சனி, 21 அக்டோபர், 2017

மதுசூதனன் : எனது அரசியல் வாழ்வை முடக்க நினைக்கும் ஜெயக்குமார்

எனது அரசியல் வாழ்வை முடக்க நினைக்கும் ஜெயக்குமார் மீது இபிஎஸ், ஓபிஎஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்t;
தினகர:ன் தண்டையார் பேட்டை: எனது அரசியல் வாழ்க்கையை முடக்க நினைக்கும் அமைச்சர் ஜெயக்குமார் மீது இபிஎஸ், ஓபிஎஸ்சும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுசூதனன் கூறியுள்ளார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட காசிமேடு, விநாயகபுரம், தண்டையார் நகர், பவர் குப்பம், சிங்காரவேலர் நகர், எம்ஜிஆர் நகர், திடீர் நகர், பல்லவா நகர், ஒய்எம்சிஏ குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் மற்றும் பால்பாக்கெட் ஆகியவற்றை அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மூத்த தலைவர்கள் இருந்தால் தன்னால் எதுவும் ெசய்ய முடியாது என்ற பயத்தில் தலைமையின் அனுமதி இல்லாமல் அமைச்சர் ஜெயக்குமார், தான்தோன்றி தனமாக செயல்படுகிறார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மீனவ சமுதாய மக்களை நிறுத்த வேண்டும் என்று கூறுகிறார். மீனவ சமுதாய மக்களுக்கு இவர் என்ன செய்துள்ளார்? கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக விசைபடகில் சீனா இன்ஜினை பயன்படுத்த கூடாது என்று மீனவர்கள் போராடி வருகிறார்கள். ஆனால் சீனா இன்ஜினை பயன்படுத்துவோர்களுக்கு ஆதரவாக ஜெயக்குமார் செயல்பட்டு வருகிறார்.

ஹேமா ருக்மணி ! ராமநாராயணன் மருமகள் ,, தேனாண்டாள் பிலிம்ஸ் நிர்வாகி ... கமலா தியேட்டர் சிதம்பரத்தின் மகள் ..



விகடன் - மை.பாரதிராஜா : ‘‘மதுரைலதான் பிறந்து வளர்ந்தேன். கமலா தியேட்டர் அதிபர் வி.என்.சிதம்பரம் ஐயாவோட மகள் ஆனந்தியோட மகள்தான் நான். எங்கப்பா பெரியகருப்பர், பிசினஸ்மேன்...’’ சற்றே கூச்சத்துடன் பேசத் தொடங்குகிறார் ஹேமா ருக்மணி. நூறு படங்களை இயக்கி சாதனை புரிந்த இயக்குநர் இராம.நாராயணனின் மருமகள். ‘ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் நிர்வாக மேலாளரான முரளியின் மனைவி. ‘‘எனக்கு ஒரு அண்ணன். அவர் என்னைவிட அஞ்சு வயசு மூத்தவர். சென்னைல இப்ப பிசினஸ் பண்றார். எங்க வீட்ல எல்லாமே எங்கம்மாதான். வீட்டோட இன்டீரியர் ஆகட்டும், கார்டனிங் ஆகட்டும்... எல்லாத்துலயும் அவங்க முத்திரை இருக்கும். அந்தளவுக்கு திறமையானவங்க. இந்திரா காந்தி மதுரைக்கு வந்தப்ப அவங்களை மீனாட்சியம்மன் கோயிலுக்கு அழைச்சுட்டு போய் சுத்திக் காட்டினது எங்கம்மாதான்.

கட்டலோனியாவை நேரடி ஆட்சிக்குள் கொண்டுவர ஸ்பெயின்... ! பொது வாக்கெடுப்பை ஏற்க தயக்கம்!

மாலைமலர் : தனிநாடு கோரி பொதுவாக்கெடுப்பு நடத்தியுள்ள கேட்டலோனியா மாகாண அரசை சஸ்பெண்ட் செய்து விட்டு அங்கு மறுதேர்தல் நடத்த ஸ்பெயின் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனிநாடு விவகாரம்: கேட்டலோனியா அரசை சஸ்பெண்ட் செய்ய ஸ்பெயின் முடிவு அமைச்சரவை கூட்டத்தில் ஸ்பெயின் பிரதமர் மாட்ரிட்: ஸ்பெயினின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மாகாணமான கேட்டலோனியா தனி நாடக பிரிவது தொடர்பான வாக்கெடுப்பை கடந்த மாதம் 1-ம் தேதி நடத்தியது. இந்த வாக்கெடுப்பில் பங்கேற்ற 2.3 மில்லியன் மக்களில் 90% பேர் தனிநாடாக கேட்டலோனியா பிரிவதற்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து தனிநாடாக பிரிவது உறுதி என கேட்டலோனியா தலைவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, கேட்டலோனியா பாராளுமன்றத்தில் பேசிய கார்லஸ் பூஜ்டியமோன்ட், தனிநாடு வாக்கெடுப்பு முடிவுகளை ஏற்க்கொள்வதாக அறிவித்தார். இருப்பினும் தனிநாடு குறித்த அறிவிப்பை அவர் வெளியிடவில்லை. ஸ்பெயின் அரசு உடன் பேசி முடிவெடுக்கப்படும் என அவர் கூறியிருந்தார்.

