சனி, 25 மே, 2013

அய்யர் – செட்டியார் அமர காதல் !

குருநாத் மெய்யப்பன்அய்யர் சாதியை சேராத செட்டியார் பையனை தன் மகள் காதலிப்பதா என்று அம்மா சித்ராவின் கடுப்பும் தண்ணி போட்டுக் கொண்டு அப்பா சீனிவாசன் அலட்டிய அலட்டலும் ஏ.வி.எம். சாம்ராஜ்யத்தின் சொத்துபத்துக்களை கணக்கு பார்த்ததும் பணிந்தன.


இளம் தொழிலதிபர்
20-ம் நூற்றாண்டில் மெய்யப்ப செட்டியார் என்பவர் ஏ.வி.எம். புரொடக்சன்ஸ் என்ற பெயரில் தமிழ்த் திரையுலகின் முடிசூடா மன்னராக சென்னை மாநகரில் ஆட்சி செய்து வந்தார். அல்லி அர்ஜூனாவில் ஆரம்பித்து சபாபதி, ஹரிஷ்சந்திரா, நாம் இருவர், அந்த நாள் போன்ற திரைக் காவியங்களை வழங்கி புகழ் பெற்றிருந்தார். விரைவிலேயே ஏவிஎம் நிறுவனம் தென்னிந்திய சினிமாவில் ஒரு ஏகபோக நிறுவனமாக நிலைபெற்றது. நிமாய் கோஷ் தலைமையில் சினிமா தொழிலாளிகள் சங்கம் கட்டி எதிர்த்து நின்ற போதும் முதலாளிகளின் காவலனாக ஏவிஎம்மே விளங்கியது.
உலக நாயகன் கமல்ஹாசனை குழந்தை நட்சத்திரமாக களத்தூர் கண்ணம்மாவில் களத்தில் இறக்கி சகலகலாவல்லவனில் சூப்பர் ஹீரோவாக அரங்கேற்றம் செய்த பெருமை ஏ.வி.எம்.முக்கு உரியது. முரட்டுக் காளை, பாயும் புலி என்று ரஜினிகாந்துக்கு சூப்பர் ஸ்டாராக சலங்கை கட்டியதும் ஏ.வி.எம்மின் பாரம்பரியமே. காலத்துக்கு ஏற்ற சரக்கு என்ற வகையில் குடும்ப நாயகர் விசு, கலாச்சார காவலர் பாக்கியராஜ், பிரும்மாண்ட இயக்குனர் சங்கர் என்று பலதரப்பட்டவர்களின் படைப்புகளையும் கடை பரப்பி வருகிறது ஏ.வி.எம். தற்போது சினிமாவைக் குறைத்துக் கொண்டு சீரியல்கள் எடுத்து வருகின்றனது.

TMS மறைந்து விட்டாரா ? யார் சொன்னது ? இவர்போல யார் என்று ஊர் சொல்கிறதே


ராமதாசை சந்தித்த கனிமொழி ஸ்டாலின் ! ராஜ்யசபா பேரம் ஆரம்பம்

சென்னை: திமுகவின் எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவனைத் தொடர்ந்து அக்கட்சித் தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின், மகள் கனிமொழி ஆகியோரும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை மருத்துவமனையில் நலம் விசாரித்திருக்கின்றனர். எதிர்வரும் ராஜ்யசபா தேர்தலை முன்னிட்டே பாமகவுடனான இந்த நெருக்கத்தை திமுக வெளிப்படுத்துவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். திராவிட கட்சிகள் எதனுடனும் கூட்டணி கிடையாது என்று தற்போதும் கூட பாமக அறிவித்து வருகிறது. அதிமுகவைப் பொறுத்தவரையில் பாமக எதிரியாகிவிட்டது. ஆனால் மற்றொரு திராவிடக் கட்சியான திமுகவுக்கோ பாமகவின் தயவு இப்போது தேவைப்படுகிறது. இதனால் வேறுவழியின்றி என்னதான் விமர்சித்தாலும் பரவாயில்லை இறங்கிப் போவது என முடிவெடுத்திருக்கிறது போல..அப்படி என்ன தேவை? எதிர்வரும் ராஜ்யசபா தேர்தல்தான்! ராஜ்யசபா தேர்தலில் ஒரு எம்.பி.க்கு 34 எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க வேண்டும். திமுகவுக்கு சட்டசபையில் 23 எம்.எல்.ஏக்கள்தான் இருக்கின்றனர். இதனால் தேமுதிகவுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தியது. இம்முறை கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு தேமுதிக ஆதரவளித்தார்ல் அடுத்த ஆண்டு விஜயகாந்தின் மச்சான் சதீஷுக்கு திமுக ஆதரவளிக்கும் என்பதுதான் பேரம். ஆனால் விஜயகாந்தோ இம்முறை சுதீஷ் என்பதில் உறுதியாக இருந்தார். இதில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. தற்போதைய நிலையில் 18 எம்.எல்.ஏக்கள்தான் ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்க முடியும் என்பதால் பேசாமல் தேர்தலையே புறக்கணித்துவிட்டால் என்ன? என்ற யோசனையில் இருக்கிறதாம் தேமுதிக.. இதை உணர்ந்து கொண்ட திமுக, தங்களுக்குத் தேவையான 11 எம்.எல்.ஏ.க்களை எப்படிப் பெறுவது என்று போட்டுப்பார்த்த கணக்கில் உதயமானது பாமக, காங்கிரஸ், புதிய தமிழகத்தை இணைத்துக் கொள்வது என்பதுதான் அது. காங்கிரஸ் கட்சிக்கு 5 எம்.எல்.ஏக்கள், பாமகவுக்கு 3 எம்.எல்.ஏக்கள், புதிய தமிழகத்திடம் 2 எம்.எல்.ஏக்கள் என 10 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். என்னதான் மத்திய அரசில் இருந்து திமுக வெளியேறினாலும் கருணாநிதி கேட்டுக் கொண்டால் காங்கிரஸ் மேலிடம் ஆதரிக்கக் கூடும் என்று திமுக நம்புகிறது. ரொம்ப தூரம் விலகிப் போய்க் கொண்டிருந்த பாமகவை மரக்காணம் கலவரத்தை முன்வைத்து எட்டிப் பிடிக்க முயற்சித்தது திமுக. இப்போது ராமதாஸ் மருத்துவமனையில் இருக்க இன்னும் நெருக்கமாகிக் கொண்டிருக்கிறது. புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு லோக்சபா தொகுதி கொடுக்கப்படும் என்ற உறுதியுடன் அக்கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியிடம் பேரம் பேசப்பட்டிருக்கிறதாம். எஞ்சிய ஒரு எம்.எல்.ஏ யாராக இருக்க முடியும்? அது தேமுதிக அல்லது தமுமுகவைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்கிறது அறிவாலய வட்டாரங்கள்.... இதுதான் டாக்டர் ராமதாஸை ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோர் சந்தித்துப் பேசியதன் பின்னணியாக சொல்லப்படுகிறது.
tamil.oneindia.i

வினோதினியை ஆசிட் ஊற்றி கொலைசெய்த கொலைகாரன் ஜாமீனில் விடுதலை

காரைக்கால்: சாப்ட்வேர் என் ஜினியர் வினோதினி மீது ஆசிட் வீசி உயிரிழப்பிற்கு காரணமான குற்றவாளி சுரேஷ் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளான். காரைக்காலில் வசித்து வந்த வினோதினி (23), சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினியராக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளி கொண்டாடுவதற்காக காரைக்கால் வந்திருந்த போது காரைக்கால் திருவேட்டக்குடியை சேர்ந்த சுரேஷ் (வயது 24) என்பவர் அவர் மீது ஆசிட் விசினார். இதில் படுகாயமடைந்த வினோதினி, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி இறந்தார். வினோதினியை ஒருதலையாக காதலித்ததாகவும், தன்னை காதலிக்க மறுத்ததால் இந்த செயலில் ஈடுபட்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் கைதான சுரேஷ் மீது போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்திருந்தனர். வினோதினி இறந்ததையடுத்து அந்த வழக்கு கொலை வழக்காக மாற்றி பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சுரேஷ் மீதான வழக்கு காரைக்கால் முதல் வகுப்பு குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இந்த கொலைவழக்கு தொடர்பாக 482 பக்க குற்ற பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. வழக்கு விசாரணையின் போது 'வினோதினி மீது நான் ஆசிட் வீசவில்லை' என சுரேஷ் நீதிமன்றத்தில் ஆஜராகி கூறியிருந்தான். மேலும் இந்த வழக்கில் இருந்து தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தான். அந்த மனு மீதான விசாரணையின்போது ஜாமீனில் சுரேசை விடுதலை செய்ய கூடாது என காரைக்கால் போலீசார் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனினும் விசாரணை முடிவில் நிபந்தனை ஜாமீனில் சுரேசை விடுவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் காரைக்கால் சிறையில் இருந்து சுரேஷ் விடுதலை ஆனான். சுரேஷ் தினமும் காலை 10 மணிக்கு காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்
என்று நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது
tamil.oneindia.in

TMS டி எம் சௌந்தரராஜன் காலமானார்

 இந்தியாவின் மிகச் சிறந்த பின்னணிப் பாடகரும் இசைக் கலைஞருமான
டிஎம் சவுந்திரராஜன் இன்று பிற்பகல் சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 91. உடல் நலக் குறைவு காரணமாக இன்று அவர் உயிர் பிரிந்தது. மூச்சுக் கோளாறு காரணமாக கடந்த 12-ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சில தினங்களுக்கு முன் வீடு திரும்பினார். பேரன் திருமணத்திலும் கலந்து கொண்டார். வீட்டில் இருந்தபடியே தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று பிற்பகல் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். 1923ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி மீனாட்சி அய்யங்காரின் மகனாக மதுரையில் பிறந்தார் டி.எம். சவுந்தரராஜன். அவரது இயற்பெயர் துகுலுவ மீனாட்சி அய்யங்கார் சவுந்திரராஜன். பிரபல இசை வித்துவான் பூச்சி ஸ்ரீனிவாச அய்யங்காரின் மருமகன் ராஜாமணி அய்யங்காரிடம் இசைப் பயிற்சி பெற்று பல ஆண்டுகளாக மேடை கச்சேரி செய்து வந்தார். 1950-ம் ஆண்டு கிருஷ்ண விஜயம் படத்தில் 'ராதே உனக்கு கோபம் ஆகாதடி' என்ற பாடலைப் பாடி திரை இசைப்பாடகராக அறிமுகமானார் டி.எம். சவுந்தரராஜன். அதன் பிறகு பல்லாயிரம் பாடல்களை பாடி தனது கணீர் கம்பீர குரலால் இசை ரசிகர்களின் இதயங்களில் குடி கொண்டார். 2003-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற இவர், ஏராளமான மாநில அரசின் விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழ் திரையுலக ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி மற்றும் ஜெமினி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ், ரஜினிகாந்த், கமல்ஹாஸன் என அனைத்து பிரபலங்களுக்கும் குரல் கொடுத்துள்ள டி.எம். சவுந்தரராஜன் ஆயிரக்கணக்கான பக்தி மற்றும் மெல்லிசை பாடல்களையும் பாடியுள்ளார். 2012-ம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் இசையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக உருவான ‘செம்மொழியான தமிழ் மொழியாம்' என்ற பாடல்தான் டி.எம்.சவுந்தரராஜன் குரலில் பதிவான கடைசி பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த டி.எம்.சவுந்தரராஜனின் உடல் மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகைச் சேர்ந்த பல்வேறு கலைஞர்களும், முக்கிய பிரமுகர்களும் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். டிஎம் சவுந்திரராஜன் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
tamil.oneindia.in

Chennai ரவுடியால் வெட்டப்பட்ட போலீஸ்காரர் உயிரிழந்தார்

சென்னையில் ரவுடியால் வெட்டப்பட்ட போலீஸ்காரர் தியாகராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வழக்கு ஒன்றில் ரவுடி விமல்ராஜுக்கு சம்மன் கொடுக்க சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. ரவுடி விமல்ராஜ் வெட்டியதில் தியாகராஜனின் மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய் பாதித்தது. அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில் நள்ளிரவில் உயிரிழந்தார். போலீஸ்காரர் தியாகராஜனை வெட்டிய ரவுடி விமல்ராஜ் கைது செய்யப்பட்டார்.

