சனி, 19 நவம்பர், 2022

காசி சங்கமம் நிகழ்ச்சியில் இளையராஜா இசை நிகழ்ச்சி- ரசித்து மகிழ்ந்தார் பிரதமர் மோடி

மாலை மலர்  :  காசி சங்கமம் நிகழ்ச்சியில் இளையராஜா இசை நிகழ்ச்சி- ரசித்து மகிழ்ந்தார் பிரதமர் மோடி
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா பேசும் போது கூறியதாவது:
காசியில் பாரதியார் 2 ஆண்டுகள் கல்வி பயின்றிருக்கிறார். காசியில் படித்து கற்றுக் கொண்ட விஷயங்களை பாடுகையில், புலவர் பேச்சுக்களை காசியில் கேட்க கருவி செய்வோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா முன்னேற்றம் அடையாத நேரத்தில் பாரதியார் இதை பாடியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் வில்சன் எம்.பி கோரிக்கை.. சுங்கச்சாவடி கட்டணத்தை 40% குறைக்க ஒன்றிய அரசு முடிவு !

kalaignarseithigal.com  - Prem Kumar  :  தமிழ்நாடு நாடாளுமன்றத்தில் வில்சன் எம்.பி வைத்த கோரிக்கை.. சுங்கச்சாவடி கட்டணத்தை 40% குறைக்க ஒன்றிய அரசு முடிவு !
நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தி.மு.க எம்.பி.க்கள் பல்வேறு மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை ஒன்றிய அரசு செய்து தரும்படி வலியுறுத்தினர். அதன்படி தி.மு.க மாநிலங்களவையில் எம்.பி பி.வில்சன் நாடு மழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக வாகனப் பதிவின் போதே ஒருமுறை சிறிய அளவிலான கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்திருந்தார்.

பிரியா மரணம் - மருத்துவர்களை கைது செய்தால் மாநிலம் முழுவதும் போராட்டம்: அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு

hindutamil.in/ : சென்னை: மாணவி பிரியா மரண வழக்கில் மருத்துவர்களை கைது செய்தால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவோம் என்று அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள இரண்டு மருத்துவர்களை, மூன்று தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவர்களை கைது செய்தால் மாநிலம் முழுவதும் தீவிரமாக போராட்டம் நடத்துவோம் என்று அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

எம்.ஜி.ஆரின் ஆளுமை வெளிப்பட்ட நிகழ்வுகளின் கதை - வரலாறு முக்கியம் அமைச்சரே

ஆதனூர் சோழன் : எம்.ஜி.ஆரைப் பற்றிய கதைகளின் உண்மையை அம்பலப்படுத்தும் முயற்சி... கடந்த கால வரலாறு மிகவும் முக்கியம். சில கட்டமைக்கப்பட்ட கதைகளை கட்டுடைக்கும் வீடியோ

ஓமானில் விற்கப்பட்ட மகள்; தாய் கண்ணீர்

தமிழ் மிரர்  : எனது மகளை டுபாயில் வேலைவாய்ப்பை பெற்று தருவதாக தெரிவித்து ஓமானுக்கு கொண்டு சென்று விற்பனை செய்துள்ளனர் என தாய் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் தமது மகளை மீட்டுத்தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு – ஓட்டமாவடி, பாலைநகரைச் சேர்ந்த 51 வயதுடைய 5 பிள்ளைகளின் தாயாரான முகமது இஸ்மாயில் சித்திக்நிசா இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
2 வயது குழந்தையின் தாயாரான 22 வயதுடைய முகமது அஸீம் பாத்திமா ஹமீதியாவை கணவர் விட்டுச் சென்ற நிலையில், வறுமையின் காரணமாக அவர் வெளிநாட்டுக்கு வீட்டு பணிபெண்ணாக செல்வதற்கு முடிவு செய்து களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த தரகர் ஒருவர் மூலம் கொழும்பிலுள்ள ஏஜென்சிக்கு கடவுச் சீட்டை வழங்கியள்ளார்.

ஆர்டர்லி முறை: சிஆர்பிஎப் அதிகாரிகள் மீது நடவடிக்கை!

மின்னம்பலம்  : Kalai :  ஆர்டர்லி முறை: சிஆர்பிஎப் அதிகாரிகள் மீது நடவடிக்கை!
ஆர்டர்லி  முறையை பின்பற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை  அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட காவலர் முத்து என்பவர் மனு ஒன்றை  தாக்கல் செய்திருந்தார்.
மனுவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் கடந்த 2004 ஆம் ஆண்டு கான்ஸ்டபிள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டதாகவும் ஜார்கண்ட் மாநிலத்தில் வேலை பார்க்கும் போது தனது உயர் அதிகாரி தன்னை ஆர்டர்லி வேலை பார்க்க உத்தரவிட்டதாகவும் ஆனால் அதற்கு தான் மறுப்பு தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

திமுக நிர்வாகிகள் குமுறல்! அரசின் நியமனங்கள்

 minnambalam.com - Prakash : டிஜிட்டல் திண்ணை: அரசின் நியமனங்கள்- திமுக நிர்வாகிகள் குமுறல்!
வைஃபை ஆன் செய்தவுடன் இன்ஸ்டாவில்  சில துண்டு வீடியோக்கள் வந்தன.
 சில வாரங்களுக்கு முன் திருச்சியில் அமைச்சர் நேரு, ‘தமிழக அதிகாரிகள் மத்திய அரசுக்கு பயப்படுகிறார்கள்’ என்று பேசிய வீடியோவும் சில நாட்களுக்கு முன் வேலூரில் அமைச்சர் துரைமுருகன் பேசியபோது,
 ’சில அதிகாரிகளுக்கு நாம் வந்ததே இன்னும் பிடிக்கவில்லை. அவர்களை நாங்கள் வெறுக்க முடியாது.
ஒரு பிடிஓவிடமே நீங்கள் இவ்வளவு பாடுபடுகிறீர்கள் என்றால் நாங்கள் எப்படி பாடுபடுவோம்?  
நீங்களும் நாங்களும் இல்லாமல் ஆட்சி இல்லை. இந்த ஆட்சி வந்து ஒன்றரை ஆண்டாகிறது. அந்த லகான் எங்களிடம் சரியாக வரவி்ல்லை. ஆளுநர் வேறு லகானை பிடித்துக்கொண்டார்.   இல்லாவிட்டால் எவ்வளவோ செய்திருப்போம்’ என்று ஆட்சி நிர்வாகத்தில் அதிகாரிகளால் ஏற்படும்  சங்கடங்களை சில நாட்களுக்கு முன் அமைச்சர் நேரு பேசியதைப் போல வெளிப்படையாக பேசினார் துரைமுருகன்.

அமைச்சர்களுக்குள் மோதல்: கூட்டு உறவை உடைத்த கூட்டுறவுத்துறை

dinamalar.com  : மதுரை: கூட்டுறவுத்துறை செயல்பாடுகளில் திருப்தி இல்லை என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ‛ரேஷன் கடை பக்கமே போகாத தியாகராஜன் திருப்தி அடையலைனா எனக்கு கவலையில்லை' எனத் தெரிவித்துள்ளார்.
ஒரே கட்சிக்குள் அமைச்சர்களுக்குள் இருக்கும் மோதல் கருத்துகளால் திமுக தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது.
மதுரையில் நடைபெற்ற கூட்டுறவு வார விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கூட்டுறவுத்துறையை கடுமையாக விமர்சித்து பேசினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: மக்களுக்கு சேவை செய்யும் துறையாக கூட்டுறவுத்துறையை மாற்ற வேண்டும்.