மெர்சல் காட்சிகளை நீக்க முடியாது !திருப்பி அடித்த ஹேமா ருக்மணி ! ராம நாராயணன் மருமகள் !

Hema Rukmani‏ @Hemarukmani1 No scenes cut or muted in #Mersal Enjoy #Thalapathy swag. Poomanathu Pichaatha thunai #SilakkiDum #TSL100 #PeaceBro  @ThenandalFilms
Gajalakshmi - Oneindia Tamil :  மெர்சல் படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம்பெற்றிருப்பதாக தமிழக பாஜக குரல் கொடுத்த நிலையில் இந்த விவகாரம் தேசிய அளவில் விவாதப் பொருளாகி இருக்கிறது. இது பாஜகவிற்கு சாதகமா பாதகமா என்பதை பார்க்கலாம். மெர்சல் படத்தில் விஜய் பேசிய வசனங்கள் மத்திய அரசின் ஜிஎஸ்டி கொள்கையை திரித்து கூறுவதாக இருப்பதாக முதல் குண்டை தூக்கி வீசினார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை.
அந்தக் கயிற்றை அப்படியே பிடித்து வந்து பாஜக தலைவர்கள் ஒரே அணியில் ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று குரலை உசத்தினர். தொடர் நெருக்கடியால் படத்தில் இருந்து வசனங்களை நீக்க தயாரிப்பாளர்கள் தரப்பு முடிவு செய்துள்ளது. ஆனால் பாஜகவின் இந்த நெருக்கடியை தமிழக அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் மட்டுமின்றி தேசிய அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டது. திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரைத் தாண்டி "மெர்சல் vs மோடி" அரசியலுக்கு ராகுல் காந்தியும் ஆதரவாக டுவீட்டியுள்ளார்.

நீட் ஆதரவாளர்களை தூக்கி அடித்த மெர்சல்? மருத்துவத்தில் தமிழகம்தான் முன்னணி ... இப்போ கூறுவது ManuNEET பாஜக !

prakash.jp. : மெரிசல் பட விவகாரத்தால் ஏற்பட்ட மிகப்பெரிய நன்மை என்னவென்றால், மருத்துவ படிப்புக்கான நீட் (NEET) நுழைவுதேர்வு பிரச்சனையின் போது, தமிழ் நாட்டில் மருத்துவம் தரமில்லை.. மருத்துவர்கள் தரமில்லை... திராவிட ஆட்சியின் நிலையை பாரீர்... இப்படியெல்லாம் ஆதாரமிலாமல் கூவிய பலர், இப்போது, மெரிசல் படத்தின் விவகாரத்தால், அப்படியே பல்டி அடித்து, மருத்துவ வசதியில் தமிழகமே இந்தியாவின் முன்னணி மாநிலம்.. Infant Mortality Rate (IMR சிசு மரண விகிதம்), Maternal Mortality Rate (MMR), தடுப்பூசி அளிக்கப்படும் குழந்தைகள் சதவீதம் (vaccination coverage) போன்ற எல்லா சுகாதார அளவீடுகளிலும் தமிழ் நாடுத்தான் இந்தியாவிலேயே முன்னணி மாநிலம்.. மேலும், பல மாநிலத்தவரும், வெளிநாட்டினரும் மருத்துவ வசதிக்கான தமிழகத்தை நாடி வரும் நிலை... போன்ற அனைத்து உண்மைகளையும் அவர்கள் வாயாலே சொல்லவைத்துவிட்டது...
இப்போதாவது உண்மை வெளிவந்ததா? திராவிட சாதனை புரிந்ததா....

வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயம்: ரிசர்வ் வங்கி விளக்கம்

tamilthehindu : வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
வங்கிக் கணக்குடன், ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட விளக்கத்தின்படி, வங்கிக் கணக்குடன், ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் அல்ல என ஊடகங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக, ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது
சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் படி, வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும்.

ஜெமிலா விலகினார் .. பாஜக மகளிர் அணி செயலாளர்... இவரு ஏன் சேர்ந்தார்னே இன்னும் புரியல்லை?

Jemelaa - ஜெமிலா · அன்பு நண்பர்களுக்கு , 🌷நான் பாஜக விலிருந்து விலகுகிறேன் எனச்சொன்ன 24 மணி நேரத்தில் 11 ஆயிரத்து 400 “ லைக்”குகள் 5 ஆயிரத்து 800 விமர்சனங்கள் , 3 ஆயிரத்து 600 ஷேர்கள் என முகநூலை திக்குமுக்காட வைத்து, வாழ்த்துக்களை அள்ளித்தெளித்து என்னை மெர்சலாக்கி விட்டீர்கள். 🙏அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன். 🌷மேலும் பாஜக மீது மக்கள் வைத்திருக்கும் எண்ணத்தையும், என் மீது நீங்கள் கொண்ட நம்பிக்கையையும், அன்பையும் புரிந்து கொள்ள முடிந்தது. நன்றி ...நன்றி... ·

Jemelaa - ஜெமிலா : நான் கடந்த 2 வருடங்களாக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து, மாநில மகளிரணி செயலாளர் மற்றும் ஊடக செய்தி தொடர்பாளர் என்ற பொறுப்புகளுடன் உண்மையான தொண்டராக கட்சிப் பணி செய்து வந்தேன் .

