சனி, 3 பிப்ரவரி, 2024

Kanimozhi MP : விஜய்யின் அரசியல் எதிர்காலம்? ஓப்பனாக பேசிய கனிமொழி..

Kanimozhi MP Speech | விஜய்யின் அரசியல் எதிர்காலம்? - கனிமொழி..

கார்த்தி சிதம்பரத்துக்கு சீட் வழங்ககூடாது.. சுதர்சன நாச்சியப்பன் தலைமை காங்கிரஸ் கூட்டத்தில் காங்கிரஸ் தீர்மானம்!

tamil.oneindia.com - Nantha Kumar R:  சிவகங்கை: சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் கார்த்தி சிதம்பரத்துக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கக்கூடாது என காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். இவர் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
Resolution passed in Congress that party should not be given a chance Karti Chidambaram on Sivaganga
இந்நிலையில் தான் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் சிவகங்கை தொகுதியில் போட்டியிட கார்த்தி சிதம்பரம் காய் நகர்த்தி வருகிறார். தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் உள்ளது.

விஜய்க்கு பின்னால் இருக்கும் அந்த அரசியல் புள்ளி யார்? (பிரகாஷ் சுவாமி) ரகசியம்

zeenews.india.com - S.Karthikeyan : நடிகர் விஜய் தமிழக அரசியலுக்கு வருவதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துவிட்டார்.
தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றி கழகம் என கட்சி பெயரை பதிவு செய்ய விண்ணப்பித்திருக்கும் அவர், தன்னுடைய சினிமா பணிகளை முழுவதுமாக முடித்துவிட்டு அரசியல் களத்தில் பயணிக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
முழு நேர அரசியலில் ஈடுபடுவதாக கூறியிருக்கும் விஜய், 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
அதேநேரத்தில் இன்னும் சில மாதங்களில் வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் தன்னுடைய ஆதரவு இல்லை என்றும் கூறியுள்ளார்.

போலி இந்திய (குஜராத்) மருந்து இறக்குமதி - இலங்கை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது !

தேசம் நெட் ;இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்த மருந்து ஊழல் குற்றச்சாட்டில் இலங்கை  அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது !
ுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ஏப்ரல் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில்.. பவதாரிணி மறைவால் நின்றுபோன .

hirunews.lk : இலங்கையில் இளையராஜாவின் இசை நிகழ்விற்கான புதிய திகதிகள் அறிவிப்பு!
இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்ட இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் என்றும் ராஜா ராஜாதான் என்ற இசை நிகழ்விற்கான புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, குறித்த நிகழ்வு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் இடம்பெறும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ரட்ணம் பாஸ்கர்  தெரிவித்துள்ளார்.
குறித்த இசை நிகழ்வு சூரியனின் ஊடக அனுசரணையில் கடந்த மாதம் 27 மற்றும் 28 திகதிகளில் கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறவிருந்தது.

வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

இனி தலைவலி மாத்திரை கூட வாங்க முடியாது! - மெடிக்கல் ஷாப்புகளுக்கு பறந்த உத்தரவு

tamil.samayam.com : அன்னபூரணி : சென்னை: மருத்துவரின் பரிந்துரை மறந்து விற்பனை செய்யும் நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மருந்து விற்பனை நிறுவனங்களில் ஆய்வு:
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மருந்து கட்டுப்பாட்டு துறையின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள மொத்தம் மற்றும் சில்லரை மருந்து விற்பனை நிறுவனங்களில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.
அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கடந்த 2023 ஆண்டிற்கான ஒன்பது மாத காலத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாதன சட்டம் 1940 மற்றும் மருந்து விதிகள் 1945 இன் கீழ் விதிமீறல்கள் ஈடுபட்ட மொத்தம் மற்றும் சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்கள் இது 219 மருந்து விற்பனை உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது மேலும் 381 மருந்து நிறுவனங்களில் அதிரடியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் : தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கினார!

