சனி, 25 நவம்பர், 2023

திருநாவுக்கரசரை (அப்பர்) கொலைசெய்த பார்ப்பனர்கள்! சனாதனலீக்ஸ்

May be an image of 10 people and temple

இம்சை அரசி தென்றல் :  : பலிக்கூடாது என்று வாதிட்ட அப்பரை கொலை செய்த பார்ப்பனர்கள் -
இன்றுவரை அப்பர் எழுதிய தேவாரம் பாடத் தடை -
63 நாயன்மார்களில் மிகவும் முக்கியமானவர் அப்பர் எனும் திருநாவுக்கரசர் ஆவார்.
அவர் தம் வாழ்வின் முற்பகுதியில், சமணத்தைப் பின்பற்றினார்.
பிறகு சைவத்திற்கு மாறி சிவதலங்கள் பலவற்றைத் தரிசித்து, யாத்திரையாக வரும்போது, திருஞான சம்பந்தரோடு தொடர்பு ஏற்பட்டது.
பிறகு இருவரும் ஒன்றாக சேர்ந்து பல சிவ தலங்களை தரிசித்தனர்.
வாம மார்க்கிகள் ஊர் ஊராக சென்று, சிறு தெய்வங்களை உருவாக்குவதையும், அவைகளுக்குப் பலியிடுவதையும், பிரச்சாரம் செய்து வந்தனர்.
இது பிராமணர்களுக்கு தனி, பிராமணர் அல்லதோர் தனி என்று பரப்பினர்.
இதில் திருஞானசம்பந்தர் மிகவும் தீவிரமாக ஈடுபட்டார்.
இதனால் அப்பருக்கும், திருஞான சமந்தருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்பர் ஒரு நாள் சம்பந்தரை பார்த்து கேட்கிறார்.

கும்பகோணம் - நண்பரை வெட்டிக் கொன்று.. உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட நாட்டு வைத்தியர்.

tamil.samayam.com  - பஹன்யா ராமமூர்த்தி  :  தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே மணல்மேடு மகாராஜபுரத்தைச் சேர்ந்த அசோக்ராஜன் என்ற 27 வயது இளைஞர் சென்னையில் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார்.
அசோக்ராஜனுக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு வந்த அசோக் ராஜன் கடந்த 13ஆம் தேதி சிதம்பரத்துக்குச் சென்று நண்பரைப் பார்த்துவிட்டு மீண்டும் சென்னைக்குச் செல்வதாகத் தன்னுடைய பாட்டி பத்மினியிடம் சொல்லிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பினார்.
ஆனால் அவர் சென்னைக்கு செல்லவில்லை. அவரது போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

உத்தராகண்ட் சுரங்கப்பாதை: பசி, பதற்றம், மாயை - சிக்கியவர்கள் சந்திக்கும் ஆபத்துகள் என்ன?

BBC News , பைசல் முகமது அலி  :  உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதைக்குள் சிக்கியிருக்கும் 41 தொழிலாளர்களை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தத் தொழிலாளர்கள் கடந்த 12 நாட்களாக சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளதால், அவர்களது உடல்நிலை குறித்த கவலைகள் எழுந்துள்ளன.
தொழிலாளர்கள் சுரங்கப்பாதையில் இருந்து மீட்கப்பட்ட பிறகு அவர்களின் உடல்நிலை குறித்து என்ன செய்ய வேண்டும் மற்றும் அவர்கள் உடல் மற்றும் மனரீதியாக என்ன பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பிபிசி ஹிந்தி சேவை வல்லுநர்களிடம் பேசியது.
'சிக்கியிருப்பவர்கள் இடையே விரக்தி ஏற்பட வாய்ப்புள்ளது'
சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள பணியாளர்கள் இடையே விரக்தி முதல் குழப்பம் வரையிலான சூழ்நிலை உருவாகலாம்.

முன்னாள் டிஜிபி மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

minnambalam.com - christopher :  தமிழ்நாடு அரசு மற்றும் முதல்வர் குறித்து  வாட்ஸ் அப் குரூப்களில் அவதூறு செய்திகளை பரப்பியதாக கூறப்பட்ட நிலையில் முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது 7 பிரிவுகளின் கீழ் இன்று (நவம்பர் 24) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் டிஜிபியாகவும், அதிமுக சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆகவும் இருந்தவர் நட்ராஜ்.
ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான இவர், தமிழ்நாடு அரசு மற்றும் முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்துகளை அவ்வப்போது பதிவிட்டு வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பான ஸ்க்ரீன்ஷாட்டுகளும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தின.

