சனி, 4 நவம்பர், 2017

மெரினா கடல் நீர் கறுப்பாக மாறி உள்ளது ...... அச்சத்தில் மக்கள்!

chennai's Marina sea shore turns into blacksea because of rain water mixed in it.Gajalakshmi cribe to Oneindia Tamil சென்னை: உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையான சென்னை மெரினா கடற்கரை பகுதியில், கடல் நீர் கறுப்பு நிறமாக மாறியுள்ளது மக்களை அச்சமடைய வைத்துள்ளது. சென்னையில் கடந்த 3 நாட்களாக இரவு நேரத்தில் அடை மழை பெய்து வருவதால் அடையாறு, கூவம், கொசஸ்தலை ஆறு வழியாக மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை நீரோடு சாக்கடைக் கழிவுகள் மற்றும் சாலைகளில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளும் மழை நீரில் அடித்துச் சென்று கால்வாய் வழியாக கடலில் கலக்கின்றன.

கமல்ஹாசனை சுட்டுக்கொல்ல வேண்டும்: இந்து மகா சபை உப தலைவர் பண்டிட் அசோக் சர்மா !


மாலைமலர் :இந்து தீவிரவாதம் இனி இல்லை என கூற முடியாது என கருத்து கூறியிருந்த நடிகர் கமல்ஹாசனை சுட்டுக்கொல்ல வேண்டும் என இந்து மகா சவை துணை தலைவர் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக கூறியுள்ளார். கமல்ஹாசனை சுட்டுக்கொல்ல வேண்டும்: இந்து மகா சபை தலைவர் சர்ச்சை பேச்சு
புதுடெல்லி: தமிழ் வார இதழ் ஒன்றில் கட்டுரை எழுதி வரும் நடிகர் கமல்ஹாசன், முன்பெல்லாம் இந்து வலதுசாரியினர் மற்ற மதத்தைச் சார்ந்தவர்களுடன் வன்முறையில் ஈடுபடாமல், வாதப் பிரதிவாதங்கள் மூலமே எதிராளியை வன்முறையில் ஈடுபட வைத்தனர். ஆனால், இந்த பழைய சூழ்ச்சி தோற்க ஆரம்பித்ததும், யுக்தியால் முடியாததை சக்தியால் செய்யத் தொடங்கிவிட்டடனர் என்று எழுதியிருந்தார். மேலும், இந்து வலதுசாரியினரும் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டதாகவும், எங்கே ஓர் இந்துத் தீவிரவாதியைக் காட்டுங்கள் என்ற சவாலை இனி அவர்கள் விட முடியாது என்றும் கமல்ஹாசன் அந்தக் கட்டுரையில் கூறி இருந்தார். கமல்ஹாசன் கருத்துக்கு பா.ஜ.க மற்றும் சிவசேனா தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

அவுஸ்த்ரேலியாவில் கேரளா பெண் சிறை ... போக்குவரத்து விதிகளை மீறினார்.... திருப்பி அனுப்படுவார்?

Dimple Grace Thomas, a Malayali nurse permanently settled in Melbourne, has been sentenced to two-and-a-half year’s imprisonment there after being held responsible for a vehicle accident in Melbourne last year that caused the death of an inborn child. She will get the parole only after serving 15 months in jail and after that she is most likely to be deported to India
Dimple Thomas, seen outside court in November, has been jailed for 2½ years.Lulu Deva Jamla: ஆஸ்திரேலியாவில் சட்டங்களை பின்பற்றுவது ரொம்ப கட்டாயம். சட்ட விரோதமா ஒரு சின்ன தப்பான செயல் செஞ்சாலும் தண்டனைகள் ரொம்ப கடுமையா இருக்கும். உதாரணத்துக்கு: Traffic Rules
மெல்போர்ன்ல இப்ப ஒரு இந்திய பெண் மீதான வழக்கு நடந்து முடிஞ்சி 18 மாதம் சிறைத்தண்டனை, அதுல முதல் 5 மாதங்களுக்கு பரோல் கிடையாது, நிரந்தர குடியிருப்பு உரிமை ரத்து, 18 மாதங்கள் முடிஞ்சதும் இந்தியாவுக்கு திரும்ப அனுப்பணும்னு தீர்ப்பு வந்திருக்கு. (18 months imprisonment, Non bailable for 5 months, Permanent Residency Cancelation and deportation to India after completion of sentence time)
அந்த பெண் செய்த குற்றம் என்ன தெரியுமா? One Way Roadல Wrong way ல கார் ஓட்டி வேற ஒரு பெண்ணோட கார் மேல மோதி ஆக்சிடண்ட் பண்ணினது தான். அந்த விபத்து நடந்தப்போ இந்த பெண்ணின் 4 மாத கரு கலைந்ததோடு, இவுங்க மோதின காரை ஓட்டின பெண் 8 மாத கர்ப்பிணி. Premature baby birth and அந்த குழந்தை பிறந்த இரண்டாவது நாள் இறந்து போச்சு. இழப்பு இரண்டு பக்கமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான்னாலும் இந்த இந்திய பெண் Traffic Rules follow பண்ணாம வண்டி ஓட்டினதால இந்த தண்டனை.