அமெரிக்காவில் சீன காவல் நிலையங்கள் - கவலையில் எஃப்பிஐ புலனாய்வாளர்கள்

BBC :   : சீனாவுடன் தொடர்புடைய ரகசிய "காவல் நிலையங்கள்" அமெரிக்கா முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன என்ற தகவலால் அந்நாட்டின் புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ கவலை" கொண்டுள்ளது.
Safeguard Defenders என்ற அரசு சாரா அமைப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்ட அறிக்கையில், இத்தகைய ரகசிய நிலையங்கள், நியூயார்க் உட்பட உலகம் முழுவதும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஃப்பிஐ இயக்குநர் கிறிஸ்டோபர் ரே, இது தொடர்பாக அமெரிக்க மூத்த அரசியல்வாதிகளிடம் பேசும்போது, நாடு முழுவதும் இதுபோன்ற மையங்கள் இருப்பதாக கூறப்பட்டும் சேஃப் டிஃபண்டர்ஸ் அறிக்கையைஎஃப்பிஐ கண்காணித்து வருவதாக தெரிவித்தார்.

இந்தியர்கள் சவுதி அரேபியா விசா பெற போலீஸ் அனுமதிச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியதில்லை

மாலை மலர்  : ரியாத்:  சவுதி அரேபியாவிற்கு பயணம் செய்வதற்கான விசா பெற இந்திய குடிமக்கள் இனி போலீஸ் அனுமதி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியதில்லை என அந்நாட்டு தூதரகம் அறிவித்துள்ளது.
இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற இரு நாடுகளின் முயற்சியின் ஒரு பகுதியாக சவுதி விசாவிற்கு போலீஸ் அனுமதி ஆவணம் தேவையில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சவுதி அரேபியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வலுவான உறவுகள் மற்றும் மூலோபாய கூட்டுறவைக் கருத்தில் கொண்டு, போலீஸ் அனுமதிச் சான்றிதழைச் சமர்ப்பிப்பதில் இருந்து இந்திய குடிமக்களுக்கு விலக்கு அளிக்க சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது என கூறப்பட்டுள்ளது.
 

ஐன்ஸ்டீன்-ஹாக்கின்ஸ் IQ அளவை முறியடித்த இலங்கைச் சிறுமி அரியானா தம்பரவெஹேவா

  தினக்குரல்   இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட பிரித்தானிய பிரஜையான அரியானா தம்பரவெஹேவா என்ற 10 வயது சிறுமி மீது முழு உலகத்தின் கவனமும் குவிந்துள்ளது.
அல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் ஆகியோரின் IQ அளவை தாண்டியதன் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார் அரியானா எனும் சிறுமி. இவர் தனது பெற்றோருடன் ஹடர்ஸ்ஃபீல்டில் வசிக்கிறார்.
ஹடர்ஸ்ஃபீல்டில் உள்ள செயின்ட் பேட்ரிக் கத்தோலிக்கப் பாடசாலையில் படிக்கும் அரியானா, மென்சா ஐக்யூ பரீட்சையில் பங்கேற்று 162 புள்ளிகளைப் பெற்றார். அல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் IQ 160 என மதிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளி, 18 நவம்பர், 2022

மயக்கமருத்து கொடுக்காமல் பெண்களுக்கு அறுவை சிகிச்சை.. பீகார் மருத்துவர்!

Kalaignar Seithigal -  KL Reshma  இந்தியா 24 பெண்களுக்கு மயக்கமருந்து கொடுக்காமல் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொண்ட தன்னார்வ அமைப்பை சேர்ந்த மருத்துவர்களின் செயல் அதிர்ச்சி சம்பவம் பீகாரில் நடைபெற்றுள்ளது.
24 பெண்களுக்கு மயக்கமருந்து கொடுக்காமல் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொண்ட தன்னார்வ அமைப்பை சேர்ந்த மருத்துவர்களின் செயல் அதிர்ச்சி சம்பவம் பீகாரில் நடைபெற்றுள்ளது.
பீகார் மாநிலம் ககாரியா என்ற பகுதியில் பார்பட்டா, அலுவாலி என்ற இரண்டு அரசு ஆரம்ப பொது சுகாதார மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தனியார் அமைப்பான Global Development என்ற தன்னார்வ அமைப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொண்டது.

பாலியல் இன்பத்தை அனுபவிக்க வாழ்நாள் முழுவதும் உரிமை உண்டு - சீமா ஆனந்த்

bbc : பாலியல் கல்வியாளர் சீமா ஆனந்த், வயதான பிறகு உடல் உறவு மற்றும் பெண்களின் பாலியல் இன்பம் தொடர்பான விஷயங்களில் இருக்கும் கட்டுப்பாடுகளை உடைப்பதை நோக்கமாக கொண்டுள்ளார்.

பெட்ரோல் குண்டு வீசி ஊராட்சி மன்றத் தலைவர் வெட்டி கொலை.. காஞ்சிபுரம் மாவட்டம்

Panchayat council president incident kanchipuram police investigation

  நக்கீரன் : காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் அருகே உள்ள மாடம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராக வெங்கடேசன் என்பவர் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில்,
நேற்று (17/11/2022) இரவு அவரது தொலைபேசிக்கு அழைப்பு வந்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து, ராகவேந்திரா பாலம் அருகே வெங்கடேசன் வந்த போது, அங்கு மறைந்திருந்த கும்பல் அவர் மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்கியுள்ளது.

அரசு மருத்துவ கல்லூரிகளில் சிறப்பு படிப்புகளுக்கான 50 சதவீத ஒதுக்கீடு நிறுத்தி வைப்பு- உயர்நீதிமன்றம்...

 மாலை மலர்  ; தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் சிறப்பு படிப்புகளில், அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு,
2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,
2021-22-ம் கல்வியாண்டுக்கு 50 சதவீத இடங்களுக்கு தமிழக அரசு கலந்தாய்வு நடத்த அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில், நடப்பு 2022-23-ம் கல்வியாண்டுக்கு மொத்தமுள்ள 100 சதவீத இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்துவது குறித்து மத்திய அரசின் பொது சுகாதார பணிகள் தலைமை இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டார். இதை எதிர்த்து அரசு மருத்துவர்கள் ஸ்ரீஹரி பிரசாந்த் உள்பட இருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். தமிழக அரசு 2020-ம் ஆண்டு பிறப்பித்த அரசாணையின் அடிப்படையில் 50 சதவீத இடங்களை அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கி, கலந்தாய்வு நடத்த உத்தரவிடக் கோரி அவர்கள் மனுவில் கோரியிருந்தனர்.

சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்க கேரள அரசு மீண்டும் முயற்சி; பா.ஜ.க. மாநில தலைவர் குற்றச்சாட்டு

தினத்தந்தி  :சபரிமலையில் சாமி தரிசனத்திற்கு இளம்பெண்களை அனுமதிக்க கேரள அரசு மீண்டும் முயற்சி செய்வதாக பா.ஜ.க. மாநில தலைவர் சுரேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார்.
சபரிமலை தரிசனத்திற்கு இளம்ெபண்களை அனுமதிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதனை நடைமுறைப்படுத்தியது.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கேரளாவில் பல இடங்களில் போராட்டம் வெடித்து வன்முறை ஏற்பட்டது. இதற்கிடையே தற்போது இதுதொடர்பான வழக்கு விசாரணை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் உள்ளது.இந்தநிலையில் சபரிமலையில் போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள ைகயேட்டில், சபரிமலைக்கு வரும் அனைவரையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

சவுக்கு சங்கர் 3ஆவது முறையாக கைது!

Breaking | விடுதலையான சவுக்கு சங்கர் மீண்டும் கைது | Thamarai TV - YouTube

minnambalam.com  -  Kavi  ; சவுக்கு சங்கர் மீதான நான்கு வழக்குகளில் அவருக்கு இன்று (நவம்பர் 17) சென்னை எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், வேறு ஒரு வழக்கில் அவரை கைது செய்ய நேற்றே மத்திய புலனாய்வு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
நீதிமன்றம் குறித்து அவதூறாகப் பேசியதாகச் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் கடலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்ட அவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கைக் கடந்த 11ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம் அவர் மீதான தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
ஆனால், சவுக்கு சங்கர் மீது 2020ல் பதிவு செய்யப்பட்ட மூன்று வழக்குகளையும், 2021ல் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கையும் தமிழக போலீஸ் தூசு தட்டி எடுத்தது.

