சனி, 7 டிசம்பர், 2019

நித்தியானந்தா மீது ஆர்த்தி ராவ் கூறிய பகீர் குற்றசாட்டுக்கள் .. வீடியோ


அமெரிக்காவில் இருந்த ஆர்த்தி ராவ் பேட்டி: பல பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த விடயங்களை மிக தெளிவாக கூறுகிறார் ..நித்தயானந்தா மீது குற்றச்சாட்டு கூறிய எல்லோர் மீதும் பொய்வழக்குகள் போடப்பட்டன ...சைகொலோஜிஸ்ட் என்ஜினியர்ஸ் டாக்டர்ஸ் . போன்று படித்த பலரும் நிதியனந்தாவிடம் ஏமாந்து போனார்கள் .
ப்ரெயின் வாசிங் .. மைண்டை மனிபுலேட் பண்ணி .. எனக்கு மட்டுமல்ல இன்னும் பலருக்கு இது நடந்திருக்கு ...
அங்க போனப்புறம் .. என்ன நடக்கிறது அப்படீன்னு .. ஜீவன் முக்தி அடையறதுக்காக என்னவேண்டுமென்றாலும் சக்கிரிபை பண்ணலாம்ன்னு ஒரு ஐடியாவை .. ஒரு லிவிங் மாஸ்டர் என்ன சொன்னாலும் அவர்தான் முக்கியம்ன்னு .. அப்புறம் குவேஷன் பண்ண மாட்டோம் . அப்படி மாத்திடிவாங்க ..
மெண்டலி ஒரு 24 hours ஒருத்தரை என்கேஜ் பண்ணினால் .. அவரை டாமினேட் பண்ணலாம் cult ஸ்டடி இதுதான் சொல்கிறது ..
ஒருநாள் நோர்மலி 8 மணித்தியாலம் தூங்கினால்தான் ஒருவரால சரியாக சிந்திக்க முடியும் .. ஆனா நித்தி ஆசிரமத்தில 4 மணித்தியாலம்தான் தூங்க முடியும் . அதுக்கு அப்புறமும் சதா நித்தியானந்தா மந்திரம் நித்தியானந்தா பட்டு என்று இருந்தால் அவர் முற்று முழுதாக ஒரு கல்ட் cult மெம்பர் ஆகிடுவார் . இதுதான் cult studies எல்லாம் சொல்வது ...
இது நித்தியானந்தா cult க்கு மட்டுமல்ல அத்தனை சாமியார்களின் Cult க்களுக்கும் பொருந்தும் இந்த மாதிரி cult ஆசாமிகளிடம் சிக்கியவர்களை காப்பாற்றுதல் மிகவும் கடினம் .இவர்கள் தங்கள் பணத்தையும் நேரத்தையும் சக்தியையும் எல்லாவற்றிலும் பார்க்கக் தங்கள் சிந்திக்கும் திறனையும் இழந்தே தீருவார்கள் .

உத்தர பிரதேச பாஜக எம் எல் ஏயை என்கவுண்டர் செய்வார்களா? உன்னாவ் பாலியல் கொலை வழக்கு ...


உத்திரபிரதேசத்தின் உன்னாவ் நகரில் போன டிசம்பர் மாதம் பாஜக தலைவர் ஒருவர் தன் சகாக்களுடன் சேர்ந்து துப்பாக்கி முனையில் ஒரு 17 வயது சிறுமியை வன்புணர்வு செய்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் கேஸ் எடுத்துக்கொள்ளப்படவில்லை. FIR போடப்படவில்லை. பின்னர் சிலர் உதவியுடன் நீதிமன்றத்தின் மூலம் ஆணை வாங்கி ஒருவழியாக மார்ச் மாதம், அதாவது நான்கு மாதம் கழித்து வழக்கு பதியப்படுகிறது. பின்னர் அந்தப் பெண்ணின் தந்தை கொல்லப்படுகிறார். உதவிய உறவினர்கள் கொல்லப்படுகிறார்கள். பின்னர் அந்தப் பெண் எரித்துக் கொல்லப்படுகிறார்.
இதேபோல நேற்றும் வன்புணர்வில் பாதிக்கப்பட்ட இன்னொரு பெண்ணையும் அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் எரித்திருக்கிறார்கள். 90% தீக்காயங்களுடன் அந்தப் பெண்ணும் சற்றுமுன் இறந்துவிட்டார்.
வன்புணர்வு மற்றும் கொலைகளின் தலைநகரமாக உத்திரபிரதேசம் திகழ்கிறது.
வன்புணர்வு வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக மட்டும் செய்யப்பட்டதல்ல. பாஜககாரர்கள் இந்த உன்னாவ் பெண்ணை வைத்து ஊருக்கே பாடம் நடத்தியிருக்கிறார்கள். "நாங்கள் அப்படித்தான் செய்வோம். எங்களைப் பற்றி புகார் செய்தால் இதுதான் நிலைமை," என்கிற எச்சரிக்கைப் பாடத்தை நடத்தியிருக்கிறார்கள்.

ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு உள்ளது? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

மின்னம்பலம் : திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவது தவறா?கோவையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றுக்கு எந்த வித முன் அறிவிப்பும் இன்றி சீல் வைக்கப்பட்டது. அந்த ஹோட்டலின் அறை ஒன்றில் திருமணமாகாத ஆணும் பெண்ணும் தங்கியிருந்ததாகவும், மற்றொரு அறையில் மதுபானங்கள் இருந்ததாகவும் காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினரால் சீல் வைக்கப்பட்டது. இதை எதிர்த்து அந்த ஹோட்டலின் உரிமையாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பத்திரிகை மற்றும் சமூக ஊடகங்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் எந்தவித விளக்கமும் கேட்காமல் ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இது இயற்கை நீதிக்கு எதிரானது என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
அப்போது காவல்துறை தரப்பில், இந்த ஹோட்டலில் திருமணம் ஆகாத ஒரு ஆணும், பெண்ணும் ஒரு அறையில் தங்கியிருந்ததாகவும், மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மகாராஷ்டிர பாஜகவில் பிளவு.. பட்னவிஸின் பிராமண ஆதிக்கம்!

மின்னம்பலம் :
பட்னவிஸின் பிராமண ஆதிக்கம்: மகாராஷ்டிர பாஜகவில் பிளவு!
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆட்சி அமைத்ததும், ‘இந்த ஆட்சி சில மாதங்கள்தான் நீடிக்கும். அதற்குள் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளில் இருந்து கணிசமான எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு வந்துவிடுவார்கள்” என்று பாஜகவினர் கூறிக் கொண்டிருந்தனர். ஆனால் பாஜகவுக்கு அடுத்த அடியாக, அக்கட்சியில் இருந்து சுமார் 15 எம்.எல்.ஏ.க்கள் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய ஆளும் கூட்டணியான மகா விகாஸ் அகாதிக்கு ஆதரவளிக்க இருப்பதாக தகவல்கள் மும்பையில் இருந்து வருகின்றன.
மறைந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் மகளான முன்னாள் மாநில அமைச்சர் பங்கஜா முண்டே மராட்டிய பாஜகவில் ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர். இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தார். முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். மராட்டிய மாநிலத்தில் 45% பேர் ஓபிசி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் அவர்களை விட்டுவிட்டு பாஜகவில் பிராமணரான பட்னவிஸுக்கு முக்கியத்துவம் தொடர்ந்து அளிக்கப்படுவதை பங்கஜா முண்டே போன்றோர் விரும்பவில்லை.

ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு எதிராக திமுக நீதிமன்றம் செல்லும்: ஸ்டாலின் அதிரடி

Veerakumar - :tamil.oneindia.com :   சென்னை: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து நீதிமன்றத்தை நாட போவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். புதிதாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட நிலையில், அதைக் காரணமாக வைத்து தொடர்ந்த வழக்கில், மொத்தம் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தக்கூடாது என்று நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து ஏற்கனவே தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது. மீண்டும் இன்று புதிய அறிவிப்பு ஒன்றை தமிழக தேர்தல் ஆணையர் பழனிச்சாமி வெளியிட்டார். 
அதன்படி 9 மாவட்டங்கள் தவிர்த்து டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இது அறிவிப்புக்கு பிறகு திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக டிசம்பர் 6ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு எதையும் பின்பற்றாமல் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை புறக்கணிக்கும் வகையில் புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ள மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 

டிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு

டிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்  - தேர்தல் ஆணையர் அறிவிப்புமாலைமலர் : தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து பிறபகுதிகளில் டிச 27, 30 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் பழனிசாமி இன்று மாலை அறிவித்துள்ளார். சென்னை: தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து அதற்கான பணிகளை தொடங்கியது. இந்த அறிவிப்பை எதிர்த்து திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தொகுதி வரையறையை முடிக்காமல் தேர்தலை நடத்தக்கூடாது என திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.
அப்போது, தமிழகத்தில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் 4 மாதத்தில் தொகுதி மறுவரையறை பணிகளை முடித்து தேர்தலை நடத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஏன் நாக்பூர் பிராமணர்களை OBC க்கு பிடிக்கவில்லை?

Venkat Ramanujam : ஏன் நாக்பூர் பிராமணர்களை OBC க்கு பிடிக்கவில்லை? #OBC MLAக்கள் 22 பேர் கடும் அதிருப்தி விளைவாக SS+NCP+Cong கூட்டணிக்கு தரும் சீக்ரெட் ஆதரவால் #RSS கடும் அதிர்ச்சியாமே ..
மஹாராஷ்டரா முன்னாள் முதல்வர் பட்னாவிஸ் பிராமண சுய சாதி பாசத்தால் பாஜக வில்
வாஜ்பாய்க்கு பின்னர் அடுத்த பிரதமர் என வர்ணிக்கபட்ட இளம் தலைவர் ஆர் எஸ் எஸ்க்கு எதிர்ப்பு காட்டிய பிரோமத் மகாஜன் தீடிர் படுகொலை மட்டுமல்ல,
மகாஜன் சகோதரியை திருமணம் செய்த OBC தலைவர் , மோடியை பிரதமராக கொண்டு வருவதில் முனைப்பு காட்டிய அடுத்த மஹாராஷ்ரா முதல்வர் வேட்பாளர் , கோபினாத் முண்டே 2014ல் மத்திய மந்திரி ஆன ஒரே வாரத்தில் RSS செய்வித்தாக சொல்லப்படும் மர்ம மரணம் மட்டுமல்ல ..
பின்னர் கோபினாத் முண்டே மகள் பங்கஜா முண்டவை வேண்டுமென்றே 2019ல் தேர்தலில் தோற்க செய்தது தான் நாக்பூர் பிராமணர்களின் கனவு திட்டம் என மஹாராஷ்ராவில் பாஜக வில் உள்ள OBC மக்கள் புலம்பி வருவதாக வரும் செய்திகள் மட்டுமல்ல ..
பாஜகவுக்கு உயிரை கொடுத்து உடலை வருத்தி போராடிய பலரின் பாசத்துக்குரிய தமிழசைக்கு மத்திய மந்திரி பதவி கொடுக்காமல் , ஆளுனர் டம்மி போஸ்டில் பேஸ்ட செய்தது மட்டுமல்ல ..

