சனி, 26 நவம்பர், 2022

இந்தி எதிர்ப்பு.. திமுக கட்சி அலுவலகத்தில் மூத்தத் தொண்டர் தீக்குளிப்பு

 tamil.indianexpress.com  :  சேலம் தாழையூர் திமுக கிளை அலுவலகத்தில் 85 வயதான திமுக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இவர் இந்து எதிர்ப்புக்கு எதிராக தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சேலம் தாழையூர் திமுக கிளை அலுவலகத்தில் 85 வயதான தங்கவேல் என்ற திமுக என்ற தொண்டர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட தங்கவேல் என்ற முதுபெரும் திமுக தொண்டருக்கு ஜானகி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.
தங்கவேல் சனிக்கிழமை (நவ.26) காலை திமுக கிளை அலுவலகத்துக்கு சென்று மத்திய அரசின் இந்து எதிர்ப்புக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும் என அங்கிருந்தவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

பெங்களூரு உடலுறவின் போது இறந்த நபர்... உதவிக்கு வந்த காதலியின் கணவர்

 /zeenews.india.com/t   :  Crime: கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் 67 வயது முதியவர் உயிரிழந்த விவகாரத்தில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு வாரத்திற்கு முன்பு சாலையோரத்தில் பிளாஸ்டிக் பையில் கிடந்த 67 வயது ஆணின் உடலை பெங்களூரு போலீசார் கண்டுபிடித்ததை அடுத்து, அந்த மரணம் குறித்த விசாரணையில் குற்றாவாளியை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் "அந்த நபர் தனது கள்ளக்காதலியுடன் உடலுறவு கொள்ளும்போது திடீர் என ஏற்பட்ட மாரடைப்பால் இறந்ததாகத் தெரியவந்துள்ளது.
போலிஸ் விசாரணையில் இருந்து தப்பிக்க உயிரிழந்த கள்ளக்காதலனின் உடலை, பிளாஸ்டிக் பையில் பேக் செய்து கணவனுடன் சேர்ந்து யாருக்கும் தெரியாமல் சாலையோரம் வீசியுள்ளனர்.

பாஜக அமைச்சர்களின் கோரிக்கை : ஆச்சரியப்பட்ட பி.டி.ஆர்

minnambalam.com - christopher :  ஜி்எஸ்டி இழப்பீட்டுத் தொகையான ரூ.11,185.82 கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று டெல்லியில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
உலக நாடுகளின் பொருளாதார நெருக்கடிக்கு இடையே இந்தியாவின் அடுத்தாண்டுக்கான பட்ஜெட் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்நிலையில் கடந்த நவம்பர் 21ம் தேதி முதல் 2023 – 2024ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்த ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்து வரும் ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களின் நிதி அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர்.

வெள்ளி, 25 நவம்பர், 2022

வேலைவாய்ப்பில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கே முன்னுரிமை" .. அமைச்சர் தங்கம் தென்னரசு.

கலைஞர் செய்திகள் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் அமைந்துள்ள திருவாளர்கள் டாடா எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் தமிழ்நாட்டைச் சார்ந்த நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தல் தொடர்பாக தொழில் துறை அமைச்சர் . தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
திருவாளர்கள் டாடா எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், மின்னணு பொருட்களை உற்பத்தி செய்வதற்காக தனது தொழிற்சாலையை கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் அமைந்துள்ள GMR தொழிற்பூங்காவில்,
சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் அமைத்துவருகிறது.
4684 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டுவரும் இத்தொழிற்சாலையின் மூலம் ஏறத்தாழ 18000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிறப்புறுப்பை நசுக்கி.. 10ஆம் வகுப்பு மாணவனுக்கு ராகிங் கொடூரம்! சென்னை கேகே நகர் நடேசன் சாலை மத்திய அரசின் கேந்திரிய வித்தியாலயா பள்ளி

 tamil.oneindia.com  -   Vigneshkumar : சென்னை: சென்னை கேகே நகரில் இயங்கி வரும் பள்ளி ஒன்றில் 10ஆம் வகுப்பு மாணவன் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.
பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்குப் பாடங்கள் சொல்லத் தருவது ஒன்று என்றால், அதைத்தாண்டி மாணவ மாணவிகளுக்கு முக்கியமாக ஒழுக்கம் கற்றுத்தருவதே முக்கியமானதாக இருக்கிறது.
சென்னை பள்ளி
அப்படியொரு அதிர்ச்சி சம்பவம் தான் தலைநகர் சென்னையிலேயே அரங்கேறி உள்ளது. சென்னையில் கேகே நகர் பகுதியில் நடேசன் சாலையில் மத்திய அரசின் கேந்திரிய வித்தியாலயா பள்ளி இயங்கி வருகிறது. சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்தப் பள்ளியில் படித்து வருகின்றனர். இதற்கிடையே இந்தப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த மாணவரின் தந்தை ஒருவர் கடந்த 21ஆம் தேதி கேகே நகர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிகார் - 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவனுக்கு 5 தோப்புக்கரணம் மட்டும்தான் தண்டனை!

