சனி, 20 ஏப்ரல், 2024

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

 nakkheeran.in  :  உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
கடக்கும் முன் கவனிங்க...
இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

கனடாவில் 400 KG தங்கம் கொள்ளை! 5 இந்தியர்களும் ஒரு ஈழத்தமிழரும் கைது.. டொரோண்டோ விமான நிலையத்தில் இருந்து

 கனடா வரலாற்றிலேயே பெருந்தொகையான 400 kg தங்கம் கொள்ளை போயுள்ளது  
22 ,மில்லியன் கனடிய டாலர் பெறுமதியான தங்க கட்டிகளை விமான நிலையத்தில் இருந்து போலி பாத்திரங்களை காட்டி லாரியில் ஏற்றி சென்றுவிட்டனர் இந்த கொள்ளையர்கள்
ஆறு கொள்ளையர்கள் கைது செயப்பட்டுள்ளனர் மேலும் மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்தியாவை சேர்ந்தவர்கள் ஐந்து  பேரும்   இலங்கை தமிழர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.  
அமித் ஜலோடா, அமத் சவுத்திரி .பாம்பால் சித்து ,அலி ரஸா ,பிரசாத் பரமலிங்கம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் ஏனைய  மூவர் மீது பகிரங்க அழைப்பாணை பிறப்பிக்க பட்டுள்ளது                       
இந்த காணொளியில் பேட்டி வழங்கும்  டொரோண்டோ போலீஸ் தலைமை அதிகாரி துரையப்பா அவர்கள் முன்னாள் யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் யாழ்ப்பாண மேயர் அமரர் திரு அல்பிரட் துரையப்பாவின் மருமகனாவார்.

கோவை: தாமரைக்கு மாறிய இலை ஓட்டுகள்? பதட்டத்தில் வேலுமணி

 மின்னம்பலம் - vivekanandhan : கோவை: தாமரைக்கு மாறிய இலை ஓட்டுகள்? பதட்டத்தில் வேலுமணி
கோவை தொகுதி தமிழ்நாடு முழுதும் எதிர்பார்க்கப்பட்ட பரபரப்பான தொகுதியாக இருந்தது. குறிப்பாக அங்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால் தமிழ்நாடு முழுவதும் இருந்து தன்னார்வலர்கள் கோவையில் இறங்கி வேலை பார்த்தனர். கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் 63.8% வாக்குகள் பதிவாகியிருந்தன. ஆனால் இந்த தேர்தலில் கோவையின் வாக்கு சதவீதம் 7 சதவீதத்திற்கு மேல் அதிகரித்து 71.17% ஆக பதிவாகியுள்ளது.

அதிமுக சார்பில் கோவை மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஓட்டுக்கு 250 ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக இன்று காலை வரை கோவை தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக அதிமுக தரப்பு பெரும் நம்பிக்கையுடன் இருந்தது.

102 தொகுதிகளில் நடந்த மக்களவை முதற்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குகள் பதிவு

 மாலை மலர் :  18வது மக்களவை தேர்தல் நேற்று முதல் தொடங்கியுள்ளது. 7 கட்டங்களாக நடைபெறவுள்ள இந்த தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் உள்பட்ட 102 தொகுதிகளில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
அதாவது, தமிழ்நாடு (39 தொகுதிகள்), உத்தரகாண்ட் (5), அருணாசல பிரதேசம் (2), மேகாலயா (2), அந்தமான்-நிகோபார் (1), மிசோரம் (1), நாகாலாந்து (1), புதுச்சேரி (1), சிக்கிம் (1), லட்சத்தீவு (1), ராஜஸ்தான் (12), உத்தரபிரதேசம் (8), மத்திய பிரதேசம் (6), அசாம் (5), மராட்டியம் (5), பீகார் (4), மேற்கு வங்காளம் (3), மணிப்பூர் (2), திரிபுரா (1), காஷ்மீர் (1), சத்தீஷ்கார் (1) என 102 தொகுதிகளில் இந்த தேர்தல் நடந்தது.
நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதற்கு முன்னதாகவே பல வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசை காணப்பட்டது. வாக்குப்பதிவு தொடங்கியதும் அவர்கள் காத்திருந்து வாக்களித்தனர்.