நித்யானந்தா மீது பிரெஞ்சு அரசு விசாரணை.. இளம்பெண் சங்கீதா குருர கொலை . நித்தியை என்கவுண்டர் செய்வார்களா? வீடியோ

நித்தியின் இந்த அக்கிரமத்தை கேளுங்கள் ... நம்பவே முடியாத அளவு கொடூர மாபியாவை ஆச்சிரமம் என்ற பெயரில் நடத்துகிறான் .. பிரதமர் மோடி உட்பட அத்தனை பாஜககாரர்களும் சினிமா பிரபலங்களும், ரஜினி உட்பட இவனின் சகவாசத்தில் இருந்தவர்கள்தான் ..
பெற்ற தாயே தனது மகள் எப்படி நித்தியானந்தாவால் கொலை செய்யப்பட்டார் என்று விபரமாக கூறுகிறார் !..
அங்கு என்ன நடக்கிறது? அத்தனை அநியாயங்களையும் ஒரு ஊடகம் கூட சரியாக வெளி கொண்டு வரவிலையே? ஏன்?
என்கவுண்டர்ல போட வேண்டிய சுவாமி நித்தியனந்தவுக்கு மொத்த ஆர் எஸ் எஸ் நிர்வாகமும் நாட்டை விட்டு ஓடிப்போக வசதி செய்து கொடுத்திருகிறது ... ஒரு பெண்ணை கொலை செய்து . உடலில் உள்ள அத்தனை முக்கிய உடல் உறுப்புக்களையும் அப்புறப்படுத்தி விட்டு கொஞ்சம் கூட அலட்டி கொள்ளாமல் .. இந்த காணொளி முழுவதையும் பாருங்கள் .. நித்தியானந்தா மட்டுல்மல்ல அந்த நித்தியின் ஆசிரமங்கள் என்று வெளிநாடுகளில் கூட்டம் சேர்ப்பவர்களையும் போலீசில் .

மின்னம்பலம் : பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நித்யானந்தா தொடர்ச்சியாக, குழந்தை கடத்தல் அவர்களை வைத்து ஆசிரமத்துக்குப் பணம் திரட்டுதல் என அடுக்கடுக்கான புகார்களுக்கு ஆளாகி வருகிறார்.
பெங்களூருவைச் சேர்ந்த ஜனார்த்தனன் சர்மா தனது குழந்தைகளை நித்தியிடம் இருந்து மீட்டுத் தர கோரி தொடரப்பட்ட வழக்கைத் தொடர்ந்து, நித்திக்கு எதிரான பல ஆதாரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. முன்னதாக கனடாவைச் சேர்ந்த சாரா லாண்ட்ரி என்ற பெண் சிஷியையும், நித்யானந்தா மீது பாலியல் குற்றம்சாட்டியிருந்தார். தனது சொத்துகள் அனைத்தையும் ஆசிரமத்துக்குக் கொடுத்ததாகவும் பெங்களூரு ராம்நகர் காவல்நிலையத்தில் அளித்த புகாரில் தெரிவித்திருந்தார்.

உள்ளாட்சி தேர்தல்.. உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது - மு.க.ஸ்டாலின் பேட்டி

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது - மு.க.ஸ்டாலின் பேட்டி  தினத்தந்தி :  உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது என மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை, தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொன்னது போல ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உள்ளாட்சி தேர்தலையொட்டி வழங்கியுள்ளது. ஜனநாயகத்தை காக்கும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்திருப்பது வரவேற்கத்தக்கது. தி.மு.க. சார்பில் அதை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்துங்கள் என்று சொன்னால், தேர்தலை நிறுத்துவதற்காகத்தான் தி.மு.க. நீதிமன்றத்தை நாடுகிறது என்று திட்டமிட்டு தவறான பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. அரசியல்வாதிகள் இந்த செயலைச் செய்தால்கூட, அரசியலுக்காக செய்கிறார்கள் என்று கருதலாம். ஊடகத்துறையில் உள்ள சிலரும் தி.மு.க. தான் தேர்தலை நிறுத்த நீதிமன்றத்திற்கு செல்கிறது என தவறான பிரசாரம் செய்கின்றனர்.

BBC : உன்னாவ் பாலியல் வல்லுறவு வழக்கு: தீவைக்கப்பட்ட பெண் உயிரிழப்பு

div dir="ltr" style="text-align: left;" trbidi="on"> உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட23 வயதான பெண் தீ வைத்து எரிக்கப்பட்ட 23 வயதான பெண் டெல்லி மருத்துவமனையில்வெள்ளிக்கிழமையன்று இரவு உயிரிழந்தார். உத்தரப் பிரதேச நீதிமன்றம் ஒன்றில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு சென்ற வழியில் பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட 23 வயதான பெண்ணொருவர் தீ வைத்து எரிக்கப்பட்டார். ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கடந்த மார்ச் மாதம் இரண்டு நபர்களுக்கு எதிராக தொடுத்த வழக்கில் ஆஜராகுவதற்கு நீதிமன்றத்திற்கு இந்த பெண் சென்று கொண்டிருந்தார்.
ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள இந்த பெண்ணின் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சந்தேகத்தின் பேரில், இந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த பெண் ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த வழியில், ஐந்து ஆண்கள் தாக்கி அருகிலுள்ள வயலுக்கு இந்த பெண்ணை இழுத்து சென்று, தீ வைத்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெள்ளி, 6 டிசம்பர், 2019

நடிகை பிரதியுக்ஷா தற்கொலை செய்யவில்லை .. காதலனும் நண்பர்களும் கூட்டு வன்புணர்வு கொலை .. தாய் பேட்டி! வீடியோ


Don VS : நடிகை பிரதியுஷாவை அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது. தவசியில் விஜயகாந்த்துக்கு ஜோடி, பாரதிராஜாவின் கடல் பூக்கள் நாயகி ிருந்த இளம் நடிகை அவர்.
என்று தமிழ் சினிமாவில் வளர்ந்துகொண்த
ஒரு நாள் ஹைதராபாத் நகரில் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வந்தன. விசாரணையில் பிரதியூஸா அவரது ஆண் நண்பர் சித்தார்த் ரெட்டி மற்றும் சித்தார்த் ரெட்டியின் நண்பர்களால் கூட்டு வன்புணர்வு செய்து கொல்லப்பட்டதாக தெரியவந்தது.
சித்தார்த் ரெட்டி மற்றும் அவனது நண்பர்கள் ஆதிக்க ஜாதி மற்றும் பணக்கார வகுப்பை சேர்ந்தவர்கள். ஹைதராபாத் போலீஸ் தற்கொலை என்று கேஸை மூடியது.
தற்போது, பிரியங்கா ரெட்டி என்கிற பெண் மருத்துவரை வன்புணர்ச்சி செய்து கொன்றவர்களை என்கவுண்டர் செய்திருக்கிறது சைபரபாத் போலீஸ்.கொல்லப்பட்ட 4 பேரில், சித்தார்த் ரெட்டி போன்று யாரும் இல்லை போலும் ; எனவே, கொன்றுவிட்டார்கள்.

நித்தியானந்தாவுக்கு நாங்கள் தஞ்சம் அளிக்கவில்லை.. .. ஈக்வடார் மறுப்பு.. ஹைத்தியில் தஞ்சம்?

Mathivanan Maran:tamil.oneindia.com/ :   டெல்லி: சர்ச்சைக்குரிய சாமியாரும் பல வழக்குகளில் தேடப்படுபவருமான சாமியார் நித்தியானந்தாவுக்கு தங்களது நாடு அடைக்கலம் தரவில்லை; நித்தியானந்தாவின் அகதி கோரிக்கையை நிராகரித்துவிட்டோம் என ஈகுவடார் அரசு விளக்கம் அளித்துள்ளது. பலாத்கார வழக்கு, நில அபகரிப்பு, பெண் குழந்தைகள் கடத்தல், குழந்தைகளை வைத்து நிதி சேகரித்தல் என பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கியவர் நித்தியானந்தா. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வருகிறார்.
நேபாளம் வழியாக போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார் நித்தியானந்தா. தற்போது தென் அமெரிக்கா கடற்பரப்பில் ஒரு தீவை வாங்கி அங்கே தனிநாடு அமைக்கப் போவதாக பிரகடனம் செய்து தேசதுரோக வழக்கையும் எதிர்கொள்ள இருக்கிறார் நித்தியானந்தா. ஈகுவடார் தூதரகம் விளக்கம் இந்நிலையில் டெல்லியில் உள்ள ஈகுவடார் தூதரகம் நேற்று நித்தியானந்தா குறித்து ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜெர்மனியில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் .. ஐம்பொன் சிலை ! ... தமிழர் மரபு அறக்கட்டளை

பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ்.பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் பரிசளித்த திருவள்ளுவர் சிலைvikatan.com -- சத்யா கோபாலன் : லிண்டன் அருங்காட்சியகத்தில் இன்று திறக்கப்பட உள்ள இரண்டு சிலைகளில் ஒன்றைப் பரிசாக வழங்கியிருக்கிறார், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கோ.பாலச்சந்திரன். ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் (Stuttgart) நகரில் உள்ள லிண்டன் அருங்காட்சியகத்துக்கு, தமிழ் ஹெரிடேஜ் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பின் மூலமாக இரண்டு திருவள்ளுவர் சிலைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் திறப்புவிழா இன்று விமரிசையாக நடைபெறவுள்ளது.>லிண்டன் அருங்காட்சியகம்
புகழ்பெற்ற லிண்டன் அருங்காட்சியகத்துக்கு ஆண்டுதோறும் சுமார் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வருகை தருகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். `அப்படிப்பட்ட ஓர் இடத்தில் திருவள்ளுவருக்குச் சிலை வைத்தால் அவரைப் பற்றி உலக மக்கள் தெரிந்துகொள்வதற்கு நல்வாய்ப்பாக இருக்கும்’ என்பதால் தமிழ் ஹெரிடேஜ் ஃபவுண்டேஷன், திருவள்ளுவர் சிலையை அந்த அருங்காட்சியகத்தில் நிறுவ உள்ளது.

