Ovia Rajamoni : கோவை நகரில் ஒரு பெண் பேருந்து ஓட்டுனர் பணியில் நியமிக்கப் பட்டிருக்கிறார். வாழ்த்துகள்.
சில நாளேடுகள் இவர்தான் முதல் பெண் பேருந்து ஓட்டுனர் என்று செய்தி வெளியிடுகிறார்கள்.
ஒரு முப்பதாண்டுகளுக்குள் உள்ள செய்திகள் கூட தெரியாமல் செய்தியாளர்களாம்.
நாளிதழ்களாம். சரி. அதை விடுங்கள்.
பல முகநூல் பதிவர்கள் இந்தியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுனர் வசந்தகுமாரி கன்னியாகுமரி மாவட்டத்தில் நியமிக்கப் பட்டார் என்பதை பதிவிட்டவர்கள் கவனமாக அதற்காக மகளிர் விடுதலை மன்றம் நாகர்கோவிலும் தமிழினப் பெண்கள் விடுதலை இயக்கமும் 3 ஆண்டுகள் வீதியிலிறங்கி் போராடியதை நன்கு தெரிந்தவர்கள் அதனைக் கவனமாக தவிர்த்து அச்செய்தியைத் தெரிவிக்கிறார்கள்.
சனி, 1 ஏப்ரல், 2023
கன்னியாகுமரி வசந்தகுமாரிக்கு பின் இத்தனை வருடம் கழித்து கோவையில் இரண்டாவது பெண் ஓட்டுனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா : கடன்கள் எவ்வளவு கடினமாக இருந்தாலும், சிறிது காலத்தில் நாம் மீண்டு வருவோம்."
jaffnamuslim.com : நான் ஜனாதிபதியாக இருக்கும் வரை, பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ள ரணில்
அரசாங்கத்தினுள் பாரியளவில் மறுசீரமைப்பினை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் விமானப்படை தளத்தில் இன்று (01) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்தார்.
ராமேஸ்வரம் தலைமன்னார் .. ராமேஸ்வரம் காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்துக்கள் விரைவில் அமைச்சர் ஏ வ.வேலு சட்டமன்றத்தில்
மின்னம்பலம் : இந்தியா – இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 10ஆவது நாளான இன்று (ஏப்ரல் 1) பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மீதான மானிய கோரிக்கையின் போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அத்துறை அமைச்சர் எ.வ.வேலு.
அதில், இந்தியா – இலங்கை இடையில் குறைந்த தூர பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்க, ராமேசுவரம் – தலைமன்னார் (50கிமீ), ராமேசுவரம் – காங்கேசந்துறை(100 கிமீ) ஆகிய வழித்தடங்களில் தொடங்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும் என்றார்.
செல்போன் அடிமைகளை மீட்க தனி மையம்- இதுவரை 252 பேர் குணம் அடைந்தனர்
ஓமந்தூரார் அரசு மருத்துவமனை |
மாலைமலர் : சென்னை: செல்.... செல்... என்று செல்பவர்களே ஒரு நிமிடம் நில்லுங்கள்...
பொதுவாக ஆஸ்பத்திரிகளில் இதயவியல், சிறுநீரகவியல், நரம்பியல் துறை, முட நீக்கியல், பல் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, கண், தோல் என்று பலவகையான நோய் சார்ந்த துறைகளை பார்த்து இருப்போம்.
ஆனால் இங்கு மட்டும் இணையதள சார்பு மீட்பு மையம் என்று ஒருதுறை தனியாக செயல்படுகிறது. இங்கு சிகிச்சை அளிக்க தனியாக மருத்துவர்களும் இருக்கிறார்கள்.
இணையதள சார்பு என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. சுருக்கமாக சொன்னால் வாழ்க்கையே இணையத்தோடு இணைந்து விட்டது. அதிலும் இவ்வளவு ஆபத்து இருக்கிறது என்பது இங்கு சென்று பார்த்ததும் அதிர்ச்சி அளிக்கிறது.
சீமானின் ஆமைக்கறி பாணியில் வெற்றி மாறன்களும் மணிரத்தினங்களும் .. எல் ஆர் ஜெகதீசன்
சீமானின் ஆமைக்கதைகளும் தமிழ்தேசியர்களின் ஆயுதக்கதைகளும்
உங்களுக்கு படம் புடிச்சா பாருங்க. கொண்டாடுங்க.
ஆனா அதை அடிப்படையா வெச்சி வரலாற்றுப்பாடம் எடுக்காதீங்க.
சீமான் சொன்ன ஈழக்கதைகளைவிட பெரிய புருடாவா இருக்கு நீங்க அவுத்து விடற “தமிழ்நாட்டு தமிழ்தேசிய ஆயுதப்போராட்டக்கதைகள்”.
இடதுசாரி ஆயுதக்குழுக்களுக்கும் தமிழ்தேசிய ஆயுதக்குழுக்களுக்கும் என்ன வேறுபாடு?
இந்த இரண்டுதரப்பாரையும் தமிழ்நாட்டு இடதுசாரி கட்சிகள் (இடது/வலது இரண்டுமே) ஏன் எதிரியாக பார்த்தன?
கீழவெண்மணி விவகாரத்தில் தமிழ்தேசியம் எங்க வந்தது?
தர்மபுரி மாவட்டத்தில் நடந்தது நில உடைமையாளர்/பண்ணையார்/மேல்ஜாதி ஆதிக்க/சுரண்டல் எதிர்ப்பா அல்லது இயற்கை வளங்களை சுரண்டும் பெருநிறுவனங்களுக்கான எதிர்ப்பா?
