hindutamil.in : கேரள மாநிலத்தில் 13 கல்லூரி மாணவர்களிடம் நோரோ வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் அளவுக்குத் தீவிரத் தன்மை இல்லாத வைரஸாக நோரோ வைரஸ் அறியப்பட்டாலும், அதன் தொற்றுத் தன்மை காரணமாக அச்சம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகவிலும் நோரோ வைரஸ் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழக அரசும் நோரோ வைரஸ் பரவாமல் இருப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நோரோ வைரஸ் குறித்தும், அவ்வைரஸிடமிருந்து எப்படி நம்மைத் தற்காத்துக் கொள்வது என்பது குறித்தும் வேலூர் அரசு மருத்துவமனையின் பொது மருத்துவத்துறை தலைமை மருத்துவர் ராமலிங்கத்திடம் பேசினோம்.
நோரோ வைரஸ் என்றால் என்ன?
சனி, 27 நவம்பர், 2021
நோரோ வைரஸ்: நம்மைத் தற்காத்துக் கொள்வது எப்படி? - மருத்துவர் ராமலிங்கம் பேட்டி
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5000 பரிசு: தமிழக அரசு அறிவிப்பு!
கலைஞர் செய்திகள் : சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5,000 பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5,000 பரிசு வழங்கப்படும் என தமிழக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பொன்னான நேரத்தில் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உதவி புரியும் நபர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இந்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பரிசு வழங்கும் திட்டம் ஒன்றினை அறிவித்துள்ளது.
நீட் தேர்வு விலக்கு சட்ட விவகாரம்- ஆளுனருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
மாலைமலர் : நீட் தேர்வு தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னரை நேரில் சந்தித்து, “நீட் தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு முறையானதா, ஏழை எளிய கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதா என்பது குறித்தும், அவ்வாறு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை களையும் வகையில் அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய நியாயமான மாணவர் சேர்க்கை முறையை நடைமுறைப்படுத்துவது குறித்தும் ஆராய்ந்து, தக்க பரிந்துரைகளை அளித்திட நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றை முதல்-அமைச்சர் அமைத்தார்.
தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை .. என்ன நடக்கிறது?
பிரபுராவ் ஆனந்தன் - பிபிசி தமிழுக்காக : இலங்கை அகதிகள் முகாமில் ஆய்வு நடத்தும் அகதிகள் மறுவாழ்வுக்கான நலத்துறை இயக்குநர் ஜெசிந்தா லாசரஸ்
இலங்கை அகதிகள் தங்களுக்கு இந்திய குடியுரிமை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தால், அதை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அகதிகள் மறுவாழ்வு மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை இயக்குநர் ஜெசிந்தா லாசரஸ் உறுதி அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களின் வாழ்க்கைத்தரம், அடிப்படை வசதிகள் குறித்து அறிய பல்வேறு அகதிகள் முகாம்களிலும் ஜெசிந்தா லாசரஸ் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமை ஜெசிந்தா இன்று பார்வையிட்டார். பின்னர் இலங்கை அகதிகள் வசிக்கும் வீடுகளுக்குச் சென்று அங்குள்ளவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்கள் உ பி, ம பி , பீகார், ஜார்கண்ட் - நிதி ஆயோக் அறிக்கை
மாலைமலர் : ஏழ்மையான மக்கள் தவிர ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் அதிகம் உள்ள மாநிலங்களிலும் பீகார் முதலிடத்தில் உள்ளது.
புதுடெல்லி: நாட்டில் கல்வி, சுகாதாரம், அன்றாட வாழ்க்கை நிலை, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் நிலவும் வறுமை தொடர்பாக நிதி ஆயோக் ஆய்வு செய்து தனது முதல் அறிக்கையை (பல பரிமாண வறுமை குறியீடு) வெளியிட்டுள்ளது.
அதில், நாட்டில் மிகவும் ஏழ்மையான மாநிலங்கள் பட்டியலில் பீகார், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பீகார் மாநிலத்தில் 51.91 சதவீத மக்கள் ஏழைகளாக உள்ளனர். ஜார்க்கண்டில் 42.16 சதவீத மக்களும், உத்தர பிரதேசத்தில் 37.79 சதவீதம் மக்களும் வறுமையில் உள்ளனர்.
கமல்ஹாசனின் உடல்நிலை .. மருத்துவமனை வெளியிட்ட முக்கிய அறிக்கை!
Rayar A - Oneindia Tamil : சென்னை: நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியானது. வெளிநாட்டில் இருந்து திரும்பிய நிலையில் கமலுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
உங்களுக்கு அருகாமையில் இருக்கும் ஸ்மார்ட் ஹோம்சுக்கு உங்களை வரவேற்கிறோம்! மேலும் தெரிந்து கொள்ளுங்கள்
இதனை தனது டுவிட்டரில் உறுதிப்படுத்திய கமல்ஹாசன், ''அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்'' என்று அவர் கூறி இருந்தார்.
உக்ரேனை இரசியா ஆக்கிரமிக்குமா?
உக்ரேன் அரசு பிரிவினைவாதிகள் கையில் உள்ள உக்ரேனின் கிழக்குப்பகுதியில் உள்ள Donetsk மற்றும் Luhansk பிரதேசங்களில் இரசியப் படைகள் தமது ஆக்கிரமிப்புத் தாக்குதல் தயார் நிலையை விரிவு படுத்தி வருகின்றன என அறிவித்துள்ளது.
உக்ரேனின் இறைமைக்குட்பட்ட அந்த இரண்டு பிரதேசங்களும் 2014இல் தம்மை தனி நாடுகளாக பிரகடனப் படுத்தியுள்ளன.
2014இல் உக்ரேனின் கிறிமியாப் பகுதியை இரசியா தன்னுடன் இணைத்துக் கொண்டது. அமெரிக்கப் படைத்துறையினர் மற்ற நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு உக்ரேன் எல்லையை நோக்கி இரசியா படைநகர்வு செய்வதைப் பற்றி அறிவுறுத்தியுள்ளார், அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் அண்டனி பிளிங்கென் உக்ரேனை ஆக்கிரமிப்பது பற்றி இரசியாவிற்கு தன் எச்சரிக்கையையும் தெரிவித்துள்ளார்
உதயநிதி பிறந்தநாள்: காத்திருந்து வாழ்த்திய அமைச்சர்கள்!
மின்னம்பலம் : திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று இரவு அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் காத்திருந்து உதயநிதிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து பரிசுகளை வழங்கினர்.
