தினகரன் : சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் தொழிலதிபர் ராஜநாராயணன் வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் ராஜநாராயணன் வீட்டிலிருந்து நிலம் வாங்கியது தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கின. ஓராண்டுக்கு முன்பு சேலம் இளங்கோவனுக்கு ராஜநாராயணன் 450 ஏக்கர் நிலம் வாங்கி கொடுத்தது சோதனையில் அம்பலமாகியுள்ளது.
லஞ்ச ஒழிப்பு போலீஸ் நடத்திய விசாரணையில் இளங்கோவனை நேரில் பார்த்ததில்லை என ராஜநாராயணன் தகவல் அளித்துள்ளார்.
இளங்கோவனின் நண்பரான பரிபூரணம் மூலம் தான் 450 ஏக்கர் நிலத்தை வாங்கி கொடுத்ததாக ராஜநாராயணன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சனி, 23 அக்டோபர், 2021
தொழிலதிபர் ராஜநாராயணன் வீட்டில் 450 ஏக்கர் நிலத்திற்கான ஆவணங்கள் சிக்கின .. நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில்
அ.தி.மு.க நிர்வாகி இளங்கோவன் ரூ.70 கோடி முதலீடு.. லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிக்கை!
Rayar A - Oneindia Tamil : s சென்னை; அ.தி.மு.க நிர்வாகியும், தமிழ்நாடு கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவருமான இளங்கோவன் வருவாயை விட 131% அளவுக்கு சொத்துக்குவிப்பு செய்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது.
இளங்கோவன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்ககளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.
சோதனையில் ரூ.29 லட்சம் பணம், 21 கிலோ தங்க நகைகள், சொகுசு கார்கள், சொகுசு பேருந்துகள் பறிமுதல் செய்யப்ட்டதாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏற்கனவே தெரிவித்தனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:.
ஊட்டி திரைப்பட விழாவைச் சிதைத்த மாதவன் பிள்ளை! கோவா திரைப்பட விழாக்கள் போல புகழ் வாய்ப்பு நழுவியது
Vediyappan M Munusamy : ஊட்டி திரைப்பட விழாவைச் சிதைத்த
திருடன் மாதவன் பிள்ளை
“ஊட்டி திரைப்பட விழா ஏன் நடக்கவில்லை?,”
என்பதுதான் நமது நலம் விரும்பிகள் பலரிடமிருந்து அவ்வப்போது கேட்கப்படும் கேள்வி.
கோவா திரைப்பட விழாபோல, ஊட்டி திரைப்பட விழா என்பது எமது கனவுகளில் ஒன்று. பலரையும் இணைத்து, ஒரு குழுவாக இருந்து ஊட்டி திரைப்பட சங்கத்தை பதிவு செய்து முறையாக துவக்கினோம். தலைவராக இருந்து அதற்கு உருவம் கொடுத்தவர் வழக்கறிஞர் அண்ணன் பால நந்தகுமார்.
2017, 2018 என இரண்டு ஆண்டுகள், பல்வேறு சோதனைகளைக் கடந்து, தமிழ், மலையாளம் , கன்னடம் மற்றும் உலக அளவில் புகழ்பெற்ற பலரின் ஒத்துழைப்போடு கையிலிருந்த பணத்தை செலவு செய்து மிகச்சிறப்பாக நடத்தப்பட்டது.
நடிகர் மன்சூர் அலிகானின் வீட்டுக்கு சீல்!
சமூக நீதி கண்காணிப்புக் குழு: தலைவர் உறுப்பினர்கள் நியமனம்!
minnambalam சமூக நீதி கண்காணிப்புக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்க: ளை நியமனம் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சமூக நீதி அளவுகோலானது சட்டப்படி முழுமையாக செயல்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக தமிழ்நாடு அரசால் ”சமூகநீதிக் கண்காணிப்பு குழு” அமைக்கப்படும். இக்கண்காணிப்புக் குழு கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல், முறையாக முழுமையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும், வழிகாட்டும், செயல்படுத்தும்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு
maalaimalar : சென்னை: தமிழகம் முழுவதும் வருகிற 4-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் போனஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
* தீபாவளி திருநாளையொட்டி தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10 சதவீதம் வரை போனஸ் வழங்கப்படும். * சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும். * 8.33 சதவீதம் போனஸ், 1.67 சதவீதம் கருணைத் தொகை என 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சுதா சந்திரன் டெல்லி விமான நிலையத்தில் அவமதிப்பு! மாற்று திறனாளிக்ளுக்கு விமான நிலையங்களில் வசதிகள் இல்லை
Rayar A -- Oneindia Tamil : டெல்லி: பிரபல நடிகையும், பரதநாட்டிய கலைஞருமான சுதா சந்திரன் தன்னைப் போன்ற மூத்த குடிமக்கள் விமான நிலைய அதிகாரிகளால் அவமானப்படுவதாக பிரதமர் மோடிக்கு முக்கியமான கோரிக்கை ஒன்றை வைத்து இருந்தார்.
விமான நிலையம் போன்ற முக்கியமான இடங்களில் கூட மாற்றுத்திறனாளிகளுக்கு போதுமான வசதிகள் இல்லை என்ற அவலம் நாட்டில் நிலவுவதாக பிரதமர் மோடிக்கு வீடியோ மூலம் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறி இருந்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், ' நமது பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது தனிப்பட்ட கடிதம். மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கை. நான் சுதா சந்திரன், ஒரு நடிகை, நாட்டியக் கலைஞர். செயற்கைக் கால்களைக் கொண்டு நடனமாடி வரலாறு படைத்திருக்கிறேன்.
நாடு என்னை நினைத்துப் பெருமிதம் கொள்ளுமாறு செய்திருக்கிறேன்.
ஆனால் ஒவ்வொரு முறையும் தொழில்முறை பயணம் செல்லும்போது,, விமான நிலையத்தில் நிறுத்தப்படுகிறேன், என் செயற்கை மூட்டு உறுப்பை அகற்றி அவர்களிடம் காட்ட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். அது மனிதனால் சாத்தியமா மோடிஜி? நமது நாடு இதைப் பற்றி பேசுகிறதா? நமது சமூகத்தில் ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு கொடுக்கும் மரியாதையா இது? மூத்த குடிமக்களுக்கு ஒரு சிறப்பு அடையாள அட்டையை வழங்குங்கள் என்பதே எனது பணிவான வேண்டுகோள்' என்று கூறி இருந்தார்.
