சனி, 1 மார்ச், 2014

சினிமாக்காரர்களுக்கு பெருந்தன்மை இல்லை : லட்சுமிராய் விளாசல் -

தென்னிந்திய சினிமாக்காரர்களுக்கு பெருந்தன்மை இல்லை என்று ஆவேசமாக கூறினார் லட்சுமிராய். இது பற்றி அவர் அளித்த பேட்டி:வித்யாபாலன் நடித்த ‘இஷ்கியா இந்தி படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டால் வித்யாபாலன் ஏற்று நடித்த ரோலை தமிழில் நான் ஏற்பேன். அதை ஏற்று நடிக்க ஆசைப்படுகிறேன். இதுவரை சவாலான அப்படியொரு கேரக்டர் நான் செய்ததில்லை. மலையாள படங்களில் எனக்கு ராசியான நடிகை என்று பெயர் இருக்கிறது. அங்கு நடித்தபிறகுதான் என் சினிமா வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து தமிழ், தெலுங்கிலும் நல்ல வாய்ப்புகள் வரத் தொடங்கின. எப்போதுமே, படத்தில் நீண்ட நேரம் வருகிற வேடமா என்று பார்த்து ஏற்பதில்லை. வலுவான வேடமா என்றுதான் பார்க்கிறேன். குத்து பாடலுக்கு நடனம் ஆடுவது ஏன் என்கிறார்கள். எனது நடனத்தை பார்க்க ரசிகர்கள் விரும்புகிறார்கள். அதனால்தான் அந்த வாய்ப்பை ஏற்கிறேன். ஆனால் தென்னிந்திய சினிமாக்காரர்கள் பெருந்தன்மையாக ஏற்காமல் உடனே குத்து நடிகை என்று முத்திரை குத்திவிடுவார்கள். பாலிவுட்டில் அப்படி இல்லை. நெருக்கமான காட்சிகளில் நடிப்பது பற்றி எனக்கு ஆட்சேபனை இல்லை ஆனால் அது மசாலாவுக்காக திணிக்கப்பட்டதாக இருக்காமல் காட்சிக்கு தேவை என்ற கட்டாயம் இருந்தால் மட்டுமே ஏற்பேன். இவ்வாறு லட்சுமிராய் கூறினார் - tamilmurasu.org

ஞாநி: மதுக்கடைகளுக்கு அம்மா ஒய்ன்ஸ் என்று பெயர் ?

அன்புள்ள முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு
வணக்கம்.
உங்களை அம்மா என்று அழைக்க இயலாது. ஏன் என்று பின்னர் சொல்வேன். என்னைப் போன்றோர் சொந்த அம்மாக்களையே பெயர் சொல்லி அழைத்துப் பழகியவர்கள். இரவல் அம்மாக்கள் வாழ்க்கையில் தேவைப்படும் நிலையில் நாங்கள் இல்லை.
இதற்கு முன்னரும் நான் உங்களுக்கு சில பகிரங்கக் கடிதங்கள் எழுதியிருக்கிறேன். எதையும் நீங்கள் பொருட்படுத்தியதில்லை என்றபோதும் தொடர்ந்து எழுதவேண்டிய சமூகத் தேவை இருப்பதாலும், மார்ச் 8 உலக உழைக்கும் மகளிர் தினத்தையொட்டி உங்களிடம் சில செய்திகளைப் பேசவேண்டியிருப்பதாலும் இதை எழுதுகிறேன்.
உங்களுக்கு நிச்சயம் மறந்திருக்காது. 1983ல் எம்.ஜி.ஆர் உங்களை அரசியலில் ஈடுபடுத்தியபோது ஒரு மகளிர் தினத்தன்று பேரணியை தலைமை தாங்கி அண்ணா சாலையில் நடத்திச் சென்றீர்கள். தெருவில் நீங்கள் நடந்து சென்றது அதன்பிறகு சுமார் 13 வருடங்கள் கழித்து 1996ல்தான் என்று நினைக்கிறேன். இந்த முறை எந்த நகை நட்டு, ஆடம்பரம் எல்லாவற்றிலிருந்தும் மகளிரை விடுவித்து அவர்களை நகை மாட்டும் ஸ்டாண்டாக இருக்கக்கூடாது என்று பெரியார் ஓயாமல் சொன்னாரோ, அப்படிப்பட்ட ஒரு நகை ஸ்டாண்டு-பட்டுப் புடவை தோற்றத்தில் தற்காலிக  வளர்ப்பு மகன் திருமண ஊர்வலத்தில் அடையாறு சாலையில் நடந்து வந்தீர்கள். இப்போது மேலும் 18 ஆண்டுகள் ஓடிவிட்டன. அடுத்து உங்களை நான் இன்னும் எந்த தெருவிலும் நடந்து பார்க்கவில்லை.

பெங்களூரில் BAR உணவகங்களுக்கு நள்ளிரவு 1 மணி வரை அனுமதி


நாட்டின் தகவல் தொழில்நுட்ப தலைநகரான பெங்களூரில் வார இறுதி நாட்களான வெள்ளி, சனிக்கிழமைகளில் பார் மற்றும் ரெஸ்டாரண்டுகள் நள்ளிரவு 1 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்படுவதாக, மாநில உள்துறை அமைச்சர் கெ.ஜெ. ஜார்ஜ் அறிவித்துள்ளார். இரவு 1 மணி வரை கால நீட்டிப்பு செய்துள்ளதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ள நிலையில் காவல்துறையினர், சுற்றுலாத்துறை மற்றும் கலால் துறையிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில், பெரும்பாலோனோர் பணிமுடிந்து திரும்புகையில் ரெஸ்டாரண்டுகள் போன்றவை மூடப்பட்டுவிடுவதால் சிரமம் ஏற்படுவதாக தெரிவித்தனர். அதன் பின்பே இந்த முடிவை எடுத்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சர் கூறியதாவது :- பெங்களூர் ஒரு காஸ்மோபோலிடன் நகரம் என்பதால் நாடு முழுவதிலுமிருந்து மக்கள் இங்கு வருகிறார்கள். அவர்களின் பரபரப்பான வாழ்க்கைக்கு பொழுதுபோக்கிற்கான இடங்கள், குறிப்பாக ரெஸ்டாரண்டுகளை ஏற்பாடு செய்வது முக்கியமானதாகும். பல்வேறு தரப்பினரிடமிருந்து வாரம் முழுவதும் கால நீட்டிப்பு செய்யக் கோரிக்கைகள் வந்தாலும் முதற்கட்டமாக வார இறுதிநாட்களில் மட்டும் அனுமதித்துள்ளோம். மூன்று மாதங்களுக்கு பிறகு இந்த கால நீட்டிப்பு மறுஆய்வு செய்யப்படும்.

பிரசாரத்தில் ராகுலை முத்தமிட்ட பெண் எரித்து கொலை ! கணவரால் எரித்து கொல்லப்பட்டரா?


காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக அவர் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களிடம் கருத்துக்களை அறிந்து வருகிறார்.
கடந்த 26–ந்தேதி ராகுல் காந்தி அசாம் மாநிலம் சென்றார். ஜோர்கட் என்ற இடத்தில் அவர் மகளிர் அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் ஆலோசனை செய்தார். இதில் 600 பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம் ராகுல்காந்தி கருத்துக்களை கேட்டார்.
அப்போது காங்கிரஸ் பெண் கவுன்சிலர் போன்டி ராகுல்காந்தியை அனைவரது முன்னிலையிலும் கன்னத்தில் முத்தமிட்டார். முத்த மிட்ட இந்த படம் மறுநாள் அனைத்து பத்திரிகையிலும் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் ராகுல் காந்தியை முத்தமிட்ட பெண் கவுன்சிலர் போன்டி தீக்காயங்களுடன் அவரது வீட்டில் பிணமாக கிடந்தார்.

நீக்கப்பட்ட பாமக MLA கலையரசு அதிர்ச்சி ! டாக்டர் இப்படிச் செய்வார்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. நெசமாலுமா ?


சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து விட்டு வந்ததற்காக தன்னை கட்சியிலிருந்து நீக்குவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று பாமக எம்.எல்.ஏ. கலையரசு கூறியுள்ளார். அணைக்கட்டுத் தொகுதி பாமக எம்.எல்.ஏ. கலையரசு, சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தார். தொகுதி சார்ந்த குறைகள், பணிகள் தொடர்பாக முதல்வரைச் சந்தித்ததாகவும் அவர் கூறியிருந்தார். இதேபோலத்தான் தேமுதிகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ. அருண் சுப்பிரமணியமும் முதல்வரைச் சந்தித்து விட்டு வந்தார். கலையரசுவின் செயலால் அதிர்ச்சி அடைந்த பாமக , அவரை உடனடியாக கட்சியை விட்டு நீக்கியது. பாமகவுக்கு இருந்த இந்த தைரியமும், துணிச்சலும் தேமுதிகவுக்கு இல்லை. அவர்கள், அருண் சுப்பிரமணியத்தின் கட்சிப் பதவியை மட்டுமே பிடுங்கியுள்ளனர். அவரை கட்சியை விட்டு நீக்கவில்லை. இந்த நிலையில் பாமகவின் முடிவால் கலையரசு அதிர்ச்சி அடைந்துள்ளார். நெசமாலுமா 

ஊழலில் தாண்டவமாடும் இந்தியா: அமெரிக்க பார்லிமென்ட்டில்அறிக்கை

வாஷிங்டன்: 'இந்தியாவில் அனைத்து மட்டங்களிலும், ஊழல் பரவியுள்ளது' என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பல்வேறு நாடுகளில் உள்ள மனித உரிமை நடைமுறைகள் குறித்து, அமெரிக்க பார்லிமென்ட்டில், அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர், ஜான்கெர்ரி அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில், அமைச்சர் ஜான்கெர்ரி கூறியுள்ளதாவது:இந்தியாவில், நீதித்துறை முதல் அனைத்து மட்டங்களிலும் ஊழல் பரவியுள்ளது. ஊழலை தடுக்க, சட்டம் இருந்தும், அந்நாட்டு அரசு, அதை தீவிரமாக அமல்படுத்தவில்லை. ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரமுகர்கள், எளிதாக தண்டனையிலிருந்து விலக்கு பெற்று விடுகின்றனர். அமெரிக்காவில் 4% வேலை இல்லை அனால் இந்தியாவில் 36% வேலை இல்லை. அமெரிக்க சொன்னதில் என்ன தவறு இருக்கு. குற்றம் உள்ள நெஞ்சே குறுகுறுக்கும் . தயவு செய்து அமெரிக்கா உடன் இந்தியாவை அளவிட வேண்டாம்.