தமிழக முதல்வரின் மகனும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வும், திமுக இளைஞர் அணி செயலாளரும், திரைப்பட நடிகருமான உதயநிதியின் 44ஆவது பிறந்த நாள் இன்று(நவம்பர் 27) திமுகவினரால் கொண்டாடப்படுகிறது.
தொடர் மழையால் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் பிறந்தநாளை முன்னிட்டு ஃப்ளெக்ஸ் பேனர்கள் வைப்பது, பட்டாசு வெடிப்பது போன்ற ஆடம்பரங்களை தவிர்த்து, ஆடம்பர ஏற்பாடுகளுக்கு ஆகும் கூடுதல் செலவை நலத்திட்ட உதவிகளுக்கும், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவுமாறு உதயநிதி நேற்று முன் தினம் கேட்டுக்கொண்டார்.
தஞ்சாவூர் இளைஞரை நிர்வாணப்படுத்தி சரமாரி தாக்குதல்.. 15 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!
Rayar A - Oneindia Tamil :: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கருப்பூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்.
வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் திருமணத்துக்காக சொந்த ஊர் வந்துள்ளார்.
சதீசும், அவரது சகோதரரும் தொன்றாம் பட்டு பகுதிக்கு ஏஜெண்டு ஒருவரை பார்ப்பதற்காக சென்றுள்ளனர் சதீஷ் காரில் சென்றுள்ளார்.
அவரது சகோதரர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
தொன்றாம் பட்டு கிராமத்தில் வைத்து சதீஷ் தனது காரை ரிவர்ஸ் எடுத்தபோது அவரது சகோதரரின் மோட்டார் சைக்கிளில் இடித்துள்ளது.
அப்போது அந்த பகுதியில் மது அருந்தி கொண்டிருந்த சிலர் உடனடியாக வந்து யார் நீ?
உனக்கு எந்த ஊர்? ஏன் பைக்கை இடித்தாய்? என்று தகராறு செய்துள்ளனர்.
கரூர்மாவட்டம் செந்தில் பாலாஜியின் கோட்டையா ? ஜோதிமணி போராட்டம் உணர்த்துவது என்ன?
aramonline.in: ஜோதிமணி போராட்டம் உணர்த்துவது என்ன? - சாவித்திரி கண்ணன் :
எந்த ஒரு எம்.பியானாலும், மக்கள் நலத் திட்டங்களை மாநிலஅரசின் ஒத்துழைப்புடன் தான் செய்ய முடியும்!
மாநில அரசு என்றால், மாவட்ட ஆட்சியர் வழியாகத்தான் மக்களுக்கு நன்மைகளை கொண்டு சேர்க்க முடியும்!
ஜோதிமணி அடிப்படையில் மக்கள் நலன் சார்ந்து செயல்படும் ஒரு சமூக செயல்பாட்டாளர்! கரூர் எம்.பி தொகுதியில் சுமார் 10,000 மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கான உபகரணங்களை கேட்டு காத்துள்ளனர். இந்த நிலையில் மாநில அரசால் மட்டுமே இந்த தேவைகளை நிறைவு செய்துவிட முடியாது! ஆகவே, அவர் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையிடம் விலையில்லாமல் பெறுகின்ற மாற்றுத் திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகனங்கள் உள்ளிட்ட உபகரணங்களை கேட்டுத் தர திட்டமிடுகிறார்!
வெள்ளி, 26 நவம்பர், 2021
போரை தவிர எஞ்சிய எல்லா வழிகளையும் அடைத்து தற்கொலை அழிவுப்பாதையில்..... அந்த தற்குறி
Sugan Paris : முழுமூட அறிவிலியும் நிர்மூடனுமான ஒரு தற்குறியின் பிறந்தநாள் இன்று.
தன்னிலும் வயதுமூத்த அரசியல் ஆளுமைகளையெல்லாம் அவன் கொன்று கொண்டிருந்தான். ஜனநாயக அரசியல் என்பது அவனுக்கு அலர்ஜி !
சமூகங்கள் அனைத்திற்குமான இயல்பான ஒரு வாழ்க்கைக்கு அவன் இருப்பு எப்போதும் அச்சுறுத்தலாயிருந்தது.
எப்போதும் வலிந்த ஒரு போரை நடத்திக்கொண்டு தன்பாதுகாப்பில் மிகக் கவனமாயிருந்தான். 20 000 இற்கு மேற்பட்ட சிறுவர்கள் அவன் யுத்த வலயத்திற்கு இழுக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள்.
மிகப்பெரிய கோழை அவன்.தன்னை எப்போதும் கொல்ல எல்லோரும் காத்திருக்கிறார்கள் என சந்தேகத்திலேயே அவன் வாழ்க்கை அமைந்தது.
நீடித்த ஒரு போரில் தன் சமூகமும் தனது அமைப்பும் அழிந்துகொண்டிருப்பதையிட்டு அவனுக்கு எந்த மதிப்பீடுகளும் இருந்ததில்லை. எதையுமே அவனால் புரிந்துகொள்ளமுடியாத மனக் கட்டமைப்பைக் கொண்டிருந்தான்.
ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள்களின் பின்சீட்டில் அமரும் சிறுவர்களை பாதுகாக்கும் பெல்ட்
செல்லபுரம் வள்ளியம்மை : ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள், சைக்கிள் போன்றவற்றின் பின்னால் அமர்ந்து செல்லும் சிறுவர்களின் பாதுகாப்பு மிகவும் கேள்விக்குறியாக உள்ளது.
ஒரு சிறிய பெல்ட் இந்த சிறுவர்களின் பாதுகாப்பை ஓரளவாவது உறுதி செய்யும் என்று நம்புகிறேன்
ஆனால் பலருக்கும் இப்படி ஒரு பாதுகாப்பு பெல்ட் இருக்கும் விடயமே இங்கு தெரியாது ,
எதுவித பாதுகாப்பு பெல்டும் அணியாமலே தினமும் ஆயிரக்கணக்கான சிறுவர் குழந்தைகள் மோட்டார் சைக்கிள் அல்லது ஸ்கூட்டரின் பின்னே அமர்ந்து பயணிக்கிறார்கள்.
படத்தில் இருப்பது போல ஒரு சாதாரண பெல்ட் இவர்களது பாதுகாப்புக்கு பெரிய உதவியாக இருக்கும்
நானும் எத்தனையோ பேரிடம் இங்கு இதைபற்றி பேசி பார்த்துவிட்டேன்
டிசம்பர் 15-ம் முதல் வெளிநாடுகளுக்கு விமான சேவை
தினத்தந்தி : புதுடெல்லி, சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் முதன் முதலாக கண்டறியப்பட்டது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதி முதல் சர்வதேச போக்குவரத்தை மத்திய அரசு நிறுத்தியது.
