சனி, 5 ஏப்ரல், 2014

Firaaq ஆயிரமாயிரம் கதைகளுக்கு நியாயம் செய்துள்ள ஒரு படம்.


ஆயிரம் உண்மைக் கதைகளில் இருந்து உத்வேகம் பெற்று எடுக்கப்பட்ட கற்பனைக் கதை என்ற அறிவிப்போடு தொடங்கும் ஃபிராக், அந்த ஆயிரமாயிரம் கதைகளுக்கு நியாயம் செய்துள்ள ஒரு படம். முதல் காட்சியிலேயே பார்வையாளர்களை உறைய வைத்து, கட்டிப் போடுகிறது.
ஷேக்ஸ்பியரின் 'மேக்பெத்' நாடகத்தில் அரசனைக் கொல்லும் லேடி மேக்பெத்தின் கைகளில் இருந்து ரத்தக்கறை அகல்வதே இல்லை. மீண்டும் மீண்டும் கைகளைக் கழுவிக் கொண்டேயிருக்கும் மனப்பிறழ்வு நிலைக்கு அவள் செல்கிறாள்.
மதக் கலவரத்தின்போது தங்கள் உயிரைப் பாதுகாக்கச் சொல்லி சிலர் கதவைத் தட்டும் ஓசையும், உயிருக்குப் போராடும் முஸ்லிம் பெண் ஜன்னலில் நின்று மன்றாடும் சித்திரமும், லேடி மேக்பெத்தைப் போல தினம்தினம் மனதில் எதிரொலித்து பயமுறுத்திக்கொண்டே இருக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு பெண், என்ன செய்வாள்?

தலிபான்கள் அச்சுறுத்தலுக்கு இடையே வெற்றிகரமாக நடந்தேறிய ஆப்கானிஸ்தானின் அதிபர் தேர்தல்

Relief in Afghanistan after largely peaceful landmark poll

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு இடையே, அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது.  ஆப்கானிஸ்தானில் தற்போதைய அதிபர் ஹமீது கர்சாயின் பதவி காலம் முடிவடைகிறது. புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரை தொடர்ந்து 2வது இடத்தில் அஷ்ரப் கனி மற்றும் ஜல்மய் ரசூல் ஆகிய இருவரும் பஸ்துன் வாக்குகளை பெற முயற்சித்து வருகின்றனர் -
ஆப்கானிஸ்தானுடன் இரு தரப்பு ராணுவ ஒப்பந்தங்களை மேற்கொள்ள அமெரிக்கா முயற்சித்து வருகிறது.

வடிவேலுவின் அரசியல்; உதயநிதியும் அருள்நிதியும்!!


C728065F1A5DF242BCCE482DDD781வே.மதிமாறன்

சினிமாவில் பிசியாக இருந்தவரை வீட்டில் உட்கார வைத்துவிட்டு, வீட்டில் இருந்தவர்களை சினிமாவில் பிசியாக மாற்றி விட்டது முந்தைய தேர்தல்.
சரி, அவுங்கதான் கை விட்டுட்டாங்க. இவுங்களாவது அவரை வைத்து ஒரு படம் தயாரிக்கக் கூடாதா?
‘அது முடியாது. அதிக செலவாகும்’ என்றால்.. இவர்கள் நடிக்கிற படத்துல அவருக்கு வாய்ப்பாவது கொடுத்திருக்கலாம்.
தேர்தல் அரசியலை விட திரை அரசியல் மோசமா இருக்கு. நகைச்சுவை நடிப்பில் புதிய பரிமாணங்களை கொண்டு வந்த, வடிவேலு என்கிற கலைஞன் இல்லாத தமிழ் சினிமாவால் நஷ்டம் பார்வையாளர்களுக்குத்தான்.
அது எப்படியோ போகட்டும். வர இருக்கிற வடிவேலு நடித்த ‘தெனாலிராமன்’ படம் வெற்றியடைய வாழ்த்துகள்.
சரி. தேர்தல் பிரசச்சாரத்தில் அதிமுகவிலும் நடிகர்கள், நடிகைகள் இறங்கி தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள்.
திமுக விற்காக அந்தக் காலத்திலிருந்து இன்றுவரை நடிகர் குமரிமுத்து, சந்திரசேகர் போன்றவர்கள் எதிர்பார்ப்பில்லாமல் கட்சிக்காக பிரச்சாரம் செய்கிறார்கள். அதனாலேயே அவர்கள் பல பட வாய்ப்புகளை இழந்தும் இருக்கிறார்கள். கலைஞர் மீதும் கட்சி மீதும் ஆழ்ந்த பற்று இருப்பதால் அந்த நஷ்டத்தை அவர்கள் விரும்பி ஏற்றுக் கொண்டார்கள்.

காணாமல் போன மலேசிய விமான பல்ஸ் சிக்னல் கிடைத்துள்ளது


Chinese ship detects 'pulse signal' in search for missing Malaysia Airlines jet, report say கடந்த மார்ச் 8ம் தேதி 239 பயணிகளுடன் காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்ட சீனா கப்பல் ஒன்றுக்கு புதிய குறுப்பிடத்தக்க தகவல் (பல்ஸ் சிக்னல்) கிடைத்துள்ளதாக சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

சேதுசமுத்திர பணிகள் நிறைவேறும் சமயத்தில் தட்டி கொட்டிய Admk and BJP


சேது சமுத்திரத் திட்ட பணிகள் முடிவடையும் நேரத்தில் அதிமுக, பாஜகவால் தடைப்பட்டுள்ளது: டி.ஆர். பாலு பேச்சு
தஞ்சாவூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு பட்டுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட மதுக்கூர் ஒன்றியத்தில் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,
சேது கால்வாய் திட்டம் ரூ. 2,427 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டு பணிகள் முடிவடையும் நேரத்தில் ஜெயலலிதாவும், பா.ஜ.க.வை சேர்ந்தவர்களும் நீதிமன்றத்தில் பணிகள் நடைபெறாமல் இருக்கத் தடை வாங்கியுள்ளனர். இதனால், 10 தென் தமிழக மாவட்டங்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதுடன், 10,000 இளைஞர்களுக்குக் கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்பும் தடைப்பட்டுவிட்டது. தமிழகத்தின் நலனில் அக்கறையில்லாத முதல்வர். பா.ஜ.க.வும் இந்தத் தொகுதியில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர்.

பழனி மாணிக்கத்தின் ஆதரவாளர்கள் டி.ஆர்.பாலுவின் கூட்டத்தைப் புறக்கணிக்கின்றனர்?


தஞ்சையில் டி.ஆர்.பாலு வெற்றி உறுதி” எனப் பேசிய அவரது ஆதரவாளர்களுக்கு, தி.மு.க.வின் பழைய வரலாற்றுச் சம்பவங்களை எடுத்துக்கூறி பழனி மாணிக்கம் பதிலடி கொடுத்துள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி தேர்தல் பிரசாரத்தை இன்று கோவையில் தொடங்குகிறார். 12-ம் தேதி தஞ்சாவூரில் நடக்கும் பொதுக்கட்டத்தில் பேசுகிறார். தஞ்சைக்கு வரும் கருணாநிதியை வரவேற்பது குறித்தும், அடுத்தகட்ட தேர்தல் பிரசாரம் குறித்தும், தஞ்சை அறிவாலயத்தில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் பேசிய தி.மு.க. தேர்தல் பணிக்குழுச் செயலாளர் எல்.கணேசன், முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி உட்பட பலரும், “டி.ஆர்.பாலு வெற்றிபெறுவது உறுதி. இப்போதே வெற்றி பெற்றுவிட்டார்” என்று பேசி டி.ஆர்.பாலுவின் மனதைக் குளிர வைத்தனர்.
இதையடுத்துப்  பேசிய மாவட்டச் செயலாளரான பழனி மாணிக்கம், தி.மு.க.வில் அண்ணா காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

American இந்திய தூதர் தேவயானி ஆதர்ஷ் வீடு கட்டும் திட்டத்தில் வழக்கிலும் சிக்கினார்

அமெரிக்காவில் விசா மோசடியில் ஈடுபட்டதாக சர்ச்சையில் சிக்கிய இந்திய தூதர் தேவயானி கோப்ரகடே தற்போது மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆதர்ஷ் வீடு கட்டும் திட்டத்தில் தேவயானி கோப்ரகடேவிற்கு வீடு ஒதுக்கியது தொடர்பாக அவர் மீதும், அவரது தந்தை மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சி.பி.ஐ முடிவு செய்துள்ளது. வீடு ஒதுக்குவதற்காக தவறான ஆவணங்களை தேவயானி தாக்கல் செய்துள்ளது குறித்து சி.பி.ஐக்கு தற்போது தகுந்த ஆதாரம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. வடக்கு மும்பையில் உள்ள ஓஷிவாராவில் உள்ள அரசு குடியிருப்பில் தேவயானி கோப்ரகடேவிற்கு சொந்தமாக அடுக்கு மாடி குடியிருப்பு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிலையில் அவரது தந்தையான உத்தம் கோப்ரகடே அதை மறைத்து போலியான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார்.
எனவே கோப்ரகடே மற்றும் அவரது தந்தை மீது வரும் சில வாரங்களில் இவ்வழக்கில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. .maalaimalar.com/

கனிமொழி : அழகிரி உடல்நலம் பற்றி மட்டுமே விசாரித்தார் ! ஸ்டாலினிடம் அவ்வளவு பயமா?

மு.க.அழகிரியுடன் பேசியது என்ன என்ற விவரத்தை கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ளார். டெல்லி மேல்–சபை தி.மு.க. எம்.பி. கனிமொழி அளித்த பேட்டி விவரம் வருமாறு:–
மு.க.அழகிரி உங்களை சந்தித்தார். அதன் நோக்கம் என்ன?
பதில்:– அவர் ஒரு சகோதரராக என்னை வந்து சந்தித்தார்.
கே:– கட்சியில் இருந்து நீக்கப்பட்டது பற்றி விவாதித்தாரா?
ப:– உடல்நலம் பற்றி மட்டுமே விசாரித்தார்.
கே:– தேர்தல் கருத்து கணிப்புகளில் மற்ற கட்சிகளை விட அ.தி.மு.க.தான் அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?
ப:– தேர்தல் கருத்து கணிப்பில் முதலில் அ.தி.மு.க.வுக்கு 39 தொகுதிகள் கிடைக்கும் என்றார்கள். பின்னர் அது 18 அல்லது 20 ஆக குறைந்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதி பிரசாரம் செய்யத் தொடங்கியதும் அது மேலும் குறைந்து விடும்.
கே:– 2 ஜிஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக உங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுபோல் தி.மு.க. முன்னாள் மத்திய மந்திரிகள் மீதும் புகார் கூறப்பட்டது. இதனால் இந்த தேர்தலில் தி.மு.க.வின் மதிப்பு எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? வென்றால் பெருமை ஸ்டாலினுக்கு போகும் .தோற்றால் பெருமை அழகிரிக்கு போகும் ,எப்படிப்பார்த்தாலும் தந்தைக்கு வெற்றிதான் 

நஸ்ரியா நடிக்க குடும்பத்தினர் திடீர் தடை ? ஒரு நடிகையின் சுதந்திரம் ?

திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடிக்க குடும்பத்தினர் தடை விதித்திருப்பதால் படங்களில் நடிக்க வாங்கிய அட்வான்சை திருப்பி தருகிறார் நஸ்ரியா.‘நேரம்', ‘நய்யாண்டி', ‘ராஜா ராணி' படங்களில் நடித்துள்ள நஸ்ரியா நாசிம் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் முன்னணி இடத்தில் இருந்தார். இந்நிலையில் மல்லுவுட் நடிகர் பஹத் பாசிலுடன் நஸ்ரியாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ‘திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடிப்பேன். அதற்கு பஹத் ஒப்புதல் அளித்துவிட்டார்' என நஸ்ரியா கூறினார். ஆனால் இப்போது நிலைமை மாறி இருக்கிறது. திருமணத்துக்கு பிறகு நடிக்கக்கூடாது என்று நஸ்ரியாவுக்கு குடும்பத்தினர்கண்டிஷன்போடுகிறார்களாம். இதையடுத்து புதிய படங்கள் ஒப்புக்கொள்வதை நிறுத்தி வைத்திருக்கிறார். ஏற்கனவே நடிக்க ஒப்புக்கொண்ட படங்களுக்காக வாங்கிய அட்வான்சையும் அவர் திருப்பி தருகிறாராம்.பார்த்திபன் இயக்கும் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்‘ என்ற படத்தில் இலங்கை தமிழ் பெண்ணாக நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால் தற்போது அதிலும் நடிப்பாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது பற்றி பார்த்திபன் கூறும்போது, ‘'நஸ்ரியா நடித்தால்தான் அந்த வேடத்தை வைப்பேன். இல்லாவிட்டால் குறிப்பிட்ட கதாபாத்திரத்தை படத்திலிருந்து நீக்கிவிடுவேன்'' என்றா - tamilmurasu.org

Manobala to Vijayakanth : மலேசியா விமானத்தை எங்கெல்லாமோ தேடுறாய்ங்க ஆனா Google ள்ள தேடணும்னு யாருக்கும் தோணல்லியே? குடிச்சிட்டு பேசுறான்னு திட்ராய்ங்க


விஜயகாந்தை கலாய்த்து ட்வீட் போட்ட கையோடு டிலீட் செய்த மனோபாலா 
மலேய  விமானம் மாயமானது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்தை கலாய்த்து இணையதளத்தில் வெளியிடப்பட்ட புகைப்படத்தை நகைச்சுவை நடிகர் மனோபாலா ட்விட்டரில் வெளியிட்ட கையோடு டிலீட்டும் செய்துவிட்டார்.
இந்திய பெருங்கடலுக்குள் விழுந்த மலேசிய விமானத்தை தேடும் பணியில் பல விமானங்கள் மற்றும் கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க மலேசிய அரசு தேமுதிக தலைவர் விஜயகாந்தை அணுகியதாக ஃபேஸ்புக்கில் அவரை கலாய்த்தனர். மேலும் அவர் விமானத்தை கண்டுபிடிக்க விண்வெளிக்கு கிளம்பியதாகவும் காமெடி செய்தனர். இந்நிலையில் விஜயகாந்தை பற்றி வந்துள்ள புதிய காமெடியை நகைச்சுவை நடிகர் மனோபாலா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். விஜயகாந்த் கருப்புக் கண்ணாடி அணிந்து தன் முன்பு கூடியிருக்கும் மக்கள் மத்தியில் பேசுவது போன்ற புகைப்படத்தை எடுத்து அதில் 'பாருங்க மக்களே மலேசிய விமானத்த எங்கெங்கோ தேடுறாங்க. ஆனா GOOGLE-ல தேடனம்னு யாருக்குமே தோனல. இத நான் சொன்னா குடிச்சிட்டு பேசுறன்னு சொல்வாங்க' என்று வசனத்தை எழுதியுள்ளனர். இந்த புகைப்படத்தை ட்விட்டரில் போட்ட வேகத்தில் அதை மனோபாலா டிலீட் செய்துவிட்டார்  எங்கெல்லாமோ தேடுறாய்ங்க ஆனா Google ள்ள தேடணும்னு யாருக்கும் தோணல்லியே? குடிச்சிட்டு பேசுறான்னு திட்ராய்ங்க  tamil.oneindia.in  

சாவித்திரி முதலில் காதலில் வென்று பின் வாழ்க்கையில் தோற்றார்!


ஜெமினிகணேசன், 1947 வாக்கில் தாம்பரம் கிறிஸ்துவக் கல்லூரியில் பார்த்து வந்த ‘வேதியியல்’ பேராசிரியர் (கெமிஸ்ட்ரி புரபசர்) வேலையைவிட்டு ஓர் உறவினர் மூலம் எஸ்.எஸ்.வாசனுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இதன் மூலம் ஜெமினி ஸ்டுடியோவில் அவர் வேலைக்கு சேர்ந்தார்.
ஜெமினி ஸ்டூடியோ ‘கேஸ்டிங் டிபார்ட்மெண்டில்’ (நடிகர் – நடிகையரைத் தேர்ந்தெடுக்கும் இலாகா) பணிபுரிந்து கொண்டிருந்த£ர்.
அப்போது, தெலுங்கு நாயுடு இனத்தைச் சேர்ந்த ஒருவர், 12 வயதுடைய ஒரு சிறுமியை சினிமாவில் சேர்ப்பதற்காக அழைத்து வந்து அவரிடம் அறிமுகப்படுத்தி நடிப்பதற்கு ‘சான்ஸ்’ கேட்டார்.
பாவாடை தாவணி அணிந்திருந்த அந்தப் பாப்பாவிடம் பேசிப்பார்த்த கணேசன் (ஜெமினி) சொன்னது:–
ஜெமினி:– ‘‘முகம் நல்ல களையாகவும், கண்ணு துருதுருன்னும் இருக்கு. நல்லா பேசுது. பாத்தா சூட்டிகையா தெரியிது. ஆனா வயசுதான் ரெண்டுங்கெட்டானா இருக்கு. இந்த வயசுக்கேத்த வேஷம் வந்தா கூப்பிடுறேன். எதுக்கும் இன்னும் ஒண்ணு ரெண்டு வருஷங் கழிச்சி வந்து பாருங்க’’ என்று சொல்லி புகைப்படத்தை வாங்கி நோட்டுப் புத்தகத்தில் ஒட்டி குறிப்பு எழுதி வைத்தார்.
‘இரண்டுங்கெட்டான்’ வயதுடைய இதே பெண் இன்னும் ஆறு ஆண்டுகள் கழித்து 1953–ல் பருவம் பூத்துக் குலுங்கும் பதினெட்டு வயது அழகுக் கதாநாயகி ஆகி, அவருடன் அதே ஜெமினிகணேசன் நாயகனாக நடிக்கப்போகிறார் – படத்தில் மட்டும் அல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் காதலித்துக் கைப்பிடித்து ‘இளையதாரம்’ ஆக்கிக்கொள்ளப் போகிறார் என்பதை அப்பொழுது அவர் அறிந்திருக்கவில்லை.

சர்க்கரை நோயாளிக்கு கணையம், சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை

சர்க்கரை நோயால் பாதிப்படைந்த பெண் ஒருவருக்கு கணையம் மற்றும் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சைகள் அப்பல்லோ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புதுச்சேரியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி (52). கடந்த 21 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள இவர், தினமும் இன்சுலின் ஊசி போட்டு வந்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு அதிக சோர்வு ஏற்பட்டது. பரிசோதனையில் அவரின் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு வந்தபோது அவருக்கு சிறுநீரகம் மற்றும் கணையம் மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பது தெரியவந்தது. அவருடைய கண்களும் பாதிக்கப்பட்டிருந்தன.
ஆனால், உடல் உறுப்புகள் தானமாக கிடைக்காததால் தொடர்ந்து 8 மாதங்களாக அவர் டயாலிஸிஸ் செய்து வந்தார்.

அமெரிக்க போலீஸ் அதிகாரி டெல்லியில் கைது

அப்போது விமான நிலையத்தில் அதிகாரிகள் சோதனை செய்ததில் என்கார்னேசனின் பையில் 3 துப்பாக்கி குண்டுகள் இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, அவர் மீது ஆயுத சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வரும் 17 ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதால் நாட்டை விட்டு செல்ல அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் என்கானேசனுக்கு உதவுவதற்காக அவரை சந்தித்தனர். என்கார்னேசன் தவறுதலாக மறந்து துப்பாக்கி குண்டுகளை பையில் விட்டுவிட்டதாகவும், இந்தியாவில் இருக்கும் ஈரான் நாட்டு மாணவியை புதிதாக திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும், அவரை பார்ப்பதற்காகவே இந்தியா வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து நியூயார்க்கின் மேயர் பில் டி பிளேசியோ நேற்று கூறுகையில், தன் நாட்டு போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டது தனக்கு வருத்தமளிப்பதாகவும், இந்திய அதிகாரிகளால் என்கார்னேசன் நேர்மையாக நடத்தப்படுவார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார். .maalaimalar.com

அ.தி.மு.க.,வுக்கு ரயில்வே அபராதம் ! ஜெ., ஹெலிகாப்டர் இறங்க 16 மரங்கள் காலி

திருச்சியில் இன்று பிரசாரம் செய்ய வரும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின், ஹெலிகாப்டர் தரையிறங்க, 'ஹெலிபேடு' அமைக்க, 16 மரங்களை வெட்டியதை கண்டித்து, திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம், அ.தி.மு.க.,வுக்கு, அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது.திருச்சி லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளரும் தொகுதியின் எம்.பி.,யுமான குமாரை ஆதரித்து பிரசாரம் செய்ய, முதல்வர் ஜெயலலிதா, இன்று திருச்சி வருகிறார். பொன்மலை, ரயில்வே மைதானத்தில், மாலை 3:00 மணிக்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.இந்த இடத்தில் ஹெலிபேடு அமைக்க, அங்கு நின்றிருந்த 15 யூக்கலிப்டஸ் மரம் மற்றும் ஒரு வேப்ப மரம் வேரோடு அகற்றப்பட்டன. இதை அறிந்த ரயில்வே நிர்வாகம், அ.தி.மு.க.,வுக்கு அபராதம் விதித்துள்ளது.  நாடு முழுக்க சாலைகள் சரி இல்லை என்று பேசி வருகிறோம்...அதனால தான் எங்க எலிகாப்டரம்மா கக்கூசு போற இடங்கள்ள கூட ரோடு போடறாங்க..... இப்படியே எலிபேடா தமிழ்நாடு முழுக்க போட்டு முடிக்கிறப்ப நாடு முழுக்க சிமெண்ட் சாலைகள் ரெடி ஆகிடும்...எப்படி எங்க எலிகாப்டரம்மா அதிரடி திட்டம்...

வெள்ளி, 4 ஏப்ரல், 2014

தமிழகத்தில் முழுக்க முழுக்க ஜாதி ரீதியாக நடக்கும் தேர்தல் ! ஜாதிக்கே வெற்றி !

 நீ என்ன சாதி?- உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பெருமையடித்துக் கொள்கிறோம். மிக அதிகமான வாக்காளர்கள் நேரடியாக பங்கேற்கும் தேர்தல் முறை இதுதான் என்று பாடங்களில் எழுதி வைத்திருக்கிறார்கள். மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளால் நடத்தப்படும் ஜனநாயக அரசு என்று பிபிசியில் செய்தி வாசிக்கிறார்கள். கள்ள வாக்குகளைத் தடுத்துவிட்டார்கள். செல்லாத வாக்குகளை முற்றிலும் தவிர்த்துவிட்டார்கள். வாக்கு எண்ணிக்கையில் நடந்த குளறுபடிகள் குறைக்கப்பட்டுவிட்டன. இப்படி ஏகப்பட்ட விஷயங்களைத் தேர்தல் ஆணையம் செயல்படுத்திவிட்டது. ஆனால் இது போதுமா?
கடந்த சில தேர்தல்களாக வாக்குகளை பண்டமாற்று பொருளாக மாற்றிவிட்ட கலாச்சாரத்தை இனி எப்படித் தடுக்கப் போகிறார்கள்? தேர்தலில் சாதி, மதம் உள்ளே புகுந்து நடத்திக் கொண்டிருக்கும் அழிச்சாட்டியங்களை எப்படி நிறுத்தப் போகிறார்கள்? உண்மையிலேயே தகுதியான வேட்பாளர்கள்தான் நமக்குக் கிடைக்கிறார்கள்? சரியான வேட்பாளர்களைத்தான் தேர்ந்தெடுக்கிறோமா? இப்படி ஏகப்பட்ட கேள்விகள் தொக்கி நிற்கின்றன.  ஜாதிரீதியான கணக்கு கூடல் அடிப்படையே நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்க போகிறது ! பல குப்பைகள் வெற்றி பெறப்போகின்றன , எல்லோருக்கும் அதிர்ச்சி காத்திருக்கு 

டில்லி இமாம் காங்கிரசுக்கு ஆதரவு ! மதச்சார்பின்மை ஓட்டுக்கள் சிதறி விடக்கூடாது !