பிரதமர் மோடியின் குடும்பம் சேர்த்த சொத்துக்கள் ..விரிவான பட்டியல்

 Kundrathu Murugaraj : "மோடி ஜி" - யின், குடும்பத்தைப் பற்றி தேடி கண்டறிந்த சில சுவாரஸ்யமான தகவல்கள்.!!
1. சோமாபாய் மோடி (75 வயது) ஓய்வு பெற்ற மாநில சுகாதார துறை அதிகாரி - தற்போது குஜராத் மாநில பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர்.!.
2. அமிர்தபாய் மோடி (72 வயது) முன்பு ஒரு தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர், தற்போது அகமதாபாத் மற்றும் காந்திநகரில், மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தொழிலதிபர்.!.
3. பிரஹ்லாத் மோடி (64 வயது) ஒரு ரேஷன் கடை வைத்திருந்தவர், தற்போது இவர் வசம் ஹூண்டாய், மாருதி மற்றும் ஹோண்டா போர் வீலர், ஷோ ரூம்கள் வதோதரா மற்றும் அகமதாபாத்தில் உள்ளன.!.
4. பங்கஜ் மோடி (58 வயது) முன்னதாக மாநில தகவல் துறையில் வேலை செய்தவர். இன்று சோமா பாய் உடன் மாநில பணியாளர் தேர்வாணையத்திற்கு, துணைத் தலைவராக உள்ளார்.!.

சவுக்கு சங்கர் மீதான 4 வழக்குகளில் ஜாமீன்: எப்போது விடுதலை?

வெப்துனியா  :  சவுக்கு சங்கர் மீது பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளில் அவருக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து அவர் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 பிரபல பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கருக்கு ஆறு மாதம் மதுரை ஐகோர்ட்டு கிளை சிறை தண்டனை விதித்த நிலையில் அந்த சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் சவுக்கு சங்கர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் அவரது தண்டனையை நிறுத்தி வைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த நிலையில் அவர் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அவர் 4 வழக்குகள் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்

6 பேர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல்.. ராஜீவ் காந்தி கொலை வழக்கு: நளினி உட்பட..

vikatan.com -  சி. அர்ச்சுணன்  :  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைதண்டனை அனுபவித்துவந்த எழுவரில், பேரறிவாளனைக் கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. அதைத்தொடர்ந்து நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களை விடுதலை செய்யுமாறு தமிழக அரசின் தீர்மானத்தை மேற்கோள்காட்டி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
ஆறு பேர் விடுதலை
அதையடுத்து நீண்ட நாள்களுக்குப் பிறகு, நளினி உட்பட மற்ற ஆறு பேரையும் விடுதலை செய்யலாம் என்று நவம்பர் 11-ம் தேதியன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. பின்னர் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நளினி, முருகன் ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், சாந்தன் ஆகியோர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

வியாழன், 17 நவம்பர், 2022

மேற்கு வங்க புதிய ஆளுநராக சி.வி.ஆனந்த போஸ் நியமனம்!

மாலை மலர் :  இல.கணேசன் மேற்கு வங்காள ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார்.
புதிய ஆளுநராக சி.வி.ஆனந்த போஸ் விரைவில் பதவியேற்க உள்ளார்
புதுடெல்லி: மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜெகதீப் தங்கர் பாஜக சார்பில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த தேர்தலில் அவர் போட்டியிடுவது பற்றி முறைப்படி அறிவிப்பு வெளியானதும்,
அவர் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, மணிப்பூர் ஆளுநரான இல.கணேசன் மேற்கு வங்காள ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் புதிய ஆளுநராக சி.வி.ஆனந்த போஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய ஆளுநரை நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார். விரைவில் புதிய ஆளுநர் பதவியேற்க உள்ளார்.

நீலகிரியில் Tantea தொழிலாளர்களுக்கு 573 வீடுகள்.. பயனாளர் பங்களிப்பு தொகையை அரசே ஏற்கும்” : சொன்னதை செய்து காட்டிய முதல்வர் !

kalaignarseithigal.com - Prem Kumar  :  தமிழ்நாடு   “நீலகிரியில் 573 வீடுகள்.. பயனாளர் பங்களிப்பு தொகையை அரசே ஏற்கும்” : சொன்னதை செய்து காட்டிய முதல்வர் !
“தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வீடுகள் ஒதுக்கீட்டில், பயனாளர் பங்களிப்புத் தொகையை அரசே ஏற்கும்!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களுக்காக, 1968ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வனத்துறை மூலம் நீலகிரி மாவட்டத்தில் ‘அரசு தேயிலைத் தோட்டம் திட்டம்’ தொடங்கப்பட்டது.  இத்திட்டத்தினை செம்மைப்படுத்திட 1976 ஆண்டு, அப்போது முதலமைச்சராகப் பதவி வகித்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் (TANTEA) என்ற நிறுவனம் தொடங்கப்பட்டு, நிறுவனங்களின் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகிறது.               

புலிகள் கொலை செய்து புதைத்த 170 முஸ்லிம்கள்: மத முறைப்படி நல்லடக்க செய்யக் கோரிக்கை - BBC News தமிழ்

நஸீலா

BBC News தமிழ்  -      எழுதியவர், யூ.எல்.மப்றூக் -     பதவி, பிபிசி தமிழுக்கா - நஸீலா  படக்குறிப்பு,
சம்மாந்துறையில் தையற்கடை நடத்தி வந்த ஹபீபுர் றஹ்மான் எனும் தமது குடும்பத்தின் மூத்த சகோதரர், குருக்கள் மடத்தில் புலிகளால் கடத்திப் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறுகின்றார் நஸீலா.
மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் பிரதேசத்தில் வைத்து கடத்தி, படுகொலை செய்து, அங்கேயே புதைக்கப்பட்ட சுமார் 170 முஸ்லிம்களின் உடல்களையும் தோண்டியெடுத்து, இஸ்லாமிய முறைப்படி மீளவும் அடக்கம் செய்வதற்கு சிபாரிசு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் 'காத்தான்குடி பள்ளிவாயில்கள், முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம்' இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது. மேற்படி ஆணைக்குழு முன்பாக - காத்தான்குடி பள்ளிவாயில்கள், முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் ஏ.எம்.எம். ரஊப் இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளார்.

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீதான வழக்கு ரத்து!

 minnambalam.com - Kalai   : சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
1996 ஆம் ஆண்டில் குரோம் தோல் தொழிற்சாலை தலைவராக இருந்த, தற்போதைய திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன், 1.55 ஏக்கர் நிலத்தை, நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டத்தின் விதிகளை மீறி, 41 பயனாளிகளுக்கு பிரித்துக் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக குவிட்டன்தாசன் என்பவர் அளித்த புகார் தொடர்பாக சிபிசிஐடி போலீசார், நில அபகரிப்பு, போலி ஆவணங்கள் தயாரித்தது என இரண்டு வழக்குகளை பதிவு செய்தனர்.
இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி ஜெகத்ரட்சகன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி இளந்திரையன், ஜெகத்ரட்சகன் மீதான இரண்டு வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.-அ.தி.மு.க. கூட்டணிகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு?

 மாலைமலர் : சென்னை பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் இப்போதே கூட்டணிகளை நோக்கி நகர தொடங்கி விட்டன.
தேர்தல் நேரங்களில் கூட்டணி கட்சிகள் மாறுவது வழக்கமானது தான். இந்த மாற்றங்களுக்கு திரை மறைவு ரகசியங்கள், வெளிப்படையான பிரச்சினைகள் காரணமாக அமையும்.
கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதாவும், தி.மு.க.வுடன் காங்கிரசும் சேர்ந்தன. இந்த கூட்டணி 2021 சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்தன.
இதில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளும் இடம்பெற்றன.
தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையில் கூட்டணிகளில் மாற்றங்கள் வரலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் காங்கிரசுக்கு 'சீட்'களை கேட்டு பெறுவதே பெரும் போராட்டமாக இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை மத்தியில் ஆட்சியை பிடிப்பதற்கான தேர்தல் என்பதால் கூடுதல் தொகுதியை காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. ஆனால் அந்த அளவுக்கு தொகுதிகளை விட்டுக்கொடுக்க தி.மு.க. முன்வராது.