அதில் தமிழ்தேசியம் எங்க வந்தது?
புலவர் கலிய பெருமாளின் கடைசி காலம் என்னவாய் இருந்தது?
சு என்கிற சுந்தரம் எப்போது எப்படி பிடிபட்டார்?
எல்லாமே கடந்த 30-40 ஆண்டுகளில் வெகுஜன ஊடகங்களிலேயே மிக விரிவாக பதிவான செய்திகள்.
இதில் வாச்சாத்தி வன்கொடுமைகள் நடந்தபோது “தமிழ்தேசியம்” என்ன செய்தது?
யாருக்கு ஆதரவாய் இருந்தது? அதுவும் நம் கண் முன் நடந்ததே. இவ்வளவு ஆதாரங்கள் நம் கண்முன் தெளிவாக பதிவான வரலறாக இருந்தும் சீமானுக்கே அண்ணனாய் மாறி “தமிழ்தேசிய ஆயுத போராட்டம்” அதன் கதாநாயகர்கள்னு திடீர் சன்னதமாட ஆரம்பிக்காதீங்க. தாளல. இப்பவே கண்ணை கட்டுது.
இன்ஸ்டா பிரபலம் 'குயின் ஆப் ரீல்ஸ்' என அழைக்காடும் 9 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை!
tamil.asianetnews.com - manimegalai : இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பல பாடல்களுக்கு ரீல்ஸ் செய்து வெளியிட்டு பிரபலமானவர், சென்னை திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி,
பிரதிக்ஷா. நான்காம் வகுப்பு படித்து வந்த பிரதிக்ஷா, கடந்த ஆறு மாதங்களில் மட்டும் சுமார் 70 ரீல்சுகள் வெளியிட்டு பிரபலமானவர்.
இந்த குழந்தையின் ஆர்வத்தை அறிந்த அக்கம் - பக்கத்தினர் தான், ஊக்குவித்து
இது போன்ற ரீல்ஸ்களை செய்யவைத்தனர். பின்னர் தன்னுடைய ரீலிசுகளுக்கு கிடைத்த வரவேற்பால் தொடர்ந்து பல வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானார்.
9 வயதிலேயே, திரைப்பட நகைச்சுவை காட்சிகளுக்கு, அதே போன்ற முக பாவனையுடன் வசனம் பேசுவது, பாடல்களுக்கு நடனமாடுவது, என தன்னுடைய அபார திறமையால் அனைவரையும் கவர்ந்தார் பிரதிக்ஷா.
பாகிஸ்தானில் இலவச ரேஷன் பொருளுக்கு முண்டியடித்த மக்கள் - நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு
மாலை மலர் : இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. பொருளாதார நெருக்கடியால் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்களுக்குத் தேவையான அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்நாட்டின் கராச்சி மாகாணம் சிந்து தொழிற்பேட்டை பகுதியில் தொண்டு நிறுவனம் சார்பில் இலவச ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. அந்தப் பொருட்களை வாங்க ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர்.
உண்மையான தமிழ் தாத்தா ஆறுமுக நாவலரே! அவரின் சைவ ஜாதிவெறியே அதற்கு தடையானது .. புலவர் பொ.வேல்சாமி
ஆறுமுகநாவலர் தன் சைவத்தின் மேல் கொண்டிருந்த வெறியில் இருந்து சற்று விலகி இத்தகைய நூல்கள் எல்லாம் தமிழ்த்தாயின் அழகுமிக்க அணிகலன்கள் என்று புரிந்துகொண்டிருந்து இந்நூலை அன்றே (1861) வெளியிட்டிருப்பாரானால் அவர்தான் தமிழ் முனிவர், தமிழ்த்தாத்தா என்று இன்றைய நிலையில் நினைவு கூறப்பட்டிருப்பார். இந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள வளையாபதி உ.வே.சா கண்ணில் பட்ட பிறகும்(என் சரித்திரம். பக்.626) அழிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது (அதாவது அதை ஒழித்து மறைத்து காணாமல் ஆக்கிவிட்டார்)
புலவர் பொ வேல்சாமி : February 26, 2015 - நண்பர்களே....இங்கே கொடுக்கப்பட்டுள்ள படங்கள் இரண்டும் 1860-61 இல் ஆறுமுகநாவலர் வெளியிட்ட திருக்கோவையார் நூலின் முதல்பக்கமும் இறுதிபக்கமும் ஆகும்.
முதல் பக்கத்தில் இந்நூலின் உரையாசிரியர் நச்சினார்கினியர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை தமிழர்களின் முதல் அரசியல் தளம் திராவிட அரசியலே! - 1927 .. யாழ்ப்பாணம்
ராதா மனோகர் : இலங்கை தமிழர்களின் முதல் அரசியல் தளம் திராவிட அரசியலே! - 1927
இலங்கை வடமாகாணத்தில் இடது சாரி அரசியலுக்கு முன்பாகவே திராவிட அரசியல் கருத்துருவாக்கம் பெற்றிருக்கிறது
வெறும் சைவ கிறிஸ்தவ அரசியல் என்றிருந்த காலத்தில் முதல் தடவையாக சமூக நலன் சார்ந்த அரசியல் இயக்கமாக திராவிட இயக்கமே இருந்திருக்கிறது
சைவ வித்தியாபிவிருத்தி சங்கமென்றும் பின்பு இந்து போர்ட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டும் இயங்கிய அமைப்பு சைவத்தை ஒரு அரசியல் இயக்கமாகவே முன்னெடுத்தது
அதன் தலைவராக இருந்த இந்துபோர்ட் ராஜரத்தினம் c4 July 1884 – 12 March 1970)
Subramaniam Rajaratnam was elected to the Legislative Council of Ceylon as the member for the Northern Province Central at the 1924 election. As its chairman, Rajaratnam played a key role in the foundation and growth of the Hindu Board which, at one time, managed more than 150 schools .