புதுடில்லி: வரவிருக்கும் தேர்தலில் முஸ்லிம் மக்கள் அனைவரும் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என டில்லி ஜூம்மா மஜீத் ஷாகி இமாம் சையீது அகம்மது புக்காரி கேட்டுள்ளார்.
இன்று அவர் டில்லியில் நிருபர்கள் சந்திப்பின் போது கூறியதாவது: அனைவரும் காங்கிரசுக்கு ஓட்டளிக்குமாறு நான் கேட்டு கொள்கிறேன். மோடியின் கடந்த கால செயல்பாட்டில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இது வரை எந்த அரசியல் கட்சியும் முஸ்லிம் மக்களுக்கு எவ்வித நன்மையும் செய்யவில்லை. அதே நேரத்தில் இன்றைய காலக்கட்டத்தில் நமக்கு மதச்சார்பின்மையே முக்கியம். எனவே மதச்சார்பு சக்திகளுக்கு எதிரானவர்கள் ஒன்றுபட வேண்டும். மதச்சார்பின்மை ஓட்டுக்கள் சிதறி விடக்கூடாது. தவறானவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.

மும்பை பெண் பத்திரிகையாளர் பலாத்கார வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டனை Mumbai gang rape: Death sentences for India rapists


சக்தி மில்ஸ் பாலியல் பலாத்கார வழக்கின் குற்றவாளிகளில் ஒருவர் (நடுவில்) | படம்: விவேக் பேந்த்ரா
சக்தி மில்ஸ் பாலியல் பலாத்கார வழக்கின் குற்றவாளிகளில் ஒருவர் (நடுவில்) | படம்: விவேக் பேந்த்ரா
மும்பை புகைப்பட பெண் நிருபர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
மும்பை சக்தி மில்ஸ் வளாகத்துக்கு செய்தி சேகரிக்கச் சென்ற புகைப்பட பெண் நிருபர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி, ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விஜய் ஜாதவ், (19), காசி்ம் பெங்காலி (21), முகம்மது சலீம் அன்சாரி (28), ஆகியோர் இந்திய தண்டனை சட்டம் 376(இ) பிரிவின் கீழ் (திரும்பவும் பலாத்கார குற்றம் புரிதல்) குற்றம் இழைத்துள்ளவர்கள் என முதன்மை செஷன்ஸ் நீதிபதி சாலினி பன்சால்கர் ஜோஷி அறிவித்தார்.
சக்தி மில்ஸ் வளாகத்தில் டெலிபோன் ஆபரேட்டரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இந்த மூவரையும் குற்றவாளிகள் என ஏற்கெனவே அறிவித்து அவர்களுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.
இந்த நிலையில், குற்றவாளிகள் மூவருக்கும் தூக்கு தண்டனை விதித்து, முதன்மை செஷன்ஸ் நீதிபதி சாலினி பன்சால்கர் ஜோஷி இன்று தீர்ப்பளித்தார்.
டெல்லியில் 2012-ல் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு இந்திய தண்டனை சட்டப்பிரிவு 376(இ) திருத்தப்பட்டு, அது அமலுக்கு வந்தது. இந்த பிரிவு அதிகபட்சமாக மரண தண்டனைக்கு வகை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

Helicopter ஜெ., : முதுகு வளைந்து குனிந்து ஆசி பெறும் மந்திரிகள் - எம்.எல்.ஏக்கள்! ( படங்கள் )

அ.தி.மு.க வேட்பாளர் பன்னீர்செல்வத்திற்கு வாக்கு சேகரிக்க சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பொதுகூட் டத்திற்க்கு ஆகாய மார்கமாக வந்தார் ஜெயலலிதா.அதற்கு முன் ஒத்திகை ஹெலிகாப்டர் வந்தது. பின் ஜெ., வந்தார். அவர் ஹெலிகாப்டரில் இருந்து இறங்குவதற்கு படிக்கட்டுகளை சுமந்து வந்து போட்டனர் சிறப்பு காவலர்கள். வரவேற்க,  கையில் பூக்களை சுமந்து சென்றனர் மந்திரிகளும்,எம்.எல்.ஏ க்களும். இடுப்பு வளைந்து குனிந்து ஒரு கட்டத்தில் சாஸ்டாங்கமாக ஜெ காலில் விழுந்து வணங்கினர் அனைவரும். தேர்தல் செலவு கணக்கில் சேரும் என்பதால் வேட்பாளர் மேடை ஏறவில்லை ஆனாலும் தனது பக்தியாக ஹெலிபேடிற்கு வந்து ஆசி வாங்கியவர் காலில் விழுந்தும் வணங்கினார். for more slavery photos

உலகின் ஓரே உலக நாயகன் சார்லி சாப்ளின் ! மனிதர்கள் மீது அவர் காட்டிய ஒரு வெகுளியின் அன்பு

1972 ஆண்டு ஏப்ரல் 10 நாள், வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கர் விருது சார்லி சாப்ளினுக்கு வழங்கப்பட்டது. அமெரிக்கவுடனான மோதலின் காரணமாக மிக காலதாமதமாக அவருக்கு இந்த விருது தரப்பட்டது.
ஓரே உலக நாயகன்.
அவரின் ஒரு ஷாட், ஒரே சமயத்தில் குழந்தைகளை குதூகளிக்க வைக்கும். உலகின் மாபெரும் மேதைகளையும் வசீகரிக்கும்.
மேதையாக சிந்தித்ததை, பாமரத்தனத்தோடு வெளிபடுத்திய உலகின் ஓரே கலைஞன்.
100 ஆண்டுகளை நெருங்கிய பிறகும் இன்றும் உயிர்ப்போடு இருக்கிறது எளிய மக்களின் மீதான அந்த வெகுளியின் அன்பு. அது காலத்தால் அழியாத அன்பின் கலை. ஒளி உள்ள வரை வாழப்போகும் ஒரே கலைஞன்.
அந்த மகா கலைஞனை இந்த நிகழ்ச்சியில் பார்க்கும்போது கண்கள் கலங்குவதை தவிர்க்க முடியவில்லை. mathimaran.wordpress.com

மலேசிய விமானம் கடத்தப்பட்டதாக பயணி அனுப்பிய எஸ்.எம்.எஸ். ! நம்புவதா இல்லையான்னு தெரியல


MH370 விமானம் கடத்தப்பட்டதாக பயணி அனுப்பிய எஸ்.எம்.எஸ். உலக நாடுகள் அதிர்ச்சி!
April 03
19:57 2014
மாயமான மலேசிய விமானத்தில் இருந்த ஒரு பயணி தான் ஒளித்து வைத்திருந்த ஐபோனில் இருந்து விமானம் இருக்கும் இடத்தை படம் பிடித்து தனது அமெரிக்க நண்பருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளதாக வந்த செய்தியை அடுத்து, உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மாயமான மலேசிய விமானத்தை அமெரிக்க ராணுவம் கடத்தி, Diego Garcia என்ற தீவில் ஒளித்து வைத்திருப்பதாக கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் கசிந்து வந்தன. இந்த தீவு இந்திய பெருங்கடலில் உள்ளது. அமெரிக்காவுக்கு சொந்தமான இந்த தீவில் அமெரிக்க போர்விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த தீவில்தான் மலேசிய விமானம் இருப்பதாக, அந்த விமானத்தில் பயணம் செய்த அமெரிக்க பயணி Phillip Wood என்பவர் தனது நண்பரும் பத்திரிகையாளருமான Jim Stone என்பவருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளதாக தகவல் பரவியுள்ளது. நம்புவதா இல்லையான்னு தெரியல

வாய்தா ராணியின் மூன்றாவது சுதந்திர போராட்டம் – கார்ட்டூ

ஜெயலலிதா மூன்றாவது சுதந்திரப் போராட்டத்தை நடத்துவதாக
இன்னாவோ கார் அடிமை நாஞ்சில் சம்பத் அருளியிருக்கிறார். அந்த ‘போராட்டங்களின்’ பட்டியலோடு முகிலனின் கேலிச்சித்திரம்!

நாவில் நஞ்சை வைத்திருக்கும் சம்பத்திற்கு அரசியல் ஒரு தொழில்தான் .ஆனால் என்ன அதைவிட விபச்சாரம் சற்று மேலான தொழிலாகும், ஜெயலலிதாவின் தற்போதைய போராட்டம் என்னவோ சுதந்திரம் பற்றியது என்பதில் ஓரளவு உண்மை உண்டுதான். சொத்துகுவிப்பு வழக்கில் மாட்டிகிடாமல் சுதந்திரமாக வாழ்வதற்கு அல்லது மேலும் மிரட்டி சொத்துக்களை பறிப்பதற்கு உரிய சுதந்திரம் தேவை அல்லவா. அதற்கு தகிடுதத்தங்கள் அல்லது நாஞ்சில் அகராதியில் போராட்டம் செய்வது காலத்தின் தேவையாகும். தர்மம் சற்று வலியது . எல்லாம் தெரிந்த புரட்சி தலைவி இதயதெய்வம் அம்மா அவர்களுக்கு வாழ்வெல்லாம் தேடிய சொத்துக்களை வெறும் அடிமாட்டு விலைக்கு பறிகொடுத்த மனிதர்களின் கண்ணீரின் பலம் தெரியாமல் போனது உண்மையில் ஒரு சோகம்தான், உப்பு தின்றவர் தண்ணீர் குடித்துதான் ஆகவேண்டும், இப்போதும் ஒரு நல்லவழி இருக்கிறது, பறித்த சொத்துக்களை அவரவர்களிடம் திருப்பி கொடுத்து மன்னிப்பு கேட்டு கொண்டு பிராயச்சித்தம் செய்து விடலாம், ஆனால் அதற்கும் ஆணவம் பேராசை இடங்கொடாது ?

October Metro ரயில் போக்குவரத்து: கோயம்பேடு ஆலந்தூர் இடையே மே 15-ல் சோதனை ஓட்டம் !


சென்னை கோயம்பேடு ஆலந்தூர் இடையே மே மாதம் 15-ம் தேதி மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து அக்டோபர் மாத இறுதியில் முதலாவது மெட்ரோ ரயில் போக்குவரத்தைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் ரூ.16,500 கோடி செலவில், இருவழித்தடங்களில் நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக கோயம்பேடு பரங்கிமலை இடையே மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால், பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையம், பறக்கும் ரயில் (எம்.ஆர்.டி.எஸ்.), புறநகர் ரயில், எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவற்றுக்கு மாறிச் செல்லும் வகையில் பிரமாண்டமாக கட்டப்படுவதால் கட்டுமானப்பணி தாமதமாகியுள்ளது. எனவே, கோயம்பேடு - ஆலந்தூர் இடையே 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு முதலாவது மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மதுரை ஆதீனம்: ஜெயலலிதாவின் தாயுள்ளம் என்னை ஈர்த்தது. வேற இன்னா இன்னா ஈர்த்ததுன்னு சொல்லு சாமி


சமுதாயம் நன்றாக இருந் தால்தான் சமயம் நன்றாக இருக்க முடியும். ஏன் ஆலயமும் ஆதீனமும் இருக்க முடியும்” என்று அதிமுக-வை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்யும் மதுரை ஆதீனம் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜான் தங்கத்தை ஆதரித்து நாகர்கோவிலில் பிரச்சாரம் செய்ய வந்திருந்த அவர், 'தி இந்து'வுக்கு அளித்த சிறப்புப் பேட்டி:
ஆன்மிகவாதியான நீங்கள், அதிமுக-வை ஆதரிப்பதோடு, பிரச்சாரமும் செய்கிறீர்களே?
மதுரை ஆதீனம் குருமகா சன்னிதானம் இந்த நாட்டின் குடிமகன். ஒரு வாக்காளனும்கூட. சமுதாயம் நன்றாக இருந்தால்தான் சமயம் நன்றாக இருக்க முடியும். ஏன் ஆலயமும் ஆதீனமும் இருக்க முடியும். இந்த நாட்டின் பாதுகாப்புக்கு என்ன செய்ய வேண்டும்? இந்த நாட்டில் ஆட்சிக் கட்டிலில் யாரை அமர்த்த வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் பொறுப்பும், கடமை உணர்வும், உரிமையும் இந்த ஆதீனத்துக்கு இருக்கிறது. அந்த நம்பிக்கையில்தான் அதிமுக-வை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறேன். சாமி ரொம்பதய்ன் குனியுது என்ன குடைச்சலோ ?