பாலியல் புகார் கொடுத்த சிறுமியை 30 முறை கத்தியால் குத்தி கொன்ற இளைஞன்

Jabalpur: A 16-year-old girl was allegedly stabbed to death by a spurned lover in Madhya Pradesh's Jabalpur district, police said on Tuesday. The accused, Shivkumar Choudhary (24), has been arrested, Gohalpur police station's inspector Praveen Singh said. Choudhary had earlier professed his love for the girl, but she rejected his proposal, he said
பாலியல் துஸ்பிரயோக புகார் வழங்கிய சிறுமியை 30 முறை கத்தியால் குத்தி கொன்ற இளைஞன்  தினத்தந்தி  : மத்திய பிரதேசம் ஜபல்பூர் மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு செய்து சிறைக்கு சென்ற நபர், பிணையில் வெளிவந்து குறித்த சிறுமியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. ஐதராபாத்தில் கால்நடை வைத்தியர் பாலியல் துஸ்பியோகம் செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய பாராளுமன்றத்திலும் இது தொடர்பாக விவாதங்கள் நடந்தன. பாலியல் குற்றவாளிகளை அடித்துக்கொல்ல வேண்டும் என்று சில பெண் எம்.பி.க்கள் குரல் எழுப்பினர். இந்த நிலையில், பாலியல் வழக்கில் கைதானவர்களுக்கு பிணை வழங்குவது ஆபத்தாக மாறும் வகையில் மத்தியப்பிரதேசத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

நிர்பயா கற்பழிப்பு குற்றவாளிகளை என்கவுண்டரில் கொல்லாதது ஏன்? முன்னாள் டெல்லி போலீஸ் கமிஷனர் புதிய தகவல்

என்கவுண்டர் செய்யப்பட்ட ஹைதராபாத் குற்றவாளிகள் மற்றும் தூக்குதண்டனை பெற்றுள்ள நிர்பயா வழக்கு குற்றவாளிகள்நிர்பயா கற்பழிப்பு குற்றவாளிகளை என்கவுண்டரில் கொல்லாதது ஏன்? முன்னாள் டெல்லி போலீஸ் கமிஷனர் புதிய தகவல் மாலைமலர் :  நிர்பயா கற்பழிப்பு குற்றவாளிகளை என்கவுண்டரில் கொல்லாதது ஏன்? என முன்னாள் டெல்லி போலீஸ் கமிஷனராக இருந்த நீராஜ் குமார் புதிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். சைபராபாத் போலீஸ் கமிஷனர் சஜ்ஜனார் மற்றும் முன்னாள் டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ் குமார்
புதுடெல்லி: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த பெண் டாக்டரை 4 பேர் கொண்ட கும்பலால் கடத்திச்சென்று கற்பழித்து எரித்து கொலை செய்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் 4 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இன்று அதிகாலை 3 மணிக்கு குற்றவாளிகள் 4 பேரையும் பெண் டாக்டரை எரித்துக் கொன்ற இடத்திற்கு விசாரணை தொடர்பாக அழைத்து சென்றனர்.;n அப்போது 4 பேரும் போலீசார் மீது கற்கள் மற்றும் கட்டைகளை கொண்டு தாக்கினர். மேலும், குற்றவாளிகளில் ஆரிப் என்பவன் போலீசாரின் துப்பாக்கியை பறித்துக்கொண்டு சரமாரியாக சுட்டார்.

உ.பி.யில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண் மீது தீவைப்பு, சிகிச்சைக்காக டெல்லி கொண்டு செல்லப்பட்டார்

உ.பி.யில்  பாலியல் வன்கொடுமைக்குள்ளான  இளம்பெண் மீது தீவைப்பு, சிகிச்சைக்காக டெல்லி கொண்டு செல்லப்பட்டார் தினத்தந்தி : உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான இளம்பெண் , கோர்ட்டுக்கு செல்லும் வழியில் தீவைத்து எரிக்கப்பட்டார். இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சிவம் திரிவேதி, சுபம் திரிவேதி என்ற 2 பேர் கடத்திச் சென்று இந்த பாதக செயலில் ஈடுபட்டனர். இருப்பினும், கடந்த மார்ச் மாதம்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை, ரேபரேலி கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் பங்கேற்பதற்காக, நேற்று காலை, இளம்பெண் தனது வீட்டில் இருந்து கோர்ட்டுக்கு புறப்பட்டார்.

ஹைதராபாத் 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக் கொலை.. பெண் மருத்துவர் எரித்துக் கொன்றவர்கள் ..


.hindutamil.in : நாட்டையே உலுக்கிய ஹைதராபாத் பெண் கால்நடை மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட வழக்கில்
குற்றம்சாட்டப்பட்ட 4 பேர்களையும் போலீஸார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.
பெண் மருத்துவர் கொல்லப்பட்ட அதே இடத்திலேயே 4 பேரும் என்கவுண்டரில் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கு தொடர்பாக 4 பேரை சைபராபாத் போலீஸார் கைது செய்திருந்தனர்.
தெலுங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே 27 வயது பெண் மருத்துவரை, லாரி ஓட்டுநர் உள்ளிட்ட நால்வர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்றனர். இந்த கொடூர கொலையில் லாரி ஓட்டுநர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. இந்த வழக்கில் விரைவாக நீதி கிடைக்க வழிவகை செய்யும் வகையில், சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க அங்குள்ள நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக குற்றம் நடந்த இடமான சட்டன்பள்ளிக்கு குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் அழைத்துச்செல்லப்பட்டனர். அப்போது, அவர்கள் தப்பி ஓட முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, 4 பேரையும் போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.
சைபராபாத் போலீஸார் இன்னமும் இதன் விவரங்களை அறிவிக்கவில்லை, விரைவில் அதிகார பூர்வ விவரங்கள் வெளியாகும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது

இளையராஜாவின் செயல்பாடுகள் அனைத்தும் தவறானவை.. .இளையராஜாவோடு நெருங்கிய வட்டத்தில் இருந்தவர்கள ..

மின்னம்பலம் : - இராமானுஜம்
இளையராஜா Vs பிரசாத் ஸ்டூடியோ: யார் பக்கம் நியாயம்?இந்திய சினிமாவில் 63 ஆண்டுக்கால பாரம்பரியம் கொண்ட பிரசாத் ஸ்டூடியோ வணிக ரீதியாகத் தயாரிப்பாளருடன் பிரச்சினைகளைச் சந்தித்திருக்கிறது. ஆனால், இளையராஜா மூலம் இப்படி ஒரு பிரச்சினை, நீதிமன்ற வழக்கு ஏற்படும் என்பதை எதிர்பார்த்து இருக்காது. இளையராஜாவும் தான் வசித்த, வாசித்த, சுவாசித்த இடத்தில் தனக்கு இப்படியொரு பிரச்சினை இருக்கும் என்பதை எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால், அப்படியொரு சூழல் ஏற்பட்டுவிட்டது. இதைப்பற்றி தெளிவான தகவல்கள் வெளியாகாததால் ரசிகர்களும் என்ன செய்வதெனத் தெரியாமல் நிற்கின்றனர். இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டூடியோவுக்கும் என்ன தொடர்பு... இந்தச் சர்ச்சையில் சொல்லப்படும் தகவல்களின் தெளிவான பிம்பம் என்ன என்பது பற்றி விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் இங்கு தொகுக்கப்பட்டிருக்கின்றன.
இளையராஜா இசைப்பணி மேற்கொண்டு வந்த ரெக்கார்டிங் ஸ்டூடியோவில், அவருக்கு முன்பாக இசையமைப்பாளர் தேவா பல ஆண்டுகளாக இருந்திருக்கிறார். அவருக்குப் புதிய படங்கள் போதுமான அளவு இல்லை என்ற நிலைமை ஏற்பட்டபோது இங்கே இருப்பது தனக்குப் பொருளாதார ரீதியாகக் கட்டுப்படியாகாது என்று நிர்வாகத்திடம் கூறி இன்முகத்தோடு காலி செய்துவிட்டு சென்றார். அவர் பயன்படுத்தி வந்த ரெக்கார்டிங் ஸ்டூடியோவை சில மாற்றங்கள் செய்து இளையராஜாவுக்குக் கொடுத்திருக்கிறது பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம். 40 ஆண்டுகளுக்கும் மேலாக தற்போது இருக்கும் இடத்தில் இளையராஜா தனது இசைப் பணிகளைச் செய்து வந்ததாகவும், திடீரென்று ஸ்டூடியோ நிர்வாகம் அவரை காலி செய்ய சொன்னதாகவும் கூறுவதில் உண்மை இல்லையா?

17 பேரை பலி வாங்கிய மேட்டுப்பாளையம் விபத்து: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் முருகன் நேரில் ஆய்வு

accident-that-killed-17-people-national-sc-st-commission-deputy-chairman-murugan-survey.hindutamil.in:  மேட்டுப்பாளையத்தில் ஆய்வு நடத்திய தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத் தலைவர் முருகன் சுவர் இடிந்து விழுந்து பலியானவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்பதை உடனடியாக அமல்படுத்திட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், நடூரில் கடந்த 2-ம் தேதி அதிகாலை வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து வீடுகளின் மீது விழுந்ததில் சமபவ இடத்திலேயே பெண்கள், குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியான அரசு வேலை என அரசு அறிவித்தது.
சுவர் கட்டிய உரிமையாளர் சிவசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத் தலைவர் ராம் சங்கர் காத்தரியா, துணைத் தலைவர் முருகன் ஆகியோர் அடங்கிய குழுவினர் புதுடெல்லியில் இருந்து இன்று மேட்டுப்பாளையம் வந்து நேரில் ஆய்வு நடத்தினர்.

ஆங்கிலத்தில் உள்ள 14200 சொற்களில் 12000 சொற்கள் தமிழின் வேரில் விளைந்தவை ?