ஹாலிவூட் படப்பிடிப்பில் துப்பாக்கிச் சூடு.... நடிகர் சுட்டதில் ஒளிப்பதிவாளர் உயிரிழப்பு
மாலைமலர் : சினிமா படப்பிடிப்பின் போது ஒளிப்பதிவாளர் பலியான விவகாரம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
படப்பிடிப்பில் துப்பாக்கிச் சூடு.... நடிகர் சுட்டதில் ஒளிப்பதிவாளர் பலி
ரஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற இடம்
ஹாலிவுட்டில் ஜோயல் சோசா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ரஸ்ட்’. இப்படத்தின் படப்பிடிப்பு மெக்சிகோவில் நடைபெற்று வந்தது. நேற்று நடிகர் அலெக் பால்ட்வின் நடிக்கும் ஆக்ஷன் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது படப்பிடிப்புக்காக பயன்படுத்தப்படும் துப்பாக்கியால் நடிகர் அலெக் பால்ட்வின் சுட்டதில் பெண் ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ் உயிரிழந்தார்.
மேலும் இயக்குனர் ஜோயல் சோசாவும் படுகாயம் அடைந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எதிர்பாராமல் நிகழ்ந்த இந்த துயரச் சம்பவத்தை அடுத்து ‘ரஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வங்கதேசத்தில் இஸ்லாம் இனி அதிகாரபூர்வ மதமாக இருக்காதா? மதச்சார்பற்ற அரசாகிறதா?
சுபீர் பெளமிக் - மூத்த பத்திரிகையாளர், பிபிசி இந்திக்காக : வங்கதேசத்தின் ஆளும் அவாமி லீக் அரசு 1972 ஆம் ஆண்டின் சமயசார்பற்ற அரசியலமைப்பை மீண்டும் கொண்டுவர முடிவு செய்திருப்பதாக நம்பப்படுகிறது. இதன் மூலம் அதிகாரபூர்வ மதம் என்ற இஸ்லாமின் அங்கீகாரம் நீக்கப்படும். மத நிந்தனை வதந்திகளால் நாட்டில் இந்துக்கள் தாக்கப்பட்ட இந்த நேரத்தில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அக்டோபர் 13 ஆம் தேதி தொடங்கிய இத்தகைய தாக்குதல்களில் இதுவரை எட்டு பேர் இறந்துள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கான இந்துக்களின் வீடுகளுக்கும் டஜன் கணக்கான கோவில்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
1972 ஆம் ஆண்டின் மதச் சார்பற்ற அரசியலமைப்பை மீண்டும் கொண்டுவருவதற்காக முன்மொழியப்பட்ட மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டால் அதிக வன்முறை ஏற்படும் என்று இஸ்லாமிய அடிப்படைவாதிகள், அவாமி லீக் அரசை எச்சரித்துள்ளனர். 1988 ல், ராணுவ ஆட்சியாளர் எச்எம் எர்ஷாத் இஸ்லாமை அதிகாரபூர்வ மதமாக அறிவித்தார்.
'மீண்டும் உங்களை சந்திக்கிறேன்': 22 நாள் மருத்துவ சிகிச்சைப் பிறகு பாரதி பாஸ்கர் உற்சாக பேச்சு!
கலைஞர் செய்திகள் : மருத்துவ சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பாரதி பாஸ்கர், விரைவில் மேடையில் உங்களைச் சந்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
தனது பட்டிமன்ற பேச்சின் மூலம் உலகத் தமிழர்களிடையே பெரும் பாராட்டை பெற்றவர் பாரதி பாஸ்கர். எம்.பி.ஏ படித்திருக்கும் பாரதி பாஸ்கர் வங்கியில் பணியாற்றிய போது, சாலமன் பாப்பையாவுடன் இணைந்து தனது பட்டிமன்ற பேச்சை தொடர்ந்து வந்தார்.
சாலமன் பாப்பையா பட்டிமன்றங்களில் தனது பேச்சாற்றலால் பாரதி பாஸ்கர் பிரபலமடைந்தார். மற்றொரு பேச்சாளரான ராஜாவும், பாரதி பாஸ்கரும் இணைந்து பங்கேற்கும் பட்டிமன்றங்கள், பட்டிமன்ற பிரியர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில், பாரதி பாஸ்கருக்கு கடந்த 9ம் தேதி காலையில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பாரதி பாஸ்கரின் மூளைக்குச் செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.
வெள்ளி, 22 அக்டோபர், 2021
அதிமுகவின் இளங்கோவன் அதிகார மையமானது எப்படி ?
BBC : இளங்கோவன் அதிமுகவின் அதிகார மையமானது எப்படி? தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் வீடு மற்றும் அவருடன் தொடர்புடைய 23 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
யார் இந்த இளங்கோவன்?
தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவர், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர், சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துவருகிறவர் இளங்கோவன்.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வலது கரமாக செயல்பட்டுவரும் இளங்கோவன், தமிழ்நாடு கூட்டுறவு வங்கித் தலைவராக 2013 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்ததில் பல முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு பல மாவட்டங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆத்தூர் அருகே உள்ள புத்திர கவுண்டம்பாளையத்தில் உள்ள இளங்கோவன் வீடு மற்றும் சென்னை, சேலம், திருச்சி உள்ளிட்ட நகரங்களில் உள்ள இளங்கோவனோடு தொடர்புடைய 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கு விசாரணையை டிஜிபி ராஜேஷ் தாஸ் தாமதப்படுத்துகிறார்
மின்னம்பலம் : பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு விசாரணையை முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாமதப்படுத்த முயல்வதாகத் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீதான புகாரை விசாரிக்கக் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் ஐந்து பேர் அடங்கிய விசாகா கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்நிலையில் விசாகா குழு விசாரணை நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்று சிறப்பு டிஜிபி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!
மின்னம்பலம் : திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் மகனும், வேலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்துக்கு எதிராக திமுகவினரே சாலை மறியல் நடத்தியதோடு, அவருக்கு எதிரான கடுமையான கோஷங்களையும் எழுப்பியிருக்கிறார்கள்.
ஒன்பது மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற ஒன்றிய , மாவட்ட கவுன்சிலர்கள் இன்று (அக்டோபர் 22) கூடி தங்களது தலைவரை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இந்த வகையில் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட அசம்பாவிதங்கள் திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்தில் அரங்கேறியுள்ளன.
ஏற்கனவே மின்னம்பலத்தில் அக்டோபர் 20 ஆம் தேதி, துரைமுருகன் பெயரைச் சொல்லி ஆலங்காயத்தில் திமுக அட்டகாசம் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
நகைக்கடன் தள்ளுபடி.. விரைவில் அரசாணை வெளியிடப்படும்” : அமைச்சர் ஐ.பெரியசாமி கூறிய முக்கிய தகவல்!
கலைஞர் செய்திகள் : நகைக்கடன் தள்ளுபடி.. விரைவில் அரசாணை வெளியிடப்படும்” : அமைச்சர் ஐ.பெரியசாமி கூறிய முக்கிய தகவல்!