AVM குருநாத்திற்கு சென்னை துபாய் தரகர்களுடன் தொடர்பு இருந்தது!

  சீனிவாசனின் மகன் பகீர் தகவல்

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிஇஓவுக்கும் சென்னை, துபாயில் உள்ள கிரிக்கெட் சூதாட்ட தரகர்களுடன் எப்பொழுதுமே தொடர்பு இருந்தது என்று அவரது மைத்துனரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சீனிவாசனின் மகனுமான அஸ்வின் தெரிவித்துள்ளார்.அஸ்வின் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் (gay) ஆவார். கடந்த ஆண்டு மே மாதம் மும்பையில் உள்ள பார் ஒன்றில் குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்ட அஸ்வின் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது மச்சான் மெய்யப்பன் குறித்து அஸ்வின் கூறுகையில்,குருவுக்கு சென்னை மற்றும் துபாயைச் சேர்ந்த பல்வேறு பிரபல தர்களுடன் தொடர்பில் இருந்தார். இந்த தொடர்பு ஐபிஎல் போட்டிகளுக்கு முன்பில் இருந்தே இருந்தது. சைட் பிசினஸாக துவங்கியது ஆண்டுகள் செல்ல செல்ல பெரிய வியாபாரமாகவிட்டது.குரு எனது தந்தையின் வியாபாரத்தில் நிலையான இடத்தைப் பிடித்து வருகிறார். அவரது மனைவியும், எனது சகோதரியுமான ரூபா என் தந்தையின் நிறுவனமான இந்தியா சிமெண்ட்ஸின் எக்சிகியூட்டிவ் டைரக்டராக உள்ளார். குரு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக மட்டும் இருக்க சம்மதித்தார். எனது தந்தை சீனிவாசன் தனது விமானத்திற்கு எரிபொருள் நிரப்ப துபாயில் 4 மணிநேரம் செலவிடுவது வித்தியாசமாக இல்லை? அது ஏன் அவர் குவைத், ஷார்ஜா அல்லது வேறு எங்காவது எரிபொருள் நிரப்புவதில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

என் தங்கையை விஸ்வநாதன் ஆனந்துக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினர்: சீனிவாசன் மகன்

மும்பை: தனது சகோதரி ரூபாவை பிரபல செஸ் விளைாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்துக்கு திருமணம் செய்து கொடுக்க தனது பெற்றோர் விரும்பியதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சீனிவாசனின் மகன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.இது குறித்து அஸ்வின் செய்தியாளர்களிடம் கூறுகையில்,எனக்கும் என் தந்தைக்கும் இருக்கும் பிரச்சனையை பெரிதாக்க குரு எனது பெற்றோரின் மனதை கெடுத்து வருகிறார். எனக்கிருக்கும் போதைப் பொருள் பழக்கத்தால் குரு என் தந்தையின் வியாபாரத்திற்கு உதவி செய்வதாக அவர் தெரிவித்து வருகிறார்.ஆனால் உண்மையில் நான் அவரை விட தகுதியும், அனுபவமும் உள்ளவன். மெட்ராஸ் கிளப்பில் விளையாடும்போது குருவும், ரூபாவும் டேட் செய்தது எனது பெற்றோருக்கு பிடிக்கவில்லை. அவர்  எங்களது பிராமணர் வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல. அவர் செட்டியார் என்பதால் என் பெற்றோருக்கு பிடிக்காமல் இருந்தது.குருவை மணந்தால் உன்னை ஒதுக்கி வைத்துவிடுவோம் என்று என் அம்மா சித்ரா ரூபாவை மிரட்டினார். எனது தந்தையோ ஒவ்வொரு நாள் மாலையும் 5 கிளாஸ் ஸ்காட்சை குடித்துவிட்டு குருவுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் சாபம் விட்டார்.

BCCI சீனிவாசனின் மருமகன் AVM குருநாத் மும்பையில் கைது!

கொடைக்கானல்: ஐபிஎல் பெட்டிங்கில் ஈடுபட்டதற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சீனிவாசனின் மருமகனான குருநாத் மெய்யப்பன் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஐபிஎல் பிக்ஸிங் விவகாரத்தில் பாலிவுட் நடிகர் வின்து தாராசிங் கைது செய்யப்பட்டார். அவரது செல்போன் அழைப்புகளில் சென்னை எண் ஒன்றுக்கு பலமுறை தொடர்பு கொண்டு பேசியிருப்பது தெரியவந்தது. அந்த எண் யாருடையது? என்று மும்பை போலீசார் நடத்திய விசாரணையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் லைமை செயல் அதிகாரியும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரான சீனிவாசனின் மருமகனுமான குருநாத் மெய்யப்பனின் எண் எனத் தெரியவந்தது. திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். பாலசுப்பிரமணியத்தின் மகன்தான் இந்த குருநாத் மெய்யப்பன்.

வெள்ளி, 24 மே, 2013

பெட்டிங்கை சட்டப்பூர்வமாக்க இந்திய தொழில் கூட்டமைப்பு யோசனை

புதுடில்லி: நாடு முழுவதும் ஸ்பாட் பிக்சிங் விவகாரம் பரபரப்பாக பேசப்படும் நிலையில், விளையாட்டு போட்டிகளில் ஸ்பாட் பிக்சிங்கை ஒழிக்க, பெட்டிங்கை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (பிக்கி) யோசனை கூறியுள்ளது. ராஜஸ்தான் அணியின் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கித் சவான் ஆகியோர் ஸ்பாட் பிக்சிங் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் நாட்டின் பல பகுதிகளில் புக்கிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாலிவுட் நடிகர் வின்டூ கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னை அணி உரிமையாளர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் மீது மும்பை போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கிரிக்கெட்டில் சூதாட்டத்தை தடுக்க சட்டம் இயற்றுவது பற்றி மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

London two men arrested பாகிஸ்தான் விமானம் பிரிட்டிஷ் ராணுவ விமானங்களால் சிறைபிடிப்பு

"The two men arrested on suspicion of endangerment of an aircraft are aged 30 and 41. They are being taken to a police station for interview by detectives," the police added.
கடந்த சில நாட்களாக தீவிரவாதிகள் பிரச்சினை தலைதூக்கியுள்ள
லண்டனில் இன்று பாகிஸ்தான் விமானம் ஒன்று சிறை பிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சற்று முன்னர், லாகூரில் இருந்து மான்செஸ்டருக்கு 297 பயணிகளுடன் மான்செஸ்டர் விமான நிலையத்தில் தரையிறங்க இருந்த பாகிஸ்தான் இன்டர்நேஷனல் விமானம் ஒன்றில் தீவிரவாதிகள் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, பிரிட்டிஷ் விமானப்படையைச் சேர்ந்த போர் விமானங்கள் நடுவானிலேயே இருபுறமும் சூழ்ந்து, அங்கிருந்து லண்டனுக்கு வடகிழக்கே உள்ள ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளன. இதனால், லண்டன் முழுவதும் பெரும் பரபரப்பு நிலவுகிறது. தீவிரவாதம், விமானக் கடத்தல் உள்ளிட்ட அனைத்து அவசர நிலை பிரச்சினைகளையும் இங்கிலாந்து பாதுகாப்பு படையினர், ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் வைத்து கையாளுவதுதான் வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது

அம்பானிகளுக்கு கூடுதலாக 1,62,000 கோடி அரசின் எரிவாயு விலை ஏற்றத்தால் கிடைத்துள்ளது

ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக எரிவாயு விலை உயர்வா? வீரப்ப மொய்லி மறுப்பு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் ஆதாயம் அடையும் வகையில், அதிகாரிகளின் எதிர்ப்பையும் மீறி சமையல் எரிவாயு விலையை உயர்த்தியதாக மத்திய பெட்ரோலியத் துறை மந்திரி வீரப்ப மொய்லி மீது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. குருதாஸ் தாஸ்குப்தா குற்றம் சாட்டினார். < கடந்த 5 ஆண்டு காலத்தில் ரூ.1,80,000 கோடி மத்திய அரசின் கூடுதல் மானிய செலவால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு கூடுதலாக ரூ.1,62,000 கோடி லாபம் கிடைத்துள்ளது. இது பெட்ரோலிய துறை அமைச்சகத்தால் நடத்தப்படும் மிகப் பிரம்மாண்ட ஊழல் என்றும் குருதாஸ் தாஸ்குப்தா குறிப்பிட்டார் இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று பெட்ரோலியத் துறை மந்திரி வீரப்ப மொய்லி மறுத்துள்ளார். இந்த விலை உயர்வு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்

அஜீத்தை பற்றிய ஒரு முக்கியமான செய்தி ! ரொம்ப முக்கியம்


திரைப்படத்தின் முக்கியமான கிளைமாக்ஸ் ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்க விஷ்ணுவர்தன் படக்குழு சில நாட்களுக்கு முன்பே குலுமனாலி சென்று படப்பிடிப்பிறகான ஆயத்தங்களை செய்துகொண்டிருந்தது. படப்பிடிப்பிற்காக வீட்டிலிருந்து கிளம்பிய அஜித் வழக்கம்போல் ஃபிளைட்டில் செல்லாமல் தனது காரிலேயே குலுமனாலி பயணமாகியிருக்கிறார்.செல்லும் வழியில் இருக்கும் இயற்கையை ரசித்தபடியே குலுமனாலி சென்ற அஜித் ஓய்வெடுத்த பிறகு தான் வருவார் என்று மற்ற பணிகளில் ஈடுபட்டிருந்த படக்குழு பயணக்களைப்பை போக்காமலேயே படப்பிடிப்பிற்கு சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்த அஜித்தைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார்களாம்.அஜித் வந்து சேர்ந்ததும் பரபரப்பாக படப்பிடிப்பு துவங்க குளிரின் காரணமாக அவ்வப்போது கொடுக்கப்பட்ட ஓய்வு நேரத்தில் குளிரைப் போக்க இத்திரைப்படத்தின் இரண்டு ஹாட் ஹீரோயின்களான நயன்தாராவும், டாப்ஸியும் குலுமனாலியிலுள்ள பைக் ரைடிங்கில் சவாரி செய்து குளிரால் உறைந்துபோன தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்கிறார்கள். இது போன்ற பன்னாடை செய்திகளையும் வரிவிடாமல் படிப்பதற்கு ரொம்ப நன்றிங்கோ

