சனி, 20 ஏப்ரல், 2019

நீதித்துறையை மிரட்டுகிற நிலை பாஜக ஆட்சி .. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வேதனை!.

ஆலஞ்சியார் : ”நீதித்துறை மிகப் பெரிய ஆபத்தில் உள்ளது .. என்ன விலை கொடுத்தும் அவர்களால் வாங்க முடியவில்லை” உச்ச நீதிமன்ற நீதிபதி
தலைமை நீதிபதி எனவே என் மீது பெண்ணை வைத்து புகார் கொடுக்க வைத்துள்ளார்கள் நீதித்துறை சுதந்திரமாக செயல்படுவதில் மிகப் பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது இதை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக எனது இருக்கையில் இருந்து சொல்லும் நிலையை ஏற்படுத்தி விட்டார்கள்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வேதனை!..
நீதிபதிகள் மீது குற்றசாட்டுகள் வருவது புதிதல்ல என்றாலும் தனக்கு சாதகமான நடந்துக்கொள்ளாதவர்கள் மீது குற்றம் சுமத்தி அவர்களை அரசுக்கு இணக்கமாக அல்லது ஆள்வோருக்கு தலையாட்டுகிறவர்களாக நடத்த முயற்சிப்பது நாட்டின் நீதித்துறையின் நம்பிக்கையை சிதைக்கிறது நான் நேர்மையானவன் என்கிறார் நீதிபதி அவரின் வங்கிகணக்கை கூட வெளியிட்டு என்னைவிட என் உதவியாளர்கள் கூடுதலாக பணம் சொத்து வைத்திருக்கிறார்கள் என்கிறார் .. நீதித்துறை வட்டாரங்களில் "விலைக்கு " வாங்கமுடியாதவர் என்ற பெயர் இருப்பதாக சில ஊடகவியலாளர்கள் பதிவு செய்கிறார்கள் .. மிக முக்கியமான வழக்குகள் விசாரணைக்கு ஏற்றதும் பாஜக அரசிற்கு பெரும் நெருக்கடியை தந்ததால் இவர் மீது ஒருவித வன்மத்தோடு செயல்படுவது தெரிகிறது ..

டெல்லி லாபி!' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா?. 12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்.. பட்டுவாடா நிறைவு?

தினகரன், சசிகலா`12 தொகுதிகள்; 1.50 கோடி வாக்குகள்; டெல்லி லாபி!' - தினகரனிடம் ஏமாந்தாரா சசிகலா?vikatan.com - vijayanand.a : `அழைக்க மறந்துவிட்டோம். 4 தொகுதிகளுக்கான தேர்தல் மே 19 அன்று நடக்கிறது. கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்றால் 30 நாள்களுக்கு முன்னதாக தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டும். அதைக் கணக்கில் வைத்தே நேற்று பொதுச் செயலாளர் தேர்வு நடந்தது'.அ.ம.மு.க-வின் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் தினகரன். இதுகுறித்து சசிகலா அளித்த ஒப்புதல் கடிதத்தை அ.ம.மு.க வெளியிடவில்லை. `சசிகலாவின் ஒப்புதலோடுதான் அனைத்தும் நடக்கிறது என நிர்வாகிகளைச் சமாதானப்படுத்திவிட்டார் தினகரன். நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரையில் அமைதியாக இருந்ததுதான் சந்தேகத்தை எழுப்புகிறது' என்கின்றனர் மன்னார்குடி குடும்பத்தினர்.

மன்மோகன் சிங் :NYAY நியாய திட்டத்திற்கு புதிய வரி விதிக்கவேண்டிய அவசியம் இல்லை .. பொருளாதாரத்திற்கு உயிர்ப்பூட்டும்:

தினகரன் :டெல்லி: நியாய் திட்டத்தை செயல்படுத்தும் போது நடுத்தர வர்க்கத்தினர் மீது வரிகள் ஏதும் விதிக்கப்படாது என காங்கிரஸ் கட்சியின் நியாய் திட்டம் குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அறிக்கை வெளியிட்டுள்ளார். வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்தே நியாய் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். வெற்றிகரமாக நியாய் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர முடியும் என்றும் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
மின்னம்பலம் : காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்தால் ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.72,000 குறைந்தபட்ச ஊதியமாக வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இத்திட்டம் குறித்து பொருளாதார அறிஞரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த மார்ச் 25ஆம் தேதியன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நியாய் திட்டத்தை அறிவித்தார்.

BBC : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்: மீது பாலியல் புகார் ..


இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் பெண் ஊழியர் ஒருவர், தற்போதைய தலைமை நீதிபதியால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக உச்ச நீதிமன்றத்தின் 22 நீதிபதிகளுக்கும் புகார் ஒன்றை எழுதியுள்ளார். இதைத் தொடர்ந்து ரஞ்சன் கோகாய் தலைமையில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அவசர விசாரணை ஒன்றை நடத்தியது. இந்த அமர்வில் தலைமை நீதிபதியோடு, நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
அப்போது தம் மீதான புகார்களை மறுத்த ரஞ்சன் கோகாய், நீதித்துறையின் சுதந்திரம் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், நீதித்துறை பலிகடா ஆகக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
அந்தப் பெண் அளித்துள்ள புகார் தொடர்பாக தாம் எதுவும் விசாரிக்கப் போவதில்லை, பிற மூத்த நீதிபதிகள் விசாரிப்பார்கள் என்று ரஞ்சன் கோகாய் கூறியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுக்குப் பின்னால் சதி இருப்பதாகவும், தலைமை நீதிபதியின் அலுவலகம் செயல்படுவதை முடக்கும் நோக்கத்துடன் இதன் பின்னால் பெரும் சக்திகள் உள்ளதாகவும் கூறினார்.
"20 ஆண்டுகள் நீதிபதியாக இருந்தபின் என் வங்கிக்கணக்கில் 6.80 லட்சம் ரூபாய்தான் உள்ளது. என் அலுவலக உதவியாளரிடம்கூட அதிகப் பணம் உள்ளது, " என்று அப்போது கோகாய் குறிப்பிட்டார்.

திரு.ஆலடி அருணா கல்வி உதவி திட்டம்.. ஆலடி எழில்வாணன்

ஆலடி எழில்வாணன் : எனது அன்பு தந்தையும், நெல்லை, ஆலடிபட்டி
மண்ணின் மைந்தருமான, முன்னாள் சட்ட அமைச்சர் திரு.ஆலடி அருணா அனைவராலும் நன்கு அறியப்பட்ட ஒரு மூத்த அரசியல்வாதி! அறிஞர் அண்ணாவால் "சிந்தனைக் கனி" என்று அழைக்கப்பட்டவர்! ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறந்த பேச்சாளர் மற்றும் எழுத்தாளர்! தமிழை தன் உயிர் மூச்சாக கொண்டு வாழ்ந்தவர்.
கல்விக்கு எப்போதுமே முக்கியத்துவம் வழங்குபவர். சட்ட அமைச்சராக இருந்த போது தமிழகத்தில் சட்ட பல்கலைக்கழகம் கொண்டு வந்தார். மேலும், திருநெல்வேலியில் சட்டக் கல்லூரி கொண்டு வந்தார், கலைக் கல்லூரிகள் பல உருவாக காரணமாக இருந்தவர். மேலும், பல அரசு பள்ளிகளின் தரத்தினை உயர்த்தி, கட்டிடங்கள் உதவி, நிதி உதவி என பல உதவிகளை செய்துள்ளார்.
நெல்லை மாவட்ட மக்கள் சிறப்பான உயர்கல்வியை பெற ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி மற்றும் ஐன்ஸ்டீன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை நிறுவினார்.
அன்னாரின் பெயரில் "ஆலடி அருணா கல்வி உதவி திட்டம்" 2010 முதல் செயற்பாட்டில் உள்ளது. இது +2 பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்வி கற்க உதவும் திட்டம்.
பொறியியல் படிப்பிற்கான கல்வி உதவி திட்டம்:
+2 தேர்வில் கட் ஆஃப் 180+ எடுக்கும் மாணவர்களுக்கு பொறியியல் பட்டம் படிக்க நான்கு ஆண்டுகள் கல்வி கட்டணம் + விடுதி கட்டணம் கிடையாது.

