சன் டி.வி ராஜா
சன் நியூஸ்ன் செய்தி தொலைக்காட்சியின் முன்னாள் ஆசிரியரான ராஜாவுக்கு, பிணையில் வர முடியாத பிடியாணை (வாரண்ட்) பிறப்பித்துள்ளது சென்னை, சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் நீதிமன்றம். சன் செய்தியில், செய்தி வாசிப்பாளராக இருந்த அகிலா தொடுத்த பாலியல் குற்ற வழக்கில் ராஜாவுக்கு நிபந்தனை பிணை வழங்கப்பட்டிருந்தது. அதில் முறையாக நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததாலேயே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க… கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சன் செய்தியில் மறுபடியும் ராஜா சேர்ந்துவிட்டார் என்பது ஊடக உலகிலேயே இன்னும் பலருக்குத் தெரியாத செய்தி.
சன் டி.வி ராஜா
ராஜாவால் அகிலாவுக்கு நேர்ந்த பாலியல் பிரச்சினை குறித்து அவர் போலீசில் புகார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ராஜா, அகிலா இருவரையும் தற்காலிக பதவி நீக்கம் செய்தது சன் டி.வி. நிர்வாகம். குற்றம் இழைத்தவரை காப்பாற்றும் விதமாக புகார் கொடுத்தவரை நீக்கி தனது ஆண்டைத்தனத்தை காட்டியது சன் நிறுவனம்.