கீழ்க்கண்ட ஆங்கில - தமிழ்ச் சொற்களை உற்று கவனியுங்கள்!
Mango - மாங்காய்
Cash - காசு
One - "ஒன்"று
Eight - "எட்"டு
Victory - வெற்றி
Win - வெல்/வென்று
Wagon - வாகனம்
Elachi - ஏலக்காய்
Coir - கயிறு
Eve - அவ்வை
Terra - தரை
Metre - மாத்திரை (unit representation in Tamil)
Name - நாமம் (பெயர் - எ.கா சிவனின் நாமத்தை துதிப்போம், இதை இந்தியில் நாம் என்று சொல்வார்கள்)
Vomit - ஒமட்டு (குமட்டுதல்)

பின்வரும் வார்தையில S ஐ நீக்கிவிட்டு பார்த்தால், அப்படியே தமிழ் சாயல்.
Script - குறிப்பு
Speech-பேச்சு
Speed - பீடு/வேகம் (பீடு நடை - வேக நடை)
Sponge - பஞ்சு
Snake - நாகம்
A"ttack" - தாக்கு

ஸ்டாலின் முன்னிலையில் முதல்வர் எடப்பாடியின் தம்பி திமுகவில் இணைந்தார்:

தினகரன் :  சென்னை: முதல்வர் எடப்பாடியின் தம்பி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தார். சேலம் மேற்கு மாவட்டம், எடப்பாடி நெடுங்குளத்தை சேர்ந்தவரும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பங்காளியுமான பி.விசுவநாதன் மற்றும் அவரது மகன்கள் யுவராஜ், கார்த்திக் ஆகியோர் நேற்று, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
அப்போது சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், திமுக சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர் திருச்செங்கோடு எம்.கந்தசாமி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் முருகேசன், எடப்பாடி ஒன்றியச் செயலாளர் நல்லதம்பி, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஏ.ஏ.ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.
திமுகவில் இணைந்த விசுவநாதன் அளித்த பேட்டியில், “அதிமுகவில் சுதந்திரம் என்பதே கிடையாது. அவர்கள் கட்டுப்பாட்டில்தான் எல்லாம் நடக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். மக்கள் விரோத போக்கு ரொம்ப அதிகமாக உள்ளது. சுதந்திரமாக எதிலும் செயல்பட முடியவில்லை. சுதந்திரமாக செயல்பட கூடிய ஒரே கட்சி திமுகதான். மு.க.ஸ்டாலினின் சிறப்பான செயல்பாட்டால் திமுகவில் இணைந்துள்ளேன்” என்றார்.

இலங்கை பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவராகிறார் சஜித் பிரேமதாசா

இலங்கை பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவராகிறார் சஜித் பிரேமதாசா மாலைமலர் :  இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட சஜித் பிரேமதாசாவின் பெயரை அவரது கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பு: சமீபத்தில் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் சுமார் 80 சதவீதம் வாக்குகள் பதிவானது. இந்த தேர்தலில் கோத்தபய ராஜபக்சே மற்றும் சஜித் பிரேமதாசா ஆகியோரிடையே கடும் மோதல் ஏற்பட்டது.
வாக்கு எண்ணிக்கை முடிவில் சஜித் பிரேமதாசா, கோத்தபய ராஜபக்சேவிடம் தோல்வி அடைந்தார். இதையடுத்து, ஐக்கிய தேசிய கட்சியின் துணை தலைவர் பதவியை சஜித் பிரேமதாசா ராஜினாமா செய்தார்.
இதற்கிடையே, அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சே அந்நாட்டு அதிபராக பதவியேற்றுக் கொண்டார். அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்றார்.

இழந்த அத்தனை உயிர்களுக்கும் நீதி கிடைக்கட்டும். நீதிமட்டுமே முதன்மையாய் இருக்கட்டும்.

சுமதி விஜயகுமார் : எந்த ஒரு மரணம் என்றாலும்
அது வேதனையை
தரக்கூடியதுதான். வயது முதிர்வு காரணத்தை தவிர பிற மரணங்கள் எதோ ஒரு விதத்தில் மரணித்தவரின் சம்மந்தப்பட்டவர்களின் வாழ்க்கையை மாற்றிவிடும். உடல் நலம் இல்லாமல் அவர் இறந்து போயிருந்தால் கூட , ஒரு வேலை இப்படி செய்திருந்தால் காப்பாற்றி இருக்கலாமோ , அந்த மருத்துவரிடம் சென்றிருந்தால் காப்பாற்றி இருக்கலாமோ, இன்னும் கொஞ்சம் காலம் முன்னவரே தெரிந்திருந்தால் காப்பாற்றி இருக்கலாமோ என்று மனது பரிதவிக்கும். சாலை விபத்துகளில் ஏற்படும் மரணங்களோ இன்னும் வலி மிகுந்தவை. மண்ணிற்குள் போகிற உடல் என்றால் கூட அது சிறிது சேதம் ஆகிருப்பதை தாங்க முடியாது.
அப்பாவின் மரணம் எதிர்பாராதது. தங்கை மகள் திருமணத்திற்கு ஊரில் இருந்து வந்த அப்பா , விடுப்பு நாட்கள் முடிந்து அடுத்தநாள் ஊருக்கு கிளம்ப வேண்டும். நாளை ஊருக்கு செல்கிறேன் என்று எனக்கு whatsappல் தகவல் அனுப்பி இருந்தார்.
Happy journey என்று நான் அனுப்பிய மெசேஜ் தான் கடைசி. இரவு தொலைபேசியில் செய்தி வர, அதை ஏற்று கொள்ள ஒன்று இரண்டு இல்லை, சில மாதங்களே ஆனது. அம்மா வீட்டில் இருக்கும் பொழுது , அப்பா அழைப்பு மணி அடித்துவிட மாட்டாரா என்று ஏங்கியதுண்டு. அம்மா வீட்டில் இருந்த பொழுது கூட அவ்வளவாக தெரியவில்லை. ஊருக்கு வந்த பிறகு, கணவன் குழந்தைகள் இருந்த போது கூட அனாதை போல தோன்றியது. லேசான மனஅழுத்தம். எல்லாவற்றையும் விட்டுவிட்டு அம்மா ஊருக்கே போய் விடலாம் என்று கணவரிடம் கூற, வீட்டில் தனியாக இருப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தினார். அதில் இருந்து மீண்டு வருவதற்கு முயன்ற பொழுதுதான் அரசியலில் ஆர்வம் ஏற்பட, 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் எழுத துவங்கினேன்.

வியாழன், 5 டிசம்பர், 2019

பாத்திமா தற்கொலையில் 3 பேராசிரியர்கள் மட்டுமின்றி.. 7 மாணவர்களுக்கும் தொடர்புள்ளது.. தந்தை பேட்டி

Vishnupriya R |டெல்லி: சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்திப் தற்கொலை தொடர்பாக டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை பெண்ணின் தந்தை சந்தித்து பேசினார். மேலும் பாத்திமா தற்கொலையில் 3 பேராசிரியர்கள் மட்டுமின்றி மாணவர்களுக்கும் தொடர்புள்ளது என்று அவர் தெரிவித்தார். சென்னை ஐஐடியில் கடந்த நவம்பர் மாதம் 9-ஆம் தேதி முதலாம் ஆண்டு மாணவி பாத்திமா லத்திப் தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணத்தில் முக்கிய ஆதாரமாக இருப்பது அவர் செல்போனில் பதிவு செய்யயப்பட்டிருந்த தற்கொலை கடிதம் மட்டுமே. 
  அந்த செல்போனை கைப்பற்றிய போலீசார் ஆய்வு செய்வதற்காக சென்னையிலுள்ள தடயவியல் துறைக்கு அனுப்பியுள்ளனர். பாத்திமாவின் செல்போனில் இருந்த ஆதாரம் மர்மத்தை கிளப்பியது. அதில் மூன்று பேராசிரியர்கள்தான் மீது பாத்திமா குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் பாத்திமாவின் தந்தை அப்துல் லத்திப் அண்மையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தற்கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். 
தற்போது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடியையும் அப்துல் லத்திப் சந்தித்து பேசியிருந்தார். இந்த சந்திப்பின் போது பாத்திமா வழக்கை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என மோடியிடம் கோரிக்கை விடுத்தார். இந்த சந்திப்புக்கு பின்னர்

எனது குரலை அடக்க முடியாது: ப.சிதம்பரம்

எனது குரலை அடக்க முடியாது: ப.சிதம்பரம்மின்னம்பலம் : வெங்காய விலை உயர்வுக்கு எதிராக மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
மழையின் காரணமாக இந்த ஆண்டு வெங்காய உற்பத்தி குறைந்தது. போதிய வரத்து இல்லாத காரணத்தால் வெங்காய விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறைந்தபட்சம் ரூ.120க்கு விற்பனையாகிறது ஒரு கிலோ வெங்காயம்.
இந்நிலையில் நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெங்காயத்தை இருப்பு வைக்க வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெங்காயம் உபரியாக உள்ள இடங்களிலிருந்து பற்றாக் குறை உள்ள இடத்துக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்திருந்தார். மேலும் உணவில் தான் அதிகமாக வெங்காயத்தைச் சேர்த்துக்கொள்வதில்லை. வெங்காயம் பற்றி அதிகம் கவலை கொள்ளாத ஒரு குடும்பத்தில் இருந்து தான் வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

9 மாவட்டங்களுக்கு தேர்தல் தள்ளிவைப்பு?

9 மாவட்டங்களுக்கு தேர்தல் தள்ளிவைப்பு?மின்னம்பலம் : உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பிற்பகல் 2 மணிக்குள் மாநிலத் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கு வரும் 27 மற்றும் 30 தேதிகளில் தேர்தல் நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி கடந்த 2ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்ட நிலையில், தேர்தல் அறிவிக்கையை ரத்துசெய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் நேற்று திமுக மனுதாக்கல் செய்தது. இதுபோலவே, உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன்பு தொகுதி மற்றும் வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு, சுழற்சி முறை உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை பூர்த்தி செய்த பின்னரே தேர்தல் அட்டவணையை வெளியிட வேண்டும் என்று ஏற்கனவே திமுக சார்பில் கடந்த நவம்பர் 29ஆம் தேதி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் இன்று (டிசம்பர் 5) விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, “தமிழகத்தில் வார்டு மறுவரையறை பணிகள் முழுமையாக முடிக்கப்படவில்லை. சட்ட சிக்கல்களை நீக்காமல் ஊரக அமைப்புகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 4 மாவட்டங்களைப் பிரித்து 9 புதிய மாவட்டங்களை உருவாக்கியிருக்கிறார்கள்.

பாஜக பி டி அரசகுமார் திமுகவில் இணைந்தார் ..