தொற்று பரவல் முழுமையாக கட்டுக்குள் வராததால் தற்போது வரை விமானபோக்குவரத்து சேவை இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. ”ஏர் பபுள்” என்ற கொரோனா தடுப்பு விதிகளுடன் 25 நாடுகளுக்கு மட்டும் விமான சேவையை இயக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திமுக காங்கிரஸ் கூட்டணி உறவை சீர்குலைக்கும் கரூர் எம்பி ஜோதி மணி...
Venkat Ramanujam : கரூர் மாவட்டத்தில் நடப்பது என்ன?
ஜோதிமணி வெற்றிக்காக அப்பகுதி காங்கிரசுடன் இணைந்து 2019 ஆண்டில் இரவு பகலாக உழைத்த திமுகவை..
முக்கியமாக தற்போதைய அமைச்சர் அப்போது மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி களத்தில் செய்த உழைப்பை திமுகவை விட்டுவிடுங்கள் ..
அப்பகுதியில் உள்ள எந்த ஒரு காங்கிரஸ் கட்சிக்காரர்களும் புறம் தள்ளிவிட முடியாது தானே..
அப்படி ஆதரவு தந்த கட்சியின் ஆறுமாத கால ஆட்சியை எதிர்த்து ..
அந்தக் கட்சி பிரமுகர்களிடம் பேசி சுமுகமாக தீர்த்து முடிக்க முயலாமல் ஏன் கரூர் எம்பி ஜோதிமணி கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் கடந்த இரு நாட்களாக நிகழ்த்த வேண்டும்..
மாவட்ட கலெக்டர் தன் நிலையில் இருந்து இறங்கி வந்து ஜோதிமணி நேரில் சந்தித்த பின்னரும் கரூர் எம்பி போராட்டம் தொடர்ந்து நடைபெறுவதன் நோக்கம் என்ன. .
திமுக ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆகிய பின்பும் ஜெயா சசி கொள்ளை அடித்த சொத்துக்களை அரசுடைமையாக்க என்ன தயக்கம் ?
Mani Maran : 1967ல் சென்னை போயஸ் தோட்டத்தில் அந்த வீட்டை ஜெயலலிதாவின் தாய் சந்தியா வாங்கியபோது அதன் மதிப்பு 1.32 லட்சம் மட்டுமே. தொடர்ந்து அவ்வப்போது சில ஆயிரங்களில், சிறியளவில் புனரமைக்கப்பட்டு வந்தாலும், 91ல் ’ஜெ’ முதல்வரான பிறகே அக்கம் பக்கத்திலுள்ள நிலங்களையெல்லாம் மிரட்டி வாங்கி, கோடிகளை கொட்டி, 24 ஆயிரம் சதுர அடிகள் பரப்பளவில் மிக பிரமாண்டமாக உருவானது ’வேதா நிலையம்’.
இந்த பங்களாவிற்கு எடப்பாடி அரசு வழங்கிய இழப்பீடு தொகையே 67 கோடிகள். இந்த அடிப்படையில் இதன் உண்மையான மதிப்பு 150 கோடிகளை தொடும். இத்தனை மதிப்புமிக்க பங்களா, ஜெயலலிதாவின் சினிமா சம்பாத்தியத்தில் கட்டப்பட்டதல்ல என்பது ஊரறிந்த உண்மை. ஊரை அடித்து உலையில் போட்ட கொள்ளை பணத்தில்தான் இந்த கோட்டை எழுப்பப்பட்டிருக்கிறது.
கடலூர் திமுக எம்.பி ரமேஷ் மீதான கொலை வழக்கு: சிபிசிஐடிக்கு உத்தரவு
மின்னம்பலம் : திமுக எம்.பி ரமேஷ் மீதான கொலை வழக்கு விசாரணையை சிபிசிஐடி கூடுதல் எஸ்.பி கண்காணிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பணிக்கன்குப்பம் பகுதியில் திமுக எம்.பி ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலை உள்ளது. இங்கு பணியாற்றி வந்த மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜு என்ற ஊழியர் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி கொலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி எம்.பி ரமேஷ் நீதிமன்றத்தில் சரணடைந்தார். கடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இவ்வழக்கில் நான்கு நாட்கள் நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 19ஆம் தேதி எம்.பி ரமேஷுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்திய மியான்மர் எல்லையில் நில நடுக்கம்! 6-1 .ரிச்டர் ! கொல்கத்தா, வட கிழக்கு மாநிலங்களில் அதிர்வு
Veerakumar - Oneindia Tamil : டெல்லி: இந்தியா-மியான்மர் எல்லைக்கு அருகே வெள்ளிக்கிழமை காலை 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, திரிபுரா, மணிப்பூர், மிசோரம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் நில நடுக்கம் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கம் கொல்கத்தா வரை உணரப்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையத்தின் (EMSC) இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன
"இது நான் உணர்ந்த மிக நீண்ட நிலநடுக்கங்களில் ஒன்றாகும்" என்று மிசோரமின் தென்சால் பகுதியைச் சேர்ந்த ஒருவர் அச்சத்தோடு தெரிவித்தார்
மன்சூர் அலிகான்: நடிகன் என்பதால் இப்படியா? செல்லப்பூனையின் உயிர் பறிபோனது .. நீதிமன்ற அனுமதியை ஏற்க மறுத்த நடிகர்!
tamil.asianetnews.com : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான மன்சூரலிகான் (Mansoor Ali khan), சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத பிரபலமாக வலம் வருபவர். தனக்கென அரசியல் கட்சி ஒன்றையும் துவங்கியுள்ள இவர், பல்வேறு சமூக பிரச்சனைகள் மற்றும் அறப்போராட்டங்கள் மூலமாக முக்கிய பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். அதற்க்கு சட்ட ரீதியிலும் தீர்வு கண்டு வருகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான மன்சூரலிகான், சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத பிரபலமாக வலம் வருபவர். தனக்கென அரசியல் கட்சி ஒன்றையும் துவங்கியுள்ள இவர், பல்வேறு சமூக பிரச்சனைகள் மற்றும் அறப்போராட்டங்கள் மூலமாக முக்கிய பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். அதற்க்கு சட்ட ரீதியிலும் தீர்வு கண்டு வருகிறார்.
ஆவி நாயுடன் தனது செல்ல நாய் விளையாடிய ..CCTV வி காணொளி .. அவுஸ்திரேலியாவில் திகில்
தினத்தந்தி : தனது செல்ல நாய் பேயாக வந்த ஒரு நாயுடன் விளையாடியதாக ஒருவர் கூறி சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு உள்ளார். ஆனால் அதனை பலர் புரளி என மறுத்து உள்ளனர்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜேக் டிமார்கோ என்பவர், தனது வீட்டு முன்பு தனது செல்ல நாய்க்குட்டி, பேய் நாயுடன் விளையாடியதாக கூறி தனது வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சியை வெளியிட்டு உள்ளார்.