மெர்சல் என்றால் என்ன? மிரட்டல்... மிரசல்.. மெர்சல் ?

Surya Xavier : மெர்சல் என்ற சொல் எந்த மொழியைச் சார்ந்தது என்ற விவாதம் முகநூலில் போகிறது
இது முற்றிலும் திரிந்த தமிழ்ச் சொல் தான்.
தமிழில் ஒரு வினைச் சொல் முக்காலத்துக்கும் பொருந்துவதற்கு அந்தச் சொல்லோடு கடைசியாக சல் எனும் விகுதியைச் சேர்ப்பார்கள்
உதாரணத்திற்கு
கரல்+சல்=கரசல் சத்தம் போடுதல்
இதைத்தான் சண்டை போடுபவனைப் பார்த்து கரச்சப் பண்ணுறான் என்பார்கள்.
திரல்+சல் =திரசல் திரண்டல்
பால் கெட்டுப் போனால் தெரஞ்சு போச்சு என்பது இதுதான்
தரல்+சல்= தரசல் கொடுத்தல் பெறுதல் என்று பெயர். தரவுகள் என்பது இது
வரல் +சல் = வரசல் வருவது என்று பொருள்.வெரசலா வா என்பார்களே அதுதான்
வெரசலா என்றால் விரைந்து வா என்பதே
இதே போல மிரல் + சல் =மிரசல் மிரண்டு போவது, அதிர்ச்சி அடைவது,பிரமிப்பது என்று பொருள்

திமுக ஆட்சியில் சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்த சினிமாக்காரர்கள் !

Don Ashok-  Ashok R :   கலைஞர் ஆட்சியில் இருக்கும்போது வெளிவந்த உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்தில் ஒரு காட்சி. தலைமைச்செயலாளர், குண்டுவெடிப்பு மிரட்டலை முதல்வரிடம் தெரிவிப்பார். அதற்கு கலைஞர் குரலில், கலைஞர் பேச்சுத்தொனியில், “தேர்தல் நேரம். எதுவும் நடக்காம பாத்துக்கங்க,” எனப் பதில் வரும்.
இத்தனைக்கும் கமலுக்கு கலைஞானி எனப் பட்டமளித்தவர் கலைஞர். ஆனாலும் கலைஞரை குறைத்து மதிப்பிடும் வண்ணம் கமல் இப்படி ஒரு காட்சியை கலைஞர் ஆட்சியில் இருக்கும்போதே வைத்திருப்பார். படத்தில் கோபாலபுரம் வீடும் காட்டப்படும்.

மிரட்டிப் பணியவைக்க அதிமுக அல்ல!

மிரட்டிப் பணியவைக்க அதிமுக அல்ல!
மின்னம்பலம் :மத்தியில் ஆட்சியில் உள்ளோம் என்பதற்காக, பாஜகவினர் மிரட்டிப் பணிய வைக்கப் பார்கிறார்கள். ஆனால் மிரட்டிப் பணிய வைக்க அனைவரும் அதிமுக அல்ல என்பதை அவர்கள் உணர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் நடித்து சமீபத்தில் வெளியான மெர்சல் திரைப்படத்துக்கு எதிராக பாஜகவினர் விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர். திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா போன்ற காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் பேசி வருகின்றனர். ஆனால் ராகுல் காந்தி, ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் மெர்சல் திரைப்படத்திற்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.

மெர்சல் படத்துக்கு பாஜக இலவச விளம்பரம் கொடுக்கிறதா ? தமிழிசை பேட்டி!

tamilthehindu : தமிழகத்தில் நிலவும் டெங்கு காய்ச்சல் பிரச்சினை, தண்ணீர் பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகளையும் தாண்டி சலசலக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது மெர்சல் பிரச்சினை. ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா, பணமதிப்பு நீக்கம் குறித்த சர்ச்சைக் கருத்துகள் மெர்சல் படத்தில் இடம்பெற்றிருப்பதாக பாஜகவினர் படபடத்துக் கொண்டிருக்கின்றனர். கருத்து சுதந்திரத்தை பாஜக ஒடுக்க நினைக்கிறது என அரசியல் தலைவர்களும் தமிழ்த் திரையுலகினரும் கூறிவருகின்றனர்.
இத்தகைய சூழலில் 'தி இந்து' தமிழ் இணையதளத்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பேட்டியில் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
தமிழகத்தில் சுட்டிக்காட்ட எத்தனையோ பிரச்சினைகள் நிலவும்போது மெர்சல் சர்ச்சையைக் கையில் எடுத்து அப்படத்துக்கு பாஜக இலவசமாக விளம்பரம் செய்வதாகக் கூறப்படுகிறதே?
மெர்சலுக்கு நாங்கள் இலவசமாக விளம்பரம் செய்வதாகவே இருந்துவிட்டுப் போகட்டும். ஒரு திரைப்படத்தின் பின்னால் கடைநிலை ஊழியரின் உழைப்புகூட இருக்கிறது. சாலிகிராமத்தில் வசிப்பதால் சினிமா துறை கடைநிலை ஊழியர்களின் நிலவரம் எனக்குத் தெரியும்.

