சனி, 28 ஏப்ரல், 2018

மெரினாவில் அய்யாக்கண்ணு உண்ணாவிரதத்துக்கு தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

maalaimlar :மெரினாவில் அய்யாக்கண்ணு போராட வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் 90 நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் என விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கு பதிலளித்த சென்னை மாநகர காவல்துறை, மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை என கூறியிருந்தது. அதிகளவில் பொதுமக்கள் கூடும் போது பாதுகாப்பு அளிப்பது இயலாத காரியம் என பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம் மெரினாவில் போராட்டம் நடத்த அய்யாக்கண்ணுவுக்கு  ஒருநாள் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல், அமைதியான முறையில் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. 

குஷ்பு : Yes ..I m Nakhat khan ... டுவீட்டரில் தனது பெயரை நக்கத் கான் என....


Devi Somasundaram : Yes ..I m Nakhat khan ..
குஷ்பூ தன் பேரை டிவிட்டர்ல நக்கத் கான்னு தன்னோட உண்மையான பேர்ல மாத்திட்டார் என்று செய்தி ...
வட மாநில ஊடகங்களில் விவாதத்திற்க்கு போகும் போது இந்து வேஷம் போட்டு ஏமாற்றி அரசியல் செய்கிறாய் என்று விமர்சிக்க பட்ட்தும்..இஸ்லாமியர்ன்னு சொல்லிக்க தைரியம் இல்லன்னு சொல்ல பட்டதும் மாற்றதிற்கான காரணமாய் இருக்க கூடும். வீரம் என்பது சுத்தி பத்து பேர்
பாதுகாப்புக்கு வச்சுகிட்டு சவடால் விடுவதில்லை. தனியா நிக்கிறேன் வந்து மோதி பார்னு கூவுறதில்ல. வீரம் என்பது மரணம் நிச்சயம் என்று தெரிந்தாலும் எதிரி எதை செய்யாதன்னு சொல்கிறானோ அதை செய்வது தான்.
ஒட்டரசியலுக்காக தன் பேரை சைமன் என்பதை மறைத்து கொள்வதை எல்லாம் வீரம்னு சொல்லிக்கிற இடத்துல இஸ்லாமியரா இருப்பது மிகுந்த நெருக்குதலுக்கு உள்ளான சூழல்ல ஆமா நான் முஸ்லிம் தான் என்று தன்னை ப்ரகன படுத்தி கொள்ளும் குஷ்பூ வின் துணிச்சல் இங்கு பல ஆண்களிடம் கிடையாது என்பதே உண்மை .

ஜார்கண்ட் : பிறந்தது பெண் குழந்தை என நிரூபிக்க பிறப்பு உறுப்புகளை துண்டித்ததில் ஆண் குழந்தை உயிரிழப்பு

தினத்தந்தி :சத்ரா, ஜார்கண்டின் சத்ரா மாவட்டத்தில் வசித்து வருபவர் அனில் பண்டா. இவரது 8 மாத கர்ப்பிணி மனைவிக்கு கடந்த செவ்வாய் கிழமை பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து அருண் குமார் என்ற மருத்துவரிடம் அன்றிரவு சென்றுள்ளனர். அவர் பரிசோதனை செய்து விட்டு அனுஜ் குமார் என்பவர் நடத்தும் மருத்துவமனைக்கு செல்லும்படி கூறியுள்ளார். அங்கு அனில் தனது மனைவியை சேர்த்துள்ளார். இந்த நிலையில், பிரசவத்திற்கு முன் அனுஜ் அல்ட்ராசவுண்ட் பரிசோதனை செய்து உள்ளார்.
அதன்பின் பெண் குழந்தை பிறக்கும் என அனிலின் குடும்பத்தினரிடம் அனுஜ் கூறியுள்ளார். ஒரு சில மணிநேரங்களில் அனிலின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆரோக்கியமுடன் ஆண் குழந்தை பிறந்த நிலையில் அனிலின் மனைவி மற்றும் தாயார் அழுதபடி இருந்துள்ளனர்.
கிளினிக்கிற்குள் ஓடிய அனில், அங்கு இறந்து கிடந்த குழந்தையை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அல்ட்ராசவுண்ட் அறிக்கையை உண்மையாக்குவதற்காக மருத்துவர் அனுஜ் ஆண் குழந்தையின் பிறப்புறுப்புகளை துண்டித்துள்ளார்.

ஐநாவுக்கு வைகோ கடிதம் : காவிரியில் தமிழகத்துக்கு நீதி கிடைக்க நடவடிக்கை தேவை

tamilthehindu : காவிரி பிரச்சினையில் தலையிட்டு, இந்திய அரசைத் தொடர்பு
கொண்டு, தமிழகத்திற்கு நீதி கிடைக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, ஐநா மனித உரிமைகள் ஆணையத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.
ஜெனீவாவில் உள்ள ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின், பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் வாழிடங்களைத் தூய்மைப்படுத்தல் ஆணையராக லியோ ஹெல்லர் பொறுப்பு வகித்து வருகின்றார். காவிரி பிரச்சினை குறித்து அவருக்கு வைகோ கடிதம் எழுதி உள்ளார்.
இதுதொடர்பாக மதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தின் 19 மாவட்டங்களுக்கும், தலைநகர் சென்னைக்கும் குடிநீர் வழங்கும் காவிரி நதிநீர் உரிமையை, பல்லாயிரம் ஆண்டுகளாக அனுபவித்து வருகின்ற உரிமையை, கர்நாடக அரசு தடுக்கின்ற அநீதிக்கு இந்திய அரசு துணைபோவதால், மனித உரிமைகள் ஆணையத்தில் செயல்படும் லியோ ஹெல்லர் தலையிட்டு, இந்திய அரசுக்கு அறிவுறுத்துவதற்காக, கோரிக்கை கடிதத்தை வைகோ சமர்ப்பித்துள்ளார்.

எஸ் வி சேகரை கைது செய்ய தடை இல்லை ... நீதிமன்றம் அறிவிப்பு

Mathi - oneindia Tamil :   சென்னை: பெண் செய்தியாளர்களை இழிவுபடுத்தி பதிவு போட்ட பாஜகவின் நடிகர் எஸ்.வி. சேகரை கைது செய்ய தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பெண் செய்தியாளர்களை மிக மோசமாக இழிவுபடுத்தி சமூக வலைதளத்தில் பதிவை பகிர்ந்திருந்தார் எஸ்.வி.சேகர். இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 
Madras High Court denies anticipatory bail to S.Ve. Shekher இதனைத் தொடர்ந்து அப்பதிவை எஸ்.வி.சேகர் நீக்கியிருந்தார். பின்னர் மன்னிப்பும் கேட்டார். எஸ்.வி.சேகருக்கு எதிராக தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து சென்னை போலீசார் எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனால் எஸ்.வி.சேகர் வீட்டுக்கு வராமல் தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்டது. 
அத்துடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

1997இல் உலக அழகி இந்திய டயானா ஹைடன் ஐ அவமதித்த திருபுரா பாஜக முதல்வர் ...

உலக அழகி சர்ச்சை: டயானா வேதனை!திரிபுரா மின்னம்பலம் :முதல்வர் பிப்லப் குமார் தேபின் கருத்து, தன்னை காயப்படுத்தியுள்ளதாக உலக அழகி டயானா வருத்தம் தெரிவித்துள்ளார்.
திரிபுரா முதல்வராக சில மாதங்களுக்கு முன் பதவியேற்றவர் பாஜகவைச் சேர்ந்த பிப்லப் குமார் தேப். இவர் அகர்தலா நகரில் கைத்தறி பயிற்சிப் பட்டறை ஒன்றில் நேற்று முன்தினம் பங்கேற்றார்.
அந்த நிகழ்ச்சியில், “சர்வதேச நிறுவனங்கள் தங்கள் பொருட்களின் சந்தையைத் தக்கவைக்க அதிக கவனம் எடுத்துக்கொள்கின்றன. அதற்காகவே இந்தியாவிலிருந்து இதுவரை ஐந்து பேரை உலக அழகி பட்டத்துக்குத் தேர்வு செய்துள்ளனர். டயானா ஹைடன்கூட 1997இல் உலக அழகி பட்டம் வென்றுள்ளார். ஆனால் அவரிடம் இந்திய அழகை நான் காணவில்லை. ஐஸ்வர்யா ராயிடம் மட்டுமே அந்த அழகு உள்ளது” என்றார்.