வெள்ளி, 19 ஏப்ரல், 2024

மக்களவை தேர்தல்: 1 மணி நிலவரப்படி 40 சதவீத வாக்குகள் பதிவு- உத்தேச கணிப்பு

May be a graphic of text that says 'एक भारत TAMILNADU SURVEY NILGIRIS BJP+ BJP+-18.2% 18.2% 18. 18.2% DMK+· DMK+-49.1% 49.1% 49.1% ADMK+ 28.2% NTK-4.5% NTK 4.5% 28.2% 4.5%'
மாலைமலர் : பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் இன்று (19-ம் தேதி) தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது.
அதன்படி நாடு முழுவதும் முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, கேரளா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, அசாம், மேற்கு வங்கம், பீகார், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், அந்தமான், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவுகள், மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை முதல் தொடங்கியது.

Lok Sabha election 2024 வாக்குபதிவு... முதல் ஆளாக வாக்கு பதிவு செய்த நடிகர் Ajith Kumar!

 

ஏழை நாட்டு குழந்தை உணவுகளில் மட்டும் அதிக Sugar சர்க்கரை: நெஸ்ட்லே மீது பகீர் புகார்

 தினமணி : இந்தியாவில், போர்ன்விட்டா மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், தற்போது, நெஸ்ட்லேவின் குழந்தைகளுக்கான உணவுகள் அபாயத்தை சந்தித்துள்ளன.
நெஸ்ட்லே நிறுவனம், ஏழை நாடுகளில் விற்பனையாகும் பால் பொருள்கள் உள்பட குழந்தைகளுக்கான உணவில்தான் அதிக சர்க்கையை சேர்ப்பதாகவும்,
அமெரிக்கா, ஐரோப்பிய, பிரிட்டன் நாடுகளில் விற்பனையாகும் உணவுகளில் இந்த அளவுக்கு சர்க்கை இருக்கவில்லை என்றும் ஆய்வறிக்கை வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
ஸ்விஸ் புலனாய்வு அமைப்பு, சர்வதேச குழந்தைகள் உணவு அமைப்பு இணைந்து நடத்திய ஆய்வறிக்கையை ஆங்கில ஊடகம் ஒன்று வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. இந்த ஆய்வறிக்கை குறித்து நெஸ்ட்லே எதையும் சொல்லவில்லை. ஆனாவ், பொதுவான அறிக்கையில், உலகளவில் விற்பனையாகும் குழந்தைகளுக்கான உணவுப் பொருள்களில் சேர்க்கப்படும் சர்க்கரை அளவு 11 சதவீதம் அளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளது.

வியாழன், 18 ஏப்ரல், 2024

EVM ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு: மாதிரி வாக்குப் பதிவில் அதிர்ச்சி!

 dinamani.com : ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு: மாதிரி வாக்குப் பதிவில் அதிர்ச்சி!
இணையதள செய்திப்பிரிவு
காசர்கோட்டில் மாதிரி வாக்குப்பதிவின் போது ஒரு முறை தாமரை சின்னத்தை அழுத்தினால் இரண்டு வாக்குகள் பதிவானதால் எதிர்க்கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காசர்கோடு மக்களவைத் தொகுதிக்கு பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சிகளின் பிரமுகர்களின் முன்னிலையில் நேற்று தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் மாதிரி வாக்குப்பதிவு நடத்தி காண்பிக்கப்பட்டது.
ஒவ்வொரு வாக்குப் பதிவு இயந்திரத்திலும் நோட்டாவை சேர்த்து மொத்தம் 10 சின்னங்கள் பொருத்தப்பட்டிருந்தது. முதல்கட்டமாக 20 இயந்திரங்களில் உள்ள 10 சின்னங்களையும் அழுத்தி அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.

நடிகர் மன்சூர் அலிகானுக்கு விஷம் கொடுக்கப்பட்டது? மருத்துவ மனையில் தேறி வருகிறார்

 தினமணி : நடிகர் மன்சூர் அலிகானுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா?
நேற்று வேலூர் குடியாத்தத்தில் நடிகர் மன்சூர் அலிகான் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் நிலையில், நேற்று உணவில் தனக்கு விஷம் கலந்து கொடுக்கப்பட்டதா? என்ற பகீர் சந்தேகத்தை அவர் கிளப்பியுள்ளார்.
வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். இதற்காக குடியாத்தம் பகுதியில் பொதுமக்களிடையே தீவிர வாக்குச் சேகரிப்பில் நேற்று ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவருக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால், அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் உடனே அனுமதிக்கப்பட்டார்.