 மாலை மலர்  : பாட்னா  பீகாரில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு கிராம பஞ்சாயத்தில் வழங்கிய வினோதமான தண்டனை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நவாடா மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
5 வயது சிறுமியை ஒரு நபர் சாக்லேட் வாங்கித்தருவதாகக் கூறி அருகிலுள்ள கோழிப்பண்ணைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இது வெளியில் தெரியவரவே, உள்ளூர்வாசிகள் சிலர் அந்த நபரை, கிராம பஞ்சாயத்து முன்னிலையில் கொண்டுவந்து நிறுத்தினர். ஆனால் அங்கிருந்த பெரியவர்கள் சிலர் அந்த நபர் மீதான குற்றச்சாட்டை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், தாங்களாகவே ஒரு முடிவெடுத்தனர்.

போதைப் பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை – இலங்கை அரசு அறிவிப்பு

தமிழ் மிரர்  :  போதைப்பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை விதிக்கப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.
 இந்த சட்டம் நேற்று முதல் இலங்கையில் அமலுக்கு வந்துள்ளது.
போதைப் பொருள் வைத்திருப்போருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் நேற்று முதல் இலங்கையில் அமலுக்கு வந்துள்ளது.
5 கிராமிற்கு அதிகமான ஐஸ் ரக போதைப்பொருளை வைத்திருந்தாலோ அல்லது விற்பனையில் ஈடுபட்டாலோ மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கக்கூடிய வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
நேற்று முதல் இந்த புதிய சட்டத்தின் கீழ் குற்றம்புரிந்தவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு துறை தெரிவித்துள்ளது.

`கண்பட்டதுபோல்’ ஆகிவிட்டது; நாங்கள் இருவரும் அக்கா, தம்பி!" - சூர்யா சிவா, டெய்சி பேட்டி ம.பா.இளையபதி

 vikatan.com :  தமிழக பா.ஜ.க ஓ.பி.சி பிரிவு மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவா, கட்சியின் சிறுபான்மையினர் அணித் தலைவர் டெய்சி சரண் இருவருக்கும் இடையேயான சர்ச்சைக்குரிய ஆடியோ பதிவு, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
இந்த விவகாரம் தொடர்பாக, இருவரிடமும் இந்த அலைபேசி உரையாடல் குறித்து விசாரித்து கட்சித் தலைமைக்கு 7 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாநில துணைத்தலைவரும், ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவருமான கனகசபாபதியிடம் தெரிவித்தார்.

வியாழன், 24 நவம்பர், 2022

குடும்ப பிரச்னை தீர காட்டுக்குள் பாலியல் உறவு.. காதலர்களை கொடூரமாக கொலை செய்த ராஜஸ்தான் போலி மந்திரவாதி !

 kalaignarseithigal.com  -  KL Reshma  :  குடும்ப பிரச்னை தீரவேண்டுமென்றால் காட்டுக்குள் பாலியல் உறவு கொள்ள வேண்டும் என கூறிய இரகசிய காதல் ஜோடியை கொடூரமாக கொன்றுள்ள போலி மந்திரவாதியின் செயல் ராஜஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் பகுதியை அடுத்துள்ள பகுதியில் கெலபாவாடி என்ற காட்டுப்பகுதி அமைந்துள்ளது. இங்கு கடந்த நவம்பர் 18-ம் தேதி ஆண் மற்றும் பெண் சடலம் நிர்வாணமாக கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டனர். அப்போது இந்த சடலம் ராகுல் மீனா மற்றும் சோனு குன்வார் என்று தெரியவந்தது.

281 மாநகராட்சி பள்ளிகளில் இறைவணக்க நிகழ்ச்சியில் ஆங்கிலம்.. சென்னை மாநகராட்சி அதிரடி

இறைவணக்க நிகழ்ச்சியில் ஆங்கிலத்தில் பேச வேண்டும்: மாணவ-மாணவிகளின் ஆங்கில புலமையை அதிகரிக்க ஏற்பாடு
Image result for சென்னை மாநகர மேயர் பிரியா

மாலைமலர் : சென்னை: பொதுவாக தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசுப்பள்ளி மாணவர்களால் சரளமாக ஆங்கிலத்தில் பேச முடியவில்லை என்கிற குறை நீண்டகாலமாக இருந்து வருகிறது.
இந்த குறையை போக்க சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு ஆங்கில புலமையை அதிகரிக்கவும் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னையில் மொத்தம் உள்ள 281 மாநகராட்சி பள்ளிகளில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் 70 உள்ளது. 92 நடுநிலைப்பள்ளிகள் 119 ஆரம்ப பள்ளிகளும் உள்ளன.
இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஆங்கில புலமையை அதிகரிக்க வகுப்பறையில் ஆங்கில ஆசிரியர் பாடம் எடுப்பதற்கு முன்பாக 2 மாணவ-மாணவிகள் 2 நிமிடம் ஆங்கிலத்தில் பேச சொல்ல வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது.
இதற்காக மாணவ-மாணவிகள் நூலகத்திற்கு சென்று குறிப்பு எழுதி வந்து அதன்மூலம் பயிற்சி பெறுகின்றனர்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

