சனி, 6 மார்ச், 2021

விசிகவின் 6 தொகுதிகளில் வேட்பாளர்கள் உத்தேச பட்டியல்..

* செய்யூர்(தனி) - பனியூர் பாபு
* காட்டுமன்னார்கோவில்(தனி) - சிந்தனை செல்வன்
* வானூர்(தனி) - எழில் கரோலின்
* திட்டக்குடி(தனி) - பாரிவேந்தன்
* உளுந்தூர்பேட்டை - முகமது யூசுப்
* மயிலம் - பாலாஜி

tamil.samayam.com :தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியானது தொகுதி பங்கீடு குறித்து ஒரு மாதத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்த சூழலில் நேற்று முன்தினம் கூட்டணி உடன்பாடு எட்டப்பட்டு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான ஒப்பந்தத்தில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கையொப்பம் இட்டனர்.,,,

பள்ளிக்கு தாமதமாக வந்ததால் ‘வாத்து நடை’ தண்டனையால் மாணவன் உயிரிழப்பு

“பள்ளிக்கு தாமதமாக வந்ததால் ‘வாத்து நடை’ தண்டனையால் மாணவன் உயிரிழப்பு” : ஆசிரியர்களுக்கு ஐகோர்ட் அட்வைஸ்!

kalaignarseithigal.com "   திருவிக நகர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த முரளி என்பவரின் மகன், தாமதமாக வந்ததால் பள்ளி மைதானத்தை சுற்றி வாத்து நடை போடும்படி தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி வாத்து நடை மேற்கொண்டிருந்த மாணவன், திடீரென மயங்கி விழுந்தான். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த மாணவனை, பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.    இதை தொடர்ந்து, மாணவனின் தந்தை முரளி அளித்த புகாரின் அடிப்படையில், திருவிக நகர் போலீசார், பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஜெய் சிங், தலைமை ஆசிரியர் அருள், தாளாளர் ஜோசப் பெர்னாண்டஸ் ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர். 

தமிழகத்தில் அதிமுக- திமுக இடையேதான் போட்டி: ப சிதம்பரம்

 

maalaimalar :காரைக்குடி: முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் கூறியதாவது, தமிழகத்தில் அதிமுக- திமுக இடையேதான் போட்டி. 3-வது அணியில் எனக்கு நம்பிக்கை இல்லை.          அதிமுக- திமுக இடையே மட்டுமே போட்டி என்பதால், இது நடிகர் கமல்ஹாசன் உட்பட அனைவருக்கும் பொருந்தக்கூடியதே. காங்கிரசில் என்னைப் பொறுத்தவரை எளிய தொண்டனாகவே பணியாற்ற விரும்புகிறேன். நமக்கு அணுக்கமான அரசை தமிழகத்தில் உருவாக்க வேண்டும். தபால் வாக்களிக்கும் முறையில் முறைகேடு நடைபெற வாய்ப்பு உள்ளதாக அவர் கூறினார்.

உதயசூரியன் சின்னத்தில் போட்டி... மதிமுகவுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியது திமுக

உதயசூரியன் சின்னத்தில் போட்டி... மதிமுகவுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியது திமுக
maalaimalar :அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், திமுக- ம.தி.மு.க. இடையே தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
வைகோ, மு.க.ஸ்டாலின்

சென்னை:தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள்,  இந்திய கம்யூனிஸ்டு ஆகிய 4 கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிவு செய்யப்பட்ட நிலையில், ம.தி.மு.க சற்று அதிகமான தொகுதிகளை எதிர்பார்த்தது. ஆனால் தி.மு.க. தரப்பில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே தொகுதிகளை தர முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.ம.தி.மு.க. மூத்த தலைவர்கள் மற்ற கட்சிகளை விட கூடுதலாக ஒரு தொகுதியாவது பெறுவதற்கு முயற்சி மேற்கொண்டனர். 

திமுக வேட்பாளர் நேர்காணல் இன்றுடன் நிறைவு... மு.க. ஸ்டாலின், உதயநிதி ஆகியோரிடம் நேர்காணல்

  Vigneshkumar - tamil.oneindia.com :  சென்னை: சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நடைபெறும் வேட்பாளர் நேர்காணல் இன்றுடன் நிறைவடையும் நிலையில் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஆகியோரிடம் இன்று நேர்காணல் நடைபெறுகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெறுகிறது. தேர்தலுக்காக பல்வேறு கட்சி தலைவர்களும் மேற்கொண்டிருந்த சுறாவளி பிரச்சாரத்திற்கு இந்த தேர்தல் ப்ரேக் போட்டது.
சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் வெள்ளிகிழமை தொடங்குகிறது. இதனால் அதிமுக, திமுக என இரு கட்சிகளும் தங்கள் கூட்டணியை இறுதி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
அதிமுக கூட்டணி அதேபோல வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் பணிகளிலும் அனைத்துக் கட்சியினரும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் நேற்று முன்தினம் நேர்காணல் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட 6 பேரைக் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது.

திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேச்சுவார்த்தை நடக்கிறது இன்னும் சற்று நேரத்தில் விபரம் வெளியாகும்

 Vigneshkumar /tamil.oneindia.com :சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு நேற்று செய்யப்பட்ட நிலையில், திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை இன்று நடைபெறவுள்ளது.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், கூட்டணியை உறுதி செய்து, தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் நடவடிக்கைகளில் திமுக மற்றும் அதிமுக கூட்டணி ஈடுபட்டுள்ளது. பாமக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுடன் அதிமுக தனது கூட்டணியை இறுதி செய்துள்ளது.
மறுபுறம் இந்திய கம்யூனிஸ்ட், விசிக, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், மமக ஆகிய கட்சிகளுடன் திமுக தனது தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்துள்ளது.
காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தொகுதி பங்கீடு குறித்த அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்தது.

டிஜிட்டல் பாசிசம் எவ்வாறு வேலை செய்கிறது ?

டிஜிட்டல் பாசிசம் மேலிருந்து கீழ் செல்லும் அமைப்பாக இல்லை. ஆனால் அதற்கு பதிலாக தட்டையான ஒரே அளவு பரிமாணம் கொண்ட ஒட்டுப் போட்ட பல்வேறு வலதுசாரி சிந்தனையோட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

உண்மையில்,   “*பாசிசம் ஆட்சி அதிகாரத்தில் இருப்பது என்பது நிதிமூலதனத்தின் ஆகப் படுமோசமான பிற்போக்கான ஆக அதிகமான ஆதிக்க இனவெறி கொண்ட ஆகப்படுமோசமான ஏகாதிபத்திய நபர்களின் பகிரங்கமான பயங்கரத்தன்மை கொண்ட சர்வாதிகாரமாகும்*” என்கிறார் பாசிசத்தை வெற்றிகொண்ட டிமிட்ரோவ்

பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு - நடந்தது என்ன?

பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு - நடந்தது என்ன?
daylithanthi  :சென்னை,தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது.ஆளும் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை கடந்த வாரம் தொடங்கியது. பா.ஜ.க. போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்த விவரத்தை அக்கட்சியின் தலைவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்தனர். விரைவில் தொகுதி உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில், அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே தொகுதி பங்கீடு முடிந்துள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.

பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் திமுக.. செய்தியாளர்களை சந்திக்கும் வேல்முருகன்.

p> Vigneshkumar - tamil.oneindia.com :சென்னை: வரும் சட்டசபை தொகு பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்திருந்த நிலையில், அக்கட்சியில் தலைவர் வேல்முருகன் இன்று காலை 11 மணிக்குச் செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். சட்டசபை தேர்தலுக்கான கூட்டணியை இறுதி செய்யும் பணிகளில் திமுகவும், அதிமுகவும் மும்முராக ஈடுபட்டு வருகிறது.
இதுவரை அதிமுக தரப்பில் பாமகவுக்கு 23 தொகுதிகளும் பாஜகவுக்கு 20 சட்டசபை தொகுதிகளும் ஒரு நாடாளுமன்ற தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன

அதேபோல திமுக தரப்பில் இதுவரை இந்திய கம்யூனிஸ்ட், விசிக, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், மமக ஆகியவற்றுடன் தொகுதிப் பங்கீட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ், மதிமுக ஆகிய கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு இழுபறியில் உள்ளது.

பெருங்காயம் என்ற மோசடி ..பெருங்காயம் -பெருங்காயமே இல்லை

May be an image of text that says 'எச்சரிக்கை Ingredients Gum Arabic, Maida, Asafoetida, Maida (30% Approx.) STORAGE Keep Doi piace, away from direct BEST FROMPACKGING BEFORE 15 MONTHS மற்றும் பகவமை அவசியம் படிக்கவும்'

Sridhar K Giri:    பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி ..பெருங்காயம் -பெருங்காயமே இல்லை
அன்புள்ள மக்களே!
பெருங்காயத்தை சமையலில் சேர்த்தால் வாயுத் தொல்லை நீங்கும் நன்கு ஜீரணமாகும்  என்று நாம் கேள்விப் பட்டிருப்போம்.  
ஆனால், நாம் கடையில் வாங்கும் பெருங்காயம், ஜீரணத்துக்கு ஆப்பு வைத்து விட்டு வாயுத் தொல்லையைத் தரும் என்று உங்களுக்குத் தெரியுமா?
 அந்த கூட்டு பெருங்காயம் ...  அப்படின்னு விளம்பரங்களில் சத்தமா சொல்வதைக் கேட்கும் போதெல்லாம்  
இது ஏதோ கூட்டில் சேர்க்கும் பெருங்காயம் என நினைப்பதுண்டு.  ஆனால் இது அந்த கூட்டு அல்ல.  இந்தக் கூட்டு முடிச்சவிக்கி அரசியல்வாதிகள் தேர்தலில் கூட்டு போட்டு மக்களைக்  கொள்ளையடிப்பதைப் போன்ற ஒன்றாகும்.
இது கொள்ளையடிக்கப் போவது நம் ஆரோக்கியத்தை.   என்னென்ன நன்மைகள் விளையும் என்று நினைத்து உணவில் சேர்க்கிறோமோ, அதற்க்கு நேரெதிர் விளைவுகளை இந்த நம்பிக்கைத் துரோகி ஏற்படுத்துகிறதாம்.
 அப்படி என்னதான் இதில் சேர்க்கிறார்கள்?   ஒரு வகையான
அரேபியபிசின் 60%,
மைதா 30%,

ஹரிநாடர் விவாகரத்து ..நீதிமன்றத்தில் மனைவியும் குழந்தையும் வீட்டுக்கு வாங்க என்று கதறியது கண்ணீர் காட்சி .. வேறு திருமணம் செய்ய உத்தேசம்.

May be an image of 2 people and people standing
.ஹரி நாடார்+  மனைவி
May be an image of 2 people, people standing and indoor
.ஹரி நாடார்

பானு பிரியா : · இன்று சென்னை குடும்ப நல மூன்றாவது நீதிமன்றத்தில் கட்டிய மனைவி குழந்தையை பறிதவிக்க விட்டுவிட்டு வேறோறுபெண்ணை திருமணம் செய்ய டைவர்ஸ் வழக்கு தாக்கல் செய்ய வந்த பணம் பிடுங்கும்படை அ.ஹரி நாடார் நீதிமன்றத்தில் கட்டிய மனைவி குழந்தைகள் ஹரிநாடாரின் கையை பிடித்து வீட்டிற்கு வாங்க அப்பா என கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது வழக்கு எண் O. S. No 2124/2020 எல்லாம் வனிதா விஜயகுமாரை சந்தித்த ராசிபோலும்.

