சனி, 29 பிப்ரவரி, 2020

அருந்ததியர்கள் ஏன் துப்புரவு பணியில் குறிப்பாக மனித மலமள்ளும் நிலை வரை .....?.

தங்கராஜ் காந்தி  : அருந்ததியர்கள் ஏன் துப்புரவு பணியில் குறிப்பாக
மனித மலமள்ளும் நிலை வரை தள்ளப்பட்டதன் விளைவிற்கு காரணம் யாதென சற்று தூரம் வரலாறை பின்னோக்கி பார்த்தால்,
வலங்கை(ஆதிக்கம்)
இடங்கை(சமூகநீதி) போர்களில்
இடங்கை பக்கம் நின்று‌ பலமாக
யுத்தகளத்தில் ‌போர்‌செய்தது அருந்ததியர்கள் என துவங்கி...

சமூகநீதிக்கு எதிராக சொந்த தமிழ்மன்னர்களாலும்...
அவர்களை வீழ்த்த வந்த தெலுங்கு மன்னர்களோடு‌ கைகோர்த்தாவது தெலுங்கு பேசத்தெரிந்தாவது‌ போரை சந்திப்பது என..‌
பிற்கால போர்க்கள கொடூரத்தாக்குதல்காரர்கள் என‌ பெயரெடுத்து நீண்டு..
வெள்ளையனை போட்டு ஒத்தையா மோதியும்‌ மொத்தமா
சாத்தியும்‌ விட்டதில் வந்து‌ ஓய்கிறது சக்கிலியர்களின்‌ பராக்கிரமம்...
அதன்விளைவாய் தேடிப்பிடித்து துப்புரவு பணிக்கு ஆளாகியுள்ளோமே தவிர, மற்றபடி அருந்ததியர்கள் வேட்டை‌‌ முதல் வேளான்‌ மற்றும்‌ போர்‌மரபினர்.
பெரியார் காலத்தில் அவரது கொள்கைக்கு கடமைபட்டவர்களாய் நின்று இன்று பார்ப்பனர்கள் அஞ்சும்‌ ஒரு டிஎன்ஏ.வாக இருப்பதும் ஒரு காரணம் தான்...
ஆகவே,
அருந்ததியர்கள் திட்டமிட்டு கல்வி மறுப்பு‌ முதல் இழப்பீடு தவிப்பு வரை வெச்சு செய்கிறது பிற்கால பார்ப்பன இந்தியா...
என்ன கொடுமை என்றால் யாருக்காக எல்லாம் போராடினார்களோ அவர்கள் தங்கள் சுயலாபத்திற்காக கொள்கையை தூக்கிப்போட்டு போனதால், எல்லோராலும் கைவிடப்பட்டு கடைநிலைக்கு சென்றவன்...
அருந்ததியன்.

இங்க கோயில்தான் இருந்தது.. பாதரை கூப்டுங்க" சாந்தோம் சர்ச்சுக்குள் "விசாரணை" நடத்திய அர்ஜுன்சம்பத்

அர்ஜுன் சம்பத்தின் மனைவி கிறிஸ்தவராக ( பெந்தகொஸ்தே) மாறியுள்ளது தெரிந்ததே. அந்த மன உளைச்சலில் அவர் இப்படியான் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் பலர் கூறுகிறார்கள் .
 Hemavandhana -  /tamil.oneindia.com : சென்னை: "இங்க கோயில்தானே இருந்தது. உங்க ஃபாதரை கூப்பிடுங்க.. நான் அவர்கிட்ட பேசணும்" என்று இந்து மக்கள்
கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் திடீரென சாந்தோம் சர்ச்சில் நுழைந்து கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது! 
இந்த விவகாரம் தற்போது சர்ச்சையாக வெடித்து வருகிறது. 
சாந்தோம் சர்ச்சுக்குள் 'விசாரணை' நடத்திய அர்ஜுன்சம்பத் நாடு முழுவதும் சிஏஏ பிரச்சனை வலுத்து வருகிறது.. தமிழகமும் இந்த போராட்டத்தில் இறங்கி உள்ளது.. குறிப்பாக வண்ணாரப்பேட்டையில் 15 நாட்களாக இஸ்லாமிய அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் இந்த போராட்டக்களம் வன்முறையாக மாறி மோதலாக வெடித்தது.. 
இதில் 42க்கும் மேற்பட்டோடர் உயிரிழந்துள்ளனர்.. இதனால் நாடெங்கும் லேசான பரபரப்பு தன்மை ஒட்டிக் கொண்டுள்ளது. இந்த சமயத்தில் சென்னையில் ஒரு பரபரப்பு நடந்துள்ளது...

மலேசியா புதிய பிரதமர் முஹைதீன் யாசின் - மலேசியா மன்னர் அறிவிப்பு

புதிய பிரதமர் முஹைதீன் யாசின் - மலேசியா மன்னர் அறிவிப்பு
முஹைதீன் யாசின்
மாலைமலர் : மலேசியா பிரதமர் மகாதீர் முகம்மது பதவி விலகியதைத் தொடர்ந்து, முஹைதீன் யாசினை புதிய பிரதமராக அந்நாட்டின் மன்னர் நியமித்துள்ளார். கோலாலம்பூர்: மலேசியாவில் கடந்த 2018ல் நடந்த பொதுத் தேர்தலில் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது (94) தலைமையிலான மலேசிய ஐக்கிய சுதேச கட்சியும், அன்வர் இப்ராஹிம் தலைமையிலான மக்கள் நீதி கட்சியும் சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்டன.
பக்காத்தான் ஹராப்பான் என்று அழைக்கப்படும் இந்த கூட்டணி தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, மகாதீர் முகமது பிரதமரானார். இதன்மூலம் அவர் உலகிலேயே அதிக வயதான பிரதமர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார்.
பொதுத் தேர்தலுக்கு முன்பு, பக்காத்தான் ஹ ராப்பான் கூட்டணி வெற்றி பெற்றால் தாம் குறிப்பிட்ட காலம் வரை பிரதமர் பதவியை வகிக்க போவதாகவும், நாட்டை மீ்ண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திருப்பிய பின்னர் அன்வர் இப்ராஹிமிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்கப் போவதாகவும் மகாதீர் அறிவித்திருந்தார்.

சிஏஏ-ரஜினி தெளிவாக இருக்கிறார்: ஹஜ் தலைவர்!

மின்னம்பலம் :  சிஏஏ தொடர்பாக ரஜினி தெளிவாக புரிந்து வைத்துள்ளதாக ஹஜ் தலைவர் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், எதிர்க்கட்சிகள் தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டு இஸ்லாமியர்களை தூண்டிவிடுவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தொடர்ச்சியாக கருத்து தெரிவித்து வருகிறார். மேலும், ‘சிஏஏவை திரும்பப் பெறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு கிடையாது. என்ன போராட்டம் நடத்தினாலும் அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து இஸ்லாமிய இயக்கங்கள் ரஜினியை சந்தித்து சிஏஏவால் இஸ்லாமியர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்க இருப்பதாக தகவல் வெளியாகின.
ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் தமிழ்நாடு ஹஜ் தலைவர் அபூபக்கர் இன்று (பிப்ரவரி 29) நேரில் சந்தித்துப் பேசினார். சிஏஏவால் எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படும், இஸ்லாமியர்களுக்கு இதனால் என்ன பிரச்சினை என்பது குறித்து அவர் ரஜினிகாந்திற்கு எடுத்துரைத்துள்ளார். சுமார் 30 நிமிடங்கள் வரை இந்த சந்திப்பு நீடித்தது.

குடிசை வீட்டில் வாழ்ந்து மறைந்த திரு. காத்தவராயன் .. திமுக எம்.எல்.ஏ

குடிசை வீட்டில் வாழ்ந்து மறைந்த எம்.எல்.ஏமின்னம்பலம் : கடைசி வரை குடிசை வீட்டிலேயே வாழ்ந்து மறைந்துள்ளார் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் (தனி) தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் இதய நோயால் நேற்று காலமானார். அவரது உடல் நேற்று மாலை சொந்த ஊரான பேரணாம்பட்டு எடுத்துச்செல்லப்பட்டு அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
நேற்றிரவு வேலூர் விரைந்த திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் காத்தவராயன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பிறகு வீட்டின் திண்ணையில் அமர்ந்து ஸ்டாலின் கண்கலங்கினார். இன்று காலை 10 மணிக்கு ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் நடந்துசெல்ல பேரணாம்பட்டு வீதிகளின் வழியே காத்தவராயன் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் காத்தவராயன் எளிமை தொடர்பான தகவல்களும் இணையங்களில் பகிரப்பட்டு வருகின்றன. 2011-16 வரை பேரணாம்பட்டு நகர்மன்றத் தலைவராக இருந்த காத்தவராயன், திருமணமே செய்துகொள்ளவில்லை. சகோதரர் குடும்பத்துடன் தங்கிவந்தார்.

சென்னை மாதவரம் பயங்கர தீ .. அருகில் உள்ள கிராமங்களுக்கும் பரவியுள்ளது ..இரசாயன கிடங்கில் ...

   தினத்தந்தி :சென்னை, திருவள்ளூர் மாதவரம் ரவுண்டானா பகுதியில் உள்ள ரசாயனக் கிடங்கில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் மூலம் வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன
தீ மளமளவென எரிந்து வருவதால் யாரும் அருகில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேலும் அதிகளவு கரும்புகை எழுவதால் மாதவரம் சுற்றியுள்ள குடியிருப்புவாசிகளுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர்.
 கடந்த 3 மணி நேரத்திற்கும் மேலாக தீ கொழுந்துவிட்டு எரிகிறது. நேரம் செல்லச் செல்ல தீ மேலும் எரிவதால் வெளியாகும் கரும்புகை அப்பகுதி முழுதும் பரவியுள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். பக்கத்திலுள்ள ஆவடி பகுதிகளுக்கும் புகை பரவியுள்ளது.

ஈரானில் கொரோனா வைரஸ் 210 பேர் உயிரிழப்பு? மேலும் அதிகரிக்க கூடும்


மாலைமலர் :தெஹ்ரான்: சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ஹுபேய் மாகாண தலைநகர் வுகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அங்கு அதிக பாதிப்பு ஏற்பட்டதுடன் தொடர்ந்து உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை மூவயிரத்தை நெருங்கியுள்ளது. மேலும், 82 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவை தொடர்ந்து தென்கொரியா மற்றும் ஈரானில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
ஈரானில் இந்த நோயால் நேற்று வரை 26 பேர் உயிரிழந்தனர். வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நேற்று வரை 210  ஆக உயர்ந்திருந்தது. மேலும், அந்நாட்டு துணை சுகாதார மந்திரி இராஜு, துணை அதிபர் மசூமே எப்டகர் ஆகியோருக்கு நடந்த கொரோனா வைரஸ் பரிசோதனையில் அவர்களுக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பேராசிரியர் உடல்நிலை: மருந்தை ஏற்க மறுக்கும் மூப்பு!

