சனி, 19 டிசம்பர், 2015

சுப்பிரமணியம் சாமிக்கு பாஜக லஞ்சம்..பார்ப்பனீய விஷ ஊக்க போனசாக டெல்லியில் அரசு பங்களா..

Subramania swamy(C) 4
புதுடெல்லி - பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமிக்கு மத்திய டெல்லியில் அரசு பங்களா ஒன்றை ஒதுக்கீடு செய்து ராஜ்நாத் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு உத்தரவிட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளதுடன் மத்திய அரசு மீது குற்றஞ்சாட்டியுள்ளது. பா.ஜ.க. தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான சுப்பிரமணியன் சாமிக்கு பல்வேறு அமைப்புகளால் அச்சுறுத் தல் உள்ளது.இதனால் மத்திய உள்துறை அமைச்சகம் அவரது பாதுகாப்பு குறித்து அடிக்கடி ஆய்வு செயது நடவடிக்கை எடுத்து வருகிறது.  எந்தவித சட்டத்தையும் மதிக்காமல் அரசின் ரகசிய பதவிகளில் மட்டுமே இருக்கும் இவருக்கு அமைச்சருக்கு இணையாக ஏன் இந்த சலுகை? இந்துத்வாவின் மாமாவுக்கு தொடர் சகுனி ஸ்ரீ அல்லது சகுனி பூஷன் ஏன் சகுனி விபூஷன் கூட இனி கொடுக்கலாம்

ராஜ்யசபா நியமன எம்பீக்கள் மக்கள் வரிப்பணத்தில் சச்சின் நடிகை ரேகா போன்றவர்கள் வேஸ்ட் /உல்லாசம் ..

புதுடில்லி: ராஜ்யசபா நியமன எம்.பி.,க்களில், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின், நடிகை ரேகா ஆகியோர், 6 சதவீதத்துக்கும் குறைவான நாட்களே சபை நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்யசபாவில், 12 நியமன எம்.பி.,க் கள் உள்ளனர். இவர்களில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின், பாலிவுட் நடிகை ரேகா, கவிஞர் ஜாவேத் அக்தார், காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் உள்ளிட்ட, 10 பேர் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டு, ராஜ்யசபாவில் அவர்களின் செயல்பாடுகள் குறித்த விவரங்களை, இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது;  கட்சி விளம்பரத்துக்காகவும், ஒரு பரபரப்புக்காவும், ராஜ்யசபா நியமன உறுப்பினர்களாக, இப்படி வேலைக்கு ஆகாத ஆட்களை நியமிக்கிறதை விட்டுட்டு, சாதாரண விவசாயிகள், கல்வியாளர்கள், பொருளாதார வல்லுனர்கள் இவர்களை நியமித்தால் தேவலை.

சிரிய அதிபர் ஆசாத்துக்கு ரஷ்யாவும் சீனாவும் ஆதரவு ...அமெரிக்கா...வளவளா கொளளா

சிரியாவில் மோதலை முடிவிற்கு கொண்டுவரும் முயற்சிகளில், சிரியாவிற்கான ஐநாவின் திட்டம் `ஒரு மைல்கல்' என, அமெரிக்காவின் வெளியுறவுச் செயலர் ஜோன் கெர்ரி தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டம், யுத்தம் மற்றும் சமாதானம் ஆகியவற்றுக்கிடையே ஒரு உண்மையான தெரிவை சிரியர்களுக்கு கொடுத்துள்ளதாக, அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஆறு மாதங்களுள், முறையான பேச்சுக்களை நடத்துவது மற்றும் ஒற்றுமை அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவது ஆகியவற்றுக்கு ஒரு நேர அட்டவணையை முன்மொழிந்த குறித்த திட்டத்தை, ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

1991-1996.. புரட்சித்தலைவின் ஆட்சியின் கீழ் ஏரி குளங்கள் கொள்ளை ஒரு தொழிலாக ஒழுங்கமைக்கப்பட்டது.

ஏரிகளை அழித்த சுயநிதிக் கல்விக் கொள்ளையர்கள்: பச்சமுத்து, ஜேப்பியார், ஐசரி வேலன், உடையார், ஏ.சி.சண்முகம்.நீர் நிலைகளை ஆக்கிரமித்தவர்களின் முக்கியமானவர்கள் சுயநிதிக் கல்விக் கொள்ளையர்கள். இந்த கொள்ளை எம்.ஜி.ஆர் ஆட்சியிலேயே தொடங்கிவிட்டது. சாரய கொள்ளையர்கள் கல்வி தந்தைகளானார்கள்.
 விதிமுறைகளை மீறிக் கட்டப்படும் கட்டிடங்களின் சொந்தக்காரர்கள் ஒரு சிறிய தொகையை அபராதமாக செலுத்தி தங்களது சட்டவிரோதச் செயலை சட்டப்பூர்வமாக்கிக் கொள்ளலாம் என்கிற விதியை 28 நாட்களே ஆண்ட வி.என்.ஜானகியின் அரசு 1988-ல் கொண்டு வந்தது. 1991-1996 காலகட்டத்தில் தமிழகத்தை மொட்டையடித்த புரட்சித்தலைவின் ஆட்சியின் கீழ் ஏரி குளங்கள் ஆக்கிரமித்து ப்ளாட்டுகள் போடும் ரியல் எஸ்டேட் கொள்ளை ஒரு தொழிலாக ஒழுங்கமைக்கப்பட்டது.எஸ்.ஆர்.எம் மட்டுமல்ல சென்னையை சுற்றியுள்ள பல சுயநிதி பொறியியல் கல்லூரிகளும், பல்கலைகழகங்களும் , கார்ப்பரேட் மருத்துவமனைகள், நட்சத்திர விடுதிகள் அடையாற்றின் கரைகளையும், அதற்கான நீர்வழித்தடங்களையும் அழித்துவிட்டு அதன் மீது தான் கட்டப்பட்டுள்ளன. கூவத்தின் கரைகளை தின்று செறித்திருக்கும் ஏ.சி.சண்முகத்தின் எம்.ஜி.ஆர் பல்கலகழகம், அப்பல்லோ மருத்துவமனை, ஜேப்பியாரின் சத்யபாமா பல்கலை என இந்த பட்டியிலுக்கு முடிவில்லை....

அர்ச்சகர் அடையாளத்தை துறந்தார் ரங்கநாதன் – ஆர்ப்பாட்டம்

உச்சநீதி மன்றத்தின் அநீதியான தீர்ப்பை கண்டித்து சென்னை, திருச்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டங்கள்.
சென்னையில் பயிற்சி பெற்ற அர்ச்சக மாணவர் சங்கத் தலைவர் ரங்கநாதனுடன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர்கள் மற்றும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்களும் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை அருகே உச்சிக் குடுமி நீதிமன்றத்தை கண்டித்தும், பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்தும், அதற்கு துணை போகும் பாசிச ஜெயா அரசைக் கண்டித்தும் விண்ணதிர முழக்கங்கள் முழங்கின.
ஆர்ப்பாட்டத்தின் முத்தாய்ப்பாக அர்ச்சக மாணவர் ரங்கநாதன் பெரியார் சாலைக்கு மாலை அணிவித்து பின்னர் தனது உருத்ராட்சக் கொட்டை மாலை, தீட்சை ஆகியவற்றை துறந்து இனி பார்ப்பன ஆதிக்கத்தை முறியடிக்கும் சுயமரியாதை போராட்டங்களில் ஈடுபடுவதாக உரையாற்றினார். அதன் பிறகு தோழர் ராஜூ உச்சநீதிமன்றத்தின் அயோக்கியத் தீர்ப்பை விளக்கி உரையாற்றினார். அனவரையும் கைது செய்து கொண்டு சென்ற போலீசு மாலையில் விடுவித்தது.  நீதித்துறை ஆண்டாண்டு காலமாக பார்ப்பனீயத்துக்கு பாத சேவை செய்வதைதான் நாடு பார்க்கிறதே?

மக்கள் மீது கவிஞர் தாமரை ஆவேசம்... சிம்பு அனிருத் மட்டுமல்ல நீங்களும் ஆபாசத்தை தானே விரும்பி...அப்பவே சொன்னேனே..

கடந்த நான்கு நாட்களாக மாற்றி மாற்றித் தொலைபேசி அழைப்புகள். சிம்பு-அனிருத் தொடர்புள்ள பாடல் குறித்து என் கருத்து வேண்டும் என்று ஊடகவியலாளர்கள் கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். உண்மையில் எனக்கு ஒருவாரமாக இரவு பகல் பாராத வேலை. வீட்டுக்கும், பணியிடத்துக்குமாக ஓடிக்கொண்டே இருக்கிறேன்.
இதில் எங்கே போய் இதுபோன்ற பாடல்களையெல்லாம் கேட்பது ? ஆனால் ஊடகங்கள் துரத்த ஆரம்பித்த பின்பு கேட்டு வைத்தேன். அப்புறம்தான் தோன்றியது,
இதில் நான் கருத்துச் சொல்ல என்ன இருக்கிறது ? என்று. இப்படியெல்லாம் எழுதலாமா, பெண்களை இழிவுபடுத்தலாமா, சமூக சீரழிவு இத்யாதி இத்யாதி.... அடப்பாவிகளா, நானும் இதைத்தானே இருபது ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டிருக்கிறேன், இப்போதுதான் ஏதோ புதிதாகக் கண்டுபிடித்தது போல பொங்குகிறார்களே என்று..... நான் சொன்னது மட்டுமல்ல , செய்தே காட்டியிருக்கிறேன். வெறும் வாய்ப்பேச்சில்லை, உதார் விடவில்லை, வாயால் வடை சுடவில்லை, செயலால் காட்டியிருக்கிறேன்.

தெருவோரம் படுப்பவர்களே ஜாக்கிரதை....சல்மான் கான் விடுதலை ....நீதிமன்றம் சினிமா / பணக்காரங்களுக்குதாய்ன் ஆதரவு!

தம்பி தங்கைகளா இதற்குள் ஒளிஞ்சு கொள்ளுங்க... இனி நிறைய சல்மான்கான்கள் கேட்பார் யாருமில்லாமல் வேண்டுமென்றே நம்மேல வண்டிய ஏற்றுவாங்க.. அப்புறம் எதுக்கு வண்டிக்கு முன்னாடி வந்து படுத்தாய் என நம்ம மேல தான் வழக்குகளை போட்டு உள்ளே தள்ளி வேணுமுன்னா போட்டும் தள்ளுவாங்க... நமக்கு ஒண்ணுனா நீதித் துறையும் கேட்காது..காவல்துறையும் கேட்காது... அரசும் கூட கேட்காது.. ஆமா நாங்களும் இந்த நாட்டு குடிகள் என நாமே நம்மைப் பத்தி சொல்லிக்க வேண்டியது தான்... நாய்க்கு இருக்கிற மரியாதை கூட நம்மள மாதிரி ஏழைங்களுக்கு இல்லையே!!!! ஏழைக்கு ஒரு நீதி.. செல்வந்தனுக்கு ஒரு நீதி!!!! இது தான் நியதி. இது தான் இங்கு எழுதாத சட்டம்! மொத்ததில இது நீதி செத்த தேசம் தம்பி தங்கைகளா...!!! நாம தான் நாய் நரியிட்ட இருந்து நம்மளை காப்பாத்தி பார்த்து நடக்கணும்டா!" இப்படிக்கு இந்தியாவின் தெருவோர குடி மக்கள்!<   ஒரு நெட்டீஸன் கருத்து

வெள்ளி, 18 டிசம்பர், 2015

நடிகை ரோஜா சட்டசபையில் இருந்து ஓராண்டு இடைநிறுத்தம். ...சந்திரபாபு நாயுடுவின் கந்துவட்டி சாம்ராஜ்யம் அம்பலம்....

ஹைதராபாத்: ஆந்திர சட்டப் பேரவையில் அமளியில் ஈடுபட்டதாக நகரி தொகுதி எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா ஓராண்டுக்கு அவை நடவடிகையில் கலந்து கொள்ள தடை விதித்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். ஆந்திராவில் கால் மணி என்ற பெயரில் கந்து வட்டி கொடுமை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் அம்மாநில எம்.எல்.ஏ., எம்.எல்.சி. உள்ளிட்ட அரசியல் புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பது அம்பலமாகியுள்ளது. கால் மணி என்ற பெயரில் அப்பாவிகளுக்கு சிறு கடன்களை கொடுத்து அதிகவட்டி வசூலிக்கும் தொழிலை அரசியல் புள்ளிகளின் ஆதரவுடன் சிலர் அமோகமாக நடத்தி வந்துள்ளனர். Actress Roja suspended from House for one year  ஆமானப்பட்ட  என்டிஆரையே கவுத்து ராவோடு ராவாக கட்சியை அபேஸ் பண்ணிய சந்திரபாபுவுக்கு ரோஜா எல்லாம் ஜுஜுப்பீ...இவன் இதயதெய்வத்தை விட பெரிய தில்லாலங்கடியோவ் 

குஜராத்தை போல தமிழ் உள்ளிட்ட இதர மொழிகளிலும் ஐஐடி நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும்:மத்திய அரசுக்கு கோரிக்கை

குஜராத்தியைப் போல தமிழ், மலை யாளம், தெலுங்கு உள்ளிட்ட இந்திய அரசியல் சாசனத்தால் அங்கீகரிக் கப்பட்ட மொழிகளிலும் ஐஐடி நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக கல்வியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி உள்ளிட்ட மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் சேர ஜேஇஇ எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். ஜேஇஇ நுழைவுத் தேர்வானது மெயின், அட்வான்ஸ்டு என 2 நிலைகளை உள்ளடக்கியது. என்ஐடி, ஐஐஐடி கல்லூரிகளில் சேர வேண்டுமானால் ஜேஇஇ மெயின் நுழைவுத் தேர்வு தேர்ச்சியே போதுமானது.

சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்க ராமதாஸ் எதிர்ப்பு..குழந்தைகள் 'ஓவர்டைம்' வேலை செய்யும் ரோபோக்கள் அல்ல

ஓவர்டைம்' வேலை செய்யும் ரோபோக்கள் அல்ல... குழந்தைகள் என்பதை கல்வியாளர்கள் உணர வேண்டும் என்று கூறியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படுவது மாணவர்களை மன அழுத்தத்துக்கு ஆளாக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் வடியத் தொடங்கியிருப்பதைத் தொடர்ந்து கடந்த 14 ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. ஒரு மாதத்திற்கும் மேலாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், அந்த நாட்களை ஈடுகட்டும் வகையில் ஜனவரி மாதம் வரை சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என தனியார் பள்ளிகள் அறிவித்துள்ளன.

வெள்ளத்தில் சென்னை.....பீப் பாடலை வைத்து திசை திருப்ப அரசு முயற்சி செய்கிறதா?சென்னை வெள்ளத்தையும் அதன் பாதிப்பையும், அந்த சமயத்தில் அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்யத் தவறிய செயல்களையும் கிட்டத்தட்ட
மக்கள் மறந்து விட்டார்கள். இதைத்தான் சிலர் எதிர்பார்த்தனர்.. அதற்கேற்ப நகர்த்தப்பட்ட காய் நகர்த்தல்களும் செவ்வனே அரங்கேறி வருவதாகவும் தெரிகிறது. சென்னையை உலுக்கிய வெள்ளம் வடிந்த கையோடு தமிழகத்தில் புதுப் புதுப் பரபரப்புகளை கச்சை கட்டிக் கொண்டு கிளம்புகின்றன. இவையெல்லாம் திசை திருப்பல் நடவடிக்கைகளாக இருக்குமோ என்று ஒரு சந்தேகம் வலுப்பெற்று வருகிறது.
சென்னையை உலுக்கிய மிகப் பெரிய வெள்ளத்தின்போது மீட்புப் பணிகளிலும், நிவாரணப் பணிகளிலும் தமிழக அரசு சரிவர ஈடுபடவில்லை என்ற குற்றச்சாட்டு பலமாகவே வைக்கப்பட்டுள்ளது. அதை விட செம்பரம்பாக்கம் ஏரி திறப்பில் காட்டப்பட்ட மெத்தனமும் வெறும் பீப் சவுண்டு  பிரச்சனையில் மறக்ககூடிய விடயமா செம்பரபாக்கம்? யாரு கண்டா நமக்கு வாய்த்த அடிமைகள்தான் திறமைசாலிகள் ஆயிற்றே...
சர்ச்சையாகியுள்ளது.  

குற்றவாளி வெற்றி பெற்றுவிட்டான்..மாணவியின் தாயார் குமுறல்..டெல்லி பலாத்கார வழக்கில்

டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தண்டனை அனுபவித்த இளம் குற்றவாளியை விடுவிப்பதற்கு தடைவிதிக்க ஐகோர்ட்டு மறுத்துவிட்டது. டெல்லி மகளிர் அமைப்பு, ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியிடம் முறையீடு செய்ய உள்ளது. ஜனாதிபதியிடமும் குற்றவாளி சிறுவன் விடுதலை விவகாரத்தை மீண்டும் எழுப்ப உள்ளது. சிறுவனை விடுதலை செய்வதற்கு ஐகோர்ட்டு தடை விதிக்க மறுத்தது தொடர்பாக பேசிய மாணவியின் தாயார் ஆஷா தேவி, அனைத்து போராட்டங்களை அடுத்தும், குற்றவாளி சிறுவன் விடுதலை செய்யப்பட உள்ளான் என்று கூறினார்.

குமரிகண்டம் வரலாறு நிருபணமாகிறது...கடலுக்கு அடியில் கண்டு பிடிக்கபட்டது...மத்திய அரசு மூடி மறைக்கிறது?பாடலாசிரியர்கள் கண்டனம்...பீப் பாடலை ஏன் நடிகர்கள் கண்டிக்கவில்லை...பொறுக்கிகள் கையில் தமிழ் சினிமா?


பீப் பாடல் விவகாரம் தொடர்பாக புலமைப்பித்தன், முத்துலிங்கம், சினேகன், யுகபாரதி, பா.விஜய் உள்ளிட்ட கவிஞர்கள் கூட்டாக இணைந்து கண்டன அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள்.
அந்த அறிக்கையில், ‘’தமிழ்த் திரைப்படத் துறை என்ற மிகப்பெரிய ஊடகத்தில் இருந்து வெளியாகும் படைப்புகளை பெரிதும் ரசிக்கும் ரசிகர்கள் கோடிக் கணக்கான பேர். வெகுஜனங்கள் மத்தியில் விரைந்து சேர்ந்து அனைவர் இல்லங்களையும் உள்ளங்களையும் அடைந்து விடும் இப்படைப்புகள் ஒரு சமூக அக்கறையோடும் பொறுப்போடும் இருக்க வேண்டும். அந்த எல்லை மீறப்படும் போது, அது பலர் மனதை புண்படுத்துவதாக அமைந்து விடுகிறது. குறிப்பாக இந்தச் சர்ச்சைக்குரிய பாடல் பெண்களை இழிவுபடுத்தும் நோக்கிலும் ஒழுக்கமற் றவர்களின் ஓலக்குரலாகவும் ஒலிக்கிறது.
மக்கள் இன்னும் மழைப் பாதிப்பில் இருந்து மீளாத சூழ்நிலையில், அவர்களின் மனநிலை புரியாமல் பொறுப்பற்ற வன்செயலாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது. இப்படிப்பட்ட பாடல் சிறு பிள்ளைகள் மத்தியில் பரவிவிட்டால் ஒரு நாகரீகம் இழந்த தொற்று நோய் அவர்கள் மனதில் பதிந்துவிடும்.

வியாழன், 17 டிசம்பர், 2015

இடநாழியில் ஒரு காலோச்சா...... திருப்பங்களில் எல்லாம் ஒரு கவிதைத் தன்மை..


இந்த மலையாள திரைப்படம் மிக பெரிய வெற்றி படம் .
எனகென்னவோ இந்த படம் உரிய முறையில்  கவுரவிக்க படவில்லை என்றே கருதுகிறேன். தேசிய விருதுகள் பெற்றிருக்க வேண்டிய படம் ஏனோ பெறவில்லை.
ஜெயபாரதி,  சோமன், திலகன், கார்த்திகா, வினீத், நிழல்கள் ரவி, ஆடூர் பாசி மற்றும் பலர் நடித்த இதன் இயக்குனர் பத்ரன் ,
பழம்பெரும் இசையமைப்பாள தக்ஷணாமூர்த்தியின் மிக மிக அற்புதமான இசையில் இது உருவானது.
ஒரு படத்திற்கு பின்னணி இசை எவ்வளதூரம் உயிரை கொடுக்கும் என்பதை இந்திரைப்படம் எடுத்துக்காட்டுகிறது,

பதினைந்து வருஷங்களுக்கு முன்பு கோபித்து கொண்டு போய்விட்ட கணவன்.
மனசுக்குள்ளே வருஷங்களாக அழுதுகொண்டிருந்த ஒரு பெண்ணின் சோகத்தை கண்களில் தேக்கி உணர்ச்சி பிழம்பாக ஆனால் மௌனமாக காட்சி தரும் ஜெயபாரதியின் முகம் யாராலும் மறக்கவே முடியாது ,

ஜெயலலிதா போட்டோ ஷாப் செய்யாமல் ஒரு வீடியோவைக் கூட வெளியிட முடியாத நிலையில்தான்...சவுக்கு

பெருமழை வெள்ளம், தமிழகத்தை புரட்டிப் போட்டிருக்கிறதோ இல்லையோ, ஜெயலலிதாவையும் அதிமுகவையும் தலைகீழாக புரட்டிப் போட்டிருக்கிறது. எப்போதும் ஆணவமும் அதிகாரமும் கொண்டு பேசும் ஜெயலலிதா முதன் முதலாக “எனக்கென்று யாருமே கிடையாது” என்று கழிவிறக்கத்தோடு புலம்புகிறார்.   தலைமறைவான குற்றவாளி யுவராஜ் வாட்ஸப்பில் ஆடியோ வெளியிடுவது போல, வாட்ஸப்பில் ஆடியோ வெளியிட்டு அதில் “எனக்கு சுயநலமே கிடையாது” என்று பச்சையாக பொய்யை பரப்புகிறார். தமிழகமே வெள்ளத்தில் சிக்கித் தவித்தபோது போயஸ் தோட்டத்தில் ஓய்வெடுத்தவர், மக்கள் சாக்கடை நீரில் நீந்திக் கொண்டிருந்தபோது ஹெலிகாப்டரில் ஒய்யாரமாக பார்வையிட்டவர், “உங்கள் துன்பங்களை நான் சுமக்கிறேன்” என்று பசப்புகிறார்.    ஆட்சி செய்யவும், தமிழகத்தின் நலனை பேணவும் மக்கள் வாக்களித்தால், வருடத்தில் நான்கு முறை, கொடநாட்டில் ஓய்வெடுக்கும் கோமலவள்ளி, “என் இல்லமும் உள்ளமும் தமிழகம்தான்” என்று பொய்யுரைக்கிறார்.

ஷகிலா பேசுகிறேன்! ஒரு நேர்மையான நட்சத்திரத்தின் சுயசரிதை

ஆண்டு அனுபவித்தவர் அறுபது வயதில் சுயசரிதை எழுதுகிறார் என்றால் புரிகிறது. இன்னும் நாற்பதை கூட எட்டாத ஷகிலா ஏன் எழுதியிருக்கிறார்? >சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொள்ள சென்னையில் அவர் தங்கியிருக்கும் அப்பார்ட்மெண்டுக்கு சென்றோம். ஒரு பிரபலமான நடிகை வசிக்குமிடம் என்பதற்கு எந்தவித அடையாளமும் அற்ற எளிமையான வீடு. சாதாரண பெண்களை போலவே ‘சிம்பிளாக’, ‘ஹோம்லி’யாக இருக்கிறார் ஷகிலா. கழுத்தில் காதில் மூக்கில் பொட்டு தங்கம் இல்லை.இனி அவரே பேசுவார்.ஏன் எழுதினேன்? ஒரு முறை பி.சி.ஸ்ரீராம் சார் சொன்னார். ‘உங்களை மாதிரி ஆளுங்களோட வாழ்க்கையில் இருந்துதான் மக்கள் கத்துக்க வேண்டிய பாடங்கள் இருக்கு. உங்களுக்கு நடந்த நல்லது கெட்டதுகளை எழுதணும்...’ அவர் சொன்னது மனதை அரித்துக் கொண்டே இருந்தது. நீண்டகாலமாகவே உங்களைப் போன்ற பத்திரிகை நண்பர்கள் எழுதச் சொல்லி கேட்டுக் கொண்டே இருந்தார்கள். எல்லாரிடமும் ‘எனக்கு விருப்பமில்லை. என்னைப் பற்றி எழுத நான் அன்னை தெரசாவும் இல்லை’ என்றே சொல்லிக் கொண்டிருந்தேன்.

சட்டத்தின் முன் அனைவரும் சமமா? இல்லை என்கிறது உயர்நீதிமன்றம் ..வைகோ கண்டனம்

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக தடை விதித்துள்ள சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
 இதுகுறித்து, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்‘ என்று 2006-ல் தி.மு.க. அரசு கொண்டுவந்த சட்டத்தை ரத்து செய்தும், ஆகம விதிகளின்படிதான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு அரசியல் சட்டம் வகுத்துள்ள சமூக சமத்துவ உரிமையை பறிக்கும் வகையில் அமைந்துள்ளது.
சமூக நீதித் தத்துவத்துக்கு அடித்தளம் அமைக்கப்பட்ட தமிழ்நாட்டில், அனைத்து சாதியைச் சேர்ந்தவர்களும் அர்ச்சகர் ஆக்கப்பட வேண்டும்; இதன் மூலம் கோயில்களில் மதத்தின் பெயராலும், ஆகம நெறிகள் என்ற பெயராலும் ஆதிக்கம் செலுத்துபவர்களாக உள்ள ஒருசிலர் மட்டுமே அர்ச்சகர் ஆகும் உரிமையும், தகுதியும் படைத்தவர்கள் என்பதைத் தகர்க்க வேண்டும்; அங்கும் சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று தந்தை பெரியார் கனவுகண்டார்.

ராமதாஸ்: கொலைகாரனே கொலைசெய்யப்பட்ட வீட்டாரிடம் ஆறுதல் கூறுவதுபோல ஜெயலலிதாவின் வாட்ஸப்..

சென்னை: சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து, மெல்ல மீண்டு வரும் நிலையில், இரு வாரங்களுக்கு பின், முதல்வர் ஜெயலலிதா, 'வாட்ஸ் ஆப்' மூலம் மக்களிடம் பேசி உள்ளார். உருக்கமும், உறுதியும் நிறைந்த அவரது உரையும், அதற்கு, தி.மு.க., - பா.ம.க., போன்ற எதிர்க்கட்சிகள் எழுப்பிய கண்டன குரலும், இங்கே பதிவு செய்யப்படுகின்றன.பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
வெள்ளத்தில் சிக்கி, அனைத்தையும் இழந்து, மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், 15 நாட்களாக அவர்களை எட்டிக்கூட பார்க்காத ஜெயலலிதா, இப்போது, வாட்ஸ் ஆப் மூலம், அவர்களின் துயரத்தை நினைத்து, வருத்தம் தெரிவித்திருக்கிறார்.ஜெயலலிதாவின் ஆறுதலை கேட்கும் போது, துக்க வீட்டில், கொலைகாரன் வந்து ஆறுதல் கூறும்போது என்ன உணர்வு ஏற்படுமோ, அதே உணர்வு தான் ஏற்படுகிறது.
துன்பத்தில் இருந்து, மக்களை அவர் மீட்பது இருக்கட்டும். இந்த துன்பத்தை ஏற்படுத்தியவரே அவர் தான், என்பதை ஒப்புக் கொள்வதில், தயக்கம் ஏன்?

சீனாவில் காற்று விற்பனைக்கு வந்துவிட்டது...இந்தியாவிலும் விற்பனைக்கு வருமா? நேற்று தண்ணீர் இன்று காற்று.

காற்று மாசால் திணறி வரும் சீன நகரங்களில் சுத்தமான ஆக்ஸிஜன் விற்பனைதான் இப்போது சக்கைப் போடு போடுகிறது. கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுத்தமான காற்று  சுமார் 100 யென் அதாவது இந்திய மதிப்பில் 850 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
சீனத் தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் போன்ற நகரங்கள் சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இதனால் சுவாசம் தொடர்பான பல்வேறு நோய்கள் மக்களை தாக்கும் அபாயத்தில் சீனர்கள் உள்ளனர். எங்காவது சென்று சுத்தமாக காற்றை சுவாசிக்க முடியுமா? என்பதே தற்போதைய சீனர்களின் தற்போதைய ஏக்கம். ஆனால் பணி நெருக்கடி காரணமாக அவர்களால் சுற்றுலா செல்வது போன்ற சிறு சிறு விஷயங்களையும் கூட மேற்கொள்ள முடியாத நிலையும் இருக்கிறது

சென்னை மக்களுக்கு கைகொடுத்தது தன்னார்வ தொண்டர்களும் சக மனிதர்களும்தான்...அரசாங்கம் அல்ல.

கேள்வி :- “துக்ளக் தர்பார்”  என்பதற்கு அண்மைக் கால நடவடிக்கை ஒன்றின்
மூலம் விளக் கம் கூறுங்களேன்!
கலைஞர் :-  டி.ஜி.பி. யாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆர். நட்ராஜ்.  அவர் ஓய்வு பெற்ற பிறகு, அ.தி.மு.க.வில் உறுப்பினராகி, தேர்வாணைக் கழகத்தின் தலைவராகவும் அ.தி.மு.க. அரசால் நியமிக்கப்பட்டார்.  அவர் 13-12-2015 அன்று அ.தி.மு.க.விலிருந்து “டிஸ்மிஸ்” செய்யப்பட்டார். 14-12-2015 அன்று மீண்டும் கட்சியில் அவர் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இதற்கான காரணத்தைக் கேட்டால் சிரிப்புதான் வரும்.   தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய நிகழ்ச்சி ஒன்றில், தொலைபேசி வாயிலாக நட்ராஜ் என்ற பத்திரிகையாளரைத் தொடர்பு கொண்டு, அவரிடம் கேள்வி கேட்டு பதிலும் பெற்று வெளியிட்டார்கள்.  அப்போது பத்திரிகையாளர் நடராஜின் புகைப்படத்தை வெளியிடுவதற்குப் பதிலாக, ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி ஆர். நடராஜின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்கள். தொலைக்காட்சி நிறுவனம் செய்த தவறு அது.  அது உண்மையா இல்லையா?

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு – பார்ப்பனியத்தைப் பாதுகாக்கும் இன்னொரு தந்திரம்! அர்ச்சகர் வழக்கில்...

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்
கோயிலில் நுழையக்கூடாது, தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்தவர்’ என்று நந்தனாருக்கு மரண தண்டனை தீர்ப்பு அன்று வழங்கப்பட்டது. அர்ச்சகர் மாணவர்களை அர்ச்சகராவதற்குத் தகுதியற்றவர்கள் என்று வெளியேற்றும் வாய்ப்பை இத்தீர்ப்பு இன்று வழங்கியுள்ளது.அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வகையில் 2006-ல் திமுக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக, மதுரை மீனாட்சி கோயிலின் பார்ப்பன அர்ச்சகர்கள் தொடுத்த வழக்கில், தற்போது உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு,  பார்ப்பன ஆதிக்கத்தையும் தீண்டாமையையும் பாதுகாக்கும் வகையில் மிகவும் தந்திரமான சொற்றொடர்களில் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டிருக்கிறது.

அவனை தீ வைத்து எரிக்க வேண்டும் : ஜோதி சிங் தாயார் ஆவேசம்.....


புதுடெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட மருத்துவ மாணவியின் தாயார் மூன்று வருடங்களுக்கு பின்னர் தன்னுடைய மகளின் பெயர் ஜோதி சிங் என்று அறிவித்து உள்ளார். இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளி சிறுவனை விடுவிக்க கூடாது என்றும் வலியுறுத்தி உள்ளார். டெல்லியில் கடந்த 2012–ம் ஆண்டு, இதே டிசம்பர் 16–ந் தேதி இரவு, மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதன் 3-வது ஆண்டு தினம் அனுசரிக்கப்பட்டது. அஞ்சலி செலுத்திய பின்னர் மாணவியின் தாயார் ஆஷா தேவி பேசுகையில், தன்னுடைய மகளின் பெயர் ஜோதி சிங் என்றும், என்னுடைய மகளின் பெயரை கூறுவது எனக்கு வெட்கமானது கிடையாது என்றும் குறிப்பிட்டு உள்ளார்.   இந்த சம்பவ டாகுமேண்டரி படத்தை திரையிட விடாமல் தடுத்த மோடியின் அரசும் மிகபெரும் குற்றவாளிதான் , குற்றவாளிகளை பற்றி மக்களுக்கு தெளிவு பிறக்க கூடாது என்று சங்பரிவார் ஏன் தடுக்கிறது?

புதன், 16 டிசம்பர், 2015

கலைஞர் : உயர்நீதிமன்றத்தின் அர்ச்சகர்கள் பற்றிய தீர்ப்பு..ஆராய்ந்துவருகிறோம்....ஆவன செய்வோம்!

ஆண்டவனை வணங்குவதிலும், அர்ச்சிப்பதிலும் வேறுபாடு இருக்கக் கூடாது என்பதிலே திமுகவுக்கு அழுத்தமான கொள்கை உண்டு என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்றம் இன்று அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகராக ஆக முடியாது. ஆகம விதிகளின் படியே அர்ச்சகர்கள் நியமிக்கப் படவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்நிலையில், இது குறித்து கருணாநிதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக ஆவது பற்றி நாங்களும் குரல் கொடுத்தோம், கொடுத்து வருகிறோம். கி. வீரமணியும் எங்களைப் போலவே குரல் கொடுத்து வருகிறார்.
அவரும், நானும் மற்றும் அர்ச்சகர் சட்டத்தைப் பற்றி ஆதரவாக பேசி வருபவர்களும் கலந்து பேசி எந்த வகையிலே உச்ச நீதி மன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது என்பதையெல்லாம் ஆராய்ந்து பார்த்து, அதன் பிறகு முடிவு செய்வோம். இந்திய உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு எப்படி எல்லாம் சட்டத்தை வளைக்கலாம் உடைக்கலாம் என்று ஒரு முன்மாதிரியை உலகுக்கு காட்டி உள்ளது. உயர்நீதிமன்றமே அரசியல் அமைப்பை நயவஞ்சமாக ஏமாற்றி உள்ளது. எல்லாஜாதியும் அர்ச்சகலாம் என்ற திமுக அரசின் சட்டத்தை ஏற்பதாக கூறிவிட்டு ஆனால் அந்தந்த கோவில்களில் உள்ள ஆகம விதிகளின் படி அவர்கள் அர்ச்சகராக தொடர அவர்களுக்கு உரிமை உண்டு என்றும் தீர்ப்பு வழங்கி உள்ளது, அதாவது பார்ப்பான் மட்டுமே தொடர்ந்து அர்ச்சகராக இருக்கலாம்.

மலாலா: தீவிரவாதத்திற்கு முஸ்லீம் மக்ககளை குற்றம் சொல்ல கூடாது..நோபல் பரிசு பெற்ற..


இஸ்லாமாபாத் - தீவிரவாதத்திற்கு மக்கள் அனைத்து முஸ்லீம்களையும்
குற்றம் சொல்லகூடாது இது அதிக ஜிகாதிகளை தீவிரவாதிகள் தேர்வு செய்ய உதவியாக அமைகிறது என பெண்கள் முன்னேற்றத்திற்காக போராடி வரும் நோபல் பரிசு பெற்ற இளம் பெண் மலாலா யூசுப் கூறி உள்ளார்.  அரசியல்வாதிகள் எதையும் சிந்தித்து பேச வேண்டும் இதனால் தீவிரவாதிகள் தீவிரமடைய செய்யவே முடியும்.பாரீஸ் தீவிரவாத தாக்குதல் மற்றும் சான் பிரான்சிஸ்கோ துப்பாக்கி சூடு ஆகியவற்றிற்கு பிறகு  இஸ்லாமிய எதிர்ப்பு என இன்னும் அதை மோசமாக்கும் எனகூறி உள்ளார். நான் ஒரு விஷயத்தை முக்கியமாக கூறுகிறேன். தீவிரவாதத்திற்கு எதிராக நீங்கள் அனைத்து முஸ்லீம்களையும் பேச அது மேலும் அதிக தீவிரவாதிகளையே உருவாக்கும்.

ஜெயலலிதா: எந்தநேரத்திலும்,உங்களுடனேயே இருப்பேன்..கலங்காதீர்..எண்ணம் முழுவதும் உங்களை பற்றியே....

சென்னை :எந்த நேரத்திலும், உங்களுடனே இருப்பேன்; கலங்காதீர். என்னுடைய எண்ணம் முழுவதும், உங்களை பற்றியதாகவே இருக்கிறது' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: வெள்ள சேதங்களில் இருந்து, மக்களை மீட்டெடுத்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்கிற பெரும் பணியில், அரசு முழு மூச்சாக ஈடுபட்டிருக்கிறது. நிவாரணப் பணிகளில், எல்லாரும் பங்கேற்கும் வகையில், சமூகத்தின் அனைத்து தரப்பினரும், தங்களால் இயன்ற பொருளுதவியையும், உடல் உழைப்பையும் வழங்கி வருகின்றனர். நிவாரணப் பணிகளில், தன்னலமின்றி ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் நன்றி.அ.தி.மு.க., தொண்டர்கள் ஒவ்வொருவரும், தங்களால் இயன்ற அளவுக்கு, மக்கள் துயர் துடைக்கும் பணிகளில் ஈடுபடுகின்றனர். அதன் ஒரு பகுதியாக, அ.தி.மு.க., - எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், தங்களுடைய ஒரு மாத சம்பளத்தை, நிவாரண நிதியாக வழங்குவர்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன்: சமுகநீதிக்கு எதிரான தீர்ப்பு ! உயர்நீதிமன்றம் அரசியல் அமைப்பு சட்டத்தை உதாசீனம் செய்துள்ளது


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை:’கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவதற்கு வகை செய்து சட்டம் இயற்றப்பட்டது.  அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓர் அமைப்பு வழக்குத் தொடுத்தது.  அதில் உச்சநீதிமன்றம் தடையாணை பிறப்பித்திருந்தது.  7 ஆண்டுகளாக நடைபெற்ற அவ்வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.  ஆகம விதிகளின்படி செயல்படும் ஆலயங்களில் கடைபிடிக்கப்படும் வழக்கங்களுக்கேற்பத்தான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்றும், அப்படி நியமிப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது அல்ல என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

சாப்பாடு செலவு ரூ.40 கோடியா?: வெள்ள நிவாரணத்தில் ஊழல்- விசாரணை கோரும் அன்புமணி

சென்னை: கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குவதற்காக மட்டும் ரூ.40 கோடி செலவாகியிருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. அதுமட்டுமின்றி, மழை - வெள்ள நிவாரணப் பணிகள் எதுவுமே நடக்காத நிலையில் அதற்காக ரூ.100 கோடி செலவழிக்கப் பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது கண்டிக்கத்தக்கதாகும் என்று பாமக எம்.பி, அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விசாரணைக்கும் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளதாவது: வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டங்களில் மீட்புப் பணிகள் முடிந்து நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்தக்கட்டமாக நிவாரண உதவி வழங்கும் பணியும், மறுவாழ்வுப் பணிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். Anbumani Ramadoss request an inquiry in to the flood relief scam

சிதம்பரம் ஆகமவிதிப்படியான நியமனங்கள் சரி; உயர்நீதிமன்றம் தீர்ப்பு ...நீதித்துறை பார்பனர்களின் எடுபிடி....

சிதம்பரம் கோவில் உரிய பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வழி செய்யும் தமிழக அரசின் சட்டப்பிரிவுக்கு எதிரான வழக்குகள் அனைத்தையும் இந்திய உச்சநீதிமன்றம் இன்று புதன்கிழமை முடித்து வைத்திருக்கிறது. இந்த வழக்கு குறித்த இன்றைய தீர்ப்பில், தமிழக கோவில்களில் ஆகமவிதிகளின்படி மட்டுமே கோவிலின் அர்ச்சகர்களை நியமிக்கும் நடைமுறை/மரபு எங்கெல்லாம் ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறதோ அங்கே அந்த நடைமுறையும் மரபும் அப்படியே தொடரலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அப்படியான நியமனங்கள் இந்திய அரசியல் சட்டம் வலியுறுத்தும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற அடிப்படைத் தத்துவத்துக்கு முரணானது அல்ல என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். கோவில் கட்டினவனுக்கு அங்கே இடம் இல்லை வந்தேறுகுடி பார்ப்பானுக்கு சேவகம் செய்யும் உயர்நீதிமன்றம்

அடுத்த தியேட்டர் அடிச்சு வீழ்த்தியாச்சு...வெள்ளம் ஒருபக்கம் கிடக்கட்டும்...


  மக்கள் பலரும் வெள்ளத்தில் தத்தளிக்கும் சூழலில் ஆயிரம் கோடியில் தியேட்டர் வாங்குகிறார்கள் என கார்டனை நோக்கி ஏவுகணை விட்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த். ஜாஸ் எனப் பெயர் மாற்றப்பட்ட ஹாட் வீல்ஸ் நிறுவனம் சென்னை பீனிக்ஸ் மாலில் உள்ள லக்ஸ் தியேட்டரை சொந்தம் கொண்டாடி, அதன் பெயரில் வங்கிக் கடன் பெற்றிருப்பதை ஏற்கனவே ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தது நக்கீரன். அதே நிறுவனம், பட்டுக்கோட்டை யில் ஒரு ஏ.சி. திரையரங்கை கடந்த ஆண்டு பத்திரப் பதிவு செய்திருப்பது இப்போது ஆதாரத்துடன் வெளிச்சத்திற்கு வருகிறது.

எருமை மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனத்திடம் இருந்து ரூ.2.5 கோடி நன்கொடை பெற்ற பா.ஜனதா!

ருமை மாட்டிறைச்சி வியாபாரிகளிடம் இருந்து பாரதிய ஜனதா கட்சி 2.5 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  2013-14, 2014- 15 ம் ஆண்டுகளில் இந்த நன்கொடையை பாரதிய ஜனதா கட்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது 2014-ம் ஆண்டு பொது தேர்தலின் போது, பிரிகிரோபிகோ அல்லானா, பிரிகிரோபிகோ  கன்வென்ரா அல்லானா, இன்டக்ரோ புட்ஸ் நிறுவனங்களிடம் இருந்து 2 கோடி ரூபாயை நன்கொடையாக பாரதிய ஜனதா கட்சி பெற்றுள்ளது.

வீதிக்கு வாருங்கள் முதல்வரே! வானத்தில் வாக்காளர்களை சந்திக்கமுடியாது...விகடன்

அடி முதல் நுனி வரை சூறையாடப்பட்டிருக்கும் லட்சக்கணக்கானோரின் வாழ்க்கை குறித்து, முதலமைச்சர் ஜெயலலிதா கொஞ்சமும் கவலைப்பட்டவராகவே தெரியவில்லை. ‘மூன்று மாதங்கள் பெய்யவேண்டிய மழை மூன்றே நாட்களில் பெய்யும்போது இப்படிப்ட்ட பாதிப்புகளைத் தவிர்க்க முடியாது’ என்று சொல்லத்தெரிந்த ‘மக்கள்’ முதல்வருக்கு, ‘இந்தப் பேரிடர் காலத்தில் எப்போதும் நான் மக்களுடன் இருப்பேன்’ எனக் காட்ட முடியவில்லை. யாரோ கொடுக்கும் நிவாரணப் பொருட்களில் தன் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் ஆற்றல்படைத்த முதல்வரே... ‘பேரிடர் நேரத்தில் எங்களைக் கைவிட்டவர்’ என, மக்கள் மனங்களில் பதிந்திருக்கும் உங்கள் சித்திரத்தை என்ன செய்வீர்கள்? அதை மறைக்க எந்த ஸ்டிக்கரை ஒட்டுவீர்கள்? பதில் சொல்ல ஓர் அதிகாரி இல்லை; விளக்கம் கூற ஓர் அமைச்சர் இல்லை. ஊடக கேமராக்களைக் கண்டால் எல்லோரும் ‘அம்மாவின் ஆணைக்கிணங்க’ அலறி ஓடுகின்றனர்.

ஜெயலலிதா 700 பேருக்கு மேல் இறந்துவிட்டார்கள் என்ற செய்தியை மூடி....ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆறுதல் அளித்தார். சைதாப் பேட்டையில் உள்ள ஜோதியம்மன் நகர், கோதாமேடு, சீனிவாசா தியேட்டர், எம்.ஜி.ஆர் நகர், சூளைப்பள்ளம், கோயம்பேடு ஆகிய பகுதிகளில் மழை வெள்ளத்தால் உடமைகளை இழந்த 14,000 பேருக்கு தலா 5 கிலோ அரிசி, மளிகை பொருட்கள்,போர்வை, புடவை, லுங்கி, பாய் உள்ளிட்ட சுமார் ரூ.40 லட்சம் மதிப்புள்ள பொருட்களை நிவாரண உதவியாக வழங்கினார்.

இதனை தொடர்ந்து அங்கு வந்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்த போது, ’’முதல்வர் தனக்கென்று குடும்பம் கிடையாது என்று கூறி இருக்கிறார். ஆனால் வேளச்சேரி மாலில் உள்ள 11 தியேட்டர்களை தன்னுடைய தோழி சசிகலா பெயரில் வாங்கியது குறித்து இந்து பத்திரிக்கை ஆதாரத்தோடு செய்தி வெளியிட்டது. அதற்கு எந்தவிதமான மறுப்பும் ஜெயலலிதா இன்னும் தெரிவிக்கவில்லை.

செவ்வாய், 15 டிசம்பர், 2015

Y.G.மகேந்திரா: பீப் பாடல் குற்றவாளிகளை தூக்கில் போடவேண்டும்...

சென்னை: கடும் கண்டனம் மற்றும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் பீப் பாடலின் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து தூக்கிலிட வேண்டும் என்று ஒய்.ஜி.மகேந்திரா கருத்துத் தெரிவித்துள்ளார்.
பீப் பாடலுக்கு எதிராக நாளுக்குநாள் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன.
இப்பாடல் குறித்து ஏற்கனவே கங்கை அமரன், வைரமுத்து, பா.விஜய் ஆகியோர் கருத்துத் தெரிவித்துள்ள நிலையில்அனிருத்தின் நெருங்கிய உறவினரான நடிகர் ஒய்.ஜி.மகேந்திராவும் தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.
ஒய்.ஜி.மகேந்திரா தனது பேஸ்புக் பக்கத்தில் ஆவேசமாக சில கேள்விகளை எழுப்பி இருக்கிறார். அவர் கூறும்போது "மற்றுமொரு சர்ச்சைக்குரிய தமிழ்ப் பாடல் பீப் பாடல். அனிருத் எனக்கும் அந்தப் பாடலுக்கும் எந்த விதத்திலும் தொடர்பு இல்லை எனத் தெளிவாகக் கூறி இருக்கிறார்

அதிமுக உள்வீட்டுக்குள் திமுக ஆதரவு புயல்? 2016-ல் அதிமுகவுக்கு படுதோல்வி- திமுகவுக்கே வெற்றி- நமது எம்ஜிஆர் கணிப்பு...அதிர்ச்சி!

சென்னை: அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழான "நமது எம்.ஜி.ஆர்." இணைய பக்கத்தில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் 2016-ல் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என 85.38% எனவும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என வெறும் 13.02% பேர் தெரிவித்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவ உடனடியாக அந்த கருத்து கணிப்பை நீக்கிவிட்டது நமது எம்.ஜி.ஆர். இணையதளம். சென்னை வெள்ளம் தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த போது அரசு மீதும் முதல்வர் மீதும் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக கருதி முன்னாள் டிஜிபி நட்ராஜ், அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். பின்னர்தான் வேறு ஒரு நட்ராஜின் பேட்டிக்கு தொலைக்காட்சி நிர்வாகம் தவறாக முன்னாள் டிஜிபி படத்தைப் போட்டது தெரியவந்தது. drnamathumgr இதனைத் தொடர்ந்து நட்ராஜ் நீக்கம் உத்தரவை அதிமுக பொதுச்செயலரும் முதல்வருமான ஜெயலலிதா ரத்து செய்திருந்தார். இது மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான நமது எம்.ஜி.ஆர். நாளிதழின் இணையபக்கத்தில் ஒரு கருத்து கணிப்பு நடத்தப்பட்டிருந்தது. 2016-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எந்த கூட்டணி வெற்றி பெறும்? என கேட்கப்பட்டிருந்தது. அதில் அதிமுக கூட்டணிக்கு 13.02%; திமுக கூட்டணிக்கு 85.38% ; மற்றவை 1.66% என பதிவாகி இருந்தது. அதிமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையின் இணைய தளத்திலேயே அதிமுகவுக்கு வெறும் 13.02% தான் ஆதரவு என கருத்து கணிப்பு முடிவு வெளியாகி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அப்படியே பிரிண்ட்ஸ்கிரீன் எடுத்து சமூக வலைதளங்களில் பரவவிட்டனர்... இதனால் அதிர்ச்சி அடைந்த நமது எம்ஜிஆர் தரப்பினர் உடனடியாக இணையதளத்தில் இருந்து இந்த கருத்து கணிப்பையே நீக்கிவிட்டனர். அதிமுகவுக்கு கட்டம் சரியில்லை போல!
Read more at://tamil.oneindia.com

முதல்வர் பதவியை பணம் சம்பாதிப்பதற்கான ஒரு வழியாக மட்டுமே ஜெயலலிதா கருதுகிறார். சவுக்கு .com

2176838929_30c714cf74_b
K__Gnanadesikan_2230438e-horzமக்கள் கடும் அவதியில் இருக்கையில்,  புலிக்குட்டிகளுக்கு NAKULAA, DEVAA, KALAA, MALAA  என்று நியுமொராஜி படி பெயர் வைத்த ஒரே ஒரு உலகமகா அறிவுகொழுந்து ....அதைவேற  பத்திரிக்கை செய்தி வெளியிட ஒரு கல்நெஞ்சம்முட்டாள் அரசாக இருந்து வந்த ஜெயலலிதா அரசை, இந்த மழை வெள்ளம் அயோக்கிய அரசாக மாற்றியிருக்கிறது.    அதிமுக கட்சி ஒரு லும்பன்களின் கட்சி என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.    லும்பன்களைத் தவிர வேறு யாருக்கும் அக்கட்சியில் இடம் கிடையாது.    லும்பன்களால்தான், ஊழல் வழக்கில் சிறைசென்ற தலைவிக்காக காவடி தூக்கவும், நீதித்துறையை திட்டி போஸ்டர் ஒட்டவும் முடியும். வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஒரு அபாயகரமான மழையும் வெள்ளமும், தமிழகத்தைத் தாக்கியபோது, போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததோடு நிவாரணப் பணிகளையும் சரிவர கையாளவில்லை என்ற கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கிறது.
டிசம்பர் 1 அன்று பெய்யும் கனமழையை எதிர்ப்பார்த்து, ஏற்கனவே கொள்ளளவு நிரம்பும் அளவுக்கு இருந்த செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட ஏன் தாமதம் என்றும், டிசம்பர் 1 அன்று இரவு 10 மணிக்கு ஏன் 29 ஆயிரம் கன அடி திறந்து விடப்பட்டது என்ற கேள்வியே இப்போது அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.  நவம்பர் 26 மற்றும் 29 அன்று மழை குறைவாக இருந்த அன்று ஏன் தண்ணீரைத் திறந்து விட்டு, ஏரியின் கொள்ளளவை குறைக்கவில்லை. இதயதெய்வத்தின் அருள்பெற்று மக்களை மூழ்கடித்த  கூட்டு குற்றவாளிகள் ஷீலா பாலகிருஷ்ணனும் ஞானதேசிகனும் நிச்சயம் புரட்சியை காலை வாருவாங்க..பொறுத்திருந்து பாருங்கம்மா...

சிபிஐ ரெய்டு..கேஜ்ரிவால் ஆவேசம்: அரசியல் ரீதியாக எதிர்க்க முடியாத மோடியின் கோழைத்தன செயல்-

டெல்லி: தன் அலுவலகத்தில் நடந்த சிபிஐ ரெய்டு பற்றி கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் ரீதியாக தன்னை எதிர்கொள்ள முடியாத பிரதமர் மோடியால் எடுக்கப்பட்ட கோழைத்தன நடவடிக்கை என்று கோபம் வெளிப்படுத்தியுள்ளார். When Modi cudn't handle me politically, he resorts to this cowardice : Arvind Kejriwal கெஜ்ரிவால் ஆபீசில் சிபிஐ ரெய்டு நடத்திய தகவல் வெளியான சில நிமிடங்களில், தனது டிவிட் ஒன்றில், சிபிஐ ரெய்டு நடந்திருப்பதை அவர் உறுதி செய்திருந்தார். மற்றொரு டிவிட்டில், மோடியை கடுமையாக சாடியிருந்தார் கெஜ்ரிவால். அவர் கூறுகையில், "அரசியல் ரீதியாக என்னை எதிர்கொள்ள முடியாமல், இந்த கோழைத்தன நடவடிக்கையை மோடி தூண்டிவிட்டுள்ளார்" இவ்வாறு கெஜ்ரிவால் கூறியிருந்தார். Read more at://tamil.oneindia.com/

அவுஸ்த்ரேலியா கார்டூன் சொல்வதென்ன? இந்தியாவில் வர்க்க வேறுபாடு...ஏழை மீண்டும் மீண்டும்....

இந்தியாவில் வர்க்கங்களிற்கிடையிலான இடைவெளி மிகவும் அதிகம் . அது இந்திய நிலப்பரப்பைப் போன்றது. சனத்தொகையில் பெருந்தொகையான மக்கள் ஒருவேளை உணவிற்கே போராடும் அவலம் இன்றும் அங்குள்ளது. அவர்கள் வாக்குகள் மட்டுமே அரசியல்வாதிகளுக்குத் தேவை . அவர்களோ அவர்களின் நலன்களோ அல்ல . ஆனால் மண்சுவர்களுக்கெல்லாம் தங்க முலாம் பூசிப் பகட்டுக் காட்டும் தந்திரத்தை இந்திய அரசாங்கம் நன்றாகவே அறிந்துள்ளது . பரீஸ் காலநிலை மாநாட்டில் 'செல்பி மோடியின்' பேச்சும் அப்படித்தான் இருந்தது . இதனைச் சுட்டிக் காட்டு விதமாகவே 'பில் லீக்' என்பவரின் காட்டூன் வெளிவந்துள்ளது . ஆனால் இது நிறவெறியென்றே மக்களால் புரிந்து கொள்ளப்படுகின்றது . மாங்காய் சட்னியுடன் சூரியக் கலத்தை உண்ணும் இந்தியன் என்ற சித்திரிப்பு அந்த நாட்டு மக்களைக் கொதிப்படையச் செய்திருக்கலாம் .ஆனால் அந்த காட்டூனிஸ்ட் குட்டிக்காட்ட விரும்பியது இந்திய அரசாங்கத்தின் கொள்கைகளையே அன்றி வேறில்லை .ஆனால் வழமையான உணர்சிகரமான சிந்தனைகளால் இந்த காட்டூன் மக்களால் புரிந்து கொள்ளப்படாமலே போகலாம் . இன்னும் சில நாட்களில் பில் லீக் மன்னிப்பு கோரவைக்கப்பட்டாலும் ஆச்சரியப்படத்தேவையில்லை .

டிஜிபி நடராஜ் நீக்கம் ரத்து.....அதிமுகவில் இருந்து தவறுதலா அவசரகுடுக்கைதனமா நீக்கிட்டோம்ல

சென்னை: அதிமுகவிலிருந்து முன்னாள் டிஜிபி நீக்கப்பட்ட நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா கூறியுள்ளார். செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர் திறப்பு பற்றி தந்தி டிவி நடந்த நிகழ்ச்சியில், 12-ம் தேதி காலை 8.15 மணிக்கு ஒளிபரப்பான வெள்ள நிவாரணம் குறித்த அரசின் செயல்பாடுகளைப் பற்றி தொலைபேசியில் கருத்துக் கூறினார் மூத்த பத்திரிகையாளர் ஆர். நடராஜன். அப்போது அவரது புகைப்படத்திற்கு பதில் முன்னாள் டிஜிபி நடராஜ் புகைப்படத்தை காட்டிவிட்டனர். இதனால் அதிமுக வட்டாரம் அதிர்ந்து போனது. இதையடுத்து அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஆர்.நட்ராஜ் நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா 13ம் தேதி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். former dgp natraj removal Cancel

திங்கள், 14 டிசம்பர், 2015

ஜெயலலிதா என்கிற மேக்கப்பின் பின் ஒளிந்து கொண்டிருந்த...செம்பரபாக்கம் பேரழிவு முகம்

மழைக்கு முன்னர் செம்பரம்பாக்கம் ஏரிஅரசுக்கும், ஆளும் கட்சிக்கும் மக்களின் மேல் எந்தளவுக்கு வன்மம் இருந்தால் புழுப் பூச்சிகளைப் போல் தத்தளிக்க விட்டிருப்பார்கள். ஜெயலலிதா என்கிற மேக்கப்பின் பின் ஒளிந்து கொண்டிருந்த அழுகிப் போன உண்மையான மூஞ்சி மேலும் ஒரு முறை வெளிப்பட்டுள்ளது.செம்பரம்பாக்கம் ஏரி வெள்ளம் – பாசிச ஜெயா அரசின் குற்றம் ! மழைக்கு முன்னர் செம்பரம்பாக்கம் ஏரி
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திடீரென வெள்ள நீர் திறந்து விட்டப்பட்டது, அது தொடர்பான பொதுப்பணித்துறை விதிமுறைகள் மற்றும் வருவாய்த் துறை செய்திருக்க வேண்டிய முன்னெச்சரிகை நடவடிக்கைகள், வெள்ளம் சென்னையை மூழ்கடித்த பின் செய்திருக்க வேண்டிய மீட்புப் பணிகள் என்று சகல அம்சத்திலும் அரசும் அதன் மொத்த நிர்வாக அமைப்புகளும் சீட்டுக் கட்டு மாளிகை போல் சரிந்து விழுந்துள்ளது.
டிசம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் சென்னை மற்றும் வட தமிழகமெங்கும் பேய் மழை பெய்யப் போகும் தகவல் சாதாரண மக்களுக்கு வேண்டுமானால் முன்கூட்டியே தெரியாமலிருக்கலாம். ஆனால், இந்த தகவல் அரசுக்குத் தெரியும். சென்னை வானிலை ஆய்வு மையம் மட்டுமின்றி பல்வேறு சர்வதேச வானிலை ஆய்வு மையங்கள் இந்த தேதிகளில் பெருமழை பெய்யப் போவதை முன்னறிவித்திருந்தன.

மதிமுகவை விட்டு 4 மா. செ. க்கள் திமுகவில் இணைந்தனர் ...

கன்னியாகுமரி: மதிமுகவில் இருந்து கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் தில்லைசெல்வம், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜோயல், நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பெருமாள், புறநகர் மாவட்ட செயலாளர் சரவணன் ஆகிய நால்வரும் சென்னையில் இன்று மாலை தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து அக்கட்சியில் இணைந்தனர். மதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் ஒருவர் பின் ஒருவராக விலகி வருகின்றனர். பெரும்பாலானவர்கள் திமுகவில் தங்களை இணைத்து கொண்டு கட்சி பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் தென் மாவட்ட மதிமுக நிர்வாகிகள் பலர் திமுகவில் இணைய இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்தது. More MDMK leaders join DMK, party in shock இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட மதிமுக செயலாளர் தில்லை செல்வம் உள்ளிட்டோர் நேற்று நாகர்கோவிலில் இருந்து சென்னை புறப்பட்டு சென்றனர். செய்தியாளர்களிடம் பேசிய குமரி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் தில்லைசெல்வம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கட்சி தொண்டர்களின் கருத்தை ஒருபோதும் கேட்பதில்லை. அவர் எண்ணியதைத்தான் கட்சிக்குள் திணிக்க முயல்வார். மதிமுகவில் இரண்டாம் மட்ட தலைவர்கள் எப்போதுமே மட்டந்தட்டப்பட்ட டம்மி பீஸ்கள்தான் .வைகோ யாரையும் தலைதூக்க விடவே மாட்டார். வைகோ ஏன் இன்னும் படத்தில் நடிக்கவில்லை. திரையுலகம்  சிவாஜிக்கு பின்பு ஒரு அற்புத நடிகனை இழக்கிறது 

காசுக்காக எந்த அளவும் கீழிறங்க....திரை உலகம் சிம்பு- அணிருத் அதன் வெளிப்பாடு,,,,,

தந்தி டிவியில் சிம்புவுக்கும் அனிருத்துக்கும் ஆதரவாக  ஹரிஹரன் என்ற பிரகிருதி  கருத்துக்களை   பொழிந்தார்,  சிம்பு  ராஜேந்தர் அனிருத்  போன்றோர் கொஞ்சம்  கூட நேர்மையோ  தைரியமோ  இல்லாமல்  ஒரு  பினாமியை  விவாதத்துக்கு  அனுப்பியுள்ளனர்.
அந்த பாட்டை   நானும் கேட்டேன். அப்படி அதில் என்னதான் இருக்கிறது என்று அறிவதற்காக கேட்டேன், கண்றாவி ... இவ்வளவு தரம் தாழ்ந்த தமிழ் பாட்டு வாழ்நாளில் யாரும் கேட்டிருக்க  மாட்டார்கள். அவ்வளவு மோசம்.
பீப் சத்தத்தில் ஒளிந்திருக்கும் வார்த்தைகளை  எங்குமே யாராலும் சொல்லி காட்டவே முடியாத படு கேவலமான ஒரு வார்த்தையை  டி .ராஜேந்திரின்  தறுதலை புத்திரன் சிம்புவும் ரஜினிகாந்தின் மனைவி லதாவின் நெருங்கிய உறவினர் அணிருத்தும் சேர்ந்து வெளியிட்டுள்ளனர். அல்ல அல்ல .. விளம்பரத்திற்காக லீக் செய்துள்ளனர். அப்புறம் அனிருத் அதை தான் இசையமைக்க வில்லை என்று பின்வாங்குகிறார், சிம்புவோ சொந்த குரலில் பாடியதால் வேற வழியே இல்லாமல் கண்ணதாசன் இயற்றவில்லை வாலி இயற்றவில்லையா என்று புலம்புகிறார்,
நாக்கு அழுகிடும்..கண்ணதாசன் வாலி பெயர்களை உச்சரிக்க கூட தகுதில்லாத இவர்கள் சட்டத்தின் முன் நிறுத்த படவேண்டியவர்கள்.
இவர்கள் மட்டும் அல்ல திரையில் பச்சை ஆபாசத்தையும் வன்முறையையும் விற்று வயிறு வளர்க்கும் அத்தனை  பெரிய நடிகர்களும் டைரக்டர்களும் கூட தண்டிக்க படவேண்டியவர்களே.

செம்பரப்பாக்கம்: கலெக்டர் சுந்தரவவல்லியின் எச்சரிக்கையை தூக்கி எறிந்த ஜெயலலிதாவின் .....!

மழையின் தவறு அல்ல... மனிதனின் தவறு!
சென்னை மூழ்க என்ன காரணம்?‘சென்னையை மூழ்கடித்தது கொட்டித் தீர்த்த பெருமழை அல்ல... திட்டமிடாமல் செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் தண்ணீர் திறந்துவிட்டதுதான் காரணம். ஏரிகளின் நீர்மட்டத்தைக் கையாள்வதில் நிகழ்ந்த குளறுபடிகள் பேரழிவுக்குக் காரணமாகி​விட்டன’ எனப் பரவும் தகவல்கள் அதிர வைத்திருக்கின்றன.
சென்னை குன்றத்தூர் அருகே 6,250 ஏக்கரில் பரந்து விரிந்திருக்கிறது செம்பரம்பாக்கம் ஏரி. சென்னை மக்களின் குடிநீர்த் தேவையையும், காஞ்சிபுரம் மாவட்​டத்தில் ஒரு பகுதி விவசாயத்துக்கும் பயனளிக்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர்தான் சென்னை மக்களின் மீளாத் துயரத்துக்குக் காரணம். செம்பரம்பாக்கம் ஏரியின் உயரம் 24 அடி. மொத்தமாக 3,645 மில்லியன் கன அடி நீரைத் தேக்கிவைக்கலாம். உபரிநீரை 11 மதகுகள் வழியாக வெளியேற்ற முடியும். இப்படி வெளியேற்றப்படும் நீர் குன்றத்தூர், திருநீர்மலை, அனகாபுத்தூர், மணப்பாக்கம், ராமாபுரம், ஜாஃபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், அடையாறு முகத்துவாரம் வழியாகக் கடலில் கலக்கிறது. இதில் எங்கே தவறு நடந்தது?

சென்னை. தெருக்களில் துர்நாற்றம் குப்பையும் சாக்கடையுமாகத்தான் உள்ளது

சென்னை: வெள்ளம் வந்தாலும் வந்தது சென்னை நொந்து நூடூல்ஸாகி விட்டது. வெள்ளம் வடிந்து நாட்களாகியும் கூட இன்னும் தேறவில்லை சென்னை. எங்கு பார்த்தாலும் குப்பையும், சாக்கடையுமாகத்தான் உள்ளது இன்னும்.
பல பகுதிகளில் இன்னும் கூட வெள்ள நீர் வடியவில்லை என்பதுதான் மிகப் பெரிய கொடுமையாக உள்ளது. அந்த வெள்ள நீர் தற்போது சாக்கடையாக மாறி மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
அந்த சாக்கடை கலந்த மழை நீர் எப்போது வடியும் என்று தெரியாமல் மக்கள் கடுப்படைந்து காணப்படுகின்றனர்.
வீடுகளில் கருமை.. பூஞ்சை பெரும்பாலான வீடுகள் மழை நீரில் ஊறிப் போய் கருப்பு நிறத்திற்கு மாறி விட்டன சுவர்கள். சுவர்களில் ஈரப்பதம் இன்னும் போகாததால் பூஞ்சை பிடித்துக் காணப்படுகிறது.
தெருக்களில் துர்நாற்றம் பெரும்பாலான தெருக்களில் இன்னும் வெள்ள நீர் முழுமையாக வடியவில்லை. இதனால் சாக்கடை போல அவை காணப்படுகின்றன. கருப்பு நிறத்துடன் காணப்படும் அந்த நீரில் கொசுக்கள் குடித்தனம் செய்து வருகின்றன. நாற்றம் தாங்க முடியவில்லை.
திருவொற்றியூர் கார்கில் நகர், அன்னை சத்யா நகர், அம்பத்தூர், சூளை, விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, கோவிலம்பாக்கம், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் ராம்நகர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், ஈஞ்சம்பாக்கம், தாம்பரம், அனகாபுத்தூர், முடிச்சூர், லட்சுமிபுரம், எருமையூர், ஊரப்பாக்கம், ஆதனூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவு தண்ணீர் இன்னும் குட்டை போல் தேங்கி கிடக்கிறது.

சவுதியில் 17 பெண் வேட்பாளர்கள் வெற்றி! முதல்முறையாக பெண்களுக்கு வாக்குரிமை....At least 17 Saudi women have wo

ரியாத்: வளைகுடா நாடுகளில் ஒன்றான, சவுதி அரேபியாவில் நடைபெற்ற, உள்ளாட்சி தேர்தலில், முதன் முதலாக, பெண்கள் போட்டியிடவும், ஓட்டளிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் பதிவான ஓட்டுக்களின் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில், மெக்கா நகரின் மத்ரக்கா பஞ்சாயத்து கவுன்சிலுக்கு போட்டியிட்ட, சல்மா பின்ட் ஹிசாப் உட்பட பதினேழு பெண் வேட்பாளர்கள்   வெற்றி பெற்றுள்ளனர். இவரை எதிர்த்து போட்டியிட்ட ஏழு ஆண்கள், இரண்டு பெண்கள் தோல்வி அடைந்தனர். மொத்தம் 17 பெண்கள்  வெற்றி பெற்றதாக அறிவிக்கபட்டது . ஆண் வாக்காளர்களிடம் நேரடியாக ஓட்டு சேகரிப்பில் ஈடுபட அனுமதி வழங்கப்படாத நிலையில், சல்மா வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதுAt least 17 Saudi women have won seats on local municipal councils a day after women voted and ran in elections for the first time in the country’s history, according to initial results released yesterday. The women hail from vastly different parts of the country, ranging from Saudi Arabia’s second largest and most cosmopolitan city to a small village near Islam’s holiest sites. Though not many women were expected to win seats, even limited gains are seen as a step forward for women who had previously been shut out of elections.

தலைமை செயலரின் வெளக்கெண்ணை அறிக்கை.... அளவாகத்தான் தண்ணீர் திறந்து விட்டோம்...

செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்தின் நிர்வாக மேலாண்மை சரியாக இல்லாத
காரணத்தினாலேயே, சென்னை நகர் வெள்ளத்தில் சிக்கியது எனக் கூறப்படுவதை தமிழக அரசு மறுத்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி அந்த நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீரைத் திறந்துவிடுவது குறித்து சரியான நிர்வாக முடிவு எடுக்கப்படவில்லை, அதன் காரணமாகவே அடையாறு ஆற்றில் நீரின் அளவு உயர்ந்து சென்னையில் வெள்ளம் ஏற்பட காரணமாக இருந்தது என பல்தரப்பில் கருத்துக்கள் வெளியாயின.
சென்னை வெள்ளத்தால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டன எனவே அது தொடர்பில், உண்மை நிலை சரியாக விளக்கப்பட வேண்டிய தேவை உள்ளது எனக் கூறி, தமிழக அரசின் தலைமைச் செயலர் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பல இடங்களில் வீடுகளில் நீர் புகுந்தது கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், அரசின் உயரதிகாரிகள் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்தில் தங்கியிருந்து நிலைமையை கவனமாக கண்கணித்து வந்தனர் எனக் கூறும் அவரது அறிக்கை, ஏரியில் நீர் நிரம்பும் வேகம் மற்றும் அளவை கணக்கில் எடுத்தே, அதிலிருந்தே கட்டுப்படுத்தப்பட்ட வகையில் நீர் திறந்துவிடப்பட்டது எனவும் கூறுகிறது.  இந்த வெளக்கெண்ணை அறிக்கைக்காகவே தனியான விசாரணை வைக்கவேண்டும்

ஞாயிறு, 13 டிசம்பர், 2015

அட்டைப் பெட்டிக்குள் பிரபல ஓவியர், வழக்கறிஞர் பிணம்: மும்பையில் அதிர்ச்சி சம்பவம்

மும்பையில் பிரபல ஓவியரும், நிறுவல் கலை நிபுணருமான ஹெம உபத்யாய் (43) மற்றும் அவரது வழக்கறிஞர் ஹரிஸ் பாம்பானி (65) கொலை செய்யப்பட்டு இருவரது உடலும் அட்டைப் பெட்டிக்குள் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுபர்பான் கண்டிவலி பகுதியில் சாக்கடை ஒன்றின் அருகே சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த மும்பை கிருமினல் போலீசார், சடலங்களை மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக இதுவரை 3 பேரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூருக்கும் நேரிடும் சென்னை கதி? நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு

திருப்பூர்,:திருப்பூரில் குளம், குட்டை, ஓடை என நீர் நிலைகளை ஆக்கிரமித்து, அதிகளவு அரசு அலுவலகங்கள், கட்டடங்கள் உள்ளன. சென்னையை போல், கனமழை பெய்தால், கடும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.திருப்பூர் நகரின் பரப்பளவு, 169 சதுர கிலோ மீட்டர். நொய்யல் ஆறு, நல்லாறு, ஜம்மனை பள்ளம், சங்கிலிபள்ளம், கள்ளப்பாளையம், சபரி ஓடைகள், மொத்தம் 41.95 கி.மீ., நீளம் உள்ளன. மழை நீரை சேமிக்க, 60க்கும் மேற்பட்ட குளம், குட்டைகள் இருந்தன.ஆக்கிரமிப்பு மற்றும் நகர வளர்ச்சி, போக்குவரத்துக்கான சாலை வசதி, என பல காரணங்களால் இவை, கபளீகரம் செய்யப்பட்டுள்ளன. பல ஓடைகள் மாயமாகிவிட்டன. ஆறு, ஓடைக கழிவு நீர் வாய்க்கால்களாக மாறியுள்ளன.   எந்த ஒரு ஒழுங்கும் இல்லாமல் மிக வேகமாக முன்னேறிய நகரங்களில் திருப்பூரும் ஒன்று... வளர்சியை ஒருங்கிணைப்பது அரசின் கடமை... அதுதான் எப்படி நட்க்கும் என்பது எல்லோருக்கும் தெரியும்...

நீர்வள விபரம் தெரியாத அதிகாரியை செம்பரப்பக்க ஏரிக்கு பொறுப்பாக நியமித்த கொடுமை நிகழ்ந்துள்ளது

நீர்வளத் துறையில் அனுபவம் இல்லாத அதிகாரியை, உயர் பதவியில் பணியாற்ற வைத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து, பொதுப்பணித் துறை வட்டாரங்கள் கூறியதாவது:பொதுப்பணித் துறையில், நீர்வளப் பிரிவின் முதன்மை தலைமை பொறியாளராக இருந்த ஹேமராஜ், சில மாதங்களுக்கு முன், ஓய்வு பெற்றார். இவர், முக்கிய அமைச்சர் ஒருவரின் உறவினர். பணி ஓய்வு பெற்ற பின், ஹேமராஜ், துறை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். முதன்மை தலைமை பொறியாளராக, திருமாறன் என்பவர் நியமனம் செய்யப்பட்டார்.பொதுப்பணித் துறையின், கட்டடங்கள் பிரிவில் மட்டுமே, பல பதவிகளில் திருமாறன் பணிபுரிந்துள்ளார். இவர், நீர்வளத் துறையின் முதன்மை தலைமை பொறியாளராக நியமிக்கப்பட்டதில், மேல்மட்டத்திற்கு முக்கிய பங்கு உள்ளது. திருமாறன் பதவி ஏற்ற பின், நீர்வளத் துறையின் பல திட்டங்களுக்கு, உலக வங்கி மற்றும் மத்திய அரசு நிதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. நீர்வளத் துறையை நிர்வகிக்க முடியாமல், இவர் திணறினார்.
abu lukmaan - trichy,இந்தியாஅணையின் முழு கொள்ளளவில் 80% தண்ணீர் நிரம்பியதும் தானாக தண்ணீர் வழிந்தொடுமாறு சட்டரை வெட்டி சரி செய்து விட்டால் எந்த பொறியாளரும் தேவை இல்லை .அரசு உத்தரவுக்கும் காத்து இருக்க தேவை இல்லை . மக்களை விழிப்படைய செய்ய ஒரு தானியங்கி siren ,ரேடியோ , ஆகியவற்றை உபயோகித்து கொள்ளலாம் . இப்போது இருக்கும் சென்னைக்கு வழுங்கும் ஏரிகளின் கொள் ளவில் 80% தண்ணீர் ஒரு ஆண்டுக்கு போதுமானது . பத்த வில்லை என்றால் வீராணம் , ஆந்திரா தண்ணீர் உள்ளது அதை வைத்து சரி செய்து கொள்ளலாம் . ஏரிகளையும் இன்னும் 5 அடி தூர் வாரினால் போதும்

வண்டலூர் : 4 குட்டிப் புலிகளுக்கு பெயர் சூட்டிய முதலமைச்சர் ஜெயலலிதா.

சென்னை: வெள்ள பாதிப்பு தொடர்பாக பல்வேறு தரப்பினரும் முதல்வர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் வண்டலூர் உயிரியில் பூங்காவில் புதிதாகப் பிறந்த நான்கு புலிக் குட்டிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா பெயர் சூட்டியதாக செய்திக்குறிப்பு வெளியாகியுள்ளது. சென்னை வெள்ளத்திற்கு அதிமுக அரசின் அலட்சியமே காரணம், செம்பரம்பாக்கம் ஏரியைத் திறப்பதில் தாமதம் செய்து விட்டனர், இதற்கு முதல்வர் ஜெயலலிதாதான் பொறுப்பு என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. Jaya names 4 white tiger cubs இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதாவோ அல்லது தமிழக அரசோ இதுவரை விளக்கம் தரவில்லை. இந்த நிலையில் வண்டலூர் பூங்காவில் பிறந்த நான்கு புலிக் குட்டிகளுக்கு ஜெயலலிதா பெயர் சூட்டியதாக செய்திக்குறிப்பு வெளியாகியுள்ளது.

அதிமுகவிலிருந்து டிஸ்மிஸ் ஆனார் மாஜி டிஜிபி நடராஜ்! செம்பரம்பாக்கத்தைப் பற்றிப் பேசப் போய்....சொந்த காசில சூனியம்

பிந்திய செய்தி : உண்மையில் தந்தி டிவிக்கு பேட்டி கொடுத்தவர் வேற நடராஜ் அவர் அமெரிக்க தூதரக முன்னாள் ஆலோசாகர் அந்த நடராஜ் சொல்லப் போக இந்த நடராஜ் மாட்டிகிட்டார் அம்மா அவசரத்திலா அல்லது டாஸ்மாக் இன்புளுயன்சா தெரியல்ல ...இனி மாத்த முடியுமா இதயதெய்வம் ஒரு தடவ சொன்னா அப்புறம் அவுகளே கேக்க மாட்டய்ங்க ...கேட்டிருந்தா மீண்டும் மீண்டும் சொத்து சேர்த்து கோட்டுக்கு கோட்டுக்குன்னு அலைவாங்களா ? சென்னை: முன்னாள் டிஜிபி ஆர். நடராஜ் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். கட்சியில் சேர்ந்த ஒரு வருடத்திற்குள்ளாகவே அவர் நீக்கப்பட்டுள்ளார். செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பது தொடர்பா அதிகாரிகள் சரிவர செயல்படவில்லை என்று டிவிக்கு பேட்டி அளிக்கப் போய் கட்சியை விட்டு டிஸ்மிஸ் ஆகியுள்ளார் நடராஜ் என்று கூறப்படுகிறது. நடராஜை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைப்பதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். Jaya sacks former DGP R Nataraj from ADMK

தலைமை செயலர்; சேம்பரபாக்கம் ஏரியை திறக்க அனுமதிக்கு காத்திருக்க தேவை இல்லை!....அப்ப ஏன் காத்திருந்தாங்க?

செம்பரம்பாக்கத்தில் உபரி நீர் திறக்க அதிகாரி அனுமதிக்கு காத்திருக்க தேவையில்லை: தலைமைச் செயலாளர் செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் திறக்க அதிகாரியின் அனுமதிக்கு காத்திருக்க தேவையில்லை என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கூறியுள்ளார். மேலும், ஏரியை நிர்வகிப்பவரே நிலைமைக்கு ஏற்ப உபரி நீரை திறக்க முடிவு எடுக்கலாம். டிசம்பர் 1ஆம் தேதி ஏற்பட்ட சென்னை வெள்ளம் அரிதினும் அரிதான நிகழ்வு. டிசம்பர் 1ஆம் தேதி காலை 10 மணிக்கு 10 ஆயிரம் கன அடி திறந்த நிலையில், 12 மணிக்கு 12,000 கன அடியாக உயர்ந்தப்பட்டது. டிசம்பர் 1ஆம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் பிற்பகல் 3 மணி வரை 29 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. 166 ஏரிகளில் இருந்தும் தண்ணீர் வரத்தால் அடையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பது பற்றி முன்னெச்சரிக்கை செய்யப்பட்டது என்று கூறியுள்ளார்  nakkheeran,in

இளங்கோவன் : ஜெ.வை பதவி நீக்கம் செய்து ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியை முன்னறிவிப்பின்றி திறந்துவிட்டு பெரும்
சேதம் ஏற்பட்டதற்கு பொறுப்பான முதல்வர் ஜெயலலிதாவை பதவி நீக்கம் செய்துவிட்டு தமிழகத்தில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையை மூழ்கடித்த பெருவெள்ளத்துக்கு காரணமே செம்பரம்பாக்கம் ஏரியில் முன்னறிவிப்பின்றி பல்லாயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது என்பது பொதுவாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு.
இது தொடர்பாக விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும்; போர்க்குற்றங்களுக்கு இருப்பதைப் போல கட்டளை பொறுப்பு சட்ட கொள்கையின் கீழ் விசாரணை தேவை என்று ஆளுநரிடம் தி.மு.க வலியுறுத்தியுள்ளது. இந்த கோரிக்கையை ஆளுநர் ரோசையாவை நேரில் சந்தித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியும் இருந்தார்.
இதனிடையே இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவன் இன்று வெளியிட்ட அறிக்கை: பாருங்க என்ன ஜோரா உக்காந்து இருக்குதுங்க   இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்கள் வருவார் என கைகூப்பி முதுகு   வளைந்து காத்திருந்து  ஏரியின் மதகு திறந்து சென்னையை பரலோகம் அனுப்பிய இதயதெய்வம் புரட்சிம்ம்ம்ம்   மறுபடியும் இதயதெய்வம்.....