Murali Sugumar பாவம் இவங்க பாக்க லட்சணமா நல்லவங்களா தெரியறாங்க. இந்த மொன்ன பயல கல்யாணம் பண்ணி வச்சவங்கள சொல்லனும், கிளிய பெத்து வளத்து கொரங்கு கைலதான் கொடுக்கனும்னு இருக்காய்ங்க போல....

 Flashback : நடமாடும் தங்க கடை மற்றும் அரசியல்வாதி என்று சொல்லக்கூடியவர்தான் ஹரி நாடார்
இவர் நாங்குநேரி தொகுதியில் பனங்காட்டு படை கட்சியில் போட்டியிட்டு அதிமுக விற்கு அடுத்தபடியாக வாக்குகளை பெற்று கவனிக்க வைத்தவர்.
கழுத்தில், கையில், விரல்களில் சேர்த்து கிலோ கணக்கில் தங்கத்தை அணிந்திருப்பது, நீளமான தலைமுடி போன்ற தோற்றத்தில் சுற்றிக் கொண்டிருப்பார்.

Saravana Kanth IAS :பாசிச மதவெறியிலிருந்து, சாதிவெறியர்களிடமிருந்து எதிர்காலத்தை மீட்போம்! வாருங்கள், கரம் கோருங்கள்

Another IAS officer quits service – The Sen Times
Saravana Kanth IAS
Saravana Kanth IAS :  சரவண காந்த் ஆகிய நான், இந்தத் *தமிழ்நாடு மற்ற இந்திய மாநிலங்களை ஒப்பிடுகையில் தனித்துவம் வாய்ந்த ஒன்று* என புரிந்திருக்கிறேன், *இடஒதுக்கீடு தொடங்கி மாநில சுயாட்சி வரை* குறிப்பிட்ட அளவு முன்னோக்கி நகர்ந்திருக்கிறோம் என நம்புகிறேன், *இந்த வளர்ச்சி காமராசர், அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா அவர்களுக்குப் பெரும் பங்கிருக்கிறது* என்பதை என்னால் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு புரிந்துகொள்ளமுடிகிறது,
இந்த *வளர்ச்சியும், மாநில சுயாட்சி உரிமையும், இடஒதுக்கீடும் தொடரவேண்டுமென விரும்புகிறேன்.*
கடந்த ஐந்தாண்டுகளில் பிஜேபியும் அதிமுகவும் இன்னபிற கால் கழுவல் கட்சிகளையும், அவர்கள் உருவாக்கிய *பிம்ப காட்சிகளையும் பார்த்தே வருகிறேன்.*

காங்கிரஸில் இருக்கும் ஆர்எஸ்எஸ்காரர்கள் காலம் நேரம் பார்த்து காலை வருவார்கள்! .... இன்று வட இந்தியாவில் அதுதான் ...

ஆலஞ்சியார் : · காங்கிரஸ்..INC பழைய நினைப்பில் பேசுகிறார்கள்.. இந்தியா முழுவதுமே 44 ல் ஒதுங்கியவர்கள் தமிழகத்தில் எட்டு இடங்களில் வென்றதென்றால் அது திமுக எனும் சக்தியின் உந்துதலே காரணம் .. இன்றைய இந்தநிலை வர என்ன காரணம் என ராகுல் கூட அறிவார் ..காங்கிரஸில் இருந்த ஆர்எஸ்எஸ்காரர்கள் நேரம் பார்த்து காலைவார இன்று வட இந்தியாவில் மெல்ல கரைய தொடங்கியிருக்கிறது ..தென்மாநிலங்களிலும் காங்கிரஸ் தேய்பிறை போலதான் .. ஜமீன் நினைப்பிலிருந்து மாறாதவரை காங்கிரஸ் இனி தென் மாநிலங்களிலும் தேடபடுகிற நிலைதான் வரும் .. நிலக்கிழார்களையும் அரசபரம்பரை என்பவர்களை சட்டை கசங்காமல் கதரோடு அலைபவர்களையும் நம்பி பலனில்லை .. மக்களிடம் தலைவர்களை கண்டெத்தாதவரை ..ஜோதிமணிகள் கண்ணுக்குதெரியாதவரை காங்கிரஸ் இறங்குமுகம் தான்..
..
2011 ஐ மறக்க முடியுமா.. கீழே பேச்சுவார்த்தை மேலே ரெய்டு என 2ஜியை காட்டி அதிக தொகுதி பெற்றதில் ஒன்றை தவிர அத்தனையும் போனதே.. கடந்த தேர்தலிலும் 41 ல் எட்டைதானே வெல்ல முடிந்தது .. பக்கத்து மாநிலங்களில் விலைபோகும் காங்கிரஸ்காரர்கள் ..வலுவிழந்து நிற்கும்போது திமுக எத்தனை தரமுடியுமென யோசிக்கதான் செய்யும் .. அடிமட்ட தொண்டனை இழந்துநிற்கும் காங்கிரஸ் "பேரியக்கம்" என்ற நினைப்பை போட்டுவிட்டு வருவதுதான் சரி.. வெல்லகூடிய தொகுதிகளை கேட்டு அதில் வென்று காட்ட முயற்சிக்கலாம் .. எண்ணிக்கை தான் என்றால் காங்கிரஸின் கடைசி அத்தியாயம் இதுவாக இருக்கலாம் ..எந்தவொரு பொது பிரச்சனையிலும் மக்களை திரட்டி போராடாமல் வெகுமக்களை கவர்ந்திழுத்து அரசியல் செய்யாமல் மன்னர் மனப்பான்மையில் இருந்தால் எதுவும் தேறாது ..

மே.வங்க முஸ்லிகளின் குடியுரிமைக்கு வேட்டு வைக்க ஒவைசி? பாஜகவின் அடியாள்

 

Velmurugan Balasubramanian : · மம்தாவை எதிர்த்து ஓவைசி மேற்கு வங்கத்தில் போட்டி -
மேற்கு வங்கத்தில் இரண்டரை கோடி முஸ்லிம்கள் உள்ளனர்.
குடியுரிமை சட்டத்தால் அதிகம் பாதிக்க இருக்கும் மாநிலங்களில் மேற்கு வங்காளம் முதன்மையானது.
தன் உயிர் இருக்கும் வரை குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டேன் என்று மம்தா பானர்ஜி சூளுரைத்து வருகிறார்....
தற்போது ஓவைசி மம்தா பானர்ஜியை எதிர்த்து மேற்கு வங்கத்தில் பிரச்சாரம் செய்யப்போகிறார்.  ..  
ஒரு வேளை மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் தோல்வியடைந்தால் இரண்டரை கோடி மக்களுக்கும் அது இடியாக அமையும்.
பஞ்சாபில் சீக்கியர்கள் வீதிக்கு வந்து போராடுவது போல மேற்கு வங்கத்தில் முஸ்லிம்கள் வீதிக்கு வந்து போராட வேண்டியிருக்கும்.
ஓவைசி பிஜேபியின் கையாள் என்பதை ஒவ்வொரு வங்காளிகளும் உணர வேண்டும்.

வெள்ளி, 5 மார்ச், 2021

திமுக வேட்பாளர் பட்டியல் 10-ந்தேதி வெளியீடு

தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வருகிற 10-ந்தேதி வெளியிடப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

nakkeeran : தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் தி.மு.க.- காங்கிரஸ் இடையே இழுபறி நிலை நீடிக்கும் நிலையில், சென்னையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள், மேலிடப் பார்வையாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய கே.எஸ்.அழகிரி, தொகுதிகளின் எண்ணிக்கை குறைவு என்பதை விட நம்மை நடத்தும் விதம்... எனக் கூறியவாறு கண்கலங்கினார்.  

உதயநிதிக்கு சீட் மறுக்கும் ஸ்டாலின்

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்கு சீட் மறுக்கும் ஸ்டாலின்

minnambalam :மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.    “திமுக வேட்பாளர் பட்டியல் வரும் 10 ஆம் தேதி வெளியிடப்படுமென்ற தகவல் பரவி வரும் நிலையில், அதோடு சேர்ந்த கூடுதல் எதிர்பார்ப்பாக திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா என்ற கேள்வி திமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது.

உதயநிதி ஸ்டாலினுக்காக ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி உள்ளிட்ட தொகுதிகளில் பலர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்திருக்கிறார்கள். பிப்ரவரி 25 ஆம் தேதி உதயநிதியே சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவதற்கான தனது விருப்ப மனுவை அறிவாலயத்தில் சமர்ப்பித்தார். 

தி.மு.க. - காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டு இழுபறிக்கு காரணம் என்ன? ( 23 + 1 Rajya Saba?)

tn assembly election dmk and congress alliance discussion

 nakkeeran  :தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் தி.மு.க.- காங்கிரஸ் இடையே இழுபறி நீடிக்கிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதிப் பங்கீட்டின் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு குழுவுடன், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பல கட்டப் பேச்சுவார்த்தையை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர் தினேஷ் குண்டுராவ், கட்சியின் தமிழகத் தேர்தல் பொறுப்பாளர் உம்மன்சாண்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது காங்கிரஸ் தரப்பு 30-க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளையும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி, ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி உள்ளிட்டவற்றை தி.மு.க.விடம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு தி.மு.க. தரப்பு, முதலில் 18 சட்டமன்றத் தொகுதிகளைத் தருவதாகக் கூறியது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 23 சட்டமன்றத் தொகுதிகளைத் தருவதாக தி.மு.க. தலைமை கூறியது.... 

திமுக கூட்டணியில் 6 தொகுதிகளை பெற்றது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

திமுக கூட்டணியில் 6 தொகுதிகளை பெற்றது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
maalaimalar : சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அவ்வகையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கான தொகுதி ஒதுக்கீடு குறித்து இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகளை ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் முன்னிலையில் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. Related Tags :

கன்னியாகுமரியில் பிரியங்கா காந்தி போட்டியிட விருப்ப மனுத் தாக்கல்

குமரியில் பிரியங்கா காந்தி : போட்டியிட விருப்ப மனு!

 minnambalam : கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிட கார்த்தி சிதம்பரம் எம்பி விரும்ப மனுத் தாக்கல் செய்தார்.தமிழகத்தில் கிடைத்த ஒரு தொகுதியான கன்னியாகுமரியை பாஜக 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரசிடம் பறிகொடுத்தது. இந்நிலையில் கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.  இந்நிலையில் பறிகொடுத்த தொகுதியைத் தன்வசப்படுத்த பாஜக தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. 

ஸ்டாலின் போட்ட கிடுக்குபிடி.. தமிழக காங்கிரசே முடிவு எடுக்கட்டும் .. ராகுல்

Shyamsundar - tamil.oneindia.com :   சென்னை: திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வரும் நிலையிலும்.. மூன்றாவது அணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று காங்கிரஸ் கூறியுள்ளது. 
திமுகவை விட்டு செல்ல கூடாது என்ற முடிவில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது.. 
காங்கிரசின் இந்த முடிவிற்கு பின் நேற்று பல முக்கியமான சம்பவங்கள் நடந்துள்ளன! நீங்கள் எடுப்பதுதான் கடைசி முடிவு.. 
மேலிடம் எதுவும் சொல்லாது.. நீங்களே பேசிக்கொள்ளுங்கள்.. இதுதான் டெல்லி தலைமை தமிழக காங்கிரசுக்கு கூட்டணிக்கு குறித்து சொன்ன விஷயம். 
திமுக கூட்டணி குறித்தும், போட்டியிடும் இடங்கள் குறித்தும் முடிவு எடுக்க தமிழக காங்கிரசுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலிட பொறுப்பாளர்கள் வந்து கூட்டணி பேச்சுவார்த்தையை கவனித்தாலும் கூட முடிவு எடுக்கும் அதிகாரம் தமிழக தலைமைக்கும், தமிழகத்தில் இருக்கும் மூத்த காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. கூட்டணி குறித்து முடிவெடுக்கும் சுதந்திரம் இருந்தும் கூட காங்கிரஸ் கட்சி முடிவெடுக்க முடியாமல் திணறி வருகிறது.
சுதந்திரம் காங்கிரசுக்கு 24-27 இடங்களுக்கு மேல் கொடுக்க முடியாது என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த கதைதான். லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட 9 தொகுதிகளுக்கு 3 சட்டசபை தொகுதிகள் என்ற வீதத்தில் 27 தொகுதிகள் வரை காங்கிரசுக்கு திமுக கொடுக்கும் முடிவில் இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ.. இது போதாது இன்னும் வேண்டும் என்று தீவிரமாக கோரிக்கை வைத்து வருகிறது.