நகைக்கடன் தள்ளுபடியால் 11 லட்சம் பேர் பயனடைவார்கள் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “கூட்டுறவுச் சங்கங்களில் 5 சவரனுக்குக் கீழ் கடன் பெற்றவர்கள் கடன் தள்ளுபடி குறித்தான அரசாணை ஒரு வாரத்தில் வெளியிடப்படும். நகைக்கடன் தள்ளுபடியால் சுமார் 11 லட்சம் பேர் பயன்பெறுவார்கள்.
15 கூட்டுறவுச் சங்கங்களில் நடைபெற்றுள்ள ரூ.12 கோடி வரையிலான முறைகேடுகள் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆடு வெட்டும் கத்தியால் தலையை தனியாக எடுத்த கொடூரம்.! வேறு ஜாதியை சேர்ந்த....
tamil.asianetnews.com : கேட்டரிங் பயிற்சி முடித்து திருவிழாக்களில் சமையல் வேலை செய்துள்ளார். அவரிடம் மகாலட்சுமி தான் சூரிய ராகவனை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். ஒரே சமூகத்தைச் சேர்ந்த தன்னை காதலிக்காமல் வேறு சமூகத்தை சேர்ந்தவரை காதலித்ததால் இருவர் மீதும் அவருக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
ஏட்டயபுரம் அருகே டிவி மெக்கானிக் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் போலீசார் தூரிதமாக செய்யப்பட்டு குற்றவாளியை 4 மணி நேரத்தில் கைது செய்தனர்.
பன்றியின் கிட்னி மனிதருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது . மருத்துவ உலகின் சாதனை
Vigneshkumar - Oneindia Tamil : வாஷிங்டன்: உலகில் முதல்முறையாகப் பன்றியின் கிட்னியை அமெரிக்க மருத்துவர்கள் மனிதனுக்கு வெற்றிகரமாகப் பொருத்தியுள்ளனர்.
மருத்துவ உலகின் மாபெரும் சாதனையாக இது பார்க்கப்படுகிறது.
வரலாற்றில் முதல்முறை... மூளைச்சாவடைந்த பெண்ணுக்கு பன்றியின் கிட்னி பொருத்தம்...
பொதுவாக மனிதர்களுக்கு உடல் உறுப்பு செயல் இழக்கும்போது, மற்றவர்களிடம் இருந்து தானமாகப் பெறப்படும் உடல் உறுப்புகள் பொருத்தப்படும். இருப்பினும், உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் குறைவாகவே உள்ளது.
அதேபோல ஒருவரது உடல் அனைத்து விதமான மனித உறுப்புகளையும் ஏற்றுக்கொள்ளாது.
Sardar Udham ஜாலியன் வாலாபக்கின் உண்மை வரலாற்றைப் பேசும் படம்... மோடி அரசுக்கு எதிரான விடுதலைப் போராட்டம்!
Sardar Udham என்கிற ஒரு இந்திப் படம் அக்டோபர் 16ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியானது. எல்லா தரப்புகளிலிருந்தும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது இப்படம்.
ஜாலியன் வாலாபக் படுகொலை நினைவில் இருக்கலாம். 1919ஆம் ஆண்டு ஜெனரல் டயர் என்கிற ஆங்கிலேய அதிகாரியால் 400க்கும் மேற்பட்டோர் துள்ளத் துடிக்க சுட்டுக் கொல்லப்பட்ட இடம். குழுமியிருந்த ஆயிரக்கணக்கானோர் மீது சரமாரியாக சுடப்பட்டது.
நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஜாலியன் வாலாபக் படுகொலை இந்திய சுதந்திர வரலாற்றில் மிகப் பெரிய திருப்புமுனை. ஜாலியன் வாலாபக் படுகொலையின் பின்னணியில் நிறைய வரலாற்றுச் சம்பவங்கள் இருந்தன.
வியாழன், 21 அக்டோபர், 2021
ஒரே பிரசவத்தில் 3 ஆண், 3 பெண் குழந்தைகள் பெற்ற இலங்கை பெண்
BBC : இலங்கையில் ஒரே பிரசவத்தில் பெண் ஒருவருக்கு ஆறு குழந்தைகள் பிறந்துள்ளது. இதில் மூன்று பெண் குழந்தைகளும் மூன்று ஆண் குழந்தைகளும் அடங்கும்.
இப்படியொரு பிரசவசம், இலங்கை மருத்துவ வரலாற்றில் முன்னெப்போதும் பதிவாகவில்லை என்று தெரிய வருகிறது.
அங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான பெண்ணொருவருக்கு சிசேரியன் அறுவை சிகிச்கை மூலம் இந்த குழந்தைகள் பிறந்துள்ளன.
கொழும்பிலுள்ள 'நைன்வெல்ஸ்' (Ninewells) எனும் தனியார் வைத்தியசாலையில் நேற்று நள்ளிரவைக் கடந்த வேலையில் இரவு 12.16க்கும் 12.18க்கும் இடைப்பட்ட நேரத்தில் பிறந்துள்ளதாக பிபிசி தமிழுக்கு அந்த வைத்தியசாலையின் சிரேஷ்ட செயற்பாட்டு முகாமையாளர் சுதந்த பீரிஸ் தெரிவித்தார்.
வைகோ மகனுக்கு எதிர்ப்பு- ம.தி.மு.க. மாநில நிர்வாகி ஈஸ்வரன் ராஜினாமா
மாலைமலர் : துரை வைகோவுக்கு பதவி வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையைச் சேர்ந்த ம.தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளர் ஈஸ்வரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கோவை: ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவுக்கு கட்சியில் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர் ம.தி.மு.க. தலைமை கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் நேற்று நடந்த ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டத்தில் வாக்கெடுப்பு மூலம் துரை தேர்வு செய்யப்பட்டு அவருக்கு பதவி வழங்கப்பட்டதாக வைகோ அறிவித்தார்.
பாஜக கல்யாணராமனுக்கு “ஜாமின் கிடையாது” : மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!
கலைஞர் செய்திகள் : பா.ஜ.கவைச் சேர்ந்த கல்யாணராமனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்ச்சியாக அவதூறு கருத்துகளை வெளியிட்டதால் கைது செய்யப்பட்ட பா.ஜ.கவைச் சேர்ந்த கல்யாணராமனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பா.ஜ.க செயற்குழு உறுப்பினரான கல்யாணராமன் தொடர்ந்து மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் அவதூறு கருத்துகளைப் பரப்பி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில், குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இலங்கையில் இருந்து 130 புத்த துறவிகள் வருகை..!! புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையம் திறப்பு
தினகரன் : இலங்கையில் இருந்து 130 புத்த துறவிகள் வருகை..!! புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!:
உத்தரபிரதேசம் மாநிலத்தில் சர்வதேச தரத்தில் ரூ.260 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குஷிநகர் விமான நிலையத்தை பிரதமர் நரேந்திரமோடி திறந்துவைத்துள்ளார்.
