ஒகி புயலில் உயிர் இழந்த மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. இதே போல பல்வேறு சந்தர்ப்பங்களில் மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குவதாக அரசு அறிவித்திருக்கிறது. ஆனால் அவை எதையும் அரசு முறையாக வழங்கியதில்லை என்பதை, தங்களது சொந்த அனுபவத்தில் இருந்தே விளக்குகின்றனர் இளைஞர்கள்
கொந்தளிக்கும் குமரி பூத்துறை கிராம இளைஞர்கள் ! – வீடியோ</>கரை திரும்பாத மீனவர்களை மீட்கக் கோரி, குழித்துறை ரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்ற பூத்துறை கிராம இளைஞர்கள் மத்திய மாநில அரசுகள் மீனவர்களுக்கு செய்யும் துரோகத்தையும். மீனவர்கள் செத்து மிதக்கும் போது ஆர்.கே. நகரில் விஷால் வேட்புமனு பற்றி விவாதம் நடத்தும் ஊடகங்களையும் தங்களது பேச்சில் தோலுரிக்கின்றனர்.
பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகட்டும், தமிழக அமைச்சர் ஜெயக்குமார் ஆகட்டும் மீனவர்களுக்கு கண்கட்டுவித்தை காட்டி வருகின்றனர். மறுபுறம் சமூக வலத்தளங்களில் ஆர்.எஸ்.எஸ். கும்பலும் மீனவர் போராட்டங்களை சீர்குலைக்கும் வகையிலான மதவெறிப் பிரச்சாரத்தை நடத்திவருகின்றனர்.
மாவட்ட நிர்வாகமோ போராட்டத்தை ஒருங்கிணைத்த பாதிரியார்களை பேச்சுவார்த்தை என்ற பெயரில் அழைத்து, இங்கு கலவரம் ஏற்படும் சூழல் உள்ளது ஆகையால் போராட்டத்தைத் திரும்பப் பெறுங்கள் என மறைமுகமாக மிரட்டி போராட்டத்தைத் திரும்பப்பெற வைத்துள்ளனர்.
ஆனால் இந்த தடைகளைத் தாண்டி கூடங்குளம், நெடுவாசல், மெரினா போல ஒரு மக்கள் எழுச்சியை நாங்கள் உருவாக்குவோம் என இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.