ஹெச் ,ராஜா : பராசக்தி வெளியானால் கோயிலில் இருந்து அரசை மக்கள் வெளியேற்றுவர் :


பராசக்தி வெளியான திகதி   October 17, 1952   தினகரன் : சென்னை : கோயில்கள் கொள்ளையர்களின் கூடாரம் ஆகக்கூடாது என்பதற்காக மக்கள் வெளியேற்றுவர் என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். இன்றைய சூழலில் கருணாநிதியின்  பராசக்தி வெளியானால் கோயிலில் இருந்து அரசை மக்கள் வெளியேற்றுவர் என்றும் சிதம்பரத்துக்கு ஹெச்.ராஜா பதில் அளித்துள்ளார்.

கறுப்புப் பணம் கண்டறியப்படவில்லை: ரிசர்வ் வங்கி!


மின்னம்பலம் :‘பணமதிப்பழிப்பு நடவடிக்கையில் எந்தவிதமான கறுப்புப் பணமும் சிக்கவில்லை’ என்று ரிசர்வ் வங்கி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி பிரதமர் மோடி புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைத் தடை செய்து உத்தரவிட்டார். இதன்பிறகு வங்கிகள் மூலம் பழைய நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டு புதிய 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கப்பட்டன. கறுப்புப் பணத்தை ஒழிக்கும்விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மோடி தெரிவித்தார்.
தடை செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளில் 99 சதவிகித நோட்டுகள் திரும்ப வந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘வங்கிகளுக்குத் திரும்ப வந்த பணத்தில் கறுப்புப் பணம் எதுவும் இல்லை’ என்று ரிசர்வ் வங்கி பதிலளித்துள்ளது.

கமல்: மெர்சல் படத்தை மீண்டும் தணிக்கை செய்யவேண்டாம்

மின்னம்பலம் : மெர்சல் திரைப்படம் ஏற்கெனவே சென்சார் செய்யப்பட்டுவிட்டது. மறுபடியும் அதை சென்சார் செய்ய வேண்டாம்’ என்று நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியான மெர்சல் திரைப்படத்தில், மருத்துவத்துறையில் நடக்கும் ஊழல் குறித்து பேசப்பட்டுள்ளது. அதில் இடம்பெறும் காட்சிகளில், “இந்தியாவில் வெறும் டிஜிட்டல் பணம் மட்டுமே உள்ளது” என்று நகைச்சுவை நடிகர் வடிவேல் பேசுவது போலவும் அடுத்து ஜி.எஸ்.டி. தொடர்பாக, “இந்தியாவை விடக் குறைவாக ஜி.எஸ்.டி. வசூலிக்கும் நாடுகளில் கல்வியும் மருத்துவமும் இலவசமாக கிடைக்கிறது” என்றும், ஆனால், “28 சதவிகிதம் ஜி.எஸ்.டி. வசூலிக்கும் இந்தியாவில் ஏன் கல்வியும், மருத்துவமும் இலவசமில்லை?” என்று ஒரு காட்சியில் பேசுவது போலவும் இடம்பெற்றுள்ளது.

சாருநிவேதிதா : 30 கோடியும் போதாது முதல்வர் நாற்காலியும் தேவை ,,, கீரோக்களின் பேராசை ..


மார்ஜினல் மேன் நாவலை ராப்பகலாக உட்கார்ந்து எடிட் செய்து கொண்டிருப்பதால் மெர்சல் படத்துக்கான விமர்சனம் எழுத முடியவில்லை. நம்ம வேலையைப் பார்ப்போம் என்ற மனநிலை. இந்தப் படத்தை விமர்சித்து எழுதி – அதை எழுத ரெண்டு மணி நேரம் ஆகும் – கண்டவனும் உன் வீடு தேடி வந்து உதைப்பேன் என்று மிரட்டி மெயில் போட… இந்தக் கருமம் எல்லாம் எதற்கு என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில் நியூஸ் 18-இலிருந்து ஒரு போன். மெர்சல் பற்றியும் அதில் விஜய் அரசியலுக்கு வரப் போவது பற்றி நேரடியாகச் சொல்லியிருப்பது பற்றியும் பேசுகிறீர்களா எனக் கேட்டார்கள். அஞ்சு நிமிஷ வேலை. பதினைந்து நிமிடம் பேசியிருக்கிறேன். கிழிகிழி என்று கிழித்து எறிந்து விட்டேன். படத்தை அல்ல. படம் செம மசாலா படம். இடைவேளை வரை செம வேகம். துளிக்கூட சலிப்பாக இல்லை. இடைவேளைக்குப் பிறகு ஒரு மணி நேரம் தூங்க வைக்கிறார்கள். ஆனாலும் படத்தை ஒருமுறை தாராளமாகப் பார்க்கலாம். ஆனால் பிரச்சினை அது அல்ல. விஜய் பேசும் அரசியல். ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் இந்தப் படம் இதே வசனங்களோடு வெளியில் வந்திருக்காது. 30 கோடி சம்பளம் போதவில்லை. முதல்மந்திரி நாற்காலியும் தேவைப்படுகிறது ஹீரோ நடிகர்களுக்கு. இந்த அளவுக்குக் கிழித்து என் வாழ்நாளில் பேசியதில்லை. மாலையில் நியூஸ் 18-இல் வரும்