டயானா குறித்த அவரின் விமர்சனத்துக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்துவருகின்றன. இது தொடர்பாக சமூக ஆர்வலர் கவிதா கிருஷ்ணன், “பிப்லப் குமார் தேபின் இந்தக் கருத்து முட்டாள்தனமானது” என்றும், டெல்லி முதல்வரின் ஆலோசகர் நாகேந்தர் சர்மா, “திரிபுரா முதலமைச்சரின் இந்தக் கருத்து இந்த ஆண்டின் முட்டாள்தனமான கருத்து” என்றும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

குட்கா அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு முற்றுகை ... பதவி விலக கோரிக்கை

முற்றுகை: சொந்த ஊருக்குப் போகாத அமைச்சர்!மின்னம்பலம் : குட்கா வழக்கில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று திமுக தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. சென்னையில் நேற்று டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட்ட ஜெ. அன்பழகன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர். அதேநேரம் நேற்று புதுக்கோட்டையில் திமுகவினர் அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் என்று ஆர்பாட்டம் நடத்தினர். அவர்களும் கைது செய்யப்பட்டு மாலை ஆறு மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த ஊரான விராலிமலை தொகுதியில் உள்ள இலுப்பூரில் இருக்கும் அவரது வீட்டை முற்றுகையிட நேற்று இரவே திமுகவினர் தீர்மானித்தனர். இந்தத் தகவல் நேற்று சேலத்தில் இருந்த அமைச்சருக்கு தெரிந்துவிட்டது. இன்று அதிகாலை 3.30 க்கு புதுக்கோட்டைக்கு வந்த அவர் தன் சொந்த ஊருக்குச் செல்லாமல் புதுக்கோட்டை டவுனில் இருக்கும் விருந்தினர் மாளிகையிலேயே தங்கினார்.

இந்திரா பானர்ஜி : மனசாட்சிப்படி ஆண்டவனுக்கு கட்டுப்பட்டு நாங்கள் தீர்ப்பு அளித்துள்ளோம்

வெப்துனியா: நேற்று ஓபிஎஸ் உள்ளிட்ட எம்எல்ஏகளின் தகுதி நீக்க வழக்கு நீதிமன்ற
விசாரணைக்கு வந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஷ் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்பு, இன்று வழக்கறிஞர் சூர்யபிரகாசம் ஆஜராகி ஒரு முறையீடு செய்தார்.
அதில், நேற்று வழங்கிய தீர்ப்பை, தினகரன் ஆதரவாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் வாங்கப்பட்ட தீர்ப்பு என்று விமர்சனம் செய்துள்ளார். இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். எனவே, அவர் மீது அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று முறையிட்டார். ஆனால், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிமன்ற தீர்ப்பை விமர்சனம் செய்ய, அனைவருக்கும் உரிமை உள்ளது.
இந்த வழக்கில் மனசாட்சிப்படி ஆண்டவனுக்கு கட்டுப்பட்டு நாங்கள் தீர்ப்பு அளித்துள்ளோம் என தெரிவித்தார். அதோடு, இதனை நீதிமன்ற அவமதிப்பு என்று நீங்கள் கருதினால் மனுவாக தாக்கல் செய்யுங்கள். கோடை விடுமுறைக்குப் பின்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறோம் என்று தெரிவித்தார்.

கிரிக்கெட் போதை... சீனாவில் ஏன் கிரிக்கெட் விளையாடப்படுவதில்லை? சீனப்பிரதமரின் பதில் !

Thamizh Inian : சீன பிரதமர் லீகியாங்கின் இந்திய வருகையின்போது தனியார் பார்த்தால் எனக்கு ஆச்சரியமும், பரிதாபமும்தான் ஏற்படுகிறது” என்றார். சீனாவிற்கும், இந்தியாவிற்கும் உள்ள பொருளாதார வளர்ச்சி விகிதத்தைக் கணக்கிட்டால், நம்மால் சீனாவை எட்டிப் பிடிக்க முடியாது என்கிறார்கள். ஒரு வேளை சீனப் பிரதமர் லீகியாங் போன்ற தெளிவான சிந்தனை உடைய சீனத் தலைவர்கள் அதற்குக் காரணமாக இருக்கலாம். சிக்ஸர்களுக்காக எழுந்த இந்திய இளைஞர்களின் கைத்தட்டல்களில் லீகியாங் சொன்ன பதில் ஒருவேளை இந்திய ஊடகங்களில் அமிழ்ந்து போயிருக்கலாம். 
டிவி நிருபர் ஒருவர் சம்பந்தமில்லாத ஒரு கேள்வியை அவரிடம் கேட்டார். “சீனாவில் இனியாவது கிரிக்கெட் விளையாடப்படுமா?” என்பதுதான் அது. அதற்கு லீகியாங் சொன்ன பதில் “ஒரு போதும் இல்லை. நாங்கள் ஒரு நாளில் சிறு பகுதியைத்தான் விளையாட்டிற்கென எடுத்துக் கொள்வோமே தவிர, ஒரு நாளையே விளையாட்டிற்காக எடுத்துக் கொள்வதில்லை. அதுவும், இங்கு மாதக் கணக்குகளில் கிரிக்கெட் ஆடுவதையும், அதற்காக கோடிக்கணக்கான இளைஞர்கள் தங்கள் நேரத்தை அர்ப்பணிப்பதையும்
ஆனால், ஐ.பி.எல் ன் நிஜம் அவ்வப்போது வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது. ஐ.பி.எல். தொடரைப் பொறுத்தவரை, கலாச்சார சீரழிவு, ஆபாச நடனம், மேட்ச் ஃபிக்ஸிங், ஸ்பாட் ஃபிக்ஸிங் போன்ற அப்பட்டமான விளைவுகளை மட்டுமே நாம் அறிகிறோம். ஐ.பி.எல். தொடர் ஏற்படுத்தும் மறைமுக எதிர்வினைகள் பற்றி நாம் பெரும்பாலும் அறிந்திருப்பதில்லை. ஐ.பி.எல். தொடர் நடைபெறும் இந்த இருமாத காலங்களில் ஈயடிக்கும் வணிகத்துறைகள் ஏராளம வணிக வளாகங்கள், கண்காட்சிகள், தீம் பார்க்குகள், நூலகங்கள், அறிவியல் கருத்தரங்குகள் போன்ற எல்லா துறைகளுமே நலிந்து விடுகின்றன.

கலைஞரை சந்திக்கிறார் தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவ் ... மூன்றாவது அணி பேச்சு வார்த்தை

tamil.oneindia.com/-Mathi : சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை
தெலுங்கானா முதல்வரும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவருமான சந்திரசேகர ராவ் நாளை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரிக்கிறார். மேலும் திமுக செயல் தலைவர் ஸ்டாலினுடன் 3-வது அணி குறித்தும் சந்திரசேகர ராவ் ஆலோசனை நடத்துகிறார்.
பாஜக, காங்கிரஸ் அல்லாத 3-வது அணியை அமைக்கும் முயற்சிகளில் சந்திரசேகர ராவ், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக மமதா பானர்ஜியை கொல்கத்தாவில் சந்தித்து பேசினார் சந்திரசேகர ராவ். இதையடுத்து மமதா பானர்ஜி டெல்லி சென்று பல்வேறு கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். திமுக எம்பி கனிமொழியுடனும் மமதா ஆலோசனை நடத்தினார்.

காவிரி மேலாண்மை வாரியம் .. 2 வாரம் அவகாசம் கோரிய மத்திய அரசு மனு திடீர் வாபஸ்!!

டெல்லி: காவிரி விவகாரத்தில் 2 வாரம் கேட்ட கால அவகாசத்தை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை செயல்படுத்த செயல் திட்டத்தை 6 வார காலத்திற்குள் மத்திய அரசு ஏற்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. Cauvery: Centre seeks 2 weeks time to prepare framework to implement verdict மேலும் தீர்ப்பை நடைமுறைப்படுத்த 3 மாதம் அவகாசமும் கேட்டது.அதேசமயம் தீர்ப்பை அமல்படுத்த தவறிய மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. விசாரித்த சுப்ரீம் கோர்ட், மே 3-ம் தேதிக்குள் மத்திய அரசு வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த காலக்கெடு முடிய இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், மத்திய அரசு சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல் திட்டத்தை உருவாக்க அளிக்கப்பட்ட கால அவகாசம் போதவில்லை என்றும், மேலும் 2 வாரம் அவகாசம் தேவை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் காவிரி விவகாரத்தில் 2 வாரம் கேட்ட கால அவகாசத்தை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. தலைமை வக்கீல் அறிவுறுத்தல் பேரில் மனுவை மத்திய அரசு வாபஸ் பெற்றதாக தகவல் தெரிவித்துள்ளது

ராகுல் உயிருக்கு ஆபத்து: விசாரணை தொடங்கியது!

