தினமலர் :
புதுடில்லி: நாட்டின் ஒரே மொழியாக ஹிந்தி இருந்தால், உலக அளவில்
இந்தியாவை பிரபலப்படுத்த முடியும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா
கூறியுள்ளார்.
ஹிந்தி தினத்தை முன்னிட்டு, அமித்ஷா டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:
இந்தியா வெவ்வேறு மொழிகளை கொண்ட நாடு, ஒவ்வொரு மொழிக்கும், முக்கியத்துவம் உண்டு. ஆனால், ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஒரு மொழி இருப்பது அவசியம். நாட்டின் ஒரே மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும். இதன் மூலம், உலக அளவில், இந்தியாவை பிரபலபடுத்த முடியும்.
ஹிந்தி தினத்தை முன்னிட்டு, மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். நம் தாய்மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். அத்துடன், ஹிந்தி மொழியை கற்று கொள்ள வேண்டும். இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.