ஜெ., வழக்கில் அரசு வழக்கறிஞருக்கு நீதிபதி 'டோஸ்': வழக்கை தாமதப்படுத்த முயற்சி செய்வதாக கோபம்

"தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை தாமதப்படுத்த, அரசு வழக்கறிஞர், பவானி சிங் முயற்சிக்கிறார்,'' என, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஜான் கூறினார். தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில், பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. நேற்றைய விசாரணையின் போது, சுதாகரன் ஆஜராகியிருந்தார். 'வைரஸ்' காய்ச்சல்: ஜெயலலிதாவுக்கு அரசு பணி, சசிகலாவுக்கு, 'வைரஸ்' காய்ச்சல், இளவரசிக்கு நீரிழிவு நோய் இருப்பதால், நீதிமன்றத்தில், அவர்களால் ஆஜராக முடியவில்லை என, அவர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள், மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்களுக்கு, அரசு வழக்கறிஞர், பவானி சிங் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை; மனுவை, நீதிபதி ஏற்றுக் கொண்டார்.
 1,116 கிலோ வெள்ளி: கடந்த, 1996ல் ஜெயலலிதா வீட்டில் கைப்பற்றப்பட்ட, 1,116 கிலோ வெள்ளிப்பொருட்களை, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கொண்டு வர வேண்டும் என, ஜன., 3ல், அரசு வழக்கறிஞர் பவானி சிங், மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவுக்கு, குற்றஞ்சாட்டப்பட்டோர் தரப்பு வழக்கறிஞர்கள் நேற்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
 நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா, தன் உத்தரவில் கூறியதாவது: இவ்வழக்கு துவங்கி, 13 ஆண்டுகளாகிறது. அரசு வழக்கறிஞர், பவானி சிங், பொறுப்பேற்று, ஒன்றரை ஆண்டுகளாகிறது. வழக்கின் சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, விவாதம் முடிவடைந்துள்ளன. அப்போதெல்லாம், இம்மனுவை சமர்ப்பிக்காமல், பாஸ்கரன் இறந்து விட்டார் என்பது தெரிந்தும், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 உள் நோக்கம்: இந்த வழக்கை, மேலும் தாமதப்படுத்த, அரசு வழக்கறிஞர் முயற்சிக்கிறார் என்பதை, இது காட்டுகிறது. வெள்ளிப்பொருட்களை, பெங்களூரு கொண்டு வருவது, வழக்கிற்கு, எந்த விதத்திலும் பயனளிக்காது. அரசு வழக்கறிஞரின் மனு, உள் நோக்கம் கொண்டதாக கருதுகிறேன். எனவே, இம்மனுவை தள்ளுபடி செய்கிறேன். இவ்வாறு, அவர் கூறினார். - நமது சிறப்பு நிருபர் -dinamalar.com

அதிமுக அரசின் மக்கள் விரோதம்: மதுரவாயல் பறக்கும் சாலை வழக்கு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு


மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்திற்கு, தமிழக அரசு தடை பெறாமல் தடுக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை கேவியட் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. மதுரவாயல் -  துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்துக்குத் தமிழக அரசு விதித்த தடை உத்தரவை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. 2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட திட்டத்திற்குப் பொதுமக்கள், நாட்டின் முன்னேற்றத்திற்காக நீதிபதிகள் அனுமதி வழங்குவதாகக் கூறினர்.சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் சென்னை துறைமுகத்துக்கு சரக்குகளை எளிதாக லாரிகளில் கொண்டு செல்லும் வகையிலும் மதுரவாயல் - துறைமுகம் இடையே பறக்கும் சாலை அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. கடந்த 2008 ஆம் ஆண்டு இந்தத் திட்டம் ரூ.1800 கோடியில் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது, கடந்த 2012 ஆம் ஆண்டு இந்த திட்டத்துக்குத் தமிழக அரசு தடை விதித்தது.

India வில் தயாரிக்கப்பட்ட முதல் மெட்ரோ ரயில் to Chennai

ஆந்திர மாநிலம், தடாவில் தயாரிக்கப்பட்ட முதல் மெட்ரோ ரயில் அதிகாரப்பூர்வமாக சென்னை
மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைவர் பங்கஜ்குமார் பன்சாலிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரயிலுக்காக மொத்தம் 4 பெட்டிகளைக் கொண்ட 42 ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பிரேசில் நாட்டை சேர்ந்த அல்ஸ்டாம் என்ற தனியார் நிறுவனத்தில் மெட்ரோ ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை பிரேசில் நாட்டில் இருந்து 5 மெட்ரோ ரயில்கள் சென்னைக்கு கப்பல் மூலம் வந்துள்ளன. இன்னும்
4 ரயில்கள் ஜூலை மாதத்துக்குள் சென்னை வரவுள்ளன. பிரேசில் நாட்டு நிறுவனம் ஆந்திர மாநிலம் தடா அருகே உள்ள ஸ்ரீசிட்டியில் மெட்ரோ ரயில் பெட்டி தயாரிக்கும் பணிக்காக தனது கிளை நிறுவனத்தை நிறுவி, அங்கு மெட்ரோ ரயில்களை தயாரிக்க தொடங்கியது.
இப்போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் மெட்ரோ ரயில் பெட்டிகள் வியாழக்கிழமை முறைப்படி சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தடாவில் இருந்து 4 லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்ட மெட்ரோ ரயில் வெள்ளிக்கிழமை காலை சென்னை வந்தது. இது தொடர்பாக அல்ஸ்டாம் நிறுவனத்தில் வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் அல்ஸ்டாம் நிறுவனத்தின் தலைவர் ஹென்ரி பாபர்ட் லபார்ஜே, சென்னை மெட்ரோ ரயில் இயக்குநர் (திட்டம்) ஆர்.ராமநாதன், முதன்மை பொது மேலாளர் (கட்டுமானம்) வி.சோமசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டன dinamani.com/

வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

நான் எங்கிருந்தாலும், என் கருவறை, எனக்குரிய இடம் இந்தப் பெரியார் திடல்தான் என்றார் கவிஞர் கனிமொழி.


சென்னை.பிப். 28- சென்னை பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் அரங்கத் தில் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் திமுக நாடாளு மன்றஉறுப்பினர் கவிஞர் கனிமொழி எழுதிய நூல்க ளுக்கான விமர்சனக் கூட்டம் நேற்று (27.2.2014) மாலை நடைபெற்றது.
கவிஞர் கனிமொழி எழு திய கட்டுரை நூல்கள், கவிதை நூல்களை திராவிடர் இயக்க ஆய்வாளர், எழுத்தாளர் க. திருநாவுக்கரசு விமர்சனம் செய்துபேசினார்.
கவிஞர் கனிமொழி ஏற் புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
வாசகர் வட்டம் தொடர்ந்து நடத்துவதுபெரிய விஷ யம்.கட்சிக் கூட்டங்கள் நடத் திடலாம். தமிழகத்தில் வாசிப்பு அந்த நிலையில் உள்ளது. பல நூல்விமர்சனக் கூட்டங்களுக்கு நான் சென் றுள்ளேன். பெரியார் திடல் எனக்கும் கருவறைதான். என்னுடைய எழுத்துக்களில் எந்த இடத்தில் மோதல் வரும் என்பது எனக்குத்தெரி யும்.  உங்களைப் போன்றவர் களிடம் பேச நேரம் கிடைக் காதா என்று ஏங்குகிறேன். உங்களுக்கு நேரம் இருக்க வேண்டும். ஏனென்றால், உங்களிடம் பேசும்போது கிடைக்கும் அனுபவம் ஒரு புத்தகத்தைப் படித்தால் கூடக்கிடைக்காது. நீங்கள் ஒதுக்கித் தரும்அந்த நேரத் திற்காகக் காத்திருக்கிறேன்.

ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி?

ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் தலைமையில், தில்லியில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு, ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. dinamani.com

Kollywood பெரிய கம்பனிகளிடம் தலைப்புக்களை பறிகொடுக்கும் உதவி இயக்குனர்கள்

கோடம்பாக்கத்தில் இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் எவ்வளவோ உண்டு. ஆனால் இப்போதைக்குத் தலையைப் பிய்த்துக் கொள்கிற அளவுக்குத் தலைதூக்கிக் கிடக்கிறது தலைப்புப் பிரச்சினை ! இதற்காக ஏகப்பட்ட மோதல்கள், பஞ்சாயத்துக்கள் நடக்கின்றன. இதன் பின்னணி என்ன? இதன் விளைவுகள் என்ன? இதைத் தீர்க்க வழி என்ன?
ஒரு படம் எடுக்க வேண்டுமானால் பட நிறுவனத்தின் பெயரையும், படத்தின் தலைப்பையும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தயாரிப்பாளர் கில்ட் அல்லது பிலிம் சேம்பர் ஆகிய மூன்று அமைப்புகளில் ஏதாவது ஒன்றில் பதிவு செய்தால் போதும். இந்த மூன்று சங்கங்களுக்கும் இடையே பின்பற்றப்படுவதாகச் சொல்லப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தம் காரணமாக, ஒரே தலைப்பு ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவாகாமல் பார்த்துக்கொள்கிறார்கள். இதுதான் தற்போதைய நடைமுறை. ஆனால் மொத்தச் சிக்கலுக்கும் இதுவே முக்கியக் காரணம் என்கிறார்கள் தலைப்புப் பிரச்சினைகளால் நீதிமன்றம்வரை சென்று, படத்தை அறிவித்தபடி வெளியிட முடியாமல் திண்டாடிய சிலர்.

I T உமா மகேஸ்வரிகளை தெரியுமா உங்களுக்கு?- ஐ.டி. இளைஞனின் கடிதம்


'யார் இவர்களை இரவு வரை வேலை பார்க்கச் சொன்னது?'
'காலையில் கிளம்பி நள்ளிரவுதான் வீட்டிற்கு திரும்புகிறாள்... அப்படி என்ன வேலையோ?!
'ஒழுங்கா கல்யாணம் பண்ணிட்டு வீட்டுல உட்கார வேண்டியதுதானே!'
'இவங்க போடற டிரெஸ்ஸை பார்த்தாலே, இவங்க எப்படிப்பட்டவங்கன்னு தெரியது?'
உமா மகேஸ்வரியின் மரணம் தொடர்பான செய்திகள் வெளிவரத் தொடங்கியதும், சமூக வலைத்தளங்களில் ஒரு தரப்பினர் உதிர்த்த கருத்து முத்துகள் இவை.
ஐ.டி. பெண்களைப் பற்றியும், அவர்களது வாழ்க்கை முறையைப் பற்றியும் மேலோட்டமாகக் கூட சரிவரத் தெரிந்துகொள்ளாத இவர்கள், ஏதாவது இப்படி கிளப்பி விடுவது வழக்கமாகிவிட்டது.
எந்தக் குடும்பச் சூழலில் பெண்கள் வேலைக்குப் போகிறார்கள் என்பது இந்த அறிவுஜீவிகளுக்குத் தெரியுமா? 'என் குடும்பத்தின் நிலையை மாற்ற வேண்டும், நான் சுதந்திரமாக நடைபோட வேண்டும்' என்று எண்ணம் கொண்ட பெண்கள் ஒவ்வொரு நாளும் அக்னி பரீட்சையைதான் சந்திக்கின்றனர்.
நைட்டு வரைக்கும் அப்படி என்ன வேலை செய்கிறார்கள்? என்று கேட்கும் அன்பர்கள் சிலருக்கு, நம் இரவு நேரம்தான் அமெரிக்கா முதலான பல நாடுகளின் வர்த்தக நேரம் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஐ.டி.யில் தொழில் சேவை சார்ந்த நிறுவனங்கள் (Service based companies) பலவும் இப்படி இங்கு இரவு நேரத்தில் ஆந்தை போல் விழித்து வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது. காரணம் இவர்கள் செய்வது கஸ்டமர் சர்வீஸ். வெளியூரிலுள்ள பலரிடமும் பேச வேண்டியிருக்கும், நாம் வேலையை செய்து முடித்து விட்டு இரவு எட்டு, எட்டரை மணி அளவில் கிளம்பப் பார்த்தாலும் அவர்கள் கூறும் குறைபாடுகளை தீர்த்து வைத்த பிறகே கிளம்ப முடியும்.

