சனி, 19 டிசம்பர், 2020

நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி¸ குன்னூர்¸ ஊட்டி ஆகிய இடங்களில் சென்று குடியேறிய மலையக மக்களின் வாழ்க்கை

No photo description available.
Image may contain: text that says 'Socio-Economic Profile of Sri Lankan Repatriates in Kotagiri L Vedavalli'

Murugan Sivalingam : · சாஸ்திரி...சிறிமா வதைப் படலம்..! (பழையன நினைத்தல்- 2) : நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி¸ குன்னூர்¸ ஊட்டி ஆகிய இடங்களில் புனர்வாழ்வில் சென்று குடியேறிய நமது மக்களின் வாழ்க்கை நிலைமைகளை அறிந்துக் கொள்வதற்காக எனது நண்பர்களின் வீட்டில் கடந்த 2002 ம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு வாரக்காலம் தங்கியிருந்தேன். அவர்களின் வாழ்க்கை நிலைமைகளை அடுத்து வரும் பதிவில் அறியத் தரவுள்ளேன்.. நீலகிரி மாவட்டத்தை களமாகக்கொண்டு புனர் வாழ்வில் வந்த தாயகம் திரும்பிய இலங்கை மக்களின் வாழ்க்கைத் துயரங்கள் பற்றி பல ஆய்வு நூல்கள் எழுதப்பட்டுள்ளதை நாம் அறிதல் அவசியமாகின்றது. 01)வரிசைப்படி எங்கெங்கும் அந்நியமாக்கப்பட்டவர்கள் ( Alienated everywhere) என்ற ஆய்வு நூலை கொடைக் கானல் சிராக் அமைப்பு ) (Ceylon Repatriate Association - Kodaikanal)1984ஆண்டில் வெளியிட்டது.

இந்த நூலின் ஆய்வு குழுவினர்களைக் கீழ் வருமாறு காணலாம். எஸ்.பன்னீர் செல்வம் (இலங்கை மலையக எழுத்தாளர்;;¸ தனது “இலவு காத்தக் கிளி” சிறு கதைக்கு மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் நடத்திய போட்டியில் பரிசு கிடைத்தது. சமீப காலத்தில் சூரியகாந்தி மலையகப் பதிப்பில் “தேயிலைப் புக்கள்” என்ற தொடர் காவியத்தை எழுதியவர் அகதிகள் தெரு..ஜென்ம பூமி ..திறந்தே கிடக்கும் வீடு…ஒரு சாலையின் சரிதம்.. விரல்கள் போன்ற படைப்புக்களை தந்தவர்… உணர்வுமிக்க சமூகவாதி.. கண்டி மாவட்டம் ரங்கல்ல தோட்டத்தைச் சேர்ந்தவர். திண்டுக்கல் காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தில் 2017ம் ஆண்டு நாங்கள் நடத்திய மலையக இலக்கிய விழாவில் பங்குகொண்டவர். தற்போது மதுரையில் வசிக்கிறார்.) ¸ பி.எஸ்.நாதன்¸ ஏ.சிவானந்தன் (கவிஞர்.. சென்று வருகிறேன் ஜென்ம பூமியே.. டீ.எஸ்.ராஜூ நுவரெலியா சிக்கன் ராஜூ.- சிவா சாந்த குமார் - உருசுலா நாதன் - குணசீலி - அந்தோனியம்மாள். ஆலோசகர்கள் :- ஸ்டான் லூர்துசாமி - எஸ்.செபஸ்டியன் ஆகியோராவர்.

பாஜகவில் இணைந்த திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் மந்திரி சுவேந்தி அதிகாரி, 10 எம்.எல்.ஏ.க்கள்

maalaimalar : திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் மந்திரி சுவேந்தி அதிகாரி இன்று பாஜகவில் இணைந்தார். அவரை தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் பிற கட்சியை சேர்ந்த மொத்தம் 10 எம்.எல்.ஏ.க்கள் அமித்ஷா முன்நிலையில் பாஜகவில் இணைந்தனர்.
பாஜகவில் இணைந்த திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் மந்திரி சுவேந்தி அதிகாரி, 10 எம்.எல்.ஏ.க்கள்
கொல்கத்தா:மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஏப்ரல், மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடபெற உள்ளது.

மோடி கூறுவது அப்பட்டமான பொய் - விவசாயிகள் திட்டவட்டம்!

kalaignarseithigal.com - Vignesh Selvaraj: பிரதமர் மீண்டும் மீண்டும் போராடும் விவசாயிகள் மீது குற்றம் சாட்டி மிக மோசமான அரசியல் செய்கிறார் என்றும் அகில இந்திய கிசான் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ">இன்று காணொளிக்காட்சி மூலம் அகில இந்திய கிசான் சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அகில இந்திய கிசான் சங்க பொதுச் செயலாளர் ஹன்னாமோலா, “தேர்தலுக்கு முன்பு 50% உயர்த்தி வழங்குவதாக பா.ஜ.க கூறியது. ஆனால் இன்றும் 25% குறைவாகவே ஆதாரவிலை வழங்கப்பட்டுவருகிறது. ஒன்றரை மடங்கு குறைந்தபட்ச ஆதாரவிலை வழங்கிவருவதாக பிரதமர் கூறுவது அப்பட்டமான பொய்.

“பிரதமர் மோடி கூறுவது அப்பட்டமான பொய்; இனி தீர்மானிக்க வேண்டியது அரசுதான்” - விவசாயிகள் திட்டவட்டம்!
புதிய சட்டங்கள் மூலம் விவசாயிகளை நிலத்திலிருந்து அப்புறப்படுத்திவிட்டு கார்ப்பரேட்டுகளை நேரடியாக விவசாயம் செய்யவைக்க அரசு முடிவு செய்துள்ளது.

BBC :போலி கொரோனா தடுப்பு மருந்து லண்டனில் பதஞ்சலி நிறுவனம் மோசடி

பல்லாயிரம் கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள பதஞ்சலி நிறுவனத்தை ஆச்சார்யா பாலகிருஷ்ணா (இடது) மற்றும் பாபா ராமதேவ் ஆகியோர் நிறுவினர். 

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு ஆற்றலை வலுப்படுத்தும் என்று கூறப்படும் போலி மருந்துகள் லண்டனில் உள்ள பல்வேறு மருந்தகங்களில் விற்கப்பட்டு வருவது பிபிசி புலனாய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.                  இந்தியாவின் 'பதஞ்சலி ஆயர்வேத்' நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் கொரோனில் மருந்து லண்டனில் ஆசிய மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் அமைந்துள்ள கடைகளில் "கோவிட்-19 தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றலை வலுப்படுத்தும்" என்ற விளம்பரத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. .....

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.2,500 -முதல்வர் அறிவிப்பு

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.2,500 -முதல்வர் அறிவிப்பு
  maalaiamalar " :அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.2,500 -முதல்வர் அறிவிப்பு சென்னை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். அவ்வகையில் 2021ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார். அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.2,500 மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். பொங்கல் பரிசுத்தொகுப்பு ஜனவரி 4ஆம் தேதி முதல் வழங்கப்படும். வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கப்பட்டு பொங்கல் பரிசு வழங்கப்படும். எந்த தேதியில் யார் வர வேண்டும் என டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் என்றும் முதலமைச்சர் கூறி உள்ளார்.

இந்திய பட்ஜெட்டை தயாரிப்பது அம்பானி அதானி gang ? உறுதிப்படுத்திய முகேஷ் அம்பானியின் கூற்று

Seetha Ravi Suresh : · அடுத்த 20 ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா உருவாகும் - முகஷ் அம்பானி இதிலிருந்து என்ன தெரியுதுன்னா? 

1, அம்பானியும், அதானியும் சேர்ந்து பாஸிட் பாஜகவினரை இந்தியா வல்லரசாகுமென நம்பவைத்திருக்கிகிறார்கள்.        2, அம்பானி, அதானியை வளர்த்துவிட்டால் நாட்டின் பொருளாதாரம் வளர்ந்திடும்னு, யாரோ ஒரு பொருளாதார ஆலோசகர், பாஜகவை நம்பவைத்திருக்கிறார்.      3, இதுவரை பாஜக செய்துவந்த பொருளாதார ரீதியான திட்டங்களென கூறப்படுகிறவையெல்லாம், தங்களுக்கு சாதகமாக அம்பானியும், அதானியும் சேர்ந்து வடிவமைத்துக்கொடுத்தவையே என, அம்பானியே ஒப்புக்கொள்வதுபோல உள்ளது.

4, அம்பானியின் சகலைதான் பணமதிப்பிழப்பின்போது, ரிசர்வ் பேங்க் தலைவராக இருந்தார் (ஊர்ஜித் படேல்) என்பதில், பாஜகவின் திட்டங்களை தீட்டித்தருவது அம்பானியென தெரிகிறது.

பாவ கதைகள் ... அல்ல பரிதாப கதைகள் .. வெறும் contact மட்டும் இருந்தால் போதும் ..

4 Director 4 Story #Paava Kadhaigal | பாவ கதைகள் | Tamil Anthology | movie  update - YouTube

Arun Mo : · பரிதாபக் கதைகள் விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பாவக் கதைகள் இயக்குநர் எல்லாரும் பணம் இருக்கிறது ஒரு சிறு படம் எடுத்துக்கொடுங்கள் என்று சொன்னால் அந்த வடிவத்திற்கும் தளத்திற்கும் ஏற்றவாறு ஒரு கதை இல்லை எனில் முடியாது என்று மறுத்துவிட வேண்டும். சும்மா இருக்கும் நேரத்தில் பணம் வருகிறது என்று நினைத்து செய்ய இது ஒன்றும் அன்றாட வேலை அல்ல. சமூக பொறுப்புள்ள கடமை. எல்லாவற்றையும் தாண்டி கலை. வெற்றிமாரனின் பகுதியில் வந்த கதையை பிரகாஷ்ராஜ் போன்ற ஒரு நடிகர் காப்பாற்றியிருக்கிறார், ஒரு நடிகர் ஒரு படத்தை காப்பாற்றியிருக்கிறார் என்று சொல்வது அந்த படத்தின் இயக்குனருக்கு எவ்வளவு அவமரியாதை. ஆனால் அதுதான் நடந்திருக்கிறது. விக்னேஷ் சிவன் சமூக பொறுப்புள்ள ஒரு படத்தை எடுப்பதாக நினைத்து சமூக அவமதிப்புதான் செய்திருக்கிறார்.

சமாஜ்வாதி, பிஎஸ்பி, காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஒவைஸி கட்சிகள் தனித்தனியாகப் போட்டி: உ.பி. தேர்தலில் எதிர்க்கட்சிகள் வாக்குகள் பிரிவது உறுதி

hindutamil.in : வரும் 2022-ம் ஆண்டு உத்தர பிரதேசத்தின் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக.வுக்கு சாதகமாக வாக்குகள் பிரிவது உறுதியாகி வருகிறது. இங்கு புதிதாக அசாதுதீன் ஒவைஸி அணி, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் (பிஎஸ்பி), காங்கிரஸ்மற்றும் ஆம் ஆத்மி என தனித்தனியாக போட்டியிட உள்ளன. ராஜ்பர் எனும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்காக, ஓம் பிரகாஷ் ராஜ்பர் என்பவரால் செயல்பட்டு வருகிறது சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி (எஸ்பிஎஸ்பி). இது, கடந்த முறை சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணியில் 8 இடங்களில் போட்டியிட்டு நான்கு தொகுதிகளை பெற்றிருந்தது. உத்தர பிரதேசத்தின் கிழக்கு பகுதியிலுள்ள 11 மாவட்டங்களில் செல்வாக்கு கொண்ட இக்கட்சி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக.வின் வெற்றிக்கும் உதவியாக இருந்தது. இதனால் உத்தர பிரதேசமாநில அமைச்சராகவும் இருந்தஒம் பிரகாஷ், கடந்த ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து விலகினார். பிறகுமக்களவை தேர்தலில் 38 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டவருக்கு ஒரு இடத்தில் கூட வெற்றி கிடைக்கவில்லை.