தமிழக பாஜகவில் ஒரு சிலரை தவிர மற்றவர்களை வளரவிட மாட்டார்கள் - திமுகவில் இணைந்த பின் பி.டி. அரசகுமார் பேட்டிதினத்தந்தி : தமிழக பாஜகவில் ஒரு சிலரை தவிர மற்றவர்களை வளரவிட மாட்டார்கள் - திமுகவில் இணைந்த பின் பி.டி. அரசகுமார் பேட்டி தமிழக பாஜகவில் ஒரு சிலரை தவிர மற்றவர்களை வளரவிட மாட்டார்கள் என்று பி.டி. அரசகுமார் கூறியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில்  பாஜக மாநில துணை தலைவர்  பி.டி. அரசகுமார் திமுகவில் இணைந்தார்.
திமுகவில் இணைந்த பின்  பி.டி. அரசகுமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- புதுக்கோட்டை திருமண விழாவில் யதார்த்த உண்மையைத்தான் வெளிப்படுத்தினேன், இதனால் சிலர் என்னை அருவெறுக்கத்தக்க வகையில் பேசினர். திமுகவில் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.  தமிழக பாஜகவில் ஒரு சிலரை தவிர மற்றவர்களை வளரவிட மாட்டார்கள். சுயமரியாதையை இழக்க தயாராக இல்லை, அது பாஜகவில் எனக்கு ஏற்பட்டது. < இவ்வாறு அவர் கூறினார்.

சீன மணமகன்களுக்கு பாகிஸ்தான் பெண்கள் 629 பேர் விற்பனை - அதிர்ச்சி தகவல்

கோப்புபடம்
சீன மணமகன்களுக்கு பாகிஸ்தான் பெண்கள் 629 பேர் விற்பனை - அதிர்ச்சி தகவல்  மாலைமலர் : 629 பெண்கள் சீனர்களுக்கு திருமணம் செய்யப்பட்டு கடத்தப்பட்டதாக பாகிஸ்தான் அதிகாரிகள் நடத்திய புலன் விசாரணையில் தெரிய வந்துள்ளது. லாகூர்: பாகிஸ்தானில் பணத்துக்காக ஏழைப் பெண்கள் சீனர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அந்த பெண்கள் சீனர்களின் மனைவிகளாக சீனாவுக்கு அழைத்து செல்லப்பட்டாலும் அங்கு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
சீனாவுக்கு அழைத்து செல்லப்படும் பெண்கள் தங்கள் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு தங்களை மீட்குமாறு கெஞ்சுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பால், காய்கறி, பழங்களுக்கு GST வசூலிக்க அரசு பரிசீலனை..! கவலைக்கிடத்தில் பொருளாதாரம்.

Gowthaman Mj -  GoodReturns Tamil   :  டெல்லி: கடந்த பல மாதங்களாக அரசுக்கு வர வேண்டிய வரி வருவாய் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக 1.4 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரி இழப்பு, 40,000 கோடி ரூபாய் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக தள்ளுபடி செய்யப்பட்ட வரிகளால் வரும் இழப்பு என அரசு கஜானாவுக்கு நஷ்டம் பெருகிக் கொண்டே இருக்கிறது. இதற்கு மத்தியில், சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் வசூல் வேறு, மாதா மாதம் குறைந்து கொண்டே இருக்கிறது. இப்படியே போனால் அரசு கஜானாவில் தேவையான பணமே இருக்காதே..? எனவே, சரக்கு மற்றும் சேவை வரியின் கட்டமைப்பை முழுமையாக மறு பரிசீலனை செய்யப் போகிறார்களாம். 
வரும் டிசம்பர் 18-ம் தேதி நடைபெற இருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதைப் பற்றி விவாதிக்க இருக்கிறார்களாம். 
 இதுவரை சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்த (சுமார் 7 சதவிகித பொருட்கள்) பொருட்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கலாமா..? வேண்டாமா..? என்பதை ஆலோசிக்க இருக்கிறார்களாம். அப்படி விதிப்பதாக இருந்தால் எவ்வளவு சதவிகித வரம்பில் விதிப்பது என இந்த டிசம்பர் 18 ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்க இருக்கிறார்களாம். 

எடப்பாடியைச் சுற்றி விசாரணை வளையம்!

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியைச் சுற்றி விசாரணை வளையம்! மின்னம்பலம் :  மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் லொக்கேஷன் சேலம் என்று காட்டியது. “குட்கா ஊழல் வழக்கில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத் துறையால் சம்மன் அனுப்பப்பட்ட முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் அவகாசம் கேட்டிருக்கிறார்கள் என்றும் அதற்கான பின்னணி என்ன என்றும் மின்னம்பலத்தில் ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.
குட்கா பாக்கெட்டின் ஒரு முனையை அமலாக்கத் துறையும், இன்னொரு முனையை சிபிஐயும் பிடித்திருக்கின்றன. ஆனால் வருடக்கணக்காகியும் ஒரு நடவடிக்கைகூட எடுக்கப்படாத நிலையில் இப்போது வேக வேகமாக அமலாக்கத் துறை இதில் ஆர்வம்காட்டுவது, அமித் ஷா தமிழ்நாட்டு அரசியலில் குறிப்பாக அதிமுகவின் உள் விவகாரங்களில் ஆர்வம்காட்டுவதற்கான அறிகுறி என்றும் ஏற்கெனவே மின்னம்பலத்தில் செய்தி வெளியாகியிருக்கிறது.

சூடானில் சிலிண்டர் வெடித்து 6 தமிழர்கள் உட்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு .. வீடியோ


Sudan, LPGTanker, Blast, Indians, சூடான், இந்தியர்கள், சிலிண்டர், விபத்து தினமலர்  : கார்டூம்: சூடான் தலைநகர் கார்டூம் நகரில் உள்ள டைல்ஸ் ஆலையில் சிலிண்டர் டேங்கர் வெடித்ததில், 6 தமிழர்கள் உட்பட 18 இந்தியர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மொத்தம் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
சூடானின் கார்டூம் நகரில் செயல்படும் டைல்ஸ் ஆலையில் 50 இந்தியர்கள் உட்பட பலர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று (டிச.,03) ஆலையில் சிலிண்டர் டேங்கர் வெடித்து விபத்தானது. இதில், மொத்தம் 23 பேர் இறந்துள்ளதாகவும், 130 பேர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்கள் 6 தமிழர்கள் உட்பட 12 இந்தியர்கள் எனவும் , மற்றவர்கள் உள்ளூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

பிரதமருக்கு ஸ்டாலின் எழுதிய 9 பக்க கடிதம் - தி.மு.க. எம்.பி.க்கள் நேரில் அளித்தனர்

பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் எழுதிய 9 பக்க கடிதம் - தி.மு.க. எம்.பி.க்கள் நேரில் அளித்தனர் தினத்தந்தி :  நீட் தேர்வு, நதிநீர் மற்றும் இலங்கை தமிழர் பிரச்சினைகளை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 9 பக்கங்களில் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தை தி.மு.க. எம்.பி.க்கள் நேற்று பிரதமரிடம் நேரில் அளித்தனர். புதுடெல்லி, < பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, துணைத்தலைவர் கனிமொழி, மாநிலங்களவை தி.மு.க. குழு தலைவர் திருச்சி சிவா ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகள் குறித்து எழுதிய 9 பக்க கடிதத்தை அளித்தனர். மேலும், கருணாநிதி எழுதிய குறளோவியம் என்ற புத்தகத்தையும், முரசொலி வெளியிட்ட ‘நிறைந்து வாழும் கலைஞர் நினைவு மலர் 2019’ என்ற மலரையும் பிரதமர் மோடியிடம் அவர்கள் வழங்கினர். இந்த சந்திப்பு சுமார் ½ மணி நேரம் நடந்தது.

பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்ட மு.க.ஸ்டாலினின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

* கூட்டாட்சி தத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் மாநிலங்களுக்கு உரிமையளிக்க, அரசியல் சட்டத்தில் உரிய திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும்.

பேரா .சுபவீ : பெரியார் திடல் இல்லையென்றால் காசி ஆனந்தனை தமிழகம் அறிந்திருக்குமா? வீடியோ


இரு அற்பர்களின் பேச்சை நான் கேட்டு கொண்டே வந்தேன் நம் ஆசிரியரை .அவரின் வயதுக்காக கூட மதிக்காமல் அவன் இவன் என்று அவர்கள் பேசினார்கள்!
எண்ணி பாருங்கள் 87 .வது வயதிலும் இத்தனை வசை மொழிகளை நாம் தாங்கி கொள்ளவேண்டி இருக்கிறது .இந்த சமுகத்தின் இழிவை நாம் துடைக்கவேண்டும் என்று கருதியதால் இந்த இழிவை நாம் சுமக்க வேண்டி உள்ளது .அதுதான் அடிப்படை
எத்தனை அறிஞர்கள் பேராசிரியர்கள் இருக்கிறார்கள் வெறும் இலக்கியம் மட்டும் பேசிவிட்டு போனால் .. அல்லது சட்டம் மட்டும் ஆசிரியர் பேசிவிட்டு போனால் இன்றைக்கு யாரும் அவரை பழிமொழி சொல்ல மாட்டார்கள்.
பேசுகிறபோது ஒருவர் குறிப்பிடுகிறார் தம்பி உதயநிதி ஆசிரியரை பற்றி பேசும்போது பேராசிரியர் என்று சொன்னாராம் ..
அவரா பேராசிரியர் ? நான் அவரா என்று கவனமாக சொல்லி இருக்கிறேன் . அவரகள் அப்படி சொல்லவில்லை.
அவரா பேராசிரியர் என்று கேட்கிறார்கள் .. உண்மைதான் அவர் பேராசிரியர் இல்லை .. எங்களை போன்ற பேராசிரியர்களுக்கு எல்லாம் பேராசிரியர் ..
தந்தை பெரியாருக்கு பின்னும் ஆசிரியர் என்னென்ன பணிகளை செய்திருக்கிறார் என்று பட்டியல் இட்டிருக்கிறார்களே அதுதான் காரணம்?
பெரியாருக்கு பிறகு இந்த இயக்கம் அழிந்து போய்விடும் என்று நினைத்தவர்களுக்கு ஆசையில் மண்ணை போட்டுவிட்டரே அதுதான் காரணம்.

ஓஷோ பாணியில் நித்யானந்தா... அமெரிக்காவில் ஓஷோ செய்தது என்ன? - ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக்!


