சனி, 9 செப்டம்பர், 2017

தினகரனுக்கு அமித் ஷா கடும் எச்சரிக்கை .... 70 ஆயிரம் கோடி மதிப்புள்ள அந்த ---- திரும்பப் பெற மோதல் நடக்கிறது

நாங்கள் விரும்பாத எதுவும் உங்களால் தமிழக அரசியலில் ஏற்படும் என்றால் அதைப் பார்த்துக் கொண்டு நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் என கடுமையான குரலில் டி.டி.வி. தினகரனை எச்சரித்திருக்கிறார் பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் அமித்ஷா'' என்கிறது டெல்லி வட்டாரம்.அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ.க்களுக்கு என தனி புத்தகம் வைத்து, வந்தவர்களிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டிருந்தார் தலைமைக் கழக ஊழியரான மகாலிங்கம். சசிகலாவுக்கு மிக நெருக்கமான மகாலிங்கம் கொடுத்த தகவல்படி, எடப்பாடி கூட்டிய கூட்டத்தில் 85 எம்.எல்.ஏ.க்கள்தான் கலந்து கொண்டனர் என்கிறார்கள். இல்லை 105 பேர் கலந்து கொண்டனர் என பொள்ளாச்சி ஜெயராமனும் 109 பேர் கலந்து கொண்டனர் என ஜெயக்குமாரும் கூறினார்கள்.

நீட் தேர்வு விற்கப்பட்ட வினாக்கள் NEET Exam Softwares found hacked and charge sheet filled

Special CorrespondentVenkat Ramanujam 24 mins · neet தேர்வில் டெண்டர் இல்லாமல் கொடுத்து software hack செய்த #bjp அரசின் ஊழல் முகத்தை வைத்து இருக்கும் தொண்டர்கள் மட்டுமில்லை H Raja Tamilisai Soundararajan Pon Radhakrishnan Narayanan Thirupathy Dr K Krishnasamy கூட #நீட் பற்றி பேச யோக்கியதை கிடையாது என்பதை உணர வேண்டும் .. #fraud #vyapam #scam https://www.splco.me/1mnews/Sept17/070917en2.html

7 அரசு மருத்துவமனைகளை தனியாருக்கு ‘லீஸ்க்கு விடப்போகிறது மத்திய அரசு!

chinniah.kasi.7 அரசு மருத்துவமனைகளை தனியாருக்கு ‘லீஸ்க்கு விடும் மோடி அரசின் அதிர்ச்சி திட்டம்.
நாட்டில் உள்ள மாவட்ட மருத்துவமனைகளை தனியாருக்கு குத்தகைக்கு விட மோடி தலைமையிலான அரசு முடிவு செய்ய இருப்பதாக நிதிஆயோக் அதிகாரி கூறி உள்ளார். இந்த அதிர்ச்சித் தகவல் சமூக ஆர்வலர் ஒருவர் ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தகவலில் தெரியவந்துள்ளது.
மோடி தலைமையிலான பாதியஜனதா அரசு பதவியேற்றதை தொடர்ந்து, மத்திய திட்டக்குழுவை கலைத்துவிட்ட, அதற்கு மாற்றாக ‘நிதி ஆயோக்’ என்ற புதிய அமைப்பு அமைக்கப்பட்டது. இந்த நிதி ஆயோக் உலக வங்கி வழிகாட்டுதல் படி பல்வேறு அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க வலியுறுத்தி வருகிறது. ஏற்கனவே பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்குகளை விற்பதன் மூலம், 56 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் திரட்ட, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும், விவசாயிகளும் வருமான வரி கட்ட வேண்டும் என்றும், தேர்தல் செலவை குறைக்கும் வகையில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்றும், அரசு பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்க்க வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை நாட்டில் செயல்படுத்த முயற்சித்து வருகிறது.

ஒரே வருட RSS பினாமி ஆட்சி எங்கள் குழந்தைகளை தெருவில் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது! .


Sivasankaran.Saravanan   :  பள்ளி மாணவிகளின் நீட் எதிர்ப்பு சாலை மறியல் போராட்டத்தை கண்டதிலிருந்து என் மனம் அமைதியிழந்து தவிக்கிறது. இதில் நாம் பெருமைப்பட ஏதுமில்லை. நம்முடைய கையாளாகத்தனம் தான் பல்லிளிக்கிறது.
காமராஜர் சோறு போட்டு பள்ளிக்கு வரவழைத்தார் . புரட்சித்தலைவர் எம்ஜியார் அதை சத்துணவாக விரிவுபடுத்தினார். டாக்டர் கலைஞர் காலணி, பஸ் பாஸ், மிதிவண்டி வழங்கினார். புரட்சித்தலைவி அம்மா எங்கள் குழந்தைகள் கையில் லேப்டாப்பை கொடுத்தார். இப்படி தமிழ்நாட்டுக்கென தனி பாரம்பரியம் உள்ளது.
ஒரே வருட ஆர்எஸ்எஸ் கொல்லைப்புற ஆட்சியில் எங்கள் குழந்தைகளை தெருவிற்கு கொண்டுவந்து நிறுத்தியுள்ளார்கள். எடுபிடி அதிமுக ஆட்சியாளர்களுக்கு துளியேனும் மனசாட்சி இருந்தால் இந்த அடிமை ஆட்சியை தூக்கியெறியவேண்டும். ஏழை எளிய ஆட்கள் தான் இரட்டைஇலையின் பலத்திற்கு காரணம். அந்த மக்களை வதைத்துத்தான் பாஜகவிற்கு அடிமை சேவகம் செய்வோம் என்றால் எந்த காலத்திலும் உங்கள் பாவத்திற்கு மன்னிப்பே கிடையாது.

ரஞ்சித்துக்கு இவ்ளோ கோபம் வந்திருக்காது...... விக்ரமனோ, செல்வமணியோ பேசிருந்தா கூட


Don Ashok  · அங்க விக்ரமனோ, செல்வமணியோ மைக்ல பேசிருந்தா கூட ரஞ்சித்துக்கு இவ்ளோ கோபம் வந்திருக்காது. சந்தனத்தேவன்னு படத்துக்கு பேர் வச்சுட்டு, முஸ்லிம்னாலும் நான் அகமுடையார்டானு ஜாதிப்பெருமை பேசிட்டு, தமிழனா ஒன்னு சேர்னு சொன்னா கடுப்பு ஆகுமா, ஆகாதா? இஸ்லாமியர்களை கொன்னு குவிச்சிட்டு, தலித்துகளை வேட்டையாடிவிட்டு, மொழி உரிமையை சிதைத்துவிட்டு, "இந்தியர்களா ஒன்றிணைவோம்," என மோடியும், அவர் அள்ளக்கைகளும் சொல்லும்போது நமக்கு சுர்ர்ருனு ஒரு கோபம் வருமே... அதும் இதும் ஒரே ரகம்தான். அடிவயிற்றில் இருந்து வரும் அந்த கோபத்திற்கு இடம், பொருள், ஏவல் எல்லாம் தெரியாது. Period. -டான் அசோக்

தமிழிசையின் தலைமையில் திருச்சி குலுங்கியது...! பார்லே .. குலுக்கின்டாலும்...

Venkat Ramanujam  · என்னையா H Raja பிரியாணி பொட்டலம் , tasmac எல்லாம் பிரிச்சி கொடுத்தாச்சா.. சென்டர் இருந்த வந்த நம்ம மோடி அடிச்ச #petrolscam தமிழ்நாட்டு ஷேர் 100 கோடி பணத்தை "மாபெரும் பொதுக்கூட்டம்" கணக்கு காட்டி மொத்தமா அடிச்சி தள்ளிடாதீர்ன்னு Pon Radhakrishnan மைண்ட் வாயிஸ் Tamilisai Soundararajan க்கு கேட்டு இருக்குமோன்னு #அய்யாசாமி கேட்டிங்

சாய் லட்சுமிகாந்த் ஏற்கனவே பாஜக காரனை தமிழ் நாட்டில் ஒருத்தனும் மதிக்க மாட்டான்.. இதில் இந்த பொன்னாரும் தமிழிசையும் பொதுக்கூட்டம் போடறேன்னு இருந்த கொஞ்ச நஞ்ச மானத்தையும் கப்பல் ஏத்திரிச்சுக.. இது எப்படி இருக்குன்னா கோமணத்தோட போராடின விவசாயிகளின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் அவர்களை அம்மணமாக்கி அழகு பார்த்த மோடியின் சுவச் பாரத் மிஷன் போல் உள்ளது.