பேராசிரியர் உடல்நிலை: மருந்தை ஏற்க மறுக்கும் மூப்பு!மின்னம்பலம் : பிப்ரவரி 24 ஆம் தேதி இரவு சென்னை க்ரீம்ஸ் ரோடு அப்பல்லோவில் அட்மிட் ஆன திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகனின் உடல்நிலை இன்னும் நிச்சயமற்ற நிலையில்தான் நீடிக்கிறது என்கிறார்கள் மருத்துவ வட்டாரங்களில்.
நேற்று (பிப்ரவரி 28) பகல் திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் வந்து பேராசிரியரைப் பார்த்தார். கொஞ்ச நேரம் அங்கே இருந்தவர் கண் கலங்கியபடியே புறப்பட்டுச் சென்றார். மதியம் 2.15 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அப்பல்லோவுக்கு சென்று பேராசிரியரின் உடல் நிலை பற்றி கேட்டறிந்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி : பாலியல் வன்கொடுமை உயிரிழந்த நாகை சிறுமி குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி

பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த நாகை சிறுமி குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி - எடப்பாடி பழனிசாமி உத்தரவு தினத்தந்தி : சென்னை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாகை மாவட்டத்தை சேர்ந்த சிறுமி இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே சென்றவர், பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு பலத்த காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
இந்த கொடூர செயலுக்கு காரணமான குற்றவாளி குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சீமான் புலம்பெயர் தமிழர்களை பா ஜ கவின் பக்கம் திருப்பி உள்ளார்?

கபிலன் காமராஜ் :  · சீமான் கூட நேரத்துக்கு தகுந்தார் போல வாயை
வாடகைக்கு விடும் பொழுது பெரியார் பற்றி பேசுவார். ஆனால் சீமான் வளர்த்திருக்கும் ஒரு சைக்கோ கூட்டம் பெரியாரை தூற்றி வெறுப்பதில் முற்றிய நிலையில் உள்ளனர். கார்த்தியின் பதிவில் பெரியாரின் முகம் மறைக்கப்படவில்லை ...  அதை பென்சில்  எடுத்து பெரியாரின் முகத்தின் மீது கிறுக்கி வெறுப்பை உமிழ்ந்துள்ளது ஒரு நாம் தமிழர் கட்சி சைக்கோ.;
 Radha Manohar  : சீமான் உலகம் முழுவதும் பாஜாகவுக்கு ஆள் பிடித்து கொடுத்திருக்கிறார் .. புலம்சிடையே பாஜக ஆதரவு அதிகம் .. அப்படியே சீமான் போலவே சிந்திக்கிறார்கள் :இது பற்றி முன்பு ஒரு தடவை எழுதிய இந்த பதிவு ......" தமிழகத்தில் இருக்கும் ஈழத்தமிழர்களின் குடியுரிமை பற்றி இது வரை புலம் பெயர் தமிழரகள் பெரும் கள்ள மௌனத்தை
கடைப்பிடிக்கிறார்கள் . அதற்கு காரணம் எதுவாக இருப்பினும் அது நேர்மையானது அல்ல. . நேர்மையானதாக இருந்தால் வாயை திறந்து இருப்பார்கள் . இப்படி கள்ள மௌனம் காக்க மாட்டார்கள்.அதை விட மோசமானது அவர்களின் பாஜக பாசம்!
இன்றைய தேதியில் கனடா இங்கிலாந்து பிரான்ஸ் ஜெர்மன் சுவிஸ் இத்தாலி நோர்வே டென்மார்க் அமெரிக்கா அவுஸ்திரேலியா மற்றும் புலம்ஸ் வாழும் நாடுகளில் பாஜக தேர்தலில் போட்டியிட்டால் புலம்சின் ஒட்டு மொத்த ஓட்டுக்களும் பாஜகவுக்கே கிடைக்கும் .

தமிழகத்தில் வடநாட்டவர் ஆதிக்கம் எப்படி இப்படி?


Sivasankaran Saravanan : திராவிடர் கழக மாநாட்டில் வடநாட்டவர் இங்கே வந்து தொழில்களை கைப்பற்றுவது பற்றி குறிப்பிட்டிருந்ததைத் தொடர்ந்து எழுதிய பதிவு:
வடநாட்டில் இருந்து இங்கே பிழைப்புக்காக வருபவர்கள் இரண்டு வகை.
1. கட்டிட , சாலை தொழிலாளர்கள் , உணவகங்கள் , அழகு நிலையங்கள் போன்றவற்றில் வேலை செய்யக்கூடியவர்கள். என்னைப்பொறுத்தவரை இவர்களால் எந்தவித பிரச்சினையுமில்லை. கடுமையான உழைப்பாளிகள். வட இந்தியாவின் மோசமான அரசியலால் பிழைப்பதற்கு கூட வழியின்றி இங்கே வருபவர்கள்.இவர்களுக்கு இது நிரந்தர மண்ணாக இருப்பதை விரும்பாதவர்கள்.
2. இரண்டாவதாக மார்வாடிகள் உள்ளிட்ட வடநாட்டு வணிகர்கள். இவர்கள் வந்து இங்கேயே ஆதார் கார்டு வாக்காளர் அட்டை வாங்கி குத்தவைத்து செட்டிலாகிவிடுபவர்கள்.
இவர்கள் வந்து தொழில் செய்வதிலோ , வீட்டு வாடகைகளை உயர்த்துவது கூட பிரச்சினையில்லை. ஆனால் வடநாட்டு ஹிந்துத்துவ அரசியலை இங்கே காலூன்ற நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவுவது தான் இவர்களிடம் உள்ள பிரச்சினை.

வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

வேலூர் திமுகவுக்கு துரைமுருகன் கொடுக்கும் தலையிடி ... வீடியோ


மின்னம்பலம : தமிழ்நாட்டுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் என்றாலும், வேலூர் திமுகவின் தலைவர் துரைமுருகன் தான் என்பது அம்மாவட்ட திமுகவில் எழுதப்படாத சட்டமாக இருக்கிறது. இது இன்னொரு முறை இப்போது நிரூபணமாகியிருக்கிறது.
திமுகவின் வாணியம்பாடி நகர செயலாளர் சாரதிகுமார் மீது அவரது மனைவி ரம்யா, சென்னை மாநகர போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் ஓர் அதிர்ச்சிப் புகார் அளித்தார். புகார் அளித்துவிட்டு நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
“எங்கள் திருமணம் காதல் திருமணம். அவருக்கு வேறு ஒரு ரிலேஷன் ஷிப் இருந்திருக்கு. அது எனக்குத் தெரியவில்லை. அந்த பெண் அவரை விட 14 வயது மூத்தவர். ஒருகட்டத்தில் அவர்களின் தவறான உறவு எனக்குத் தெரியவந்து நான் தட்டிக்கேட்டதால், என்னை தாக்கினார்கள். நான் திமுக தலைவரிடம் அறிவாலயம் சென்று புகார் கொடுத்தேன். அதையும் தெரிந்துகொண்டு என்னை மிரட்டுகிறார்கள். அதனால் எனக்கும் என் குழந்தைக்கும் பாதுகாப்பு கேட்டு போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளேன்” என்று பதற்றமும் அழுகையுமாக பேட்டி கொடுத்தார் ரம்யா.

சிஏஏ எதிர்ப்பாளர்களை நிரந்தரமாக தூங்கவைப்போம்: இல.கணேசன்.. டெல்லிக்கு அடுத்து சென்னை ?

JP Prakash : தில்லியை எரித்துவிட்டோம்... அடுத்து சென்னைதான்..
தமிழ்நாட்டில் பாஜக நடத்திய கூட்டத்தில் மார்வாடி & வட இந்திய தொழிலாளர் கும்பல்...
மார்வாடிகள் ஏன் ஆர்எஸ்எஸ்சை ஊட்டி வளர்க்கிறார்கள் எனத் தெரிகிறதா?.
வணிகத்தில் உள்ள இசுலாமியர்கள் அதிலிருந்து விரட்டி வணிகத்தைக் கைப்பற்றத் தான்.

அதிகாரம் பிராமணர்களுக்கு
வணிகம் வட இந்திய பனியாக்களுக்கு
அடியாள் வேலை சூத்திரன்களுக்கு...
இது தான் ஆர்எஸ்எஸ் ஹிந்துத்துவா தர்மம்...

மின்னம்பலம் : மாலை 7, வெள்ளி, 28 பிப் 2020
சிஏஏ எதிர்ப்பாளர்களை நிரந்தரமாக தூங்கவைப்போம்: இல.கணேசன்சிஏஏவுக்கு எதிரான போராட்டங்களைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜகவினர் பேரணியில் ஈடுபட்டனர்.
குடியுரிமை திருத்தச் சட்டம், என்.பி.ஆர், என்.ஆர்.சிக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல இடங்களில் இரவு-பகல் போராட்டம், பேரணி தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதே சமயம் சிஏஏவுக்கு ஆதரவாக பாஜகவினர் பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிஏஏவுக்கு ஆதரவாக அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை நோக்கியும் பிப்ரவரி 28ஆம் தேதி பேரணி செல்வோம் என்று தமிழ்நாடு பாஜக அறிவித்தது.

மத்திய கிழக்கு நாடுகளில் பரவும் கொரோனா வைரஸ் பாதிப்பு ;வீட்டிற்குள் முடங்கும் மக்கள்

தினத்தந்தி : மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி
மத்திய கிழக்கு நாடுகளில் பரவும் கொரோனா வைரஸ் பாதிப்பு ;வீட்டிற்குள் முடங்கும் இந்தியர்கள்வருகிறது.இதனால் அங்குள்ள இந்தியர்கள் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். பாக்தாத்< மத்திய கிழக்கு நாடுகளில்  ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸ் பரவியது. அங்கு ஜனவரி 29-ஆம் தேதி  நான்கு பேருக்கு இந்த வைரஸ் தாக்கியது. இவர்கள் நான்கு பேரும் சீனாவின் வுகான் நகரத்தில் இருந்து வந்தவர்கள். அதன்பின் சில நாட்களில் அங்கு புதிதாக 9 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு தொடங்கியது. அதேபோல் எகிப்தில் அதற்கு மறுநாளே ஒரு நபருக்கு இந்த வைரஸ் தாக்கியது. ஈரானின் துணை அதிபர் மசூமே எப்டகருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் லெபனானில் இதேபோல் பிப்ரவரி 21 ஆம் தேதி இந்த வைரஸ் தாக்கியது. ஈரானில் இருந்து இந்த வைரஸ் அங்கு பரவியது. பின் பிப்ரவரி 24-ஆம் தேதி குவைத்தில் வைரஸ் பரவியது. அதே நாள் அடுத்தடுத்து பஹ்ரைன், ஈராக், ஓமான் ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியது.

கன்னையா குமார் மீது தேச துரோக வழக்கு:.. டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் ஒப்புதல் ...

