M R Stalin Gnanam : பரமபிதா இறுதியாகக் கட்டளையிட்டார். தம் இராட்சியத்தை விட்டு தப்பியொடும் அனைவரையும் கொல்லும்படிக்கு சீடர்களைப் பணித்தார்.
அதன்படியே பெண்கள், குழந்தைகள், வயோதிபர்கள் என்ற வேறுபாடுகள் இன்றி பலர் பரமபிதாவின் சீடர்களால் கொல்லப்பட்டனர்.
ஆனாலும் பரமபிதாவின் இராட்சியத்தில் இருந்த மூன்று லட்சம் ஜனங்களும் தென்சேனையை நோக்கி தப்பியோடியதை தடுக்கமுடியவில்லை.
தனக்கான இறுதிநாட்கள் நெருங்குவதை உணர்ந்தார் பரமபிதா.
பரமபிதாவிற்கு தனது உயிர் குறித்தும் தனது வம்சம் குறித்தும் கவலை அதிகரித்தது.
அப்போது அவர் தன் மனைவியை பார்த்து “நீ எழுந்து என் குமாரர்கள் மூவரையும் கூட்டி கொண்டு என்னை விட்டு விலகிப்போ. உன்னை பரமபிதாவின் மனைவியென்று யாரும் அறியாதபடிக்கு வேசம் தரித்து ஜனங்களோடு ஜனங்களாக போ. அங்கு ஏதாவது போஜனம் பண்ணுவீர்கள். அப்போதுதான் நீங்கள் உயிர் வாழ்வீர்கள் என்றார். அதற்கு அவள் பிரதியுத்தரமாக….
“என்தேவனே மனிதன் உயிர்வாழ்வது போஜனத்தினால் மட்டுமன்றி உம்முடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் என்று எழுதப்பட்டிருக்கிறதே” என்றாள். பரமபிதாவிற்கு எரிச்சல் உண்டாயிற்று. “அடியே உனக்கல்லடி உபதேசம் ஊருக்குத்தாண்டி” பரமபிதா உறுமினார்.
அதே கணப்பொழுதில் வானத்திலிருந்து வந்த அந்த இடியோசை கொத்தளங்களாலான அந்த கூரையை பிய்த்துக்கொண்டு தீச்சுவாலையாக வீழ்ந்தது. பரமபிதாவின் மனைவியும் குமாரத்தியும் அவ்விடத்திலேயே மாண்டார்கள். பரமபிதா விறைத்துப்போய் நின்றார்.
சனி, 18 மே, 2024
பரமபிதா இறுதியாகக தப்பியோடும் அனைவரையும் கொல்லும்படிக்கு சீடர்களைப் பணித்தார்.
5ம் கட்ட லோக்சபா தேர்தல் பிரசாரம் இன்று முடிகிறது! ஸ்டார் வேட்பாளர் லிஸ்ட் ‛‛ராகுலும் இருக்காரே’’..
tamil.oneindia.com - Nantha Kumar R : : 5ம் கட்ட லோக்சபா தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவுக்கு வருகிறது. இதன்மூலம் உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார் உள்பட 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் இன்றுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுகிறது. இந்த தேர்தலில் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்களான ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, பியூஸ் கோயல், லாலு பிரசாத் யாதவின் மகள் உள்பட பல முக்கிய தலைவர்கள் களத்தில் உள்ளனர்.
நம் நாட்டில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் என்பது அறிவிக்கப்பட்டது. தமிழகத்துக்கு முதற்கட்டமாக கடந்த மாதம் 19ம் தேதி தேர்தல் முடிந்தது. அதன்பிறகு ஏப்ரல் 26, மே 7, மே 13 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்து தேர்தல்கள் நடந்து முடிந்தன.
வெள்ளி, 17 மே, 2024
இந்தியா’வின் மாற்றுச்சிந்தனை பாஜகவை வீழ்த்தும்!
கலைஞர் செய்திகள் ராஜசங்கீதன் : 'The Hindu' நாளிதழில் 'Heady electoral rhetoric with a hegemonic ring to it' என்கிற தலைப்பில் ஆசிம் அலி எழுதிய கட்டுரை ஒரு முக்கியமான வாதத்தை வைக்கிறது.
’இந்தியா’வின் மாற்றுச்சிந்தனை பாஜகவை வீழ்த்தும்!
தேர்தலை ஜனநாயகத்தின் திருவிழா எனக் கூறியவர் நரேந்திர மோடி. ஜனநாயகத்துக்கு அது திருவிழாவோ இல்லையோ தெரியாது, ஆனால் பாஜகவுக்கு தேர்தல்தான் திருவிழா.