சென்னையில் கிலோ கணக்கில் புத்தகங்கள் விற்பனை; கண்காட்சியில் குவியும் வாசகர்கள்

chennai alwarpet book fair, ஆழ்வார்பேட்டை புத்தகக் கண்காட்சி, கிலோ கணக்கில் புத்தகங்கள் விற்பனை, books sales in kg messures, alwarpet book fair

tamil.indianexpress.com : சென்னை ஆழ்வார்பேட்டை கண்காட்சியில் நூதன முறையில் புத்தகங்கள் கிலோ கணக்கில் எடைபோட்டு விற்பனை செய்யப்படுவதால் வாசகர்கள் புத்தகங்களை வாங்க குவிந்து வருகின்றனர். >சென்னை ஆழ்வார்பேட்டையில் பழைய உத்தகங்களை கிலோ கணக்கில் விற்பனை செய்யும் புதிய முறையிலான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் புத்தகங்களை எடைபோட்டு வாங்கிச் செல்ல பார்வையாளர்கள் குவிந்து வருகின்றனர்.

சென்னையில் டிசம்பர் மாதம் என்றாலே கர்நாடக சங்கீதம், பரத நாட்டியம், சபா நிகழ்ச்சிகள், கேட்லெஸ் கலெக்டிவ் இசை நிகழ்ச்சிகள் என்பதே பலரின் நினைவுக்கு வரும். அதே போல, புத்தகப் பிரியர்களுக்கும் வாசகர்களுக்கும் நினைவுக்கு வருவது புத்தகக் கண்காட்சிதான்.

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர்- சோனியா காந்தி இன்று ஆலோசனை!

நக்கீரன் செய்திப்பிரிவு : அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கட்சியின் மூத்த தலைவர்களுடன் இன்று (19/12/2020) ஆலோசனை நடத்துகிறார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்களான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கமல்நாத், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஆனந்த் சர்மா, குலாம்நபி ஆசாத், சசிதரூர், ஏ.கே.அந்தோணி மற்றும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.           அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக ராகுல் காந்தி மீண்டும் ஒரு மனதாக தேர்வு செய்யப்படுவார் என கூறப்படுகிறது.

உங்கள் குலத் தொழில்.... பகவான் உங்களுக்கென்று உருவாக்கியிருக்கிறார் . முதல்வர் இராஜகோபாலாச்சாரி

Paneerselvan :
·  சென்னையில் சலவைத் தொழிலார் மாநாடு. 1952இல் குதிரை பேர அரசியலை தமிழகத்தில் முதன் முதலில் தோற்றுவித்து அதன் மூலம் ஆட்சிக்கு வந்த இராஜகோபாலாச்சாரி முதலமைச்சராய் இருந்த நேரம்-சலவைத் தொழிலாளர்கள் அவரை அழைக்கவும் இல்லை,நிகழ்ச்சி நிரலில் அவருடைய பெயரும் இல்லை.தபாலில் ஒரு அழைப்பிதழை முதல் அமைச்சர் முகவரிக்கு அனுப்ப அதை வைத்துக் கொண்டு மாநாட்டிற்கு வந்தவரை மேடையில் அமரச் செய்தனர்,நானும் பேச வேண்டும் கூற பேச அனுமதித்தனர்.சில கோரிக்கைகளையும் முதல்வருக்கு வைத்திருந்தனர் ... இறுதியாக பேசிய முதல்வர் இராஜகோபாலாச்சாரி-இங்கு ரொம்ப பேர் நல்லா பேசினா.ஆனா நீங்க மாத்தி சில கருத்துக்களை சொன்னது எனக்கு அறவே பிடிக்கல.யாரும் கோவிச்சக்கப் படாது.உங்க பிள்ளைகளை பள்ளி கூடத்திற்கு அனுப்புறேள்.
அது மிகப் பெரிய தப்பு.உங்க சொந்த தொழிலை நீங்க செய்யணும்.அது மிக அருமையான தொழில்.காலையில் எழுந்ததும்உங்க மூட்டையைத் சுமந்து கொண்டு வருகிற கழுதை எப்படி இருக்குது?  அதுக்கு ஆகாரம்
கொடுத்தமா ,என்பதைப் கவனிச்சு —அதை பேணி பாதுகாத்து அதற்கு மேலே மூட்டையைபோட்டுண்டு ஆறு குளம் போயி அங்கு துணியைச் நன்னா சலவை செஞ்சு காய வச்சுமடிச்சு கொண்டு வரணும்..
இது உங்கள் கடமை.உங்கள் குலத் தொழில்.. பகவான் உங்களுக்கென்று ஒரு பணியை உருவாக்கியிருக்கிறார்  

ராஜனி திரணகமவின் கொலைக்கு திட்டம் வகுத்து அதை செயற்படுத்த தூண்டியது அன்ரன் பாலசிங்கம்

Rajini Thiranagama - Alchetron, The Free Social Encyclopedia
நட்சத்திரன் செவ்விந்தியன் : அத்தியாயம் இரண்டு ;

அன்ரன் பாலசிங்கம் வரலாறு 2

பிரபாகரன் போராட்டத்தில் தனக்கு போட்டியாக வரக்கூடிய தன்னைவிட திறமையான நேர்மையான மற்ற இயக்கத் தலைவர்களை எவ்வாறு கொன்றாரோ அதேபோல அன்ரன் பாலசிங்கமும் புலிகள் இயக்கத்தில் தனது ஆலோசகர் என்ற பதவிக்கு போட்டியாக வரக்கூடியவர்களை கனகச்சிதமாக திட்டமிட்டு ஓரங்கட்டி அவர்களை கலைத்தார். பாலசிங்கம், பிரபாகரன் என்கிற இரண்டு அரக்கர்கள் ஒருவரையொருவர் இட்டுநிரப்பி வந்ததுதான் புலிகளின் பாசிசம். 

பிரபாகரன் இல்லாமல் பாலசிங்கமும் பாலசிங்கம் இல்லாமல் பிரபாகரனும் தமிழர் வரலாற்றில் மிகப்பெரிய அரக்கர்களாக வந்திருக்கமுடியாது. பாலசிங்கம் தம்பதியர் பிரபாகரனை 1979, 1981 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் இந்தியாவில் சந்தித்து சில மாதங்கள் பிரபாகரன் அணியோடு தங்கியிருந்தனர். இவ்விரு தடவைகளிலும் பாலசிங்கத்தால் பிரபாகரனிடம் தன்னை ஒரு இட்டு நிரப்பமுடியாத ஆளுமையாக நிலைநிறுத்தமுடியவில்லை. ஆனால் 1983 திருநெல்வேலித்தாக்குதல்/ஜூலைக் கலவரங்கங்களையடுத்து வந்த நிகழ்வுகளை அடுத்து பாலசிங்கம் தான் புகுந்துவிளையாடவந்த தகுந்த சந்தர்ப்பத்தை மிகச்சாதுரியமாக பயன்படுத்தினார். 

திமுகவில் இணைகிறார் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா

திமுகவில் இணைகிறார் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா | சத்தியராஜ் மகளாக மட்டும் இல்லாமல் தமிழ் மகளாக தமிழர்களுக்காக உழைப்பேன் என கடிதம்

Image

tamil.news18.com :  நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றி வரும் திவ்யா, திமுகவில் இணைவதை அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிப்பார் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக திவ்யா எழுதிய கடிதம் ஒன்றும் ஊடகங்களில் கசிந்திருக்கிறது.  அதில், "தான் வசதியான வீட்டில் பிறந்த பெண் என்பதால் உழைக்கத்தெரியாது என்று நினைக்கத் தோன்றலாம்.. உண்மையில் பென்ஸ் காருக்கும் டைமன்ட் நகைக்கும் அடிமையாக வளர்க்கப்படவில்லை.. அரசியல் என்பது பிசினஸ் இல்லை என்று அப்ப சொல்லி இருக்கிறார்" என எழுதப்பட்டு இருக்கிறது.

நெல்சன் சேவியர் வெளியேறினாரா? வெளியேற்றப்பட்டரா? தொடர்ந்து வெளியேறப்போகும் விஜயன், சுகிர்தா?


 நீண்ட நாட்களாகவே நெல்சன் சேவியரின் அரசியல் கருத்துக்கள் மத்திய மாநில பாஜகவுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. அதனால் நிகழ்ச்சிகளுக்கு அடிக்கடி அழைப்பதையும் தவிர்த்து வந்துள்ளார்கள் என்று தெரிகிறது . குறிப்பாக சமூக வலைத்தளங்களில் அவர் தெரிவித்து வரும் கருத்துக்களையும் சங்கிகள் அவ்வளவாக ரசிக்கவில்லையாம் ..  

அத்துடன் சம்பள பாக்கியும் உண்டாம் . அதாவது வழிக்கு வா அல்லது வெளியே போ என்பது போன்ற கெடுபிடி போல் தெரிகிறது.   சங்கிகளோடு ஒத்து போகாமையால் இவர் மீது அரசின் நெருக்கடிகள் வரவும் வாய்ப்புண்டு .. அவர்களின் வழக்கம் அதுதானே?  ஊடகவியலாளர்கள் மீதான இந்த ஒடுக்குமுறை விஜயன்  மீதும் சுகிர்தா மீதும் கூட விரிவு படுத்த படலாம் என்ற சந்தேகம் ஊடகவியலாளர்கள் மத்தியில் நிலவுகிறது. 

அடுத்த வெளியேற்றம் அவர்களாக இருக்க வாய்ப்புண்டு.

வெள்ளி, 18 டிசம்பர், 2020

எம்ஜிஆர் ஆட்சியின் நீட்சியாக ஜானகி,ஜெயலலிதா,ஒ.பிஎஸ்,இ.பி.எஸ் ஆட்சிகளை அனுபவித்து நொந்தது போதாது என்று ஆளாளுக்கு .. நொந்தது போதாது என்று

 சாவித்திரி கண்ணன் : · அராஜக எம்ஜிஆர் ஆட்சிக்கு ரஜினி, கமல், பாஜக எதற்கு …? மாற்று அரசியலைப் பேசும் ரஜினியும் ’’எம்.ஜி.ஆர் ஆட்சி தருவேன்’’ என்கிறார் ஊழலற்ற நேர்மையான ஆட்சியைப் பேசும் கமலஹாசனும் எம்.ஜி.ஆரை சொந்தம் கொண்டாடுகிறார்! திராவிட கட்சிகளை ஒழிப்பதே இலக்கு என்ற பாஜகவும் எம்.ஜி.ஆரை கொண்டாடுகிறது..! இதை, ’’சுயமாக ஒரு ஆட்சியை தருவதற்கு எங்களுக்கு துப்பில்லை’’ என்பதற்கான அவர்களின் ஒப்புதல் வாக்கு மூலமாகவே நாம் பார்க்கவேண்டும்!

எம்.ஜி.ஆர் எந்த மாதிரியான ஆட்சியை தந்தார் என்பதை கீழே பட்டியலிட்டுள்ளேன். இதை நமது இளம் பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, மக்களுமே கூட குறித்து வைத்துக் கொண்டு ஆக, ‘’இப்படிப்பட்ட படுமோசமான ஆட்சியைத் தான் தரப் போகிறீர்களா..?’’ என்று முகத்திற்கு நேராக சம்பந்தபட்டவர்களிடம் கேளுங்கள்!
எளியவர்களிடம் இரக்கம், ஏழைகளுக்கு உதவி,வள்ளல், மனிதரில் புனிதர்…என்றெல்லாம் எம்.ஜீ.ஆரைப் பற்றி கட்டமைக்கப்பட்ட பிம்பத்திற்கும்,எம்.ஜி.ஆரின் ஆட்சிக்கும் சம்பந்தமே இல்லை என்பது அவருடைய ஆட்சிகாலத்தில் வாழ்ந்த பத்திரிகையாளர்களுக்கு மட்டுமல்ல,துன்பத்திற்கு ஆளான பலதரப்பட்ட மக்களுக்கும் நன்றாகவே தெரியும்.