ராகுல் உயிருக்கு ஆபத்து: விசாரணை  தொடங்கியது!மின்னம்பலம்: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏப்ரல் 26ஆம் தேதி காலையில் டெல்லியிலிருந்து கர்நாடக மாநிலம் ஹூப்ளிக்கு வந்தபோது, அவர் பயணம் செய்த தனி விமானத்தில் ஏற்பட்ட சந்தேகத்துக்கிடமான கோளாறுகள் தேசிய அளவில் மெல்ல மெல்ல அதிர்வை ஏற்படுத்தி வருகின்றன.
ராகுல் காந்தியின் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு பற்றியும், அதனால் ராகுல் காந்தி தப்பிப் பிழைத்தது பற்றியும் விவாதிக்க இந்திய மீடியாக்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 26ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9.20 மணிக்கு டெல்லியிலிருந்து (ஃபால்கான் 2000) தனி விமானம் மூலம் கர்நாடகா புறப்பட்டார். அந்த விமானத்தில் ராகுல் காந்தியோடு அவரது நெருங்கிய நண்பர் கௌஷல் வித்யார்த்தி, ராம் ப்ரீத், ராகுல் ரவி, ராகுல் காந்தியின் எஸ்.பி.ஜி. பாதுகாப்பு அதிகாரி ராகுல் கௌதம் ஆகியோர் பயணம் செய்தனர்.
விமானம் வானில் பறந்துகொண்டிருந்த நிலையில் அன்று காலை 10.45 மணியளவில் அந்த விமானம் திடீரென இடது பக்கம் அசாதாரணமாகச் சாய்ந்தது. விமானத்தின் உயரம் செங்குத்தாகக் குறைந்தது.

காலை 7, சனி, 28 ஏப் 2018 ஓ.என்.ஜி.சி. எண்ணெய் குழாயில் உடைப்பு.. பயிர்கள் சேதம்

ஓ.என்.ஜி.சி. எண்ணெய் குழாயில் உடைப்பு!
மின்னம்பலம்: : கதிராமங்கலம் அருகே மதகடி என்னும் இடத்தில் ஓ.என்.ஜி.சி. எண்ணெய்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பெருமளவில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள கதிராமங்கலம் பந்தநல்லூர் சாலையில் கடந்த ஆண்டு ஜூன் 30ஆம் தேதி ஓ.என்.ஜி.சி. எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டது. அதிலிருந்து இன்று வரை அப்பகுதி பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகள் எனத் தமிழகம் முழுவதும் ஓ.என்.ஜி.சி. வெளியேற வேண்டும் என்று தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில், கதிராமங்கலத்தில் உள்ள மதகடி என்னும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓ.என்.ஜி.சி. எண்ணெய் குழாயில் திடீரென நேற்று (ஏப்ரல் 27) மதியம் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த உடைப்பினை சரிசெய்ய ஓ.என்.ஜி.சி. அதிகாரிகளும், வருவாய்த் துறை அதிகாரிகளும் முகாமிட்டிருந்தனர்.

எதற்காக மனுக்களை விசாரித்தார்கள்: ஸ்டாலின்

 எதற்காக மனுக்களை விசாரித்தார்கள்: ஸ்டாலின் மின்னம்பலம் : 11எம்.எல்.ஏ.க்கள் வழக்கின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின், “சபாநாயகருக்கு அறிவுறுத்த முடியாத நிலையில், எதற்காக மனுக்களை விசாரணைக்கு எடுத்து, இத்தனை காலம் தீர்ப்பினைத் தள்ளி வைத்திருக்க வேண்டும் என்பது சாதாரண மக்களின் கேள்வியாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக கொறடா அர.சக்கரபாணி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் நேற்று (ஏப்ரல் 27) தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வு, சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட முடியாது என்று குறிப்பிட்டு வழக்கைத் தள்ளுபடி செய்தது.

தமிழரின் ஆடல்கலை வரலாற்றைத் திரித்து பத்மா சுப்பிரமணியம் பார்ப்பனீய சாயம் பூசும் சதி வேலையில் ...

பரத முனி என்ற கற்பனை சிருஷ்டியைப் புதிதாக உருவாக்கி அவருக்கு ஒரு நினைவு மண்டபம், கண்காட்சி அரங்கம், அதற்கு ஒரு திறப்புவிழா நாளை (ஏப்ரல் 27) நடக்கிறது. பரத முனி தான் நாட்டிய சாஸ்திரத்திற்கு இலக்கணம் வகுத்தவராம்! என்னே ஒரு பித்தலாட்டம்! பிரபல சிற்பிகள் மெய்மன், கீர்த்திவர்மன்….. உள்ளிட்டோர் இதற்குக் கடுமையான மறுப்பைத் தெரிவித்துள்ளனர். இந்தச் சிலையை வடிவமைத்தவர் பல தில்லுமுல்லுகள் செய்து இன்று சிறைப்பட்டுள்ள முத்தையா சிற்பி! இந்த பரதமுனி நினைவு மண்டபத்தைக் குத்துவிளக்கேற்றித் திறந்து வைப்பது சமீபத்தில் பத்மவிபூஷண் விருதுபெற்ற நாகசாமி. இவர் வரலாற்றைத் திரித்து மதரீதியாகவும், இன ரீதியாகவும் உள்ளர்த்தங்களைத் திணித்து எழுதியவர்
சாவித்திரிகண்ணன்:
பத்மா சுப்பிரமணியம் அவர்களைக் கடந்த 30 ஆண்டுகளாக அறிவேன். நான் போட்டோ ஜர்னலிஸ்ட்டாக பரபரப்பாக இயங்கிய காலகட்டத்தில் ஒரு முறை மாமல்லபுரத்தில் அவர் நடத்திய நாட்டிய முகாமிற்கும், ஒரு முறை நாரத கான சபாவில் நடந்த அவரது மாணவிகளின் நடன நிகழ்ச்சிக்கும் சென்று புகைப்படங்கள் எடுத்துள்ளேன். அவரை ஏராளமான ‘குளோஸ் அப் ஷாட்’கள் எடுத்துள்ளேன். அவரது அன்பும், உபசரிப்பும் மறக்க முடியாதவை!
ஆனால், அவர் தற்போது செய்துகொண்டிருக்கும் செயல்பாடுகள் மிகவும் ஆபத்தானவை! அதிர்ச்சிக்குரியவை! பரதக்கலை மீது ஒரு மேல்தட்டு வர்க்கத்திற்கான அடையாளத்தை நிலை நிறுத்தும் அவரது பகீரத முயற்சிகள் தவறானவை!
ருக்குமணி அருண்டேல் போன்றவர்கள் இதனை நமது கணபதி முதலியார் உள்ளிட்ட தமிழ்நாட்டு நட்டுவனார்களிடம் கற்றுக்கொண்ட பிறகு இதற்கு இந்திய அளவிலான ஒரு ஒப்புதல் கருதி, ‘பரதநாட்டியம்’ என்ற சொற்பிரயோகத்தைக் கொண்டு வந்தனர். அதற்கு முன்பு நம்முடைய எந்த இலக்கியத்திலும், கல்வெட்டிலும் ‘பரதநாட்டியம்’ என்ற சொல்லே இல்லை!
சதிராட்டம் எனும் நமது தமிழ் நாட்டிய மரபைப் பற்றிய முழு விவரத்தையும் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் எழுதியுள்ளார். ஆடல், பாடல் என்று வாழ்ந்த தமிழ் மரபில் மக்கள் மொழியில் இது சதிராட்டம் என்றும், கூத்து என்றும் பேர் பெற்றது.

வெள்ளி, 27 ஏப்ரல், 2018

லதா ரஜினிகாந்த் தமிழர் அல்ல ... அவரும் மாராட்டியரே ? நிஜப்பெயர் லதாபாய்,,

Thamizh Inian : லதா ரஜினிகாந்த் தமிழச்சி இல்லையா ? -நெல்சன் சேவியர்
(நியூஸ் 7)
பதில் : இல்லை (ஆதாரமும் இணைக்கப்பட்டுள்ளது ) அவர்களின் உண்மையான பெயர் லதா பாய் , அவர்களுடைய அம்மா வீடு அன்றும் இன்றும் பெங்களூருவில் இருக்கு, அய்ஸ்வர்யா வின் உண்மையான பெயர் ஜிஜா பாய் , ஜிஜா பாய் இது ரஜினியின் மராத்திய தாயின் பெயர் , இரண்டாவது மகள் சவுந்தர்யா பெயர் ஜக்கு பாய் இதை அவரே டைம்ஸ் ஆப் இந்தியா இதழுக்கு பேட்டி அளித்த ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது , சிவாஜி ராவ் கெய்வாட் என்பது ரஜினியின் உண்மையான பெயர் இப்படி எல்லாமே மராட்டி பெயர்கள், இதுல அவ தமிழச்சி இல்லையானு கேக்குறானுங்க தனுசுக்கு இன்னும் யார் அப்பா அம்மானே தெரியாம நீதிமன்றத்தில் இன்னும் வழக்கு உள்ளது

தண்ணீருக்கான யுத்தம் ?. மஹாராஷ்டிரா, பூனாவில் ....