31 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவை கேட்டர்ஸ் நியூஸ் ஏஜென்சி யூடியூப்பில் வெளியிட்டது. இந்த வீடியோவை இதுவரை 7 லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு உள்ளது.
இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. இருப்பினும், சமூக ஊடகத்தில் பேய் நாய் என்று நம்ப மறுத்து, பலர் தங்கள் எதிர் கருத்துக்களை வெளியிட்டு உள்ளனர்.
வியாழன், 25 நவம்பர், 2021
கரூர் மாணவி தற்கொலை - மாணவர்களின் சந்தேக கிண்டல்களால் மனமுடைந்த கணித ஆசிரியர் தற்கொலை
maalaimalar: மாணவி இறப்புடன் தன்னை தொடர்புபடுத்தியதை தாங்க முடியாமல் துயர முடிவை எடுப்பதாக கணித ஆசிரியர் தற்கொலைக்கு முன் டைரியில் எழுதி வைத்துள்ளார்.
கரூர் அரசு காலனி பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவி சாவதற்கு முன்பு ஒரு உருக்கமான கடிதம் எழுதி வைத்திருந்தார்.
அதில், நான் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்கிறேன். பாலியல் தொல்லையால் சாகும் கடைசி பெண் நானாக இருக்கணும் என உருக்கமாக கூறியிருந்தார். இது கரூர் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை தீபா, தீபக்கிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
நக்கீரன் செய்திப்பிரிவு : வேதா நிலையத்தை ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபக், தீபாவிடம் ஒப்படைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு சட்டமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றயது.
கேஸ் சிலிண்டர் கலவை மாற்றங்களே வெடித்துச் சிதறக் காரணம் – வெளியானது அதிர்ச்சித் தகவல்
ஜேவிபி நியூஸ் : எரிவாயு (கேஸ்) சிலிண்டர்கள் கலவையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களே அவை தற்போது வெடித்துச் சிதறக் காரணம் என இலங்கை நுகர்வோர் நல விவகார அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துசான் குணவர்த்தனவை மேற்கோள் காட்டி டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து டெய்லி மிரர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
இலங்கையின் பல இடங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியமைக்கு அவற்றின் கலவையில் ஏற்பட்ட மாற்றமே காரணம் என அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து எரிவாயுக் கசிவு குறித்து பொதுமக்கள் முறைப்பாடு செய்த போதிலும் எரிவாயு நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமைக்காக இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டுள்ளன
கனமழை சிவப்பு எச்சரிக்கை! ஆறு மாவட்டங்களில் ... ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம்..
மாலைமலர் : திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 3 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை ரெட் அலர்ட்: மாவட்டங்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு
தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போதைய சூழ்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுவதற்கு வாய்ப்பில்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆனால் ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் ஆரஞ்ச் எச்சரிக்கையும் விடுத்திருந்தது.
கரூரில் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட மாணவி பயின்ற பள்ளியின் ஆசிரியரும் தற்கொலை!
News18 Tamil : கரூரில் பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவி பயின்ற பள்ளியில்,
கணித ஆசிரியராக பணியாற்றிய சரவணன் என்பவர் என்பவர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள செங்காட்டுப்பட்டி அவரது உறவினர் வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
கரூர் மாவட்டத்தில் பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த சரவணன் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், வெண்ணைமலை பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 12ம் வகுப்பு படித்துவரும் மாணவி ஒருவர் சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார்.
திமுக வரலாற்றில் மாநாடு என்றால் வீரபாண்டியரின் 1999ஆம் ஆண்டு சேலம் திமுக பொன்விழா மாநாடு தான்.
A Sivakumar : திருச்சி என்றாலே மாநாடு தான் என்பதெல்லாம் அண்ணன் கே.என்.நேரு பொறுப்பேற்ற பின் ஏற்பட்ட வரலாறு.
அதற்கு முன்னால், மாநாடு என்றால் அது 1999ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த திமுகவின் பொன்விழா மாநாடு தான்.
நடத்தியவர் சேலத்து சிங்கம் அண்ணன் வீரபாண்டி ஆறுமுகம் அவர்கள்.
மதியம் 4 மணி அளவில் ஆரம்பித்த பேரணி விடிய விடிய நடந்துக்கொண்டே இருந்தது.
அடுத்த நாள் காலை 7 மணி ஆகியும் முடியவில்லை.
அந்தளவுக்கு தமிழ்நாடு முழுக்க இருந்து வந்து சேர்ந்த திமுக தொண்டர்களுக்கு அத்தனை சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த முதல் மாநாடு சேலம் மாநாடு தான்.
செய்தவர் வீரபாண்டியார் தான்!
சுய இன்பம் நல்லதே ! Ted X Teesha Morgan: எந்தவிதத்திலும் சுய இன்பம் கேடு விளைவிப்பதில்லை..
helthyourhand.blogspot.com : ஆண்கள் 13 வயதில் இருந்து கட்டுடலோடும், இறுக்கமான உடல் வாகோடும் இருக்க அவர்கள் உடலில் சுரக்கும் செக்ஸ் ஹார்மோன்களே காரணமாக அமைகிறது. பின்னர் வயதாக வயதாக அவர்களுக்கு செக்ஸ் மேல் உள்ள நாட்டம் குறைய ஆரம்பிக்கும். பின்னர் ஆண்கள் 45 வயதை அடைய , இவ்வுணர்வு குறைவதன் காரணமாகவே அவர்கள் உடல் பருமனடைகிறது. கட்டழகை இழக்கிறது. உடல் தளதளத்துப் போகிறது. ஆனால் அவர்கள் அந்த வயதில் கூட காம உணர்ச்சிகளோடு இருப்பார்களே ஆனால், அவர்கள் உடல் இறுக்கமாகவே காணப்படும். இது ஆராய்சியில் கண்டுபிடிக்கப்பட்டவை ஆகும். இதனை விட ஆண்களி அடி வயிற்றில் புரொஸ்டேன் என்னும் ஒரு சுரப்பி உள்ளது.
அயோக்கிய சிகாமணி ராமதாஸ்’ – வாழப்பாடியார் நூல்!.. - சாவித்திரி கண்ணன்
84 பக்கங்கள் கொண்டது! வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த பெரிய மனிதரும், காங்கிரஸ் தலைவராகவும் இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது!