BBC :மும்பை வீட்டின் மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானி

மக்கள் நெரிசல் மிகுந்த இந்தியாவின் மும்பை நகரத்திலுள்ள பெட்டி போன்ற அடுக்குமாடி கட்டடத்தின் மொட்டை மாடியில் விமானம் ஒன்றை தயாரிக்க போவதாக 7 ஆண்டுகளுக்கு முன்னரே அமோல் யாதவ் தன்னுடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தெரிவித்தார். விமானத்தை தயாரித்த பிறகு கீழே கொண்டு வருவதற்கு எப்படி திட்டமிட்டிருக்கிறாய் என்று அவரது கூற்றை நம்பாத நண்பர்களும், குடும்ப உறுப்பினர்களும் இந்த இளம் விமானியிடம் கேட்டனர். "அது எனக்கு தெரியவில்லை" என்பது அவரது பதிலாக இருந்தது. ஒசாமா ரகசியங்கள்: மகன் திருமண விடியோ உள்பட 5 லட்சம் கோப்புகள் வெளியீடு பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதில் இலங்கையின் தாமதம்: ஐரோப்பிய ஒன்றியம் ஏமாற்றம் தன்னுடைய வாழ்க்கைக்காக இரட்டை எந்திரமுடைய டர்போபிரோப் விமானங்களை ஓட்டுகின்ற யாதவிடம் இந்த பிடிவாதம் மட்டும் இல்லை என்றால், அவரிடம் எதுவுமில்லை. அவருடைய 19 உறுப்பினர்களை கொண்ட கூட்டுக் குடும்பம் வாழும் 5 மாடி கட்டடத்தில் மின்தூக்கி (லிப்ட்) இல்லை. எனவே, கடைசல் எந்திரங்கள், கம்பிரஷர்கள், வெல்டிங் எந்திரங்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 180 கிலோ எந்திரம் ஆகியவற்றை மிகவும் குறுகிய படிக்கட்டு பாதை வழியாக மொட்டை மாடிக்கு அவர்கள் கஷ்டப்பட்டு தூக்கி சென்றனர்.

மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் படமெடுக்கத் தடை!

கடற்கரை பகுதிகளில் படமெடுக்கத் தடை!மின்னம்பலம் :தமிழ் சினிமாவின் பல காதல் காட்சிகள் அரங்கேறிய சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் படப்பிடிப்பு நடத்த நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் முக்கியமான இடங்களில் படப்பிடிப்பு நடத்த ஏற்கெனவே தடைகள் மற்றும் கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த நிலையில் தற்போது சென்னை மெரினா பீச் முதல் பெசன்ட் நகர் பீச் வரை எந்தப் படப்பிடிப்பும் நடத்தக் கூடாது என்று தமிழக அரசு நிரந்தரத் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னையில் மெரினா பீச் முதல் பெசன்ட் நகர் பீச் ரோடு வரையில் இனி படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகரில் ரூ.1,800 கோடியில் மழைநீர் வடிகால்வாய் திட்டம்

சென்னை மற்றும் புறநகரில் ரூ.1,800 கோடியில் மழைநீர் வடிகால்வாய் திட்டம்தினத்தந்தி :சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.
;நவம்பர் 04, 2017, ராயபுரம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். ரூ.1,800 கோடியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய கனமழை பெய்தது. சென்னை மற்றும் புறநகரில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையால் ஒருசில தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியிருந்தது.

திமுக எம்எல்ஏ எச்சரிக்கை! ஓடிவரும் சுகாதாரத்துறை அமைச்சர்..!

நக்கீரன்:திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புதியதாக கட்டி திறக்கப்பட்டது. இந்த மருத்துவமனையில் ரத்தத்தில் உள்ள சிவப்பு உயிரனுக்ககளை பிரித்து எடுத்து பரிசோதனை செய்யும் கருவி இல்லாமல் இருந்தது. கடந்த சில மாதங்களாக திருவண்ணாமலை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 10க்கும் மேற்ப்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் ரத்தத்தில் உள்ள சிவப்பு உயிரனுக்ககளை பிரித்து எடுத்து பரிசோதனை செய்யும் கருவி இல்லாததே. இதனால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு என மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை வேலூர், சென்னை என பிற மாவட்ட அரசு மருத்துவமனைக்கு திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி அனுப்பிவைத்து வந்தது.
இந்தநிலையில் கடந்த மாதம் 21ம் தேதி டெங்கு விழிப்புணர்வு மற்றும் மருத்துவர்கள் உடனான ஆய்வுக்காக தி.மலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வருகை தந்திருந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 48 மணி நேரத்தில் பிளேட்லெஸ் கருவி வழங்கப்படும் என உத்தரவாதம் அளித்தார்.

போன வருஷம் இதே நாளில் தான் ரங்கராஜ் பாண்டே பொழிந்தது

Venkat Ramanujam போன வருஷம் இதே நாளில் தான் #அமுல்பேபி Rangaraj Pandey Thanthi TV தன் உணவை #jayalalithaa தானே விரும்பி கேட்டு சாப்பிட்டார்ன்னு , உணர்ச்சி பொங்கி வழிய #flashnews #big #breakaing நியூஸ் எல்லாம் போட்டார் . 27-10-2017 டாக்டர் பாலாஜி கோர்ட்டில் #கைநாட்டு அல்லது #கைரேகை ., சரி எதோ எழவை வச்சிக்கோங்கோ .. உளரினது பத்தி எல்லாம் இப்போ பேச படாது ..ஓகே http://splco.me/tamil/1mseidhigal/Nov17/011117ta3.html Because அது தான் #மீடியா ஏத்க்கிஸ் டர்மம் ..கர்மம்

சிக்கினார் நிர்மலா சீதாராமன்! அறக்கட்டளை ஊழல் .. கூடவே மூன்று அமைச்சர்களும் ... தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மகன் ......