இந்திய ஜனநாயக வரலாற்றில் மக்கள் பிரச்சினைகள் தொடங்கி, ஜனாதிபதி தேர்வு வரை எல்லா விஷயங்களையும் தேர்தலை முன் வைத்து மட்டுமே தீர்மானிக்கும், இயக்கும், செயல்படும் கட்சி பாஜக மட்டும்தான்.
தர்மபுரியில் பட்டியலின இளைஞர் மீது தாக்குதல்!
nakkheeran.in : தர்மபுரி மாவட்டம் க.திண்டலானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர் அரசு மதுபானக் கடையில் தற்காலிக அட்டைப் பெட்டி சேகரிப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், கடத்தூரில் கடந்த 13-ஆம் தேதி மதுபானம் வாங்க வந்த கடத்தூர் காந்தி நகரைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் ஏழுமலைக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மது போதையில் இருந்த அந்த இளைஞர்கள் ஏழுமலை மீது சரமாரி தாக்குதல் நடத்தினர்.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தலில் கபில் சிபல் வெற்றி.. டிரெய்லர் தானாம்.. கொண்டாடும் காங்கிரஸ்
tamil.oneindia.com - Mani Singh S : டெல்லி: உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வெற்றி பெற்றுள்ளார்.
கபில் சிபல் 1066 வாக்குகள் பெற்று அவரைஎதிர்த்து போட்டியிட்ட மற்றொரு சீனியர் வழக்கறிஞரான பிரதீப் ராயை தோற்கடித்தார்.
லோக்சபா தேர்தல் நேரத்தில் கபில் சிபல் வெற்றி பெற்று இருப்பதை காங்கிரஸ் கட்சி கொண்டாடி வருகிறது.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வெற்றி பெற்றுள்ளார்.
கபில் சிபல் 1066 வாக்குகள் பெற்று அவரை எதிர்த்து போட்டியிட்ட மற்றொரு சீனியர் வழக்கறிஞரான பிரதீப் ராயை தோற்கடித்தார். பிரதீப் குமாருக்கு வெறும் 689 வாக்குகளே கிடைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மம்தா பானர்ஜி : இந்தியா கூட்டணி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பேன்
மாலை மலர் : பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசை தோற்கடிக்க நாட்டின் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கின.
இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகளை பிரித்து கொடுப்பதில் காங்கிரஸ் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டது.
இந்த சிக்கலால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி மேற்கு வங்காளத்தில் தனித்து போட்டி என அறிவித்தார்.
இதனால் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ்- காங்கிரஸ்- பா.ஜனதா இடையே முத்தரப்பு போட்டி நிலவுகிறது.
சவுக்கு சங்கருடன் தொடர்பில் இருந்த திமுக அமைச்சர்கள்!
மின்னம்பலம் - Aara : பெண் காவலர்களை இழிவுபடுத்தி பேட்டி அளித்த வழக்கில் கைது செய்யப்பட்டு மேலும் பல வழக்குகளிலும் கைதாகியிருக்கிறார் யு ட்யூபர் சவுக்கு சங்கர்.
அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் யார் என்று போலீஸ் விசாரணை செய்து வருகிறது.
ஏற்கனவே சவுக்கு சங்கரின் செல்போன், லேப்டாப் மற்றும் அவரது அலுவலகத்தில் சோதனை இட்ட போது கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் சங்கரோடு வழக்கமான தொடர்பில் இருந்தவர்கள் யார் யார் என்றும், அவருடன் தகவல் பரிமாற்றம் செய்து கொண்டவர்கள் யார் யார் என்றும் போலீஸாருக்கு தெரியவந்தது.
வியாழன், 16 மே, 2024
125 கோடி மதிப்பு . . . பையன் மாதிரி வளத்தோம்; சாப்ட்வேர தூக்கிட்டு ஓடிட்டான் சார் - மதுரையில் பரபரப்பு
tamil.asianetnews.com - Velmurugan s : பைக், கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றுவதற்கான திட்டத்தில் எங்களது மென்பொருளை திருடிவிட்டு ஊழியர் தலைமறைவாகி விட்டதாக மதுரையில் ஒரு தம்பதி புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
A private company has filed a complaint against its employee for stealing software worth Rs 20 lakh in Madurai vel
பிரபாகரனை உயிருடன் ஒப்படைக்குமாறு அமெரிக்கா வலியுறுத்தியது!!- விமல் வீரவன்ச
இலங்கை செய்திகள்
பிரபாகரனை உயிருடன் ஒப்படைக்குமாறு அமெரிக்கா அப்போதைய அரசாங்கத்திடம் வலியுறுத்தியது!!-
விடுதலை புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு கொண்டு வராமலிருந்தால் தென்னாசியாவில் தமிழீழம் தோற்றம் பெற்றிருக்கும்.