Jeya's Crowd secret தேர்தல் கமிஷன் 'ஸ்டிங் ஆபரேஷன் :அம்பலம்! முதல்வர் பிரசாரத்திற்கு திருப்பி விடப்படும் 'தனியார் பஸ்கள்


முதல்வர் ஜெயலலிதாவின், தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்கு, ஆட்களை அழைத்து வர, தனியார் பஸ்கள் கண்டிப்பாக வர வேண்டும்' என, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் (ஆர்.டி.ஓ.,க்கள்) கட்டாயப்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டு உண்மை என்பது, தேர்தல் கமிஷன் நடத்திய, 'ஸ்டிங் ஆபரேஷன்' மூலம், தெரிய வந்துள்ளது. அதைத் தொடர்ந்து, விதிகளுக்கு புறம்பாக, வெளியூர்களுக்கு செல்லும், தனியார் பஸ் உரிமையாளர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்டி, போக்குவரத்து கமிஷனருக்கு, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி உட்பட, 40 லோக்சபா தொகுதிகளிலும், அ.தி.மு.க., தனித்து போட்டியிடுகிறது. இத்தொகுதிகளில் பிரசாரம் செய்வதற்காக, முதல்வர் ஜெயலலிதா, ஹெலிகாப்டரில் ஒவ்வொரு ஊராக சென்று வருகிறார். அவர் செல்லும் ஊரில், ஒரு மைதானத்தில், பிரசார பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்தப் பகுதிக்கு, மாவட்டம் முழுவதும் இருந்து, தொண்டர்கள் வருகின்றனர். கூட்டத்தை அதிகமாக காட்ட வேண்டும் என்பதற்காக, கட்சியினர் வாகனங்களில், பொதுமக்களை அழைத்து வருகின்றனர். இதற்காக, தனியார் பஸ்கள், அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. வழக்கமான வழித்தடங்களில் ஓடும் தனியார் பஸ்களை, பிரசாரத்திற்கு ஆட்களை ஏற்றிச் செல்லும்படி, ஆர்.டி.ஓ.,க்கள் வற்புறுத்துவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தனியார் பஸ்கள் அனைத் தும், முதல்வர் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு, திருப்பி விடப்படுவதால், வழக்கமான வழித்தடங்களில் உள்ள கிராம மக்கள், பஸ் வசதியின்றி அவதிப்படுகின்றனர். இரு தினங்களுக்கு முன், கோவையில் முதல்வர் பிரசார கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு, தனியார் பஸ்களில், ஆட்களை அழைத்து வந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில், மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது. அம்மனுவில், 'தேர்தல் விதிகளுக்கு புறம்பாக, வழக்கமான வழித்தடங்களில், பஸ்களை இயக்காமல், முதல்வர் கூட்டத்திற்கு, ஆட்களை ஏற்றிச் சென்ற பஸ் உரிமையாளர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு உடந்தையாக இருந்த, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வலியுறுத்தியிருந்தனர்.

வியாழன், 3 ஏப்ரல், 2014

Charu Nivedita: அப்பாவிகளை மடக்கி கொள்ளை அடிக்கும் வங்கிகள்


உப்புப் பெறாத சமாச்சாரம் என்பார்கள் அல்லவா?  அப்படிக் கூட இல்லை…  நம் உடம்பிலிருந்து உதிரும் முடி இருக்கிறதல்லவா, அதற்குக் கூட லாயக்கில்லாத சமாச்சாரம் என் அன்றாட வாழ்வை நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.
யாரோ ஒரு பெண் அதிரம்மியமான குரலில் உங்களுக்கு ஆக்ஸிஸ் வங்கி க்ரெடிட் கார்ட் வேணுமா என்றார்.  சரி என்றேன்.  கிடைத்தது.  அதை நான் பயன்படுத்தாமல் வைத்திருந்தேன்.  ஒருநாள் ஏதோ ஒரு விமான டிக்கட் எடுக்க பயன்படுத்தித் தொலைத்து விட்டேன்.  டெபிட் கார்டில்தான் எல்லா வேலையையும் செய்வேன்.  அன்றைக்கு என் போதாத காலம் க்ரெடிட் கார்டில் செய்து விட்டேன்.  15,000 ரூ.  மாதா மாதம் பில் வந்தது.  மாதா மாதம் கட்டினேன்.  ஆனால் சில மாதங்களில் மறந்து போவேன்.  அப்படி மறந்து போவதெல்லாம் வட்டி போட்டு, வட்டிக்கு வட்டி வட்டிக்கு வட்டிக்கு வட்டிக்கு வட்டிக்கு வட்டி என்று இப்போது மாதம் கட்ட வேண்டிய தொகை பெரும் தொகையாகி விட்டது.  சரி, மொத்தமாகக் கட்டித் தொலைத்து இந்தக் கொடுமையிலிருந்து மீள்வது என்று முடிவு செய்து போன் செய்து கேட்டால் அது என்னை மனநோய் மருத்துவமனைக்கே அனுப்பி விடும் போல் தெரிகிறது.

பணத்தாசை பிடித்த இளையராஜாவின் கச்சேரிக்கு 2.5 லட்சத்தில் டிக்கெட் வாங்கிய அப்பாவி ரசிக


மதுரையில் நாளை மறுநாள் நடக்கும் இளையராஜாவின் சங்கீதத் திருநாள் நிகழ்ச்சியின் டிக்கெட்டை ரூ 2.5 லட்சம் கொடுத்து வாங்கியிருக்கிறார் ஒரு இசை ரசிகர். அவருக்கு இளையராஜாவே தன் கையால் இந்த டிக்கெட்டை வழங்கினார். மதுரை தமுக்கம் மைதானத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்டமாக ஒரு இசை நிகழ்ச்சியை நடத்துகிறார் இளையராஜா. அவருடைய மகன் கார்த்திக் ராஜா ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சி இது. இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் வேகமாக விற்பனையாகி வருகின்றன. இளையராஜாவின் சங்கீதத் திருநாள் என்ற தலைப்பில் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு ரூ 1 லட்சத்துக்கும் அதிகமாக விலைகொடுத்து டிக்கெட் வாங்குவோருக்கு இளையராஜாவே தன் கையால் டிக்கெட்டைத் தருவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, மதுரையைச் சேர்ந்த இளையராஜாவின் ரசிகர் ஒருவர் ரூ 2.5 லட்சம் கொடுத்து டிக்கெட் வாங்கியுள்ளார்.

முஷரப் அனுமதியோடு பாக். முழுவதும் ப்ரீயாக வலம் வந்தார் பின் லேடன்...

வாஷிங்டன்: முஷரப்பிற்குத் தெரிந்தே பாகிஸ்தான் முழுவதும் அல் கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் சுதந்திரமாக பயணம் மேற்கொண்டார் என கார்லோட்டா கால் என்ற பெண் பத்திரிக்கையாளர் தனது புத்தகத்தில் பரபரப்புத் தகவல்களை வெளியிட்டுள்ளார். கார்லோட்டா கால் என்ற பெண் பத்திரிக்கையாளர் பல ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் தங்கி இருந்து ‘தி நியூயார்க் டைம்ஸ்'க்கு செய்திகள் அனுப்பி வந்தார். அவர் தற்போது தி ராங் எனிமி: அமெரிக்கா இன் ஆப்கானிஸ்தான் 2001-2004 என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
அவரது புத்தகத்தில் பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடன் தங்கி இருந்த இடம் அப்போதைய அதிபர் முஷரப்புக்கு முன்னதாகவே தெரியும் என பரபரப்புக் கருத்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், நீதிமன்ற வழக்குகள் தொடர்ந்து நடந்தால் முஷாரப் காலத்தில் நடந்த பல மர்மங்கள் வெளிச்சத்திற்கு வரும்' என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், பாகிஸ்தானில் ஒசாமா பதுங்கி ஒளிந்து கொண்டு இருக்கவில்லை என்றும், அவர் சுதந்திரமாக நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டார் என்றும் பரபரப்புக் கருத்துக்களை தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார் கார்லோட்டா.

அழகிரி ஹிட் லிஸ்ட்: அடுத்து டி.ஆர். பாலு!


ஜெனிவா தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பது குறித்த காங்கிரஸ் முடிவு தெரிவிப்பதற்குள் டி.ஆர்.பாலு போன்றவர்கள், தி.மு.க. தலைவரிடம் தவறான தகவல்களைத் தெரிவித்து தி.மு.க. அமைச்சர்களை அவசர அவசரமாக ராஜினாமா செய்ய வைத்தனர். இந்த முடிவு மத்திய அமைச்சரான எனக்கே தெரியாது.
டி.ஆர்.பாலு என்ன எம்.ஜி.ஆரா? கருணாநிதியா? நினைத்த தொகுதிகளில் நிற்பதற்கு?
ஏற்கெனவே நின்ற ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் ஏன் நிற்கவில்லை? அங்குள்ள மக்களுக்கு தொகுதியில் நல்லது செய்திருந்தால் ஏன் வேறு தொகுதியைத் தேட வேண்டும்? இந்தத் தொகுதிக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்?
பழனி மாணிக்கத்தைத் தவிர தஞ்சாவூரில் கட்சிக்குள் உழைத்தவர்கள் வேறு யாருமில்லையா? டி.ஆர்.பாலு 10 கப்பல்களுக்குச் சொந்தக்காரர். அவரை சென்னையில் மாவட்டச் செயலாளர் தேர்தலிலே நாங்கள்தான் வெற்றிபெற வைத்தோம்.
அவர் எப்படி தேர்தலில் ஜெயிக்கப் போகிறார்? எவ்வளவு பணம் கொடுத்து தங்சையில் சீட் வாங்கினாரோ, தெரியவில்லை.
கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நாம் மேலே வர என்ன செய்ய வேண்டுமோ அதை நன்றாகச் சிந்தித்துச் செய்யுங்கள். இது நம்முடைய கட்சி. நாம்தான் தி.மு.க.. அப்புறம் எதற்குத் தனிக்கட்சி?
தனது தந்தை ஷாஜஹானை சிறை வைத்து ஔரங்கசீப் ஆட்சியைப் பிடித்ததுபோல தி.மு.க. தலைவர் கருணாநிதியை சிறைவைத்து அவரது பதவியைப் பிடிக்கச் சிலர் முயல்கின்றனர்.

மாயமான விமானம் ஆப்கானிஸ்தானில்: சொல்கிறது ரஷ்ய செய்தித்தாள்

A Russian media website is claiming that Malaysia Airlines Flight MH 370 was “located” near Kandahar, Pakistan.
A source told the website MK.ru that the plane is located on a “rural” road with a broken wing. It also claimed that “all passengers [are] alive and were divided to stay in “mud huts.”>MK.ru is considered a mainstream media outlet in Russia, but has a pro-Vladimir Putin stance.
The article didn’t elaborate too much further on the matter.“Eight days after the Boeing 777 vanished, The Independent has learnt that Malaysian authorities are seeking diplomatic permission to investigate a theory that the plane was flown to one of a number of Taliban strongholds on the Afghan border in North West Pakistan,” the paper added. The report was published just eight days after the plane went missing.
மாஸ்கோ: மாயமான மலேசிய விமானம் கடலுக்குள் விழவில்லை என்றும், பாகிஸ்தானில் இருப்பதாகவும் ரஷ்ய செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த 8ம் தேதி 227 பயணிகள், 1 விமானி, 1 துணை விமானி மற்றும் 10 சிப்பந்திகளுடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு சென்ற விமானம் மாயமானது. பின்னர் அது தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்துவிட்டதாகவும், அதில் பயணித்த அனைவரும் பலியாகிவிட்டதாகவும் மலேசியா அறிவித்துள்ளது.