பொன்னமராவதி கலவரத்தைக் கட்டுப்படுத்த அனைத்துக் கட்சி ஒருங்கிணைப்புக்குழு ... வலியுறுத்தல்

Emphasize with the All Party Coordinating Committee to control the riotsnakkheeran.in - bagathsingh : புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலும் தொடரும் போராட்டங்களை அதன் மூலம் ஏற்படும் கலவரங்களை கட்டுப்படுத்த அனைத்துக் கட்சிகளின் அவசரக்கூட்டத்தை கூட்டி முடிவெடுக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மு.மாதவன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். அந்த மனுவில்.. மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்துப் பெண்களை இழிவாகப் பேசி வெளியான வாட்ஸ் அப் ஆடியோ செய்தியால் பொன்னமவராவதி பகுதியில் கடந்த வியாழக்கிழமை முதல் மிகப்பெரிய அளவிலான போராட்டம் வெடித்தது.

வேலூர்: திமுக வேட்பாளராக கதிர் ஆனந்தின் மனைவி சங்கீதா?

வேலூர்: திமுக வேட்பாளராக கதிர் ஆனந்தின் மனைவி சங்கீதா?மின்னம்பலம் : வேலூர் தொகுதியில் திமுக சார்பில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்ட நிலையில், தேர்தல் ஏப்ரல் 16 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. கடந்த மார்ச் 30, ஏப்ரல் 1 தேதிகளில் துரைமுருகன் வீடு, மற்றும் சில திமுகவினரின் வீடுகளில் வருமான வரி ரெய்டு நடத்தப்பட்டது. இதில் துரைமுருகனின் நண்பரான பூஞ்சோலை சீனிவாசனின் சிமெண்ட் குடோனில் இருந்து சுமார் 11 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது.
இதுதொடர்பாக கடந்த 3ஆம் தேதி தேர்தல் ஆணையத்திடம் வருமான வரித் துறை அறிக்கை சமர்ப்பித்த நிலையில், வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனையடுத்து தேர்தல் செலவின உதவி அலுவலர் சிலுப்பன் காட்பாடி காவல் நிலையத்தில் அளித்த புகாரில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்புமனுவில் குறிப்பிட்டதைக் காட்டிலும் அதிக பணம் அவரது இல்லத்தில் நடந்த வருமான வரி சோதனையில் பிடிபட்டுள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் தெருவில் ... ஊருக்கு செல்லவும் பணமின்றி அல்லல் வீடியோ

THE HINDU TAMIL : நிதிப்பற்றாக்குறை காரணமாக சேவை முற்றிலும் நிறுத்தப்பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பைலட் உள்ளிட்ட பணியாளர்கள் கடும் பணச்சிக்கல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
பிற நகரங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட தொழில் நுட்ப ஊழியர்கள் பலர் தங்கள் குடும்பத்தினரைச் சந்திக்க ரெயில் டிக்கெட்டுகளுக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
நேஷனல் ஏவியேட்டர்ஸ் கில்டின் கேப்டன் அசிம் வாலியானி கூறும்போது, “இன்று காலை சக பைலட்டிடமிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அவர் தனது விலை உயர்ந்த பைக்கை விற்று விட முடிவு செய்துள்ளதாக என்னிடம் தெரிவித்தார். பல ஊழியர்களும் தங்கள் தினசரி செலவுகளைக் கூட சந்திக்க முடியாத கஷ்டத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்” என்றார்.
ஜெட் ஏர்வேஸில் 15 ஆண்டுகளாக பணியாற்றிய சீனியர் பொறியாளர் ஒருவர் பலரும் கடும் பணக்கஷ்டத்தில் உழல்வதாகத் தெரிவித்தார், குறிப்பாக பைலட் ஒருவர் தன் சகோதரி திருமணச் செலவுகளுக்காக பலரிடமும் பணம் கேட்டு வருகிறார் என்றார்.

பொன்னமராவதியில் கலவரம்... 1,000 பேர் மீது வழக்குப்பதிவு... பதற்றம் நீடிப்பு, போலீஸ் குவிப்பு

tamil.oneindia.com : புதுக்கோட்டை: பொன்னமராவதியில் கலவரத்தில் ஈடுபட்டதாக சுமார் 1000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கலவரம், மற்ற மாவட்டங்களுக்கு பரவாமல் தடுக்க 1,500 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஒரு சமூகத்தினர் பற்றிய அவதூறு வாட்ஸ்அப் ஆடியோவால் பொன்னமராவதியில் கலவரம் ஏற்பட்டது.அவதூறு வாட்ஸ்அப் ஆடியோ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று போராட்டம் வெடித்தது. 
மேலும், பொன்னமராவதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலின் போது, போலீசார் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. போராட்டத்தின்போது பொன்னமராவதி காவல்நிலையம், போலீஸ் வாகனங்களும் தாக்கப்பட்டன. கற்கள் வீசி தாக்கப்பட்டதை தொடர்ந்து, பொன்னமராவதி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 75 சதவிகித நகரப்பேருந்துகள் இயக்கப்படவில்லை. 

பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்?’ – அறிவாலயத்தில் கொட்டி தீர்த்த ஸ்டாலின்

ஸ்டாலின்விகடன் : “அவர் என்ன இல்லாதப்பட்டவரா… டீ சாப்பிடக்கூட காசு தர மாட்டேன்னா எதுக்கு வந்து போட்டியிடணும். பேசாமல் ராஜ்யசபா சீட் வாங்கிட்டுப் போக வேண்டியதுதானே…” என அறிவாலயப் பொறுப்பாளர்களிடம் ஆதங்கப்பட்டுள்ளனர் நிர்வாகிகள்.
தேர்தல் திருவிழா முடிந்துவிட்டது. கோடை வெயிலின் தாக்கத்தால் முகமெல்லாம் கறுத்துப்போய் பல வேட்பாளர்களின் அடையாளமே மாறிப்போய்விட்டது. அதேநேரம், உட்கட்சி மோதல் பஞ்சாயத்துகளும் வெளிவரத் தொடங்கிவிட்டன. இதில், அறிவாலயத்தில் நடந்த மோதல்தான் ஹாட் டாபிக்.

தமிழகம் முழுவதும் நேற்று 71 சதவிகிதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. இதில், “நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் அதிகபட்சமாக 79.75 சதவிகித வாக்குகளும் குறைந்தபட்சமாக தென்சென்னை தொகுதியில் 57.43 சதவிகித வாக்குகளும் பதிவாகியிருக்கிறது” எனப் பேட்டி அளித்திருக்கிறார் தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு. இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு அதிக வாய்ப்பு என்பதற்கான விடையை அறிந்துகொள்வதில் அரசியல் கட்சிகள் ஆர்வமாக இருக்கின்றன. தேர்தல் பிரசாரத்தைவிடவும் உட்கட்சி மோதல்களைச் சமாளிப்பதிலேயே சில கட்சிகளுக்கு நேரம் கடந்துவிட்டது. அப்படியும், தமிழகம் முழுவதும் அதிக உற்சாகத்தோடு வலம் வந்தனர் ஸ்டாலினும் எடப்பாடி பழனிசாமியும். ஒருவருக்கொருவர் தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைத்து அரசியல் களத்தில் அனல் பரப்பினர். இப்போது தேர்தல் முடிந்துவிட்டதால், கட்சிப் பஞ்சாயத்துகளைக் கவனிக்கத் தொடங்கியிருக்கிறார் ஸ்டாலின். கடந்த சில நாள்களாக அவரைக் கோபம் கொள்ள வைத்த விஷயங்களைப் பற்றி நம்மிடம் விவரித்தனர் தி.மு.க நிர்வாகிகள் சிலர்.

ஆட்சிக்கு சிக்கல்” – ஐ.பி அறிக்கையும்… அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்!