புதன், 17 ஏப்ரல், 2024

திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர்...மண்டல வாரியாக செல்வாக்கு யாருக்கு? மெகா சர்வே ரிசல்ட்!

மின்னம்பலம் - vivekanandhan ;  மின்னம்பலம் நடத்திய மெகா சர்வேயின் முடிவுகளின்படி, 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணி 45.3% வாக்குகளைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி 28.3% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடமும், பாஜக கூட்டணி19.9% வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடமும், நாம் தமிழர் கட்சி 5.5% வாக்குகளைப் பெற்று நான்காம் இடமும் பெறுகின்றன.

அடுத்ததாக மண்டல வாரியாக ஒவ்வொரு மண்டலத்திலும் ஒவ்வொரு கூட்டணியும் எத்தனை வாக்கு சதவீதம் பெறுகிறார்கள் என்பதைப் பிரித்துப் பார்ப்போம். தமிழ்நாட்டில் உள்ள 5 மண்டலங்களான சென்னை மண்டலம், வடக்கு மண்டலம், மேற்கு மண்டலம், மத்திய மண்டலம், தெற்கு மண்டலம் ஆகியவற்றில் மின்னம்பலம் கருத்துக்கணிப்பில் கிடைத்த முடிவுகள் இதோ.

நடிகர் மன்சூர் அலிகானுக்கு தீவிர சிகிச்சை

nakkheeran.in  : நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்தது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.
இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கிய நிலையில் இன்று மாலை 6 மணியோடு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

2024 சமூக ஊடக கருத்து கணிப்பு : இண்டியா கூட்டணி - 350+ தேஜ கூட்டணி - 150+ ஏனையவை - 25+

May be an image of 2 people and text that says 'LOK SABHA ELECTION 2024 ELECTION BREAKING SUN NNEWS பாஜக 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது! 'இந்தியா' கூட்டணிக்கான ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பல்வேறு மாநிலங்களில் இருந்து எனக்கு தகவல்கள் வருகின்றன. -உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பேட்டி SUNNEWSTAMIL SUNNEWS sunnewslive.in 17-APR-24'

காசு. நாகராசன் : இந்திய அளவிலான தேர்தல் முடிவுகள்.....
இண்டியா கூட்டணி - 350+
தேஜ கூட்டணி - 150+
மற்றவை - 25+
#தமிழ்நாடு_புதுவையில்......
இண்டியா கூட்டணி - 40     
வாக்கு விகிதம் 55%
அதிமுக - 0
வாக்கு விகிதம் 25%
நாம் தமிழர் + நோட்டா + பிற - 0
வாக்கு விகிதம் 12.5 %
தேஜ கூட்டணி - 0
வாக்கு விகிதம் 7.5%
இம்முறை காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணியின் இரண்டாவது பெரிய கட்சியாக திமுக நாடாளுமன்றத்தை அலங்கரிக்கும்.
காங்கிரஸ் கட்சி தனித்து 150 முதல் 200 இடங்களில் வெற்றி பெறும்.
பாஜக தனித்து 100 முதல் 150 இடங்கள் வரையே வெற்றிபெற முடியும்.
தமிழ்நாடு , கேரளம், கர்நாடகம், ஆந்திரம்,

ஆ.ராசா VS எல்.முருகன்.. திமுக நம்பிக்கை, பாஜக எழுச்சி! நீலகிரி தொகுதியில் என்ன நடக்கிறது தெரியுமா?

 tamil.oneindia.com - Veerakumar :  ஊட்டி: திமுக சார்பில் ஆ.ராசா, பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ் தமிழ்ச் செல்வன் ஆகியோர் போட்டியிடுவதால் ஸ்டார் தொகுதியாகியுள்ளது நீலகிரி (தனி). நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெயகுமார் போட்டியிடுகிறார்.
தமிழகம், புதுச்சேரி 40 தொகுதிகளிலும் வெல்ல முடியும் என்ற திமுக கூட்டணியின் திடமான நம்பிக்கைக்கு ஓரளவுக்கு சவாலாக இருக்கக் கூடியவை மொத்தம் 6 தொகுதிகள்.
தென் சென்னை
வேலூர்
நாமக்கல்
ஈரோடு
நெல்லை
நீலகிரி (தனி)