பல வன்னிய அறிவு ஜீவிகள்,முன்னோடிகள் இந்த சிறுநூல் உருவாக்கத்திற்கு அளப்பறிய தகவல்களைத் திரட்டித் தந்துள்ளனர்.
ராமதாஸின் அரசியல் வளர்ச்சிக்கு அருந்துணையாக இருந்தவர் வாழப்பாடி ராமமூர்த்தி. அப்படிப்பட்ட வாழப்பாடியார் 1999 நாடாளுமன்ற தேர்தலுக்கு நின்ற போது அவரை தோற்கடிக்க களம் கண்டு வெற்றி பெற்றார் ராமதாஸ். அந்த துரோகம் இன்றளவும் வன்னிய முன்னோடிகளால் வருத்ததுடன் நினைவு கூறப்படுகிறது! அதன் விளைவாக இந்த நூல் வெளியானதாகத் தெரிகிறது. பக்கத்துக்கு பக்கம் வன்னியர்களின் அக்னி கலசத்தின் தீ ஜீவாலை பற்றி எரிந்து ராமதாஸை எரிக்கிறது. இதைவிட அதிகமாக யாரால் ராமதாஸின் முகத்திரையை கிழிக்க முடியும் எனத் தெரியவில்லை.
புதன், 24 நவம்பர், 2021
போலி சீட்டு கம்பெனி போல தான் இந்த கிரிப்டோகரன்சியும்.. ரகுராம் ராஜன் அதிரடி..!
Prasanna Venkatesh - GoodReturns Tamil : பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை முறைப்படுத்தவும், தனியார் கிரிப்டோகரன்சியைத் தடை செய்யவும் திட்டமிட்டு அதற்கான மசோதாவை சமர்ப்பித்துள்ள வேளையில்,
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் மற்றும் தமிழ்நாட்டு அரசின் பொருளாதார ஆலோசனை குழுவில் முக்கியப் பங்கு வகிக்கும் ரகுராம் ராஜன் கிரிப்டோகரன்சி குறித்து முக்கியக் கருத்தை முன்வைத்துள்ளார்.
மத்திய அரசு சமர்ப்பித்துள்ள மசோதா மூலம் இந்தியா மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த கிரிப்டோ முதலீட்டு உலகமே இந்தியாவின் முடிவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
இந்தச் சூழ்நிலையில் ரகுராம் ராஜனின் கருத்து முக்கியமானதாக உள்ளது.
தாறுமாறாக சரிந்த கிரிப்டோகரன்சி மார்க்கெட்.. இந்திய அரசின் முடிவால் பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!
கலைஞர் செய்திகள் : கிரிப்டோ கரன்சி மார்க்கெட் கடந்த 12 மணி நேரத்தில் கடும் சரிவைச் சந்தித்தது.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே கிரிப்டோ கரன்ஸி பயன்பாடு அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பரவலுக்குப் பிறகு கிரிப்டோ கரன்ஸியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கிரிப்டோ கரன்ஸி சட்டப்பூர்வ அங்கீகாரம் பெறாத நிலையிலும் சுமார் 1.5 கோடி பேர் கிரிப்டோ கரன்ஸியில் ரூ.40 ஆயிரம் கோடிக்குப் பணம் முதலீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவில் கிரிப்டோ கரன்ஸிக்கு ஒன்றிய அரசு தடை விதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த வாரம் நடைபெற உள்ள நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் டிஜிட்டல் கரன்சிகளை ஒழுங்குபடுத்தும் மசோதாவை ஒன்றிய அரசு தாக்கல் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாஜகவின் 3 வேளாண் சட்டங்களும் நீக்கம்! மத்திய அமைச்சரவை ஒப்புதல்.. வரலாற்று வெற்றியை பெற்ற விவசாயிகள்
Veerakumar - Oneindia Tamil : டெல்லி: சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
மேலும் தெரிந்து கொள்ளுங்கள் விவசாயிகளின் உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தகம் சட்டம் 2020, விவசாயிகளின் விலை நிர்ணய பாதுகாப்பு ஒப்பந்தம், விவசாய சேவைகள் சட்டம் 2020, அத்தியாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம் 2020 ஆகியவை கடந்த ஆண்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டன.
ஆனால் இந்த மூன்று சட்டங்களும் பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாக இருப்பதாக கூறி விவசாயிகளின் ஒரு பிரிவினர் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை அரசுடமையாக்கிய சட்டம் ரத்து -உயர்நீதிமன்றம் தீர்ப்பு
மாலைமலர் : வேதா நிலையத்தின் சாவியை 3 வாரத்தில் மனுதாரர்களிடம் ஒப்படைக்கும்படி சென்னை மாவட்ட ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை (வேதா நிலையம்) நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்பட்டு, வேதா நிலையத்தையும் அங்குள்ள அசையும் சொத்துக்களையும் அரசுடமையாக்கப்பட்டது.
படகுப்பாதை கவிழ்ந்ததில் மாணவர்கள் உட்பட அறுவர் உயிரிழப்பு கிழக்கிலங்கை கிண்ணியாவில் .
வீரகேசரி : திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு பாதை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சிறுவர்கள் உட்பட அறுவர் மரணமடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர் என பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன
.இன்றுக்காலை பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.சம்பவம் இடம்பெற்ற தருணத்தில் அந்த படகு பாதையில் 20 பேர் பயணித்துள்ளனர். அதில், சிலர் நீந்தி கரையைச் சேர்ந்துள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.
பழைய பாலத்துக்குப் பதிலாக புதிய பாலம் நிர்மாணிக்கப்படுவதனால், கிண்ணியா- குருஞ்சான்குளம் ஆகியவற்றுக்கு இடையில் இந்த படகுபாதை சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
கிரிப்டோகரன்சிகளுக்கு கட்டுப்பாடு.. விவசாய சட்ட நீக்கம்.. நாடாளுமன்றத்தில் தாக்கலாகும் 26 மசோதாக்கள்
Shyamsundar - Oneindia Tamil : டெல்லி: கிரிப்டோகரன்சிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் மசோதா, விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதா ஆகிய மசோதாக்கள் உட்பட 26 மசோதாக்கள் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளன.
உங்களுக்கு அருகாமையில் இருக்கும் ஸ்மார்ட் ஹோம்சுக்கு உங்களை வரவேற்கிறோம்! மேலும் தெரிந்து கொள்ளுங்கள்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் நவம்பர் 29ம் தேதி தொடங்க உள்ளது. அடுத்த வருடம் உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதில் உத்தர பிரதேசம், பஞ்சாப் தேர்தல்களை மத்தியில் ஆளும் பாஜக அரசு முக்கியமானதாக பார்க்கிறது.