இவர் முழுக்க முழுக்க சைவ வாழ்வியலே ஒரு அரசியல் தத்துவமாக கொண்டிருந்தார் .
அன்றைய ஆங்கில ஆட்சியாளர்களின் உதவியோடு .சுமார் 150 பள்ளிக்கூடங்களை நிறுவினார்
இந்த பள்ளிக்கூடங்களில் வெள்ளாளர்களுக்கு மட்டுமே கல்வி கற்கும் உரிமை இருந்தது .
வெள்ளி, 31 மார்ச், 2023
எம்ஜியார் போற்றிய நரிக்குறவர்கள் ...நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி பாடல் .. ஒரு திராவிட கருத்தியல்
ராதா மனோகர் : நரிக்குறவர்களை ரோகிணி திரையரங்கம் அனுமதிக்க மறுத்த விவகாரம் ஒரு சாதாரண விடயம் அல்ல.
அன்றாட வாழ்வில் இது போல பல ஜாதிக்கொடுமைகள் இன்றுவரை அரங்கேறி கொண்டேதான் இருக்கிறது.
எல்லா கொடுமைகளுக்கும் ஊடாக வெளிச்சங்களை பெறுவதில்லை .
இந்த இடத்தில் எம்ஜியாரின் ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது!
ஒளிவிளக்கு படத்தில் வரும் நாங்க புதுசா கட்டிக்கிட்டா ஜோடிதானுங்க....
ஒளிவிளக்கு படத்தின் கதை விவாதத்தின் போது குறவர் இனத்தை பெருமை படுத்துமாறு ஒரு காட்சி வையுங்கள் என்று திரு எம்ஜியார் அவர்கள் கூறியதாக ஒரு செய்தி இருக்கிறது.
எம்ஜயினரின் கோரிக்கை படியே நாங்க புதுசா கட்டிக்கிட்டா ஜோடிதானுங்க என்ற பாடல் இடம்பெற்றது என்று தெரிகிறது.
பழங்காலத்தில் கோயில் திருவிழாக்களிலும் இதர சமூக கொண்டாட்டங்களின்போதும் தீவட்டி ஒளிபந்தங்களை காவிக்கொண்டு வரும் தொழிலையே நரிக்குறவர் சமுதாயமே மேற்கொண்டு வந்தது என்று ஒரு வரலாற்று செய்தியும் உண்டு.
ஒளி விளக்கு படத்தின் பெயரே இந்த தீவட்டி பணியாளர்களின் தொழிலை மேன்மை படுத்தும் ஒரு செயலாகத்தான் எம்ஜியார் வைத்திருக்க கூடும் என்று சிலர் கூறுகின்றனர்.
கலாஷேத்ரா விவகாரம்; மாணவர்களின் கடிதத்தால் வெளிவரும் உண்மைகள்
nakkheeran.in : சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பயிற்சியாளர்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில், இது தொடர்பாக கல்லூரி மாணவிகள் ஒன்றாகச் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மாணவிகள் சார்பில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு கடிதம் அளித்துள்ளனர்.
1936 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கலாஷேத்ரா நுண்கலை கல்லூரி மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
கலாஷேத்ரா நுண்கலை கல்லூரியில் பணியாற்றும் மூத்த ஆசிரியர் ஒருவர் அங்கு பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார் எழுந்தது.
இந்த புகாரையடுத்து கல்லூரி இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் தலைமையில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை தமிழக டிஜிபியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து முழு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதி இருந்தார்.
ரோகிணி திரையரங்கு நரிக்குறவர் அனுமதி மறுப்பு! மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை
மாலை மலர் : சென்னை ரோகிணி திரையரங்கில் நேற்று பத்து தல படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த நரிக்குறவர்களை ஊழியர்கள் அனுமதிக்க மறுத்துள்ளனர்.
டிக்கெட் இருந்தும் அவர்களை அனுமதிக்காததை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி பேசுப்பொருளாகியுள்ளது.
இதையடுத்து நரிக்குறவர்களை அனுமதிக்காததற்கான காரணம் குறித்து ரோகிணி திரையரங்கம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
அதில், யு/ஏ சான்றிதழ் அனுமதி பெற்ற படம் என்பதால் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வந்தவர்கள் 2,6,8 மற்றும் 10 வயது குழந்தைகளுடன் வந்ததால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கலாஷேத்திராவில் பாலியல் தொல்லை .. தொடரும் போராட்டம்.. சென்னை அடையாறு
zeenews.india.com - Malathi Tamilselvan : சென்னை: சென்னை திருவான்மியூரில் இயங்கி வரும் கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கலாஷேத்ரா கல்வி நிறுவனத்தில் பேராசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக சமூக வலைத்தளங்களில் மாணவிகள் குற்றசாட்டுகளை எழுப்பினர்.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கலாஷேத்ரா பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவ மாணவிகள் நடத்தும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இந்த நிலையில் ஏப்ரல் ஆறாம் தேதி வரை கலாக்ஷேத்ரா நடன பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வியாழன், 30 மார்ச், 2023
மாநில மொழியில் பேசுவதை தரக்குறைவாக மாநிலங்களே கருதும்படி வகுப்பெடுத்த ஹிந்தி வெறியர்கள்
அதன் தொடர்ச்சி இது.