கூடங்குளம் உதயகுமார் ஆம் ஆத்மியிடம் ஒட்டினார் ! தேர்தலில் போட்டி ! இதற்கு தானே ஆசைப்பட்டாய் உதயகுமாரா !

அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார்.
இதுகுறித்து உதயகுமார் கூறியதாவது, மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் தொடர்ந்தால் கூடன்குளம் திட்டத்தை தொடர்வார்கள், விரிவாக்கம் செய்வார்கள். பாஜக ஆட்சிக்கு வந்தால் அந்த திட்டத்தை தொடர்வது மட்டுமல்லாமல், போராடும் மக்களையே முறியடித்துவிடுவார்கள். எனவே இந்த இரண்டு கட்சிகளும் ஆட்சிக்கு வரக்கூடாது. இவர்களுடைய பலத்தை குறைப்பதற்கு ஏதாவது செய்ய முடியுமா என்று சிந்தித்த வேலையில் எங்களுடைய பகுதி மக்கள், சமுதாய தலைவர்கள் அனைவரும் ஒன்று கூடி தற்போது புதிதாக வந்துள்ள தமிழகம் மற்றும் இந்தியாவின் உள்ள மக்களுடைய மனதில் நம்பிக்கையை விதைத்திருக்கிற ஆம் ஆத்மி கட்சியில் சேர முடிவு செய்தோம். தமிழகம் சந்தித்த டுபாக்கூர்களில் இதுதான் மிக மோசமான டுபாக்கூர் !இதன் சாயம் இனி விரைவில் வெளுக்கும் 

5லட்சம் ஜிப்சிகளை பலி கொண்ட Hitler. ஜிப்சிகள் பேசும் மொழி சம்ஸ்கிருதத்திர்க்கு நெருக்கம்


நாடோடிகளின் இனிய இசை(1) : T .சௌந்தர் மனித வாழ்வில் புலம் பெயர்தல் என்பது நீண்ட காலமாக நடைபெற்றுவரும் ஒன்றாகும்.இப்புலம்பெயர்வு ஏதோ ஒரு விதத்தில் சிலருக்கு வழமான எதிர்காலத்தை உருவாக்கவும் சிலருக்கு நிர்ப்பந்தங்கள் நிறைந்த வாழ்க்கைக்கு காரணமாகவும் அமைந்து விடுகிறது.புலம் பெயர்கின்ற மக்கள் தாம் செல்லும் நாடுகளில் தமது சுய அடையாளத்துடன் குறிப்பிட்ட நாட்டு மக்களின் பழக்க வழக்கங்களையும் பண்பாடுகளையும் அங்கீகரித்து வாழும் முறைமையையும் ( Intergration ) , முற்று முழுதாக சுய அடையாளத்தையும் ,பண்பாட்டையும் இழந்து குறிப்பிட்ட நாட்டு மக்களின் பழக்க வழக்கங்களையும் ,பண்பாடுகளையும் ஏற்றுக் கொண்டு முழுமையாக அவர்களுடன் கலந்து விடும் ( Assimilation ) வாழ்க்கை முறைமையையுமான இரண்டு போக்குகளையுடையவர்கலாக இருக்கின்றார்கள்.

செங்கன் விசாவை மேலும் 16 தீவுக்கு விஸ்தரிக்கும் ஐரோப்பிய யூனியன் schengen visa new countries

ஐரோப்பிய யூனியனின் உறுப்பினர்களான 28 நாடுகளும் செங்கன் விசா திட்டத்தின்கீழ் பிற உறுப்பினர் நாடுகளுக்கு எந்த தனி விசா விதிமுறைகளும் இல்லாமல் சென்றுவர இயலும். கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த இலவச விசா வருகையை 5 கரிபியன் தீவு நாடுகளுக்கும், 10 பசிபிக் தீவு நாடுகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் விஸ்தரித்தது. தற்போது மேலும் கரிபியன் மற்றும் பசிபிக் தீவுகளின் 16 சிறிய நாடுகள் உட்பட ஐக்கிய அரபுக் குடியரசு, பெரு, கொலம்பியா போன்ற நாடுகளும் இந்தத் திட்டத்தின் கீழ் வரக்கூடும் என்று ஐரோப்பியப் பாராளுமன்றத்தின் உள்நாட்டு அலுவல்கள் ஆணையாளர் சிசிலியா மால்ஸ்ட்ரோம் தெரிவித்தார். பெரு மற்றும் கொலம்பியா நாடுகளை இந்தத் திட்டத்தில் இணைத்தது நல்ல முடிவாகும். இவர்களுக்கு இலவச விசா பயணத்தை அளிப்பதன்மூலம் மக்கள் இடம்பெயரும் ஆபத்துகள் தவிர்க்கப்பட்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகின்றது. இதற்குத் தேவையான கூடுதல் மதிப்பீட்டினை விரைந்து தயார் செய்யவும் இந்த ஆணைக்குழு உறுதி கூறுகின்றது. இதற்குத் தேவையான நடைமுறைகள் தயார் செய்யப்பட்டவுடன் ஐரோப்பிய ஒன்றிய மக்களுக்கும் இந்தத் திட்டம் எளிதான நடைமுறைகளை அளிக்ககூடியதாக இருக்கும் என்றும் மால்ஸ்ட்ரோம் குறிப்பிட்டார். மேலும், இங்கிலாந்தின் குடியுரிமை பெறாமல் கடல் கடந்த பகுதிகளில் வசிக்கும் பிரிட்டிஷ் குடிமக்களின் சில பிரிவினருக்கும் இந்த விசா விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

715 புதிய கோள்கள் கண்டுபிடிப்பு: நாசா அறிவிப்பு

கெப்ளர் திட்டத்தின் மூலம் கண்டறியப்பட்ட பல்வேறு வித கோள்கள் குறித்த விளக்கப்படம்.
கெப்ளர் திட்டத்தின் மூலம் கண்டறியப்பட்ட பல்வேறு வித கோள்கள் குறித்த விளக்கப்படம். புதிய கோள்களைப் பற்றிய மனிதர்களின் தேடுதல் வேட்டையில் குறிப்பிடத்தக்க அளவு புதையல் கிடைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இதுவரை மனிதர்களால் அடையாளம் காணப் பட்ட கோள்களின் எண்ணிக்கை வியக் கத்தக்க வகையில் இரு மடங்காக உயர்ந்திருக்கிறது.
புதிய கோள்களைத் தேடுவதற்காகவே அமைக்கப்பட்ட கெப்ளர் தொலைநோக்கி, 715 புதிய கோள்களைக் கண்டறிய உதவிகரமாக இருந்துள்ளது.

சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய்.லக்னோவில் கைது

சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய். (கோப்புப் படம்)உச்ச நீதிமன்றத்தால் பிடிவாரன்ட் உத்தரவுப் பிறப்பிக்கப்பட்ட நிலையில், சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய் லக்னோவில் கைது செய்யப்பட்டார்.
முதலீட்டாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடியை திருப்பித் தராதது தொடர்பான வழக்கில், சுப்ரதா ராய்க்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
2 நாட்களாக தலைமறைவாக இருந்த சுப்ரதா ராய் இன்று லக்னோ போலீசாரிடம் சரணைடந்தார். இதனையடுத்து சுப்ரதா ராய் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சுப்ரதா ராய் இன்று லக்னோ நீதிமன்றம் தலைமை நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படுவார் என மாவட்ட எஸ்.பி. ஹபிபுல் ஹசன் தெரிவித்துள்ளார்.
வர்த்தகம் பாதிக்காது:
முன்னதாக, இன்று காலை டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த சுப்ரதா ராயின் மகன் சீமாந்தோ ராய், தனது தந்தை சுப்ரதா தானாகவே முன்வந்து போலீசில் சரணடைந்துள்ளார். அவரை லக்னோ போலீசார் கைது செய்துள்ளனர். சுப்ரதா ராய் கைது நடவடிக்கையால், சஹாரா குழுமத்தின் வர்த்தகம் பாதிக்காது என தெரிவித்தார்.

சிவப்பு எனக்கு பிடிக்கும்

 சாண்ட்ரா எமி, யுரேகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'சிவப்பு எனக்கு பிடிக்கும்'. யுரேகா நடித்து, இயக்கியிருக்கிறார். ஜே.எஸ்.கே நிறுவனம் இப்படத்தினை தயாரித்து இருக்கிறது. இப்படத்தின் பத்திர்க்கையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் இயக்குனர் யுரேகா பேசியது “இது ஆபாசம் சார்ந்த படம் அல்ல. பொதுவாக ஒரு பாலியல் தொழிலாளி என்றாலே வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டு, தொப்புள் தெரிய சந்துகளிலே நடக்கிறவள் என்கிற சித்தாந்தத்தை உடைத்த படம் இது.
பாலியல் தொழிலாளி என்ற வார்த்தை பாலியல் போராளி என்று இப்படம் வெளியான உடன் மாறப் போகிறது. பாலியல் போராளியை முன் வைத்த படம் என்று மட்டும் கூறிவிட முடியாது. இது சமுதாயம் சார்ந்த ஒரு திரைப்படம். குழந்தைகள் மீதான பாலில் வன்முறைக்கு எதிரான ஒரு திரைப்படம். இந்த தொழிலை ஒழிக்க வேண்டுமென்றால், ஒரு வட்டத்துக்குள் கொண்டு வர வேண்டும் என்றால் பாலியல் தொழிலை அங்கீகரிக்க வேண்டும்.
வணிக நோக்கத்திற்காக மட்டுமே எடுக்கப்பட்ட திரைப்படம் அல்ல. சமுதாயத்திலே நான் சந்தித்த வன்முறைக் களங்களை ஒரு தீர்வைக் கொண்டு வர வேண்டும் என்று சொல்லித்தான், சென்னைக்கு ஒரு சிவப்பு விளக்கு பகுதி தேவை என்ற அறைகூவலை வைத்திருக்கிறோம்.

சிங்கப்பூரில் தமிழருக்கு 32 மாதம் சிறை; நிர்வாண படங்களை வெளியிடுவதாக மிரட்டி பெண்களுடன் செக்ஸ் உறவு கொள்ள முயற்சி


நிர்வாண படங்களை வெளியிடுவதாக மிரட்டி, பெண்களுடன் செக்ஸ் உறவு கொள்ள முயற்சித்த தமிழருக்கு சிங்கப்பூரில் 32 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தமிழர்
சிங்கப்பூரில் வசித்து வருபவர் மணிவேல் முருகன் (வயது 28). திருமணமாகி மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். தமிழ்நாட்டை பூர்வீகமாகக்கொண்ட இவர் அங்கு வயர்மேனாக வேலை பார்த்து வந்தார்.
இவர் அங்கு ‘பாது’ என்ற சமூக வலைத்தளத்தின் ஆர்வலர் ஆவார். இந்த வலைத்தளத்தில் தன்னைப் பற்றிய குறிப்புகளை வெளியிட்டு, கவுகாசியாவை (கருங்கடலுக்கும், காஸ்பியன் கடலுக்கும் இடையேயுள்ள பிரதேசம் இது.) சேர்ந்த ஒருவரின் புகைப்படத்தை தனது புகைப்படத்துக்கு பதிலாக பதிவேற்றம் செய்தார்.
பெண்களுடன் நட்பு
இந்த அறிமுகத்தினைக் கொண்டு 21 வயது முதல் 30 வயது வரையிலான பெண்களை தனக்கு தோழிகள் ஆக்கினார்.

