வெள்ளி, 30 அக்டோபர், 2026

ஆக நாம இனிமே கண்காணிக்க படுறோம்.

May be an image of one or more people, beard, rear-view mirror, car and road

 குமரிக் கிழவனார் :  இன்று காலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து தம்பியை அழைத்திருக்கிறார்கள்.........
பதினாறு வருசமா முகநூலில் எழுதுகிறேன் 
இந்த புனைப்பெயரில் எழுதுவது இது ஏழாவது வருடம். 
கூடன்குளம் பிரச்சனையில் ஒன்றிய அரசிற்கு எதிராக எழுதிய போது கவனம் பெற்றேன் 
அதை தொடர்ந்து இரண்டாயிரத்தி பதினாறில் பண மதிப்பிழப்பின் போதும் இரண்டாயிரத்தி பதினாறு தேர்தலின் போதும் ஆளுங்கட்சிக்கு எதிராக எழுதினேன். இணையம் போலி துறைமுகதிட்டம் கோவளம் துறைமுக திட்டம் இரண்டுக்கு எதிராக தீவிரிமாக எழுதியிருக்கிறேன்
ஓகி புயலின் போது நடந்த தில்லுமுல்லுகள் சாதி சண்டை மூட்டல்கள் பற்றி எழுதியிருக்கிறேன். குமரி மாவட்டத்தில் மதச்சண்டை தூபம் போட்டுகொண்டிருந்த கூட்டத்தை கடுமையாக எழுதி அது கொலை மிரட்டல் வரைக்கும் போயிருக்கிறது. வேறொரு சம்பவத்தில் சுயசாதி சங்க ரவுடிகள் இரவு வீடு வரை வந்து அப்பாவை மிரட்ட பார்த்து அவரிடம் வாங்கி கட்டி கொண்டு போனார்கள்.....