வன்கொடுமை சட்டத்தில் பதிவான வழக்கை ரத்து செய்யக்கோரி ஆர்.எஸ்.பாரதி மனு

  dinakaran  : சென்னை: கடந்த பிப்ரவரி 14ம் தேதி சென்னையில் வாசகர் வட்டம் சார்பில், நடந்த கருத்தரங்கில் தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பட்டியலினத்தவருக்கு எதிராக பேசியதாக தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பிறகு வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. ஆர்.எஸ்.பாரதி  தரப்பில், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி, விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிப்பது தொடர்பாக தனியாக மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 18ம் தேதிக்கு தள்ளிவைத்தா

ஸ்டாலின் உட்பட 1,600 பேர் மீது வழக்கு! விவசாயிகள் போராட்டம்: எந்த வழக்கையும் சந்திக்க தயார் -

nakkeeran :மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வின் தோழமைக் கட்சிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட 1,600 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் 'விவசாயிகளை வஞ்சிக்கும் சட்டங்களைத் திரும்பப் பெறு' என்ற வாசகத்துடன் கூடிய பச்சை நிற 'மாஸ்க்' அணிந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்காக உண்ணாவிரதத்தில் தலைவர்கள் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.             உண்ணாவிரதப் போராட்டத்தில் முத்தரசன், பாலகிருஷ்ணன், கனிமொழி, பாரிவேந்தர் ரவிபச்சமுத்து, வைகோ, திருநாவுக்கரசர், வேல்முருகன், ஜவாஹிருல்லா, தங்கபாலு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட தலைவர்களும், தி.மு.க. நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்திருந்த நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்தப்பட்டதால் சட்டவிரோதமாகக் கூடுதல், அரசின் உத்தரவை மீறுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் தி.மு.க தலைவர் ஸ்டாலின், திமுக தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் கலந்து கொண்டவர்கள் என மொத்தம் 1,600 மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  

கேரள உள்ளாட்சி தேர்தல் நமக்கு உணர்த்தி இருப்பது ... தமிழகத்தை காப்போம்... திமுகவை ஆதரிப்போம்!


 Devi Somasundaram
: · கேரள உள்ளாட்சி தேர்தல் நமக்கு உணர்த்தி இருப்பது ஒன்று தான்..   பி ஜே பி எதிர்ப்பை விட யாரை ஆதரிக்கனும் என்பதை தெளிவாக இருக்க வேண்டும் . 

பீகார்ல ராஷ்ட்ரிய ஜனதா தள் 75 சீட், பி ஜே பி 74 தான்...ஆனா பி ஜே பி தான் ஆட்சியை பிடிக்குது ...எப்படி ? ..பி ஜே பிக்கு எதிரான வாக்குகளை ஆர் ஜேடியை நோக்கி குவியவிடாமல் பி எஸ் பி, ஓவைஸி, மற்றும் சில உதிரி கட்சிகள் என பிரிக்கிறது பி ஜே பி. தனக்கு பலம் இல்லை என்பதை நன்கு அறிவதால் எதிரியின் வலிமையை சிதறடிப்பதன் மூலம் தன் வெற்றியை கைக் கொள்கிறது பி ஜேபி . இந்திய பாராளுமன்ற தேர்தலில் ஆரம்பித்து எல்லா தேர்தலிலும் பி ஜே பின் தேர்தல் உத்தி இது தான். கேரளாவில் அந்த உத்தி செல்லுபடி ஆகவில்லை ..கம்யுனிஸ்ட்களுக்கு எதிரா எந்த வாக்கு வங்கி பிரிப்பையும் பி ஜே பி யால் உருவாக்க இயலவில்லை...அது தான் அங்கு கம்யுனிஸ்ட்களின் வெற்றியை உறுதியாக்கி உள்ளது .

சரி EVM ல தில்லுமுல்லு செய்யலாம் என்ற வாதம் வரலாம் ..அது இன்று வரை நிருபிக்கப்படாத அல்லது நிருபிக்க முடியாத ஒன்று . evm பற்றி பல டெக்னாலஜிஸ்ட் கிட்ட கேட்டாச்சு..பாதி பேர் தில்லு முல்லு செய்ய முடியும் என்கிறார்கள் .பாதி பேர் முடியவே முடியாது என்கிறார்கள்..

லிபியா அதிபர் கடாபியின் பொற்காலம்! உலகம் மறந்த வரலாறு !

 

Sundar P : · மறுபக்கம்...... அமெரிக்காவால் சர்வாதிகாரி என்று பிரகடனப்படுத்தப்பட்டு 2011 அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட கடாபியின் மறுபக்கம் இது:- பிரஞ்சு, இத்தாலி என்று மாறி மாறி அன்னியர்கள் ஆண்ட நாடு லிபியா. முடிவாக மன்னராட்சி ஏற்பட்டது. மன்னரும் இத்தாலியர்களுக்கு எடுபிடியாகவே இருந்தார். ராணுவப் புரட்சி வெடித்தது. புரட்சிக்குத் தலைமை வகித்தவர் கடாபி. 1969 முதல் 2011 வரை அசைக்கமுடியாத தலைவராக விளங்கினார். ஃபிடல் காஸ்ட் ரோ, யாசர் அராபத் வரிசையில் அமெரிக்காவின் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் கடாபி கடாபியின் ஆட்சி லிபியாவின் பொற்கால ஆட்சி.

அன்று,  லிபியாவில் வழங்கப்படும் மின்சாரத்துக்கு கட்டணம் ஏதும் கிடையாது, மின்சாரம் இலவசம்.

விவசாயிகளுக்கு ஆதரவாக தடையை மீறி திமுக-கூட்டணி கட்சியினர் உண்ணாவிரதம்

சmaalaimalar : ென்னை டெல்லியில் கொரோனா காலத்திலும் உயிரைத் தியாக வேள்வியாக முன்னிறுத்தி, அறவழியில் போராடி வரும் விவசாயிகளுக்கும் - அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு அளித்தும் இன்று சென்னை - வள்ளுவர் கோட்டத்தில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 வரை அறவழியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர்களும் - பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்  பங்கேற்கும் ஒரு நாள் அடையாள “உண்ணாநிலைப் போராட்டம்” நடைபெறும் என்று திமுக, கூட்டணி கட்சியினர் தெரிவித்து இருந்தனர். கொரோனா காரணமாக 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் உண்ணாவிரதத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.ஆனால் தடையை மீறி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக, கூட்டணி கட்சியினர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.

பெங்களூரு கெஸ்ட் ஹவுசில் பெண் டி எஸ் பி மர்ம மரணம் . 4 பேர் அதிரடி கைது..

Hemavandhana -tamil.oneindia.com : பெங்களூரு: கெஸ்ட் வீட்டிற்கு விருந்தில் கலந்து கொள்ள சென்ற, டிஎஸ்பி லட்சுமி, ரெஸ்ட் எடுப்பதாக சொல்லி ரூமுக்குள் போய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதில், 4 பேரை பெங்களூர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். 

பெங்களூரு நகர சிஐடி பிரிவில் டிஎஸ்பி ஆக வேலை பார்த்து வந்தவர் லட்சுமி... 32 வயதாகிறது.. கடந்த 2014ம் ஆண்டு தேர்வில், தேர்ச்சி பெற்று 2017 முதல் பெங்களூரு சிஐடி பிரிவில் டிஎஸ்பி ஆக பணியாற்றி வந்துள்ளார். நேற்று முன்திம் இரவு, பெங்களூரு அன்னபூரணேஸ்வரி நகரில் உள்ள சொந்தக்காரர் வீட்டிற்கு சாப்பிட சென்றார்.. சாப்பிட்டு முடித்ததும், கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுப்பதாக சொல்லி, ஒரு ரூமுக்குள் சென்றார்.. ஆனால், ரொம்ப நேரமாக அவர் வெளியே வராததால், சந்தேகமடைந்த உறவினர்கள், ரூம் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது லட்சுமி தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், லட்சுமியின் சடலத்தை மீட்டு, தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சித்ரா வாழ்வில் சிக்கு புக்கு விளையாடிய காதல்..! கணவரிடம் 9 மணி நேரம் ஆர்.டி.ஓ. விசாரணை

jkljlj   

thinathanthi : சென்னை டி.வி. நடிகை சித்ரா செம்பரம்பாக்கம் அருகே உள்ள விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை நசரத்பேட்டை போலீசார் கைது செய்து பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.<>ஹேம்நாத்தை விசாரணைக்காக ஆஜர்படுத்த ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ பொன்னேரி சிறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினார். நேற்று காலை 8.20 மணிக்கு ஹேம்நாத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.                                 சித்ரா தற்கொலை குறித்து ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ சித்ராவின் தாய், தந்தை மற்றும் ஹேம்நாத்தின் தாய், தந்தை ஆகியோரிடம் விசாரணை நடத்திய நிலையில் சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் நேற்று விசாரணை நடத்தினார். 
8 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்து ஹேம்நாத் தகுந்த பாதுகாப்புடன் போலீஸ் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டார்.

சூத்திரர்கள் புரிந்து கொள்வதில்லை’ –பிரக்யா சிங் தாக்கூர்:.. சர்ச்சையில் சிக்கிய பாஜக எம்.பி

BBC :பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா சிங் தாக்கூர் நால்வர்ணம் குறித்து தெரிவித்த கருத்தால் மீண்டும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் சீஹோரில் நடந்த ஒரு நிகழ்வில், இந்து மத நூல்களில் உள்ள நான்கு வர்ணங்கள் (பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர்) குறித்து பேசியபோது அவர் பேசிய காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. “ஒரு சத்திரியரை சத்திரியர் என்று அழைத்தால் அவர் தவறாக நினைப்பதில்லை; ஒரு பிராமணரை பிராமணர் என்று அழைத்தால் அவர் தவறாக நினைப்பதில்லை; ஒரு வைசியரை வைசியர் என்று அழைத்தால் அவரும் தவறாக நினைப்பதில்லை; ஆனால் ஒரு சூத்திரரை சூத்திரர் என்று அழைத்தால் அவர்கள் தவறாக நினைக்கிறார்கள். அதற்கு என்ன காரணம் என்றால், அவர்கள் புரிந்து கொள்வதில்லை,” என்று பிரக்யா தாக்கூர் தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து அவர் இதற்கு முன்னரும் செய்திகளில் இடம் பிடித்துள்ளார்.  செப்டம்பர் 2008ல் மகாராஷ்டிரா மாநிலம் மாலேகானில் நடந்த குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் பிரக்யா சிங் தாக்கூர். ஏப்ரல் 2017 முதல் அவர் பிணையில் வெளியே உள்ளார்.

நீதிக்கட்சி ஆட்சி 100 ஆண்டுகள்! திராவிட இயக்கத்தின் முதல் அரசியல் அடையாளம் நீதிக்கட்சி

  இந்தியாவிலேயே முதன்முதலாக கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்து சாதித்துக் காட்டியது நீதிக்கட்சி அமைச்சரவையே.
justic party 

ippodhu.com :2015-ஆம் ஆண்டு நீதிக்கட்சியின் நூற்றாண்டாகக் கொண்டாடப்படுகிறது. நீதிக்கட்சியின் முன்னோடி அமைப்பான ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ 1916- ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. சமூக நீதிக்கான அரசியல் இயக்கமாக உருவெடுத்த இந்த அமைப்பின் தோற்றத்தை நீதிக்கட்சியின், சமூக நீதியின் தொடக்கமாக கொண்டாடப்படுகிறது. டாக்டர் சி.நடேசனார், பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர் ஆகியோரால் உருவாக்கப்பட்ட நீதிக்கட்சி, தமிழ் சமூகத்தில் பெரும் புரட்சிக்கு வித்திட்ட இயக்கம். அந்த வகையில் நீதிக்கட்சியை நாம் எல்லோரும் நினைவு கூற கடமைப்பட்டிருக்கிறோம்… Image may contain: text that says '@DMKITWing 17-12-1920 நீதிக்கட்சி அமைத்த தென்னிந்தியாவின் முதல் அமைச்சரவை ஆட்சிப்பொறுப்பேற்ற நாள் -திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு சாதனை! திமுக தகவல் தொழில்நுட்ப அணி'

* 1912-ஆம் ஆண்டில் மெட்ராஸ் யுனைட்டெட் லீக் என்ற அமைப்பை டாக்டர் சி.நடேசனார் தொடங்கியிருந்தார். பிறகு, இந்த அமைப்பு 1913-ஆம் ஆண்டில் திராவிடர் சங்கம் என்று பெயர் மாற்றம் பெற்றது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் முழுவீச்சில் வாக்கு இயந்திர மோசடி அரங்கேறும்! காணாமல் போன லட்சக்கணக்கான வாக்கு இயந்திரங்கள் ..