BBC :டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்
சங்கத்தின் முன்னாள் தலைவர் கன்னையா குமார், உமர் காலித், அனிர்பன் பட்டாச்சார்யா உள்ளிட்ட ஒன்பது பேர் மீதான தேச துரோக வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து மேல் நடவடிக்கை எடுக்க டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவுக்கு டெல்லி மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லி மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் மனோஜ் திவாரி அரவிந்த் கேஜ்ரிவால் அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளார்.
டெல்லி இந்து - முஸ்லிம் தரப்புகளிடையே மதக் கலவரத்தை சந்தித்துள்ளது.
"தற்போதைய சூழலை கருத்தில் கொண்டே டெல்லி அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது," என்று மனோஜ் திவாரி கூறியுள்ளார்டெல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஒன்றின் அறிவுறுத்தலின்பேரில் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் அலுவலகத்துக்கு ஒப்புதல் கோரி கடந்த வாரம் கடிதம் அனுப்பியிருந்தது.
வழக்கின் பின்னணி என்ன?   https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/delhi-government-gives-nod-for-prosecuting-kanhaiya-kumar-and-two-others-in-jnu-sedition-case/articleshow/74399758.cms

ஜெர்மனி கிறிஸ்தவ விழா கூட்டத்துக்குள் காரை மோதி தாக்குதல்: 52 பேர் படுகாயம்


தினத்தந்தி :  ஜெர்மனியில் திருவிழா கூட்டத்துக்குள் காரை மோதி நடத்தப்பட்ட தாக்குதலில் சிக்கி 52 பேர் படுகாயம் அடைந்தனர். பெர்லின், ஜெர்மனியின் வடக்கு பகுதியில் உள்ள வோல்க்மார்சன் நகரில் கிறிஸ்தவ பண்டிகையான ‘ரோஸ் திங்கள்’ தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் அங்கு பிரமாண்ட திருவிழா நடைபெற்றது. சிறுவர்கள், பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கான மக்கள் வித்தியாசமான வேடங்களிலும், வண்ணவண்ண உடைகளை அணிந்தும் ஆடிப்பாடி பேரணியாக சென்றனர். அப்போது உள்ளூர் நேரப்படி மதியம் 2.45 மணியளவில் அதிவேகத்தில் வந்த கார் ஒன்று, திருவிழா கூட்டத்துக்குள் புகுந்தது. இதில் மக்கள் அங்கும் இங்குமாக தூக்கி வீசப்பட்டனர்.

துருக்கி அதிபர் : இந்தியாவில் இந்துக்கள் முஸ்லிம்களை அடித்து கொல்கின்றனர் ! வீடியோ .. ஐ நாவும் உன்னிப்பாக கவனிக்கிறது


 நக்கீரன் :  சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கு எதிராக சிஏஏ ஆதரவாளர்கள் டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய பேரணிக்கு பின்னர் அங்கு வெடித்த கலவரங்களால் வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகள் பதட்டமான சூழலை சந்தித்தன.
இதனையடுத்து டெல்லி முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு கலவரங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளஇந்நிலையில், இந்த கலவரம் குறித்து பேசியுள்ள ஐ.நா சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டெரஸ், "டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தில் மக்கள் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது. வன்முறையைத் தவிர்க்க வேண்டும். நான் இந்தியாவின் நிலைமையைக் கவனித்து வருகிறேன். புதுடெல்லியில் நாங்கள் கேள்விப்பட்ட மரணங்கள் குறித்த செய்திகளால் மிகவும் வருந்துகிறேன்.
நான் என் வாழ்நாள் முழுவதும் மகாத்மா காந்தியின் போதனைகளால் ஆழமாக ஈர்க்கப்பட்டவன். உண்மையான சமூக நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கு காந்தியின் ஆன்மா முன்னெப்போதையும் விட இன்று அதிகம் தேவைப்படுகிறது. ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதிக்க வேண்டும். அதேநேரம் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் அதைக் கொண்டுவர வேண்டும்" என தெரிவித்தார்.  https://www.thejakartapost.com/news/2020/02/27/erdogan-denounces-massacres-committed-against-muslims-in-india.html

குடியாத்தம் திமுக எம் எல் ஏ காத்தவராயன் காலமானார்

திமுகவில் தொடரும் சோகம்: குடியாத்தம் எம்.எல்.ஏ காத்தவராயன் காலமானார்!மின்னம்பலம் : குடியாத்தம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார், அவருக்கு வயது 58. வேலூர் மாவட்டம் குடியாத்தம் (தனி) தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன். 2019 மே மாதம் மக்களவைத் தேர்தலோடு நடைபெற்ற குடியாத்தம் தொகுதி இடைத் தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார்.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு இதயத்தில் பிரச்சினை ஏற்பட்டது. அதற்காக சிகிச்சை எடுத்துவந்த நிலையிலும் குணமாகவில்லை. கடந்த மாதம் அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும் காத்தவராயன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

டெல்லி 43,பேர் உயிரிழப்பு ! மேலும் பலர் கொல்லப்பட்டு இருக்கலம் .. மக்களிடம் கேட்கும் போலீஸ்!

tamil.samayam.com/ :  டெல்லியில் கலவரத்தில் சிக்கி இதுவரை 43பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்து நிலையில், இந்த கலவரத்திற்கு முக்கியக் காரணமாக கபில் மிஸ்ரா ட்வீட் குறிப்பிடப்பட்டு உளவுத்துறை எச்சரித்தும் டெல்லி போலீஸ் எதற்காக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமலிருந்தது என்ற கேள்வி பல்வேறு ஆதாரங்களோடு இப்போது எழுந்துள்ளது டெல்லியில் அமெரிக்க அதிபர் தங்கியிருந்தபோது 15 கிமீ தொலைவில் நிகழ்த்தப்பட்ட மதக் கலவரம் உலக கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளது. இந்த சூழலில் கலவரம் நடந்த வேளையில் டெல்லி போலீஸ் என்ன செய்தது என்ற கேள்விதான் நம் அனைவர் மத்தியிலும் எழுகிறது. கலவரத்தில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி கட்சி பிரமுகர் உள்பட 48பேர் மீது இப்போதுவரை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தனை முறையா குத்திக் கொல்றது?- டெல்லி உளவுத்துறை அதிகாரிக்கு நேர்ந்த பயங்கரம்! மேலும்516 பேர் கைது செய்யப்பட்டு கலவரம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லி போலீஸ் மேற்கொள்ளும் பணிகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடந்தது.
இந்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். மத வன்முறையைத் தூண்டி விடுபவர்கள் அதற்கான தண்டனையைப் பெறுவார்கள்” எனக் குறிப்பிட்டிருந்தது. இதற்கிடையே கலவரம் குறித்து தகவல் அறிய டெல்லி போலீஸ் ஊடகங்கள் உள்பட அனைத்து தரப்பினரிடமும் உதவி கேட்டுள்ளது

கமல் - ஷங்கருக்கு முழு சுதந்திரம் கொடுத்த லைகா... குற்றவாளி கூண்டில் கமல் சங்கர் கூட்டணி?

கமல் - ஷங்கருக்கு ஷாக் கொடுத்த லைகா!மின்னம்பலம் : இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்துக்கு, அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகாவிடம் ஸ்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு குறித்து கேள்வியெழுப்பி கமல் கடிதம் எழுதிய செயலை மிகத் துணிவானதாகப் பார்த்தது தமிழ் சினிமா. கமலின் செயல் துணிவானது என்றால், தற்போது லைகா கமலுக்கு எழுதியிருக்கும் கடிதம் லைகா நிறுவனத்தின் நெஞ்சுரத்தைக் காட்டுகிறது.
‘கடிதப் பிரச்சினை நீடித்தால் கமலுக்கும் லைகாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்றும், ஒருவேளை லைகா கமலின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லையென்றால் லைகாவின் மீதிருக்கும் சினிமாவின் நம்பிக்கை மொத்தமாகப் போய்விடும்’ என்றும் திரையுலகினர் கருதியதை, கமல் - லைகா: கடிதப் பின்னணி! என்ற செய்தியில் குறிப்பிட்டிருந்தோம். தங்கள் மீதான சினிமா துறையினரின் நம்பிக்கையைக் காப்பாற்றவும், ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்துக்கான காரணிகளை விளக்கும் வகையிலும் ஒரு கடிதத்தை லைகா நிறுவனத்தின் இயக்குநர் நீலகண்ட் நாராயண்பூர் வெளியிட்டிருக்கிறார்.

நீதிபதி முரளிதர்... பாஜகவை கலங்கடிக்கும் பச்சை தமிழர்

யார் இந்த நீதிபதி முரளிதர்? மின்னம்பலம் :  டெல்லி வன்முறை ஒரு பக்கம் பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில், மறுபக்கம் வன்முறைக்கு எதிராக காவல்துறைக்குக் கண்டனம் தெரிவித்து மற்றும் உத்தரவுகளைப் பிறப்பித்ததை அடுத்து நீதிபதி முரளிதரை பணியிட மாற்றம் செய்து மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அறிவிப்பு வெளியிட்டது.
இது பல்வேறு கேள்விகளை எழுப்பி வரும் நிலையில் மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், இது வழக்கமான நடவடிக்கைதான். சம்பந்தப்பட்ட நீதிபதி ஒப்புதலுடன் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிப்ரவரி 12ஆம் தேதி இதற்கான பரிந்துரையை கொலீஜியம் கொடுத்துவிட்டது” என்று விளக்கமளித்திருந்தார்.

சரவண பவன் மேலாளர் தற்கொலை.. மிரட்டிய நிர்வாகம்:.. சம்பள பாக்கி....

மிரட்டிய நிர்வாகம்: சரவண பவன் மேலாளர் தற்கொலை!மின்ன்ம்பலம்:  மிரட்டிய நிர்வாகம்: சரவண பவன் மேலாளர் தற்கொலை!
பிரபல ஹோட்டல் சரவண பவனின், காஞ்சிபுரம் பகுதி மேலாளர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில் நிர்வாகத்தைக் கண்டித்து ஹோட்டல் ஊழியர்கள் இன்று (பிப்ரவரி 7) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே ஹோட்டல் சரவண பவன் நிர்வாகம் தனது ஊழியர்களுக்குச் சரிவர ஊதியம் கொடுப்பதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் கிளைகளை பரப்பியுள்ள சரவணபவன் ஹோட்டலுக்கு காஞ்சிபுரத்தில் மூன்று கிளைகள் இருக்கின்றன. காந்தி சாலை, பேருந்து நிலையம், சென்னை - பெங்களூர் சாலை ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் ஹோட்டல்களில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

பரிசு தொகை மூன்று கோடியை நன்கொடையாக் கொடுத்து உயர்ந்த குவாடன்

மூன்று கோடி ரூபாய் நன்கொடை: மீண்டும் நெகிழ வைத்த குவாடன்  மின்னம்பலம் :  சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஆஸ்திரேலியச் சிறுவன் குவாடன், தனக்கு நன்கொடையாகக் கிடைத்த ரூ.3,40,30,000 பணத்தைத் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கியது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
வளர்ச்சி குறைபாட்டு நோயால் பாதிக்கப்பட்ட குவாடன் என்ற சிறுவன், கேலி கிண்டல்கள் தாங்க முடியாமல் ‘தான் மரணமடைய வேண்டும்’ என்று கூறி மனமுடைந்து அழுதார். அதை வீடியோவாக எடுத்த அவருடைய தாயார், அதை இணையத்தில் பகிர்ந்து உருவக் கேலிகளின் பின்விளைவை உலகுக்கு உணர்த்த நினைத்தார். ‘எனக்கு ஒரு கத்தியோ, கயிறோ கொடுங்கள். நான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்’ என்று கேட்டு அழுத அந்த ஒன்பது வயது சிறுவனின் வார்த்தைகள் ஒவ்வொருவரது மனத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. உருவக் கேலிகள் செய்வதன் பின்னால் இப்படியும் ஓர் ஆபத்து இருக்கிறதா என்ற விஷயம் அனைவருக்குள்ளும் குற்ற உணர்ச்சியையும், ஒருவித பய உணர்வையும் ஏற்படச் செய்தது.