Bajaj குவாட்ரிசைக்கிளுக்கு அரசு அனுமதி only for city

நகர்ப்புற எல்லைக்குள் மட்டும்
இயக்குவதற்கான குவாட்ரிசைக்கிள்
எனப்படும் புதிய நான்கு சக்கர வாகனப் பிரிவுக்கு மத்திய அரசு நேற்று அனுமதி வழங்கியது.நகர்ப்புற போக்குவரத்துக்கு ஏற்ற குவாட்ரிசைக்கிள் வாகனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என பஜாஜ் உள்ளிட்ட பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தன.இதுகுறித்து ஆய்வு செய்து, புதிய ரக வாகனத்துக்கான பாதுகாப்பு அம்சங்கள் விதிமுறைகளை வகுப்பதற்காக குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது.டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட சில வாகன தயாரிப்பு நிறுவனங்கள் குவாட்ரிசைக்கிளுக்கு அனுமதி வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. குவாட்ரிசைக்கிளுக்கு அனுமதி வழங்கினால், சாலை பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் கருத்து தெரிவித்தன.இந்த நிலையில், டெல்லியில் நேற்று மத்திய சாலை போக்குவரத்து செயலர் விஜய் சிப்பெர் தலைமையில் நடந்த கூட்டத்தில் குவாட்ரிசைக்கிள்களுக்கு அனுமதி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்த அறிவிப்புக்கு பஜாஜ் ஆட்டோ வரவேற்பு தெரிவித்துள்ளது. இது இந்திய ஆட்டோமொபைல் துறையில் ஒரு முக்கியமான நாள் என்றும் தெரிவித்துள்ளது. குவாட்ரிசைக்கிள் பிரிவில் முதலாவதாக பஜாஜ் ஆட்டோவின் ஆர்இ60 விற்பனைக்கு வர இருக்கிறது. இதற்காக, பஜாஜ் ஆட்டோ ரூ.550 கோடியை முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சீனிவாசன்! இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவருமான இந்தியா சிமெண்ட்ஸ் முதலாளி

குரு மெய்யப்பன்

குருநாத் மெய்யப்பன், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனியுடன்.
இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன்பிஎல் சூதாட்டம், ஸ்பாட் பிக்சிங் மோசடி தொடர்பாக பாலிவுட்டின் நடிகர் விண்டூ தாரா சிங் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவருடைய செல்பேசி அழைப்புகள் பதிவின் படி சூதாடி ரமேஷ் வியாஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்சின் முதன்மை நிர்வாகியான குருநாத் மெய்யப்பனோடும் அடிக்கடி பேசியிருக்கிறார். இந்த மெய்யப்பன் யார்? சென்னை அணியின் உரிமையாளரும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவருமான இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனின் மருமகன்.
முதலில் விண்டூவின் ஜாதகத்தை பார்க்கலாம். இவர் மறைந்த நடிகர் தாராசிங்கின் மகன். அவரது பிரபலத்தை வைத்து நடிகரானவர். அந்த பிரபலத்தை வைத்து சூதாடிகளுடன் தொழிலையும் தோழமையையும் வளர்த்திருக்கிறார். கடந்த 8 ஆண்டுகளாக கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடும் இவர் இந்த ஆண்டு ஐபிஎல்லில் மட்டும் சுமார் 17 இலட்சம் ரூபாய் சுருட்டியிருக்கிறார்.

போலீஸ்:20,000 ரூபா கொடுக்காவிட்டால் குண்டர் சட்டத்தில் போடுவோம்? அன்புமணி குற்றச்சாட்டு !

போராட்டம் காரணமாக பா.ம.க.வினரை கைது செய்யும் போலீசார், சந்தடி
சாக்கில் சந்திலே சிந்து பாடுகின்றனர்” என்று கூறியுள்ள அன்புமணி ராமதாஸ், “20,000 ரூபா கொடுத்தால், விடுதலை செய்கிறோம்; இல்லையென்றால், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து விடுவோம் என மிரட்டுகின்றனர்” என்கிறார்.
செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, பா.ம.க., நிறுவனர் ராமதாஸூக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்து, தற்போது தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நலம் தேறி வருகிறது. இன்னும், 6 நாட்களுக்குள், வீட்டுக்கு வருவார். தி.மு.க. தலைவர் கருணாநிதி, மத்திய அமைச்சர் வாசன், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆகியோர், தொலைபேசி மூலம் நலம் விசாரித்தனர்.

IPL Chnnai சூதாட்டத்தில் தமிழகத்தில் தேடப்படும் முக்கிய தரகர் கிட்டி :

சிபிசிஐடி அலுவலகத்தில் டி.எஸ்.பி. வெங்கட்ராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ஐபிஎல் சூதாட்டம் தரகர்கள் குறித்து பேசினார்.அவர்,  ‘’இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகள் தங்களுடைய உண்மையான அடையாளத்தை மறைத்து போலியான மற்றும் கற்பனையான அடையாள ஆதாரங்களை கொடுத்து செல்போன் சிம்கார்டுகளைபெற்று அதன் மூலம் தங்களூடைய குற்ற சதி மற்றும் மோசடியை புரிந்துள்ளது புலனாகிறது.எனவே, இந்திய தண்டனை சட்டம் 419 ( ஆள்மாறாட்டம் ), 465 ( மோசடி), 468 (ஆள்மாறாற்றம் செய்து மோசடி), 471 ( போலியான ஆதாரங்களை உண்மையானது போல் உபயோகித்தல்), ஆகிய பிரிவுகள் ஏற்கனவே உள்ள சட்டப்பிரிவுகளூடன் இந்த வழக்கில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.இதுவரைஇந்த வழக்கு சம்பந்தமாக 7 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, 10க்கும் மேற்பட்ட இடங்களில் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது.  இதில், 18 லட்சம் பணம், 50 லட்சம் மதிப்பிலான வங்கிகளின் வெற்று காசோலைகள்,மடிக்கணினிகள், செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட் டுள்ளன.  இது தவிர, பல வழக்கு சம்பந்தமான ஆவணங்கள் மற்றும் சாட்சியங்கள் கைப்பற்றப் பட்டுள்ளன.வழக்கில் சம்பந்தப்பட்டவர்களும், வங்கிக்கணக்கள் முடக்கப்பட்டுள்ளன.  இவர்களிடம் இருந்து கைப்பற்றப் பட்ட செல்போன் எண்களின் அழைப்பு விபரங்கள், கணினிகளில் எடுக்கப்பட்ட தகவல்கள் ஆய்வு செய்யப் பட்டு வருகிறது.புக்கிகளுக்கு முக்கிய பிரமுகர்களுடன் தொடர்பு உள்ளதும், ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் பல புக்கிகளூடன் கொடுக்கல் வாங்கல் தொடர்பு உள்ளதும் புலனாகிறது.  அனைத்தும் விசாரிக்கப்பட்டு வருகின்றன.  முக்கிய புக்கியான கிட்டி என்கிற உத்தம் தீவிரமாக தேடப்பட்டு வருகிறார்’’ என்று தெரிவித்தார் நக்கீரன்.com

ராகுல் எச்சரிக்கை: அம்மா போல நான் soft இல்லை ! வதேரா போல shrewd ?

புதுடில்லி:காங்கிரஸ் தலைவர் சோனியா மென்மையானவர்; நான் அப்படிப்பட்டவன் அல்ல. கட்சியில் ஒழுங்கீனத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது' என, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் எச்சரித்துள்ளார்.டில்லி மாநில காங்கிரஸ் தலைவர்களுடன், ராகுல், நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது, எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட, ஒன்றிய செயலர்கள், கவுன்சிலர்கள் என, அனைவரையும் தனித்தனியே அழைத்து ராகுல் பேசினார்.அப்போது, ராகுல் பேசியதாக, தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது:காங்கிரஸ் கட்சியினர், கோஷ்டி பூசலை தவிர்த்து, ஒற்றுமையாக செயல்படவேண்டும். கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். டில்லியில், முதல்வர் ஷீலா தீட்சித் அரசின் சாதனைகளையும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சாதனைகளையும், மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும் என, ராகுல் கேட்டுக் கொண்டார்.காங்கிரஸ் தலைவர் சோனியா மென்மையானவர்; நான் அப்படி அல்ல. கட்சியில் ஒழுங்கீனமாக நடந்து கொள்பவர்கள் மற்றும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன் என, எச்சரித்தார். இவ்வாறு, தகவல் அறிந்த   வட்டாரங்கள் கூறின.

அன்புமணிக்கு அகிலேஷ் யாதவ் போதுமாம் திமுக தேவை இல்லையாம்!

அகிலேஷ்யாதவ் நம்பிக்கை கொடுத்திருக்கிறார்;
அதனால் திமுகவுடன் கூட்டணி இல்லை : அன்புமணி ராமதாஸ் பேட்டி
>பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.  இந்நிலையில் இன்று அன்புமணி அப்பல்லோ வந்து தந்தையின் உடல்நலம் குறித்து விசாரித்துவிட்டு வெளியே வந்தார்.   அப்போது அவர் செய்தியாளர்களிடன் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.>ராமதாசின் உடல்நிலை எப்படி இருக்கிறது?அய்யா நலமுடன் இருக்கிறார். இன்னும் மூன்று நாட்களில் முழுவதுமாக குணமடைந்து வீட்டிற்கு சென்று விடுவார்.ஜெ.குரு மீது அடுத்தடுத்த போடப்பட்டு வரும் வழக்குகள் பற்றி?<குரு மீது இந்த அரசு அதிகமாக பழிவாங்குகிறது.  எனது கட்சிக்காரர்களை 95 பேருக்கும் அதிகமாக கைது செய்து வைத்துள்ளார்கள்.  காவல்துறை குறித்து விரைவில் ஜனாதிபதியிடம் சென்று புகார் தெரிவிப்பேன்.வரும் பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி?<திமுக,அதிமுகவுடன் கூட்டணி கிடையாது.  எந்த திராவிட கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது.  அகிலேஷ்யாதவ் எனக்கு போன் செய்தார். அவர் நம்பிக்கை கொடுத்திருக்கிறார். வன்னியர் சமுதாயத்திற்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று கூறினார்.  அதனால் எந்த கட்சியினருடனும் கூட்டணி கிடையாது.