மதவாத எதிர்ப்பு பிரச்சாரம் : வியாபாரத் தொடர்பு, அமித்ஷாவைத் தொடர்ந்து சிக்கினார் நிர்மலா சீதாராமன்!
Image may contain: 2 people, people standingசமீபத்தில்' தி வயர்' இணையதளம் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா நடத்தி வரும் நிறுவனத்தின் மதிப்பு பல மடங்கு அதிகரித்திருப்பதாக  செய்தி வெளியிட்டிருந்தது. அமித்ஷா மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், இப்போது மற்றொரு பூதம் வெளி வந்துள்ளது. பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலின் மகன் ஷவுர்யா தோவால் நடத்தி வரும் இந்தியா ஃபவுண்டடேஷன் அறக்கட்டளையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இயக்குநராக இருப்பது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து 'தி வயர்' இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, ''இந்தியா ஃபவுண்டேஷன் அறக்கட்டளை வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டு நிறுவனங்களில் இருந்து ஸ்பான்ஸர் பெறுகிறது. வெளிநாட்டு நிறுவனங்களில் ஸ்பான்ஸர் பெற்று நடத்தப்பட்டு வரும் ஒரு நிறுவனத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சரே இயக்குநராக இருப்பது, விதிமீறல் இல்லையா?. நிர்மலா சீதாராமன் மட்டுமல்ல மேலும் மூன்று அமைச்சர்கள் இந்நிறுவனத்தின் இயக்குநர்களாக உள்ளனர். வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு விமானப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்கா மற்றும் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ஆகியோரும் இந்நிறுவனத்தின் பிற இயக்குநர்கள். பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ராம் மாதவ் வாரணாசியும் இயக்குநராக உள்ளார்'' எனக் கூறப்பட்டுள்ளது.

நிவாரணப் பணிகளில் அரசு தோல்வி!

minnambalam :மின்சாரக் கசிவு சார்ந்த உயிரிழப்புகளைத் தடுப்பதில் தமிழக அரசு தோல்வியடைந்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (நவ.3) விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி இரு சிறுமிகள் உயிரிழந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியும், துயரமும் விலகும் முன்பே மேலும் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கிறார். மழை மற்றும் மழை சார்ந்த விபத்துகளிலிருந்து பொதுமக்களைக் காப்பாற்றத் தமிழக அரசு தவறியது கண்டிக்கதக்கதாகும் எனத் தெரிவித்துள்ளார்.
கலியபெருமாள் என்ற விவசாயி, அவரது வயலில் தேங்கியிருந்த தண்ணீரை அகற்றச் சென்ற போது மழை நீரில் விழுந்து கிடந்த மின்சாரக் கம்பியை மிதித்து உயிரிழந்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு ஆட்சியாளர்களின் அலட்சியம் தான் காரணமாகும். தமிழகத்தில் கடுமையாக மழை பெய்துவருவதும், மழை காரணமாக ஏற்பட்ட மின்கசிவில் சிக்கி சென்னையில் இரு சிறுமிகள் உயிரிழந்ததும் மின் வாரியத்திற்குத் தெரிந்திருக்கும்.

கேரளா முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் ரெயில் பிளாட்பாரத்தில் காத்திருக்கும் காட்சி

யாராவது ஒருவர் உண்டா? கம்யூனிஸ்ட்களைத் தவிர! #சிபிஐஎம் இன் #கேரள மாநில முன்னாள் முதல்வர் வி.எஸ்.#அச்சுதானந்தன் (93) #ஆலப்புழாவில் கட்சி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுவிட்டு, #திருவனந்தபுரம் திரும்பும்போது ரெயிலுக்கு காத்திருக்கும் காட்சி! பிளாட்ஃபாரத்தில் அமர்ந்திருக்கும் அரிய காட்சித்தான் நீங்கள் இங்கே காண்கிறீர்கள்! இது, கம்யூனிஸ்ட்களின் #எளிமை மட்டுமல்ல இதுதான் அவர்களின் வாழ்க்கையும்கூட! தாரைப்பிதா பதிவிலிருந்து…

"விழித்திரு:- மீரா கதிரவன் ,,, சிறு பட தயாரிப்பாளர்கள் படும் பாடு ...

கருப்பு கருணா :ஒவ்வொரு இயக்குநருக்கும் அவரது படம் வெளியாவதென்பது பிரசவ வாதைதான். அதிலும் சிறு படத்தயாரிப்பாளர் படமென்றால் கொலை வேதனைதான். ஐந்து ஆண்டுகளாக உயிர்சிந்தி உருவாக்கிய படத்தை வெளியிட Meera Kathiravan படம் பாட்டை கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஒரு படைப்பாளியை இப்படி அலைகழிக்கிற சமூகம் நிச்சயம் உருப்பட வாய்ப்பில்லை. உங்கள் தோள்களை பற்றி நிற்போம் மீரா... கடந்த இரண்டு நாட்களாக நொடி உறக்கம் இல்லை.தற்போதும் ஜெமினி லேப் வாசலில் என் ரத்தம் உறிஞ்சப்படுவது தெரிந்தும் தடுக்க முடியாமல் தாங்கி கொண்டிருக்கிறேன் ,  துரோகத்தின் வல்லமை யால் முழுவதும் சாகடிக்கப்பட்டு விட்டதாகவே உணர்கிறேன் .ஆனாலும் என் படத்தின் மீதும் மக்கள் மீதும் நம்பிக்கை இருக்கிறது.

வெள்ளி, 3 நவம்பர், 2017

இந்து தீவிரவாதம் இல்லை என கூறமுடியாது என்ற கருத்துக்கு கமல்ஹாசன் மீது உபி போலீசார் வழக்குப்பதிவு

தினத்தந்தி : இந்து தீவிரவாதம் இல்லை என கூறமுடியாது என்ற கமல்ஹாசனின் கருத்துக்கு உத்தரபிரதசத்தில் 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். பனராஸ்: நடிகர் கமல்ஹாசன் தமிழ் வார இதழ் ஒன்றில் எழுதி வரும் தொடர் கட்டுரையில், இந்து தீவிரவாதம் இல்லை என கூறமுடியாது என்று தெரிவித்த கருத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது. கட்டுரையில், முன்பெல்லாம் இந்து வலதுசாரியினர் மற்ற மதத்தைச் சார்ந்தவர்களுடன் வன்முறையில் ஈடுபடாமல், வாதப் பிரதிவாதங்கள் மூலமே எதிராளியை வன்முறையில் ஈடுபட வைத்தனர். ஆனால், இந்த பழைய சூழ்ச்சி தோற்க ஆரம்பித்ததும், யுக்தியால் முடியாததை சக்தியால் செய்யத் தொடங்கிவிட்டடனர் என்று கூறி உள்ளார்.

தமிழகம் வறட்சியிலிருந்து மீண்டு வந்துள்ளது ,,, இரு ஆண்டுகளாக நிலவி வந்த ...

பருவமழை: உற்சாகத்தில் தமிழக விவசாயிகள்!
மின்னம்பலம் : வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு தமிழகத்துக்கு நல்ல மழைப்பொழிவை அளித்துள்ளதால் கடந்த இரு ஆண்டுகளாக நீடித்துவந்த வறட்சியிலிருந்து தமிழகம் மீண்டு வந்துள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் மிகவும் உற்சாகமாக விதைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியா முழுவதும் கடந்த காரிஃப் பருவத்தில் உற்பத்தி அதிகரித்ததால் அறுவடை செய்த உணவுப் பொருளுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். ஆனால், அந்த நேரத்தில் தமிழகம் மட்டும் கடந்த 140 ஆண்டுகளாகக் காணாத வறட்சியில் சிக்கியிருந்தது. இதையடுத்து காரிஃப் பருவ விவசாயம் தமிழகத்தில் பாதிக்கப்பட்டது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் இந்தப் பருவத்துக்கான விதைப்புப் பணிகளில் விவசாயிகள் உற்சாகத்தோடு ஈடுபட்டுள்ளனர். குறிப்பாகக் காவிரி டெல்டா பகுதிகளில் சம்பா சாகுபடிக்கு விவசாயிகள் தங்களது நிலங்களைத் தயார்படுத்தியுள்ளனர்.

ஒரே நாளில் 30 செமீ மழை நள்ளிரவில் தண்ணீர் தேசமான சென்னை

ஸ்பெல்கோ : சென்னையில் நேற்று காலையில் வெயில் அடித்த நிலையில் பிற்பகலில் சென்னையின் பல பகுதிகளில் மழை பெய்ய ஆரம்பித்தது. மாலை 6 மணியளவில் பெய்யத்துவங்கிய மழையானது அதிகாலைவரை தொடர்ந்து பெய்தது.
Special Correspondent

Special Correspondent இதனால், சென்னையின் தாழ்வான பகுதிகளில் எல்லாம் மழை நீர் சூழ்ந்தது. வடசென்னையின் பல பகுதிகளும் தென்சென்னையின் சில பகுதிகளிலும் மழை நீரில் மூழ்கின. குறிப்பாக வடசென்னையின் வியாசர்பாடி, கொடுங்கையூர், தாம்பரம் அருகில் உள்ள முடிச்சூர், கோவிலம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
இந்த கனமழையின் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், காரைக்கால், புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மெரினாவில் டிஜிபி அலுவலகம் அருகே 30 செ.மீ. , ஓ.எம்.ஆர் பகுதியில் 20 செ.மீ. மழை, , நுங்கம்பாக்கம் 18 செ.மீ., சத்யபாமா பல்கலைக்கழகம் - 20 செமீ, அண்ணா பல்கலைக்கழகம் 15 செ.மீ, மீனம்பாக்கம் 14 செ.மீ, புழல் 9 செ.மீ, தரமணி 19 செ.மீ மழை பெய்து உள்ளது.
இந்த நிலையில் இன்று மாலையும் சென்னையில் கனமழை கொட்டித் தீர்க்கும் என நார்வே நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. . மாலை 6 மணியில் இருந்து விடிய விடிய மழை நீடிக்கும் என்றும் நார்வே வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு பலத்த மழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்க கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை: இலங்கை அருகே வங்கக்கடலின் தென்மேற்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று தமிழக கடலோரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகடலோர மாவட்டங்களிலும் இதன் தாக்கும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே வங்க கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கி நகரக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ் நாட்டில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8.30 மணிக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் கன மழை எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம் ஆகிய வட கடலோர மாவட்டங்களில் கன மழை முதல் மிக கன மழை வரை பெய்யக்கூடும்” என்று கூறப்பட்டுள்ளது.

கனடாவில் குடியேற இந்தியர்களுக்கு நல்வாய்ப்பு உள்ளது !


இது கனடா வரலாற்றில் என்று இல்லாமல் உலக நாடுகளின் வரலாற்றிலேயே முக்கியமான அறிவிப்பாகும் கனடாவின் பொருளாதாரம் மற்றும் குடும்ப வகைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு ஆண்டும் 0.8 சதவீத மக்கள் தொகை அகதிகளாக அதிகரித்து வந்தது தற்போது 0.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதே நேரம் விமர்சகர்கள் கனடாவின் வணிகங்களைச் சமாளிக்க வற்ற ஊழியர்களின் தட்டுப்பாட்டைக் குறைக்க 4,50,000 நபர்கள் குடிபெயர்வு தேவை எனக் கூறப்படுகின்றது. மக்கள் தொகை கணக்கு எடுப்பு வெளியிட்ட தரவின் படி வெளிநாடுகளில் இந்து கனடா வந்து பிள்ளைகள் பெற்றவர்களின் விகிதம் அதிகரித்துள்ளது என்றும், கனடியர்களின் பிறப்பு விகிதம் சரிந்துள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது.
கனடா குடிபெயர்வதில் முதல் இடத்தில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளனர். இரண்டாம் இடத்தில் ஆப்ரிக்கா நாடுகள் உள்ளன. இந்தத் தரவு 2011 முதல் 2016 வரையில் நடைபெற்ற குடிபெயர்வுகளைப் பொறுத்தது கூறப்படுகின்றது. அடுத்து இந்த இடத்தில் ஆசிய நாடுகள் இடம்பிடிக்க அதிக வாய்ப்புள்ளது.