விழா மேடையில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதி ஆதித்யா சிந்தியா, அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
சர்வதேச புத்தமத யாத்திரைத் தலங்களை ஒருங்கிணைக்கும் வகையில் செயல்படும் குஷிநகர் விமான நிலைய திறப்பில் இலங்கை அமைச்சர் நமல் ராஜபக்சே தலைமையில் 5 அமைச்சர்களுடன் 130 புத்த துறவிகள் பங்கேற்க வருகை தந்துள்ளனர்.
கடலில் உயிரிழந்த மீனவர் ..மத்திய வெளியுறவுத்துறைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
நக்கீரன் செய்திப்பிரிவு : மீனவர்கள் விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (20/10/2021) மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
"இலங்கைக் கடற்படையினர் தமிழ்நாட்டு மீனவக் கப்பலை விரட்டி பிடிக்க முயற்சித்த போது மூழ்கிப்போன கப்பலில் காணாமல் போன மீனவரைக் கண்டுபிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று (20/10/2021) கடிதம் எழுதியுள்ளார்.
அதில் கடந்த 18/10/2021 அன்று மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் மீன்பிடிக் கப்பலை இலங்கை கடற்படையினர் துரத்தியபோது மூழ்கியதாகவும்,
இயக்குனர் ஷங்கரின் மருமகன் உட்பட 5 பேர் மீது போக்சோவில் வழக்கு பதிவு
பயிற்சியாளர் தன்னிடம் பாலியல் சீண்டல் செய்வதாக பலமுறை புகார் தெரிவித்தும், இதனை அனுசரித்து செல்லும்படி கிரிக்கெட் சங்க நிர்வாகத்தினர் தன்னிடம் கூறியதாக மாணவி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
கிரிக்கெட் பயிற்சியாளர் பாலியல் தொல்லை கொடுத்தது, மாணவி புகார் தெரிவித்தும் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்காதது ஆகியவற்றை குழந்தைகள் நல பாதுகாப்புக் குழு உறுதி செய்திருக்கிறது.
போக்சோவில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட 5 பேர் தலைமறைவாக இருப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள துத்திப்பட்டு கிராமத்தில் கிரிக்கெட் சங்கத்திற்கு சொந்தமான மைதானங்கள் உள்ளன. இங்கு நீர் நிலைகளையும், அரசு புறம்போக்கு இடங்களையும் ஆக்கிரமித்து கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து முன்னாள் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவின் பேரில் மைதானத்துக்கு சீல் வைக்கப்பட்டது. தற்போது கிரிக்கெட் மைதானத்திற்கு இந்த தடைகள் நீக்கப்பட்டு மீண்டும் கிரிக்கெட் பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன.
புதன், 20 அக்டோபர், 2021
FaceBook பெயரை மாற்ற முடிவா? : அதிரடி அறிவிப்பை வெளியிடப் போகும் ஃமார்க் - என்ன காரணம்?
கலைஞர் செய்திகள் : ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெயரை மாற்றுவதற்குத் தலைமை செயல் அதிகாரி மார்க் சக்கர்பெர்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகின் முன்னணி சமூக வலைதளமான ஃபேஸ்புக்கை பலகோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சமீப காலமாக ஃபேஸ்புக் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது.
குறிப்பாக ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் வெளியே கசிந்து வருகிறது என்ற குற்றச்சாட்டு அண்மைக் காலமாகத் தொடர்ச்சியாகப் பலராலும் முன்வைக்கப்பட்டு வருகிறது. அப்போது எல்லாம் ஃபேஸ்புக் நிறுவனம் மறுப்பு ஒன்றை மட்டுமே தெரிவித்துள்ளது.
சமீபத்தில் கூட ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் ஆகிய மூன்று தளங்களும் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 6 மணி நேரம் முடங்கியது. பின்னர் இந்த பிரச்சனையை ஃபேஸ்புக் சரிசெய்தது. இப்படி முடங்கிய அடுத்த இரண்டு நாளிலேயே மீண்டும் ஒரு மணி நேரம் ஃபேஸ்புக் முடங்கியது.
பிரியங்கா காந்தி உத்தர பிரதேசத்தில் கைது
புதிய தலைமுறை - Sinekadhara : உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தியை போலீசார் கைதுசெய்தனர்.
போலீஸ் காவலில் உயிரிழந்த தூய்மைப் பணியாளர் குடும்பத்தை சந்திக்க பிரியங்கா ஆக்ரா சென்றுள்ளார். ஆக்ரா சென்றபோது கான்வாய் வாகனங்களை தடுத்து நிறுத்தி பிரியங்கா காந்தியை உத்திரபிரதேச காவல்துறையினர் கைதுசெய்தனர். பிரியங்கா காந்தி அனுமதி பெறாததால் ஆக்ரா செல்ல அனுமதிக்கமுடியாது என காவல்துறை விளக்கமளித்திருக்கிறது. மேலும் அங்கு 144 தடை விதிக்கப்பட்டுள்ளதால் பிரியங்கா காந்தி செல்ல அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்திருக்கிறது. ஆனால், தான் நாட்டில் எங்கும் சுதந்திரமாக நடமாடுவதற்கு முழு உரிமையும் உள்ளது என்ற அரசியலமைப்பு சட்டத்தை சுட்டிகாட்டியபின் அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.
மதிமுகவின் தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ
மின்னம்பலம் : மதிமுகவின் தலைமை கழக செயலாளராக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
துரை வைகோவை கட்சிக்குள் கொண்டுவரவேண்டும் அவருக்கு பதவி அளிக்க வேண்டும் என்று பலர் மதிமுகவில் வலியுறுத்தி வந்த நிலையில், ‘வாரிசு அரசியலை எதிர்த்தே திமுகவில் இருந்து வெளியே வந்த தான், தனது கட்சியிலும் வாரிசை கொண்டுவருவதா என்ற விமர்சனத்துக்கு ஆளாக நேரிடும்’ என்று உண்மையிலேயே வைகோ அஞ்சினார். ஆனால் மாவட்டச் செயலாளர்களின் தொடர் வற்புறுத்தல்களை அடுத்து இதுகுறித்து விவாதிக்க இன்று (அக்டோபர் 20) மதிமுகவின் தலைமை அலுவலகமான தாயகத்தில் மாசெக்கள், அரசியல் ஆய்வு மையக் கூட்டத்தைக் கூட்டினார் வைகோ.
இந்த கூட்டத்தின் முடிவில், ‘துரை வைகோ மதிமுகவின் தலைமைக் கழக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். மதிமுகவின் சட்டப்படி இந்த பதவியில் அவரை நியமிக்க எனக்கு அதிகாரம் இருந்தாலும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 106 பேர்களில் 104 பேர் துரை வைகோவுக்கு ஆதரவாக வாக்களித்தார்கள்” என்று அறிவித்தார் வைகோ.