இலங்கை சுய மரியாதை இயக்கத்தின் தோற்றம் - 1 (எழுதாத வரலாறு) - பெ.முத்துலிங்கம்.. நமது மலையகம்
namathumalayagam.com : மலையகத்தின் பிரதான அரசியல் சக்திகளால் நெடுங்காலமாக இருட்டடிப்பு செய்யப்பட்டு வந்தவர் தோழர் இளஞ்செழியன். நீண்டகலாமாக அவர் எழுதத் தலைப்பட்ட மலையகத்தின் வரலாறு முழுமையாக சாத்தியப்ப்படுமுன்னரே அவர் மரணித்து விட்டார்.
அதனை அவர் எழுதுவதற்காக சேகரித்து வைத்திருந்த ஆவணங்கள் மிகப் பெறுமதியானவை.
அவற்றின் உதவியுடன் தோழர் பே.முத்துலிங்கம் எழுதி முடித்த "எழுதாத வரலாறு" நூல் மலையக வரலாற்றில் பேசப்படாத இன்னொரு பக்கத்தை வெளிக்கொணர்ந்தது.
குறிப்பாக இலங்கையில் திராவிட கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்பவற்றின் வரலாற்றுப் பாத்திரம் இதில் பதிவானது. அந்த நூலின் அத்தியாயங்கள் ஒவ்வொன்றாக இங்கே "நமது மலையகம்" வாசகர்களுக்காக வெளியிடுகிறோம்.
அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலையோடு தொடர்புடைய புலி சந்தேநபர் ஜெர்மன் சிறையில்
Sugan Paris : ஐரோப்பிய நாடொன்றில் கதிர்காமர் கொலையுடன் தொடர்புபட்ட ஒருவர் தற்போது சிறையில் இருக்கிறார்.
அரசியற் தஞ்சம் கோரும் தகுதி நிலைக்கு தான் உடந்தையாயிருந்த கதிர்காமர் கொலை உதவும் என்பது அவர் கணிப்பீடும் நம்பிக்கையுமாயிருந்தது.
எவ்வித தடுமாற்றமோ குற்றவுணர்வோ அற்று மிக இயல்பாக தான் அக் கொலையில் எவ்விதம் பங்குகொண்டேன் என அகதி அறிக்கையில் முறையீடு செய்தார்.
ஒரு கொலையாளிக்கு அரசியற்தஞ்சம் கொடுக்கும் சட்ட நடைமுறை சர்வதேசமுறைகளில் இல்லை.
அறியப்பட்ட சர்வதேச பிரமுகர்கள் பலர் இன்றும் சர்வதேசச் சிறைகளில் இருக்கும் பின்னணியும் இதுவே !
அதிலும் லக்ஸ்மன் கதிர்காமர் போன்ற உலகப்பிரசித்தமான அரசியல் நிபுணர், அறிஞர் மீதான கொலையென்பது எவரையும் அதிர்ச்சிகொள்ள வைப்பது.
செவ்வாய், 23 நவம்பர், 2021
முகேஷ் அம்பானி சொத்துக்களை பிரிக்கிறார்! புதிய திட்டம் . யாருக்கு என்ன கிடைக்கும்..!
Prasanna Venkatesh - GoodReturns Tamil : இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆக விளங்கும் முகேஷ் அம்பானி, தனது சொத்துக்கள் மற்றும் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தை மனைவி மற்றும் 3 பிள்ளைகள் மத்தியில் பிரித்துக் கொடுப்பது குறித்து நீண்ட காலமாகத் திட்டமிட்டு அதற்கான பணிகளைச் செய்து வருகிறார்.
கடந்த வருடம் சொத்துப் பிரிப்பு மற்றும் நிறுவனத்தின் நிர்வாக முடிவுகளைக் குடும்பக் கவுன்சில் அமைத்து, அதன் மூலம் எடுக்கத் திட்டமிடப்பட்டதாகச் செய்திகள் வெளியானது,
ஆனால் முகேஷ் அம்பானி சார்பில் இதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் முகேஷ் அம்பானி உலகளவில் பெரும் பணக்கார குடும்பங்கள் எப்படித் தங்களது சொத்துக்களைத் தனது வாரிசுகளுக்குப் பிரித்து கொடுத்துள்ளனர் என்பதை ஆய்வு செய்யத் துவங்கினார். பல வருடங்களாக வால்டன் முதல் கோச் வரையில் பல பணக்கார குடும்பத்தையும், அவர்கள் சொத்துப் பிரிப்பதில் கையாண்ட முறையையும் குறித்தும் முகேஷ் அம்பானி ஆய்வு செய்து தற்போது முக்கியமான முடிவை எடுத்துள்ளார்.
மலையாள தமிழ் நடிகை லலிதாவுக்கு கல்லீரல் தானம் செய்ய முன்வந்த ரசிகர்.... நெகிழ்ச்சி சம்பவம்
tamil.asianetnews.com - manimegala : தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகை கே.பி.ஏ.சி.லலிதாவுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.
மலையாள திரையுலகில் குணச்சித்திர வேடங்களில் கலக்கி வந்தவர் நடிகை கே.பி.ஏ.சி.லலிதா. தமிழ்நாட்டில் மனோரமா போன்று இவர் மலையாளத்தில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழிலும் விஜய்யின் காதலுக்கு மரியாதை, மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே, காற்று வெளியிடை, அஜித்தின் கிரீடம், விஜய் சேதுபதியின் மாமனிதன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்குனர் பரதனின் மனைவி ஆவார்.
Fan ready to donate Liver for veteran actor KPAC Lalitha
இலங்கை விவகாரம்: ஆளுநரின் அடுத்தடுத்த முக்கிய சந்திப்புகள்!
மின்னம்பலம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை இன்று (நவம்பர் 23) இலங்கைக்கான இந்தியாவின் ஹை கமிஷனர் கோபால் பாக்லே இன்று சென்னையில் ஆளுநர் மாளிகையில் சந்தித்து பேசியுள்ளார்.
கடந்த நவம்பர் 2ஆம் தேதி கோபால் பாக்லேவை இலங்கையின் வட மாகாணத்தைச் சேர்ந்த மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் சந்தித்து பாக் வளைகுடாவில் தமிழக மீனவர்களின் இழுவை மீன்பிடி நடவடிக்கைகளால் தங்களுக்கு ஏற்படும் இடையூறுகளை பற்றி புகார்கள் அளித்து இருக்கிறார்கள்.
அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் ஊர்வலத்தில் கார் புகுந்து 5 பேர் பலி- 40 பேர் படுகாயம்
மாலைமலர் : அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் ஊர்வலத்தில் கார் புகுந்ததில் குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தார்கள்.