இன்றும் கனமழை பெய்யும் !சென்னனையில் 112 இடங்களில் மின் இணைப்பு துண்டிப்பு..!

நக்கீரன : தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை அல்லது மிக கனமழை பெய்யும். அதேபோல் வடகடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 கனமழை எதிரொலி: சென்னனையில் 112 இடங்களில் மின் இணைப்பு துண்டிப்பு..! சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழை நீர் தேங்கியுள்ள 112 இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் நேற்று மாலை பெய்ய தொடங்கிய கனமழை இரவு முழுவதும் நீடித்தது. இதனால் பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் அடையாறு, கோட்டூர்புரம், மந்தைவெளி உள்ளிட்ட 112 இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு்ள்ளது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக தங்களுக்கு தேவையானவற்றை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும், மருத்துவ முகாம்கள் அமைக்க சுகாதாரத்துறையிடம் கேட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு: மாகாணமா, மாநிலமா அல்லது அரசா?

tamilthehindu : ஆழி செந்தில்நாதன் :    ன்றைய தமிழ்நாடு ஒரு நவீன மாநிலமாக உருவானது 1956 நவம்பர் 1-ம் தேதிதான். சென்னை மாநிலத்தின் தெலுங்கு, கன்னட, மலையாளப் பகுதிகள் பிரிக்கப்பட்ட பின், தமிழ்ப் பகுதிகள் மட்டும் ஒரு மாநிலமாக ஆக்கப்பட்ட இந்த நாளை தமிழர் தாயகத் திருநாளாக கொண்டாடும் விருப்பம் இப்போது தமிழர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது. ஆந்திரப் பிரதேசம். கர்நாடகம், கேரளம் போன்ற மாநிலங்களில் அவை நீண்டகாலமாக அரசு விழாக்களாகவே கொண்டாடப்பட்டுவருகின்றன.
மாநிலப் பிரிவினையின்போது எல்லைப் பகுதிகளை இழந்த காரணத்தால் தமிழ்நாட்டில் இது எப்போதும் ஒரு கொண்டாட்டமாக உணரப்படவில்லை. ஆனால், என்னதான் இருந்தாலும், நவீன அரசியல் வரையறையோடு தமிழர்கள் தமக்கென ஒரு தாயகம் பெற்ற நாள் இது என்பதை மறுக்கத் தேவையில்லை. இந்தியா என்பது பல்வேறு மொழிவழி தேசிய இனங்களின் கூட்டமைப்பு என்பதை புது டெல்லியே சுற்றிவளைத்து அங்கீகரித்த வரலாற்று நிகழ்வுதான் மொழிவாரி மாநிலங்களின் உருவாக்கம் என்பதையும் உணர வேண்டும். தமிழ்நாட்டை மாநிலம் என்று சொல்கிறோமே, அதன் பொருள் என்ன என்பதை நாம் சற்று ஆராய வேண்டியிருக்கிறது. ஆங்கிலத்தில் ‘ஸ்டேட்’ (State) என்பதைத் தமிழில் மாநிலம் என்கிறோம்.

தார் ஊழல் 1000 கோடி அம்பலம்... குட்கா ஊழல் தொடர்ந்து புதிதாக தார் கொள்ளை!

Special Correspondentஸ்பெல்கோ : ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தார் கொள்முதல் செய்து புது சாலை அமைக்க, 57,043 கி.மீ. நீளமுள்ள சாலைகள் பராமரிக்க நெடுஞ்சாலைத் துறைக்கு ஆண்டுதோறும் ரூபாய் 3000 கோடி ஒதுக்கப்படுகிறது. இந்தப் பணிகளுக்காக ஒப்பந்தக்காரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் ஒப்படைக்கப்படுகின்றன. அந்த பணிக்கான ஒப்பந்த நாளில் தார் என்ன விலையில் கொள்முதல் செய்யப்படுகிறதோ, அதற்கும் அந்தப் பணிகளை நிறைவேற்றுகிற போது அன்றைய நாளில் தாரின் சந்தை விலை எவ்வளவு இருக்கிறதோ, அந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை ஒப்பந்தக்காரர்களோ அல்லது நெடுஞ்சாலைத் துறையினரோ வழங்க வேண்டும். ஒப்பந்தம் வழங்குகிற போது இருக்கிற விலைக்கும், அதை நிறைவேற்றுகிற போது விலை அதிகமாக இருந்தால் அந்த வித்தியாசத் தொகையை நெடுஞ்சாலைத்துறை வழங்க வேண்டும்.
மாறாக ஒப்பந்தம் வழங்குகிற போது தார் கொள்முதல் விலைக்கும், நிறைவேற்றுகிற போது விலை குறைவாக இருந்தால் அந்த வித்தியாசத்தை ஒப்பந்தக்காரர்கள் வழங்க வேண்டும்.
கடந்த செப்டம்பர் 2014 இல் ஒப்பந்தக்காரரிடம் பணி ஒப்படைக்கப்பட்ட போது தார் விலை ஒரு டன் ரூபாய் 41 ஆயிரத்து 360 ஆக இருந்தது. அதே தாரின் விலை மார்ச் 2015 இல் பணி நிறைவடைகிற போது ரூபாய் 30 ஆயிரத்து 260 ஆக குறைந்திருந்தது.