எங்களுக்கே பாதுகாப்பில்லை; நாங்கள் எப்படி மக்களை பாதுகாப்பது?” - பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் போர்க்கொடி!

Vignesh Selvara .kalaignarseithigal.com: காவல்துறை பெண் அதிகாரிகள் சந்திக்கும் பாலியல் தொந்தரவுகளுக்கு எதிராக 10க்கும் மேற்பட்ட பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் டி.ஜி.பி-யிடம் புகார் அளித்துள்ளனர். தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்னர் முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி மீது பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளுமாறு புகார் மனுவை சி.பி.சி.ஐ.டி போலிஸாருக்கு டி.ஜி.பி திரிபாதி மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

மியான்மர் போலீசார் அடைக்கலம் நாடி இந்தியாவுக்குள் நுழைந்தனர் - மிசோரமில் .

thinathanthi : புதுடெல்லி: அண்டை நாடான மியான்மரில் கடந்த பிப்ரவரி 1-ந்தேதி ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து ராணுவத்துக்கு எதிராக அங்கு தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன. 

இதில் 50-க்கும் மேற்பட்டோர் இதுவரை கொல்லப்பட்டு இருக்கின்றனர். இவ்வாறு பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் மியான்மரில் இருந்து இந்திய மாநிலமான மிசோரமில் எல்லை தாண்டி வந்த 3 போலீசாரை அந்த மாநில போலீசார் நேற்று பிடித்தனர்.                      இரு நாட்டு எல்லையில் இருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள லங்காவ் கிராமத்தில் சாதாரண உடையில் அவர்கள் சிக்கினர்.                              அவர்களிடம் விசாரித்தபோது, மியான்மர் ராணுவம் இட்ட கட்டளைகளை தாங்கள் நிறைவேற்றாததால், தங்களை ராணுவம் தேடுவதாகவும், எனவே இந்தியாவிடம் அடைக்கலம் பெறுவதற்காக எல்லை தாண்டி வந்ததாகவும் தெரிவித்தனர்.                      அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ராணுவத்துக்கு பயந்து மியான்மர் போலீசார் இந்தியாவுக்குள் ஊடுருவிய விவகாரம் மிசோரமில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விசிக போட்டியிடும் 6 தொகுதிகள் எவை? வேட்பாளர்கள் ... சிந்தனைச் செல்வன், யூசுப், பனையூர் பாபு உள்ளிட்டோர்?

tamil.indianexpress.com : தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 12 தொகுதிகளை எதிர்பார்த்த விசிகவுக்கு இது ஏமாற்றத்தை அளித்தாலும் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், தமிழக நலன் கருதி 6 தொகுதிகளை ஏற்றுக்கொண்டோம் என்று தெரிவித்துள்ளார். 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக, மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம் கட்சிகளின் மக்கள் நலக் கூட்டணி என்ற 3வது அணியை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தவர் விசிக தலைவர் திருமாவளவன். மக்கள் நலக் கூட்டணி ஒரு இடங்களில்கூட வெற்றி பெற முடியாமல் போனாலும் வாக்குகளை பிரித்ததிலும் வாக்காளர்களை மனரீதியாக மடை மாற்றம் செய்ததிலும் பெரும் பங்கு உண்டு.

தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, மக்கள் நலக்கூட்டணி கலைந்தாலும், அதில் இருந்த கட்சிகளில் தேமுதிக, தாமகவைத் தவிர எல்லா கட்சிகளும் 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்தன. இந்த அணி கடந்த மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து, நீடித்து வரும் இண்த கூட்டணி இப்போது சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்கிறது.

திமுகவுக்கு இன்று மாலைவரை கெடு.. நாளை சிபிஐ-எம் கறார் முடிவு!

திமுகவுக்கு இன்று மாலைவரை கெடு.. நாளை சிபிஐ-எம் கறார் முடிவு!

minnambalam : தி.மு.க. அணியின் தொகுதிப் பங்கீட்டில் ஒருவழியாக இரண்டாம் கட்டமாக நேற்று (மார்ச் 4) விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் உடன்பாடு கையெழுத்தானது. மதிமுக, இடதுசாரி கட்சிகளுடன் இன்னும் தொகுதிப்பங்கீடு உறுதியாகாமல் இழுத்துக்கொண்டு செல்கிறது.

முன்னரே நமக்கு வந்த தகவல்படி, திமுகவுக்குள் மக்கள்நலக் கூட்டணியாகப் பேசி உரியத் தொகுதிகளைக் கேட்டுப் பெறும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்பதை வெளியிட்டிருந்தோம். அதைப் பற்றி இன்னும் சில சேதிகளும் கிடைத்தன.

நஸ்ரியா கணவர் பகத் பாசில்..தீவிர சிகிச்சை பிரிவில்

Tamil Cinema News - ஹரிஷ் கல்யாண் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகையான நஸ்ரியா கணவர் பகத் பாசில் திடீரென தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மலையாளத்தில் மிகப்பெரிய நடிகராக வலம் வருபவர் பகத் பாசில். தமிழிலும் பேமஸ் ஆன நடிகர் தான். ஹீரோயிசம் காட்டாமல் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் என்ன தேவை என்பதை அறிந்து அசால்டாக நடிப்பவர். நடிக்கத் தெரிந்த சில நடிகர்களில் பகத் பாசில் கண்டிப்பாக ஒரு முக்கிய இடம் பிடித்திருப்பார். தற்போது அவர் மலையாளத்தில் மலையன் குஞ்சு எனும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை சஜிமோகன் என்ற இளம் இயக்குனர் இயக்கி வருகிறார்

மம்தாவின் திரிணாமுல் காங்கிரசுக்கு சிவசேனா ஆதரவு . மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தம் தாக்கரே அறிவிப்பு

 

Rayar Anthony -tamil.oneindia.com​ : கொல்கத்தா: பாஜகவின் நீண்டநாள் நண்பனாக இருந்து எதிரியாக மாறிய சிவசேனா, வருகிற சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுப்பதாக தெரிவித்துள்ளது.
மம்தா தீதி(அக்கா) ஒரு கர்ஜிக்கிற வெற்றி பெற நாங்கள் விரும்புகிறோம். மம்தா பானர்ஜிதான் வங்காளத்தின் உண்மையான புலி என்று சிவசேனாவின் சஞ்சய் ரவுத் கூறினார்.
மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக-திரிணாமுல் இடையே போட்டி விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.
தமிழகத்தைப்போல் மேற்கு வங்க தேர்தல் களமும் சூடுபிடித்துள்ளது. அங்கு இந்த முறை ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்பது பாஜகவின் நீண்ட நாள் சபதம்.

திவாகரன் : துரோகிகள் எங்கள் குடும்பத்தில்தான் இருக்கிறார்கள்... சசிகலா சகோதரர் பரபரப்பு பேட்டி!

nakkeeran :"நான் என்றுமே வணங்கும் என் அக்கா ஜெயலலிதாவின் எண்ணத்துக்கு இணங்க, அவர் கூறியபடி இன்னும் நூறாண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சித் தொடர ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளான, ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும். பொது எதிரி தீயசக்தி என்று ஜெயலலிதா நமக்குக் காட்டிய, தி.மு.க.வை ஆட்சியில் அமரவிடாமல் தடுத்து விவேகமாக இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட அவரின் தொண்டர்கள் பாடுபட வேண்டும்.என் மீது அன்பும், அக்கறையும் காட்டிய ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, எப்படி அவர் எண்ணத்தைச் செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேனோ, அவர் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன்.

பேய் விரட்டும் சடங்கு’ – பிரம்படியால் பலியான 9 வயது இலங்கை சிறுமி

 

sri-lankan-exorcist-child-dead 

malaimlaar : இலங்கை தலைநகர் கொழும்பு அருகே ‘பேய் விரட்டும் சடங்கு’ என்று உள்ளூரில் நம்பப்படும் சடங்கு ஒன்றுக்கு உட்படுத்தப்பட்ட ஒன்பது வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
இந்த நிகழ்வு கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள தெல்கொட எனும் நகரத்தில் நிகழ்ந்துள்ளது.
பேய் விரட்டும் சடங்கின்போது சிறுமி கடுமையாக பிரம்பால் தாக்கப்பட்டதே உயிரிழப்புக்குக் காரணம் என்கிறது காவல் துறை.
குழந்தையின் உயிரிழப்பு தொடர்பாக அக்குழந்தையின் தாய் மற்றும் ‘பேய் விரட்டும் சடங்கை’ நடத்திய பெண் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் நேற்று (திங்கள்கிழமை) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக காவல்துறை கூறுகிறது. அந்த சிறுமியின் தாய் தனது மகளுக்கு ”கெட்ட ஆவி பிடித்துள்ளது” என்று நம்பியதாகவும் அதனால் தனது மகளை அதுபோன்ற சடங்குகளைச் செய்யும் ஒரு பெண்ணிடம் அழைத்துச் சென்றதாகவும் காவல் துறை தெரிவிக்கிறது.

திமுக விசிக தொகுதிப்பங்கீடு ! .. இணைய போராளிகள் என்ன கூறுகிறார்கள்?

Kiruba Munusamy : · சனாதனத்தை வீழ்த்தி ஜனநாயகத்தை காக்கும் கடமை விசிகவிற்கும் கூட்டணி கட்சிகளுக்கு மட்டும் தான் இருக்கிறதா என்ன? கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை. இந்த தேர்தலில் கலைஞர் இல்லை. இவற்றை குறித்த எந்த அச்சமும் இல்லாமல் திமுக நடந்துக்கொள்ளும் போது, விசிக மட்டும் ஏன் சமரசம் செய்ய வேண்டும்? இதனால் தலித்துகளுக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்துவிட போகிறதா இல்லை ஜாதிய வன்முறைகள் தான் குறைந்துவிட போகிறதா? எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அது ஒடுக்கப்பட்டோருக்கு ஒன்றுதானே! இப்படி ஒவ்வொரு தேர்தலிலும் விளிம்புநிலை மக்களின் பிரதிநிதியான விசிகவை வஞ்சிக்கிறது திமுக. ஜனநாயகத்தை காக்கும் பொருட்டு பெருந்தன்மையாக பொறுத்து போகிறார் தோழர் திருமா. சமூகநீதியின் அடிப்படையே அதிகாரத்தை பரவலாக்குவது தான். இதை முற்றிலும் மறந்து, தான் மட்டும் ஏகபோகமாக அனுபவிக்க நினைக்கும் திமுக எந்த வகையில் சனாதனத்திற்கு எதிரானது?

சாய் லட்சுமிகாந்த் : அப்ப திமுகவில் இருக்கும் பட்டியலின சகோதரர்களின் நிலை?? திமுகவில் பிரதிநிதித்துவம் இல்லை என்பவர்கள் கூட திமுகவினரின் பட்டியலின மக்களுக்கு எதிராக பேசலாமா?? 