சீன அதிபர் கனடா பிரதமர் நேருக்கு நேர் மோதல்! “உங்களிடம் நேர்மை இல்லை” முகத்திற்கு நேராக குற்றம்சாட்டிய சீன அதிபர்

பிபிசி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் சீன அதிபர் ஷி ஜின்பிங் முகத்துக்கு நேராகக் குற்றம் சாட்டிப் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த அரிய சம்பவம் இந்தோனீசியாவின் பாலி நகரில் தற்போது நடந்து முடிந்துள்ள ஜி20 அமைப்பின் உச்சி மாநாட்டின்போது நிகழ்ந்தது.
மாநாட்டின்போது இரண்டு தலைவர்களும் மூடிய அறைக்குள் பேசிக்கொண்ட விஷயங்கள் ஊடகங்களில் கசிந்தது குறித்து சீன அதிபர் ஷி ஜின்பிங் மொழிபெயர்ப்பாளர் உதவியோடு குற்றம் சாட்டிப் பேசினார்.
கனடா தேர்தலில் சீனா உளவு பார்த்ததாகவும் தலையீடு செய்ததாகவும் கூறப்படுவது குறித்து இந்தப் பேச்சுவார்த்தையின்போது ட்ரூடோ பேசியதாக செய்திகள் வெளியாயின.
இந்த செய்திகள் பற்றிக் குறிப்பிட்டு தனது ஆட்சேபனையை வெளிப்படுத்தியுள்ளார் ஷி ஜின்பிங்.

மார்வாடிகள் கைகளில் தமிழ்நாடு வர்த்தகம்?

 M S Rajagopal  :   தங்கம், தங்க நகைகள் மொத்த வியாபாரம் என்எஸ்சி போஸ் ரோடு செளகார்பேட்டை மார்வாடிகள் குஜராத்திகள் கையில் இருக்கிறது.
வைரம் நவரத்தினங்கள் மொத்த வியாபாரம் குஜராத்திகள் கையில் இருக்கிறது.
எவர்சில்வர் தகடுகள் மொத்த வியாபாரம் தேவராஜ் முதலி தெரு மார்வாடிகள் கையில் இருக்கிறது.
மருந்து வகைகள் நைனியப்ப நாய்க்கன் தெரு மார்வாடிகள் கையில் இருக்கிறது.
கெமிக்கல்கள் கோவிந்தப்ப நாய்க்கன் தெரு மார்வாடிகள் கையில் இருக்கிறது.
ஜவுளி வகைகள் கோடவுன் தெரு மார்வாடிகள் கையில் இருக்கிறது.
மின்சார சாதனங்கள் காசி செட்டித் தெரு மார்வாடிகள் கையில் இருக்கிறது.
நட் போல்ட் ஃபேசனர்ஸ் சிறு சிறு இயத்திர வகைகள் வெல்டிங் ராடுகள் போன்ற தொழிற்சாலைகளுக்குத் தேவையான ஹார்ட்வேர் பொருட்கள் பிராட்வே போரா முஸ்லிம்கள் கையில் இருக்கிறது.
மார்பிள் டைல்ஸ் பாத்ரும் ஃபிட்டிங்ஸ் சானிட்டரி வேர்கள் மார்வாடிகள் கையில் இருக்கிறது.

14 ராமேஸ்வரம் மீனவர்கள் நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையால் கைது ..

tamil.samayam.com  :  ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆழ்கடலில் மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
எல்லை தாண்டி வந்ததாகக் கூறி மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தி, மீன்களை எடுத்துக் கொண்டு அவர்களை விரட்டி அடிப்பதும், விசைப்படகுகளுடன் மீனவர்களை சிறை பிடிப்பதும் வாடிக்கையாகவே இருந்து வருகிறது.
இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அரசிடம், தமிழக அரசு சார்பில் பல முறை கடிதம் வாயிலாகவும், நேரடியாகவோ வலியுறுத்தப்பட்டு விட்டது.
எனினும், இலங்கை கடற்படையின் அத்துமீறல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

ஷ்ரத்தா கொலை ..ஒரு சுதந்திர போராட்டக்காரியின் வாழ்வு கோரமாய் முடிந்திருக்க வேண்டாம்.

May be an image of 3 people, beard, sunglasses and outdoors

Hariharasuthan Thangavelu  ::இரு காரணுங்களுக்காக ஷ்ரதா கொலை தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. ஒன்று 35 துண்டுகளாக வெட்டப்பட்டு ப்ரிட்ஜில் வைத்த கொடூரம்.
இரண்டாவது கொலையாளி ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர். போதாதா !  
ஷ்ரதாவிற்காக வருந்துவர்களை விட அவனுடன் சென்றாயே, இது வேண்டும் என்று இரக்கமே இல்லாமல் கத்தி வீசுகிறார்கள். முதலில் வழக்கின் விபரங்களை பார்ப்போம்.
26 வயது ஷ்ரத்தா மும்பையை சார்ந்தவர். கல்லூரிப் படிப்பை இறுதியாண்டில் கைவிட்டு விட்டு ஐடி நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியாக பணிபுரிகிறார்.
அம்மாவின் மறைவிற்குப் பிறகு, அப்பாவுடன் இருக்கப் பிடிக்கவில்லை.

புதன், 16 நவம்பர், 2022

TENTEA தொழிலாளர்களுக்கு 650 வீடுகள் இலவசமாக கொடுக்கப்படும் செந்தில் தொண்டைமானிடம் முதல்வர் ஸ்டாலின் உறுதி

May be an image of 3 people, people standing, indoor and text that says 'GOVE'
மலையோரம் செய்திகள்:  தமிழக முதலமைச்சரை சந்தித்தார் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்!
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை,
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.
இலங்கை மக்களுக்கு கடந்த காலங்களில் தமிழக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மனிதாபிமான உதவித் திட்டங்களுக்கு செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்ததுடன்,
அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் தவிசாளர் ராமேஸ்வரன் ஆகியோர்  நன்றி தெரிவித்ததாகவும் இதன்போது தெரிவித்தார்.
மேலும் இலங்கையில் உள்ள மலையக மக்களுடைய பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்தியாவில் தமிழகத்தில் உள்ள  கூடலூரில் TENTEA நிறுவனத்தின் கீழ் வேலைசெய்யும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்த மலையக தமிழர்களை அவர்களது குடியிருப்புக்களில் இருந்து வெளியேருமாறு வனத்துறையினர் சட்டப்பூர்வ அறிவிப்பு வழங்கியுள்ள நிலையில்,

ஓசூரில் IPhone தொழிற்சாலை.. 53000 பேருக்கு வேலைவாய்ப்பு - இந்தியாவின் மிகப்பெரிய ஐபோன் உற்பத்தி! அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

 கலைஞர் செய்திகள் - லெனின் : தமிழ்நாடு இந்தியாவிலேயே மிகப்பெரிய i phone தயாரிப்பு தொழிற்சாலை ஓசூரில் தொடங்கப்பட உள்ளது என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்த பிறகு புதிய தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்கு பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் ஆட்சிக்கு வந்த 15 மாதத்திலேயே தமிழ்நாடு அரசு நடத்திய முதலீட்டு மாநாடுகள் மூலமாக 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

போலீசார் கும்பல் கும்பலாக கோவிலுக்கு குடும்பத்தினரை அழைத்து வருவதை தவிர்க்க வேண்டும் – அமைச்சர் எ.வ.வேலு கோரிக்கை

நக்கீரன் : போலீசார் கும்பல் கும்பலாக கோவிலுக்கு அழைத்து வருவதை தடுக்க வேண்டும் – அமைச்சர் எ.வ.வேலு கோரிக்கை
2022 ஆம் ஆண்டுக்கான திருவண்ணாமலை நவம்பர் 15 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்ட  கோவில் தீபத்திருவிழா ஆலோசனைக் கூட்டம்  மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.
இதில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மக்கள் பிரதிநிதிகள், அறநிலையத்துறையின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் சிறப்புரை நிகழ்த்திய அமைச்சர் எ.வ.வேலு, "மகாதீபத்தன்று கோவிலுக்குள் அளவுக்கு அதிகமாக போலீசார் இருப்பதாக எனக்கு கடந்த காலங்களிலேயே புகார்கள் வந்துள்ளன. காவலர்களும் மனிதர்கள்தான். அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்கிறேன். ஆனால், பாதுகாப்புப் பணிக்கு வந்த காவலர்கள் பொதுமக்களுக்கும், முக்கிய விருந்தினர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதை மறந்து, காவல்துறை அதிகாரிகளின் குடும்பத்தினர்களையும், அவர்களது உறவினர்களையும் கும்பல் கும்பலாக கோவிலுக்குள் அழைத்து வந்து தரிசனம் செய்கின்றனர்.