Alwar Narayanan : எது நடக்கக்கூடாதோ அது வந்தே விட்டது. தண்ணீருக்கான
யுத்தம்.
முண்வா என்ற ஒரு பகுதி மஹாராஷ்டிரா, பூனாவில் உள்ளது. அங்கு கடந்த ஒரு வாரமாக அபார்ட்மெண்ட்கள் கட்டிக்கொண்டு வாழும் மேட்டுக்குடி வர்க்கத்துக்கும், குடிசைவாழ் மக்களுக்கும் தண்ணீருக்கான சண்டை. மேட்டுக்குடி காலனி வாசிகள் குழாய் தண்ணீரை பொதுப்பணித்துறை மூலம் தனக்குமட்டுமே கிடைக்குமாறு திருப்பியதால் ஒரு வாரத்துக்கும் மேல் குடியிருப்பு (வஸ்தி என்றால் கிராமம்/சேரி/குடியிருப்பு) மக்களுக்கு தண்ணீர் கிடையாது.
கோபமுற்ற மக்கள் குழாயின் காலனிக்கு செல்லும் வால்வை கான்கிரிட் கொண்டு மூடிவிட்டார்கள். பொதுப்பணித்துறை தலையிட்டு பிரச்னையை சமாளித்து கொண்டிருக்கிறது. முன்னவர்களிடம் பணம், அதிகாரம் இருக்கிறது. பின்னவர்களிடம் பலம் மற்றும் சேவை இருக்கிறது.
இது ஒரு துவக்கம்தான்.

ஜெயலலிதா படத்தை அகற்ற உத்தர விட முடியாது: உயர்நீதிமன்றம் ..தமிழக சட்டசபையில்

jayalalitha 2017 10 30தினபூமி :சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இருந்து ஜெயலலிதா படத்தை அகற்றக்கோரிய வழக்கில் சென்னை ஐகோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. அதில் தமிழக சட்டசபையில் இருந்து ஜெயலலிதா படத்தை அகற்ற உத்தரவிட முடியாது என்று கூறியதோடு வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். 
சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் தாக்கல் செய்த மனுவில், ஜெயலலிதாவின் படம் அரசு அலுவலகங்களில் இடம் பெறக்கூடாது என நான் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 12- ம் தேதி தமிழக சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.அவரது படத்தை சட்டசபையில் திறந்து வைப்பது சட்டவிரோதமாகும். எனவே படத்தை அகற்ற உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

பா.ஜ.க. எவ்வாறு வெற்றி பெறுகிறது

Prashant Jha (2017) How the B.J.P. Wins - Juggernaut, Delhi-/keetru.com;
தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ) என்ற அரசியல் கூட்டணியில் தலைமை வகிக்கும்  பி.ஜே.பி. இன்று இந்தியாவை ஆளுகிறது. இக்கூட்டமைப்பு என்பது பெயரளவுக்குத்தான். உண்மையில் பி.ஜே.பி. என்ற கட்சியின் ஆட்சிதான் நடைபெறுகிறது. 2014-இல் நடைபெற்ற 16-ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் அது பெற்ற வெற்றி குறிப்பிடத்தக்க ஒன்றாகும். 1984-ஆவது ஆண்டிற்குப் பின் நடந்த பாராளுமன்றத் தேர்தல்களில் அறுதிப் பெரும்பான்மை பெற்ற கட்சியாக அது விளங்குகிறது. மொத்தம் உள்ள 543 பாராளுமன்றத் தொகுதிகளில் 428 தொகுதிகளில் போட்டியிட்டு 282 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எஞ்சிய தொகுதிகளில் அது தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்டன. பி.ஜே.பி. போட்டியிட்ட தொகுதிகளில் மொத்தம் 31.1 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது. மொழி அடிப்படையில் நோக்கினால் இந்தி மொழி பேசும் இமாச்சலப்பிரதேசம், உத்திரகாண்ட், உத்திரப்பிரதேசம், பீகார் (பீகாரி + இந்தி), ஜார்கண்ட், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, டில்லி ஆகிய மாநிலங்களில் 225 தொகுதிகளில் போட்டியிட்டு 190 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. (இது ஒருவகையில், இந்தி பேசுவோருக்கும் இக்கட்சிக்கும் இடையிலான உறவை வெளிப்படுத்துகிறது எனலாம்)

சிறுவன் மீது பாலியல் வன்முறைக்கும் மரண தண்டனை!

மின்னம்பலம் :12 வயதிற்குட்பட் சிறுவனை பாலியல் வன்கொடுமைக்குப்படுத்தினாலும் மரண தண்டனை அளிக்க சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தை நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது
இது தொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தை நலத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவா் டெல்லியில் இன்று (ஏப்ரல் 27)பத்திரிகையாளர்களிடம் பேசியபோது கூறியதாவது:
ஏப்ரல் 22ம்தேதியன்று மத்திய அரசு பாலியல் வன்கொடுமை தொடர்பான இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376 ல் திருத்தத்தை கொண்டு வந்தது. .அதே போன்று போக்சோ எனப்படும் பாலியல் வன்முறையிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் பிரிவு 42ம் திருத்தப்பட்டது.
இச்சட்ட திருத்தத்தின்படி, முன்னதாக இருந்த வயது வரம்பான 18 லிருந்து 12 வயதாக குறைக்கப்பட்டுள்ளது. 12 வயதிற்கும் குறைவான சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கினால் மரண தண்டனை அளிக்கப்படும் என்று திருத்தப்பட்டுள்ளது.

தமிழக மாணவர்களுக்குத் தமிழகத்திலேயே நீட்! உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக மாணவர்களுக்குத் தமிழகத்திலேயே நீட்!மின்னம்பலம் :தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் தமிழகத்திலேயே தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும் என சிபிஎஸ்இ வாரியத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 27) உத்தரவிட்டுள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, நெல்லை, சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை, வேலூர் ஆகிய 10 இடங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தேர்வுக்கான அறிவிப்பில் சொந்த மாநிலத்தில் ஏதேனும் மூன்று தேர்வு மையங்களைக் குறிப்பிட அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்குத் தமிழகத்தில் தேர்வு மையங்களை ஒதுக்காமல், கேரளாவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது. ஒதுக்கீடு செய்த தேர்வு மையங்களை மாற்ற முடியாது என மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்தது.

13 பேர் உயிரிழந்த நச்சு சாராய வழக்கு: 5 பேருக்குத் தூக்கு!

மின்னம்பலம் :திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூரில் 2000ஆம் ஆண்டு விஷம் கலந்த சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்த வழக்கில், சாராய வியாபாரி உட்பட 5 பேருக்கு மரண தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 27) தீர்ப்பளித்துள்ளது.
2000ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூரில் கள்ளச் சாராயம் அருந்திய 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இறந்தவர்களின் உடலைப் பரிசோதனை செய்து அதன் அறிக்கையைக் கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் உயிரிழந்த 13 பேரின் பிரதேப் பரிசோதனை அறிக்கையில், அவர்கள் அருந்திய கள்ளச் சாராயத்தில் விஷம் கலந்திருந்தது தெரிய வந்தது. இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தமிழக அரசு இந்த வழக்கை சிபிசிஐடியிடம் ஒப்படைத்தது. அதன் பின்னர், சிபிசிஐடி அதிகாரிகள் நடத்திய விசாரணையில், போளூரில் காமாட்சி என்பவர் 2000 ஆம் ஆண்டில் கள்ளச் சாராயம் விற்றுவந்துள்ளார்.