Image may contain: one or more people

Abilash Chandran : · மின்னணு வாக்கு எந்திர முறைகேடுகள் உண்மையா? டிவி, யுடியூப் சேனல்களில் அவ்வப்போது காண நேரிடும் காந்தராஜ் என்பவர் வர இருக்கும் தமிழக மாநிலத் தேர்தல் முடிவுகளைப் பற்றி ஒரு அதிர்ச்சியூட்டும் கணிப்பை வெளியிட்டார்.   70 இடங்கள் வரை பாஜக வெல்லும், நூறு இடங்கள் போல அதிமுகவுக்குக் கிடைக்கும், இது மக்களின் வாக்குகளால் கிடைக்கும் வெற்றியாக இராது, வாக்கு எந்திர மோசடியால் இதை பாஜக நிகழ்த்தும், இது மோசடி எனத் தெரியாதிருக்கும் பொருட்டே கடந்த சில மாதங்களாக தமிழக அரசியலில் வெற்றிடம், அரசியல் மாற்றம் வரும், மூன்றாவது அணி வாக்குகளை உடைக்கும் என்றெல்லாம் ஊடகத்தில் விவாதங்கள் நடக்கின்றன,     இந்த விவாதங்களில் பாஜகவினரை கட்டாயமாக கலந்து கொள்ள செய்து, வேல்யாத்திரை, திருமா சர்ச்சை, கறுப்பர் படை சர்ச்சை என அவர்களின் சின்னச்சின்ன நகர்வுகளையும் பெரிதுபடுத்திப் பேசி, ரஜினி, கமலின் வருகையை பூதாகரமாக்கி இங்கு ஒரு மாற்று அரசியல் அலை எழுவதாக ஒரு மாயையை உருவாக்குகிறார்கள் என்றார் அவர்.  

“இப்போதே அவர்கள் எத்தனை இடங்களைப் பெறப் போகிறார்கள் என்பதை தீர்மானித்து விட்டார்கள்” என அவர் அவ்வளவு நம்பிக்கையாக சொன்னார். மேலும் இவர் மட்டுமல்ல எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து பாஜக மின்னணு வாக்கு எந்திரங்களில் தில்லுமுல்லு பண்ணுவதாய் குற்றம் சாட்டி, பாஜகவை முறியடிக்க பழைய வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் எனக் கோருகிறார்கள். இதில் ஏதாவது உண்மை இருக்குமா என சுவாரஸ்யம் ஏற்பட மின்னணு எந்திர மோசடிகள் குறித்து நிறைய வாசித்தேன். அப்போது எனக்கு கிடைத்த சுருக்கமான சித்திரம் இது:

வியாழன், 17 டிசம்பர், 2020

கவிஞர் பூவை செங்குட்டுவன்! திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் - முருகா திருத்தணி மலைமீது

Image may contain: 1 person
கவிஞர் பூவை செங்குட்டுவன்
  பாண்டியன் சுந்தரம் : · 'திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்' என்ற பாடலைக் கேட்டு ரசிக்காதவர் எவரும் உண்டோ! இதை மட்டுமா, இன்னும் ஏராளமான பக்திப் பாடல்களை எழுதியவர் கவிஞர் பூவை செங்குட்டுவன்! இளவயதில் கடவுள் மறுப்பாளராக இருந்தபோது, பிள்ளையார் சிலையைத் தூக்கிக் குளத்தில் போட்ட இவரே, பிற்காலத்தில் 'யாரை வணங்கிட வேண்டும், பிள்ளையாரை வணங்கிட வேண்டும்' என்று பாடல் எழுதினார். இவர் கவிஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், திரைப்பட வசனகர்த்தா, இலக்கியவாதி.
சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த கீழப்பூங்குடியில் ராமையா அம்பலம் - லட்சுமி அம்மாள் தம்பதியின் மகனாகப் பிறந்தவர் செங்குட்டுவன். ஊரில் நடக்கும் பாட்டுக் கச்சேரிகளும், நாடகங்களும் செங்குட்டுவனை ஈர்த்தன.
பத்தும் பத்தாதற்கு இவர் குடும்பத்தார் திரையரங்கம் ஒன்றை லீசுக்கு எடுத்து நடத்தி வந்தார்கள். அதில் படங்களை பார்த்து திரைப்பட ஆசையை வளர்த்து வந்தார். வாசகசாலைக்குச் சென்று பல நூல்களைப் படித்தபோது, கலைஞரின் ‘சேரன் செங்குட்டுவன்’ இவரை மிகவும் கவர்ந்தது. முருகவேல் காந்தி என்ற இயற்பெயரை துறந்து, பூவை செங்குட்டுவனாக வலம் வந்தார்.Image may contain: 3 people, people dancing, people standing and people on stage

போலி மசாலா தயாரிப்பு கழுதை சாணம் மூட்டை மூட்டையாக .. உத்தர பிரதேசம்

வடஇந்திய கம்பனிகளின் மசாலாக்களில்தான் கழுத்தை சாணம் அல்லது மாட்டுச்சாணம் கலக்குகிறார்கள் . அல்ல அல்ல.. அவற்றில் இருந்துதான் உற்பத்தியே செய்கிறார்கள் என்றும் செய்திகள் வருகின்றன . தமிழ்நாட்டு பிராண்டுகளில் அப்படி இருக்க வாய்ப்பில்லை என்று எண்ணுகிறேன் . ஆனால் இதிலும் ஒரு ஆபத்து இருக்கிறது இந்த மசாலா இறக்குமதியை பெரிதும் செய்பவர்கள் வடஇந்திய மார்வாடிகள்தான்.. 

இவர்கள் தங்கள் கழுத்தை மாட்டு சாணத்தின் மீது தமிழ்நாட்டு லேபிள்களை ஒட்டி விற்பனைக்கு விட கூடிய ஆபத்து உள்ளது என்று எண்ணுகிறேன் .  

யவன குமாரன் : மசாலாத்தூளில் கழுதைவிட்டையை கலந்தவன்னு நியூஸ் படிச்சவுடனே...யார்ரா அவன்...உபிக்காரனா...? என நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் தானே...! நானும் அப்படித்தான் நினைச்சேன்...சரி வாங்க விபரம் சொல்றேன்...

42 வயது பிரான்ஸ் அதிபர் மக்ரோனுக்கு கொரோனா.. 67 வயதாகும் மனைவி பிரிஜிட்டே நலம்?

Veerakumar -tamil.oneindia.com : பாரீஸ்: பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோனுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று இருந்தபோதிலும், தமது பொறுப்புகளை அவர் ஆற்றுவார் என்று அதிபர் மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர். பிரான்ஸில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அங்கு இந்த வாரம் தொடங்கி இரவு நேர ஊரடங்குக்கு உத்தரவிடப்பட்டது. ஏனெனில், பிரான்ஸில் இதுவரை 20 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனராம். பிரான்ஸ் நிலவரம் கொரோனா தொற்று தொடங்கியது முதல் அங்கு இதுவரை 59,400 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இரண்டாவது அலை வீசும் நிலையில், அங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. அதற்குள்ளாக 42 வயதாகும், எமானுவேல் மக்ரோன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி !

webdunia :திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுக கட்சியின் பொதுச்செயலாளரும் அக்கட்சியின் மூத்த தலைவருமான துரைமுருகன் மூச்சுத்திணறல் காரணமாக திருச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழில் அரசாணைகள் இல்லாதது ஏன்?: அரசு பதிலளிக்க உத்தரவு!

தமிழில் அரசாணைகள் இல்லாதது ஏன்?: அரசு பதிலளிக்க உத்தரவு!

minnambalam.com : தமிழக அரசின் அரசாணைகள் தமிழில் வெளியிடாதது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் அரசு பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை கொருக்குப்பேட்டையில் சேர்ந்த பழனி என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் முதல் மொழியாகத் தமிழும், இரண்டாம் மொழியாக ஆங்கிலமும் என இரட்டை மொழி கொள்கை பின்பற்றப்பட்டு வரும் நிலையில் தொன்மையான தமிழ்மொழி அதிகாரிகளால் புறக்கணிக்கப்படுகிறது.   தமிழக அரசின் உத்தரவுகள், அரசாணைகள், சுற்றறிக்கை, கடிதங்கள் என அனைத்தும் ஆங்கிலத்திலேயே தயாரிக்கப்பட்டுச் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்படுகிறது.

ஐஐடியில் இட ஒதுக்கீடு ரத்து? தமிழகத்தில் எதிர்ப்பு!

ஐஐடியில் இட ஒதுக்கீடு ரத்து? தமிழகத்தில் எதிர்ப்பு!

  minnambalam :ஐஐடியில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டிருப்பதற்குத் தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது. 

 ஐஐடி நிறுவனங்களில் ஆசிரியர்கள் நியமனத்தில் மட்டுமின்றி, மாணவர் சேர்க்கையிலும் இட ஒதுக்கீட்டைப் பயனுள்ள வகையில் செயல்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து அரசுக்குப் பரிந்துரைப்பதற்காக டெல்லி ஐஐடி இயக்குநர் ராம்கோபால் ராவ் தலைமையில் ஒரு வல்லுநர் குழுவைக் கடந்த ஏப்ரல் மாதம் மத்திய உயர்கல்வித் துறை அமைத்தது.தனது அறிக்கையை ஜூலை மாதம் தாக்கல் செய்தது. அதில், இடம்பெற்றுள்ள அம்சங்கள் பற்றித் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி பெறப்பட்ட விவரங்களில்தான் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய அந்தக் குழு பரிந்துரைத்திருப்பது தெரியவந்துள்ளது. ஐஐடிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவதற்குத் தகுதியான ஆட்கள் இட ஒதுக்கீட்டுப் பிரிவிலிருந்து கிடைப்பதில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்திருக்கிறது.

நடிகர்கள் எல்லோரும் எம்ஜியார் ஆட்சி தருவேன் என்பது ஏன்?

 Kulitalai Mano
: · MGR என்ன செய்தார்.....வெக்கமா இல்லை *செருப்படி
சிந்தனைகள்* 🤔 *MGR* ஆட்சியை தருவேன் # *ரஜினிகாந்த்* *MGR* போல ஆட்சி செய்வேன் # *கமல்ஹாசன்* நான் கருப்பு *MGR* # *விஜயகாந்த்* *MGR* போல ஏழைகளுக்காக பாடுபடுவேன் # *விஜய்*
*MGR* போல ஆட்சி ஆள என்னாலும் முடியும் # *Tராஜேந்தர்*
ஒருத்தன் கூட *தலைவா் கருணாநிதி* போல ஆட்சி செய்வேனு சொல்லல...
ஏன்னா அது எவராலும் முடியாது...
கோயம்பேடு பேருந்து நிலையம் வேண்டுமென்று எந்த சென்னை குடிமகனும் கொடி பிடிக்கவில்லை,
👍மெட்ரோ ரயில் வேண்டுமென்று யாரும் கனவு காணவில்லை,
👍வள்ளுவருக்கு கோட்டமும், சிலையும் வேண்டுமென்று எந்த தமிழ் ஆர்வலரும், குடிமகனும் குரல் கொடுக்கவில்லை,
👍கணினி என்பதைக் கேள்விபடுவதற்கு முன்னதாகவே டைடல் பார்க் வேண்டுமென எந்த மாணவர் சங்கமும் கொடி பிடிக்கவில்லை.
👍தங்களது கிராம சாலைகள் சிமென்ட்டில் அமைக்கப்படும் என எந்த கிராமவாசியும் கனவு கூட கண்டதில்லை,
👍பள்ளியில் படிக்க தம்பிள்ளைகளை இலவசமாகவே பேருந்தில் அரசு அனுப்பும் என பெற்றோர் நினைத்துக் கூட பார்த்ததில்லை,
👍தம் நிலத்திற்கு தண்ணீர பாய்ச்ச அரசே இலவச மின்சாரம் தரும் என விவசாயி கனவு கண்டதில்லை
தம் பொருளை தானே விற்க உழவர் சந்தை வரும்,
👉பட்டிக்காட்டிற்கும் மினிபஸ் வரும்,
👉நாமும் படித்து அமெரிக்காவில் வேலை பார்ப்போம் என எந்த கிராம மாணவனும் கனவு காணவில்லை, 

அமி மைக்கல் அம்மையார் கோயில்களில் பொட்டுக்கட்டி விடப்பட்ட சிறுமிகளை மீட்ட Amy Carmichael தேவைதை


Raman Mathi  : அயர்லாந்தை சேர்ந்த Amy Carmichael  அமி மைக்கேல் பிறந்த தினம் இன்று ( 16 டிசம்பர் 1867 ) .  இவர் தமிழகத்தில் தேவதாசிமுறை ஒழிப்பிற்கு

முன்னோடியானவரும், கோவில்களில் இருந்த தேவதாசிகளையும் மீட்டவருமாவார்.   கோயில்களில்  பொட்டுகட்டி விடப்பட்ட சுமார் 1000 சிறுமிகளையும் மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளித்தவர் இவர்.    கிறிஸ்துவ Protestant Christian missionary மதப்பரப்புனராக இருந்தாலும்  சமூக சேவையில் பெரிதும் ஈடுபட்டு  அப்பகுதி மக்களால் “அம்மா” என்றழைக்கப்பட்டார்.    திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி அருகில் உள்ள டோனாவூரில் தங்கி கிறிஸ்துவ மதப்பரப்புதல் மற்றும் சமூக சேவைகளை செய்து கொண்டிருந்தவர் இவர் .   அக்காலங்களில்  கோவில்களுக்கு சிறுமிகளை நேர்ந்து விடுவதையும் பருவமடைந்தபின்னர் அவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதை அறிந்து வேதனை பட்டார்.  

