ஞாயிறு, 22 டிசம்பர், 2024

கென்யாவில் அதானியின் ஒப்பந்தம் நிறுத்தப்பட முக்கிய காரணமாக இருந்த இளைஞர் நெல்சன் அமென்யா

நெல்சன் அமென்யா, கென்யா, அதானி,

BBC -  எஸ்தர் கஹூம்பி  : அமெரிக்க நீதித்துறை அதானி குழுமத்தின் மீது அண்மையில் முறைகேடு புகார்களை முன்வைத்தது. அதனைத் தொடர்ந்து கென்ய அரசு அதானி குழுமத்துடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தது.
ஆனால் அதற்கு முன்பாகவே, இந்த ஆண்டு ஜூலை மாதம் கென்ய மாணவர் ஒருவர் கென்ய அரசுக்கு அதானி குழுமம் வழங்கிய ஒப்பந்த முன்மொழிவு தொடர்பான தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். இது அங்கே பெரும் பேசுபொருளாக மாறியது.
கென்யாவைச் சேர்ந்த, தொழில்துறை தொடர்பாக படிக்கும் மாணவர் நெல்சன் அமென்யா தான் அந்த ஆவணங்களை வெளியே கசியவிட்டது. யார் அவர்? இதனால் ஏற்பட்ட சர்ச்சை என்ன? விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.