Joe Milton : இரண்டு பேர் பாராளுமன்றத்துக்கு சென்றதையெல்லாம் வசதியாய் மறந்துவிட்டு இது போல ஏதாவது சொல்லாவிட்டால் போராளி மோடில்  இருக்க முடியாது என்பதால் சொல்வது போலிருக்கிறது..  

 Arul Thambi - Joe Milton : இருண்ணா கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வரட்டும்.. 

வியாழன், 4 மார்ச், 2021

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கண்டெய்னர் முனையத்தை அமைக்கும் பணி - இந்தியாவுக்கு ஒப்பந்தம் வழங்க இலங்கை அரசு முடிவு

daylithanthi : கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கண்டெய்னர் முனையத்தை அமைக்கும் பணியில் இந்தியா மற்றும் ஜப்பானுக்கு ஒப்பந்தங்கள் அளிக்கப்படும் என்று இலங்கை அறிவித்துள்ளது. கொழும்பு,இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கண்டெய்னர் முனையம் அமைக்க இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இலங்கை அரசு கடந்த 2019-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. ஆனால் இந்த ஒப்பந்தங்களை சமீபத்தில் திடீரென்று இலங்கை ரத்து செய்தது. இதற்கு இந்தியா அதிருப்தி தெரிவித்தது.இந்த ஒப்பந்தங்களை தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் ரத்து செய்ததாக இலங்கை கூறியது. அதே வேளையில் கொழும்பு துறைமுகத்தில் தெற்கு பகுதியில் முனைய பணிகளை மேற்கொள்ள சீனாவுக்கு இலங்கை அனுமதி வழங்கியது. இதனால் இந்தியாவுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்த பின்னணியில் சீனா இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.>இந்த நிலையில் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கண்டெய்னர் முனையத்தை அமைக்கும் பணியில் இந்தியா மற்றும் ஜப்பானுக்கு ஒப்பந்தங்கள் அளிக்கப்படும் என்று இலங்கை அறிவித்துள்ளது.

காங்கிரஸ் 27 கேட்கிறது திமுக 22 தருவதாக அறிவிப்பு ! 3-ம் சுற்று பேச்சுவார்த்தை: காங்கிரஸுக்கு திமுக அழைப்பு

பிந்திய செய்தி ! 18 ல் இருந்து திமுக 22 வரை ஏறி வந்திருக்கிறது   காங்கிரஸ் 35 இல் இருந்து 27 இற்கு இறங்கி வந்திருக்கிறது . பேச்சு வார்த்தை தொடர்கிறது .

.hindutamil.in : குறைவான தொகுதி பிரச்சினை காரணமாக திமுக -காங்கிரஸ் பேச்சுவார்த்தை இழுபறியான நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் திமுக கூட்டணியில் தொடரலாமா, அல்லது வெளியேறலாமா என மாவட்ட தலைவர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளதை தொடர்ந்து மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என திமுக அழைத்துள்ளது. திமுக தோழமைக்கட்சிகளில் பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் 41 தொகுதிகளில் போட்டியிட்டு 8 தொகுதிகளில் மட்டுமே வென்றது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கக்கூடாது என திமுகவுக்குள் குரல் ஓங்கி ஒலிக்க தொடங்கியது.

 மேல்மட்ட தலைவர்களே இதுகுறித்து கூட்டங்களில் பேசினர். இதனிடையே சட்டப்பேரவை பேச்சுவார்த்தையில் முதல் கட்சியாக காங்கிரஸை அழைத்தது திமுக. பேச்சுவார்த்தைக் குழுவே ஆரம்பிக்காத நிலையில் பொதுச் செயலாளர் துரைமுருகன், கனிமொழி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்டனர். காங்கிரஸ் தரப்பில் உம்மன் சாண்டி இதற்காக வந்திருந்தார்.

முகஸ்டாலின் - திருமாவளவன் தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.. விசிக-வுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

maalaimalar :சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
திமுக கூட்டணியில் விசிக-வுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு
முகஸ்டாலின் - திருமாவளவன் தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். சென்னை: திமுக - விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. சட்டசபை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். திமுக கூட்டணியில் விசிக - 6, ஐ.யூ.எம்.எல். - 3, ம.ம.க. - 2 ஆகிய கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. /> திமுக கூட்டணி கட்சிகளுக்கு இதுவரை 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது

கொங்கு ஈஸ்வரனுக்கு 2 சீட்!

கொங்கு ஈஸ்வரனுக்கு 2 சீட்!

 minnambalam :கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகளை திமுக ஒதுக்கியிருக்கிறது.     2019 நாடாளுமன்றத் தேர்தலில், நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட ஏ.கே.பி. சின்ராஜ், 6 லட்சத்து 26 ஆயிரத்து 293 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.   தற்போது 2021 சட்டமன்ற தேர்தலுக்காகக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தைகள் தீவிரமாக நடந்து வரும் சூழலில், இன்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் திமுக இடையே பேச்சிவார்த்தை நடந்தது.   இதில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி 6 தொகுதிகள் கேட்ட நிலையில், திமுக 2 இடங்களை ஒதுக்கியிருக்கிறது.

வைகோ கேட்பதும் ஸ்டாலின் கொடுக்க விரும்புவதும் !

வைகோ கேட்பதும் ஸ்டாலின் கொடுக்க விரும்புவதும் !

minnambalam :திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகிய 2 இஸ்லாமியக் கட்சிகளுக்கு மட்டுமே தொகுதிப்பங்கீடு முடிவாகி கையெழுத்தாகியுள்ளது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக என பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை போய்க்கொண்டேயிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், காங்கிரசுக்கு அள்ளிக்கொடுத்த திமுக, அதில் ஏற்பட்ட அனுபவத்தின் காரணமாக இந்தத் தேர்தலில் கிள்ளிக்கொடுக்கும் முடிவில் உறுதியாக இருக்கிறது.

அதேபோல 2016 ஆம் ஆண்டில் திமுக ஆட்சி கைநழுவிப் போகக் காரணமாக இருந்த மக்கள் நலக்கூட்டணியில் இருந்த கட்சிகளுக்கும் கேட்பதில் பாதி சீட்டைத்தான் கொடுப்பது என்பதிலும் திட்டவட்டமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. ஆனால் அதிமுக–பாரதிய ஜனதாவுக்கு எதிரான கொள்கைக் கூட்டணி என்று வர்ணிக்கபடுவதாலும், பாராளுமன்றத் தேர்தலில் பிரமாண்ட வெற்றியைப் பெற்ற கூட்டணி என்பதாலும் இதிலிருந்து எந்தக் கட்சியும் வெளியே போகாது என்றும் நம்பப்படுகிறது.

தமிழக போக்குவரத்து துறையின் பெயரை ‘லஞ்சம் பெறும் துறை’ என மாற்றுக” - கொந்தளிக்கும் லாரி உரிமையாளர்கள்!

தமிழக போக்குவரத்து துறையின் பெயரை ‘லஞ்சம் பெறும் துறை’ என மாற்றுக” - கொந்தளிக்கும் லாரி உரிமையாளர்கள்!
kalaignarseithigal : தமிழக அரசு தொடர்ந்து ஊழல் செய்து வருவதைத் தவிர எங்கள் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை” என தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் இலகுரக வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை அனைத்து வகை வாகனத்திற்கும் 30 சதவிகிதம் வாடகை உயர்த்தப்படும் என தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.      தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் மற்றும் பொதுக்குழு மற்றும் ஒருங்கிணைந்த மோட்டார் உரிமையாளர்கள் தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை மாதவரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏராளமான லாரி உரிமையாளர்கள் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர். பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நடிகர் விமலின் மனைவிக்கு 'சீட்' தி.மு.க.,வில் எதிர்ப்பு

 நடிகர் மனைவிக்கு 'சீட்' தி.மு.க.,வில் எதிர்ப்பு
dinamalar :சென்னை:நடிகர் மனைவிக்கு, தி.மு.க.,வில், 'சீட்' கொடுப்பதற்கு, எதிர்ப்பு கிளம்பியுள்ளது.நடிகர் விமலின் மனைவி ப்ரியதர்ஷினி, திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட போவதாக தகவல் வெளியாகி உள்ளது. விமல் மீது மோசடி புகார் கூறி, தஞ்சையை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர், தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கடிதத்தில் கூறியிருப்பதாவது:பட்டுக்கோட்டை தாலுகா, மதுக்கூரில் வசிக்கும் நான், பட்டுக்கோட்டையில் தியேட்டர் ஒன்றை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தேன். அப்போது, விமலுடன் பழக்கம் ஏற்பட்டது. 'மன்னர் வகையறா' படத்தை தயாரிக்க, என்னிடம் விமல், 50 லட்சம் ரூபாய் கேட்டார்.என் வீட்டை அடமானம் வைத்து, பணம் கொடுத்தேன். அதற்காக எனக்கு, 80 லட்சம் ரூபாய்க்கு காசோலை கொடுத்தார்.
படப்பிடிப்பு முடிந்த நிலையில், விமல் சொன்ன தேதியில், காசோலையை வங்கியில் செலுத்திய போது, பணமில்லாமல் திரும்பியது.இது குறித்து பலமுறை, விமலிடம் முறையிட்டபோதும், பணத்தை தரவில்லை. என் வீட்டை விற்று, கடனை அடைத்தேன். விமலுக்கு உதவப் போய், தற்போது நடுத் தெருவில் நிற்கிறேன்.

திருமாவுக்கு 6 இடங்கள் - இன்று முடிவு!

திருமாவுக்கு 6 இடங்கள் - இன்று முடிவு!

 minnambalam :திமுக கூட்டணியில் இரண்டாவது தொகுதிப்பங்கீடாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, இன்று அதற்கான உடன்பாடு கையெழுத்தாகும் என தகவல் கிடைத்துள்ளது.

கடந்த தேர்தலில் மக்கள்நலக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த சிறுத்தைகள் கட்சி, முன்னாள் சகாக்களான இடதுசாரிகள், ம.தி.மு.க.வுக்கு முன்பிருந்தே திமுக அணியில் இடம்பெற்றது. திமுக நடத்தும் அனைத்து கூட்டு நடவடிக்கைகளிலும் வி.சி.க. பங்கேற்றுவருகிறது. மார்ச் 1 நடைபெற்ற ஸ்டாலின் பிறந்த நாள் உரையரங்கத்தில்கூட, திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் போன்றவர்களுடன் சேர்ந்து விசிக தலைவர் தொல்.திருமாவளவனும் கலந்துகொண்டார். மத்திய ஆளும் கட்சியான பாஜகவின் நிலைப்பாடுகளுக்கு எதிராக அவ்வப்போது அதிர்ச்சிதரும் கருத்துத் தாக்குதலிலும் அக்கட்சி ஈடுபட்டுவருகிறது.