அந்த  கோவிகளில் இருந்து பெண்களையும் சிறுமிகளையும் மீட்டு பெண்களுக்கு திருமணமும், சிறுமிகளுக்கு கல்வியும் போதித்து அவர்களை வளர்த்து வந்தார்,  தேவதாசிமுறையை ஒழிப்பதற்கு போராட்டமும் நடத்திவந்தார், 

BBC : இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள்: விடுதலை குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பேட்டி

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் விடுதலை விவகாரத்தில் நிலையான தீர்வு விரைவில் எட்டப்படும் என எதிர்பார்ப்பதாக இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிபிசி தமிழிடம் புதன்கிழமை பேசிய அவர், இந்திய மீனவர்களின் அத்துமீறிய பிரவேசம் குறித்து இந்திய தூதரகத்துடன் விசேட பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக கூறினார்.

இந்திய உயர்மட்ட குழுவும், இலங்கை உயர்மட்ட குழுவும் காணொளி காட்சி வழியாக இந்த விசேட பேச்சுவார்த்தையை முன்னெடுக்கவிருப்பதாகவும் வரும் 22 மற்றும் 30ஆம் தேதிகளில் இந்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.    இனி வரும் காலங்களில் கைது செய்யப்படும் இந்திய மீனவர்களை தனிமைப்படுத்தப்படும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இலங்கையில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட வேளையில், கொரோனா தொற்றுக்கு பிந்தைய நாட்களில் சில இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் நேற்று முன்தினம் 5 இந்திய மீனவ படகுகள், 36 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் இரு நாட்டு நல்லுறவுக்கு முக்கியத்துவம் தரும் அதே சமயம், இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்தும் அக்கறை கொள்ள வேண்டியுள்ளது என்று டக்ளஸ் தேவானந்தா கூறினார்.

கேரளா உள்ளாட்சி தேர்தல் இடதுசாரிகளும் காங்கிரசும் அமோக வெற்றி . பாஜக படுதோல்வி

Veerakumar - tamil.oneindia.com: திருவனந்தபுரம்: கேரளா உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. தெலுங்கானா மாநிலத்தில் திடீரென முன்னேறிய அதே வேகத்துடன் கேரளாவில் கொடி நாட்ட தீவிர முயற்சி எடுத்த பாஜகவுக்கு அங்கு படுதோல்வி பரிசாக கிடைத்துள்ளது.   இது தெரிந்ததால்தான் என்னவோ.. தெலுங்கானாவுக்கு சென்றது போல பாஜக மேலிடத் தலைவர்கள் கேரளா உள்ளாட்சி தேர்தலில் தலை காட்டவில்லை. ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் பிரச்சாரம் செய்ய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அமித் ஷா என பல தலைவர்கள் படையெடுத்தனர்.      அவர்கள் வருகை தராததற்கு காரணம்.. எப்படியும் தோற்கப் போவது உறுதி என்பதை அவர்கள் உறுதி செய்துவிட்டதுதான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஆனால், கடைசி நேரம்வரை வெற்றிக்குத் தேவையான அத்தனை முயற்சிகளையும் எடுத்துக் கொண்டு இருந்தது பாj p

பிராம்மணர்களுக்கு கன்னிகாதானம் செய்தவன் சிவலோகத்தை அடைவான்.

Image may contain: 1 person, text that says ''பிராம்மணர்களுக்கு பசு தானம் செய்தவன் முக்தியடைவான், கன்னிகாதானம் செய்தவன் சிவலோகத்தை அடைவான் -திருமதி. சௌ.பாலசரஸ்வதி தேவ குஞ்சரியம்மாள் இயற்றிய "சூத சங்கிதா ஸாராம்ருத வசனம்" நூல்,8 ஆவது அத்'

Dhinakaran Chelliah : அன்னதானம் கன்னிகாதானம் பசுதானம் அமாவாசியில் நிஷ்காமிய சித்தனாய் அந்தணர்க்கு அன்னமிட்டவன் சிவ பெருமானுடைய சாரூபமுத்தியை அடைவான். 

கிருஷ்ணபட்சம் சதுர்த்தசியில் பிராம்மணர்களைப் பரமசிவனாகப் பாவித்து அன்னமிட்டவன் கன்மபந்தமொழிந்து மோட்சம் அடைவான். திரயோதசியில் வேதியர்க்கன்ன மிட்டவன் பூலோகத்தில் பெருவாழ்வு வாழ்ந்து பிறகு பிரம்மலோகத்தைப் பெறுவான். துவாதசியில் பிராம்மணர்களை விஷ்ணுவாகக் கருதி அவர்களுக்கு அன்னமிட்டவன் தேவனாய் வாழ்ந்து பின் வைகுந்தத்தை அடைவான். ஏகாதசி தினம் உபவாசமிருந்து துவாதசி தினம் விஷ்ணு சொரூபமாகக் கருதிப் பிராம்மணர்களுக்கு அன்னமிட்டவன் சகல பாவங்களினின்றும் விடுபடுவான். தசமி திதியில் பிராம்மணர்களை இந்திரனாகப் பாவித்து அன்னமிட்டவன் தேவனாய் இந்திர லோகத்தில் வாழ்வான். நவமி திதியில் எமனைச் சிந்தித்து பிராம்மணர்களுக்கு அன்னமிட்டால் எமன் எப்போதும் அவர்களிடம் மகிழ்ச்சி உடையவனாயிருப்பான்.

பெரியார், அண்ணா, கலைஞர் பாதையை உதாசீனம் செய்தால் என்ன நடக்கும் என்பதற்கு ஈழமே சாட்சி! ஏமாந்து விடாதீர்கள் மக்களே!

மக்கள் பெரிதும் சிந்தனை சோம்பேறிகளாக இருக்கிறார்களோ என்ற எண்ணம் தோன்றுகிறது . கண்முன்னே தெரியும் திராவிட இயக்க வரலாறு தெரியாது . தமிழகம் முன்பு எப்படி இருந்தது என்று படித்து அறியும் ஆவல் இல்லை . 

கடந்த நூற்றாண்டில் தமிழகத்தில் ஏதோ பாலாறும் தேனாறும் ஓடியது போன்றும் திராவிட கட்சிகளால்தான் இன்று தாழ்ந்து போயிருப்பது போலவும் பேசிகிறார்கள் ஒரு வேளை இப்படி பேசினால் பிறர் தன்னை ஒரு அறிவாளியாக கருதக்கூடும் என்ற கோமாளித்தனமோ தெரியவில்லை.

பழைய கறுப்பு வெள்ளை திரைப்படங்களை பார்த்தாலே தெரிந்து விடும் அன்று நிலவிய கொடுமையான வறுமை.

ஒட்டி உலர்ந்த உடலும் .. காணும் இடம்தோறும் அழுகும் தூசியும் நிரம்ப பெற்ற தெருக்களும் எந்தவித நம்பிக்கைகளும் அற்ற மனிதர்களுமாக அன்றய தமிழகம் இருந்தது .
ஆண்டான் அடிமைகளுக்குள் மறைக்கவே முடியாமல் காட்சி அளிக்கும் குரூர வித்தியாசங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
 
ஏழைமக்களின் வறுமையை அது ஏதோ இறைவன் தந்த வாழ்க்கை முறை என்று கற்பிதம் செய்த பார்பனீயத்தின் திட்டமிட்ட சுரண்டலால் ஆயிரமாண்டுகளாக எலும்பும் தோலுமாக சுருங்கி போன மக்கள் கூட்டம்தான் அன்று இருந்தது
பார்ப்பனர் அல்லாதோரின் விழுப்புணர்ச்சியால் மட்டுமே எல்லா புரட்சி விதைகளும் தமிழகத்தில் முளைக்க தொடங்கின .. அவற்றின் பெரும்பாய்ச்சல்தான் பின்னாளில் நாம் இன்று காணும் தமிழக வளர்ச்சி எல்லாம்.

புதன், 16 டிசம்பர், 2020

பாஜவுக்கு எதிராக கூட்டியக்கம்: திராவிட இயக்க தமிழர் பேரவை அறிவிப்பு

சுப. வீரபாண்டியன் அரசியலில் ஏன் ஆன்மிகம்? எதிர்ப்புக் கூட்டியக்கம்! தமிழ்நாட்டின் அரசியல் என்பது எப்போதும் சமூகநீதி அரசியலே! அதனை முன்வைத்தே, ஒரு நூற்றாண்டு காலத்திற்கு முன் இங்கே திராவிட இயக்கம் தோன்றியது. அந்தக் கருத்தியல், திராவிட இயக்கத்திற்கு மட்டுமின்றி, பொதுவுடைமைக் கட்சிகளுக்கும், தலித் இயக்கங்களுக்கும் கூட உரியன!
மதவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் அரசியல் கட்சியான பாஜக ஆகியன, இப்போது தமிழ்நாட்டிலிருந்து அந்தச் சமூக நீதி அரசியலை அகற்றிவிட்டு, மதவாத, வருண சாதி அரசியலைக் கொண்டுவந்து விட வேண்டும் என்ற நோக்குடன், நச்சு விதைகளை நாடெங்கும் தூவி வருகின்றனர். தாங்கள் நேரடியாக வந்தால், தங்களுக்கு மக்களின் ஆதரவிருக்காது என்னும் உண்மையை உணர்ந்து, வேறு சிலரை, வேறு சில முழக்கங்களோடு முன்னிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கேரள உள்ளாட்சி தேர்தல் பாஜக படுதோல்வி!. : இடதுசாரிகள் கூட்டணி 516 இடங்களில் முன்னிலை . காங்கிரஸ் கூட்டணி 375 இடங்களிலும், பா.ஜனதா கூட்டணி 22 இடங்களிலு்ம முன்னணயில்

மாலைமலர் : கேரள மாநிலம் உள்ளாட்சி தேர்தலில் இடதுசாரி கூட்டணிக்கு  வெற்றி காங்கிரஸ் இரண்டாவது இடம் .. பாஜக  படுதோல்வி!.

 கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் 3 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டது. கடந்த 8-ம்தேதி முதல் கட்ட தேர்தலும், 10-ம் தேதி 2-ம் கட்ட தேர்தலும், 14-ம் தேதி இறுதிக்கட்ட தேர்தலும் நடைபெற்றது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட்ட இந்த தேர்தலில் 76 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த தேர்தலில் 77.76 சதவீதம் பதிவான நிலையில் இந்த தேர்தலில் வாக்குப்பதிவு சற்று குறைந்துள்ளது. 3 கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஆரம்பம் முதலே ஆளும் இடதுசாரி கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. வாக்கு எண்ணிக்கையில் இடதுசாரிகள் கூட்டணி அதிகமான இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் 2-வது இடத்திலும், பா.ஜனதா 3-வது இடத்தையும் பிடித்துள்ளது..... 941 கிராம பஞ்சாயத்து இடங்களில் இடதுசாரிகள் கூட்டணி 516 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 375 இடங்களிலும், பா.ஜனதா கூட்டணி 22 இடங்களிலு்ம முன்னணயில் உள்ளது.  

திமுக-காங்கிரஸ் உறவு ? புதுச்சேரியில் திமுக தனித்துப் போட்டி என்ற முடிவுக்கு வந்தால்..?