ஆப்கானில் பெண்களுக்கு எதிரான கடுமையான இஸ்லாமிய சட்டத்தை அமுல்படுத்தும்படி தலிபான் உத்தரவு

ஜாப்னா முஸ்லீம் : ஆப்கானிஸ்தானில் மரண தண்டனை, கல்லெறிதல், கசையடி மற்றும் திருட்டுக் குற்றத்திற்கு கையை வெட்டுதல் உட்பட முழுமையான இஸ்லாமிய சட்டத்தை அமுல்படுத்தும்படி உயர்மட்டத் தலைவர் நீதிபதிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக தலிபான் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நீதிபதிகள் குழுவொன்றை இரகசிமாகச் சந்தித்த உயர்மட்டத் தலைவர் ஹிபாதுல்லா அகுன்சாதா இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக பேச்சாளர் சபிஹுல்லா முஜாஹித் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஓகஸ்டில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின் பொது வெளியில் தோன்றாத அகுன்சாதா தலிபான்களின் பிறந்தகமான கந்தஹாரில் இருந்து உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

திராவிடர் என்ற இனம் இல்லை”- ஆளுநர் ரவி பேச்சு!

திராவிடம்' என்ற சொல்லைப் பார்த்தாலே மிரளும் பீதி ஆளுநர் ரவி பேச்சில்  வெளிப்படுகிறது: டி.ஆர்.பாலு | Dmk Mp TR Balu Condemn to Governor Rn Ravi -  Tamil Oneindia

minnambalam.com  -  Kalai :  “திராவிடர் என்ற இனம் இல்லை”- ஆளுநர் ரவி பேச்சு!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதனம் பற்றியும், திராவிடம் பற்றியும் தொடர்ந்து தனது கருத்துகளை பேசி வரும் நிலையில்… ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று திமுக கூட்டணிக் கட்சி எம்பிக்கள் கையெழுத்திட்டு குடியரசுத் தலைவரிடம் கொடுத்துள்ள நிலையில்… மீண்டும் தனது பல்லவியை பாடத் தொடங்கிவிட்டார் ஆளுநர்.
திராவிடர் என்பதை இனம் என ஆங்கிலேயர்கள் தவறாக குறிப்பிட்டதையே தற்போதும் பின்பற்றி வருகின்றனர் என இன்று (நவம்பர் 16) ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பழங்குடியின பெருமை தின விழா நடைபெற்றது.

நளினி என்னும் நன்றி.. மலையக கவிஞர் எஸ்தர்

May be an image of 1 person and waterfall

Esther Nathaniel        நளினி என்னும் நன்றி
இலங்கை ஊடகங்களை விட இந்திய ஊடகத்தில் அதிலும் தமிழ் நாட்டின் ஊடகங்களில் இப்போது ஒருபரபரப்பு என்றால் அது முன்னாள் பிரதமர் அமரர் ரஜுவ்காந்தியின் படுகொலையில் உள்ளே போன நளினி உட்பட ஆறுபேரின் விடூதலையைப்பற்றியது
நளினி அவர்களும் அவர் சார்ந்த ஆறு பேர்களும் சுமூகமாக இன்று இத்தனைப்பெரிய தமிழ்நாட்டில் திமுகவின் ஆட்சி நடந்து கொண்டிருக்கும்போது இந்த அம்மா வெளியியில் வந்து பேட்டி  மேல் பேட்டி போட்டிப்போட்டுக் கொண்டூ கொடுத்துக்கொண்டிருக்கிறார். மக்கள் மனதைக் கெடுத்துக்கொண்டிருக்கிறார்.
என்ன சொல்கிறார் அம்மா  அமரர் ஜெயலலிதாவின் சமாதிக்கு போகணுமாம் சரி போ போம்மா நீ எங்கேயும் போ
 ஆனால் உன்னை வெளிவரபாடுபட்ட வை கோபால்சாமி கோபால்சாமின்னு ஒருத்தரை தெரியுமா போய் பார் நன்றிசொல்லு கிடந்து முறிஞ்சி அரும்பாடுபட்ட வைகோவை போய் பார்
  கலைஞர் ஆட்சியில்தான் நளினி உட்பட ஆறுபேருக்கும் தூக்குதண்டனை ஆயுள் தண்டனையானது காரணம்  நளினிக்கு ஒரு பெண் குழந்தை இருந்தமையே அக்குழந்தைக்காக திருமதி சோனியாகந்தி அவர்களும் கலைஞரின் அவ் தீர்மானத்துக்கு இணங்கினார் .

கர்நாடகாவில் 250 பெண்களை மணக்க குவிந்த 14,000 ஆண்கள்! திருமண மையம்

tamil.news18.com  :  250 பெண்களை வரன் பார்க்க 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கூடிய  அதிசயதக்க நிகழ்வு கர்நாடகாவில்  நிகழ்ந்துள்ளது.
பல இடங்களில் இளைஞர்கள் திருமணத்துக்கு மணப்பெண் கிடைக்காமல் தவிப்பதால் தகுந்த மணமகள்களை மணமுடிக்க புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்தவகையில் திருமண வரன் பார்க்கும் நிகழ்வுகளில் ஆண்கள் கூட்டம் அலைமோதுவதை தொடர்ந்து பார்த்து வந்துள்ளோம்.
அப்படி ஒரு சம்பவம் கர்நாடக மாநிலம் மண்டியாவில் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில், நாகமங்கலா தாலுகா ஆதிசுஞ்சனகிரி தொகுதியில் திருமண வரன் பார்க்கும்  நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காலில் வடிந்த திரவம்! துடிதுடித்த மாணவி பிரியா.. நடந்தது என்ன ?

tamil.oneindia.com  -   shyamsundar :  சென்னை: சென்னையில் கால் அகற்றப்பட்ட மாணவி பிரியா மரணம் அடைந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் போலீசார் விசாரணை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது.
சென்னை மாணவி பிரியாவின் கால்கள் அகற்றப்பட்டு அதன்பின் அவர் சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது.
தமிழ்நாட்டிலா இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றது என்று சொல்லும் அளவிற்கு மிக கொடூரமான சம்பவம் தலைநகர் சென்னையில் நடைபெற்று இருக்கிறது.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் மாணவி பிரியா. 17 வயதான இவர் சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

“ஒருநாள் இது நடக்கும்” : இறப்பதற்கு முன் ஷ்ரத்தா

மின்னம்பலம் -christopher :  டெல்லியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளம்பெண் ஷ்ரத்தா, தான் கொல்லப்படுவதற்கு முன் தன்னை காப்பாற்றும்படி தகவல் கொடுத்ததாக அவரது நண்பர் ஒருவர் கூறியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் அப்தாப் பூனாவாலா என்பவரால் ஷ்ரத்தா வால்கர் என்ற பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது.
இதனையடுத்து போலீசார் இந்த கொலை வழக்கில் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த 26 வயதான ஷ்ரத்தாவுக்கும், கொலையாளி அப்தாப் அமீன்(28) என்ற நபருக்கும் டேட்டிங் செயலியான பம்பிள் மூலம் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

மிசோரம் கல்குவாரி விபத்தில் சிக்கி உயிரிழந்த 11 தொழிலாளர்களின் உடல்கள் மீட்பு- மேலும் ஒருவரை தேடும் பணி தீவிரம்