நக்கீரன் : “ஆட்டை மாட்டை அடிக்கிற மாதிரி அடித்து விட்டார்கள்; ஆசையில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டார்கள்'' - ரூபி மனோகரன் பேட்டி
காங்கிரஸ் கட்சியிலிருந்து ரூபி மனோகரன் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.  
ரூபி மனோகரன் முறையாகப் பதிலளிக்கும் வரை அவரைத் தற்காலிகமாக நீக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ரூபி மனோகர், ''கே.ஆர்.ராமசாமி அவர்களிடம் எனக்கு கொஞ்சம் நாள் கொடுங்கள் என்று கேட்டேன்.

கமல்ஹாசனுக்கு திடீர் உடல் நலக்குறைவு.. போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதி

tamil.asianetnews.com  -  vinoth kumar   :  கமல்ஹாசனுக்கு திடீர் உடல் நலக்குறைவு.. போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதி..!
தற்போது பிக்பாஸ் சீசன் 6ஐ கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
அதேபோல், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்பட படப்பிடிப்பில்  கமல் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு ஐதராபாத் சென்று திரும்பிய நிலையில் அவர் சோர்வாகவே காணப்பட்டுள்ளார். மேலும், சளி உள்ளிட்ட பல்வேறு தொல்லைகளும் இருந்து வந்துள்ளது.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தோனேசியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 271 ஆக உயர்வு - தேடும் பணி தீவிரம்

தினத்தந்தி  : தேடுதல் பணி தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 271 ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள சியாஞ்சூர் நகரில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 5.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக, வீடுகள், அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்ட ஏராளாமன கட்டிங்கள் இடிந்து விழுந்தன.
இதில் 162 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். 700-க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கான பணிகள் விடியவிடிய நடந்தது. அந்த வகையில் நேற்று காலை இடிபாடுகளில் இருந்து மேலும் 90 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதை தொடர்ந்து பலி எண்ணிக்கை 252 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

கனிமொழியிடம் இருந்து மகளிரணி பறிக்கப்பட்டதா?

minnambalam.com  -  Aara  :  திமுக பொதுக்குழு முடிந்து ஒரு மாதம்  இரு வாரம் ஆகிவிட்ட நிலையில் இளைஞர் அணி, மகளிர் அணி ஆகிய அணிகளுக்கான புதிய நிர்வாகிகள் இன்று (நவம்பர் 23) அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில்,  மகளிரணித் தலைவராக விஜயா தாயன்பன், மகளிரணிச் செயலாளராக  ஹெலன் டேவிட்சன்,  இணைச் செயலாளராக குமரி விஜயகுமார், துணைச் செயலாளராக அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். 
திமுகவின் மகளிரணிச் செயலாளராக இருந்த கனிமொழி எம்.பி. கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி திமுகவின் பொதுக்குழு கூடியபோது,  கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

விசிகவிலும் 'ஆபாச பேச்சு டேப்'.. திருமாவளவன் முன்னிலையில் மகளிர் அணி நிர்வாகி ஷாக்

tamil.oneindia.com - Mathivanan Maran  :  சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள்ளும் சனாதனம் இருக்கிறது; விசிகவில் பெண்களை ஆண் நிர்வாகிகள் கடுமையாக திட்டி இருப்பதை ரெக்கார்டு செய்து வைத்திருக்கிறேன் என அக்கட்சியின் மகளிர் அணி செயலாளர் நற்சோனை பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக பாஜகவில் பெரும் புயலாக உருவெடுத்திருக்கிறது
திருச்சி சூர்யாவின் ஆபாச பேச்சு விவகாரம். பாஜகவின் பெண் நிர்வாகியை செல்போனில் அழைத்து ஆபாசமாக அர்ச்சனை செய்திருக்கிறார் திருச்சி சூர்யா.
திருச்சி சூர்யாவின் இந்த ஆபாச பேச்சு மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்; அவரை கைது செய்ய வேண்டும் என பாஜகவில் இருந்த காயத்ரி ரகுராம் குரல் கொடுத்தார்.
ஆனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திருச்சி சூர்யா நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடைவிதித்து விசாரணை கமிஷன் அமைத்தார்;

புதன், 23 நவம்பர், 2022

மேற்கு வங்கத்தில் ஹிஜாப் பிரச்சினையால் மாணவர்கள் பயங்கர மோதல்.. சூறையாடப்பட்ட பள்ளி.. தேர்வு ரத்து

 tamil.oneindia.com  -  Jackson Singh  :  கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் மாணவிகளுக்கு ஒருதரப்பு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களுக்கு இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதில் பள்ளி சூறையாடப்பட்டதுடன் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.
கர்நாடகாவை தொடர்ந்து தற்போது மேற்கு வங்கத்திலும் ஹிஜாப் பிரச்சினை வெடித்திருப்பது அம்மாநில மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதனிடையே, பாஜகவினர் தான் இந்த ஹிஜாப் பிரச்சினையை மேற்கு வங்கத்தில் பரப்பி வருவதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மேலும், இந்த ஹிஜாப் பிரச்சினை மற்ற பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் பரவாமல் இருப்பதை உறுதி செய்ய காவல்தறைக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
திரும்பி பார்க்க வைத்த கர்நாடகா..