ரஜ்னீஷ்ஓஷோ - நித்யானந்தாvikatan.com - ர.முகமது இல்யாஸ் : `ஓஷோ' என்றழைக்கப்பட்ட ரஜ்னீஷைப் போலவே, பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானவர் நித்யானந்தா. தற்போது அவர், ரஜ்னீஷ் பாணியில் தனக்கென்று ஒரு `கம்யூன்' உருவாக்கி, அதைத் தனி நாடாக அறிவிக்க இருக்கிறார். அமெரிக்காவில் ரஜ்னீஷ் தனக்கென்று `கம்யூன்; உருவாக்கியபோது என்ன செய்தார்? இருபதாம் நூற்றாண்டின் இறுதியில், மேற்கத்திய உலகைக் கலக்கிய இந்திய சாமியாரின் பெயர். தனது பிற்காலத்தில் `ஓஷோ' என்றழைக்கப்பட்ட ரஜ்னீஷ், தனது அமெரிக்க சீடர்களால் `பகவான்' எனறு அழைக்கப்பட்டார். தற்போது நித்யானந்தா, ஈக்வடார் நாட்டிற்குச் சொந்தமான தீவு ஒன்றை விலைகொடுத்து வாங்கியிருப்பதோடு, அதைத் தனி நாடாக அறிவிக்கப்போவதாகவும் தெரியவந்துள்ளது. தனது பேச்சுகளில் ஓஷோவை காப்பியடிப்பதாக நித்யானந்தா மீது குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், தற்போது ஓஷோ பாணியில் தனக்கென்று தனியாக `கம்யூன்' ஒன்றை உருவாக்க இருக்கிறார் நித்யானந்தா.
`ஓஷோ' என்று அழைக்கப்பட்ட ரஜ்னீஷ், அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவர். ரஜ்னீஷின் சீடர்கள், அமெரிக்க அரசால் கிரிமினல் வழக்குகளில் கைதுசெய்யப்பட்டனர். சர்ச்சைகளின் முடிவில், ரஜ்னீஷ் அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்டு, மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரது உயிர் இந்தியாவில் பிரிந்தது.

புதன், 4 டிசம்பர், 2019

ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்தால் கைது கூடுதல் டி.ஜி.பி. ரவி எச்சரிக்கை ...

மாலைமலர் : குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பவர்கள், பதிவிறக்கம் செய்பவர்கள் மீது கைது நடவடிக்கை தொடங்கும் என்று கூடுதல் டி.ஜி.பி. ரவி எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை:< செல்போனில் ஆபாச படங்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
செல்போன்களில் இணையதளத்தில் சென்று ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பவர்கள் அதனை மற்றவர்களுக்கும் அனுப்பி வருகிறார்கள். />
இன்றைய இளைஞர்கள் மத்தியில் ஆபாச வீடியோக்களை செல்போனில் பார்ப்பது பொழுதுபோக்காகவே மாறிவிட்டது.
ஆபாச படங்களை பார்ப்பவர்களின் பட்டியலில் சென்னை முதலிடத்தில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த புலனாய்வுத்துறை மத்திய உள்துறைக்கு தகவல் அனுப்பி உள்ளது. இந்த தகவலை மத்திய அரசு தமிழக போலீசுக்கு தெரிவித்து உள்ளது. இதன்படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.< இதுதொடர்பாக இந்த பிரிவின் கூடுதல் டி.ஜி.பி. ரவி கூறியதாவது:-

ப.சிதம்பரம் பிணையில் விடுதலை!

வழக்கு பற்றி வாய் திறக்கக்  கூடாது: சிதம்பரம் ஜாமீனில் விடுதலை!   மின்னம்பலம் : ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கடந்த 106 நாட்களாக சிறையில் இருந்த
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு இன்று (டிசம்பர் 4) உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
கடந்த ஆகஸ்டு 21 ஆம் தேதி இவ்வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் ப.சி.யின் முன் ஜாமீன் மனுவை நிராகரித்துவிட்ட நிலையில் அவர் உச்ச நீதிமன்றத்துக்கு செல்லும் முன்னரே சிபிஐ சிதம்பரம் வீட்டு சுவரேறிக் குதித்து அவரைக் கைது செய்தது. சிதம்பரம் 2010 ஆம் ஆண்டு திறந்து வைத்த சிபிஐயின் தலைமை அலுவலகத்தில் அவரை வைத்து விசாரித்த சிபிஐ பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திகார் சிறையில் அடைத்தது. அக்டோபர் 22 ஆம் தேதி சிபிஐ பதிவு செய்த வழக்கில் சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்தது. ஆனால் அக்டோபர் 16 ஆம் தேதி அதே வழக்கில் அமலாக்கத்துறை சிதம்பரத்தை கைது செய்திருந்ததால் சிதம்பரத்தின் அடுத்த கட்ட ஜாமீன் போராட்டம் தொடர்ந்தது.
சிதம்பரம் புத்திசாலி, வெளியே விட்டால் சாட்சிகளை கலைத்துவிடுவார். அவரது அறிவைப் பயன்படுத்தி வழக்கை நீர்த்துப் போகச் செய்துவிடுவார் போன்ற காரணங்களே அவரது ஜாமீன் மறுப்புக்கு காரணங்களாக மத்திய அரசின் ஏஜென்சிகளால் நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்டன.

வங்கி கணக்கில் எவ்வளவு வைத்திருந்தாலும் காப்பீட்டு தொகையாக ரூ.1 லட்சம் மட்டுமே கிடைக்கும் ...கோவிந்தா கோவிந்தா

வங்கி கணக்கில் எவ்வளவு வைத்திருந்தாலும் காப்பீட்டு தொகையாக ரூ.1 லட்சம் மட்டுமே கிடைக்கும்மாலைமலர்  : வங்கிகளில் வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு போன்றவைகளில் எவ்வளவு தொகை வைத்திருந்தாலும் காப்பீட்டு தொகையாக ஒரு லட்சம் மட்டுமே வழங்க முடியும் என தெரிவித்துள்ளது. புதுடெல்லி: ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமான வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத கழகம் அனைத்து வணிக வங்கிகள், ஊரக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வெளிநாட்டு வங்கிகளின் இந்திய கிளைகள் ஆகியவற்றில் உள்ள வைப்புத்தொகையை காப்பீடு செய்துவருகிறது. இந்த கழகத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தில், வங்கிகள் தோல்வியுற்றாலோ, கலைக்கப்பட்டாலோ எவ்வளவு காப்பீட்டு தொகை கிடைக்கும் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அந்த கழகம் அளித்துள்ள பதில் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அத்தகைய வங்கிகளில் வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு, வைப்புத்தொகை போன்றவைகளில் எவ்வளவு தொகை வைத்திருந்தாலும் காப்பீட்டு தொகையாக ஒரு லட்சம் மட்டுமே வழங்க முடியும் என தெரிவித்துள்ளது. இந்த தொகையை உயர்த்த முடியுமா? என்று கேட்டதற்கு அதற்கு தேவையான தகவல் தங்களிடம் இல்லை என்றும் கூறியுள்ளது.
>

செங்கல்பட்டு திமுக எம்.எல்.ஏ வரலட்சுமி வீட்டில் ரெய்டு!

செங்கல்பட்டு திமுக எம்.எல்.ஏ வீட்டில் ரெய்டு!மின்னம்பலம் : செங்கல்பட்டு திமுக சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் இல்லத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
செங்கல்பட்டு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் வரலட்சுமி மதுசூதனன். இவரது இல்லம் மறைமலை நகரில் அமைந்துள்ளது. இந்த நிலையில் வரலட்சுமியின் வீடு மற்றும் அலுவலகத்தில் நேற்று (டிசம்பர் 3) மாலை சரக்கு மற்றும் சேவைப் பிரிவு அதிகாரிகள் திடீரென சோதனை நடத்த ஆரம்பித்தனர். வரலட்சுமியின் கணவர்  நடத்திவரும் மேன் பவர் நிறுவனத்துக்கான ஜிஎஸ்டி வரியை முறையாகச் செலுத்தவில்லை என்ற புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது.

திரு .அமிர்தலிங்கம் : இ தி மு க சாதியேற்ற தாழ்வு நீங்கி ஒரின மக்களாய் வாழவைக்க முயன்றது... வரலாறு

வளன்பிச்சைவளன் : பதிவு - 169 : ஈழப் போரும் தமிழக ஈழத்தமிழரின்பொறுப்பும் கடமையும் 
சாதியேற்ற தாழ்வு நீங்கி ஒரின மக்களாய் வாழவைக்க முயன்றது இதிமுக பாராளுமன்றத்தில் அமிர்தலிங்கம் எறும்புகளுக்கு கூடபுற்றுஉண்டு #மலையக மக்களுக்கு அதுவும் இல்லை
சில்வாக்களும் செல்வாக்களும்  மலையத்தில் ஆளுமை செய்ய  முடியாது இளஞ்செழியன்! ஈழத்தில் சாதிய ஏற்ற தாழ்வு நீங்க மூடநம்பிக்கைகள் அற்ற சமூக சமத்துவ சமுதாயம் அமைக்க பாடுபட்டதே இலங்கை திராவிட முன்னேற்றக் கழகம். இவ்வமைப்பு தமிழ் மக்களை ஓரின மக்களாக வடக்கு கிழக்கு மலையகம் என்ற பேதமின்றி இணைக்க முற்பட்டதும் தமிழ் மக்களை சிறுபான்மை மக்களாக அடக்கி ஆளும் தங்கள் பெரும் பான்மை பேரினவாதத்திற்கு அச்சுறுத்தலாக இலங்கை திராவிட முன்னேற்றக் கழகம் இருப்பதாக அஞ்சிய சிங்கள இனவாதிகள் இ. தி.மு.க வை தடை செய்தனர்.


இ.தி.மு.க-வின்  நோக்கம் மலைநாட்டுத் தமிழ்த்
தொழிலாளர்களை சாதி பேதத்திலிருந்து மீட்டு, அவர்களை ஓரின
மக்களாக ஒன்று படச்செய்வதேயாகும். ஒருவரை ஒருவர்
தொடக்கூடாது என்றும், அவர் அந்தச் சாதி, இவர் இந்தச்
சாதியென்றும் பிளவுபடுத்தப் பட்டிருக்கும் மக்களிடையேயுள்ள
பேதத்தை அகற்றுவது, அவர்களை ஒன்றுபடுத்துவது பிழையா?
அரசாங்க கட்சியில் உள்ளவர்களானாலும் சரி, எதிர்க்கட்சியில்
உள்ளவர்களானாலும் சரி! இந்த நோக்கம் பிழையானது எனக்
கூறுவார்களா?

:மேட்டுப்பாளையம் டி.எஸ்,பி. மணி : “சக்கிலியா நாய்களுகிட்ட கெஞ்சிட்ட இருக்கனுமா?”