அது இஸ்ரேல் போல் மாற்றமடைந்திருக்கும்,காஸாவின் இன்றைய நிலை எமக்கு ஏற்பட்டிருக்கும்.
புதன், 15 மே, 2024
மீண்டும் கைதாகும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி? அன்று குஷ்பு... இன்று ராதிகா
மின்னம்பலம் - Aara : அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கும் திமுகவைச் சேர்ந்த பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் ஒரு சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவியது.
தமிழ்நாடு ஆளுநர் ரவி பற்றியும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பற்றியும் மேலும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான நடிகை குஷ்பு பற்றியும் மிக அவதூறான ஆபாசமான விமர்சனங்களை பொது மேடையில் வைத்தார் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.
இதையடுத்து பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது காவல் துறையில் புகார் கொடுத்தார். மேலும் நடிகை குஷ்புவும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தன்னை பற்றி பேசிய தரக்குறைவான வார்த்தைகளை சுட்டிக்காட்டி தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலினுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்தார்.
கொள்கை அறம் அற்றவர்களின் ஒரே ஒரு புகலிடம் திராவிட ஒவ்வாமை!
எங்கெங்கோ இருந்த இசங்கள் பலவற்றையும் இங்கே இறக்குமதி செய்து,
அவற்றைப்பற்றியெல்லாம் விரிவான உரையாடல்களை முன்னெடுத்தன.
எங்கோ லத்தீன் அமெரிக்காவில் நடந்துகொண்டிருந்த இலக்கியப் போக்குகளை எல்லாம்,
தமிழின் மீது ஏற்றி ஓயாது உரையாடிய வண்ணமிருந்தன.
ரியலிசம் சர்ரியலிசம் மேஜிகல்ரியலிசம் மார்டனிசம் போஸ்ட்மார்டனிசம் நியோபோஸ்ட்மார்டனிசம் என்று நீளும் அந்த இசங்களின் வரிசையில்,
ஒருநாளும் பெரியாரிசம் என்பது முற்றமுழுதான பேசுபொருளாக இருந்ததில்லை.
பெரியாரிசத்தைப் பற்றி எப்போதாவது முனகிய வேளைகளிலும் அதைப்பற்றிய எதிர்மறையான உரையாடல்களையே முன்வைத்தார்கள்.
சவுக்கு சங்கர் மீதுதான் கேஸ்.. பெலிக்ஸ் என்ன பண்ணாரு? ரிமாண்ட் எதுக்கு? வழக்கறிஞர் கேள்வி!
காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், யூ-டியூபர் சவுக்கு சங்கர், தேனியில் கைது செய்யப்பட்டார். இதில் பேட்டி எடுத்த யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டு அதை வெட்டாமல் ஒளிபரப்பியது சர்ச்சையானது. அவருக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகாரில் யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டார்.
மும்பை ராட்சத விளம்பரப் பலகை விழுந்து 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 74 பேர் படுகாயமடைந்து
மாலை மலர் : மும்பையில் நேற்று (மே 13) வீசிய பலத்த காற்றால் ராட்சத விளம்பரப் பலகை பெட்ரோல் நிலையத்தின் மீது விழுந்து விபத்துக்கு உள்ளானதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 74 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மழை மற்றும் பலத்த காற்று காரணமாக பெட்ரோல் நிலையம் அருகே சுமார் 150 க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒதுங்கியிருந்தன.
அந்த சமயத்தில் அருகில் நிறுவப்பட்டிருந்த ஈகோ மீடியா என்ற நிறுவனத்தின் 250 டன் எடை கொண்ட விளம்பரப் பலகை விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சவுக்கு சங்கர் கோடீஸ்வரன் ஆனது எப்படி? மகனுக்கு 2 ஆயிரம் கொடுக்க வழியில்லை என்ற கூறிய...
தோழர் நிலவு மொழி (சங்கரின் முன்னாள் மனைவி) அவர்களின் பதிவு.