கலைஞர் தினமலருக்கு அளித்த நேர்காணல் :மூப்பனார் பிரதமர் பதவியை விரும்பவில்லை

* மூப்பனாருக்கு, பிரதமர் பதவிக்கான வாய்ப்பு வந்தபோது, அதை தடுத்தீர்கள் என, தொடர்ந்து உங்கள் மீது, குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே? இந்த குற்றச்சாட்டு முழுக்க முழுக்க பொய் என்பதை, பலமுறை தெளிவுபடுத்தி இருக்கிறேன். பிரதமர் பதவியை, மூப்பனாரே விரும்பவில்லை என்பது தான் உண்மை.
லோக்சபா தேர்தல் கூட்டணிக்காக, அ.தி.மு.க., அணியின் கதவுகள் மூடப்பட்டு உள்ளதால், அனைவரின் பார்வையும், தி.மு.க., அணியின் பக்கம் திரும்பி உள்ளது. இந்த நிலையில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, 'தினமலருக்கு' , நேற்று அளித்த, சிறப்பு பேட்டியில், கூட்டணியின் போக்கு தொடர்பாக, புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளார்.
முழு பேட்டி வருமாறு: * கட்சிகளின் தேர்தல் அறிக்கையில், இலவசங்களை அறிவிக்க, தேர்தல் கமிஷன் தடை போட்டிருக்கிறதே... அது பற்றி, தங்கள் கருத்து என்ன?
இலவசங்களை தேர்தல் அறிக்கையில் அறிவிக்கும்போது, அதற்கான நிதி ஆதாரங்களைத் திரட்டுவது குறித்தும், தெளிவுபடுத்த வேண்டுமென்று, தேர்தல் கமிஷன் சொல்லியிருக்கிறது. * வரும், 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலை, இலவசங்கள், மானியங்கள் குறித்த அறிவிப்புகள் இல்லாமல் சந்திக்க, தி.மு.க., துணியுமா?

வியாழன், 27 பிப்ரவரி, 2014

இஸ்லாமிய பயங்கரவாதிகளால் பாகிஸ்தான் பாடகர் சுட்டுக் கொலை Wazir khan AFRIDI shot dead


பெஷாவர்:பாகிஸ்தானில் பாடகர் ஒருவரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பாகிஸ்தானின் பிரபலமான நகரம் பெஷாவர். இங்கு பஷ்டு மொழி பாடகர் வாசிர் கான் அப்ரிடி என்பவர் பிரபலமாக விளங்கினார். கைபர் ஏஜென்சி சார்பில் இவர் பல இடங்களில் பாடல்கள் பாடி வந்தார். இவர் பாடுவதை நிறுத்த வேண்டும் என்று தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்திருந்தனர். அதை பொருட்படுத்தாத வாசிர் கான், தொடர்ந்து பாடி வந்தார். அதனால் 3 முறை இவரை தீவிரவாதிகள் கடத்தினர். பின்னர், மீண்டும் பாட கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவரை தீவிரவாதிகள் விடுவித்தனர். இந்நிலையில், பெஷா வர் புறநகர் பகுதியான பக்கிர் கிலே என்ற இடத்தில் நேற்று திடீரென புகுந்த தீவிரவாதிகள், பாடகர் வாசிகர் கானை சரமாரியாக சுட்டுக் கொன்றனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. போலீசார் விசாரித்து வருகின்றனர். - tamilmurasu.org 

TATA சவுதியில் ஜாகுவார்-லேண்ட் ரோவர் கார் தொழிற்சாலையை திறக்கிறது

இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் இன்று இந்தியா-சவுதி அரேபியா வணிக மன்றக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. வர்த்தகம் மற்றும் கைத்தொழில் இந்திய சம்மேளனமும், சவுதி வர்த்தகக் குழுவும் இணைந்து இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன. இந்தக் கூட்டத்தில் பேசிய சவுதியின் வர்த்தக மற்றும் தொழில்துறை மந்திரி தபிக் பவ்சான் ஐராபியா, இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் குழுமம் தங்களது ஜாகுவார், லேண்ட் ரோவர் தயாரிப்புத் தொழிற்சாலையை சவுதி அரேபியாவில் நிறுவ இருப்பதைக் குறிப்பிட்டார். இந்தத் தொழிற்சாலை உயர்தரக் கார்கள் உற்பத்தியில் மூன்றாவது இடத்தைப் பெறும் என்று கூறிய அவர், சவுதியின் கிழக்குப் பகுதியில் இந்தத் தொழிற்சாலை நிறுவப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.

மோடி - வைகோ - விஜயகாந்த் - ராமதாஸ்! ஒரே மேடையில் !


 நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் வலுவான கூட்டணியை ஏற்படுத்தும் முயற்சியில் பாஜக மும்முரமாக இறங்கியுள்ளது. மதிமுக, ஐஜேகே, பாமக கொங்கு நாடு மக்கள் கட்சி, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் பாஜ கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இவற்றில் பாமக தவிர மற்ற கட்சிகளிடம் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துள்ளது. தேமுதிகவை சேர்த்தால் கூட்டணி வலுவானதாக இருக்கும் என பாஜ கணக்கு போட்டுள்ளது.

Opinion Poll பணம் கொடுத்தால் அரசியல் கட்சிகளின் விருப்பத்துக்கு ஏற்ப தேர்தல் கணிப்புகள்-


 பணம் கொடுக்கத் தயாராக இருந்தால் கட்சிகள் விருப்பத்துக்கு ஏற்ப கணிப்பு முடிவுகளை மாற்றி வெளியிட கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் தயாராக இருப்பதாக இந்தி மொழி செய்தித் தொலைக்காட்சி ஒன்று அம்பலப்படுத்தி இருக்கிறது.
‘நியூஸ் எக்ஸ்பிரஸ்’ என்ற இந்தி செய்தி அலைவரிசை இந்த கருத்துக் கணிப்பு நிறுவனங்களின் செயல்பாடு பற்றி அறிய ஒரு நிருபரை அனுப்பி ரகசிய நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்தது. இதில் கிடைத்த சில தகவல்களை நியூஸ் எக்ஸ்பிரஸ் தொலைக்காட்சியின் ஆசிரியர் வினோத் காப்ரி முதலில் செவ்வாய்க்கிழமை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
வாக்காளர்கள் விழிப்புணர்வுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்த அவர் தேர்தல் ஆணையத்திடம் இதுபற்றிய விவரங்கள் பகிர்ந்துகொள்ளப்படும் என்றார்

பா.ஜ.க.விடம் பம்மும் தமிழினவாதிகள் ! பின்கதவால் பொது மகளிரிடம் ( prostitutes) செல்லும் அடிப்பொடிகள்

தமிழர் நலன், ஈழத் தமிழர் நலன் என்ற கள்ளப்பெயர்களைச் சூடிக்கொண்டு இந்துவெறியர்களுக்கு பல்லக்குத் தூக்குகின்றனர். சோ ராமசாமியும், இந்து ராமும், சுப்ரமணியன் சாமியும், குருமூர்த்தியும், ராமகோபாலனும், இல.கணேசனும், அர்ஜுன் சம்பத்தும் இதைத்தான் செய்கிறார்கள். அவர்களை தமிழின பகைவர்கள் என்று வரையறுக்கிறோம். என்றால் வைகோ, சீமான், பழ.நெடுமாறன் போன்றவர்களை தமிழ்த் தேசிய அரசியல் நடத்தும் ஆர்.எஸ்.எஸ். அடிப்பொடிகள் என்றுதான் அழைக்க வேண்டும்
சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டு போராடிய நாம் தமிழர் கட்சி கமலாலயத்திற்கு செல்லாத காரணம் என்ன?
தேர்தல் நெருங்க, நெருங்க காங்கிரசுக்கு எதிரான எதிர்குரல்களும், போராட்டங்களும் அதிகரிக்கின்றன. நேற்று (26.02.2014) கூட சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டு போராடியிருக்கிறது சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழர் முன்னேற்றக் கழகம் எனும் இயக்கம். அவர்கள்  மட்டுமில்லை… ஏழு பேர் விடுதலைக்கு மத்திய அரசு எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து பலரும் காங்கிரஸை அம்பலப்படுத்தி வருகின்றனர். இவை அரசியல் ரீதியாக இல்லை என்றாலும் அப்பாவிகள் விடுதலையை எதிர்க்கும் காங்கிரஸ் கயவாளிகள் மீதான வெறுப்பில் நடைபெறுகின்றனது. இந்த எதிர்ப்பு சரி என்றாலும் இது காங்கிரசு மட்டுமே தொடர்பான ஒன்றல்ல. ஒட்டு மொத்தமாக இந்திய ஆளும் வர்க்கம், அதற்கு உட்பட்ட ஊடகங்கள், ஆம் ஆத்மி வரை ராஜீவ் கொலை வழக்கில் அநீதியாக தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்யக் கூடாது என்ற கருத்தைத்தான் கொண்டிருக்கின்றனர்.
காங்கிரசுக்கு நிகராக ஈழத்தமிழ் மக்களின் போராட்டத்திற்கு எல்லா எதிர்ப்பு வேலைகள் செய்திருந்தாலும் ஜெயலலிதாவை தமிழ் அமைப்புகள் எதிர்ப்பதில்லை. பண்ருட்டி வேல்முருகன் நடத்திய சேலம் மாநாட்டில் பிரபாகரன் படம் வைத்து பின்னர் போலீசு மிரட்டியதும் எடுத்து விட்டார்கள். அதிமுக கூட்டணிதானே அம்மா கண்டு கொள்ளமாட்டார் என்று நினைத்து பின்னர் கண்டு கொண்டாலும் அதை கண்டிக்காமல் மேடையில் புரட்சித் தலைவி என்று புகழ்பாடினார் வேல் முருகன். இது சீமான், நெடுமாறன், வைகோ முதலான தமிழினவாதிகளுக்கும் பொருந்தும்.

அடம் பிடிக்கும் சமந்தா!

விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் ஹீரோயின்களை, பெரும்பாலும் சூர்யாவின் அடுத்த திரைப்படத்தில் பார்க்கலாம். த்ரிஷா, அசின், அனுஷ்கா, காஜல் அகர்வால் என பெரும்பாலும் விஜய் படத்தில் நடித்த உண்மை. துப்பாக்கி, மாற்றான் ஹீரோயின்கள் சூர்யாவுடன் ஜோடி போட்டது திரையுலக வரலாற்றில் கண்கூடாக கண்ட திரைப்படங்களில் விஜய்-சூர்யா காஜல் அகர்வாலுடன் ஜோடி போட்ட பிறகு, தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் படத்தில் விஜய்யும், லிங்குசாமி இயக்கத்தில் நடிக்கும் படத்தில் சூர்யாவும் சமந்தாவுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள்.