திமுக கூட்டணி கட்சிகளும் வரலாற்று பாடங்களும்

திமுக, கூட்டணி கட்சிகளின் தொகுதி பட்டியலை வெளியிட்டார் ஸ்டாலின்- மதிமுகவுக்கு ஈரோடு தொகுதிசெல்லபுரம் வள்ளியம்மை  : திமுக கூட்டணி கட்சிகளின் இழுபறி தமிழகத்திற்கு அவ்வளவு நல்ல செய்தி அல்ல .
காங்கிரசின் கோணத்தில் இருந்து பார்த்தால் சில விடயங்களை அவர்கள் கவனத்தில் எடுக்கவில்லையோ  என்று தோன்றுகிறது   2018 இல் நடந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலும் அங்கு தற்போது நடக்கும் பாஜக ஆட்சி பற்றியும் கொஞ்சம் மீள் ஆய்வு செய்வது
தற்போதைய தமிழக சட்டமன்ற தேர்தல் நிலவரத்தை பற்றி ஒரு தெளிவான சிந்தனைக்கு ஏதுவாக இருக்கும்.
அந்த தேர்தலில் பாஜக பெற்றது 104 எம் எல் ஏக்கள் . காங்கிரஸ் பெற்றது 80 எம் எல் ஏக்கள், மதசார்பற்ற ஜனதா தள் பெற்றது வெறும் 37 எம் எல் ஏக்கள்.
இந்த நிலையில் ஜனதா தள் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு கொடுத்தது  . 80 எம் எல் ஏக்களை கொண்டிருந்த காங்கிரஸ் வெறும் 37 எம் எல் ஏக்கள் உள்ள ஜனதாதள குமாரசாமியை முதல்வராக ஏற்று கொண்டது.
பின்பு காங்கிரசில் இருந்து சிலர் பாஜகவுக்கு தாவியதால் அங்கு பாஜக ஆட்சி அமைந்தது.
80 எம் எல் ஏக்களை கொண்டிருந்த காங்கிரஸ் வெறும் 37 எம் எல் ஏக்களை கொண்டிருந்த குமாரசாமியை முதல்வராக காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள என்னென்ன காரணங்கள் கூறப்பட்டதோ,
அதைவிட பல மடங்கு காரணங்கள் தற்போது திமுக ஆட்சி ஏற்படவேண்டிய அவசியம் உள்ளது

தினகரன் :அதிர்ச்சியாக இருந்தது.. அரை மணி நேரம் தடுத்து பேசினேன்".. சசிகலா விலகியது ஏன்?

Shyamsundar I - tamil.oneindia.com : சென்னை: அரசியலில் இருந்து சசிகலா விலகியதை அடுத்து அவரின் விலகல் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று பேட்டி அளித்துள்ளார். சசிகலா முடிவு குறித்து தினகரன் விளக்கமாக பேசி உள்ளார். அரசியல் வாழ்க்கையில் இருந்து விலகுவதாக சசிகலா அறிவித்துள்ளார். சிறை தண்டனை முடித்து திரும்பி வந்த சசிகலா தமிழக அரசியலில் அதிரடி நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த அதிர்ச்சி முடிவை எடுத்துள்ளார். தேர்தல் நடக்க இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் சசிகலாவின் இந்த அறிவிப்பு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசியலில் இருந்து சசிகலா விலகியதை அடுத்து டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். சசிகலா அரசியலில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து தினகரன் விளக்கி உள்ளார். தினகரன் தனது பேட்டியில், சசிகலாவுக்கு இதில் எந்த பின்னடைவும் இல்லை

மகளின் தலையோடு நடந்து வந்த தந்தை.. அரண்டுபோன போலீஸ்! உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தாய் மாவட்டம்


tamil.samayam.com : சர்வேஷ் குமார். இவர் தனது 17 வயது மகளின் தலையை துண்டாக வெட்டி கையில் எடுத்து நடந்து வருவதை கண்ட கிராமவாசிகள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.கையில் மகளின் தலையுடன் நடந்து வரும் சர்வேஷ் குமாரை கண்ட சிலர், போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, இரண்டு போலீஸ் அதிகாரிகள் கிராமத்துக்கு வந்தனர். சாலையில் அமைதியாக நடந்து சென்ற சர்வேஷ் குமாரை மொபைலில் வீடியோ எடுத்துள்ளனர்.அவரிடம் சென்ற போலீசார், பெயர் என்ன, எங்கிருந்து வருகிறார், யாரது தலையை கையில் வைத்திருக்கிறார் உள்ளிட்ட விவரங்களை கேட்டனர். எல்லா கேள்விகளுக்கும் சற்றும் தடுமாற்றம் இல்லாமல் பதில் அளித்தார் சர்வேஷ் குமார்.

சர் A.T.பன்னீர்செல்வத்தை சுமந்து சென்று காணாமல் போன விமானம் .. Imperial Airways Handley Page HP42E "Hannibal"

 HP42E "Hannibal"
இந்த விமானம் திராவிடர்களால் மறக்கவே முடியாத ஒரு விமானம் இந்த விமானம்தான் சர் A.T.பன்னீர்செல்வத்தை சுமந்து சென்று காணாமல் போன விமானம் அந்த 1940... மார்ச் 1.. இங்கிலந்தில் இந்திய அமைச்சருக்கான செயலாளராக பொறுப்பேற்க திராவிடர் இயக்க மூத்த தலைவர் சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் சென்ற விமானம் ஓமன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அவரது விமானம் விபத்துக்குள்ளாகாமல் இருந்தால் பாகிஸ்தானைப் போல திராவிட நாடு அன்று உதயமாகி இருக்கும் என கண்ணீர்வடித்தனர் பெரியார் உள்ளிட்ட பெருந்தலைவர்கள். The Mystery At sunrise on 1st March 1940 Imperial Airways Handley Page HP42E "Hannibal" departed from its eastern base at Karachi Drigh Road airfield bound for Egypt with eight people aboard. Some six hours later it departed after refueling from Jiwani and while crossing the Gulf of Oman - was never seen again.    செய்தி ஆதார இணைப்பு

புதன், 3 மார்ச், 2021

சசிகலா : நான் அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்!’ - ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும்

vikatan.com - பிரேம் குமார் எஸ்.கே.: `புரட்சித் தலைவியின் அன்பு தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்’ -
சசிகலா தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில் சசிகலா, தான் அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``நான் என்றும் வணங்கும் என் அக்கா புரட்சித்தலைவியின் எண்ணத்திற்கு இணங்க அவர் கூறியபடி இன்னும் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் புரட்சித்தலைவர் மற்றும் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஆட்சி தொடர, ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக அம்மாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்ற வேண்டும்.
;நம்முடைய பொது எதிரி தீயசக்தி என்று அம்மா நமக்கு காட்டிய தி.மு.கவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து, விவேகமாக இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட அம்மாவின் தொண்டர்கள் பாடுபட வேண்டும்.

தமிழக அரசியலில் இஸ்லாமியர்களின் நிலை

May be an image of text that says '9 தமுமுக 林 SDPÃ MJK'
ஆலஞ்சியார் ; தமிழக அரசியலில் இஸ்லாமியர்களின் நிலை..தேர்தல் வந்தவுடன் வரிந்துகட்டிக்கொண்டு இயக்க முன்னோடிகள் பாடம் நடத்த தொடங்கியிருக்கிறார்கள்..
மூன்று தொகுதிகள்தானா..அடகு வைத்துவிட்டார்கள் இரண்டு தொகுதி என சமரசம் ஆனார் என நிறைய கேள்விகள் ..
தமிழகத்தின் இஸ்லாமியர்கள் 5.8% விழுக்காடு இப்போது அரை விழுக்காடு கூடியிருக்கலாம் ..
அதன்படி 12 முதல்14 வரை இடங்கள் கிடைத்திருக்க வேண்டும் ஏன் கிடைக்கவில்லை என யாரும் யோசித்ததாகவே தெரியவில்லை ..
முதலில் இந்திய துணைக்கண்டத்தில் வேறெங்கும் இல்லாத அளவில் அமைப்புகளின் எண்ணிக்கை நாற்பதை தாண்டுகிறது அதில் நான்கைந்தை தவிர மற்றவை லெட்டர்பேட் "குப்பைகள் ".. நான்கைந்திலும் தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கொள்கையில். சமுதாய நலனை விட தன்நலம் பெரிதென உழைக்கிறார்கள் ..
அவர் இருக்குமிடத்தில் நானில்லை என்பதை தங்கள் "குலவழக்கம் " போல் யாரும் விடுவதாயில்லை .. 

திமுக கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை

puthiyathalaimurai.com : அதிமுக. திமுகவில் கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நீடித்துக்கொண்டே போகிறது. தொகுதி பங்கீடுக்கே இவ்வளவு நாட்கள் இழுப்பறி நீடித்து வரும் நிலையில் இன்னும் எந்த கட்சிக்கு எந்த தொகுதி என்பது குறித்தும் பிரச்னை வர வாய்ப்புள்ளது. அதை இன்னும் தலைமைக்கட்சிகள் சமாளிக்க வேண்டி உள்ளது. 
image

puthiyathalaimurai.com :இது முடிவுக்கு வந்ததும் தான் சின்னத்தை பிரதானமாக கொண்டு அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள். தேர்தலுக்கு சரியாக ஒரு மாத காலமே இருக்கும் நிலையில் எவ்வாறு அரசியல் கட்சியினரும் வேட்பாளர்களும் மக்களை கவர்ந்து தேர்தலில் வெற்றி பெறப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியுள்ளது. >இந்த நிலையில் திமுகவில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் சலசலப்பு நீடிக்கிறது. காங்கிரஸ் கட்சி ஒருபக்கமும் இடதுசாரிகள் ஒருபக்கமும் கடுமையான அதிருப்தியில் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.>காரணம் காங்கிரஸ் கட்சி 30 தொகுதிகளை கேட்டு வருகிறது. அதிமுகவில் இரண்டாவது இடத்தில் அங்கம் வகிக்கும் காங்கிரசுக்கு எதிரான பாஜகவுக்கு 25 சீட்டுகளுக்கு மேல் ஒதுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. பாமகவே 23 சீட்டுகள் வாங்கும்போது பாஜக கண்டிப்பாக 25 சீட்டுகளாவது வாங்கும் என காங்கிரஸ் கட்சி எண்ணுகிறது. இதனால் தங்களுக்கும் 25 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சி திமுகவை வலியுறுத்தி வருகிறது. ஆனால் திமுக தரப்பில் 18 சீட்டுகள் மட்டுமே ஒதுக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீங்கள் ஜெயிலுக்குப் போகப்போகிறீர்களா? எடப்பாடி பழனிசாமியிடம் ஆவேசப்பட்ட அமித்ஷா!

dddd
தாமோதரன் பிரகாஷ் - nakkeeran : அதிமுக - பாஜக இடையே நடந்த பேச்சுவார்த்தையில் அமித்ஷா எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாகத் திட்டியுள்ளார். “அடுத்து அமையப்போவது திமுக ஆட்சிதான். நீங்கள் எல்லாம் ஆட்சியில் பல்வேறு தவறுகள் செய்திருக்கிறீர்கள். நாங்கள் இதுவரை ஜெயிலுக்குப் போகாமல் காப்பாற்றி வந்தோம். ஆனால் திமுக ஆட்சி அமைந்தால் நீங்கள் சிறைக்குச் செல்வது தவிர்க்க முடியாது. நான் தினகரனுடன் நேரடியாகப் பேசியுள்ளேன். நாங்கள் தினகரனுக்கு 20 சீட் கொடுக்கிறோம். அந்த சீட்டுகளைப் பாஜகவுக்கு கொடுத்துவிடுங்கள். பாஜக, தினகரனுக்கு சீட் கொடுக்கும். எங்களுக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியைக் கொடுங்கள். அதில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் பாஜகதான் போட்டியிடும். மொத்தம் 60 தொகுதிகளை எங்களுக்கு கொடுங்கள். நாங்கள் விஜயகாந்த் உட்பட அனைவரையும் உங்கள் கூட்டணிக்கு கொண்டுவந்து தருகிறோம். எங்களது கணக்குப்படி சசிகலாவுக்கு ஐந்து சதவீத வாக்குகள் இருக்கிறது. அந்த ஐந்து சதவீத வாக்குகள் அதிமுகவுக்கு எதிராக போகுமானால், அதிமுக தோற்பது உறுதி” என அமித்ஷா எடப்பாடி பழனிசாமியிடம் நேரிடையாகவே சொல்லியிருக்கிறார். 