வெள்ளி, 24 நவம்பர், 2023

மன்சூர் அலிகான் திரிஷா சண்டை முடிவுக்கு வந்தது

மாலை மலர் : திரிஷா பற்றி நடிகர் மன்சூர்அலிகான் பேசிய  பேச்சு சர்ச்சையாகி திரையுலகில் கடந்த சில தினங்களாக பரபரப்பாகி வந்தது. மன்சூர்அலிகான் மீது போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் அவர் நேற்று நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
இதையடுத்து மன்சூர் அலிகான் இன்று திரிஷா விடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.   அதில், "ஆம்!! அடக்க நினைத்தால் அடங்கமறு!! இப்ப சொல்கிறேன். என்னை மன்னித்துவிடு! ஒரு வாரமாக நடந்த கத்தியின்றி ரத்தமின்றி போரில் நான் வெற்றி? பெற்றுவிட்டேன்.
எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு! இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்கியத்தை இறைவன் தந்தருள்வானாக!! " என்று குறிப்பிட்டிருந்தார்.

பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மின்னம்பலம் Selvam  :  பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன்!
தங்கநகை சேமிப்பு திட்டத்தில் மோசடியில் ஈடுபட்ட பிரணவ் ஜூவல்லர்ஸ் விளம்பர தூதுவரான பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
திருச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பிரணவ் ஜூவல்லர்ஸ் நிறுவனத்திற்கு  சென்னை, மதுரை, கும்பகோணம், கோவை உள்ளிட்ட இடங்களில் கிளைகள் உள்ளது.
தங்க நகைகளுக்கு செய்கூலி, சேதாரம் இல்லை,
சேமிப்பு மற்றும் முதலீடு திட்டங்களில் அதிகளவில் போனஸ் போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு வந்தது.
இதனால் பொதுமக்கள் பலரும் பிரணவ் ஜூவல்லர்ஸ் கடையில் முதலீடு செய்தனர்.

பில் கேட்ஸ் : வாரத்திற்கு 72 மணி நேரம் வேலை பார்க்கனுமா? 3 நாள் வேலை பார்த்தாலே போதும் .

மாலை மலர்  : மைக்ரோசாப்ட் நிறுவனரான பில் கேட்ஸ் தொழில்நுட்பம் மனிதர்களுக்கு மாற்றாக அமையாது என்ற நம்பிக்கை கொண்டவர் என நம்மில் பலருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும்.
ஆனாலும், அவர் தொழில்நுட்பத்தின் உதவியால் ஒருவர் வாரத்திற்கு மூன்று நாட்கள் வேலை செய்தாலே போதும் என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்.
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த காமெடியனும், எழுத்தாளருமான டிரெவர் நோவா-வுடனான பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய போது பில் கேட்ஸ் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
68 வயதான பில் கேட்ஸ் ஏ.ஐ. எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைவாய்ப்பை பறித்துவிடாது,
ஆனால் வேலை பார்க்கும் முறையை முற்றிலுமாக மாற்றியமைத்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.

வியாழன், 23 நவம்பர், 2023

தெலங்கானாவில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும்! கருத்து கணிப்பில் தகவல் !

Kalaignar Seithigal - Praveen : தெலங்கானா தேர்தல் குறித்த கருத்து கணிப்பில் காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானாவில் நவம்பா் 30-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மாநிலம் தொடங்கியதில் இருந்து தற்போது வரை பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த சந்திர சேகர ராவ் முதலமைச்சராக உள்ளார்.
தெலங்கானாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை காங்கிரஸ் கட்சி பெரிதாக பேசப்படாத நிலையில், ராகுல் காந்தியின் யோடோ யாத்திரை தெலுங்கானாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதோடு தெலங்கானாவில் காங்கிரஸ் அறிவித்த வாக்குறுதிகள் அங்கு நிலைமையை தலைக்கீழாக மாற்றியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

டெல்லியில் சிறுவன் கொலை வெறியாட்டம்! குத்தி கொன்றுவிட்டு டான்ஸ் ஆடிய 17 வயது சிறுவன்

வெறும் பிரியாணிக்காக கொன்று, வெறித்தனமாக டான்ஸ் ஆடிய சிறுவன்

மாலை மலர் : குற்றங்கள் அதிகம் நடைபெறும் நகரங்களில் இந்திய தலைநகர் புது டெல்லி முன்னணியில் உள்ளது.
தலைநகர் டெல்லியின் வடகிழக்கில் உள்ளது வெல்கம் காலனி. இப்பகுதிக்கு அருகில் உள்ள ஜஃப்ராபாத் (Jafrabad) பகுதியில் வீட்டு பணி செய்யும் ஒரு பெண்ணின் 17 வயது மகன், வெல்கம் காலனி பகுதி வழியாக சென்று கொண்டிருந்தான்.
அங்குள்ள ஜன்தா மஜ்தூர் (Janta Mazdoor) காலனி அருகே அவன் செல்லும் போது, ஒரு 16 வயது சிறுவன் அவனை வழி மறித்து பிரியாணி உண்பதற்காக ரூ.350 கேட்டு தகராறு செய்தான். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

சனாதனம் வழக்கு - உதயநிதி, சேகர்பாபு, ஆ.ராசா பதவிக்கு சிக்கலா? தீர்ப்பு ஒத்திவைப்பு!

tamil.oneindia.com  - Vignesh Selvaraj :  சென்னை: சனாதனத்துக்கு எதிராகப் பேசியதாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு தி.மு.க எம்.பி ஆ.ராசா ஆகியோரை அப்பதவியில் இருந்து நீக்க கோரிய வழக்கு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.
சனாதனத்துக்கு எதிராகப் பேசியதாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு தி.மு.க எம்.பி ஆ.ராசா ஆகியோரை அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில இந்து முன்னணி நிர்வாகிகள் மனோகர், கிஷோர் குமார், ஜெயக்குமார் ஆகியோர் தாக்கல் செய்த கோ- வாரண்டோ வழக்குகள் நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

நாவலப்பிட்டி - மாணவர்களை பொலித்தீன் லஞ்சீட் மற்றும் பேப்பரை சாப்பிடச் செய்த அதிபர் – மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

 தேசம்நெட் - அருண்மொழி  :  மதிய உணவை லஞ்ச் ஷீட் சுற்றிக்கொண்டு வந்த மாணவர்களில் ஏழுபேரை பிடித்த பாடசாலையின் அதிபரொருவர், அந்த லஞ்ச் ஷீட்டை உட்கொள்ளுமாறு கூறியமையால், அதனை உட்கொண்ட இரண்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம், நாவலப்பிட்டி வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் கல்லூரி ஒன்றில் இடம்பெற்றுள்ளது. பாதிப்பு உள்ளான மாணவர்கள் இருவரும் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அந்தப் கல்லூரியில் 11-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் மதிய உணவை லஞ்ச் ஷீட்டில் சுற்றி, செய்தித்தாளில் சுற்றிக்கொண்டு வந்துள்ளனர்
அந்த வகுப்பில் 33 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் 07 மாணவர்கள் பகல் உணவுகளை லஞ்ச் ஷீட்டில் சுற்றி, செய்தித்தாள் பக்கங்களால் சுற்றிக் கொண்டு வந்துள்ளனர்.

4 பேரை திமுகவிலிருந்து நீக்கிய துரைமுருகன்! நெல்லை மாநகராட்சி கவுன்சிலர்களை கட்டம் கட்டிய பொதுச்செயலாளர்

tamil.oneindia.com   - Arsath Kan : நெல்லை: நெல்லை மாநகராட்சி கவுன்சிலர்கள் உட்பட 4 பேரை திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்திருக்கிறார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன்.
நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ள நிலையில் அதில் 51 இடங்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியை சேர்ந்தவர்கள் கவுன்சிலர்களாக உள்ளனர். இதில் ஒரு தரப்பினர் மேயர் சரவணனுக்கு ஆதரவாகவும் மற்றொரு தரப்பினர் அவருக்கு எதிராகவும் இருந்து வருகின்றனர்.
இதனால் நெல்லை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் அவ்வப்போது சலசலப்புகள் ஏற்படும்.

புதன், 22 நவம்பர், 2023

துரைமுருகன் மீது பாய்ந்த குடியாத்தம் குமரன்; பின்னணி என்ன?