அப்போலோவை அம்பலப்படுத்திய ஹேமநாதன் கொலை ..... ? கூவத்தில் உடல்?

vikatan:  ஜெ மரணம் மட்டுமின்றி, அப்பல்லோவில் தன் தாய்க்கு சிகிச்சையளித்த ஹேமநாதனின் நிலையும் மர்மமாக மாறியிருக்கிறது.
திருவல்லிக்கேணியைச் சேர்ந்த முன்னாள் காவல்துறை ஊழியர் ஹேமநாதன். தன் தாய் பானுமதிக்கு மூக்கில் ரத்தம் வந்தது தொடர்பாக அப்பல்லோவில் சிகிச்சைக்கு சேர்த்தார். லட்சக்கணக்கில் செலவழித்தும், மண்டையோட்டுப் பகுதியில் துளையிட்டு சிகிச்சையளித்தும், பானுமதி குணமடையாத நிலையில் கடைசியில் அவரை ஜி.ஹெச்சின் அவசர சிகிச்சைப் பகுதியில் கொண்டுபோய் வீசியது அப்பல்லோ நிர்வாகம். அவரை கண்டுபிடித்து தூக்கிவந்து வீட்டில்வைத்து சிகிச்சை செய்துவந்தார் ஹேமநாதன்.

இதுதொடர்பாக அவர் நக்கீரனைத் தொடர்புகொண்டு நடந்த நிகழ்வுகளை ஆதாரங்களுடன் முறையிட,
"அப்பல்லோ பேஷண்ட் ஜி.ஹெச்சில் அனாதையாக... ஜெ.வின் கதியும் இதுதானா' என 2017, செப் 18- 20 இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
ஹேமநாதன் மீது அப்பல்லோ வழக்குத் தொடர்ந்தது. ஹேமநாதனும் தன் தாய்க்கு நேர்ந்த அநீதியை வெளிப்படுத்தும் நோக்கில் அப்பல்லோ மீது வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், தன் தாய்- தந்தையை வழக்கமாகச் சென்று பார்த்துவந்துகொண்டிருந்த ஹேமநாதன் அக்டோபர் 8 முதல், வீட்டுப்பக்கம் வராமல்போகவே, அக்டோபர் 11-ஆம் தேதி திருவல்லிக்கேணி (டி-1) காவல் நிலையத்தில் ஹேமநாதனின் சகோதரியும் மெரினா காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டருமான லதா புகார் கொடுத்தார். 

மழை நீர் பேரிடர் ,,, துப்பரவுபணி .. அருந்ததிய மாணவர்களை கட்டாயப்படுத்தும் தமிழக அரசு

Bhimraj Gandhi : °° மழை நீர் வடிந்தாலும்.. °°
°° வடியாத சாதி சாக்கடை.. °°
இந்த பேரிடரில் சாதியை முன்னிறுத்தி பேசக்கூடாதுதான். ஆனால் சென்னையில் கிட்டத்தட்ட ஒரு கோடி மக்கள் உள்ளனர். அவர்களில் ஒரு லட்சம் பேர், அவ்வளவு ஏன் பத்தாயிரம் பேர் இந்த சென்னை மாநகரத்தை சுத்தம் செய்ய வந்திருக்க கூடாதா..?
எல்லா பகுதிகளிலிருந்தும் அருந்ததிய சமூகத்து மக்களை மட்டும் அழைத்துள்ளனர். பள்ளியில் படிக்கும் அவர்களின் பிள்ளைகளை வேறு கட்டாயப்படுத்தியுள்ளனர். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை ஒரு குறிப்பிட்ட தொழிலை, செய்ய சொல்லி கட்டாயப்படுத்துவது ஈனச்செயலாகும். மற்ற சமூகத்திலிருந்து ஏன் துப்புரவு பணிக்கு ஆட்களை அழைக்கவில்லை? ஆமாம், இந்த ஸ்வச் பாரத்//கிளீன் இந்தியா திட்டத்திற்கு போஸ் கொடுத்தவர்களை எல்லாம் அழைத்து ஏன் சுத்தம் செய்ய கூடாது?
அதிலும் பல ஆதிக்க சாதி வெறியர்கள், இது ஒன்றே அருந்ததியருக்கான சிறந்த வேலை வாய்ப்பு என்பது போல் பிதற்றுகிறார்கள். இவனுங்க எல்லாம் நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களா என இவர்களை படைத்த கடவுளுக்கே சந்தேகம் வரும். மற்ற நாடுகள் மனிதர்களை வைத்து செய்யகூடாது என்று மெஷின்களை நாடும் ஒரு பணியில் மனிதர்களை திணிப்பது தான் நாகரிக இந்திய பண்பாடா?

ஊழலை பாதுகாக்க ஒரு சட்டம்! ராஜஸ்தான் வசுந்த ராஜியின்( பாஜக) குற்றவியல் அவசரச் சட்டம் - 2017’

subramanian.ramakrishnan : ஊழலை ஒழிக்க முடியாததால் உண்மையை ஒளிக்க ஒரு சட்டம்!
தெருவிளக்கு
ஊழல் செய்திகளைத் தடுக்கும் அடக்குமுறைச் சட்டத்தை எதிர்த்து ராஜஸ்தான் ஊடகவியலாளர்கள் நடத்திய போராட்டம்
அ. குமரேசன்
ஊழல் ஒழிப்பே தனது முதன்மைக் கடமை என பாஜக ஆரவாரமாய்ச் சொன்னதெல்லாம் நினைவூட்டத் தேவையில்லாத புளித்துப்போன வசனங்கள். ஊழல் பற்றி வெளியே தெரிந்தால்தானே அதை ஏன் ஒழிக்கவில்லையென மக்கள் கேட்பார்கள் என்ற ஞானம் இப்போது ஊறியது போலும். ஊழல் நடக்காமலிருப்பதை உறுதிப்படுத்துவதற்கு மாறாக, ஊழல் வெளியே தெரியாமலிருப்பதை உறுதிப்படுத்த அவசரச் சட்டம் போட்டிருக்கிறது ராஜஸ்தான் மாநில பாஜக அரசு.
‘குற்றவியல் சட்டங்கள் (ராஜஸ்தான் திருத்தங்கள்) அவசரச் சட்டம் - 2017’ என்பது அதன் பெயர். அதைத் தொடர்ந்து முறையான சட்டத்திற்கான முன்வரைவு ஒன்றையும் கொண்டுவந்திருக்கிறது.