காதலை கைவிட மறுத்ததால் மகளை கழுத்தை நெரித்துக்கொன்ற தாய்.. நெல்லை மாவட்டம்

 மாலைமலர் : நெல்லையை அடுத்த சீவலப்பேரி அருகே உள்ள பாலாமடை பெருமாள்கோவில் தெருவை சேர்ந்தவர் பேச்சி. இவர் சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி ஆறுமுக கனி(வயது 45). இவர்களது மகள் அருணா(19). இவர் கோவையில் நர்சிங் படித்து வந்தார். சமீபத்தில் இவர் விடுப்பு எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு வந்தார். நேற்று நள்ளிரவு தாய், மகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை அவரது வீடு வெகு நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் அக்கம்பக்கத்தினர் பேச்சியின் வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது அருணா மயங்கி கிடந்துள்ளார். அவரது அருகில் தாய் ஆறுமுக கனி வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்துள்ளார்.
உடனே அவர்கள் 2 பேரையும் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அருணா கழுத்தை நெரித்துக்கொலை செய்யப்பட்டு இருப்பதும், ஆறுமுக கனி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா : இலங்கையில் அனுமதியின்றி போராடினால் ராணுவம் வரும்!

BBC Tamil  : இலங்கையில் அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்குடன் மற்றுமொரு போராட்டம் நடைபெற ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு, விசேட உரை நிகழ்த்திய போதே அவர் இதைக் குறிப்பிட்டார்.
அவ்வாறு போராட்டங்களை நடத்த முயற்சிக்கும் பட்சத்தில், ராணுவம் ஈடுபடுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
இன்றைய நிகழ்வில் ஆற்றியஉரையின் முக்கிய தகவல்களே இங்கே வழங்குகிறோம். நாட்டில் அவசரகால சட்டம் அமல்படுத்தப்பட்டு, போராட்டங்கள் தடுத்து நிறுத்தப்படும்.

Cuddalore Central Prison – Tamil Nadu’s Guantanamo – Savukku

May be an image of 5 people, people standing, outdoors and tree

savukkuonline.com :  Cuddalore Central Prison – Tamil Nadu’s Guantanamo – Savukku
Prisons evolved over time on the development of civilisation.  It is almost universal barring a few countries that prisons for reformation and not for retribution.   But Senthil Kumar, Superintendent of Prisons, Cuddalore Central Prison thinks that prisons is a place where he will deliver instant justice, treat prisoners like African slaves, and satisfy his sadistic pleasures.
Before going into the story, it is relevant that how the Supreme Court laid down the rights of the prisoners in Ramesh Kaushik Vs BL Gig, Superintendent and others.
The goal of imprisonment is not only punitive but restorative, to make an offender a non-offender. In Batra’s case this desideratum was stated and it is our constitutional law, now implicit in Art. 19 itself. Rehabilitation is a prized purpose of prison ‘hospitalization’. A criminal must be cured and cruelty is not curative even as poking a bleeding wound is not healing. Social justice and social defence – the sanction behind prison deprivation-ask for enlightened habilitative procedures. A learned writer has said: The only way that we will ever have prisons that operate with a substantial degree of justice and fairness is when all concerned with that prison-staff and prisoners alike-share in a meaningful way the decision-making process, share the making of rule and their enforcement. This should not mean three “snitches” appointed by the warden to be an “inmate advisory committee”. However, if we are to instill in people a respect for the democratic process, which is now the free world attempts to live, we are not achieving that by forcing people to live in the most egalitarian institution that we have in our society. Thus, ways must be developed to involve prisoners in the process of making decision that affects every aspect of their life in prison.

ஸ்கெட்ச் போட்டு வாழ்ந்த ஊராட்சி தலைவரை ஸ்கெட்ச் போட்டு கொலை?

scetch venkatesanvikatan.com  -  எஸ்.மகேஷ்  :  கொலை நடப்பதற்கு முன்பு வந்த போன் அழைப்பு - ஊராட்சி மன்றத் தலைவர் நாட்டு வெடிகுண்டு வீசிக் கொலை!
காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகேயுள்ள மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்கெட்ச் (எ) சி.வெங்கடேசன் (48). இவர் புரட்சி பாரத கட்சிப் பிரமுகர். மாடம்பாக்கம் ஊராட்சி மன்றத்தின் தலைவர் பதவிக்கு பூட்டு சாவி சின்னத்தில் வெங்கடேசன் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
இந்த நிலையில் ஆதனூர், ராகவேந்திரா நகரில் வைத்து வெங்கடேசன் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதில் நிலை தடுமாறிய அவரை, மர்மக் கும்பல் ஒன்று சுற்றி வளைத்து வெட்டிச் சாய்த்தது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பிட்காயின் பரிவர்த்தனை, போலி ஆதார்கள் - மங்களூர் குக்கர் வெடிப்பில் அதிர்ச்சி !