BBC Tamil :  ‘நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். அதற்கு தமிழக வெற்றிக் கழகம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், யாருக்கும் ஆதரவுமில்லை என்றும் அவர் அறிவித்துள்ளார்.
அதே நேரத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலைக் குறிவைத்து தனது கட்சி செயல்படும் என்றும் விஜய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையின் விவரம் :
“விஜய் மக்கள் இயக்கம்” பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு நிவாரண உதவிகளையும் மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும்,செய்து வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.

செல்லூர் ராஜு : எம்ஜிஆரையே விமர்சிப்பாயா.? ஆ ராசாவுக்கு கடும் கண்டனம்

tamil.samayam.com - ஜே. ஜாக்சன் சிங் : எம்ஜிஆரையே விமர்சிப்பாயா.. அவர் இல்லைனா நீயெல்லாம்.. ஆ. ராசாவை 'டா' போட்டு பேசிய செல்லூர் ராஜு
மதுரை: எம்ஜிஆரை மோசமாக விமர்சனம் செய்த திமுக எம்.பி. ஆ. ராசாவை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாடா போடா என்று கடுமையாக திட்டி தீர்த்தார். மேலும், எம்ஜிஆர் இல்லை என்றால் நீயெல்லாம் ஆடு தான் மேய்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் விமர்சித்தார்.
நீலகிரி திமுக எம்பி ஆ. ராசாவின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. அதில் அவர், "நான் எல்லாம் எம்ஜிஆரை மதிக்கிறதே இல்லை" எனக் கூறுகிறார். இதையடுத்து, எம்ஜிஆரை மோசமான வார்த்தைகளால் அவர் பேசியிருந்தார்.

300 யூனிட் இலவச மின்சாரம்!!! வீட்டு Solar மின்சாரம் வீட்டுகாரருக்கே சொந்தம்! இதில் என்ன 300யூனிட் இலவசம்?


 minnambalam.com - Kavi : மேற்கூரை சூரிய சக்தி மின்மயமாக்கல் திட்டம் மூலம் 300 யூனிட்வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2024-2025-ம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று (பிப்ரவரி 1) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இதில், பசுமை வளர்ச்சி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் அறிவித்தார்.
“மேற்கூரை சூரிய சக்தி மின்மயமாக்கல் திட்டம் மூலம், ஒரு கோடி வீடுகள் ஒவ்வொரு மாதமும் 300 யூனிட்வரை இலவச மின்சாரத்தைப் பெற முடியும்.

ஒன்றிய பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்

மாலை மலர் : இந்தியாவில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இடைக்கால பட்ஜெட்டுக்கு எதிர்க்கட்சிகள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சுரேஷ் குமார் இடைக்கால பட்ஜெட் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், "ஒவ்வொரு முறையும் நமக்கு அநீதி இழைக்கப்படுகிறது. நமது பணம் நமக்கு வேண்டும். ஜி.எஸ்.டி., சுங்கம், நேரடி வரி என எல்லாவற்றில் இருந்தும் எங்களுக்கு வரவேண்டிய பங்கை நாங்கள் பெற வேண்டும். எங்களது வளர்ச்சிக்கு தேவையான நிதி வட இந்தியாவுக்கே வழங்கப்பட்டு வருகிறது."

வியாழன், 1 பிப்ரவரி, 2024

மஞ்சள் காமாலை விரட்டும்! சிறுநீரக கற்களை கரைக்கும்.. ரணகள்ளி !

Do you know the health benefits of Ranakalli?

tamil.oneindia.com  -Vishnupriya R :; சென்னை: சிறுநீரக கற்களை சிறுநீர் வழியாக வெளியே அனுப்பும் சக்தி வாய்ந்த ரணகள்ளி செடி குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
ரணகள்ளி எனப்படும் மூலிகையை வீட்டில் தொட்டிகளிலேயே வளர்க்கலாம். இதன் வேர்தான் என்றில்லை, இலையை நட்டால் கூட வளர்ந்துவிடும். இந்த செடி சிறியதுதான். இது பல வீடுகளில் அழகுக்காக வளர்க்கப்படுகிறது.
Do you know the health benefits of Ranakalli?
வெப்பம் நிறைந்த பகுதிகளில்தான் இந்த ரணகள்ளி செடி காணப்படும். இது அழகுக்காக பயன்படுத்தப்பட்டாலும் முக்கிய மூலிகைகளில் ஒன்றாகவே காணப்படுகிறது.