விகடன் - ந.பொன்குமரகுருபரன் : ``ரூ.60,000 கோடி சம்பாதித்திருக்கிறார்!"- துரைமுருகன் மீது பாய்ந்த குடியாத்தம் குமரன்; பின்னணி என்ன?

மின்னம்பலம்  - ara : திமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் குடியாத்தம் குமரன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய காரணத்தினால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார் என்று,
இன்று (நவம்பர் 22)  திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்திருக்கிறார். minister duraimurugans 60000 crore scam
இந்த அறிவிப்பு வெளிவந்த சில மணி நேரங்களிலேயே திமுகவின் பொதுச் செயலாளரான அமைச்சர் துரைமுருகன் மீதும்,
அவரது மகன் வேலூர் எம்பி கதிர் ஆனந்த் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தொடுத்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார் குடியாத்தம் குமரன்.

உத்தராகண்ட் சுரங்க மீட்புப் பணி: நாளைக்குள் நல்ல செய்தி கிடைக்கும் - அதிகாரி தகவல்

Hindu Tamil  : உத்தராகண்ட் சுரங்க மீட்புப் பணி: நாளைக்குள் நல்ல செய்தி கிடைக்கும் - அதிகாரி தகவல்
டேராடூன்: உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்து தொடர்பாக அடுத்த 24 மணி நேரத்தில் நல்ல செய்தி கிடைக்கும் என்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உத்தராகண்ட் மாநிலத்தின் உத்தரகாசி அருகே அமைக்கப்பட்டு வரும் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட திடீர் விபத்து காரணமாக, 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த 12ம் தேதி அதிகாலை இந்த விபத்து நேரிட்ட நிலையில், கடந்த 11 நாட்களாக அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றது. பக்கவாட்டில் துளையிடும் முயற்சி தாமதமாகி வருவதை அடுத்து, செங்குத்தாகவும் துளையிட முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் இன்று தொடங்கின.

ஆளுநர் என்பவர் மாநில அமைச்சரவைக்கு கட்டுப்பட்டவர்”: குட்டு வைத்த உச்சநீதிமன்றம்

 கலைஞர் செய்திகள் -  KL Reshma  :  * 2017-இல் கோவா, மணிப்பூர் சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றாலும் பா.ஜ.க.ஆட்சியை கைப்பற்றுவதற்கு ஆளுநர்கள் உதவி செய்தனர்.
* 2020-இல் மத்தியப் பிரதேசம், 2022 இல் மகாராஷ்டிரம் என ஆளுநர்கள் உதவியுடன், அதிகார பலத்துடன் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றியது. தேர்தல்கள்தான் இந்தியாவின் பலமாகும். வாக்காளர்களின் மனநிலை, உணர்வு தேர்தலில் வெளிப்படுகிறது. ஆனால் ஆளுநர்களின் செயல்பாட்டால் தேர்தலின் நோக்கமே அடிபட்டுப் போகிறது.
* சில ஆளுநர்கள் அரசியலமைப்புச் சட்டக் கொள்கைகளை மீறி குற்றம் புரிகின்றனர். தொங்கு சட்டமன்றத்தில் முதல்வரை நியமனம் செய்வது முக்கியமானப் பிரச்சினையாகும். அவர்களுக்கு ஜனநாயக அடிப்படைகள், மக்களின் தீர்ப்பு பற்றி எல்லாம் அக்கறையில்லை. ஏறத்தாழ, அனைத்து ஆளுநர்களுமே பதற்றமும், மிகை உணர்ச்சி கொண்டவர்களாகவும், அரசியல் சார்புடன் செயல்படு பவர்களாகவும் இருக்கின்றனர்.

கனமழை: எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை?

minnambalam.com  -  selvam :  கனமழை: எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை?
கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்கால் பகுதி பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவம்பர் 22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல், தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மத்திய மேற்கு வங்ககடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் தமிழகத்தில் இன்றும் நாளையும் கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தில் கன முதல் மிக கன மழையும் தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