கடந்த ஆட்சி தொடங்குவதற்கு முன்பே நடந்து வந்த கனிமவள திருட்டை அம்பலபடுத்தியதில் எனது பங்கு உண்டு. அதற்காக பலமுறை தொலைப்பேசி வழி மிரட்டல்களை சந்தித்திருக்கிறேன். நான் எம்பஸி வழியாக புகார் பதிவு செய்யும் கட்டத்திற்கு போய் பின்னர் எதிர்தரப்பு சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதுவரையான ஆதாரங்கள் இன்று வரை என்னிடம் உண்டு. ஆனாலும் கடந்த ஆட்சி முழுவதும் நான் ஆதாரங்களுடன் கனிமவள திருட்டை மிக கடுமையாக எழுதி வந்திருக்கிறேன்......
குமரி மாவட்டத்தின் வரலாறு மற்றும் வாழ்வியலோடு என்னை என் நிலத்தை எதிர்கால சந்ததியினரை பாதிக்கும் எதுவாக இருந்தாலும் சமரசமில்லாமல் எழுதிவந்திருக்கிறேன். நீ பேக் ஐடி தானே பேக் ஐடிதானே ஒரிஜினல் ஐஞில வாடா என்று கருத்துக்கு எதிர்வாதம் வைக்காமல் ஊளையிடுபவர்களுக்காக முகநூலில் எனது முழு விபரங்களயும் பதிவு செய்து இதை புனைப்பெயராக கொண்டு எழுதிவருகிறேன். எனது சாதி மதம் ஊர் தொலைப்பேசி எண் என எதுவும் ரகசியம் அல்ல நிறைய பேரிடம் எனது இரு வாடசப் எண்களும் உண்டு ஆனால் இதுவரை காவல்துறையிடமிருந்து அழைப்பு வந்ததில்லை.....
இன்று காலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து தம்பியை அழைத்திருக்கிறார்கள். குமரிக்கிழவனார் நீங்களா என கேட்டு  அவன் அது நானில்லை என் அண்ணன்தான் என்று சொல்லவே என்னுடைய அழைப்பு எண்ணை வாங்கிவிட்டு வைத்திருக்கிறார்கள்.....
தம்பி என்னிடம் தகவல் சொல்லவே நான் அந்த எண்ணுக்கு அழைத்தேன் மறுமுனையில் ஒரு காண்ஸ்டபிள் அழைப்பை எடுத்தார். எனது எண்ணை பதிவு செய்து வைத்தாரா என்று தெரியவில்லை என்னை அறிமுகபடுத்துவதற்கு முன்பே அடையாளம் கண்டவராக பேச தொடங்கினார்.......
என்ன சார் டீட்டெய்ல்ஸ் கேட்டீங்களாமே என்னுடைய எண்தான் முகநூலில் இருக்கே எடுத்திருக்கலாமே என்ன விசயம் சார் எதும் பிரச்சனையா என்றேன்.... 
இல்லை சமூக ஊடகங்களில் ஆக்டிவா இருப்பவர்களை கண்காணிச்சி டீட்டெய்ல்ஸ் வாங்க சொல்லிருக்காங்க அதான் அழைத்தோம் என்றார்.......
எதும் அரசு உத்தரவா புதுசா அரசாணை மாதிரி எதும் போட்ருக்காங்களா சார் என்றதற்கு இல்லை எங்க அலுவலகத்தில் சொல்லிருக்காங்க என்றார்......
புதுவழக்கமா இருக்கே சார் இத்தன வருசமா எழுதுறேன் ஆக்டிவா இருக்கேன் சொல்லப்போனா கடந்த ஆட்சில இத விட ஆக்டிவா எழுதிட்டிருந்தேன் இப்பலாம் பெருசா எழுதிறதில்லேயே சார் அவ்ளோ ஆக்டிவும் கிடையாது என்ன திடீர்னு டீட்டெயில்ஸ் வாங்குறீங்க எதும் வழக்கு பதியுறீங்களா சொன்னீங்கனா அதுக்கு ஏத்த மாதிரியா முன்னேற்பாடுகள் செய்வேன்னு சொன்னேன்.....
ஐயோ இல்ல சார் சும்மா டீட்டெய்ல்ஸ் மட்டும் வாங்கதான் சார் என்றார்.......
இது என்னுடைய புனைப்பெயர் எனது இந்திய எண் என் முகநூலில் இருக்கு இது வெளிநாட்டு எண் இரண்டிலயுமே வாட்சப் இருக்கு எப்பவேணும்னாலும் அழைங்க என் விசயமா தம்பிகளுக்கு அழைக்க வேணாம் சார் என்றேன்...
இல்ல சார் சும்மா டீட்டெய்ல் எடுக்கத்தான் வேறு ஒன்றுமில்லை என்றார் எனது உண்மையான பெயரயோ எனது முகவரியையோ கேட்கவில்லை கண்டிப்பா அத வேறு யார்டயாவது கேட்டு வச்சிருப்பாங்க என்பது எனது நம்பிக்கை.....
அப்புறம் அவரோட உயர் அதிகாரி பெயர் ஊர் அவரோட ஊர்லாம் நானே கேட்டு விசாரிச்சிட்டு போன வச்சேன்......
நண்பர் ஒருவரிடம் என்னயா புதுவழக்கமா இருக்கேனு கேட்டதுக்கு வரலாற்று புக்காவே இருந்தாலும் நீ போட்ருக்கது அரசியல் புக்குயா அதான் டீட்டெய்ல் எடுத்து வைப்பாங்க என்று சொன்னார்......
என்னையா எம்பது வருசம் முன்னாடி உள்ள அரசியல எழுதுனாவெல்லாமா நோட் பண்ணுவாங்கனு போன அமத்திட்டு நாமதான் ஆக்டிவா போஸ்ட் போடுறதுமில்ல போன ஆட்சிய எதிர்த்த மாதிரி ஆக்ரோசமா அரசியல் எழுதுறதுமில்லனு யோசிச்சிட்டே முகநூலை நோண்டினால் நேற்று குமரி எல்லையில் எடுத்த கனிமவள கடத்தல் லாறி வீடியோ குமரிமாவட்டத்த தாண்டி பயங்கரமா ரீச் ஆயிருக்கு.......
ஆக நாம இனிமே கண்காணிக்க படுறோம்.....இதுவரை கண்காணிச்ச மாதிரி இல்ல டீட்டெய்ல்ஸோட......

கருத்துகள் இல்லை: