சனி, 10 செப்டம்பர், 2011

இலங்கையில் நாளாந்தம் 12 பேர் தற்கொலை/ஆயிரக்கணக்கான தற்கொலை முயற்சிகள்

இலங்கையில் தற்கொலை முயற்சியால் ஒரு நாளைக்கு 12 உயிரிழப்புக்கள் நிகழ்வதாக கணிப்பீடு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
இக்கணிப்பீட்டின்படி ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான தற்கொலை முயற்சிகள் இடம்பெறுவதாக அறியப்பட்டுள்ளது.

எனினும் இலங்கையில் முன்னரைவிட தற்கொலை சம்பவங்கள் குறைந்து கொண்டு செல்வதை அவதானிக்க முடிவதாக அக்கணிப்பு தெரிவிக்கின்றது.

இலங்கையில் 15 தொடக்கம் 45 வயதிற்கு இடைப்பட்டவர்களே அதிகளவில் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

உலக தற்கொலை ஒழிப்பு தினம் இன்று அனுஷ்டிக்கப்படும் நிலையில் தற்கொலை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டங்கள் பல நாடலாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சீப் மான்அம்மா’வின் செல்லப் பிள்ளை இயக்கம்

நாம் தமிழர், ‘அம்மா’வின் செல்லப் பிள்ளை இயக்கம் என்று ஒரு பேச்சு நீண்ட நாட்களாகவே அரசியல் வட்டாரத்தில் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. அதற்குத் தகுந்தாற்போல போன ஆட்சியின் போதெல்லாம் நரம்பு புடைக்க ஆவேசப் பேச்சு ஆற்றிய சீமான், இப்போதெல்லாம் அரசுக்கு ‘கோரிக்கை’ வைப்பதோடு சரி. ராஜீவ் கொலை வழக்கில் 3 பேரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று தமிழக அரசு சட்டமன்றத்தில் இயற்றிய தீர்மானத்தை வரவேற்று வேலூரிலிருந்து சென்னைக்கு நடைப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக சீமான் அறிவித்திருந்தார். ஆனால் அதெல்லாம் தேவை இல்லை என்று சொல்லி அவரைக் கைது செய்திருக்கிறார்கள் காவல்துறையினர். இந்த நடைப் பயண ஸ்டண்ட் மேலிடத்திலிருந்து வந்த அட்வைஸ்தான் என்றும் பேச்சு அடிபடுகிறது.
‘இதுவரை ஆட்சியில் இருந்தவர் பேசினார். அம்மா செய்து காட்டினார். இவர்களைக் காப்பாற்ற ரயில் மறியல், ஆளுநர் மாளிகை முற்றுகை, ஆர்ப்பாட்டம், போராட்டம் எல்லாம் செய்தோம். நம்மை அவர் கைது செய்யவில்லை. நசுக்க முற்படவில்லை. நம்மை அழிக்க முற்படவில்லை. நம்மை மதித்தார். ராஜபக்சே மீது போர்க்குற்றம் சுமத்தி பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதை மத்திய அரசு விரும்பவில்லை!’ என்று பேசியிருக்கிறார் சீமான்.   கூடவே, ‘போன ஆட்சியில் 5 முறை என்னைக் கைது செய்தார்கள். சட்டத்திற்கு உட்பட்டு நானும் கைதானேன். கருணாநிதி போல கைதுக்கு பயந்து ஒருமுறை கூட நான் கத்தியதில்லை!’ என்றும் சொல்லியிருக்கிறார். ஐயோ..ஜால்ரா தாங்கலே

மத கலவர தடுப்பு மசோதா அபாயகரமானது: பா.ஜ., - திரிணாமுல் காங்., எதிர்ப்பு

புதுடில்லி: மதக்கலவர தடுப்பு மசோதா உருவாக அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தருவதுடன் தற்போது விவாதிக்கப்பட வேண்டும் என்றும் தேசிய ஒருமைப்பாடு கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சி்ங் தெரிவித்தார். இந்த மசோதா நாட்டிற்கு அபாயகரமானது என பா.ஜ., எச்சரித்துள்ளது. இது தொடர்பாக ராஷ்ட்டிரிய ஜனதாதளம், ஆளும் கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்., மற்றும் இடது சாரி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நாட்டின் தேசிய ஒருமைப்பாடு கவுன்சில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் 1962 ல் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் 15 வது கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், பார்லி., எதிர்கட்சி பிரதிநிதிகள், மற்றும் உயர் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் பங்கேற்றனர்.

பயங்கரவாதமும், இடதுசாரி தீவிரமும் நாட்டின் பெரும்சவால்களாக இருக்கின்றன என்றும், சமீபத்திய டில்லி குண்டுவெடிப்பு தடுக்க மு‌டியாமல் போனதும், இன்னும் இது போன்ற விஷயங்கள் கண்காணிப்பில் இருந்து விலகி செல்லாதவாறு உஷாராக ‌இருக்க வேண்டும் என்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.


இன்றைய கூட்டத்தில் பிரதமர் பேசுகையில்; நாட்டில் பயங்கரவாதம், இடதுசாரிகளின் தீவிரம் பெரும் சவால்களாக உள்ளன. டில்லி குண்டு வெடிப்பு சம்பவம் முனனெச்சரிக்கை நடவடிக்கையால் தடுக்கப்படாமல் போய் விட்டது. இன்னும் நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என இதன் மூலம் புரிந்து கொள்ள வேண்டும். இதனால் நமது சுய பரிசோதனை அவசியம். கடந்த 2 ஆண்டுகளில் நமது விசாரணை அமைப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் கூடுதல் பலம் ஏற்படுத்தப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றோம். பயங்கரவாத ஒழிப்பில் மத்திய , மாநில ஒத்துழைப்பு அவசியமானதாக இருக்கிறது என மனதில் வைத்து செயல்பட வேண்டும். நாட்டில் சாதி , மதம் ஆகியவற்றினால் எழுகின்ற பிரச்னைகளை ஒழிக்க போலீசார் வெகு கவனத்துடன் செயல்பட வேண்டும். விசாரணை அதிகாரிகள் ஒரு சார்பு நிலை இல்லாமல் நாட்டு மக்களுக்கு சேவை புரிய வேண்டும். மேலும் பயங்கரவாதம் வேரறுக்க முழு முயற்சியுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.

ஜெ., மாயாவதி பங்கேற்கவில்லை : இந்த தேசிய கவுன்சில் கூட்டத்தை தமிழக முதல்வர் ஜெ., உ .பி., முதல்வர் மாயாவதி , குஜராத் முதல்வர் நநேரந்திர மோடி, பீகார் முதல்வர் நிதீஷ்குமார், மேற்கு வங்கம் மம்தா பானர்ஜி, ஆகியோர் பங்கேற்கவில்லை. இந்த கமிட்டியில் இடம் பெற்றுள்ள தி.மு.க., தலைவர் கருணாநிதியும் பங்கேற்கவில்லை.

Two TNA MPக் களுக்கு எதிராக புலனாய்வுப் பிரிவினர்

தமிழ்த் தேசியக்(புலி)கூட்டமைப்பைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது!

தமிழ்த் தேசியக்(புலி)கூட்டமைப்பைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது!

தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் லண்டனுக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

கிறிஸ் பூதங்கள் வடக்கு வாழ் தமிழ் பெண்களை பீதியடைச் செய்து வருவதாக குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் லண்டனில் போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் குறித்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் லண்டனில் நிதி திரட்டல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்ததாகக் குறித்த பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது.

MDMK வளர புலிகள் நிதியுதவி அளித்தனர்-விக்கிலீக்ஸ்

(புலி)வைகோவின் MDMK வளர புலிகள் நிதியுதவி அளித்தனர்-விக்கிலீக்ஸ் அதிர்ச்சித் தகவல்!

திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வை.கோபாலசாமி 1993ம் ஆண்டு விலகியதன் பின்னர் அவர் தலைமையில் மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தை வளர்த்தெடுக்க புலிகள் வைகோவுக்கு நிதியுதவி அளித்ததாக விக்கிலீக்ஸ் இணையத்தை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2006ம் ஆண்டு மே 15 திகதி தமிழக ஆட்சியை திராவிட முன்னேற்றக் கழகம் கைப்பற்றியதன் பின்னர் இரண்டு நாட்கள் கழிந்து விக்கிலீக்ஸ் இணையத்திற்கு இத்தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

ஐக்கிய அமெரிக்காவுக்கான அப்போதைய இந்திய பதில் கொன்சூலர் ஜெனரல் ரவி கந்ததாய் (Ravi Candadai) இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

எனினும் புலிகள் வைக்கோவுக்கு நிதியுதவி வழங்கியதை உறுதிப்படுத்த ஆதாரங்கள் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருந்தபோதும் தமிழர்கள் நன்கு அறிந்த தமிழ்நாட்டில் வசித்த இலங்கை தமிழரான ஈழ அகதிகள் புனர்வாழ்வு அமைப்பின் நிறுவுனர் சந்திரஹாசன் மூலம் தான் இத்தகவலை தெரிந்து கொண்டதாக பதில் கொன்சூலர் ஜெனரல் ரவி கந்ததாய் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு புலிகளுக்கு கனடா, பிரித்தானியா, நெதர்லாந்து மற்றும் ஜேர்மன் உள்ளிட்ட நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் அவர்கள் இருந்த நாட்டில் செயற்பட்ட தமிழர் கலாசார அபிவிருத்தி நிலையம், சமய மத்திய நிலையங்கள் ஊடாக தங்களது மாதாந்த சம்பளத்தில் 10 வீதத்தை உதவியாக அளித்துள்ளனர்.

இந்த செயலாளனது கிட்டத்தட்ட கப்பம் வழங்குவதற்கு நிகர் என பதில் கொன்சூலர் ஜெனரல் ரவி கந்ததாய் விமர்சித்துள்ளதாக விக்கிலீக்ஸ் இணையத்தை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மனித கழிவுகளை மனிதனே அகற்ற தடை சட்டம்: சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது




தமிழக சட்டசபையில் அமைச்சர் கே.பி.முனுசாமி ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்.
அதில்,’மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவதையும், உலர் கழிவறைகள் கட்டுவதையும் தடை செய்யும் சட்டம் 1993-ஆம் ஆண்டு பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. இதன் காரணமாக தமிழ்நாட்டிலும், அந்த சட்டம் பின்பற்றப்பட்டது.

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவதற்கு தடை செய்ய பாராளுமன்ற சட்டத்தை செயல்படுத்த வேண்டியுள்ளது. இதற்கு 2 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்கள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

அதனை செயல்படுத்தக்கோரி இந்த சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றித்தர வேண்டுகிறேன்’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து அமைச்சர் முனுசாமி பேசியபோது,

’’1993-ம் ஆண்டே மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவதை தடை செய்யும் சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு உள்ளது.

அதை செயல்படுத்த வேண்டும் என்றால், 2 மாநிலங்களோ அதற்கு மேற்பட்ட மாநிலங்களோ அதனை ஆதரித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.  

மத்திய அரசும் அதில் அக்கறை காட்டவில்லை. இதற்கு முன்பு இருந்த மாநில அரசும் அதை செய்யவில்லை. ஆனால் புரட்சி தலைவி சமூக அக்கறையுடன் இந்த தீர்மானத்தை அவையில் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் சாக்கடையை சுத்தப்படுத்தவும், தூர்வாரவும் நவீன கருவிகள் வாங்க முதலமைச்சர் நிதி ஒதுக்கி உள்ளார். தமிழக முதலமைச்சர் விளையாட்டு மற்றும் கல்வி துறையில் அனைத்து மாணவர்களும் பயன்பெற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறார்.

அதேபோல் சாதாரண துப்புரவு தொழிலாளர்கள் கவுரவமாக வாழ முதல்- அமைச்சர் தமிழ்நாட்டில் முதன் முறையாக இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார். இந்த தீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களும் ஆதரிக்க வேண்டும்’’ என்று பேசினார்.
இதையடுத்து இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

அங்காடி தெருவை கவிழ்க்க 14 தேசிய விருதுகளை தாரை வார்க்க வேண்டியுள்ளது

 அங்காடி தெருவில் இருந்த பார்பன எதிர்ப்பு மற்றும் காபரெட் கலாச்சாரத்திற்கு எதிரான கருத்துக்களால் அது எவ்வளவு சிறந்த படமாக இருந்தாலும் அதற்கு பரிசு தரவே கூடாது என்று மேட்டுகுடிகள் தீர்மானித்துவிட்ட நிலையில் தமிழ்நாட்டு பாமரர்க்கு பலூன் கொடுக்கும் முயற்சிக்காக ஒன்றல்ல இரண்டல்ல பதினான்கு விருதுகளை தமிழகத்துக்கே அள்ளிகொடுக்க வேண்டியதாயிற்று. அள்ளிக்கோ அள்ளிக்கோ


K Balachander to receive Dada Saheb Phalke award by President Pratibha Patilடெல்லி: திரைத்துறையினருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த தாதா சாகேப் பால்கே விருதினை இயக்குநர் கே பாலச்சந்தருக்கு வழங்கினார் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல்.

சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் தனுஷ்சும், சிறந்த நடிகைக்கான விருதை நடிகை சரண்யாவும் பெற்றனர்.

58-வது தேசிய விருதுகள் வழங்கும் விழா நேற்று டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் நடந்தது.

குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் தலைமை தாங்கி விருதுகளை வழங்கினார். தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி முன்னிலை வகித்தார்.
முதல் முறையாக இந்த ஆண்டுதான் தமிழ் மற்றும் மலையாள படங்கள் அதிக அளவில் விருதுகளை அள்ளின.

பாலச்சந்தருக்கு பால்கே விருது

திரைப்பட விருதுகளில் மிக உயரிய விருதான 'தாதா சாகேப் பால்கே விருது' தமிழ்ப்பட உலகில் இயக்குனர் சிகரம் என்று அழைக்கப்படும் கே.பாலச்சந்தருக்கு வழங்கப்பட்டது. அவருக்கு பிரதீபா பட்டீல் விருதை வழங்கினார்.
சினிமா வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கு பாடுபட்ட மூத்த சினிமா கலைஞருக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருதாக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. தங்கத் தாமரையும், ரூ.10 லட்சம் ரொக்கமும், விருதும், சால்வையும் அடங்கியது இந்த பரிசு.

சிறந்த நடிகர் தனுஷ்

இந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான விருது 2 பேருக்கு வழங்கப்பட்டது.

'ஆடுகளம்' தமிழ் படத்தில் நடித்த தனுஷ், 'ஆதாமிண்டே மகன் அபு' என்ற மலையாள படத்தில் நடித்த சலீம் குமார் ஆகியோர் இந்த விருதுகளை பெற்றனர்.
சிறந்த நடிகைக்கான விருது 'தென் மேற்கு பருவ காற்று' தமிழ் படத்தில் நடித்த சரண்யாவுக்கும், 'பாபு பாண்ட் பாஜா' என்ற மராத்தி படத்தில் நடித்த மிட்டாலே ஜக்தாப் வரத்கர் என்ற நடிகைக்கும் பகிர்ந்து வழங்கப்பட்டது.

கவிஞர் வைரமுத்து

கவிஞர் வைரமுத்து சிறந்த பாடலாசிரியருக்கான விருதை பெற்றார். 'தென் மேற்கு பருவ காற்று' சினிமாவில், 'கள்ளிக்காட்டு தாயே' என்று அவர் எழுதிய பாட்டுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

'தென் மேற்கு பருவக்காற்று' படத்தை இயக்கிய சீனு ராமசாமி சிறந்த தமிழ் பட தயாரிப்பாளருக்கான விருதையும், 'மைனா' படத்தில் நடித்த இயக்குனரும், நடிகருமான தம்பி ராமையா சிறந்த துணை நடிகருக்கான விருதையும், நடிகை சுகுமாரி சிறந்த துணை நடிகைக்கான விருதையும் பெற்றனர்.

ஆடுகளம் படத்துக்கு 6 விருதுகள்
'ஆடுகளம்' தமிழ்ப்படம் மொத்தம் 6 விருதுகளை அள்ளியது. சிறந்த நடிகர் தனுஷ் தவிர, சிறந்த இயக்குனர் (டைரக்டர் வெற்றி மாறன்), சிறந்த திரைக்கதை (டைரக்டர் வெற்றி மாறன்), சிறந்த நடன இயக்குனர் (வி.தினேஷ்குமார்), சிறந்த படத்தொகுப்பு (டி.இ.கிஷோர்), சிறப்பு பரிசு (இலங்கை நடிகர் ஜெயபாலன்) ஆகிய விருதுகள் இந்த படத்துக்கு வழங்கப்பட்டன.

அதேபோல் 'ஆதாமிண்டே மகன் அபு' மலையாளப்படம் 4 விருதுகளை பெற்றது. சிறந்த நடிகருக்கான விருது (சலீம் குமார்) தவிர, சிறந்த திரைப்படம், சிறந்த ஒளிப்பதிவாளர் (மது அம்பட்), சிறந்த இசையமைப்பாளர் (ஐசக் தாமஸ்) ஆகிய விருதுகளும் இந்த படத்துக்கு வழங்கப்பட்டது.

4 குழந்தை நட்சத்திரங்களுக்கு விருது
'ஐ ஆம் கலாம்' என்ற படத்தில் நடித்த ஹர்ஸ் மேயர், 'சாம்பியன்ஸ்' படத்தில் நடித்த சாந்தனு ரங்னேகர், மச்சிந்திரா கடேகர், ஆகியோரும், 'பாபு பாண்ட் பாஜா' படத்தில் நடித்த விவேக் சாபுக்ஷ்வர் ஆகிய 4 சிறுவர்கள் இந்த ஆண்டுக்கான சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதுகளை பெற்றனர்.

எந்திரன் படத்துக்கு 2 விருதுகள்

சிறந்த உடையலங்காரம் (ஜெயன்), சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் (ஸ்ரீனிவாசன் மோகன்) ஆகிய விருதுகள் ரஜினி நடித்த எந்திரன் படத்துக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. ஜெயனும், ஸ்ரீனிவாசனும் இந்த விருதுகளை பெற்றுக் கொண்டனர்.
இந்திரா காந்தி விருது
'பாபு பாண்ட் பாஜா' என்ற மராத்தி படம் இந்திரா காந்தி விருதை பெற்றது.

சல்மான்கான் நடித்த 'தபாங்' என்ற இந்திப் படம் சிறந்த ஜனரஞ்சகமான படத்துக்கான விருதை பெற்றது.
'தோ தோனி சார்' என்ற இந்திப் படம் சிறந்த இந்திப் படத்துக்கான விருதையும், 'இஷாகியா' என்ற படம் சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பின்னணி இசை உள்ளிட்ட 4 விருதுகளை பெற்றது.

வராத இந்தி நடிகர்-நடிகைகள்
தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் வழக்கமாக இந்தி நடிகர்-நடிகைகளும், கலைஞர்களும் அதிக அளவில் கலந்து கொள்வது வழக்கம். இந்த ஆண்டு இந்தி திரைப்படங்கள் குறைந்த அளவில் விருதுகளை பெற்றதால் தபாங் படத் தயாரிப்பாளர் அர்பாஸ்கான், மலைச்சா அரோரா உள்ளிட்ட ஒரு சில இந்தி சினிமா உலகப் பிரமுகர்களே விழாவில் பங்கேற்றனர்

சோ.அய்யருக்கு திமுக கேள்வி?உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக நடத்த முடியுமா?

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் மிகவும் நீங்கள் அதிமுக நலனுக்காக மாநிலத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளீர்கள். எனவே உள்ளாட்சித் தேர்தலை நியாயமான முறையில் நடத்தத் தயாராக இருப்பதாக உங்களிடமிருந்து எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தை கோருகிறோம் என்று மாநிலத் தேர்தல் ஆணையர் சோ.அய்யரிடம் திமுக கோரிக்கை விடுத்துள்ளது.

திமுக சட்டத்துறைச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அமைப்புச் செயலாளர் பெ.வீ.கல்யாண சுந்தரம் ஆகியோர் மாநிலத் தேர்தல் ஆணையர் சோ.அய்யரை சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமான சசிகலாவுக்கு நீங்கள் நெருக்கமானவர் என்றும், அதிமுக நலனுக்காக மாநிலத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளீர்கள் என்றும் திமுக நன்கு அறிந்துள்ளது. நீங்கள் பணி ஓய்வு பெற்ற பின்னரும், அதிமுகவின் அரசியல் கட்டளைகளை நிறைவேற்ற நியமிக்கப்பட்டுள்ளீர்கள். உங்களது திறமையான ஆதரவுடன் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை அதிமுகவுக்கு சாதகமாக நாடகமாட முயற்சிக்கிறார்கள்.

எனவே நியாயமான, நேர்மையான தேர்தலை நடத்த அரசமைப்புச் சட்டத்தின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றத் தயாராக இருப்பதாக உங்களிடமிருந்து எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தை திமுக கோருகிறது.

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல்களை நியாயமாகவும், நேர்மையாகவும் நடப்பதை உறுதி செய்ய பின்வரும் ஏற்பாடுகள் தேவை. தேர்தல் அறிவிப்பு நாள் முதல் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் மாவட்ட கண்காணிப்புக் குழுக்கள் இருக்க வேண்டும்.

தேவைப்பட்டால் அண்டை மாநிலங்களிலிருந்து ஓய்வு பெற்ற நீதிபதிகளின் சேவையைப் பெறலாம். வாக்குப்பதிவு தொடர்பான புகார்கள் மாவட்ட, வட்டக் கண்காணிப்புக்குழுவில் பெறப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வாக்குப் பதிவு நாளன்று, மாநில காவல் துறையின் பங்கு குறைந்தபட்சமாக தேவைப்பட்டால் ஒழிய வாக்குச்சாவடிக்குள் நுழைவதை கட்டுப்படுத்தியும், காவல் நிலையங்கள் துணை ராணுவப்படை, மத்திய ரிசர்வ் போலீஸ் ஆகியோரின் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டும்.

நியாயமான, சுதந்திரமான வாக்குப் பதிவு ஏற்பாடுகளை மேற்பார்வையிடமாநிலத் தேர்தல் ஆணையத்தில் குறைந்தபட்சம் மூன்று ஓய்வு பெற்ற உச்சநீதி மன்ற நீதிபதிகள் இருக்க வேண்டும். புகார்களைப் பெற மாநிலத் தேர்தல் ஆணையர் 24 மணி நேரமும் இருக்க வேண்டும். அரசியல் கட்சி மற்றும் பத்திரிகையாளர்கள் அணுக முடியாமல் இருக்கக் கூடாது. வாக்குப்பதிவு நாளன்று அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்பதிவு முழுவதையும் வீடியோ படம் பதிவு செய்ய தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, பதிவு செய்யப்பட்ட சிடிக்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் அளிக்கப்பட வேண்டும்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும். வாக்குப் பதிவுக்கு மின்னணு எந்திரங்களை பயன்படுத்த வேண்டும்.

வாக்குப்பதிவு நாளுக்கு ஒருவாரம் முன்பிலிருந்து மாநில அமைச்சர்கள் பிரச்சாரம் செய்ய தடைவிதிக்க வேண்டும். மாநில காவல் துறை, மாநில கண்காணிப்புக் குழுவினர் நேரடி மேற்பார்வையிலும், மாநிலத் தேர்தல் ஆணைய தலைமையகத்தில் தேர்தல் முழுவதையும் கண்காணிக்க நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற உச்சநீதி மன்ற நீதிபதிகளின் ஒட்டுமொத்த மேற்பார்வையிலும் இருக்க வேண்டும். நீங்கள் மட்டும் தேர்தல்களை நடத்த அனுமதிக்கப்படாமல், தலைமையகத்திலும், மாவட்ட மட்டங்களிலும் நியமிக்கப்பட்ட சுயேச்சையான பார்வையாளர்களின் கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும். மேலும் நியாயமான, நேர்மையான வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதி செய்ய மாவட்ட அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட வேண்டும்.

இவற்றுக்காக உங்களிடமிருந்து உத்தரவாதம் வராத பட்சத்தில், சட்டபூர்வமாக எடுக்கப்பட வேண்டிய நிவாரணங்கள் உட்பட இப்பிரச்சனையில் பல மட்டங்களில் திமுக அணுகும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கலாநிதி மாறனுக்கு எதிராக வாக்குமூலம் தரச்சொல்லி அடித்து உதைத்த போலீஸ்! - சக்ஸேனா, அய்யப்பன் கதறல்



Hansraj Saxenaசென்னை: சன் நெட்வொர்க் அதிபர் கலாநிதி மாறனுக்கு எதிராக வாக்கு மூலம் தரச்சொல்லி தங்களை அடித்து உதைத்து கொடும் சித்திரவதை செய்தனர் சிபிசிஐடி போலீசார் என சன் பிக்சர்ஸ் சக்ஸேனா மற்றும் அவரது உதவியாளர் அய்யப்பன் நீதிமன்றத்தில் கதறி அழுதனர்.

சன் பிக்சர்ஸ் சக்ஸேனா மற்றும் அய்யப்பன் ஆகியோரை பல்வேறு வழக்குகளில் போலீசார் கைது செய்துள்ளனர். ஒரு வழக்கில் ஜாமீன் கிடைத்து அவர்கள் வெளியில் வருவதற்குள் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், தம்பிக்கோட்டை படம் தொடர்பாக சக்ஸேனாவும் அய்யப்பனும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர் சிபிசிஐடி போலீசார். பின்னர் இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருவரையும் அழைத்துவந்தனர் போலீசார்.

அப்போது வேனிலிருந்து இறங்கிய அய்யப்பன் மிகவும் தளர்ந்த நிலையில், நடக்க முடியாத அளவுக்கு தள்ளாடினார். சக்ஸேனாவும் மிகவும் தளர்ந்து காணப்பட்டார்.
அங்கிருந்த நிருபர்களைப் பார்த்ததும் கதறி அழ ஆரம்பித்தனர் சக்ஸேனாவும் அய்யப்பனும். தங்களை போலீசார் கடுமையாக அடித்து உதைத்ததாக கதறினர்.

அய்யப்பன் உடலில் ஏராளமான காயங்கள் காணப்பட்டன. சில இடங்களில் சதை பிய்ந்து, சீழ் வைத்திருந்தது. வலியில் கதறிய அய்யப்பன், கலாநிதி மாறனுக்கு எதிராக வாக்கு மூலம் தரச்சொல்லி போலீசார் அடித்து உதைக்கின்றனர் என்றும், இதனை நீதிமன்றத்தில் தெரிவித்தால் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றுவிடுவோம் என்று மிரட்டியதாகவும் கூறினார்.

பின்னர் நீதிபதி முன் விசாரணைக்கு நிறுத்தப்பட்டபோது, அய்யப்பன் தன் வேட்டியை அவிழ்த்து, போலீசார் அடித்த காயத்தைக் காட்டினார். இடுப்புப் பகுதியில் கடுமையான காயம் இருந்ததைப் பார்த்த நீதிபதி அதுகுறித்த காரணத்தைக் கேட்டார்.
அப்போது விசாரணையின்போது டிஐஜி ஸ்ரீதர் தலைமையிலான போலீசார் தன்னையும் சக்ஸேனாவையும் ரத்தகாயம் ஏற்படும் அளவுக்கு தாக்கியதாகக் கூறினார்.
வரும் செப்டம்பர் 23-ம் தேதி வரை இருவருக்கும் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டிருப்பதை நீதிபதி அறிவித்தபோது, அய்யப்பன் மயங்கி விழுந்தார். பின்னர் சக்சேனா மற்றும் அய்யப்பனை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

போலீசார் மீது அய்யப்பன் கூறிய புகாரை தனி மனுவாக எழுதி வாங்கிக் கொண்டார் நீதிபதி.

சக்சேனா, அய்யப்பன் இருவரையும் போலீசார் இந்த அளவு கடுமையாக தாக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை நீதிமன்ற வளாகத்தில் ஏற்படுத்தியது

LTTE funded MDMK: Wikileaks


COIMBATORE: A US diplomat of Indian origin who had a stint at the American consulate in Chennai had in a confidential cable hinted that the LTTE could have financially supported the MDMK leader Vaiko, according to Wikileaks.
In a cable sent on May 15, 2006, two days after the DMK was voted to power, Ravi Candadai, the then acting US Consul General in India, while ruling out funding for the LTTE from Tamil Nadu, said: “It may be, however, that some financial support flows the other way, that is, from the LTTE to certain political leaders in Tamil Nadu, notably Vaiko, founder and general secretary of the MDMK.”
To support this theory, Candadai quoted Chandrahasan, a well known Sri Lankan Tamil in Chennai and the founder of Organisation for Eelam Refugees Rehabilitation (OfERR).
“Some people, including Tamil refugee NGO leader Chandrahasan, believe that the LTTE provided initial financial support for Vaiko in establishing his MDMK party after he came out of the DMK in 1993,” the diplomat observed.
Describing Vaiko as an outspoken supporter of the LTTE, he, as a matter of caution, added, “but any financial link (with the LTTE) remains unproven.”
Dealing with the issue of sympathy for the LTTE in Tamil Nadu, the cable said the support had vanished almost overnight after former Prime Minister Rajiv Gandhi’s assassination.
Based on information provided by his contacts, the diplomat surmised that substantial financial support for the LTTE came from Tamils living in Canada, the UK, Netherlands and Germany, who contributed 10 pc of their income due to the encouragement of local religious institutions or Tamil cultural organisations. This encouragement was “closer to extortion.”
The cable also gave a clean chit to the then newly installed DMK Government on its anti-LTTE policy saying the party had a record in controlling the outfit between 1996 and 2001.
Candadai also believed that to the average person in Tamil Nadu, the then prevailing situation in Sri Lanka was not of primary interest. “It may seem strange that in the Indian State of Tamil Nadu, which literally means Tamil country, there is little support for the LTTE, an organisation that professes to be dedicated to establishing a homeland for all Tamils,” he quipped.
The perception of the people in Tamil Nadu would remain unchanged unless there were to be major human rights violations against Tamils in Lanka or a huge influx of new refugees into TN from Sri Lanka, the diplomat had concluded.

ஜெயா சொல்கிறார் ஊழல் செய்தவர்களை சும்மா விட மாட்டோம்

 
சட்டசபையில் இன்று போக்குவரத்து துறை மானியத்தின் மீது நடந்த விவாதத்துக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதில் அளித்தார்.
 அப்போது தி.மு.க. ஆட்சியின் போது போக்கு வரத்து துறையில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பல முறைகேடுகளை செய்து இருப்பதாகவும் கூறினார்.

அதுபற்றிய விவரங்களை புத்தகமாக அச்சடித்து உறுப்பினர்களுக்கு வழங்க போவதாகவும் அறிவித்தார். இதுகுறித்து சபாநாயகர் ஜெயக்குமார் பேசும்போது, இந்த புத்தகங்களை பத்திரிகையாளர்களுக்கும் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

குணசேகரன் (இந்திய. கம்யூ.)இந்த ஊழல் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். அதற்கான அறிவிப்பை முதலமைச்சர் இப்போதே வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

முதல்வர் ஜெயலலிதா இதற்கு பதில் அளித்து பேசினார்.

அவர்,’போக்குவரத்து துறையில் கடந்த தி.மு.க. ஆட்சியின் போது நடந்த முறைகேடுகள் பற்றிய விவரங்களை அமைச்சர் இங்கு வெளியிட்டார்.
அந்த ஊழல் தொடர்பாக இன்றே விசாரணை கமிஷன் அமைக்கும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று உறுப்பினர் இங்கு குறிப்பிட்டுள்ளார்.

எந்த ஒரு அறிவிப்பையும் நான் அவசரமாக வெளியிடுவதில்லை. நன்றாக யோசித்து ஆராய்ந்து தான் அடியெடுத்து வைக்கிறேன். அதனால்தான் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கிறது.

இந்த ஊழல் தொடர்பாகவும் சிந்தித்து எத்தகைய நடவடிக்கை எடுக்கலாம் என்று சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகைய ஊழல் செய்தவர்களை இந்த அரசு சும்மா விடாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கூறினார்.

அழகிரி புறக்கணிப்பு : திமுகவில் சலசலப்பு


 

மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, தொடர்ந்து பாராளுமன்ற கூட்டம் நடைபெற்றதால் டெல்லியிலேயே
முகாமிட்டிருந்தார்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு தமிழகம் சிறையில் இருக்கும் திமுகவினரை சந்தித்துவிட்டு உடனே டெல்லி சென்றூவிட்டார்.இன்று டெல்லியில் இருந்து மதுரை திரும்பியுள்ளார் அழகிரி.

இந்நிலையில் மாநில திமுக வழக்கறிஞர்கள் கூட்டம் கலைஞர் தலைமையில் காலை 10 மணிக்கு சென்னையில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் லண்டன் சென்றுள்ளதால் அவர் பங்கேற்காத நிலை டெல்லியில் இருந்து சென்னை திரும்பியிருந்தாலும் அழகிரி இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளார் அழகிரி புறக்கணித்ததை அடுத்து மதுரை உட்பட தென்மாவட்ட செயலாளர்களும் இந்த கூட்டத்தை தென் மாவட்ட வழக்கறிஞர்களுடன், மாவட்ட செயலாளர்களும் சென்னை வருவதற்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்ட செயலாளர்கள் புறக்கணிப்பை அடுத்து வழக்கறிஞர்கள் மட்டும் தனி பேருந்தில் சென்னை வந்தனர்.
அழகிரியின் புறக்கணிப்பு திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ் அரச அதிபர் என்ற ரீதியிலேயே ஜெனீவாவுக்கு நான் அழைக்கப் பட்டிருக்கின்றேன்

யாருக்காகவும் நான் சாட்சி சொல்லப் போவதில்லை. அது தொடர்பில் தமிழ் மக்கள் பயப் பட வேண்டியதில்லை. சாவின் மத்தியில் நின்று பணியாற்றியவள் நான். யாழ் மாவட்டத்தின் மீள் குடியமர்வு அபிவிருத்தி தொடர்பாகவே ஜெனீவா மாநாட்டில் அறிக்கை சமர்ப்பிப்பேன். இவ்வாறு யாழ். மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டாசுகுமார் தெரிவித்தார்.

ஜெனீவா பயணமாவதற்கு முன்பு நேற்று வவுனியா வந்து திரும்பிய அவர் தனது பயணம் குறித்து உதயனுக்கு விளக்கினார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
எமது தமிழ் மக்கள் மீது எனக்கு அக்கறை உண்டு. சாவின் மத்தியில் நின்று நான் பணிபுரிந்தவள். அந்த வேதனை எனக்குத்தெரியும். மக்களுடன் 8 வருடம் பணியாற்றியவள். அதனால் அந்த மக்களுக்கும் என்னைப்பற்றி நன்கு தெரியும்.
30 வருடகாலமாக நடைபெற்ற யுத்தத்தினால் நாங்கள் பலவற்றினை இழந்துவிட்டோம். அவற்றை மீளக்கட்டி எழுப்ப வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது.தமிழ் அரச அதிபர் என்ற ரீதியிலேயே ஜெனீவாவுக்கு நான் அழைக்கப் பட்டிருக்கின்றேன்.

எனினும் நடந்து முடிந்த போரைப்பற்றி அங்கு சாட்சி சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அவ்வாறு சாட்சி சொல்வதற்காகவும் நான் அழைக்கப்படவில்லை. எனக்குத் தரப்பட்டுள்ள தலைப்பு மீள் குடியமர்வும் அபிவிருத்தியுமே. ன்யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மீள்குடியமர்வு மற்றும் கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகள் தொடர்பான தகவல் திரட்டியுள்ளேன். இன்னும் செய்யப்பட வேண்டியுள்ள பணிகள் குறித்தும் தகவல்கள் ஜெனீவாவில் தரப்படும்.யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தித் தேவைகள் குறித்தும் ஜெனீவாவில் தெரிவிக்கவுள்ளேன் என்றார்

நீதிபதியுடன் ஜெயேந்திரர் பேரம்: வழக்கில் தன்னையும் சேர்க்கக் கோரும் சுந்தரேச அய்யர்

Sundaresa Iyer

சென்னை: சங்கர்ராமன் கொலை வழக்கை விசாரிக்கும் நீதிபதியுடன் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் பண பேரம் பேசியதாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் தன்னையும் சேர்த்துக் கொண்டு விசாரிக்க வேண்டுமென்று கோரி காஞ்சி மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர் மனு தாக்கல் செய்துள்ளார்.

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கர்ராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், இளையவர் விஜயேந்திரர், சங்கரமட மேலாளர் சுந்தரேச அய்யர் உட்பட பலர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி செசன்ஸ் நீதிமன்றத்தில் நடக்கிறது.

இந்த வழக்கிலிருந்து தப்புவதற்காக செசன்ஸ் நீதிமன்ற நீதிபதியுடன் ஜெயேந்திரர் தொலைபேசியில் பண பேரம் பேசியதாக தகவல் வெளியானது. இது தொடர்பான ஆடியோ சிடியும் வெளியானது.

இதையடுத்து புதுச்சேரி நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் 8 வாரங்கள் தடை விதித்தது.

இந நிலையில் சங்கர்ராமன் கொலை வழக்கில் 3-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சங்கரமட மேலாளர் சுந்தரேச அய்யர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், எனது தரப்பு நியாயத்தையும் கேட்காமல் விசாரணை நடத்தக்கூடாது. மனுவில் குற்றம்சாட்டப்பட்டவர்களை பிரதிவாதியாக சேர்த்திருக்க வேண்டும். அந்த உரையாடல் சி.டி. பற்றி எனக்கு சமீபத்தில் தெரிய வந்தது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள என்னையும் இணைத்து, மனுவை விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஏழாண்டுகள் பல்லக்கு தூக்கிய எங்களுக்கே கெட் அவுட்டா?

Nanjil Sampath

கொத்தமங்களம்: உங்களை பல்லாக்கில் வைத்து தூக்கினோம், உங்களுக்காக பேசினோம். ஆனால் எங்களை தற்போது வெளியேற்றி விட்டீர்கள், என ம.தி.மு.க., கொள்ளை பரப்பு செயலர் நாஞ்சில் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்களத்தில், ம.தி.மு.க.,வின் பொதுகூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட அக்கட்சியின் கொள்ளை பரப்பு செயலர் நாஞ்சில் சம்பத் பேசுகையில், "நெல்லையில் தான், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கட்சிகள் முக்கிய முடிவுகள் எடுத்துள்ளன.

அதேபோல ம.தி.மு.க.,வின் இந்த மாநாட்டில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். இதுவரை நாங்கள் விதை விதைப்போம், ஆனால் அறுக்கமாட்டோம். உடை நெய்வோம், உடுத்தமாட்டோம். இந்த நிலையில் இனி இருக்கமாட்டோம். கடந்த 7 ஆண்டுகளாக மற்றவர்களுக்காக பல்லக்கு தூக்கினோம். அவர்கள் கட்சிக் கூட்டங்களில் பேசினோம்.

ஆனால், இப்போது, ம.தி.மு.க.,வின் அங்கீகாரத்தையே ரத்து செய்ய சதியில் தமிழகத்தின் அரசியல்கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. அந்தளவிற்கு நாங்கள் என்ன தவறு செய்தோம்", என்றார்.

அனைத்துக்கட்சி குழுவுடன் இலங்கைக்கு சுஷ்மா சுவராஜ்!


இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக, தனது தலைமையில் அனைத்துக்கட்சி குழு இலங்கை செல்வதாக சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.

யாழ் மூன்று இடங்களின் கிறீஸ் மனிதன் தாக்குதல்!

நவாலி, அட்டகிரிப் பாடசாலைக்கு முன்பாக வீடொன்றுக்குள் நுழைந்த மர்ம மனிதன் உடைகளை உலரவிட்டுக் கொண்டிருந்த பெண்ணைத் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளார்.இந்தச் சம்பவம் நேற்று இரவு 8 மணிக்கு இடம்பெற்றுள்ளது.சம்பவம் நடைபெற்ற நேரம் இராணுவத்தினர் அந்தச் சுற்றாடலில் காணப்பட்டனர். எனினும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:
குடும்பப் பெண் ஒருவர் உடைகளை உலரவிட்டுக் கொண்டிருந்த வேளை, ஒருவர் அவரைப் பின்புறமாகக் கட்டிப் பிடித்து கழுத்துப் பகுதியை திருகியதுடன் வாயையும் இறுக்கப் பொத்தியுள்ளார். பெண்மணி திணறிக் கத்திக் குழறியதும் அவர் தப்பியோடி விட்டார். துரத்திக்கொண்டு உடனே உறவினர்கள் வீதிக்கு வந்தபோது அங்கு இராணுவத்தினர் நிற்பதைக் கண்டு அவர்களிடம் சம்பவம் குறித்து விவரித்துள்ளனர். அதற்கு தாம் “எதுவும் செய்ய முடியாது. பொலிஸாருக்கு அறிவியுங்கள்” என்று கூறி விட்டு அவர்கள் சென்று விட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸாரிடம் முறையிடப்பட்டது. இரவு 8.30 மணியளவில் அவர்கள் குறிப்பிட்ட இடத் துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர். “பின்னர் கிறீஸ் மனிதன் இல்லை இது வேறு பிரச்சினை” என்று உதாசீனமாக பதில் அளித்து விட்டு அங்கிருந்து சென்றனர் என்று கூறப்பட்டது.இதேவேளை, பிரஸ்தாப பெண் தாலிக்கொடி மற்றும் நகைகள் அணிந்திருந்த போதும் அவை எதுவும் அபகரிக்கப்படவில்லை என்று அவரது வீட்டார் தெரிவித்தனர்.
இதேவேளை, ஊர்காவற்றுறை, பருத்தியடைப்புப் பகுதியில் நேற்றிரவு 9 மணிக்கு மற்றுமொரு சம்பவம் இடம் பெற்றுள்ளது. சந்தேகத்துக்கு இடமான முறை யில் நடமாடிய இருவரைப் பின் தொடர்ந்து சென்ற இளைஞர்கள் இருவர் மீது அவர்கள் பதுங்கி இருந்து தாக்குதல் நடத்தினர் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம் பவத்தில் இதேயிடத்தைச் சேர்ந்த ஆர்.பீற்றர் (வயது 24), சி.ரமணன் (வயது26) ஆகி யோர் காயமடைந்துள் ளனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது: குறித்த இடத்தில் வீடு ஒன்றுக்கு அருகில் சந்தேகமான முறையில் நடமாடிய இருவரை அவதானித்த இளைஞர்கள் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். இதன்போது பற்றைக்குள் பதுங்கியிருந்து கூரிய ஆயுதத்தால் ஒருவரைக் கீறியும் மற்ற வரைத் தாக்கியும் விட்டு அவர்கள் தப்பி ஓடி விட்டனர். சம்பவம் ஊர்காவற்றுறை பொலி ஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து அங்கு வந்த பொலிஸார் மக்களை வீடுகளுக்குச் செல்லுமாறு பணித்து விட்டு திரும்பிச் சென்றனர் என்று தெரிவிக் கப்படுகிறது.சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாரை தொடர்பு கொண்டு உதயன் கேட்டு போது கடமையில் இருந்த பொலிஸார் ஒருவர், பொலிஸ் நிலையத்தில் எதுவித முறைப்பாடும் பதிவு செய்யப்படவில்லை என்றார்.
இதேவேளை, சித்தன்கேணி சிவன் கோயில் பகுதியில் நேற்றிரவு 7 மணியளவில் மூன்றாவது சம்பவம் நடந்துள்ளது. வீடொன்றுக்குள் நுழைய முற்பட்ட இருவர் அங்கிருந்தவர்கள் விழிப்படைந்ததை அடுத்து தப்பி ஓடினர் என்று தெரிவிக்கப்படுகிறது.நேற்று நடைபெற்ற மூன்று சம்பவங்களின் போதும் குறிப்பிட்ட பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருந்ததாக மக்கள் தெரிவித்தனர்.

Controversial Sri Lanka private medical college continues with student enrollments amidst opposition

  ColomboPage News Desk, Sri Lanka.   The controversial private medical college in Sri Lanka has refused to stop the enrollment of students to the institute.
Vice Chancellor of South Asia Institute of Technology and Medicine (SAITM) Prof. Malkanthie Chandrasekara has reportedly turned down requests by the Health Ministry and the Government Medical Officers Association (GMOA) to suspend enrolling students.
The Vice Chancellor has said the authorities or the GMOA had nothing to do with the institute's enrolment process.
Prof. Chandrasekara has explained that the quality and standard of the medical degrees awarded by the SAITM come under the purview of the University Grants Commission (UGC) and the Sri Lanka Medical Council (SLMC).
She has added that most of the basic requirements for a private medical college have been provided by the institute and a few remaining facilities were under preparation as SAITM has been given 18 months to complete the requirements.
The Medical faculty of SAITM is actually the Sri Lankan Campus of Nizhny Novgorod State Medical Academy of the Russian Federation and is a foreign institution although most of the academic staff is from Sri Lankan universities.
Meanwhile, the Health Ministry has appointed a five-member committee to probe the gazette issued by the Higher Education Ministry permitting the institute to grant MBBS degrees and the standard of the institution.

881 ex-Tigers to be prosecuted

By Sandun A. Jayasekera
Law enforcement authorities are carrying out investigations before filing charges against 881 ex LTTE cadres who would be prosecuted once investigations have been completed, Deputy Solicitor General Shavendra Fernando said yesterday.
He said 22 ex LTTE cadres had been charged in the Magistrate’s Courts and another 278 in the High Courts while 200 were in remand custody and 204 released on bail.
Of the 4,281 LTTE combatants arrested during the last stages of the humanitarian operation some 1,000 had been discharged due to lack of evidence.
With regard to the legal implications of detaining ex LTTE combatants even after the emergency regulations were lifted, Mr. Fernando said according to section 40 of the Public Security Ordinance, suspects arrested under the PTA could be detained for a further interim period.
“The Supreme Court in a judgment has ruled that there are legal provisions to detain those being investigated under the PTA even after the lifting of the Emergency Regulations. Even International Law accepts the position taken by the Supreme Court that suspects can be detained for an interim period for the purpose of carrying out terrorism-related investigations,” Mr. Fernando said and added that the Attorney General’s Department and other state agencies had dealt with 3,394 out of a total of 4,281 taken into custody either by the armed forces or the police towards the tail end of the conflict.

ஐ.டி., ரெய்டில் அனுஷ்காவை சிக்க வைத்த பிரபல நடிகர்


anushka upset of income tax raid
சில தினங்களுக்கு முன்னர் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி ரெய்டால் கலங்கி போய் இருக்கிறார் நடிகை அனுஷ்கா. இதனிடையே இந்த ரெய்டிற்கு தெலுங்கில் உள்ள முன்னணி நடிகர் ஒருவர் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
"அருந்ததீ" படத்தின் மூலம் பிரபலமான நடிகை அனுஷ்கா தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் நம்பர்-1 நடிகையாக வரத்தொடங்கியுள்ளார். குறுகிய காலத்தில் இந்த இடத்தை பிடித்த நடிகை அனுஷ்கா மீது யார் கண்பட்டதோ தெரியவில்லை இவரது வீட்டில் சில தினங்களுக்கு முன்னர் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஏராளமான கணக்கில் வராத சொத்துக்கள், நகைகள் மற்றும் ரொக்க பணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனால் மிகுந்த வருத்தத்தில் இருக்கும் அனுஷ்கா, மன ஆறுதலுக்காக சில நாட்கள் பெங்களூருவில் தங்க முடிவெடுத்துள்ளார்.
இதனிடையே இந்த ரெய்டிற்கு தெலுங்கில் உள்ள முன்னணி நடிகர் தான் காரணம் என்கிறார் அனுஷ்கா. விசாகப்பட்டிணம் கடற்கரை அருகே நிலம் வாங்க அந்த நடிகர் தான் தன்னை வற்புறுத்தியதாகவும், வாங்கும் போது பல பிரச்சனைகளை வந்ததாகவும் கூறுகிறார் அனுஷ்கார்.

கமல்ஹாசனுடன் நடிக்காதே : அனுஷ்காவை தடுத்த ஹீரோ!!


Anushka out from Vishwaroopam
"விஸ்வரூபம்" படத்தின் கமல்ஹாசனும், அனுஷ்காவும் ஜோடி சேர விடாமல் ஆந்திர பிரபல ஹீரோ ஒருவர் தடுத்து விட்டாராம். விஸ்வரூபத்தில் கமல்ஹாசன் ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார் என்ற செய்தியை கேட்டதும் கமல் ரசிகர்கள் எல்லோரும் சந்தோஷத்தில் ஆழ்ந்தார்கள். அந்த சந்தோஷத்தை ஒரு வாரத்திற்கு கூட நீடிக்க விடாமல் புதிய செய்தியொன்று வெளியாகியிருக்கிறது. விஸ்வரூபத்தில் அனுஷ்கா நடிக்கவில்லை என்ற செய்திதான் அது.

அனுஷ்காவை கமல் உடன் ஜோடி சேர விடாமல் தடுத்திருப்பது ஆந்திர பிரபல ஹீரோ நாகார்ஜூனா என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். கமல் படத்தில் இவர் நடிக்கப் போகிறார் என்றதுமே, வேண்டாம் போகாதே... என்று கூறிவிட்டாராம் நாகார்ஜுனா. அனுஷ்கா நடிக்கிறார் என்ற செய்திகள் கசிந்ததே தவிர இன்னும் அக்ரிமென்ட் எதிலும் சைன் பண்ணவில்லையாம் அனுஷ்கா.

இதனிடையே அனுஷ்கா சொதப்பினால் என்ன செய்வது? என்று நினைத்ததால்தானோ என்னவோ முன்கூட்டியே எமி ஜாக்சனிடமும் ஒரு வாய்ப்பு கேட்டிருந்தாராம் கமல். அனேகமாக அனுஷ்கா இடத்தை எமி பிடிப்பார் என்று கூறப்படுகிறது.

சொகுசு கப்பல் சேவை தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்படுமா?

சென்னை: தமிழகத்தில், ஐ.டி., மோட்டார் வாகனம் என, அனைத்து துறைகளும் அதிவேக வளர்ச்சி பெற்று வரும் நிலையில், சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், சொகுசு கப்பல் பயண சேவையை, தமிழக அரசு அறிமுகப்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

இந்தியர்கள், சொகுசு கப்பல் பயணம் செய்ய, விமானம் மூலம் சிங்கப்பூர் பறந்து, அங்கிருந்து மலேசியா, தாய்லாந்து, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு கப்பலில் சொகுசு பயணம் செய்கின்றனர். இவ்வாறு ஆண்டுதோறும், 15 லட்சம் இந்தியர்கள் சொகுசு கப்பலில் பயணம் செய்கின்றனர். இதன் மூலம், அந்த நாடுகளுக்கு அன்னியச் செலாவணியாக அதிக வருவாய் கிடைப்பதுடன், சுற்றுலா மூலம் வேலைவாய்ப்பும் கிடைக்கிறது. இந்தியாவில், 7,000 கி.மீ., நீளத்திற்கு இயற்கையாகவே அமைந்த கடல் எல்லை உள்ளது. தமிழகத்தின் கடல் எல்லை, 1,076 கி.மீ.,. இந்திய கடற்கரையிலிருந்து, 15 "நாட்டிகல்' தூரத்தில் சர்வதேச கடல் எல்லை உள்ளது. ராமேஸ்வரம் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் இதன் இடைவெளி மாறுபடும்.

தமிழகத்தில், அரசுக்கு சொந்தமான, பூம்புகார் நிறுவனம் சரக்கு கப்பல் சேவையை நடத்தி வருகிறது. இந்நிறுவனத்திற்கு, எம்.வி. தமிழ் அண்ணா, எம்.வி. தமிழ் பெரியார், எம்.வி. தமிழ் காமராஜ் என, மூன்று கப்பல்கள் உள்ளன. இந்த கப்பல்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு சொந்தமான அனல்மின் நிலையங்களுக்குத் தேவைப்படும் நிலக்கரியை ஹால்டியா, பாரதீப் மற்றும் விசாகப்பட்டினம் துறைமுகங்களிலிருந்து ஏற்றி, தூத்துக்குடி மற்றும் எண்ணூர் துறைமுகங்களுக்கு கொண்டு வரும் பணியை மேற்கொள்கிறது. மேலும், எம்.எல். பகீரதி, எம்.எல். குகன், எம்.எல்.,பொதிகை ஆகிய மூன்று படகுகள் மூலம் கன்னியாகுமரி முனையிலிருந்து, விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்தையும் நடத்தி வருகிறது. இந்தியாவில், அனைத்து துறைகளிலும் சிறப்பாக வளர்ச்சி கண்டு வரும் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது. தமிழக சுற்றுலாத் துறையை மேம்படுத்த, சொகுசு கப்பல் சேவையை அரசு ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன்மூலம், அரசுக்கு அதிக வருவாய் கிடைப்பதுடன், சுற்றுலாத் துறையும் வளர்ச்சி பெறும். வசதி படைத்தவர்கள் மட்டுமே கப்பலில் பயணம் செய்யும் நிலை மாறி, அனைவரும் கப்பல் பயணம் மேற்கொள்ளலாம். இத்திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு, கூடுதல் செலவு ஏற்படும் என்று கருதினால், தனியாருடன் கூட்டு சேர்ந்தும் களமிறங்கலாம்.

இதுகுறித்து பெயர் விரும்ப வெளியிடாத தமிழக கடல்சார் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில், கடலோர பகுதிகளில் அதிகளவில் சுற்றுலாத் தளங்கள் உள்ளன. கப்பல் பயணம் மூலம் சுற்றுலா வரும் வெளிநாட்டினர், சென்னை துறைமுகத்தில் இறங்கி, தரை வழி பயணம் மூலமாக தான் அந்த சுற்றுத் தளங்களுக்குச் செல்கின்றனர். அரசே, மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக சொகுசு கப்பல் பயணத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்தலாம். சொகுசு கப்பல்களை இயக்குவதற்கு, மும்பையில் உள்ள "டைரக்டர் ஜெனரல் ஆப் ஷிப்பிங்' நிறுவனத்திடம் அனுமதி பெற வேண்டும். இதன் கீழ் இயங்கும்,"மெர்கன்டைல் மரைன் டிபார்ட்மென்ட்', சென்னை, விசாகப்பட்டினம், கொச்சி ஆகிய இடங்களில் உள்ளது. முதன்மை அலுவலர் தலைமையில் செயல்படும் அலுவலகத்தில்,"இன்ஜின் சர்வயர்', "நாட்டிகல் சர்வயர்' ஆகியோர் இருப்பர். கப்பலின் எடை, இன்ஜின், எத்தனை பேர் பயணம், பாதுகாப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, கப்பலை இயக்குவதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவர். தமிழகத்தில் உள்ள, சிறு துறைமுகங்கள் தனியார் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற விதி உள்ளது. இதை தளர்த்தி சொகுசு கப்பல் நிறுத்துவதற்கு, அரசு அனுமதி வழங்கினால், இச்சேவையில் களமிறங்க தனியார் நிறுவனங்கள் ஆர்வத்துடன் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

நல்ல வரவேற்பு: இந்தியாவில் முதன் முறையாக, தமிழகத்தைச் சேர்ந்த, "அமெட்' நிறுவனம்,100 கோடி ரூபாய் செலவில், 1,300 பேர் பயணம் செய்யும் சொகுசு கப்பல் சேவையை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்நிறுவனத்தின் கப்பல் சேவைக்கு, உயர் வருவாய் பிரிவு மக்கள் என்றில்லாமல் அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்பு உள்ளது.

தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள்: தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடி, எண்ணூர் ஆகிய மூன்று பெரிய துறைமுகங்கள் உள்ளன. கடலூர், நாகை, பாம்பன், ராமேஸ்வரம், வாலிநோக்கம், கன்னியாகுமரி, குளச்சல் ஆகிய இடங்களில், அரசுக்கு சொந்தமான சிறு துறைமுகங்கள் உள்ளன. காட்டுப்பள்ளி, எண்ணூர் சிறு துறைமுகம், திருச்சோபுரம், சிலம்பிகுளம், பி.ஒய்.03, திருக்கடையூர், திருக்குவளை, காவேரி, வானகிரி, உடன்குடி, புன்னக்காயல், மனப்பாடு, கூடலூர் ஆகிய இடங்களில் தனியாருக்குச் சொந்தமான சிறு துறைமுகங்கள் உள்ளன.

தி.மு.க., கொள்கை விளக்க குறிப்பை காப்பியடிக்கின்றனர்

சென்னை: "தி.மு.க., ஆட்சியில், கொள்கை விளக்கக் குறிப்புகளில் என்ன எழுதியிருந்தோமோ, அதை ஈயடிச்சான் காப்பியாக, அ.தி.மு.க., ஆட்சியின் கொள்கை விளக்கக் குறிப்பாக சொல்லுகின்றனர்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து, நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: கடந்த தி.மு.க., ஆட்சியில், 2010 - 11ம் ஆண்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் கொள்கை விளக்க குறிப்பில், "நாட்டு நலப் பணித் திட்டத்தில் இந்திய நாட்டிலேயே அதிகமான தொண்டர்களை கொண்டிருப்பது தமிழ்நாடே (3,70,018). மாநிலத்தில், 98,790 மாணவர் மற்றும் மாணவியர், தேசிய மாணவர் படையில் உள்ளனர்' என்று உள்ளது. இந்த விவரங்கள், அமைச்சர் சி.வி.சண்முகம் இந்த ஆண்டு தந்துள்ள கொள்கை விளக்கக் குறிப்பில், மாணவர்களின் எண்ணிக்கையைக் கூட மாற்றாமல், அப்படியே இடம் பெற்றுள்ளது. மேலும், தி.மு.க., ஆட்சியின் கொள்கை விளக்க குறிப்பில் இடம்பெற்றுள்ள பல பகுதிகள் அப்படியே உள்ளன. கொள்கை விளக்க குறிப்பை அமைச்சர் சரிபார்க்காததன் விளைவா இது, இல்லை அதிகாரிகளின் தந்திரமா எனத் தெரியவில்லை. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

ராஜிவ் விஷயத்தில் நன்றி மறக்கலாமா? செய்த தவறை ஜெயலலிதா திருத்திக் கொள்ள வேண்டும்


சென்னை: தமிழகத்தில் தீவிரவாதம் தலைதூக்கினால் அதற்கு ஜெயலலிதாதான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார். ராஜிவ்காந்தி கொல்லப்பட்டபோது அவருடன் இறந்தவர்களுக்கு நீதி கேட்டும், தூக்கு தண்டனை பெற்றவர்களை உடனே தூக்கிலிடக் கோரியும் காங்கிரஸ் கட்சி சார்பில், சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. எம்.எஸ்.திரவியம், ஜோதி ராமலிங்கம் தலைமை வகித்தனர். குமரி அனந்தன் துவக்கி வைத்தார். முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதாவது:  ராஜிவ்காந்தி கொலையாளிகளை உடனே தூக்கில் போட வேண்டும் என கருத்து தெரிவித்ததற்காக எனக்கு தொலைபேசி மூலம் 300க்கும் மேற்பட்ட மிரட்டல் வந்தது. பெரியாரின் பெயரைச் சொல்லி வியாபாரம் செய்யும் சீமான், காங்கிரசை அழிப்பேன் என்கிறார். சீமான் மீது நடவடிக்கை எடுக்க ஜெயலலிதா தயங்குகிறார். முதல் நாளில் எனக்கு அதிகாரம் இல்லை என்று சட்டப்பேரவையில் சொன்ன ஜெயலலிதா, மறுநாள் தூக்கு தண்டனையை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றுகிறார். யாருடைய மிரட்டலால் தீர்மானத்தை போட்டார்.

அந்த தீர்மானத்தை ஜெயலலிதா வாபஸ் பெற வேண்டும். தீவிரவாதத்திற்கு ஆதரவு தந்தால்  தமிழகத்தில் மீண்டும் அது தலைதூக்கும். அதற்கு ஜெயலலிதாதான் பொறுப்பு ஏற்க வேண்டும். ராஜிவ்காந்தியின் நண்பர் எம்.ஜி.ஆர். அவரால்தான் ஜெயலலிதா அரசியலுக்கு அறிமுகமானவர். அவர் இல்லை என்றால் ஜெயலலிதா முதல்வராக இருக்க முடியாது. அவர் திருந்தி விட்டார் என்று நினைத்தோம். ஆனால் சர்வாதிகாரம் அவரை மீண்டும் சூழ்ந்துள்ளது. செய்த தவறை ஜெயலலிதா திருத்திக்கொள்ள வேண்டும். உங்களை காப்பாற்றியவர் ராஜிவ்காந்தி. அந்த நன்றியை நீங்கள் மறக்கலாமா?

ஜெயலலிதா உறுதியான பெண்மணி. அவர் தவறுகளுக்கு உடன் போக மாட்டார் என நம்புகிறோம்.

பெரியார் படத்திற்கு இசை அமைக்க மாட்டேன் என்று இளையராஜா சொன்னார். அப்போது பெரியாரின் சீடர்கள் என்று சொல்லும் சீமானும், பாரதிராஜாவும் எங்கே போனார்கள். சினிமாவில் மார்க்கெட் போனதால் அரசியலுக்கு வந்துள்ளார்கள்.  காங்கிரஸ்காரர் கள் தனித் தனியாகத்தான் இருப்பார்கள். ஆனால் நல்ல காரியத்திற்கு ஒன்று சேருவார்கள். காங்கிரஸ் தலைமையைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். அது ஜால்ரா கூட்டம். மக்களின் நலனுக்காக காங்கிரஸ்காரர்கள் குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு இளங்கோவன் பேசினார்.

முன்னாள் எம்.பி.க்கள் அன்பரசு, வள்ளல்பெருமான், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வசந்தகுமார், அருள் அன்பரசு, வேணுகோபால், ஞானசேகரன், முருகானந்தம், நாசே ராமச்சந்திரன், கராத்தே தியாகராஜன், சி,டி,மெய்யப்பன், தொழிற்சங்க தலைவர் நஞ்சப்பன், சைதை ரவி, சாய்லட்சுமி உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தனி மேடையில் பலியானோரின் உறவினர்கள்
உண்ணாவிரதப் பந்தலில் தனி மேடை போட்டு ராஜிவ்காந்தி கொல்லப்பட்டபோது இறந்த லீக் முனுசாமி, போலீஸ் அதிகாரிகள் முகம்மது இக்பால், ராஜகுரு, எட்வர்ட் ஜோசப், மற்றும் சம்தானி பேகம் ஆகியோர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அமர வைக்கப்பட்டனர். அந்த சம்பவத்தில் காயமடைந்த போட்டோகிராபர் ஜெய்யும் அமர்ந்திருந்தார்

மதுரை அண்ணனிடம் மாட்டிய ராஜ் டிவியின் 6,68,80,881 ரூபாய்



ஏனோ தெரியவில்லை - இன்னும் கூட தமிழ் பத்திரிகைகள் சில செய்திகளை
வெளியிட தயங்குகின்றன.

தமிழ் நாட்டிற்கு தெரிய வேண்டிய ஒரு விஷயம் - தமிழ் பத்திரிகைகள் எதிலும்
வரவில்லை.
இது டெல்லியிலிருந்து வந்திருக்கும் செய்தி -
ராஜ் டிவி, மதுரை ராயல் கேபிள் விஷன் நிறுவனத்திடமிருந்து (முதலாளி யார்
தெரியும் இல்லையா ?) மார்ச் 2008 முதல் வரவேண்டிய தொகைக்காக
(மொத்தம் ரூபாய் 6,68,80,881)
The Telecom Disputes Settlement
and Appellate Tribunal )
TDSAT-ல் ஒரு வழக்கு போட்டிருக்கிறது.

ராஜ் டிவியின் வேண்டுகோளை ஏற்று,வழக்கு முடிவடையும் வரை ராயல் கேபிள் விஷன் நிறுவனம் தனது அசையும் மற்றும்அசையா சொத்துக்கள் எதையும் விற்கக் கூடாது என்று ட்ரைபியூனல் தடை உத்திரவு பிறப்பித்திருக்கிறது.

அலைவரிசையை மார்ச் 2008 முதலே பெற்று வந்தாலும், அண்ணன் நிறுவனம்
ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து போடாமல் தவிர்த்து வந்ததாகவும்,
மீண்டும் மீண்டும் நினைவுறுத்தியும் பணமும் NO !!!

New Indian

போட்டி நாடுகள் வரிசையில் 52 ஆம் இடம் இலங்கைக்கு!

உலகின் போட்டித் தன்மைவாய்ந்த நாடுகள் வரிசையில் 52 ஆம் இடம் இலங்கைக்கு!

உலக பொருளாதார மன்றம் சர்வதேச ரீதியில் மேற்கொண்ட உலகின் போட்டித் தன்மைவாய்ந்த 142 நாடுகள் தொடர்பான ஆய்வில் இலங்கை 52 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

கடந்த வருடம் 62 ஆவது இடத்திலும், அதற்கு முன்னர் 79 ஆவது இடத்திலும் இருந்த இலங்கை இம்முறை 52 ஆவது இடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையானது கடந்த வருடத்தின் அதன் தெற்காசிய பிராந்திய அயல் நாடுகளை விட சிறப்பான முறையில் முன்னேறி வருவதாகவும், கிழக்காசிய நாடுகளுடனான வித்தியாசத்தை பெருமளவில் குறைத்திருப்பதாகவும் இலங்கை வர்த்தக சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் உட்கட்டுமான அபிவிருத்தியில் தனியார்துறை கணிசமான பங்களிப்பை வழங்கி வருகின்றமை அவதானிக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

எனினும் உட்கட்டுமான அபிவிருத்தி வளர்ச்சிப் போக்கை காண்பித்து வரும் நிலைமையில் உயர்கல்வி மற்றும் தொழிலாளர் உரிமைகள் பயிற்சி நடவடிக்கைகள் போன்ற விடயங்கள் எதிர்மறையான போக்கினை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

நுன் பொருளாதார கட்டமைப்பு மாற்றங்கள் உரிய முறையில் மேற்கொள்ளப்படுமானால் இலங்கையின் நிலை மேலும் உயர்வடையும் என்றும் வர்த்தக சம்மேளனம் எதிர்வுகூறியுள்ளது.

கவிஞர் வைரமுத்து ,ஆதாயம் அடைந்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில்

கவிஞர் வைரமுத்து படத்தைச் சொல்கிறாயா? அவர் அரசியலில் இல்லை என்றாலும், கடந்த ஆட்சியில் அதிக ஆதாயம் அடைந்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இ ருக்கிறாராம்...’’ ‘‘எப்படி?’’ ‘‘அவருக்கும் முன்னாள் முதல்வருக்கும் இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி, அரசு சார்பில் வரும் பிரிண்டிங் ஆர்டர்கள், விளம்பரங்கள் என பலவற்றை தனது நிறுவனம் மூலம் செய்திருக்கிறார். அந்த நிறுவனத்துக்காக எப்படியெல்லாம் சட்டம் வளைந்து கொடுத்துள்ளது என்ற விவரமும் சேகரிக்கப்பட்டுள்ளதாம். இவர் மீதும் வழக்குப் பாய வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள். அதேபோல தி.மு.க. மகளிரணி பெண் பிரமுகர் பால்மலர் கொலை வழக்கு ஸ்டாலினுக்கு சிக்கலை உருவாக்கலாம் என்கிறார்கள்.’’ ‘‘மாஜி மந்திரிகள் சரி... அவர்களின் வாரிசுகளும் சிக்கிக் கொண்டு வருகிறார்களே...’’ ‘‘என்ன செய்வது... ஆட்சியில் இருக்கும் போது போட்ட ஆட்டம்! இப்போது அனுபவிக்கிறார்கள். இது தவிர இன்னும் 60-க்கும் மேற்பட்டவர்களின் பட்டியல் முதல்வர் கையில் இருக்கிறதாம். உரிய ஆவணங்களுடன் இருந்தாலும், அதனை அலசி ஆராய்ந்து பார்த்த பின்னரே வழக்குப் போட முதல்வர் அனுமதி கொடுக்கிறாராம்...’’ thanks kumudam+arasu NY

தமிழ் மக்களின் பிரதிநிதியாகவே நான் ஜெனீவாவுக்கு செல்கிறேன்


ஐ. நாவினுடைய கூட்டத் தொடரில் அபிவிருத்திக்கும் மீள்குடியமர்வுக்குமான செயலமர்வில் தமிழ் மக்களின் பிரதிநிதியாகக் கலந்துகொள்ளவே நான் ஜெனீவாவிற்குச் செல்லவுள்ளேன். யுத்தக் குற்றச் சாட்டுகளுக்கு எதிராக சாட்சி சொல்லுமாறு அரசாங்கம் என்னை ஒருபோதும் வற்புறுத்தவுமில்லை வேண்டுகோள் விடுக்கவுமில்லை என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார். உலக உணவுத் திட்டம் தொடர்பாக மணிலாவில் 10 நாட்கள் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு நேற்று முன்தினம் நாடு திரும்பிய யாழ். அரச அதிபர் நேற்று இரவு ஜெனீவா புறப்படுவதற்கு முன்பாக தினகரனுக்கு வழங்கிய விசேட பேட்டியின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
‘மீள்குடியேற்றமும், அபிவிருத்தியும்’ என்ற தலைப்பில் ஜெனீவாவின் செயலமர்வில் கலந்துகொள்வதற்காக அரச அதிபருடன் எஸ். தவாரட்ணம் புறப்பட்டுச் சென்றார். அரச அதிபர் இமெல்டா சுகுமார் மேலும் தெரிவித்ததாவது :-
கடந்த 30 வருட கால யுத்தத்தில் எமது பகுதித் தமிழ் மக்கள் பல்வேறு அழிவுகளைச் சந்தித்துள்ளனர். எனது 30 வருட கால அரச சேவையில் 29 வருடங்களை வன்னி மக்களுடனேயே சேவை செய்து கழித்துள்ளேன். இந்த மக்கள் பட்ட துன்ப துயரங்களை நான் நன்கறிவேன்.
நான் சர்வதேச நாடுகளில் இருந்து கொண்டு இந்த மக்கள் பட்ட துன்ப துயரங்களை ஒரு அவதானிப்பாளராகப் பார்த்துக் கொண்டு இருக்கவில்லை. இந்த மக்கள் பட்ட துன்ப துயரங்கள் இனியும் தொடரக்கூடாது. இப் பிரதேசம் அபிவிருத்தியடைந்து மக்களுடைய துயரங்கள் தீர்க்கப்பட வேண்டும் என்பதற்காகவே நான் ஜெனீவா செல்கிறேன்.
எதிர்வரும் 10 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரையும் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் தொடரில் அபிவிருத்திக்கும் மீள்குடியமர்வுக்குமான செயலமர்வில் கலந்துகொண்டு இப்பகுதி மக்களின் தேவைகளை எடுத்துக் கூறி அபிவிருத்திகள் தொடர்பாக விளக்கவுள்ளேன்.
மேலும் கண்ணிவெடி அகற்றல், மீள்குடியமர்வு போன்ற இப்பகுதி மக்களின் தற்போதைய பிரச்சினைகள் தொடர்பாகவும் விளக்கவுள்ளேன். இதற்கான அறிக்கைகளையும் தயாரித்துள்ளேன்.
சிலர் நான் இந்தக் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதைத் தவறான முறையில் விமர்சிக்கின்றனர். ஆனால் கடந்த 30 வருடங்களாக எமது மக்கள் பட்ட துயரங்கள் இனியும் தொடரக் கூடாது என்பதற்காக ஒரு தமிழ் மக்களின் பிரதிநிதியாகவே நான் இக்கூட்டத்தில் கலந்துகொள்கிறேன்.
எமது பகுதி தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் இக்கூட்டத் தொடரில் பங்கேற்பவர்களுடன் கருத்துப் பகிர்வுகளில் ஈடுபடவே நான் செல்கிறேன் என்றார். எரிகின்ற வீட்டில் நெருப்பு வாங்குபவர் நான் இல்லை, தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறேன். சில ஊடகங்கள் நான் மனச்சாட்சியற்ற ஒரு பெண் எனச் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த மக்களுக்கு அரசாங்க அதிபராக நான் செய்ய வேண்டிய கடமையின் நிமித்தமே நான் ஜெனீவா செல்கிறேன் என்றார்.
மேலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ். மாவட்டத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளில் மக்களை மீள்குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகளை முன்னின்று செயற்படுத்திய ஒரு அரசாங்க அதிபராக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்து வருவதாகவும் சுட்டிக்காட்டினார். தற்பொழுது கிடைத்துள்ள இந்தச் சந்தர்ப்பத்தினையும் தமிழ் மக்களுக்குச் சேவை செய்வதற்குக் கிடைத்த ஒரு வாய்ப்பாகக் கருதி மக்களின் மீள்குடியேற்றம் அபிவிருத்தி தொடர்பாக உலகிற்கு எடுத்துக் கூறி மக்கள் குறைகளைப் போக்குவேன் என்றும் உறுதியளித்தார்

அவசரகாலச் சட்டத்தின் முடிவு

 - கொழும்பிலிருந்து ஆர்.கே.ராதாகிருஷ்ணன்
ஸ்ரீலங்காவுக்கு அவசரகாலச் சட்டங்கள் ஒன்றும் புதியனவல்ல. அது சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து அடிக்கடி வன்முறைகளையே கண்டு வந்துள்ளது. எப்படியாயினும் ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி) வன்முறைத் தொல்லைதான் இத்தகைய அடக்குமுறை நடவடிக்கையை முதன்முதலில் ஏற்படுத்த வழி கோலியது. 1970களின் ஆரம்பத்திலிருந்து ஏற்பட்ட ஒவ்வொரு புதிய பிரச்சினைக்கும் அரசாங்கம் எற்கனவே உள்ள சட்டங்களை மீறிச்செல்ல முயன்றதுடன், மேலும் பல அரக்கத்தனமான சட்டங்களையும் இயற்றியது. அநேகமாக இவை ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகவும் வரையறைத் தெளிவற்றதாகவும் இருப்பதால் அடிப்படையான தனிநபர் உரிமைகளைக்கூட அனுமதிக்கவில்லை, என்று மனித உரிமை அமைப்புகளால் எள்ளி நகையாடப்பட்டன. சில வழக்குகளில் இந்தச் சட்டங்கள் பாதகாப்பு படையினருக்கு தண்டனை வழங்காமல் தண்டனையிலிருந்து விதிவிலக்களிக்கும் போர்வையாக உள்ளன. நான்காம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்த அந்தச் சந்தர்ப்பத்தில் கிட்டத்தட்ட 20 புதிய அவசரகால சட்ட விதிகளே இருந்தன. எல்.ரீ.ரீ.ஈ யினரைப்போல இரக்கமற்ற கொடிய பயங்கரவாத இயக்கத்தைக் கையாள  சாதாரண சட்டங்கள் சக்தியற்றவை என அரசாங்கம் வாதிட்டது.சட்ட அமைப்புகளிலுள்ள ஓட்டைகளை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி நிபுணத்துவம் வாய்ந்ததாக மாறிவிட்ட எல்.ரீ.ரீ.ஈயிற்கு எதிராகப் போராடும் சீருடைதரித்தோருக்கு சட்டபூர்வ தண்டனையிலிருந்து  விலக்களிக்கப்படத் தக்கதாக சில விதிகள் அவசியம் என்று அது சொன்னது. ஆனால் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் அவசரகால சட்ட விதிகள் தவறான மற்றும் திறந்த வழியில் அமைக்கப்பட்டவை எனக்கூறினார்கள். ஏனெனில் அவற்றில் ஏராளமான விதிகள் அங்குள்ளன. ஸ்ரீலங்கா மக்களுக்கு இந்தச் சட்டங்களையும் ஒருநாள் அவை தங்களுக்கு எதிர்மாறாகத் திரும்பக்கூடும் என்பதையும் விளங்கிக் கொள்வது கடினமாகத்தான் இருக்கும் என அவர்கள் வாதிட்டார்கள். (மேலும்

சிறிய அறையில், கிழங்கு அடுக்கியது போல சுமார் இருபது போர் வரையில்

ltte toture campபுலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் (13)
13. எனக்கு முன்னர் கைதுசெய்யப்பட்ட “தில்லை”யை அங்கு கண்டேன்!
நான் புலிகளின் அந்தச் சிறைச்சாலைக்கு முன்னால் இருந்த விறாந்தையில் அமர்ந்திருந்த நேரத்தில், காலையிலிருந்தே சிறையின் உள்ளேயிருந்து பல கைதிகள் வெளியே கூட்டிச் செல்லப்படுவதும், ஒரு குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் திருப்பி அழைத்து வரப்படுவதுமாக இருந்தனர். அவர்கள் எல்லோருமே ஒரே மாதிரியான சிவப்புப் பின்னணியில் புள்ளிகளிட்ட சாரத்தை அணிந்திருந்தனர். சிலரின் கால்களில் எனது கால்களிலிட்டது போன்ற இரும்புச் சங்கிலிகள் போடப்பட்டிருந்தன. அவ்வாறு போடப்பட்டிருந்தவர்கள் மிகவும் சிரமப்பட்டு தத்தித் தத்தி நடந்து சென்றனர். வேறு சிலர் கால்களில் சங்கிலிகள் எதுவுமில்லாமல் சாதாரணமாக நடந்து சென்றனர். இந்தக் கைதிகளை அழைத்துச் சென்ற புலி உறுப்பினர்கள் அனைவரும் வயதில் குறைந்த இளைஞர்களாக இருந்தனர். சிலர் நீண்ட காற்சட்டையும் இன்னும் சிலர் சாரமும் அணிந்திருந்தனர். அந்த உறுப்பினர்களுக்குக் காவலாக இரண்டு துப்பாக்கி ஏந்திய புலிகள் காவலுக்கு வந்தனர். அவர்கள் கைதிகளின் பெயர்களைச் சொல்லிக் கூப்பிடாது, ஏதோ ஒரு இலக்கத்தைச் சொல்லியே அழைத்தனர். (மேலும்

வெள்ளி, 9 செப்டம்பர், 2011

Sri Lanka children's homes 'should be shut down'


NCPA head Anoma Dissanayake wants chldren fostered
All children's homes in Sri Lanka should be closed down because of "rampant" abuse, the head of the country's child protection body says.
The National Child Protection Authority (NCPA) says it is already working to replace children's homes with a foster parenting system.
Nearly 20,000 children - orphans or children abused by parents or carers - are housed in 470 institutions.
But many who run such homes say the new approach may not guarantee safety.
Most of the homes in Sri Lanka are under private ownership - 22 are run by the government.
"Shocking incidents are happening in children's homes all over the country," Anoma Dissanayake, head of the NCPA, told BBC Sinhala when commenting on a recent case where the guardian of a children's home was charged with sexually assaulting underage girls in his care.
"Rarely, there are some very good children's homes but this is the situation in most of the homes.
"Our aim is to fully establish [a] foster care system replacing children's homes within the next few months," she said.
She added that 90 children in Mannar and 50 children in Kilinochchi, who were to be placed in children's homes, have already been handed over to foster parents.
But Nita Ariyaratne, the honorary secretary of Sarvodaya Suwasetha, an organisation which runs eight children's homes in Sri Lanka, says she was not aware of "rampant" child abuse in children's homes, although there had been some cases of abuse.
She said that it was crucially important to ensure that children are safe with their new foster carers and to ensure that proper vetting is in place.
Sarvodaya Suwasetha runs one home specifically for girls abused by parents or close relatives.
"For example, there is a 12-year-old pregnant girl among 20 pregnant girls in our girls' home.
The NCPA says in recent weeks it has raided a number of children's homes suspected of child abuse. One raid resulted in the guardian of a home being remanded in custody on charges of sexually abusing four girls.
A number of Buddhist monks were also recently arrested on suspicion of abusing children in their care. Child abuse is a taboo subject and not openly discussed in Sri Lanka's conservative society

சூர்யாவைப் போல் கார்த்தியும் தெலுங்கில் மாஸ் ஹீரோ

அரசியல் பேசும் கார்த்தி...
சிறுத்தை படத்திற்கு பிறகு கார்த்தி நடித்து வரும் படம் சகுனி. அண்ணன் சூர்யாவைப் போல் கார்த்தியும் தெலுங்கு சினிமா உலகில் ஒரு மாஸ் ஹீரோவாகிவிட்டார் கார்த்தி.

ஆயிரத்தில் ஒருவன் படம் தெலுங்கில் ஹிட்டானதால் ’யுகானிக்கி ஒக்கடு’ கார்த்தி என்று தான் டைட்டிலே போடுகிறார்கள். பையா, நான் மகான் அல்ல... என கார்த்தியின் படங்கள் தெலுங்கில் வரிசையாக ஹிட்.

சகுனி படத்தை சங்கர் தயாள் இயக்க, இப்படத்தில் கார்த்தி-ப்ரணீதா ஜோடி சேர்ந்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு கார்த்தி நடிக்கும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் டைட்டில் சகுனி என்றிருந்தாலும் கிருஷ்ணபகவான் செய்த விஷயங்களை பிரதிபலித்துதான் படத்தில் நடித்திருக்கிறேன். அதே சமயம் படம் அரசியலை சுற்றி அமைந்திருக்கிறது. அதனால் இது கமர்ஷியல் ஆக்‌ஷன் படமாக இருக்கும். இந்த படமும் தெலுங்கில் மொழிமாற்றம் செய்ய இருக்கிறது என்று சொல்கிறார் கார்த்தி.

பாபா ராம்தேவ் : கைப்புள்ளயின் கருப்புப் பண மோசடிகள்!











பாபா ராம்தேவ் : கைப்புள்ளயின் கருப்புப் பண மோசடிகள்!
லக வரலாற்றில் இடம் பெற்றுள்ள அதிகார வர்க்க காமெடி பீஸ்கள் அனைவரும் இரண்டு முறை ‘பல்பு’ வாங்கியவர்களாகவே இருக்கிறார்கள். முதல் முறை இந்த ‘கைப்புள்ளை’களின் வருகை சோகக் கதையாகவும், மறுமுறை கேலிக் கூத்தாகவும் அமைகிறது என்பது விதி.
இதற்கு சமீபத்திய உதாரணம், சுவாமி ராம்தேவ் (Swami Ramdev), அல்லது பாபா ராம்தேவ் என்றழைக்கப்படும் ‘வண்டு முருகனி’ன் கதை.
‘இவரு இதுக்கு சரிப்பட மாட்டாரு…’ என எவ்வளவுதான் கார்ப்பரேட் ஊடகங்கள் அடித்து விரட்டினாலும், ‘நானும் ரவுடிதான்’ கணக்காக எப்படியாவது ஊழல் ஒழிப்பு – கறுப்புப் பண மீட்பு போராளியாக ஜீப்பில் ஏறி விட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார் பாபா ராம்தேவ். அதனால்தான் வரும் செப்டம்பர் 20-ம் தேதி இரண்டாம் கட்ட யாத்திரையைத் தொடங்கப் போவதாக செய்தியாளர் கூட்டத்தில் திருவாய் மலர்ந்திருக்கிறார்.

.......பாபா ராம்தேவ் சம்பந்தப்பட்ட கம்பெனிகளின் இயக்குனர்கள், அவற்றின் வர்த்தப் பங்குகளின் நிலை, அவற்றை வைத்துள்ளவர்களின் அமைப்பு முதலியவற்றைப் பற்றியும் விசாரித்து வருகின்றனர். கையோடு இந்தக் கைப்புள்ளையின் சீடரான சுவாமி பாலகிருஷ்ணன் மீது பாஸ்போர்ட் விஷயமாக ஒரு வழக்குப் பதிவு செய்துள்ளனர். போலி படிப்புச் சான்றிதழ் கொடுத்து இந்தச் சீடர் பாஸ்போர்ட் வாங்கியிருக்கிறாராம்.

சுருக்கமாக சொல்வதென்றால் எந்தக் கறுப்புப் பணத்தை மீட்கப் போவதாக கடப்பாறையின் நுனியில் அமர்ந்தபடி பிரும்ம முகூர்த்தத்தில் தவம் செய்வதாக இந்தக் கைப்புள்ள பிலீம் காட்டுகிறதோ, அந்தக் கறுப்புப் பண பதுக்கலில் – கையாடலில் – பரிமாற்றத்தில் – மோசடியில் – அவரே ஈடுபடுவதாக அமலாக்கப் பிரிவு ‘கண்டுபிடித்து’ அது தொடர்பான விசாரணைக்கும் வெற்றிலை தாம்பூலத்துடன் அழைத்திருந்தது. இதைக் குறித்து கேள்வி கேட்கத்தான் செய்தியாளர்கள் சென்றனர். அப்போதுதான் ‘இரண்டாம் கட்ட ஊழல் ஒழிப்பு – கறுப்புப் பண மீட்பு யாத்திரை’யை தொடங்கப் போவதாக கிச்சுகிச்சு மூட்டினார்.
Read More

தீவிரவாதம் தலை தூக்கினால் ஜெயலலிதா தான் பொறுப்பு

தமிழகத்தில் தீவிரவாதம் தலை தூக்கினால் முதல்வர் ஜெயலலிதா தான் பொறுப்பு:ராஜீவ் காந்தி கொலையில் தண்டனை பெற்றவர்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும்


சென்னை: தமிழ்நாட்டில் தீவிரவாதம் தலை தூக்கினால் அதற்கு முதல்வர் ஜெயலலிதாதான் பொறுப்பேற்க வேண்டும்’’ என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார். ராஜீவ் காந்தி கொலையுண்டபோது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கேட்டும், 3 பேருடைய தூக்கு தண்டனையை நிறைவேற்றக் கோரியும் அண்ணாசாலையில் உள்ள தலைமை மின்வாரியம் அலுவலகம் பின்புறம் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

எம்.எஸ்.திரவியம், ஜோதி ராமலிங்கம் ஆகியோர் தலைமை வகித்தனர். போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதாவது:

ராஜீவ் காந்தி கொலையில் தண்டனை பெற்றவர்களுக்கு தூக்கு தண்டனையை விட அதிக பட்சமான தண்டனையை கொடுக்க வேண்டும். அந்த தண்டனையை உடனே நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் ஏற்கனவே கோவை குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல சம்பவங்கள் நடந்துள்ளன. இந்நிலையில் தமிழக சட்டபேரவையில் தூக்கு தண்டனை பெற்றவர்களுக்கு ஆதரவாக முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். தைரியத்துக்கு பெயர் போன ஜெயலலிதா யாருடைய அச்சுறுத்தல் காரணமாக இப்படி தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார்?

தமிழக மக்களை திசை திருப்ப இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியா முழுவதும் தீவிரவாதம் தலைதூக்கியுள்ளது. இந்த தீர்மானத்தை ஜெயலலிதா உடனே வாபஸ் பெற வேண்டும். அப்படி வாபஸ் பெறாவிட்டால் தமிழகத்தில் ஏற்படும் தீவிரவாதத்திற்கு ஜெயலலிதாதான் பொறுப்பேற்க வேண்டும். ராஜீவ் காந்தியின் நண்பர் எம்ஜிஆர் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்றால் அந்த தீர்மானத்தை அவர் வாபஸ் பெற வேண்டும்.
இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசினார்.

உண்ணாவிரதத்தில், முன்னாள் தலைவர் குமரி அனந்தன், காங்கிரஸ் தொழிற்சங்க தலைவர் கோவை நஞ்சப்பன், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் சைதை ரவி, வாழப்பாடி சுகந்தன், சி.டி. மெய்யப்பன், கராத்தே தியாகராஜன், மாவட்ட தலைவர் ராயபுரம் மனோ, ஜெ.சதீஷ்குமார், ராஜ மகாலிங்கம், வில்லிவாக்கம் சுரேஷ், முன்னாள் எம்எல்ஏக்கள் வசந்தகுமார், முருகானந்தம், கவுன்சிலர் ஜெயகலா பிரபாகர் மற்றும் பாதிக்கப்பட்ட 5 குடும்பத்தினர் உள்பட 500-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்

ராஜீவுடன் கொலையான 15 பேரின் குடும்பத்தினர் உண்ணாவிரதம்!

சென்னை: ராஜீவ் கொலையாளிகள் 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று குரல் எழுப்பப்பட்டு வரும் நிலையில், ராஜீவுடன் கொலையான மேலும் 15 பேரின் குடும்பத்தினர் கலந்துகொள்ளும் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் சென்னையில் நடந்து வருகிறது. ராஜீவ் கொலையாளிகள் மூவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப் பட வேண்டும் என்று கோரி இவர்கள் உண்ணாவிரதம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

குமரி அனந்தன் உள்ளிட காங்கிரஸ் பிரமுகர்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர். ராஜீவுடன் கொலையான 15 பேரில் 6 பேரின் குடும்பத்தினர் மட்டுமே அடையாள உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

யாழ் மர்மமாய் மறைந்து போயுள்ள மர்ம மனிதர்கள்!

யாழ்ப்பாணத்தை அண்மைக் காலமாக கலக்கி வந்த கிறீஸ் பூதம் எனும் மர்ம மனிதன் தொடர்பாக முறைப்பாடுகள் எதுவும் இன்று வெள்ளிக்கிழமை கிடைக்கப் பெறவில்லை என யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரு வாரங்களாக யாழ்.குடாநாட்டில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையை அடுத்து அதற்குத் தீர்வு காணும் முகமாக யாழில் தொடர்ச்சியாக கூட்டப்படும் கூட்டங்களினால் கிறீஸ் மனிதனின் நடவடிக்கைகள் தற்சமயம் குறைவடைந்துள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்தனர்.

இது இவ்வாறிருக்க கூட்டங்கள் முடிவடைந்த நிலையில் இதுவரையில் ஊடகங்களுக்கோ, பொலிஸாருக்கோ அல்லது படையினருக்கோ கிறீஸ் பூதம் தொடர்பான எவ்விதமான முறைப்பாடுகளும் கிடைக்கப் பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை நடிகர் ஜெயபாலனுக்கு இந்தியாவில் தேசிய விருது


இலங்கை நடிகர் ஜெயபாலனுக்கு ஆடுகளம் திரைப்படத்துக்காக சிறப்பு தேசிய விருது கிடைக்கவுள்ளது. இந்த விருதினை இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டேல் ஜெயபாலனுக்கு வழங்கி கௌரவிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3,303 ஊனமுற்ற படையினருக்கு வீடு

 யுத்தத்தில் 23,287 படையினர் படுகாயம்
கடந்த 30 வருடகாலம் இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராக இடம்பெற்ற யுத்தத்தில் 23,287 படை வீரர்கள் காயமடைந்ததாகவும் அவர்களில் ஊனமுற்ற 3,303 படையினருக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும்

போதைபொருள் கடத்தல் ஈழத்தமிழர் இருவருக்கு இந்தியாவில் சிறை


இந்தியாவில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இலங்கையர் ஒருவருக்கு 6 வருட விசாரணைகளின் பின் நேற்று முன்தினம் 8 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இந்தியர் இருவர் உட்பட இலங்கையர் ஒருவருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்திய மத்திய பிரதேசம் உஜ்ஜைனியில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் சென்னையைச் சேர்ந்த ஜி. ஜெயந்தி (வயது 46) மற்றும் அவரது மகன் ஜெகன் (26) இருவரும் 13.12.2005 அன்று வெவ்வேறு பெயர்களில் பயணம் செய்தனர். அந்த ரயிலில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக போதைப் பொருள் தடுப்பு பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதைத் தொடர்ந்து சென்னை மத்திய ரயில் நிலையத்திற்கு ரயில் வந்து நின்றதும் சந்தேகப்படும் நபர்களிடம் சோதனை நடத்தினர். அப்போது ஜெயந்தி, ஜெகன் ஆகியோரின் உடைமைகளையும் பொலிஸார் சோதனை செய்தனர்.
அதன்போது பொலித்தீன் பைகளில் வெள்ளை நிறப் பௌடர் அடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. சோதனை செய்ததில் அவை ஹெரோயின் என்ற போதைப் பொருள் என்பது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜெயந்தி ஜெகன் ஆகியோரை பொலிஸார் கைது செய்தனர்.
அவர்கள் கொடுத்த வாக்கு மூலத்தில் போதைப் பொருளை இலங்கையைச் சேர்ந்த சிவபாலன் மற்றும் நந்தேஷ்னா ஆகியோரிடம் கொடுக்க இருந்ததாகவும் அதை அவர்கள் கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்த இருந்ததாகவும் குறிப்பிட்டனர். அதைத் தொடர்ந்து சிவபாலனையும் நந்தேஷ்னாவையும் பொலிஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கு சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. நீதிபதி முஹம்மது ஜபருல்லாகான் இந்த வழக்குத் தொடர்பில் மேற்கொண்ட விசாரணையை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பளித்தார்.
போதைப் பொருள் கடத்தல் குற்றத்தில் ஈடுபட்டதற்காக ஜெயந்தி ஜெகன், சிவபாலன் ஆகியோருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தலா ரூ. 10 இலட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. நந்தேஷ்னா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்பதை அடுத்து அவரை விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

ஜெயலலிதா: மதுவிலக்கு பேசுபவர்கள்தான் கள்ளச்சாராயம் காய்ச்சுகிறார்கள்'

மதுவிலக்கு பற்றி வாய்கிழிய பேசுபவர்கள்தான் கள்ளச்சாராயம்
காய்ச்சுகிறார்கள்' : ஜெயலலிதா பேச்சு சட்டசபையில் நேற்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு அத்துறையின் அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் பதில் அளித்துப் பேசினார்.

அப்போது அவர்,தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது 99 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. மலைப்பகுதிகள் மற்றும் அடர்ந்த காடுகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படலாம். அதையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அண்டை மாநிலங்களில் இருந்து சாராயம் கடத்திக் கொண்டுவருவதையும் கட்டுப்படுத்தி விட்டோம்.

கள்ளச்சாராயம் காய்ச்சுவதையும் அதன் விற்பனையையும் கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதால் டாஸ்மாக் கடைகளின் விற்பனை 9.81 சதவீதமாக உயர்ந்துள்ளது. டாஸ்மாக் விற்பனையை அரசு ஊக்கப்படுத்தவில்லை.

தனியாருக்கு போய்க்கொண்டிருந்த பணம் அரசு கஜானாவுக்கு திருப்பிவிடப்பட்டு இருக்கிறது. கள்ளச்சாராய விற்பனையை இரும்புக்கரம் கொண்டு கட்டுப்படுத்தி வருகிறோம்.
அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்ற 100 நாட்களில் 3,605 பெண்கள் உள்பட 28,635 பேர் மீது கள்ளச்சாராய வழக்குகள் போடப்பட்டு இருக்கின்றன. 24,630 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கோர்ட்டு மூலம் ரூ.76 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டு இருக்கிறது.
தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பல உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கும் அந்த ஆசை இல்லாமல் இல்லை. மதுவின் கொடுமைகளை அவர் நன்கு அறிவார்.

மது விற்பனை மூலம் ரூ.15 ஆயிரம் கோடி அரசுக்கு வருமானமாக கிடைக்கிறது. அண்டை மாநிலங்களில் எங்கேயும் மதுவிலக்கு இல்லை. அப்படி இருக்கும்போது தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கு கொண்டுவந்தால் இந்த வருமானம் சமூக விரோதிகளின் கைக்கு சென்றுவிடும். எனவே, அந்த வருமானத்தை அரசு கஜானாவுக்கு திருப்பி விட்டிருக்கிறோம்.
மதுவிலக்கை மாநில அரசு அவ்வளவு எளிதில் கொண்டுவந்துவிட முடியாது. மத்திய அரசு நினைத்தால் மது விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் இழப்பை மாநிலங்களுக்கு கொடுத்துவிட்டு ஒட்டுமொத்தமாக அனைத்து மாநிலங்களிலும் மதுவிலக்கை அமல்படுத்தலாம்’’ என்று

அப்போது முதல்-அமைச்சர் ஜெயலலிதா குறுக்கிட்டுப் பேசும்போது, ``மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என்றும், மதுவிற்பனையை தடை செய்ய வேண்டும் என்றும் வாய்கிழிய பேசுபவர்கள்தான் கள்ளச்சாராயம் காய்ச்சுகிறார்கள்'' என்றார்.
தொடர்ந்து அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசும்போது,
’’குடிப்பழகத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும். மதுவின் தீமைகளை மாணவர்களுக்கு விளக்கிக் கூறும் வகையில் அவர்களுக்கு கட்டுரைப் போட்டி உள்பட பல்வேறு போட்டிகளை நடத்துகிறோம். இதன்மூலமாக மாணவர்கள் தங்கள் பெற்றோருக்கு மதுவின் தீமைகளை விளக்கிக் கூறுவார்கள்.
தற்போது மாவட்ட அரசு மருத்துவமனைகளில் நடத்தப்படும் போதை மீட்பு முகாம்கள் விரிவுபடுத்தப்படும். கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் ஆகியவற்றில் தண்டனை பெற்று திருந்தி வாழ விரும்புபவர்கள் தொழில்தொடங்க கடன் வழங்கப்படுகிறது. அவர்களை நல்வழிப்படுத்த பெருமுயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

மதுவிற்பனை தனியார் வசம் இருந்தபோது அரசுக்கு ஆயத்தீர்வை மூலமாக ரூ.1,657 கோடியும், விற்பனை வரி மூலமாக ரூ.1,932 கோடியும் கிடைத்தன. ஆனால் மதுவிற்பனையை டாஸ்மாக் மூலமாக ஏற்று நடத்திய பிறகு அரசுக்கு வருவாய் பெருமளவு அதிகரித்தது. 2010-2011 நிதி ஆண்டில் மதுபான விற்பனை மூலமாக ரூ.8,115 கோடி ஆயத்தீர்வையும், ரூ.6,849 விற்பனை வரியும் ஆக மொத்தம் ரூ.14,965 கோடி அரசுக்கு வருவாய் கிடைத்தது.

மதுபான விற்பனையை அரசு ஏற்று நடத்திய பிறகு அரசுக்கு ரூ.11,325 கோடி வருவாய் கூடுதலாக கிடைத்து இருக்கிறது. இவ்வாறு தனியாருக்கு போக வேண்டிய பணத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தனது சாதூர்யத்தால், மதிநுட்பத்தால் அரசு கஜானாவுக்கு திருப்பிவிட்டுள்ளார்’’ என்று

அம்மையார் வாயைக்கொடுத்து எதையோ புண்ணாக்கிக்க போறார்...மக்கள் கவனிக்கிறார்கள். அதிகாரத்திலும் பதவியிலும் இருந்துகொண்டு கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் சமூக விரோதிகள் என்று எதை எதையோ உளறிக்கொண்டு நொண்டிசாக்கு சொல்லுகிறார். சட்டத்தையும் அதிகாரத்தையும் வைத்திருப்பவர் அதை பயன்படுத்த தெரியாதா?? திமுக கட்சி காரர்களை எப்படியாகினும் சிக்கவைத்து சிறையில் தள்ளுபவருக்கு சமூக விரோதிகளை தடுக்க தெரியாதா??!!

ராமதோச்ஸ் செய்யும் ஒரே நல்ல விஷயம் மதுவில்ல்க்கு கொள்கை அடையும் கிண்டல் செய்தா எப்படி?

கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை தண்டிக்க கூடாது என்று யாராவது சொன்னார்களா ஜெயலலிதாவிடம். நொண்டிசாக்கு சொல்லிக்கொண்டு அரசு நடத்த வேண்டும். இது கையாலாகததனம் வருமானத்தை விட்டுகொடுக்க திராணி இல்லை. குடித்து குடும்பம் அழிந்தாலும் பரவாயில்லை இவருக்கு. இதைவிட்டு பதவியிலிருந்து இறங்கிவிடலாம்.

அப்படிஎன்றால் பா.ம.க, மரியாதைக்குரிய வைத்தியர் ராமதாசு கள்ளசாராயம் காயச்சுகின்றார் என்று சொல்கின்றாரா முதல்வர் - "யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்கு பட்டு " ஜெயலலிதா நினைவில் வைத்து கொள்ளவும்.

ஏழு வருடங்களுக்கு முன்பு இருந்த வருமானத்தை கடந்த ஆண்டு வருமானத்தோடு ஒப்பிட்டு பேசுகிறார் அமைச்சர். மதுவின் விலைகள் உயர்ந்துள்ளன. அதனால் வரி வருமானமும் உயரத்தான் செய்யும். தமிழக மக்கள் தொகை ஒரு கோடிக்கு மேலே பெரிகியுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு மது அருந்துபவர்களின் எண்ணிக்கையும், மதுவின் மீது மக்களின் மோகமும் கூடி கொண்டேதான் இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு, முந்திய ஜெயலலிதா அரசு தொடங்கிய கடைகளின் எண்ணிக்கையை ஒன்று கூட அதிகரிக்கவே இல்லை. ஆந்த்ராவிலும் (தனியார் கடைகள் மூலம்) கேரளாவிலும் (அரசு கடைகள் மூலம்) அரசுக்கு வருமானம் முறையே ரூ18000, மற்றும் ரூ15000 கோடிகள். எனவே ஜெ.வின் யுக்தி என்று பெருமைபட தேவை இல்லை. தனியார் கடைகள் சுத்தமாக இருந்தன. டாஸ்மாக் கடைகள் அசுத்தம். பூரண மது விலக்கை கோருபவர்கள் சமூக விரோதிகள் என்று பேசிய முதல்வரின் வார்த்தைகள் விஷமத்தனமானவை. குஜராத் இந்தியாவுக்கு வெளியேவா இருக்கிறது? பமக தலைவர் இராமதாஸ் சமூக விரோதியா?

மண்ணில் புதையத் தொடங்கிய கட்டடம் ஆய்வு செய்த அதிகாரிகள் "பகீர்'

கோவை:"மண் பரிசோதனையில் கோட்டை விட்டது தான், கட்டடம் புதைவதற்குக் காரணமாகி விட்டது' என, கோவை உக்கடம் அடுக்குமாடி கட்டடங்களை ஆய்வு செய்த பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஜவகர்லால் நேரு நகரப் புனரமைப்புத் திட்டத்தின் கீழ், 118 கோடி ரூபாயில் கோவை உக்கடத்தில் 2,904 வீடுகளும், அம்மன் குளத்தில் 936 வீடுகளும், அடுக்குமாடிகளாகக் கட்டப்படுகின்றன. நகரங்களைக் குடிசைகளற்ற பகுதியாக மேம்படுத்துவதே, இத்திட்டத்தின் நோக்கம்.அம்மன் குளத்தில் கட்டிய அடுக்குமாடி கட்டடங்களில் ஒன்று, கடந்தாண்டு மண்ணில் புதைந்தது. அதை இடித்து அகற்றி, பிரச்னையைச் சமாளித்த நிலையில், உக்கடம் கழிவுநீர்ப் பண்ணையில் கட்டியுள்ள, 21 அடுக்குமாடி கட்டடங்களில் ஒன்று, மண்ணில் புதையத் தொடங்கி விட்டது. கடந்த 2ம் தேதி இரவு பெய்த மழை காரணமாக, ஒரே நாளில், அரை அடி ஆழத்துக்கு கட்டடம் புதைந்து விட்டது.

தரைத் தளமும், அதற்கு மேல் ஐந்து தளங்களும் கொண்டதாகக் கட்டப்பட்டுள்ள இந்த கட்டடத்தில், தளத்துக்கு 24 குடும்பத்தினர் வீதம், 144 குடும்பத்தினர் வசிக்க முடியும். அதிக பொருட்செலவில், நவீன வசதிகளுடன், பிரமாண்டமாகக் கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டடம், மண்ணில் புதையத் துவங்கியது, அரசுத் துறையினரை பீதியடைய வைத்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, நேரடி ஆய்வு செய்து அறிக்கை தரும்படி, பொதுப்பணித் துறையினருக்கு அரசு உத்தரவிட்டது. அதன்படி, துணை மேற்பார்வைப் பொறியாளர் ராமலிங்கம், சிறப்பு கட்டடங்கள் பிரிவு செயற்பொறியாளர் பழனிசாமி ஆகியோர், நேற்று அடுக்குமாடி கட்டடங்களை ஆய்வு செய்தனர்.

மண்ணில் புதையத் தொடங்கிய கட்டடம் கட்டப்பட்ட முறை, எடுத்துக் கொண்ட காலம் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்த அவர்கள், வரைபடங்களையும் பார்வையிட்டனர். ஆய்வில் தெரியவந்த விவரங்களை, உயர் அதிகாரிகளிடம் மொபைல்போனில் தெரிவித்தனர்.கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, கழிவு நீர் தேக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தில், தரைத் தளம் மற்றும் ஐந்தடுக்கு மாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அஸ்திவாரம் போடும்போது, தரையில் இருந்து மூன்று மீட்டர் ஆழத்துக்கு மட்டுமே, மண் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. "அதற்குக் கீழ் இருக்கும் மண், எந்த வகையானது, அது கடினத் தன்மை வாய்ந்ததா' என்பது உறுதி செய்யப்படவில்லை.

"எந்த ஆழத்துக்கு அஸ்திவாரம் போடப்படுகிறதோ, அதன் இரண்டு மடங்கு அளவுக்குக் கீழேயும், அதே வகையான மண் இருக்கிறதா, அதில் கடினத் தன்மை இருக்கிறதா' என்பதை உறுதி செய்திருக்க வேண்டும்.மண்ணின் தாங்கும் திறன் அடிப்படையில், கட்டுமானத்தின் எடையானது, சதுர மீட்டருக்கு 20 டன் என்ற அளவில் இருந்தால் பிரச்னை ஏற்பட்டிருக்காது. தற்போதைய நிலையில், கட்டுமானத்தின் எடை, சதுர மீட்டருக்கு 35 முதல் 40 டன் வரை என்ற அளவில் இருப்பதே, பிரச்னைக்குக் காரணம்.

கட்டி முடித்து, ஓராண்டு கழிந்த நிலையில், கட்டடம் மண்ணில் புதையத் தொடங்கியுள்ளது. அம்மன் குளத்திலும், இதே போன்ற பிரச்னை தான் ஏற்பட்டது.
"இங்கு கட்டப்பட்டுள்ள அனைத்து அடுக்குமாடிகளுக்கும், மீண்டும் மண் பரிசோதனை செய்யப்பட வேண்டும். அதன் அடிப்படையில் தான், முடிவெடுக்க இயலும்' என, உயர் அதிகாரிகளிடம் பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.நேரடி ஆய்வு பற்றி, துணை மேற்பார்வைப் பொறியாளர் ராமலிங்கத்திடம் கேட்டபோது,""கட்டடங்களின் உறுதித் தன்மை பற்றி ஆய்வு செய்வதற்கு, அரசு சார்பில் நிபுணர் குழு அமைக்கப்பட உள்ளது. குழுவினர் ஆய்வு முடிவில் தான், உண்மை நிலவரம் என்னவென்று தெரியவரும். எங்களது நேரடி ஆய்வில் தெரியவந்த விவரங்களை, அரசுக்குத் தெரியப்படுத்துவோம்'' என்றார்.இதற்கிடையே, "புதையும் அடுக்குமாடி கட்டடங்களின் உறுதித் தன்மையை ஆராய, ஐ.ஐ.டி., பேராசிரியர் ஒருவர் தலைமையில், நிபுணர் குழு அமைக்கப்படலாம்' என்றும், அதிகாரிகள் தெரிவித்தனர்.

எல்லாமே தண்டம்!இந்த அடுக்குமாடி திட்டத்துக்கு, தனியார் நிறுவனம் ஒன்று, விரிவான திட்ட அறிக்கை தயாரித்து வழங்கியுள்ளது. "இதற்காக, இந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட தொகை மட்டும் இரண்டரை கோடி ரூபாய்' என்றும், "இதன் பின்னணியில் முக்கிய அதிகாரி ஒருவர் இருந்துள்ளார்' என்றும், குற்றம் சாட்டுகின்றனர் கோவை மாநகராட்சி கவுன்சிலர்கள்."விரிவான திட்ட அறிக்கை வழங்கிய கன்சல்டிங் நிறுவனத்தினரைப் பிடித்தால், அடுக்குமாடி ஊழலின் ஆணிவேரைப் பிடித்து விடலாம்' என்றும் சொல்கின்றனர் கவுன்சிலர்கள்.

நடிகை காந்திமதி மரணம்








பிரபல நடிகை காந்திமதி(65) மரணம் அடைந்தார்.
புற்றுநோயால் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த காந்திமதி, ;சென்னை வடபழனியில்(62A, சைதாப்பேட்டை ரோடு, வடபழனி) உள்ள அவரது வீட்டில் இன்று காலை மரணம் அடைந்தார்.

கரகாட்டக்காரன் படத்தில் சண்முக சுந்தரத்துடன் இவர் நடித்திருக்கும் காட்சிகள் இன்றும் பலரால் ரசிக்கப்படுகிறது. தனித்துவமிக்க இவர் குரலை மிமிக்ரி செய்து பேசி புகழ்பெறும் கலைஞர்கள் நிறைய இருக்கிறார்கள்.

300க்கும் மேற்பட்ட படங்களில் மிக மிக எளிமையான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் நெஞ்சில் என்றென்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் காந்திமதியின் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
காந்திமதியின் உடல் அடக்கம் இன்று மாலை நடைபெறும் என்று அவரது மகன் தீனதயாளன் தெரிவித்துள்ளார்.