GoodReturns Tamil :  மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவமான கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து வெளியாகும் ஒவ்வொரு சம்பவமும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தும் விதமாகவும் இருந்து வருகின்றது.   சில தினங்களுக்கு முன்பு மங்களூர் அருகே உள்ள நாகுரி என்ற பகுதியில்ஆட்டோவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
இதனால் அந்த பகுதி முழுவதுமே பெரும் பரப்பரப்பாக காணப்பட்டது.
 இந்த சம்பவம் குறித்து தீவிரமாக விற்பனை நடைபெற்று வரும் நிலையில்,
பலவிதமான யூகங்களும் வெளி வந்த வண்ணம் இருக்கின்றன.
பயங்கரவாத தாக்குதல்  -  முதல் கட்டமாக இந்த ஆட்டோ குக்கர் வெடிப்பு என்பது பயங்கரவாத தாக்குதல் என கூறப்பட்டது. இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர் தான் இதற்கு காரணம் என்றும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

சைதை சாதிக்கைவிட மோசமாக பேசினார் சூர்யா": காயத்ரி ரகுராம்

minnambalam.com -  Kalai  :  8 ஆண்டுகள் பாஜகவிற்கு உண்மையான உழைத்தேன், என்னால் களங்கம் ஏற்பட்டது என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.
கட்சி நடவடிக்கையை மீறி செயல்பட்டதாக பாஜக நிர்வாகியும், நடிகையுமான காயத்ரி ரகுராமை 6 மாத காலம் நீக்குவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
இதுதொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் காயத்ரி ரகுராம் இன்று(நவம்பர் 22) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “என்னுடைய செயல்பாடுகள் அனைத்தும் தவறாகவே சித்தரிக்கப்பட்டு மேலிடத்தில் போய் சேருகிறது. இதுவரை எந்த ஒரு விளக்கமும் என்னிடம் கேட்கப்பட்டதில்லை.
என் வளர்ச்சியை சிலர் வேண்டுமென்றே தடுக்கிறார்கள், நான் முட்டி, மோதிதான் மேலே வரவேண்டும்” என்றார்.

செவ்வாய், 22 நவம்பர், 2022

ராமேஸ்வரத்தில் 300 கிலோ கஞ்சாவும், 500 கிராம் கஞ்சா எண்ணெயும் பறிமுதல்- கடலோர காவல் படை நடவடிக்கை

மாலை மலர்  :  ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாம் பகுதியை சேர்ந்த இந்திய கடலோர காவல்படையினர் போதைப் பொருள் தடுப்பு பிரிவுடன் இணைந்து கடலில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ராமேஸ்வரம் அருகே கடலில் சந்தேகத்திற்குரிய வகைில் சென்ற படகை அவர்கள் தடுத்தி நிறுத்த முயன்றனர். ஆனால் அதிவேகமாக சென்ற அந்த படகை துரத்தி சென்ற கடலோர காவல்படையினர் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
அந்த படகில் மேற்கொண்ட சோதனையின் போது 8 கோணிப்பைகளில் 300 கிலோ எடையுள்ள கஞ்சாவும், 500 கிராம் எடையுள்ள கஞ்சா எண்ணெயும் இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த படகில் இருந்த 4 பேரிடம் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் கஞ்சா எண்ணெயின் சந்தை மதிப்பு சுமார் ரூ.1.3 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது

தமிழ்நாடு பா.ஜ.கவில் - ஆபாச மிரட்டல் ஆடியோ கசிவு, சூர்யா சிவாவுக்கு தடை, காயத்ரி ரகுராம் இடைநீக்கம்

தமிழக பாஜகவில் களேபரம்

bbc.com  : தமிழக பா.ஜ.கவில் களேபரம்- ஆபாச மிரட்டல் ஆடியோ கசிவு, சூர்யா சிவாவுக்கு தடை, காயத்ரி ரகுராம் இடைநீக்கம் - BBC News தமிழ்
தன் கட்சியின் சக நிர்வாகியிடம் தொலைபேசியில் பா.ஜ.கவின் ஓ.பி.சி. பிரிவு செயலர் சூர்யா சிவா ஆபாசமாகப் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ சமூகவலைதளங்களில் வெளியானது. அந்த குரல் பதிவின் நம்பகத்தன்மையை பிபிசியால் சுயாதீனமாகச் சரிபார்க்க முடியவில்லை.
இந்நிலையில், அவர் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
காயத்ரி ரகுராமிடமிருந்து அனைத்துப் பொறுப்புகளும் பறிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.கவின் ஓ.பி.சி. பிரிவு மாநிலச் செயலராகச் செயல்பட்டுவருபவர் சூர்யா சிவா.

