சனி, 6 மே, 2017

குஜராத் பில்கிஸ்பானுவின் வழக்கு திசைதிருப்பவே நிர்பயா வழக்கில் தூக்கு தீர்ப்பு!


kathir.vincentraj/ நீதியும் அரசியலும்: இரண்டு சம்பவங்கள். இரண்டு நீதிகள். இரண்டு சூழ்ச்சிகள். கடந்த 4.5.2017 அன்று மும்பை உயர் நீதிமன்றம் பல்கிஸ்பினு வழக்கில் குற்றவாளிகள் 11 பேருக்கு ஆயுள் தண்டனை கொடுத்தது. அதுமட்டுமின்றி 2 மருத்துவர்கள், 5 போலீசாருக்கும் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2002ம் ஆண்டு குஜராத் - கோத்ரா கலவரத்தின் போது பில்கிஸ்பானு 11 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டார். அவரது மகள் உட்பட பலரையும் அக்கும்பல் படுகொலை செய்த்து. அவரது உறவினர் கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிக்கு தான் தற்போது தீர்ப்பு சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த செய்தி பல தமிழ் பத்திரிக்கைளில் பதிவு செய்யப்பட்டவில்லை. அப்படியே ஒரு சில பத்திரிகையில் 8 வரி செய்தியாக ஒரு மூலையில் பதிவு செய்யப்பட்டது.
இரண்டாவது கடந்த 2012 டிசம்பரில் ஓடுகிற பேருந்தில் நிர்பயா கூட்டு பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு 5.5.2017 அன்று உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்தது.

பில்கிஸ் பானுவின் குடும்பத்தின் 14 பேரை வெட்டிக் கொன்றவர்கள் .. குஜராத்திலும் டெல்லியிலும் ஆட்சியில் !

ஒரு குடும்பத்தை வெட்டிக் கொலை செய்ய வைக்கிறது. தன் தங்கையைப் போன்ற – தன் மருமகளைப் போன்ற பெண்களை பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆட்படுத்துவதை நாகரிகமற்ற காட்டுமிராண்டித்தனமான செயல் என்று அது ஏற்க மறுக்கிறது.இத்தனையும் செய்வதற்கு  அரசு, காவல்துறை, நீதித்துறை, குற்றப்புலனாய்வுத்துறை ஒவ்வொன்றும் ஆதரவாக நிற்க நிர்ப்பந்திக்கப்படுகிறது; பயிற்றுவிக்கப்படுகிறது. குற்றவாளிகளின் பெயரெழுதாமல் விட்ட காவல்துறை, தவறான மருத்துவ ஆவணங்களை கொடுக்க துணைபோன அரசு மருத்துவர்கள், 14 பேர் கொல்லப்பட்ட ஒரு வழக்கை கூட காவல்துறை சொல்லி விட்டதே என்பதற்காக கண்மூடி ஏற்றுக் கொள்கிற நீதிமன்ற நடுவர், தன்னுடைய குடும்பத்தில் 14 பேரை பறி கொடுத்த துயரத்தில் இருக்கிற ஒரு பெண்ணை குற்றவாளிகளுக்கு எதிராகப் பேசாதே என மிரட்டும் குற்றப்புலனாய்வுத்துறை, புகார் செய்தவரையும் சாட்சி சொன்னவர்களையும் ஒழித்துக் கட்டிவிடுவதாய்ச் சொல்லும் குற்றவாளிகளின் ஆதரவாளர்கள் -இவையெல்லாம் ஒற்றைப்புள்ளியில் இணைகிறது.
theekkathir.in க. கனகராஜ் : மாநில செயற்குழு உறுப்பினர் – சிபிஐ (எம்)< பில்கிஸ் பானுவிற்கு இப்போது வயது 34. அப்போது வயது 19. அப்போது என்பது 2002ஆம் ஆண்டு மார்ச் மாதம். அந்த மாதத்தின் 3-ம் தேதி அவர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானார். அப்போது அவர் 5 மாத கர்ப்பிணி. கையில் 3 1/2 வயது குழந்தை இருந்தது. ஈத் பண்டிகைக்காக அவர் தாய் வீட்டிற்கு வந்திருந்தார்.

அமைச்சர் காமராஜ் மீது மோசடி மிரட்டல் வழக்குகள் பதிவு!

தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மீது மன்னார்குடி காவல் நிலையத்தில் சட்டப் பிரிவுகள் 420 (மோசடி), 506/1(மிரட்டல் விடுத்தது) ஆகியனவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த வழக்கு எந்தத் தேதியில் பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை.
மன்னார்குடியில் போலீஸ் உயர் பதவிகள் பல நிரப்பப்படாமல் உள்ளதால் இத்தகவலை உறுதிப்படுத்த மற்ற போலீஸார் முன்வரவில்லை.
இருப்பினும், அமைச்சர் காமராஜ் வழக்கு தொடர்பாக கடந்த 3-ம் தேதி முதல் டெல்லியில் முகாமிட்டுள்ள டிஎஸ்பிக்கள் அறிவானந்தம், அருண்குமார், துணை ஆய்வாளர் கழனியப்பன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.
கைதாவாரா காமராஜ்?
சட்டப் பிரிவு 420, சட்டப் பிரிவு 506 /1 ஆகிய இரண்டுமே ஜாமீன் பெறக்கூடியவையே என்பதால் அமைச்சர் காமராஜர் கைதாவார் என்று கூற முடியாது. அவர் ஜாமீன் பெற்று வழக்கை எதிர்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.

டெல்லி பாலியல் வன்முறையின் தலைநகரமாகிறது .. 2016ல் 2,155 பாலியல் வன்புணர்வு .. !


புதுடில்லி:நாட்டின் தலைநகரமாக திகழும் டில்லி கற்பழிப்பின் தலைநகரமாகவும் மாறி வருவதாகவும், தினந்தோறும் குறைந்தபட்சம் 4 பெண்கள் இங்கு கற்பழிக்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு ஓடும் பஸ்சில் மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா கற்பழிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கியது. அதன் பின்னர், டில்லியில் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்துகொண்டே வந்துள்ளது என்பது டில்லி போலீசாரின் வழக்குப்பதிவு தொடர்பான தகவல் திரட்டின் மூலம் தெரிய வந்துள்ளது கற்பழிப்பு வழக்குகள்:2013ம் ஆண்டில் 1,636 ஆக இருந்த கற்பழிப்பு வழக்குகள், 2014ல் 2,166 ஆகவும், 2015ல் 2,199 ஆகவும் அதிகரித்துள்ளது. பின்னர், 2016ல் 2,155 சம்பவங்களாகவும், இந்த (2017) ஆண்டில் மார்ச் 15ம் தேதிவரை டில்லியில் 300 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் டில்லி போலீஸ் துறையின் ஆவண குறிப்புகளின் வாயிலாக தெரியவந்துள்ளது தினமலர்

விரைவில் தமிழக பொதுத்தேர்தல்? ... சாதி, மதவாத கட்சிகள் முழு வீச்சுடன் களத்தில்!


தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் கூத்துகளைப் பார்க்கும் போது விரைவில் பொதுத் தேர்தல் நடைபெறலாம் என்றே கூறப்படுகிறது.
By: Lakshmi Priya சென்னை: தமிழகத்தில் விரைவில் பொதுத் தேர்தல் நடைபெறும் என்று மூத்த தலைவர்கள் அடித்து சொல்வது சாத்தியப்படுமா என்பது பற்றிதான் ஊரெல்லாம் பேச்சாக உள்ளது. ஜெயலலிதா உயிரிழந்து விட்டதும், அதிமுகவை சசிகலா கபளீகரம் செய்தது போல்
ஆட்சியையும் கைப்பற்றுவிடுவர் என்று பேச்சு பரவலாக இருந்தது. எனினும் அதற்கு முத்தாய்ப்பாக சசிகலாவும் பதவிக்காக எத்தனை சாணக்கியத்தனத்தை செய்தார் என்பதை இந்த நாடே அறியும். மேலும் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓபிஎஸ்ஸின் செயல்பாடுகளில் ஓரளவு திருப்தி அடைந்த பிரதான எதிர்க்கட்சியான திமுக,
சட்டசபையில் அதிமுகவுக்கு ஆதரவாக இருந்தது. இந்நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாவதற்குள் ஒருநாளாவது முதல்வராக இருந்துவிட்டால் நமது பெயரை சரித்திரம் சொல்லும் என்று தப்புக் கணக்கு போட்டார் சசிகலா. இதற்கு எதிர்க்கட்சிகள், ஏன் ஆளுங்கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஜெ.சமாதியில் பன்னீர் செல்வம் சசிகலாவுக்கு எதிராக எரிமலையாக வெடித்தார்.

மக்களை கொத்தடிமையாக்க ஆதார் அட்டை சதி? RSS நோக்கங்கள் நிறைவேறுகிறது?

கண்காணிப்புக் கருவியான ஆதார் அட்டையை மக்களின் மேல் திணித்து ஒரு சர்வாதிகார  பாசிச அரசாங்கத்தை நிறுவும் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது மோடி அரசு – அப்படிப் போகிற போக்கில் ”நீதிமன்றத்தின் மாண்பு” மலக்குழிக்குள் இறக்கி விடப்பட்டிருப்பது ஒரு துணை விளைவு தான். ஒருவேளை மோடியின் அரசு தனது இலக்கை அடையும் நிலை ஏற்பட்டால், நாம் மீண்டும் வரலாற்றின் இருண்ட கட்டம் ஒன்றுக்குள் நுழைய வேண்டியிருக்கும்.
மத்திய மாநில அரசுகளின் சகல துறைகளும் ஆதார் அட்டையைக் கோருவதால் மக்களின் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு சிறிய அசைவும், செயல்பாடுகளும் கூட ஆதார் இன்றி நிறைவேற்ற முடியாது என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.
போதை மருந்து கும்பல்களுக்கும் தீவிரவாதச் செயல்களுக்கும் நிதிமூலமாக கருப்புப்பணம் இருந்து வருகின்றது. எனவே, ஒரு நபரின் அடையாளத்தைப் போலி நகல் செய்ய முடியாத அளவுக்கு உறுதியான வழிமுறைகளை அமல்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது” என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் மத்திய அரசு வழக்குறைஞர் முகுல் ரோத்தகி.

வருமான வரி செலுத்துவதற்கும், பான் அட்டைகள் எடுப்பதற்கும் ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கும் அரசின் திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கின் போது கடந்த மே 2ம் தேதி மேற்படி வாதம் அரசு தரப்பில் வாதமாக சமர்பிக்கப்பட்டுள்ளது. அதாவது, பயன்பாட்டில் உள்ள பான் அட்டைகளில் நிறைய போலிகள் இருப்பதாகவும், போலி பான் எண்களின் மூலம் நடக்கும் வருமான வரி தாக்கலில் ஏராளமான தில்லுமுல்லுகள் நடப்பதாகவும், இதுவும் கருப்புப்பணத்திற்கு ஒரு முக்கிய காரணம் என்பதும் அரசின் வாதம்.

தமிழ்நாடு ஜாதிய அமைப்பால் நாசமாகி அழிய போவது உறுதி? அதுதான் பாஜகவின்... ?

Meena Somu  : அமித் ஷா தமிழகத்திற்கு வந்த போதே தேவேந்திர குலம், தேவர் ஆகிய ஜாதிகள் பிஜேபியின் பார்ப்பனிய அரசியலுக்குள் சென்றுவிட்டார்கள். ஏற்கனவே கவுண்டர், நாயக்கர், நாயுடு என கொங்கு பகுதியை ஜாதிவெறியை தூண்டி இணைத்தாகி விட்டது. நாடாரும், யாதவாக்களும் பிஜேபியின் அரவணைப்புக்குள் சென்றுவிட்டார்கள். இது தான் ஜாதியத்தை தூண்டி செய்யும் அரசியல். இதனால் அந்த ஜாதி மக்களின் வாழ்வாதாரம் முன்னேற போகிறதா என்ன ? இப்ப பிஜேபி பேசும் தேசிய வாதத்தாலோ ராமர் கோயிலாலோ பசு பாதுகாப்பினாலோ நம் வாழ்வாதாரம் முன்னேற்றம் கிடைக்குமா என்ன ?
பிஜேபியின் மதவாதம் வேறு, ஜாதியம் வேறல்ல. தமிழகம் இனியும் இதற்கான எதிர் நிலைப்பாடு எடுக்கவில்லை எனில் நாசமாக போவது உறுதி.
ஜாதி தான் தமிழகத்தின் அரசியலாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் ஜாதி எதிர்ப்பு நிலையான தலித்திய அரசியலை அடையாள அரசியல் என அபாண்டமாக பேசும் வாய்களுக்கு இந்த ஜாதி அரசியல் என்னவென்று புரியப்போவதில்லை.
யார் எதிரி என்ற அரசியல் அறிவற்றவர்கள் தங்களை கம்யூனிஸ்ட்டுகள் என சொல்லிக் கொள்வதும் தொழிலாளர் தினத்தில் கூட இந்த விஷமத்துடன் பதிவுகள் போட்ட புரட்சியாளர்களுக்கும் இந்த ஜாதி அரசியலோ பிஜேபியின் அஜெண்டாவோ புரியாத மாதிரியே நடிப்பார்கள். இவர்கள் எல்லாம் ஜாதிய அமைப்பிற்கு எதிரானவர்களாம். எனக்கு இவர்களின் நோக்கத்தில் சந்தேகம் வருகிறது. தொழிலாளர் தினத்தில் கூட இவர்களால் தொழிலாளர் உரிமைகள் குறித்தோ நசிந்து கொண்டிருக்கும் தொழிலாளர் யூனியன்களை குறித்தோ கொஞ்சமும் பேசவில்லை. அக்கறையற்ற இவர்களின் இந்த நிலைப்பாடு தொழிலாளர் விரோதமாகவே தோன்றுகிறது.

காந்தி - ராஜாஜி பேரன் கோபாலகிருஷ்ண காந்தி குடியரசு தலைவர் வேட்பாளராகர்? எதிர்கட்சிகள் ஆலோசனை!