அ.தி.மு.க எடப்பாடி - மோடி
விகடன் : தமிழகத்தில் 40 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல், ஏப்ரல் 18-ம் தேதி நடந்துமுடிந்தது. தமிழகம் முழுவதும் 72 சதவிகித வாக்குப்பதிவு இந்தத் தேர்தலில் பதிவாகியுள்ளது.

தேர்தல் முடிவுக்குப் பிறகு, மத்திய உளவுத் துறையான ஐ.பி, மாநிலம் முழுவதும் ரகசிய சர்வே ஒன்றை எடுத்தது. அந்த சர்வேயின் முடிவுகள் மத்திய அரசுக்கு இன்று அனுப்பிவைக்கப்பட்டது. அந்த அறிக்கை குறித்து நம்மிடம் பேசும் அதிகாரிகள், “தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க-விற்கு சாதமாக நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கும் என்று நாங்கள் கொடுத்த அறிக்கை அப்படியே மாறிவிட்டது.
அ.தி.மு.க பி.ஜே.பி இடையே ஏற்பட்ட கூட்டணியை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது வாக்குப்பதிவு முடிந்தபிறகு கண்கூடாக எங்களால் அறிந்துகொள்ளமுடிந்தது. இந்தக் கூட்டணி இல்லாமல் இருந்திருந்தால்கூட அ.தி.மு.க கணிசமான இடங்களில் வெற்றிபெறும் வாய்ப்பு இருந்திருக்கும். தேர்தல் முடிவுக்குப் பிறகு நாங்கள் நடத்திய ஆய்வில், நாடாளுமன்றத் தொகுதிகளில் 28 இடங்களைக் கண்டிப்பாக தி.மு.க கூட்டணி பெற்றுவிடும்.

தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பு சசிகலாவுக்கு தெரியாதாம் .. கொதிக்கும் சசி குடும்பம்

தினகரன்`சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது!' - தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்`vikatan: சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது!’ – தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்">சசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது!’ – தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள் பொதுச் சின்னம் வேண்டும் என்றால் தேர்தலுக்கு முன்னரே அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கலாம். இப்போது 4 தொகுதி தேர்தலின்போது மட்டும் அக்கறை காட்டுவதில் உள்நோக்கம் இருக்கிறது. `இது சசிகலா சார்ந்த கட்சி அல்ல’ என்பதைக் காட்டுவதுதான் தினகரனின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.
ம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரன் பொறுப்பேற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. `சிறையில் இருக்கும் சசிகலாவிடம் முறைப்படி அனுமதி வாங்கினாரா என்பதும் சந்தேகம்தான். தினகரனின் அறிவிப்பால் குடும்ப உறுப்பினர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்’ என்கின்றனர் மன்னார்குடி வட்டாரத்தில்.
நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலில் அ.ம.மு.க வேட்பாளர்கள் சுயேச்சையாகப் போட்டியிட்டனர். மீண்டும் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட வேண்டும் என்ற அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டது.

பஞ்சாபில் ஐந்தாவது குழந்தையும் பெண்ணாக பிறந்த விரக்தியில் மனைவியை கொன்ற கணவன்


BBC :காவல்துறையினரையே திகைப்பில் ஆழ்த்திய கொடூரமான சம்பவம் ஒன்று பஞ்சாபில் நிகழ்ந்துள்ளது. ஐந்தாவது குழந்தையும் பெண்ணாக
பிறந்ததால் விரக்தியடைந்த ஒருவர் தனது குழந்தைகளை ஓரறையில் அடைத்துவிட்டு, தூங்கிக் கொண்டிருந்த மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கொடூர சம்பவம் பஞ்சாப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஓர்  ஆண் குழந்தையை கூட பெற்று தரவில்லை என்ற காரணத்தினால் அவர் மனைவியை கொலை செய்ததாக காவல்துறையினர்
தெரிவித்துள்ளனர். தனது மனைவியை கொன்ற அந்த நபர் பிறகு தற்கொலை செய்துகொள்வதற்கு முயற்சி செய்துள்ளார். இவர்களது மூத்த மகளுக்கு 14 வயதும், இளைய மகளுக்கு நான்கு மாதமும், மற்ற குழந்தைகளுக்கு முறையே 12, 10 மற்றும் எட்டு வயதாகிறது.
இந்த சம்பவம் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் தலைநகர் சண்டிகரிலிருந்து சுமார் 81 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அனந்த்பூர் சாஹிப் என்னுமிடத்தில் நிகழ்ந்துள்ளது.

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வர்த்தகர்களுக்கு பிணையின்றி ரூ.50 லட்சம் கடன் - பிரதமர் மோடி

மாலைமலர் : டெல்லியில் நடைபெற்ற வர்த்தகர்கள் கூட்டத்தில் பேசிய
பிரதமர்  மோடி,  பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வர்த்தகர்களுக்கு எந்தவித பிணையும் இன்றி ரூ.50 லட்சம் வரை கடன் அளிக்கப்படும் என தெரிவித்தார். புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள தல்காதோரா மைதானத்தில் வர்த்தகர்கள் சங்க கூட்டமைப்பின் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது: வர்த்தகர்கள், வியாபாரிகள் தான் இந்த நாட்டின் முதுகெலும்பு. உங்களின் பங்களிப்பு இல்லை என்றால் இந்திய பொருளாதாரம் உலக அரங்கில் 2 மடங்கு அதிகரித்து இருக்காது. முந்தைய காங். ஆட்சி பண வீக்கத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டது. இதனால் வர்த்தகர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். பணவீக்கம், விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் தொழில்வளர்ச்சி வீழ்ச்சியடைந்தது.> கடந்த 5 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில்

வங்காளதேசம் மாணவியை உயிரோடு எரித்த தலைமை ஆசிரயர் . பாலியல் புகாரை கொடுத்ததால்

வெப்துனியா :தலைமை ஆசிரியர் மீதான பாலியல் புகாரை வாபஸ் பெற மறுத்த மாணவி ஒருவர் பள்ளியில் வைத்து எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தை சேர்ந்த நஸ்ரத் ஜகான் ரபி(19) என்ற இளம்பெண் அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். ஜகான் ரபியிடம் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக தெரிகிறது. இதனால் பதறிப்போன மாணவி இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாரளிக்க போலீஸார் அந்த தலைமை ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 இந்நிலையில் பள்ளிக்கு சென்ற தலைமை ஆசிரியருக்கு வேண்டிய நபர்கள், மாணவியிடம் வழக்கை வாபஸ் வாங்குமாறு மிரட்டியுள்ளனர். ஆனால் மாணவி இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

தாய்லாந்து .கடல் நடுவே வீடு கட்டியவர் .. மரண தண்டனைக்கு வாய்ப்பு

மாலைமலர் :தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி, இறையாண்மையை மீறி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதையடுத்து அவர்களுக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது. பாங்காக்: அமெரிக்காவை சேர்ந்தவர் சாட் எல்வர்டோஸ்கி. இவர் பிட்காயின் முதலீட்டாளர். இவரது தாய்லாந்து காதலி சுப்ரானே தெப்பெட். இவரும் பிட்காயின் முதலீட்டாளர் ஆவார்.
தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்புகோடீஸ்வரர்களான இருவரும் தாய்லாந்தில் கடலுக்குள் கான்கிரீட் வீடு கட்டியுள்ளனர். கடற்கரையில் இருந்து 12 நாட்டிக்கல் தொலைவில் இந்த வீடு கட்டப்பட்டுள்ளது. பேஸ்புக்கில் இதன் போட்டோ வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வீட்டை தாய்லாந்து கடற்படையினர் கண்டுபிடித்து புகெட் போலீசில் புகார் செய்தனர். அனுமதி பெறாமலும், தாய்லாந்து இறையான்மையை மீறியும் கடலுக்குள் இந்த வீடு கட்டப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. 91.3% பேர் தேர்ச்சி.. கலக்கிய அரசு பள்ளிகள்!