ஆட்டோவில் குக்கர் குண்டு வெடிப்பு..! கோவையில் இருந்ததாக பகீர் தகவல் - ஜமேஷாவுடன் தொடா்பா..?அடுத்தடுத்த அதிர்ச்சி

n
hindutamil.in  : மங்களூரு குண்டுவெடிப்பு | ஷரீக் தங்கியிருந்த கோவை விடுதிக்கு பூட்டு: போலீஸ் நடவடிக்கை |
மங்களூரு குண்டுவெடிப்பு | ஷரீக் தங்கியிருந்த கோவை விடுதிக்கு பூட்டு: போலீஸ் நடவடிக்கை
கோவை காந்திபுரத்தில் மங்களூரு குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஷரீக் தங்கியிருந்த விடுதி
கோவை: மங்களுரு ஆட்டோ குண்டுவெடிப்பில் தொடர்புடைய முகமது ஷரீக் கோவையில் தங்கியிருந்த விடுதிக்கு பூட்டு போடப்பட்டது.
கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 19-ம் தேதி நடைபெற்ற ஆட்டோ குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஓட்டுநர் மற்றும் ஆட்டோவில் பயணித்த ஷரீக் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய மங்களூரு போலீஸார், இது தீவிரவாத செயல் என்றும், ஷரீக் வீட்டில் நடத்தப் பட்ட சோதனையில் வெடிகுண்டு தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து, என்.ஐ.ஏ அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திமுக தொண்டர்களிடையே அடிதடி... ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக்கொண்டதால் பரபரப்பு!!

tamil.asianetnews.com  -  Narendran S  :  கன்னியாகுமரி சென்றுள்ள உதயநிதி ஸ்டாலினை சந்திக்க அனுமதி மறுத்ததால் திமுக தொண்டர்களுக்கு இடையே அடிதடி ஏற்பட்டதை அடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரி சென்றுள்ளார்.
அங்கு உலக மீனவர் தின நிகழ்ச்சி, புத்தளத்தில் கட்சி அலுவலகம் திறப்பு விழா, இல்லம் தோறும் இளைஞரணி உறுப்பினர் சேர்ப்பு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். கன்னியாகுமரி சென்ற உதயநிதி ஸ்டாலினுக்கு காவல்கிணறு ஜங்ஷனில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கன்னியாகுமரி அரசினர் விருந்தினர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் அவரது அறைக்கு சென்றார்.

தமிழறிஞர் அவ்வை நடராஜன் காலமானார்

nakkheeran.in தமிழகத்தின் மூத்த தமிழறிஞர்களில் ஒருவரான அவ்வை நடராஜன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் காலமானார். இவர் 1992ம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகள் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக இருந்துள்ளார். மேலும் செம்மொழி தமிழ் உயராய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இவர் மறைந்த திமுக தலைவர் கலைஞரின் நெருங்கி நண்பரும் ஆவார். 

மின்னம்பலம் : christopher :  தமிழறிஞர் பத்மஸ்ரீ அவ்வை நடராசன் காலமானார்!
தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் மூத்த இலக்கிய சொற்பொழிவாளராக அறியப்பட்டவர் தமிழறிஞர் அவ்வை நடராசன்.

திங்கள், புதன், வியாழன்: அங்கன்வாடிகளில் இனி 3 முட்டை! 3 eggs per week Tamil Nadu announcement

minnambalam.com - Kalai :  தமிழகத்தில் அங்கன்வாடிகளில் 1 முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வாரத்திற்கு 3 முட்டைகள் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் இன்று(நவம்பர் 21)நடைபெற்றது.
அதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது.

திங்கள், 21 நவம்பர், 2022

FIFA2022 : 20 லட்சம் கோடி செலவு இந்த மோசமான சாதனைக்காகதானா? கத்தாரை கலாய்த்து தள்ளும் இணையவாசிகள் !

 kalaignarseithigal.com  - Praveen  :  கிட்டத்தட்ட உலகத்தின் பாதி மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நேற்று இரவு கோலாகலமாக மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தாரில் தொடங்கியது. ஆசியாவில் நடக்கும் இரண்டாவது கால்பந்து உலகக்கோப்பை தொடராகவும், மத்திய கிழக்கு பகுதியில் நடக்கும் முதல் கால்பந்து உலகக்கோப்பை தொடராகவும் இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கால்பந்து உலகக்கோப்பை தொடர் கத்தாரில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்தே இந்த தொடர் பல்வேறு சர்ச்சைகளை சுமந்து வருகிறது. போட்டியை நடத்த உலக கால்பந்து கூட்டமைப்பான பீபாவுக்கு (FIFA)கத்தார் லஞ்சம் கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டு தற்போது வரை கால்பந்து உலகை உலுக்கி வருகிறது.
இந்த நிலையில், கோலாகலமாக தொடங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் போட்டியை நடத்தும் கத்தார் மற்றும் ஈகுவடார் ஆகிய அணிகள் மோதின. உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் போட்டியை நடத்தும் நாடு தோற்றதில்லை என்ற வரலாறு இருப்பதாலும், இந்த தொடரில் கத்தார் மற்றும் ஈகுவடார் அணிகள் சமபலம் கொண்ட அணிகள் என்பதாலும் இந்த போட்டியில் கத்தார் வெற்றிபெறும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