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தியை நிறுத்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.
தற்போதைய இந்தியாவின் ஜனாதிபதியாக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தியை நிறுத்த ஆலோசனை நடந்து வருகிறது. மகாத்மா காந்தி மற்றும் மூதறிஞர் ராஜாஜியின் பேரனான இவர் ஐ.ஏ.எஸ். படித்து 1968 ஆம் ஆண்டு முதல் 1985 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் பணிபுரிந்துள்ளார். அதன் பிறகு துணை ஜனாதிபதியின் செயலாளராகவும், ஜனாதிபதியின் இணை செயலாளராகவும் பணியாற்றினார்.

மருத்துவ மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு ரத்து : உயர்நீதிமன்றம்!

மருத்துவ மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு  ரத்து : உயர்நீதிமன்றம்!
மின்னம்பலம் : மருத்துவ மேற்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை, இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிமுறைப்படிதான் நடக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு மத்திய அரசு நீட் நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கியது. மேலும், மருத்துவ மேற்படிப்பில் கிராமப்புற சேவை செய்யும் மருத்துவர்களுக்கான 50% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. சேலத்தைச் சேர்ந்த மருத்துவர் ராஜேஷ் வில்சன் தொடர்ந்த வழக்கில், தமிழகத்தில் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளை பின்பற்றி நடத்த வேண்டும் என தனி நீதிபதி புஷ்பா சத்யநாராயணா உத்தரவிட்டிருந்தார்.

நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை!

சென்னை தி.நகரில் அபிபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்கத்திற்கு சொந்தமான காலி இடம் உள்ளது.இந்த இடத்தில் 33 அடி பொது சாலையை ஆக்கிரமித்துள்ளதாகவும். அங்கு நடிகர் சங்கம் பிரமாண்ட கட்டடம் கட்ட சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளதாகவும், பொது சாலையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்ட தடை விதிக்க வேண்டும் என்றும் அப்பகுதியை சேர்ந்த ஸ்ரீரங்கன் மற்றும் அண்ணாமலை ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் கட்டிடம் கட்ட அனுமதி வழங்கிய சி‌எம்டிஏ, மாநகராட்சி அதிகாரிகளை கட்டிடம் கட்ட அனுமதி அளித்த ஆவணங்களை தாக்கல் செய்து நேரில் ஆஜராக உத்தரவிட்டு இருந்தார்கள்.  விஷால் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்

நிர்பயாவின் இறுதி வாக்குமூலம் : குற்றவாளிகளை உயிரோடு கொளுத்தவேண்டும் !

குற்றவாளிகளை உயிரோடு எரிக்க வேண்டும் என பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மருத்துவ மாணவி நிர்பயா இறக்கும் தருவாயில் டெல்லி மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளித்திருந்தார்.
By: Lakshmi Priya
டெல்லி:
உயிரோடு எரிக்க வேண்டும்
என்னை நாசப்படுத்திய அத்தனை குற்றவாளிகளையும் உயிரோடு கொளுத்த வேண்டும் என பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மருத்துவ மாணவி நிர்பயா இறக்கும் தருவாயில் டெல்லி மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளித்திருந்தார். கடந்த 2012-ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர் தன் நண்பருடன் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது யாரும் இல்லாத இடத்தில் அந்த நண்பரை தாக்கிவிட்டு அந்த மாணவியை பஸ் கண்டக்டர் உள்பட 6 பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இச்சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்ற அவர் 12 நாள்களுக்கு பின்னர் உயிரிழந்துவிட்டார். இது தொடர்பாக 18 வயது சிறுவன் உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் சிறையில் தற்கொலை செய்துகொண்டார்.

கொடநாடு கொலை கொள்ளை ... எல்லாம் ஊத்தி முடியாச்சு ... மத்திய மாநில பங்கு பிரிக்கிற சண்டை மட்டும்தான் நடக்கிறது

ஜெயலலிதாவின் கொடநாடு
எஸ்டேட் கொலை-கொள்ளை வழக்கில் முதலில் கைது செய்யப்பட்டவர்கள் சந்தோஷ், சிபு, சதீசன். இவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் மற்றும் கோவை மதுக்கரையைச் சேர்ந்த சயான் ஆகியோருக்கு போலீஸ் வலைவிரித்தபோது, விபத்தின் மூலம் சாவைத் தேடிக்கொண்டார் கனகராஜ். கேரளாவில் நடந்த விபத்தில் மனைவி, குழந்தையைப் பறிகொடுத்துவிட்டு, இப்போது கோவை தனியார்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் சயான்.<போலீசின் காமெடி!>மூவர் சிக்கி, ஒருவர் செத்து, ஒருவர் சிகிச்சையில் இருக்கும் நிலையில் போலீஸ் தரப்பிலிருந்தே ஒரு போட்டோவை பரவவிட்டார்கள். ""கொடநாடு பங்களாவுக்குள் புகுந்த கொள்ளையர்கள் ஜெயலலிதாவின் கைக்கடிகாரங்களையும் அழகு சாதனப் பொருட்களையும்தான் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கடிகாரம் தங்கள் வசம் இருந்தால் மாட்டிக் கொள்வோம் எனக்கருதி, கேரளா போகும் வழியில் ஓர் ஆற்றில் வீசிவிட்டுச் சென்றனர்''-’ பத்திரிகையாளர்களிடம் இப்படிச் சொன்னார் நீலகிரி எஸ்.பி.முரளி ரம்பா. ""கேரளாவில் விபத்துக்குள்ளான சயானின் காரில் இந்த வாட்சுகளும் பளிங்குக் கல்லால் ஆன காண்டாமிருகச்சிலையும் இருந்ததாக கேரள போலீஸ் சொல்கிறார்களே?'' என பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, “""அப்படியா... அதை கேரள போலீஸ்கிட்டதான் கேக்கணும்'' என மழுப்பிவிட்டு எஸ்கேப்பானார் எஸ்.பி. ஆற்றில் வீசப்பட்ட வாட்சுகள், சயானின் காரில் சிக்கியது எப்படி,  கேரள போலீசின் கைகளுக்குப் போனது எப்படி? என்பதற்கு விடைதான் கிடைக்கவில்லை ஜெயலலிதா கைக்கடிகாரமாம்

ஜெயாவின் சொத்தில் 40 வீதம் ஆட்சியிலும் 40 வீதம்.. பேரம் படியல்லைன்னா திகார் .. அடிமைகளிடம் தமிழகம்.... ஓநாய்களிடம் ....?