 திமுக-காங்கிரஸ் உறவு முறிவு?

minnambalam : தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரசை வெளியேற்ற வேண்டும் என கடந்த சில மாதங்களாகவே திமுகவுக்குள் குரல்கள் ஒலித்து வருகின்றன.   ஏற்கனவே இதுபோன்ற குரலை வெளிப்படையாக ஒலித்த கே.என்.நேரு போன்றவர்களும் பல்வேறு மாசெக்களும் ஸ்டாலினிடம் காங்கிரசுக்கு அதிக சீட்டுகள் கொடுத்து நமது வெற்றிவாய்ப்பை இழக்க வேண்டாம் என்று வலியுறுத்தி வருகின்றனர். அதுவும் குறிப்பாக பிகார் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் திமுகவுக்குள் காங்கிரஸுக்கு எதிரான குரல்கள் அதிகரித்தும் வலுப்பெற்றும் வருகின்றன.    இதேபோல புதுச்சேரி திமுகவில் இருந்தும் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினுக்கு திமுகவினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

”தமிழகத்தில் திமுக காட்டும் அரசியல் ஆர்வத்தை கடந்த இருபது ஆண்டுகளாக புதுச்சேரியில் காட்டவில்லை. கடைசியாக 1996 இல் திமுக சார்பில் ஆர்.வி. ஜானகிராமன் முதல்வராக பதவியேற்று 2000 வரை பதவி வகித்தார். அதற்குப் பின் கடந்த இருபது வருடங்களாக புதுச்சேரியில் திமுக ஆட்சியில் இல்லை. தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ் ஆட்சிதான் புதுச்சேரியில் நடந்து வருகிறது. இந்த முறையாவது திமுக ஆட்சி மலரவேண்டும். உங்கள் தலைமையில் தமிழ்நாடு, புதுச்சேரி என இரு மாநிலங்களிலும் திமுக ஆட்சியில் அமரவேண்டும். அது தேசிய அளவில் உங்களை கவனிக்க வைக்கும்” என்பதுதான் புதுச்சேரி திமுக பிரமுகர்கள் ஸ்டாலினிடம் வைத்த கோரிக்கை.

திருவாரூர் தங்கராசு. பெரியாரின் உண்மைத் தொண்டன்! இரத்த கண்ணீர்-பெற்ற மனம்-தங்கதுரை ஆகிய மூன்று படங்களில் வசன கர்த்தா

Image may contain: 2 people, text that says 'தந்தை பெரியாருடன்- பெரியா திருவாரூர் தங்கராசு'
  Paneerselvan :; · திருவாரூர் தங்கராசு தந்தை பெரியாரின் போர்படைத் தளகர்த்தகளில் ஒருவர்.ஆற்றல் வாய்ந்த பேச்சாளர்,எழுத்தாளர்,திரைப் பட வசனகர்த்தா,இப்படி பன்முக பரிபூரணங்களின் வடிவம்.படித்த விஷயங்களை சிந்தித்த கருத்துக்களை, ஒப்புவிப்பு,வாசித்தல் பாணியில் இல்லாமல் தன் சிந்தனையால் அதற்கு ஒரு கலை வடிவம் கொடுத்து,வார்த்தைகள் சிதரல்களாய் வெளியே வரும் பொழுது தானும் இரசித்து மற்றவர்களையும் தன்னுடன் ஒன்றிப்போய் விடுகின்ற ஆற்றலுக்கு சொந்தக்காரர்.அவமேடையில் நிற்பதே தனி அழகாயிருக்கும்.இவர் எழுதிய இரத்தக் கண்ணீர்(1954இல் திரைப்படமாக வெளி வந்தது)
இராமாயண நாடகத்தை தான் நடிகவேள் இராதா அவர்கள் தொடர்ந்து நாடகமாக நடத்தி வந்தார்.இராமயண நாடகத்தின் முதல் நாள் அரங்கேற்றத்தில் தந்தை பெரியார் தலைமை ஏற்று பாராட்டி பேசினார் . நேஷனல் பிக்ஸர்ஸ் பெருமாள் அவர்களும், இயக்குனர்-கிருஷ்ணன்-பஞ்சு அவர்களும் கலந்து கொண்டனர்.திரு பெருமாள் அவர்கள் பாராட்டி ஷீல்டுகள் வழங்கி ரூபாய் 2000/ம் தங்கராசு அவர்களுக்கு பரிசாக அளித்தார். ஒருமுறை எங்கள் ஊரில் திராவிடர் கழகப் பொதுக் கூட்டம்,நான் தலைமை. பேசினார்

பள்ளி வளாகத்தை காலி செய்ய லதா ரஜினிகாந்த்திற்க்கு கால அவகாசம் நீட்டிப்பு.. வாடகை பாக்கி விவகாரம்

Image may contain: 2 people, text that says 'புதிய தலைமுறை உண்மை ண் உடனுக்குடன் உட தற்போது 16/1 2/2020 வாடகை பாக்கி விவகாரம்: ஆஷ்ரம் பள்ளி வளாகத்தை ஏப்ரல் 30, 21க்குள் காலி செய்யாவிடில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் லதா ரஜினிகாந்துக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை 2021-22 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை நடத்தவும் தடை PARIMALAM MATRICHR.SEC.SCHOOL Dinnur- Hosur, Mobile: 96297 98129 ESTO1 979 Puthiya Thalaimurai TV PTTVOnlineNews dishtv SUN gsocen idigicon 1556 PuthiyaTalaimuralmagazine NSFOIGITAL Puthiyathalaimural ortA'   dailythanthi.com :ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை காலி செய்ய ரஜினிகாந்த் மனைவி லதாவுக்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

சென்னை, சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் அருகே நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ஆஸ்ரம் பள்ளியை வாடகை கட்டிடத்தில் நடத்தி வருகிறார்.              இதன் உரிமையாளர் வெங்கடேஷ் வரலு மற்றும் பூர்ணச்சந்திரராவ் ஆகியோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், லதா ரஜினிகாந்த் நடத்தும் பள்ளிக்கான வாடகை தொகையை சரிவர தராமல் ரூ.11 கோடி வரை நிலுவையில் உள்ளதாக கூறினார்.                   இந்த வழக்கில் தலையிட்ட நீதிமன்றம் ரூ.11 கோடியை உடனடியாக தரமுடியாததால், உடனடியாக ரூ. 2 கோடி கொடுக்கும்படியும், மாதம் ரூ. 10 லட்சம் தரும்படியும் தெரிவித்தார்.                              இதற்கான ஒப்பந்தத்தில் வெங்கடேஷ்வரலு கையெழுத்து போட்ட நிலையில் லதா ரஜினிகாந்த் ஆவணத்தில் கையெழுத்து போடாமலும், வழக்கம் போல பணத்தை தராமலும் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.                      இந்த வழக்கை மீண்டும் விசாரித்த நீதிமன்றம் இடத்தை காலி செய்ய அறிவுறுத்தியது.                   கொரோனா காரணாமாக உரிய நேரத்தில் பள்ளி வளாகத்தை காலி செய்ய முடியவில்லை என்றும் கால அவகாசம் வேண்டும் என்றும் லதா ரஜினிகாந்த் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிகிறது. 

பெரும்பான்மை இருப்பதால் சட்டம் கொண்டு வருவோம்.. விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்... பாஜக

பெரும்பான்மை இருப்பதால் சட்டம் கொண்டு வருவோம்: வேளாண்  அமைச்சர் பேட்டி

மின்னம்பலம்  : மத்திய அரசு இயற்றிய மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிராக 20 நாட்களாக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் பிரம்மாண்டமான வகையில் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட மத்திய அரசு, சட்டங்களில் சில திருத்தங்களையும் செய்து அவற்றின் வரைவுகளை விவசாய சங்கத்தினரிடம் கொடுத்தது. ஆனால் அவற்றை போராடும் விவசாயிகள் சங்கத்தினர் ஏற்க மறுத்துவிட்டனர். மேலும் ரயில் மறியல், உண்ணாவிரதம் என தொடர் போராட்டங்களை அறிவித்து வருகிறார்கள்.    இந்த நிலையில், வேளாண் சட்டங்களையும் பாஜகவுக்கு இருக்கும் 303 இடங்கள் பெரும்பான்மையையும் இணைத்து கருத்து வெளியிட்டிருக்கிறார் விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அவர் டிசம்பர் 16 ஆம் தேதி அளித்திருக்கும் பேட்டியில், “மக்கள் எங்களுக்கு 303 இடங்கள் அளித்து ஆட்சியில் அமர வைத்திருக்கிறார்கள். இந்தத் தீர்ப்பானது சும்மா, ஆட்சியில் அமர்ந்திருப்பதற்கல்ல. வேளாண் சட்டங்கள் போன்ற மாற்றங்களைக்கொண்டு வருவதற்காகத்தான்.

பாரதியின் ஜாதி வெறி! பார்ப்பனப் பெண்கள் சாதி கலப்பு ஏற்பட்டு விடக்கூடாதென பாரதி கவனமாகவே இருந்தார்

Image may contain: text that says 'ஏன் பாரதியாரின் சாதி வெறி மகா 'காவி' பாரதி'

Paul Benjamin : · பாரதி"யார்"? " ஜனங்களுக்குள் சூத்திர தர்மம் குறைந்து போனால், அப்போது பிராமணர் - _ சூத்திரத் தர்ம போதனை யையே முதல் தொழிலாகக் கொண்டு நாட்டில் உண்மையான சூத்திரர்களை அதிகப்படுத்த வேண்டும் என்கிறான் பாரதி (ஞான ரதம் பக்.88) // 

பாரதி"யார்"? “பாரதி கடையத்தில் வாழ்ந்த காலத்தில் ஒருநாள் பாரதியும், நாராயணப் பிள்ளையும் கலப்புத் திருமணம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று நாராயணப் பிள்ளை, ‘பாரதி நாம் இருவரும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல் பழகி வருகிறோமே! உங்கள் மகள் சகுந்தலா பாப்பாவை என் மகனுக்குக் கல்யாணம் செய்து வைத்தால் என்ன?’ என்று கேட்டார். பாரதி சற்று உஷ்ணமாகவே, ‘கலப்பு மணத்தை மனப்பூர்வமாக ஆதரிக்கும் எண்ணம் உங்களுக்கு இருக்குமேயானால், நீங்கள் முதலில் உங்கள் மகனுக்கு ஒரு பறை அல்லது சக்கிலியப் பெண்ணைத் தேடித் திருமணம் செய்து வையுங்கள். அதன்பிறகு பாப்பா திருமணத்தைப் பற்றிப் பேசலாம்’ என்றார். பிள்ளையும் பாரதியும் கடுமையான வாதப்பிரதிவாதம் செய்தார்கள். முடிவில் பாரதி விடுவிடு என்று தம் வீடு போய்ச் சேர்ந்தார். அப்போது காலை 11 மணி இருக்கும்.

செவ்வாய், 15 டிசம்பர், 2020

கர்ப்பிணியைக் கொடுமையாகக் கொன்ற கணவர்: சாகும்வரை தூக்கிலிட உத்தரவு!

minnambalam :கர்ப்பிணி மனைவியைக் கொடுமையாகத் தாக்கிய கணவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கர்ப்பிணியைக் கொடுமையாகக் கொன்ற கணவர்: சாகும்வரை தூக்கிலிட உத்தரவு!

தேனி மாவட்டத்தில் உள்ள ஹைவேவிஸ் பேரூராட்சிக்கு உட்பட்ட மணலாறு கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்(39). இவர் பேரூராட்சி தலைவராக இருந்தவர். இவருக்கும் ஆண்டிபட்டியைச் சேர்ந்த கற்பகவல்லி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. கற்பகவல்லி சிறுமியாக இருந்த போது , அதாவது 14வயதிலேயே திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் 2 பெண் குழந்தைகள் இருந்த நிலையில், 2015ஆம் ஆண்டு 3ஆவது முறையாகக் கர்ப்பம் தரித்திருந்தார் கற்பகவல்லி.   சுரேஷ் அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது ஊர் பெரியவர்களுக்குத் தெரிய வந்ததையடுத்து, அவர்கள் பேசி சமாதானம் செய்து வைத்தனர். எனினும் மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு அவரை தாக்கியிருக்கிறார

வரவிருக்கும் பேரழிவையும் பாசிஸ்டுகளின் கனவையும் மறித்து நிற்கிறார்கள் பஞ்சாப் விவசாயிகள்

 Image may contain: one or more people and people standing

  மருதையன் : : அமித்ஷாவைக் கண்டு அடிமை எடப்பாடி அரசு நடுங்குவதை வைத்து, “அமித் ஷா பெரிய அப்பாடக்கர்” என்று பில்டப் கொடுக்கும் தமிழ் ஊடக வைத்திகள், நேற்று விவசாயிகள் வெளியிட்டிருக்கும் அறிக்கை பற்றி என்ன சொல்வார்கள்?