பெண் நோயாளியை படம்பிடித்த மயிலாப்பூர் மருத்துவர் கைது

பெண் நோயாளியைப் படம் எடுத்த மருத்துவர் கைது!மின்னம்பலம் :மயிலாப்பூரில் உள்ள தனியார் கிளினிக்கு சிகிச்சைக்காகச் சென்ற பெண்ணை செல்போனில் படம் பிடித்த மருத்துவரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயதான பெண் ஒருவர், மயிலாப்பூரில் உள்ள தன்னுடைய தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர், அருகில் உள்ள கிளினிக்கு சிகிச்சைக்காக நேற்று (ஏப்ரல் 26) சென்றுள்ளார். அந்த கிளினிக்கில் சிவகுருநாதன் (வயது 64) என்பவர் மருத்துவராகப் பணியாற்றிவந்தார்.
மருத்துவர் சிவகுருநாதனிடம் தன்னுடைய பிரச்சினைகளை அந்தப் பெண் எடுத்துக் கூறினார். சிவகுருநாதன் அந்தப் பெண்ணைப் பரிசோதனை செய்வதற்காக மருத்துவர் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அறையில் சிவகுருநாதன் தன்னுடைய செல்போனில் அந்தப் பெண்ணை ரகசியமாகப் படம் பிடித்துள்ளார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் கிளினிக்கில் சிகிச்சை பெற வந்தவர்களிடம் கூறியுள்ளார். ஆனால் அந்த மருத்துவர் இதை மறுத்துள்ளார்.

2 வழக்குகளிலும் அதிமுகவினர் வெற்றி கொண்டாட்டம்

தி.மு.க தொடர்ந்த இரு வழக்குகளிலும் சாதமாக தீர்ப்பு - ஆளுங்கட்சியினர் டபுள் ஹேப்பிமாலைமலர் :சட்டசபையில் ஜெயலலிதா படத்தை அகற்ற வேண்டும், 11 எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை: தமிழக சட்டசபையில் கடந்த பிப்ரவரி மாதம் திறக்கப்பட்ட ஜெயலலிதா படத்தை அகற்ற வேண்டும் என திமுக எம்.எல்.ஏ அன்பழகன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதேபோல, ஓ.பன்னீர் செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக கொறடா சக்கரபாணி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

நீதிபதி இந்திரா பானர்ஜியின் இரட்டை நாக்கு தீர்ப்பு ..தமிழகத்துக்கு ஒரு சட்டம், புதுச்சேரிக்கு ஒரு சட்டமா!

kalai-mathi.:tamiloneindia :சென்னை: 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சித்து காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி டிவிட்டியுள்ளார்.
ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேர் எம்எல்ஏக்களாக நீடிக்கலாம் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். சபாநாயகரின் நிர்வாக முடிவில் தலையிட முடியாது என்று நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். இதனை காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியான ஜோதிமணி விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் தமிழக சட்டப்பேரவைத் தலைவரின் அதிகாரத்தில் தலையிட முடியாது என்றால் எப்படி புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியும்? தமிழகமும்,புதுவையும் இந்தியாவில் தானே இருக்கின்றன? இவ்வாறு ஜோதிமணி தனது டிவிட்டர் பக்கத்தில் தீர்ப்பு குறித்து விமர்சித்துள்ளார்.

11 எம்எல்ஏக்கள் வழக்கு தள்ளுபடி .. தகுதி நீக்கமறுப்பு .. உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் தொடரும்’- ஸ்டாலின்

tamilthehindu :11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு மற்றும் ஜெயலலிதா படத்திறப்பு வழக்கு ஆகியவற்றில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தள்ளுபடி உத்தரவை எதிர்த்து  உச்ச நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் தொடரும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,“சாதாரண மக்களின் நம்பிக்கைக்குரிய ஜனநாயக அமைப்பு நீதிமன்றம். அதன்மீது அனைத்துத் தரப்பினரும் நம்பிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் ஆளுங்கட்சியான அதிமுகவின் (ஓபிஎஸ் அணி) எம்.எல்.ஏக்கள் 11 பேரின் தகுதி நீக்கம் கோரும் மனுவைத் தள்ளுபடி செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், “எம்எல்ஏக்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என சபாநாயகருக்கு நீதிமன்றம் அறிவுறுத்த முடியாது”, எனத் தெரிவித்துள்ளது.

சென்னை கடற்கரை சாலை டி.ஜி.பி. அலுவலகத்தை தி.மு.க.வினர் முற்றுகை?


சென்னை டிஜிபி அலுவலகத்தில், இரண்டு துணை ஆணையர்கள் தலைமையில் கூடுதல் போலீசார் குவிப்புதினத்தந்தி :சென்னை டிஜிபி அலுவலகத்தில், இரண்டு துணை ஆணையர்கள் தலைமையில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #GutkhaScam சென்னை, குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், குற்றம்சாட்டப்பட்டுள்ள டி.ஜி.பி. உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என தி.மு.க. வலியுறுத்தியது. டி.ஜி.பி. மீதான குற்றச்சாட்டு என்பது விசாரணை அளவில்தான் உள்ளது. எனவே சி.பி.ஐ. விசாரணையை டி.ஜி.பி. சந்திப்பார் என்றும், அவர் பதவி விலக வாய்ப்பில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில்,  டி.ஜி.பி. ராஜேந்திரன் பதவி விலக வலியுறுத்தி சென்னை கடற்கரை சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தை தி.மு.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் பரவியது. குட்கா ஊழலை சி.பி.ஐ. விசாரிக்கக் கோரி வழக்கு தொடர்ந்த ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் இப்போராட்டம் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

மமதாவுக்கு ஸ்டாலின் பாராட்டு- காங்கிரஸ் அதிர்ச்சி ... திருநாவுக்கரசு மீது சந்தேகம் ?

  Raj - Oneindia Tamil  சென்னை: மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் முயற்சிக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் திடீர் ஆதரவு தெரிவித்திருப்பது காங்கிரஸ் கட்சியை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் திமுகவின் இந்த முடிவுக்கு திருநாவுக்கரசரின் வெளிப்படையான விமர்சனங்களே காரணம் என கூறி அவரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடிந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு திருநாவுக்கரசு தலைவர் ஆன சில மாதங்களிலிருந்தே திமுக- காங்கிரஸ் கூட்டணிக்குள் விரிசல் விழத்துவங்கியது. இதற்கு காரணம், கூட்டணிக்கு எதிரான கருத்துக்களை திருநாவுக்கரசர் பேசிவந்ததுதான். 
அண்மைக்காலமாக இந்த விரிசல் விரிவடைந்தே வருகிறது. திமுக கூட்டணியிலிருந்து காங்கிரசை வெளியேற்றும் முயற்சியில் பாஜக தலைமையும் இன்னொரு பக்கம் ரகசியமாக ஈடுபட்டு வருகிறது. இந்தநிலையில், பாஜக-காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை கட்டமைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி. 
இந்த அணியில் திமுகவை கொண்டு வர விரும்பி டெல்லியில் கனிமொழியை சந்தித்துப் பேசினார் மமதா. ஆனால் கனிமொழியோ, கூட்டணி விவகாரமெல்லாம் கட்சியின் தலைமைதான் முடிவெடுக்கும். உங்கள் கோரிக்கையை கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலினிடம் தெரிவிக்கிறேன் என்று பட்டும்படாமல் கூறியிருந்தார். 

தமிழக உள்ளாட்சித்துறையில் ஏழு ஆண்டுகளாக ஊழல் ..Pre – matrix software நிறுவனம் தொடர்ந்து..

Prematix :We proudly serve Town Panchayats in TamilNadu for bringing their transactions online
Thamizh Inian : · தமிழக அரசின் உள்ளாட்சித்துறையின் கீழ் செயல்படும் 528 பேரூராட்சிகளின் e –accounts Pre – matrix software நிறுவனத்திடம் விற்பனை செய்யப்பட்டுவிட்டது.
உள்ளாட்சித்துறை அமைச்சராக கே.பி.முனுசாமி இருந்த போது பேரூராட்சிகள் இயக்குநரகத்தில் நுழைந்த Pre – matrix software நிறுவனம் தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக ஊழல் சாம்ராஜ்ஜியத்தில் வலம் வருகிறது.. ஒவ்வொரு பேரூராட்சியிலும் Pre – matrix software அமைக்க ரூ33,708/- சின்ன கணக்கு போட்டு பாருங்கள் :
ரூ33708 X 528= ரூ1,77,97,824[ரூ1.77கோடி] இதில் 50 சதவிகிதம் கமிசனாக அந்த நிறுவனம் கொடுத்துவிட்டது..
ஒவ்வொரு பேரூராட்சியும் மாதம் ரூ1700/- செலுத்த வேண்டும்..ரூ1700×528=ரூ8,97,600. இதில் 50 சதவிகிதம் கமிசனாக மாதா,மாதம் அந்த நிறுவனம் கொடுத்துவருகிறது. சட்டம் நம் உரிமை இயக்கம்

அழகிரியும் தயாநிதி மாறனும் நெருக்கம் ?