சாத்தான்குளம் ஜெயராஜ் பென்னிக்ஸ் கொலை வழக்கு: இன்ஸ்பெக்டர் ஜாமின் மனு தள்ளுபடி

மாலை மலர் : மதுரை  தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு கடந்த 2020-ம் ஆண்டு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர்.
இந்த வழக்கில் அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 போலீசாரை சி.பி.ஐ. கைது செய்து மதுரை சிறையில் அடைத்தது. இந்த வழக்கின் விசாரணை மதுரை கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஜாமின் மனு ஐகோர்ட் மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.

இம்ரான் கான் + மனைவி ஆகியோருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை!

தேசம் நெட்  arulmolivarman  :  பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு ( Bushra Bibi) 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. எனினும், அந்த வழக்குகள் அரசியல் பழிவாங்கல் காரணமாக தொடரப்பட்டிருப்பதாக இம்ரான் கான் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.
தோஷகானா ஊழல் வழக்கில் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஹேமந்த் சோரன் ராஜினாமா: ஜார்கண்ட் மாநில முதல்வராகிறார் சம்பாய் சோரன்

மாலைமலர் : ஜார்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் இருந்து வந்தார். இவருக்கு அமலாக்கத்துறை தொடர்ந்து சம்மன் அனுப்பி வந்தது.
10-வது முறையாக சம்மன் அனுப்பி இன்று அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வரும் நிலையில் அவரது மனைவியை முதல்வராக்கலாம் என்ற செய்தி வெளியானது.
இந்த நிலையில் ஹேமந்த் சோரன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்தார்.
அதன்படி இன்று இரவு ஹேமந்த் சோரன் ஆளுநர் மாளிகை சென்றார். அவருடன் கூட்டணியில் உள்ள கட்சிகளின் எம்.எல்.ஏ.-க்களும் ஆளுநர் மாளிகை சென்றனர். அப்போது ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார்.

புதன், 31 ஜனவரி, 2024

மம்தா காங்கிரசுக்கு நிபந்தனை: காங்கிரஸ் சிபிஎம் கட்சியிடம் இருந்து விலகி வர வேண்டும்

மின்னம்பலம் - Kavi :  “ஒரு சீட் கூட கிடையாது” : காங்கிரசுக்கு நிபந்தனை விதிக்கும் மம்தா
காங்கிரசுக்கு ஒரு சீட் கூட தர மாட்டேன் என்று கண்டனம் தெரிவித்துள்ள மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, ஒரு நிபந்தனையும் விதித்துள்ளார்.
இந்தியா கூட்டணியில் இருந்தாலும் மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தனித்து தான் போட்டியிடும். காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லை என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
இது இந்தியா கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், மம்தா பானர்ஜி இல்லாத கூட்டணியை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது என்று காங்கிரஸ் தெரிவித்தது.

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு எதிராக முறைப்பாடு.. ஜாதி ரீதியாக துன்புறுத்துகிறார்கள்

மாலை மலர் : ஜார்க்கண்ட் மாநில முதல்வராக இருப்பவர் ஹேமந்த் சோரன். பணமுறைகேடு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியது. 8 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.
9-வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டபோது எனது வீட்டில் வைத்து விசாரணை நடத்தப்பட்டால் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக தெரிவித்தார். அதன்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிம் விசாரணை நடத்தினர்.
அதனைத்தொடர்ந்து ஜனவரி 27-ந்தேதி முதல் 31-ந்தேதி வரைக்குள் ஆஜராகி பதில் அளிக்கும்படி 10-வது முறையாக சம்மன் அனுப்பியது.

சசிகலாதான் தமிழ்நாட்டை இன்னும் ஆள்கிறார்?