அமெரிக்காவில் விஸ்கான் சிங் மாகாணத்தில் உள்ள வாகேஸ்ஷா நகரில் ஞாயிற்றுக்கிழமையையொட்டி கத்தோலிக்க சபை சார்பில் கிறிஸ்துமஸ் ஊர்வலம் நடைபெற்றது. இதில் 70 பேர் கலந்து கொண்டனர்.
கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்தவர்கள் முன்னே நடந்து வர குழந்தைகள் ஆடி-பாடி நடனம் ஆடியபடி வந்தனர்.
அப்போது அந்த பகுதியில் வேகமாக கார் ஒன்று வந்தது. ஊர்வலம் நடந்த பாதையில் வாகனம் சென்று விடாமல் தடுக்க வேலிகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஆனால் அதை உடைத்துக் கொண்டு அந்த ஊர்வலத்துக்குள் கார் பாய்ந்தது.
பழங்குடி மக்கள் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக களமிறங்கினர்
மின்னம்பலம் : மதுரையில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாகப் பழங்குடி நாடோடி மக்கள், பாம்புகள், எலிகள் மற்றும் பூம்பூம் மாடுகளுடன் திரண்டு வந்து ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வனத்துறை ஊழியர்கள் பாம்பு, எலிகளைப் பறிமுதல் செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ படத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஏற்பட்டது. இந்தப் படம், குறிப்பிட்ட ஒரு சமூகத்தைப் பற்றித் தவறாகச் சித்திரிப்பதாகக் கூறி பாமகவைச் சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அத்துடன் படத்தைத் தயாரித்து, நடித்துள்ள சூர்யாவுக்கு மிரட்டல் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வருகிறது. சூர்யாவுக்கு ஆதரவாகத் தமிழ்த் திரையுலகத்தினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் படத்தின் இயக்குநர் ஞானவேல் வருத்தம் தெரிவித்தார்.
திங்கள், 22 நவம்பர், 2021
இந்திய ஒன்றிய தேர்தல்களில் சீனாவின் தலையீடு இருந்திருக்கிறதா? அல்லது இருக்கிறதா?
செல்லபுரம் வள்ளியம்மை : வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் ஒன்றிய அரசில் பாஜக அல்லாத அரசு அமைந்தால்?.
கடந்த இந்திய ஒன்றிய தேர்தல்களின் போது சீனாவின் ஈடுபாடு இருந்திருக்கிறதா என்பதை பற்றி விசாரிக்க வேண்டும்.
இக்கருத்தை நான் வேடிக்கைக்காக குறைவில்லை .
கடந்த நான்கு அல்லது ஐந்து வருடங்களில் சீனாவே இந்தியாவின் மோடி அரசால் மிகவும் இலாபம் அடைந்த நாடாக இருக்கிறது
கடந்த நான்கு வருடங்களில் இலங்கை, சீசெல்ஸ் , மாலைதீவு , மொரிசியஸ், பர்மா , நேபால். பூட்டான் ஆகிய நாடுகளில் சீனா தனது கட்டுப்பாட்டை வலுப்படுத்தி உள்ளது .
முன்பு இந்நாடுகள் எல்லாம் ஓரளவு இந்தியாவின் செல்வாக்கிற்கு உட்பட்ட நாடுகளாக கருதப்பட்டது.
தற்போது பாகிஸ்தானையும் வேகமாக தனது கட்டுப்பாட்டுக்குள் சீன கொண்டுவந்து கொண்டிருக்கிறது
சீன எல்லையில் இருந்த டோக்லாம் பிரதேசத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.
மோடி அரசானது செய்தி ஊடகங்களில் மட்டுமே டோக்லாம் பிரதேசத்தை வைத்திருக்கிறது .
கமலுக்கு கொரோனா: பிக் பாஸை தொகுத்து வழங்குவது யார்?
மின்னம்பலம் : மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2019ல் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளைக் கடந்த இரண்டு ஆண்டுகளாக அச்சுறுத்தி வருகிறது. ஆல்பா, பீட்டா, டெல்டா என பல்வேறு வகையில் உருமாறி வருகிறது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு 700க்கும் குறையாமல் பதிவாகி வருகிறது. இந்த சூழலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வாரம், எவிக்சன் தொடரை முடித்துவிட்டு அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்ட அவர், நேற்று முன் தின தொடருக்குச் சென்னை வந்தார்.
கீழே அமர்ந்த வானதி.. மேடையில் அமரச் சொன்ன முதல்வர் : அரசியல் நாகரீகத்தின் அரிச்சுவடி மு.க.ஸ்டாலின்!
கலைஞர் செய்திகள் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசனுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை மேடைக்கு கீழ் இருக்க, மேடைக்கு வந்து அமருமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கோவையில் நடைபெற்ற அரசு விழாவில், 587.91 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 70 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 89.73 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 128 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கோவை வ.உ.சி மைதானத்தில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சருடன், அமைச்சர்கள், அதிகாரிகள், பயனாளிகள் பங்கேற்றனர்.
எம்ஜியார் ஜெயலலிதாவின் வீட்டில் ஜெய்சங்கரை துப்பாக்கியால் சுடப்போனார் .. குட்டி பத்மினி உடைத்த ரகசியம்
Mathivanan Maran - Oneindia Tamil : சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் நடிகர் ஜெய்சங்கர் நெருங்கிப் பழகியதால் அவரை சுடுவதற்காக துப்பாக்கியுடன் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பங்களாவுக்கு மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சென்றார்;
ஆனால் ஜெய்சங்கர் அங்கே அப்போது இல்லை என்று நடிகை குட்டி பத்மினி தெரிவித்திருக்கும் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
இந்த வீடியோ பதிவில் குட்டி பத்மினி கூறியிருப்பதாவது; ராமண்ணான்னு ஒரு டைரக்டர். அவருடைய நீ படத்தில் ஜெயலலிதா அக்காவும் ஜெய்சங்கர் அங்கிளும் ஒன்னா ஆக்ட் பண்றாங்க..
ஜெயலலிதா அக்காவுக்கு யாராவது நல்லா இங்கிலீஷ் பேசுனா அவங்களை ரொம்பப் பிடிக்கும்.
ஜெய்சங்கர் அங்கிளும் நல்லா பேச இரண்டு பேருக்கும் இடையே நல்ல நட்பு உருவாகுது.
சிபிஎம் 17000 ஆயிரம் தலித்துக்களை கொன்றதா? மரிச்ஜாப்பி கம்யூனிஸ்ட் CPI-M அரசின் தலித் இனப்படுகொலை
Vasu Mithra : மௌனம் என்பது சாவுக்குச் சமம்.