Pakistan ஹிந்து கோவிலில் வழிபட உரிமை ?பாகிஸ்தானில் சிறுபான்மையின மக்களான ஹிந்துக்களுக்கு நூற்றாண்டு பழமை வாய்ந்த ஹிந்து கோவிலில் வழிபட உரிமை மறுக்கப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து விளக்க அறிக்கைத் தாக்கல் செய்யுமாறு அரசுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெஷாவரில் கோவில் மற்றும் தேவாலயங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டு வருவது தொடர்பாக கராச்சியில் உள்ள உச்ச நீதிமன்றக் கிளை தாமே முன்வந்து புதன்கிழமை விசாரணை நடத்தியது. அப்போது," சிந்து மாகாணத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஹிந்துக் கோவிலில் சிறுபான்மை ஹிந்துக்கள் வழிபட அனுமதி மறுப்பதாக அம்ரபூர் அஸ்தான் பிரேம் பிரகாஷ் பந்த் என்ற அமைப்பு சார்பில் ரீஹோ மால் என்பவர் தாக்கல் செய்த மனுவும் விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த தலைமை நீதிபதி தஸ்ஸாதுக் ஹுசைன் ஜிலானி தலைமை
யிலான அமர்வு, அரசுக்கு மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தது. dinamani.com

Mumbai நீர்மூழ்கி கப்பலில் விபத்து: கப்பல் படை தளபதி ராஜினாமாபுதுடெல்லி,
இந்திய கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல்கள் விபத்துக்குள்ளாவது தொடர்கதை ஆகி வருகிறது.
போர்க்கப்பலில் தீ
இந்த நிலையில், மும்பை அருகே இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘ஐ.என்.எஸ். சிந்து ரத்னா’ என்ற நீர் மூழ்கி போர்க்கப்பல் நேற்று ‘திடீர்’ தீ விபத்துக்கு உள்ளானது.
இந்த தீ விபத்தில் சிக்கி 7 கடற்படை வீரர்கள் மயங்கி சரிந்தனர். அவர்கள் உடனடியாக மும்பை கடற்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்தின்போது 2 அதிகாரிகள் மாயம் ஆனார்கள். அவர்கள் கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

சத்தியமூர்த்தி பவன்: தமிழ் அமைப்பு இளைஞர்கள் - காங்கிரசார் கடும் மோதல்


சத்தியமூர்த்தி பவன்ல சாதாரணமாவே சட்டய கிழிச்சுபாங்க....இதில சட்டய கிழிக்கிற ஸ்பெசலிஸ்ட் நாம் தமிழர் இயக்கத்தினர் புகுந்துட்டாங்கலா அவ்வளவுதான்.. ராஜிவ் கொலையாளிகள், ஏழு பேர் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும், தமிழக காங்கிரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், சென்னை, சத்தியமூர்த்தி பவன் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்த வந்த நாம் தமிழர் கட்சியினருக்கும், தமிழர் முன்னேற்ற படையினருக்கும், காங்கிரசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், மூன்று தொண்டர்கள், இரண்டு போலீசார் காயம் அடைந்தனர். இதனால், போக்குவரத்து சில மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.தமிழ் இளைஞர்கள் என்ற பெயரில் ஒரு குண்டர் படையையே ஜெயலலிதா வளர்ப்பது அவருக்குத்தான் இழப்பாக அமையும். சட்டரீதியான நடைமுறைகள் நடந்து கொண்டிருக்கும் போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீரழிக்கவே இந்த போராட்டங்கள். இலங்கையில் தமிழர்களிடம் இல்லாத வெறி ஜெயாவுக்கு ஒட்டு வாங்க வேண்டி இங்கு தான் தலைவிரித்தாடுகிறது.

BJP கூட்டணியில் தே.மு.தி.க.,வுக்கு 14 'சீட்! ? :Plus Suitcases ?

பாஜக , - தே.மு.தி.க., பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்து உள்ளது. 18 தொகுதி கள் கேட்ட, தே.மு.தி.க.,வுக்கு, 14 தொகுதிகள் கொடுப்பதாக, பா.ஜ., அளித்த உத்தரவாதத்தை ஏற்று, இரு கட்சிகளுக்கும் இடையே, உடன்பாடு ஏற்பட்டுள்ளது எனவும், கூட்டணி முடிவை, அதிகாரப்பூர்வமாக இன்று, தே.மு.தி.க., அறிவிக்கலாம் என, பா.ஜ., வட்டாரம் நம்பிக்கை தெரிவித்தது.
கூட்டணி பேச்சு சுமுகமாக முடிந்ததை அடுத்து, தமிழக பா.ஜ., தலைவர், பொன்.ராதாகிருஷ்ணன், நேற்று திருச்செந்தூர் சென்று, முருகனை வழிபட்டு திரும்பியுள்ளார். இந்த கூட்டணிக்கு, காரணகர்த்தாவாக செயல்பட்ட, காந்திய மக்கள் கட்சி தலைவர், தமிழருவி மணியன், திருவண்ணாமலை சென்று, அருணாச்சலேஸ்வரரை வழிபட்டு உள்ளார். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், மருத்துவ சிகிச்சைக்காக, சிங்கப்பூரில் தங்கியுள்ளார். அவரது ஒப்புதலின் பேரில், அவரது மைத்துனர், சுதீஷுடன், பா.ஜ., தலைவர்கள், பொன்.ராதாகிருஷ்ணன், மோகன்ராஜூலு ஆகியோர், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.  கேப்டன் இன்னும் குழப்பம் கலந்த போதையில தான் இருக்காறா....ராமதாசு அண்ணன் சங்கு ஜங்குன்னு குதிப்பாரே... எனக்கு என்னவோ இதுவும் குழப்பம் தான்னு தோணுது...பாப்போம் என்ன நடக்குதுன்னு...

புதன், 26 பிப்ரவரி, 2014

உமா மகேஸ்வரி கொலை ! டாடா பெயரை காப்பாற்ற வேண்டும் என்ற அக்கறை தமிழக அரசுக்கு ?


டி.சி.எஸ் அலுவலகக் கட்டிடம்சென்னை சிறுசேரி சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் டி.சி.எஸ் (டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்) நிறுவனத்தில் பணியாற்றி வந்த உமா மகேஸ்வரி (24) என்ற பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.  கடந்த பிப்ரவரி 13-ம் தேதி அலுவலகத்திலிருந்து திரும்பாததால், அவருடன் தங்கியிருந்த தோழிகள் டி.சி.எஸ்சுக்கும்,  சேலம் ஆத்தூரில் உள்ள அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து சென்னை வந்த உமா மகேஸ்வரியின் தந்தை போலீசில் புகார் கொடுத்திருந்தார்.
டி.சி.எஸ் கட்டிடம்
13-ம் தேதி இரவு 10.30 மணிக்கு டி.சி.எஸ் அலுவலகத்திலிருந்து வெளியேறிய காட்சி பதிவாகி இருந்தது. இந்நிலையில் கடந்த சனியன்று டி.சி.எஸ் நிறுவனத்திலிருந்து சுமார் 200 அடி தூரத்தில் உள்ள புதர்களில் இருந்து அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக (22-2-2014) பத்திரிகைகளில் செய்தி வெளியானது.
இந்த சம்பவம் குறித்து சிறுசேரி டி.சி.எஸ் ஊழியர்களிடம் விசாரித்தபோது அதிர்ச்சிகரமான செய்திகள் கிடைக்கின்றன. “சனிக்கிழமையன்று உடலை கண்டெடுத்ததாக டி.சி.எஸ் நிர்வாகமும் போலீசும் கூறுவது முழுப் பொய். வெள்ளிக்கிழமையே சிப்காட் வளாகத்தில் அந்த பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஊழியர்கள் மத்தியில் செய்தி பரவியது. ஏன் தேதியை மாற்றிக் கூறுகிறார்கள் என்று தெரியவில்லை” என்றார் சிப்காட் வளாகத்தில் பணிபுரியும் ஒரு ஊழியர். சிலர் தங்களுக்கு வியாழக்கிழமையே இந்த தகவல் தெரியும் என்று அதிர்ச்சியளித்தார்கள். இவர்களது கூற்றை உறுதிப்படுத்தும் விதமாக,  தினகரன் மற்றும் மாலைமுரசு நாளிதழ்கள் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் ஊழியர்கள் மத்தியிலும், செய்தியாளர்கள் மத்தியிலும் இந்தத் தகவல் பரவியதாகவும்,  போலீசாரை தொடர்பு கொண்ட போது அவர்கள் மறுத்ததாகவும் செய்தி வெளியிட்டுள்ளன. உமா மகேஸ்வரி கொலை

சவுதி அரேபியாவில் நீதிபதிகளுக்கு பயிற்சி மையங்கள் ! Too late Too little ?

இந்தப் பயிற்சி மையங்கள் நாட்டின் மத மற்றும் கலாச்சார அடையாளத்துக்கான அச்சுறுத்தல் என்று இங்குள்ள பழைமைவாதிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர், ஆனால்  சவூதி மன்னர் குடும்பங்கள் முழுக்க முழுக்க அமேரிக்க கலாசாரத்திலேயே வாழ்கின்றனர் , அப்பாவிகளுக்குதான் சமயம் கொள்கை கோட்பாடெல்லாம் 
அரபு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் பணிபுரியும் நீதிபதிகள் அனைவரும் மதகுருமார்களாகவே இருக்கின்றனர். இவர்கள் கடுமையான இஸ்லாமிய சட்டங்களையே அனைத்து வழக்குகளிலும் பயன்படுத்துகின்றனர். முன்னுதாரணங்களோ, குறிப்புகளோ இல்லாமல் தீர்ப்பு வழங்க இந்த நீதிபதிகள் அதிகாரம் உடையவர்களாக இருக்கின்றனர். ஆனால், இத்தகைய நடைமுறையினால் இவர்களது தீர்ப்புகள் முரண்பாடுகளைக் கொண்டதாகவும், வெளிப்படைத்தன்மை இல்லாமலும் இருப்பதாக விமர்சகர்கள் கருதுகின்றனர். தற்போதைய நடைமுறையில் முதல் விசாரணை நடைபெறும் குற்றவியல் மற்றும் தனிப்பட்ட வழக்குகளைக் கொண்ட இரண்டு பிரிவு நீதிமன்றங்களிலும் ஷரியா விதிகளே கடைப்பிடிக்கப்படுகின்றன. ஷரியா விதிமுறைகள் முறையாக நெறிமுறைப்படுத்தப்பட்ட வடிவத்தில் இல்லை. அதனால் நீதிபதிகள் பொதுவான இஸ்லாமிய சட்ட விதிகளுக்குப் பொருந்தும்படியான குரான் விளக்கங்களையோ அல்லது நபிகள் நாயகத்தின் வாழ்க்கை நடைமுறை மற்றும் உதாரணங்களைக் கொண்ட சுன்னா விளக்கங்களையோ தங்களின் தீர்ப்புகளுக்கு எடுத்துக் கொள்கின்றனர்.