அரசு போக்குவரத்து கழக பணிமனை இடிந்து 8 பஸ் ஊழியர் நசுங்கி பலி: நாகை பொறையாரில் அதிகாலை

தினகரன் :தரங்கம்பாடி: நாகை மாவட்டம் பொறையாரில் அரசு பஸ் பணிமனை கட்டிடம் இடிந்து டிரைவர், கண்டக்டர் 8 பேர் பலியானார்கள். மேலும் 3 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக அமைச்சர், கலெக்டரை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். நாகை மாவட்டம் பொறையாரில் சத்திவிலாஸ் என்ற பெயரில் ஒரு தனியார் பஸ் கம்பெனி இயங்கி வந்தது. அந்த பஸ் கம்பெனிக்காக 1943ல் ஒரு கட்டிடம் கட்டப்பட்டது. 1972ம் ஆண்டு திமுக ஆட்சியில் பேருந்துகள் அரசுடமையாக்கபட்டபோது சத்தி விலாஸ் பஸ்களும் அரசுடைமை ஆக்கப்பட்டது. அதை தொடர்ந்து பஸ் கம்பெனி இயங்கி வந்த இடமும், கட்டிடமும் அரசு கையகப்படுத்தியது. அதை தொடர்ந்து கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் கிளை அலுவலக பணிமனை (டெப்போ) அந்த இடத்தில் இயங்கி வருகிறது.  இங்கிருந்து 28 வழி தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தள்ளாடும் திரைத்தொழில் ... மோசடி பிளாக் டிக்கெட் வசூல் .... நடிகர்கள் சம்பளம் .. ஆன்லைன் வெளியீடு ...


விகடன் : "எப்படா படம் தயாரிக்கப் போகிறோம்'’ என்று வெளியிலில்  இருப்பவர்களையும், ‘"ஏண்டா படம் தயாரிக்க வந்தோம்?'’ என்று உள்ளே இருப்பவர்களையும் எண்ண வைப்பது சினிமா. வெளியிலிருந்து பார்க்கும்போது கலர் கலராய்க் காட்டும் சினிமா, தொழில் என்று உள்ளே வந்தபின் கோவணத்தையும் உருவி விடுவதுதான் கொடுமை. தமிழ்நாட்டில் மொத்தம் 1070 தியேட்டர்கள் மட்டுமே இப்போது இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இதில் 2, 3, 5, 8, 10, 16 ஸ்கிரீன்கள் என்று இயங்கும் மால் மற்றும் மல்டி ப்ளக்ஸ் திரைகளும் அடக்கம்.
இந்தத் தியேட்டர்களை 4 வகைகளாகப் பிரிக்கலாம்.

1. .பலாஸோ, ஐநாக்ஸ், சத்யம், லக்ஸ் போன்றவற்றிற்கு படத்தின் தரத்தைத் தாண்டி தியேட்டருக்காகவே கூட்டம் வரும். இவற்றில் 200-250 திரைகள் இருக்கும்.

கலப்பட பால் ! ராஜேந்திர பாலாஜி பேசுவதுக்குத் தடை தொடரும் !சென்னை உயர்நீதிமன்றம்


விகடன் பிரேம் குமார் எஸ்.கே.:   தமிழகத்தில் விற்கப்படும் பாக்கெட் பாலில் கலப்படம் இருப்பதாகத் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தமிழக மக்களிடையே பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.> தினம் தினம் திருநாளே! தினப் பலன் அக்டோபர் 19-ம் தேதி பஞ்சாங்கக் குறிப்புடன் மேலும் விஜய், டோட்லா, ஹட்சன் ஆகிய மூன்று நிறுவனங்களும் தங்கள் நிறுவனப் பாலை அரசு அங்கீகாரம் பெற்ற ஆய்வு நிறுவனத்தில் பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது, சென்னை உயர் நீதிமன்றம்.