நான் முதலில் அவரை சந்தித்தபோது அவர் தனது தாய் மொழி ஹிந்தி என்று சொல்லியிருந்தார்
இந்தியாவில் எந்த மாநிலம் என்று கேட்டபோது ஹரியானா என்றார்.
அதன் பின் தங்களின் உண்மையான தாய் மொழி ஹிந்திதானா என்று மீண்டும் கேட்டேன்.
அதற்கும் ஆமாம் என்று கூறவே ஹரியானாவில் மாநில மொழி எது என்று கேட்டேன்
ஹரியான்வி என்று அவர் கூறவே அந்த மொழி உங்களுக்கு தெரியாதா என்று மீண்டும் நான் கொக்கி போட்டேன்.
அதை உடனே மறுத்து அதுதான் தந்து மொழி என்றும் வீட்டில் அதுதான் பேசுவோம் என்றும் கூறினாரார்.
இது உரையாடல் நடந்து பல மாதங்கள் ஆகிவிட்டன
தற்போது அவரின் இரு உறவினர்கள் கனடாவுக்கு அரசியல் அடைக்கலம் கோரி வந்துள்ளார்கள் (ஏராளமான தெற்காசியர்கள் தற்போது அரசியல் அடைக்கலம் கோரி கனடாவுக்கு வந்தவண்ணம் உள்ளார்கள்)
அந்த உறவினர்களோடு அவர் ஏதோ ஒரு புரியாத மொழியில் மட்டுமே பேசுகிறார்
கர்நாடக தேர்தல்: கருத்துக்கணிப்பு.. காங்கிரஸ் வெற்றி வாகை சூடுகிறது !
மின்னம்பலம் - Jegadeesh : கர்நாடக தேர்தல்: கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?
கர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதம் 10 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. மே 13 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன.
இந்நிலையில், ABP – CVoter இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று (மார்ச் 29 ) வெளியாகியுள்ளது.
கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, காங்கிரஸ், 224 தொகுதிகளில் 115 முதல் 127 தொகுதிகளில் வென்று ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாசமுத்திரம் ஏ எஸ் பி பல்பீர்சிங் - சாத்தான்குளம் மாதிரி. எங்களையும் கொலை செய்துவிட்டால்? பாதிக்கப்பட்டோர் பேட்டி
nakkeeran : “மருந்து குடித்து சாக வேண்டியது தான்” - பல்வீர் சிங்கால் பாதிக்கப்பட்டோர் பேட்டி
விசாரணை கைதிகளின் பற்களைப் பிடுங்கியதாக திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திரம் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இவ்விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் இது குறித்து விளக்கமளித்தார்.
முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாவது, “குற்றச்செயல்களில் ஈடுபட்டு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட சிலரின் பற்களைச் சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு வந்தவுடன் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் உட்கோட்ட நடுவர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு விசாரணை துவங்கப்பட்டது.
பாகிஸ்தானில் இலவச கோதுமை .. தள்ளுமுள்ளு இருவர் உயிரிழப்பு - 46 பேர் காயம்
ஜாப்னா முஸ்லீம் : பாகிஸ்தான் சாஹிவாலில் மக்களுக்காக இலவச மாவு வழங்கப்பட்டது. அப்போது, அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
அந்த கூட்டத்தில் ஏராளமான பெண்கள் நீண்ட வரிசையில் திரண்டனர். கொஞ்ச நேரத்தில் பெண்கள் வரிசையில் நிற்காமல் கோதுமை மாவு வாங்குவதற்காக முண்டியடித்தனர்.இதனால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்த கூட்ட நெரிசலில் ஒரு பெண் உயிரிழந்தார். மேலும், 46 பேர் காயமடைந்தனர்.
இதேபோல், ரஹீம் யார் கானில் இலவச மாவு வழங்கும்போது, மற்றொரு கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதன்போது 73 வயது முதியவர் ஒருவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
புதன், 29 மார்ச், 2023
கச்சத்தீவை ஒரு சுதந்திர வாணிப தீவாக மேம்படுத்தலாமே?
ராதா மனோகர் : இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள கடலில் ஏராளமான மணல் திட்டுக்கள் உண்டு
அவற்றில் இருக்கும் ஒரு பெரிய மணல் திட்டுதான் கச்சத்தீவு!
பேச்சு வழக்கில் இந்த திடல்களை தீடல் என சிலர் குறிப்பிடுவார்கள்.
இந்த திடல் மீது ஏறி நின்று கடலை பார்ப்பது வார்த்தையால் வர்ணித்து விடமுடியாத ஒரு அனுபவம்!
ஏராளமான சிறு திடல்களும் உள்ளன .. அவற்றில் சில கடலின் மேல் மட்டத்தில் தெரியாது.
சில அங்குலம் அளவு கடலுக்கு அடியில் இருக்கும்
அதிலொன்றின் மீது ஏறிநின்று பார்த்தால் ஒரு கடலின் நடுவில் நாம் தண்ணீரில் நிற்பது போன்ற உணர்வு ஏற்படும்..
கேரளாவில் வியாபாரத்தை கச்சோடம் என்பார்கள்
அதாவது அன்று கேரளாவில் முதன்மை கச்சோடமாக / வாணிபமாக இருந்தது வட இலங்கைக்கான
கடல் போக்குவரத்து வாணிபமே!