சென்னை மழை .. மக்கள் அவலம் ... மீண்டும் 2015 யை நினைவூட்டுகிறது .

கலைஞரின் கோபாலபுரம் வீட்டிலும் வெள்ளம்
K.S,Radhakirishnan: தலைநகரம் தத்தளிக்கிறது மழையில் ...... வெள்ள தண்ணீரால் தடுமாறுகிறது..... சென்னையில் தன் கடும் சீற்றத்தை தொடர்ந்து காட்டிக் கொண்டே இருக்கிறது மழை.. ஆறுகளை முறையாக பாதுகாக்காமல். வடிகால்களை நீர்வழிகளை ஆக்கிரமித்து அழித்ததே..... இந்த பாதிப்பிற்கு காரணம் திருந்தா சுயநல தகுதியற்ற ஆட்சியாளர்கள். இயற்கையை அழிக்க நினைப்பவர் களுக்கு மீண்டும் மீண்டும் எச்சரிக்கை செய்கிறது இயற்கை..... இயற்கையின் கோபத்திலிருந்து யாரும் தப்ப முடியாது . தொழில் சாலைகள், நிர்வாக கேந்திரங்களை பொருளாதார மேலாண்மை மாநிலமெங்கும் பரவலாக்கி இருக்கலாம்.
இதனால் லட்ச கணக்கில் தலைநகருக்கு வந்தோர் ஏராளம் .அதற்கான அடிப்படை வசதிகள்இல்லை. இடங்களை மடக்கி தங்களை வளர்த்து பெரிய மனிதர்களாக பாசாங்கு செய்யும் மக்கள் விரோத வியாபார கும்பல்தான் இதற்க்கு காரணம். இவர்கள்தான் சிங்கார சென்னையை பாழ்படித்தி அழித்து விட்டார்கள்.அவர்களுக்கும் விழா எடுத்து பாராட்டி கொண்டாடிகிறது சென்னை. மக்கள் தொகைக்கு ஏற்ப அடிப்படை வசதிகளை சரியாகவும் செய்யவில்லை . அதிலும் ஊழல் .... என்ன செய்ய...

சென்னை கடும் மழை ஆபத்து ? 200 mm மி மீ அளவு ... சாத்தியம் rainfall may ends with over 200 mm rainfall


Troll Trousers 2,0 : Chennai and Suburbs Heavy Rain Update, Dont be surprised if Chennai ends with over 200 mm rainfall

No sign of rains stopping as Rains are expected continue for some more hours. Yo can see the radar, how the band of clouds are keep on converging right over Chennai. The rains will be heavy at times and steady most of the time. Some of the rainfall amounts till now are Chennai City (Nungambakkam) - 158
Anna University (Guindy) - 157
Sathyabama University (Sholinganallur) - 133
Chennai Airport (Meenambakkam) - 124
Taramani - 121
Hindustan University (Kelambakkam) - 100
Thiruporur (Kovalam) - 100வியாழன், 2 நவம்பர், 2017

தனுஷின் ஆங்கிலப்படம் The Extraordinary Journey of the Fakir


ஹாலிவுட்டில் வரவேற்பைப் பெறும் தனுஷ்minnambalam : தமிழ் சினிமாவில் நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பன்முகங்களைக் கொண்டவர் தனுஷ். தமிழ் சினிமா மட்டுமல்லாது பாலிவுட், ஹாலிவுட் என பிஸியாகி இருக்கும் அவர், ஹாலிவுட்டில் நடித்திருக்கும் `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபக்கிர்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுவருகிறது.
தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் `வேலையில்லா பட்டதாரி 2'. இப்படத்தைத் தொடர்ந்து, தனுஷ் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் `எனை நோக்கிப் பாயும் தோட்டா', வெற்றி மாறன் இயக்கத்தில் `வடசென்னை' உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரன் அம்பானி...

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் அம்பானிமின்னம்பலம்: இந்தியாவின்  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவரான முகேஷ் அம்பானி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளதாக ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் சீனாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான எவர்கிராண்ட் குழுமத்தின் தலைவரான ஹூ கா யான் 40.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத் தலைவருமான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 42.1 பில்லியன் டாலர்களாக உயர்ந்ததையடுத்து ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக முகேஷ் அம்பானி உருவெடுத்துள்ளார்.

அரசுக்கும் மணல் இறக்குமதியாளர்களுக்கும் இடையே என்ன நடக்கிறது?

மின்னம்பலம்: தமிழகத்தில் தனியார் சிலர் மலேசியாவில்  இருந்து  மணலைத் தூத்துக்குடி துறைமுகத்துக்கு இறக்குமதி செய்தனர். ஆனால் அந்த மணலை துறைமுகத்தில் இருந்து வெளியே எடுத்து வருவதில் சிக்கல்கள் இருப்பதாகத் தகவல்கள் வெளிவந்தன.
துறைமுகத்தில் மணல் இருக்கும் ஒவ்வொரு நாளும் இரண்டு லட்ச ரூபாய் அபராதம் கட்டிவருவதாக மணலை இறக்குமதி செய்தவர்களின் தரப்பில் இருந்து குமுறல்கள் வெடித்தன. இந்நிலையில் மணல் இறக்குமதியை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை வைத்துள்ளார். இதுபற்றி இன்று (நவம்பர் 2) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் ஆறுகள் அனைத்தும் மணல் மாஃபியாக்களின் பிடியில் சென்றுவிட்டன.

ஏரிக்கரைகளை உடைத்தால் நடவடிக்கை!