ஹார் சிறையில் இருக்கிறார் தினகரன்.
அவர் கைது செய்யப்பட்டதில் பல ரகசிய பேரங்கள் இருக்கின்றன'' என்கிறார்கள் டெல்லியைச் சேர்ந்தவர்கள்.டி.டி.வி. தினகரனிடம் விசாரிக்கும் டெல்லி போலீசார், அவர் தொடர்பான வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றுவார்கள் என நாம் கடந்த இதழில் எழுதியிருந்தோம். ஆனால் மத்திய அரசு சி.பி.ஐ.யை விட மிக வலுவான பொருளாதாரக் குற்றங்கள் தொடர்புடைய விசாரணை அமைப்பான அமலாக்கத்துறைக்கு இந்த வழக்கை மாற்றிவிட்டது. >"ஏன் இந்த கடுமை' என கேட்டதற்கு, ""தினகரன் தனது வாழ்நாள் முழுவதும் ஒரு பெரிய ஹவாலா ஆபரேட்டராக இருந்திருக்கிறார். அவரது பாஸ்போர்ட்டை 91-96 காலகட்டத்தில் அமலாக்கத்துறை முடக்கிவிட்டது. ஆனால் உலகம் முழுவதும் அவரது கை நீண்டு நிற்கிறது'' என சொன்னவர்கள் அதை விலாவாரியாக விவரிக்கத் தொடங்கினர்
மொரீஷியஸ் தீவில் ஏதாவது முகவரியை வைத்து நீங்கள் ஒரு கம்பெனியை ஆரம்பித்தால் அதன் வங்கிக் கணக்கில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்யலாம். அந்த வங்கிக் கணக்குகளில் இருந்து முதலீடு செய்த பணத்தை இந்திய வங்கிகளுக்கு மாற்றலாம். இந்தியாவில் கணக்கு காட்டப்படாத ஊழலில் சம்பாதித்த பணத்தை மொரீஷியஸ் தீவுக்கு அனுப்பினால் அங்கிருந்து ஒரு பினாமி பெயரில் நல்ல பணமாக இந்தியாவுக்குள் கொண்டுவரலாம்.

கலைஞர் 94 வது பிறந்தந்த நாள்விழா..சோனியா காந்தி , நிதிஷ்குமார் ,லாலு பிரசாத் உட்பட ஏழு மாநிலங்களின் முதல்வர்கள்.வருகிறார்கள்! கனிமொழி நேரில் அழைப்பு!

DMK MP Kanimozhi inviting Lalu prasad yadav for DMK Leader Karunanidhi's birth day திமுக தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்த நாள் விழாவிற்காக லாலு பிரசாத் யாதவுக்கு அக்கட்சியின் எம்பி கனிமொழி நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தார்.
By: Kalai Mathi  :டெல்லி: திமுக தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்த நாள் வரும் ஜூன் 3ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த விழாவிற்காக லாலு பிரசாத் யாதவுக்கு அக்கட்சியின் எம்பி கனிமொழி நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தார். திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளுடன் வைர விழாவை பிரமாண்டமாக கொண்டாட திமுக முடிவு செய்துள்ளது. இதில் பீகார், மேற்குவங்கம் உள்ளிட்ட 7 மாநில முதல்வர்கள் இந்த விழாவில் பங்கேற்பார்கள் என அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

குமுதம் இதழை முழுங்கும் வரதராஜன் (பி.வி.பார்த்தசாரதி மகன்).. ஜவகர் பழனியப்பன் ( எஸ்.ஏ.பி.அண்ணாமலை மகன்) போராட்டம்!

tamil.splco.me : Special Correspondentஜவஹர் பழனியப்பனின் தந்தை எஸ்.ஏ.பி. அண்ணாமலையால் 1947 ஆம்
ஆண்டு குமுதம் பத்திரிகை தொடங்கப்பட்ட போது பி.வி.பார்த்தசாரதி(வரதராஜனின் தந்தை) மாத சம்பளம் பெற்று மேலாளராக பணிபுரிந்தார். எஸ்.ஏ.பி. அண்ணாமலை கடுமையாக உழைத்து குமுதத்தை தமிழகத்தின் / இந்தியாவின் மிக அதிக பிரதிகள் விற்கும் பத்திரிக்கையாக மாற்றினார். இவரின் மகன் ஜவஹர் பழனியப்பன் அமெரிக்காவில் மிகப்பெரிய ஹார்ட் சர்ஜன்ட்டாக முழு நேரமும் இருப்பதால், பெரியவர்கள் இருவரின் மறைவுக்கு பின் பத்திரிக்கை நிர்வாகம் முழுதும் பார்த்தசாரதி மகன் வரதராஜன் கையில் நம்பி ஒப்படைத்தார், மேலும் வரதராஜனுக்கு குமுதத்தில் குறிப்பிட்ட அளவு பங்கும் வழங்கப்பட்டது, ஆனால் அதற்கான பணத்தை வரதராஜன் இதுவரை செலுத்தவில்லை.

வெள்ளி, 5 மே, 2017

பாஜகவின் குடியரசு தலைவர் வேபாளர் திரௌபதி முர்மு? ஓடிஸா பழங்குடி ,முன்னாள் அமைச்சர் ..

ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிவடையும் நிலையில், பாஜக சார்பில் திரௌபதி முர்மு என்ற பழங்குடியின பெண் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளார்.
By: Amudhavalli பாஜகவின் மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி,ரஜினி  ஆகியோர் பெயர்கள் வேட்பாளர் பெயருக்கு அடிப்பட்டன.  இதனைத் தொடர்ந்து, இந்திய ஜனாதிபதி வேட்பாளராக திரௌபதி முர்முவை பிரதமர் மோடி தேர்வு செய்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளராக பாஜகவால் முடிவு செய்யப்பட்டுள்ள திரௌபதி முர்மு ஜார்கண்ட் மாநிலத்தில் ஆளுநராக தற்போது உள்ளார். 20 ஆண்டுகளாக அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள அவர் நீண்ட அரசியல் அனுபவம் உள்ளவர் என்று பாஜக தரப்பில் கூறப்பட்டு வருகிறது. ஓடிஷா மாநிலத்தில் எம்எல்ஏவாக இருந்த திரௌபதி முர்மு சிறந்த எம்.எல்.ஏ.விற்கான விருதினைப் பெற்றுள்ளார். அதே போன்று நிலகந்தா விருது 2007ம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்டது.

உயர்நீதிமன்றம் : மதுக்கடைக்கு எதிராக போராடுபவர்களை மீது ஏன் வழக்குப் பதிவு செய்கிறீர்கள்?

மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்தியர்களின் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுக்கடைக்கு எதிராக போராடுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வது ஏன் என்றும் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. திருமுல்லைவாயிலில் கடந்த ஏப்ரல் 27-ம் தேதி மதுக்கடையை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது சிலர் கடையின் மீது கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக போலீஸார் 21 பேரை கைது செய்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரசன்னா என்பவரின் தாயார் மரணமடைந்ததால் அவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள பிரசன்னா சார்பாக பரோல் கேட்டு மனு அளிக்கபட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிரசன்னாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். ஆனால் நீதிமன்றத்திடமிருந்து உத்தரவு ஆணை வரவில்லை என்று சிறைத்துறை பிரசன்னாவை ஜாமீனில் விடுவிக்க மறுத்துவிட்டனர்.