மராத்தி மொழி பாடம் கட்டாய சட்டம் நிறைவேறியது .. மகராஷ்ற்றவில் அனைத்து பள்ளிகளிலும்


அனைத்து பள்ளிகளிலும் மராத்தி மொழி பாடம் கட்டாயம்-மராட்டிய சட்டசபையில் மசோதா நிறைவேற்றம் தினத்தந்தி : மராட்டியத்தில் அனைத்து பள்ளிகளிலும் மராத்தி மொழி பாடத்தை கட்டாயமாக்கும் மசோதா மேல்-சபையை தொடர்ந்து நேற்று சட்டசபையிலும் நிறைவேறியது. மும்பை, பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பள்ளிகளில் மராத்தி மொழியை கட்டாயமாக்கும் மசோதா நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இந்த மசோதா நேற்றுமுன்தினம் மேல்-சபையில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேறியது. இந்த நிலையில், மராத்தி மொழி தினமான நேற்று இந்த மசோதாவை சட்டசபையில் மராத்தி மொழித்துறை மந்திரி சுபாஷ் தேசாய் அறிமுகம் செய்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- மராட்டியத்தில் உள்ள அனைத்து கல்வி வாரிய பள்ளிகளிலும் மராத்தி பாடத்தை கட்டாயமாக்கும் இந்த மசோதா தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள சட்டங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

திரௌபதி பட விமர்சனம்

cineulagam.com  :  சாதியக் கொடுமைகளும், பாதிக்கப்பட்டோரின் அவலங்களும் சினிமா படங்களில் அவ்வப்போது பிரதிபலிக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் பல இடங்களில் காதல் திருமணத்திற்கு எதிராக ஆணவக்கொலைகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. அப்படியான பிரச்சனைகளை பேசும் படங்கள் சர்ச்சையாகியும் வருகின்றன. அதில் ஒன்றாக திரௌபதி படம் வெளியாகியுள்ளது. திரௌபதி யார்? அவளின் பின்னணி என்ன? நோக்கம் என பார்க்கலாம்.
கதைக்களம் .படத்தின் நாயகன் ரிச்சர்டு ஊரில் சிலம்ப கலைஞர். அவர் தன் மாமன் மகளான திரௌபதியை மணமுடித்துக்கொள்கிறார். இவரின் சித்தப்பா கிராமத்தில் மரியாதைக்குரிய தலைவராக இருக்கிறார். இவருக்கும் ஒரு மகள்.
கிராமத்தில் அழகாக இவர்களின் வாழ்க்கை செல்கிறது. திரௌபதி கிராம மக்களின் நலத்திற்காக பல விசயங்களை செய்து வரும் திரௌபதி குடும்பமும் எதிர்த்து நிற்கிறது.இதற்கிடையில் கிராமத்தலைவரின் மகள் பதிவு திருமணம் செய்துகொண்டதாக செய்தி வர அவர் உயிர் விடுகிறார். மற்றொரு நாள் எதிர்பாராத விதமாக திரௌபதிக்கும் அவரின் தங்கையும் கொலை செய்ய திட்டம் தீட்டப்படுகிறது.
சிறைக்கு சென்ற ரிச்சர்டு என்ன ஆனார், திரௌபதி ஆபத்திலிருந்து உயிர் தப்பினாரா, அவரின் தங்கைக்கு என்ன நேர்ந்தது என்பதை பேசுகிறாள் இந்த திரௌபதி.

வியாழன், 27 பிப்ரவரி, 2020

பேராசிரியர்.க.அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்

தினத்தந்தி : : தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல்நிலை
கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
சென்னை, தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (98). உடல்நிலை பாதிப்பு காரணமாக கடந்த 24-ந் தேதி சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சைப்பிரிவில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடல் நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றும், இன்றும் மருத்துவமனைக்கு சென்று பார்த்தார். அப்போது அவரது உடல்நிலை குறித்து டாக்டர்கள் மு.க.ஸ்டாலினிடம் விளக்கி கூறினார்கள்.
*செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டிருப்பதாகவும், நேற்று இரவு முதல் அவர் கண் திறக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும், கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.* அன்பழகன் உடல்நிலை மோசமானதாக இருப்பதாக கேள்விப்பட்டதும் தி.மு.க. நிர்வாகிகள் ஆஸ்பத்திரிக்கு விரைந்துள்ளனர்.
தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று பார்த்து உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் விசாரித்தனர்.

NEET... மருத்துவம், சுகாதாரத்துறையை இந்த மோசக்காரர்களின் பிடியிலிருந்து மீட்க வேண்டும்

Muralidharan Pb : Neat என்றால் சுத்தம், ஒழங்கு என சில பொருள் உண்டு.
NEET என்றால் கபடம், அழுக்கு, ஒழுங்கீனம் என பல முன் மாதிரிகள் நிரம்பி இருக்கு.
2018ல் ஓசூரைச் சேர்ந்த குமார் என்ற மாணவன் நீட் எழுத விண்ணப்பித்த ஊர் எது தெரியுமா?
கயா. பீகார் மாநிலம்.
எந்த மொழியில் தெரியுமா?
ஹிந்தி.
ஹிந்தி தமிழ்நாட்டில் படிக்கின்றனரே ? அதில் என்ன அதிசயம் என்று வினவுவர்களுக்கு.
பணிக்காக வட மாநிலங்களில் பணிபுரிய வேண்டி, இந்தியை வேறு வழியின்றி விருப்பப் பாடமாக படிக்கும் தமிழர்கள் நிறைய உண்டு. அதில் எந்த தவறும் இல்லை. அது அவர்களது சொந்த விருப்பம்.
நீட் எழுத வேண்டும் என்று அதுவும் இந்தியில் எழுத விண்ணப்பிப்பதும் கூட தவறில்லை. அதுவும் ஏற்புடையதே.
நீட் தேர்வில் அதிகமான மதிப்பெண்கள் எடுத்த குமார் மிகப் பெரிய, சிறப்பான மருத்துவ கல்லூரியாகக் கருதப்படும் சென்னை அரசு மருத்துவ கல்லூரியில் (MMC)அனுமதி வாங்கிவிட்டான்.
பன்னிரண்டாவது தேர்வில் மிக மோசமான மதிப்பெண்கள் பெற்றவன், நீட் எழுதியது தப்பு.
அது நீட் தேர்வின் அதிகப்படியான குளறுபடி.
ஆனால் பலநாள் திருடன் ஒருநாள் மாட்டித்தானே ஆகவேண்டும்?
முதலாமாண்டு தேர்வு எழுதியதில் சில பாடங்களில் படு மோசமான தோல்வி பெற்றது அவனது உண்மைத்தன்மையை உணர்த்தியது.
ஆனாலும் இரண்டாம் ஆண்டு சென்ற போது பல அக்கிரமங்கள் வெளி உலகுக்கு தெரியவந்துள்ளது.

காட்டு விலங்குகளை உண்பதற்கும் விற்பனைக்கும் சீனாவில் முற்றாகத் தடைவீரகேசரி :கொவிட் 19 வைஸ் சீனாவில் சுகாதார மற்றும் பொருளாதார ரீதியாக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியதை அடுத்து கடந்த ஜனவரி மாதத்தில் வனவிலங்குகளின் வர்த்தகம் மற்றும் நுகர்வை நிறுத்தி வைக்க சீனா முடிவு செய்தது,
ஆரம்ப கொரோனா நோய்த்தொற்றுகள் ஹூபேயின் மாகாண தலைநகர் வுஹானில் உள்ள ஒரு வனவிலங்கு சந்தையில் இறைச்சிகளை கொள்வனவு செய்த நபர்களிடமிருந்து கண்டறியப்பட்டதையடுத்து குறித்த சந்தை முற்றாக மூடப்பட்டதுடன்,
வனவிலங்கு விற்பனையும் நாடளாவிய ரீதியில் நிறுத்திவைக்கப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் “கொவிட்19 வைரஸ் தாக்கம் காரணமாக சீனாவில் கிட்டத்தட்ட 2,700 பேர் வரை உயிரிழந்துள்னர். உலகில் இதாலி, ஈரான், தென்னாபிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் வைரஸ் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான முக்கியமான தருணத்தில், சீனா அரசு உள்ளதால், சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் தலைமையிலான அரசு வனவிலங்குகள் நுகர்வை முற்றாக தடை செய்ய தீர்மானித்துள்ளது.

ஆளூர் ஷா நவாஸ் : டெல்லி வன்முறையை தடுக்க முதலில் பாஜகவினரை கைது செய்ய வேண்டும்.. வீடியோ


ராஜ்ப்ரியன்- நக்கீரன் : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகரில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் கணக்கெடுப்பு ஆகிய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை வாபஸ் பெற வலியுறுத்தி 8- வது நாளாக ஷாஹீன் பாஃக் என்கிற பெயரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் என சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.குடியுரிமை சட்டத்தில் பாஜக அரசு கொண்டுவந்துள்ள திருத்தம், மக்கள் தொகை கணக்கெடுப்பில் வைத்துள்ள கூடுதலான கேள்விகள். இதுதான் இப்போது பிரச்சனை. அதை திரும்ப பெற வேண்டும் என்பதற்கே இந்த போராட்டம். பாஜக உடன் கூட்டணியில் உள்ள நிதிஷ்குமார் பீகார் சட்டமன்றத்தில் என்.பி.ஆர்க்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளார். இதே போல் தமிழக அரசு என்.பி.ஆர்க்கு எதிராக தீர்மானம் போட வேண்டும். தமிழக சட்டமன்றத்தில் என்.பி.ஆர்க்கு எதிராக தீர்மானம் போடும் வரை இந்த போராட்டம் தொடரும்.

BBC : டெல்லி வன்முறை 33 பேர் இதுவரை உயிரிழப்பு


டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரானவர்கள் மற்றும் ஆதரவானவர்கள் இடையே உண்டான மோதலால் ஞாயிறன்று தொடங்கிய வன்முறைகளில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. டெல்லி வன்முறை தொடர்பில் வெறுப்புப் பேச்சுகள் பேசியதாக யார் மீதும் வழக்குத் தொடரவேண்டாம் என்று கவனமாகவே முடிவெடுத்திருப்பதாக டெல்லி போலீஸ் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஏனென்றால் அப்படி வழக்குத் தொடர்வது, அமைதியும், சகஜ நிலையும் மீள்வதற்கு உதவாது என்றும் அது தெரிவித்தது. அத்துடன் டெல்லி வன்முறைகள் தொடர்பாக 48 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர்கள் தங்களுக்குத் தெரிந்து 3 பேருடைய வெறுப்புப் பேச்சுகளை சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால், நிறைய பேர் அப்படிப் பேசியிருக்கிறார்கள் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார் அரசு தலைமை வழக்குரைஞர் துஷார் மேத்தா.
குடியரசுத் தலைவரிடம் மனு கொடுத்த சோனியா, மன்மோகன் இதனிடையே, இந்தப் பிரச்சனை தொடர்பாக இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்த காங்கிரஸ் இடைக் காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அடங்கிய குழு அவரிடம் நடவடிக்கை கோரி மனு அளித்தது.
பிறகு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய சோனியா, மத்திய அரசால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை சூழ்நிலை காட்டுகிறது என்று குறிப்பிட்டார்.