நாதஸ்வர கலைஞர்களின் வாழ்வாதாரம் கேளிவிக்குறி .. தமிழ்நாடு அரசு ஆவன செய்யுமா?
நக்கீரன் -ஜீவாதங்கவேல் : கார்ப்பரேட் நிறுவனங்கள், ஐ.டி.கம்பெனிகள், அரசு ஊழியர்களுக்கெல்லாம் இந்த கரோனாவின் கொடுமைகள் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
ஆனால், அன்றாடம் உழைத்து அதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழும் உழைக்கும் மக்கள் தான் கொடுந்துன்பம் அனுபவித்து, இப்போதும் அதிலிருந்து மீளாது இருக்கிறோம்.
அதிலும் குறிப்பாக மக்களின் வாழ்வியலோடு கலந்தது பண்டிகைகளும், குடும்ப திருவிழாக்களும் அப்படிப்பட்ட நிகழ்வுகளில் பண்பாட்டுக் கலைநிகழ்வுகள் நம் தமிழ்க் கலாச்சாரத்தில் தொன்று தொட்டு நடக்கிறது. அந்த வரிசையில் குடும்ப நிகழ்வுகளாள சீர், சடங்குகள், திருமண விழாக்கள் தொடங்கி கோயில் நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் மேளம், நாதஸ்வரம் இசைப்பது ஒரு மங்கள நிகழ்வாக நடைபெற்று வருகிறது. இந்த தொழிலில் ஈடுபடும் கலைஞர்கள் தமிழ்நாட்டில் ஏறக்குறைய ஐம்பதாயிரம் குடும்பங்கள் உள்ளது.
வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!
கலைஞர் செய்திகள் : வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த மாவட்ட வாரியாக அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
அமைச்சர்கள் சிலரை, சில மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து, அந்தந்த மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகாலப் பணிகளைக் கூடுதலாக மேற்கொள்ளவும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
அதன்படி, வருவாய் மாவட்ட வாரியாக பின்வரும் அமைச்சர்கள் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
10 ஆயிரம் கோடிகளை பதுக்கிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்
மின்னம்பலம் : தமிழ்நாடு முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குடும்பத்தைக் குறிவைத்து அக்டோபர் 18ஆம் தேதி 43 இடங்களில் ரெய்டு செய்தனர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார், மற்ற ரெய்டுகள் போல் இல்லாமல் இந்த ரெய்டு டென்ஷன் இல்லாமல் இருந்ததாகச் சொல்கிறார்கள் அதிகாரிகள்.
விஜயபாஸ்கரின் குடும்பம், நட்புகள், உறவுகள், தொழில் பார்ட்னர்கள் எனக் கணக்கெடுத்துச் சரியாகத் திட்டமிட்டு அக்டோபர் 18ஆம் தேதி, காலை 6.30 மணிக்கு 430 பேர் அடங்கிய ஒரு பெரிய டீம் 43 இடங்களுக்குச் சென்று ரெய்டில் ஈடுபட்டனர். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு தெற்கு சரகம் எஸ்பி சண்முகம் தலைமையிலும் டிஎஸ்பி இமயவரம்பன் மேற்பார்வையிலும் இந்த ரெய்டு நடைபெற்றது.
ரெய்டு நடைபெறும் ஒவ்வோர் இடத்துக்கும் அதன் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்திலிருந்து ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட போலீஸார் காலை 8.00 மணி முதல் ரெய்டு முடியும் வரையில் பாதுகாப்புப் பணிக்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்தனர்
செவ்வாய், 19 அக்டோபர், 2021
சிங்கள மொழி, பண்பாடு, மரபணுக்கள் திராவிடத்தோடு பின்னிப் பிணைந்து அமைந்திருக்கிறது .. வரலாற்று ஆய்வுகள் கூறும் உண்மை .
இலங்கையில் உள்ள சிங்கள மக்களின் மரபணு 69.86% +/- 0.61 வீதம் தென்னிந்திய தமிழர்களிடம் பொருந்தி உள்ளது
இலங்கை தமிழர்களின் மரபணு சிங்கள மக்களின் மரபணுவோடு 55.20% +/- 9.47 வீதம் பொருந்தி உள்ளது
இலங்கையில் உள்ள தமிழர்களின் மரபணு 16.63% +/- 8.73 தென்னிந்திய தமிழர்களோடு பொருந்தி உள்ளது
ஆச்சரியமான ஒரு விடயம் இலங்கை தமிழர்களை விட சிங்கள மக்களின் மரபணு தமிழ்நாடு தமிழர்களோடு அதிக அளவில் பொருந்தி உள்ளது
மேலும் சிங்கள மக்களின் மரபணு 25.41% +/- 0.51 வீதம் வங்காள மக்களோடு பொருந்தி உள்ளது
இலங்கையில் உள்ள சிங்கள மக்களும் தமிழ் மக்களும் 55%. மரபணு பொருந்தி உள்ளது
Subashini Thf தற்கால சிங்களம் பொ.ஆ (கி பி ) 1200 முதல்
இன்றைய நிலையில் இலங்கையில் ஏழு முக்கிய மொழிகள் புழக்கத்தில் உள்ளன.
1. சிங்களம் 2. தமிழ் 3. திவேகி (மாலத்தீவில் பேசப்படும் மொழி) 4. அரபு 5. கிரியோல - மலேசியாவிலிருந்து வந்து சேர்ந்த மலாய் மக்கள் பேசும் பல கலப்புகள் கொண்ட ஒரு மொழி 6. போர்த்துகீசியமும் சிங்களமும் கலந்த வகையில் போர்த்துக்கீசிய வம்சாவழியினர் பேசும் ஒரு கலப்பு மொழி 7. சாமுண்டி வேடர்கள் பேசும் ரோடியா மொழி.
நூலாசிரியர் நூலில் குறிப்பிடும் பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் காணும் போது சிங்கள மொழியின் வளர்ச்சியைக் கீழ்காணும் வகையில் காணலாம்.
1. இலங்கை பூர்வ குடியினர் வழக்கில் இருந்த 'எளு' என்பது சிங்கள மொழியில் ஆரம்பகால மொழியாக இருந்தது.
அதிமுக கவுன்சிலர் லாரிக்கு அரசு நிலத்தில் பார்க்கிங்கா? செருப்பு பிஞ்சிடும் கடுமையாகப் பேசிய எம்.எல்.ஏ.எழிலரசன்
மின்னம்பலம் : திமுக எம்.எல்.ஏ எழிலரசன் அதிகாரிகள் , ஆட்சியர் முன்னிலையில் கடுமையான வார்த்தையைப் பயன்படுத்தியது குறித்து விளக்கமளித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் தொகுதியில் சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, டிஎஸ்பி முருகன், அறநிலையத் துறை அதிகாரி தியாகராஜன் ஆகியோர் அத்திவரதர் கோயில் அருகில் உள்ள அரசால் அமைக்கப்பட்ட பக்தர்கள் தங்குமிடம் மற்றும் கார், பஸ் பார்கிங் ஏரியாவை கடந்த 17ஆம் தேதி பார்வையிட்டனர்.