சீனா தயாரித்த பெரிய விமானம் .. போயிங் ,ஏர்பஸ்களுக்கு சவாலாக சீனாவின் சி 919 விமானம்

போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்களுக்கு மாபெரும் சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படும் சீனாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது பெரிய பயணியர் விமானம், அதனுடைய முதலாவது பயணத்தை மேற்கொண்டுள்ளது.
 சி919 விமானத்தில் இருக்கை வரிசைகளுக்கிடையே பயணிகள் நடக்கக் ஒற்றை இடைவெளி உள்ளது. இரண்டு எந்திரங்கள் பொருத்தப்பட்டு 168 பேர் வரை ஏற்றி செல்லக்கூடியது ஷாங்காயிலுள்ள புதொங் விமான நிலையத்தில் இருந்து சாதாரணமாக மேலேழுந்து பறந்ததாக தோன்றிய காணொளியை சீன அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியது. உலகளாவிய விமானச் சந்தையில் நுழைவதற்கு சீனாவின் அதிகரித்துள்ள அபிலாஷையின் முக்கிய அடையாளமாக சி919 விமானம் பார்க்கப்படுகிறது. சீனா நடத்துகின்ற கோமேக் விமானத் தயாரிப்பு நிறுவனம் இந்த வெள்ளோட்டத்தை 2008 ஆம் ஆண்டில் இருந்தே திட்டமிட்டு வந்துள்ளது. ஆனால் அந்த முயற்சி மீண்டும் மீண்டும் தள்ளிப்போடப்பட்டு வந்தது.

நடிகை ரேகா சிந்து கார் விபத்தில் உயிரிழந்தார் .. வேலூரில் .. கன்னட தொலைக்காட்சி.. அமிர்தா விளம்பரம் ..

வேலூர்: கன்னட டிவி சீரியல் நடிகை ரேகா சிந்து சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் பலியானார். கன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் பெங்களூரை சேர்ந்த ரேகா சிந்து(22). சென்னைஸ் அமிர்தா விளம்பர படத்திலும் நடித்துள்ளார். அவர் பெங்களூரில் இருந்து காரில் சென்னைக்கு வந்துள்ளார். வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தத்தில் கார் சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரேகா சிந்து சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் இந்த சம்பவத்தில் காரில் இருந்த அபிஷேக் குமரன்(22), ஜெயசந்திரன்(23), ரக்ஷன்(20) ஆகியோரும் பலியாகியுள்ளனர்.

கலைஞர் உடல் நிலை தற்போதைய நிலவரம்!

டிஜிட்டல் திண்ணை: கருணாநிதி உடல்நிலை எப்படி இருக்கு? : கோபாலபுரம் ரிப்போர்ட்!மின்னம்பலம் :  ‘திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். சீரான நிலையில் அவரது உடல்நிலை உள்ளது. மருத்துவர்களிடமிருந்து அனுமதி கிடைத்தால் அடுத்த மாதம் அவரது பிறந்த நாளில் நிச்சயமாக அவர் கட்சி நிர்வாகிகளைச் சந்திப்பார்’ என்று, திமுக-வின் செயல் தலைவர் ஸ்டாலின் சொல்லியிருந்தார். கருணாநிதியின் உடல்நிலை ஸ்டாலின் சொன்னதுபோலத்தான் இருக்கிறதா... அவர் பிறந்த நாளில் கட்சிக்காரர்களை சந்திப்பாரா? என்பதுதான் இப்போது திமுக-வில் அனைவரது கேள்வியாகவும் இருக்கிறது. கருணாநிதியின் உடல்நிலை குறித்து விவரமறிந்தவர்களிடம் விசாரித்தோம். ‘கருணாநிதிக்கு மருத்துவமனையில் இருந்தபோதே ஆக்சிஜன் செலுத்துவதற்கு தொண்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. டிராக்கியோஸ்டமி எனப்படும் இந்த சிகிச்சையின் மூலமாகத்தான் கருணாநிதிக்கு செயற்கை சுவாசம் செலுத்தப்பட்டது. மருத்துவர் மோகன் காமேஷ்வரன் அடிக்கடி கோபாலபுரத்துக்கு வந்து கருணாநிதி உடல்நிலையை கவனித்து வருகிறார்.

50 வீதம் கையூட்டு கேட்ட அதிமுக அரசு ! கியா நிறுவன அதிகாரி தகவல் !கியா வாகன தொழிற்சாலை ஆந்திராவுக்கு ஓடியது!

Kannan Ramasamy :The TN politicians demanded 50% more than the official cost of the land as bribe.
TN has not only lost the 1.1. Billion USD from Kia but also the allied ancillary investments of more than the Kia figure. More than that, huge employment opportunity is lost for the TN Youth and auto professionals.
இன்ஃப்ராடெக் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கண்ணன் ராமசாமி கூறியுள்ளார். ‘‘ 390 ஏக்கர் நிலத்திற்கான அதிகாரப்பூர்வ விலையை விட 50% கூடுதல் தொகை கையூட்டாக தரப்பட வேண்டும் என்று ஆட்சியாளர்கள் கோரினார்கள். வரி விடுமுறை, மின் கட்டணச் சலுகை, சாலைகள், தண்ணீர், கழிவு நீர் வெளியேற்றும் வசதி, திட்டங்களுக்கு உடனடி ஒப்புதல் உள்ளிட்ட சலுகைகளை கியாகேட்டபோது, அதற்குத் தனியாக பெருந்தொகையை கையூட்டாகத் தரும்படி ஆட்சியாளர்கள் கேட்டனர். அதனால் தான் கியா வெளியேறியது’’ என்று கண்ணன் ராமசாமி குற்றஞ்சாற்றியிருக்கிறார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை அருகே ரூ.10,000 கோடி செலவில் ஆண்டுக்கு 3 லட்சம் மகிழுந்துகளை தயாரிக்கும் திறன் கொண்ட தொழிற்சாலையை அமைக்க ஒப்புக்கொண்டிருந்த கியா மகிழுந்து நிறுவனம், இப்போது அத்திட்டத்தை கைவிட்டு, ஆந்திராவில் தொழிற்சாலை தொடங்க முன்வந்திருக்கிறது. இதற்குக் காரணம் தமிழக ஆட்சியாளர்கள் கேட்ட அளவுக்கு அதிகமான கையூட்டு தான் என்பது வெட்கக்கேடானதாகும். தென்கொரியாவைச் சேர்ந்த ஹுண்டாய் மகிழுந்து நிறுவனத்தின் துணை நிறுவனமான கியா கடந்த மூன்று ஆண்டுகளாகவே இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது.

டில்லி நிர்பயா வழக்கில் 4 பேருக்கு தூக்கு ... உச்சநீதிமன்றம் உறுதி செய்தது!

புதுடில்லி:
டில்லியில், மருத்துவ மாணவி, 'நிர்பயா' பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்ட வழக்கில், மரண தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்இன்று (மே-5) தீர்ப்பளித்தது. இதில் குற்றவாளிகள் 4 பேர் தண்டனையை ரத்து செய்ய முடியாது என தெரிவித்து விட்டதால் மரணத்தண்டனை உறுதியானது. விரைவில் தண்டனை நிறைவேற்றப்படும் நாள் அறிவிக்கப்படும். தீர்ப்பு வாசிக்கப்பட்ட போது கோர்ட்டில் கூடியிருந்தவர்கள் கை தட்டி வரவேற்றனர்.கடந்த 2012ல், டில்லியில் மருத்துவ படிப்பு படித்து வந்த மாணவியை, ஓடும் பஸ்சில் ஆறு பேர் அடங்கிய கும்பல், கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொடுங்காயம் ஏற்படுத்தியது. சிங்கப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 2012-ம் ஆண்டு டிசம்பரில் உயிரிழந்தார்.நாட்டையே உலுக்கி எடுத்த இச்சம்பவத்தால் டில்லி முழுவதும் மாணவ அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தினர்....   எங்கே போனான் அதைப்பொறுக்கி 18 வயசு அவன்தான் பெரிய தப்பே செய்துருக்கான்