மாலை மலர் :  மிசோராமில் கல்குவாரி விபத்தில் சிக்கி உயிரிழந்த 11 தொழிலாளர்களின் உடல்கள் மீட்பு- மேலும் ஒருவரை உடல்கள் மீட்கப்பட்டன.
விபத்தில் மீதமுள்ள ஒருவரை தேடும் பணி நீடிப்பதாக கூடுதல் துணை ஆணையாளர் சாய்ஜிக்புய் கூறியுள்ளார்.
மிசோரமில் நத்தியால் மாவட்டத்தில் மவ்தார் கிராமத்தில் தனியார் நிறுவனத்தின் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது.
இந்த குவாரியில் பணியில் ஈடுபட்டு இருந்தபோது, திடீரென குவாரியில் கற்கள் அதிக அளவில் சரிந்து விழுந்துள்ளன.
இந்த சம்பவத்தில் 12 தொழிலாளர்கள் சிக்கினர். இதுபற்றி தகவல் அறிந்து எல்லை பாதுகாப்பு படையினர் உடனடியாக அந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

செவ்வாய், 15 நவம்பர், 2022

கரூரில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி கட்டிட தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழப்பு

கரூர்: கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கி கட்டிட தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழப்பு

மாலைமலர் : கரூர் கரூர் மாவட்டம் சுக்காலியூர் காந்திநகர் பகுதியில் குணசேகரன் என்பவருக்குச் சொந்தமான வீட்டின் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த வீட்டின் பின்புறம் உள்ள கழிவுநீர் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாக கான்கிரீட் வேலை நடந்துள்ளது.
இந்நிலையில், அதில் போடப்பட்ட சவுக்கு குச்சிகள் மற்றும் கான்கிரீட் பலகைகளைப் பிரிப்பதற்காக கழிவுநீர் தொட்டியின் மேன்ஹோல் எனப்படும் மூடியை திறந்து பார்த்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு பணியில் ஈடுபட்டு வந்த மோகன்ராஜ், ராஜேஷ் ஆகிய 2 தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர்.

தமிழக கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழப்பு . இரு மருத்துவர்கள் இடை நீக்கம்

தினமலர்  : சென்னை; விளையாட்டு வீராங்கனை உயிரிழக்க காரணமாக இருந்த, இரண்டு டாக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். மேலும், அவர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா..சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை, வியாசர்பாடியை சேர்ந்தவர் ரவிகுமார். அவரது மகள் பிரியா, 17; கால்பந்து வீராங்கனையான இவர், ராணிமேரி கல்லுாரியில், விளையாட்டு பிரிவில், பட்டப் படிப்பு படித்து வருகிறார்.
இவருக்கு, வலது கால் மூட்டு பகுதியில் ஜவ்வு விலகியதால், கொளத்துார் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில், அறுவை சிகிச்சை நடந்தது. மேல் சிகிச்சைக்காக, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்றபோது, அவரது கால் அகற்றப்பட்டது.
பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாகத் தான், பிரியாவின் கால் அகற்றப்பட்டதாக, பெற்றோர் குற்றம் சாட்டினர்.

காதலி உடலை 35 துண்டுகளாக வெட்டி பிரிஜ்ஜில் வைத்து கடலில் வீசிய காதலன் மகாராஷ்டிரா

மாலைமலர் :புதுடெல்லி:  மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள மாணிக்பூர் என்ற இடத்தைச் சேர்ந்த விகாஷ் என்பவரின் மகள் ஷ்ரத்தா (வயது 26). மும்பையில் உள்ள ஒரு கால் சென்டரில் இவர் வேலை பார்த்து வந்தார்.
அப்போது உடன் வேலை பார்த்த அப்தாப் அமீன் பூனாவாலா என்ற வாலிபருடன் அவருக்கு காதல் மலர்ந்தது. அந்த காதலை ஷ்ரத்தாவின் பெற்றோர் எதிர்த்தனர்.
அதையடுத்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் காதல் ஜோடி டெல்லிக்கு இடம் மாறியது.
அங்கு மெக்ருலி பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடியேறினர்.
இதற்கிடையே மும்பையில் உள்ள பெற்றோருடனும் ஷ்ரத்தா தொடர்ந்து பேசி வந்தார். இந்த நிலையில் கடந்த மே மாதம் 18-ந் தேதிக்கு பிறகு ஷ்ரத்தாவை அவருடைய பெற்றோரால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

தெலுங்கு நடிகர் கிருஷ்ணா காலமானார்.. நடிகை விஜயநிர்மலாவின் கணவர், நடிகர் மகேஷ் பாபுவின் தந்தை

தினத்தந்தி   : ஐதராபாத தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரும், நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா, மாரடைப்பு காரணமாக காலமானர். நடிகர் கிருஷ்ணா திடீரென வீட்டில் மயங்கி விழுந்து சுயநினைவை இழந்துள்ளார். இதையடுத்து, பதறிப்போன அவரது குடும்பத்தினர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவமனையில் அவருக்கு 20 நிமிடங்கள் சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு சுயநினைவு திரும்பியது. பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் உள்ளார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

லிங்காயத் மடாதிபதி சிறுமிகளை மிரட்டி மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் ..சிறுமிகள் சாட்சியம்

Shivamurthy Sharanaru

tamil.samayam.com சாக்லேட் சாப்பிட்டதும் மயக்கம்.. அதன்பின் உடலெல்லாம் வலி..லிங்காயத் மடாதிபதிக்கு எதிராக சிறுமிகள்.!
கர்நாடகாவில் மிகவும் செல்வாக்கு மிக்கவராக, 64 வயதான லிங்காயத் சமூக மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணகுரு உள்ளார். லிங்காயத் மடங்களை ஆன்மிகப் பள்ளிகளாக மாற்றியதில் பிரபலமான இவர், பெங்களூரில் இருந்து 200 கிமீ தொலைவில் உள்ள சித்ரதுர்காவில் உள்ள முருகா மடத்தால் நடத்தப்படும் பள்ளியில், மைனர் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறி கடந்த செப்டம்பர் 1ம் தேதி கைது செய்யப்பட்டார்.
விசாரணைக்கு தலைமை தாங்கிய சித்ரதுர்கா காவல் கண்காணிப்பாளர் கே.பரசுராம் கடந்த காலங்களில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "குழந்தைகள் எதிர்க்கும் போதெல்லாம், மயக்க மருந்து தடவிய ஆப்பிள்களை அவர்களுக்கு கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தார்" என்று கூறினார்.

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து முருகன் தவிர மற்ற 3 பேரையும் இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை


 மாலைமலர் : : திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகளுக்கான சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வெளிநாடுகளை சேர்ந்த போலி பாஸ்போர்ட், விசா மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
3 பிளாக்குகளை கொண்ட இந்த முகாமில் ஒரு பிரிவில் இந்த கைதிகள் இருக்கிறார்கள். அவர்கள் சொந்தமாக சமைத்து சாப்பிடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழக்கு முடிந்த பின்னர் அவர்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
இதற்கிடையே ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி விடுதலையான இலங்கையைச் சேர்ந்த முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய நான்கு பேரும் நேற்று முன்தினம் இரவு திருச்சி மத்திய சிறையில் உள்ள வெளிநாட்டவர்க்கான சிறப்பு முகாமிற்கு அழைத்து வரப்பட்டனர்.