"சங்கரின் கைது திட்டமிடப்பட்டது, மனித உரிமைக்கு எதிரானது. சாதாரண மக்கள் vs வொயிட் காலர் கிரிமினல்ஸ், அரசியல்வாதிகள், அல்லக்கைகள் சிறையை எதிர்கொள்வதற்கும் வித்தியாசம் உண்டு. சிறை அவர்களுக்கு வழங்கும் அடையாளமும், சாதாரண மக்களுக்கு வழங்கும் அடையாளமும் பெருமளவில் மாறுபடும்.
ஊழலுக்கு எதிராக அடையாளம் காட்டிக்கொண்ட சங்கரின் இன்றைய சொத்து மதிப்பு என்ன? எனக்கு தெரிந்த சங்கருக்கு மாத சம்பளம் 35 ஆயிரம். தினமணில வந்த மாத 10,000₹ சேர்த்து என்னோட டெலிவரி செலவுக்கு வைச்சது.
மாலதிக்கு பத்துகோடி மதிப்புள்ள சொத்து வாங்கிக்கொடுப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு தான், எனது மகனிற்கு 2000₹ வழங்கமாட்டேன் என நீதிமன்றத்தில் நின்றான். திண்ணைல கிடந்தவனுக்கு திடுக்குனு கல்யாணம் ஆன மாதிரி, இன்னைக்கு சங்கரோட கார் மதிப்பு மட்டுமே பல இலட்சங்கள்.
செவ்வாய், 14 மே, 2024
யார் அடுத்த பிரதமர் என்பதை ஜெகன்மோகன் ரெட்டியும், நவீன் பட்நாயக்கும் தீர்மானிக்கப் போகிறார்களா?
மின்னம்பலம் -vivekanandhan : ஆந்திரா, ஒடிசா இந்த இரண்டு மாநிலங்களில் எந்த கட்சி வெற்றி பெறப் போகிறது என்பது நாடு முழுதும் முக்கியமாக கவனிக்கப்படுகிறது.
இந்தியாவில் மத்தியில் எந்த கூட்டணி ஆட்சி அமைக்கப் போகிறது என்பதைத் தீர்மானிப்பதில் இந்த இரண்டு மாநிலங்களின் வெற்றி யாருக்கு என்பது முக்கியமான காரணியாக இருக்கும் என்று அவதானிக்கப்படுகிறது.
ஆந்திராவிற்கும், ஒடிசாவிற்கும் இந்த தேர்தலில் உள்ள ஒற்றுமை என்னவென்றால்,
இரண்டு மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெறும் தொகுதிகள் தவிர்த்து மற்ற கட்சிகள் வெல்லும் தொகுதிகள் எந்த கூட்டணிக்கு ஆதரவாக மாறப் போகிறது என்பது தெரியாமல் இருப்பது தான்.
இரண்டு மாநிலங்களிலும் இந்தியா கூட்டணியில் இல்லாத மாநிலக் கட்சிகளே செல்வாக்கு செலுத்துகின்றன. ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும்,
ஒடிசாவில் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் கட்சியும் ஆளுங்கட்சிகளாக
இருக்கின்றன. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இந்த மாநிலங்களின்
பெரும்பான்மை தொகுதிகளை வென்ற கட்சிகளாக இக்கட்சிகளே இருக்கின்றன. இரண்டு
கட்சிகளுக்கும் எதிர் தரப்பில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி உள்ளது.
புலிகள் மீதான தடை 5 ஆண்டுகள் நீட்டிப்பு
தினமலர் ; புதுடில்லி:இந்தியாவில், விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை, மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் நீட்டித்துள்ளது.
இலங்கையில், தனி நாடு கேட்டு, ஆயுதப் போராட்டம் நடத்தி வந்த, விடுதலைப் புலிகள் அமைப்பினர், 1991ல், நம் நாட்டின், முன்னாள் பிரதமர் ராஜிவை படுகொலை செய்தனர்.
அதன் பின், நம் நாட்டில், புலிகள் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில்,
புலிகள் அமைப்பின் தலைவர், பிரபாகரன், 2009ல், இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்ட பின், இலங்கையில், அவர்களது நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தன.
Red Pix பெலிக்ஸ் ஜெரால்டுக்கு மே 27-வரை ரிமாண்ட்!
மின்னம்பலம் - Selvam : சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு மே 27-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி திருச்சி நீதிமன்றம் இன்று (மே 13) உத்தரவிட்டுள்ளது.
பெண் காவலர்களையும், காவல்துறை உயரதிகாரிகளையும் அவதூறாக பேசி ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலுக்கு சவுக்கு சங்கர் பேட்டி கொடுத்திருந்தார்.