எதுவும் பேசாவிட்டாலும் சாகப்போகிறீர்கள்;
பேசினாலும் சாகத்தான் போகிறீர்கள்.
எனவே பேசிவிட்டுச் செத்துப் போங்கள்.
- தஹார் ஜாவூட்.
பழங்குடிகளுக்கும், தலித்துகளுக்கும் ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் முன்நிற்கும் கட்சியாக, களத்தில் நின்று உழைக்கும் கட்சியாக அறியப்பட்டது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
(மார்க்சிஸ்ட்) CPI-M
13 வருடங்களாக திருமணமே செய்துகொள்ளாது பழங்குடிகளுக்கு நீதி கேட்டுப் போராடிய தோழர் கோவிந்தன் போன்றவர்களையும் நாம் களத்தில் பார்த்துள்ளோம். உத்தபுரம் முதல்கொண்டு எங்கு எது நடந்தாலும் பாதிக்கப்பட்ட தரப்பிற்காக குரல் எழுப்பும் சிபிஐ-எம் கட்சியின் மீது பயங்கரமான படுகொலைக் குற்றச்சாட்டொன்றை முன்வைத்து வெளிவந்துள்ள ஒரு நூலை இப்பொழுது நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் இருக்கிறது.
ஞாயிறு, 21 நவம்பர், 2021
பிட்காயின் ஊழல் ஹேக்கர் மூலம் கர்நாடக அரசியலில் நடந்தது என்ன? BBC
ஸ்ரீ கிருஷ்ண ரமேஷ் என்கிற ஸ்ரீகி பள்ளி படிக்கும் போதே ஹேக்கிங் தொழில்நுட்பத்தை கற்றுக் கொண்டதாகவும், பிட்காயின் பரிவர்த்தனை சந்தைகள், போக்கர் விளையாட்டு வலைதளங்கள், கர்நாடக அரசின் இணைய கொள்முதல் வலைதளத்தை எல்லாம் ஹேக் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
தான் ஹாங்காங்கில் இயங்கும் பிட்ஃபினிக்ஸ் க்ரிப்டோகரன்சி சந்தையை 2015ஆம் ஆண்டிலேயே ஹேக் செய்ததாகவும், 2016 ஆகஸ்டில் 1,19,756 பிட்காயின்களை திருடியதாகவும் காவல்துறையிடம் முன் வந்து தெரிவித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
இஸ்லாமிய கூட்டமைப்பு : வாழ்நாள் சிறைவாசி விடுதலை விவகாரம் ஏமாற்றம் அளிக்கிறது திமுக அரசுக்கு எதிராக தயாராகிறது?
மின்னம்பலம் : பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை: தமிழக அரசின் அரசாணை ஏமாற்றம் அளிக்கின்றது என்று மமக தலைவரும் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக இந்த விடுதலை செய்யப்படும் நடைமுறை பின்பற்றப்படாத நிலையில், கடந்த நவம்பர் 15 அன்று தமிழக அரசின் உள்துறை வெளியிட்டுள்ள அரசாணை எண் 488 திமுகவின் கூட்டணிக் கட்சிகளான முஸ்லிம் லீக், மமக உள்ளிட்ட இஸ்லாமிய கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி அருகே எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் வெட்டி கொலை: . ஆடு திருடும் கும்பல் வெறிச்செயல் .. குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் முதல்வர்
தினமலர் : திருச்சி அருகே நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு துணை ஆய்வாளர் ஆடு திருடும் கும்பல் ஒன்றினால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.இதனிடையே, அவரது குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி நவல்பட்டு காவல் நிலைய எஸ்.எஸ்.ஐ., ஆக பணியாற்றி வருபவர் பூமிநாதன். இவர் புதுக்கோட்டை கீரனூர் அருகே ஆடு திருடும் கும்பல் ஒன்றினை இன்று நவ.,21 அதிகாலை 2 மணியளவில் பைக்கில் சென்று விரட்டியுள்ளார். இதையடுத்து ஆத்திரம் அடைந்த அக்கும்பல் அரிவாளால் சரமாரியாக அவரை வெட்டி விட்டு தப்பிச் சென்றது. படுகாயம் அடைந்த பூமிநாதன் சம்ப இடத்திலேயே உயரிழந்தார். சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சூர்யாவின் செயல் மன உளைச்சல் தருகிறது!" 50,000 சம்பளத்தை 2Dக்குத் திருப்பி அனுப்பிய எழுத்தாளர்!
நக்கீரன் செய்திப்பிரிவு : இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ஜெய் பீம் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும்,
தமிழ்நாடு முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டி வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் உண்டாக்கியுள்ளது. படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சியில் எதிர்மறைப் பாத்திரமான போலீஸ் அதிகாரியின் வீட்டில் இருக்கும் காலண்டரில் வன்னியர்களின் சின்னமான அக்னி கலசம் இடம் பெற்றது என்பதால் பா.ம.க.வின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனத்தைத் தெரிவித்ததோடு, நடிகர் சூர்யாவிற்கு ஒன்பது கேள்விகளுக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியிருந்தார்.
அரசு வழக்கறிஞர் நியமனம்: அதிருப்தியில் திமுக கூட்டணிக் கட்சிகள்!
மின்னம்பலம் : திமுக ஆட்சி அமைந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், முதல் மூன்று மாதங்கள் கொரோனா தடுப்புப் பணியில் போய்விட்டதால்...அரசுப் பதவிகளுக்கான புதிய நியமனங்கள் தாமதமாகவே தொடங்கியது. இந்த வகையில் திமுக அரசு அமைந்ததும் திமுக வழக்கறிஞர்களோடு அதன் கூட்டணிக் கட்சிகளின் வழக்கறிஞர்களும் தங்களுக்கு அரசு வழக்கறிஞர் பதவிகள் கிடைக்கும் என்று ஆவலோடு எதிர்பார்த்தனர்.
காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டு, மமக கட்சியின் தலைமைகள் அரசு வழக்கறிஞர் பதவிகள், தங்கள் கட்சிகளில் இன்னாருக்கு வேண்டும் என்று தனித்தனியாக திமுக தலைமைக்கு பட்டியலை கொடுத்திருந்தன.
இப்போது அரசு வழக்கறிஞர்கள் பதவி மாவட்ட ரீதியாக வேகமாக நிரப்பப்பட்டு வரும் நிலையில் கூட்டணிக் கட்சிகளுக்கு இந்த நியமனங்கள் திருப்தியளித்திருக்கிறதா?
திமுக கூட்டணிக் கட்சிகளின் வழக்கறிஞர் அணி மாநில நிர்வாகிகளிடம் பேசினோம்..