வெப்காமில் காதல் மனைவியின் தற்கொலையை கண்ட கணவன்

மும்பை: காதல் திருமணம் செய்த இளம் பெண்,வரதட்சணை பிரச்னையால் ,
பெற்றோர் வீட்டில் இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை ஆன்லைன் வாயிலாக கணவன் பார்த்து அதிர்ச்சியடைந்தார். மகாராஷ்டிரா மாநிலம் தலைநகர் மும்பை புறநகர் பகுதியான ஜுகூ பகுதியைச் சேர்ந்தவர் ஷோபனா ஸ்ருதி (25),இவரும், சுவப்னில் சுர்வி என்பவரும், காதலித்து வீட்டிற்கு தெரியாமல் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். கணவனின் பெற்றோர் இவர்கள் திருமணத்தை ஏற்றுக்கொண்டாலும், வரதட்சணை அதிகமாக கேட்டதால் , கணவனும் ,மனைவியும் சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்தனர்.வெப்கேமிராவில் தற்கொலையை நேரில் பார்த்த கணவன் இந்நிலையில் தாய்வீட்டில் வசித்து வந்த ஷோபான , தனது கணவனிடம் ஆன்லைனில் சாட்டிங் மூலம் பேசி வந்தார். நேற்று ஷோபனாஸ்ரூதி தனது லேப்டாப் வாயிலாக ஆன்லைன் சாட்டிங் மூலம் வெப்கேமிராவில் கணவனுடன் பேசினார். அப்போது மிகுந்த மன உளச்சலில் இருந்த ஷோபான , கணவன் பார்க்கும்படியாக, பேனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த காட்சியை வெப்கேமிராவில் கணவன் பார்த்து அதிர்ச்சியடைந்தார். மொபைல் போன் மூலம் ஷோபானாவின் உறவினருக்கு தகவல் தெரிவித்தார். எனினும் ஷோபா உயிர் பிரிந்தது. இதையடுத்து, ஜுகூ போலீஸ்நிலையத்தில், கணவன் சுவப்னில் சுர்வி மீது வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

வியாழன், 23 மே, 2013

AVM மெய்யப்பனின் பேரன் குருநாத் IPL சூதாட்டத்தில்? மெய்யாலுமா ?


நயன்தாரா திரிஷா லட்சுமி ராய் சுருதி ஹாசன் ஆகியோரையும் இவர்தான் IPL க்கு அழைத்து வந்தாரமே ?
சென்னை: ஐபிஎல் சூதாட்டத்தில் தொடர்புடையதாக பேசப்படும் குருநாத் மெய்யப்பன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ மட்டுமல்ல அவர் மேலும் பல பதவிகளை வகித்து வருகிறார்.ஐபிஎஸ் ஸ்பாட் பிக்ஸிங்கில் தொடர்புடையதாக பேசப்படும் குருநாத் மெய்யப்பன் யார் என்பதை பார்ப்போம். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உரிமையாளரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவருமான சீனிவாசனின் மருமகன். அவர் பிரபல திரைப்பட நிறுவனமான ஏவிஎம்-இன் நிறுவனர் மெய்யப்ப செட்டியாரின் பேரன். ஏவிஎம் சரவணனின் சகோதரர் ஏவிஎம் பாலசுப்ரமணியனின் மகன்.அவர் சென்னை அணி தவிர, ஏவிஎம் புரடக்ஷன்ஸ் அன்ட் என்டர்டெய்ன்மென்ட, ஏவிஎம் ஸ்டுடியோஸ் மற்றும் ஏவிஎம் கன்ஸ்டரக்ஷன்ஸின் மேனேஜிங் டைரக்டராக உள்ளார்.குருநாத் மோட்டார் பந்தயம் மற்றும் கோல்ப் விளையாட்டுகளில் ஈடுபாடு உள்ளவர். அவரை அனைவரும் 'பிரின்ஸ் குருநாத்' என்று அழைப்பார்களாம். குருநாத் எப்பொழுதும் அமைதியாக, புன்முறுவலுடன் காணப்படுவார் என்று அவரிடம் பேசியவர்கள் தெரிவித்துள்ளனர்.ஏவிஎம் குடும்பத்தில் பிறந்தாலும் அவர் மீடியாவின் கண்களில் இருந்து முடிந்த வரை ஒதுங்கியே இருந்தார். இந்நிலையில் ஸ்பாட் பிக்ஸிங் மூலம் அனைத்து டிவி சேனல்கள் மற்றும் செய்தித்தாள்களில் முக்கியச் செய்தியாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

IPL சூதாட்டம்.6 முன்னணி தமிழ் நடிகைகள்! in trouble


சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் பிரபல தமிழ் நடிகைகளுக்கும் தொடர்புள்ளதாக போலீஸ் சந்தேகிக்கிறது. எனவே அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதால், சம்பந்தப்பட்ட நடிகைகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு நாளும் புதுப்புது புகார்களும் சதிகளும் சூதாட்ட மோசடிகளும் அம்பலமாகி வருகின்றன. சென்னையில் சி.பி. சி.ஐ.டி. போலீசார் அதிரடி சோதனைகள் நடத்தி கிரிக்கெட் சூதாட்ட தரகர்கள் 7 பேரை கைது செய்தனர். மேலும் 7 பேரை தேடி வருகிறார்கள். அடுத்த கட்டமாக சி.பி. சி.ஐ.டி. போலீசாரின் பார்வை நடிகைகள் பக்கம் திரும்பியுள்ளது. கிரிக்கெட் போட்டிகளில் தொடர்பு உள்ள நடிகைகளை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. செய்தி தொடர்பாளரும் துணை போலீஸ் சூப்பிரண்டுமான வெங்கட்ராமன் நிருபர்களிடம் கூறும்போது, "நடிகர், நடிகைகள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் சிலருடன் சூதாட்ட தரகர்களுக்கு தொடர்பு இருப்பதாக படங்களுடன் செய்தி வெளியாகியுள்ளது.

தண்ணீர் கொள்ளையர்களிடம் இருந்து தண்ணீரை மீட்டெடுங்கள்

பாட்டில் தண்ணீர்
சுட்டெரிக்கும் கத்திரி வெயில் கொளுத்தும் கோடைக்காலம் தான் தண்ணீர் வியாபாரிகளுக்கு அடைமழைக் காலம். பாக்கெட் தண்ணீர், பாட்டில் தண்ணீர், கேன் தண்ணீர், வாட்டர் மெஷின் என்று தண்ணீர் வியாபாரம் கோடிகளில் கொழிப்பது இந்த கோடைக்காலத்தில் தான். சென்னையில் மட்டும் ஆண்டுக்கு சில ஆயிரம் கோடிகள் தண்ணீர் வியாபாரம் நடக்கிறது.
தண்ணீர் என்கிற அற்புதத்தை யாராவது உற்பத்தி செய்ய முடியுமா ? முடியாது, ஆனால் விற்கலாம். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்யும் ஒரு ஆலையில் முதலாளி எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்து சுருட்டுகிறாரே என்று கேட்டால், அவர் மூளை உழைப்பில் ஈடுபடுகிறார் என்று கூறுவார்கள் முதலாளித்துவ ஆதரவாளர்கள். அது ஒரு பொய். எனினும் அதை உண்மை என்றே வைத்துக்கொண்டாலும் அந்த மூளை உழைப்பு கூட இந்த தண்ணீர் வியாபாரத்தில் இல்லை. தண்ணீரை எந்த முதலாளியின் மூளையும் கண்டுபிடிக்கவில்லை. அது இயற்கையின் கொடை. அதற்கு எவனும் உரிமை கொண்டாட முடியாது.
தண்ணீர் மனிதனுக்கு மட்டுமல்ல அனைத்து உயிரினங்களுக்கும் உரிமையுடையது. அத்தகைய நீரை, அனைவருக்கும் உரிமையுள்ள இயற்கையை முதலாளிகள் கடைச்சரக்காக்கி காசு பார்ப்பது எவ்வளவு பெரிய கொள்ளை? அந்த கொள்ளையை அரசு வேடிக்கை பார்ப்பது எத்தகைய அயோக்கியத்தனம்!

AVM பாலசுப்ரமணியனின் மகன் குருநாத் மெய்யப்பன் IPL சூதாட்ட புகாரில்

குருநாத் மெய்யப்பன்குருநாத் மெய்யப்பன் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட புகாரில் சிக்கியுள்ள பிசிசிஐ தலைவர் ஶ்ரீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன், தமிழ் திரையுலகின் பிரபல ஏ.வி.எம். குடும்பத்தை சேர்ந்தவர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஏ.வி.எம். குடும்பத்தை சேர்ந்த குருநாத், ஏ.வி.எம். சரவணின் சகோதரரான ஏ.வி.எம். பால சுப்ரமணியனின் மகன்.
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள விண்டூ தாரா சிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய புள்ளியுடன் அடிக்கடி தொடர்பு கொண்டிருப்பது தெரியவந்துள்ளது என போலீசார் ஏற்கனவே கூறியிருந்தனர்.
இந்நிலையில் அந்த முக்கிய புள்ளி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசனின் மருமகன் என்றும், இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதன்மை மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார் என்றும்  போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனால் மெய்யப்பனிடம் போலீசார் விசாரணை நடத்தலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன துணைத் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ஸ்ரீனிவாசனின் மகள் ரூபாவைத்தான் இந்த குருநாத் மெய்யப்பன் திருமணம் செய்துகொண்டுள்ளார். ரூபா, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார்.
இதனிடையே குருநாத் மெய்யப்பன் ஸ்பாட் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதற்கான ஆதாரம் இல்லை என்றும், அதே சமயம் பெரிய தொகையை கட்டி பந்தயத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றும், இதுவும் சட்டவிரோதம்தான் என்றும் மும்பை காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. viruvirupu.com

பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள்! போலீஸ் திருந்தவில்லை! ஆணாதிக்க வன்முறை தொடர்கிறது

டந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், தலைநகர் டெல்லியில் ஓடும் பேருந்தில்
மருத்துவ மாணவி பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி மரணமடைந்ததும், அதற்கெதிராக நாடெங்கும் போராட்டங்கள் பெருகியதைத் தொடர்ந்து, பெண்கள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்க கடந்த ஏப்ரல் மாதத்தில் கிரிமினல் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னராவது பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் குறைந்துள்ளதா? அல்லது இச்சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகளும் போலீசாரும் குற்றங்களைத் தடுக்க முனைப்பாகச் செயல்படுகிறார்களா? அல்லது பாலியல் குற்றங்களில் ஈடுபடும் பொறுக்கிகள் இச்சட்டத்தைக் கண்டு அஞ்சி நடுங்கிவிட்டார்களா? எதுவுமே கிடையாது. உலகமே காறி உமிழும் அளவுக்கு முன்னைவிட அதிக அளவிலும் வக்கிரமாகவும் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சிறுமி குடியா பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட கொடுமையை எதிர்த்து டெல்லியிலுள்ள அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக மருத்துவமனையில் போராட்டம் நடத்திய பெண்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தும் உதவி போலீசு ஆணையர் பானி சிங்.