TN 12th result 2019 announced: Full Detailstamil.oneindia.com - shyamsundar : TN 12th result 2019: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. இன்று! சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்விற்கான முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்றது. 12ம் வகுப்புக்கு மார்ச் 1 முதல் 19ம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுக்க மொத்தம் 8.87 லட்சம் பேர் 12ம் வகுப்பு தேர்வெழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது லோக்சபா தேர்தல் நடக்க இருந்ததால் எப்போதும் நடப்பதை விட மிக வேகமாக 12ம் வகுப்பு தேர்வுகள் நடந்து முடிந்தது. இந்த நிலையில்12ம் வகுப்பு பொதுத்தேர்வுவிற்கான முடிவுகள் இன்று காலை வெளியாகி உள்ளது..
பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் மாணவர்கள் இந்த தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள முடியும். tnresults.nic.in , dge.tn.nic.in மற்றும் dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணைய பக்கங்களில் சென்று மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும்.
அதேபோல் மாணவர்கள் தங்கள் பள்ளியிலும், கல்வித்துறை அலுவலகத்திலும் இந்த முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும்.
எப்போதும் போல இந்த அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறப்பு தேதி ஆகியவற்றை அளித்து முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும்.
+2 பொதுத்தேர்வு முடிவுகள் விபரம்:
  • பிளஸ் டூ பொதுத் தேர்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

பொன்னமராவதியில் ஒரு சமுகத்தை இழிவு படுத்துவாக வீடியோ .. வன்முறையில் ஈடுபட்டனர்.


Samayam Tamil வெளியான சர்ச்சை ஆடியோ - வெடித்தது வன்முறை; புதுக்கோட்டை கிராமத்தில் நடந்தது என்... ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதனால் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் வன்முறை தீ பற்றியுள்ளது. இதனைக் கண்டிக்கும் வகையில் பொதுமக்கள் போலீசார் மீது கற்களை வீசி எறிந்தனர். மேலும் அரசுப் பேருந்துகள் மற்றும் போலீஸ் வாகனங்களை தாக்கினர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பொன்னமராவதி தாலுகாவில் பதற்றத்தை தணிக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 5,000க்கும் மேற்பட்டோர் உள்ளூர் போலீஸ் ஸ்டேஷன் முன்பு திரண்டனர். சர்ச்சைக்குரிய வகையில் ஆடியோ வெளியிட்ட நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.

பா.ம.க., இந்து முன்னணியினர் நடத்திய வன்முறை வெட்கப்படத்தக்கதாகும்... ஆசிரியர் வீரமணி

17 ஆவது மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று (18.4.2019) தமிழ்நாட்டில் நடந்து
முடிந்திருக்கிறது. இந்தத் தேர்தலில் இரு கசப்பான சம்பவங்கள்
சுட்டிக்காட்டப்பட வேண்டியவையாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வாக்குச் சாவடிக்குள் புகுந்து ரகளை!
ஆற்காடு அடுத்து கீழ்விசாரம் என்ற ஊரில் வாக்குச் சாவடியில் நடந்த அந்த நிகழ்வு தலைகுனியத்தக்கதாகும்.
இதுகுறித்து இன்று ‘இந்து தமிழ்’ நாளிதழில் (பக்கம் 7) வெளிவந்த செய்தி வருமாறு:
‘‘ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் வாக்குச் சாவடியில் பாமகவினர் கூட்டமாக நுழைய முயன்றனர். இதனால், பாமகவினரை எச்சரிக்கும் வகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட துணை ராணுவப் படை வீரர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதால் சலசலப்பு ஏற்பட்டது.

வெள்ளி, 19 ஏப்ரல், 2019

அதானி துறைமுகத்துக்காக 6,200 ஏக்கர் நிலம்… சென்னையில்

பழவேற்காடு
காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க வரைபடம்காட்டுப்பள்ளி துறைமுகம்விகடன் : இப்போதிருக்கும் காட்டுப்பள்ளி துறைமுகத்தின் பரப்பளவு 330 ஏக்கர்கள். அதை 6200 ஏக்கர்களுக்கு விரிவாக்கப் போகிறார்கள். அதில் கிட்டத்தட்ட 2,000 ஏக்கர்களைக் கரைக்கடலில் ஆக்கிரமிக்கப்போகிறார்கள். மீன்களை ஏலம் விட்டுக் கொண்டிருந்தார்கள். பல்வகையான மீன்களைக் கொண்டுவந்து கொட்டிக்கொண்டிருந்த மீனவர்களின் முகங்கள் செலவுக்கேற்ற வரவு கிடைக்காத கவலையை அப்பட்டமாகக் காட்டின. முன்பிருந்த அளவுக்கு அவர்களுக்குத் தற்போது மீன்வளம் அவ்வளவு திருப்திகரமானதாக இருக்கவில்லை. பழவேற்காட்டு ஏரியின் சேற்று நிலங்களில் வலைகள், தூண்டில்கள் என்று எதுவுமே இல்லாமல் வெறும் கைகளால் நண்டுகளையும் இறால்களையும் பிடித்துக்கொண்டுவந்த இருளர் பழங்குடியின மக்களையும் அங்கு பார்க்க முடிந்தது. அந்தச் சந்தையில்தான் அவரையும் பார்த்தேன். அவர் பெயர் சீனிவாசன். சாத்தான்குப்பத்தைச் சேர்ந்தவர். வயது 60 இருக்கும். காட்டுப்பள்ளி துறைமுகம் உட்பட சென்னைக் கடற்கரையில் அமைந்திருக்கும் மூன்று துறைமுகங்கள் உண்டாக்கிய சூழலியல் தாக்கங்களால் பாதிக்கப்பட்டவர்களில் அவரும் ஒருவர்.
அவருடைய சிறுவயதில் தன் நண்பர்களோடு ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்த கடற்கரை இன்று காட்டுப்பள்ளி துறைமுகம் இருக்கும் பகுதியிலிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் கடலுக்குள்ளே இருக்கிறது.

ரஜினி : சட்டசபை தேர்தலை சந்திக்க தயார்

தேர்தல் எப்போது வந்தாலும் தயார்: ரஜினிகாந்த்மின்னம்பலம் : தமிழகத்திற்கு எப்போது சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்கத் தயாராக உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழக திரையுலகின் உச்ச நட்சத்திரங்களாய் இருக்கும் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியலுக்கு வருவதாக 2017ஆம் ஆண்டின் வெவ்வேறு தருணங்களில் அறிவித்தனர். இவர்களில் மக்கள் நீதி மய்யத்தை தொடங்கிய கமல்ஹாசன், மக்களவைத் தேர்தலில் தனித்து களம் கண்டுள்ளார். ரஜினி மக்கள் மன்றத்தை துவங்கிய ரஜினிகாந்த், வரும் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என்றும் குடிநீர் பிரச்சினைகளை தீர்த்து வைப்பவர்களுக்கு வாக்களியுங்கள் என்றும் ரசிகர்களுக்கு அறிவுறுத்தி இருந்தார். அவர் பாஜகவின் தேர்தல் அறிக்கையையும் வரவேற்றிருந்தார்.
இந்த சூழலில் தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல் வாக்குப் பதிவு நேற்று நடந்து முடிந்தது. வாக்குப் பதிவு நடந்த சமயத்திலேயே அடுத்த ஓட்டு ரஜினிக்கே என்ற ஹாஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது. தர்பார் படப்பிடிப்புக்காக மும்பை செல்வதற்கு முன்பு இன்று (ஏப்ரல் 19) போயஸ் கார்டன் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், “ரசிகர்களின் ஆர்வம் எனக்குப் புரிகிறது. அவர்களை ஏமாற்றிவிட மாட்டேன்” என்று பதிலளித்தார்.