செவ்வாய், 21 நவம்பர், 2023

பாலாற்றில் வீணாகும் நீரை 11 ஏரிகளுக்கு திருப்பிவிட்ட திமுக எம்.எல்.ஏ நந்தகுமார்

MLA Nandakumar diverted Palar River water to 11 lakes

மின்னம்பலம் -Aara : வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக வடகிழக்கு பருவ மழை சரியாக பெய்யாததால் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் உள்ள 11 ஏரிகள் வறண்டு கிடந்தன. MLA Nandakumar diverted Palar River water to 11 lakes
இந்நிலையில் இப்போது கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் பாலாற்றில் ஓடும் நீரை அந்த 11 ஏரிகளுக்கும் திருப்பிவிட அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறார் அணைக்கட்டு  திமுக சட்டமன்ற உறுப்பினரும் வேலூர் திமுக மாசெவுமான  ஏ.பி. நந்தகுமார்.
இதுகுறித்து வேலூர் மாவட்ட சமூக ஆர்வலர்கள் நம்மிடம்,
“வேலூர் பொதுவாக வறட்சியான மாவட்டமாக அறியப்படுவதுண்டு. ஆனால் பாலாறும், ஏரிகளும் நிரம்பினால் வேலூரில் விவசாயம் கொழிக்கும்.

வெளி மாநிலத்தவரும் குடும்ப அட்டை பெறலாம்.. சிவகங்கை ஆட்சியர் அறிவிப்பு! ஒரே நாடு ஒரே ரேசன் திட்டமாம்

Other state people can apply for Ration cards - Sivagangai district collector

tamil.oneindia.com - Noorul Ahamed Jahaber Ali : சிவகங்கை: ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் மூலம் ரேஷன் பொருட்களை பெற்றிடலாம், குடும்ப அட்டை இல்லாத வெளி மாநில தொழிலாளர்கள் புதிய குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் வட மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பல மாவட்டங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். அரசு பணிகள், மென் பொருள் நிறுவன பணிகளுக்காக வரும் ஊழியர்களை கடந்து, கட்டுமானப் பணிகள், உணவக ஊழியர்கள், சலூன் கடைகள் என பல்வேறு தொழில்களில் ஈடுபடுவதற்காகவும், புதிய தொழில் தொடங்குவதற்காக தினசரி தமிழ்நாட்டுக்கு வரும் வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.

போலீஸ் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் வட்டுக்கோட்டை இளைஞன் உயிரிழப்பு

ceylonmirror.net - Jeevan : கைது செய்யப்பட்டிருந்த இளைஞனை வைத்தியசாலைக்கு கொண்டு வரும் போதே இறந்திருந்தார் : சட்ட வைத்திய அதிகாரி
தடுப்புக் காவலில் வைத்து தாக்கப்பட்டதாக நம்பப்படும் வடக்கு தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இறந்த இளைஞரின் உடலில் காயங்கள் இருந்ததாக தெரிய வந்துள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருபத்தாறு வயதுடைய நாகராசா அலெக்ஸ், நவம்பர் 19 ஞாயிற்றுக்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்படும் போது ,
ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கீழ் பிரேத பரிசோதனை நடத்திய சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 20 ஆம் தேதி வெளியிடப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் தடயவியல் நிபுணர் ருத்ரபசுபதி மயோரதன் , இறந்த இளைஞனின் முதுகு, கை மற்றும் கால்களில் பல காயங்கள் இருந்தன. மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 20 நவம்பர், 2023

வடகலை-தென்கலை என மோதிக் கொள்ளும் இவர்கள் யார்?

 Surya Xavier   : வடகலை-தென்கலை என மோதிக் கொள்ளும் எச்சகலைகள் யார்?
சிறு குறிப்பு.
ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தை வெளியில் இருந்து பார்க்கும் போது  ஒரே சாதி போல் தோன்றும்.ஆனால் அதனுள் பல உள் அடுக்குகள் இருக்கும். ஒரு சாதி என்பதன் உள் அர்த்தம் யாதெனில் திருமண உள்வட்டமே. ஒன்றாக சாதிப்பெயர் இருந்தாலும் ஒன்றோடு ஒன்று திருமண உறவு வைக்காது.இதற்கு ஏராள உதாரணம் உண்டு.
பார்ப்பனர்களிலும் பலவகை உண்டு. அவற்றை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
1.வைஷ்ணவர்கள்
2.அர்ச்சகர்கள்
3.ஸ்மார்த்தர்கள்

17 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்முறை சப்-இன்ஸ்பெக்டர் மீது போக்சோ வழக்கு. தருமபுரி மாவட்டம்

புகார் கொடுக்க வந்த சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை: சப்-இன்ஸ்பெக்டர் மீது போக்சோ வழக்கு