இதுதொடர்பாக சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தற்போது அவர் கோவை சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளார்.
இந்த பேட்டியை ஒளிபரப்பிய பெலிக்ஸ் ஜெரால்டு முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
திங்கள், 13 மே, 2024
நாகப்பட்டினம் எம்பி செல்வராஜ் காலமானார்... அரசியல் கட்சி தலைவர்கள் அதிர்ச்சி
tamil.asianetnews.com Ajmal Khan : இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினரும், நாகபட்டினம் நாடாளுமன்ற உறுப்பினருமான எம் செல்வராசு எம் பி (67) இன்று அதிகாலை காலமானார். உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சென்னை மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினரும், நாகபட்டினம் நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர். எம் செல்வராசு எம் பி (67) இன்று காலமானார்.
எம் செல்வராசு திருவாரூர் மாவட்டம். நீடாமங்கலம் ஒன்றியத்தில் உள்ள கப்பலுடையான் என்ற ஊரில் வாழ்ந்து வந்த ஏழை விவசாயி முனியன் - குஞ்சம்மாள் தம்பதியரின் மகனாக 1957 மார்ச் 16 ஆம் தேதி பிறந்தவர்.
ஒரே மேடையில் இந்தியா கூட்டணி தலைவர்கள்? மாற்றி யோசிக்கும் ஸ்டாலின்
மின்னம்பலம் - Aara : டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைவரும் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பெயிலில் வந்து பிரச்சாரம் செய்யும் காட்சிகள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
”மே 10 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறையின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்
டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால். அவர் நேற்று மே 11ஆம் தேதி டெல்லியில் தனது கட்சித் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
ஞாயிறு, 12 மே, 2024
மம்தா பானர்ஜி : ஆளுநரின் “முழு வீடியோவையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்; அனந்த போஸ் இனியும் தொடரக்கூடாது”
கலைஞர் செய்திகள் - Prem Kumar : இந்தியா ஆளுநர் மாளிகை வெளியிட்டது எடிட் செய்யப்பட்ட வீடியோ. தனக்குப் பென் டிரைவ் மூலம் முழு வீடியோ வந்திருப்பதாகவும் அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் ஆளுநராக இருப்பவர் சி.வி.அனந்த போஸ். இவர் அம்மாநில அரசுக்கு தொடர்ந்து பல்வேறு இடையூறு கொடுத்ததன் மூலம் நாடு முழுவதும் பிரபலமானவராக அறியப்பட்டவர். இவர் மீது ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் பெண் ஒருவர் கடந்த மே 2ஆம் தேதி, ஆளுநர் மாளிகை வளாகத்தில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் புகார் ஒன்றை கூறினார்.
நாடு முழுவதும் இந்தியா கூட்டணி அலை" - ராகுல்
மின்னம்பலம் -Selvam : “நாடு முழுவதும் இந்தியா கூட்டணி அலை” – ராகுல்
நாடு முழுவதும் இந்தியா கூட்டணி அலை வீசுகிறது என்று காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (மே 11) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இன்றோடு நான்காம் கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்துள்ளது. மே 13-ஆம் தேதி நான்காம் கட்ட தேர்தல் 96 தொகுதிகளில் நடைபெற உள்ளது.
இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று மகாராஷ்டிரா மாநிலம் நந்துர்பார் தொகுதியில் பிரச்சாரம் செய்தார்.
சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம்! ஒரு வருடம் வெளியே வர முடியாது!
தினமலர் : சென்னை: பெண் போலீஸ் குறித்த அவதூறு பேச்சு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள யூ டியுபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தமிழக அரசு , முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, முதல்வர் மருமகன் சபரீசன் ஆகியோர் குறித்து கடுமையாக விமர்சித்து வீடியோ பதிவு செய்து வந்த சவுக்குசங்கர் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் சவுக்கு சங்கர் ஒரு வருடம் வெளியே வர முடியாது.
உக்கிரேன் ரஷ்ய போரில் 300ற்கும் மேற்பட்ட இலங்கையர்கள்! காமினி வலேபொட எம்பி
hirunews.lk : இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக ரஸ்யாவுக்கு அனுப்பப்பட்டவர்களில் 300ற்கும் அதிகமானோர் போரில் ஈடுபட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் 200ற்கும் அதிகமானோர் தற்போது முகாம்களில் பயிற்சி பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஸ்ய – யுக்ரைன் மோதலுக்காக இலங்கையிலிருந்து 800ற்கும் அதிகமானோர் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.