ஒடுக்கப்படும் தமிழரே .. தீண்டா சாதிகளென்று புறக்கணிக்கப்படுவோரே .. 1930 ஆகஸ்ட் யாழ்ப்பாணம் ஜனதர்ம போதினி
ராதா மனோகர் : இது ஒரு முக்கிய வரலாற்று ஆவணமாக கருதுகிறேன்.
கடந்த கால கசப்புக்களை கிளறுவதாக யாரும் தவறாக கருதி விடவேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
வரலாறு மக்களுக்கு சொல்லப்பட வேண்டும் என்ற நல்நோக்கத்தில் மட்டுமே இதை பதிவிட்டுள்ளேன்
1930 ஆகஸ்ட் யாழ்ப்பாணம் ஜனதர்ம போதினி
ஒடுக்கப்படும் தமிழரே .. தீண்டா சாதிகளென்று புறக்கணிக்கப்படுவோரே
கீழ் சாதிகளென்றும் தாழ்த்தப்பட்டவரென்றும் ஒதுக்கப்பட்டவர்களே
அன்பான சகோதர சகோதரிகளே விழியுங்கள்! எழுந்திருங்கள்!!
உங்கள் காரியத்தை நீங்களே கைகூடப்பண்ணுங்கள்!
ஆவணி மாதம் 1 ஆம் திகதி தொடங்கி புரட்டாதி மாதம் 11 ஆம் திகதி மட்டும் உங்கள் பெயர்களை பதிவு செய்து புதிய சட்டசபைக்கு அங்கத்தவர்களை தெரிவு செய்யும் உரிமையை பாவியுங்கள்
முந்திய காலத்தில் படித்தவர்களும் பணக்காரருக்கும் மாத்திரம் கவுன்சிலுக்கு (சட்டசபைக்கு) தெரியும் உரித்துடையவர்களாக இருந்தார்கள்.
பெண்களை போல் உடையணிந்த ஆண்கள் கொல்லம் தேவி கோயில் சமயவிளக்கு திருவிழாவாம்
மாலைமலர் : திருவனந்தபுரம்: ஊர் கோவிலில் திருவிழா என்றாலே அனைவருக்கும் உற்சாகம் பிறந்து விடும். அதிலும் பெண்களுக்கு கேட்கவே வேண்டாம். ஒவ்வொரு நாளும் கோவிலுக்கு பெண்கள் விதவிதமான உடை அணிந்து செல்வது அவர்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை அளிக்கும்.
திருவிழா வந்தால் தான் வீட்டின் பெரியவர்கள் பெண்களுக்கு புத்தாடை எடுத்து கொடுப்பதும் வழக்கம். இதற்காகவே பெண்கள் ஊர் கோவில் திருவிழாவை எதிர்நோக்கி காத்திருப்பது உண்டு.
கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள கொட்டாங்குளக்கரை தேவி கோவிலில் நடைபெறும் சமயவிளக்கு திருவிழாவை பெண்களை விட ஆண்களே அதிகம் எதிர்ப்பார்த்து காத்திருப்பார்கள் என்றால் அனைவருக்கும் ஆச்சரியம் ஏற்படும்.
உயிரோடு எரிக்கப்பட்ட 3 மாணவிகள்; தமிழகத்தையே உலுக்கிய தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு!
நக்கீரன் செய்திப்பிரிவு : 1991 ஆம் ஆண்டு முதல் முறையாக தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெயலலிதா தான் அதுவரை கண்டிராத அதிகார திமிரால் தமிழக அரசின் அனைத்து துறைகளின் மூலமாகவும் எந்த அளவுக்கு ஊழல் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு துணிந்து ஊழலில் ஈடுபட்டார் .
இதன் மூலம் தனது முதல் ஆட்சி காலத்திலேயே தன் பெயரிலும் தனக்கு வேண்டப்பட்ட குடும்பத்தினர்கள் பெயரிலும் கணக்கற்ற சொத்துக்களை வாங்கி குவித்தார்.
இப்படி உலகம் வியக்கும் ஊழல் ராணியாக திகழ்ந்த ஜெயலலிதா ஒருவேளை தான் அடுத்து வரும் தேர்தலில் ஆட்சியை இழக்க நேரிட்டால். தான் செய்த ஊழல்கள் தனக்கு எதிராக மாறும் என்பது அவருக்கு தெரியுமா தெரியாதா என்பது தெரியவில்லை.
ஆனால் அதற்கு பிறகு வந்த திமுக ஆட்சியில் ஜெயலலிதாவின் ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து தமிழக மக்களை ஆச்சர்யத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.
அம்பாசமுத்திரம் ஏ எஸ் பி பல் புடிங்கிய விவகாரம்.. மனித உரிமை மீறல்களில் திமுக அரசு சமரசம் செய்து கொள்ளாது:
Kalaignar Seithigal : தமிழ்நாடு அம்பாசமுத்திரம் விவகாரம்.. மனித உரிமை மீறல்களில் திமுக அரசு சமரசம் செய்து கொள்ளாது: முதல்வர் உறுதி!
காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல் சம்பவங்களில் எந்தவிதமான சமரசங்களையும் இந்த அரசு மேற்கொள்ளாது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அம்பாசமுத்திரம் விவகாரம்.. மனித உரிமை மீறல்களில் திமுக அரசு சமரசம் செய்து கொள்ளாது: முதல்வர் உறுதி!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (29-3-2023) சட்டம்-ஒழுங்கு தொடர்பான கவன ஈர்ப்புக்கு, முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் உரை:-
பேரவைத் தலைவர் அவர்களே, இங்கே அரசினுடைய கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையிலே எதிர்க்கட்சித் தலைவர், உறுப்பினர்கள் இசக்கி சுப்பையா, ஜவாஹிருல்லா, ஜே.ஜி. பிரின்ஸ் , அருள், முகம்மது ஷாநவாஸ், நாகைமாலி, வேல்முருகன் உள்ளிட்ட பலர் இதுகுறித்து தங்களது கருத்துக்களைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
ஜல்லிக்கட்டை ஒன்றிய அரசு அங்கீகரிக்கவில்லை - ஒன்றிய மந்திரி அனுராக் தாக்குர்
மாலை மலர் : புதுடெல்லி பாராளுமன்ற மக்களவையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் எம்.பி. ரவ்னீத் சிங், மாட்டு வண்டி பந்தயம் மற்றும் ஜல்லிக்கட்டு பற்றி கேள்வி எழுப்பி இருந்தார்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் மாட்டு வண்டி பந்தயம் பிரபலம் என்று தெரிவித்து, நாட்டில் மாட்டு வண்டி பந்தயம் தடை செய்யப்பட்டுள்ளதா, ஜல்லிக்கட்டு போன்ற காளைகளை உள்ளடக்கிய விளையாட்டுகளை நடத்த அரசு அனுமதித்துள்ளதா என்பன போன்ற கேள்விகளைக் கேட்டிருந்தார்.
இதற்கு மத்திய தகவல், ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்குர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அந்த பதிலில் அவர் கூறியுள்ளதாவது:
அமெரிக்க அரசு : ராகுல் காந்தி விடயத்தை உற்று நோக்குகிறோம்
மாலைமலர் : வாஷிங்டன்: மோடி பற்றிய அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு UNFPA பாராட்டு!.. பாலின சமத்துவ கொள்கையை முன்னெடுக்கிறார்
தேசம்நெட் - அருண்மொழி : பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல் தொடர்பான தேசிய கொள்கையை அங்கீகரிப்பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அர்ப்பணிப்பை ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA) பாராட்டியுள்ளது.
ஜனாதிபதியின் இந்த அர்ப்பணிப்பு, இலங்கையில் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம், உரிமைகள் ஆகியவற்றை உறுதி செய்வதில் மிக முக்கிய பங்கு வகிப்பதாக அந்த நிதியத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் மதிப்பீட்டு அலுவலகப் பணிப்பாளர் மார்கோ செகோன் உள்ளிட்ட பிரதிநிதிகள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தபோதே இவ்வாறு குறிப்பிட்டனர்.
செவ்வாய், 28 மார்ச், 2023
7-வது பொதுச்செயலாளர்: அ.தி.மு.க.வின் அதிகாரம் மிக்க பதவியில் எடப்பாடி பழனிசாமி
மாலைமலர் : அ.தி.மு.க.வில் அதிகாரம் மிக்க பெரிய பதவியாக இருக்கும் பொதுச்செயலாளர் பதவியில் எடப்பாடி பழனிசாமி இன்று அமர்ந்தார்.
1972-ம் ஆண்டு அ.தி.மு. க.வை தொடங்கிய எம்.ஜி.ஆர். கட்சியின் நிறுவன தலைவராகவும் பொதுச்செயலாளராகவும் பதவி வகித்தார். 1978-ம் ஆண்டு வரையில் எம்.ஜி.ஆர். வசமே இருந்த இந்த பதவியில் பின்னர் நாவலர் நெடுஞ்செழியன் அமர்ந்தார்.
2 ஆண்டுகள் அவர் இந்த பொறுப்பில் இருந்தார். இவரை தொடர்ந்து 3-வது பொதுச்செயலாளராக ப.உ.சண்முகம் 4½ ஆண்டுகள் வரையில் இருந்தார்.
அவரை தொடர்ந்து ராகவானந்தம் 1½ ஆண்டுகள் பொதுச்செயலாளர் பதவியை வகித்தார். இதையடுத்து மீண்டும் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட எம்.ஜி.ஆர். மறையும் வரை அந்த பொறுப்பில் இருந்தார்.
ரூ.1000 உதவித் தொகை கிடைக்கும்?... முதலமைச்சர் வெளியிட்ட முழுப் பட்டியல்!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், மகளிர் உரிமைத் தொகை குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் இன்று விளக்கமளித்தார்.
முதலமைச்சர் பேசும்போது, “கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரிக்கத்தான் ‘மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அரசு அங்கீகரித்தால், ஆண்களை உள்ளடக்கிய இந்தச் சமூகமும் பெண்களுக்கான சமஉரிமையை வழங்கிடும் நிலை விரைவில் உருவாகிவிடும் என்று நமது அரசு உறுதியாக நம்புகிறது.
எனவேதான், இந்தத் திட்டத்திற்கு மகளிருக்கான உதவித் தொகை என்று இல்லாமல் ‘மகளிர் உரிமைத் தொகை’ என்று கவனத்துடன் பெயரிடப்பட்டிருக்கிறது
அமெரிக்க பள்ளியில் துப்பாக்கி சூடு மாணவர்கள் உள்பட 7 பேர் உயிரிழப்பு
மாலை மலர் ; வாஷிங்டன்: அமெரிக்காவின் நாஷ்வில்லே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நேற்று மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
அவர் ஒரு கைத்துப்பாக்கியுடன் 3 மாணவர்களையும், 3 பெரியவர்களையும் கொன்றதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார் என தகவல்கள் வெளியாகின.
தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்று வருவது அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திங்கள், 27 மார்ச், 2023
அரசு பங்களாவை காலி செய்ய ராகுல் காந்திக்கு அறிவிப்பு
மாலை மலர் : புதுடெல்ல அவதூறு வழக்கில் 2 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டதால், ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து எம்.பி. என்ற முறையில் அவருக்கு டெல்லி துக்ளக் லேனில் உள்ள அரசு குடியிருப்பில் பங்களா ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அரசு பங்களாவை காலி செய்யவேண்டும்.
இந்நிலையில், அரசு பங்களாவை வரும் ஏப்ரல் 22ம் தேதிக்குள் ராகுல் காந்தி காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சுயமரியாதைக்கு எந்த வழியில் சவால் வந்தாலும் எதிர்கொண்டு வினையாற்றுங்கள்.
ராதா மனோகர் : சுயமரியாதை!
உங்கள் சுயமரியாதையை சீண்டும் வேலையை உங்கள் எதிரிகளை விட உங்களோடு கூடவே இருப்பவர்கள்தான் அதிகமாக செய்வார்கள்.
வேடிக்கை என்ற ரீதியில்தான் இந்த சுயமரியாதை சீண்டல்கள் அதிகமாக நடக்கிறது
அந்த சீண்டல்களை நட்பு அல்லது உறவு என்ற ரீதியில் நீங்களும் கடந்து செல்வீர்கள்
சிலவேளை நீங்களும்கூட சிரித்து வைப்பீர்கள்.
இங்கேதான் மெதுவாக உங்கள் சுயமரியாதை உணர்வு களவாடப்படுகிறது.
இந்த தந்திரம்தான் பார்ப்பனீயம் காலகாலமாக பயன்படுத்துகிறது!
நம் சமூகத்தில் ஆசிரியர் பெற்றோர் போன்றவர்களே வளரும் சிறுவர்களின் சுயமரியாதையை சீண்டி விடும் கொடுமையை செய்து விடுகிறார்கள்
இது நிமிர்ந்து நிற்கும் ஒருவரை தரையில் தள்ளிவிடும் செயலுக்கு ஒப்பானது.
இந்த விடயத்தில் அசல் பார்ப்பனர்களிடம் இருந்து நாம் பாடம் கற்கலாம் என்று தோன்றுகிறது.
பார்ப்பன வீட்டு குழந்தைகளுக்கு இந்த கொடுமை நடப்பதில்லை.
பெற்றோல் தட்டி கொடுத்து வளர்ப்பார்கள் ..
தள்ளி தரையில் வீழ்த்தி விடுவதில்லை.
உங்கள் தன்னம்பிக்கையை குலைக்கும் ஒவ்வொருவரும் உங்களை தரையில் தள்ளி விழுதி விடுகிறார்கள் என்று புரிந்து கொள்ளுங்கள்.
சுயமரியாதை இயக்கத்தின் தேவை ஏன் உண்டானது என்ற வரலாறை படியுங்கள்
சுயமரியாதைக்கு எந்த வழியில் சவால் வந்தாலும் எதிர்கொண்டு வினையாற்றுங்கள்.
விசாரணை கைதிகளின் பற்களை கல்லால் உடைத்து ..அந்தரங்க உறுப்பை நசுக்கும் அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி பல்வீர் சிங்.. கதறும் இளைஞர்கள்!
tamil.oneindia.com - Vignesh Selvaraj : திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுபவர்களை விசாரிக்கும் போது பற்களை பிடுங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிறு சிறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்படும் நபர்களிடம் அத்துமீறுவதாக ஏ.எஸ்.பி பல்பீர் சிங் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கியும், அந்தரங்க உறுப்பை நசுக்கியும் கொடுமைப்படுத்துவதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் ஐபிஎஸ் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஞாயிறு, 26 மார்ச், 2023
சென்னை கவிக்கோ மன்றத்தில் அண்ணா, கலைஞர் படம் ஏன் இல்லை? என்று கோவி.லெனின் கேள்வி எழுப்பியுள்ளார்.
மின்னம்பலம் -christopher ; சென்னை கவிக்கோ மன்றத்தில் அண்ணா, கலைஞர் படம் ஏன் இல்லை? என்று கோவி.லெனின் கேள்வி எழுப்பியுள்ளார்.
திராவிட இயக்க எழுத்தாளரும், திமுக ஐடி விங் ஆலோசகருமான கோவி. லெனின் இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார்.
அதில், “கவிக்கோ மன்றம் இலக்கியவாதிகள்-சமூக செயற்பாட்டாளர்களின் சரணாலயம். சென்னை சி.ஐ.டி. காலனியில் அமைந்துள்ள இந்த அரங்கத்தில் குறைந்த கட்டணத்தில் நல்ல முறையில் நிகழ்ச்சிகளை நடத்த முடியும். வேறு அரங்குகள் அனுமதிக்க மறுக்கும் நிகழ்வுகளைக்கூட அதன் முக்கியத்துவம் கருதி கவிக்கோ மன்றம் அனுமதித்து, நெருக்கடிகளை சந்தித்ததும் உண்டு.
ரேணுகா சவுத்திரியை சூர்ப்பனகை என்று மோடி கூறிய விவகாரம் பழைய பேச்சைக் கிளரும் காங்கிரஸ்!