1,900 ரூபாய் கொத்து விற்பனை!! விற்பனையாளரை அதிரடியாக கைது செய்த பொலிஸார்!-

  ilakkiyainfor.con : வௌிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரிடம் கடுமையாக நடந்துக் கொண்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு தெரு உணவு விற்பனையாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த தினம் வௌிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு இடியப்ப கொத்து ஒன்றின் விலை 1,900 ரூபாய் என சந்தேகநபர் குறிப்பிடும் நிலையில், இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணி விலை அதிகமாக இருப்பது பற்றி கடை உரிமையாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு அவர் விருப்பம் இருந்தால் வாங்குங்கள். இல்லையென்றால் சென்று விடுங்கள் என கடை உரிமையாளர் கடுமையாக நடந்து கொண்டுள்ளார்.
இதனை குறித்த சுற்றுலாப் பயணி தனது கெமராவில் பதிவு செய்த நிலையில் குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியதை தொடர்ந்து சந்தேகநபரான தெரு உணவு விற்பனையாளர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துபாயில் கடும் மழை வெள்ளம் .. காணொளி

 மலையோரம் செய்திகள் : வெள்ளக்காடாக மாறிய துபாய், 2வருடமாக பெய்யும் மொத்த மழையும் ஒரே நாளில் கொட்டித்தீர்த்ததுள்ளது.
டுபாய் மாநகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் விமான போக்குவரத்து பலமணிநேரம் தடைபட்டுள்ளது. மிகவும் பிஸியான விமான நிலையமாகவும்  உலக நாடுகளை இணைக்கும் connect flightகள் அதிகமாக இயக்கப்படும் விமான நிலையமாக இருப்பதாலும் இன்று அனைவரின் பார்வையும் டுபாய் மீது திரும்பியுள்ளது.
டுபாய் நகரம் வருடத்திற்கு சுமார் 3.12 inches அளவு மழைவீழ்ச்சியை பெரும் நகரம் ஆனால் திங்கள் கிழமை மாலை 10மணியில் இருந்து செவ்வாய் மாலை 10மணிவரை சுமார் 6.26 inches மழை பெய்துள்ளது. இதன்காரணமாக துபாய் நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
டுபாய் நகரம் ஏப்ரல் மாதத்தில் வெறும் 0.13 inches மழைவீழ்ச்சியையே இதுவரை பதிவு செய்து வந்துள்ளது. இவ்வருடம் எதிர்பாராத அளவிலான (6.26 inches) மழை பெய்துள்ளமையே வெள்ளத்திற்கு காரணமாகிறது.

செவ்வாய், 16 ஏப்ரல், 2024

என் தம்பி பக்கம்தான் நிற்பேன் என்றார்”: வாக்குச் சேகரிப்பின் ஆ.ராசா குறித்து அமைச்சர் உதயநிதி

கலைஞர் செய்திகள் Prem Kumar  :   இந்தியா கூட்டணி சார்பில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது கூடி இருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உங்களுடைய எழுச்சியும் ஆர்வத்தையும் பார்க்கும் போது,
உதயசூரியன் சின்னத்தில் நிற்கும் வேட்பாளர் ஆ.ராசாவை பெறுவாரியாக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து விடுவீர்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார். ஏப்ரல் 19ஆம் தேதி வாக்கு செலுத்தி மோடியின் தலையில் குட்டு வைப்பீர்களா என  பொதுமக்களிடம் கேட்டார்.

சிட்னியில் மீண்டும் வன்முறை – கிறிஸ்தவ தேவாலயத்தில் கத்திக்குத்து தாக்குதல் – பலர் படுகாயம்- (வீடியோ)

 veerakesari :  சிட்னியில் கிறிஸ்தவதேவலாயமொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் கிறிஸ்தவ மதகுரு உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.
சிட்னியின் தென்மேற்குபகுதியில் உள்ள கிறிஸ்தவதேவலாயத்தில் ஆராதனைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை நபர் ஒருவர் திடீரென முன்னோக்கி சென்று மதகுருவை பல தடவை கத்தியால் குத்தியுள்ளார்.
மார் மரி இமானுவெல் என்ற ஆயர் ஆராதனைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளை நபர் ஒருவர் அவரை நோக்கி பல தடவை கத்தியால் குத்தியுள்ளார்.
பின்னர் அங்கு காணப்பட்டவர்கள் மீதும் அந்த நபர் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
தேவலாயத்தில் ஆராதனைகள் நேரடியாக ஒலிபரப்புசெய்யப்பட்டுக்கொண்டிருந்த தருணத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ராகுல் காந்தி : இதெல்லாம் ஸ்டார்ட்டர் தான், 2047-ல தான் மெயின் கோர்ஸ்!