கர்நாடக மந்திரியின் ‘செக்ஸ்’ வீடியோ .. ராஜினாமா செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் போராட்டம்

daylithanthi : பெங்களூரு: கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி செக்ஸ் புகாரில் சிக்கியுள்ளார். அவர் ஒரு இளம் பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் செக்ஸ் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஓட்டல் ஒன்றின் படுக்கை அறையில் ஒரு இளம்பெண்ணுடன் ரமேஷ் ஜார்கிகோளி அரைகுறை ஆடையுடன் ஆபாசமான முறையில் இருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அவர் படுக்கையில் அந்த பெண்ணுடன் உருண்டு புரள்வது போன்ற காட்சிகள் இருக்கின்றன. அதில் ரமேஷ் ஜார்கிகோளியின் முகம் தெளிவாக தெரிகிறது. செக்ஸ் வீடியோ மட்டுமின்றி, அந்த பெண்ணுடன் அவர் செல்போனில் உரையாடிய ஆடியோ பதிவும் வெளியாகியுள்ளது. மேலும் வாட்ஸ்-அப்பில் அவர்கள் இருவரும் பேசிய பதிவும் வெளியாகியுள்ளது.

திமுகவிடமே இரண்டு சீட்டை திருப்பித் தரும் மமக?

திமுகவிடமே இரண்டு சீட்டை திருப்பித் தரும் மமக?

minnambalam : வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்கி கடந்த மார்ச் 1ஆம் தேதி அக்கட்சிக்கும் திமுகவுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது.   வருத்தமான முகத்தோடு வெளியே வந்த மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா செய்தியாளரிடம் பேசுகையில், “நாட்டின் நலன் கருதியும் தமிழகத்தின் நலன் கருதியும் தியாக மனப்பான்மையோடு இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம்” என்று கூறினார்.

அ.தி.மு.க.வுக்கு அமித் ஷா மிரட்டல் தினகரன் சசிகலாவை அ.தி.மு.க. கூட்டணியில் சேர்க்கவேண்டும் .


daylithanthi  :சென்னை தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பால் அரசியல் கட்சிகள் பரபரப்படைந்துள்ளன. அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு பெரிய கட்சிகளும் அவசர அவசரமாக கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன. 2 கட்சிகளிலுமே இன்னும் கூட்டணி இறுதி செய்யப்படவில்லை. அ.தி.மு.க. கூட்டணியைப் பொறுத்தவரை, பா.ம.க.வுக்கு மட்டும் 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பா.ஜ.க., தே.மு.தி.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் 28-ந் தேதி தமிழகம் வந்திருந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, அன்று இரவு சென்னையில் தங்கியிருந்தபோது அவரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து பேசினார்கள்.

காங். பிடிவாதமாக கேட்டது 41 தொகுதிகள்... 24-ல் நிற்கும் திமுக.. 25 கிடைக்கலாம்.. இதுதான் நிலவரம்!

  Mathivanan Maran  - tamil.oneindia.com  : சென்னை: 41 தொகுதிகள் கேட்ட காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சமாக 25 தொகுதிகள் ஒதுக்கும் நிலையில்தான் இருக்கிறதாம் திமுக. சட்டசபை தேர்தலில் திமுக அணியில் காங்கிரஸ் தற்போதுவரை இடம்பெற்றுள்ளது.
திமுக இந்த முறை அதிக இடங்களில் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளது.
சிபிஎம் கேட்டது 11 தொகுதிகள்... அதிகபட்சம் 5 தான்.. திமுக கறார் காட்டியதால் படு அப்செட்!
லோக்சபா தேர்தலைப் போல கூட்டணி கட்சிகளுக்கு கணிசமான இடங்களை வழங்க மறுக்கிறது. கூட்டணி கட்சிகள் எதிர்பார்க்கும் இடங்களுக்கு நேர் எதிராக சொற்ப தொகுதிகளைத்தான் கொடுப்போம் என்பதில் பிடிவாதமாகவே இருக்கிறது திமுக.
இது திமுக கூட்டணியில் வெளியில் சொல்ல முடியாத பெரும் மனக்கசப்பை வெளிப்படுத்தியுள்ளது. திமுக கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றும் மிகப் பெரும் மனக்குமுறலில்தான் இருக்கின்றன.
ஆனால் தற்போதைய அரசியல் சூழலில் ஆகக் கூடுமானவரை திமுகவுடன் போராடி தொகுதிகளை பெறலாம் என நினைக்கின்றன அந்த கட்சிகள்.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் 41 தொகுதிகளை எதிர்பார்த்தது. திமுகவோ பங்கு சந்தை கணக்காக தொகுதிகள் எண்ணிக்கைகளில் ஏற்ற இறக்கங்களை காட்டியது.
ஒருகட்டத்தில் 18 தொகுதிகள் என்றெல்லாம் பேசப் போய் கடுப்பாகிப் போகினர் காங்கிரஸ் தலைவர்கள். 24 தொகுதிகளில் நிற்கும் திமுக 24 தொகுதிகளில் நிற்கும் திமுக 18-ல் தொடங்கிய பேரம் 20, 22 என நகர்ந்தது.

திமுக கூட்டணியில் இழுபறி? திமுக - காங்கிரஸ் கூட்டணியில் சிக்கலா ?

கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியை இந்தியா, ஜப்பானுக்கு கொடுத்தது இலங்கை

daylithanthi: அதே சமயம், இந்த முனையத்தின் மறுபுறத்தில் கொழும்பு சர்வதேச கன்டெய்னர் முனையத்தை சீன நிறுவனம் அமைத்து வருகிறது. இதனால், சீனாவின் அழுத்தம் காரணமாக இருக்குமா? என்றும் சந்தேகிக்கப்பட்டது. எனினும், சர்வதேச உறுதிமொழிகளை இலங்கை அரசு கடைப்பிடிக்கும்படி இந்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தியது. 

இந்நிலையில், கொழும்பு துறைமுக கிழக்கு கன்டெய்னர் முனையம் அமைக்கும் பணி இந்தியா, ஜப்பானுக்கு மட்டுமே வழங்கப்படும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இத்தகவலை அந்நாட்டு அரசின் செய்தித் தொடர்பாளர் கேஹிலியா ராம்புக்வெல்லா உறுதி செய்துள்ளார். அவர் கூறுகையில், ‘‘கிழக்கு கன்டெய்னர் முனைய பணியை இந்தியா, ஜப்பானுக்கு வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இரு நாடுகளுக்கும் 85 சதவீத பங்குகள் வழங்கப்படும்”என்றார்.

கூட்டணியில் தொடர்வதா? திருமா அவசர ஆலோசனை!

minnambalam :திமுக உடனான விடுதலைச் சிறுத்தைகளின் கூட்டணி குறித்தும், திமுக வழங்க முன்வந்துள்ள தொகுதிகளின் எண்ணிக்கை குறித்தும் விவாதிக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சிறப்புச் செயற்குழுக் கூட்டம் நேற்று மார்ச் 2ஆம் தேதி கூடியது.

சிறுத்தைகள் சார்பில் திமுகவுடனான கூட்டணியில் எத்தனை தொகுதிகள் என்பது குறித்து மார்ச் 1ஆம் தேதி திமுக பேச்சுவார்த்தை குழுவினருடன் விடுதலைச் சிறுத்தைகளின் பேச்சுவார்த்தை குழுவினர் திருமாவளவன் தலைமையில் சந்தித்தனர்.

அப்போது சிறுத்தைகள் சார்பில் குறைந்தபட்சம் ஒன்பது தொகுதிகளில் இருந்து ஆரம்பிக்க, திமுகவிலோ இரண்டு தொகுதிகள் என்று ஆரம்பித்தனர். பேச்சுவார்த்தையின் முடிவில் 4 தொகுதிகள் வரை தருவதாகவும் தலைவரை நேரில் சந்தித்து பேசினால் ஒரு தொகுதிக்கு கூடுதலாக 5 தொகுதிகள் வரை பெற வாய்ப்பிருக்கிறது என்றும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்தனர்.

கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம்: ஸ்டாலினுக்கு ராகுல் அனுப்பிய மெசேஜ்!

minnambalam.com : திமுக - காங்கிரஸ் தொகுதி பேச்சுவார்த்தை பிப்ரவரி 25ஆம் தேதி முதன்முதலாக ஆரம்பித்தது. ஆனால், அதன் பிறகு காங்கிரஸ் தரப்பிலும், திமுக தரப்பிலும் சேர்ந்து பேசாத நிலையில் மீண்டும் நேற்று மார்ச் 2ஆம் தேதி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் அறிவாலயத்துக்கு வந்தனர்.

தொகுதிப் பங்கீடு தொடர்பாக மீண்டும் அவர்கள் திமுக குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஏற்கனவே முதல்கட்டமாக கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, காங்கிரஸ் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, மேலிடப்பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் போன்றோர் வந்த நிலையில் அவர்கள் நேற்று வரவில்லை.   சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி,

"பேச்சுவார்த்தை வெற்றிகரமாக மனப்பூர்வமாக மகிழ்ச்சிகரமாக நடந்தது. எங்களுக்குத் தேவையான தொகுதிகள் என்ன என்பதை அன்று உம்மன் சாண்டி தெரிவித்துவிட்டார். இடையிலே எங்கள் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் வந்ததால் நாங்கள் அங்கே சென்று விட்டோம்.

NEET PG - க்கு விண்ணப்பிப்பதையே ஒரு பரீட்சைபோல ஆக்கிவைத்துள்ளது பிஜேபி அரசு .

Murugeswari Madurai : NEET PG - க்கு விண்ணப்பிப்பதையே ஒரு பரீட்சைபோல ஆக்கிவைத்துள்ளது பிஜேபி அரசு .
எல்லாமே ஆன்லைன் . நீண்ட க்யூ .
ஓரிரு பிரவுசிங் சென்டர்களிலேயே விண்ணப்பிக்கத்தெரிந்தவர்கள் இருப்பார்கள் . ரியல்டைம் ஃபோட்டொ வேறு கேட்கப்பட்டுள்ளது .
தேர்வுக்கட்டணமும் இம்முறை மிக அதிகம் .
பிரவுசிங் செண்ட்டரில் உள்ள டெக்னிகல் guy அவனுக்குவேண்டியவர்களுக்கெல்லாம் விண்ணப்பித்துமுடித்துவிட்டு இறுதியாகத்தான் நம்மிடம் வருவான் .
OTP வரவில்லையென்று நமது ஈமெயில் பாஸ் வேர்ட் எல்லாம்கேட்டு marrow அக்கௌன்ட் திருடிவிற்பான் .
இதெல்லாம்நடக்கிறது .
கொடுமையான நீட் .
எவன்சொன்னாலும் சொல்லாவிட்டாலும் பிஜேபியின் அலப்பறைகளை நன்கறிந்த காரணத்தால் ,
தமிழ்நாட்டில் தேர்வுமையம் முதல்நாளிலேயே தீர்ந்துவிடுமென்ற எனது ஊகத்தின் அடிப்படையில் , லீவு போட்டுவிட்டு photo studio சென்று் புகைப்படம் எடுத்துக்கொண்டு பதினொன்றரைக்கே பிரவுசிங் சென்டருக்குச்சென்றால் ...
மூணுமணிக்குத்தான் site ஓபன் ஆகும் என்றான் சைத்தான் .
காத்திருந்தேன் .