 LR Jagadheesan :  சசிகலாதான் தமிழ்நாட்டை இன்னும் ஆள்கிறார்!
திகவினர் இது பெரியார் மண் என்கிறார்கள். திமுகவினரோ அண்ணா தான் இன்னும் தமிழ்நாட்டை ஆள்கிறார் என்கிறார்கள்.
ஆனால் எனக்கென்னவோ உண்மையில் சசிகலா தான் தமிழ்நாட்டை இன்னமும் ஆள்கிறார் என்றே தோன்றுகிறது.
இதை நகைச்சுவைக்காகவோ பரபரப்புக்காகவோ சொல்லவில்லை. உண்மையாகவே அப்படி தான் உணர்கிறேன்.
எதன் அடிப்படையில் இப்படி ஒரு ஒப்பீடு என்பவர்களுக்கு:
ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட நாள் செப்டம்பர் 22, 2016.
ஜெயலலிதா இறந்தது டிசம்பர் 5, 2016.  
ஜெயலலிதா வெறும் தனிநபர் அல்ல. அதிமுக என்கிற தமிழ்நாட்டின் ஆளும்கட்சியின் பொதுச்செயலாளர். அதைவிட முக்கியமாக ஏழறைகோடி மக்கள் தொகைகொண்ட தமிழ்நாட்டின் முதல்வர்.
அவர் அப்பல்லோவில் இருந்த அந்த 74 நாட்களில் அவரை அப்பல்லோ மருத்துவர்கள்/செவிலியர்கள்/எய்ம்ஸ் மருத்துவர்கள்/சசிகலாவைத் தவிர அவரது சொந்த கட்சியின் அமைச்சர்களோ, மாநில அதிகாரிகளோ யாருமே அவரை நேரில் பார்க்கவில்லை.

இந்தியா கூட்டணி தமிழ்நாட்டில் ஆரவாரம்; காங்கிரசுக்கு 9 இடங்கள் அளிக்க தி.மு.க சம்மதம்

amil.indianexpress.com -  அருண் ஜனார்தனன் :  சென்னையில் உள்ள தி.மு.க தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ்-தி.மு.க தொகுதிப் பங்கீடு முதல்கட்ட பேச்சுவார்த்தையில் இரு கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி மீண்டும் உறுதி செய்யப்பட்டது.
ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யு), திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆகியவற்றுடன் ஏற்பட்ட பிரச்னைகளுக்குப் பிறகு இந்தியா கூட்டணிக்கு இந்த சாதகமான செய்தி வந்துள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் தி.மு.க மூத்த தலைவர்கள் 2019 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 9 தொகுதிகளான, 9 இடங்களுக்கு ஒப்புக்கொண்டதாக தெரிய வந்துள்ளது.

கோவை.. My V3 ads நிறுவனர் மீது மற்றொரு வழக்கு.. ஆதரவாக திரண்ட பொதுமக்கள் மீதும் myv3 ads நிறுவன உறுப்பினர்கள் மீதும் வழக்கு

tamil.oneindia.com  - Vigneshkumar : கோவை: கோவையில் MYV3Ads என்ற எம்எல்எம் நிறுவனத்திற்கு ஆதரவாக மக்கள் ஒன்றுகூடியது பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இந்த விவகாரத்தில் போலீசார் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
ஒட்டுமொத்த கோவையையும் அதிர வைக்கும் சம்பவம் சில நாட்களுக்கு முன்பு நடந்தது. அதாவது கோவையில் இயங்கி வரும் MYV3Ads என்ற ஆன்லைன் நிறுவனம் ஆயுர்வேத பொருட்களை விற்று வருகிறது.
Case against MyV3ads owner and its investors for gathering without permission
இதற்காக அவர்கள் தனியாகச் செயலியை உருவாக்கியுள்ளனர். மேலும் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றனர். அதில் வரும் விளம்பரங்களைப் பார்த்தால் போதும் வருமானம் கொட்டும் என்று கூறி இவர்கள் பொதுமக்களிடம் முதலீடுகளைப் பெற்றுள்ளனர்.

செவ்வாய், 30 ஜனவரி, 2024

இந்து அல்லாதவர்கள் பழனி கோயிலுக்குள் செல்ல தடை! உயர் நீதிமன்ற மதுரை கிளை

minnambalam.com - முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி கோயிலுக்குள் இந்து அல்லாதவர்கள் நுழைய அனுமதி இல்லை என்ற பலகையை மீண்டும் வைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று (ஜனவரி 30) தீர்ப்பு வழங்கியது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த செந்தில்குமார் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.
அதில், ‘நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி முருகன் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்து அறநிலையத்துறை ஆலய நுழைவு விதி 1947ன் படி இயற்றப்பட்ட சட்டம், இந்து அல்லாத எந்த ஒரு மாற்றுச் சமயத்தினரும் கோயிலுக்குள் நுழைவதைத் தடுக்கிறது.