“நான் சொன்னபடி புராரி மைதானத்துக்கு வா, 3 ஆம் தேதி பேசுவோம்” என்று தெனாவெட்டாக அறிவித்த அமித் ஷாவின் முகத்தில் சப்பென்று அறைந்திருக்கிறார்கள் விவசாயிகள்.
“அரசு முன்வைத்த தீர்வுகளை நிராகரிக்கிறோம்” என்று மட்டும் அவர்கள் சொல்லவில்லை.
“நாங்கள், மூன்று சட்டங்களையும் திரும்ப பெறு என்று கோருகிறோம். அதற்கு பதில் சொல்லாமல், பிரச்சனையை திசை திருப்பி விவசாயிகளை அவமானப்படுத்தியிருக்கிறீர்கள்”என்று சாடியிருக்கிறார்கள்.
ரிலையன்ஸ், அதானி பொருட்கள் புறக்கணிப்பு, ஜியோ புறக்கணிப்பு, டோல் பிளாசாக்களில் கட்டணம் செலுத்த மறுப்பு, பாஜக எம்.எல்.ஏ , எம்.பி, அமைச்சர்களின் வீடுகள் முற்றுகை, ஜெய்ப்பூர் சாலை மறியல்!
போரராட்ட அறிவிப்புகள் அனைத்தும் இலக்கை நோக்கி கூர்மையாகவும், போர்க்குணத்துடனும், மக்களைப் போராட்டத்தில் ஈடுபடுத்துவதற்குப் பொருத்தமாகவும் அமைந்திருக்கின்றன.
நாம் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

கோவையின் பிரபல சென்னை மருத்துவமனையை ரவுடிகளை ஏவி காவல் துறை உதவியுடன் அபகரிக்க முயற்சி. காவல் துறையே முன்னின்று நடத்திய அராஜகம்.

Sergio Marquina : · குற்றம் நடப்பது என்ன ? Part – 6 சட்டத்துக்கு புறம்பாக ஒரு மருத்துவமனையை காலி செய்ய ராமச்சந்திரனால் ஏவப்பட்டது 10 தொழில்முறை ரவுடிகள் துணைக்கு ஒரு 30 இளைஞர்களை நாள் ஒன்றுக்கு 2000 ரூபாய் கூலிக்கு அழைத்து வந்திருக்கின்றனர். பெரும்பாலும் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அவர்கள் எல்லோரும் யார் என்று பார்த்தால் தற்போது கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள். அவர்களிடம் நீங்கள் எல்லோரும் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு ஒருவன் BE இறுதியாண்டு, இன்னொருவன் M Tech படிப்பதாகவும் இன்னும் சில இளைஞர்கள் எல்லோரும் கல்லூரியில் இளநிலை அல்லது முதுநிலை கல்வி பயின்று வரும் மாணவர்கள் என்றும் சொல்கிறார்கள். அவர்களை இப்படியான குற்றச் செயல்களில் ஈடுபடுத்துவது குற்றச் செயல்களுக்குத் துணை போவது என்று சமூக விரோத சக்திகள் பயன்படுத்திக் கொண்டிருப்பது வேதனை அடையச் செய்கிறது.
குற்றச்செயல்களில் மாணவர்களை பயன் படுத்துவது வளரிளம் சமூகத்தை ஒரு குற்றப் பரம்பரையாக்குவதற்குச் சமம் சமூகத்துக்கு எவ்வளவு மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பற்றிய அக்கறை பணக்காரர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் ஒரு நாளும் இருக்கப்போவதில்லை.

அமமுகவுக்கு குக்கர் சின்னம்; தமிழகத்தில் மநீமவுக்கு டார்ச் லைட் மறுப்பு

tamil.indianexpress.com :தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கி அறிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னத்தையும் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தையும் ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது. அதே நேரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதுச்சேரியில் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கிய நிலையில் தமிகத்தில் டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்க மறுத்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கீடு செய்துள்ளது.

ரஜனியின் "மக்கள் சேவை கட்சி" ! .. சின்னம் ஆட்டோ..

மாலைமலர் : நடிகர் ரஜினிகாந்த் ‘மக்கள் சேவை கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சென்னை: ரஜினிகாந்த் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியனுக்கு ரஜினி மக்கள் மன்ற மேற்பார்வையாளர் பதவியும், அர்ஜூன மூர்த்திக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும் அளித்துள்ளார்.            இதைத்தொடர்ந்து கட்சி தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ‘மக்கள் சேவை கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.       234 தொகுதிகளிலும் மக்கள் சேவை கட்சிக்கு ஆட்டோ சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது. 

நடிகை சித்ரா உயிரிழப்பு வழக்கில் கணவர் ஹேம்நாத் கைது

Mathivanan Maran -tamil.oneindia.com :    சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யபப்ட்டுள்ளார். சின்னத்திரை நடிகை சித்ரா நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த 9-ந் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரேத பரிசோதனை முடிவில் சித்ரா தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யபட்டது. இதனையடுத்து கடந்த 6 நாட்களாக போலீசார் சித்ரா, தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.    

‘கடுமையான வார்த்தைகளைப் பொதுவெளியில் பேசுவது அழகல்ல!’ - மு.க.ஸ்டாலினுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

nakheeran - அதிதேஜா : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து மிகக் கடுமையாக விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது .

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் மற்றும் தமிழக அரசை விமர்சித்ததாக, தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன            . தனக்கெதிரான இந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டாலின் வழக்குத் தொடர்ந்திருந்தார். ஏற்கனவே ஸ்டாலினுக்கு எதிரான சில வழக்குகள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், மற்ற வழக்குகளின் விசாரணை, மீண்டும் நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது, பொதுமேடைகளில் தமிழக முதல்வர் குறித்து ஸ்டாலின் தெரிவித்த கருத்துகள் குறித்து பப்ளிக் பிராசிகியூட்டர் நடராஜன், நீதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். ஸ்டாலின் பேசிய கருத்துகளுக்கு கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதி, ‘லட்சக்கணக்கான தொண்டர்களின் மதிப்பைப் பெற்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், முதலமைச்சர் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறுவது கண்டனத்துக்குரியது. 

திங்கள், 14 டிசம்பர், 2020

சாதிய ஒழிக்க அதை தவறுன்னு புரிய வைப்பது மட்டுமே தீர்வு..கேலியோ கிண்டலோ எதிர் மறை விளைவை தான் தரும்.

 

Devi Somasundaram : · நேற்றைய நீயா நானாவும் இணைய அரசியலும்.. நீயா நானால சாதி அரசியல் அல்லது ஆண்ட பரம்பரை அரசியல் பேசப்பட்டதை ஒட்டி சமூக வலைதளத்தில் எழுந்த எதிர் வினைகள் கண்ணில் பட்டது . பலர் அந்த சாதி பெருமை பேசும் இளைஞர்களை கிண்டல் செய்தும் , நக்கல் அடித்தும் பதிவுகளை பார்த்தேன் . சாதி பெருமை பேசுவது பாராட்டப்பட வேண்டியது இல்லை என்பது போல் ஒரேடியா கேலி கிண்டல் செய்வது எதிர் மறை விளைவை தான் தரும். அந்த பையனின் அறியாமையை தான் கேலி செய்தோம் என்பதை மறந்து விடக் கூடாது. அறியாமையை கேலி செய்வதும் பார்ப்பனியம் தான். அந்த பையனுக்கு சரியா சொல்லித் தராத தவறை செய்ததும் நாம் தான் என்பதை மறந்து விடக் கூடாது. நாம் தவறிய இடத்தை பார்ப்பனியம் பயன்படுத்திக் கொண்டது .அங்கீகாரம் என்பது எல்லா மனித மன விழைவு தான் .அது ஆண் பெண்ணால் அங்கீகரிக்கப்படுவதோ , எழுத்தாளன் வாச்கனால் அங்கீகரிக்கப்படுவதோ, நடிகர் ரசிகரால் அங்கீகரிக்கப் படுவதோ ..பக்தன் கடவுளால் அஙகீகரிக்கப்படுவதோ ..தினம் அந்த கட்டமைக்கப்பட்ட வாழ்தலின் அர்த்தத்தை தேடி தான் ஓடிக் கொண்டு இருக்கின்றோம் .

வன்புணர்வு செய்தவரையே திருமணம் செய்யலாமா? ஒரு ரஜினிகாந்த் டைரி குறிப்பு

நடிகை லதா மீது பைத்தியமாக இருந்த ரஜினி அவருடன் நடிக்கும் போது செய்த சில சில்மிஷங்களை கேள்வி பட்ட எம்ஜிஆர் ரஜினியை அழைத்து ராமாவரம் தோட்டத்தில் கட்டிவைத்து அடித்தார்.                  அடிப்பட்ட சோகத்தில் பாட்டிலும் கையுமாக திரிந்த ரஜினியை ஒரு பெண் பத்திரிகை பேட்டிக்கு காண வந்த போது அவர் பெயரை கேட்ட மாத்திரத்தில் அவரை கட்டிலில் வீழ்த்தி அவரின் கற்பை சூறையாடுகிறார் போதையில் இருந்த ரஜினி...!                        அன்று நடிகர் ரஜினியிடம் கற்பை பறிகொடுத்தவர் ஒய்.ஜி.பார்த்தசாரதியின் உறவுப்பெண். தகவல் எம்ஜிஆர் காதிற்குப் போக மீண்டும் ராமாவரம் தோட்டத்தில் வைத்து ரஜினிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.                      இறுதியில் அந்த பெண்ணையே திருமணம் செய்துகொள்ளும்படி பணிக்கப்படுகிறார். அப்படி ஒரு சூழலில் ரஜினிக்கு மனைவியானவர் தான் திருமதி.லதா ரஜினிகாந்த்..! 

அதன் பிறகும் எம்ஜிஆரின் சிறப்பு கவன வளையத்திற்குள் சிக்கி கொண்ட ரஜினி அதிலிருந்து தன்னை காத்துக்கொள்ள கலைஞரின் உதவியை நாடுகிறார். அப்படி தான் கலைஞருக்கும் ரஜினிக்குமான உறவு துளிர்விட்டு வளர்ந்தது. தன்னை கட்டிவைத்து அடித்த எம்ஜிஆரின் ஆட்சியைத்தான் ரஜினி வழங்கப்போவதாக அரசியல் பேசிக்கொண்டிருக்கிறார்..!!          இன்னொரு விந்தை என்ன தெரியுமா..? தன்னை கட்டி வைத்து அடித்தவரிடமிருந்து தன்னை காப்பாற்றி தன் வாழ்நாள்வரை நண்பராக கொண்டிருந்த, தான் கலந்து கொண்ட மேடைகளிலெல்லாம் உடன் அமரவைத்து அழகு பார்த்த கலைஞரின் கழகத்திற்கு எதிராக படை திரட்டுகிறார். இவரைப் போன்ற பல துரோகிகளை புறம் கண்ட இயக்கத்திற்கு ரஜினி எல்லாம் தூசை விட கீழானவர்..! ஆகட்டும் பார்க்கலாம்..!! - தமிழரிமா வனத்தையன்

விவசாயிகளை நக்சல்கள் தூண்டிவிடுகிறார்கள்..! - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு..!

பகுதி 2 : வானதி சீனிவாசன் ஊழலுக்கு ஆர்.எஸ்.எஸ் பாதுகாப்பு ! | வினவு
nakkheeran.in - வே.ராஜவேல் : மன் கீ பாத்தில் பிரதமர் விளக்கம் அளித்திருக்கிறார். விவசாயிகள் போராட்டம் தொடங்கியதில் இருந்து மத்திய அரசு, மத்திய அமைச்சர்கள் வாயிலாக, பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. அவர்களுக்கான அச்சம், சந்தேகத்திற்கெல்லாம் மத்திய அரசு பதில் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறது. 

 அவையில்லாமல் போராட்டக் களத்திலேயே ஒரு சில நக்சல் பின்னணி கொண்ட நபர்கள், தேசப் பிரிவினையை ஆதரிக்கக்கூடிய நபர்கள், உள்ளே நுழைந்திருக்கிறார்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக மத்திய அரசு வெளிப்படுத்தியிருக்கிறது.     விவசாயிகளுடைய போராட்டம் என்பது விவசாயிகளுடைய நன்மையை, பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய விதத்தில் இருக்க வேண்டுமென்றால், இம்மாதிரியான தலைவர்கள், பிரிவினைவாத சக்திகள் போராட்டத்தின் உள்ளே நுழைவதை விவசாயிகள் அனுமதிக்கக்கூடாது. விவசாயிகளுடைய நியாயமான பிரச்சனைகளுக்கு செவி சாய்க்க எப்போதும் மத்திய அரசு தயாராக இருக்கிறது. 