மாலைமலர் : தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர், சிங்கிலி மேடுவை சேர்ந்த பழனிச்சாமி (28).
இவருக்கும் ஓசூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த 2020-ம் ஆண்டு குழந்தை திருமணம் நடந்தது. அந்த சிறுமிக்கு 2 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு, சிறுமிக்கும் அவரது மாமியாருக்கும் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, ஏரியூர் போலீஸ் நிலையத்தில் சிறுமி புகார் அளித்துள்ளார்.
இதில் ஏரியூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன் (55) என்பவர் விசாரணை அதிகாரியாக செயல்பட்டுள்ளார்.
விசாரணையின்போது சிறுமியின் தொலைபேசி எண்ணை பெற்றுக்கொண்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன், முதலில் மிரட்டியும், பின்பு அதையே காரணம் காட்டியும், பாலியல் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தப் பாலியல் தொடர்பு குறித்து சிறுமியின் கணவர் பழனிசாமிக்கு தெரிந்ததால், கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

ஆளுநர் இறங்கி வந்தாலும் வழக்கில் இருந்து பின்வாங்க போவதில்லை: அமைச்சர் ரகுபதி பேட்டி!

tamil.oneindia.com - Vignesh Selvaraj புதுக்கோட்டை: ஆளுநரின் நடவடிக்கையை சகித்துக்கொள்ள முடியாததால் தான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம், ஆளுநர் இறங்கி வந்தாலும் வழக்கில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாநில அரசுக்கே திருப்பி அனுப்பிய நிலையில், சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, அந்த மசோதாக்களை மீண்டும் தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பியுள்ளது.
முன்னதாக, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் நீண்ட காலமாக கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து: 41 தொழிலாளர்களை மீட்க மலையில் 3 இடங்களில் துளையிட முடிவு

மாலை மலர் :  உத்தரகாச உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி பகுதியில் பிரம்மகால்-யமுனோத்திரி நெடுஞ்சாலையில் சில்க் யாரா-தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே மலைக்கு கீழ் நீண்ட சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு எளிதான போக்குவரத்து வசதிக்காக இந்த சுரங்கப்பாதையை கடந்த சில ஆண்டுகளாக அமைத்து வருகிறார்கள்.
கடந்த 12-ந்தேதி சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது
அதன் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதனால் 41 தொழிலாளர்கள் சுரங்கப் பாதைக்குள் சிக்கிக் கொண்டனர்.
சுரங்கம் தோண்ட வேண்டிய மலை பகுதிக்கு கீழும் ஏற்கனவே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு இடையில் அவர்கள் சிக்கி தவித்து வருகிறார்கள்.

ஞாயிறு, 19 நவம்பர், 2023

பௌத்த பிக்குவின் தாக்குதலில் போலீஸ் உயிரிழப்பு!

 தமிழ் மிரர் : பிக்கு ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) காலை உயிரிழந்துள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெனியாய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பல்லேகமவில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வந்த வந்த 18 வயதுடைய பிக்குவால் கடந்த 16ஆம் திகதி பிற்பகல் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறில், குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கூரிய ஆயுத்தால் தாக்கப்பட்டார்.
இந்த பொலிஸ் உத்தியோகத்தர் உடகோமடிய, கட்டுவன பிரதேசத்தில் வசிக்கும் திருமணமான உத்தியோகத்தர் என்பதுடன்,
இவர் குறித்த பிக்குவின் 20 வயதுடைய சகோதரியுடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களின் உடல்நிலை மோசம்: வெளியில் காத்திருக்கும் உறவினர்கள் தகவல்

மாலைமலர் : உத்தரகாசி உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் சில்க்யாரா- தண்டல்கான் இடையே சுமார் 4.5 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டு வரும் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி கடந்த 12-ந்தேதி இடிந்து விழுந்தது.
இதில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்கள் ஆக்சிஜன் குறைந்த சூழ்நிலையில் அதற்குள் தவித்து வருகிறார்கள்.
சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. தொழிலாளர்கள் வெளியே வருவதற்காக இடிந்து விழுந்த பகுதிக்குள் துளையிட்டு குழாய்களை செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்காக அமெரிக் காவில் தயாரிக்கப்பட்ட எந்திரம் பயன்படுத்தப்பட்டது.