இந்தோனேசியா நிலநடுக்கம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

nakkheeran : இந்தோனேசியாவில் கடந்த சில வருடங்களில் எப்போதும் இல்லாத வகையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.  இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா பகுதியில் இன்று மாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.6 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 56 பேர் பலியாகியுள்ளதாகவும், 700 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகியுள்ளதாகவும், மக்கள் வீடுகள் இன்றி சாலையோரங்களில் தவிப்பதாகவும் அந்நாட்டுச் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக சியாஞ்சுர் நகரம் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிவிரைவு மீட்புப் படையினர் அங்கு முகாமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அவதூறு வழக்கு.. கிஷோர் கே சுவாமி கைது.. முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்டதால் போலீஸ்....

 tamil.oneindia.com - Vigneshkumar  :  சென்னை: அரசியல் விமர்சகர் கிஷோர் கே சுவாமி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக போலீசார் முக்கிய நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
அரசியல் விமர்சகர் கிஷோர் கே சுவாமி தனது சமூக வலைத்தளங்களில் பதிவிடும் கருத்துகள் தொடர்ச்சியாகச் சர்ச்சையைக் கிளப்பும் வகையில் இருந்து வருகிறது.
ஏற்கனவே இது தொடர்பாக அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையே தமிழக போலீசார் இன்று காலை அவரை கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அரசியல் விமர்சகரான கிஷோர் கே சுவாமி சமூகவலைத்தளங்களில் அவதூறு பரப்பிய வழக்கில் ஏற்கனவே கைதாகி, விடுவிக்கப்பட்டு இருந்தார்.

6 பேர் விடுதலை - காங்கிரஸ் கட்சியும் மறுசீராய்வு மனு தாக்கல் செய்கிறது

 மாலை மலர்  :  புதுடெல்லி:ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நளினி உள்ளிட்ட 6 பேரை உச்ச நீதிமன்றம் விடுவித்தது. 6 பேரில் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் ஏற்கனவே பரோலில் இருந்தனர். ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 2 பேர் புழல் சிறையிலும், சாந்தன், முருகன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து அவர்கள் 6 பேரும் மறுநாளே விடுதலை செய்யப்பட்டனர். சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோர் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த தீர்ப்பை தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகள் ஆதரித்து வரவேற்றன. இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ரிலீஸ் ஆன மறுநாளே .. கலகத்தலைவன் வசூலில் ஏற்பட்ட சிக்கல்

kalaga-thalaivan-movie

cinemapettai.com -  ByHashini  :  நடிகர், அரசியல்வாதி, தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட உதயநிதி ஸ்டாலின் தற்போது பல திரைப்படங்களை தனது ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக திரையரங்குகளுக்கு விநியோகம் செய்து வருகிறார்.
இப்படி அரசியலிலும் சினிமாவிலும் செல்வாக்காக இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் புதிய படமான கலகத் தலைவன் திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆன உடனே இணையத்திலும் ரிலீஸ் ஆகி பட குழுவை பதற வைத்திருக்கிறது. இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து முடித்த கலகத் தலைவர் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.

ஞாயிறு, 20 நவம்பர், 2022

மங்களூரு ஆட்டோ குக்கர் குண்டு வெடிப்பு - குற்றவாளிக்கு கோவையில் தொடர்பு வெளியானது

தினத்தந்தி  : கர்நாடகா: ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்த சம்பவம்; வெளியான பரபரப்பு தகவல்
கர்நாடகாவில் மங்களூருவில் ஆட்டோ ஒன்றில் குக்கர் குண்டு வெடித்த சம்பவத்தில் குற்றவாளிக்கு தமிழகத்துடன் தொடர்பு உள்ள விவரம் தெரிய வந்துள்ளது.
கர்நாடக மாநிலம் நாகுரி பகுதியில் நேற்று மாலை ஆட்டோவில் மர்ம பொருள் ஒன்று வெடித்தது. சிறிது நேரத்தில் ஆட்டோவிலும் தீப்பிடித்தது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவரும், ஒரு பயணியும் பலத்த காயம் அடைந்தனர்.