மாலை மலர் :  பாராளுமன்ற தேர்தல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நாடு முழுக்க அரசியல் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதவிர சமூக வலைதளங்களிலும் புகைப்படம், வீடியோ, மீம்ஸ் என வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வரிசையில், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி ஆளும் கட்சி மற்றும் பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துக்களையும், பா.ஜ.க. சார்பில் காங்கிரஸ் மற்றும் எதிரக்கட்சியினருக்கு எதிரான கருத்துக்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
அப்படியாக ராகுல் காந்தி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர்களுக்கு காப்புரிமை கிடையாது! அவை தயாரிப்பாளர்களுக்கு உரியவை!

No photo description available.
Sunil Dutt r Nalini Jaywant  Radio Ceylon
Golden Music Directors In Tamil 50s 60s 70s

ராதா மனோகர் :  இசைஞானி இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் காப்புரிமையை  கோருவது சரியா?
அவை பாடல்களின் தயாரிப்பாளர்களுக்கு உரியவை அல்லவா?
இசையமைப்பாளர்கள் இசையமைப்பதற்கு பணம் வாங்கும் பொழுது அவர்களின் பாடலுக்கு உரிய உரிமையை தயாரிப்பாளர்களுக்கு விற்றுவிட்டார்கள.
அதன் பின் பாடலின் சகல உரிமையையும் தயாரிப்பாளர்களுக்கே உரியது.Who're The New Generation Music Directors In The Tamil Film, 41% OFF
இதில் சட்ட சிக்கல் ஏதுமில்லை
ஆனால் நடைமுறை சிக்கல்கள் கொஞ்சம் உண்டு.
இந்தியாவில் பாடல்களின் காப்புரிமை பற்றி மீண்டும் மீண்டும் மாற்றி மாற்றி பேசுகிறார்கள்.
இது ஏன் என்று சிந்தித்து பார்க்கும்போது இதற்கு ஒரு பின்னணி இருப்பது தெரிகிறது.

 இந்திய ஒன்றிய அரசின் செய்தி ஒலிபரப்பு ராஜாங்க அமைச்சராக இருந்த மெத்த படித்த பி வே கேஸ்கார் B. V. Keskar என்பவர் கடும் பிற்போக்குவாதி.
இவரின் காலத்தில் சினிமா பாடல்கள் மிகவும் தரம் குறைந்த இசை என்பதாகவும்  அந்த இசை ஆகாஷிவாணியில் ஒலிக்க கூடாது என்று தடைசெய்திருந்தார்.

திங்கள், 15 ஏப்ரல், 2024

திமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி! ஏபிபி - சி வோட்டர் கருத்து கணிப்பு முடிவுகள்

 tamil.samayam.com - மரிய தங்கராஜ்  ; மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ளன. கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி இறைத்து மக்களின் பார்வையை தங்கள் பக்கம் திருப்ப பெரும் முயற்சி எடுத்து வருகின்றன.
ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் தொடங்குகிறது. தமிழ்நாடு புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் அன்றைய தினம் தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழக மக்கள் யாருக்கு பெருவாரியான ஆதரவை வழங்க உள்ளனர் என்பது குறித்த ஆவல் அதிகரித்து வருகிறது.
திமுக கூட்டணி கடந்த முறை பெற்ற மிகப்பெரிய வெற்றியை இந்த முறையும் தொடர வேண்டும் என்று முயற்சித்து வருகிறது. தமிழ்நாட்டில் அதிக தொண்டர் படை உள்ள கட்சி என்று கூறப்படும் அதிமுகவும் தங்கள் பலத்தை நிரூபிக்க பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறி தனி அணி அமைத்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது

ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரம்! நயினார் நாகேந்திரன் FIR