மத்திய அமைச்சர் உணர்ச்சி பூர்வமா கோர்வையாக பேசும் போது கூட்டத்துலே இருந்து எந்திரிச்சி போறவன் ரத்தம் காக்கி சாவான் .. இது இந்தியாவுக்கே அம்மாவாக இருக்கும் மோடி மேல சத்தியம். Tamilisai Soundararajan #bjp #rss

ஆரியர்கள்: ஆக்கிரமிப்பாளர்களே! உறுதிப்படுத்தும் மரபணு ஆய்வுகள்

கீற்று : கணியூர் தமிழ்ச்செல்வன் :  ஆரியர் வருகை என்ற சொல்லை நம்மில் பெரும்பாலானவர்கள் பாடப்புத்தகத்திலும், திராவிடர் இயக்கமேடைகளிலும், ஏடுகளிலும் கேட்டறிந்திருப்போம். எனக்கும் இந்தச்சொல் அப்படித்தான் அறிமுகமானது. கிட்டத்தட்ஏழாவது படிக்கும்போது ஆரியர் வருகை என்ற தலைப்பில் சமூக அறிவியல் பாடத்தில் ஒரு கட்டுரை இருந்தது.
அதில் ஆரியர்களின் பூர்வீகஉணவு என்று மாமிசத்தைக் குறிப்பிட்டிருந்தார்கள்.  எனக்கு ஒரு மிகப்பெரிய சந்தேகம் வந்தது. அதற்குக் காரணம் எங்கள்ஊரில் திராவிடர்கழகத் தோழர்கள் நிறையப் பேர் இருந்தார்கள். அவர்களின் மூலமாக ஆரியர் என்றால் பார்ப்பனர்களைக் குறிக்கும் என்று அறிந்திருந்தேன். ஆனால் எனக்கு மிக நன்றாகத் தெரியும் பார்ப்பனர்கள் மாமிசம் உண்ணமாட்டார்கள் என்று. அன்றுமாலையே என்னுடையஅப்பாவிடம்கேட்டேன்.
நான் : அப்பா, ஆரியர் என்றால் பார்ப்பனர்கள் தானே?
அப்பா : ஆம் அவர்கள்தான்.
நான்: ஆனால் என்னுடைய பாடப்புத்தகத்தில் ஆரியர்களின் பூர்வீகஉணவு மாமிசம் என்று போட்டிருக்குது? அதுசரியா? தவறா?
அப்பா: அதுசரிதான், அவர்கள் ஆடு, மாமேய்த்துக்கொண்இந்தியாவுக்கு வரும்போது அதைத்தான் உண்டார்கள். பிறகு மாறிவிட்டார்கள்.
பிறகு இந்தச் சிந்தனை வளர்ந்து கொண்டே இருந்தது. அதற்கு இரண்காரணங்கள்.
1.  எங்கள் ஊரில் பெரிய அக்ரஹாரம் ஒன்று இருந்தது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் எங்கள் மாவட்டத்திலேயே சொல்லிக்கொள்ளும் அளவுக்குப் பெரியது.

BBC:3 லட்சம் ரோஹிஞ்சா அகதிகள் வங்கதேசத்துக்குள்

மியான்மரில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த வன்முறையின் காரணமாக இதுவரை 2,70,000 ரோஹிஞ்சா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி வங்கதேசத்துக்கு புலம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது.
மியான்மரில் இருந்து தப்பித்து வங்கதேசத்தை அடைய ரோஹிஞ்சா முஸ்லிம்களின் குடும்பங்கள் ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றனர். >கடந்த வியாழக்கிழமை வரை 164,000 ஆக இருந்த எண்ணிக்கையானது, மேலும் பல பகுதிகளில் அந்த மக்கள் வந்து சேர்ந்திருப்பது கண்டறியப்பட்ட நிலையில், அதிகரித்துள்ளதாக பெண் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இச்சூழ்நிலை "மிகவும் அச்சமூட்டுவதாக" கூறும் அவர், மியான்மரில் நிலவும் சூழ்நிலைக்குத் தீர்வு காண உடனடியாக நடவடிக்கை தேவை என்றும் கூறியுள்ளார்.
தங்கள் கிராமங்களை தீ வைத்துக் கொளுத்தும் மியான்மர் ராணுவத்தினர், தங்களையும் தாக்குவதால்தான் நாட்டை விட்டு தப்பிச் செல்வதாக அவர்கள் கூறுகிறார்கள்.

அமைச்சர் விஜயபாஸ்கர் ரூ.285 கோடி வரி ஏய்ப்பு : வ.வரித்துறை விசாரணையில் கண்டுபிடிப்பு

தமிழக சுகாதார அமைச்சர், விஜயபாஸ்கர் மீதான வருமான வரி வழக்கு முடிவுக்கு வந்து விட்டதாக, வருமான வரித்துறையினர் தெரிவித்தனர். அவருடைய மணல் குவாரியில், 285 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரூ.89 கோடி பட்டுவாடா :  சென்னை, ஆர்.கே.நகரில் நடக்கவிருந்த இடைத்தேர்தலை ஒட்டி, ஏப்., 8ல், அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், சுகாதார துறை பெண் அதிகாரி கீதாலட்சுமி, முன்னாள், எம்.பி., ராஜேந்திரன் ஆகியோரின் வீடுகளில், வருமான வரித் துறையினர், ஒரே நாளில் சோதனை நடத்தினர். விஜயபாஸ்கரின் சென்னை வீடு மட்டுமின்றி, புதுக்கோட்டை
மாவட்டம், இலுப்பூரில் உள்ள வீட்டிலும் சோதனை நடந்தது. விஜயபாஸ்கரின் நண்பர் வீட்டில் சிக்கிய ஆவணங்களில், ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு, அமைச்சர்களால், 89 கோடி ரூபாய் பட்டுவாடா செய்தது தெரிய வந்தது; அதை ஆதாரமாக வைத்து, இடைத்தேர்தல்ரத்து செய்யப்பட்டது. பின், விஜயபாஸ்கர், அவரது தந்தை சின்னதம்பி மற்றும் குடும்பத்தாரிடம் தொடர்ந்து விசாரணை நடந்தது.
அப்போ ஏன் இன்னும் இந்த குற்றவாளி பதவியில் இருக்கிறான் ? ஊழலே நடக்கவில்லை என்று ஜால்ரா தட்டியே தமிழிசை ராஜா எல்லாம் எங்கே ?

பாஜக - அதிமுக கூட்டணி?.. எடப்பாடி பழனிச்சாமி சூசக தகவல்!

mayura-akilan. Oneindia Tamil : காஞ்சிபுரம்: பாஜகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி உள்ளாட்சி தேர்தலின் போது முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மத்தியில் பாஜக அமைச்சரவையில் அதிமுக ஏற்கெனவே இடம் பெற்றிருந்ததை சுட்டிக் காட்டிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்திப்பதில் தவறு இல்லை என்றார். மேலும் வரும் உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் தான் அதிமுக வெற்றி பெறும் என்று சூலூர் தொகுதி அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
அதிமுகவை பாஜக தான் பின்னால் இருந்து இயக்குகிறது என எதிர் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். பாஜகவின் பினாமி ஆட்சிதான் தற்போது நடைபெறுகிறது என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர். அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடும் என்று கூறி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு துணை முதல்வர் ஓபிஎஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்போம் என்று பதிவிட்டிருந்தார்.

ஜெயந்தி நடராஜன் வீட்டில் சி பி ஐ சோதனை ...ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக காங்கிரசில் இருந்து விலக்கப்பட்டவர்

ஜெயந்தி  வீட்டில் சி.பி.ஐ.!
முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜனின் வீடு, அலுவலகங்கள் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று (செப்டம்பர் 09) திடீரென சோதனை நடத்தி வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரான ஜெயந்தி நடராஜன் கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக பணிப்புரிந்தார். 2013ஆம் ஆண்டு திடீரென அமைச்சர் பதவியிலிருந்து விலகிய இவர், 2014ஆம் ஆண்டு ஜனவரியில் கட்சியில் இருந்தும் விலகினார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மீதும் கடும் குற்றச்சாட்டுகளைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய அவர், இதுவரை எந்த அரசியல் தொடர்பான நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் இது குறித்து பேசிய நரேந்திர மோடி, சுற்றுச்சூழல் துறையில் ‘ஜெயந்தி வரி’ வசூலிக்கப்பட்டதாக விமர்சித்தார். இந்த பண முதலை முன்னாள் முதமைச்சர் பக்தவத்சலத்தின் மகள் ஆவார்

வேடிக்கை பார்க்கும் தமிழ்நாடே, வீதிக்கு வந்து போராடு! பள்ளி மாணவிகளின் மறியல் போராட்டம்!