Chennai IT பெண் ஊழியர் கொலை குற்றவாளிகள் பற்றி சில சந்தேகங்கள் ? கேசை அவசரமாக முடிக்கிறார்களா ?


chennaiengnrFEB250214
அவர்கள் குற்றவாளிகள் என்றால் காவல் துறை இன்னும் கூடுதல் ஆதாரங்களை தர வேண்டும். அவர்களின் முகத்தை மூடி வைத்திருப்பது ஏன்? எல்லா வழக்கிலும் இதுபோல்தான் காவல் துறை குற்றவாளிகள் முகத்தை மூடி வைத்ததா?சென்னை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த உமா மகேஸ்வரி  கொலை செய்யப்பட்ட வழக்கில்,
அவரின் A.T.M கார்டை திருடி பணம் எடுக்க முயற்சித்தபோது பிடிபட்டவர்கள் என்று காவல் துறை மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இருவரை கைது செய்திருக்கிறது.
கேமராவில் பதிவாகி இருந்த சிவப்பு கலர் சட்டையை குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்து உள்ளோம் என்கிறது காவல் துறை.
சிவப்பு கலர் சட்டை மட்டுமே எப்படி கொலைக்கான அடையாளமாக இருக்க முடியும்? அப்படி இருந்தால் அந்த சட்டையை குற்றவாளிகள் அதற்குப் பிறகும் போட்டுக் கொண்டே இருப்பார்களா? பத்திரப் படுத்தி வைத்திருப்பார்களா?

கிளி பேசியது.: இவன்தான் கொன்றான்... இவன்தான் கொன்றான் ! எஜமானியை கொன்றவனை போலீசுக்கு காட்டிக் கொடுத்த கிளி

When Ashutosh's name was taken, the parrot started shouting 'Usne maara, Usne maara' (He has killed), Ajay said.Agra: A talking parrot has helped the police to crack the case of its mistress' murder after it "identified" the alleged killer.
Neelam, wife of a local Hindi newspaper editor Vijay Sharma, was found murdered at her residence in Balkeshwar colony here on February 20, police said.
While the police were looking for the killer, Sharma noted a change in the behaviour of their pet parrot whenever his nephew, Ashutosh Sharma Goswami, came to the house.
"It sulked every time Ashutosh passed its cage," Sharma's brother Ajay said
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவின் பல்கேஸ்வரா காலனியில் வசித்து வரும் விஜய் சர்மா உள்ளூர் இந்தி நாளிதழ் ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 20ம் தேதி இவருடைய மனைவி நீலம் கொல்லப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி கொலையாளியை தேடி வந்தனர். இந்நிலையில், சர்மாவின் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த கிளி, சர்மாவின் மருமகன் அசுடோஷ் சர்மா கோஸ்வாமி தன்னுடைய வீ்ட்டிற்கு வரும்போதெல்லாம் உர்ரென்று இருந்தது. கிளியின் நடத்தையில் ஏற்பட்ட மாறுதலை சர்மா கவனித்தார். இது குறித்து சர்மாவின் தம்பி அஜய்யும் தனது சந்தேகத்தை அவரிடம் தெரிவித்தார். சந்தேகம் வலுவடைந்ததால், சர்மாவின் குடும்பத்தினர் தாங்கள் சந்தேகிக்கும் நபர்களின் பெயர்களை ஒவ்வொன்றாக கிளியின் முன் கூறினர். மற்றவர்களின் பெயரை கூறும்போது எதுவும் பேசாத அந்தக் கிளி அசுடோஷ் பெயரை கூறியதும், “இவன்தான் கொன்றான்... இவன்தான் கொன்றான்...” என்று பேசியது.

டாப்ஸி: சினி ஃபீல்டில் யாரிடமும் பழகுவதில்லை ?

சென்னை:நடிப்பதற்கு வாய்ப்பு குறைந்ததால் மீண்டும் படிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார் டாப்ஸி.ஆடுகளம், வந்தான் வென்றான், ஆரம்பம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் டாப்ஸி. இந்தியிலும் ஒன்றிரண்டு படங்களில் நடித்துள்ளார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் குவியவில்லை. இதையடுத்து மீண்டும் படிக்க முடிவு செய்துள்ளார்.
ஆடுகளம் படத்தில் எனக்கு பாராட்டு கிடைத்தது. ஒரு நேரத்தில் ஒரு படம் மட்டுமே ஒப்புக்கொள்கிறேன். இதனால் குறிப்பிட்ட ஒரு கதாபாத்திரத்தில் முழு
கவனம் செலுத்த முடிகிறது. எனது நிறைய நண்பர்கள் சினிமா துறையை விட்டு வெளியில்தான் இருக்கிறார்கள்.

பண்ணை அடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டத்தில் பி.எஸ். தனுஷ்கோடி’

பி சீனிவாசராவ்நன்செயும் புன்செயும் கொழிக்கும் தஞ்சை என்று இலக்கிய வருணனையில் இறுமாந்து கிடக்கும் காவிரியின் கரைகளுக்கு வெளியேதான் பஞ்சைப் பராரிகளாகவும் பண்ணை அடிமைகளாகவும் ஆக்கப்பட்ட உழைக்கும் மக்களின் அவல வாழ்க்கை கேட்பாரற்றுக் கிடந்தது. அதைக் கேள்வி கேட்கத் துணிந்தவர்களின் அனுபவக் குரலை நாம் அறியச் செய்யும் ஒரு நூல் “பண்ணை அடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டத்தில் பி.எஸ். தனுஷ்கோடி”. கீழத்தஞ்சையில் பண்ணையடிமைத்தனத்திற்கு எதிராக போராடிய கம்யூனிச முன்னோடி பி சீனிவாசராவ்.
ஒரு பண்ணையடிமைக் குடும்பத்தில் பிறந்து அடிமை உழைப்பு, சாதிக் கொடுமை என்ற இரட்டை நுகத்தடியை வர்க்கப் போராட்டத்தினூடாக அறுத்தெறிந்த பி.எஸ் தனுஷ்கோடியின் வாழ்க்கைப் போராட்டத்தை விவரிக்கும் இந்நூல், படிக்கும் எவருக்கும் ஒரு நூலைப் படித்த ‘திருப்தியை’ அளிக்காமல் ‘மன அமைதியை’க் குலைத்துச் செயலுக்கிழுக்கும் இயக்கமாகவே எதிர்ப்படும்.

ஃபத்வா' உத்தரவை யார் மீதும் திணிக்க முடியாது

முஸ்லிம் மதத் தலைவர்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை (ஃபத்வா) யார் மீதும் திணிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. "முஸ்லிம் சமுதாயத்தினரின் ஷரியத் நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் "ஃபத்வா' உத்தரவுகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானவை என அறிவிக்க வேண்டும்' என்று விஸ்வ லோசன் மாதம் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவை விசாரித்த நீதிமன்றம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மேலும் கூறியதாவது: "தாருல் குவாஜா' மற்றும் "தாருல் இஃப்தா' போன்ற மத அமைப்புகளின் செயல்பாடுகளில் நீதிமன்றம் தலையிடாது. எனினும் அவர்கள் பிறப்பிக்கும் "ஃபத்வா' உத்தரவுகளை தனிநபர்கள் ஏற்பதும், ஏற்காமல் இருப்பதும் அவரவர் விருப்பமாகும். அதை யார் மீதும் திணிக்க முடியாது.All India Personal Law Board submitted fatwa is just an opinion of Mufti and he has no power and authority to implement

ஒரு ஒப்புதல் வாக்குமூலம் : தவறு செய்திருந்தால் மன்னியுங்கள்: முஸ்லிம்களுக்கு ராஜ்நாத் சிங் (BJP) வேண்டுகோள்

"முஸ்லிம் சமுதாயத்தினருக்கு எப்போதாவது, எங்கேயாவது எங்கள் சார்பில் ஏதாவது தவறு நிகழ்ந்திருந்தால் அதற்கு தலை வணங்கி மன்னிப்பு கேட்கத் தயாராக உள்ளோம்; இந்தத் தேர்தலில் எங்களுக்கு ஒரு வாய்ப்பு அளியுங்கள்' என்று பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்தார்.
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முஸ்லிம் சமுதாயத்தினருடனான கலந்துரையாடலில் அவர் ஆற்றிய உரை:
குஜராத் மாநிலத்தில் 2002ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தை நடத்த அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி உத்தரவிட்டதைப் போல் காங்கிரஸ் கட்சி தவறான பிரசாரத்தை செய்து வருகிறது.
இந்த விவகாரத்தில் மோடி குற்றமற்றவர் என்று நீதிமன்றம் அறிவித்த பிறகும் அதை காங்கிரஸ் கட்சி ஏற்கத் தயாராக இல்லை. உங்க நெத்தியிலேயே விபரமா தெரியறது ?

கமல் சாட்டை :உண்டியல்ல போடுவதை விட வரி கட்டுவதே மேல்

உண்டியலில் காணிக்கை செலுத்துவதை விட
வருமான வரிகட்டினால் மக்களுக்கு  பலன் கிடைக்கும்: நடிகர் கமல் வருமான வரித் துறை அலுவலகம் சார்பில், தேசிய கலை விழா, சென்னையில், இரண்டு நாட்கள் நடக்கிறது. நேற்று, முதல் நாள் விழாவை, தமிழக புதுச்சேரி மாநில வருமான வரித் துறை முதன்மை கமிஷனர், ரவி தலைமை தாங்கினர். இயக்குனர் ஜெனரல் ஜெய்சங்கர், முதன்மை கமிஷனர்கள் பிரதீப் ஆர் சேத்தி, மிஸ்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, நடிகர் கமல்ஹாசன் பேசியபோது,  ‘’ கடவுளுக்கு, உண்டியலில் காணிக்கை செலுத்துவதை விட, வருமான வரி செலுத்தினால், நாட்டு மக்களுக்கு உடனடியாக பயன் கிடைக்கும். நான் நேர்மையாக வரி செலுத்தி வருகிறேன். சிலர், வரிகட்டும் போதும் மட்டும், வீரபாண்டிய கட்டபொம்மன் போல, பேச முயல்கின்றனர்.வரியினால், நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களால், பொதுமக்களுக்கு கிடைக்கும் நன்மைகளை நினைத்து பார்த்தால், வரியின் முக்கியத்துவமும், நாட்டு நலத் திட்டங்களுக்கு உதவியதில், வரி செலுத்து வோரின் பங்கும் தெரியும் வரும்’’என்று தெரிவித்தார்.

சிங்கப்பூரில் ப.சிதம்பரம்- விஜயகாந்த் சந்திப்பு?