ஸ்டாலின்  எதிர்ப்பு:   இணையும் அழகிரி - தயாநிதி
மின்னம்பலம்:  திமுகவில் தயாநிதி மாறனுக்கும் அழகிரிக்கும் இடையே ஏற்பட்ட மோதலும் அதனால் ஏற்பட்ட விளைவுகளும் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் அண்மைக்காலமாக கருணாநிதியின் குடும்பத்துக்குள் ஏற்பட்டுவரும் மாற்றங்களின் ஒரு பகுதியாக தயாநிதி மாறனும் அழகிரியும் ஒரு புள்ளியில் ஒருங்கிணைவதாக ஒரு தகவல் உலவுகிறது.
ஏப்ரல் 25ஆம் தேதி அழகிரியின் மகன் துரை தயாநிதியின் குழந்தை ருத்ரனுக்கு முதலாமாண்டு பிறந்த நாள் விழா. இந்த விழாவை முதலில் மதுரையிலேயே நடத்த முடிவு செய்திருந்தார் அழகிரி. ஆனால், கோபாலபுரத்துக் குடும்பத்தினர் சிலர் அழகிரியிடம் போன் செய்து, ‘சென்னையிலேயே நடத்துங்கள். இங்கே இருப்பவர்கள் எல்லாம் திரண்டு வரவேண்டாமா?’ என்று அன்பு வேண்டுகோள் வைக்க, அதையடுத்து சென்னையிலேயே தன் பேரன் ருத்ரனின் முதலாமாண்டு பிறந்த நாள் விழாவைக் கொண்டாட முடிவு செய்தார் அழகிரி.

89 லட்சம் ஆதார் தகவல்கள் இணையத்தில்.. அந்தரங்க விபரங்கள் அம்பலம் ...

89 லட்சம் ஆதார் தகவல்கள் இணையத்தில் வெளியீடு!மின்னம்பலம் :ஆந்திரா மாநிலத்தில் 89 லட்சம் ஆதார் கார்டு தகவல்கள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இணைய தளத்தில் 9 லட்சம் நூறு நாள் வேலைத்திட்டத்தின் பயனாளிகள் குறித்த தகவல்கள் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளன. அவர்களுடைய வங்கிக் கணக்கு எண், ரேஷன் கார்டு எண், சாதி மற்றும் பிற தகவல்கள் அனைத்தும் வெளியிடப்பட்டுள்ளன.
ஆதார் தகவல் கசிவு குறித்து இணைய தள பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் கோடாலி சீனிவாசன் தனது மின்னஞ்சலில் அம்பலப்படுத்தியவுடன் உடனே எண்கள் மட்டும் மறைக்கப்பட்டன

11 MLA-க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று பிற்பகல் தீர்ப்பு வெளியாகிறது.. ஓபிஎஸ், மாபா .....

தினகரன் : சென்னை: ஓ.பன்னீர்செல்வம், மா.பா.பாண்டியராஜன் உட்பட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று பிற்பகலில் தீர்ப்பு அளிக்கப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ,பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்று கொண்டார். இதை தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவியில் இருந்து விலக கூறியதை தொடர்ந்து கட்சியை 2 ஆக உடைத்தார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்று கொண்டார்.  அப்போதைய கவர்னர் வித்யாசாகர் ராவ் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டார். இதன் படி, கடந்த 2016 பிப்ரவரி 18ம் தேதி நடந்த எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம், மா.பா.பாண்டியராஜன் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் அரசு கொறடாவின் உத்தரவிற்கு எதிராக வாக்களித்தனர் என்றும் எனவே, அவர்களை தகுதி நீக்கம் செய்ய ேவண்டும் என்று கோரி திமுக கொறடா சக்கரபாணி மற்றும் டிடிவி தினகரன் ஆதரவு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் வெற்றிவேல் உள்ளிட்ட 4 பேரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

தென் கொரிய எல்லைக்குள் நுழைந்தார் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்

BBC :1953ஆம் ஆண்டு நடைபெற்ற கொரிய போரின் முடிவிலிருந்து,
தீபகற்பத்தை பிரிக்கும் ராணுவ எல்லைகளை கடந்து முதல் முறையாக தென் கொரியாவில் கால் பதிக்கும் வட கொரிய தலைவர் என்ற பெயரை பெறுகிறார் கிம் ஜோங் உன். சீனா வட கொரியாவின் ஒரே பொருளாதார கூட்டாளி நாடாக இருந்து வருகிறது. பதிவியேற்றதிலிருந்து தனது முதல் வெளிநாட்டு பயணத்தை சீனாவுக்கு மேற்கொண்டார் கிம். கிம் மற்றும் மூன்னின் சந்திப்பிற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக அமெரிக்காவின் சிஐஏ தலைவராகவும், தற்போது வெளியுறவுச் செயலராகவும் இருக்கும் மைக் போம்பேயோ மற்றும் அதிபர் கிம் ஆகியோர் சில வாரங்களுக்கு முன் சந்தித்து கைக்குலுக்கிய புகைப்படத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.:39 >தென் கொரிய அதிபர் மூன்னுடன் நல்ல முறையில், வெளிப்படையாகவும், நேர்மையாகவும் பேச்சுவார்த்தை நடத்தி நல்ல விளைவுகளை ஈட்டுவேன் என்று கிம் தெரிவித்துள்ளார்< நடைபெறும் விவாதத்துக்கு சம்மதம் தெரிவித்த வட கொரிய அதிபர் கிம்முக்கு நான் எனது மரியாதையை தெரிவித்து கொள்கிறேன் என தென் கொரிய அதிபர் மூன் தெரிவித்தார்.>ராணுவமற்ற பகுதியில் உள்ள பேச்சுவார்த்தை நடைபெறும் இடத்திற்கு இருவரும் செல்கின்றனர்.

பாத்திமா பாபுவை கடத்தியதாக .... வதந்திகள் .. யார் பரப்பியது ? திமுகவுக்கு எதிராக நச்சு ...

நற்பெயருக்கு களங்கம் tamiloneindia :மு.க.ஸ்டாலின் கடத்தியதாக நீண்டகாலமாக சுற்றும் வதந்தி பற்றி பாத்திமா பாபு சென்னை: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடத்தியதாக பல வருடங்களாக உலவிக் கொண்டிருந்த வதந்திக்கு நடிகை பாத்திமா பாபு இப்போது விடையளித்துள்ளார்.
‘1990ஸ் கிட்ஸ்கள்’ தங்கள் வாழ்நாளில் அடிக்கடி கேள்விப்பட்ட ஒரு வதந்தி இது. சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக டீக்கடை பேச்சுகளாகவும், பரிணாம வளர்ச்சி பெற்று, சமூக வலைத்தளங்களில் விமர்சன கணைகளாகவும் சுற்றி வந்த தகவல் அது. இந்த வதந்தி திமுகவுக்கு எதிராக எதிர்க்கட்சி நெட்டிசன்களால் சமீபகாலமாக அதிகமாக முன்னெடுக்கப்படும் தாக்குதல் ஆயுதமாக மாறியுள்ளது.
இந்த நிலையில்தான், மவுனம் கலைத்து பேசியுள்ளார் பாத்திமா பாபு. இப்போது ஏன் பேசினார்?

ராகுல் பயணித்த விமானம் திடீரென 500 மீட்டர் கீழே இறங்கியது. ..சதியென சந்தேகம்?

Prabakaran Ram :இராகுல் காந்தியை ஒழித்துக் கட்ட மோடி அரசு சதி செய்கின்றதா?
காங்கிரஸ் தலைவர் இராகுல் காந்தி இன்று 26/04/2018 ல் கர்நாடகாவிற்கு ஒரு தனியார் விமானத்தில் பயனம் செய்த போது அந்த தனியார் விமானம் திடிரென்று கட்டுப்பாட்டை இழந்து 500 மீட்டர் கீழே இறங்கியுள்ளது.
மேலும் விமானத்தின் ஆட்டோ பை
லட் தொழில்நுட்பமும் செயலிழந்துள்ளது.
இது குறித்து கர்நாடகா டி.ஜி.பியிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.
பாசிச பாரதிய ஜனதாவின் ஒரே எதிரியாக, அகில இந்திய தலைவராக இராகுல்காந்தி தான் உள்ளார்.
ஏற்கனவே போலி என் கவுண்டர் கொலைகளில் புகழ்பெற்ற அமித் ஷா பாரதிய ஜனதாவின் தலைவராக உள்ளார்.
பாசிச மோடி அரசு இந்திய ஜனநாயகத்தினை சீர்குலைக்கும் எல்லா முயற்சிகளையும் செய்து வருகின்றது. அதன் ஒரு பகுதி தான் காங்கிரஸ் என்ற எதிர்க்கட்சியை ஒழித்துக் கட்டும் ஒரு முயற்சி.
ஏற்கனவே இராகுல்காந்தியினை மதிப்புக் கொலை செய்வதையே ஒரு தொழிலாக பாரதிய ஜனதாவினர் செய்து வந்தனர். அதில் அவர்களுக்கு வெற்றியும் கிட்டியிருந்தது.
ஆனால் பாஜகவின் முகமூடிகள் கழன்று விழுந்து உண்மை வெளியான சூழலில் இராகுல் காந்தி பற்றிய மக்களின் பார்வை மாறி வருகின்றது.
மோடிக்கும் அமித்ஷாவிற்கு உண்மையான அரசியல்ரீதியான ஆபத்தாக இராகுல்காந்தி மாறும் போது அவரை ஒழித்துக்கட்ட மோடி-அமித் கும்பல் முயலக் கூடும் என்று ஒரு பயம் எங்களுக்குள்ளே சில காலம் முன்பு உருவானது.