சுஷ்மா சுவராஜ் :பால்கோட் தாக்குதலில் பாகிஸ்தானியர் யாரும் கொல்லப்படவில்லை

இதைத்தானேடா அந்த டெயிலரும் சொன்னான்...
பால்கோட் தாக்குதலில் பாகிஸ்தானியர் யாரும் கொல்லப்படவில்லை: சுஷ்மாமின்னம்பலம் : இந்திய விமானப் படை கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானிய ராணுவ வீரர்களோ, குடிமகன்களோ யாரும் கொல்லப்படவில்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று தெரிவித்திருக்கிறார். இந்தத் தகவல் அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்களிடத்திலும், சர்வதேச வட்டாரத்திலும் கூட பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பிப்ரவரி 14 ஆம் தேதி காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சி.ஆர்.பி.எஃப் படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தியதில் 40 க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிப்ரவரி 26 ஆம் தேதி அதிகாலை இந்திய விமானப் படை பாகிஸ்தானின் பால்காட் பகுதி மீது தாக்குதல் நடத்தியது.
இதில் பயங்கரவாதிகளின் முகாம் அழிக்கப்பட்டதாக தகவல்கள் பரவின. பாஜக தலைவர் அமித் ஷா, தனக்கு கிடைத்த தகவல்களின்படி 250க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று கூறினார். பிரதமர் மோடி பல மேடைகளில், நமது விமானப் படை பயங்கரவாதிகளை அழித்துவிட்டது என்று கூறினார். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கையில் குழப்பம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டபோது, ‘நம் நாட்டின் எதிர்க்கட்சிகள் நம் நாட்டு பாதுகாப்புப் படைகளையே நம்பவில்லை’ என்று கேள்வி கேட்டு, இதை பெரிய அளவில் தேர்தல் பரப்புரையாகவும் செய்தார் மோடி.

முகேஷ் அம்பானி காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பேச்சு .. பாஜக அதிர்ச்சி வீடியோ


வெப்துனியா :காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஒருவருக்காக முகேஷ் அம்பானி ஆதரவாக பேசும் ஒன்று வெளியாகி அரசியல் களத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக தேர்தல் ஜுரம் ஆட்கொண்டிருந்தது. மக்களவைத் தேர்தலின் 7 கட்ட வாக்குப்பதிவில் 2 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இன்னும் வாக்குப்பதிவு நடக்காத தொகுதிகளில் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன. வேட்பாளர்கள் தங்களுக்கு ஆதரவாக விளம்பரப்படங்களையும் எடுத்து வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தெற்கு மும்பை மக்களவைத் தொகுதியின் வேட்பாளரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மிலிண்ட் தியோரா தனக்கு ஆதரவாக தொழில் முனைவோர்களைக் கொண்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தெற்கு மும்பை தொழில் வளம் தொகுதி என்பதால் இந்த விளம்பரப்படத்தில் தொழிலதிபர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக நாட்டின் மிகப்பெரிய பணக்காரரும் ரிலையன்ஸ் குழும அதிபருமான முகேஷ் அம்பானி காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

ஹர்திக் படேலின் கன்னத்தில் அறைந்த இளைஞன் .. பொதுகூட்டத்தில் வீடியோ


மாலைமலர் :குஜராத் சுரேந்திர நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஹர்திக் பட்டேலை ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுக்கூட்டத்தில் பேசிய ஹர்திக் படேலை கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு அகமதாபாத்: குஜராத் மாநிலம் சுரேந்திர நகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் ஈடுபட்டிருந்த ஹர்திக் பட்டேலை ஒருவர் கன்னத்தில் அறைந்தார்.
பட்டேல் சமூகத்தினரின் இட ஒதுக்கீடுக்காக போராடிய ஹர்திக் பட்டேல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். ஹர்திக் பட்டேலின் கன்னத்தில் அறைந்த நபரை அங்கிருந்த தொண்டர்கள் அடித்து உதைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்- மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்.. மாணவிகள் ராக்ஸ் .. வழமைபோல ..

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்- மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
மாலைமலர் : தமிழகம் மற்றும் புதுவையில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகளும், பிளஸ்-1 மார்ச், ஜூன் பருவ தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களை மார்ச் 2019-ல் எழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்களை விட மாணவிகள் 5.07 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் (95.37%) முதலிடத்தை பிடித்துள்ளது. மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் வருமாறு:-

திருப்பூர் :  95.37 சதவீதம்
ஈரோடு :   95.23 சதவீதம்
பெரம்பலூர்: 95.15 சதவீதம்
கோவை :   95.1 சதவீதம்
நாமக்கல்:   94.97 சதவீதம்
கன்னியாகுமாரி: 94.81 சதவீதம்

சவுதி சகோதரிகள் ஜார்ஜிவில் தஞ்சம் .. வீடியோ


Neelakandan S- tamiloneindia : திபிலீசி: சவுதி அரேபியாவின் சட்டங்களுக்கு அஞ்சி அந்நாட்டிலிருந்து வெளியேறிய 2 சகோதரிகளுக்கு ஜார்ஜியா நாடு அடைக்கலம் வழங்க முன்வந்துள்ளது.
சவுதி அரேபியாவிலிருந்து வெளியேறிய வஃபா மற்றும் மஹா-அல்-சுபாய் என்ற 2 இளம்பெண்கள் ஜார்ஜியா நாட்டில் தஞ்சமடைந்துள்ளனர். அங்கிருந்தபடியே சகோதரிகள் இருவரும் தங்களை பற்றிய தகவல்களை ட்விட்டரில் பதிவிட்டு உதவி கோரியிருந்தனர்.
சவுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பெண்களுக்கு எதிரான சட்டத்திட்டங்களை தாங்கள் வெறுப்பதாகவும், நாங்கள் இருவருமே தந்தை மற்றும் சகோதரர்களால் தாக்கப்பட்டதால் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் ட்விட்டரில் வெளியிட்ட வீடியோ பதிவில் கண்ணீருடன் கூறியிருந்தனர்.
அவர்கள் வெளியிட்டிருந்த வீடியோவில், நாங்கள் தற்போது ஆபத்தில் உள்ளோம். எங்களுக்கு பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தற்போது குரல் எழுப்புகிறோம். எங்களை எந்த நாடாவது ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும். எங்களது பாஸ்போர்ட்டைசவுதி அரசு முடக்கிவிட்டது. நாங்கள் தற்போது ஜார்ஜியாவில் இருக்கிறோம்.

அமமுக பொதுச்செயலாளர் ஆனார் டிடிவி. தினகரன்: தலைவராகிறார் சசிகலா ! சு.சாமி டெல்லி பிரதிநிதியாகிறார்?

THE HINDU TAMIL : அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைவராக சசிகலா செயல்படுவார் என்று அமமுக அறிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்புக்குப் பிறகு அதிமுகவில் குழப்பங்கள் ஏற்பட்டன. சசிகலா தரப்பினரை ஓபிஎஸ்ஸும் ஈபிஎஸ்ஸும் சேர்ந்து கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இதன் பொதுச் செயலாளராக சசிகலாவும் துணைப் பொதுச் செயலாளராக டிடிவி தினகரனும் நியமிக்கப்பட்டனர்.
எனினும் அதிமுகவைக் கைப்பற்ற முடியாது என்பதால் தினகரன் அமமுகவைக் கட்சியாகப் பதிவு செய்யவில்லை. கடந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தைக் கேட்டு டிடிவி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அப்பாவிக் கிழவிகளின் கூரைகளை அடித்து உடைப்பதா வீரம்? இந்தியர்கள் கண்டுபிடித்த ஜாதி அடுக்கு முறை ..