ஏர் இந்தியாவை வாங்குகிறதா டாடா நிறுவனம்? ஒப்பந்த புள்ளிகள் சமர்ப்பித்ததாக தகவல்

மாலைமலர் : ஏர் இந்தியா நிறுவன பங்குகளை வாங்க டாடா நிறுவனம் ஒப்பந்தப்புளிகள் சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

புதுடெல்லி: பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா, ரூ.80 ஆயிரம் கோடி கடன் சுமையில் சிக்கி தவிக்கிறது.                   ஆகவே, அதன் 100 சதவீத பங்குகளையும் விற்று, அதை முற்றிலும் தனியார்மயமாக்க மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, ஏர் இந்தியா பங்குகளை வாங்க நிறுவனங்கள் ஒப்பந்தபுள்ளிகளை சமர்ப்பிக்க தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது.              ஆனால், மத்திய அரசின் கட்டுப்பாடுகளால் ஏர் இந்தியா நிறுவன பங்குகளை வாங்க தனியார் நிறுவனங்கள் தொடக்கத்தில் ஆர்வம் காட்டமல் இருந்தன. இதனால், பங்குகளை வாங்குவதற்கான கட்டுப்பாடுகளில் பலவற்றை மத்திய அரசு தளர்த்தி ஒப்பந்தப்புள்ளிகள் வழங்குவதற்கான காலக்கெடுவையும் நீட்டித்தது.

உத்தரப் பிரதேசத்தில் ஒரே நாளில், ஒரே இடத்தில் தாய் மற்றும் மகளுக்கு திருமணம்

BBC :உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் தாயும் மகளும் தங்கள் வாழ்க்கை இணையுடன் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்துள்ளது என பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது. 

அங்கு அரசாங்க உதவியுடன் நடைபெற்ற 63 திருமணங்கள் ஒன்றாக ஒரே நாளில் நடத்தி வைக்கப்பட்டது.                   அதில் கணவரை இழந்த தாய் ஒருவரும், அவரது இளைய மகளும் தத்தமது துணையைத் திருமணம் செய்து கொண்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். கோரக்பூரின் பிப்ரலி கிராமத்தில்தான், டிசம்பர் 10ஆம் தேதி இந்த திருமண நிகழ்வு நடைபெற்றது.                                                   53 வயதான பெலி தேவியின் கணவர் ஹரிஹர் 25 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். அவர்களுக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர்.                 தற்போது பெலி தேவி ஹரிஹரின் சகோதரர் ஜகதீஷை திருமணம் செய்து கொண்டுள்ளார்.                          அதே நேரத்தில் தேவியின் கடைசி மகளான 27 வயதாகும் இந்து, ராகுல் என்பவரை மணந்து கொண்டார்.                             “என் இரு மகன்களுக்கும் இரு மகள்களுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. தற்போது என் கடைசி மகளும் திருமணம் செய்துகொள்ள, நானும் என் கணவரின் இளைய சகோதரருடன் இணைந்துள்ளேன். 

விவசாயிகள் கட்டுப்பாட்டில் சுங்கச் சாவடிகள் ! மத்திய அரசு கடும் அதிர்ச்சி !!

newstm.in : விவசாயிகள் போராட்டத்தின் ஒரு பகுதியாக, ஹரியானா மாநிலத்தில், சுங்கச் சாவடிகளை   கைப்பற்றப்பட்டுள்ளது. இதனால், டெல்லியில் கட்டணமின்றி இலவசமாக சென்று வருகின்றன. மத்திய பாஜக அரசு கொண்டு வந்த புதிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் டெல்லியில்  17-வது நாள் போராட்டம் தொடர்கிறது. இதனிடையே, விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 5 கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

இதனையடுத்து, அடுத்து கட்ட போராட்டத்தை  விவசாயிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர்.அதன்படி டெல்லி எல்லையில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்க வரி செலுத்தாமல் பயணிக்கும் போராட்டத்தை விவசாயிகள் கையில் எடுத்துள்ளனர். 

தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை - 18 கோடி ????? ஜாதிகளின் கணக்கெடுப்பு அலப்பறை

Kandasamy Mariyappan : · செட்டியார்கள் 2 கோடி வன்னியர்கள் 2.5 கோடி
தாழ்த்தப்பட்டவர்கள் 2 கோடி
வேளாளர்கள் 2 கோடி கோடி
முக்குலத்தோர்கள் 1.5 கோடி
கோனார்கள், முத்திரையர்கள் 1 கோடி
நாடார்கள் 1 கோடி
ஒடுக்கப்பட்டவர்கள் 0.5 கோடி
நாயுடுகள், ரெட்டிகள், நாயர்கள் 1 கோடி
பார்ப்பணர்கள் 0.5 கோடி
வடக்கத்தியர்கள் 0.5 கோடி
இசுலாமியர்கள் 1 கோடி
கிறித்துவர்கள் 1 கோடி
சௌராஷ்ட்டிரா, சமணர்கள் 1 கோடி
அவர்கள், இவர்கள், எவர்கள்- 0.5 கோடி
தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை - 18 கோடி வருதே!!!
இவ்வளவு மக்களுக்கு, இடஒதுக்கீட்டுக்கு எங்க போவாறு நம்ம மொதலமைச்சரு!!!

நடிகை சித்திரா குளித்துவிட்டு தாயாரிடம் பேசியுள்ளார் ... ஹேமந்த்தைக் காப்பாற்ற பெரிய பட்டாளமே போராடிக் கொண்டிருக்கிறது

tamil.oneindia.com : சித்ரா இறப்பதற்கு முன்பு, தன் அம்மா விஜயாவுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. சம்பவம் நடந்த அன்று ஷூட்டிங்கில் இருந்து வந்த சித்ரா, ஹேம்நாத்தை வெளியே அனுப்பிவிட்டு, குளித்து விட்டு டிரஸ் மாற்றி கொண்டுள்ளார்... அந்த சமயத்தில்தான், தன்னுடைய அம்மாவுடன் செல்போனில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது 

மின்னம்பலம் : சின்னத்திரை நடிகை சித்ராவைத் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் அடுத்தடுத்து விசாரணைகள் தொடர்கின்றன.

சித்ரா தற்கொலை: அதிகரிக்கும் அழுத்தம் - தப்பிக்கும் ஹேமந்த்?

இது தொடர்பாக சித்ரா விவகாரத்தில் அமைச்சர்களின் மகன்கள் என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அச்செய்தியில், சித்ராவின் காதல் கணவன் ஹேமந்த் பற்றியும், அவரது கடந்த கால மோசடிகள் பற்றியும் விளக்கியிருந்தோம். அந்தச் செய்தியை வலுப்படுத்தும் வகையில், போலீஸ் விசாரணையில் சிக்கிய ஹேமந்த்தைக் காப்பாற்ற பெரிய பட்டாளமே போராடிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.

அம்பானி இந்தியாவை திருடும் கதை (Part - 1) இப்போது அதானியும் அவருடன் சேர்ந்து கொண்டார்

  Image may contain: 3 people

Rajarom Padmanathan : அம்பானி எவ்வளவு கொள்ளையடித்தாலும், என்ன தில்லுமுல்லு செய்தாலும் எதுவும் நமக்கு தெரிவதில்லை. 2G என்ற ஊழல் வழக்கு மட்டும் நாடெங்கும் தொடர்ந்து விவாதிக்கபடுகிறதே. அம்பானி மோடியின் உதவியுடன் செய்யும் ஊழல்களை யாரும் பெரிதாக பேசுவதில்லையே ஏன்?    Reliance உருவாக்கிய Network 18 என்ற நிறுவனம் தான் இந்தியாவில் பெரும்பாலான டிவி மற்றும் மீடியா சேனல்களின் உரிமையாளர். நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ என்ன செய்தி உங்களை வந்தடைகிறது என்பதை முழுமையாக கட்டுப்படுத்துகிறார் முகேஷ் அம்பானி.

அது கிடக்கட்டும். நாம் முதலில் இருந்து ஆரம்பிபோம்.
2012 குஜராத் முதல்வராக இருந்த போது மோடி தனது corporate நண்பர்களான Reliance'ம் அதானி குழுமமும் 1500 கோடி லாபம் பெறும் வகையில் நிதி ஆதாரங்களை தவறாக கையாண்டுள்ளார். இதை கண்டுபிடித்து அப்போதே சொன்னார் மத்திய அரசின் முதன்மை தணிக்கையாளர் CAG. யாரும் கண்டுகொள்ளவில்லை.

சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் முஸ்லீம் பெண் குற்றவியல் வழக்குரைஞர் திருமதி . ஷபானா

 நேசமுரசு ஹமீத்கான் : சென்னை உயர்நீதிமன்றத்தின் 126வது ஆண்டுவிழா நிகழ்ச்சிகள் இந்த ஆண்டு நடந்து முடிந்தது. மெட்ராஸ் உயர்நீதிமன்றம் ஆரம்பித்து இத்தனை ஆண்டு கால வரலாற்றில் ( Madras High Court -Estd : 1892 ), குற்றவியல் பிரிவில் அரசு சார்பாக ஆஜரான முதல் பெண் வழக்குரைஞர் ஷபானா ஆவார். ஆறு ஆண்டுகள் வரையிலும் அவர் அரசு தரப்பிற்காக வாதாடியுள்ளார். அதிலும் அவர் ஒரு முஸ்லிம் பெண் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். சட்டத்துறை என்பது எத்தனை கடின சூழ்நிலைகளை உருவாக்கவல்லது, எத்தனை நெருக்கடிகள் எத்தனை போராட்டங்களை உடையது என நம்மில் அனைவரும் அறிந்த ஒன்று. அத்தகைய ஒரு சிக்கலான துறையில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டதோடு மாத்திரமல்லாமல்...அதில் தமது சேவையையும் தொடரும் ஒரு முஸ்லிம் சாதனை பெண்ணை பற்றிய பதிவு.  1986ல் சென்னையில், முஹம்மது ஃபர்ஹத் மற்றும் சித்தி பதுரியா ஆகிய பெற்றோருக்கு மகளாக பிறந்த திருமதி.ஷபானா, படித்தது வளர்த்தது அனைத்தும் சென்னையில் தான். அவருடைய கணவர் ஸமீ ஜூல்பிகார் ஆவார், இவர்களுக்கு குட்டி குட்டியாக இருமகள்களும் உண்டு. கணவர் மற்றும் அவரது தந்தை (மாமனார்) அவர்களின் உதவியும் ஊக்கமும் பெற்ற ஷபானா அவர்களுக்கு மென்மேலும் உறுதுணையாய் இருந்தது அவரது மாமனார் என பெருமிதம் கொள்கிறார். வழக்குகளில் பிராக்டீஸ் செய்ய அவரது மாமனார் அவர்கள் பெரிதும் உதவியுள்ளார்கள்.

திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலக Total cost : 705 கோடி. (Aprox)

Muralidharan Pb : New Parliament Vs New Secretariat Complex எந்த விவரமும் தெரியாமல் நிறைய பாஜக ஆதரவு கும்பல் பொய்களை உண்மை என்று போட்டு அகம் மகிழ்வது எப்போதும் நடப்பது தெரிந்ததே.
அரவிந்த் கேஜரிவால் அரசு தான் முதன்முதலில் பாலம் கட்டி, அதில் சில கோடிகளை அரசுக்கு மிச்சப்படுத்தியது என்று தூக்கிட்டு வருவார்கள். அதற்கு முன்பே தமிழ்நாட்டில் திமுக அரசு பாலங்களை குறித்த நேரத்திற்கு முன்பே கட்டி பல கோடி ரூபாய் அரசு கருவூலத்திற்கு மிச்சம் படுத்தியது நடந்துள்ளது.
அதே போல், பின்னராயி விஜயன் அரசு தான்
Image may contain: outdoor

முதன்முதலில் பாதாள சாக்கடையில், மனித மலத்தை அள்ளும் இயந்திரங்களை கொண்டுவந்தது என்று பேசினார்கள். ஆனால், இந்தியாவிலேயே முதன் முதலில் கலைஞர் அரசு 2006-2011 ஆட்சியிலேயே இதை செய்துவிட்டது.
தற்போது அண்மையில் ஒரு பீலாவை விட்டுக்கொண்டு திரிகிறது சங்கிக் கூடாரம். அது என்னவெனில்,
2020ல் மோடி அரசு 920 கோடியில் 65000 சதுர அடியில் பாராளுமன்றக் கட்டிடத்தை கட்டிட பூமி வழிப்பாடு செய்துள்ளார். ஆனால் திமுக அரசு 12 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 20000 சதுர அடிக்கு புதிய தலைமைச் செயலகம் கட்ட 465 கோடிகள் செலவழித்து உள்ளது என்று அபாண்டமாக சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.
உண்மை என்ன ?