BBC : முரசொலி அலுவலகத்தில் கட்டுமரம் ...தொண்டர்கள் ஹாஷ்டாக்

உடல்நலமின்றி ஓய்வெடுத்துவந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, வியாழக்கிழமையன்று இரவு முரசொலி அலுவலகத்திற்குச் சென்று பார்வையிட்டது தி.மு.க. தொண்டர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சமூக வலைதளங்களில் இது தொடர்பான உற்சாகத்தை அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். >நீண்ட காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் கருணாநிதி, வியாழக்கிழமையன்று இரவில், கட்சி நாளிதழான முரசொலியின் அலுவலகத்திற்கு வந்து அங்கு அமைக்கப்பட்டிருக்கும் பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார். இந்தத் தகவல் ஊடகங்களில் வெளியானது முதல், அவரது கட்சித் தொண்டர்களும் அபிமானிகளும் சமூக வலைதளங்களில் இது தொடர்பான மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் வெளியிட்டுவருகின்றனர்.

வெள்ளி, 20 அக்டோபர், 2017

நான் டாக்டர் இல்லை! டாக்டர்கள் கூறிய கருத்தையே நான் தெரிவித்தேன்! அமைச்சர் சீனிவாசன் திடீர் பல்டி!!!


நக்கீரன் : கடந்த  ஒரு  வாரத்திற்கு முன்பு திண்டுக்கல் அரசு தலைமை
மருத்துவமனையை ஆய்வு செய்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் டெங்குகாய்ச்சலுக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் யாரும் பலியாகவில்லை. வைரஸ் காய்ச்சலுக்குத்தான் சிலர் பலியாகியுள்ளனர் என்று கூறினார். இதற்கு முன்னாள் தி.மு.க. அமைச்சரும், கழக துணைப்பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமியோ டெங்கு காய்ச்சலுக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் பலர் இறந்துள்ளனர் என்ற ஆதாரப்பூர்வமாக தெரிவித்தார்.
இது டாக்டர்கள் மத்தியிலும், பொதுமக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில்தான் பழனிக்கு வந்த வனத்துறை அமைச்சரோ டெங்கு காய்ச்சல் உயிரிழப்பு குறித்து டாக்டர்கள் கூறிய கருத்தையே நான் தெரிவித்தேன் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். பழனியில் பாலாறு, பொருந்தலாறு அணை தண்ணீரை விவசாயத்திற்காக திறந்துவிடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பாசனத்திற்கு தண்ணீரை திறந்துவிட்டார். அதன்பின் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சீனிவாசனோ... தற்போது பாலாறு, பொருந்தலாறு அணையில் இருந்து 834 ஏக்கர் பாசன வசதி பெற்றும் வகையில் வினாடிக்கு 200 கன அடி வீதம் 130 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

கிரண் பேடியின் "மோடி அம்மா" பொய் ! ..வசமாக மாட்டி கொண்டார் ... பாஜகவின் கால் நக்க ஒரு ஆளுநர் பதவி?


Kiran Bedi  : Am informed it's mistaken identity @SadhguruJV. But salute to the mother with so much vigour. I hope i can be like her if/ when I am 96..!

 BBC :புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி 'ஷேர்' செய்த ஒரு ட்விட்டர் காணொளியால் அவர் பரவலான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார்.>அந்தக் காணொளியில் மூதாட்டி ஒருவர் குஜராத்தி பாடலுக்கு நடனமாடுகிறார்.
அந்தக் காணொளியை தனது ட்விட்டர் கணக்கில் பகிர்ந்துள்ள கிரண் பேடி, ''97 வயதில் உற்சாகத்துடன் தீபாவளி கொண்டாடும் இவர் நரேந்திர மோதியின் தாயார் ஹீராபென் மோதி. தனது வீட்டில் தீபாவளி கொண்டாடுகிறார்'' என்று பதிவிட்டுள்ளார்.
கிரண் பேடியின் இந்த ட்விட்டர் பதிவுக்கு சமூக ஊடகங்களில் பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த காணொளியில் நடனமாடும் மூதாட்டி பிரதமர் மோதியின் தாய் அல்ல என்று சிலர் ஆதாரத்துடன் தெரிவித்தார்கள்.< முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @thekiranbedi<க்கம் அளித்த கிரண் பேடி, ''எனக்கு தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் உற்சாகமான இந்தத் தாயை நான் வணங்குகிறேன். 97 வயதில் நானும் இவரைப் போலவே இருப்பேன் என்று நம்புகிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இவர்களுக்கு Z + பாதுகாப்பு தேவைதானா? சாமியார்களுக்கும் பணமுதலைகளுக்கும் Z பிளஸ் பாதுகாப்பு ...

Ravichandran Murugesan : ஒரு நபருக்கு ஒரு மாதத்திற்கு 15 லட்சம் ரூபாய் Z plus பாதுகாப்புக்கு அரசு செலவிடுகின்றனர்.
பாபா ராம்தேவ் - Z Plus பாதுகாப்பு..
அன்னா ஹசாரே - Z +
மோகன் பகவத் - Z +
முகேஷ் அம்பானி - Z +
சுரேஷ் ராணா - Z +
சிராக் பாஸ்வான் - Z +
துஷ்யந்த் சிங் - Z +
சாத்வி பிராச்சி - X +
சாபீர் அலி - Y +
நீட்டா அம்பானி - Y +
சுதிர் சௌதிரி (Z News ) - Y +
அர்னாப் கோஸ்வாமி - Y Plus பாதுகாப்பு...