பா.ஜ.க பா.ம.கவுடன் ரகசிய பேச்சு?ராமதாசுக்கு எதிராக வைகோவை தூண்டிய ஜெயலலிதா? நடைப்பயண நாடகம்

எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு,
பா.ஜ.க. – பா.ம.க. ரகசியமாக பேசுவது தெரியுமா?
என் பத்திரிகை நண்பர்கள் வழியாக கேள்விப்பட்ட வகையில், பா.ஜ.க தலைமை பா.ம.கவுடன் ரகசிய பேச்சு வார்த்தைகளை தொடங்கி விட்டது. பா.ஜ.க கூட்டணிக்கு அ.தி.மு.க. பிடி கொடுக்காமல் இருப்பதால் மாற்று வழியாக பா.ம.க.வை யோசிக்க ஆரம்பித்து விட்டது.
பா.ஜ.க.விலே ஒரு சிலர் அதிமுகவை விரும்பவில்லை. வாஜ்பாய் அரசை கவிழ்த்தது இன்னும் மறக்கவில்லை.
ஒரு வேளை அ.தி.மு.க.வுடன் கூட்டு போட்டு வெற்றி பெற்றாலும் ஜெயலலிதா கடுமையான நிர்பந்தங்கள் செய்வார் என்று பா.ஜ.க நினைக்கிறது. ஜெயலலிதாவுக்கு எப்படியாவது ஒரு நாளாவது பிரதமர் ஆக வேண்டும் என்ற வெறியில் என்ன வேணுமானாலும் செய்வார் என்று பா.ஜ.க தலைமை நினைக்கிறது.
வை.கோ. திடீரென எதற்காக நடைப்பயணம்?
சமீப வாரங்களில் பா.ம.க அதிமுக வாக்கு வங்கியை சிதைத்து வருகிறது. மது ஒழிப்பு பிரசாரத்தை டாக்டர் ராமதாஸ் தொடங்கியவுடன், மகளிர் ஓட்டு சிதையும் என்று வைகோவை மது ஒழிப்புக்கு நடை பயணம் செய்ய தூண்டியவரே ஜெயலலிதா தான்.

Chennai கிரிக்கெட் சூதாட்ட புள்ளிகளிடம் புழங்கிய ரூ.400 கோடி

: சென்னையில் கைது செய்யப்பட்ட, கிரிக்கெட் சூதாட்ட புரோக்கர்கள், 400 இதையடுத்து, சூதாட்ட உலகின் முக்கிய புள்ளிகளான, பிரசாந்த், சஞ்சய் பாவ்னா, கிட்டி (எ) உத்தம் சந்த் ஆகியோரை, தேடி வந்தனர். அவர்களின் வீட்டில், கடந்த, இரு தினங்களாக சோதனையிட்டனர். சோதனையின் இடையில், பிரசாந்தை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.மூவர் வீட்டில் இருந்தும், லட்சக்கணக்கான ரூபாய் பணம், கம்ப்யூட்டர்கள், சிம் கார்டுகள், ரசீதுகள், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, கைது செய்யப்பட்ட பிரசாந்தை, நேற்று முன்தினம் இரவு, சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் சரவணன் முன்னிலையில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.முன்னதாக, ஏற்கனவே கைது செய்யப்பட்ட, ஹரிஷ் பஜாஜ், லக்கி (எ) நர்பத் ஜெயின், பப்பு (எ) பிரவீண் குமார் மற்றும் விருத்தாசலம் ஆகிய நால்வரையும், மூன்று நாட்கள் விசாரிக்க, கோர்ட் உத்தரவை பெற்று, சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

திருப்பதி ! புதிதாக ஒரு வரி! மக்களை சுரண்ட கோவில் நிர்வாகம் தீர்மானம்

திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக
திருப்பதியில் இருந்து, அலிபிரி வழியாக திருமலைக்கு கொண்டு செல்லும் அனைத்து பொருட்கள் மீதும், இவ்வரியை விதிக்கதேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அலிபிரியில் உள்ளசோதனைச் சாவடியில், இந்த வரி வசூலிக்கப்படும். திருமலையில் வசிக்கும் உள்ளூர்வாசிகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மீதும், திருமலையில் விற்பனை செய்ய வியாபாரிகள் கொண்டு செல்லும் பொருட்கள் மீதும், இந்த வரி விதிக்கப்பட உள்ளது.
பாலுக்கு விதிக்கப்பட்ட முதல் வரி
திருமலைக்கு வரும் பொருட்கள் மீது வரி விதிக்கும் எண்ணம், தேவஸ்தானத்திற்கு, 1987ம் ஆண்டு முதல் உள்ளது. ஆனால், அந்த காலகட்டத்தில், கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அந்த எண்ணம் கைவிடப்பட்டது. பின், 2004ம் ஆண்டு பால் பாக்கெட் மீது வரி விதிக்கப்பட்டது. ஒரு பால் பாக்கெட்டுக்கு, 50 பைசா வரி செலுத்த வேண்டும். தேவஸ்தானம், 50 பைசா வரி விதித்தால், வியாபாரிகள் அதற்கு மேல், 50 பைசா வைத்து, ஒரு ரூபாய் உயர்த்தி, பால் பாக்கெட்களை விற்பனை செய்தனர்.
குடிநீர் முதல் சமையல் காஸ் வரை வரி வரி வரி மதம் மாறிய ரெட்டிகள்/கவுட்'கள் செய்யும் கீழ்த்தரமான செயல் இது, ஏற்கனவே மொட்டை அடிக்கும் இடத்தில் எல்லோரும் காணும் வகையில் சிலுவை அணிந்து கொண்டு மொட்டை அடிப்பவர் வந்ததால் கிளம்பிய சர்ச்சை மூடி மறைக்க பட்டது, இப்போது இது போன்றதொரு முயற்சி. 60 விழுக்காடு திருப்பதி மக்கள் மதம் மாறி விட்டனர் என்றவொரு தகவல் பத்திரிகைகளால் ஏன் உண்மையை வெளியே விட முடியவில்லை ?

துப்பாக்கியைக் காட்டி மிரட்டியவர் 14 மணி நேர போராட்டத்துக்குப் பின் பிடிபட்டார்


கீழ்ப்பாக்கம் ஈ.வெ.ரா. சாலையில் ஒரு தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பு
உள்ளது. இந்த குடியிருப்பில் முதல் மாடி வீட்டில் விருதுநகரைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் சா. விஜயகர் (43) குடியிருந்து வருகிறார். 4 ஆண்டுகளாக குடியிருந்து வரும் அவர், 3 ஆண்டுகளாக வாடகை பாக்கி வைத்திருந்தாராம்.
இது தொடர்பாக அந்த வீட்டின் உரிமையாளருக்கும் விஜயகருக்கும் இடையே நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்ததாம். இந்த வழக்கில் வீட்டின் உரிமையாளருக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து புதன்கிழமை காலை 7 மணியளவில் அந்த அடுக்குமாடி குடியிருப்பு சங்க நிர்வாகிகள், விஜயகரை சங்க அலுவலகத்துக்கு அழைத்து வீட்டை காலி செய்வது தொடர்பாக பேசினராம்.
அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றவே விஜயகர், சங்க நிர்வாகிகள் சிலரை தாக்கியதாகத் தெரிகிறது. அவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.

புதன், 22 மே, 2013

TMS மருத்துவ மனையில் இருந்து சுகமாக வீடு திரும்பினார்

t;டி.எம்.சௌந்தர்ராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்
என்ற செய்தி கடந்த சில வாரங்களாக இசை ரசிகர்களை வருத்திக் கொண்டிருந்தது. த‌ற்போது அ‌ந்த கவலை மேகம் நல்லபடியாக நீங்கியிருக்கிறது. காலங்கள் கடந்த பின்னும் டிஎம்எஸ்-ஸின் குரல் இசை ரசிகர்களை இன்னும் தாலாட்டிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில்கூட அவரை அழைத்து பாராட்டு மழையில் நனைத்து அனுப்பினர் ரசிகர்கள். திடீரென்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது அனைவருக்குமே பேரதிர்ச்சி. வீட்டில் வழுக்கி விழுந்து அவ‌ரின் தலையில் அடிபட்டிருந்தது.அந்த காயத்துக்கான சிகி‌ச்சை முடிந்து திரும்பிய பின் மூச்சுத் திணறலுக்காக மீண்டும் மருத்துவமனை. இந்தமுறை அவ‌ரின் ரசிகர்கள் உண்மையிலேயே பயந்து போயினர். ஆனால் நூற்றுக்கணக்கானவர்களின் பிரார்த்தனையால் நோய் குணமாகி மந்தைவெளியில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பியிருக்கிறார் டிஎம்எஸ்.அவர் நல்ல ஆரோக்கியத்துடன் எப்போதும் இருக்க வேண்டும் என்பதே அனைவ‌ரின் அவா.

IPLசூதாட்டம்: BCCI ஸ்ரீனிவாசன் மருமகன் விசாரணை வலையில்!

பிசிசிஐ தலைவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் ஸ்ரீனிவாசனின் மருமகனுமான குருநாத் மெய்யப்பன் என்பவரை ஐபிஎல். சூதாட்டம் தொடர்பாக மும்பை போலீஸ் விசாரிக்கலாம் என்று தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.>நெற்று சூதாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மறைந்த இந்தி நடிகர் தாரா சிங்கின் மகன் விண்டூ தாரா சிங்கை விசாரணை செய்தபோது பிசிசிஐ. ஸ்ரீனிவாசனைன் மகன் குருநாத் மெய்யப்பனுடன் தொடர்ந்து தொலைபேசி உரையாடலில் இருந்த தகவல் வெளியாகியுள்ளது.குர்நாத் மெய்யப்பந்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓ. ஆவார்.விண்டூவை விசாரிக்கும்போது சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் உறவினருடன் தனக்கு தொடர்பு இருப்பதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.ஐபிஎல். போட்டிகளின் போது குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிகளின் போது விண்டூ தாரா சிங் மிக சுலபமாக வி.ஐ.பி. பாக்சில் உட்கார்ந்தார். மேலும் ஆட்டம் முடிந்தவுடன் நடைபெறும் விருந்துகளிலும் விண்டூ மிக எளிதாக கலந்து கொண்டுள்ளார்.இது குறித்து மேலும் விசாரணையில் தகவல்கள் வரும் வரையில் எதுவும் கூற முடியாது என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.இந்த நிலையில் ஸ்ரீனிவாசன் மருமகன் குருநாத் மெய்யப்பன் விண்டூவுடன் தொலைபேசியில் பல முறை பேசியுள்ளது பற்றி இவரிடம் மும்பை போலீஸ் விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.>இப்போதைக்கு அவரை அழைத்து விசாரிப்போம் என்று விசாரணியில் ஈடுபட்டுள்ள காவலதிகாரி ஒருவர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜெயாவின் மற்றுமொரு அநியாயம் 20000 TVக்கள் நாசம் ! சிஏஜி அறிக்கை

கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக ஜெயலலிதா மூழ்கடித்த மற்று மொரு நல்ல திட்டம் இலவச தொலைகாட்சி திட்டம் , பயனாளிகளுக்கு கொடுக்க வேண்டிய   20 ஆயிரம் தொலைக்காட்சிகள் பேட்டிகள் மழையும் வெய்யிலும் பட்டு நாசமாயிற்று , மக்களின் வரிப்பணத்தில் விளையாடும் ஜெயலிலதா .
சிஏஜி அறிக்கை சென்னை: திமுக ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு இலவசமாக கொடுப்பதற்காக கொள்முதல் செய்யப்பட்ட 20 ஆயிரம் தொலைக்காட்சிகள் குடோன்களிலேயே கிடப்பில் போடப்பட்டதால் ரூ4 கோடி நட்டம் ஏற்பட்டிருக்கிறது என்று மத்திய கணக்கு தணிக்கை குற்றம்சாட்டியுள்ளது. திமுக ஆட்சிக்கால இலவச திட்டங்களில் வண்ண தொலைக்காட்சி வழங்குதலும் முக்கியமானது. இதற்காக திமுக ஆட்சிக் காலத்தில் 1.65 கோடி தொலைக்காட்சிகள் ரூ3,907 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டன. இது 6 கட்டங்களாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இவற்றில் ரூ22. 82 கோடி மதிப்பிலான 95,725 தொலைக்காட்சிகள் வெவ்வேறு குடோன்களில் 16 முதல் 29 மாதங்களாக வைக்கப்பட்டிருந்தன. இவை கடைசி கட்டமாக வழங்க திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால் அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இந்த தொலைக்காட்சிகள் வழங்கப்படவில்லை.