வழக்கம் போல் ஜெ., வாய்தா கேட்டார் ! 5ம் தேதி ஆஜராக உத்தரவு


சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் வாய்தா வாங்குவது போல் சென்னையில் நடந்து வரும் வருமானவரி செலுத்தாத வழக்கிலும் ஜெ., இன்று ஆஜராகவில்லை. இதற்கிடையில் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ., வரும் சனிக்கிழமை பெங்களூரூ சிறப்பு கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
1991 -92 மற்றும் 1992-93 ஆண்டுகளில் ஜெ., மற்றும் அவரது தோழி சசி ஆகியோர் இணைந்து சசி என்டர்பிரைசஸ் நிறுவனம் நடத்தி வந்தனர் . இந்த நிறுவனம் தொடர்பான வருமானவரி தாக்கல் செய்யாத வழக்கு எழும்பூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கில் கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரி சென்னை எழும்பூர் கோர்ட்டில் தமிழக முதல்வர் ஜெ.,இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அரசு ஆடிட்டராக இருந்தவருக்கு விழுந்த அடி, சந்திரலேகா எம்.எல்.ஏவுக்கு கிடைத்த ஆசிட் வீச்சு வரிசையில் ஏதாவது கிடைக்க வாய்ப்பு இருக்குமா?  நீதிமன்றத்தையும் கூட ஒன்றுக்கும் ஆகாமல் ஆக்கிய பெருமை முதல்வரையே சேரும்

மாணவி கற்பழித்து கொலை; காதலனை அடித்துக்கொன்ற உறவினர்கள்

மாணவி கற்பழித்து கொலை;
காதலனை அடித்துக்கொன்ற உறவினர்கள் சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ளது மலையாலபட்டி கிராமம். இங்குள்ள கருங்காடு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி, மலைவாழ் மக்கள் சமூகத்தை சேர்ந்த இவர் விவசாய கூலிவேலை செய்துவருகிறார். இவரது மகள் சங்கீதா (வயது-15), நாமக்கல் மாவட்டம், மங்களபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11- வகுப்பு படித்து வருகிறார்.கந்தசாமியின் உறவுக்கார பையன் சின்னராசு (வயது-18) இவர் சேலம், வாழப்பாடி போன்ற வெளியூர்களில் கட்டிட கொத்து வேலைக்கு சென்றுவருகிறார். இவர் சங்கீதாவை காதலித்து வந்துள்ளார். இரண்டு குடும்பத்தினருமே உறவினர்கள் என்பதால் இதைப்பற்றி யாரும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.இந்த நிலையில், கடந்த 31-ம் தேதி பள்ளிக்கு சென்ற சங்கீதா மாலையில் வீட்டுக்கு திரும்பி வரவில்லை, அதே நேரத்தில், சின்னராசுவும் ஊரிலிருந்து காணாமல் போய்விட்டார். வழக்கமாக சின்னராசு வேலைக்கு போகும் இடங்களிளெல்லாம் போய் தேடிய உறவினர்கள் சின்னராசு-சங்கீதா இருவரும் ஓடிப்போய் விட்டதாக முடிவு செய்துகொண்டு அவர்களாகவே திரும்பி வரட்டும் பிறகு பார்த்க்கொள்ளலாம் என்று முடிவு செய்துகொண்டு காவல் நிலையத்தில் கூட புகார் கொடுக்காமல் இருந்துகொண்டனர்..> இந்த நிலையில், நேற்று மாலை நான்கு மணிக்கு சின்னராசு மட்டும் தனியாக ஊருக்கு வந்துள்ளார். அப்போது, கந்தசாமி மற்றும் அவரது உறவினர்கள் சங்கீதா எங்கே ? என்று கேட்டபோது, எனக்கு தெரியாது என்று சின்னராசு சொல்லியுள்ளார்.
பின்னர், அங்கிருந்த சிலர் சின்னராசுவை பிடித்து உதைத்து விசாரித்ததில், தான் வெளியூர் சென்ற அன்று பக்கத்திலிருக்கும் ஒரு கரட்டுப்பகுதியில் சங்கீதாவை பார்த்ததாக சொல்லியுள்ளார். அங்கிருந்த சங்கீதாவின் உறவினர்கள், சின்னராசுவை கூட்டிகொண்டு அவர் சுட்டிகாட்டிய மலைப்பகுதிக்கு கூட்டிபோய் பார்த்தபோது, ஒரு பாறையின் மீது மாணவி சங்கீதா பிணமாக கிடந்துள்ளார்.

ஜெயலலிதாவிடம் சொத்துக்களை பறிகொடுத்தவர்கள் கண்ணீர் வீணாகாது ! விரைவில் ஜெயிலு லலிதா

914 பட்டுசேலை மற்றும் 6,200 இதர சேலைகள்,ஜெயலலிதா உள்பட வழக்கில் குற்றவாளிகளாக இருப்போருக்கு சொந்தமான எண் 31ஏ, போயஸ் கார்டன், எண் 36 போயஸ் கார்டன் வீடு, சிறுதாவூர் பங்களா, பையனூர் பங்களா, ஐதராபாத் திராட்சை தோட்டம், கொடைக்கானல் பங்களா, கொடநாடு தேயிலை தோட்டம், சென்னையில் உள்ள கிண்டி, தியாகராய நகர், அண்ணாநகர், கொட்டிவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், வெட்டுவாங்கேணி, அரும்பாக்கம், பரமேஸ்வர்நகர், மந்தைவெளி. நுங்கம்பாக்கம், சாந்தோம், செய்யூர் உள்பட பல பகுதியில் உள்ள வீடு, பங்களா, அலுவலகங்கள்,ஒரு ரூபாய் சம்பளத்தில் 5000 கோடி ரூபாய் சொத்துக்கள் !


பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்காக நில உரிமையாளரை மிரட்டி சிறுதாவூரில் ஒன்றரை ஏக்கர் நிலம் எழுதி வாங்கப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் பவானிசிங் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக லஞ்சஒழிப்பு போலீசார் ஜெயலலிதா வீட்டில் பறிமுதல் செய்த 914 பட்டுசேலை மற்றும் 6,200 இதர சேலைகள், ஆடைகளின் மொத்த மதிப்பு 88 லட்சம் என்றும் பெங்களூர் தனி நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நீதிபதி ஜான்மைக்கல் டிகுணா முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

விஜயகாந்த் : 'ஏய் ராஜீவ்காந்தி' என அழைத்து கதிகலங்க வைத்தவர் வைகோ ! இத வேற வீரம்னு சொல்றானே பாவி ?


சிவகாசி: நாடாளுமன்றத்தில் ராஜீவ்காந்தியை.. ஏய் ராஜீவ்காந்தின்னு பெயர் சொல்லி கதிகலங்க வைத்தவர் அண்ணன் வைகோ என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் புகழாரம் சூட்டி வாக்கு சேகரித்தார். விருதுநகர் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் மதிமுக பொதுச்செயலர் வைகோவை ஆதரித்து சிவகாசி நாராயணபுரம் பகுதியில் விஜயகாந்த் பேசியதாவது: அதிமுக, திமுகவுக்கே மீண்டும் மீண்டும் வாக்களித்து உங்களுக்கு கிடைத்தது என்ன? எங்களுக்கு வாய்ப்பளித்துப் பாருங்கள். நாங்கள் அனைவரும் இந்தியாவை வல்லரசாக்க, நரேந்திர மோடியை பிரதமராக்க ஒன்று சேர்ந்திருக்கிறோம். நாடாளுமன்றத்தில்  விஜயகாந்த் வைகோவுக்கு வாக்கு கேட்பது பெருமிதம் முதன்முதலாக இஸ்லாமியர்களுக்காக வாஜ்பாயிடம் பேசியவர் வைகோ. அவருக்கு வாக்கு சேகரிக்க வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னைவிட வயதில் மூத்த அண்ணன் வைகோவுக்கு வாக்கு சேகரிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். 5 வி விஜயகாந்திற்கு முதல் எழுத்து வி. வைகோவிற்கு முதல் எழுத்து வி. விருதுநகருக்கு முதல் எழுத்து வி. வெற்றிக்கு முதல் எழுத்து வி. வாழ்த்துக்கு முதல் எழுத்து வி. இப்படி ஐந்து 'வி'யும் சேர்ந்து வைகோவை வெற்றி பெற வைக்கும். ம்ம் வீழ்ச்சிக்கும் வி எழுத்துதான் கூடவே வீணர்களுக்கும் வி எழுத்துதான் மனசுல வசுங்கள்  

Veltech ஆவடி வேல்டெக் ரங்கராஜன் ஆசியுடன் போலீஸ் அடக்குமுறை


யார் செத்தாலும் போஸ்டர் ஒட்டாதே!
கேட்டா ஜெயிலு, கிடைக்காது பெயிலு,
ஆவடி வேல்டெக் ரங்கராஜனின் ஆசியில் போலீசு ராஜ்ஜியம்

வேல்டெக் ரங்கராஜன்
ன்றைய சூழலில் தனியார் பொறியியல் கல்லூரிகள் எவ்வாறு செயல்பட்டு வருகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். அதிலும் குறிப்பாக சென்னை ஆவடி வேல்டெக் கல்லூரி தன்னளவில் ஒரு தனி அரசாங்கத்தை நடத்தி வருகிறது. மாணவர்கள் வகுப்பில் சக மாணவிகளுடன் ஏன் மாணவர்களுடன் கூட பேச முடிவதில்லை, இது போன்ற சூழலில் தான் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவை தான் பெற்றோர் மத்தியில் ஒழுக்கமாக காட்டப்பட்டு வருகின்றது. இதில் வேலை செய்யும் பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் போன்றோரின் நிலையும் கொத்தடிமைகளைவிட மோசமாக உள்ளது. அவர்களின் சான்றிதழ்களை நிர்வாகம் பறித்துக் கொண்டு மிரட்டியும் வருகின்றது. இந்த அடிமைத்தனத்திற்கு எதிராக சாந்தி என்ற பேராசிரியர் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி உதவியுடன் போராடினார், தற்போது நீதிமன்றத்திலும் கூட உறுதியாக போராடிக் கொண்டு இருக்கிறார்.

வைகோவின் வீட்டில் விஜயகாந்த்: அரசியலுக்கு அப்பாற்பட்ட சகோதர பாசத்தின் வெளிப்பாடு ! ரண்டு ஜமுக்காளத்தில் வடிகட்டின பொய்யர்களின் சந்தர்ப்ப வாத பாசம் வேஷம்

கலிங்கப்பட்டியிலுள்ள தனது வீட்டுக்கு வந்த விஜயகாந்தை வரவேற்கிறார் வைகோ. அருகில் வைகோவின் தாயார்.கலிங்கப்பட்டியிலுள்ள தனது வீட்டுக்கு வந்த விஜயகாந்தை வரவேற்கிறார் வைகோ. அருகில் வைகோவின் தாயார்.
திருநெல்வேலி மாவட்டம், கலிங்கப்பட்டியிலுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் வீட்டுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் புதன்கிழமை மாலை சென்றார். அரசியலுக்கு அப்பாற்பட்டு அங்கு நடைபெற்ற சந்திப்பில் சகோதர பாசம் வெளிப்பட்டது.
கலிங்கப்பட்டியிலுள்ள வைகோவின் வீட்டுக்கு முதல்வர் ஜெய லலிதா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் வந்து சென்றி ருக்கிறார்கள். 
வைகோ தாயிடம் ஆசி இது ஒண்ணுதான் குறைச்சல்  அட போங்கப்பா போரடிக்குது 

குஜராத்தில் இஸ்லாமியர்கள், தலித்துகள் காங்கிரஸுக்கே ஆதரவு: கருத்து கணிப்பு


அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் இஸ்லாமியர்கள் மற்றும் தலித்துகளில் பெரும்பான்மையானோர் காங்கிரஸ் கட்சிக்குத்தான் ஆதரவு என்று தெரிவித்திருப்பதாக சி.என்.என்.- ஐபிஎன் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலை முன்னிட்டு பல மாநிலங்களில் நடத்தப்பட்டதைப் போன்றே குஜராத்திலும் பல்வேறு அம்சங்களில் சி.என்.என்.- ஐபிஎன் கருத்து கணிப்பை நடத்தியது.  இதில் குஜராத் மாநிலத்திலேயே மோடி பிரதமராக 46% பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இஸ்லாமியர்களில் மிகப் பெரும்பான்மையோர் காங்கிரஸையே ஆதரிப்பதாகவும் இது சொல்கிறது. 80% இஸ்லாமியர்கள்.. குஜராத்தில் வாழும் 80% இஸ்லாமியர்கள் காங்கிரஸ் கட்சிக்கே வாக்களிப்போம் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் 15% இஸ்லாமியர்கள்தான் பாஜகவை ஆதரிப்போம் என்று கூறியுள்ளனர். தலித்துகளில் 70% இதேபோல் தீண்டாமைக் கொடுமை அதிகம் நிகழக் கூடியதாக சொல்லப்படும் இந்த மாநிலத்தில் தலித்துகளில் 70% காங்கிரஸை ஆதரிப்பதாக கூறியுள்ளனர். உயர்ஜாதி, பிற ஜாதியினர் பாஜகவுக்கு அதே நேரத்தில் உயர்ஜாதியினர், படேல் ஜாதியினர், இதர பிற்படுத்தப்பட்டோரில் 70%க்கும் அதிகமானோர் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பிரதேச ரீதியாக.. சவுராஷ்டிரா, தென் குஜராத் பாஜகவுக்கு முன்னணியாம். மத்திய குஜராத், காங்கிரஸுக்கு கை கொடுக்குமாம். வடக்கு குஜராத்தில் சொற்ப வித்தியாசத்தில் பாஜக முன்னணி பெறலாமாம்.
tamil.oneindia.in

சோர்ந்துவிட்ட திமுகவின் உண்மை தொண்டர்கள் ? ஜால்ராக்களை வைத்து அரசியல் செய்யும் ஸ்டாலின் ?