காஞ்சி சங்கர மடம் 20 ஆம் நூற்றாண்டில்தான் உருவானது!.

 ராதா மனோகர்  :  காஞ்சி சங்கர மடம் 20 ஆம் நூற்றாண்டில்தான் உருவானது!.
காஞ்சி மகா பெரியவாள் என்று அழைக்கப்பட்ட காஞ்சி சந்திர சேகரேந்திரர்தான் நிறுவனர்
இவரின் உண்மை பெயர் சுவாமிநாதன் சர்மா என்பதாகும் (20 May 1894 – 8 January 1994)
கும்பகோணத்தில் இருந்த மடம்  கிபி 1839 இல் தான்  காஞ்சிபுரத்திற்கு மாறியது..(கே. சதானந்தா) என்பவரின் கட்டுரையில்  , editor. cs m.uc.e du (டைஜெஸ்ட் எடிட்டர்)
காஞ்சிபுரம், 1994 ஜூலை 24 (பிடிஐ) 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ( ? ) காஞ்சி மடத்தின் தலைவரான ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதியின் 60வது நூற்றாண்டு விழாவை முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.ஆர்.வெங்கடராமன் இன்று தொடங்கி வைத்தார்.என்று அறிவித்தார்கள்!  மேலும் சங்கரமடமானது கிமு 482 முதல் 477 வரை முதல் 'பீடபதி' (மடத்தின் தலைவர்) ஆதி சங்கரரால் இங்கு நிறுவப்பட்ட மடத்தின் 69 வது பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஆவார்.என்றும் கூறப்பட்டது.
ஐயா, எல்லா மடங்களின் கணக்குகளின்படியும் ஆதி சங்கரர் காலம் கி.பி 8 முதல் 9 ஆம் நூற்றாண்டு வரைதான் என்பது எல்லோரும் அறிந்ததே! .    
மேலும் அவர்  நிறுவிய நான்கு மடங்களில் காஞ்சி மடம் இடம் பெறவில்லை .

திங்கள், 29 ஜனவரி, 2024

கடலூர் - 10 திமுக கவுன்சிலர்கள் ராஜினாமா செய்யப்போவதாக எச்சரிக்கை!

ஸ்பெயின் வந்தடைந்தேன் முதலீடுகளை ஈர்க்கவுள்ளேன்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Kalaignar Seithigal :   தமிழ்நாடு : தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறைப் பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு 27.1.2024 அன்று இரவு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சென்னையிலிருந்து புறப்பட்டு, நேற்று (28.1.2024) மாலை ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மேட்ரிட் சென்றடைந்தார்.
மேட்ரிட் சென்றடைந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை, ஸ்பெயின் நாட்டிற்கான இந்தியத் தூதர் தினேஷ் கே. பட்நாயக் தூதரக அதிகாரிகளோடு மலர்கொத்து வழங்கி வரவேற்றார். இந்த சந்தித்து பேசியபோது, ஸ்பெயின் பயணம் வெற்றி பெறுவதற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

சோமாலியா கொள்ளையர்களிடமிருந்து 6 மீனவர்களும் இலங்கை மீன்பிடிப் படகும் பாதுகாப்பாக மீட்பு! Admin

வீரகேசரி : இலங்கை மீன்பிடிப் படகான லோரன்சோ புத்தா சீஷெல்ஸ் கடலோர காவல்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனை சீஷெல்ஸ் தூதரகம் உறுதிப்படுத்தியதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 12 ஆம் திகதி தனது கன்னிப் பயணத்தில் இணைந்த இந்த மீன்பிடிப் படகு கடந்த சனிக்கிழமை 6 மீனவர்களுடன் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்டிருந்தது.
குறித்த படகிலிருந்த 6 மீனவர்களும் சீஷெல்ஸ் கடலோர காவல் படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முட்டி மோதும் சீனியர்கள்... தட்டித் தூக்கும் உதயநிதி: இளைஞரணி எம்.பி. வேட்பாளர்கள் இவர்கள்தான்!