 நக்கீரன் : நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில்,
முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தகைய சூழலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

கார்த்தி சிதம்பரம் ; மதுரை மீனாட்சி அம்மன் - ராமேஸ்வரம் கோயில்களை அயோத்தி ராமர் கோயில் ட்ரஸ்ட் கையகப்படுத்த திட்டம்!

 tamil.samayam.com -  ஜே. ஜாக்சன் சிங்  :  மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கும், ராமஸ்வேரம் கோயிலுக்கும் பெரிய ஆபத்து வரவுள்ளதாக சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும்,
அத்தொகுதியின் தற்போதைய எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளது பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த இரண்டு கோயில்களையும் குறிவைத்து பாஜக காய் நகர்த்தி வருவதாக அவர் பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 4 தினங்களே உள்ளதால் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
அந்த வகையில், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் தனது தொகுதியில் இன்று பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறிய தகவல்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்துவதாக இருந்தன. அவர் கூறியதாவது:

திமுக பணத்தோடு பிடிபட்டால் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பாஜக சதித்திட்டம்? பாஜக அதிமுக தாராளமாக பண விநியோகம்

 மின்னம்பலம் - Aara :  டிஜிட்டல் திண்ணை: சபரீசன் சைலன்ட் ரவுண்டு… ஸ்டாலினுக்கு சென்ற ரிப்போர்ட்! அஷ்டமி, நவமிக்கு முன் தொடங்கிய கரன்சி முகூர்த்தம்!
வைஃபை ஆன் செய்ததும் தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகள் பற்றிய மின்னம்பலத்தின் மெகா சர்வே வீடியோக்கள் இன்பாக்சில் வந்து விழுந்துகொண்டே இருந்தன. அதுபற்றிய வாசகர்களின் ரியாக்‌ஷன்களும் வந்துகொண்டிருக்க, அவற்றை பார்த்தபடி வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியிருக்கிறது.
“நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்க இருக்கும் நிலையில், ஏப்ரல் 17 ஆம் தேதி வரைதான் பிரச்சாரம் செய்ய முடியும் என்பதால், பிரச்சாரக் களம் க்ளைமேக்ஸில் இருக்கிறது. இதை ஒட்டியே இன்னொரு களமும் சூடுபிடித்திருக்கிறது. அதுதான் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் ரகசியக் களம்.

பாகிஸ்தானில் மனைவி, 7 குழந்தைகளை கோடரியால் வெட்டிக்கொன்ற கூலித்தொழிலாளி

மாலைமலர் : “இஸ்லாமாபாத்:பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் அலிபூரைச் சேர்ந்தவர் சஜ்ஜத் கோகர். இவரது மனைவி கவுசர் (வயது 42). இந்த தம்பதியினருக்கு 4 மகன்கள் மற்றும் 3 மகள்கள் இருந்தனர்.
இவர்கள் அனைவருமே 8 மாதம் முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகள் ஆவர். இந்தநிலையில் சஜ்ஜத் கூலி வேலை பார்த்து வந்தார்.
ஆனால் தனது குடும்பத்தை காப்பாற்றக்கூடிய அளவுக்கு அவருக்கு போதிய வருமானம் இல்லை என கூறப்படுகிறது.
இதனால் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் தனது குழந்தைகளுக்கு வயிறார உணவு கூட வழங்க முடியவில்லையே என்ற மன உளைச்சலில் சஜ்ஜத் இருந்துள்ளார்.

பாஜகவுக்கு 175-200 இடங்கள்தான்! ஜூன் முதல் வாரத்தில் கிடைக்கப் போவது ...

 Annamalai Arulmozhi  ; இந்தியாவுக்கு ஒரு நற்செய்தி!
400 இடங்கள் கிடைக்கும் என்று சொல்லுபவர்களுக்கு ஜூன் முதல் வாரத்தில் கிடைக்கப் போவது 175-200 இடங்கள்தான்!
பி.ஜே.பி.,க்குக் கிடைக்கப்போகிற தேர்தல் முடிவுபற்றிய கணிப்பை எடுத்துக்காட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
‘‘400-ன்னு சொல்றாங்க,
மே கடைசி வரை காத்திருக்க
அது 250 ஆகக் குறையும்.
ஜூன் முதல் வாரம் 175-200 ஆகும்.
நான் அரை டஜன் அல்போன்சா மாம்பழ விலையைச் சொன்னேன்.’’
- மேனாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவு.
- பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். அரசின் பத்தாண்டுகால மக்கள் விரோத, ஜனநாயக ஒழிப்பு இந்திய அரசமைப்புச் சட்ட ஒழிப்பு ஆட்சி முடிவுக்கு வருவதுபற்றி இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் வரும் செய்திகளும், நிலவரங்களும் கட்டியம் கூறுகின்றன!