ஆப்பிழுத்த அரைவேக்காடு அம்மாவிடம் புதுபாடம்


2 ஜி அலைக்கற்றையில் அத்தனை பெரும் பம்முகிறார்கள்

08-2g-4
08-2g-22 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் தலைவர் பி.சி.சாக்கோ, “அந்த முறைகேட்டிற்கான மொத்தப் பழியையும் ஆ.ராசா மீது சுமத்தியும், மன்மோகன் சிங், ப.சிதம்பரம் ஆகியோரை அப்பழுக்கற்ற யோக்கியர்களாகச் சித்தரித்தும்” நகல் அறிக்கையைத் தயாரித்திருக்கிறார். இந்த அறிக்கை கூட்டுக் குழு உறுப்பினர்களின் கைகளுக்கு வரும் முன்பே பத்திரிகைகளில் கசியவிடப்பட்டது. “இது குழுத் தலைவர் பி.சி.சாக்கோவின் கைங்கர்யம்” என பா.ஜ.க., தி.மு.க., போலி கம்யூனிஸ்டு கட்சிகள் குற்றஞ்சுமத்தியுள்ளன.
இந்த வரைவு அறிக்கை, “முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்து, அவரை நம்பவைத்து ஏமாற்றிவிட்டதாக”க் குற்றஞ்சுமத்தியிருக்கிறது. இது ஒருதலைப்பட்சமான, நியாயமற்ற குற்றச்சாட்டு மட்டுமல்ல; அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாகச் சமீபத்தில் வெளிவந்துள்ள பல்வேறு உண்மைகளை – ஆ.ராசா மட்டுமின்றி, அந்த முறைகேட்டில் யார் யாருக்கு என்னென்ன தொடர்பு உள்ளது என்பது குறித்து அம்பலமாகிவரும் உண்மைகளைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, ஆ.ராசாவை மட்டும் பலிகிடாவாக்கும் அயோக்கியத்தனமான குற்றச்சாட்டுமாகும்.

லார்டு திருப்பதி வெங்கடேஸ்வரா ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கலாமா?

tirupathi-4"திருப்பதி ஏழுமலை : கடவுள் பெயரில் ஒரு முதலாளி !"

லார்டு வெங்கடேஸ்வரா இப்படி ரியல் எஸ்டேட் தொழிலில் சக்கை போடுவதைப் பார்த்து நிலங்களை பெறுவதற்கென்றே ஒரு அறக்கட்டளையை ஆரம்பிக்கும் முடிவில் தேவஸ்தானம் இருக்கிறதாம். பிட்டுக்கு மண் சுமந்தார், ஏழை குசேலனின் பிடி அவலை தின்றார் என்று ஏழைப் பங்களனாக, படத்துக்குப் படம் கெட்டப்பை மாற்றும் கமல் போல புராணங்களில் அவதரித்த கடவுள் இன்று திருப்பதியில் மாபெரும் பணக்காரனாக, முதலாளியாக விசுவரூபமெடுத்து நிற்கிறார்.
தமிழ் சினிமா நடிகர்களில் அதிகம் சம்பளம் வாங்குபவர், மீடியம், சுமார், கடைசியில் மார்க்கெட் இல்லாதவர் என்று இருக்கும் நிலைமை இந்துமதக் கடவுளர்களிடத்திலும் உள்ளது. சமத்துவமும், சோசலிசமும் இங்கே நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.

செவ்வாய், 21 மே, 2013

ஒரே ஓவரில் 2.5 கோடி பணத்தை வென்றார் cricket bookie Chandresh Patel

space of just seven minutes early in the evening on May 9, cricket bookie Chandresh Patel allegedly made Rs 2.5 crore. Those were the
minutes that India pacer Sreesanth took to send down his second, allegedly
fixed, over in Mohali, conceding a predetermined number of runs. Those were also the minutes in which Patel made his killing 
புதுடெல்லி: ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்ட ஸ்ரீசாந்த் வீசிய 1 ஓவரில் சூதாட்ட தரகர் ஒருவர் ரூ.2.5 கோடி பணத்தை வென்றார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்திரேஷ் படேல் என்ற சூதாட்ட தரகர், ரூ.60 லட்சம் பணத்தை ஸ்ரீசாந்த்திடம் கொடுத்து ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட செய்தார். அதன்படி ஸ்ரீசாந்த் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தான் வீசிய ஓவரில் அதிக ரன்களை விட்டு கொடுத்தார்.ஸ்ரீசாந்த் வீசிய அந்த ஒரு ஓவரில் மட்டும் சந்திரேஷ் படேல் ரூ.2.5 பணத்தை வென்றுள்ளார். இதே போல் பல சூதாட்ட தரகர்களும் ஒரே இரவில் கோடி கோடியாக பணத்தை வென்றுள்ளனர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வடிவேலுவின் அட்டகாசமான Second Round இன்று ஆரம்பம்

வடிவேலுவின் மறு பிரவேசம் அவரது ரசிகர்களால் ஆவலுடன்
எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் தெனாலி ராமன் படத்திற்காக பழைய சிவாஜி, எம்.ஜி.ஆர். ஸ்டைலில் அமைந்த பாடல் காட்சி ஒன்றில் வடிவேலு நடிக்க ஷூட்டிங் துவங்கியது.தெனாலிராமன் படத்தை இயக்குபவர் போட்டாப்போட்டி இயக்குனர் யுவ்ராஜ், படத்தின் இசையை டி.இமாம் கவனித்துக் கொள்கிறார்.இதற்காக பழைய சிவாஜி, எம்.ஜி.ஆர் படங்களில் வரும் ஸ்டைலில் ஒரு பாட்டை இசையமைத்திருக்கிறார் இமாம். ரிக்கார்டிங் தியேட்டரில் வடிவேலு இருந்தார். இப்போது இந்தப் பாடல் காட்சியுடந்தான் தெனாலி ராமன் ஷூட்டிங்கே துவங்கியது.>வடிவேலுவை சந்தித்தது ஒரு இனிய அனுபவம் 1960களில் வருவது போன்ற ஒரு பாடலை நான் அவருக்கு வழங்கியுள்ளேன். வடிவேலுவே மிக மகிழ்ச்சியடைந்து அந்த காலத்து சிவாஜி, எம்.ஜி.ஆர். பாட்டை எனக்கு கொடுத்திருக்கீங்க என்று நன்றி கூறியதாக தெரிவிக்கிறார் டி.இமா‌ன்.

கடன் : குடும்பத்தையே கொன்றுவிட்டு டிராவல்ஸ் அதிபர் தற்கொலை


ஆலந்தூர்:கடன் பிரச்னையால் தனது அம்மா, மனைவி, மகளை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு, ரயிலில் பாய்ந்து டிராவல்ஸ் அதிபர் தற்கொலை செய்துகொண்டார். அவரது சடலம் தண்டவாளத்தில் இன்று மீட்கப்பட்டது. ஆதம்பாக்கத்தில் பூட்டிய வீட்டில் இருந்து 3 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் 42வது தெருவில் உள்ள ஒரு வீட்டின் முதல் தளத்தில் வசித்தவர் சுந்தரேசன் (48). சொந்தமாக 2 கார் வைத்து டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது மனைவி சித்ரா, மகள் தாமிரா (10). இவர்களுடன் சுந்தரேசனின் அம்மா தங்கம்மாளும் வசித்தார். அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்கள். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சுந்தரேசன் சென்னை வந்தார். தில்லை கங்கா நகரில் 10 ஆண்டாக வாடகை வீட்டில் வசித்தார்.

phaneesh murthy பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து பிடிபட்டார்

This is not the first time Murthy is being charged with sexual misconduct. ... Second sex scandal on Phaneesh Murthy Igate
பெங்களூர்: ஐகேட் சாப்ட்வேர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து பானேஷ் மூர்த்தி நீக்கப்பட்டுள்ளார். நிறுவனத்தின் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை தந்தது மற்றும் ஒரு பெண் ஊழியருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பானேஷ் மூர்த்தி இவ்வாறு செக்ஸ் குற்றச்சாட்டுகளால் பதவி நீக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே இன்போசிஸ் நிறுவனத்தின் அமெரிக்க விற்பனைப் பிரிவின் தலைவராக இருந்த இவர் மீது அவரது செயலாளராக இருந்த ரேகா மேக்சிமோவிச் என்ற பெண் பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டு கூறியதையடுத்து மூர்த்தியை ராஜினாமா செய்ய வைத்தது இன்போசிஸ். இது நடந்தது 2003ம் ஆண்டு. இந்தக் குற்றச்சாட்டைக் கூறிய ரேகாவுக்கு 3 மில்லியன் டாலர்களைத் தந்து பிரச்சனையை நீதிமன்றத்துக்கு வெளியே தீர்த்தது இன்போசிஸ்.

1,400 கோடி:தலித் நினைவிடங்கள் கட்டியதில் மாயாவதியின் யானை முழுங்கியது

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆட்சி காலத்தில் யானை சிலைகளுடன் நினைவிடங்கள் கட்டியதில் ரூ.1,400 கோடி ஊழல் நடைபெற்றதாக மாநில லோக் ஆயுக்தா குற்றம்சாட்டியுள்ளது, மாயாவதிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. உ.பி.யில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியின்போது, ரூ.5 ஆயிரத்து 919 கோடி செலவில் 14 தலித் நினைவிடங்கள் நிறுவப்பட்டன. லக்னோ, நொய்டா ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட இந்த நினைவிடங்களில் மாயாவதி, கன்சிராம் ஆகியோருடைய சிலைகளுடன் பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை சிலைகளும் அமைக்கப்பட்டன. இதில் பெரும் ஊழல் நடந்துள்ளதாக எழுந்த புகாரின்பேரில், கடந்த ஆண்டு மே மாதம், போலீசார் முதல்கட்ட விசாரணை நடத்தினர்.

மருத்துவ கல்லூரிகளில் 28,300 விண்ணப்பங்கள் இதுவரை

அரசு மருத்துவ கல்லூரிகளில் 1,823 எம்.பி.பி.எஸ். இடங்களும், அரசு பல் மருத்துவ கல்லூரியில் 85 சீட்டுகளும் பொது கவுன்சிலிங் மூலமாக நிரப்பப்படுகின்றன. இவை தவிர, அரசு ஒதுக்கீடாக தனியார் மருத்துவ கல்லூரிகளில் 836 எம்.பி.பி.எஸ். இடங்களையும், தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் 909 இடங்களையும் கவுன்சிலிங் மூலமாகத்தான் நிரப்புகிறார்கள்.நடப்பு கல்வி ஆண்டில் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரிக்கு 100 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும், சென்னை மருத்துவ கல்லூரிக்கு 85 இடங்களுக்கும், ஸ்டான்லி மருத்துவ கல்லூரிக்கு 100 இடங்களுக்கும் இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.) அனுமதி அளிக்கும் பட்சத்தில் அகில இந்திய இடஒதுக்கீடு இடங்கள் நீங்கலாக எஞ்சிய இடங்களும் கவுன்சிலிங் மூலமாக நிரப்பப்படும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த 9-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை வழங்கப்பட்டன. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 32,050 விண்ணப்பங்கள் விற்பனை ஆனது. பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க 20.05.2013 திங்கள்கிழமை கடைசி நாள் ஆகும். அதன்படி, கடைசி நாளான திங்கள்கிழமை வரை மொத்தம் 28,300 விண்ணப்பங்கள் நேரிலும், தபால் மூலமாகவும் சமர்ப்பிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் சுகுமார் தெரிவித்தார்.