வியாழன், 26 ஏப்ரல், 2018

இந்து - இஸ்லாம் - கிறித்துவ மதங்களின் வன்முறைகள் .. தோழர் பாரூக் நினைவேந்தல்


கீற்று : இந்து - இஸ்லாம் - கிறித்துவ மதங்களின் வன்முறைகள் விளக்கப்பட்டன; இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் மனித நேயப் போராளி பாரூக் முதலாமாண்டு நினைவு நாள் - குருதிக் கொடை முகாம் - மத எதிர்ப்புக் கருத்தரங்கம் - நினைவேந்தல் உரைகளுடன் கோவையில் மார்ச் 18 அன்று அண்ணாமலை அரங்கில் நிகழ்ந்தது. கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்திருந்த இந்த நினைவேந்தல் நிகழ்வில் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள், உணர்வாளர்கள் குடும்பம் குடும்பமாகப் பங்கேற்று, தோழர் பாரூக்கிற்கு வீரவணக்கம் செலுத்தினர். kolathoor mani viduthalai rajendran and pamaran
பகல் 11 மணியளவில் அண்ணாமலை அரங்கில் குருதிக் கொடை முகாமை பாரூக்கின் மனித நேயப் பயணத்தில் துணை நின்ற அவரது துணைவியார் ரசிதா பாரூக் தொடங்கி வைத்தார். 50க்கும் மேற்பட்ட பெண்களும், ஆண்களும் குருதிக் கொடை வழங்கினர். மதத்திற்கு குருதி பேதம் இல்லை என்பதை உணர்த்தும் நோக்கத்துடன் இந்த முகாமை தோழர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

ஸ்டெர்லைட் ஆலை வளாகத்திற்குள் பெட்ரோல் குண்டுகளை வீசிய மர்ம நபர்கள் ...

Mohan Prabhaharan Oneindia Tamil தூத்துக்குடி: தூத்துக்குடியில் செயல்பட்டு வரும்
ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை வளாகத்திற்குள் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பி ஓடினர். இதுகுறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். தூத்த்துகுடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை மக்களின் உடல் நலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிப்பதாகக் கூறி கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலான அந்த ஆலையைச் சுற்றி உள்ள மக்கள் தீவிரமாக போராடி வருகிறார்கள்.

திமுகவுக்கு தூதுவிடும் பாமக .. ச

மின்னம்பலம்: திண்டிவனம் அருகே உள்ள கீழ்சிவரி கிராமத்தைச்
சேர்ந்தவர் டாக்டர்
ராமதாஸ். 1980களில் திண்டிவனத்தில் டாக்டர் ராமதாஸ் கிளினிக் ரொம்பவும் பிரபலமானது. அந்தக் காலத்தில் ஐந்து ரூபாய்க்கு ஊசி போட்டு மாத்திரையும் கொடுத்த டாக்டர் இவர். கீழ்சிவரிக்கு அருகேயுள்ள தைலாபுரத்தில்தான் ராமதாஸ் குடும்பத்துக்குச் சொந்தமான விவசாய நிலம் இருந்தது. ஒருபக்கம் மருத்துவத் தொழில், இன்னொரு பக்கம் விவசாயம். இதுதான் ராமதாஸின் வாழ்க்கை. தன் சாதி சார்ந்த அமைப்பான வன்னியர் சங்கத்தை அப்போதுதான் ராமதாஸ் ஆரம்பித்தார். மருத்துவமும் விவசாயமும் பார்த்த நேரம்போக, வன்னியர் சமுதாயத்துக்கான விஷயங்களை முன்னெடுக்க ஆரம்பித்தார்.
87ஆம் ஆண்டு வன்னியர் சங்கம் ஒரு வாரம் நடத்திய இடஒதுக்கீட்டுக்கான போராட்டம் மக்களின் கவனத்தை ஈர்த்தது. அந்தப் போராட்டத்தில் 18 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்தப் போராட்டத்துக்குப் பிறகு 1989ஆம் ஆண்டு வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சியாக உருவெடுத்தது. கட்சி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டிலேயே வந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. 1991ஆம் ஆண்டு மீண்டும் தேர்தல். அதிலும் தனித்துப் போட்டி. பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டும் ஜெயித்தார்.

உச்சநீதிமன்ற நீதிபதியாக கேரள கிறிஸ்தவரான ஜோசப்பை நியமிக்க கொலிஜியம் மறுப்பு

tamilthehindu :உச்சநீதிமன்ற நீதிபதியாக ஜோசப்பை நியமிக்க மறுத்ததற்கு பெயர், மாநிலம்,
மதம் காரணமா?- மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
புதுடெல்லி உச்ச நீதிமன்ற நீதிபதியாக கே.எம். ஜோசப்பை (குட்டியில் மாத்யூ ஜோசப்) நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்தும் அதை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது, இதைக்கண்டித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 10-ம் தேதி தலைமை நீதிபதி தீபஸ் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட கொலிஜியம் கூடி உச்ச நீதிமன்றத்துக்கு இரு நீதிபதிகள் பெயரை மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது. அதில், ஒருவர் மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா, மற்றொருவர் உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே.எம். ஜோசப்.

அப்போலோ :ஜெயலலிதாவின் ரத்த, திசு மாதிரிகள் இல்லை.. ஜெயா மகளை நிருபிக்க திசுக்கள் தேவை..

BBC :ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகளோ, திசு மாதிரிகளோ தங்களிடம்
இல்லை என அவருக்கு சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவமனை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் நான்தான் என அறிவிக்கக் கோரி பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், ''ஜெயலலிதாவின் உடலுக்கு எங்களது வழக்கப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்பட வேண்டும் என்பதால், அவரது உடலைத் தோண்டியெடுத்து எங்கள் சம்பிரதாயப்படி அடக்கம் செய்ய அனுமதியளிக்க வேண்டும். மேலும் நான்தான் ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க மரபணு சோதனை நடத்த உத்தரவிட வேண்டும்'' என்று கோரியிருந்தார்.
இந்தக் கோரிக்கை ஆதாரமற்றது என்பதால், இந்த மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என ஜெயலலிதாவின் சகோதரருடைய மகளான தீபாவும், மகன் தீபக்கும் மனுத் தாக்கல் செய்திருந்தனர். தமிழக அரசும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

மெரினா கடற்கரையில் 29-ந் தேதி அறவழி போராட்டம்- வேல்முருகன் பேட்டி

மாலைமலர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மெரினா
கடற்கரையில் 29-ந் தேதி அறவழி போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். #velmurugan #cauveryissue #ChennaiMarina நெய்வேலி: தமிழக வாழ்வுரிமை கட்சியின் அவசர பொதுக்குழு கூட்டம் நெய்வேலி என்.எல்.சி. ஆர்ச் கேட் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கட்சி தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த வேண்டும்.
தமிழக அரசு மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவு தேர்வை அனுமதிக்க கூடாது.
தமிழக கவர்னர் அரசியலமைப்பு சட்டப்படி நடந்து கொள்ளாமல், வரம்பு மீறி நடந்து கொள்ளுகிறார். இவ்வாறு வரம்பு மீறி நடந்து பாலியல் குற்றச்சாட்டுக்கும் உள்ளாகி இருக்கிறார். கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும், இல்லையெனில் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