மலேசியா தேர்தல்: தொங்கு நாடாளுமன்றம்- முதல் முறையாக கூட்டணி அரசு! மாஜி பிரதமர் மகாதீர் ஷாக் தோல்வி!

tamil.oneindia.com  -  Mathivanan Maran  : கோலாலம்பூர்: மலேசியா பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தொங்கு நாடாளுமன்றம் அமைந்துள்ளது. மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் அதிர்ச்சித் தோல்வி அடைந்துள்ளார். கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக மகாதீர் தேர்தல் தோல்வியை எதிர்கொண்டுள்ளார்.
மலேசியாவில் 15-வது பொதுத்தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. மலேசியாவின் 222 நாடாளுமன்ற தொகுதிகளில் 2 இடங்களில் மட்டும் தேர்தல் நடைபெறவில்லை. மொத்தம் 220 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்காத நிலையில் தொங்கு நாடாளுமன்றம் அமைந்துள்ளது.
மலேசியா தேர்தல் முடிவுகள்

தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் வாசு ஆபீஸ் முன் நடிகை நடிகை சுனிதா போயோ நிர்வாண போராட்டம் D

latest tamil news

dinamalar.com : ஹைதராபாத்-'சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி என்னை ஏமாற்றி விட்டார்' என கூறி, தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் வாசு அலுவலகம் முன், நிர்வாண போராட்டம் நடத்திய நடிகையை போலீசார் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர்.
தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவரான வாசு, பல படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், ''தயாரிப்பாளர் வாசு, சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி என்னை ஏமாற்றி விட்டார்,'' என நடிகை சுனிதா போயோ என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பல மின்இணைப்பு வைத்துள்ளவர்கள் ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம்: மின்வாரிய அதிகாரிகள்

hindutamil.in  : பல மின்இணைப்பு வைத்துள்ளவர்கள் ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம்: மின்வாரிய அதிகாரிகள் விளக்கம் | Multiple Connection Holders Can Link Same Aadhaar Number: Electricity Authority - hindutamil.in
சென்னை: ஒன்றுக்கும் மேற்பட்ட மின்இணைப்புகளை வைத்திருக்கும் நுகர்வோர் தங்கள் ஆதார் எண்ணை இணைக்க முடியுமா என்பதற்கு மின்வாரிய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
தமிழகம் மின்வாரியம் நுகர்வோர்களின் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தெரிவித்துள்ளது. அத்துடன், இதற்கான பணியையும் தொடங்கியுள்ளது. இதன்படி, ஆதார் எண்ணை இணைக்குமாறு மின்நுகர்வோரின் பதிவு செய்துள்ள செல்போன் எண்களுக்கு மின்வாரியம் குறுஞ்செய்தி அனுப்பி வருகிறது.
சில மின்நுகர்வோர் ஒரு வீட்டுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மின்இணைப்பை பெற்றுள்ளனர். மேலும், சிலர் ஒரே பெயரில் நான்கைந்து வாடகை வீடுகளுக்கு மின்இணைப்பை பெற்றுள்ளனர். இந்நிலையில், மின்நுகர்வோர் தங்கள் பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மின்இணைப்புகளுக்கு ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம் என மின்வாரிய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

சவுக்கு சங்கர் சிறையில் இருந்து வெளியே வந்தார்!


tamil.samayam.com :  நீதித்துறையில் ஊழல் நிறைந்து இருப்பதாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட அரசியல் விமர்சகரும், பத்திரிகையாளருமான சவுக்கு சங்கர் இது தொடர்பாக சில யூடியூப் சேனல்களுக்கும் பேட்டியும் அளித்திருந்தார். இதையடுத்து, அவர் மீது ஏன் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும், சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.

இலங்கை பாடசாலை மாணவர்களிடையே தொழுநோய் அதிகரிப்பு: எதிர்ப்பு பிரசாரம் ஆரம்பம்!

 hirunews.lk  :  பாடசாலை மாணவர்களிடையே தொழுநோய் பரவும் அபாயம் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தொழுநோய் எதிர்ப்பு பிரசார அணியின் பணிப்பாளர் மருத்துவர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.
தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய பாடசாலை மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட நாடு தழுவிய திட்டத்தைத் தொடர்ந்து தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்கள் (CDC) வெளியிட்டுள்ள தரவுகளின் படி 95% மனிதர்கள் தொழுநோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் நோயெதிர்ப்பு தன்மையை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே "இலங்கையில் இரண்டு வகையான தொழுநோய்கள் பரவுகின்றன. அவை தொற்றக்கூடியவை மற்றும் தொற்றாதவை என பாகுபடுத்தப்பட்டுள்ளன.

கோயம்புத்தூரில் குவியும் வெளிநாட்டு நிறுவனங்கள்.. அமெரிக்கா முதல் சிங்கப்பூர் வரை..!

அலுவலகம் மற்றும் கமர்சியல் ரியல் எஸ்டேட்
tamil.goodreturns.in-  Prasanna Venkatesh  : தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக அனைத்து துறையிலும் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மாநிலமாகக் கோயம்புத்தூர் விளங்குகிறது.
குறிப்பாகக் கொரோனா தொற்றுக்குப் பின்பு கோயம்புத்தூர் ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது என்றால் மிகையில்லை.
கடந்த சில வருடங்களாக இந்தியாவில் இருக்கும் நிறுவனங்கள் தான் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், திறமையான ஊழியர்களைப் பெற வேண்டும் என்பதற்காகவும், பல்வேறு செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காகக் கோயம்புத்தூரில் தனது அலுவலகத்தைத் திறந்து வந்தது, ஆனால் தற்போது நிலைமை மாற்றியுள்ளது.