ஏரிக்கரைகளை உடைத்தால் நடவடிக்கை!
மின்னாம்பலம் :காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏரிக்கரைகளை உடைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் மழை பெய்துவருகிறது. சென்னையில் கனமழை பெய்துவருவதால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுவருகிறது. கனமழையால் பல ஏரிகள் நிரம்பிவருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 67 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. அந்த மாவட்டத்தில் மிகப் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரியின் நீர்மட்டம் 18.6 அடியாக உயர்ந்துள்ளது. நந்திவரம், சோமங்கலம், ஒரட்டூர், பிள்ளைப்பாக்கம் உள்ளிட்ட 67 ஏரிகள் அதன் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 912 ஏரிகளும் நிரம்ப வாய்ப்பு உள்ளதாகப் பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

நடராஜன் வீடு திரும்பினார் ... சிகிச்சை வெற்றிகரமாக ..

tamilthehindu : மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட சசிகலாவின் கணவர் நடராஜன் முழு குணமடைந்து புதன்கிழமை மாலை வீடு திரும்பினார்.
கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயலிழப்பால் சென்னை குளோபல் மருத்துவமனையில் கடந்த மாதம் நடராஜன் அனுமதிக்கப்பட்டார். கல்லீரல் கிடைக்காமல் தள்ளிப்போகவே நடராஜனின் உடல் நிலை கவலைக்கிடமாக மாறியது. இடையில் அவரைப் பார்க்க சிறையில் இருந்து 5 நாட்கள் பரோலில் வந்து சென்றார் சசிகலா. மூளைச்சாவு அடைந்த இளைஞர் ஒருவரில் கல்லீரல் கிடைக்க நடராஜனுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

மழை .. 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

தினகரன் :சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நெல்லை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

BBC : இரட்டை குடியுரிமை .. இலங்கை பெண் எம்பி பதவி இழந்தார் .. முன்னாள் நடிகை கீதா குமாரசிங்கா

இலங்கையில் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான கீதா குமாரசிங்க இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ளதன் காரணமாக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளார். இலங்கை மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய இரண்டு நாடுகளிலும் குடியுரிமை பெற்றுள்ள அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வகிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

உயர்நீதிமன்ற துப்பரவு பணியில் BE, MBA,MCA, MA பட்டதாரிகள் .. நீதிபதிகள் அதிர்ச்சி!

Juliet Jenifar :துப்புரவுப் பணிக்கு பட்டதாரிகள் தேர்வாகியிருப்பதன் பிண்ணனி என்ன? வேலையின்மையா? துப்புரவுப் பணி பொதுப்பட்டியலுக்கு வந்துவிட்டதென்ற தோற்றத்தில், அவர்களின் பெயரில் கூலித்தொழிலாளர்களை பணிக்கமர்த்தும் திட்டமா?

Gopal Pillai Shanmugakani :சாலையோரத்திலே வேலையற்றவர்கள், வேலயற்றோரின் உள்ளங்களிலே விபரீத எண்ணங்கள். வேந்ததே! அதுதான் காலக்குறி - பேரறிஞர் அண்ணா. காலத்தின் கொடுமையைப் பாருங்கள். பொறியியல் பட்டதாரிகளின் நிலை இப்படியாக இருக்கிறது இவர்களின் ஆட்சியிலே. நமது மக்கள் ஆராயமல் அல்லது சிந்திக்காமல் வாக்களித்தன் பலனை நமது குழந்தைகள் அனுபவிக்கிறார்கள்.

ஜிம்"மில் உடற்பயிற்சி... தயாராகும் மு.க.ஸ்டாலின்.. youtube

mayura-akilan. Oneindia Tamil சென்னை: எதிர்கட்சித்தலைவரும், திமுக செயல்தலைவருமான ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
65 வயதைக் கடந்த மு.க.ஸ்டாலின் இன்றைக்கும் இளமையோடு இருக்கக் காரணம், அவரது உணவுக்கட்டுப்பாடு கூடவே உடற்பயிற்சியும்தானாம். கடந்த சில ஆண்டுகளாக யோகா மற்றும் வாக்கிங் மேற்கொண்டு வரும் ஸ்டாலின் இளமையான தோற்றத்துடன் இருக்கிறார். வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டையில் ஸ்டாலினை பார்த்தவர்கள் கடந்த ஆண்டு நமக்கு நாமே பயணத்தின் போது மாடர்ன் உடையில் பார்த்தார்கள்.

அறம்:. என்னிக்கு இந்த வாட்டர் பாட்டில் வந்ததோ ..... தண்ணீர் பிரச்சனை”!

அறம்: சமூக அவலங்களின் பிரதிபலிப்பு!
minnambalam :முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல படங்களில் நடித்துவரும் நயன்தாரா பிரதான பாத்திரத்தில் நடித்திருக்கும் ‘அறம்’ படத்தின் ட்ரெய்லர் நேற்று (நவம்பர் 1) மாலை வெளியாகியது.
சமூகப் பிரச்னைகளுள் ஒன்றான குடிநீர் பஞ்சத்தை மையமாகக்கொண்டு உருவாகியுள்ள இதில் மாவட்ட கலெக்டராக அரசியல்வாதிகளை எதிர்க்கும் கேரக்டரில் நயன்தாரா நடித்திருக்கிறார். “அஞ்சாறு மாசமா மழை இல்லாம இருந்தப்பகூட தண்ணீர் பஞ்சம் இல்ல... என்னிக்கு இந்த வாட்டர் பாட்டில் வந்ததோ அன்னிக்கே வந்தது இந்தத் தண்ணீர் பிரச்சனை”
என்கிற ஒற்றை வசனத்தின் மூலம் நிகழ்கால அரசியலை ஒரு சாமானியனின் மனநிலையைப் பிரதிபலிக்குமாறு அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார் இயக்குநர் கோபி நயினார்.