தமிழகத்தில், 1952, 1967ம் ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தல்களை தவிர, 1996ல் நடந்த தேர்தல் வரை, சட்டசபை தேர்தலும், லோக்சபா தேர்தலும் ஒரே நேரத்தில் தான் வரும். அதனால், எந்த கட்சி சட்டசபையை பிடிக்க இருந்ததோ, அந்த கட்சியின் கூட்டணிக்கே லோக்சபா தேர்தலிலும் அதிக இடங்களில் வெற்றி கிடைக்கும்
1996க்கு பின், மத்திய அரசு நிலையாக அமையாததால், தொடர்ந்து 1998லும், 1999லும் லோக்சபா தேர்தல்கள் வந்தன. அதன்பின், தமிழகத்தில் சட்டசபை, லோக்சபா தேர்தல்கள் தனித்தனியாக நடந்தன. 1999க்கு பின், மாநிலத்தை ஆளும் கட்சி, மூன்று ஆண்டுகள் பதவியில் இருந்த பின்னரே, லோக்சபா தேர்தல் வருகிறது. அதனால், லோக்சபா தேர்தல், மாநிலத்தை ஆளும் கட்சிக்கு அரையிறுதி தேர்வை போல் அமைந்து விடுகிறது. 1991 முதல், வழக்கமாக, தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் மாறி மாறி தான் தமிழகத்தில் ஆட்சியில் அமர்ந்து வருகின்றனர். அதனால், அரைஇறுதி தேர்வாக வரும் லோக்சபா தேர்தலில், அவை வெற்றி பெறுவது இல்லை. உதாரணமாக, 1998ல் வந்த லோக்சபா தேர்தலின் போது, தி.மு.க., ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி இருந்தன. அப்போது, பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்த அ.தி.மு.க., தான் வெற்றி பெற்றது. உஷாரான தி.மு.க., அடுத்து 1999ல், அ.தி.மு.க., சதியால் வந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து, அமோகமாக வென்றது.
அதற்கு பின், லோக்சபா தேர்தல்களில் தி.மு.க.,விற்கு தோல்வியே இல்லை. 2004ல், மாநிலத்தில் அ.தி.மு.க., ஆட்சியில் இருந்த போதும், 2009ல் மாநிலத்தில் தி.மு.க., ஆட்சியில் இருந்தபோதும், லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வே வென்றது.

நாத்திகர்களை பயங்கரவாதிகளாக அறிவித்துள்ள சவுதி மன்னர்

சவுதி மன்னர் அப்துல்லா கடவுள் மறுப்பாளர்களையும், நாத்திகவாதிகளையும் பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளதாக மத்திய கிழக்கு மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளுக்கான மனித உரிமை கண்காணிப்பகம் கவலை தெரிவித்துள்ளது.
அண்டை நாடான சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரில் கலந்து கொள்ள சவுதியில் இருந்து பலர் செல்கின்றனர். அங்கு அதிபருக்கு எதிராக போராடிவரும் குழுவினருடன் இணைந்து ஆயுதப்போராட்டத்தில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.
சிரியாவில் போராட்டம் நடத்தி விட்டு தங்கள் நாட்டுக்கு வரும் சவுதி வாசிகள் இங்கும் மன்னராட்சி முறைக்கு எதிராக புரட்சி மற்றும் போராட்டங்களில் இறங்கி விடக்கூடாதே... என்ற அச்சத்தில்தான் மன்னர் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கருதப்படுகிறது.
இந்த புதிய அறிவிப்பின்படி, சவுதியில் அல்லது எந்த வெளிநாட்டிலும் இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தை தழுவி நடைபெறும் ஆட்சியை எதிர்த்து கேள்வி கேட்பவர்கள், அதிருப்தி தெரிவிப்பவர்கள், போராட்டம் நடத்துபவர்கள் ஆகியோர் இறை மறுப்பாளர்கள் (நாத்திகர்கள்) என்று கருதப்படுவார்கள்.
பொது மக்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் இத்தகைய நாத்திகவாதிகளை பயங்கரவாதிகளாகக் கருதி, 3 ஆண்டு முதல் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க இந்த புதிய அறிவிப்பு வழிவகை செய்கிறது.

அழகிரி முன்னிலையில் இணைந்த அ.தி.மு.க.வினர்! அ.தி.மு.க.வினர் அழகிரி பக்கம் தாவியது ஏன் ?


அ.தி.மு.க. மேடைகளில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கானோர் கட்சியில் சேர்வதாக அ.தி.மு.க. தரப்பில் கூறுவது உண்டு. ஆனால், நேற்று மதுரையில் தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட அழகிரியை மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க.வினர் சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகேயுள்ள மேலக்கால் ஜெயலலிதா பேரவை துணைத் தலைவர் முருகன் தனது ஆதரவாளர்கள் 150 பேருடன் மதுரையில் உள்ள அழகிரி வீட்டுக்குச் சென்று அ.தி.மு.க. உறுப்பினர் கார்டுகளை ஒப்படைத்து அவருக்கு ஆதரவு தெரிவித்தார்.
இதுதவிர, குருவித்துரை ஊராட்சித் துணைத் தலைவர் பன்னீர், அ.தி.மு.க. விவசாய அணிச் செயலாளர் ஜெயபாண்டி ஆகியோர் தலைமையில் பெண்கள் உள்பட 60 பேர் அழகிரியைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.ஏங்க மதுரைல என்னங்க நடக்குது ? 

கலைஞர் பிரசாரத்தின் இடையில் அதிருப்தியாளர்கள் குறைகளையும் கவனிக்கவேண்டி உள்ளது , எல்லாம் ஸ்டாலின் உபயம் ?

தி.மு.க., தலைவர், கருணாநிதி தன் இரண்டாவது கட்ட பிரசாரத்தை, வரும், 5ம் தேதி கோவையில் துவக்குகிறார். அன்று முதல் ஒவ்வொரு தொகுதியிலும், பிரசாரம் மேற்கொள்ளும் போது, காலையில், கட்சியின் அதிருப்தியாளர்களை அழைத்து, 'பஞ்சாயத்து' நடத்தி, அவர்களை சமாதானப்படுத்தி, தேர்தல் பணியில் ஈடுபடும்படி முடுக்கி விட உள்ளார். மாலையில், தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்கிறார் என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.லோக்சபா தேர்தலில் போட்டியிடும், தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியலை, கருணாநிதி வெளியிடும் போது, சில வேட்பாளர்கள் மாற்றப்படலாம் என, பகிரங்கமாக அறிவித்தார். ஆனால், இதுவரை வேட்பாளர் யாரும் மாற்றப்படுவதற்கான அறிகுறிகள் இல்லை. 'இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், தி.மு.க., கூட்டணிக்கு வந்தால், வேட்பாளர்களை மாற்ற வேண்டிய நிலை நேரிடலாம் என்ற அர்த்தத்தில்தான், கருணாநிதி அப்படி கூறினார்' என, பொருளாளர் ஸ்டாலின் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், சில தொகுதிகளின் வேட்பாளர்கள் மீதான அதிருப்தி, தொடர்கதையாகவே உள்ளது. தி.மு.க.,விலிருந்து, 'டிஸ்மிஸ்' செய்யப்பட்ட, தென்மண்டல அமைப்பு செயலர் அழகிரி, தனக்கு பிடிக்காத, தி.மு.க., வேட்பாளர்களை தோற்கடிக்க வேண்டும் என, ஆதரவாளர்களிடம் கூறி வருவதால், தேர்தல் நேரத்தில், அந்த வேட்பாளர்களுக்கு எதிராக, பெரிய அளவில் உள்குத்து வேலைகள் நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

புதன், 2 ஏப்ரல், 2014

வடிவேலு: யாராவது படம் தயாரிக்க நினைத்தால் உடனே பயமுறுத்தி ‘வடிவேலுவையா போடுகிறீர்கள், -

சென்னை:‘நான் சினிமாவில் காமெடி செய்கிறேன். சிலர் வெளியில்
காமெடி செய்கிறார்கள்என்றார் வடிவேலு.வடிவேலு மீண்டும் நடிக்கும் படம் ‘தெனாலிராமன்‘. யுவராஜ் தயாளன் இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் பற்றி வடிவேலு நேற்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
கடந்த இரண்டரை வருடம் நடிக்காமல் ஓய்வு எடுத்தேன். அது எனக்கு தேவைப்பட்டது. எனக்கு வேதனை கிடையாது. மகிழ்ச்சிதான். யாராவது என்னை வைத்து படம் தயாரிக்க நினைத்தால் உடனே அவர்களை பயமுறுத்தி ‘வடிவேலுவையா போடுகிறீர்கள், அவ்வளவுதான்Õ என்று சொல்லி முடக்கினார்கள். தெலுங்கு, மலையாள படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது அதை ஏற்றிருந்தால் தமிழ் படத்திலிருந்து வடிவேலு மூட்டை கட்டிக்கொண்டுபோய்விட்டான் என்று கூறி இருப்பார்கள்.

தயாநிதி மாறன் வீட்டுக்கு 323 தொலைபேசி இணைப்புகளை ! அதுவும் உயர் சக்தி கொண்ட, மிகவும் வேகமாக இயங்கக்கூடிய லைன்கள்.

மத்திய சென்னை தொகுதியில் 323 என்ற எண் இப்போது அனைவருக்கும்
பரிச்சயம். அதென்னங்க 323?
போதைப் பாக்குக்கு 320ன்னு சொல்வாங்க, போலீஸ்காரங்க, வக்கீல்கள் 320னு (ஐ.பி.சி. 320) சொல்வாங்க. ஆனால், 323 என்றால் என்னன்னு மத்திய சென்னை தொகுதியைத் தவிர தமிழகத்தின் மற்ற தொகுதிகளில் உள்ள மக்களுக்கு அவ்வளாக தெரிய நியாயமில்லை!
323 பற்றி தெரிஞ்சக்கணுமா? அதற்காக நீங்க மத்திய சென்னை தொகுதிக்கு போய் தெரிந்து கொள்ளலாம். அல்லது, கீழே சொல்லப்போகும் விஷயத்தை படித்தாலே புரிந்து கொள்ளலாம்.
தி.மு.க.வில் கருணாநிதிக்குப் பின் அடுத்த தலைமைக்கு யார் பொருத்தமானவர்கள் என்பது தொடர்பாக மாறன் சகோதரர்களின் நாளிதழில் வந்த கருத்துக்கணிப்பால் கருணாநிதி குடும்பத்துக்கும், மாறன் குடும்பத்துக்கும் பெரும் பிரச்னை உருவானது. இதனால், மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் பதவியை தயாநிதி மாறன் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதற்குப் பின் அந்தத் துறைக்கு மாற்றப்பட்ட ஆ. ராசா 2-ஜி ஊழலில்  திட்டமிட்ட வைகையில் சிக்க வைக்கப்பட்டார் ்.
இதனால்தான், 2-ஜி ஊழலை மக்கள் மத்தியில் பிரபலமடையச் செய்ததில் மாறன் சகோதரர்களின் மீடியா முக்கியக் காரணம் எனக் கூறப்பட்டது.
அதற்குப் பின் இரு குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட சமாதானத்தால் கருணாநிதிக்கு இதயம் இனித்தது, கண்கள் பனித்தன. இதில் தயாநிதி மாறனுக்கு இரண்டு கண்களும் பனித்ததோ இல்லையோ, இதயம் நல்லாவே இனித்தது.
2-ஜி வழக்கில் ராஜாவும், கனிமொழியும் மாட்டிக்கொண்டதில் ஏக சந்தோஷமாக இருந்தார் அவர்.
இந்த நிலையில்தான் தயாநிதி மாறனுக்கு இனித்த இதயம், ‘டக் டக்’னு அடிக்கத் தொடங்கியது. அங்குதான் வருகிறது, 323!