ஞாயிறு, 14 ஏப்ரல், 2024

நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் 117 ஆவது பிறந்த நாள் 14.04.1907 -

May be an image of 1 person

Soma Ilangovan  :   " கூத்தாடிகளுக்கு மன்றம் வைக்காதே"
பெரியாரின் போர்வாள் நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் 117 ஆவது பிறந்த நாள் 14.04.1907 - 17.09.1979 இவர் ராஜகோபாலன் நாயுடு - ராஜம்மாள் இணையர்களுக்கு 2 வது மகனாக சென்னையில் பிறந்தார். இவரின் தந்தை ரஷ்ய நாட்டில் இராணுவவீரராகப் பணியாற்றி வந்தபோது உருசிய எல்லையில் பஸ்ஸோவியா  என்னுமிடத்தில் போரில் வீர மரணமடைந்தார்.
தாயின் கண்டிப்பிலே வளர்ந்த ராதாவுக்கு தாயின் கண்டிப்பு பிடிக்காமல் தாயிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் பாரம் சுமக்கும் பணியாளராக வேலை செய்து வந்தார்.

இஸ்ரேல் கப்பலை ஈரான் மடக்கி பிடித்தது.. ஈரான் இஸ்ரேல் போர் மூழும் அபாயம்

 தினமணி : இந்தியா்களுடன் இஸ்ரேல் கப்பல் சிறைபிடிப்பு: ஈரான் நடவடிக்கையால் பதற்றம்
இந்திய மாலுமிகள் 17 பேருடன் பயணித்த சரக்குக் கப்பலை ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவல் படை சனிக்கிழமை சிறைபிடித்தது.
இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டுள்ள சூழலில், அந்தக் கப்பலுக்கு இஸ்ரேலுடன் தொடா்புள்ளதால், அதை ஈரான் படையினா் சிறைபிடித்துள்ளனா்.
உலகின் மத்திய கிழக்குப் பகுதியில் இஸ்ரேல், ஈரான், லெபனான் உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், இஸ்ரேல்- பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் ஆட்சிபுரிந்த ஹமாஸ் படை இடையிலான போரால் மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் தொடா்கிறது.

நடிகர் தனுஷ் இன் தந்தை (என்று உரிமை கோரிய) கதிரேசன் (79) உடல் நலக்குறைவு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று காலமானார்.

நடிகர் தனுஷ் தங்களது மகன்தான் என்பதை நிரூபிக்க டி என் ஏ டெஸ்ட் எடுக்குமாறு கதிரேசன் தம்பதிகள் கோரினர் . அந்த கோரிக்கையை ஏன் நீதிமன்றம் ஏற்கவில்லை என்பது இங்கே சித்திக்க வேண்டியுள்ளது    டி என் ஏ டெஸ்டுக்கு தனுஷ் பின்வாங்கியது நிச்சயம் சந்தேகத்திற்கு உரிய விடயம்தான்

தனுஷ் தனது மகன் என வழக்கு தொடுத்த மேலூர் கதிரேசன் உடல் நலக்குறைவால் காலமானார் மாலை மலர் : தனுஷ் தனது மகன் என வழக்கு தொடுத்த மேலூர் கதிரேசன் (79) உடல் நலக்குறைவு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று காலமானார்.
மதுரை மேலூர் பகுதியைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் நடிகர் தனுஷ் தங்களது மகன் என்று மேலூர் நீதிமன்றத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு மனுத் தாக்கல் செய்தனர். அப்போது இந்த வழக்கு பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
தனுஷ் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே வீட்டைவிட்டு ஓடிவிட்டதாகவும், அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் வளர்ப்பு மகனாக இருந்து நடிகரானது பிறகே தெரிய வந்தது என்று அவர்கள் தெரிவித்தனர்.