Mahalaxmi : உங்கள கெட்ட பெயர் எடுக்க வைத்து அடியாளா கலவரக்காரர்கள் என்று பெயர் வாங்கி கொடுத்துட்டு இவன் குடும்பம் மட்டும் படித்தால் போதும் வாழ்ந்தா போதும்
அன்புமணி குடும்பமும் ஊரார்வீட்டு செல்வங்களும்
டான் அசோக் : உலகத்தில் வெள்ளைக்காரன் ஏதேதோ கண்டுபிடித்து
வைத்திருக்கிறான். அன்றாட வாழ்க்கையில் தேவைப்படும் உபகரணங்களில் இருந்து அறிவியல் ஆராய்ச்சிக்குப் பயன்படும் பெரிய உபகரணங்களில் இருந்து உயிர்காக்கும் தடுப்பூசிகள் வரை. எல்லாமே பலநூறு ஆண்டுகால தொடர் ஆராய்ச்சியின் பலன்கள். ஒருபக்கம் நிறவெறி, காலனி ஆதிக்கம் என பல விஷயங்களைச் செய்துவந்தாலும் இன்னொரு பக்கம் இதையெல்லாம் கூட தொடர்ந்தே வந்திருக்கிறான். இப்போது நிறவெறி, காலனியாதிக்கம் எல்லாம் அவர்கள் வெட்கப்படும் விஷயங்களாக மாறியிருக்கிறது. அரசாங்கங்கள் மறைமுகமாகச் செய்கிறதேயொழிய பெரும்பான்மையான தனி மனிதர்கள் அதை அருவெறுப்பாகப் பார்க்கும் காலம் வந்துவிட்டது. இன்னொருபக்கம் நாம் இருக்கிறோம். இந்தியா இருக்கிறது. நம் கலாச்சாரமும், வாழ்க்கை முறையும் இருக்கிறது.

பாகிஸ்தான் 14 பேருந்து பயணிகள் சுட்டுக் கொலை .. பலுசிஸ்தான் பிரிவினை வாதிகள் கைவரிசை

மாலைமலர் :பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகளை கீழே இறக்கி சரமாரியாக சுட்டுக் கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பலுசிஸ்தான் போராளிகள் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவர்களை இனம் கண்டு சுட்டதாக தெரிகிறது
கராச்சி: பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம், பயங்கரவாத தாக்குதல் மற்றும் வன்முறைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆயுதக் கும்பல்கள் அடிக்கடி பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர். இந்நிலையில், ராணுவ சீருடையில் துப்பாக்கி ஏந்தி வந்த கும்பல், கராச்சி-கவாதர் வழித்தடத்தில் சென்றுகொண்டிருந்த பேருந்துகளை நிறுத்தி சோதனையிட்டது.
ஆர்மரா பகுதியில் ஒரு பேருந்தை நிறுத்தி, பேருந்தில் இருந்த பயணிகளின் அடையாள அட்டைகளை சோதனை செய்தனர்.
பின்னர் 16 பேரை கீழே இறக்கி தனியாக அழைத்துச் சென்று, அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் 14 பேர் துடிதுடித்து இறந்தனர். 2 பேர் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் அங்கிருந்து தப்பி ஓடி, அருகில் உள்ள சோதனைச் சாவடிக்கு சென்று நடந்த சம்பவத்தை கூறினர்.

சீமான் : சுதீசுக்காக வேலூர் தேர்தலை தள்ளி வைத்த தேர்தல் ஆணையம்

tamil.oneindia.com  - shyamsundar.: வேலூரில் செலவு செய்த பணத்தை தேர்தல் ஆணையம் திருப்பி கொடுக்குமா?.-சீமான் கேள்வி
சென்னை: லோக்சபா தேர்தலில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்களித்தார்.
லோக்சபா தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மொத்தம் 95 தொகுதிகளில் நடைபெறுகிறது. இன்று புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 39 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் நடக்கிறது.
இந்த நிலையில் சென்னையில் வாக்களித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். நாம் தமிழர் கட்சிக்கு பெரிய வெற்றிவாய்ப்பு உள்ளது என்று சீமான் குறிப்பிட்டுள்ளார்.
சீமான் தனது பேட்டியில், வாக்குப்பதிவு எந்திரங்கள் பல இடங்களில் பழுதாகி இருக்கிறது. அந்த அளவிற்கு தேர்தல் ஆணையம் பொறுப்பற்று உள்ளது. இதை ஏற்கனவே சோதித்து இருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் பொறுப்பற்று செயல்படுகிறது. இதை எல்லாம் கூடவா பார்க்காமல் இருப்பார்கள். வருமானவரித்துறை எப்படி வருமானவரித்துறையை வைத்து நாடகம் ஆடுகிறார்கள்.
வேலூரில் மட்டும்தான் பணம் கொடுத்தார்களா?

தமிழகத்தில் 38 லோக்சபா தொகுதிகளில் பதிவான வாக்குகள் வீதம் ..மாலை 5:00 மணி நிலவரப்படி

Mahalaxmi : ELECTION NEWS UPDATES*
*தமிழகத்தில் 38 லோக்சபா தொகுதிகளில் மாலை 5:00 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 63.73% சதவீதம் ஓட்டு பதிவாகி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.*
*தொகுதி வாரியான முழு விபரம்*
*🗳திருவள்ளூர்:64.08%*
*🗳வடசென்னை:59.00%*
*🗳தென்சென்னை:56.71%*
*🗳மத்தியசென்னை:55.74%*
*🗳ஸ்ரீபெரும்புதூர்:58.53*
*🗳காஞ்சிபுரம்:62.56*
*🗳அரக்கோணம்:66.27*
*🗳கிருஷ்ணகிரி:65.34%*
*🗳தர்மபுரி:67.67%*
*🗳திருவண்ணாமலை:65.00%*

மீனவர்களின் வாக்குகள் பட்டியலில் காணவில்லை ... பாஜக அதிமுக கூட்டணியின் ஒட்டு கொள்ளை வீடியோ


k
knakkheeran.in - manikandan : கன்னியாகுமாி மக்களவை தொகுதியில் முக்கிய வேட்பாளா்களான  பாஜக பொன் ராதாகிருஷ்ணனும் காங்கிரஸ் வசந்தகுமாரும் நேரடி களத்தில் நின்றனா். இதில் நீண்ட கடற்கரையை கொண்ட கன்னியாகுமாி தொகுதியில் 48 மீனவ கிராமங்கள் உள்ளன.      இந்த மீனவ கிராமங்களில் ஓகி புயலின் போது பாதிக்கப்பட்ட மீனவா்களை சந்தித்து ஆறுதல் கூறாததும் மேலும் மீனவா்களை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காததும் அதே போல் மீனவா்களின் எதிா்ப்பை மீறி வா்த்தக துறைமுகம் கொண்டு வருவேன் என கூறும் பொன் ராதாகிருஷ்ணன் மீது இந்த மீனவ கிராம மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனா். இதனால் வாக்கு கேட்பதற்கு மீனவ கிராமங்களில் பொன் ராதாகிருஷ்ணனை மீனவா்கள் அனுமதிக்க வில்லை.இதனால் மீனவா்கள் ஓட்டு காங்கிரஸ் வசந்த குமாருக்கு தான் என்ற பரவலான பேச்சு இருந்தது. இந்த நிலையில் இன்று நடந்த வாக்கு பதிவின் போது தூத்தூா், இணையம், சின்னத்துறை, முட்டம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில்

சிதம்பரம் பொன்பரப்பியில் விசிக ஆதரவாளர்கள் மீது பாமக ஜாதிவெறி தாக்குதல் பல வீடுகள் சேதம் .. வீடியோ


tamil.indianexpress.com :சிதம்பரம் தொகுதியில் உள்ள அரியலூரில் உள்ள பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினர் இடையே நடந்த மோதலில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளது.
சிதம்பரத்தில் இரு தரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. சிதம்பரம் தொகுதியில் உள்ள அரியலூர் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிகிறது. சிதம்பரம் (தனி) தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், திமுக கூட்டணியில், பானை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், இன்று மதியம் தொகுதிக்கு உட்பட்ட பொன்பரப்பி கிராமத்தில் வேறொரு கட்சியை சேர்ந்தவர்கள் பானையை தெருவில் போட்டு உடைக்கும் போராட்டத்தை நடத்தியதாக தெரிகிறது.

தமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90 சதவீத வாக்குப்பதிவு


தமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி  70.90 சதவீத வாக்குப்பதிவு
மாலைமலர் :தமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாமக்கல்லில் அதிகபட்சமாக 78 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 19 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்தனர். பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது காரணமாக தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்பின் மாலை 6 மணியளவில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதற்கிடையே, இரவு 9 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகி உள்ளது. 70.90 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.
“ 6 மணி நிலவரப்படி அதிகபட்சமாக நாமக்கல்லில் 78 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 57.05 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

வாக்குச்சாவடி அருகே திமுக பகுதிச் செயலர் சரமாரியாக வெட்டிக் கொலை: மதுரையில் பரபரப்பு

tamil.thehindu.com- என்.சன்னாசி : மதுரையில் வாக்குச்சாவடி அருகே திமுக பகுதிச் செயலர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் விகே.குருசாமி. திமுக பொதுக்குழு உறுப்பினரான இவர், மாநகராட்சி முன்னாள் கிழக்கு மண்டலத் தலைவர். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக மண்டலத் தலைவர் ராஜ்பாண்டிக்கும் ஏற்கெனவே தேர்தல் மற்றும் அரசியல் ரீதியாக முன் விரோதம் உள்ளது. இருதரப்பிலும் பழிக்குப்பழியாக இதுவரை 14 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். குருசாமியின் மருமகன் எம்எஸ்.பாண்டி (46). காமராஜபுரம் பகுதி திமுக செயலாளராக இருந்தார். வழக்கறிஞரான இவர் மீது ராஜ்பாண்டி கொலை வழக்கு உட்பட 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ராஜ்பாண்டி தரப்பால் பாண்டிக்கு ஏற்கெனவே ஆபத்து இருந்தது.
இந்நிலையில், இன்று காலை பாண்டி தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தார். சிந்தாமணி நல்லமுத்து ரோடு சந்திப்பு அருகில் வாக்காளர்களுக்கு 'பூத் சிலிப்' கொடுக்கும் இடம் அருகே தனது கூட்டணி கட்சியின் மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு வாக்குச் சேகரித்தார்.

வியாழன், 18 ஏப்ரல், 2019

அரசியல் முக்கியம் மக்காள் .. ஒதிங்கினால் ஒதுக்கப்படுவீர் ? வீடியோ

Richard Joseph : இளைஞர்கள் பங்கு இல்லாமல் இங்கே அரசியல் மாற்றம் என்பது சாத்தியமில்லை என்பதை சிறப்பாக விளக்கும் குறும்பப்படம். அரசியல் என்பதனை எங்கே துவங்க வேண்டும். குறிப்பாக youtube சேனல்கள் அரசியல் நையாண்டி என்கிற பெயரில் மக்களை எப்படி முக்கிய அரசியல் பேசாமல் காமெடி என்கிற பெயரில் திசை திருப்புகிறது என்பதனை தெளிவாக எடுத்து வைக்கிறது. காணொளியை காணவும்.நம் முதன்மை ஜனநாயக கடமையாக நாளை நம் ஓட்டை பதிவோம்.

பேராசிரியர் அன்பழகன் வாக்களித்தார் .. வீடியோ


tamil.thehindu.com : திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், உடல் நலிந்த நிலையிலும் வாக்களித்தார்.
திமுகவின் நீண்ட கால பொதுச் செயலாளரான க.அன்பழகன், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நெடுங்கால நண்பராவார். மு.க.ஸ்டாலின் செயல் தலைவராக இருந்தபோதும், தற்போது தலைவராக உள்ள நிலையிலும், கட்சியின் முக்கியச் செயல்பாடுகளுக்கு க.அன்பழகனின் ஆலோசனைகளை அவ்வப்போது ஸ்டாலின் பெறுவார். கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவுடன் உள்ள க.அன்பழகன், தன்னுடைய வீட்டில் ஓய்வு பெற்று வருகிறார்.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, 96 வயதான க.அன்பழகன் தன் வயது முதிர்ச்சியையும் பொருட்படுத்தாமல், சென்னை தெற்கு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

ஓட்டு எல்லாம் ’இரட்டை இலைக்கே’ போகுது - திருமாவளவன் சொல்வது என்ன ?

thiumaவெப்துனியா :நாட்டின் அடுத்த ஐந்து ஆண்டு காலத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் இன்றைய நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து மக்களும் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று காலைமுதல் வாக்களித்து வருகின்றனர். சிதம்பரம் பாராளுமன்ற திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார்.
ஆனால் அரியலூர் மாவட்டம் அங்கலூர் கிராமத்தை சேர்ந்த திருமாவளவன் தன் தாயாருடன் வந்து அங்கனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வரிசையில் நின்று ஓட்டு போட்டனர். இந்நிலையில் எந்தப்பட்டனை அழுத்தினாலும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துக்கே ஓட்டுவருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிப்பதாகக் கூறினார். மேலும் தேர்தல் அதிகாரிகள் இன்று ஒருநாளாவது நேர்மையாக பணியாற்று வாக்குப்பதிவை முடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

பெண் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்தனர் ... உளவுத்துறை அதிர்ச்சியாம்

பெண்கள் ஓட்டு: உளவுத்துறை அதிர்ச்சி!மின்னம்பலம் : தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளி விவரங்களின் படி தமிழகத்தில் ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 98 லட்சத்து 69 ஆயிரத்து 758 ஆக உள்ளது. அதில், பெண் வாக்காளர் களின் எண்ணிக்கை 3 கோடியே 2 லட்சத்து 69 ஆயிரத்து 45 ஆகவும், ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 95 லட்சத்து 94 ஆயிரத்து 923 ஆகவும் இருக்கின்றன.
ஆக ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 7 லட்சம் அதிகமாக இருக்கிறது. இன்று காலை தொடங்கி வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கும் நிலையில் செய்தி நிறுவனங்கள் ஒருபக்கம் என்றால் மத்திய, மாநில உளவுத்துறைகளும் களமிறங்கிவிட்டன.
அவர்கள் வாக்குச் சாவடிகளின் அருகேயுள்ள பகுதிகள், வாக்குச் சாவடி வரிசையில் நிற்பவர்கள் ஆகியோரிடம் பேச்சுக் கொடுத்து கள நிலவரம் எப்படி இருக்கிறது என்று அறிந்து அதுபற்றி தங்கள் மேலிடத்துக்கு இன்புட்ஸ் செய்திகள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் குறிப்பாக பெண்கள் வரிசை வரிசையாக வந்து வாக்களிக்கிறார்கள் என்றும், அவர்களிடம் பேசியபோது கிடைத்த எதிர்வினைகளையும் பதிவு செய்து அனுப்பியிருக்கிறார்கள்.
இந்தத் தகவல்களை அறிந்த உளவுத்துறை மேலிடமும், ஆட்சி மேலிடமும் அதிர்ச்சியில் இருப்பதாக தெரிகிறது. அதாவது பிற்பகல் 12 மணி நிலவரப்படியே பெண்களின் ஓட்டு கணிசமாக இருக்கிறது என்றும், பெண்கள் தங்கள் மகள், மருமகளை எல்லாம் கூட்டிக் கொண்டு வந்து வாக்களிக்கிறார்கள் என்றும் உளவுத்துறை குறிப்பு அனுப்பியிருக்கிறது. அந்தக் குறிப்பில் பெண் வாக்காளர்களின் உள்ளக் குறிப்பும் இருப்பதாகவும் அதனாலேயே மேலிடம் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் உளவுத் துறை வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைக்கிறது.

வாகுசாவடிகளை கைப்பற்ற அதிமுக ரகசிய திட்டம் .. திமுக குற்றச்சாட்டு

tamil.thehindu.com : தமிழகம் முழுதும் உள்ள வாக்குச்சாவடிகளை கைப்பற்ற அதிமுக அதன் கூட்டணி கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக திமுக சார்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திமுக சட்டத்துறை செயலர் கிரிராஜன் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாஹுவிடம் புகார் ஒன்றை அளித்தார். அந்தப்புகாரில் கூறியிருப்பதாவது:
 தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கிய காலை முதலே வாக்காளர்கள் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பெருந்திரளாக வாக்களித்து வருவதை ஆளுங்கட்சியினரால்  பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
அதனால் ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மாலை 3 மணிக்கு மேல் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளை கைப்பற்றிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
இதற்கு காவல்துறையினரும் ஒத்துழைப்பு தரும் வகையில் காவல்துறையின் பாதுகாப்பினை திரும்பப் பெற திட்டமிட்டுள்ளதாகவும், வாக்குச் சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை அந்த நேரத்தில் செயலிழக்க செய்ய போவதாகவும் தகவல் வந்துள்ளது.