திருப்பூரில் ஏடிஎம் இயந்திரம்... பெயர்த்து எடுக்கப்பட்ட சம்பவம்.. வடமாநிலத்தை சேர்ந்த 6 பேர் கைது

Vigneshkumar - tamil.oneindia.com : திருப்பூர்: கூலிபாளையம் அருகே வங்கி ஏடிஎம் இயந்திரம் அடியோடு பெயர்த்து எடுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் வடமாநில இளைஞர்கள் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

திருப்பூரை அடுத்துள்ள கூலிபாளையத்தில் பேங்க் ஆப் பரோடா வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரம் உள்ளது. இந்த ஏடிஎம் இயந்திரத்தை கடந்த 22 ஆம் தேதி கொள்ளையர்கள் சிலர் அடியோடி பெயர்த்து எடுத்துச் சென்றனர். இது தொடர்பாக வங்கி கண்காணிப்பு கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது காரில் வந்த முகமூடி அணிந்த 4 பேர் கொண்ட கும்பல், ஏடிஎம் இயந்திரத்தை கயிறு கட்டி அப்படியே அடியோடு பெயர்த்து எடுத்துச் சென்றது தெரியவந்தது.                 ஏடிஎம் இயந்திரம் அடியோடு பெயர்த்து எடுத்துச் செல்லப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இந்தக் கொள்ளை சம்பவம் குறித்து விசாரிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

ஆயிஷா ஆரிப் ராஜஸ்தான்! சீதன கொடுமையால் சபர்மதி நதியில் குதித்து தற்கொலை.. முன்பாக வெளியிட்ட வீடியோ Ayesha Khan Suicide Video Before Jumping Into Sabarmati River

.  அஹமதாபாத்தில் வரதட்சணை கொடுமையால் சபர்மதி நதியில் குதித்து தன்னுயிரை மாய்த்த 23 வயது ஆயிஷா தற்கொலை முடிவுக்கு நிமிடங்கள் முன்பு சிரித்தபடியே வீடியோவும் எடுத்து அனுப்பியுள்ளது தற்போது வைரலாகி வருகிறது. 

 2018 ல் ராஜஸ்தான் ஜலூர் பகுதியைச் சேர்ந்த ஆரிப் கானுடன் நடந்த திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து வரதட்சனை கேட்டு ஆரிப்கான் குடும்பத்தினர் மகளை துன்புறுத்தியதாக கூறுகிறார் கூலி வேலை செய்யும்

ஆயிஷா தந்தை லியாக்கத் அலி.    மகளின் வாழ்க்கை கருதி கேட்கும் போதெல்லாம் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தபோதும் சில மாதங்களுக்கு முன் ஆயிஷாவை ஆரிப் கான் துன்புறுத்தி திரும்ப அனுப்பியதாக கண் கலங்குகிறார் லியாக்கத் அலி...
தனது மரணத்திற்கு முந்தைய நிமிடத்தில் நதியில் குதிப்பதற்கு முன் பகிர்ந்த வீடியோவில்...
"நான் ஆரிபுக்கு தேவையான சுதந்திரத்தை வழங்குகிறேன்.
எனது இந்த முடிவுக்கு நானே காரணம்.

உதயநிதி ஒரே தொகுதியை விட தமிழகம் முழுவதும் ஒடி ஒடி வேலை செய்யவே விரும்புகிறார்?

Hemavandhana - tamil.oneindia.com : சென்னை: உதயநிதி ஸல்டாலின் திடுதிப்பென்று ஒரு முடிவு எடுத்ததாக கூறி ஒரு வதந்தியை சிலர் கிளப்பிவிட்டு விட்டனர்.. 

அது உண்மையா, பொய்யா, வதந்தியா, யூகமா, என எதுவுமே புரியாத நிலையில், உடன்பிறப்புகள் பெருங் குழப்பத்தில் தவித்து வந்த நிலையில், இது முற்றிலும் வதந்தியே என்பது தற்போது தெரியவந்துள்ளது..             இதற்கான விளக்கமும் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதயநிதியை பொறுத்தவரை, மிக வேகமாக கட்சிக்குள் வந்தவர்.. எந்த அளவுக்கு உள்ளே நுழைந்தாரோ, அந்த அளவுக்கு உச்சத்தை எட்டிப்பிடித்தார்..             சில சீனியர்களின் அதிருப்தி, வருத்தம், கவலைகளுக்கு நடுவே உதயநிதியின் வளர்ச்சி சென்று கொண்டே இருந்தது. தூங்கி வழிந்து கொண்டிருந்த இளைஞரணியை தட்டி எழுப்பி, ஓட வைத்தவரும் உதயநிதிதான்.. இளைஞர்களுக்கான முக்கியத்துவம் கட்சியில் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் இவர் கொண்டிருப்பதால்தான், பல மாவட்டங்களில் நிர்வாகிகள் பலருடன் இணக்கமான போக்கும் இல்லாமல் உள்ளது.

திமுக பொதுக்கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியீடு? காங்கிரஸ் கட்சிக்கு 24 தொகுதிகள்?

hindutamil.in : திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மமகவுடன் நேற்று முன் தினம் தொகுதி பங்கீடு உறுதியானது. இந்நிலையில் நேற்று மதிமுக, விசிகவுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும், இன்று கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸூடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவில் விருப்ப மனுத் தாக்கல் கடந்த 28-ம் தேதி முடிவடைந்த நிலையில், விருப்ப மனுத் தாக்கல் செய்தவர்களுடனான நேர்காணல் வருகிற 6-ம் தேதி முடிவடைகிறது. 

பட்டியல் ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், வரும் 7-ம் தேதி திருச்சி பொதுக்கூட்டத்தில் கூட்டணிக்கட்சி தலைவர்கள் முன்னிலையில் திமுக போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிட வாய்ப்புள்ளது என்று திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

சென்னை புத்தக கண்காட்சி 2021 அதிகமாக ட்யூப்சேனல்காரர்கள்..

  

Abdul Hameed Sheik Mohamed : புத்தகக்கண்காட்சியில் வாசகர்களைவிட அதிகமாக ட்யூப்சேனல்காரர்களை பார்க்க முடிகிறது. எனக்கு மீடியா ஃப்ரண்ட்லியான ஆள் என்று பெயர் உண்டு. என்னையே வெறுக்க வைத்துவிட்டார்கள். நண்பர்களிடம் ஐந்து நிமிடம் பேசமுடிவதில்லை. ஒரு கேமராவை நட்டு வைத்து மைக்கை நீட்டுகிறார்கள். ஒரே கேள்விதான் ' புத்தகக் கண்காட்சி பற்றி ஏதாச்சும் சொல்லுங்க'. நானும் ஒரே பதிலை நூறுமுறை சொல்லி களைத்துவிட்டேன். பலரிடமும் நாசூக்கான சொல்லிப்பார்த்துவிட்டேன் ' யூ ட்யூப்காரர்களுக்கான எந்தக் கண்டெண்டும் இங்க கிடைக்காது..டைம் வேஸ்ட் பண்ணாதீங்க' என்று. அவர்களுக்கு ஏதாச்சும் ஒரு ஃபுட்டேஜ் வேண்டும். ஒரு எழுத்தாளனிடம் , பதிப்பாளனிடம் கேட்க உருப்படியான எந்தக் கேள்வியும் இல்லையா? கொஞ்சமாச்சும் ஹோம் ஒர்க் பண்ணுங்க.

நாளையிலிருந்து கீழ்கண்ட கேள்விகளை கண்காட்சியில் டிவி மற்றும் யூ ட்யூப் சானல்காரர்கள் என்னிடம் கேட்க வேண்டுமாய் வேண்டுகிறேன்.
1. மனுஷ்..விற்கவே விற்காத புத்தகங்களைபோட எத்தனை வட்டிக்கு கடன் வாங்குவீர்கள்?

செவ்வாய், 2 மார்ச், 2021

நல்லா இருந்த நாடுகளும் நாசமாக்கிய மதங்களும் .. ஈரான் ஆப்கானிஸ்தான் லிபியா ......

May be a black-and-white image of 3 people and people standing
May be an image of 5 people, people standing, people sitting and outdoors
May be an image of outdoors

Sivakumar Shivas: · வெறும் ஐம்பது வருடத்திற்கு முன்பு இரானிய பெண்களும் ஆப்கானித்தனியா பெண்களும்....இவ்வளவு சுதந்திரமாக இருந்திருக்கிறார்கள். இந்த இரு நாடுகளும் தொன்றுதொட்டு இஸ்லாமிய நாடுகள் தான்! ஏன் இப்போது குப்பை பைகள் போல் புர்காவினுள் அடைக்கப்பட்டார்கள்? ஏன் இந்த மாற்றம்? திடீரென்று கண்ணியத்திற்கு கூடுதல் தேவை எங்கிருந்து வந்தது! 

Radha Manohar :ஆப்கானிஸ்தானிலும் ஈரானிலும் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமான பொது ஆடை என்பது வெள்ளை நிற காட்டன் அல்லது காட்டன் போலியெஸ்டர் ஷேர்ட்டும் நீல நிற டெனிம் ஜீன்சும்தான்  ஆண்பெண் பேதமின்றி இளையோர்கள் எல்லோரும் அணியும் ஆடையாக அது இருந்தது. அதிலும் அப்போதெல்லாம் ஆண்களா அதிகம் புகைப்பது பெண்களா அதிகம் புகைப்பது என்று கண்டுகொள்ள முடியாத அளவு சிகரெட் புகைக்கும் பழக்கம் இருந்தது.
குறிப்பாக படித்த பெண்களின் தொகை அதிகமாக இருந்தது  அதிலும் அவர்கள் ஆங்கிலத்தில் மேலோங்கி இருந்தார்கள்
ஈரான் மன்னர் ஷாவின் ஆட்சியில் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று படிப்பதற்கு அரசு பணம் வழங்கப்பட்டது .  
அந்த படித்த வர்க்கத்தை பார்த்து படிக்காத ஆண்களுக்கு பொறாமை உண்டானது  தங்கள் சமூகத்தில் வேகமாக விழுந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தார்கள்.
அவர்களுக்கு அப்போது வந்து சேர்ந்தான் கொமேனி என்றொரு கிறுக்கன்.
இதிலும் ஒரு வேதனையான வேடிக்கை மேற்கு நாடுகளுக்கு சென்று படித்த இளையோர்கள் ஆண்பெண் பேதமின்றி கொமேனியின் சீமானிய பேச்சுக்களால் கவரப்பட்டார்கள்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ்-க்கு எத்தனை இடங்கள்?.. 2 நாளில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் - கே.எஸ்,அழகிரி

திமுக கூட்டணியில் காங்கிரஸ்-க்கு எத்தனை இடங்கள் என்பது குறித்து, 2 நாளில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் - கே.எஸ்,அழகிரி

daylithanthi :சென்னை, திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில், காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, எம்.எல்.ஏ. ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கே.எஸ்,அழகிரி கூறியதாவது:- "கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் இரு கட்சிகள் இடையே பெருமளவுக்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது". 

வன்னியர்களுக்கான 10.5 % உள் ஒதுக்கீட்டை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு

அதிமுக - பாமக கூட்டணி உறுதி; பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு
BBC :தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த உள் ஒதுக்கீடு வழங்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதனை எதிர்த்து தென்னாடு மக்கள் கட்சியின் நிறுவனரான கணேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கிறார். ஜாதிவாரி கணக்கெடுப்பு துவங்கியுள்ள நிலையில், அந்தக் கணக்கெடுப்பு முடியாமல் எப்படி இந்தச் சட்டம் இயற்றப்பட்டது என அந்த மனுவில் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

தனிச்சின்னத்தில் போட்டி- வைகோ அறிவிப்பு.. வரும் சட்டமன்ற தேர்தலில்!

வரும் சட்டமன்ற தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டி- வைகோ அறிவிப்பு
maalaimalar : சென்னை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் தொடங்க இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில், அரசியல்கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்தி வருகின்றன தி.மு.க.வை பொறுத்தவரை, அந்த கூட்டணியில் ஏராளமான கட்சிகள் இருக்கின்றன. நேற்று 2-வது நாளாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன்படி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தி.மு.க உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வரும் நிலையில் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றன. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், இரட்டை இலக்கத்தில் தொகுதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு 24 தொகுதிகள் ஒதுக்க திமுக முடிவு என தகவல்..!