அப்போது, எம்.எல்.ஏ எழிலரசன் சற்று கோபமாக அதிகாரிகளை பார்த்து, ‘செருப்பு பிஞ்சிடும்’ என கடுமையான வார்த்தையில் திட்டிய வீடியோ இணையத்தில் வைலரானது.
இதுதொடர்பாக காஞ்சிபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வும், திமுக மாணவர் அணி மாநில அமைப்பாளருமான எழிலரசனிடம் நாம் விசாரித்தோம்.
சசிகலாவின் இரண்டாவது ஆட்டம் களையிழந்தது ஏன்? எதிர்பார்த்த கூட்டம் இல்லையாம்!
மின்னம்பலம் : அதிமுகவின் பொதுச் செயலாளர் என்றே தன்னை உறுதியாகக் குறிப்பிட்டு அதிரடியான அரசியல் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார் சசிகலா. ஆனால் அரசியலின் இந்த இரண்டாவது இன்னிங்சில் அவரது ஃபர்ஸ்ட் லுக் வீரியமாக வீச்சாக அதிர்வுகளை ஏற்படுத்தக் கூடியதாக இருந்ததா என்று கேட்டால்.... சசிகலாவின் முழுமையான ஆதரவாளர்கள் கூட, ‘இன்னும் வைப்ரன்ட்டா இருந்திருக்கணும்தான்’ என்கிறார்கள் உதட்டை சுருக்கிக் கொண்டு.
கடந்த ஜனவரி 27 ஆம் தேதி சிறையில் இருந்து சசிகலா அதிகாரபூர்வமாக விடுதலை செய்யப்பட்டாலும் அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருந்ததால், பெங்களூரில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன் பின் கொரோனாவில் இருந்தும் அவர் விடுதலையாகி அங்கேயே சில நாட்கள் ஓய்வெடுத்து பிப்ரவரி மாதம்தான் சென்னை திரும்பினார். அதிமுக கொடி கட்டிய ஒரு நிர்வாகியின் காரில் சென்னை வந்த சசிகலா, சட்டமன்றத் தேர்தலில் ஒரு அதிர்வை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மார்ச் 3 ஆம் தேதி இரவு, ‘நான் அரசியலில் இருந்து சற்றே ஒதுங்கிக் கொள்கிறேன்’ என்று ஒரு அறிக்கையை வெளியிட்டு அதிர்ச்சிப்படுத்தினார் சசிகலா. ஆனபோதும் கோயில்களுக்கு சென்றபோது அவரை அமமுகவின் வேட்பாளர்கள் சந்தித்து ஆசி பெற்றனர்.
தமிழ் தெரியாத Zomato பணியாளரின் இந்தி வெறி! மன்னிப்பு கேட்ட சோமாடோ நிறுவனம்
zeenews.india.com : இந்தியாவில் வேகமாக வளரும் உணவு டெலிவரி சேவை நிறுவனங்களில் ஒன்று சொமேட்டோ நிறுவனம் ஆகும். சொமேட்டோ இந்தியா உள்ளிட்ட 23 நாடுகளில் இயங்குகிறது. உணவகங்களைப் பற்றிய விவரங்களையும், அவற்றின் படங்களையும், வாடிக்கையாளர் மதிப்பீட்டையும் இத்தளத்தில் பார்க்க முடியும்.
சமீப காலமாக சொமேட்டோ (Zomato) நிர்வாகம் சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. முன்னதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த சொமேட்டோ டெலிவரி பாய், நுகர்வோருக்கு வழங்க வேண்டிய உணவை எடுத்துச் சாப்பிட்டார். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் வைரலானதுடன் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதேபோல் சென்ற ஆண்டு, பெங்களூருவில் உணவு வழங்கும்போது பெண் நுகர்வோரைத் தாக்கியதாக சொமேட்டோ ஊழியர் மீது புகார் அளிக்கப்பட்டது.
இல்லம் தேடிக் கல்வி’ எப்படி செயல்படும்? - ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்க திட்டம் : அமைச்சர் பேச்சு!
கலைஞர் செய்திகள் நர்சரி பள்ளிகள் திறப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
குழந்தைகளின் உடல் நலனை மனதில்கொண்டு நர்சரி பள்ளிகள் திறப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்வில் "இல்லம் தேடிக் கல்வி" பயிற்சிப் பணிமனை, மற்றும் இத்திட்டத்தில் இணையும் தன்னார்வலர்களுக்கான இணையதளம் ஆகியவற்றை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
ஷியா முஸ்லிம்கள் எங்கிருந்தாலும் தப்ப முடியாது: ஐ.எஸ்., பயங்கரவாதிகள் எச்சரிக்கை
தினமலர் : காபூல்: '‛உலகின் எந்தப் பகுதியில் ஷியா முஸ்லிம்கள் இருந்தாலும் அவர்கள் எங்களிடம் இருந்து தப்ப முடியாது,'' என, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானை தலிபான் பயங்கரவாதிகள் கடந்த ஆக.,15ம் தேதி கைப்பற்றினர். ‛'ஆப்கனில் இயங்கும் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் முழுமையாக அகற்றப்படுவர்,'' என, தலிபான்கள் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்ததால், ஆப்கனில் ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஷியா முஸ்லிம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது.
ஆப்கனில் குண்டுஸ் பகுதியில் கடந்த 8ம் தேதி மசூதி ஒன்றில் தொழுகையின் போது நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். அதேபோல் கடந்த 15ம் தேதி கந்தஹார் பகுதியில் ஷியா மசூதி ஒன்றில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 60க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இந்த இரு குண்டுவெடிப்புகளுக்கும் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை நோர்வே தூதர் எரிக் சொல்ஹெய்ம் சந்தித்தார்
தமிழக முதல்வரை சந்தித்ததில் மகிழ்ச்சி. உலகின் காலநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டம் மற்றும் பசுமை செயற்றிட்டங்களில் இந்தியா மற்றும் தமிழ்நாடு எவ்வாறு முன்னிலை வகிக்க முடியும்? என்பது குறித்து இந்தச் சந்திப்பின்போது ஆராயப்பட்டதாக எரிக் சொல்ஹெய்ம் தனது ருவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை இந்தச் சந்திப்பின் போது இந்தியாவுக்கான நோர்வேதூதா் ஹன்ஸ் ஜேகப் பிஃரைடன்லண்ட், தமிழக தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, முதல்வரின் செயலாளா் த.உதயசந்திரன், பொதுத்துறை செயலாளா் டி.ஜெகநாதன், சென்னையில் உள்ள நோர்வே கெளரவத் தூதா் அரவிந்த் கோபிநாத் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.