இதில் சிலர் விடுபட்டு இருக்கலாம். இவர்கள் இந்த நாட்டிற்கு என்ன தியாகம் செய்தனர்,
இவர்களுக்கு Z + பாதுகாப்பு தேவைதானா? நம்மைப் பார்த்து மான்யத்தை விடு - வரியை கொடு - என்று கூறும் இந்த மோடி அரசின் செயல்கள் நியாயமா! சிந்திப்பீர்!

தமிழிசை : மெர்சல் 200 ரூபா டிக்கெட் 2000 ரூபாவுக்கு ... விஜய் தனது சம்பளத்தை சொல்வாரா?



ஜோசஃப் விஜய்யின் மோடி வெறுப்பே மெர்சல்: எச்.ராஜா குற்றச்சாட்டு

தினகரன்" "சென்னை: ஜோசஃப் விஜய்யின் மோடி வெறுப்பே மெர்சல் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார். நடிகர் விஜய் மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டிக்கு எதிராக வசனங்கள் உள்ளதாக பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் அந்த வசனங்களை நீக்க வேண்டும் என தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் என மெர்சலில் கூறியுள்ளது பொய் என பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார். இந்தியாவில் பள்ளி கல்வி, மருத்துவம் ஏழைகளுக்கு இலவசம் என்றும் ஜோசஃப் விஜய்யின் மோடி வெறுப்பே மெர்சல் என்றும் எச். ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சிதம்பரம் : குஜராத் தேர்தல் திகதியை தீர்மானிக்கும் சலுகையை மோடியிடம் வழங்கிய தேர்தல் ..

குஜராத்தில் தேர்தல் தேதியை முடிவு செய்ய பிரதமருக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது: ப.சிதம்பரம்குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவிக்காத தேர்தல் ஆணையத்தை முன்னாள் மத்திய நிதித்துறை மந்திரி ப.சிதம்பரம் டுவிட்டரில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். புதுடெல்லி: மாலைமலர் :இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 12-ம்தேதி
ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இமாச்சல பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை அறிவித்தது. அன்றைய தினம் குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.< ஆனால், அன்று குஜராத் தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவிக்கவில்லை. இருப்பினும் டிசம்பர் 18-ம் தேதிக்குள் குஜராத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தது. குஜராத் தேர்தல் தேதி அறிவிக்கப்படாததற்கு அரசியல் காரணங்கள் இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்தன.

கமல்ஹாசனின் பகிரங்க மன்னிப்பு – கருத்துக் கணிப்பு

பணமதிப்பழிப்பு நடவடிக்கையை ஆய்வு செய்யாமல் அவசரப்பட்டு ஆதரித்ததற்கு பகிரங்க மன்னிப்பு கேட்கிறாராம் கமல். இதே போன்று மோடியும் “அவசரப்பட்டு மன்னிப்பு” கேட்டால் பெருந்தன்மையாக இருக்குமாம்.
வினவு :தீபாவளிக்கு ஒரு புயல் கரையைக் கடக்கும் என்றார்கள். அந்தப் புயல் கரையைக் கடக்கவில்லை. ஆனால் வாரா வாரம் திருவாளர் கமல்ஹாசன் அவர்கள் “என்னுள்ளே மையம் கொண்ட புயல்” தொடரை ஆ.விகடனில் வெளியிடுகிறார்.
ஒருத்தருக்குள்ளே மையல்தான் வரும். புயல் வருவதாக இருந்தால் ஏதோ சில பிரச்சினைகளால் அவர் பாதிக்கப்பட்டு பாரதூரமான முடிவுகளை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கும். கமல் அப்படிப்பட்டவர் இல்லை. அவர் சாதரணமாக நடந்தாலே கண்ணி வெடிக்குரிய சோதனைகள் மாதிரி செக் பண்ணிவிட்டுத்தான் உலவ விடுகிறார்கள் அவரது அணியினர்.
கமலைப் போன்றவர்களின் புயலை புரளி என்பதா, இல்லை புதிரா என டிவிட்டர் துவங்கி ஃபேஸ்புக் வரை அவ்வ்ப்போது ஆய்வுகள் நடக்கின்றன. நடக்கட்டும்! செயலுக்கு வழியில்லாத போது சிதறல்களே மாபெரும் ஆய்வுகளாவதில் தவறில்லை!