சோனியா காந்தி : தில்லி வன்முறை: அமித் ஷா பதவி விலக வேண்டும்.. Sonia Gandhi Press Meet LIVE| Delhi


தினமணி : : புது தில்லி: தில்லியில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களுக்கு பொறுப்பேற்று, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளாா். மேலும், இந்த வன்முறையின் பின்னணியில் நன்கு திட்டமிடப்பட்ட சதி உள்ளதாகவும் அவா் குற்றம்சாட்டினாா்.
தில்லியிலுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில், சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், கட்சியின் மூத்த தலைவா்கள் ஏ.கே.அந்தோணி, குலாம் நபி ஆஸாத், கே.சி.வேணுகோபால், ப.சிதம்பரம் உள்ளிட்டோா் பங்கேற்ற இக்கூட்டத்தில், தில்லியில் தற்போது நிலவும் சூழல் தொடா்பாக விவாதிக்கப்பட்டது. பின்னா், செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், சோனியா காந்தி கூறியதாவது:
மத்திய அரசு கடமை தவறியதே, தில்லியின் தற்போதைய நிலைமைக்கு காரணமாகும். அதற்கான முழு பொறுப்பையும் மத்திய அரசு ஏற்க வேண்டும். குறிப்பாக, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, தனது பதவியிலிருந்து உடனடியாக விலக வேண்டும்.

திருவெற்றியூர் திமுக எம்.எல்.ஏ, கே.பி.பி.சாமி காலமானார்

சென்னை திருவெற்றியூர் திமுக எம்.எல்.ஏ, கே.பி.பி.சாமி காலமானார்தினத்தந்தி : சென்னை திருவெற்றியூர் திமுக எம்.எல்.ஏ, கே.பி.பி.சாமி உடல் நலக்குறைவால் காலமானார். M சென்னை, சென்னை திருவெற்றியூர் திமுக எம்.எல்.ஏ, கே.பி.பி.சாமி (வயது 58) உடல் நலக்குறைவால் காலமானார். திருவெற்றியூர் கேவிகே குப்பம் அருகே உள்ள அவரது இல்லத்தில் இன்று அதிகாலை உயிர் பிரிந்தது. மறைந்த எம்.எல்.ஏ கேபிபி சாமி, திமுக ஆட்சி காலத்தில் மீன் வளத்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார். திமுகவின் மீனவரணி செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.

பியுஷ் மனுஷ் கைது : என் வீட்டை அபகரிக்க நினைக்கிறார்!’- வீட்டு உரிமையாளர் மனு

ஆஷாபியூஷ்விகடன் : வீ கே.ரமேஷ் - எம்.விஜயகுமார் : பியூஷ்
”நீதிமன்ற நோட்டீஸ் அனுப்பியும் காலி செய்யவில்லை. கடந்த மே மாதத்திலிருந்து 9 மாதமாக வீட்டு வாடகையும் கொடுக்கவில்லை. விதவையான என் சொத்தை அபகரிக்க நினைக்கிறார்”
சேலம் கன்னங்குறிச்சி ஏரியைத் தூர் வாரி அழகுபடுத்தியதில் தமிழ்நாடு முழுவதும் அறியப்பட்ட சமூகச் செயற்பாட்டாளர் பியூஷ் மானஸ். இவர் குடியிருக்கும் வாடகை வீட்டைக் காலி செய்யாமல் பிரச்னை செய்ததாகச் சொல்லி வீட்டின் உரிமையாளர் ஆஷா குமாரி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பியூஷ் மானஸ் கன்னங்குறிச்சி காவல்துறையால் இன்று கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பியூஷ் மீது புகார் கொடுத்த வீட்டின் உரிமையாளர் ஆஷா குமாரி, ”நாங்கள் கர்நாடகாவில் குடியிருந்தோம். எங்களுக்குச் சொந்தமான வீடு சேலம் ஏற்காடு அடிவாரத்தில் கொண்டப்பநாயக்கன்பட்டியில் உள்ளது. சேலத்தைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் பியூஷ் மானஸ் என்னுடைய வீடு வாடகைக்கு வேண்டுமென்று கேட்டார். அதையடுத்து 2015ம் ஆண்டு அவரிடம் ஒரு லட்சம் முன் பணமும், மாதந்தோறும் பத்தாயிரம் வாடகையும் கொடுப்பதாக உறுதி பெற்று 11 மாத ஒப்பந்த அடிப்படையில் என் வீட்டை வாடகைக்கு விட்டேன்.

பெரியாரின் தளபதி ஆசிட் தியாகராசன் இயற்கை எய்தினார்

Kaattaaru " பெரியார் காலத்தில் கருப்புச்சட்டை அணியாமல் களத்தில் நின்ற
போராளி. திராவிடர் கழகம் சார்பில் தோழர் பெரியார் அறிவிக்கும் பொதுக்கூட்டம், போராட்டங்களில் ஒரு ஓரமாகத் தலையைக் காட்டிவிட்டுச் சென்று விடுவார். வெளிப்படையாகத் தன்னைப் பெரியார் இயக்கத்தவராகக் காட்டிக்கொள்ள மாட்டார்.
பெரியாருக்கும், இயக்கத்திற்கும் ஏதேனும் சிக்கல் என்றால் அதிரடியாகவும், வன்முறை கலந்த எதிர்வினையாகவும் வெளிப்படுவார்.
அரசியல் சட்ட எரிப்புப் போராட்ட காலத்தில் பெரியாருக்குத் தண்டனை விதிக்கப்பட்ட போதும், குலக்கல்வி எதிர்ப்புப் போராட்டங்களின் போதும், பெரியாரை எவராவது கொச்சைப்படுத்திய காலங்களிலும் உயிரையே பணயம் வைத்து ஒரு கரும்புலி போல இயங்கியவர். சட்டத்தின் பார்வையில் தவறானதாக இருக்கும் எதிர்வினைகளால் திராவிடர் கழகத்திற்கோ, பெரியாருக்கோ எந்தச் சிக்கலும் வந்து விடக்கூடாது என்பதற்காக, கருப்புச் சட்டை அணிவதையே தவிர்த்து வந்தார்.

டெல்லி வன்முறை 25 பேர் உயிரிழப்பு - 200 பேர் படுகாயம்

Death toll in Delhi violence rises to 16 Mathivanan Maran - tamil.oneindia.com/img : டெல்லியில் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தம் (சி.ஏ.ஏ.) எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையேயான மோதலில் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. இம்மோதல்களில் 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லியில் வன்முறையாளர்களை கண்டதும் சுடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
CAA Riot: What happened in the capital yesterday? | பற்றி எரியும் டெல்லி.. என்ன நடந்தது தலைநகரில்? டெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக ஷாகீன் பாக் பகுதியில் 2 மாதங்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மொபைல் மூலம் முஸ்லிம்களின் வாகனங்களை மட்டும் எரிக்கும் காவி கலவர கும்பல்.

மொபைல் அப்ளிகேஷனை பயன்படுத்தி, முஸ்லிம் வாகனங்களை மட்டும்
எரிக்கும் காவி கலவர கும்பல்.

டெல்லி மூத்த நீதிபதி இரவோடு இரவாக பஞ்சாபுக்கு மாற்றம் . நீதிக்கு தண்டனை ..

Judge Hearing Delhi Violence Case Moved To Punjab And Haryana High Court The notification of the transfer of Justice Muralidhar, the third highest judge of the Delhi High Court, was issued on Wednesday night by the centre
Karumalaiyan : நேற்று நள்ளிரவு கூடிய டெல்லி ஹைகோர்ட் அமர்வின் மூத்த நீதிபதி திரு.முரளிதரன் இன்று இரவோடு இரவாக இடமாற்றம்- உச்ச நீதிமன்ற கொலிஜியம் உத்தரவாம்.
நான் நம்பவில்லை யுவர் ஆனர் கொலிஜியம்.
ஏனெனில் இவர் கலவரத்தை அடக்க- சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட முற்பாட்டார். கலவரத்தை தூண்டும் விதத்தில் ஆத்திரம் மூட்டும் வசை பாடி- பாஜக மத்திய மந்திரிகள் உட்பட அனைவர் மீது சட்டப்படி காவல்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
காவல் துறை அடுத்து 12- மணிக்குள் கோர்ட் உத்தரவை அமலாக்கிய அறிக்கை கேட்டார்.
கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் ஆம்புலன்சுகள் செல்ல சங்கிகளின் "செக்போஸ்டை " தகர்த்தறிய உத்தரவு போட்டார்.
இன்று நண்பகல் 2.15-க்கு மத்திய அரசும், டெல்லி போலீஸூம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.
2.15-க்கு அந்த அமர்வில் இருந்து வழக்கு வேறு ஒரு பெஞ்சு-க்கு மாற்றி உத்தரவு பறக்கிறது.
இப்போது இந்த கோர்ட்டில் இருந்தே நீதிபதி முரளிதரனை பஞ்சாப் ஹைகோர்டிற்கு மாற்றிவிட்டது சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் .
ஆகவே தான் நான் நம்பவில்லை யுவர் ஆனர் கொலிஜியம்- இது இயல்பாகவே நடந்தது என்று..

கொரோனா - ஸ்பெயின் ஓட்டலில் 1,000 பேர் அடைத்து வைப்பு.. ஐரோப்பாவில் பரவுகிறது ..


மாலைமலர் : ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. ஸ்பெயின் நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 1,000 பேர் ஓட்டலில் அடைத்து வைக் மாட்ரிட்: சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் உருவான கொரோனா வைரசுக்கு அங்கு தினந்தோறும் மக்கள் கொத்துகொத்தாக செத்து மடிகின்றனர்.
அங்கு இந்த கொடிய வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,700 ஐ தாண்டி உள்ளது. அதே சமயம் சீனாவில் இந்த கொடிய நோயின் வீரியம் சற்று குறைய தொடங்கி இருக்கிறது. வைரஸ் பரவலின் வேகம் முன்பை விட குறைந்து வரும் நிலையில், கிட்டதட்ட 30 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். ஆனால் கொரோனா வைரஸ் தற்போது, சீனாவுக்கு வெளியே கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. சீனாவை தவிர்த்து சுமார் 30 நாடுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் ஈரான், இத்தாலி, தென்கொரியா ஆகிய 3 நாடுகளும் கொரோனாவால் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக சீனாவுக்கு அடுத்தபடியாக தென்கொரியாவில்தான் அதிக மக்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

திமுக தனித்து போட்டியிட வேண்டும் .. பிரசாந்த் கிசோர் ஆலோசனை ..

dmk நக்கீரன் :இந்த நிலையில் வரும் சட்ட மன்ற தேர்தலில் கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக போட்டியிட்டது போல் திமுக 234 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தலாமா வேண்டாமா என்ற ஆலோசனையில் இருப்பதாக சொல்கின்றனர். மேலும் திமுகவோடு இணைந்து பணியாற்றும் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் தமிழகத்தில் திமுக தனித்து போட்டியிட்டாலே வெற்றி பெற முடியும் என்று திமுக தலைமையிடம் கூறியதாக சொல்கின்றனர்.
ஆனால் திமுகவில் இருக்கும் சீனியர்கள் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு இல்லாமல், வருகிற சட்ட மன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்றும் ஸ்டாலினிடம் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் கூறியுள்ளதாக தகவல் வெளிவருகிறது.

புதன், 26 பிப்ரவரி, 2020

திமுக காரர்கள் சாதி பார்ப்பது இல்லை..? .