திங்கள், 18 அக்டோபர், 2021
ஒரே நாளில் 30 குட்கா வியாபாரிகள் கைது... போலீஸ் அதிரடியால் குட்கா விற்பனைக்கு கடிவாளம்!
நக்கீரன் -ஜீவாதங்கவேல் - சசிமோகன் : ஈரோட்டில் நொச்சிக்காட்டுவலசு என்ற பகுதியில் ஒரு வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்து இருப்பதாக டவுன் போலீஸாருக்கு ஒரு ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது.
அதன்பேரில் டவுன் டிஎஸ்பி ஆனந்தகுமார், தாலுகா இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீஸார் அந்த நொச்சிக்காட்டுவலசு பகுதியில் வீடு வீடாகச் சென்று சோதனைகளை மேற்கொண்டனர். அப்போது ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட 350 கிலோ குட்கா மூட்டை மூட்டையாகப் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அந்த வீட்டிலிருந்தவரை விசாரித்தபோது அவர் பெயர் நாட்ராயன்(39) என்பதும் அவர் குட்காவை வெளி மாவட்டத்திலிருந்து வாங்கி வந்து அதை ஈரோட்டில் உள்ள பல்வேறு கடைகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வந்ததும் தெரியவந்தது.
விஜயபாஸ்கர் வீடுகளில் ரெயிடு.. வழக்கு .. வருமானத்திற்கு அதிகமாக ரூ.27.22 கோடிக்கு
மாலைலமலர் : முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போது ரூ. 6.41 கோடி சொத்து இருப்பதாக விஜயபாஸ்கர் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான குவாரி மற்றும் வீடுகளில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருவேங்கைவாசல் பகுதியிலுள்ள அவரது குவாரி மற்றும் வீடுகளில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட 43 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
பாஜக பிரமுகர் கல்யாணராமன் இரவில் கைது . முதல்வர் குறித்து அவதூறு பதிவு காரணம்
பாஜக பிரமுகரான கல்யாணராமன் சமூகவலைதள பக்கமான ட்விட்டரில் தொடர்ந்து ஆபாசமான சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவு செய்து வந்தார்.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் ஆகியோரை சர்ச்சைக்குரிய வகையில் டவிட்டரில் பதிவு செய்தார்.
அது போல் திரைப்பட நடிகையும் மருத்துவருமான ஷர்மிளாவை மிகவும் கடுமையாக விமர்சித்தார்.
அந்த வகையில் திமுகவின் தருமபுரி எம்பி செந்தில் குமாரின் உதவியாளர் சந்தேஷ், பாஜக கல்யாணராமனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என சென்னை சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளித்தார்.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு விடுத்த எச்சரிக்கை - பின்னணி என்ன?
வங்கதேசத்தின் டாக்காவில் இருந்து 100 கி.மீ தூரத்தில் உள்ள கோயிலில் துர்கா பூஜையின்போது ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து அங்குள்ள இந்து கோயில்கள் தாக்கப்பட்டிருக்கின்றன. ஷேக் ஹசீனாவின் அரசாங்கம் இந்துக்களின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து பேசி வருகிறது, ஆனால் கடந்த புதன்கிழமை ஷேக் ஹசீனா இந்துக்களின் பாதுகாப்பு தொடர்பாக வெளிப்படுத்திய கருத்துகள் அசாதாரணமாகப் பார்க்கப்படுகின்றன.
நான் ‘கல்யாணம்’ பண்ணிட்டேன் அப்பா…! ‘ப்ளீஸ், எங்கள விட்ருங்க…’ ‘தரதரவென இழுத்து சென்ற தந்தை…’ ‘கதறி துடித்த மகள்
இலக்கியா இன்போ : சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட தன்னுடைய மகளை விஏஓ ஒருவரே போலீசை தாக்கி காரில் வலுக்கட்டாயமாக இழுத்து செல்ல முயன்றார். சினிமாவில் பார்ப்பது போல் நடந்த சம்பவத்தை பொதுமக்களே தடுத்து நிறுத்தி பெண்ணை காப்பாற்றினார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் கிராமத்தை சேர்ந்த பாரதி (23) என்பவரும், நாகப்பட்டினம் மாவட்டம் செம்பியன்மாதேவி பகுதியை சேர்ந்த மதன்ராஜ் (24) என்பவரும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகின்றனர்.
அப்போது ஏற்பட்ட நட்பு காதலாக மாறவே கடந்த இரண்டு ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனவே இருவரும் பதிவு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இதற்காக கடந்த 9-ஆம் தேதி திருச்சியில் இருந்து நாகை வந்த இருவரும், நேற்று முன்தினம் (12-10-2021) பதிவு திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
பங்களாதேஷ் இந்துக்கள் மீதான தாக்குதல் விபரங்களை
மாலைமலர் : வங்காளதேசத்தில் இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் வன்முறைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்து உள்ளார்.
வங்காளதேச நாட்டில் உள்ள இந்து கோவில்களில் துர்கா பூஜை விழா நடந்தது.
இந்த நிலையில் கொமில்லா நகரில் உள்ள இந்து கோவில்களில் கும்பல் ஒன்று திடீரென்று தாக்குதல் நடத்தியது.
துர்கா பூஜை விழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த பந்தல்கள் சேதப்படுத்தப்பட்டன. அங்கிருந்த பக்தர்களை தாக்கினர்.
அதேபோல் கொமில்லா நகருக்கு அருகே உள்ள சந்த்பூரின் ஹாஜிகன்ஜ், சட்டோகிராமின் பன்ஷ்கலி, காக்ஸ் பஜாரின் பெகுலா ஆகிய நகரங்களில் உள்ள இந்து கோவில்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் எப்போது கிடைக்கும்?
மாலைமலர் : நியூயார்க் பாரத் பயோடெக் நிறுவனம், தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய கோவேக்சின் தடுப்பூசிக்கு இதுவரை உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் கிடைக்கவில்லை. பன்னாட்டு பயணங்களுக்கு அனுமதிக்கப்படும் தடுப்பூசி பட்டியலிலும் கோவேக்சின் இடம் பெறவில்லை.
கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கோரி உலக சுகாதார நிறுவனத்திடம் பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
இந்நிலையில், கோவேக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி வழங்குவது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் ஆலோசனை குழு அக்டோபர் 26-ம் தேதி கூடுகிறது.
ஞாயிறு, 17 அக்டோபர், 2021
மரச்செக்கு எண்ணெய் உணவுக்கு உகந்தது அல்ல? நீர் சேர்வதால் free fatty acid எனப்படும் கொழுப்பு.. ஆய்வகங்கள் ..