தமிழகத்தில் 3 மணி வரை 52.02 சதவீத வாக்குப்பதிவு - சட்டமன்ற இடைத்தேர்தலில் 55.97 சதவீதம்

தமிழகத்தில் 3 மணி வரை 52.02 சதவீத வாக்குப்பதிவு - சட்டமன்ற இடைத்தேர்தலில் 55.97 சதவீதம்மாலைமலர் : தமிழகத்தில் மாலை 3 மணி நிலவரப்படி 52.02 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.
சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 19 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது காரணமாக தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 11 மணி நிலவரப்படி 30.62  சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. இதற்கிடையே, மதியம் 3 மணி வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகி உள்ளது. 52.02 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.

தற்போது பேருந்து நிலையங்களில் சிக்கிக் கொண்டிருப்பவர்கள் செய்ய வேண்டியது:

Saravanaperumal Perumal : தற்போது பேருந்து நிலையங்களில் சிக்கிக் கொண்டிருப்பவர்கள் செய்ய வேண்டியது:
1) எப்பாடு பட்டேனும் மாலை 6 மணிக்குள் உங்கள் வாக்குச்சாவடிக்குப் போய்ச் சேர்வது. (அடையாள அட்டை போன்றவர்றை உங்கள் வீட்டாரிடம் தேடி எடுத்து வைக்கச் சொல்லுங்கள்.)
2) பேருந்து நிலையத்துக்கு வரும் வரை யாருக்கு வாக்களிப்பது என முடிவு செய்திருந்தாலும் இந்த நேரடி அடக்குமுறையைச் சந்தித்த பின் அம்முடிவை மறுபரிசீலனை செய்வது.
3) வீட்டில் இருப்பவர்கள் அனைவருக்கும், நண்பர்களுக்கும் தொலைபேசி உங்கள் முடிவை வலுவாய்ப் பரப்புரை சொல்வது.

கோயம்பேடு: நள்ளிரவில் பயணிகள் மீது தடியடி பயணிகளை ஊருக்கு செல்லவிடாமல் அடாவடி வீடியோ


கோயம்பேடு: நள்ளிரவில் மறியல் – பயணிகள் மீது தடியடி!போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் கோயம்பேட்டிலிருந்து வெளியூர்களுக்குச் செல்ல முடியாமல் விடிய விடிய பேருந்து நிலையத்தில் பல்லாயிரக்கணக்கானோர் காத்துக் கிடந்தனர்.
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் தமிழகத்தில் உள்ள 18 சட்ட மன்றத் தொகுதிகளுக்கு இன்று (ஏப்ரல் 18) தேர்தல் நடக்கிறது. தேர்தலையொட்டி சென்னையில் தங்கியிருக்கும் லட்சக்கணக்கானோர் வாக்களிக்க ஆர்வத்துடன் சொந்த ஊருக்குத் திரும்பினர். மக்களவைத் தேர்தல் மட்டுமின்றி, புனித வெள்ளி மற்றும் வார விடுமுறை எனத் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

மோடியின் ஹெலிகாப்டரில் சோதனை செய்த அதிகாரி பணி நீக்கம் தேர்தல் ஆணையம் அடாவடி .. வீடியோ

சந்தேகத்துக்கு இடமான முறையில் பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் மூலம் பெரிய பெட்டி ஒன்று கொண்டு செல்லப்படுவது தெரிந்ததே

தினத்தந்தி :புதுடில்லி: பிரதமர் மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்ய உத்தரவிட்ட அதிகாரி, சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மோடியின் புகாரின் பேரில், விதிமுறைப்படி செயல்படாத அதிகாரியை சஸ்பெண்ட் செய்து தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது.
;லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று (ஏப்.,18 ) இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில், நாடு முழுவதும் பிரதமர் மோடி அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம்(ஏப்.,16) ஒடிசா சென்ற பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரை, தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். பிரதமரின் சிறப்பு பாதுகாவலர்கள் தடுத்த நிலையிலும், இச்சோதனை நடைபெற்றது. இதனையடுத்து தேர்தல் கமிஷனில் பிரதமர் புகார் அளித்தார்.

வாக்கு பதிவு தொடங்கியது . தமிழ்நாடு புதுவை .. 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும்

தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது
தினத்தந்தி :சென்னை, நாடாளுமன்றத்துக்கு 2-வது கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. பணப்பட்டுவாடா புகாரால் வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இந்த நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டசபை தொகுதிகளில் 18 சட்டசபை தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.</ இந்த தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் ஓர் அணியும், தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன. இதுதவிர அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன. தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் 38 நாடாளுமன்ற தொகுதிகளில் மொத்தம் 822 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதேபோல், 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 269 பேர் போட்டியிடுகின்றனர். புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் 18 பேரும், அங்குள்ள ஒரு சட்டசபை தொகுதியில் 8 பேரும் மல்லுக்கு நிற்கின்றனர்.

இலங்கையிலும் ஒரு ஆதிச்சநல்லூர்? (பொம்பரிப்புவ) பொன்பரப்பி - புத்தளம் அகழாய்வுகள்

இலங்கை - பொன்பரப்பி
ஆதிச்சநல்லூர்
ThuvaraGan VelumMylum : ஆதிச்ச நல்லூர் முதுமக்கள் தாழிகளுக்கு காலம்
கி.மு.800 - 900கள் என்று காபன் பரிசோதனை முடிவை அறிவித்திருக்கிறார்கள். ஆனால் அதே காலத்தையது என்று கருதக்கூடிய எங்கள் பொம்பரிப்பு ஈமத்தாழிகளின் காலத்தை முறையான ஆய்வுகளின் மூலம் நாம் அறியப்போவது எப்போது?
படம் 01- பொம்பரிப்பு ஈமத்தாழி
படம் 02 - ஆதிச்சநல்லூரின் ஈமத்தாழி
பொம்பரிப்புவ - வடமேற்குக்கரையின் மயான பூமி

புத்தளத்தின் வில்பத்து அடர்ந்த காடுகளிற்குள்ளே உறங்கிக்கொண்டிருக்கிறது இலங்கையின் முதல் நாகரீகம்.
மண்ணால் மிக நேர்த்தியாக வனையப்பட்ட ஈமத்தாழிகளில் அடக்கம் செய்யப்பட்ட அந்நாகரீத்துக்குரிய மக்களின் சடலச்சிதைவுகள் தான் இலங்கையின் முதல் நாகரீகமடைந்த மக்கள் கூட்டம் விஜயனும் தோழர்களும் என்கிற கருத்தை தகர்த்து இற்றைக்கு மூவாயிரம் வருட பழைமையான இலங்கைக்கேயுரிய ஒரு தொல்நாகரீகத்துக்கு சாட்சிகள் ஆகியிருந்தன.
வடமேற்குக்கரையோரத்திற்கு மிக அண்மையாக புத்தளத்திற்கும் மன்னாருக்குமிடையில் பரந்த சமவெளி பொம்பரிப்புவ. இப்போது வில்பத்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருக்கிற இக்காடுகளில் நடந்த புதைபொருள் ஆய்வுகளையும் அதில் கிடைத்த தொல்பொருட்களையும் பற்றி முதலில் விபரமாக தருவது அந்த நாகரீகத்தின் முக்கியத்துவத்தையும் அக்கால மக்களின் வாழ்க்கை முறையில் அடைந்திருந்த உன்னத நிலையையும் உணரச்செய்யும் என்பதால் முதலில் அந்த விபரங்களை தருகிறேன்.