சென்னை: சிங்கப்பூர் சென்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தை மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. லோக்சபா தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை அறிவிக்காமலேயே பாஜக, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு தண்ணிகாட்டி வருகிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இந்த நிலையில் திடீரென சில நாட்களுக்கு முன்பு விஜயகாந்த் சிங்கப்பூர் சென்றார். விஜயகாந்த் சிங்கப்பூர் சென்றதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. தோல் அலர்ஜிக்கு சிகிச்சை மேற்கொள்ளவே சிங்கப்பூர் சென்றதாகவும் அங்கு வணிக வளாகம் ஒன்றை வாங்குவதற்காக சென்றுள்ளதாகவும் கூறப்பட்டது. சிங்கப்பூரில் ப.சிதம்பரம்- விஜயகாந்த் சந்திப்பு? அத்துடன் கூட்டணி தொடர்பாக கடைசி கட்ட பேச்சுவார்த்தையை மேற்கொள்ளவும் விஜயகாந்த் அங்கு சென்றதாக கூறப்பட்டு வருகிறது. கேக்கிற டப்பு கிடைச்சா காங்கு கூத்தணி ? இல்லாங்கட்டி கப்டன் வேற அணி ? இவன்தாட்டா அரசியல்வாதி ஃ

காங்கிரஸ் தலைவர்களின் குடும்பத்தினருக்கு ‘சீட்’ கிடையாது: ராகுல்


கவுகாத்தி: காங்கிரஸ் தலைவர்களின் குடும்பத்தினருக்கு தேர்தலில் போட்டியிட ‘சீட்' கிடையாது என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, அசாம் மாநிலம் திபுவில் 9 சுயாட்சி கவுன்சில் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது: தேர்தலில் காங்கிரஸ் தலைவர்களின் குடும்பத்தினருக்கு சீட் கொடுப்பதை நான் விரும்பவில்லை. இப்படி சீட் கொடுக்கும் போக்கை மாற்ற வேண்டும் என்று கருதுகிறேன். காங்கிரஸ் தலைவர்களின் குடும்பத்தினருக்கு ‘சீட்’ கிடையாது: ராகுல் தங்கள் பிரதிநிதிகளை மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கருதுகிறேன்.அடேங்கப்பா இன்னா புரட்சி பண்றீங்க ?ராகுல் தம்பியும் காங்கிரஸ் தலைவர்  குடும்பவிளக்குதானே ?

ஐ.டி. இளம்பெண் கற்பழித்து படுகொலை : வாலிபர்கள் வாக்குமூலம்!

நள்ளிரவில் தனியாக சென்ற ஐ.டி. இளம்பெண்
கொடூரமாக கற்பழித்து படுகொலை :
வாலிபர்கள் வாக்குமூலம்!சென்னை கேளம்பாக்கம் சிறுசேரியில் பெண் என்ஜினீயர் கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த கொடூர கொலையாளிகள் இருவர் நேற்று கைது செய்யப் பட்டனர்.சேலம் மாவட்டம், ஆத்தூர் ஜோதி நகர் வரதராஜபுரத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி ஓய்வுப்பெற்ற ஓவிய ஆசிரியர். அவரது மகள் உமாமகேஸ்வரி (வயது 23). இவர், கேளம்பாக்கம் அடுத்த சிறுசேரி சிப்காட்டில் உள்ள டி.சி.எஸ். கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்தார். கடந்த 13–ந்தேதி அன்று இரவு காணாமல் போன இவர், கடந்த 22–ந்தேதி சனிக்கிழமை சிறுசேரி தகவல் தொழில்நுட்ப பூங்கா அருகே உள்ள முட்புதரில் அழுகிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். உமாமகேஸ்வரியின் பிரேத பரிசோதனை அறிக்கையில், கழுத்து, அடிவயிறு ஆகிய இடங்களில் கத்திக் குத்து காயங்கள் இருந்தன.

ரத்து செய்யப்படும் டிக்கெட்களுக்கு பணம் திருப்பித் தர முடியாது : ரயில்வே அறிவிப்பு

நாக்பூர் : ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து விட்டு, பின் ரத்து செய்து பயணம் செய்யாவிட்டால் அவர்களுக்கு டிக்கெட்டிற்கான பணம் திரும்பித் தர இயலாது என ரயில்வேத்துறை அறிவித்துள்ளது. டிக்கெட் முன்பதிவு திட்டத்தின் கீழ் மார்ச் ஒன்றாம் தேதி முதல், குழுவாக டிக்கெட் முன்பதிவு செய்து விட்டு, அதில் குறைவானவர்களே பயணம் செய்தாலும் பணம் திரும்பித்தர முடியாது என மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.மத்திய ரயில்வேயின் மண்டல மூத்த வர்த்தகப்பிரிவு மேலாளர் டாக்டர் சுமந்த் தெய்யுகர் இது குறித்து கூறுகையில், இந்த புதிய நடைமுறையை மார்ச் 1ம் தேதி முதல் அமல்படுத்த அனைத்து ரயில்வே கோட்ட பொது மேலாளர்களுக்கும் இது குறித்த சுற்றறிக்கை பிப்ரவரி 21ம் தேதியே அனுப்பப்பட்டு விட்டது என தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

11 கட்சிகளுடன் உருவானது மூன்றாவது 'மாற்று' அணி


 • மூன்றாவது அணியின் தலைவர்கள் நிதிஷ் குமார் (ஐக்கிய ஜனதா தளம்), தேவகெளடா (மதசார்பற்ற ஜனதா தளம்), பிரகாஷ் காரத் (மார்க்சிஸ்ட்), சரத் யாதவ் (ஐக்கிய தனதா தளம்), முலாயம் சிங் (சமாஜ்வாதி, தம்பிதுரை (அதிமுக) மற்றும் தேவப்பிரத பிஸ்வாஸ் (ஃபார்வர்டு ப்ளாக்). | படம்: சங்கர் சக்ரவர்த்தி
  மூன்றாவது அணியின் தலைவர்கள் நிதிஷ் குமார் (ஐக்கிய ஜனதா தளம்), தேவகெளடா (மதசார்பற்ற ஜனதா தளம்), பிரகாஷ் காரத் (மார்க்சிஸ்ட்), சரத் யாதவ் (ஐக்கிய தனதா தளம்), முலாயம் சிங் (சமாஜ்வாதி, தம்பிதுரை (அதிமுக) மற்றும் தேவப்பிரத பிஸ்வாஸ் (ஃபார்வர்டு ப்ளாக்). | படம்: சங்கர் சக்ரவர்த்தி
 • மூன்றாவது அணியின் தலைவர்கள் ஏ.பி.பரதன் (இந்திய கம்யூ.) நிதிஷ் குமார் (ஐக்கிய ஜனதா தளம்), தேவகெளடா (மதசார்பற்ற ஜனதா தளம்), பிரகாஷ் காரத் (மார்க்சிஸ்ட்), சரத் யாதவ் (ஐக்கிய தனதா தளம்), முலாயம் சிங் (சமாஜ்வாதி, தம்பிதுரை (அதிமுக) மற்றும் தேவப்பிரத பிஸ்வாஸ் (ஃபார்வர்டு ப்ளாக்). | படம்: சங்கர் சக்ரவர்த்தி
மக்களவைத் தேர்தலையொட்டி இடதுசாரிகள், சமாஜ்வாதி, அதிமுக உள்ளிட்ட 11 கட்சிகள் இணைந்து மூன்றாவது அணியை முறைப்படி அறிவித்தன.

ஜெயலலிதாவின் 66-வது பிறந்த நாள். அ.தி.மு.க. அடிமைகளும் உடகங்களும் சாமியாடினார்கள்

நேற்று 24.02.2014, ஜெயலலிதாவின் 66-வது பிறந்த நாள். இதற்கு அ.தி.மு.க. அடிமைகளும், ஜெயா டி.வி.யும் பாதம் பணிந்து தவழ்ந்து வணங்கியதில் வியப்பில்லை.  ஊடகங்கள் ஒவ்வொன்றும் ஜெயா பிறந்த நாளை பயபக்தியுடன் கொண்டாடியதும் எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும் அதைக்கூட ‘நாசூ’க்காக இல்லாமல் பட்டவர்த்தனமாக சாமியாடியதைத்தான் சகிக்க முடியவில்லை. ஏனெனில் இந்த ஜால்ரா இசையின் சொந்தக்காரர்களைத்தான் நடுநிலைமை ஊடகங்களாக அப்பாவிகள் பலர் கருதுகின்றனர்.
ஊடகங்கள் ஜால்ரா
ஜால்ரா இசையின் சொந்தக்காரர்களைத்தான் நடுநிலைமை ஊடகங்களாக அப்பாவிகள் பலர் கருதுகின்றனர்.
ராஜ் டி.வி. ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே தொடங்கிவிட்டது. தங்கத் தலைவி, தங்கத் தாரகை, தமிழகத்தை முன்னேற்ற வந்த விடிவெள்ளி, நாளைய இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் என்று எல்லாம் வர்ணித்து இரண்டு, மூன்று நிமிடத்திற்கு ஒரு படக்காட்சியை ஒளிபரப்பிக் கொண்டே இருந்தார்கள். தமிழகத்தின் மக்கள் போராட்ட வரலாறு குறித்த காட்சிகளை ஆவணப்படுத்தவில்லை என்றாலும் ‘அம்மா’வின் சர்வ வியாபக காட்சிகளை ஊடகங்கள் பயபக்தியுடன் சேமித்து வருகின்றன. ஆனாலும் திரும்ப திரும்ப காக்கா கத்துவதையும் பிடிப்பதையும் காட்டுவதற்கு முதலில் அந்த ‘எடிட்டருக்கு’ முற்றும் துறந்த மனநிலை வேண்டும். உடகங்களும் சாமியாடினார்கள்

அண்ணா ஹசாரே, மம்தா பானர்ஜி, ஜெயமோகன், பத்ரி – கலக்கும் கூட்டு


வரப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் “தீதி” மம்தா பானர்ஜியை ஆதரிப்பதாக அண்ணா ஹசாரே செய்த வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு.
இதன் சமீபத்திய காமடிதான் வரப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் “தீதி” மம்தா பானர்ஜியை ஆதரிப்பதாக அண்ணா ஹசாரே செய்த வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு.

ஆம் ஆத்மி கட்சியுடன் கூடங்குளம் போராட்டக்குழு கூட்டணி: மக்களவை தேர்தலில் போட்டி


கூடங்குளத்தில் அணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையில் தொடர் போராட்டம் நடந்தது. தமிழகம் முழுவதும் இந்த போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் மூலம் பிரபலமான அந்த அமைப்பு தற்போது டெல்லியில் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி ஆட்சியை பிடித்து சாதனை படைத்த ஆம் ஆத்மி கட்சியுடன் கைகோர்த்து பாராளுமன்ற தேர்தலில் குதிக்கிறது.