மகாவீரர் இறந்தநாள் தீபாவளி என்பதில் உள்ள கேள்விகள் ... விளக்கங்கள்

Surya xavier.: சமணத்தின் மகாவீரர் இறந்தநாள் தான் தீபாவளி என்றால்
சமணத்தின் புலால் மறுப்பை தானே கடைபிடிக்க வேண்டும்? அன்று புலால் உண்ணலாமா? முரண்பாடாக இருக்கிறதே என்ற கேள்வியை நணபர்கள் எழுப்பினர்
இதில் முரண்பாடே இல்லை
மக்களின் எந்த ஒரு செயலும் ஆதிக்க வர்க்கம் அனுமதித்த ஒன்றே.அவர்கள் விருப்பப்படி இங்கு எதுவும் இல்லை. பௌத்தமும் சமணமும் மட்டுமே புலால் மறுப்பை தங்கள் கொள்கை பிரகடனமாகக் கொண்டிருந்தன. பார்ப்பனியத்தின் எந்த ஒன்றிலும் புலால் மறுப்பு கொள்கையாக இல்லை. அது அரசியலுக்காக மட்டுமே அதை தேவைக்குப் பயன்படுத்தும்
சமணத்தின் மகாவீரர் தான் பார்ப்பனியத்திற்கு நரகாசூரன். அவர் இறந்தததால் தீபாவளி.புலால் மறுப்பை கொள்கையாகக் கொண்ட அவர் இறந்த அன்று புலால் உண்ண வைத்ததை குல தெய்வ வழிபாட்டின் நீட்சியோடு இணைத்தது
குல தெய்வ வழிபாட்டில் நீத்தார் நினைவாக எண்ணெய் தேய்த்து தலை முழுகி கறி உண்பது தமிழர் மரபு. இதில் பார்ப்பனியத்திற்கு இரண்டு வகையான வெற்றி இருக்கிறது

திராவிட குடும்பங்களில் தீபாவளி .... சேரிகளில் கிருஷ்ணசாமிகளும் தடா பெரியசாமிகளும்

balasubramanian.saraswathy : இன்று இது ஈவெரா செத்த மண், வாழ்ந்த மண்
அல்ல.
சூத்திர திராவிட குடும்பங்களும், உறவுகளும், கட்சிகளும் சேர்ந்து அவரை கொன்று புதைத்துவிட்டு "இது பெரியார் மண் இது பெரியார் மண்" என்று கூவிக்கிட்டு அலைகிறார்கள்.
ஈவெரா வாழ்ந்த, வாழும் மண் சேரிகள் மட்டும்தான். அவரின் கொள்கைகளையும், அவரையும் முழுமையாக ஏற்றுக்கொண்ட ஆட்கள் அங்கு மட்டும் இன்றும் முழுமையாக வாழ்கிறார்கள்.
இன்னொரு முறை என்னிடம் தமிழ்நாட்டை பெரியார் மண், வெங்காய மண் என்று சொல்லாதீர்கள். "பெரியார் செத்துப் போன மண்" என்று வேண்டுமானால் சொல்லுங்கள்.
இதே நிலை நீடித்தால் சேரிகளில் கிருஷ்ணசாமிகள், தடா பெரியசாமிகள், ஹிந்துத்துவா அம்பேத்கர்கள்.... உருவாவதை யாராலும் தடுக்க முடியாது

இந்து–முஸ்லிம் காதல் திருமணம் செல்லும் கேரள ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

தினத்தந்தி :கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த ஒரு இந்து மத இளம்பெண், கடந்த மே 16–ந் தேதி, வீட்டை விட்டு வெளியேறி, தன் காதலரான முஸ்லிம் வாலிபரை திருமணம் செய்து கொண்டார். கொச்சி,  அப்பெண்ணின் பெற்றோரின் புகாரின்பேரில்,
இருவரையும் அரியானா மாநிலத்தில் போலீசார் பிடித்து அழைத்து வந்தனர். அப்பெண்ணை பெற்றோருடன் செல்ல கீழ்கோர்ட்டு அனுமதித்தது. மகளின் மனதை மாற்றுவதற்காக, அவரை ஒரு யோகா மையத்தில் பெற்றோர் சேர்த்தனர்.
முஸ்லிம் வாலிபர் தாக்கல் செய்த ‘ஹேபியஸ் கார்பஸ்’ மனுவின்பேரில், ஒரு தனி நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அப்பெண், பெற்றோருடன் செல்வதாக கூறினார். ஆனால், 4 நாட்களில் அவர் ‘பல்டி’ அடித்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வி.சிதம்பரேஷ், சதீஷ் நினான் ஆகியோர் அடங்கிய கேரள ஐகோர்ட்டு அமர்வு, இவர்களின் திருமணம் செல்லும் என்று நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

டெங்கு ... வீடுகள், கடைகள், நிறுவனங்களுக்கு அபராதம்

தினதந்தி :டெங்கு  காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சென்னை, தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பலர் பலியாகி உள்ளனர். மேலும் ஏராளமான பேர் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. இது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சுகாதாரமற்ற முறையில் தண்ணீர் தேங்குவதால் கொசுக்கள் அதிகரிக்கின்றன. அந்த கொசுக்கள் கடிப்பதால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இதனால் வீடுகள், கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுமாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டு உள்ளனர்.