விகடனின் வட கொரியா அபத்தங்கள் ... அதிகம் வாசிக்காத, நுனிபுல் மேயும் சில எழுத்தாளர்களால்

Image may contain: 1 person, standing and outdoorபொதுவாக பத்திரிகைகளுக்கு சமூக பொறுப்பும் நாட்டுபற்றும் வேண்டும், தமிழக பத்திரிகைகளுக்கு சுத்தமாக இரண்டும் இல்லை, சரி உலக செய்திகளிலாவது உண்மை சொல்லலாம் அல்லவா? அதுவும் இல்லை
வடகொரிய அதிபரை பற்றி விமர்சனங்களை அள்ளிவிடுகின்றார்கள், அதுவும் பெரும் பொய்களை, உண்மை தன்மையினை வரலாற்றை மறைத்து அள்ளிவிடுகின்றார்கள்
அதில் ஆனந்த விகடனும் சிக்கியிருக்கின்றது, என்னமோ தெரியவில்லை பாரம்பரியமிக்க அந்த பத்திரிகை சில அனுபவமில்லா நிரூபர்களை எழுதசொல்லி அபத்தத்தில் சிக்குகின்றது
ஒரு மனிதனை அடிக்கும் முன்னால் அவனின் பிம்பத்தை அடித்து நொறுக்குவது அமெரிக்க ஸ்டைல், அப்படி இப்பொழுது வடகொரிய தலைவரின் இமேஜை கெடுக்கும் விதமாக , குடி ஆபாசம் நீலபடம் பார்ப்பவர், கொடூரர் என உலக மீடியா மூலம் கசிய விட்டிகொண்டிருக்கின்றார்கள், உலக மீடியா எல்லாம் அவர்கள் கட்டுபாடு, அதுதான் உண்மை
அதனை அப்படியே நம்பிகொண்டு ஆனந்தவிகடனில் எழுதபடும் கட்டுரைகள் சரியான அளவு அல்ல‌

கொடநாடு கொலைகளில் அமைச்சர்கள் சிக்குகிறார்கள்

கொடநாட்டில் நடந்த கொலை-கொள்ளை வழக்கில், குற்றவாளிகளின் மொபைல் போன் எண்களை வைத்து நடத்திய விசாரணையில்,முன்னாள் அமைச்சர் ஒருவரும் பல முக்கிய அரசியல் புள்ளிகளும் விசாரணை வளையத்துக்குள் வர உள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கொட நாடு எஸ்டேட்டில் கடந்த மாதம் 24-ந்தேதி கொலை- கொள்ளை நடந்தது. காவலாளி ஓம்பகதூரை கொலை செய்த மர்ம கும்பல் நிறைய ஆவணங்கள் மற்றும் நகைகளை அள்ளிச் சென்றது. போலீசார் நடத்திய விசாரணையில் 11 பேர் கும்பல் இந்த கொலை- கொள்ளையை செய்திருப்பது தெரிய வந்தது. இதில் முக்கிய குற்றவாளியான ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் கடந்த 28-ந்தேதி சேலம் அருகே நடந்த விபத்தில் பலியானார். அவரை தவிர மற்ற 9 பேர் போலீசாரிடம் சிக்கி விட்டனர். அவர்களில் மற்றொரு முக்கிய குற்றவாளியான சயன் என்பவன் விபத்தில் காயம் அடைந்ததால் கோவையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான்.இவர்களிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணை மூலம் கொடநாடு எஸ்டேட் கொலை - கொள்ளையில் அடுத்தடுத்து அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைத்து வருகின்றன.

அமெரிக்காவில் 'ஒபாமா கேர்' திட்டத்தை ரத்து செய்வதற்கான மசோதா நிறைவேற்றம்

அமெரிக்க பாராளுமன்றத்தில் ஒபாமா கேர் திட்டத்தை ரத்து செய்வதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கென நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்காவில் 'ஒபாமா கேர்' திட்டத்தை ரத்து செய்வதற்கான மசோதா நிறைவேற்றம் வாஷிங்டன்: அமெரிக்க பாராளுமன்றத்தில் ஒபாமா கேர் திட்டத்தை ரத்து செய்யப்பட்டு. அதிபர் டொனால்டு டிரம்ப் புதிய சுகாதார திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கென பாராளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். புதிய மசோதாவை வெற்றி பெற செய்யும் வாக்கெடுப்பில் குடியரசு கட்சி தேவையான அளவு வாக்குகளை மட்டும் பெற்று வெற்றி பெற்றுள்ளது.

சிஏஜியின் அறிக்கை: பிரதமரே மக்களிடம் பொய்யான தகவலை பரப்பி உள்ளார்

trollmafia2  :   மோடி புளுகு : மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து சாதாரண மக்களுக்கு வழங்கப்படும்
மானியங்களே வளர்ச்சிக்கு தடைக்கல்லாக உள்ளது என கூறி வந்தனர். இதைத்தொடர்ந்தே பல மக்கள் நலத்திட்டங்களுக்கான மானியம் வெட்டிச்சுருக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக வசதி படைத்தவர்கள் எரிவாயுக்கான மானியத்தை விட்டுக் கொடுக்க கோரி கிவ் இட் அப் என்ற திட்டத்தை விளம்பரப்படுத்தப்பட்டது.
இந்த விளம்பரம் எரிவாயுவிற்கான மானியம் பெறுபவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்பது போன்று சித்தரித்து பல கோடி ரூபாய் செலவில் விளம்பரம் செய்யப்பட்டது.
பின்னர் இந்த விளம்பரத்தின் மூலம் நாட்டில் எரிவாயு மானியத்தை தானாக முன்வந்து மானியத்தை வேண்டாம் என்றதன் பலனாக ரூ 22000 கோடி அரசுக்கு மிச்சமானது என்று மோடி அரசு மார்தட்டி வந்தது. இதன் மூலம் நாட்டில் எரிபொருளுக்கு மானியம் பெறுபவர்களை குற்றவாளிகள் என்ற எண்ணத்திற்கு கொண்டு செல்ல அவ்வப்போது மோடியும் அவரது அமைச்சரவை வட்டாரங்களும் முயன்று வந்தனர்.

அடேய் நாங்க இந்துக்களே கிடையாது .. பார்ப்பனியத்தை ஏண்டா எங்களாண்ட திணிக்குறீங்க?