minnambalam.com -  Aara : வருகிற மக்களவைத் தேர்தலில் திமுகவில் இளைஞரணி சார்பில் சீட் பெறப் போகிறவர்கள் யார் என்ற விவாதம் திமுகவுக்குள் சூடாகிக்  கொண்டிருக்கிறது.
கடந்த ஜனவரி 21 ஆம் தேதி சேலத்தில் நடந்த திமுக இளைஞரணி மாநாட்டில் முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலினை மேடையில் வைத்துக் கொண்டு,  “நீங்கள்தான் இளைஞரணிக்கு இப்போதும் செயலாளர். உங்கள் குழந்தைகள்தான் நாங்கள். இந்த குழந்தைகளுக்கு பொறுப்பு கொடுத்து அழகு பாருங்கள். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் இளைஞரணியினருக்கு வாய்ப்பு கொடுங்கள்” என்று வெளிப்படையான வேண்டுகோள் வைத்தார் இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி. மாநாட்டில் நிறைவுரையாற்றிய முதல்வர் ஸ்டாலின்,   “இளைஞர் அணி தான் எனது தாய் வீடு.  திமுக தலைவராக,  தமிழக முதலமைச்சராக நான் வளர்வதற்கு எனக்கு அடித்தளம் இட்டது இளைஞர் அணி தான்.   இளைஞர் அணியில் இருந்து  பல  சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள்  வந்துள்ளனர்,

ஞாயிறு, 28 ஜனவரி, 2024

UGC : இடஒதுக்கீடு பணியிடங்கள் பொது பிரிவினர் மூலம் நிரப்பப்படாது! யுஜிசி அறிவிப்பு

tamil.oneindia.com - Vigneshkumar  :  இடஒதுக்கீடு பணியிடங்கள் பொது பிரிவினர் மூலம் நிரப்பப்படாது! யுஜிசி அறிவிப்பிற்கு மத்திய அரசு விளக்கம்
டெல்லி: உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவில் இருந்து போதிய விண்ணப்பங்கள் இல்லாத பட்சத்தில் அதைப் பொதுப்பிரிவில் நிரப்ப யுஜிசி வழிகாட்டுதல்களை வெளியிட்ட நிலையில், இதற்கு மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் புதிய இட ஒதுக்கீடு கொள்கையை நடைமுறைப்படுத்தக் கடந்த டிச.27ஆம் தேதி யுஜிசி வழிகாட்டுதல்களை வெளியிட்டு இருந்தது. இதில் பொதுமக்களைக் கருத்துகளைக் கூறலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான கடைசி தேதி இன்று ஜனவரி 28 அன்று முடிவடைகிறது.
Amid UGC new guidelines, central govt clarifies that No reserved posts will de-reserved

நிதிஷ்குமார் பாஜக ஆதரவு: 9வது முறை பிகார் முதல்வராக பதவியேற்றார்!

மின்னம்பலம் - christopher : ஜக்கிய ஜனதா தள தலைவரான நிதிஷ் குமார் பாஜக ஆதரவுடன் 9வது முறையாக பிகார் முதல்வராக இன்று (ஜனவர் 28) பதவியேற்றுள்ளார்.
பிகாரில் கடந்த 2020ஆம் ஆண்டு வெறும் 43 தொகுதிகளில் மட்டுமே வென்ற நிதிஷ்குமாரின் ஜக்கிய ஜனதா தளம், 74 இடங்களில் வென்ற பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் அமர்ந்தது.
பின்னர் 2022-ம் ஆண்டு பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய நிதிஷ்குமார், 75 தொகுதிகள் வென்ற லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியுடன் மகாகத்பந்தன் என்ற பெயரில் கூட்டணி அமைத்தார்.
மேலும் மீண்டும் பிகார் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்ற நிலையில், லல்லுவின் மகனும், எம்.எல்.ஏவுமான தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக பதவியேற்றார்.