- அ.கரீம்  :  “சக்கிலியா நாய்களுகிட்ட கெஞ்சிட்ட இருக்கனுமா?”
“முஸ்லீமுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம், இந்த விசயதுள்ள நீங்க தலையிட கூடாது” இந்த இரண்டு கேள்விகள் திரும்ப திரும்ப தொந்தரவு செய்துகொண்டே இருக்கிறது. இந்த இரண்டு கேள்விகளையும் கேட்டவர் மேட்டுப்பாளையம் டி.எஸ்,பி. மணி.
மேட்டுப்பாளையத்தில் நேற்று காலை(2.12.19) இருபது அடி உயரம் உள்ள சுவர் இடிந்து விழுந்து 17பேர் என்ன நடந்தது என்று எதனையும் யூகிக்கும் முன்பே கொடுரமான மரணத்தை சந்தித்துள்ள சூழலில் அவை அனைத்தையும் வேறு பக்கம் திருப்பிவிடும் வேலையை மிக கவனகமாக காவல்துறை செய்துள்ளது. அந்த ஆகால மரணத்துக்கு காரணமானவரை கைது செய்ய வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை தவிர கூடியிருந்த பொதுமக்கள் அரசியல் இயக்கங்கள் வேறு எந்த கோரிக்கையையும் பிரதானமாக எழுப்பவில்லை. அவரை கைது செய்யும்வரை உடலை வாங்க முடியாது என்று சொன்னார்கள். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வருவதற்கு முன்பு அனைத்து கூட்டத்தையும் கலைக்க வேண்டும் என்பதில்தான் காவல்துறை குறியாக இருந்துள்ளது.
வட்டாச்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடக்கும் அதே வேளையில் கூடிய பொதுமக்களை எப்படியும் அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதிலேயே முழு கவனமும் காவல்துறைக்கு இருந்ததின் விளைவே அந்த திடிர் தாக்குதல்.

மேட்டுப்பாளையம் ‘தீண்டாமை’ சுவர்: ஸ்டாலின் நேரில் சென்று .. வீடியோtamil. samayam : மேட்டுப்பாளையம் நடூர் ஏடி காலனியில் சுவர் இடிந்து விபத்துக்கு உள்ளானதில் நேற்று காலை நான்கு வீடுகளில் வசித்துவந்த 17 பேர் பலியாகினர். சக்கரவர்த்தி துகில் மாளிகையின் உரிமையாளர் சிவ சுப்பிரமணியன் தலித் குடியிருப்பு தனது பார்வையில் இருக்கக்கூடாது என்பதற்காக 20 அடி உயரத்தில் தீண்டாமை சுவர் போன்று எழுப்பியதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 80 அடி அகலத்தில் 20 அடி உயரத்தில் கருங்கற்களால் எழுப்பட்ட இந்த சுவர் தூண்கள் ஏதும் அமைக்கமால் கட்டப்பட்டிருந்தது.
விரிசல் விழுந்த அந்த சுவரின் அடியில் நீர் தேங்குவதாலும், தாழ்வான பகுதியில் இருக்கும் தங்களது வீட்டின்போல் எப்போது வேண்டுமானாலும் சாயும் நிலை இருக்கும் என்பதாலும் நான்கு வீட்டைச் சேர்ந்தவர்கள் வீட்டின் உரிமையாளரிடமும் மேட்டுப்பாளையம் நகராட்சி அதிகாரிகளிடமும் புகார் அளித்துள்ளனர். ஆனால் அதை அதிகாரிகளும், வீட்டின் உரிமையாளரும் அலட்சியம் செய்துள்ளனர்.
கவிதா சொர்ணவல்லி : 17 அருந்ததியர்கள் கொல்லப்பட்டது பற்றி, பிஎஸ்பி சார்புள்ள யானைக்குட்டிகள், பவுத்த சார்புள்ள சங்கி மங்கிகள், பறையர் பெருமை / பள்ளர் பெருமை பேசும் சாதிவெறி நாய்கள், இது போக தலித் இன்டெல்ஸ்ன்னு சொல்லுற சைக்கோக்கள் எல்லாம் எதுவுமே பேசாம, கம்முனு கிடக்குரானுங்க ?

செயற்கைக்கோள் எரிகலன்.. புதுச்சேரி கடலில் மீனவர்கள் கண்டெடுத்த ராக்கெட் ..

செயற்கைக்கோள் எரிகலன்இஸ்ரோவிகடன் : 2019 மார்ச் 22 PSOM XL…!’- இஸ்ரோ அதிகாரிகளைப் பதற வைத்த  புதுச்சேரி மீனவர்கள் 
vikatan.com .முருகன் - அ.குரூஸ்தனம் : புதுச்சேரி மீனவர்களின் வலையில் செயற்கைக்கோள் பாகத்தில் இருந்த வெடிபொருள் நிரப்பப்பட்ட பகுதி காணாமல் போயிருப்பது இஸ்ரோ அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
புதுச்சேரியில் நேற்று முன் தினம் இரவு மீன் பிடிக்கக் கடலுக்குள் சென்ற வம்பாகீரப்பாளையம் மீனவர்களின் வலையில் மர்மப் பொருள் ஒன்று சிக்கியது. நள்ளிரவு என்பதால் அது என்ன என்று தெரியாமல் குழம்பிய நிலையில் மீனவர்கள் அதை வெளியே இழுக்க முயற்சி செய்தனர்.
ஆனால், அந்தப் பொருள் மிகவும் கனமாக இருந்ததால் கரையில் இருக்கும் மீனவர்களை தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவித்தனர். அதன்பின் மற்ற மீனவர்களின் உதவியோடு சுமார் 12 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் அதைப் படகில் கட்டி கரைக்கு இழுத்து வந்தனர்.

9 ஆண்டில் 75,000 மாணவர்கள் தற்கொலை மத்திய மனித வளமேம்பாட்டு அமைச்சு


75,000 students committed suicides in India between 2007 and 2016: Study As many as 9,474 students committed suicide in 2016 – almost 26 every day, according to a reply to the Lok Sabha by H G Ahir, Minister of State for Home Affair
சென்னை: பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் தற்கொலையை தடுக்க கவுன்சிலிங் நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்ட அறிக்கை:நாடாளுமன்றத்தில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கடந்த 2007ல் இருந்து 2016 வரை இந்தியாவில் 75,000 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
அதற்கு முக்கிய காரணமாக பள்ளி கல்லூரிகள் மற்றும் பெற்றோர்களின் அதிகப்படியான அழுத்தமும், சாதி மத ரீதியான ஒடுக்கு முறைகளுமே இந்த முடிவுக்கு முக்கிய காரணமென்று மனிதவள மேம்பாட்டுத்துறையே ஒத்துக்கொண்டிருக்கிறது. அதில் 2016ல் மட்டும்  9,474 பேர் தற்கொலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய சண்முக சுப்பிரமணியன் பேட்டி வீடியோ


விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய தமிழக இளைஞர்... நன்றி தெரிவித்த நாசா... மாலைமலர் :  நிலவின் தென்துருவத்தில் விழுந்த விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய தமிழக இளைஞரின் ஆய்வை நாசா உறுதி செய்து நன்றி தெரிவித்துள்ளது. நிலவை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பிய சந்திரயான்2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், திசைமாறி சென்று நிலவின் மேற்பரப்பில் மோதி விழுந்து விட்டது. லேண்டருடன் மீண்டும் தகவல் தொடர்பை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட இஸ்ரோவின் முயற்சிகள் வெற்றிபெறவில்லை. இதனால் 14 நாட்களுக்கு பிறகு லேண்டரை உயிர்ப்பிக்கும் முயற்சியை இஸ்ரோ கைவிட்டது. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு விஞ்ஞானிகள் லேண்டரை கண்டுபிடிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் நாசா அனுப்பிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் விக்ரம் லேண்டர் விழுந்த இடம் கண்டறியப்பட்டுள்ளது.  நாசா செயற்கைக்கோள் நிலவின் தென்துருவ பகுதியை துல்லியமாக எடுத்த புகைப்படங்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டன. இதில், செப்டம்பர் 17, அக்டோபர் 14, 15 மற்றும் நவம்பர் 11 ஆகிய நாட்களில் வெளியிட்ட புகைப்படங்களை ஆய்வு செய்த தமிழக இளைஞர் சண்முக சுப்பிரமணியன், விக்ரம் லேண்டரின் பாகங்கள் விழுந்த இடத்தை கண்டுபிடித்து நாசாவுக்கு இமெயில் மூலம் தகவல் அனுப்பி உள்ளார். அவரது ஆய்வை நாசா விஞ்ஞானிகளும் உறுதி செய்து அவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

செவ்வாய், 3 டிசம்பர், 2019

ஆசிரியர் வீரமணி பிறந்த நாள் அறைகூவல் : சமூகநீதி காக்க சமர்க்களம் காண வாரீர்!

Asiriyar K Veeramani : நாளை (2.12.2019) எனது 87ஆவது ஆண்டு பிறந்த நாள்
என் தாயின் கருப்பையிலிருந்து வெளியே வந்து வளர்ந்து பத்து ஆண்டு காலத்தின்பின், கருப்பையே வாழ்நாள் வண்ணமாக ஆக்கி, பொறுப்பை என் தலைவர்- அறிவு ஆசான் எனக்குத் தருவதற்கு முன் பிருந்தே, சிவப்பை-சிந்தனை எழுச்சியை, எனது மாணவப் பருவத்திலே கற்க வைத்தவர் எனது பள்ளி ஆசான் மானமிகு. ஆ.திராவிடமணி அவர்கள்!
எனக்கு மானமும் அறிவும் ஊட்டியவர் நமது ஞான சூரியன் தந்தை பெரியார் என்ற நிரந்தர அறிவு ஆசானே!
என் பொதுப்பணி தொடர, பெறாது பெற்ற அன்னை மணியம்மையார்
எனது பொதுப்பணி என்றென்றும் தொடர என்னைப் பெற்ற தாய் பிறந்த சில நாட்களில் மறைந்தாலும், வளர்த்துக் கடமையாற்றியவர்கள் எனது தந்தையும், வளர்ப்புத் தாயும் ஆன கிருஷ்ணசாமியும், பட்டம்மாளும் ஆவார்கள்.
ஆனால் அதற்குப்பின் - 63 ஆண்டுகளுக்கு முன் பெறாத பிள்ளையாக பெற்ற பிள்ளையைவிட, அதிகமான பாசத்தால் - கொள்கைப் பாசத்தால் - கட்டிப்போட்டு, கழகக் கடமைகள் இன்றளவும் தந்தை வழியில் தொடர்ந்து ஆற்றிட தயாரித்தவர் எனது உற்ற அன்னை மணியம்மையார் அவர்களேயாவார்தாய் மடியாக இருக்கும் என்றைக்கும் கொள்கைக் குடும்பத்தவர்கள்