நக்கீரன் : நீட் தேர்வால் மருத்துவக் கல்வி வாய்ப்பை இழந்து, தற்கொலை செய்து
கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு தொடர்ந்து 8 வது நாளாக தமிழகம் முழுவதும் தன்னொழுச்சியாக பள்ளி, கல்லூரி மாணவர்களின் போராட்டம் நடந்து வருகிறது. நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு முழு விலக்கு வேண்டும் என்பதில் மாணவர்கள் உறுதியாக இருந்து வருகிறார்கள். மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக பல கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கம் ராஜாஜி சாலையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலை பள்ளியின் 11 மற்றும் 12ஆம் வகுப்பைச் சேர்ந்த மாணவிகள் லயோலா கல்லூரி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். பள்ளி விடுமுறை நாளான இன்று 10, மற்றும் 11 & 12 வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகளுக்காக பள்ளி வந்த மாணவிகள், சிறப்பு வகுப்புகள் முடிந்ததும் லயோலா கல்லூரி அருகேயுள்ள மகாலிங்கபுரம் சாலையில் சரியாக மதியம் 12 மணியளவில் தங்களது போராட்டத்தை தொடங்கினர். போராட்டம் நடப்பதாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது பள்ளி மாணவிகள் என்பதால் போலீசார் செய்வது அறியாது சிறுது நேரம் திகைத்தனர்.

 இதையடுத்து மேல்அதிகாரிகளுக்கு தகவல் அளித்து அவர்களின் பதில் உத்தரவுக்காக காத்திருந்தனர். இதற்கிடையே போலீசார் மாணவிகளிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், மாணவிகள் அதனை ஏற்க மறுத்தனர். உச்சநீதிமன்ற தீர்ப்பை பற்றி எங்களுக்கு கவலையில்லை, நீட் தேர்வால் அனிதாவின் மருத்துவர் கனவு கலைந்தது, நாளை இதே நிலை தான் எங்களுக்கும். இன்று அனிதாவுக்கு நடந்தது போல் நாளை வேறு யாருக்கும் நடந்து விடக்கூடாது. அதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்து தொர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழிசை : நடிகர் சூர்யாவுக்கு நீட் பற்றி என்ன தெரியும்?


கார்த்திக்.சி நடிகராக உள்ள சூர்யாவுக்கு மருத்துவர்களின் நீட் தேர்வுபற்றி எப்படி முழுமையாகத் தெரியும்? என்று பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். அனிதா தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாகப் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இந்தப் போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்றுவருகின்றனர். இதுதொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம், நீட் தேர்வுக்கு எதிராக அமைதி வழியில் போராடலாம். சட்டம், ஒழுங்கை மாநில அரசு காக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், ‘நீட் தேர்வுஎன்றால் என்னவென்று தெரியாத 6-ம் வகுப்பு மாணவர்களை கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டத்துக்குத் தூண்டிவிடுகின்றனர். மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு நீட் தேர்வுக்குத் தயாராக வேண்டும். நடிகராக உள்ள சூர்யாவுக்கு மருத்துவர்களின் நீட் தேர்வுபற்றி எப்படி முழுமையாகத் தெரியும்? சூர்யா போன்றோர் கோடிக்காகப் பணியாற்றும்போது நாங்கள் தெருக்கோடியில் பணியாற்றினோம். நீட் தேர்வு கிராமப்புறம் உள்ளிட்ட அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது’ என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் மட்டும் பார்ப்பனீயம் எப்போதும் எடுப்படுவதேயில்லை.

ganesh.babu.: "நீட்" தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் வெடித்திருக்கும் இந்த எதிர்ப்பும், போராட்டங்களும் கேரளா, மேற்கு வங்காளம், கர்நாடகம் போன்ற ஓரளவு முற்போக்கு மாநிலங்களில் கூட எழவில்லையே கவனித்தீர்களா?
இந்த விசயத்திற்கு களநிலவரம், வரலாறு ஆகியவற்றை முன்வைத்து நிறைய விளக்கங்கள் சொல்லமுடியும் என்றாலும், என்னைப் பொறுத்தவரை இதற்கு ஒரு முக்கியமான தத்துவார்த்த அடிப்படை உண்டு என்றே கருதுகிறேன்.
பெரியார், அம்பேத்கர் ஆகிய இருவரில் ஒருவரை மட்டும் பின்பற்றுபவர்களுக்கு 'சமூகநீதி' குறித்த தெளிவு முழுவதுமாக இருப்பதில்லை என்பதுமட்டுமன்றி, அத்தகையவர்கள் பார்ப்பனீயத்தோடு ஏதோ ஒரு வகையில் சமரசத்திற்கு உள்ளாகிவிடுகிறார்கள்.
மேற்சொன்ன மாநிலங்களில் சமத்துவம் பேசும் அம்பேத்கரிஸ்டுகளும் இடதுசாரிகளும் இருந்தாலும், பெரியாரியம் பற்றிய அறிமுகம் அங்கு போதிய அளவில் இல்லை என்பதுதான் எதார்த்தம். அதன் விளைவாகவே சில சமூகநீதி விசயங்களில் அவர்கள் சறுக்கிவிடுகிறார்கள்.
மாறாக இங்கோ பெரியார், அம்பேத்கர் ஆகிய இருவரையும் உள்ளடக்கிய வலுவான சமூகநீதி அடித்தளத்தை திராவிட இயக்கங்கள் அமைத்துவிட்டதன் காரணமாகத்தான் தமிழ்நாட்டில் மட்டும் பார்ப்பனீயம் எப்போதும் எடுப்படுவதேயில்லை.

நீட் தேர்வு தாள்கள் முன்கூட்டியே விற்பனை .. கம்பனியின் ஒப்புதல் வாக்குமூலம்!

நீட் மோசடி வெளிவந்தது. “ப்ரமோடிக் டெஸ்ட்டிங்” எனப்படும் அமெரிக்க்க் கம்பெனி தற்போது டெல்லி போலீசிடம் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறது.
அது என்னவென்றால், நீட் தேர்வுக்கான கேள்வித்தாட்கள் முன் கூட்டியே திருடப்பட்டன என்றும், பணம் கொடுத்த மாணவர்களுக்கு அவை வழங்கப்பட்டன என்னும் செய்திதான் அது .
இது கிரேட்டர் நொய்டா மற்றும் சண்டிகார் மையங்களில் நிகழ்ந்த்து என்று டெல்லி போலீசின் அறிக்கை சொல்லுகிறது.
தேசிய தேர்வுகளுக்கான அமர்வான, NSE எனப்படும் National Board of Examination என்னும் அமைப்பு, நீட் தேர்வினை நட்த்தும் வேலையை “ப்ரொமோட்டிக் டெஸ்ட்டிங் பிரைவேட் லிமிட்ட்ட் என்னும் அமெரிக்க்க்க் கம்பெனிக்கு கான்ட்ராக்ட்டாக வழங்கிவிட்ட்து.
இந்த கம்பெனி, CMS IT Services Pvt. Ltd என்னும் இந்திய கம்பெனிக்கு சப்-கான்ட்ராக்ட் செய்துவிட்டது.
இந்த CMS IT Services நிறுவனம்தான், தேர்வுகளுக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து தேர்வினை நடத்தியது.
தேர்வுக்கு முன்னதாகவே, தனது ஏஜண்டுகளின் உதவியுடன், நீட்டுக்குத் தயாராகிவரும் மாணவர்களையும் அவர்களது பெற்றோரையும் தொடர்புகொண்டு, ஒரு பெரிய தொகை பேரம் பேசி, கேள்வித்தாட்களை அவர்களுக்கு முன் கூட்டியே வழங்க ஒப்புக்கொண்ட்து.
அதன்படி, ப்ரமோட்டிக் டெஸ்ட்டிங் கம்பெனியின் கப்யூட்டரை “ஹேக்” செய்து விபரங்கள் திருடப்பட்டன. அவை, பணம் கொடுத்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டன என்று டெல்லி போலீசின் அறிக்கை கூறுகிறது.

BBC: ராம் ரஹீம் சாமியார் ... சடலங்கள் 'ரகசிய' குகை .. மருத்துவமனைகளுக்கு உடல் உறப்புகள் விற்பனை

பாலியல் தாக்குதலுக்காக சிறையிலடைக்கப்பட்ட ஹரியானா சாமியார் குர்மித் ராம் ரஹீம் சிங்கின் தேரா சச்சா செளதா பற்றிய சர்ச்சைகள் அண்மையில் வெடித்துள்ள நிலையில், அந்த அமைப்பில் உள்ள பல ரகசியங்கள் குறித்து செய்திகள் அண்மைகாலமாக ஊடகங்களில் கசிகின்றன.  அங்கிருக்கும் குகை ஒன்று குறித்தும், அந்த அமைப்பின் தலைமையகத்தில் சடலங்கள் கிடைத்திருக்கும் சர்ச்சைகளுடன் சேர்த்து அங்கு ஆள்கடத்தல் நடந்திருக்கலாம் என்ற சந்தேகங்களும் சமீபத்தில் ஏற்பட்டுள்ளன.

தேரா சச்சா செளதா அமைப்பு இதுபோன்ற தகவல்களை தொடர்ந்து மறுத்துவந்திருந்தாலும், வெள்ளியன்று தங்கள் அமைப்பின் நாளிதழ் மூலம் நீண்ட விளக்கங்களை கொடுத்திருக்கிறது.
தேரா சச்சா செளதா அமைப்பின் பிரத்யேக பத்திரிகை, 'சச் கஹூ' (உண்மையை சொல்கிறேன்) இல் 'மனித உறுப்பு கடத்துதல் பற்றிய நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகள்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்டாலின் : நீட் தேர்வுக்கு எதிராக 13ஆம் தேதி ஆர்ப்பாட்டம்:

நீட் தேர்வுக்கு எதிராக 13ஆம் தேதி ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின்
மின்னம்பலம் : ‘நீட் தேர்வுக்கு எதிராக வரும் 13ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்’ என்றும், ‘விரைவில் தொடர் போராட்டம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும்’ என்றும் திருச்சி கண்டனப் பொதுக்கூட்டத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு விலக்களிக்க கோரி உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய மாணவி அனிதா, நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்ததால், தன்னுடைய மருத்துவர் கனவு கலைந்துபோன விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து தமிழகம் முழுவதும் மாணவி அனிதாவுக்காக வெகுண்டெழுந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் எட்டாவது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 4ஆம் தேதி நடத்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனை முடிவில், நீட் தேர்வுக்கு எதிராகவும், அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் கண்டன பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

பீகார் :காலாவதியான ரத்தம்: எட்டு நோயாளிகள் உயிரிழப்பு!

காலாவதியான ரத்தம்: எட்டு நோயாளிகள் உயிரிழப்பு!
மின்னம்பலம் : பீகாரில் உள்ள மருத்துவமனையில் கடந்த இரண்டு வாரங்களில் காலாவதியான ரத்தம் ஏற்றப்பட்டதால் எட்டு நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் உள்ள தார்பாங்கா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நடந்த இந்தச் சம்பவம் ஜூனியர் மருத்துவர்களால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த மருத்துவமனையில் ரத்தம் அடைக்கப்பட்ட பைகளில் அச்சிடப்பட்ட பேட்ஜ் எண் மற்றும் தேதி சேதப்படுத்தப்பட்டு, நோயாளிகளுக்கு ஏற்றப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துக்கு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் சந்தோஷ் மிஷ்ரா மற்றும் துணை கண்காணிப்பாளர் பாலேஷ்வர் சாகர் ஆதரவாகச் செயல்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்த ஆறு நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் அனைத்துத்துறை தலைவர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிக்கையை ஒரு வாரத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ரத்தம் அடைக்கப்பட்ட பைகளில் உள்ள பேட்ஜ் எண் மற்றும் தேதி சேதப்படுத்தப்படவில்லை என ரத்த வங்கியின் பொறுப்பாளர் ஓம் பிரகாஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

A.R.Rahman :இது என்னுடைய இந்தியா அல்ல!

இது என்னுடைய இந்தியா அல்ல!
minnambalam: பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் மறைவு குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவரின் மறைவு குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், ‘இது என்னுடைய இந்தியா அல்ல’ எனக் காட்டமாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமூக அவலங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தவர், லங்கேஷ் பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் கௌரி லங்கேஷ். இடது சாரி சிந்தனையாளரான இவர், தொடர்ந்து ஆர்எஸ்எஸ் இயக்கத்துக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தார். கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி மர்ம நபர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அமெரிக்காவில் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் சில இசை நிகழ்ச்சிகளைத் தொகுத்து, ‘ஒன் ஹார்ட்’ என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் அறிமுக விழா மும்பையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஏ.ஆர்.ரஹ்மானிடம் பெங்களூரில் பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான், “இந்தச் சம்பவத்தால் நான் வேதனை அடைந்துள்ளேன். இதுபோன்ற செயல்கள் இந்தியாவில் நடப்பதில்லை. இது என்னுடைய இந்தியா அல்ல... முற்போக்கான கருணையுள்ள இந்தியாவைத்தான் நான் காண விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டார்.

பூணூலை உயர்த்தும் பெருமையையும், மலச் சட்டியை ஏந்தும் கோபத்தையும் ஒரே தட்டில்

kirubamunusamy :  ஆமாம்!  அனிதா குறித்து நான் எதுவும் பேசவில்லை. இளவரசன், ரோஹித் வெமுலா, சரவணன், கல்புர்கி, கோகுல்ராஜ், யாகூப் மேமன், சங்கர், முத்துக்கிருஷ்ணன், ஜாதிய-மத வன்மத்தால் வன்புணர்ந்து கொலை செய்யப்பட்ட பெண்கள், இடுகாட்டிற்கு வழிமறுக்கப்பட்ட தலித் பிணங்கள், பார்ப்பனியம்-ஜாதியம்-இனவெறி-மதவெறி-சகிப்பின்மை போன்ற பலவற்றாலும் இந்நிமிடம் ஒடுக்கப்பட்டு பாதிக்கப்படும் இன்னும் பெயர் தெரியாத எத்தனையோ நபர்களுக்காகவும் பேசியும், எழுதியும் என்ன கண்டோம். உயிர்கள் மாய்ந்த வண்ணமே தான் இருக்கின்றன.
ஒரு வேளை, வக்கிரமும் அசிங்கமும் நிறைந்த இந்து மதத்தை சுத்தப்படுத்துவது நம் வேலையில்லை. அதை விட்டு வெளியேறுவது மட்டுமே நம் கடமை என்று புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் சொன்னது இந்த திருந்தாத ஜென்மங்களினால் ஏற்பட்ட இதே விரக்தியினால் தானோ என்று தோன்றுகிறது.
கணக்கில்லா மரணங்களை கண்டாகிவிட்டது. ஆனால் இந்த போராளிகளின் குரல்கள் ஓய்ந்ததாய் இல்லை. வெறியர்களின் மனமும் மாறியதாக இல்லை.
எரிக்கப்பட்ட சேரிகளின் சாம்பலை கைகளில் ஏந்தியவளாக, அதன்பின்னான அத்தனை துன்பங்களையும் கண்ட சாட்சியாக, அரசின்-காவல் துறையின் ஜாதிய வன்மத்தால் கதியின்றி நின்ற தலித்துகளின் கையறு நிலையை சட்டத்தின் வழி போராடி நீதி பெற முயற்சித்து தோற்றவளாக சொல்கிறேன், இந்த பார்ப்பனிய-ஜாதிய-மதவாத சமூகத்தில் இந்தப் போராட்டக் குரல்களால் எதுவும் மாறிவிடவில்லை.

சீனா செல்ல கேரளா அமைச்சருக்கு மத்திய அரசு மறுப்பு

திருவனந்தபுரம்:சீனாவில் நடைபெறும் உலக சுற்றுலா கழக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக செல்ல இருந்த கேரள சுற்றுலா அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரனுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. சீனாவில் செப்- 11ல் உலக சுற்றுலா கழக நிகழ்ச்சி நடக்கிறது. ஐ.நா சபை நடத்தும் இந்த உலக அளவிலான நிகழ்ச்சியில் பங்கேற்க கேரள சுற்றுலா அமைச்சர் சுரேந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்தியாவிலிருந்து அவருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகக்கது. அனுமதி மறுப்பு இந்நிலையில், சீனா செல்வதற்கு சுரேந்திரன் அழைப்பு கடிதத்துடன் மத்திய வெளியுறவு அமைச்சகத்திடம் தொடர்பு கொண்டு கூறியுள்ளார். ஆனால், அவருக்கு வெளியுறவு அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது. இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை தேவை என பிரதமர் நரேந்திர மோடிக்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.அனைத்து அம்சங்களையும் சரிபார்த்த பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நக்கீரன்

வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி, நீட்'டை மறுத்து சமூக நீதியை நிலைநாட்டியது


juliet.jenifar.: நீட்டை ஏற்க மறுத்து மாணவர் சேர்க்கையை நிறுத்தியது புகழ்பெற்ற வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை!
மிகவும் பின்தங்கிய பகுதிகளில் தங்கி, ஏழைகளுக்கு சேவை செய்யும் உணர்வும் பண்பும் கொண்ட மருத்துவர்களை உருவாக்குவதற்காகவே மருத்துவக் கல்லூரி நடத்தி வருகிறோம். நீட் மூலம் அத்தகைய மாணவர்களைத் தேர்ந்தெடுக்க முடியாது என்று கூறி, 100 எம்பிபிஎஸ் இடங்களையும் 60 உயர் சிறப்பு மருத்துவ இடங்களையும் நீட் அடிப்படையில் நிரப்ப மறுத்து, தனது தியாகத்தின் மூலம் வலிமையான எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறது சி.எம்.சி.
சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி, நீட்'டை மறுத்து, சமூக நீதியை நிலைநாட்டி, தமிழகத்தின் மிகச்சிறந்த முன்னுதாரணமான கல்லூரி ஆகிறது. அக்கல்லூரிக்கும், இந்தத் தீர்மானத்தை எடுக்கும் வலிமையையும் தம் அரசியல் தெளிவையும் வெளிப்படுத்திய கல்லூரி பணியாளர்கள் அனைவருக்கும் நம் வாழ்த்துகளும், சமூகநீதி வணக்கங்களும்!

டாக்டர் கிருஷ்ணசாமி மருத்துவக் கல்லூரி நடத்துவதைவிட விபச்சார விடுதி நடத்தவே முழு தகுதியானவர்

அனிதா பச்சை படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பதுதான் உண்மை. அதை செய்தது பிஜேபி கும்பல், அந்தக் கும்பலுக்கு பயந்துகொண்டு அடிமைகளாக வாழுகிறது அதிமுக என்கின்ற குற்றக்கும்பல், சாமானிய மக்களின் வாழ்க்கை நிலையைப் பற்றி என்றுமே அறிந்து கொண்டிராத தொந்தி பார்ப்பன பூணூல் கும்பலால் நிரம்பி வழியும் உச்சநீதி மன்ற மனுநீதிவாதிகள், எதற்காக உயிர் வாழ்கின்றோம் என்றே தெரியாமல் தன்மானத்தையும் ,சுயமரியாதையையும் இழந்து கூட்டிக்கொடுக்கவும் தயங்காத இனத் துரோகிகளாக வாழும் கிருஷ்ணசாமி போன்ற பிழைப்புவாதிகள் என
புதிய தமிழகம் தமிழ்நாடே
போராட்டங்களால் குலுங்கிக் கொண்டு இருக்கின்றது. தமிழகத்தின் உரிமைகள் அனைத்தையும் பார்ப்பன பிஜேபி அரசு திட்டமிட்டு பறித்து, தமிழகத்தின் மீதும், தமிழர்கள் மீதும் தான் கொண்டுள்ள வரலாற்று திராவிட வெறுப்பை கொட்டித் தீர்த்துக் கொண்டு இருக்கின்றது. தமிழ்நாட்டை பீகாரைப் போலவோ, இல்லை ஒரிசாவைப் போலவோ பஞ்சம், பட்டினி நிறைந்த வாழ்வதற்கே தகுதியற்ற மாநிலமாக மாற்ற தன்னால் ஆன அனைத்துச் சதி வேலைகளையும் செய்து கொண்டு இருக்கின்றது. ஒட்டு மொத்த தமிழக மக்களின் உணர்வுகளையும், கோரிக்கைகளையும் பார்ப்பன தேசியத்திற்கு எதிரான தேசவிரோதச் செயலாக சித்தரித்து, அவர்களை அழித்தொழிக்க கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றது. இந்நேரம் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டு இருக்கும் மத்திய அரசின் அனைத்து அரசு உறுப்புகளையும் முடக்கிப் போட்டிருக்க வேண்டிய எதிர்க்கட்சிகள், பாம்பும் சாகாமல் தடியும் ஒடியாமல் தங்கள்
போராட்டங்களை நடத்திக் கொண்டு வருகின்றார்கள். இன எதிரிகளுக்கு எதிராக இருக்க வேண்டிய தார்மீகக் கோபம் அவர்களிடம் கடமைக்காக மட்டுமே எட்டிப்பார்த்துவிட்டு போகின்றன.

மாலினி ஜீவரத்தினம் : இந்த லெஸ்பியன் Straight ங்குற Lable எல்லாம் தூக்கிபோடுங்க we are humans

malini.avatharam: உங்க பையன் Gay ஆ இருந்து அவர என் கூட வாழ்க்க முழுக்க வாழ அனுமதிப்பீங்கலானா அவரோட பதில் கோவமா தான் இருக்கும் ... C Legal ஆ நடக்க வேண்டிய வாழ்க்கைய நீங்கலே சட்டம் போட்டு illegal ஆக்கிட்டீங்க ... பின்னாடி ஒருத்தன் கூட மட்டும் நீ வாழாம 10 பேர் கூட கள்ளதனமா வாழுறனு வாய்சவுடால் பேசுறது ..
காதல் அனுமதிக்கபடாத தேசத்தில் கடவுளை அனுமதித்து மட்டும் என்ன பயன் ... உங்க கடவுளே நறயா Gay சாமிங்க இருக்கு ... கடவுளர் கதைகள படிக்காம அற கொற புரிதலோட பேசுறவங்களுக்கு தோழமையோட அமைதியா புரிய வைக்க எப்பவுமே யோசிக்காதீங்க
ஆனா அடிப்படையா ... Sex s devine ... love s devine ... இத புரியாம ஆன்மீக அரசியல் பேசுறது இயல்ப ஏத்துக்காத ஒரு மனநிலையதான் காட்டுது ...
என்ன முன்னிறுத்தி இதுக்கு பதில் எழுதனும்னா
உங்க பார்வைக்குலாம் நான் ஒரு லெஸ்பியன்னா ... நான் பாக்குற எல்லா பொண்ணுங்க மேலயும் பாஞ்சுருவேன் ... இதவிட கொடும என்னனா என் கூட பழகுற எல்லாரும் லெஸ்பியனா மாறிருவாங்கனு 😂😂😂😂😂 அடேய் அப்படி பாத்தா உங்க கூடலாம் பழகுற நான் Straight ஆ மாறிருக்கனும்ல ஏன் மாறல 😂😂😂😂
நான் சளைக்காம புரிதல ஏற்படுத்துறேன் ... என் எழுத்துல ஒரு சொல் எப்பயாவது உங்கல மாத்துங்குற நம்பிக்கையோட நான் சலைக்காம புரிதல ஏற்படுத்துறேன் ...

வெள்ளி, 8 செப்டம்பர், 2017

இனி முழுதமிழகமும் மெரீனாதான் .. ஓசூரில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்!

படுகொலை செய்யப்பட்ட அரியலூர் மாணவி அனிதாவின் இறப்பில், ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி – அடிமை அதிமுக – உச்சிக்குடுமி நீதிமன்றம் – இவர்கள்தான் முதன்மைக் குற்றவாளிகள்!
தமிழகத்தை ஒழித்துக்கட்டாமல் விடாது பி.ஜே.பி! 
பி.ஜே.பி -யை ஒழித்துக்கட்டாமல் தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது! 
தமிழகத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் மெரினா ஆக்குவோம்!
 ஆகிய முழக்கங்களை முன்வைத்து மக்கள் அதிகாரம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர்கள் ஆர்ப்பாட்டம், தெருமுனைப்பிரச்சாரம் போன்ற வடிவங்களின் வழியே மக்களிடையே கருத்துக்களை கொண்டு சென்றனர்.அஞ்செட்டி பேருந்து நிலையம் அருகே 7.9.2017 அன்று வியாழன் காலை 11.30 மணியளவில் “மாணவி அனிதா படுகொலையை கண்டித்தும், நீட் தேர்வை அடியோடு ரத்து செய்யக் கோரியும்” விண்ணதிர முழக்கங்கள் முழங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நீதிமன்ற அவமதிப்பு : பணிய மாட்டோம் ! கூண்டிலேறத் தயார் ! மக்கள் கலை இலக்கிய கழகம் .தோழர் மருதையன்!

அநீதியான உங்கள் தீர்ப்புக்கு அடிபணிந்து வாழ்வதை விட சாவதே மேல் என்று அவள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள். அந்தக் குழந்தையின் நடவடிக்கைதான் எங்கள் அனைவரின் நடவடிக்கையைக் காட்டிலும் தீவிரமான நீதிமன்ற அவமதிப்பு.
நீட் எதிர்ப்பு போராட்டங்களைத் தடை செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம்” என்பது பத்திரிகைகளின் தலைப்பு செய்தி.
“நீட் தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருப்பதால், பொதுமக்களின் வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் அதற்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்கள் நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும்” என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு கூறியதாக இந்து (ஆங்கிலம்) இணையதளம் கூறுகிறது.
மேலும் “நீட்டின் பெயரால் வன்முறையைத் தூண்டுகின்ற அரசியல் கட்சித் தலைவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி வழக்கு பதியப்பட வேண்டும் என்றும் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பதாக” அச்செய்தி கூறுகிறது.
இந்த மனு விசமத்தனமானது. அதன்மீது நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து சட்டவிரோதமானது. நீட் எதிர்ப்பு போராட்டங்களில் எங்கே வன்முறை நடந்திருக்கிறது? நிகழ்த்தப்பட்டிருக்கும் வன்முறை என்பது அனிதாவின் மரணம்தான். அந்த வன்முறைக்கு மத்திய மாநில அரசுகளும், அரசியல் சட்டத்துக்கு விரோதமாகவும் முறைகேடாகவும் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றமும்தான் பொறுப்பு.

விஜயகாந்த் வழக்கறிஞர் ..நீட் போராட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கிய ... தேமுதிக பாஜகவின் கூலிப்படை?


Venkat Ramanujam : மாணவி அனிதா தற்கொலை பற்றி கருத்து கூற முடியாதாம் ஆனால் நீட் தீர்ப்பை எதிர்ப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாம் என்கிறதே உச்சநீதிமன்றம்..மகிழ்ச்சி. இந்தியா ஜனநாயக நாடு தானே .. இல்லை சட்டமே இல்லாமல் நடக்கும் காட்டாட்சி என்றால்., அப்படி தான்இனி மூச்சு விட கூட பெர்மிசன் வாங்கு .. லைசன்ஸ் வாங்கு என்று சொல்லி விடலாமே ..
நீட் போராட்டம் நடத்தவே கூடாது என்ற இந்த வழக்கை தொடுத்த மணி என்பவர் தேமுதிக நிர்வாகி . இவர் Vijayakant அனுமதியுடன் தான் இதனை செய்து இருக்கிறாரா என்று #DMDK தெளிவு படுத்த பட வேண்டும் .The swift at which this case taken and the understanding of BJP & Vijaykanth certainly raises lot of questions ...
நிற்க ...
Siv Uthay நீட் போராட்டங்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தடை வாங்கிய தேமுதிக வழக்கறிஞர் Gs Mani Delhi Dmdk விஜயகாந்த் மகன் சன்முகபாண்டியனுடன்..!

திருச்சி நீட் எதிர்ப்பு பொதுகூட்டத்தை தடுக்க ,,, குட்கா ராஜேந்திரன் +தமிழிசை +தேமுதிக வழக்கறிஞர் + +++

savukkunews நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்தால் அந்த உத்தரவின் அசல் நகலை தரும் வரை அரசு இயந்திரம் ஒரு துளியும் நகராது. உதாரணத்துக்கு உங்களை பணி நீக்கம் செய்து விட்டார்கள். நீதிமன்றம் அதை ரத்து செய்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். தீர்ப்பின் ஜெராக்ஸ் காப்பியை எடுத்து நீங்கள் அந்த அலுவலகத்துக்கு சென்றால், கொஞ்சமும் தயங்காமல், அசல் உத்தரவு இல்லையென்றால் எதுவும் செய்ய முடியாது என்று சொல்வார்கள். இதுதான் அரசு இயந்திரத்தின் நடைமுறை.
இன்று போராட்டங்களுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்த செய்தி ஊடகங்களில் மட்டுமே வந்தது. முழுமையான உத்தரவு மாலையில்தான் வந்தது. அந்தத் தீர்ப்பில் மிகத் தெளிவாக "மக்களுக்கு அமைதியான முறையில் போராட்டம் நடத்த உரிமை உண்டு. ஆனால் சட்டம் ஒழுங்கை பாதிக்காத வகையில் அந்த போராட்டம் நடக்க வேண்டும்" இதுதான் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டது.
ஆனால் இப்படிப்பட்ட விஷயம் அந்த உத்தரவில் இருக்கிறது என்பது டிகே.ராஜேந்திரனுக்கு நிச்சயம் தெரியாது. எந்த உச்சநீதிமன்ற நீதிபதியும், தாங்கள் வழங்கிய தீர்ப்பு என்ன என்று குட்கா வியாபாரியுடம் தொலைபேசியில் சொல்லியிருக்கவும் வாய்ப்பு இல்லை.

சபரிமாலா :தேசத்துக்கு ஏதாவது செய்துவிட்டு என்னை விமர்சிக்கட்டும்

tamilthehindu :அரசுப் பணியில் சேர லட்சக் கணக்கானோர் காத்திருக்க, நீட் தேர்வை எதிர்த்து உண்ணாவிரதம் கிடைக்க அனுமதி அளிக்கவில்லை என்று கூறி, தனது அரசுப் பணியை ராஜினாமா செய்திருக்கிறார் சபரிமாலா.
இவரின் செயலுக்கு ஒரே நேரத்தில் பாராட்டுகளும் விமர்சனங்களும் குவிந்துவரும் வேளையில் சபரிமாலாவிடம் பேசினோம். உங்களின் ராஜினாமாவுக்கு அரசு உயர் அதிகாரிகள் தரப்பில் என்ன விமர்சனம் எழுந்தது?
இதுவரை எந்த அதிகாரிகளுமே கருத்து கூறவில்லை. ஆசிரியர்கள் 10 பேர் போனில் தொடர்புகொண்டு பேசினர். அவ்வளவுதான்.
ஆசிரியர்கள் என்ன எதிர்வினையாற்றினர்? உங்களுடன் பேசிய ஆசிரியர்கள் கூறியது என்ன?
ஆசிரியர்களோ, அதிகாரிகளோ பெரியளவில் எதையும் சொல்லவில்லை. போனில் பேசிய இரண்டு ஆசிரியர்கள் என்ன நடந்தாலும் உன்னுடன் இருப்போம் என்றனர். மற்றவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர், அவ்வளவுதான்.

ஜார்கண்ட் ,, 20 வயது மாணவி 18 பேரால் வன்புணர்வு ... காதலன் கண்முன் நடந்த கொடுரம்


The woman was allegedly gang-raped by 18 to 20 youths aged between 18 and 22 years near a university campus at Dighi in Jharkhand. ... DUMKA: A 20-year-old tribal woman was allegedly gang-raped by 18 to 20 youths aged between 18 and 22 years near a university campus at Dighi, 8km from ...
ஜார்கண்ட் மாநிலம் தும்கா நகர் அருகில் கல்லூரி மாணவி ஒருவர் தனது காதலன் கண் முன்னே 20 பேரால் 3 மணி நேரம் வரை கற்பழிக்கப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தும்கா நகர் அருகே டிஜி என்ற இடத்தில் பல்கலைக்கழகம் ஒன்று உள்ளது. அதன் அருகில் பழங்குடியினத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தனது காதலனுடன் பைக்கில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்துள்ளது. காதலன் வேறு ஜாதியை சேர்ந்தவன் என்பதால், நீ எதற்கு பழங்குடியின பெண்ணை காதலிக்கிறாய் என கூறி தகராறு செய்தனர். அவர்கள் அந்த பெண்ணின் காதலனை அடித்து, உதைத்து அவனிடம் இருந்த செல்போனையும் பறித்துக்கொண்டு அவனை மரத்தில் கட்டிப்போட்டனர். அதன் பின்னர் கத்தி முனையில் மிரட்டி அந்த பெண்ணை 6 பேரும் மாறி மாறி கொடூரமாக பலாத்காரம் செய்தனர்.

வைரமுத்து : அனிதா தற்கொலையில் ஒரு கொலையும் நடந்திருக்கிறது.

கேள்விக்குறியான ஜனநாயகம்: வைரமுத்துசென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில், நேற்று (செப்டம்பர் 7) மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் 'மொழிகாத்தான் சாமி' என்ற தலைப்பில் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் குறித்து கவிஞர் வைரமுத்து உரையாற்றினார். இந்த நிகழ்ச்சிக்குத் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சி முடிந்த பின்னர் கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் மாணவி அனிதா மற்றும் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் மரணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இது குறித்து அவர் கூறியதாவது, "அனிதா என்ற ஒரு இளம்பெண்ணின் தற்கொலையில் ஒரு கொலையும் நடந்திருக்கிறது. அந்தத் தற்கொலையில் நிகழ்ந்த கொலை சமூக நீதி. இதனைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் எல்லா தேசிய இன மாணவர்களும் அந்தந்த மாநிலங்களின் உரிமையோடு கல்விபெற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். எல்லாவற்றுக்கும் ஒன்று என்பது இந்த நாட்டில் எல்லா இனங்களுக்கும் ஒத்துவராது.

ஆளுநர் வித்தியா சாகர ராவின் அண்ணன் மகன் எம் எல் ஏ.. ஜெர்மன் குடியுரிமை ... பதவி பறிக்க நீதிமன்றம் ..

இரட்டைக் குடியுரிமை: சிக்கலில் ஆளுநர் அண்ணன் மகன்!
மின்னம்பலம் : இரட்டைக் குடியுரிமை வைத்திருந்த வழக்கில் தமிழக ஆளுநர் வித்தியாசாகர் ராவின் அண்ணன் மகனின் இந்தியக் குடியுரிமையைப் பறிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
தெலுங்கானாவின் கரீம் நகரில் உள்ள வேமுலவாடா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ரமேஷ் சென்னாமெனே. இவரது தந்தை சென்னாமெனே ராஜேஷ்வர ராவ் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 5 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தனது இறுதிக்காலத்தில் தெலுகு தேசம் கட்சியில் இணைந்துகொண்டார். மகாராஷ்டிர ஆளுநரும் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநருமான வித்யாசாகர் ராவ் ரமேஷின் சித்தப்பா ஆவர். ரமேஷ் மூன்று முறை எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

திருச்சி பொதுக்கூட்டம் தடைகளை உடைத்தது .. வரலாறு படைத்தது !

Sivasankaran Saravanan s · நீதிமன்ற உத்தரவை பார்த்து தமிழ்நாடு காவல்துறை தடை விதிக்குமாம். தடையை மீறி கூட்டம் நடத்தினால் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு, "சேச்சே நான் அப்படி சொல்லலம்மா, வன்முறையா போராட்டம் நடத்தவேண்டாம் னு தான் சொன்னோம் " னு உச்சநீதிமன்றம் பல்டி அடிக்கிறது. ஏன்யா வன்முறையை தூண்டுறாபோலயோ சட்டம் ஒழுங்கு சீர்கேடோ இருந்தால் அதுக்கு ஏன் சுப்ரீம் கோர்ட் வரைக்கும் போக போறாங்க? லோக்கல் போலீஸ் ஸ்டேசன் போலீசே போதும். ஆக இவர்கள் ஆழம் பார்த்துள்ளார்கள். நாமளும் இந்த சங்கிமங்கீஸ் அலப்பறைய கேட்டு மோடிய இந்திராகாந்தி ரேஞ்சுக்கு ஓவர் எஸ்டிமேட் பண்ணிட்டோம். அவ்ளோ லாம் வொர்த் இல்ல ன்னு தெரிஞ்சுபோச்சு. தமிழகம் எதை வேண்டுமானாலும் விட்டுக்கொடுக்கும். ஆனால் சுயமரியாதையை மட்டும் தமிழர்கள் யாருக்காகவும் எதற்காகவும் விட்டுத்தரமாட்டார்கள் என்பது காவிக்கூட்டத்திற்கு புரிந்திருக்கும் என நம்புகிறேன்.
நீட் தேர்வுக்கு எதிராக திருச்சியில் கண்டன பொதுக்கூட்டம் நடத்துவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை காவல்துறை ரத்து செய்தபோதிலும், திட்டமிட்டபடி இன்று மாலை பொதுக்கூட்டம் தொடங்கியது. திருச்சியில் தடையை மீறி எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம் தொடங்கியது: ஸ்டாலின்-தலைவர்கள் மேடைக்கு வந்தனர்

நீட்டை புதைக்குழிக்கு அனுப்பும்வரை ஓய மாட்டோம்: திருச்சி பொதுக்கூட்டத்தில் ஜவாஹிருல்லா ஆவேசம்

மாலைமலர் :நீட் தேர்வை புதைக்குழிக்கு அனுப்பும் வரை ஓய மாட்டோம் என திருச்சியில் நடைபெற்ற எதிர்கட்சிகள் பொதுக்கூட்டத்தில் ஜவாஹிருல்லா ஆவேசமாக பேசினார். நீட்டை புதைக்குழிக்கு அனுப்பும்வரை ஓய மாட்டோம்: திருச்சி பொதுக்கூட்டத்தில் ஜவாஹிருல்லா ஆவேசம் திருச்சி: நீட் தேர்வுக்கு கண்டனம் தெரிவித்து திருச்சியில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களை அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தடைவிதித்த நிலையில், பொதுக்கூட்டத்திற்கான அனுமதியை கடைசி நேரத்தில் திரும்ப பெறுவதாக காவல்துறை கூறியது. ஆனாலும், திட்டமிட்டபடி பொதுக்கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஹவாஹிருல்லா, விடுதலை சிறுத்தைகள் தலைவர்கள் திருமாவளவன், கம்யூனிஸ்ட் தலைவர்கள் ராமகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தின் தொடக்கத்தில், நீட் தேர்வுக்கு எதிராக போராடி உயிரை மாய்த்துக்கொண்ட அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேசியதாவது:- மருத்துவக் கனவுகளோடு வாழ்ந்த ஆயிரக்கணக்கான அனிதாக்கள் இருக்கிறார்கள். அவர்களின் கனவுகளை எல்லாம் குழிதோண்டி புதைக்கும் திட்டம் இந்த நீட் தேர்வு. இந்த நீட் தேர்வை கொண்டு வந்துள்ள பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய சுகாதார வசதியை பார்க்க முடியாது. பிறந்த குழந்தைகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்துபோகும், சாதனைக்குரிய ஆதித்யநாத் ஆட்சிதான் அவர்களின் ஆட்சி.

திருமாவளவன் திருச்சி பொதுகூட்டத்தில் : தடையை கண்டு தமிழர்கள் அஞ்சமாட்டோம்!

மாலைமலர் : நீட் தேர்வுக்கு எதிராக திருச்சியில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு பேசினார். அப்போது நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்காததற்கு மத்திய அரசே காரணம் என்றார். நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்காததற்கு மத்திய அரசே காரணம் - திருமாவளவன் பேச்சு திருச்சி: நீட் தேர்வுக்கு எதிரான பொதுக்கூட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுத்ததையும் மீறி, இன்று திருச்சியில் எதிர்க்கட்சிகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது:- தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு பாதிப்படையாத வகையில் போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்றுதான் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. பா.ஜ.க. புகார் அளித்ததால் தான் இந்த கூட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தை அ.தி.மு.க. ஆள்கிறதா? இல்லை மத்தியில் ஆளும் பா.ஜ.க. ஆள்கிறாதா? என்பது தெளிவாக தெரிகிறது. பொதுக்கூட்டம் நடத்தக்கூடாது என நீதிமன்றம் சொல்லவில்லை. பொதுக்கூட்டம் என்பது போராட்ட வடிவம் இல்லை. கல்வியை மத்திய அரசு பட்டியலில் இருந்து மாநில அரசு பட்டியலில் சேர்க்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தவே இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.

தடையை உடைத்து திருச்சி பொதுக்கூட்டம்... மக்கள் கூட்டம் அலைமோத வெற்றிகரமாக...

தடையை மீறி பொதுக்கூட்டம்! அனிதாவுக்கு அஞ்சலி! உச்சநீதிமன்றத்தின் உத்தரவை காட்டி நீட் தேர்வுக்கு எதிராக திருச்சியில் நடைபெறும் அனைத்துக்கட்சி கண்டன பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதியை ரத்து செய்து, கூட்டத்திற்கு தடை விதித்தது. போராட்டங்களுக்குத்தான் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. பொதுக்கூட்டத்திற்கு தடை விதிக்கவில்லை என்று கூறி, காவல்துறை விதித்த தடையை மீறி, திமுக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக உள்ளிட்ட அனைத்துக்கட்சி தலைவர்களும் கண்டன பொதுக்கூட்டத்தை நடத்தினர். கண்டன கூட்டத்தின் முதல் நிகழ்வாக மறைந்த மாணவி அனிதாவுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேடையில் இருந்த தலைவர்கள், கூட்டத்தினர் அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். நக்கீரன்

திருச்சி பொதுக்கூட்டம் . தடைக்கு தலைவர்கள் கடும் கண்டனம்!

திருச்சியில் இன்று நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டத்திற்கு கடைசி நேரத்தில் காவல்துறை அனுமதி வழங்க மறுத்தது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். திருச்சி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு: தலைவர்கள் கடும் கண்டனம் திருச்சி: நீட் தேர்வுக்கு எதிராக செப்டம்பர் 8-ம் தேதி இன்று திருச்சியில் எதிர்க்கட்சிகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 8 கட்சி தலைவர்கள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த கண்டனப் பொதுக் கூட்டத்திற்காக திருச்சி தென்னூர் உழவர் சந்தை திடலில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பொதுக்கூட்டதிடலுக்கு கட்சி தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் திரண்டு வந்தனர். மாலை 5 மணியளவில் பொதுக்கூட்டம் தொடங்க இருந்த நிலையில், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இந்த தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில், திருச்சி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்க காவல்துறை மறுத்தது. கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால் பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்திருந்த தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

நடிகர் சூர்யா : ஒரே நாடு ஒரே தேர்வை நுழைப்பது பெரிய வன்முறை!

ஏழை மாணவர்கள் கல்விக்காக அகரம் தொண்டு நிறுவனம் நடத்தி
வருபவரும் பிரபல  நடிகரும் சூர்யா நாளிதழ் ஒன்றுக்கு எழுதிய கட்டுரையின் தொகுப்பின் விவரம்:
எங்களுடைய ‘அகரம் ஃபவுண்டேஷன்’ கடந்த 10 ஆண்டுகளாக அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி நலனுக்காகத் தன்னால் இயன்ற பங்களிப்பைச் செய்துவருகிறது. இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களின் விண்ணப்பங்களைச் சரிபார்த்து, நேர்காணல் நடத்தி அவர்களில் 1,943 மாணவர்கள் இப்போது பல்வேறு கல்லூரிகளில் படிக்க அது உதவிவருகிறது. இவர்களில் 49 பேர் மருத்துவ மாணவர்கள்.
இவர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கிராமப்புறங்களிலிருந்து வருபவர்கள். 91% பேர் முதல் தலைமுறையாக பன்னிரண்டாம் வகுப்பை முடிப்பவர்கள். மாத வருமானம் ரூ. 2,000 நிரந்தரமாகக் கிடைக்காத பெற்றோர்களின் பிள்ளைகள்தான் இவர்களில் அதிகம். பதின்பருவ வளர்ச்சிக்குத் தேவையான நல்ல உணவுகூடக் கிடைக்கப் பெறாதவர்கள்.
வீட்டுச் சூழல்தான் இப்படி என்றால், கல்விச் சூழல் இதைவிட மோசமாக இருக்கும். போதிய ஆசிரியர்கள் இல்லாமல், அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகளில் படித்து நல்ல மதிப்பெண்கள் எடுத்தவர்கள். பெரும்பாலான மாணவர்கள் விடுமுறை நாட்களில் பகுதிநேரக் கூலி வேலைக்குச் செல்பவர்கள். இந்த அனுபவத்திலிருந்து கிடைத்த படிப்பினைகளிலிருந்தே இதை எழுதுகிறேன். நாங்கள் நடத்தும் நேர்காணலில் பங்கேற்பதற்கான பஸ் செலவுக்கான சில நூறு ரூபாய் பணம்கூட அவர்களில் பலருக்கு இயலாத காரியம். ஒவ்வொரு வருடமும் இப்படிப்பட்ட பல மாணவர்களை நான் பார்க்கிறேன்.

சேலம் ஆட்சியர் ரோகினி ஐ ஏ எஸ் .. பூர்வீகம் மகாராஷ்டிரம் ... அடிக்கும் விளம்பர ஸ்டன்ட்.. உபயம் விபசார ஊடகங்கள்!

இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஆசிரியர்  அமைப்பின் ஒரு பிரிவினர் தொடங்கினர். இதனால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை.சேலம் மாவட்டம் ஆத்தூரில் கருத்தராஜபாளையம் என்ற கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கு சென்ற ஆட்சியர் ரோகிணி ஆய்வு நடத்தினர். பின்னர் அங்கு ஆசிரியர் இல்லாததால் அவரே பாடம் நடத்தினார். சுமார் ஒரு மணி நேரம் பாடம் நடத்திய அவர் மாணவர்களின் வருங்கால திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார் ( ஆஹா நம்புறோம் சாமி)
சாய் லட்சுமிகாந்த் : ரோகினி ஐ.ஏ.எஸ்(சேலம் மாவட்ட முதல் பெண் கலெக்டராக ரோஹினி ஆர்.பாஜிபாக்ரே) அறிவோம் : புதிய அஇஅதிமுக மாவட்ட செயலாளர் ; சேரன்மாதேவி சப் கலெக்டராக 2011-2013 இல் இருந்த போது தாது மணல் கொள்ளையை எதிர்த்த மக்களை, வைகுண்டராசன் அடியாளாக இருந்து கூத்தன்குழி என்ற கிராமத்தினர் அனைவரையும் சுமார் 5000 மக்களை அகதியாக்க துணை நின்றவர். 53 வாரம் மட்டுமே சட்டப்படி சப்-கலெக்டராக இருக்க வேண்டியவர் சட்டவிரோதமாக. 100 வாரத்திற்கு மேல் இருந்தவர். ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கை கர்நாடகத்தில் தண்டணை வராமல் தடுக்க ஜெகஜால புரோக்கர் வேலைககள் பல செய்த சங்கர் பிதாரியின் மருமகள். எஸ்.பி என்ற. பேரை வைத்துக்கொண்டு பல்வேறு சமூக விரோதிகளின்(தாதுமணல்­- கிரானைட்) கூட்டாளியாகயாகவும், அணுஉலை எதிர்ப்பு போராட்டக்காரர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொலை செய்ய முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமலும், சகாயம் இ.ஆ.ப. அவர்கள் கிரானைட் முறைகேட்டில் நரபலி ஆய்வை செய்ய விடாமல் தடுத்து அவரை சுடுகாட்டில் படுக்க வைத்தும், நெல்லை-மதுரை மாவட்ட.த்தில் எஸ்.பி யாக. இருந்த. விஜேந்திர பிகாரியின் மனைவிதான் ரோகினி ஐ.ஏ.எஸ்

அரசு ஊழியர் போராட்டத்துக்கு தடை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் இடையூறு ஏற்படும்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். இதைத்தொடர்ந்து போராட்ட குழுவான ஜாக்டோ-ஜியோவை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. ஈரோட்டில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்ட குழுவில் விரிசல் ஏற்பட்டது.

மோடி .. இந்திய வரலாறு இதுவரை கண்டிராத ஒரு பொய்யன் பிரதமர் பதவியில்..

savukkuonline.com
காவிரி நீரை மட்டும் மோடியா வாங்கித் தர வேண்டும்  ? இப்படி ஒரு வரியை
பார்க்கும் பொழுது செம்ம சிரிப்பு தான் வந்தது, அதாவது நல்லது நடக்கும் பொழுது மோடி தான் கேட்டை ஆட்டினார், அதே சமயம் தோல்விகள் துயரங்கள் என்றால் ஸ்பெஷல் சாதா வீர துறவி மோடி பொறுப்பாக மாட்டார், என்பதை மற்றவர்கள் மனதில் பதிய வைக்க முயற்சிக்கும் வேலை தான்.
ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்திற்கு தர வேண்டிய தண்ணீரை தர மறுக்கின்றது, மாநில முதல்வர்கள் பேசியும் பிரயோஜனம் இல்லை, விவசாய சங்கங்கள் பேசியும் பிரயோஜனம் இல்லை, தமிழகம் நீதிமன்றம் செல்கிறது அதுவும் இந்தியாவின் கடைசி நம்பிக்கை, அந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கின்றது அப்பொழுதும் பிரயோஜனம் இல்லை.
இப்பொழுது கர்நாடகாவை யாரால் நிர்பந்திக்க முடியும், இந்த நாட்டின் பிரதமரால், ஆனால் அப்படி மோடி ஏதாவது செய்வாரா? ஒரு நேர்மையான பிரதமரால் கண்டிப்பாக முடியும், மோடி ஒரு அரசியல் கட்சி சார்ந்த அடியாள் அம்புட்டு தான்.

கிரிஜா வைத்தியநாதன் :உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அரசு ஊழியர்கள் உடன பணிக்கு திரும்ப வேண்டும்

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள
அரசு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கேட்டுக்கொண்டுள்ளார். ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்துக்கு அரசு ஊழியர் சங்கங்கள் அழைப்பு விடுத்து இருந்தன. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் இன்று (வியாழக்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்றும் அவர்கள் அறிவித்து இருந்தனர். இந்நிலையில் திட்டமிட்டபடி அரசு ஊழியர் சங்கம் தலைமையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் இன்று தமிழகம் முழுவதும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம், பட்டதாரி ஆசிரியர் கழகம், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், இடைநிலை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட 17 சங்கங்கள் பங்கேற்றன.

மாணவர்கள் போராட்டத்துக்கு தடைகோரிய வழக்கு..! உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

விகடன் :கார்த்திக்.சி     :   அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்று தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் தொடரப்பட்ட பொதுநல வழக்கு, இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த மாணவி அனிதா, செப்டம்பர் 1-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அனிதாவின் தற்கொலையையடுத்து, தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துவருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் தன்னெழுச்சியாகப் போராடிவருகின்றனர். இந்த நிலையில், வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த மனுவில், 'அனிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும்; தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும். அனிதா மரணத்துக்காக நடைபெறும் போராட்டங்களுக்குத் தடைவிதிக்க வேண்டும்' என்று கூறி வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்திருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வருகிறது.

கௌரி லங்கேஷ் ! உண்மையை உரக்க எழுதி பேசியதற்காக ... RSS பாணி கொலை ?

ஓ… இது காவிகளின் தேசம் !
பெங்களூர்:
பத்திரிகை ஆசிரியரும், இலக்கிவாதியுமான கௌரி லங்கேஷ் (55) நேற்று மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். கௌரி லங்கேஷ் படுகொலையைக் கண்டித்து பெங்களூர் உட்பட பல நகரங்களில் பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
பெங்களூரில் வெளியாகும் லங்கேஷ் பத்திரிகையின் ஆசிரியரும், இலக்கியவாதியுமான கெளரி லங்கேஷ் (55)  பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்துவந்தார்.
செவ்வாய்க்கிழமை காரில் வெளியே சென்றுவிட்டு இரவு 8 மணியளவில் வீட்டுக்கு அருகே சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கைத்துப்பாக்கியால் 7 முறை சுட்டுள்ளனர். 
இதில் நெற்றி, மார்பு உள்ளிட்ட இடங்களில் 3 குண்டுகள் பாய்ந்ததில் நிகழ்விடத்திலே கெளரி லங்கேஷ் உயிரிழந்தார். தகவலறிந்த ராஜராஜேஸ்வரி நகர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.