எம்பி தேர்தல்: பாஜக குறி வைக்கும் எட்டு தொகுதிகள்.. தென் சென்னை, வேலூர், ஈரோடு, கோவை, சிவகங்கை.... ?

 minnambalam.com  -  Aara  :  மக்களவைத் தேர்தல் 2024 இல் வர வேண்டியிருக்கிறது.   குஜராத், இமாச்சல் பிரதேச சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒருவேளை பாஜகவுக்கு சாதகமாக வரும் பட்சத்தில் இந்த சூட்டோடு சூடாக 2023 ஆம் ஆண்டே மக்களவைத் தேர்தலை நடத்தி முடிக்கவும் திட்டமிட்டிருக்கிறது பாஜக.
அந்த வகையில் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் எம்பி தேர்தலுக்கான வேலைகளைத் தொடங்கிவிட்டது பாஜக. தமிழ்நாட்டிலும் அதற்கான வேலைகள் தொடங்கிவிட்டன.
நவம்பர் 12 ஆம் தேதி சென்னையில்  பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில நிர்வாகிகளோடு முக்கிய ஆலோசனை நடத்திய அமித் ஷா,  ‘இதே திசையில் இன்னும் வேகமாக செல்லுங்கள்’ என்று பாஜகவினருக்கு பூஸ்ட் கொடுத்துள்ளார்.
மேலும் தமிழகத்துக்கு மத்திய அமைச்சர்களை அதிகமாக பிரதமர் மோடி அனுப்பிக் கொண்டிருக்கிறார். மத்திய அமைச்சர்கள் வருகை மூலமாக தமிழ்நாட்டுக்கு மோடி அரசு செய்து வரும் மக்கள் நலத்திட்டங்களை  தமிழ்நாடு மக்களுக்கு எடுத்துச் செல்லுங்கள்’ என்றும் உத்தரவிட்டுள்ளார்.

தலைவர் அமிர்தலிங்கத்தின் மகன் காண்டீபன் காலமானார் – ஒரு அரசியல் ஆளுமையின் இழப்பு!

May be an image of 5 people and people standing

thesamnet.co.u: தலைவர் அமிர்தலிங்கத்தின் மகன் காண்டீபன் காலமானார் – ஒரு அரசியல் ஆளுமையின் இழப்பு!
 த ஜெயபாலன்
காண்டீபன் அமிர்தலிங்கம் இன்று காலமானார். தமிழீழ விடுதலைப் போராட்டங்களில் முன்னின்று செயற்பட்டது மட்டுமல்ல தமிழீழ இராணுவம் என்ற அமைப்பையும் இவர் கட்டமைத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த மூன்று தசாப்தங்களாக அரசியலில் இருந்து முற்றாக ஒதுங்கி இருந்தார். ஈரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று இயற்கை எய்தியதாக தமிழீழ விடுதலைக் கூட்டணி நண்பர்கள் தெரிவித்தனர். தமிழரசுக் கட்சி தமிழ் காங்கிரஸ்சோடு சேர்ந்த தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கி அதன் தலைவராகி எதிர்க்கட்சித் தலைவருமானவர் இவருடைய தந்தையார் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம். இலங்கைத் தமிழர்களிடையே அரசியல் குடும்பமாக மிகவும் அறியப்பட்டது அமிர்தலிங்கம் – மங்கையற்கரசி குடும்பத்தினர். இவர்களுடைய மூத்தமகனே காண்டீபன் அமிர்தலிங்கம். இவருடைய இளைய சகோதரர் பகீரதன் அமிர்தலிங்கம் மருத்துவர் லண்டனில் வாழ்கின்றார். இந்த அரசியல் குடும்பத்தில் இறுதியாக எம்மத்தியில் வாழ்பவர் இவர் மட்டுமே.

திங்கள், 14 நவம்பர், 2022

322 கைதிகள் விடுதலைக்கு ஆளுநர் ஒப்புதல்!

மின்னம்பலம் -monisha  :  அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சிறைக்கைதிகள் 322பேரை விடுவிக்க கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணைக்கு ஓர் ஆண்டு கழித்து இப்போது ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
திமுகவின் நிறுவனரும் முன்னாள் முதல்வருமான அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நீண்ட நாட்களாகச் சிறையில் உள்ள கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்வது வழக்கம். கடந்த ஆண்டு(2021) 509கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று திமுக அரசு ஆளுநரிடம் பரிந்துரைத்தது.
ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுவிட்டார்.

ராஜீவ் கொலை வழக்கில் மறுசீராய்வு மனுவை காங். தாக்கல் :புதுவை நாராயணசாமி தகவல்

 hindutamil.in : ராஜீவ் கொலை வழக்கில் மறுசீராய்வு மனுவை காங். தாக்கல் செய்யும்: நாராயணசாமி தகவல்
புதுச்சேரி: “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளை மீண்டும் சிறையில் அடைக்க மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்யாவிட்டால் காங்கிரஸ் சார்பில் தாக்கல் செய்யப்படும்” என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேரு பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.
இதில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்பி வைத்திலிங்கம், காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு நேரு படத்திற்கு மாலை மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி கூறியது:

ரஷிய ராணுவம் வெளியேறிய கெர்சன் நகருக்கு வருகை தந்த அதிபர் ஜெலன்ஸ்கி

மாலை மலர்  :  கீவ்: உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா, கெர்சன் நகரை கைப்பற்றியிருந்த நிலையில், உக்ரைன் படையினர் கடுமையாக சண்டையிட்டு அதை மீட்டனர். இதையடுத்து ரஷிய படைகள் அங்கிருந்து வெளியேறின.
அந்த நகரின் முக்கிய இடங்களில் பறந்த ரஷிய கொடிகளை கீழே இறக்கிய உக்ரைன் மக்கள் தங்கள் நாட்டுக் கொடியை ஏற்றினர்.
இதற்கிடையே, கெர்சன் நகரை ஆக்ரமித்த போது, ரஷிய ராணுவம், 400 க்கும் மேற்பட்ட போர்க் குற்றங்களை செய்து வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
புலனாய்வாளர்கள் ரஷிய போர்க் குற்றங்களை ஆவணப்படுத்தியுள்ளதாகவும், இறந்த உக்ரைன் பொதுமக்கள், படைவீரர்களின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளன. இது தொடர்பாக ரஷிய வீரர்கள் மற்றும் கூலிப்படையினரின் கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன என தெரிவித்தார்.

துருக்கி குண்டுவெடிப்பு 6 பேர் உயிரிழந்துள்ளனர். 81 பேர் காயமடைந்துள்ளனர்

தினத்தந்தி : துருக்கி குண்டுவெடிப்பு தாக்குதல்; சந்தேக நபர் கைது: துருக்கி உள்துறை மந்திரி
துருக்கியில் குண்டுவெடிப்பு தாக்குதலில் 6 பேர் பலியான சம்பவத்தில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு உள்ளார் என உள்துறை மந்திரி கூறியுள்ளார்.
துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் கடைகள் அதிகம் நிறைந்த இஸ்திக்லால் பகுதியில் நேற்று திடீரென குண்டுவெடிப்பு நடந்தது. இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 81 பேர் காயமடைந்துள்ளனர்.
துருக்கி நாட்டு உள்ளூர் நேரப்படி மாலை 4.20 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு நடந்தது என்று இஸ்தான்புல் கவர்னர் அலி யெர்லிகாயா கூறினார். இந்த வீதியில் பல கடைகள் மற்றும் உணவகங்கள் உள்ளன.

24 மாவட்டங்களில் 45 ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர் நீரில் மூழ்கியது-

மாலைமலர் : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை எழிலகத்தில் உள்ள மாநில கட்டுப்பாட்டு மையத்தில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.
அதைத்தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் 12-ந் தேதி (நேற்றுமுன்தினம்) 37 மாவட்டங்களில் 19.14 மி.மீ. மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 68.17 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் சராசரியாக 47.01 மி.மீ. மழை பெய்துள்ளது.
நேற்று முன்தினம் பெய்த மழையால் சேலம் மாவட்டத்தில் ஒருவரும், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். 83 கால்நடைகள் இறந்துள்ளன. 538 வீடுகள் சேதமடைந்தன.

ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த கலைஞர் . உலகமே போற்றிய கண்ணொளி திட்டம்.. திடீர் டிரென்ட்

பார்வை குறைபாடு

tamil.oneindia.com  -  Vishnupriya R  :  சென்னை: உலகமே போற்றும் இலவச கண்ணொளி திட்டத்தை,
முன்னாள் முதல்வர் கலைஞர்  கொண்டு வந்தார் என்பது குறித்து சமூகவலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
நீயா நானா நிகழ்ச்சியில் வடமாநில தொழிலாளி வெர்சஸ் பொது மக்கள் கலந்து கொண்டது. இதில் தமிழகம் குறித்து பெருமையாக சொல்வதென்றால் எதை சொல்வீர்கள் என கேட்டதற்கு வடமாநிலத்து பெண் ஒருவர் தமிழ்நாடு மருத்துவ காப்பீடு திட்டத்தால் அவருடைய மகனுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அதன் மூலம் வாய் பேச முடிந்ததாக நன்றியுடன் கூறியிருந்தார்.
இந்த காப்பீடு திட்டம் முன்னாள் முதல்வர் கலைஞரால்  கொண்டு வரப்பட்டது. அது போல் அவர் செய்த மருத்துவ உதவிகள் குறித்து சமூகவலைதளங்களில் கீர்த்தனா ராம் என்பவர் ஒரு நீளமான பதிவை போட்டுள்ளார்.