டி ஆர் பாலு : நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பு!

மாலை மலர் : சென்னை அண்ணா அறிவாலயத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக, காங்கிரஸ் இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்தது.
முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்ததை தொடர்ந்து, திமுக பொருளாளரும், தொகுதிப் பங்கீட்டு குழு தலைவருமான டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் கூறியதாவது
" மக்களவை தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் உடன் முதல் கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்தது. நிதிஷ் குமார் சென்றதால் இந்தியா கூட்டணியில் எந்த தாக்கமும் ஏற்படாது. 20 -க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக நிற்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.
 விருப்ப பட்டியல் எதையும் காங்கிரஸ் கட்சி வழங்கவில்லை.
பாராளுமன்ற தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என உதயநிதி கேட்டுக்கொண்டார். அதனை ஏற்று இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிப்பது பற்றி முதல்வரிடம் தெரிவிப்பேன்" எனக் கூறினார்.

தமிழ்நாடு to ஸ்பெயின் : வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க 10 நாட்கள் சுற்றுப்பயணம் - முதலமைச்சர் அதிரடி!

தமிழ்நாடு to ஸ்பெயின் : வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க 10 நாட்கள் சுற்றுப்பயணம் -  முதலமைச்சர் அதிரடி!

Kalaignar Seithigal - Prem Kumar : தமிழ்நாடு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க 10 நாட்கள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதன்படி இன்று 9:40 மணிக்கு மணிக்கு சென்னையில் இருந்து துபாய் செல்கிறார் முதலமைச்சர்.
வெளிநாட்டு நிறுவனங்கள், உள்நாட்டு பெரிய நிறுவனங்கள் தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் ஆரம்பிக்கும் போது அந்த பகுதிகளில் பெரிய பொருளாதார வளர்ச்சி ஏற்படும். ஏராளமான மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதற்காக தமிழகு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தியர் 22 பேருடன் சென்ற கப்பல் மீது ஹூத்தி தாக்குதல் - இந்திய கடற்படை கப்பல் விரைவு

BBC News தமிழ் :  ஏமனை தளமாகக் கொண்ட ஈரான் ஆதரவு இயக்கமான ஹூத்தி கிளர்ச்சிக்குழு, "அமெரிக்க-பிரிட்டன் தாக்குதலுக்கு" பதிலடி கொடுக்கும் விதமாக வெள்ளிக்கிழமையன்று மார்லின் லுவாண்டா கப்பலை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த கப்பலை மீட்கும் முயற்சியில் இந்திய கடற்படையின் கப்பல் உள்ளிட்ட பிற நாடுகளின் கப்பல்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்க, பிரிட்டன் தாக்குதலுக்கு பதிலடி
செங்கடல் பகுதியில் செல்லும் கப்பல்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் ஹூத்தி குழுவின் நடவடிக்கைகளுக்கு எதிராக சமீபத்தில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இணைந்து வான்வழி தாக்குதலை நடத்தினர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏடன் வளைகுடா பகுதியில் பயணித்து கொண்டிருந்த மார்லின் லுவாண்டா கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது ஹூத்தி கிளர்ச்சிக்குழு.

பாஜக ராம சீனிவாசன் : அதிமுக பாஜக கூட்டணிக்குள் வராவிட்டால்... பெரிய விலை கொடுக்க நேரிடும்

tamil.oneindia.com -  Vigneshkumar : சென்னை: லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பாஜக கூட்டணிக்கு அதிமுக வரவில்லை என்றால் பெரிய விலை கொடுக்க நேரிடும் என்று பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பாஜக இடையே பல ஆண்டுகளாகக் கூட்டணி இருந்த வந்தது. கடந்த 2019 லோக்சபா தேர்தல், 2021 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் எனப் பல தேர்தல்களைக் கூட்டணி அமைத்தே இரு தரப்பும் சந்தித்தனர்.
Rama Srinivasan says AIADMK will need to pay the price if they dont come to BJP alliance
ஆனால், இந்தக் கூட்டணியில் கடந்தாண்டு பிளவு ஏற்பட்டது. பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாகக் கடந்தாண்டு அறிவிக்கப்பட்டது.