Image may contain: foodleftside ல சாராயம், right side ல vsop பிராந்தி, left ல ஒரு கவர் இருக்கு பார், அது தான் கள்ளு. fresh கள்ளு.
இதான் எங்க குலசாமி, எவ்ளோ சிம்பிளா வேப்ப மரத்துக்கு கீழ தன்மையா இருக்கு. எளிமையான நம்பிக்கை, ஆடம்பரம் இல்லாத ஜோடிப்பு, கருவாடு, முட்டை, கோழின்னு நாங்க என்ன என்னத்தையெல்லாம் திங்குறோமோ அதையெல்லாம் படையல் போடுவோம்.
என்ன செய்யணும், என்ன செய்ய கூடாதுன்னு எவனும் எங்களுக்கு பாடம் எடுத்ததில்லை, மாத விடாய் சொல்லி பெண்களை துரத்த மாட்டாங்க, கடவுளர் சிலைகளை பெண்கள் தொட கூடாதுன்னு சொல்ல மாட்டாங்க, பொம்பளைங்க பொங்கல் வைப்பாங்க, பூசை போடுவாங்க, அவங்களே சகலமும் செய்வாங்க.
சம்பிரதாயம், வேதம், மட்டை, கெண்டைக்கால் மசுருன்னு தேவையில்லாத எந்த ஆணியும் இல்லை.
அசைவம் உண்பவர்கள் ஹிந்துக்கள் கிடையாதுன்னு எச் ராஜா சொன்னாரா இல்லையா தெரியாது, ஆனா சொல்லக்கூடியவங்க தான் நீங்கலாம். ஆனா அதையே தான் நாங்களும் சொல்றோம், நாங்க இந்துக்களே கிடையாது, எங்க வழக்கத்தை உங்களாண்ட நாங்க திணிக்கிறது இல்ல, நீங்க தான் வெக்கம் கெட்டு போய் பார்ப்பனியத்தை எங்களாண்ட தினிக்குறிங்க.
எங்களுக்கு எதுகிங்கிறேன்?

90 நிமிடம் அதிகமாக தங்கிய அவுஸ்திரேலியருக்கு 6 மாத சிறை .. அமெரிக்க குடிவரவு அதிகாரிகள் அதிரடி!

விசா காலம் முடிவடைந்து மேலதிகமாகத் தொண்ணூறு நிமிடங்களை மட்டுமே தங்கியிருந்த அவுஸ்திரேலியப் பிரஜை ஒருவரை அமெரிக்க குடிவரவு அதிகாரிகள் கைது செய்து சிறையிலடைத்தனர். பாக்ஸ்டர் ரீட் (26) என்ற அவுஸ்திரேலிய இளைஞர், கடந்த மாதம் தனது அமெரிக்க தோழியுடன் நியூயோர்க் சென்றிருந்தார். அங்கிருந்து கனடாவுக்குச் செல்ல நினைத்த ரீட், அமெரிக்க-கனடிய எல்லைக்குச் சென்றார். ரீட்டின் விசா காலம் ஏப்ரல் 23ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவுக்கு வரவிருந்தது. கனடிய எல்லைப் பகுதிக்கு அமெரிக்க நேரப்படி இரவு 10 மணிக்குச் சென்றார் ரீட். அவரைக் காத்திருக்குமாறு கூறிய கனடிய குடிவரவு அதிகாரிகள் சிலர், அதிகாலை ஒன்றரை மணியளவில், ரீடுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிவித்ததுடன், ரீடை அமெரிக்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

வியாழன், 4 மே, 2017

இந்தியை கட்டாய படமாக்க முடியாது .. உச்சநீதிமன்றம் தீர்ப்பு ! நாளையே வேறொருவர் சமஸ்கிருதத்தை கேட்கக்கூடும் .. நானே பஞ்சாபியை கேட்கக்கூடும்..

“Look the court cannot interfere in such issues. Today you are asking for Hindi. Tomorrow somebody will come to court and ask for making study of Sanskrit mandatory. You and me would ask for Punjabi” .. இந்தியை கட்டாய பாடமாக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. டெல்லி: நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை இந்தி பாடத்தை கட்டாயமாக்க கோரி தாக்கல் செய்த பொது நல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 8 ஆம் வகுப்பு வரை இந்தியை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் அஸ்வினிகுமார் உபாத்யாயா உச்சநீதிமன்றத்தில் பொது நலமனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் நீதித்துறையில் இருப்பவர்கள்கூட பெரிய அளவில் மொழிப் பிரச்சனையை சந்திக்கின்றனர், மொழிப் பிரச்சனைக்கான தீர்வு இந்தியை கட்டாய பாடமாக்குவதாகத்தான் இருக்கும் என குறிப்பிட்டிருந்தார்.
மேலும் சகோதரத்துவம், ஒற்றுமை, தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக மும்மொழி கொள்கையின் அடிப்படையில் இந்தி மொழியை பள்ளிகளில் அமல்படுத்துத்துமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் இந்தி மொழியை கட்டாயப் பாடமாக்க கோரி தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.tamiloneindia

சில்க் ஸ்மிதா .. வினுசக்ரவர்த்தியின் பாசம்! அறிமுகம் முதல் மகள் ஸ்தானம் வரை.

சில்க் ஸ்மிதாvinu Chakravarthyசில்க் ஸ்மிதாஏவி.எம் ஸ்டூடியோ முன்னாடி நின்னுக்கிட்டிருந்தேன். அப்போ பதினாறு, பதினேழு வயசுப் பொண்ணு, மாவு அரைச்சப் பையோடு என்னைக் கடந்து போனாள். அவ கண்ணும் அனாடமியும் என்னை ஆச்சர்யப்படுத்துச்சு. அந்தப் பொண்ணைக் கூப்பிட்டு, `சினிமாவுல நடிக்கிறீயா?’ன்னு கேட்டேன். `நல்ல ரோல் கிடைச்சா ஓகே. இங்கே சொந்தக்காரங்க வீட்லதான் வேலைபார்க்கிறேன். அவங்ககிட்ட கேட்டுட்டுச் சொல்றேன்’னு சொல்லிட்டுப் போயிருச்சு. ரெண்டு நாள் கழிச்சு வந்த அந்தப் பொண்ணைத்தான் நான் `வண்டிச்சக்கரம்’ படத்துல `சிலுக்கு ஸ்மிதா’வா அறிமுகப்படுத்தினேன். சிலுக்கோட நடிப்பைப் பார்த்துட்டு புரொடியூஸர் மணியும் சிவகுமாரும், ` இந்தப் பொண்ணை எங்க பிடிச்சீங்க?’னு அசந்துபோனாங்க’’ என ஒரு டி.வி பேட்டியில் நெகிழ்ந்தார் மறைந்த நடிகர் வினுசக்கரவர்த்தி. “ஆயிரம் திரைப்படங்களுக்குமேல் நடித்திருக்கிறார். கதாசிரியர் என்பதெல்லாம் அவரது அடையாளங்களாக இருந்தாலும், முக்கிய அடையாளம், ‘சில்க் ஸ்மிதா’வைத் தென்னிந்திய சினிமாவுக்குக் கண்டுபிடித்துத் தந்தவர் என்பதுதான்'' என்று திரையுலகத்தினர் சொல்வார்கள்.

அதிமுக அரசின் கமிசன் கொடுமையால் ஓடிப்போன ஹுண்டாய் ,போர்ட், புரோடான், ஸ்கானியா, இசூசு

தமிழனின் வாழ்வாதாரத்தை அழிக்கும்  அதிமுக அரசு... ஜெயாவின் கேடுகெட்ட ஆட்சியில்
தமிழ் நாட்டில் இருந்து பல உற்பத்தி
நிறுவனங்கள் வெளியேறியது....