நக்கீரன் : தன்னை சூர்ப்பனகை என்று கூறிய மோடிக்கு ராக வழக்கு தொடரப் போவதாக காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரேணுகா சௌத்ரி தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்நாடக மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘மோடி என்று பெயர் வைத்தவர்கள் எல்லாம் எப்படி திருடர்களாக இருக்கிறார்கள்’ என்ற வகையில் பேசியிருந்ததாகக் கூறி பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான பூர்னேஷ் மோடி, குஜராத் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். \
கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் முன்தினம் ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
காரைக்கால் காங்கேசன்துறை கப்பல் சேவை ஏப்பிரல் 29 இல் ஆரம்பம் .. 4 மணித்தியால பயணம் ..
hirunews.lk : இந்திய - இலங்கை கப்பல் சேவை ஆரம்பமாகும் தினம், கட்டண விபரங்கள் அறிவிப்பு!
இந்தியாவின் புதுச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமுகத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் சேவை எதிர்வரும் ஏப்ரல் 29 முதல் ஆரம்பமாகும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
காரைக்கால் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை, துறைமுகத்துக்கு குறித்த தினத்தில் புதிய கப்பல் சேவையின் முதல் படகு வருகைதரும் என்றார்.
அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற இந்த புதிய கப்பல் சேவையின் பங்குதாரர்களுடனான கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்..
இலங்கையில் 29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி! ரணில் அரசு அதிரடி
president Ranil Wickremasinge |
ஹிரு நியூஸ் : நாட்டில் 29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டம் நாளை (27) ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அதன்படி, விவசாயிகளிடம் இருந்து வாங்கும் நெல்லை அரிசியாக மாற்றி, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசு வழங்க உள்ளது.
ஒரு குடும்பத்திற்கு மாதாந்தம் 10 கிலோ அரிசி வீதம் இரண்டு மாதங்களுக்கு இலவச அரிசி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரிசியை கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி
ஈவிகேஎஸ் இளங்கோவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
tamil.news18.com : ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவெரா மரணமடைந்ததை தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில் அவரது தந்தை ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு முன்னிலையில் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி நெஞ்சு வலி காரணமாகச் சென்னை அடுத்த போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இதய ரத்த நாளங்கள் சுருங்கியிருப்பதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து மருத்துவர்கள் அவருக்குச் சிகிச்சை அளித்து வந்தனர்.
தலைமை நீதிபதி சந்திரசூட் : சமூக நீதி அடிப்படையில் நீதிபதிகள் நியமனம்: மு.க.ஸ்டாலின் கோரிக்கைக்கு பதில்
bbc.com : மு.க.ஸ்டாலின் தலைமை நீதிபதி சந்திரசூட் முன்னிலையில் கோரிக்கை: சமூக நீதி அடிப்படையில் நியமனம் குறித்து என்ன சொன்னார்கள்?
மதுரை மாவட்ட உயர்நீதிமன்ற வளாகத்தில் ரூ.166 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல் கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய தமிழ்நாடு முதலவர் மு.க.ஸ்டாலின், உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும்,
சமூக நீதி அடிப்படையில் நீதிபதிகள் நியமனம் நடைபெறவேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை முன்வைத்தார்.
வழக்காடு மொழி குறித்த கோரிக்கைக்கு மேடையில் பதில் கூறிய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், இந்தியாவின் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக ஆங்கிலம் இருக்க வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தின் 348வது பிரிவு கூறுவதால், தமிழை வழக்காடு மொழியாக உயர்நீதிமன்றத்தில் பயன்படுத்துவதற்கு அரசியலமைப்புத் திருத்தம் தேவைப்படலாம் என்று தெரிவித்தார்.
இலங்கை தமிழரசு கட்சியும் திராவிட இயக்கத்தின் கடவுள் மறுப்பு கொள்கையும்
ராதா மனோகர் : 1952 இல் தந்தை செல்வாவும் அவரின் சம்பந்தி நாகநாதனும் முறையே காங்கேசன்துறை யாழ்ப்பாணம் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தால் இந்த இருவரும் வெறுப்பு அரசியலை விதைத்து இருக்க மாட்டார்கள்
அந்த தோல்வி இருவரையும் ஒரு தவறான அரசியலை முன்னெடுக்க வைத்து விட்டது. அந்த தோல்வியில் இருந்து மீள்வதற்கு தமிழ்நாட்டின் இந்தி எதிர்ப்பு போராட்ட பரப்புரைகளை இரவல் வாங்கினார்கள்
அதை அப்படியே சிங்கள எதிர்ப்பாக கூர் தீட்டினார்கள்
திராவிட கோட்பாட்டாளரான திரு எஸ் டி சிவநாயகத்தையும் அவரது நண்பர் செல்லையா ராசதுரையையும் கொழும்பில் திராவிட கழகத்தின் இந்தி எதிர்ப்பு போராட்ட குழு செயலாளராக இருந்த அமிர்தலிங்கத்தையும் முன்னிறுத்தி தமிழ் தேசிய அரசியல் கடையை விரித்தார்கள்
தமிழினத்தின் மொத்த அரசியலையும் நாசமாக்கிய துரோகி என்ற சொல்லை செல்வநாயகம் நாகநாதன் முதல் முதலில் பயன்படுத்தியது திரு ஜி ஜி பொன்னம்பலத்திற்கு எதிராகத்தான்
இதில் இருந்துதான் தமிழினத்தின் சாபக்கேடான துரோக அரசியல் ஆரம்பித்தது!