின் ‘ஹால் ஆப் ஃபேம்’ பட்டியலில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள முதல் இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன்தான். மேலும், இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே தமிழரும் இவர்தான். முரளிதரனை ஹால் ஆப் ஃபேமில் இணைப்பதாக ஐசிசி இன்று அறிவித்தது. அவர் தவிர, மேலும் 3 கிரிக்கெட் ஜாம்பவான்களும் இப்பட்டியலில் இணைந்துள்ளனர். அவர்கள் ஆஸ்திரேலியாவின் ஆர்த்தர் மோரிஸ், கரேன் ரோல்டன் மற்றும் இங்கிலாந்தின் ஜார்ஜ் லோஹ்மான் ஆவர். இதில் கரேன் ரோல்டன், 1997 மற்றும் 2005ஆம் ஆண்டு மகளிர் உலகக் கோப்பையை ஆஸ்திரேலியாவுக்கு வென்று கொடுத்தவர் ஆவார். இவர்களை விரைவில் நடைபெறவுள்ள விழாவில் கெளரவப்படுத்தவுள்ள ஐசிசி, ஹால் ஆப் ஃபேம் தொப்பியையும் பரிசாக அளிக்கும்.இந்த நிகழ்ச்சியில் லோஹ்மான் மற்றும் மோரிஸ் சார்பாக அவர்களது குடும்பத்தினர் கலந்து கொள்வார்கள் என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியதற்காக முரளிதரன் இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார். இதற்குமுன்பு நான்கு இந்தியர்கள் தங்கள் சாதனைக்காக இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டுள்ளனர்.

மூன்றாவது உலகப்போர் வேண்டாம் ராஜ்யசபாவில் தி.மு.க..... நீருக்காகவே உள்நாட்டு வெளிநாட்டு போர்கள்...

தண்ணீருக்காகவே, வருங்காலத்தில் மூன்றாவது உலகப்போர் மூளக்கூடும். அது போன்ற மூன்றாவது உலகப்போர், இந்தியாவிலும் ஏற்படுவதற்கு, மத்திய அரசு அனுமதிக்காது என்று நம்புகிறோம்' என, பார்லி.,யில், தி.மு.க., எச்சரித்துள்ளது. மகாநதியின் குறுக்கே, சத்தீஸ்கர் அரசு கட்டும் தடுப்பணைகள் காரணமாக, ஒடிசா மாநில விவசாயிகள், பெரும் பாதிப்படைவது குறித்து, ராஜ்யசபாவில், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம், நேற்று நடந்தது. இதில் பங்கேற்று, தி.மு.க., - எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாவது:
   நன்றாக சிந்தித்துப்பாருங்கள் புரியும், இதை கூட புரிந்துகொள்ளாத நீங்கள் ஐயோ பாவம் .நதிகளை இணைத்தல், நதிநீரை பங்கிடல், ஒழுங்கு முறை படுத்தல் என, எல்லாவற்றையும் மேற்கொள்வதற்கு, திறமை யான உறுதியான நிர்வாகம் தேவை. இதற்கான முயற்சிகளில், மத்திய அரசு இனியாவது இறங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.உலகப்போர் என்ற ஒன்று நடக்குமானால், அதுதண்ணீரை பகிர்ந்து கொள்வதற்காகவே நடக்கும் என, கூறப்படுகிறது." இதை போன்ற அறிவு பூர்வமான கருத்தை தொலைவு நோக்கு பார்வையை யாரால் குறை கூறமுடியும்...

குளிக்கும் போதும் கோட்-சூட் போட்டுக்கிட்டு…”: இதற்கு என்ன விளக்கம் கவிஞரே!

கபாலி தோல்வி படம் என்று வைரமுத்து விழா ஒன்றில் பேசியது சமூக ஊடகங்களில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.  இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக கவிஞர் வைரமுத்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில்,“கடந்த ஞாயிற்றுக்கிழமை என் நண்பரின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டேன். விழாவில் பேசும்போது அவரது கடவுள் நம்பிக்கையோ எனது கடவுள் மறுப்போ எங்கள் நட்புக்கு எந்த வகையிலும் தடையாய் இருந்ததில்லை என்பதை விளக்கிச் சிலவற்றை ஏற்றுக்கொள்ள முடியாத இடத்திலும் புரிந்துகொள்ள வேண்டும் என்று உணர்ச்சி ஓட்டத்தில் குறிப்பிட்டேன். நான் சொன்ன வேகத்தில் ஒரு வார்த்தை விடுபட்டுப் போய்விட்டது என்று பிறகு புரிந்து வருந்தினேன். கபாலி படத்தின் வெற்றி – தோல்வி என்று பேசப்படுவதை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் புரிந்துகொள்ள வேண்டும் என்று சொல்ல வந்தேன். அதில் வெற்றி என்ற வார்த்தை விடுபட்டுவிட்டது.