Hyundai Motors மற்றும் Ford Motors ன்
இரண்டாவது ஆலைகளை கழுத்தை
பிடித்து தள்ளாத குறையாக குஜராத்துக்கு
விரட்டி விட்டது அந்த கிரிமினல் ஆயா ...
அதைத் தொடர்ந்து மலேசிய Proton, Scania,
Isuzu என்று கிட்டத்தட்ட ஐந்து பெரிய ஆலைகளை கோட்டை விட்டது ஆயாவின் அவல ஆட்சி....
இதனால் நாம் இழந்த வேலை வாய்ப்புகள்
மட்டும் ஒரு லட்சத்துக்கு குறையாது...
அதே போல் Hyundai நிறுவனத்தின் இன்னொரு நிறுவனமான 'Kia Motors', தமிழ்நாட்டில் தொடங்குவதாக இருந்தது....இப்பொழுது இந்த நிறுவனம் ஆந்திராவில் தொடங்கப்படவிருக்கிறது.
ஆண்டுக்கு 3 லட்சம் வாகனங்கள் தயாரிக்கும்
இந்த நிறுவனத்தில் 30000 வேலை
வாய்ப்புகள் உருவாகும்.

கீழடி .. உலகத்திலேயே அகழ்வாராய்ச்சி செய்த இடத்தை மூடிய ஒரே இந்தியாதான் .. மூடிய இடம் கீழடி


trollmafia2 : உலகத்திலேயே அகழ்வாராய்ச்சி செய்த இடத்தை மூடிய ஒரே இடம் கீழடி மட்டும் தான்,
காரணம் இந்தியாவின் பயம்
சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே தமிழர்கள் மிகவும் நாகரீகமாக வாழ்ந்ததற்கான ஆதாரமாக கீழடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பொய்யான பல வரலாற்றை முறியடித்ததோடு மட்டும் இல்லாமல் இந்திய வரலாற்றையே மறு வாசிப்பு செய்ய வைத்துள்ளதுதான் இந்தியாவின் பயம்.
இந்தியாவின் மூத்தகுடி மட்டுமல்ல இந்தியாமுழுமையும் தமிழர்களோடது என்ற உண்மையும் இந்த ஆய்வில் வெளியே வந்துவிடும்
அந்த பயத்தால் தான்இரண்டு ஆண்டுகளாக தோண்டப்பட்ட நாற்பத்திஎட்டு குழியும் ஒரே நாளில் மூடப்பட்டது .கீழடி_காப்போம் முகநூல் பதிவு

தூய்மையான நகரங்கள் .. திருச்சி 6 வது .. சென்னை 235 வது .. பட்டியல் வெளியானது

மத்திய அரசின் ’தூய்மை இந்தியா 2017’ திட்டத்தின் கீழ் இந்தியாவின் தூய்மையான நகரங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இப்பட்டியலில் திருச்சிக்கு 6-வது இடம் கிடைத்துள்ளது.
சென்ற வருடம் வெளியிடப்பட்ட பட்டியலில் திருச்சிக்கு 3-ஆம் இடம் கிடைத்தது. இந்த நிலையில் இந்த வருடம் திருச்சி மூன்று இடங்கள் பின் தங்கி 6-ம் இடம் பெற்றுள்ளது.
’தூய்மை இந்தியா 2017’ இந்த ஆண்டில் இடப்பெற்றுள்ள நகரங்களின் பட்டியலை இன்று( வியாழக்கிழமை) மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வெளியிட்டார்.
இந்த கணக்கெடுப்பினை இந்திய தரக் குழு இந்தியாவின் 434 நகரங்களில் 17,500 இடங்களில் இந்த சோதனைகளை 421 மதிப்பீட்டாளர்களைக் கொண்டு நடத்தியது. மேலும் இந்த கணக்கெடுப்பினை 55-பேர் அன்றாட அடிப்படையில் கண்காணித்தனர். இதில் முதல் மூன்று இடங்கள் இந்தூர், போபால், விசாகப்பட்டிணம் ஆகிய நகரங்களுக்கு கிடைத்துள்ளது.
’தூய்மை இந்தியா 2017’ இடப்பெற்றுள்ள நகரங்களின் விவரம்:
1 இந்தூர்
2 போபால்
3 விசாகப்பட்டிணம்
4 சூரத்
5. மைசூர்
6. திருச்சி

ஆட்சி அமைக்க ஒரு குடுமி தயார்? வன்னியர், கவுண்டர், தேவர், நாடார், யாதவ ... சாதிவெறி உபயம் பாஜக ...

meena.somu. அதிமுகவை உடைத்தாகிவிட்டது.
ஜாதி ரீதியில் ஆங்காங்கே ஜாதிவெறி (வன்னியர், கவுண்டர், தேவர், நாடார், யாதவ பேரவை... ) அமைப்புகளின் பலத்தை பெற்றாகி விட்டது.
கம்யூனிஸ்டுகளின் பலம் பல்வேறு பிரிவுகளாக ஏற்கனவே சிதறிக் கிடப்பதும், அவர்களுக்குள்ளும் தலித்திய மோதலை விதைத்தாகிவிட்டது.
திமுகவிற்கு ஏற்கனவே என்ன உள்குத்து வைத்திருக்காங்களோ வெளிப்படையா பிஜேபிக்கு எதிரான பலமான எதிர்ப்பே காட்டுறதில்லை.
விசிகவின் திருமாவளவனுக்கு பெருகும் தலித் ஒருமித்த ஆதரவு மற்றும் பொது அரசியலில் உருவாகும் இமேஜை தலித் மக்களை சிதறடிக்கும் யுக்தியை பயன்படுத்தும் விதமாக வழக்கம் போல இதோ கிருஷ்ணசாமி போன்ற ஆட்களை தூண்டி ஆசை காட்டியாச்சு. பள்ளர்கள் சமூக நீதிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் தந்திரத்தை உபயோகப்படுத்தியாச்சு.
ஏற்கனவே ஆங்காங்கே... நடத்திவரும் குத்துவிளக்கு பூஜை முதல்... சாமியை காட்டி சுரணையற்ற பக்த கோடிகளை உருவாக்கியாச்சு.

வேறென்னப்பா... அடுத்து ஆட்சி அமைக்கவும் ஆதிநாத் போல ஒரு குடுமியை ரெடி பண்ணி ஆட்சி கட்டிலில் நேரடியாகவோ மறைமுகமாகவோ அதிகாரத்தை கைப்பற்ற வேண்டியது தான்.

காஞ்சி சங்கரராமன் கொலையில் 21 பேரும் விடுதலை செய்யப்பட்டு விட்டால் யார் தான் குற்றவாளி ..நீதிமன்றம் கேள்வி !

காஞ்சி மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் புதுச்சேரி அரசு மேல்முறையீடு செய்யாதது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 
By: Gajalakshmi  Oneindia Tamil : சென்னை : காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் யார் தான் குற்றவாளிகள் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 2004ம் ஆண்டு நடைபெற்ற மிகப்பெரிய படுகொலை என்றால் அது காஞ்சிபுரம் வராதராஜபெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமனின் கொலையாகத் தான் இருக்கும். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கடந்த 3.9.2004ல் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து விஷ்ணுகாஞ்சி போலீசார் விசாரணை நடத்தினர். இவ்வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர், சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யர், ரகு உள்ளிட்ட 24 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.