IDBI வங்கியில் 600 கோடி மோசடி Aircell சிவசங்கரன் வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை

dinakaran: சென்னை: ஐ.டி.பி.ஐ. வங்கியில் ரூ.600
கோடி மோசடி செய்த வழக்கில்
ஆக்‌ஷெல் சன்ஷைன் நிறுவனர் சிவசங்கரன் வீடு, அலுவலகங்களில் 8 மணி நேரமாக சிபிஐ சோதனை சோதனை வருகின்றனர். சிவசங்கரன் மீது குற்றச்சதி, மோசடி, ஊழல் ஆகிய பிரிவுகளில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளனர். 50 இடங்களில் ரெய்டு
சிவசங்கரனுக்கு சொந்தமான 50 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, டெல்லி, மும்பை, ஐதராபாத், பெல்காம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
வெளிநாட்டில் பதிவான நிறுவனங்கள் :; பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் ஆக்‌ஷெல் நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போல் வின்விண்ட் ஒய் நிறுவனம் பின்லாந்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. வின்விண்ட் நிறுவனம் காற்றாலை அமைக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளது. இரு நிறுவனங்களும் 2014-ம் ஆண்டு ஐ.டி.பி.ஐ. வங்கியில் ரூ.530 கோடி கடன் பெற்றுள்ளது. தற்போது வட்டியுடன் ரூ.600 கோடியாக பெருகிவிட்டது சிவசங்கரனின் கடன். />சிவசங்கரனிடம் விசாரணை< ரூ.600 கோடி மோசடி தொடர்பாக தொழிலதிபர் சிவசங்கரனிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குட்கா ஊழல் சி பி ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு .... குட்கா கடந்து வந்த பாதை ... கதைசுருக்கம்

ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன், அமைச்சர் விஜயபாஸ்கர்,
tamilthehindu :முத்தலீஃப் சென்னை தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள குட்கா விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குட்கா பான் மசாலாவுக்கு தடை< கடந்த 2011-ம் ஆண்டு மத்திய அரசு குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் விற்பனைக்கு தடை விதித்தது. இதையடுத்து இந்தப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கும், விற்பனை செய்யவும் உச்ச நீதிமன்றம் தடை உத்தரவைப் பிறப்பித்தது. தமிழக அரசும் 2013-ம் ஆண்டு தமிழகத்தில் குட்கா பொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனை உள்ளிட்ட அனைத்திற்கும் தடை விதித்தது. இந்த உத்தரவு பின்னர் 2015-ம் ஆண்டு அறிவிப்பாணையாக அரசிதழில் வெளியிட்டது.
2013-ம் ஆண்டு முதல்வர் சட்டப்பேரவையில் குட்கா பொருட்களுக்கு தடை விதித்து அறிவித்தும் பான், குட்கா தயாரிப்பு, விற்பனை படு ஜோராக நடந்து வந்தது. புழல் பகுதியில் டன் கணக்கில் குட்கா பொருட்கள் தயாரிக்கப்பட்டு அண்டை மாநிலங்களுக்கும் தமிழகத்துக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுவது நடந்து வந்தது.
சிபிஐக்கு புகார்
இதற்காக அனைத்து மட்டத்திலும் மாமூல் அளிக்கப்பட்டு வருவதாக அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்களுக்கு தெரியவந்தது. அரசு தடை செய்தும் ஜோராக நடக்கும் விற்பனை குறித்து 2014-ம் ஆண்டில் சென்னை சிபிஐக்கு சிலர் புகார் கடிதம் அனுப்பினர்.

ஊடகங்களில் பார்ப்பனர்களின் கோரப்பிடி நழுவுகிறது ..? ஆழி செந்தில்நாதன் .. தன்னாட்சி தமிழகம்

பிராமணர்கள் மீடியாகள் மேல் வைத்திருந்த பிடி எப்படி நழுவுகிறது என்று
ஆழி செந்தில்நாதனின் அருமையான பதிவு....அவசியம் வாசியுங்கள் நண்பர்களே...
"நமது ஊடகவியலர்களின் உரிமைக்காக எழுந்துநிற்போம்!
தமிழ் ஊடகவியலர்கள் பலர் மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் இச்சூழலில் அவர்களை நோக்கி நேசக்கரம் நீட்ட வேண்டிய கடமையை நம் அனைவருக்கும் உணர்த்துவதற்காக இந்தப் பதிவு.
ஒரு சொந்தக் கதையிலிருந்தே தொடங்குகிறேன்.
நான் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை (இதழியல்-தொடர்புப்பாட்டியல்) முடித்து இந்தியா டுடேயில் பயிற்சிநிலை துணை ஆசிரியராக சேர்ந்தது 1995 இல். அன்று முதல் இன்றுவரை, ஊடக உலகில் உள்ளேயோ சற்று விளிம்பிலோ இருந்துவந்திருக்கிறேன். 95 வாக்கில் ஊடகத்துறையில், நாடார் சமூகத்தினரால் நடத்தப்படும் பத்திரிகைகளைத் தவிர, வேறு இடங்களில் பார்ப்பனரல்லாதோரின் பங்கு என்பது மிக மிக மிகக் குறைவு.
இருந்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பார்ப்பனரல்லாத மேல்-இடைநிலைச் சாதியினர் சிலர் இருந்தார்கள். ஆனால் தலித்களையோ வன்னியர்களையோ வேறு பல விவசாயம் சார்ந்த சாதியினரையோ பார்ப்பது என்பது சாத்தியமே இல்லாமலிருந்தது. தமிழ்ப்பத்திரிகைகளியே நிலைமை இப்படி என்றால், இந்துவிலோ எக்ஸ்பிரஸிலோ தில்லி பத்திரிகைகளின் சென்னை அலுவலகங்களிலோ நிலைமை எப்படி இருக்கும் என்று யூகித்துக்கொள்ளுங்கள். பெரும்பாலான சென்னை correspondents பார்ப்பனர்களாகவோ மலையாளிகளாகவோ இருப்பார்கள்.

அழகிரி கோபாலபுரம் வந்தார் .. கலைஞரிடம் தனது பேரனுக்கு பிறந்த நாள் வாழ்த்து பெற்றார்

kalaignar
முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தனது பேரனின் முதல் பிறந்த தினமான இன்று திமுக தலைவர் கலைஞரை நேரில் சந்தித்து குடும்பத்துடன் வாழ்த்து பெற்றனர். உடல் நலக்குறைவால் திமுக தலைவர் கலைஞர் தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில், அவரது மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி இன்று கோபாலபுரம் இல்லத்தில் தந்தை மற்றும் தாயாரை சந்தித்து நலம் விசாரித்தார். அழகிரியின் பேரன் பிறந்ததினத்தை ஒட்டி அவரது குடும்பத்துடன் சந்தித்து வாழ்த்து பெற வந்துள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர்.nakkeeran

புனே .. "பீம் கோரேகாவ்" தாக்குதலின் சாட்சி சிறுமி பூஜா சகட் (19 வயது) இன் உடல் கிணற்றில்


1.01.2018 அன்று 100 வாகனங்கள் மற்றும் 60 வீடுகளை கொளுத்தி
சேதப்படுத்தினார்கள் ஆதிக்க சாதியவெறியர்கள்.
அவர்களின் கோபத்துக்கு காரணம் அன்று பட்டியலின மக்கள் தங்களின் எழுச்சி அடையாளமான பீம் கோரேகாவ் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யும் விதத்தில் பேரணி "பீம் கோரேகாவ்" 200ஆம் ஆண்டு தன் எழுச்சி பேரணி நடத்தினார்கள்.
அந்த எழுச்சி.... ஆதிக்க சாதியவெறியர்களாலும், இந்து அடிப்படை வெறியர்களாலும் பொறுத்து கொள்ளமுடியாமல் நடந்த தாக்குதல் தான் 1.01.2018 அன்று 100 வாகனங்கள் மற்றும் 60 வீடுகளை கொளுத்தி சேதப்படுத்தியது.
அந்த தாக்குதலை நேரில் பார்த்த பூஜா சகட் என்ற 19 வயது சிறுமி(பீம் கோரேகாவ், புனே) கடந்த சனிக்கிழமை மதியம் 1.30 மணியளவில் காணாமல் போக அன்று மாலையே அந்த பகுதியில்(அவர் இருக்கும் பகுதியில் இருந்து 2 km தூரத்தில்) இருக்கும் ஒரு கிணற்றில் பிணமாக கிடைந்துள்ளார்.
1.1.18 அன்று நடந்த பட்டியலின மக்களுக்கு எதிரான தாக்குதலில் தன் குடும்பம் இழந்த வீட்டுக்காகவும் அவர்களின் வாழ்வாதாரமான உணவு விடுதிகாகவும் அரசிடம் நீதி கேட்கும் போராட்டத்தில் அந்த சிறுமி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.