Rajendran Ramalingam : இவங்க என்ன மரச்செக்கு எண்ணெய்தான் பாரம்பரியம்னு சொல்லிட்டு ஆளாளுக்கு செக்கு எண்ணெய் வாங்கப்போறேன்னு கிளம்புறாங்க?...
மரச்செக்கு எண்ணெய்னா,
செக்குல ஒரு ஆளு உட்கார்ந்து ஆட்டி குடுப்பாங்கன்னு நினைச்சுட்டு இருக்காங்களா?...
அந்த எண்ணெயை ஆட்டுறதுக்கு பெரிய, பெரிய இயந்திரங்கள் எல்லாம் இருக்கு...
அதுதான் எண்ணெய் ஆட்டி குடுக்கும்.
இவங்க கற்பனை பண்ற மாதிரி செக்குல ஒரு பாட்டி உட்கார்ந்து பாட்டு பாடிட்டே எண்ணெயெல்லாம் ஆட்டித் தர மாட்டாங்க....
எங்களது குல தொழிலே
எண்ணெய் தயாரித்து விற்பனை செய்வதுதான்..
ஒரு உண்மையை சொல்கிறேன், நாங்கள் எவ்வளவு சுத்தமாக எண்ணெய் தயார் செய்தாலும், ஆய்வகத்தில் கொடுத்து ஆய்வு செய்தால், "இது உணவுக்கு உகந்தது அல்ல" என்றே ஆய்வறிக்கை தெரிவிக்கும்.
பன்னீர்-எடப்பாடி: சமரசம் பேசும் சசிகலா
மின்னம்பலம் : ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி ஆகியோரை யாரும் தரக்குறைவாக பேச வேண்டாம் என்றும் எல்லாரும் இணைந்து அதிமுக ஆட்சிக்கு வர பாடுபட வேண்டும் என்றும் சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதிமுகவின் பொன்விழாவை ஒட்டி இன்று (அக்டோபர் 17) சென்னை ராமாவரத்திலுள்ள எம்.ஜிஆரின் தோட்டத்தில் அதிமுக பொன் விழா மலரை வெளியிட்ட சசிகலா அங்கே தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவரது தொனியில் பெரும் மாற்றம் தெரிந்தது.
'மெட்டி ஒலி' புகழ் உமா திடீர் உயிரிழப்பு ம்: "அம்மாவை பார்த்த பிறகு பிரிந்த உயிர்
BBC : 'மெட்டி ஒலி' சீரியல் மூலம் புகழ்பெற்ற நடிகை உமா மகேஸ்வரி உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 40. உமா உயிரிழந்த தகவலை அவரது தோழியும் நடிகையுமான அம்மு ராமச்சந்திரன் தனது முகநூல் பக்கத்தில் உறுதிப்படுத்தினார். சன் டிவியில் ஒளிபரப்பான 'மெட்டி ஒலி' சீரியலில் விஜி என்ற கதாபாத்திரம் மூலமாக புகழ்பெற்றவர் நடிகை உமா. 'மஞ்சள் மகிமை', 'ஒரு கதையின் கதை' உள்ளிட்ட பல சீரியல்களிலும், சில படங்களில் நடித்துள்ளார்.
திருமணத்திற்கு பின்பு அதிகம் சீரியல்களில் நடிக்காமல் இருந்தார். கடந்த சில வருடங்களாவே உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர், கடந்த சில மாதங்களாக ஈரோட்டில் தங்கியிருந்து சிகிச்சை மேற்கொண்டார். ஆனால் சிகிச்சை பலன் இல்லாமல் அவர் இறந்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது."
இவரது கணவர் கால்நடை மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவை புரட்டிப்போட்ட கனமழை- உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்வு
மாலைமலர் : திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து இடைவிடாமல் கனமழை பெய்து வரும் நிலையில், இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்குடன், நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.
சபரிமலை கோவிலுக்கு இன்றும் நாளையும் செல்ல வேண்டாம் என பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மீட்கப்படும் மக்களுக்காக 105 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இன்று மாலை நிலவரப்படி, கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்திருந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. கோட்டயம் மாவட்டத்தில் 14 பேரும், இடுக்கியில் 8 பேரும் பலியாகி உள்ளனர்.
கோழிக்கோட்டில் ஒரு குழந்தை நீரில் மூழ்கி இறந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கிய பலர் காணாமல் போயிருப்பதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கேரளாவில் கடும் மழை வெள்ளம், நிலச்சரிவு: 5 மாவட்டங்களில் ரெட் அலர்ட்
BBC : கேரளாவில் கடும் மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டு வருகின்றன.
பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் ஆகிய 5 மாவட்டங்களில் கடும் மழை பொழிவு இருக்கும் என்பதற்காக ரெட் அலர்ட் எனப்படும் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
இது தவிர 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
கோட்டயம் மாவட்டம் பூஞ்சார் என்ற இடத்தில் சாலையில் ஓடும் வெள்ளத்தில் பாதி மூழ்கிய நிலையில் இருக்கும் பேருந்தில் இருந்து உயிர் பயத்தோடு பயணிகள் கழுத்தளவு தண்ணீரில் இறங்கி தப்பிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
உலகிற்கு மாலத்தீவு கூறும் செய்தி : நாளை நம்மை காப்பாற்றிக்கொள்ள எந்த வாய்ப்பும் இருக்காது
கலைஞர் செய்திகள் -ராஜசங்கீதன் : 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் தேதி.
மாலத்தீவு நாட்டு அரசியல் வட்டாரம் பரபரப்பு கொண்டிருந்தது.
அமைச்சரவை கூட்டம் நடக்கவிருந்தது. பொதுவாக ஒரு நாட்டில் அமைச்சரவை கூடுவது சகஜம்தான். பல விஷயங்களை தீர்மானிக்கவும் விவாதிக்கவும் கூடுவதுண்டு.
மாலத்தீவு நாட்டில் கூடவிருந்த அமைச்சரவை கூட்டத்துக்கு மட்டும் ஒரு வித்தியாசம் இருந்தது. அந்த வித்தியாசம் விவாதிக்கப்படவிருக்கும் பிரச்சினையால் ஏற்படவில்லை.
கூட்டம் நடத்தப்படவிருக்கும் விதத்தால் ஏற்பட்டது. அமைச்சரவை கூட்டம் நடக்கவிருந்தது கடலுக்கடியில்.
அமைச்சரவை கூட்டத்தில் பங்குபெறவிருந்த அமைச்சர்கள் கடலுக்குள் செல்வதற்கான பாதுகாப்பு உடைகளை அணிந்து கொண்டனர். கருவிகளையும் எடுத்துக் கொண்டனர். கடலுக்கு அடியில் அமைச்சரவை கூட்டம் கூடியது.