Ravishankar Ayyakkannu : திமுகவில் யார் என்ன சாதி என்று திமுகவினருக்கே தெரியாது என்றேன்.
சிரித்தார்கள்.
மிசா கொடுமையில் இருந்து திமுக தலைவரைக் காத்து உயிர் நீத்த சிட்டிபாபு MP என்ன சாதி என்று கேட்டேன்.
99% திமுகவினருக்கு அவர் என்ன சாதி என்று தெரியவில்லை.
நீங்கள் 1949 தொடங்கி 1980கள் வரை வாழ்ந்து மறைந்த திமுக மூத்த தலைவர்கள் யார் பெயரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள்.
அவர்கள் சாதி திமுகவினருக்குத் தெரியாது.
சாதியைத் தெரிந்து கொள்ளக்கூட அவர்கள் முற்படுவதில்லை.
திமுகவினருக்கு ஒரு தலைவர் திமுக காரர் என்பதே அவரைக் கொண்டாடப் போதுமான ஒரு காரணம் ஆகும்.
இன்றைய வாக்கரசியலில் சாதியின் பங்கு என்ன என்று எல்லோருக்கும் தெரியும்.
பட்டியல் வகுப்பினருக்குக் கட்சிப் பொறுப்புகளில் இட ஒதுக்கீடு தரும் கட்சி திமுக.
ஒரு ஊரில் சாதி, மதம் என்ன என்று அறிந்திருப்பது அவர்களின் பிரச்சினையைப் புரிந்து கொள்ளத் தேவைப்படும் அடிப்படை அரசியல் அறிவு.
பலர் ஒரே பதவிக்குப் போட்டியிடும் போது சாதியும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.
எனவே, உள்ளூர் அளவில் கட்சிக்காரர்களுக்கு எல்லோரின் சாதியும் தெரியும் என்பது தெரியாத அளவுக்கு நான் அப்பாவி இல்லை.

டெல்லியில் காங்கிரஸ் அமைதி பேரணி - தடுத்து நிறுத்தப்பட்ட பிரியங்கா காந்தி

   webdunia: புதுடெல்லி: திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. வடகிழக்கு டெல்லியின் மாஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர், சந்த்பாக் என பல்வேறு பகுதிகளிலும் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல்களில் கடைகள், கார்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. இந்த வன்முறை சம்பவங்களில் தலைமை காவலர் ரத்தன் லால், உளவுத்துறை அதிகாரி அன்கிட் சர்மா உள்பட 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, டெல்லி வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. < இந்நிலையில், டெல்லியில் நிலவும் வன்முறைகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் அமைதி பேரணி இன்று மாலை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் உ.பி. கிழக்குப் பகுதி பொது செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார். தொண்டர்களுடன் அவர் பேரணியில் நடந்து சென்றார். ஜந்தர் மந்தர் பகுதியில் போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது

டெல்லி வன்முறை; 22 பேர் உயிரிழப்பு

டெல்லி வன்முறையில் பலியானோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. வட கிழக்கு டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிரானவர்கள் ஆகிய இரு பிரிவினருக்கும் இடையே வன்முறை வெடித்தது. சந்துபாக் பகுதியில் அங்கித் ஷர்மா என்ற காவலரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதில் காயமடைந்த 189 பேர், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி வன்முறையை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்..!


நக்கீரன் :குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லியில் மிகத்தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கு எதிராக சிஏஏ ஆதரவாளர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய பேரணிக்கு பின்னர் அங்கு கலவரங்கள் வெடித்தன. வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் இரு தரப்பினரும் கற்களை கொண்டு கடுமையான தாக்குதல்களில் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே வன்முறை ஏற்பட்டு வாகனங்கள் மற்றும் பொதுச்சொத்துக்கள் தீவைக்கப்பட்டன. இதனையடுத்து அங்கு பதட்டமான சூழல் உருவாகியது.
> இந்த கலவரங்களில் 150 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் சூழலில் பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், நேற்றைய தினம் இந்திய சமூக ஜனநாயகக் கட்சி சார்பில் டெல்லியில் நடைபெற்றுவரும் வன்முறை சம்பவங்களை கண்டித்து சென்னை தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது

டெல்லி வன்முறை: பாஜக தலைவர்கள் அனுராக் தாக்கூர், பர்வேஷ் சர்மா, கபில் மிஸ்ரா மீது எப்.ஐ.ஆர் பதிய உத்தரவு!

டெல்லி வன்முறை: பாஜக தலைவர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிய உத்தரவு!மின்னம்பலம் : டெல்லியில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக பாஜக தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் இன்று(பிப்ரவரி 26) உத்தரவிட்டுள்ளது. அதேசமயத்தில் 1984 வன்முறை போன்று மீண்டும் ஒரு வன்முறை ஏற்பட அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
டெல்லியில் கடந்த மூன்று தினங்களாக நடைபெற்ற வன்முறையால் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.180க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனித உரிமை ஆர்வலர் ஹர்ஷ் மந்தர், சமூகச் செயற்பாட்டாளர் பராநக்வி ஆகியோர் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். அதில் வன்முறையைத் தூண்டிவிடும் வகையில் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவர்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக பாஜக தலைவர்கள் அனுராக் தாக்கூர், பர்வேஷ் சர்மா, கபில் மிஸ்ரா ஆகியோர் வெறுப்புணர்வுடன் பேசியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது

செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

டெல்லி கலவரம் .. ஆர் எஸ் எஸ்இன் அடியாட்களாக செயல்படுவது அடித்தட்டு கூலி தொழிலாளர்களே?


Karuna Kumuthan : இதுவரை வெளிவந்த எல்லா வீடியோக்களையும் பார்த்தீர்களா?
வன்முறையில் ஈடுபடும் கும்லில் ஒருத்தன் தவறாமல் எல்லாரும் சூத்திரப்பசங்க தான். அதுவும் அடித்தட்டு ஏழை சூத்திரனுங்க தான்.
ஒரு மிஸ்ரா, திரிவேதி, சதுர்வேதி, முகர்ஜி, பேனர்ஜி என்றிருக்க வாய்ப்பே இல்லை.
குறிப்பா அந்த மினார் மீது சரசரவென எந்த தயக்கமும் இல்லாமல் ஏறி, விழுந்துவிடுவோம் என்ற பயமே இல்லாமல் ஒரு கையால் அதிலிருக்கும் ஸ்பீக்கரை அவிழ்த்து சுழற்றி வீசி எறிய சூத்திரப்பசங்களால் மட்டுமே முடியும்.
அந்த சூத்திரப்பய ஏதாவது கட்டிட வேலை செய்பவனாகவாே, கூலி வேலை செய்பவனாகவாே மட்டுமே இருக்க முடியும். நிச்சயமாக பெரும்பான்மை தமிழ்நாட்டு சூத்திரனைப் போல அவன் ஒரு பொறியாளனாகவாே, கணினி வேலைகள் செய்பவனாகவாே, டாக்டராகவாே, வக்கீலாகவாே இருக்க வாய்ப்புகளே இல்லை.
இருந்திருந்தால் அவனும் என்னை மாதிரி ஏணி மீது ஏறுவதற்கு கூட, ஏணியை பிடிப்பதற்கு ஒரு ஆள் துணையில்லாமல் முயற்சிக்காதவனாகவே இருந்திருப்பான்.

விடை பெறுகிறோம் – வினவு ஆசிரியர் குழு

வினவுவினவு :  இனிமேலும், இந்த தளத்தை இயக்கவோ, இதன் ஆசிரியர் குழுவாகப் பணியாற்றவோ நாங்கள் விரும்பவில்லை. ஆசிரியர் குழு பொறுப்பிலிருந்து நான்கு தோழர்களும் விலகுகிறோம். ; :
 அ ன்பார்ந்த வாசகர்களே, தோழர்களே
நேற்று (24-02-2020) தோழர்கள் மருதையன், நாதன் ஆகியோரது விலகல் கடிதத்தை வெளியிட்டிருந்தோம். வினவு ஆசிரியர் குழு அவ்வாறு வெளியிட்டதற்கு முழுப் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறது. இதன் பொருட்டு அமைப்பின் தலைமை எங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமானால் அதனை எதிர்கொள்கிறோம்.
வினவு தளத்தில் பன்னிரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறோம். அமைப்பு சார்புள்ள தளங்கள், தோல்வியுறும் சூழலில், வினவு ஒப்பீட்டளவில் வெற்றி பெற்றிருக்கிறது. தமிழ் இணையச் சூழலில் வினவு தளம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை இங்கே விரித்துக் கூற விரும்பவில்லை.
இன்று அமைப்பின் முகமாக அறியப்படும் வினவு தளம், 12 ஆண்டுகளுக்கு முன் ஓரிரு தோழர்களின் சொந்த முயற்சியில் ஒரு வலைப்பூவாக தொடங்கப்பட்டது. இதற்காகப் பணியாற்றிய தோழர்களின் முயற்சியின் வழியே, வினவு ஒரு இணைய தளமாக வளர்ந்தது.
நாங்கள் அமைப்புக்கு நிதிச்சுமையைக் கூட அளிக்காமல் சுயசார்பாகவும் வாசகர்களைச் சார்ந்துமே இயங்கி வந்திருக்கிறோம். கடந்த 12 ஆண்டுகளில், அமைப்புக்கும் சமூகத்துக்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருக்கிறோம்.
இனிமேலும், இந்த தளத்தை இயக்கவோ, இதன் ஆசிரியர் குழுவாகப் பணியாற்றவோ நாங்கள் விரும்பவில்லை. ஆசிரியர் குழு பொறுப்பிலிருந்து நான்கு தோழர்களும் விலகுகிறோம்.
உரிய தோழர்கள் வந்தால், தளத்தை ஒப்படைக்கத் தயாராக இருக்கிறோம்.
இதுவரை எம்மை ஆதரித்த வாசகர்களுக்கும், தோழர்களுக்கும் நன்றி.
விடைபெறுகிறோம், வாசகர்களே!
வினவு ஆசிரியர் குழு.

பேதிமேளா – இந்தியன் காலரா உறுபிணி – சென் பாலன்

uyirmmai.com - சென்பாலன் : அத்தியாயம் – 3 : ஊரை அழித்த உறுபிணிகள்
(கொள்ளை நோய்களின் கதை)
பெயரோ அழகான பெயர் – விப்ரியோ காலரே.
காலராவின் கிருமியான விப்ரியோ காலரே பல்கிப் பெருக அதிக உப்புத் தன்மை இல்லாத கடல் நீர் வேண்டும். நீரின் வெப்பநிலை 20 டிகிரி செண்டிகிரேடிற்கு அதிகம் இருக்க வேண்டும். இவையிரண்டும் வெப்ப நாடுகளின் நதிக்கழிமுகப் பகுதிகளில்தான் கிடைக்கும். இந்தியாவில் கங்கை நதி கடலில் சேரும் வங்கப் பகுதி காலரா கிருமியின் சரணாலயம். அக்கிருமி எப்படியெல்லாம் தனது வாழ்விடம் இருக்க வேண்டும் என எண்ணியதோ அப்படி அமைந்த இடம். விப்ரியோ காலரேக்கள் இன்றுவரை அங்கு சுகமாக வாழ்ந்து வருகின்றன.
வங்க தேசத்தின் நதிக் கழிமுகப்பகுதியில் சுகமாக வசித்துவந்த விப்ரியோ காலரே கிருமிகள் அவ்வப்போது கங்கை நதிப்படுகையின் ஓரமாக உள்நாடுகளுக்குப் பரவி சிறிய அளவில் பாதிப்பை உண்டாக்கிக் கொண்டிருந்தன. 1817 ஆம் ஆண்டு கங்கை நதியில் பல இலட்சம் மக்கள் கலந்துகொண்ட கும்ப மேளா நடத்தப்பட்டது. அவர்களோடு விப்ரியோவும் கும்பமேளா கொண்டாடியது. அதில் கலந்துகொண்டவர்கள் ஆளுக்குக் கொஞ்சம் காலரா கிருமியைத் தங்கள் சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றனர். திறந்த வெளி மலம் கழித்தலைக் கூறாகக்கொண்ட இந்தியக் கலாச்சாரம் விப்ரியோக்களை மஞ்சள் கம்பளம் விரித்து வரவேற்றது.

pant-டைக் கழற்றி எனது மதத்தை கண்டு பிடிக்க போவதாக கூறினார்கள். ..பயந்துவிட்டேன். டெல்லி பத்திரிகையாளரின் நேரடி ...