காங்கிரஸ் கட்சிக்கு 24 தொகுதிகள் ஒதுக்க திமுக முடிவு என தகவல்..!
  daylithanthi :சென்னை, தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் தொடங்க இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில், அரசியல்கட்சிகள் எல்லாம் இப்போதுதான் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்தி வருகின்றன. ஆளுங்கட்சியான அ.தி. மு.க., பா.ம.க.வை கூட்டணியில் இணைத்து கொண்டதுடன், அந்த கட்சிக்கு 23 தொகுதிகளையும் வழங்கியுள்ளது. தொடர்ந்து, பா.ஜ.க., தே.மு.தி.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

எதிர்க்கட்சியான தி.மு.க.வை பொறுத்தவரை, அந்த கூட்டணியில் ஏராளமான கட்சிகள் இருக்கின்றன. முதற்கட்டமாக நேற்று முன்தினம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய 2 கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தி.மு.க. நடத்தியது.

தி.மு.க காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி கேட்பது எத்தனை... தர நினைப்பது எத்தனை?

தி.மு.க கூட்டணிக் கட்சியினர்

அழகுசுப்பையா ச - viikatan : தி.மு.க - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்படாத நிலையில் விரைவில் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கும்பட்சத்தில் காங்கிரஸின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும் என்பது பற்றி அதன் மூத்த நிர்வாகிகளிடம் பேசினோம்...

 தி.மு.க தன்னுடைய கூட்டணியில் உள்ள பிரதான கட்சியான காங்கிரஸுடனான தொகுதிப் பங்கீட்டில் இன்னும் சுமூகமாக முடிவு எட்ட முடியாமல் தவித்து வருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டதைவிட அதிக இடங்களை ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் அதில் பாதிதான் ஒதுக்குவோம் என தி.மு.க-வும் விடாக்கண்டன் கொடாக்கண்டனாக இருக்க, தொகுதிப் பங்கீட்டில் தெளிவான முடிவை எடுக்க முடியாமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கின்றன.                                           இதற்கிடையே பிப்ரவரி 28-ம் தேதி மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் தி.மு.கவின் தொகுதிப் பங்கீட்டு குழு அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது. இதற்கடுத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு மூன்று இடங்களும், மனிதநேய மக்கள் கட்சிக்கு இரண்டு இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களை விழுங்க துடிக்கும் ஆர் எஸ் எஸ் பாசிசம்!

                          ரதி மல்லிகா : · எல்லா வகை இந்தியர்களையும் அடிமை படுத்தும் RSS அமைப்பு வளர்ச்சி அடைந்து விட்டது, நாடார், கோனார், ஆசாரி, வேறு எவரும் தப்ப முடியாது... பிராமணர்களுக்கு அடிமை என்ற நிலை வரும்...எச்சரிக்கை ரிப்போர்ட்... ஆர்எஸ்எஸ் அதன் விரல் நுனியை பார்க்கவே முடியாது இதோ அதன் விஸ்வரூபம்.. .ஆர் எஸ் எஸ் என்ற பிரம்மாண்டம்..
குடியரசுத் தலைவர்
பிரதமர், உள்துறை அமைச்சர்
மத்திய அமைச்சர்கள்
துணைக் குடியரசுத் தலைவர்
பாராளுமன்ற சபாநாயகர்
மற்றும்18 முதலமைச்சர்கள்
29 கவர்னர்கள், 417 எம்பிக்கள்
1600 க்கும் மேற்பட்ட எம் எல் ஏ கள்
1 லட்சம் கிளைகள்15 கோடி
தன்னார்வத்தொண்டர்கள்
2 லட்சம் சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளிகள்,5 லட்சம் ஆசிரியர்கள்
1 கோடி மாணவர்கள், 42 கல்லூரிகள்

மனோ கணேசன் (மலையக எம்பி ) பாஜக ஆதரவாளரா? சமூக வலைக்கு வந்த விவகாரம்

May be an image of 1 person, sitting, standing and ocean
Mano Ganesan MP
Mano Ganesan - மனோ  : "இந்திய தேசிய பாதுகாப்பு" என்பதை தனது வெளிநாட்டு கொள்கையில் மைய அம்சமாக, பிரதமர் இந்திரா கருதினார்.
இதேவிதமாகவே, இன்று பிரதமர் மோடியும் கருதி செயற்படுவதாக தெரிகிறது.
விசேடமாக, தனது தேசிய தென்முனை பாதுகாப்பு வலயத்துக்கு உள்ளே, "இலங்கை" வருவதாக,  மோடி அரசு இன்று நினைக்கினறது
தேசிய பாதுகாப்பை பலப்படுத்த, பாஜகவுக்கு தென்முனையில் இருக்கும் தமிழ்நாடு மிகவும் அவசியமாகின்றது.
இந்த பின்னணியிலேயே, தமிழக தேர்தலில், பிரதமர் மோடி, பாஜகவின் இரும்பு மனிதன் அமிட்ஷா ஆகியோர் அதிக அக்கறை காட்டுகின்றனர்.
அதிமுக, பாஜக, கூட்டணியில் சசிகலா கட்சியையும் உள்வாங்கி பலப்படுத்த பாஜக திட்டமிடுகிறது.
இவை எல்லாவற்றையும் முடிச்சு போட்டு, சில இடைவெளிகளையும் நிரப்பினால், பாக்கு நீரிணைக்கு அப்பால் தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது, இந்த பக்கம் இலங்கையின் ராஜபக்ச அரசுக்கு சந்தோஷத்தை தராது.

சீமான் - எடப்பாடி பழனிசாமி ரகசிய டீலிங்?

/tamil.samayam.com : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் எடப்பாடி பழனிசாமி ரகசிய டீலிங் பேசியுள்ளதாக குற்றச்சாட்டு முன்....    

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகிவிட்டதால் அத்தனை அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றன. விருப்ப மனு விநியோகத்தை சில நாள்களுக்கு முன்னரே கட்சிகள் தொடங்கிவிட்டன. யார் யார் எந்த தொகுதியில் போட்டியிடப் போகின்றனர் என்பது தற்போது ஹாட் டாபிக்காக உள்ளது.

2 சீட்: மமகவில் அதிருப்தி குரல்கள்! சசிகலாவைச் சந்திக்கிறார் ஹைதர் அலி

தி.மு.க. கூட்டணி: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-3; மனிதநேய மக்கள் கட்சிக்கு- 2 ; ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகளுடன் பேச்சுவார்த்தை
minnambalm : திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு நேற்று (மார்ச் 1) ஸ்டாலின் பிறந்தநாளன்று அந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டார் மமக தலைவர் ஜவாஹிருல்லா. இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாட்டு நலனுக்காகவும், தமிழக நலனுக்காகவும் தியாக மனப்பான்மையோடு இதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்திருந்தார். மனித நேய மக்கள் கட்சி இரண்டாம் நிலை நிர்வாகிகள் மத்தியில் இதற்கு கடுமையான வருத்தமும், ஏமாற்றக் குரல்களும் வெளிப்பட்டுவருகின்றன. TMMKMEDIA என்ற அவர்களது முக நூல் பக்கத்திலேயே இதுகுறித்த கடுமையான கருத்துகளை வெளிப்படையாக பதிவிட்டு வருகின்றனர்.

மாண்புமிகு தளபதியார் அவர்களுக்கு அய்யா அதியமான் வாழ்த்து செய்தி.....

Thangaraj Gandhi : · திமுக தலைவர் M. K. Stalin மாண்புமிகு தளபதி அவர்களை அரியணையில் அமர்த்துவதே. அருந்ததியர் மக்கள் தெரிவிக்கின்ற பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆதித்தமிழர் பேரவையின்
வாழ்த்துச் செய்தி...
பன்னெடுங்காலமாக மனித சமுதாயத்தை பாகுபடுத்திய ஆரியம் எனும் பார்ப்பனியத்திற்கு
கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக சவுக்கடி கொடுத்து வருவதென்றால் அது திராவிடம் மட்டும் தான்.
பார்ப்பனியம் எனும் நோயை விரட்ட திராவிடம் கையிலெடுத்த அரும்பெரும் மருந்து சமூக நீதி.
அந்த சமூக நீதி கோட்பாட்டை மக்களிடத்தில் சேர்த்த
நீதிக்கட்சி மற்றும் மாபெரும் ஆளுமைகளான தந்தை பெரியார்,
புரட்சியாளர் அம்பேத்கர்,  பேரறிஞர் அண்ணா,மற்றும்
முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர்கள் ஆரியத்தை எதிர்த்து சமத்துவத்தை உருவாக்க போராடியதால் அவர்கள் எப்போதும் என்றும் மக்களால் போற்றுதலுக்குரியவர்களாக இருக்கிறார்கள்

மைனர் சிறுமியை வன்புணர்வு செய்தவரை திருமணம் செய்ய சம்மதமா என்று கேட்ட உச்சிக்குடுமி நீதிமன்றம்

BBC :  தமிழக, இந்திய மற்றும் உலக அளவிலான செய்திகளை நேயர்கள் இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம். மைனர் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியை அவர் பதின்ம வயது கடந்த பிறகு திருமணம் செய்வீர்களா என குற்றம் சுமத்தப்பட்ட நபரிடம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே கேள்வி எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்பாக செஷன் நீதிமன்றம் வழங்கிய முன் ஜாமீன் மனுவை நிராகரித்த மும்பை உயர் நீதிமன்றத்தின் ஒளரங்காபாத் கிளையின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே அடங்கிய அமர்வு சமீபத்தில் விசாரித்தது.

அப்போது, அவரை (சிறுமி) திருமணம் செய்து கொள்வீர்களா என மனுதாரரிடம் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு குற்றம் சுமத்தப்பட்டுள்ள அந்த அரசு ஊழியரின் வழக்கறிஞர் இது பற்றி எனது கட்சிக்காரரிடம் பேசிய பிறகு பதில் தெரிவிக்கிறேன் என கூறியிருக்கிறார்.

தமிழர்களின் மக்கள்தொகை குறைவது ஆபத்து - எச்சரிக்கும் ஆனந்த் சீனிவாசன்!

தமிழ்நாட்டில் இதுவரை நடந்த தேர்தல் குறித்து சிறிய வரலாற்று செய்திகளை பார்க்கலாம்...

May be an image of 1 person and text that says 'ஆர்.வி- எம்.ஜி. ஆர் அணைப்பு திராவிட இயக்க அரசியலை ஒழிக்க பார்ப்பனப் பிணைப்பு!'
Kandasamy Kandasamy : தேர்தல் களம் கண்ட தமிழ்நாட்டின் வரலாற்றின் பதிவு* நண்பர்களே! வணக்கம்! *எல்லா புகழும் எம்பெருமான் தலைவர் கலைஞர் அவர்களுக்கே !* நண்பர்களே! தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டது தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி தேர்தல் பணிகளில் படுவேகமாக
ஈடுபடப் போகின்றன
இன்றைய பதிவில்
தமிழ்நாட்டில் இதுவரை நடந்த தேர்தல் குறித்து சிறிய வரலாற்று செய்திகளை பார்க்கலாம்
என்று நினைக்கிறேன்
தமிழ் நாட்டின் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 234
நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 39
1986 வரை தமிழ் நாட்டில் இரண்டு அடுக்கு சட்ட மன்றங்கள் இருந்தன
ஒன்று சட்ட மேலவை
மற்றொன்று சட்டமன்றம்
சட்டமேலவை இப்பொழுது இல்லை
தற்போது சட்டமன்றம்மட்டுமே உள்ளது