சென்னை ஐ.டி பெண் ஊழியர் கொலையில் 4 வட மாநில கட்டுமானத் தொழிலாளர்கள் கைது


டிசிஎஸ் பெண் என்ஜீனியர் கொலையில் 4 வட மாநில கட்டுமானத் தொழிலாளர்கள் கைது பெண் சாப்ட்வேர் என்ஜீனியர் கொலையில் 4 வட மாநில கட்டுமானத் தொழிலாளர்கள் கைது சென்னை:சென்னை ஐ.டி பெண் ஊழியர் கொலை வழக்கில் இன்று 4 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். நான்கு பேருமே மேற்கு வங்கம் மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் ஆவர். இந்த நான்கு பேரும் கொல்லப்பட்ட உமா மகேஸ்வரியின் செல்போனை பயன்படுத்தியபோது சிக்கியுள்ளனர். சிறுசேரி சிப்காட் வளாகத்தில் டி.சி.எஸ். நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த என்ஜினீயர் உமா மகேஸ்வரி கொலை சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி.மஞ்சுநாதா தலைமையிலான அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக சிறுசேரியில் முகாமிட்டு கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்தனர். உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில், புதர்களுக்கு நடுவில் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சிகரெட் துண்டுகள் ,மதுபாட்டில்கள் மற்றும் தலை முடிகளும் சிதறிக் கிடந்தன. இவற்றை சேகரித்து தடயவியல் சோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். உமா மகேஸ்வரி தனது அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு நடந்து செல்லும் ஒரே ஒரு வீடியோ காட்சியை தவிர வேறு எந்த ஆரம்ப கட்ட தடயங்களும் போலீசிடம் சிக்கவில்லை. இதனால் அவர் யாருடன் சென்றார்,அதன் பின்னர் நடந்தது என்ன என்பது எல்லாமே மர்மமாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நான்கு பேரைப் பிடித்துப் போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக இன்று செய்திகள் வெளியாகின. தற்போது அந்த நான்கு பேரும் கைது செய்ய்ப்பட்டுள்ளனர். இந்த நான்கு பேருமே வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆவர். இவர்கள் உமா மகேஸ்வரியின் செல்போனைப் பயன்படுத்தி வந்ததால் சிக்கியுள்ளனர். இவர்களில் ராம் மண்டல், உத்தம் மண்டல் ஆகியோர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற இருவரும் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். மேலும் ஒருவருக்கும் இதில் தொடர்புள்ளது. அவரைப் போலீஸார் தேடி வருகின்றன
tamil.oneindia.in

I T பெண் ஊழியர் கொலையாளி அடையாளம் தெரிந்தது.. 2 நாட்களில் சிக்குவர் என போலீஸ் தகவல்


சென்னை:சென்னை ஐ.டி பெண் ஊழியர் கொலையில் முக்கியத் தடயங்கள் சிக்கியுள்ளன.இதன் மூலம் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரலாம் என தெரிகிறது. சிறுசேரி சிப்காட் வளாகத்தில் டி.சி.எஸ். நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த என்ஜினீயர் உமா மகேஸ்வரி கொலை சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஐ.டி. நிறுவன பெண் ஊழியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம் நேரில் சென்று விசாரணை நடத்தினார். சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி.மஞ்சுநாதா தலைமையிலான அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக சிறுசேரியில் முகாமிட்டு கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்தனர். உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில், புதர்களுக்கு நடுவில் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சிகரெட் துண்டுகள் ,மதுபாட்டில்கள் மற்றும் தலை முடிகளும் சிதறிக் கிடந்தன.

Saudi ஆண் மருத்துவர்களை அனுமதிக்க மறுத்து மாணவியின் உயிரை பலி கொண்ட பல்கலைக் கழக நிர்வாகிகள்.

Saudi Arabian woman dies after male medics stopped from entering female-only university campus 

Female student Amena Bawazir suffered heart failure, but medics were prevented from entering the campus because they were male

ஸ்லாமிய அடிப்படைவாத நாடான சவுதியில் மத பிற்போக்குத்தனத்தின் காரணமாக ஒரு மாணவி கொல்லப்பட்டிருக்கிறார்.
சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள மன்னர் சவுத் பல்கலைகழகத்தில் (King Saud University), சமூகவியல் கல்லூரி வளாகத்தில் படித்து  வரும் மாணவி அமீனா பவஷீர். கடந்த 06.02.2014 அன்று கல்லூரிக்கு சென்ற இவருக்கு, காலை 11 மணி அளவில் நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது. உடன் இருந்தவர்கள், உடனடியாக மருத்துவ உதவி கேட்டு தொடர்பு கொண்டிருக்கிறார்கள். உடனடியாக ஆம்புலன்சில் மருத்துவர்களும் வந்து சேர்ந்திருக்கின்றனர். ஆனால், இது பெண்களுக்கான பல்கலைக்கழகமாதலால், ஆண் மருத்துவர்கள் உள்ளே செல்வது தடை செய்யப்பட்டிருக்கிறது என்று கூறி பல்கலைக்கழக நிர்வாகம் மருத்துவர்களை உடனடியாக உள்ளே அனுமதிக்கவில்லை. ஆண்களை  அனுமதிக்கலாமா என்ற யோசித்து முடிவு காணும் வரை அவர்கள் வாயிலிலேயே காக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
மன்னர் சவுத் பல்கலைக் கழகத்தில் அறிவியல் கற்பிக்கும் சவுதி பெண்களுக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது. (படம் : நன்றி RT.com)
இது குறித்து அமீனாவின் சகோதரி பஹ்தா, அல்-அரபியே டிவி சேனலுக்கு கொடுத்த பேட்டியில் கூறியதாவது, “கல்லூரி நிர்வாகம் மருத்துவர்களை உடனே அனுமதிக்காமல், அவர்கள் 1 மணி வரை வெளியிலேயே காத்திருக்க வைக்கப்பட்டார்கள். கடைசியில் மருத்துவர்கள் உள்ளே அனுமதிக்கப்படும் வேளையில் அமீனா இறந்து விட்டிருந்தார்” என தெரிவிக்கிறார்.

அதிமுக வேட்பாளர் அறிவிப்பு... எங்கள் சுயமரியாதைக்கு ஏற்பட்ட இழுக்கு அல்ல: தா. பா.


சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்திருப்பது இடதுசாரிகளின் சுயமரியாதைக்கு ஏற்பட்ட இழுக்கு அல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலர் தா. பாண்டியன் தெரிவித்துள்ளார். சென்னையில் லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். மேலும் இடதுசாரிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அவர்களுக்கான தொகுதிகள் முடிவானதும் அந்த தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் வாபஸ் பெறப்படுவர் என்றும் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதனால் இடதுசாரிகளுக்கு தொகுதிகள் கிடைக்குமா? எத்தனை தொகுதிகள்தான் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது? இடதுசாரிகள் அதிருப்தியில் இருக்கின்றனரா என்ற கேள்விகள் எழுந்தன.  இந்திய கம்யுனிஸ்டுகள் இன்னும் சுயமரியாதை என்ற சொல்லை ஞாபகத்தில் வைத்திருப்பது அதிசயம்தான் ! அதிலும் சுயமரியாதை என்ற சொல்லை பாண்டியன் சொல்லிருப்பது இந்திய அரசியலின் மிக பெரிய ஜோக் அல்லது சோகம்!நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு என்பது இதுதானோ ?

Chennai City உமா மகேஸ்வரி கொலை ! 9 நாட்கள் கிடந்த உடல் ! பெண்களுக்கு பாதுகாப்பானதா சென்னை?

உமா மகேஸ்வரி கொலையைக் கண்டித்து சிறுசேரி சிப்காட் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் ஐ.டி.ஊழியர்கள் | சிப்காட் வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ள போலீஸார். | படம். எம்.கருணாகரன்.
 • உமா உடல் கிடந்த இடம். | படம்- எம்.கருணாகரன்.
  பெங்களூர் பிரதிபா, டெல்லி நிர்பயா வரிசையில் சென்னை உமா: எல்லாத் தரப்பிலும் அலட்சியங்கள், குளறுபடிகள். நடுத்தர வர்க்க இளைஞர்களின் கனவுலகமான ஐ.டி.பார்க்கில் நடந்த உமா மகேஸ்வரியின் கொலை, சமூகத்தின் எல்லா தரப்புகளிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மா மகேஸ்வரியின் உடல் கண்டெடுக்கப்பட்ட சிறுசேரி பகுதி புறத்தோற்றத்தில் சென்னைக்கு சம்பந்தமில்லாத பகுதி யாக இருக்கிறது. நவீனத் தோற்றத்தோடு உயரமாக காட்சியளிக்கும் கட்டிடங்களுக்கு நடுவில் இருக்கும் புதரில்தான் உமா மகேஸ்வரியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதை புதர் என்று மட்டும் சொல்லிவிட முடியாது என்கிறார் சிறுசேரி பகுதியில் பணிபுரியும் மென்பொருள் ஊழியர் ஒருவர்.
  புதர் மண்டிக்கிடக்கும் அந்த பகுதியில் உமாவின் உடல் அழுகி நாற்றமெடுக்கும் வரை கேட்பாரின்றி கிடந்தது என்பது அந்த இடத்தைப் பார்க்கும்போது எந்த ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை.
 • அதிமுக வேட்பாளர் பட்டியலில் 8 வன்னியர், 7 கவுண்டர், 6 தேவர், 3 நாடார், 2 முதலியார் ரெட்டியார், மீனவர், நாயுடு, முத்தரையர், பிள்ளைமார், இஸ்லாமியர் மற்றும் யாதவ சமூகத்தினர் தலா ஒருவர்

  லோக்சபா தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியலில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த 8 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார். இதில் பெரும்பான்மை சமூகத்துக்கு அதிக வாய்ப்பு கொடுத்து வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 40 பேரில் வன்னியர் 8 ,ஆதி திராவிடர் 7,கொங்கு வேளாள கவுண்டர்கள் 7, முக்குலத்தோர் (தேவர்)- 6, நாடார்-3, முதலியார் 2 பேர். அதிமுக வேட்பாளர் பட்டியலில் 8 வன்னியர், 7 கவுண்டர், 6 தேவர், 3 நாடார், 2 முதலியார் ரெட்டியார், மீனவர், நாயுடு, முத்தரையர், பிள்ளைமார், இஸ்லாமியர் மற்றும் யாதவ சமூகத்தினர் தலா ஒருவர் நிறுத்தப்பட்டுள்ளார். யார் யார்? என்ன சமூகம்?

  திருவள்ளூர் (தனி) - வேணுகோபால் (ஆதி திராவிடர்)
  வட சென்னை- வெங்கடேஷ் பாபு (நாயுடு)
  தென் சென்னை- ஜெயவர்தன் (மீனவர்)
  மத்திய சென்னை- விஜயகுமார் (ரெட்டியார்) 
  பன்னீரு என்னதான் குனிஞ்சும் உம்மவனுக்கு அம்மா சீட்டு கொடுக்கலை பாரு!

  குஜராத்தில் அசீமானந்தாவின் கிறித்தவ வேட்டை

  சபரிதாம் ஆசிரமத்தில் அசீமானந்தாநான் விரைவில் முதலமைச்சர் ஆகப் போகிறேன் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. நான் வந்த பிறகு, உங்கள் வேலையை பார்த்துக் கொள்கிறேன். நிம்மதியாக இருங்கள்” என்று மோடி தன்னிடம் சொன்னதாக அசீமானந்தா கூறுகிறார். ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம் – அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம் – 

  டாங் மாவட்டம் குஜராத்தின் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மிகச்சிறிய மாவட்டம். மாநிலத்தின் தென்கோடியில் அமைந்த அந்த மாவட்டம் கிழக்கிலும், மேற்கிலும் மகாராஷ்டிர மாநிலத்தால் சூழப்பட்டுள்ளது. அதன் சுமார் 2 லட்சம் மக்கள் தொகையில் 75 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர்; 93 சதவீதம் பேர் பழங்குடி மக்கள். இந்தியாவின் மற்ற பழங்குடி பகுதிகளைப் போலவே இயற்கை வளங்களுக்காகவும், சித்தாந்தந்தங்களுக்காகவும் தனது அளவுக்கு மிஞ்சிய போர்களையும், போராட்டங்களையும் டாங்ஸ் என்று அழைக்கப்படும் டாங் மாவட்டம் சந்தித்துள்ளது.