Anindya Chattopadhyay : · Since birth I have never being
questioned about my religion in this grotesque manner "tu hindu hain ya muslim, pant kholun".?? my story today"s TOI..and thanks a ton to Sakshi Chand who protect me and told goons "isko aur camera ko chu ke dekh".
ஒரு பத்திரிக்கையாளரின் நேற்றைய கள அனுபவம்
மதியம் 12.30 மணியளவில் நான் Maujpur மெட்ரோ ஸ்டேஷனை அடைந்தேன். நான் இறங்கி சிறிது தூரம் நடந்துசெல்வதற்குள், என்னைக் குறுக்கிட்ட ஹிந்து சேனா உறுப்பினர் ஒருவர்...
"குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களது பணியை எளிதாக்கும்" என்றார்.
புகைப்பட கேமராக்களுடன் சென்ற என்னைப் பாத்தவுடன் அவருக்கு நான் ஒரு photo journolist என்பது புரிந்திருக்கும். அதன் காரணமாகவே அவர் அந்த குங்குமத்தை நீட்டுகிறார் என்பதை உணர்ந்துகொண்டேன்.
"நீங்க ஒரு ஹிந்துதான ? குங்குமம் வச்க்கிறதுல என்ன பிரச்சனை" என்றார் அந்த ஹிந்து சேனா உறுப்பினர்.
சுமார் 15 நிமிடங்களில், இரு தரப்பினர்கள், கல்வீசி தாக்கிக்கொண்டனர். மோடி மோடி என்ற பெருத்த கோஷங்களுக்கு நடுவே, கரும்புகை சூழ்ந்த மண்டலமாக அப்பகுதி மாறிக் கொண்டிருந்தது.
பற்றி எரிந்து கொண்டிருந்த ஒரு கட்டிடத்தை புகைப்படம் எடுப்பதற்காக, நான் விரைந்தபோது, அங்கிருந்த சிவன் கோவில் அருகே நின்று கொண்டிருந்த சிலர் என்னைத் தடுத்தார்கள்.

எஸ்.ஆர்.எம். மாணவி தற்கொலை ... அங்கு நடக்கும் சட்டவிரோத நடவடிக்கைகள்

மின்னம்பலம் : சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் செயல்பட்டு வரும் எஸ்.ஆர்.எம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பி.டெக் இரண்டாமாண்டு பயின்று வந்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஆயுஷி ராணா என்ற மாணவி பிப்ரவரி 22 ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியானது. கல்லூரி நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், மாணவியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
  எஸ்.ஆர்.எம்.  மாணவி தற்கொலையில் சிபிஐ விசாரணை- ராமதாஸ்இந்த நிலையில் எஸ்.ஆர். எம். பல்கலை மாணவர்களின் தொடர் தற்கொலைகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இதுகுறித்து இன்று (பிப்ரவரி 25) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் கடந்த ஓராண்டில் 6ஆவது மாணவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது அங்கு பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும், ஐயங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி வன்முறை இந்தியாவின் உள்விவகாரம் - அதிபர் டிரம்ப்

  மாலைமலர் :தலைநகர்   டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அதிபர் டிரம்ப், டெல்லி வன்முறை இந்தியாவின் உள்விவகாரம் என குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லி: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் தலைநகர் டெல்லியில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: பாகிஸ்தானில் இருந்து வரும் பிரச்சினைகளை இந்தியா சமாளிக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் செய்ய நான் தயார் உலகின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா விளங்குகிறது. உலகில் பல பகுதிகளில் அமைதியை நிலைநாட்டவே அமெரிக்கர்கள் பணிபுரிகின்றனர். டெல்லியில் வன்முறை ஏற்பட்டதாக கேள்விப்பட்டேன். ஆனால் அதுபற்றி பிரதமர் மோடியிடம் பேசவில்லை. டெல்லியில் ஏற்பட்ட வன்முறை இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை. எந்த ஒரு பிரச்சினைக்கும் இரு பக்கங்கள் இருக்கின்றன. இந்தியாவில் மத சுதந்திரத்திற்கு ஆதரவாக பிரதமர் மோடி இருக்கிறார்.

டெல்லியில் நான்கு இடங்களில் ஊரடங்கு உத்தரவு!

nakkeeran :டெல்லியில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. மேலும் வன்முறையில் காயமடைந்த 150 பேர் டெல்லி ஜிடிபி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் காரணமாக டெல்லியில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. பல்வேறு பகுதிகளில் துணை ராணுவ படையினர், டெல்லி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் டெல்லியில் மஜ்பூர், ஜாப்ராபாத், சந்த்பாக், கர்வால் நகர் ஆகிய இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். டெல்லி வன்முறை சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

BBC டெல்லி வன்முறை: உயிரிழப்பு 10 ஆக உயர்வு - தொடரும் பதற்றம் - LIVE


குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக வடகிழக்கு டெல்லியில் நடந்துவரும் போராட்டங்களின்போது ஏற்பட்ட வன்முறைகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது. இந்த வன்முறைகளில் 150 பேர் காயமடைந்துள்ளனர். இந்த போராட்டங்களுக்குப் பிறகு டெல்லியின் சாந்த் பாக், பஜன்புரா, பிரிஜ்புரி, கோகுல்புரி மற்றும் ஜாஃப்ராபாத் ஆகிய பகுதிகளில் பதற்றச் சூழல் காணப்படுகிறது.
டெல்லி ஜிடிபி மருத்துவமனையின் கண்காணிப்பாளரான சுனில் குமார், கடந்த 24 மணி நேரத்தில் ஜிடிபி மருத்துவமனையில் 150 காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர், 10 பேர் இறந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கிய துப்பாக்கி தொழிற்சாலையை போலீசார் கண்டுபிடித்து மூன்று பேரை கைது செய்துள்ளதாக அம்மாநிலத்தின் அதிகாரி ஒருவர் கூறுகிறார்.
இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள பி டி ஐ செய்தி முகமை, புதானாவில் உள்ள ஜோலா கிராமத்தின் ஒரு வயல் வெளியில் ஆயுத உற்பத்திக்கு தேவையான இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் நேபாள் சிங் தெரிவித்தார்.
சட்டவிரோதமாக இயங்கிய இந்த தொழிற்சாலையின் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தி, அங்கிருந்து ஒன்பது கைத்துப்பாக்கிகள், ஆறு மஸ்கட் துப்பாக்கிகள் மற்றும் பல தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். காவல் துறையினரின் இந்த நடவடிக்கையின்போது மூன்று பேர் கைது செய்யப்பட்டனர், தப்பிய இருவரை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கனிமொழி மத்திய பஜகாவால் குறி வைக்கப்படுகிறார்.. சட்ட ரீதியாக சிக்கவைக்க சதி நடக்கிறது?

டிஜிட்டல் திண்ணை:  டார்கெட் கனிமொழி - டெல்லி திட்டம்!மின்னம்பலம் : டிஜிட்டல் திண்ணை: டார்கெட் கனிமொழி - டெல்லி திட்டம்!
மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.
“தமிழகத்தில் சிஏஏ போராட்டங்கள் தீவிரமாக இருக்கின்றன. இஸ்லாமிய இயக்கங்கள், கட்சிகளின் கூட்டமைப்பு இந்தப் போராட்டங்களை ஒருபக்கம் உணர்வெழுச்சியாக நடத்துகிறது என்றால்... சிஏஏவுக்கு எதிராக கருத்தியல் ரீதியாக யார் யார் பேசுகிறார்கள் என்ற குறிப்பை மத்திய அரசின் உளவுத் துறை ஒவ்வொரு நாளும் கலெக்ட் பண்ணி வருகிறது.
இந்தப் பட்டியலில் தமிழகத்தில் முக்கிய இடத்தில் இருப்பவர் கனிமொழி. குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி பலரைப் போல மேலோட்டமாகப் பேசாமல் அந்தச் சட்ட மசோதா, அவசரமாக தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து, மக்களவை, மாநிலங்களவை என உடனடியாக நிறைவேற்றப்பட்டு இரவில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தது வரை பேசும் கனிமொழி... அதனால் எதிர்காலத்தில் யார் யாருக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்று விளக்கி வருகிறார். முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, பாஜக எதிர்ப்பில் தீவிரமாக ஈடுபடும் யாரையும் ஆவணங்களில் சந்தேகம் என்றும் சொல்லி குடியுரிமை இல்லாமல் ஆக்க முடியும் என்று கனிமொழி பேசிவருகிறார். அண்மையில் சட்டமன்றத்தில் முதல்வர், ‘குடியுரிமை சட்டத்தால் யாருக்கு என்ன பாதிப்பு?’என்று கேள்வி எழுப்பியபோது அவருக்குச் சட்டமன்றத்துக்கு வெளியே பதில் சொன்னதும் கனிமொழியே.

அமைப்பிலிருந்து விலகுகிறோம் ! – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு

வினவு  ;அன்பார்ந்த தோழர்களே, க்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச்செயலாளராகவும், புதிய கலாச்சாரம் இதழின் ஆசிரியராகவும், இவையன்றி வேறு சில பொறுப்புகளிலும் செயல்பட்டு வந்த நான், எல்லா பொறுப்புகளிலிருந்தும், குறிப்பாக, இவ்வமைப்புகளுக்கு அரசியல் தலைமையளிக்கின்ற அமைப்பின் தொடர்பிலிருந்து விலகுகிறேன். கடந்த 35 ஆண்டுகளாக ம.க.இ.க வின் செயலராக தமிழகத்தின் அரசியல் சக்திகள், வாசகர்கள், ஊடகத்தினர் மற்றும் மக்களிடையே அறிமுகமாகியிருக்கின்ற காரணத்தினாலும்,
தமிழகமெங்குமுள்ள அமைப்புத் தோழர்களுக்கு எனது விலகலையும்  அதற்கான காரணத்தையும் தெரிவிப்பதற்கு வேறு வாய்ப்புகள் இல்லாத காரணத்தினாலும், அவசியமான விவரங்களை மட்டும் கோடிட்டுக் காட்டி எனது விலகலைத் தவிர்க்கவியலாமல் பொதுவெளியில் அறிவிக்கிறேன்.
எனக்கும் என்னுடன் இணைந்து விலகலை அறிவித்திருக்கும் தோழர் நாதனுக்கும் இது மிகவும் கடினமான ஒரு முடிவு. கடந்த சுமார் 40 ஆண்டுகளாக எனக்கும், 30 ஆண்டுகளாக அவருக்கும் அமைப்பு நடவடிக்கைகள்தான் வாழ்க்கையாக இருந்தன. ஒரு கசப்பான போராட்டத்துக்குப் பின்னர்தான் தவிர்க்கவே இயலாது என்ற நிலையில் இந்த முடிவுக்கு நாங்கள் இருவரும் வந்திருக்கிறோம்.