ஆ.ராசா சொத்து மதிப்பு ரூ.3.75 கோடி ! ராசா : நேருக்கு நேர் ஜெயலலிதா விவாதிக்கத் தயாரா ?

நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல். | படம்: எம்.சத்தியமூர்த்திநீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல். | படம்: எம்.சத்தியமூர்த்தி
நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரது சொத்து மதிப்பு ரூ.3.75 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனுவைத் தாக்கல் செய்த முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, "ஜி அலைக்கற்றைப் பற்றி எல்லாம் ஜெயலலிதா தனது பிரச்சாரத்தில் பேசி வருகிறார். நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முன்பு 102 பக்க விளக்க அறிக்கையை அளித்தேன். அதற்கு அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி உறுப்பினர்களும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நஷ்டம் ஏற்படவில்லை. இதில், நேருக்கு நேர் ஜெயலலிதா விவாதிக்கத் தயாரா என சவால் விடுகிறேன்" என்றார்.
தனது பெயரில் உள்ள சொத்துகளின் மதிப்பு ரூ.1.77 கோடி என ஆ.ராசா குறிப்பிட்டுள்ளார். 2009-ல் வேட்புமனு தாக்கல் செய்தபோது, இதன் மதிப்பு ரூ.70 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
சொத்து மதிப்பு விவரம்:
ஆ.ராசா பெயரில் அசையும் சொத்துக்கள் - ரூ.1,45,90,709
ஆ.ராசா பெயரில் அசையா சொத்துக்கள் - ரூ.14,87, 419
ஆ.ராசா மனைவி பரமேஸ்வரி பெயரில் அசையும் சொத்துக்கள் - ரூ.93,93,597
ஆ.ராசா மனைவி பரமேஸ்வரி பெயரில் அசையா சொத்துக்கள் = ரூ.14,12,975
மகள் பெயரில் அசையும் சொத்துக்கள் - ரூ.18,15,400.
பரம்பரை சொத்துக்களில் அசையும் சொத்து - ரூ.41,03,540
பரம்பரை சொத்துக்களில் அசையா சொத்துக்கள் - ரூ.14,53,875
மொத்த சொத்து மதிப்பு - ரூ.3,75,42,880    tamil.thehindu.com/

மோடி அலையில் வன்புணர்வுக்கு உள்ளான குமுதம் விகடன் துக்ளக்......


பாஜக கூட்டணி
மிழக ஊடகங்களில் பெரும்பாலனவை அதிமுக, பாஜகவை ஆதரித்து செய்தியா, கருத்தா என்று இனம் காணா முடியாத வகையில் எழுதி வருகின்றன. அம்மாவுக்கு வாக்கப்பட்ட குமுதம் தேர்தல் கணிப்பின் முதல் பகுதியை வெளியிட்டிருக்கிறது. அதில் பெரும்பாலும் அதிமுக வெல்லுமாம். அதே போல துக்ளக்கும் அதன் நிருபர்களின் வைத்து தொகுதி நிலவரத்தை அதிமுகவிற்கு ஆதரவாக வெளியிடுகிறது.
வைகோ, விஜயகாந்த், மோடி, ராமதாஸ்
இன்று வந்த ஜூவியில் தமிழருவி மணியன் ஐந்து பக்கத்தில் காங்கிரசுக்கு நீதி உபதேசம் செய்கிறார். அடுத்த ஜூவியில் பெண்கள் சர்வேயாம். கண்டிப்பாக மோடியும், பாஜகவும் முதல் இடத்தில் இருக்கும் என்பதை வரும் சனியன்று தெரிந்து கொள்ளலாம். மோடியை கைவிடாத துக்ளக், அம்மாவைதான் முதன்மைப்படுத்துகிறது. கிராமங்களில் மோடி அலை இல்லை என துக்ளக் செய்தியாளர்கள் எழுதுகிறார்கள். அப்படி மோடி அலை வீசுவதாக எழுதிய ஜூவியை விட சோ-தான் மோடியை தமிழகத்தில் அறிமுகப்படுத்திய முதல் பிரபலம் என்பது உண்மை.

அன்புமணி மீது கடும் கோபத்தில் ராமதாஸ்! பிரசாரத்திற்கு வருவாரா ? எந்த நேரமும் அய்யா சீறி பாயலாம் ? பயத்தில் கட்சியினர்


டாக்டர் ராமதாஸ் அய்யா அவர்கள் மகன்
அன்புமணியுடன் பயங்கர கோபத்தில் உள்ளாராம் , சாதாரண கோபம் அல்ல . கட்சியை விட்டே நீக்கும் அல்லது தானே பிரசாரத்திற்கு போகாமல் விடக்கூடிய அளவும் வெறுப்பில் உள்ளார் . பாஜகவுடன் சேரும் முடிவில் ராமதாஸ் பெரிதாக விருப்பம் காட்டவில்லை அதிலும் விஜயகாந்துடன் சேர்வதென்பது ஒரு துளியும் அய்யாவால் ஏற்று கொள்ள முடியாத தீர்மானமாகும் .அவர் உருவாக்கிய ஜாதிமைபுகள் அடங்கிய சமுதாய கூட்டணி போதிய அளவு வாக்கு வீதத்தை பெற்று தரும் .கூடவே கட்சியின் தனித்தன்மை பேணப்படும் போன்ற கருத்துக்கள் எல்லாம் புறகணிக்க பட்டன.
 அன்புமணியின் விருப்படியே ஒருவேளை வென்றாலும் கட்சியின் மாம்பழ சின்னம் பறிபோக கூடிய ஆபத்து உள்ளது, ஆனால் அன்புமணியோ மாம்பழம் போனால் என்ன கட்சி போனால் என்ன எப்படியாவது மத்திய அமைச்சர் ஆக்கினால் போதும் என்று படு சுயநலமாக உள்ளார் . அய்யாவின் திட்டப்படி சமுதாய கூட்டணி அமைந்திருந்தால் நிச்சயமாக வாக்கு வீதம் மாம்பழ சின்னத்த்தை தக்க வைத்திருக்கும் , போதாக்குறைக்கு விஜயகாந்த் போன்ற ஒரு கேவலமான சினிமா மசாலாவுடன் எல்லாம் அரசியல் செய்ய வேண்டி இருக்கே என்ற கோபம் வேறு அய்யாவை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறது . சுருக்கமாக சொன்னால் அய்யா ராமதாசும் கலைஞர் அய்யாவும் ஒரே விதமான மன நிலையில் தான் உள்ளனர் . பதவி வெறி பிடித்த ஸ்டாலினும் அன்புமணியும் ஒரு சாபக்கேடான வாரிசுகளாகி விட்டனர் .அங்கே அன்புமணி இங்கே ஸ்டாலின் தந்தைகள் இருவரும் சோகத்தில் ?


ராமன்சிங், சிவராஜ்சிங் சவுகான் போலத்தான் மோடியும் ஒருவர்.. தாக்கும் அத்வானி


மும்பை: மூன்று முறை தொடர்ச்சியாக தேர்தலில் வென்றவர் மோடி மட்டும் அல்ல என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார். பாஜக மூத்த தலைவர் அத்வானி தனது தேர்தல் பிரச்சாரத்தை மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகரில் இருந்து நேற்று துவக்கினார்.  அப்போது அவர் கூறுகையில், தேர்தலில் தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றி பெற்றவர் மோடிஜி மட்டும் அல்ல. மேலும் இரண்டு பாஜகவினரான மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் ஆகியோரும் தொடர்ச்சியாக மூன்று முறை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். மோடி மத்தியில் ஆட்சி அமைத்து நாட்டின் முகத்தையே மாற்றுவார். பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டக் கோரி நான் 1990ம் ஆண்டு ரதயாத்திரை கிளம்பியபோது எனக்கு துணையாக வந்தவர் மோடி தான். பிரதமர் மன்மோகன் சிங் அதிகாரமிக்க பதவியில் இருந்தும் அதை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளார். நாங்களும் மூன்று புதிய மாநிலங்களை உருவாக்கினோம். ஆனால் தெலுங்கானா போன்று பிரச்சனை ஏற்படவில்லை. பொக்ரான் வெடிகுண்டு சோதனைக்கு பிறகு அமெரிக்கா பொருளாதார கட்டுப்பாடு விதித்தபோதிலும் கூட பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருந்தோம் என்றார். அத்வானியின் பிரச்சார கூட்டத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய பாஜக தலைவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்த
tamil.oneindia.in

ஆ.ராசா, கனிமொழி மீது விரைவில் குற்றப்பத்திரிகை ! 2ஜி ஸ்பெக்ட்ரம் திட்டமிட்ட சதி !

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பான ஊழல் வழக்கில், கலைஞர் டி.வி.க்கு சட்ட விரோதமான வழியில் ரூ.200 கோடி வந்ததாக கூறப்படும் விவகாரம் குறித்து அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி.யைச் சேர்ந்த சரத்குமார் உள்ளிட்டோரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.
இந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் மீது விரைவில் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட இருப்பதாக நேற்று அமலாக்கப்பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன. சட்ட விரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில் 2009-ம் ஆண்டுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட திருத்தம் தொடர்பான வழக்கில் ஜார்கண்ட் ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பின்படி, இந்த வழக்கு குறித்த சட்ட ஆலோசனைகள் பெறபட்டு இருப்பதாகவும், அதன் அடிப்படையில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் கூறின.  

சிலியில் நிலநடுக்கம்: ரிக்டரில் 8.2ஆக பதிவு: சுனாமி எச்சரிக்கை

தென் அமெரிக்க நாடான சிலியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.2 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து கடற்கரையோர மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில அருகே உள்ள பெரு மற்றும் ஈக்குவடார் நாடுகளுக்கும் இந்த சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 1 ஏப்ரல், 2014

மோடி வெற்றிக்கு ஜூவி நடத்தும் ஊடக யாகம் !

ஜூவி சர்வே
பச்சமுத்து, ஏசி சண்முகம், விஜயகாந்த் போன்ற சுயநிதிக் கல்லூரிகளை நடத்தும் கல்வி முதலாளிகளைக் கொண்ட பாஜக கூட்டணி, கிராமப்புறத்தில் கல்வி வசதி கொண்டு வரும் என்று நம்புகிறீர்களா? என்று கூட கேட்கலாமே திருமாவேலன்?
மோடிக்கு பகிரங்கமாக பனிக்கட்டி ராகம் வாசிக்கும் ஜூவி இதழ், அதன் ஆசிரியர் திருமாவேலன் குறித்தும் வினவில் விரிவாக எழுதியிருந்தோம். அந்தக் கட்டுரை ஆயிரக்கணக்கில் படிக்கப்பட்டதோடு, ஊடக உலகிலும் கவனிக்கப்பட்டு வரவேற்கப்பட்டது. திருமாவேலனது நடுநிலைமை ஊடக தர்மமும் சந்திக்கு இழுத்து வரப்பட்டது.
சைவாள் கஃபேயின் ஊசிப் போன தயிர்சாதம்
விகடனின் சினிமா செய்திகளை தவிர்த்து விட்டு பார்த்தால் அதன் அரசியல் செய்திகள், கட்டுரைகளை இணையத்தில் படிக்கும் வாசகர்களை விட வினவின் கட்டுரைகளை அதிகம் பேர் படிக்கிறார்கள் என்பது எங்கள் மதிப்பீடு. குறிப்பிட்ட கட்டுரைகள் அந்தந்த வலைத்தளங்களின் இடத்திலிருந்து, சமூக வலைத்தளங்களில் பகிரும் எண்ணிக்கையை வைத்துக்கூட இதை கண்டுபிடிக்கலாம். இப்படி ஜூவியின் நாடி, காவிக் கும்பலின் வெற்றிக்காக துடிக்கிறது என்ற உண்மையை, அதன் மோசடியான நடுநிலைமையையெல்லாம் கேள்விக்குள்ளாக்கியும் கூட இவர்களுக்கு சூடு சுரணை வரவில்லை. 