சாதீயத்துக்கு எதிராக அமெரிக்க அம்பேத்கரிஸ்டுகள்; சர்வதேசமயமாகும் அம்பேத்கர்

ஜெ. பாலசுப்ரமணியன்ஜெ. பாலசுப்ரமணியம் பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கரின் 125 வது பிறந்த ஆண்டையொட்டி எப்போதும் இல்லாத அளவுக்கு அவரின் கருத்துகள் இந்தியாவில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் கவனத்தைப் பெற்றுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற அம்பேத்கர் குறித்த இரண்டு சர்வதேசக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு அங்குள்ள பல அம்பேத்கரியவாதிகளைச் சந்தித்துப் பேசியதிலிருந்து சிலவற்றைப் பகிர்ந்துகொள்கிறேன்.
அம்பேத்கரின் நூறாவது (1990) ஆண்டுதான் தலித்துகளின் எழுச்சிக் காலம். இதற்கு மாநில அளவிலான தலித் இயக்கங்களின் தீவிரமான போராட்டங்கள், அம்பேத்கரின் எழுத்துகள் அச்சுக்கு வந்தமை, தன்னார்வக் குழுக்களின் மனித உரிமை முன்னெடுப்புகள் போன்றவை அடிப்படைக் காரணங்களாக அமைந்தன.

எழுத்தாளர் பிரேம் மீது லீனா மணிமேகலையின் ஆணவத் தாக்குதல்... மேட்டுக்குடி திமிர்?

thetimestamil.com :எழுத்தாளர் பிரேம் மீது லீனா மணிமேகலை நிகழ்த்தியிருக்கும் ஆணவத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் கூட்டறிக்கை.)
தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளுதலென்பது கலை இலக்கியம் சார்ந்து இயங்கும் ஒருவனின் வாழ்வில் முக்கியமானதொன்று. தான் உறுதிபட நம்பும் ஒரு அரசியலை பேசுவதும் அதை சார்ந்து இயங்குவதும் ஒரு கலைஞனுக்கான அறம். துரதிர்ஸ்டவசமாக தமிழ் இலக்கியவாதிகளில் அனேகர் தாங்கள் பேசும் அரசியலுக்கு முற்றிலும் எதிரானவர்களாகவே யதார்த்தத்தில் இருக்கிறார்கள். இத்தகைய சூழலில் கடந்த கால் நூற்றாண்டு காலமாய் தமிழில் கோட்பாட்டு ரீதியான முக்கியமான உரையாடல்களை உருவாக்கியதோடு அதன்படி தனது வாழ்வையும் அமைத்துக் கொண்டவர் தோழர் பிரேம்.

இலங்கைத் தமிழர் .. .குளச்சல் துறைமுகம் திமுக அதிமுக காரசாரம்... சட்டசபையில் அமளி...

speaker Dhanapal condemns to dmk party சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்னை, குளச்சல் துறைமுக விவகார‌த்தால் சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்டது. அமளியில் ஈடுபட்ட திமுகவினருக்கு சபாநாயகர் தனபால் கடும் எச்சரிக்கை விடுத்தார்.
தமிழக சட்டசபையில் கடந்த வாரம் 2016-17ம் ஆண்டுக்கான திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் மீதான விவாதம் நேற்று முன்தினம் தொடங்கியது. சட்டசபையில் 2-வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. பேரவையில், பட்ஜெட் மீதான பொது விவாதத்தின்போது பேசிய அதிமுக எம்.எல்.ஏ. ஓ.கே.சின்ராஜ், இலங்கை இறுதிக்கட்ட போரின்போது அப்போதைய திமுக அரசு எதுவும் செய்யவில்லை என குறிப்பிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் முழக்கமிட்டதால் அவையில் அமளி நிலவியது. திமுக உறுப்பினர்கள் பேரவை விதிகளை மதிப்பதில்லை என கண்டனம் தெரிவித்த சபாநாயகர் தனபால், விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தினார்.

செவ்வாய், 26 ஜூலை, 2016

அமலா பால் விஜய் தம்பதிகள் மணமுறிவு...

தமிழ் சினிமாவில் “மைனா” வெற்றிப்படம் மூலம் பிரபலமானார் அமலா பால். அதன் பிறகு விஜய், ஆர்யா, ஜெயம் ரவி, தனுஷ் என முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்தார். தெலுங்கு, மலையாளம் திரைப்படங்களில் நடித்து பிஸியான நடிகையாக வளம் வந்தார் அமலா பால். தெய்வத்திருமகள், தலைவா என தொடர்ந்து தன் இரண்டு படங்களிலும் அமலா பாலை நடிக்க வைத்தார் இயக்குனர் விஜய். இயக்குனர் விஜய்க்கும் அமலா பாலுக்கும் இடையே காதல் மலர்ந்தது. மூன்று ஆண்டுகள் காதலர்களாக இருந்தவர்கள் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம்