சனி, 27 ஜனவரி, 2018

பத்மாவத் திரைப்படம் நிலைத்திருக்கும் காலத்துக்குள் இந்துத்துவம் அழியும்!

சிறப்புக் கட்டுரை: இவ்வளவு பலவீனமானதா  இந்துத்துவம்?மின்னம்பலம் :பா.நரேஷ் : மிகவும் சாதரணமான கேள்விதான். இந்துத்துவத்தின் வரலாறு பற்றியோ, கொள்கைகள் பற்றியோ நாம் பேசத் தேவையில்லை. ஒரு சமூகத்தைக் குறித்த மதிப்பு என்பது அந்தச் சமூகத்தில் வாழும் பெரும்பான்மையான மனிதர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை வைத்தே அளவிடப்படும். அந்தச் சமூகம் எப்படிப்பட்ட வரலாற்றையும் பண்பாட்டையும் கொண்டிருக்கிறது என்பதை அதன் நடத்தையை வைத்தே அறிய முடியும்.
இந்த அடிப்படையில், இந்துத்துவத்தைப் பற்றி யோசிக்கும்போது சில கேள்விகள் எழுகின்றன. ஒரு திரைப்படத்தால் அவமதிக்கப்படும் அளவுக்கு இந்துத்துவம் அவ்வளவு பலவீனமாக இருக்கிறதா? ஒரு திரைப்படம் தங்கள் பண்பாட்டைச் சீரழித்துவிடும் என்று நம்பும் அளவுக்கு இந்துத்துவவாதிகள் மூடர்களாக இருக்கிறார்களா?

நடிகை சுகன்யாவின் வீட்டு வாடகையை முழுங்கிய நாம் தமிழர் கட்சி அலுவலகம்

Shankar A : நடிகை சுகன்யாவுக்கு சொந்தமான வீடு ஒன்று, சென்னை பெசன்ட் நகர் முதல் மெயின் ரோட்டில் இருக்கிறது.
நாம் தமிழர் இயக்கத்தின் வழக்கறிஞர் தடா சந்திரசேகர் 07.04.2015 அன்று சுகன்யாவின் வீட்டில், வாடகைக்கு குடி போகிறார். ஒப்பந்தத்தி, வீடு, குடியிருக்கும் பயன்பாட்டுக்கு மட்டுமே, வேறு எந்த பயன்பாட்டுக்கும் கிடையாது என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மார்ச் 2016ல், சட்டப்பேரவை தேர்தலுக்காக, சுகன்யாவின் வீடு, நாம் தமிழர் அலுவலகமாக மாற்றப்படுகிறது. வாசலில், வீட்டை மறைக்கும் அளவுக்கு சீமானின் பேனர்கள் வைக்கப்படுகின்றன. உடனடியாக வீட்டை காலி செய்யுமாறு சுகன்யா நோட்டீஸ் அனுப்புகிறார். அவ்வளவுதான். அன்று முதல் வாடகை தருவதை தடா சந்திரசேகர் நிறுத்துகிறார்.
இது தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இன்று வரை நிலுவையில் இருக்கிறது. வீட்டையும் காலி செய்யவில்லை.
தற்போது தடா சந்திரசேகர் தரப்பில், சுகன்யாவுக்கு சமாதானத் தூது விடப்பட்டுள்ளது. என்ன சமாதானம் என்றால், நிலுவையில் உள்ள வாடகையை கேட்காதீர்கள்.
டம்லர்ஸ்: தம்பி  நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரும் ,, இதை நீங்க நல்ல புரிஞ்சிகொனும் ..  அப்பல்லாம் வாடகையை அரசே கொடுத்திடும் ஹஆகாஹ்ஹா

Oxfam முதலாளிகளின் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சியா? ஏழை இந்தியாவை ஒழிக்கும் பணக்கார இந்தியா !

வினவு :ஆக்ஸ்ஃபாம் ஆய்வின் படி இந்தியாவின் முன்னணி ஜவுளி நிறுவனத்தின் உயர் அதிகாரி பெறும் சம்பளத்தை ஒரு சாதாரண தொழிலாளி எட்டுவதற்கு 941 ஆண்டுகள் பிடிக்கும். அந்த அளவில்தான் சம்பள உயர்வு இருக்கிறது.
லக அளவில் வருமான ஏற்றத்தாழ்வு இந்தியாவில் மிக அதிகமென ஆக்ஸ்ஃபாம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் நடத்திய சர்வேயின் படி கடந்த ஆண்டு இந்தியாவில் உருவாக்கப்பட்ட  சொத்து வளங்களில் சுமார் 73% வளங்கள் 1% பணக்காரர்களுக்கு சொந்தமென்பது தெரிய வந்துள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ‘வளர்ச்சி… வளர்ச்சி…’ என்று கூறியே கடந்த நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தார். மக்களும் நமக்கு வளர்ச்சி வந்துவிடாதா என்ற ஆசையில் மோடியை பிரதமராக்கினர். உண்மை என்ன? மூன்றே முக்கால் ஆண்டுகளில் மோடி உருவாக்கிய அந்த ‘வளர்ச்சியை’ப் பற்றி ஆக்ஸ்ஃபாம் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றது.
உலக அளவில் வருமான ஏற்றத்தாழ்வில் இந்தியா மிகவும் மோசமான நிலையில் உள்ளது என ஆக்ஸ்ஃபாம் ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது. கடந்த 2016 -ம் ஆண்டில் ஆக்ஸ்ஃபாம் வெளியிட்ட அறிக்கையின் படி, இந்தியாவின் 58% சொத்துக்கள், 1% பணக்காரர்களிடம் குவிந்ததுள்ளதாகத் தெரிவித்தது. இந்த ஆண்டு அந்த 1% பணக்காரர்களிடம் கூடுதலாக 15% சொத்துக்கள் குவிக்கப்பட்டுள்ளன. இதுதான் நரேந்திர மோடி சாதித்த மற்றும் சாதிக்க விரும்பிய ‘வளர்ச்சி’.

நடிகை சுருதி மோசடி பணத்தை வெளிநாட்டு வங்கியில் டெபாசிட்

தினகரன் :கோவை: ேசலம் எடப்பாடி அருகேயுள்ள காட்டுவலவு பகுதியை சேர்ந்ந்தவர் பாலமுருகன் (32). சாப்ட்வேர் இன்ஜினியர். இவரிடம் திருமண தகவல் இணையதளம் மூலம் அறிமுகமாகிய கோவை பாப்பநாயக்கன்பாளையம் தனலட்சுமி நகரை சேர்ந்த நடிகை ஸ்ருதி (21), திருமண ஆசைகாட்டி 41 லட்சம் மோசடி செய்துள்ளார். இதுதொடர்பாக பாலமுருகன் சைபர்கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிந்த போலீசார் ஸ்ருதி, அவரது தாய் சித்ரா, தம்பி சுபாஷ், வளர்ப்பு தந்தை பிரசன்ன வெங்கடேஷ் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் கடந்த ஒரு வாரமாக இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர்.விசாரணையில், மோசடி செய்த பணத்தை என்ன செய்தார் என்பதை ஸ்ருதி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதுபற்றி போலீசார் கூறியிருப்பதாவது: ஸ்ருதி மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாட்டில் வேலை செய்யும் திருமணமாகாத இளைஞர்களை குறிவைத்து மோசடி செய்துள்ளனர்.

ஸ்டாலின்: களவாணி பசங்களா, “புறம்போக்குகள் மேடையில் நின்னு பேசும் தெம்பை, திராணியை கொடுத்தது இந்த திராவிட மண்

Ganesh Babu :"களவானினா நேரடியா பொன்னாரை சொன்னோம்னு அர்த்தமில்லை. ஜி.எஸ்.டி, உதய் திட்டம், பிரான்சு போர் விமான ஊழல், நீட் தேர்வு, காவிரி நடுவன்மன்றம் அமைக்காததுனு நம்மளை இந்த மத்திய அரசு களவாடலையா? அதைச் சொன்னோம்.
சொந்தமா ஒரு வயலை வாங்கி, அதில உழுது, அதுக்கு நடவு நட்டு, அறுவடைக்கு வந்தாதான் சொந்த நிலத்துல அறுவடப் பண்ண வாரதுனு அர்த்தம். ஆனா ஒன்னுமேயில்லாம அறுவாளை தூக்கிட்டு அறுவடைக்கு வாரதுதான் பொறம்போக்குனு சொல்லுவாங்க. பி.ஜே.பி அப்படித்தான்"
-பி.ஜே.பியை கதறவிட்ட தி.மு.கவின் திரு.அப்பாவு
 கழகங்கள் இல்லாத தமிழகம் என கூறிய பாஜகவினருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட  திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மொழி போர் தியாகி உருவப்படங்களூக்கு பூத்தூவி மரியாதை செல்லுத்தினார்.

சங்கர ராமன் கொலைவழக்கு மீண்டும் விசாரிக்க மனு .. 17 பேர் பிறழ் சாட்சி போலீஸ் அதிகாரிகள் உட்பட

Kalai Mathi - Oneindia Tamil சென்னை: சங்கர ராமன் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்கக்கோரி சென்னை ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் சங்கரமடத்தில் பணியாற்றிய சங்கரராமன், 68வது சங்கராச்சாரியார் சந்திரசேகர சரஸ்வதி மறைந்ததும் பொறுப்புக்கு வந்த ஜெயேந்திரருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மடத்திலிருந்து வெளியேறினார். பின்னர் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளராக பொறுப்பேற்றார். 3.9.2004இல் கோயில் வளாகத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலை சதி திட்டமிட்டதாக ஜெயேந்திரர், விஜயேந்திரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆந்திராவில் இருந்த ஜெயேந்திரர், விஜயேந்திரர் 11.11.2004ல் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளிவந்தனர். இந்த வழக்கில் 25 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.& இதில் ரவி சுப்பிரமணியன் அப்ரூவர் ஆனதாலும் கதிரவன் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டதாலும் எஞ்சிய 23 பேர் மட்டும் வழக்கு விசாரணையின் போது ஆஜராகி வந்தனர்.

டாக்சி டிரைவர் மணிகண்டன் மீது நெருப்பை வைத்து கொளுத்தி கொன்றது போலீஸ்..

Veera Kumar - Oneindia Tamil சென்னை: ஓட்டுநர் மணிகண்டன் மீது தீ வைத்தது அவரைத் தாக்கிய காவலர்களில் ஒருவர் தான் என கால் டாக்ஸி ஓட்டுநர் சங்கத் தலைவர் அன்பழகன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை, தரமணியில் வாடகை கார் ஓட்டுநர் மணிகண்டனை சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக கண்டித்து, காவல்துறையினர் தாக்கினர். மனம் நொந்த அவர் தீக்குளித்ததாக கூறப்பட்டது. சிகிச்சை பலனின்றி இன்று மணிகண்டன் உயிரிழந்தார். The taxi driver Manikantan killed by the police: Taxi driver association chief இதனிடையே, கால் டாக்ஸி ஓட்டுநர் சங்கத் தலைவர் அன்பழகன் இன்று, மணிகண்டன் குடும்பத்தாருக்கு, மருத்துவமனையில் ஆறுதல் கூறினார். பின்னர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது: இது ஒன்னும் இல்லாத பிரச்சினை. சீட் பெல்ட் அணிந்திருக்காவிட்டால், போலீசார் அவரை, வார்னிங் செய்து அனுப்பலாம் அல்லது, அபராதம் விதித்திருக்கலாம்.

பாதாளத்திற்கு செல்லும் பாஜகவின் செல்வாக்கு....விரைவிலேயே தேர்தல் ?-

Sutha - Oneindia Tamil : டெல்லி: லோக்சபாவுக்கு நாளை தேர்தல் நடந்தால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சரிவு ஏற்படும் என இந்தியா டுடே - கர்வி மற்றும் சி வோட்டர் சர்வே ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளது. இந்தியா டுடே - கர்வி கருத்துக் கணிப்பில் நாளையே லோக்சபா தேர்தல் நடந்தால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சரிவு ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மோடிக்கு செல்வாக்கு அப்படியே இருந்தாலும் கூட பாஜகவுக்கு அதனால் பலன் கிடைக்காது என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. இதேபோலவே சி வோட்டரின் கருத்துக் கணிப்பும் தெரிவித்துள்ளது.
 தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 1.7 சதவீத வாக்குகள் அதிகமாக கிடைக்கும். அதேசமயம், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 4.1 சதவீத வாக்கு சதவீத உயர்வு இருக்குமாம்.

 இந்தியா டுடே - கர்வி நடத்திய இன்னொரு சர்வேயில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 258 இடங்கள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறையை விட இது 24 சீட்கள் குறைவாகும்.
என் சி வோட்டர் நடத்திய சர்வேயில் கடந்த முறையை விட இந்த முறை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இடம் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பாஜக கூட்டணிக்கு 279 இடங்கள் கிடைக்குமாம். கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி 282 இடங்களில் வென்றது.

இந்து தர்மத்தை காக்கவந்த புனித போராளிகள் ..

கவிஞர் வைரமுத்துவை ஆபாசமாக விமர்சனம் செய்த நித்யானந்தா சிஷ்யையின் சுயரூபம்..!! “துறவி” என குறிப்பிட்டு நிஜமான துறவிகளை நீங்களே அசிங்க படுத்தாதீர்கள். இதுங்களை நாம் மதத்தினை மனதில் வைத்து ஆதரித்தால், அது நம் மதத்திற்கு சிங்கம். வைரமுத்து செய்த தவறை சுட்டி காட்டுவது அவசியமா ஒன்று. கூவமே குறை கூறுவது தான் வேடிக்கை.நித்யானந்தாவின் இந்த சிஷ்யை செயல் கண்டு எங்கள் இந்துமத துறவிகளை யாரும் தவறாக நினைக்க வேண்டாம்.காரணம் இவர்கள் உடை மட்டுமே துறவிவேஷம். அதனை பற்றி கீழே வரும் வீடியோ வில் விரிவாக பாக்கலாம்….வீடியோ பார்த்துட்டு மறக்காம உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க வீடியோ பிடிச்சு இருந்தா மறக்காம லைக் பண்ணுங்க உங்க கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க வீடியோ கீழே கொடுக்க பட்டுள்ளது . இதுபோன்ற வீடியோக்களை காண எங்களுடைய பக்கத்தை லைக் செய்யுங்க.  முகநூல் உபயம்

வெள்ளி, 26 ஜனவரி, 2018

வீரமணி : சங்கர மடங்கள் மீது போராட்டம் நடத்தப்படும் ,.. விஜெந்திரர் மன்னிப்பு கேட்காவிடில்

மின்னம்பலம் :விஜயேந்திரர் மன்னிப்பு கேட்காவிட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து சங்கரமடங்கள் முன்பும் போராட்டம் நடத்தப்படும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.
தினமணி நாளிதழ் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆண்டாள் பற்றி கவிஞர் வைரமுத்து பேசியது சர்ச்சைக்குள்ளாகவே, பிப்ரவரி 3 ஆம் தேதிக்குள் வைரமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால் மீண்டும் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் அறிவித்திருந்தார்.
ஹெச்.ராஜா தந்தை ஹரிஹரன் எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா கடந்த 23 ஆம் தேதி ஆம் தேதி நடைபெற்றது. நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது ஆளுநர் உள்பட அனைவரும் எழுந்து நின்ற நிலையில், விஜயேந்திரர் மட்டும் அமர்ந்திருந்தார். இது தமிழக மக்களிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

சென்னை அண்ணா சாலியில் 40 அடி நீளத்திற்கு திடீர் பள்ளம்:

வெப்துனியா :சென்னை அண்ணா சாலையில் 40 அடி நீளத்துக்கு திடீரென பள்ளம் ஏற்பட்டதால் அந்த பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் பீதியில் உள்ளனர்.<மெட்ரோ ரயிலுக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி சென்னை அண்ணாசாலை அருகே நிறைவடைந்தது. இந்நிலையில் எழும்பூர் முதல் நேரு பூங்கா இடையே உள்ள இரண்டரை கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ சுரங்க ரயில் சோதனை நடைபெற்றது இன்று நடைபெற்றது.இந்த மெட்ரோ சுரங்க ரயில் சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில் தற்போது அண்ணாசாலையில் 40 அடி நீளத்திற்கு திடீரென பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.>இதனை உடனடியாக ஆய்வு செய்யுமாறு சென்னை ஆட்சியர் மயிலாப்பூர் வட்டாட்சியருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த ஆய்விற்கு பின்னரே திடீர் பள்ளத்துக்கு காரணம் தெரியவரும். சில மாதங்களுக்கு முன்னரும் அண்ணா சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

பேராறிவாளன் திடீர் விடுதலை: அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம்!

வெப்துனியா :அதள பாதாளத்தில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் மக்கள் செல்வாக்கை உயர்த்தவும், பாஜக கைப்பாவையாக இருக்கிறார் என்ற இமேஜையும் ஒரே நாளில் உடைக்கவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேரறிவாளன் விடுதலை விவகாரத்தை கையிலெடுத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து திடீரென முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்த தொடங்கிவிட்டதாக பேசப்படுகிறது.>இது தொடர்பாக துணை முதல்வரிடம் பேசிய அவர், சில அதிகாரிகளை அழைத்தும் ஆலோசனை கேட்டுள்ளார். இந்த முடிவை எடப்பாடி பழனிச்சாமி எடுத்தால் மக்களிடம் மிகப்பெரிய ஆதரவு கிடைக்கும். இந்த முடிவை எடுக்க ஜெயலலிதா, கருணாநிதிக்கு இருந்த தயக்கம், நெருக்கடி எடப்பாடியிடம் இல்லை என கூறப்படுகிறது.

தமிழக குடியரசு தினவிழாவில் குஜராத் ஆதிக்கம் .. ஆளுநரின் அடுத்த அடாவடி !

வெப்துனியா :நாடு முழுவதும் 69-வது குடியரசுத்தின விழா மிகவும் கோலகலாம கொண்டாடப்பட்டது. அதே போல சென்னை மெரினாவிலும் இந்த விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் குஜராத் பாரம்பரியத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.சென்னை மெரினாவில் தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்ட குடியரசுதின விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பலத்த பாதுகாப்புடன் தேசிய கொடியை ஏற்றினார். அதன் பின்னர் நடந்த கண்கவர் கலைநிகழ்ச்சி விழாவில் குஜராத் பாரம்பரியத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.தமிழக கலையான கரகாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம் மற்றும் பறை இசையும் இந்த விழாவில் இடம்பெற்றது. தமிழக பள்ளி மாணவர்கள் பலர் இதில் கலந்துகொண்டார்கள். அதே நேரத்தில் குஜராத் பள்ளி மாணவர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.<;">எந்த விதிமுறையையும் பின்பற்றாமல் இந்த குஜராத் மாணவர்கள் நேரடியாக கடைசியில் விழாவில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

சடகோப ராமானுஜ ஜீயர் :எங்களுக்கும் சோடா பாட்டில் வீச தெரியும் ..

Shyamsundar - Oneindia Tamil சென்னை: எங்களுக்கும் சோடா பாட்டில் வீச தெரியும் என சடகோப ராமானுஜ ஜீயர் பேசி இருக்கிறார். மேலும் இறைநம்பிக்கைக்கு எதிராக பேசினால் அமைதியாகி இருக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளார். தனியார் பத்திரிக்கை நடத்திய நிகழ்வு ஒன்றில் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசினார். அவர் ஆண்டாளின் பிறப்பு குறித்து தவறுதலாக பேசிவிட்டதாக சர்ச்சை எழுந்தது. We know how to throw stones, bottles says Jeeyar வைரமுத்துவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீவில்லிப்புத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் போராட்டம் அறிவித்து இருந்தார். கடந்த 16 தேதிக்குள் வைரமுத்து மன்னிப்பு கேட்கவேண்டும் என்று அவர் காலக்கெடு விதித்து இருந்தார். மன்னிப்பு கேட்கவில்லை என்பதால் ஜீயர் 17ம் தேதி தனது உண்ணாவிரத்தை தொடங்கினார்.சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக ஜீயர் கூறினார். ஆனால் அதற்கு மறுநாளே அவர் தனது உண்ணா விரதத்தை கைவிட்டார்.

ரகுராம் ராஜன் : பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு பணமதிப்பிழப்பே காரணம்! இந்திய பொருளாதாரம் படு மோசமான ...

நக்கீரன் :இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய வீழ்ச்சிக்கு பணமதிப்பிழப்பு நடவடிக்கையே காரணம் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை குறித்து தனது கருத்துகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தவர் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன். சுவிட்சர்லாந்தின் டேவோஸ் நகரில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ‘அமைப்புசாரா தொழில்கள் பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அந்தத் தொழில்களில் பல தற்போது மூடப்பட்டு விட்டன. மேலும், அந்த சமயத்தில் அவற்றை நடத்தியவர்களால் தப்பிப் பிழைத்து மீண்டும் தொழில் நடத்த இயலாத நிலை ஏற்பட்டது’ என அவர் தெரிவித்துள்ளார்.

தீக்குளித்த வாடகை கார் டிரைவர் மணிகண்டன் மரணம் .. சென்னையில் ,,

சென்னையில் தீக்குளித்த வாடகை கார்  டிரைவர் மணிகண்டன் மரணம்
தினத்தந்தி :சென்னையில் சீட்பெல்ட் அணியாததால் கண்டித்ததாக கூறி தீக்குளித்த கார் ஓட்டுநர் மணிகண்டன் இறந்தார்  நெல்லையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). இவர் தாம்பரம் பகுதியில் தங்கி இருந்து, கிண்டியில் உள்ள தனியார் கால்டாக்சி நிறுவனத்தில் கார் டிரைவராக பணிபுரிகிறார். நேற்று மாலை வேளச்சேரிக்கு சவாரி சென்றுவிட்டு கிண்டிக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். சென்னை தரமணி எஸ்.ஆர்.பி.டூல்ஸ் பகுதியில் வேளச்சேரி போக்குவரத்து போலீசார் 4 பேர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மணிகண்டன் காரில் ‘சீட் பெல்ட்’ அணியாமல் வந்ததாக தெரிகிறது. இதை கண்டதும் அவரது காரை போலீசார் நிறுத்தினார்கள். காரில் ‘சீட் பெல்ட்’ அணியாமல் வந்ததால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறி அவரிடம் போக்குவரத்து போலீசார் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் போக்குவரத்து போலீசாருக்கும், மணிகண்டனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது போக்குவரத்து போலீசார், டிரைவர் மணிகண்டனை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் மணிகண்டனின் ஓட்டுனர் உரிமம், செல்போன் ஆகியவற்றையும் போலீசார் பறித்துக்கொண்டனர். பொது இடத்தில் வைத்து தன்னை போலீசார் தாக்கியதால் அவமானம் அடைந்த டிரைவர் மணிகண்டன், அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து 1 லிட்டர் பெட்ரோல் வாங்கி வந்தார்.

பார்த்திபன் :தேசியக்கொடி எழுந்து நின்று மரியாதை செய்ஓம்!

R.Parthiban: ஒருவழியாக... பத்மவிபூஷனுக்கு இளையராசா கிடைத்த மகிழ்ச்சியில் நாளை மிட்டாய் வழங்கி பூக்கள் தூவி சிறகடித்து பறக்கிறது -நம் தேசியக்கொடி 🇮🇳 எழுந்து நின்று மரியாதை செய்ஓம்! இசைக்குள் ஆழ்தலும் தியானமே!கலாய்  


Shankar A : ஒரு சுயமரியாதை உள்ள மனிதன்
நீ யாரடா எனக்கு அங்கீகாரம் கொடுக்க....
நானும் உன்னைப் போலவே மனிதன். உன்னை விட சிறந்தவன். நான் கலைஞன். படைப்பதனால் என் பேர் இறைவன் என்று சொல்லுவான்.
ஆனால் இளையராஜா, பார்ப்பனர்களின் கடைக்கண் பார்வை நம் மீது பட்டு விடாதா... நம் தீட்டு கழிந்து விடாதா... பார்ப்பனர் வீட்டில் மிதியடியாக இருக்கும் பாக்கியமாவது நமக்கு கிடைக்காதா என்று ஏங்கும் அளவுக்கு சுயமரியாதை உள்ள நபர். நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் இன்றைய முதல் பக்க செய்தியை, இளையராஜா பார்த்து இந்நேரம் புளகாங்கிதம் அடைந்து கொண்டிருப்பார். இறும்பூது எய்தியிருப்பார்.

18 லட்சம் சட்டவிரோத குடியேறிகளுக்கு குடியுரிமை வழங்க அமெரிக்கா திட்டம்


அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள சுமார் 18 லட்சம் வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கும் திட்டம் ஒன்றை டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்துள்ளது.
அதிபர் டொனல்டு டிரம்பின் நெருங்கிய சகாவான வெள்ளை மாளிகையின் கொள்கை வகுப்புக் குழுவின் தலைவர் ஸ்டீஃபன் மில்லர், "எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியுடன் நாடாளுமன்ற விவகாரங்கள் குறித்த பேச்சுவார்த்தையின்போது, மெக்சிகோ எல்லையில் சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுப்பதற்கான சுவர் ஒன்றை எழுப்ப 2500 கோடி அமெரிக்க டாலர் நிதியை வழங்க ஒப்புதல் அளித்தால், அடுத்த 10-12 ஆண்டுகளில் சட்டவிரோத குடியேறிகளுக்கு குடியுரிமை வழங்க ஆவண செய்ய்யப்படும் என்று தெரிவிக்கப்படும்" என்று குடியரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளார். அதற்கான நிதி மசோதா வரும் திங்களன்று நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது. எனினும் மெக்சிகோ எல்லைச் சுவருக்கு அரசு நிதி வழங்குவதை எதிர்க்கப்போவதாக ஜனநாயகக்கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆரியப்படை எடுப்பு .. நிருபிக்கப்பட வரலாற்று உண்மைகள் .


ஆரிய படையெடுப்பு உண்மையே... கால்டுவெல்லுக்கு நன்றி
ராபர்ட் கால்டுவெல் - இந்து மதத்தை அழித்து கிறித்துவத்தை பரப்ப வந்தவர்; அவர் தன்னலன் கருதி திராவிடம், ஆரியம் என்று நம்மை பிரித்து நம் ஒற்றுமையை சிதைத்து விட்டார்; திராவிடம் என்று இல்லாத ஒரு புனைவு கதையை கூறி நம்மை ஆங்கில மோகத்துக்கு இழுத்தவர்; அவர் ஒரு புரட்டுக்காரர்; சூழ்ச்சிக்காரர் என்றெல்லாம்
இன்று பார்ப்பனர்களாலும், திராவிடத்தை மறுக்கும் தமிழ் தேசிய வாதிகளாலும் அர்ச்சிக்கப்படுபவர். அவர் மறைந்த பிறகும் அவர் மேல் இன்னும் இப்பாம்புகள் விஷம் கக்கும் அளவிற்கு அவர் அப்படி என்ன தான் சொன்னார்?
ஆரியர்கள், இன்று இந்தியா என்று அழைக்கப்படும் நிலப்பரப்பிற்கு, மேற்காசிய அய்ரோப்பிய கண்டத்தி லிருந்து வந்தவர்கள். அவர்களின் மொழியே சமஸ்கிருதம். இந்நிலப்பரப்பில் அதற்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டு களுக்கு முன்னிருந்து வாழ்ந்தவர்கள் திராவிடர். அவர்களின் மொழி தமிழாக தோன்றி, பின்பு கன்னடம் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளாக கிளை பரப்பியது என்று கூறினார்.

விஜயலட்சுமி நவநீத கிருஷணனுக்கு பத்மஸ்ரீ விருது ... ஆண்டாள் அரசியல் .. கைமேல் பலன் !


Vijayalakshmi Navaneetha Krishnan gets 2018 Padma Shri பழம்பெரும் பாடகி ஜானகி பத்ம பூஷன் விருதை புறக்கணித்தது  ஏன் எனபது இப்போது விளங்குகிறது அல்லவா!
tamil.oneindia.-shyamsundar: டெல்லி: நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
2018ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
இவர் தமிழில் நிறைய நாட்டுப்புற பாடல்கள் பாடியுள்ளார். பல்வேறு வகையான பாடல்கள் பாடியுள்ளார்.
இவரது பாடல்கள் கிராமங்களில் மிகவும் பிரபலம். இசைத்துறையில் சிறந்து விளங்கியதால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

வியாழன், 25 ஜனவரி, 2018

பிளாஸ்டிக் சேர்ஜரியால் நடிகை ஸ்ரீ தேவியின் முகம் விகாரமாகி விட்டது ...

ஸ்ரீதேவி
பிளாஸ்டிக் சர்ஜரி tamiloneindia - Siva: ஸ்ரீதேவியும் பிளாஸ்டிக் சர்ஜரியும் மும்பை: நடிகை ஸ்ரீதேவி உதட்டில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது விகாரமாகிவிட்டது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீதேவி இயற்கையிலேயே எவ்வளவு அழகு என்பது கோலிவுட், பாலிவுட் ரசிகர்களுக்கு தெரியும். முதலில் அவர் தனது மூக்கை பிளாஸ்டிக் சர்ஜரி செய்தார். அது ரசிகர்கள் பலருக்கும் பிடிக்கவில்லை.
அழகு மூக்கை இந்த ஸ்ரீதேவி இப்படி கெடுத்துக் கொண்டாரே என்று ஃபீல் பண்ணினார்கள்.

இந்தியாவின் பாதி மாநிலங்கள் கிரிமினல்களின் கைகளில்தான் இருக்கிறது

Swathi K தீவிரவாதம்னா ஏதோ வெளிநாட்டில் இருந்து இங்க வந்து "பாம்" வைக்கிறது மட்டும்னு நம்ம தப்பா நினைச்சுட்டு இருக்கோம்.. இந்தியாவின் பாதி மாநிலங்கள் இப்ப தீவிரவாதிகள்/ கிரிமினல்ஸ் கையில் தான். "பத்மாவதி" திரைப்படத்தை வெளியிடவிடாமல் "பள்ளிகள்", "கல்லூரிகள்", "ஸ்கூல் பஸ்", "தியேட்டர்", "மால்"னு எல்லா இடங்களுக்கும் தீ வைப்பு சம்பவங்கள். பற்றி எரிகிறது வட மாநிலங்கள்.... இது ஒரு சின்ன உதாரணம் தான்.. இந்த "தீ".. இனி நாடு முழுவதும் பற்றி எறிய வாய்ப்பு அதிகம் இருக்கிறது😢😢😢..
மோடி & அமித்ஷா பதவி வெறியால்.. காவிக்கொடி இந்தியா முழுவதும் பறக்கட்டும்!!! நாடும், நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்!!!👿👿👿
மோடி வாழ்க!! அமித்ஷா வாழ்க!!! புதிய இந்தியா வாழ்க!!!!
வருத்தங்களுடன்,
சுவாதி, திருநெல்வேலி
Thomas Vijayakumar": கொஞ்சமும் தகுதியில்லாத ஒரு கும்பலை அரியணையில் ஏற்றிய வட இந்தியத் தற்குறிகள். விளைவு சம்பந்தமில்லாமல் பாதிக்கப் படும் தென்னிந்திய மாநிலங்கள்.

உச்ச நீதிமன்ற நெருக்கடி முற்றுகிறது ! பாசிச அபாயம் நெருங்குகிறது!*


இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிக்கு அடுத்த நான்கு மூத்த நீதிபதிகள் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கின்றனர். இந்திய நீதித்துறையின் வரலாற்றில் இது மிகப்பெரிய நெருக்கடி என்று கூறுகிறது “லைவ் லா” இணையதளம்.
தீபக் மிஸ்ராவுக்கு அடுத்த மூத்த நீதிபதியான செல்லமேஸ்வர் பேசியதன் சுருக்கம் கீழ் வருமாறு :
“இந்த நாட்டின் வரலாற்றிலும் உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றிலும் இது ஒரு அசாதாரணமான நிகழ்வு. இப்படி ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவதில் எங்களுக்கு சிறிதும் மகிழ்ச்சியில்லை என்றபோதிலும் இதைத்தவிர இனி எங்களுக்கு வேறு வழியில்லை.”
“சமீப காலமாகவே உச்ச நீதிமன்றத்தின் நிர்வாகம் சரியாக இல்லை. கடந்த சில மாதங்களாக விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நாட்டின் மூத்த நீதிபதிகள் என்ற முறையில் தலைமை நீதிபதியை சந்தித்து சில விசயங்கள் சரியாக இல்லை என்று நாங்கள் நால்வரும் சுட்டிக்காட்டினோம். ஆனால் பயனில்லை.”

ஜிஎஸ்டி வரிவிதிப்பால் துணைத் தூதரகங்கள் மூடப்படுகிறது

சென்னையில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, ஜப்பான், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஜெர்மனி, மலேசியா, இலங்கை, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளின் துணைத் தூதரகங்கள் இயங்குகின்றன.
tamilthehindu : பிரகாஷ் எம்.ஸ்வாமி: ஜிஎஸ்டி எனும் மூன்று எழுத்து தந்திரம் பொதுமக்களை, வியாபாரிகளை மட்டும் பாதிக்கவில்லை. சென்னையில் உள்ள சுமார் ஒரு டஜன் வெளிநாட்டு துணைத் தூதரகங்களைக் கூட இழுத்துமூட வேண்டிய நிலைமைக்குத் தள்ளிவிட்டது.
சர்வதேச ஒப்பந்தங்களின் உதவியுடன் வெளிநாடுகளில் பணிபுரியும் தூதர்கள், துணைத் தூதர்கள், தூதரக அதிகாரிகளுக்கு அவர்களின் பணி காலத்தில், எந்த ஒரு வெளிநாட்டு அரசும் எந்தவித வரியையும் விதிக்காது. இது உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும்.
அமெரிக்காவில் அயல்நாட்டு தூதரக அதிகாரிகள் தங்கள் ஐ.டி. கார்டை காட்டினால், நிறுவனங்கள் வரியைத் தள்ளுபடி செய்து பொருட்களைக் கொடுத்துவிடுவார்கள். சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வரியைப் பிடித்து, உடனே தள்ளுபடி செய்து திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். இந்தியாவில் வரியை பிடித்து, பிறகு மத்திய மாநில அரசுகள் ஆமை வேகத்தில் அதைத் திருப்பித் தருவது வழக்கமான நடைமுறை. அந்தந்த நிதி ஆண்டுக்குள் திரும்ப வந்தால் போதும் என்று தூதரக அதிகாரிகளும் பெரியதாக கண்டு கொள்வதே இல்லை.

கமல ஹாசன் : தியானத்தில் இருப்பது விஜயேந்திரரின் கடமை; எழுந்து நிற்பது எனது கடமை.. வசூலை தருவது "பேன்ஸ்" கடமை ?

தினகரன் :சென்னை : சில பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்ல முடியாது, செய்து தான் காட்ட முடியும் என்று நடிகர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். கண்ட இடங்களில் தமிழ்த்தாய் வாழ்த்தை இசைக் கூடாது என்று கூறிய அவர்,கண்ட இடங்களில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடுவதால்தான் இது போன்ற சர்ச்சை ஏற்படுகிறது என்று கூறினார்.தியானத்தில் இருப்பது விஜயேந்திரரின் கடமை என்றும் எழுந்து நிற்பது தனது கடமை என்றும் அவர் கூறியுள்ளார்.தமிழகத்தை மேம்படுத்துவதே தமது முதல் நோக்கம் என்று  கூறிய கமல், தமது நோக்கமும் , ரஜினியின் நோக்கமும் தமிழக மக்களை மேம்படுத்துவது தான் என்றும் மக்களுக்கு துணையாக இருப்போம், எது வந்தாலும் எதிர்ப்போம் என்றும் அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இளையராஜாவுக்கு பத்மவிபூஷன் விருது அறிவிக்க பட்டிருக்கிறது

Shyamsundar - Oneindia Tamil சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு பத்ம விபூஷண் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பத்ம விபூஷண் விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என தொலைக்காட்சிக்கு இளையராஜா பேட்டி அளித்துள்ளார். 2018ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. Ilaiyaraaja speaks about 2018 Padma Vibhushan இதில் இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு பத்ம விபூஷண் அறிவிப்பு. இசைத்துறையில் சிறந்து விளங்கியதால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து இளையராஜா தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்து இருக்கிறார். அதில் பத்ம விபூஷண் விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்றுள்ளார். மேலும் '' மத்திய அரசு என்னை கௌரவித்ததாக கருதவில்லை, தமிழகத்தையும், தமிழ் மக்களையும் கௌரவித்ததாக கருதுகிறேன்'' என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்

மொழிப்போர் தினம் ஜனவரி 15.. அனுசரிக்கப்படவேண்டிய நாள் ...மாறாக 25 அல்ல.

Shalin Maria Lawrence : நடராசன் -தாளமுத்து
சரியாக சொன்னால் தமிழ்நாட்டில் மொழிப்போர் தினம் அனுசரிக்கப்படவேண்டிய நாள் ஜனவரி 15 மாறாக 25 அல்ல.
இந்த மாநிலத்தில் ஹிந்தி திணிப்பை எதிர்த்து நடந்த கிளர்ச்சிகள் இரண்டு நிலைகளை கொண்டது. பொதுவாக 1965 களில் நடந்த இரண்டாம் நிலை போராட்டங்களைதான் ஊடகங்கள் அதிகமாக பேசி இருக்கின்றன.ஆனால் அதற்கு முன்பே 1938 ஆம் ஆண்டில் தான் இந்த மாநிலம் ஹிந்தி திணிப்பிற்கு எதிராக தன் முதல் எழுச்சியை கண்டது.
1938 ஆம் ஆண்டு அன்றைய காங்கிரஸ் முதலமைச்சராக இருந்த ராஜாஜி அவர்கள் ஹிந்தி பாடத்தை பள்ளிக்கூடங்களில் கட்டாயமாக்கும் சட்டத்தை நிறைவேற்றினார்.
இந்த சட்டத்தால் சுயமரியாதை தமிழர்கள் கொதித்து போனார்கள். அங்கங்கே கொந்தளிப்புகள் இருந்தாலும் அராசங்கத்திற்கு எதிராக யார் முதலில் குரல் எழுப்புவது என்கிற தயக்கம் இருந்தது.

அவமானப்படுத்தி தற்கொலைக்குத் தூண்டியதாக போலீசார் மீது வழக்குப்பதிவு!

தற்கொலைக்குத் தூண்டியதாக போலீசார் மீது வழக்குப்பதிவு!மின்னம்பலம் :கார் ஓட்டுநரைத் தற்கொலைக்கு தூண்டியதாக நான்கு போலீசார் மீது சென்னை காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
சென்னை ஓஎம்ஆர் சாலையில் நேற்று டாக்ஸி ஓட்டுநரான மணிகண்டனைப் போக்குவரத்து துறை போலீசார் தாக்கியதால் அவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பலத்த தீக்காயங்களுடன் அவர் தற்போது கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மணிகண்டன் சுய நினைவை இழந்துவிட்டதாக மருத்துவர்கள் இன்று தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் மணிகண்டனைக் கண்டித்த போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் விஸ்வநாதன் கூறியிருந்தார்.

இலங்கை கடல் எல்லை சட்டதிருத்தத்துக்கு எதிர்ப்பு!

இலங்கை சட்டதிருத்தத்துக்கு எதிர்ப்பு!மின்னம்பலம் : இலங்கை கடல் எல்லைக்குள் நுழையும் அயல்நாட்டு மீனவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று (ஜனவரி 24) சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்பட்டது. இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று, ஒரே நேரத்தில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் குரல் கொடுத்துள்ளன.
இலங்கை மீன்வளத்துறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதாவை, ஜனவரி 24ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் அந்நாட்டு அமைச்சர் மகிந்த அமரவீர. இந்த சட்டதிருத்த மசோதா மூலமாக, 15 மீட்டர் நீளமுள்ள படகிற்கு இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ.50 லட்சமும், 15-24 மீட்டர் நீளமுள்ள படகிற்கு 2 கோடியும், 24-45 மீட்டர் நீளமுள்ள படகிற்கு 10 கோடியும், 45-75 மீட்டர் நீளமுள்ள படகிற்கு 15 கோடியும், 75 மீட்டருக்கும் அதிமுள்ள படகிற்கு 17.5 கோடி ரூபாய் வரையிலும் அபராதம் விதிக்க முடியும். சம்பந்தப்பட்ட படகின் உரிமையாளரை நீதிமன்றத்திற்கு வரவழைத்து, ஒரு மாதத்துக்குள் வழக்கை தீர்க்க முடியும் என்று சட்ட திருத்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

அமீர் : ரஜினி டெல்லியில்தான் அரசியலை தொடங்கவேண்டும் ,,, சிஸ்டம் சரியில்லை என்றால் முதலில் அங்குதான்

அச்சமில்லை அச்சமில்லைவிகடன் : அலாவுதின் ஹுசைன்
பிரியங்கா.பவிகடன் :  வழக்கமாக சினிமா விழாக்களில் சினிமா பிரபலங்கள் பலர் பங்கேற்று சம்பந்தப்பட்ட படக்குழுவினரை வாழ்த்திப் பேசுவார்கள். சமயத்தில் அதில் சினிமா சார்ந்த பிரச்னைகள் பற்றி காரசாரமாக விவாதிக்கப்படுவதும் உண்டு. ஆனால் இயக்குநர் அமீர் தயாரித்து நடிக்கும் ‘அச்சமில்லை அச்சமில்லை’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஒரு சின்ன மாற்றம். சினிமாவால் அரசியலில் பல நிகழ்வுகளும், அரசியலால் சினிமாவில் பல நிகழ்வுகளும் நடந்து வரும் இந்தச் சூழலில் சுப.உதயக்குமார், டிராஃபிக் ராமசாமி, கார்ட்டூனிஸ்ட் பாலா, வளர்மதி ஆகிய சமூகச் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டு பேசினர்.

கொள்ளையன் நாதுரமை தமிழக போலீசிடம் ஒப்படைக்க நீதிமன்றம் அனுமதி

கொள்ளையன் நாதுராமை தமிழக போலீசிடம் ஒப்படைக்க ராஜஸ்தான் கோர்ட் அனுமதி
மாலைமலர் :கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வதுக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான நாதுராமை தமிழக போலீசிடம் ஒப்படைக்க ராஜஸ்தான் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. ஜெய்ப்பூர்: சென்னை கொளத்தூர் நகைக்கடையில் 3.5 கிலோ தங்கநகை கொள்ளை தொடர்பாக கொள்ளையன் நாதுராமைத் தேடி சென்னையை சேர்ந்த தனிப்படை போலீசார் ராஜஸ்தான் சென்றனர். டிசம்பர் 12-ம் தேதி அதிகாலை நாதுராம் மற்றும் அவனின் கூட்டாளிகளை சுற்றிவளைத்து பிடிக்க முற்பட்டபோது ஆய்வாளர் பெரியபாண்டி துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார். கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். இன்ஸ்பெக்டர் முனிசேகரின் துப்பாக்கியை எடுத்து கொள்ளையர்கள் சுட்டதில் பெரியபாண்டியன் இறந்ததாக முதலில் கூறப்பட்டது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், கொள்ளையர்களை நோக்கி முனிசேகர் துப்பாக்கியால் சுட்ட போது குறி தவறி பெரியபாண்டி உயிரை பறித்தது தெரியவந்தது. தப்பியோடிய நாதுராம் ஒரு மாத கால தேடுதல் வேட்டைக்குப்பிறகு குஜராத்தில் கைது செய்யப்பட்டான். பின்னர் அவன் ராஜஸ்தான் கொண்டு செல்லப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டான். அவனை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்காக தமிழக போலீசார் ராஜஸ்தான் சென்றனர்.

திருப்பூர் மாவட்ட நீதிபதி அலமேலு நடராஜன் காலமானார் ... உடுமலை ஆணவகொலை ..

மாலைமலர்: உடுமலை சங்கர் கொலையில் 6 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கிய திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதி அலமேலு நடராஜன் இன்று காலை மரணமடைந்தார்.
திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதி அலமேலு நடராஜன் மரணம் நீதிபதி அலமேலு நடராஜன். கோவை: திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதியாக இருந்தவர் அலமேலு நடராஜன் (52). இவர் உடுமலை சங்கரை கவுரவ கொலை செய்த 6 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கினார்.
 இந்தியாவில் கவுரவ கொலைக்கு எதிராக தூக்கு தண்டனை வழங்கிய இவரது தீர்ப்பு பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. கடந்த சில நாட்களாக நீதிபதி அலமேலு நடராஜன் நுரையீரல் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை 11.37 மணிக்கு நீதிபதி அலமேலு நடராஜன் ஆஸ்பத்திரியில் காலமானார். இதை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்தது. மரணம் அடைந்த நீதிபதி அலமேலு நடராஜன் கோவை போத்தனூரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் நாராயணசாமி: கலாச்சாரம், மொழி மக்களுக்கான சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும்

5500 ஆண்டுக்களுக்கு முன்பு நமக்கு கிடைத்த முதல் தமிழ் நூல் “தொல்காப்பியம்’’. அதில் “கூத்து நாடகம்’’ என்ற சொற்கள் உள்ளன. 11ம் நூற்றாண்டில் - “திவாகர நிகண்டு’’ என்னும் நூலில் கூத்தில் பிறந்தது
நக்கீரன் :நாட்டியக் கோப்பே!
கலாச்சாரம், மொழி நம்பிக்கைகளை கடைபிடிக்க ;மக்களுக்கான சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும்: நாராயணசாமி பேச்சு;"தாங்கள் விரும்பும் கலாச்சாரம், மொழி, நம்பிக்கைகளை கடைபிடிக்க பொதுமக்களுக்கான சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டுமென்று, திருவண்ணாமலை அருணை தமிழ்ச் சங்கம் சார்பில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி பேசும் போது புதுச்சேரி முதலமைச்சர் வி.நாராயணசாமி குறிப்பிட்டார். திருவண்ணாமலை, காந்தி நகர், பைபாஸ் சாலையில் உள்ள  அருணகிரிநாதர் அரங்கத்தில், அருணைத் தமிழ்ச் சங்கம் சார்பில், தமிழர் திருநாள் விழா நடைபெற்றது.  காலை 9.00 மணிக்கு அருணை சகோதரிகள் டி.கே.சாரதா, டி.பி.பரமேஸ்வரி குழுவினரின் மங்கல இசை நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு, ஸ்ரீ துர்காதேவி நாட்டிய பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஜீயர் காலில் விழுந்த தினமணி ஆசிரியர் youtube கண்டிக்கும் பத்திரிகையாளர்கள் !


வினவு :வணக்கம்.ஆண்டாள் பிரச்னையில் திருவில்லிபுத்தூர் கோயிலுக்கு நேரில் சென்று அந்த கோயிலின் ஜீயர் சடகோபன் ராமானுஜரை சந்தித்துப் பேசி, கோயிலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து மன்னிப்புக் கேட்டிருக்கிறார், தினமணி பத்திரிகையின் ஆசிரியர் வைத்தியநாதன்.
கட்டுரையை எழுதிய வைரமுத்து தொடக்கத்தில் வருத்தம் தெரிவித்தார். அதன் பிறகும் அவருக்கு எதிரான எதிர்ப்புகள் தொடர்ந்தாலும் அவர் இதுவரை மன்னிப்புக் கேட்கவில்லை. ஆனால் அவர் எழுதிய கட்டுரையை வெளியிட்டதற்காக வைத்தியநாதன் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். ஒரு பத்திரிகை ஆசிரியர் என்ற பொறுப்பும், மதிப்பும் மிக்க நிலையில் இருந்து அவர் கேட்டிருக்கும் இந்த மன்னிப்பு மிகவும் வெட்கக்கேடானது.

லாலுவுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை ... மேன்முறையீடு செய்யப்படும் ஆர் ஜே டி அறிவிப்பு

laluதினமணி :கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான 3-ஆவது வழக்கில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
இதேபோல், பிகார் முன்னாள் முதல்வர் ஜெகந்நாத் மிஸ்ராவுக்கும் 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பிகார் மாநில முதல்வராக லாலு பதவி வகித்தபோது, கால்நடைகள் தீவனத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ.940 கோடியை போலி ரசீதுகள் தயாரித்து முறைகேடு செய்ததாக 5 வழக்குகள் தொடுக்கப்பட்டன. இதில் சைபாஸா கருவூலத்தில் போலி ரசீதுகள் மூலம் ரூ.37.7 கோடி முறைகேடு செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது லாலுவுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், ஜெகந்நாத் மிஸ்ராவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இதையடுத்து, லாலு பிரசாத் தனது எம்.பி. பதவியை உடனடியாக இழந்தார். மேலும், தேர்தலில் போட்டியிடும் தகுதியும் பறிபோனது.

மு.க, முத்து.. பேரனின் திருமணத்துக்கு கூட வரமுடியாத ... கவனிப்பார் இல்லை?



திமுக தலைவர் கலைஞரின் மூத்த மகனான நடிகர் மு.க. முத்து,   தனது மனைவி சிவகாமசுந்தரியோடு திருவாரூரில் தங்கியிருக்கிறார்.   கடந்த 15-ந் தேதி. திடீரென அவருக்கு  உடல்நலக் குறைவு எற்பட்டது. மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட அவரை, உடனடியாக தஞ்சைக்கு கொண்டுபோகும்படி மருத்துவர்கள் சொல்ல, அவர் தஞ்சையில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் .
தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சையளித்தனர். இதைத் தொடர்ந்து உடல்நலம்  தேறிய மு.க.முத்து தற்போது டிஸ்சார்ஜ்  ஆகியிருக்கிறார். முன்னாள் முதல்வர் கலைஞரின் மகனான முத்துவை, கலைஞர் குடும்பத்தினர் கூட கண்டுகொள்ளவில்லை. நேரில் யாரும் வரவுமில்லை.  தீவிர சிகிசைப் பிரிவில் மு.க.முத்து படுத்திருக்க, அவர் மனைவி மட்டும் வெளியே தன்னந்தனியாய் உதவிக்கு கூட ஆளில்லாமல் பரிதவித்துக்கொண்டிருந்ததுதான்  பெரும் சோகம் . 

பத்மாவதி படத்துக்கு எதிர்ப்பு கலவரம் 200 வாகனங்கள் சேதம்


பத்மாவத்’ படத்துக்கு எதிரான போராட்டத்தில் 200 வாகனங்கள் சேதம்தினத்தந்தி :‘பத்மாவத்’ திரைப்படத்துக்கு எதிராக பல மாநிலங்களில் வன்முறை வெடித்தது. 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. 1,900 பெண்கள் தீக்குளிக்க தயாராக இருப்பதாக கர்னி சேனா மிரட்டல் விடுத்து உள்ளது. புதுடெல்லி,< 14-ம் நூற்றாண்டில் சித்தூர் சாம்ராஜ்ஜியத்தை ஆட்சி செய்த ராணி பத்மாவதியை மையமாக வைத்து பத்மாவதி என்ற பெயரில் வரலாற்று திரைப்படம் தயாரானது.
இந்த படத்தில் ராணி பத்மாவதி பற்றியும், ராஜபுத்திர வம்சத்தினர் குறித்தும் அவதூறான காட்சிகள் இடம்பெற்று இருப்பதாக கூறி படத்துக்கு தடை விதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு தடை விதிக்க மறுத்த நிலையில் இந்த படம் இன்று (வியாழக்கிழமை) நாடு முழுவதும் பத்மாவத் என்ற பெயரில் வெளியாகிறது. இந்த நிலையில் இந்த படத்துக்கு எதிராக பல மாநிலங்களில் ராஜ்புத் கர்னி சேனா அமைப்பினர் வன்முறையில் இறங்கினர். குறிப்பாக குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, மராட்டியம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அவர்கள் தீவிர போராட்டத்தில் குதித்துள்ளனர்.