இந்திய சீன நட்புறவு துளிர்த்தது! ஒரு புதிய அத்தியாயம்

வரலாறு, சில பிரச்னைகளை விட்டுச் சென்றிருக்கலாம். ஆனாலும்,
இந்தியாவுக்கு வந்துள்ளார். அவருக்கு நேற்று, ஜனாதிபதி மாளிகையில், ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியை முடித்ததும், லீ கெகியாங், ஐதராபாத் இல்லம் சென்றார். அங்கு, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான உயர்மட்டக் குழுவும், லீ கெகியாங் தலைமையிலான, சீன உயர் மட்டக்குழுவும், பேச்சுவார்த்தை நடத்தியது. காலை, 10:00 மணிக்கு துவங்கிய பேச்சுவார்த்தை, மதியம், 12:30 வரை நீடித்தது.இதன்பின், இருவரும் கூட்டாக நிருபர்களைச் சந்தித்தனர். அப்போது, சீன பிரதமர் லீ கெகியாங்
கூறியதாவது:ஆசிய கண்டத்தின் தீர்மான சக்திகளாக, இந்தியாவும், சீனாவும் உள்ளன. சர்வதேச வர்த்தகத்துக்கு, மிகப்பெரிய உந்து சக்திகளாக, இரு நாடுகளும் இருந்து வருகின்றன. இரு தரப்புக்கும் இடையே, பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றன; அவற்றை, மூடி மறைத்திட விரும்பவில்லை.

திருப்பதி கோவில் அசையா சொத்தின் மதிப்பு, 1 லட்சம் கோடி ரூபாய் !

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானின் அசையா சொத்தின் மதிப்பு, 1 லட்சம் கோடி ரூபாய்' என, திருப்பதி தேவஸ்தான நிதி நிபுணர்கள் குழு கணக்கிட்டுள்ளது. திருப்பதி கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். இதை நெறிமுறைப்படுத்த, திருமலை - திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி எல்.வி. சுப்ரமணியன், சில நடைமுறைகளை மேற்கொண்டு வருகிறார். 2009ம் ஆண்டு நிலவரப்படி, வருவாய்ப் பிரிவு மேலதிகாரி, ராமச்சந்திர ரெட்டி, நாடு முழுவதும் மற்றும் பிற நாடுகளில் திருப்பதி கோவிலுக்கு சொந்தமாக உள்ள நிலங்கள் குறித்து, ஒரு ஆண்டு காலம் கணக்கிட்டு, 4,143 ஏக்கர் உள்ளதாக பதிவு செய்தார்.
இந்த அசையா சொத்துகளின் அப்போதையை மதிப்பு, 34.4 ஆயிரம் கோடி ரூபாய். இவற்றில் ஆந்திராவில் உள்ள அசையா சொத்து மதிப்பு, 33.1 ஆயிரம் கோடி ரூபாய்; அண்டை மாநிலங்களில், உள்ள அசையா சொத்து மதிப்பு, 298.59 கோடி ரூபாய்.

திங்கள், 20 மே, 2013

ஐபிஎல்: மங்காத்தாவே ! மொத்த மதிப்பு ரூ 50,000 கோடியைத் தாண்டுகிறது

ஸ்பாட் பிக்சிங்இந்தியன் பப்பெட்ஸ் லீக்நாட்டுப்பற்று, விளையாட்டுணர்வு ஏதும் இல்லாமல் அதிக விலை கொடுக்கும் முதலாளிக்கு தன்னை விற்றுக் கொள்ளும் ஒரு ஆட்டக்காரன், ஒரு சூதாடிக்கு தன்னை விற்றுக்கொண்டதில்என்ன ஒழுக்க கேடு வந்து விட்டது ?

  ஐ.பி.எல் – இந்தியன் பப்பெட்ஸ் லீக் (நன்றி : இந்தியா டுடே)
  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூன்று வீரர்கள் பல இலட்ச ரூபாய்களை சூதாட்டக்காரர்களிடம் வாங்கிக் கொண்டு ‘ஸ்பாட் ஃபிக்சிங்’ மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
  சென்ற வருடம் பணம் வாங்கிக் கொண்டு சில வீரர்கள் ஆட்டத்தை விட்டுக்கொடுத்ததை இந்தியா டிவி அம்பலப்படுத்தியிருந்தது. அவர்களெல்லாம் புதுமுகங்கள், மூத்த வீரர்கள் இல்லை என்ற குறையை ஸ்ரீசாந்த் போக்கி விட்டார்.
  ஐபிஎல்லின் ஒரு சீசனது மதிப்பு ரூ 20,000 கோடி இருக்குமென்றால் அதன் மொத்த மதிப்பு ரூ  50,000 கோடியைத் தாண்டுகிறது. 9 அணிகளின் உரிமையாளர்களும் நாடறிந்த தரகு முதலாளிகள்.
  குற்றங்களையே பாதையாக்கி ரிலையன்ஸின் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய அம்பானியின் மும்பை இந்தியன்ஸ், ஊழியர்களின் ஊதியத்தையும் பொதுத்துறை வங்கிகளையும் கொள்ளையிட்ட மல்லையாவின் ராயல் சேலஞ்சர்ஸ், சிமெண்ட் மூட்டையில் பகற்கொள்ளையனும், ஆந்திரத்து ஓய்.எஸ்.ஆர்.ரெட்டியுடன் சேர்ந்து கொள்ளையடித்த வழக்கில் விசாரிக்கப்படுபவருமான இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனின் சென்னை சூப்பர் கிங்ஸ், மக்கள் பணம் ரூ 25,000 கோடியை ஏப்பம் விட்டிருக்கும் சஹாரா நிறுவனத்தால் வாங்கப்பட்டிருக்கும் புனா அணி… என ஒவ்வொரு அணி முதலாளியும் கிரிமினல்தான்.

  இப்போது முஷாரப்பை நவாஸ் ஷெரிப் நாடுகடத்த போகிறார் !சினிமாவை விட திருப்பங்கள் நிறைந்த இருவரின் ஆட்டம்

  சமீபத்தில் நடந்த பாகிஸ்தான் தேர்தலில் முஸ்லிம் லீக் (என்) கட்சி அமோக
  வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து அக்கட்சி தலைவர் நவாஸ்செரீப் வருகிற ஜூன் 2-ந்தேதி பிரதமராக பதவி ஏற்க உள்ளார். அப்போது தனது எதிரியான முஷரப் பாகிஸ்தானில் இருக்கக்கூடாது. அவரை மீண்டும் நாடு கடத்த வேண்டும் என நவாஸ் செரீப் விரும்புகிறார். நவாஸ் செரீப் பிரதமராக இருந்தபோது முஷரப் ராணுவ தலைமை தளபதி ஆக இருந்தார். அப்போது, ராணுவ புரட்சி மூலம் நவாஸ் செரீர்ப்பிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றினார். பின்னர் அதிபர் ஆனவுடன் நவாஸ் செரீப் மற்றும் பெனாசிர் பூட்டோவை நாட்டை விட்டு வெளியேற்றினார். இந்த நிலையில், கடந்த தேர்தலில் பெனாசிர் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து முஷரப் நாடு கடத்தப்பட்டார். தேர்தல் அறிவித்ததை தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பாகிஸ்தான் திரும்பினார். ஆனால், அவரது கனவு பலிக்கவில்லை. தேர்தலில் போட்டியிட அவருக்கு தேர்தல் கமிஷன் தடை விதித்தது.

  மேலும் பெனாசிர் கொலை வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் கைதாகி சிறை காவலில் உள்ளார்.முன்பு நவாஸ் ஷேரிபை   நாடுகடத்தினார் முஷாரப் இப்போது நாவாசின் நேரம் இப்போது முஷராபை நாடு கடத்த போகிறார் நவாஸ் சேரிப்

  காதல்திருமணம் செய்த தங்கையை வெட்டி கொன்ற அண்ணன்! மாமனையும் கொன்றான்

  நாகர்கோவில்: காதல் திருமணம் செய்த பெண் மாமனாருடன் கொலை - அண்ணன் உள்பட 3 பேர் கைதுகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் புதுகுடியிருப்பைச் சேர்ந்தவர் ஜெயராம் (வயது 55), பெயிண்டர். இவருடைய மகன் சிவா (21), பட்டதாரி வாலிபர். இவர் ஒருமுறை நண்பருக்கு போனில் பேச முயன்றபோது வேறு ஒருவருக்கு 'மிஸ்டு கால்' ஆக சென்றது. அந்த மிஸ்டு காலில் சென்னையை அடுத்த பொன்னேரியைச் சேர்ந்த சவுமியா (21) என்பவர் பேசினார். அதன்பிறகு சிவாவும், சவுமியாவும் அடிக்கடி பேசிக்கொண்டனர். இந்த பேச்சு அவர்கள் இடையே காதலாக மலர்ந்தது. கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். சவுமியாவுக்கு 3 அண்ணன்கள், ஒரு தம்பி, ஒரு தங்கை உள்ளனர்.
  சவுமியாவின் காதல் விவகாரம் வீட்டுக்கு தெரிய வந்ததும் அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினார்கள். இதனால் சவுமியா வீட்டை விட்டு வெளியேறி சிவாவை தேடி நாகர்கோவில் வந்தார். அவர்கள் இருவரும் கிருஷ்ணன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு வடசேரி போலீஸ் நிலையத்தில் கடந்த 7-ந்தேதி தஞ்சம் அடைந்தனர்.குடும்ப உறவுகளில் possessiveness தான் அதிகமாக அண்ணன் தங்கை பாசம் அல்லது மகள் பாசம் ஜாதி அபிமானம் போன்ற தோற்றங்களாக வெளிப்படுகிறது. இந்த அண்ணன் தங்கையின் காலில் விழுந்து மன்றடியதாக தெரிகிறது , தங்கை மீது அதீத ஈடுபாடு கொண்டிருந்திருக்கிறான் என்பதை இது வெளிக்காட்டுகிறது ..தங்கை இனி எப்போதும் கணவனோடுதான் வாழப்போகிறான் என்பது மிக உறுதியாக தெரிந்தபின்தான் மிக நிதானமாக் ப்ளான் பண்ணி இந்த கொலையை செய்திருக்கிறான் , இது போன்ற உளவியல் தகராறுகள் நாட்டில் நிறைய உண்டு

  அணிகள் எது பிணிகள் எது ? ஸ்டாலினுக்கு கலைஞரின் எச்சரிக்கை

  யாரோ ஒரு நண்பர், அணிகளைப் பற்றி இங்கே
  பேசும்போது ஸ்டாலின் கூட குறுக்கிட்டு, அணிகள் பற்றியெல்லாம் இங்கே பேச தேவையில்லை, ஒரு சொற்பொழிவாளர் நடந்து கொள்ள வேண்டிய முறை, அவருக்கு நாம் தருகின்ற வாய்ப்பு, ஆக்கம், ஊக்கம் இதைப் பற்றி பேசினால் போதுமென்று சொன்னார். நான் அதிலே கொஞ்சம் வேறுபடுகிறேன். ஸ்டாலின் இளையவர், என்னைப் போன்ற இவ்வளவு அனுபவத்தை, தி.மு.க.வின் அரசியலில் அவர் முழுதும் இன்னும் உணராதவர், உணர்ந்தவன் என்ற காரணத்தால் இந்த ‘‘அணிகள்'' பெருகினால், இவை ‘‘அணிகளாக'' இருக்காது; கழகத்திற்கு ‘‘பிணிகளாக'' ஆகிவிடும் என்பதற்காகத்தான் இந்த அணிகளையெல்லாம் இப்பொழுதே நாம் திருத்திக்கொள்ள வேண்டுமென்று சொல்ல விரும்புகிறேன். என்று கலைஞர் குறிப்பட்டது ஸ்டாலின் காதுக்கு எட்டுமா ?
  tamil.oneindia.in

  கன்னித்தன்மை பரிசோதனை காட்டு மிராண்டி தனமானது ! நீதிமன்றம் கண்டனம்

  புதுடில்லி:"பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண்ணின்
  கன்னித்தன்மையை ஆராய மேற்கொள்ளப்படும் சோதனைக்கு, கை விரல்களைப் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்; வேறு விதமான மருத்துவ ஆய்வு முறைகள் பின்பற்றப்பட வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகும் பெண்களுக்கு நடத்தப்படும் சோதனைகள், பழமையான முறையில் உள்ளன. பாதிக்கப்பட்ட பெண், உண்மையிலேயே பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளாரா? அவரின் பிறப்புறுப்பில் உள்ள கன்னித்திரை, கிழிந்துள்ளதா என, சோதனை செய்ய, இரு விரல்களை டாக்டர்கள் பயன்படுத்துகின்றனர்.இத்தகைய சோதனையால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, மேலும் தர்மசங்கடமான நிலை ஏற்படுகிறது. அந்தப் பெண்ணுக்கு வெட்கமும், வேதனையும் உண்டாவதால், இரு விரல் சோதனையை தடை செய்ய வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

  இது குறித்து, நீதிபதிகள், பி.எஸ்.சவுகான் மற்றும் எம்.எம்.கலிபுல்லா ஆகியோரை கொண்ட, "டிவிஷன் பெஞ்ச்' சமீபத்தில் பிறப்பித்த உத்தரவு:பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண்ணின் உண்மை நிலை மற்றும் கன்னித்தன்மையைக் கண்டறிய மேற்கொள்ளப்படும், இரு விரல் சோதனை, சந்தேகமே இல்லாமல், அந்தப் பெண்ணின் தனித்தன்மைக்கும், உடலுக்கும், மனதிற்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. பெண்ணின் மரியாதையை சீர்குலைக்கும், அத்தகைய சோதனை கைவிடப்பட வேண்டும்.

  Pakistan இம்ரான் கான் கட்சி பெண் நிர்வாகி சுட்டு கொலை

  கராச்சி: இம்ரான் கான் கட்சியை சேர்ந்த மூத்த பெண் நிர்வாகி சுட்டுக்
  கொல்லப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானில் கடந்த 11ம் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது. இதையடுத்து, நவாஸ் பிரதமராக பதவியேற்க உள்ளார். ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி படுதோல்வி
  அடைந்த நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெரிக் இ இன்சாப் கட்சி தேர்தலில் 2வது இடத்தை பிடித்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போது மேடை சரிந்து படுகாயமடைந்த இம்ரான் கான், லாகூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  இந்நிலையில், இம்ரான் கான் கட்சியின் சிந்து மாகாண துணைத் தலைவர் சாரா யூசுப் சாஹித், நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்டார். வீட்டுக்கு வெளியே நின்றிருந்த அவரை மர்ம ஆசாமிகள் சுட்டுக் கொன்றனர்.

  கலைஞர் ஸ்டாலினுக்கு கடிவாளம் ! மறைமுக எச்சரிக்கை

  சென்னை:""நம்மை நாமே அழித்துக் கொள்கிற அளவிற்கு, நம்மிடத்திலே ஒற்றுமை குலைந்து வருகிறது என்பதை எண்ணிப் பார்க்கும்போது, வேதனை அடைகிறேன்'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.தி.மு.க., சொற்பொழிவாளர்கள் கூட்டத்தில், கருணாநிதி பேசியதாவது:தி.மு.க.,வில் மகளிர் அணி, இளைஞர் அணி, மாணவர் அணி, தொழிலாளர் அணி, இலக்கிய அணி என, பல அணிகள் இருக்கின்றன. அணிகள் வளர வேண்டும், வலிமை பெற வேண்டும் என்று எண்ணுகின்ற அதே நேரத்தில், ஊருக்கு ஊர் உருவாகும் அணிகள் ஒழிய வேண்டும் என்பது தான், நான் வெளியிடுகிற செய்தியாக இருக்க முடியும்.இங்கே பேசும்போது, ஒரு குரல் எழுந்தது. அந்தக் குரலையொட்டி, வேறு சிலர் மறுப்புக் குரல் தெரிவித்தனர்; பின் அக்குரல் அடங்கிற்று. ஏன் அந்தக் குரல் எழுந்தது. அதற்கு மறுப்பாக இன்னொரு குரல் எழக்காரணம் என்னவென்றால், அணிகள் தான்.யாரோ ஒரு நண்பர் அணிகளைப் பற்றி இங்கே பேசும்போது, ஸ்டாலின் கூட குறுக்கிட்டு, "அணிகள் பற்றியெல்லாம் இங்கே பேசத் தேவையில்லை. ஒரு சொற்பொழிவாளர் நடந்து கொள்ள வேண்டிய முறை, அவருக்கு நாம் தரும் வாய்ப்பு, ஆக்கம், ஊக்கம் இதைப் பற்றிப் பேசினால் போதும்' என்றார்.< கட்சிக்கு பிணிகள்:ஸ்டாலின் இளையவர், என்னைப் போன்ற இவ்வளவு அனுபவத்தை, தி.மு.க.,வின் அரசியலில், அவர் இன்னும் உணராதவர். உணர்ந்தவன் என்ற காரணத்தால், இந்த அணிகள் பெருகினால், இவை அணிகளாக இருக்காது. கட்சிக்கு பிணிகளாக ஆகிவிடும்.
  இந்த அணிகளை, இப்பொழுதே நாம் திருத்திக் கொள்ள வேண்டும். நம்மை வேறு பகைவர் வந்து அழிக்கா விட்டாலும், நம்மை நாமே அழித்துக் கொள்கிற அளவிற்கு, நம்மிடத்திலே ஒற்றுமை குலைந்து வருகிது என்பதை எண்ணி பார்க்கும் போது வேதனை அடைகிறேன்.இவ்வாறு, அவர் பேசினார். குஸ்பு கூட்டத்தை விட ஸ்டாலின் கூட்டம் குறைவாமே? குஸ்புவை நீக்க முடியுமா?...

  தமிழக சுற்றுலா வருமானத்திற்கு குழிபறித்த riots! திருச்சி மாவட்டம் கடும்பாதிப்பு

  "அச்சுறுத்தும்' அரசியல் பிரச்னைகளால், தமிழகத்துக்கு அன்னிய செலாவணியை ஈட்டி தரும், இலங்கை சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, வெகுவாக குறைந்து விட்டது. இதை ஈடு செய்ய வேண்டிய, "பொறுப்பு'உடைய மத்திய, மாநில அரசுகள் வெறுமனே கைகட்டி வேடிக்கை பார்க்கும் நிலை நீடிக்கிறது.இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து, திருச்சி விமான நிலையம் வந்து, திருச்சி மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், சமயபுரம், தஞ்சை பெரிய கோவில், யூனியன் பிரதேசமான காரைக்காலில் உள்ள திருநள்ளாறு உள்ளிட்ட நவக்கிரக் கோவில்கள், ராமேஸ்வரம், மதுரை கோவில்களில் தரிசனம் செய்வது இலங்கை தமிழர்களின் வழக்கம்.இலங்கையை சேர்ந்த சிங்களர்கள், தஞ்சை பூண்டி மாதா கோவில், நாகை வேளாங்கண்ணி தேவாலயங்களுக்கு செல்வதுடன், தஞ்சை பெரிய கோவில் மற்றும் ஒன்பது நவக்கிரக் கோவில்கள், ராமேஸ்வரம் கோவிலுக்கு ஆண்டுதோறும் சுற்றுலாவாக வருகின்றனர்.இலங்கையில் உள்ள முஸ்லிம்களும் தமிழக சுற்றுலா பயணம் மேற்கொள்வது வழக்கம்.

  தகராறு செய்த மணமகனுக்கு பாடம் புகட்டிய மணப்பெண்

  போபால்:மணமகன் கேட்ட, மோட்டார் பைக்கிற்கு பதில், வேறு பைக்கை
  வாங்கி வைத்திருந்த பெண் வீட்டார் மீது, கோபம் கொண்ட மணமகன், திருமணத்திற்கு மறுத்தார். இதனால், கோபம் கொண்ட பெண் வீட்டார் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகத்தினர், மணமகன் வீட்டாரை சிறை பிடித்தனர்.மத்திய பிரதேசத்தின், படாரியா என்ற கிராமத்தில், சிவேந்திரா என்ற இளைஞனுக்கும், நீது என்ற இளம் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. வரதட்சணையாக, பணம், நகை, மோட்டார் பைக் தர வேண்டும் என, மணமகன் பெற்றோர் கேட்டனர். அவற்றை கொடுக்க, நீதுவின் பெற்றோரும் சம்மதித்தனர்.நேற்று முன்தினம், திருமண நாளுக்கு முந்தைய இரவில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியின் போது, மணமகனுக்காக, பெண்ணின் பெற்றோர் வாங்கி வைத்திருந்த பைக்கை பார்த்த, மணமகன் சிவேந்திரா சினம் கொண்டான். "நான் கேட்ட பைக்கிற்கு பதில், வேறு பைக்கை வாங்கி வைத்துள்ளீர்களே...' என, கோபம் கொண்ட அவன், "வேறு பைக் வாங்கித் தந்தால் தான், திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பேன்' என, அடம் பிடித்தான்.பெண் வீட்டார் பலமுறை கெஞ்சிக் கேட்டும், பிடிவாதத்தை சிவேந்திரா தளர்த்தவில்லை. இதனால், கோபம் அடைந்த மணப்பெண் நீது, "இவனை திருமணம் செய்ய நான் விரும்ப வில்லை; பைக்கிற்காக, திருமணம் செய்ய மறுக்கும் இவனை, கணவனாக அடைய நான் விரும்பவில்லை' என கூறிவிட்டாள்.