எங்கள் இறப்பிற்கு வறுமையே காரணம்...''- சுவரில் எழுதிவைத்துவிட்டு குடும்பமே தற்கொலை!

incident in nellai sengkottainakkheeran.in - ப.ராம்குமார் : தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த புளியரை அருகே உள்ள கட்டளை குடியிருப்பை சேர்ந்த கந்தசாமி (37) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி இசக்கியம்மாள் என்ற இந்துமதி (30). கடன் தொல்லையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். அவர்களின் குழந்தை சின்னமுத்திரன் (5) மற்றும் 2 வயது குழந்தைக்கும் விஷம் கொடுத்து உள்ளனர். இதில் சின்னமுத்திரன் இறந்து விட்டான். 2 வயது குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து புளியரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். உருக்கமான கடிதம் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டதோடு வீட்டின் சுவரில் எங்கள் சாவுக்கு வறுமை மட்டுமே காரணம் என உருக்கமான வாசகம் எழுதப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீண்டாமை சுவர் சிவசுப்பிரமணியம் கைது ..17 உயிர்களை பறித்த மேட்டுப்பாளையம்

மாலைமலர் : மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியானதைத் தொடர்ந்து, அந்த சுற்றுச்சுவரை கட்டிய வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மேட்டுப்பாளையம்: கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் பகுதியில், மழையால் சுற்றுச்சுவர் இடிந்து வீடுகள் மீது விழுந்தது. சுற்றுச்சுவர் விழுந்ததில், அதனை ஒட்டிய வீடுகள் இடிந்து 17 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு காரணமான சுற்றுச் சுவரை கட்டிய வீட்டின் உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். சிதிலமடைந்து உடைந்து விழும் நிலையில் இருந்த அந்தச் சுவரை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தும் அது நிறைவேற்றப்படாததாலேயே இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் 17 பேர் இறப்புக்கு காரணமான சுற்றுச்சுவரை கட்டிய வீட்டின் உரிமையாளர் சிவசுப்பிரமணியத்தை தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர். மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

தேர்தலை நிறுத்துங்கள்: திமுகவுக்கு அதிமுக விட்ட தூது!

தேர்தலை நிறுத்துங்கள்: திமுகவுக்கு அதிமுக விட்ட தூது!மின்னம்பலம் : மாநிலத் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில் உள்ள குளறுபடிகளைச் சுட்டிக்காட்டி, தேர்தலை நிறுத்துவதற்கு திமுக தரப்புக்கு, அதிமுக தரப்பு தூது விட்டுள்ளது
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நேற்று காலை 10 மணியளவில் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி, ஊரகப் பகுதிகளுக்கான தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவித்தார். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. இதையே முன்வைத்து மாநிலத் தேர்தல் ஆணையத்தை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இன்னொரு புறம் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பிலேயே குழப்பம் நிலவுகிறது.
தேர்தல் அறிவிப்பை வெளியிட்ட பிறகு அதுகுறித்த நகல்கள் ஊடகத்தினருக்கும், அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. அதை முழுவதும் படித்துப் பார்த்த மாநிலத் தேர்தல் ஆணையத்தில் ஆஜராகும் அதிமுக தரப்பு வழக்கறிஞர்கள், திமுக வழக்கறிஞர்களுடன் தொடர்புகொண்டிருக்கிறார்கள்.

தீண்டாமை சுவர் ... எடப்பாடி பழனிசாமியின் கவுண்டர் ஜாதி ராஜ்ஜியம் ...


Mani Mathivannan : தீண்டாமைச் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியென்று தோழர்கள் கண்டனம் எழுப்பினால் சிலர் துள்ளிக் குதித்து வந்து எது தீண்டாமை என்று கேட்கிறார்கள்.
எடப்பாடி பழனிச்சாமி ஊர்ந்து போய் முதல்வர் பதவி பெற்றதிலிருந்து மேற்கு மாவட்டங்கள் முழுவதிலும் ஆட்சியர், எஸ்பி ஆகிய இருவரில் ஒருவரோ அல்லது இருவருமேவோ கவுண்டர்களாக இருப்பது போன்ற ஏற்பாடு திட்டமிட்டு ஆட்சியாளர்களால் செய்யப் படுகிறது.
உதாரணத்திற்கு, ஈரோட்டில் கலெக்டர், எஸ்பி இருவருமே கவுண்டர்கள். கலெக்டர் பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளி மைதானத்தை தனது சாதிக் கோயிலுக்குத் தாரை வார்க்க, நீதிமன்ற உத்தரவையும் மீறி நடவடிக்கை எடுத்தார்.
வழக்கறிஞர் ரத்தினம் போன்றவர்கள் சரியான நேரத்தில் இடையீடு செய்ததன் முலம் அம்முயற்சி முறியடிக்கப் பட்டது.
எஸ்பிக்கு எதிராக மாவட்டத்திலுள்ள பல்வேறு இயக்கங்கள், கட்சிகள் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளன. எஸ்பி ஆர்எஸ் எஸ்ஸுக்குச் சார்பாகவும் சனநாயக சக்திகளை முடக்கும் விதத்திலும் செயல்படுகிறார் என்பது அவர்களின் புகார்.
அதுபோலவே நாமக்கல்லிலுள்ள கவுண்டர் எஸ்பி தனது சாதிக்கு ஆதரவானப் போக்குடன் செயல்பட்டு எங்களை பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்குகிறார் என அம்மாவட்ட இளைஞர்கள் சிலர் என்னைத் தொடர்பு கொண்டனர்.

22 அடி உயர அருந்ததிய தீண்டாமை தடுப்பு ( கருங்கல்) சுவர் இடிந்து 17 பேர் இறப்பு .. போலீஸ் தடியடி வீடியோ


தினகரன் :  2 குடும்பம் ஒட்டுமொத்தமாக உயிரிழந்த பரிதாபம்
  மறியல் செய்த மக்கள் மீது போலீஸ் கண்மூடித்தனமாக தடியடி
கோவை: கோவை மேட்டுப்பாளையம் அருகே, கனமழை காரணமாக துணிக்கடை உரிமையாளர் வீட்டின் 22 அடி உயர சுற்றுச்சுவர் இடிந்து அருகில் இருந்த 5 வீடுகள் மீது விழுந்து, இரண்டு குடும்பங்களை சேர்ந்த 17 பேர் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். இதுதொடர்பாக மறியல் செய்த மக்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் கண்ணப்பன் லே அவுட் பகுதியில்  துணிக்கடை உரிமையாளர் சிவசுப்ரமணியன் என்பவரின் வீடு மற்றும் காலியிடம் உள்ளது. இந்த காலியிடத்தை சுற்றி 80 அடி நீளம், 22 அடி உயரத்திற்கு கருங்கல்லால் கட்டப்பட்ட சுற்றுச் சுவர் இருந்தது. இந்த சுவர் 10 ஆண்டுக்கு முன் கட்டப்பட்டுள்ளது. இந்த காம்பவுண்ட் சுவருக்கு அருகே ஆனந்தன், அருக்காணி, சிவகாமி, குருசாமி, ஏபியம்மாள் ஆகியோரது வீடுகள் இருந்தன. அந்த வீடுகளில் 4 ஓட்டு வீடுகள், ஒரு வீடு சிமென்ட் ஷீட் கூரையுடன் கட்டப்பட்டிருந்தன. நேற்று அதிகாலை 5.30 மணிக்கு அந்த பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்தது. அப்போது மழையால் சேதமடைந்திருந்த காம்பவுண்ட் சுவர் அப்படியே சரிந்து அருகில் இருந்த ஆனந்தன், அருக்காணி, சிவகாமி, குருசாமி, ஏபியம்மாள் ஆகியோரது வீடுகளின் மீது விழுந்தது.

அமேசான் கிண்டிலில்... தமிழ் அறிவுலக மறுமலர்ச்சி புதிய வரலாறாக எழுதப்படும்... Ravishankar Ayyakkannu :

Ravishankar Ayyakkannu : நம்ம ஆட்கள் பெண் பிள்ளைகளைப் படிக்க அனுப்பக் கூட காசு கொடுத்தால் தான் அனுப்பி வைத்தார்கள்.
கலைஞர் இலவசத் தொலைக்காட்சி கொடுத்த பிறகு தான் தமிழில் சேனல்கள் எண்ணிக்கை அதிகரித்தது. உலகப் புகழ்பெற்ற சேனல்கள் எல்லாம் தமிழில் வருகின்றன.
Jio காரன் வந்து இலவசமாக கொடுத்த பிறகு தான் இணையம் பரவலானது.
>இன்று பல இளைஞர்கள் Youtube channel மூலம் காசு பார்க்கிறார்கள்.
எல்லா துறையிலுமே நுழைவதற்கு ஒரு தடை இருக்கும். அதை
உடைத்தால் தான் புரட்சி சாத்தியம் ஆகும்.
புத்தகங்களைப் பொறுத்தவரை அதன் விலை ஒரு மாபெரும் தடை. ஒரு பக்கம் ஒரு ரூபாய். நம் ஆட்கள் திருப்பூர் பனியன் விற்பனை போல் கிலோ கணக்கில் எழுதினால் தான் அறிவாளியாக மதிப்பார்கள் என்று நினைக்கிறார்கள்.
விளைவு - அச்சுப் புத்தகம் 1,000 ரூபாய் என்றால் மின்னூல் 500 ரூபாயாவது வைத்தாக வேண்டிய கட்டாயம். இவ்வளவு விலை வைத்தால் தற்போது நடக்கும் மோடியின் பொன்னான பொருளாதார ஆட்சியில் எவன் புத்தகம் வாங்குவான்?
அச்சுப் புத்தகத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதால் தான் இவ்வளவு தேக்கம்.
முதலில் கிண்டிலில் 49 ரூபாய்க்கு வெளியிட வேண்டும்.
முதல் சில நாட்களும் பிறகு அவ்வப்போதும் இலவசமாகத் தர வேண்டும்.
அச்சுப் புத்தகமே வராது, படித்தால் கிண்டிலில் மட்டும் தான் என்ற நிலை வர வேண்டும்.