கலைஞர் மீதான தொடர் அவதூறுகள் .. சமுகவலையில் .....

தமிழ் வீழ்ந்தாலும் கருணாதி வாழவேண்டும் என்று ஒரு எள்ளல் பதிவை  திமுக எதிர்ப்பாளர்  (மறைநாயகன் - இலங்கை ) சமுக வலையில் பதிவிட்டு இருந்தார் .அது துரோகத்தை பற்றிய கட்டுரை என்று வேறு குறிப்பிட்டு இருந்தார் .  
அந்த பதிவுக்கு  பலர் பதில்  கருத்துக்களை பதிவிட்டிருந்தனர் .அவை :
 Radha Manohar தமிழர்களின் போராட்டங்களில் அதிகமாக கேட்ட வார்த்தை துரோகி என்பது தான் . எவர் எவர் எல்லாம் துரோகி என்று அதிகமாக கூவுகிரர்களோ அவர்களேதான் மிகபெரிய துரோகிகள் ஆக இருந்ததுதான் வரலாறு .. இதில் மாற்று கருத்தே இல்லை .ஏனெனில் இது எல்லோருக்கும் தெரிந்த வரலாறு . கலைஞர் பற்றி கருணாநிதி என்று ஏகவசனத்தில் கூறுவது ஒரு வித பாசிச நோய் தவிர வேறில்லை . ஈழ போராட்த்தை பற்றிய புரிதல்களை தமிழகம் முழுவதற்கும் மட்டுமலல் முழு இந்தியாவுக்கும் எடுத்து சென்று தெரியப்படுத்தியவர் கலைஞரும் திராவிட முன்னேற்ற கழகமும்தான் .. ஈழ தமிழர்களின் ஆதரவு நிலைப்பாட்டினால் இரண்டு தடவை ஆட்சியை இழந்த கட்சி திராவிட முன்னேற்ற கழகமாகும் . கலைஞர் மீதும் திமுக மீதும் பலர் ஒவ்வாமை கொண்டிருபதற்கு முக்கிய காரணம் அவர்களின் சுய ஜாதி அபிமானம்தான்

 மறைநாயகன் : உங்கள் கருத்துக்கள் நியாயமானவை.
: கருணாநிதி வாரிசு அரசியலை நடத்தி தனது நற்பெயரைக் கெடுத்து விட்டார்.

Radha Manohar  :  மிக மிக தவறான பதில் . திராவிட இயக்கத்தின் பார்ப்மபரியாய் வரலாறு தெரியாமல் போனதன் விளைவுதான் தங்களின் பதில் . வடநாட்டு பார்ப்பனீய சக்திகள் திராவிட முன்னேற கழகத்தை உடைத்தெறிய எடுத்த முயற்சிதான் எம்ஜியாரை வருமானவரி மிரட்டல் மூலம் பிரித்தமை. அதன் பின்பு திமுக மீதும் கலைஞர் மீதும் தொடர்ந்து பொய்யனா குற்றச்சாட்டுகளை சுமத்தி எம்ஜ்யாரை ஆட்சிக்கு கொண்டுவந்தனர் .ஆரிய பார்ப்பனீய பனியா சக்திகள் .

பிரான்சின் அணு ஆலைகள் மூடப்படுகின்றன .. ஃபுக்குஷிமா அணு ஆலை வெடிப்புக்குப்புக்கு பின்...

 https://www.independent.co.uk/news/world/europe/france-fessenheim-nuclear-reactor-power-plant-shut-down-a9344501.html?fbclid=IwAR17FGIdhN5tPhWf8YiXSRjQMRFgAkpBL6pqu-L3radIAGMSaOhcDfIrOKY
Subashini Thf : பிரான்சின் பழமையான நியூக்ளியர் அணு ஆலையை மூடும்
நடவடிக்கை கடந்த சனிக்கிழமை காலை தொடங்கியது. ஃபாசன்ஹைம் அணு ஆலையின் 3 ரியாக்டர்களில் முதல் ரியாக்டர் சனிக்கிழமை மூடப்பட்டு படிப்படியாக வருகின்ற ஜூன் மாதன் முழுமையாக மூடப்படுகின்றது. ஜப்பானில் நிகழ்ந்த ஃபுக்குஷிமா அணு ஆலை வெடிப்புக்குப் பின்னர் ஐரோப்பாவில் சில நாடுகள் அணு ஆலைகளைப் படிப்படியாகக் குறைத்து வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஜெர்மனி தொடர்ச்சியாக அணு ஆலைகளை மூடி வருகின்றது. அந்த வரிசையில் பிரான்சின் மிகப் பழமையான ஃபாசன்ஹைம் அணு ஆலை இப்போது மூடப்படும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.
மனிதகுலத்துக்கும் ஒட்டு மொத்த இயற்கைக்கும் தீங்கு விளைவிக்கும் அணு சக்தி உற்பத்திக்குப் பதிலாக மாற்று வழிகள் தற்சமயம் பரவாலாக செயல்பாட்டில் மேற்கொள்ளப்படுகின்றன. காற்று, நீர், சூரிய ஒளி, குப்பைகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு மாற்று வழிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது வரவேற்பிற்குறியது.

தில்லி கலவர நிலைமை ஆபத்தான கட்டத்தில் ;;; ஆர் எஸ் எஸ் குண்டர்கள் கைகளில் துப்பாக்கிகள்

தில்லியில் நிலைமை மோசம் என்று தகவல்கள் வருகிறதே என்னவாயிற்று என்று இன்பாக்சில் ஆட்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். வீடியோக்களும் வந்து கொண்டே இருக்கின்றன.
ஷாஹீன்பாக் பகுதியில் பல நாட்களாக அமைதியான போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
இப்போது பிரச்சினை ஏற்பட்டிருப்பது யமுனைக்கு அப்பால் வடகிழக்கு தில்லிப் பகுதியில். இந்தப் பகுதியில் முஸ்லிம்களின் குடியிருப்புகள் அடரத்தியாக உள்ளன.
கடந்த இரண்டு மூன்று நாட்களாக அங்கும் பெண்கள் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதுவரையிலும் அமைதியான போராட்டமாகவே நடந்து வந்திருக்கிறது.
அவர்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறார்கள் பாஜகவினர். இதைத்தூண்டி விட்டவர் பாஜவைச் சேர்ந்த கபில் மிஸ்ரா. சிஏஏ ஆதரவுப் போராட்டம் என்ற பெயரில் ஊர்வலம் நடத்தி, சிஏஏ எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இவர்கள் திட்டமிட்டு டிராக்டர்களில் கற்களைக் கொண்டு வந்து இறக்கி வைத்த வீடியோக்களும் வெளிவந்துள்ளன. சிஏஏ எதிர்ப்புப் போராட்டக்காரர்களை விரட்டியடித்து அதை முடிவுக்குக் கொண்டு வரவில்லை என்றால், நாங்களே அதைச் செய்வோம், டிரம்ப் போகட்டும் என்றுதான் விட்டுவைத்திருக்கிறோம் என்று பகிரங்கமாக போலீசுக்கு மிரட்டல் விட்டிருக்கிறார் கபில் மிஸ்ரா.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்பட பல தொழில்களுக்கு தடை - தமிழக அரசு உத்தரவு

தினத்தந்தி : காவிரி டெல்டா பகுதியான பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷேல் கியாஸ் உள்பட பல்வேறு தொழில்களுக்கு தடைவிதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசிதழில் வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகரின் உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:- சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம்-1986 சட்டத்தின் அடிப்படையில் காவிரி டெல்டா பகுதிகளில் சில புதிய தொழில் நடவடிக்கைகளுக்கு தடை விதித்து உத்தரவிடப்படுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் நடவடிக்கைகளை எடுக்க அரசியல் சாசனத்தின் 48-ஏ பிரிவு மாநில அரசுக்கு வழிவகை செய்கிறது. மேலும், மத்தியஅரசு சட்டத்தின்படியும் மாநில அரசுகளுக்கு அதற்கான அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அரிசி களஞ்சியமாக காவிரி டெல்டா பகுதி விளங்குகிறது. விவசாய மண்டலமான காவிரி டெல்டா பகுதி, எளிதில் பாழ்படக்கூடிய சுற்றுச்சூழல் கொண்ட பகுதியாக உள்ளது.

கொரோனா வைரஸ் : மருந்துப் பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியா தடை

polimernews.com : கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக முக்கிய சில மருந்துப் பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய இந்திய அரசு தடை விதித்துள்ளது.
சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. 27 நாடுகளுக்கும் மேல் இந்த வைரஸ் பரவி உள்ளதால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் இந்தியாவில் இருந்து குறிப்பிட்ட சில மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இதுகுறித்து  செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், உலகின் மற்ற நாடுகளை போலவே கோடிக்கணக்கான மக்கள் தொகையை கொண்ட இந்தியாவும் கொரோனா வைரஸ் பரவுவதில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்கும் பொறுப்பு உள்ளது என்றார்.
மேலும்  உள்நாட்டில் தட்டுப்பாடுகள் உள்ள ஒருசில மருந்துப்பொருட்கள், உபகரணங்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது’ எனவும் அவர் தெரிவித்தார்.

டெல்லி CAA ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் மோதல் .. வீடியோ

 இந்நேரம்.காம் : புதுடெல்லி (24 பிப் 2020): டெல்லியில் ஏற்பட்ட திடீர் கலவரத்தில் மூன்றுபேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததால் இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது. இதில் டெல்லி தலைமை கான்ஸ்டபில் மற்றும் பொதுமக்கள் இருவர் உட்பட மூன்றுபேர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து டெல்லி போர்க்களமாகவே காட்சி அளிக்கிறது, அமெரிக்க அதிபர் இந்தியா வந்துள்ள நிலையில் டெல்லி வன்முறை மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அரசுக்கு வன்முறையை கட்டுப்படுத வேண்டி கோரிக்கை விடுத்துள்ளார்.

CAA, NRC - டெல்லி ஜாஃபராபாத் போராட்டத்தில் வன்முறை: மூவர் உயிரிழப்பு - தற்போதைய நிலை என்ன?

BBC  : குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வட கிழக்கு டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால், மூவர்
காவி கொடியில்லாத வீடுகளை தேடி தேடிதாக்கும் ஆர்எஸ்எஸ்குண்டர்கள்
உயிரிழந்துள்ளனர். ஜாஃபராபாத்தை சேர்ந்த முகமது சுல்தான் மற்றும் ஷாஹித் ஆல்வி என்ற ஆட்டோ ஓட்டுநரும் இந்த வன்முறை சம்பவங்களில் இறந்துள்ளதாக போலீசார் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். இதனால் டெல்லி வன்முறை சம்வங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
முகமது சுல்தானின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில், அவரது காலில் இருந்து அதிக ரத்தம் வெளியேறியதால், அவர் இறந்துவிட்டதாக போலீஸ் அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
உயிரிழந்த மற்றொருவரான ஷாஹித் ஆல்வியின் சகோதரனான ரஷீத் ஆல்வி இது குறித்து பிபிசியிடம் கூறுகையில், ''என் சகோதரர் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வந்தார். இன்றைய போராட்டத்தின்போது அவரது வயிற்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் அவர் இறந்துவிட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஜிடிபி மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வட கிழக்கு டெல்லியில் நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால், தலைநகரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைளை எடுக்க வேண்டுமென உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.