டிராபிக் ராமசாமி புகார்! ஜெ. கூட்டத்துக்கு திருப்பி விடப்படும் பஸ்கள்:! never underestimate the power of common man


கோவை: ஜெயலலிதாவின் பிரசார கூட்டத்திற்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் திருப்பி விடப்படுவதாக மார்க்சிஸ்ட் கட்சியினரும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியும் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற லோக்சபா தேர்தலையொட்டி கோவை, பொள்ளாச்சி தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். ஜெ. கூட்டத்துக்கு திருப்பி விடப்படும் பஸ்கள்: மார்க்சிஸ்ட், டிராபிக் ராமசாமி புகார்! இந்த கூட்டங்களில் கட்சியினர், பொதுமக்களை அழைத்து வர கோவையில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் சுமார் 200க்கும் அதிகமான அரசு, தனியார் பஸ்கள் அ.தி.மு.க. பொதுக்கூட்டத்துக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் வழக்கமான வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்கள் இன்று இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.ராமமூர்த்தி, தேர்தல் அலுவலரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

நரேந்திர மோடி தந்தை பெரியாருக்கு ஒப்பானவராம் விஜயகாந்த் உளறுகிறார்

vijaya-kanth-cartoon-vinavu
தமிழகத்தில் வெண்தாடி வேந்தர் என்று அழைக்கப்படுபவர் தந்தை பெரியார் அவர்கள் .அவரை போலவே முற்போக்கு சிந்தனை உள்ளவர் மோடி என்பதால் இனி அவரை  இந்தியாவின் வெண்தாடி வேந்தர் நரேந்திர மோடி என்று அழைக்கலாம் வெண்தாடி வேந்தர்  என்று

இப்ப சொல்லுங்க இந்த ஆளை என்ன செய்யலாம் ? போகிற போக்கைப் பாத்தால் இனி விஜயகாந்த் சினத்துடன் தொண்டர்களை சாத்தும் காட்சி போய் தமிழக மக்களே கேப்டனை வெறுப்புடன் சாத்தும் காட்சியை எதிர்பார்க்கலாம்!

உருகும் அழகிரி!! வீரபாண்டி ஆறுமுகம் இருந்திருந்தால் என்னை நீக்கியிருக்க முடியாது


சேலம்: வீரபாண்டி ஆறுமுகம் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் தம்மை யாரும் தி.மு.க.வில் இருந்து நீக்கியிருக்க முடியாது என்று மு.க. அழகிரி உருக்கமாக கூறியுள்ளார். சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆதரவாளர்களுடன் மு.க. அழகிரி நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மு.க. அழகிரி பேசியதாவது: மறைந்த வீரபாண்டியார் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் என்னை கட்சியை விட்டு யாரும் நீக்குவதாக அறிவித்திருக்க முடியாது. என்னை கட்சியில் இருந்து நீக்க வீரபாண்டியார் அனுமதித்திருக்க மாட்டார். இப்போது என்னை கட்சியில் இருந்து நீக்குவதாக சொல்லியிருக்கிறார்கள். ஆனால் எனக்கு எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை. என்னை கட்சியை வீட்டு நீக்குவதில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. என்னைப் பொறுத்தவரையில் எப்போதும் தி.முக.தான் எனக்கு எப்போதும் தலைவர் கருணாநிதிதான். அவரைத் தவிர வேறு யாரையும் ஒருபோதும் தலைவராக ஏற்க முடியாது. இவ்வாறு அழகிரி பேசினார்.
Read more at: http://tamil.oneindia.in

ஜெயலலிதா சொத்து குவிப்பு பட்டியல் தாக்கல் ! பெங்களூரு நீதிமன்றத்தில் 18 ஆண்டுகள் 200 க்கும் மேல் வாய்தா ?

பெங்களூருவில் நடைபெறுவதென்ன ? கிட்டத்தட்ட 18 ஆண்டுகாலமாக 200 முறைக்கும் மேல் வாய்தா வாங்கியிருக்கும் வழக்குதான் பெங்களூரில் நடைபெறும் சொத்து குவிப்பு வழக்கு என்று வடசென்னை திமுக பிரச்சாரத்தில் ஸ்டாலின் கூறினார்.
மேலும், பெங்களூரு நீ மன்றத்தில் அரசுத்தரப்பு வழக்குரைஞர் பவானி சிங், ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக வாங்கிக் குவித்துள்ள சொத்துக்களின் பட்டியலை தாக்கல் செய்துள்ளார்.
1. சென்னை அருகே வாலாஜாபாத்தில் 600 ஏக்கர்,
2. சிறுதாவூரில் 25 ஏக்கர் அளவில் ஒரு பங்களா.
3. நீலாங்கரையில் 2 ஏக்கர்.
4. கொடநாட்டில் 900 ஏக்கர் மற்றும் பங்களாக்கள். ( இங்கு ஒரு ஏக்கர் ரூ. 5 கோடி மதிப்பு இருக்கும் இதுவே 4 ஆயிரம் கோடியைத் தாண்டுகிறது. இது ஒரு உத்தேச மதிப்புதான்.)
5. காஞ்சிபுரத்தில் 200 ஏக்கர்.
6. கன்னியாகுமரியில் மீனங்குளம், சிவரங்குளம், வெள்ளங்குளம் பகுதியில் ஆயிரத்து 190 ஏக்கர்.
6. தூத்துக்குடி மாவட்டம்  திருவைகுண்டம் பகுதியில் 200 ஏக்கர்.
7. ரெவரே அக்ரோ பார்ம் பெயரில் 100 ஏக்கர்
8. 30 வண்ணங்களில் பலவித கார்கள், டிரக்கர்கள்
9. ஐதராபாத்தில்  திராட்சைத் தோட்டம்.

சமந்தா படத்தில் குத்து பாட்டுக்கு தமன்னா டான்ஸ்

படத்தில் குத்து பாடலுக்கு டான்ஸ் ஆடுகிறார் தமன்னா.
தமிழில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த தமன்னா, கடந்த 2 வருடத்துக்கு முன் திடீரென்று தமிழ் படங்களை ஒதுக்கிவிட்டு டோலிவுட் படங்களில் மட்டுமே நடித்து
வந்தார். பல படங்களில் அவருக்கு தமிழில் நடிக்க வாய்ப்பு வந்தும் ஏற்காமல் ஒதுக்கி வந்தார். கோலிவுட் ஹீரோ ஒருவருடன் ஏற்பட்ட மோதலால்தான் அவர்
தமிழ்படங்கள் ஏற்காமல் இருந்ததாக கூறப்பட்டது. இந்தநிலையில் கடந்த ஆண்டு ‘வீரம்‘ படத்தில் அஜீத் ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை மட்டும் ஏற்று நடித்தார்.
தற்போது ராஜமவுலி தமிழ் தெலுங்கில் இயக்கி வரும் ‘பாஹுபலி‘ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அனுஷ்கா ஹீரோயினாக நடிக்கிறார்

தங்கபாலு: திமுக, தேமுதிக-வுடனான கூட்டணி வாய்ப்பை சிலர் தடுத்துவிட்டனர்!

காங்கிரஸ் மூத்த தலைவர் கே.வி.தங்கபாலு.| கோப்புப் படம்.காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தனித்துப் போட்டியிடும் நிலையில், ’தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டும்.. இளைஞர்களுக்கு வழிவிட்டிருக்கிறோம்..’ என்று சொல்லி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.வி.தங்கபாலு போட்டியிடாமல் ஒதுங்கி இருக்கிறார். அவர் ’தி இந்து’வுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
இந்தத் தேர்தலில் நீங்கள் போட்டியிடாததற்கு காரணம் என்ன?
இந்த முடிவை நான் 2011-ம் ஆண்டே எடுத்து, மேலிடத்துக்கும் தெரிவித்து விட்டேன். கடந்த 2011-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிவாய்ப்பை இழந்தவுடன், தார்மிகப் பொறுப் பேற்று, மற்ற தலைவர்களுக்கு முன்மாதிரியாக என் பதவியை ராஜினாமா செய்தேன். காங்கிரஸில் உள்கட்சி ஜனநாயகம் வலுபெறாத வரை கட்சியில் பெரிய வளர்ச்சியை எதிர்பார்க்க முடியாது.

பிரேமலதா :மோடி பிரதமரானால் இந்தியா வல்லரசாகும் today's special


விழுப்புரம் நரேந்திரமோடி பிரதமரானால் இந்தியா வல்லரசாகும் என்று விழுப்புரத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் உமாசங்கருக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரேமலதா விஜயகாந்த் நேற்று மாலை விழுப்புரம் வந்தார். விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே நேற்று மாலை திறந்தவேனில் நின்றபடி, அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:–
வல்லரசு நாடாக...
நடைபெற உள்ள தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல் ஆகும். உங்களுடைய வாக்கினை நன்றாக சிந்தித்து பதிவு செய்ய வேண்டும். இதுவரை தமிழகத்தில் இரண்டு முனை போட்டி தான் நடைபெற்றுள்ளது. தற்போது 5 முனை போட்டி நடைபெறுகிறது. இதில் வெற்றி வேட்பாளர் உமாசங்கருக்கு நீங்கள் முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
நரேந்திரமோடி எப்படி குஜராத் மாநிலத்தை முதன்மை மாநிலமாக வைத்துள்ளாரோ அதேபோல் அவர் பிரதமரானால் இந்தியாவை லஞ்சம், ஊழல் இல்லாத வல்லரசு நாடாக மாற்றுவார்.

நடிகைக்கு நடந்த விபரீதம்! முதலிரவு காட்சி எடுப்பதாக கூறி ஆபாச படமெடுத்த அநியாயம்

சிவனின் சூலாயுதமென்பது சிலுவை?? ஆதிச்ச நல்லூர் ?


முனைவர் ஆர். தேவ அருணாச்சலம் அவர்கள் எழுதிய ‘தமிழர் நாகரீகம் தொன்மையும் உண்மையும்’[ தேவ ஒளி பதிப்பகம், 18-8[ பழைய எண் 213]சிந்தாதிரிப்பேட்டை, சென்னை] பலவகையிலும் தமிழ் வரலாற்றாய்வாளர்களுக்கு திறப்பாக அமையக்கூடிய நூல். தமிழ் வரலாற்றின் இதுவரை அறியப்படாத பல பகுதிகளை நோக்கியும் தன் ஆய்வின் ஒளியை வீசுகிறார் தேவ அருணாச்சலம் அவர்கள்.

சென்னை பல்கலையிலும் பின்னர் பெர்க்லி பல்கலையிலும் முனைவர் பட்ட ஆய்வை முடித்திருக்கும் தேவ அருணாச்சலம் அவர்கள் மண்ணியல், மொழியியல், உயிரியல் ஆகியவற்றிலும் பட்டம் பெற்றவர். இறையியலில் மேலதிக ஆய்வுசெய்துள்ளார். அறிவியல் கொள்கைகளின்படி விவிலியத்தை விளக்கும் இருபது நூல்களை அவர் எழுதியிருக்கிறார்.

திங்கள், 31 மார்ச், 2014

பிரியங்கா ராகுலை முந்திக்கொண்டு வருகிறார்.! விரைவில் கட்சியின் முக்கிய Post?

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியைமறைமுகமாக இயக்கும்
சூத்திரதாரியாக பிரியங்கா காந்தி வதேரா விஸ்வரூபமெடுத்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், துணைத் தலைவர் ராகுல் காந்தியும் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கும் நிலையில், அவர்களை பின்னணியில் இருந்து இயக்குவது பிரியங்கா காந்திதான் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் கூறுகின்றனர்.
கடந்த 2009-ம் ஆண்டு தேர்தல் வரை சோனியாவின் ரேபரேலி தொகுதி, ராகுலின் அமேதி தொகுதியில் மட்டுமே தனது கவனத்தைச் செலுத்தி வந்த பிரியங்கா காந்தி, தற்போது அதையும் தாண்டி தீவிரமாகச் செயல்படத் தொடங்கியிருக்கிறார்.
கடந்த ஜனவரி 7-ம் தேதி, ராகுலின் வீட்டில் நடைபெற்ற கட்சியின் உயர் தலைவர்கள் கூட்டத்தில் பிரியங்கா பங் கேற்றார். அப்போதிலிருந்து, கட்சியில் அவரின் பங்களிப்பு அதி கரிக்கத் தொடங்கியுள்ளது.