திராவிடர்களின் ஆடல் கலையை (சதிர் ஆட்டம்) பரதநாட்டியம் என்று திரிக்கும் திருடர்கள் .. இல்லாத பரதமுனிக்கு பரதநாட்டியம் பிறந்ததாம்

கலைஞர் 'நீ தமிழன் தானே' என தன் உதவியாளரிடம் கேள்வி எழுப்பினார். அதைத் தொடர்ந்து, ‘பரதமுனிதான் பரதநாட்டியம் தொடங்கினார் என்றால் யார் நம்புவது? திராவிட இயக்கக் கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை மெல்ல மெல்ல அழிக்கப்பார்க்கிறார்கள். அதுதான் அடிக்கல் நாட்டுவிழா அழைப்பு. அது அழைப்பு அல்ல. யாருக்கோ தேவையான பிழைப்பு. நம்மை தாழ்த்தும் அந்த நினைப்பை வேரறுக்க வேண்டும்’ என்றார்.

 விகடன் .com கலைஞர்  சொன்னால், அது அவர் கருத்து!” 'பரதமுனி' பற்றி பத்மா சுப்பிரமணியம்
பா. ஜெயவேல்
மாமல்லபுரம் அருகே பட்டிபுலம் பகுதியில் பரதமுனிக்கு கோயில் அமைத்திருக்கிறார் பரத நாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம். அதன் திறப்புவிழாவை ரகசியமாக நடத்தி முடித்திருப்பது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பி இருக்கிறது.
கடந்த 2003 ம் ஆண்டு பரதமுனிக்கு கோயில் எழுப்ப இருப்பதாக ஜெயலலிதாவிடம் மாமல்லபுரம் அருகே பட்டிபுலம் என்ற கிராமத்தில் 5 ஏக்கர் நிலமும், 27 லட்சம் பணமும் பெற்றார் பத்மா சுப்பிரமணியம்.
தி.மு.க ஆட்சி அமைந்தபோது 2007ல் பரதமுனி கோயில் அடிக்கல் நாட்டுவிழாவிற்கு பத்மா சுப்பிரமணியம் சார்பில் முதல்வரிடம் வாழ்த்து கேட்கப்பட்டிருந்தது.

விடுதலையான நளினி அடுத்த நாளே இப்படி பத்திரிகையாளர் சந்திப்பை....

 Bilal Aliyar  :  விடுதலையான நளினி அடுத்த நாளே இப்படி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திக்கொண்டிருப்பது தமிழ்நாட்டிற்கு,  திமுகவிற்கு நன்மையாக இருக்காது!
விடுதலையான ஏழு பேரையும் போராளிகளாக கட்டமைக்கும் மோசமான போக்கை போலி தமிழ் தேசியர்கள், முற்போக்காளர்கள் கைவிட வேண்டும்.
அரசும் இந்த விசயத்தில் விழிப்புடன் செயல்பட வேண்டும்1
Sammil Kafoor : இவங்க எல்லாம் தப்பே செய்யலைன்னு சொல்ல முடியாது..ஏதோ விடுதலை ஆகிட்டாங்க..மனிதாபிமான முறையில் சந்தோசம். பெரிய தியாகியா எல்லாம் நினச்சி பேட்டி எடுக்க கூடாது.. ராஜிவ் காந்தியின் இழப்பு லேசாக கடந்து போகும் இழப்பு அல்ல..
Madhav Anandhan  :   if ராஜிவ் காந்தி was not assasinated, Modi coul never think about PM roll
Sheikh Mukhtar :  ஆமாம்

ஞாயிறு, 13 நவம்பர், 2022

தந்தை பெரியாரை ன 1927 முதலே பெரியார் என அழைத்தனர்! ஆதார பூர்வமான செய்தி


 சிவசங்கரன் சுந்தரராசன் :  பெரியார் பட்டம் 1938ல் வழங்கப்படவில்லை. 1928 முதலே அப்படி அழைக்கப்படுகிறார் என்பதற்கு ஆதாரம் 1929ல் வெளியிடப்பட்ட
ஈ.வெ. ராமசாமி பெரியாரவர்களின் பொன்மொழிகள்* நூல்.
Thirunavukarasan Manoranjitham  : வைக்கம் போராட்ட காலத்திலேயே ( 1924 ) திரு வி க அவரது நவசக்தி இதழில் ஈ.வெ.ராமசாமிப் பெரியார் என்று எழுதியிருக்கிறார்.
சிவசங்கரன் சுந்தரராசன்  :   தற்போது புதிதாக நீல கோஷ்டியினர் பெரியார் என்ற பட்டம் வழங்கிய மீனாம்பாள் சிவராமன் பெயரை திராவிடவாதிகள் மறைக்கிறார்கள் ஈ.வெ.ராமசாமியை பெரியார் என மாற்றிவரையே மறைக்கிறார்கள் என இரண்டு மூன்றாண்டுகளாக உருட்டுகிறார்கள்.
Thirunavukarasan Manoranjitham  :  இனி எல்லோரும் பெரியார் என்றே அழைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அந்த மாநாட்டில்தான்.
அதை திராவிடர் இயக்கத்தினர் யாரும் மறைக்கவில்லை.

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

 தினத்தந்தி  :   தமிழகத்தில் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் பத்து மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் பெய்த மழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அடுத்து வரும் 3 நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தனுஷ்கோடியில் யாரும் அறியாத இலங்கை தமிழர்களின் கிராமம்

சிறுநீரக கற்களுக்காக மருத்துவமனை சென்றவரின் சிறுநீரகமே திருடப்பட்டது உத்தர பிரதேச மருத்துவ மனையில்

நக்கீரன்  : உத்தரப்பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் மாவட்டம் நாக்லாதால் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் சந்திரா.  53 வயதான இவர் வீட்டுக் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். சுரேஷ் சந்திராவிற்கு நீண்ட காலமாக அடிவயிற்றில் வலி இருந்துள்ளது.
மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்தபோது அவருக்கு இடது பக்க சிறுநீரகத்தில் கற்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அலிகார் குரேஷி பைபாஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் செல்லுமாறு சுரேஷ் சந்திராவுக்குத் தெரிந்தவர் பரிந்துரை செய்துள்ளார்.
இதன் பின் தெரிந்த நபர் சொன்ன மருத்துவமனைக்குச் சென்ற சுரேஷ் சந்திராவை மருத்துவர்கள் பரிசோதித்தனர்.  missing kidney link

ராஜீவ் காந்தி கொலை கைதிகள் திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைப்பு

 மாலை மலர்  :   திருச்சி-புதுக்கோட்டை சாலையில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் வெளிநாட்டினருக்கான சிறப்பு முகாம் உள்ளது. தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் வெளிநாட்டினர் இந்த சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுகின்றனர்.
சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முயன்றது, போலி பாஸ்போர்ட் முறைகேடு உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர்கள் உள்பட நைஜீரியா, பல்கேரியா, வங்காளதேசம், இந்தோனேசியா உள்பட 130 வெளிநாட்டினர் இந்த முகாமில் தங்கி உள்ளனர்.
இவர்கள் மீதான வழக்கு விசாரணை முடிந்து, விடுதலை செய்யப்படும் வரை சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுவார்கள்.
இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் இருந்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோர் சென்னை புழல் சிறையில் இருந்து நேற்று விடுதலை செய்யப்பட்டனர். எனினும் அவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமுக்கு நேற்று நள்ளிரவு அழைத்து வரப்பட்டனர்.