சனி, 13 பிப்ரவரி, 2021

இலங்கை நாடாளுமன்றத்தில் புலிகள், பிரபாகரன் குறித்து பேச தடை – அரசு திட்டம்

BBC :இலங்கை நாடாளுமன்றத்திலுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு  விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்க முடியாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் எட்மிரல் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயரிய நாடாளுமன்ற சபையில்  விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை புகழ்ந்து பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள அமைப்பொன்று தொடர்பில் உயரிய நாடாளுமன்றத்தில் புகழ்ந்து பேசுவதற்கு இடமளிக்க முடியாது எனவும் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார். 

ஜெர்மன் நாடாளுமன்றத்தில் நாசிசவாதம் தொடர்பிலோ அல்லது ஹிட்லர் தொடர்பிலோ பேச முடியாது என அவர் கூறுகின்றார். அதேபோன்று,  விடுதலைப் புலிகளின் தலைவர் என்பவர், லட்சக்கணக்கான மக்களை கொலை செய்த ஒருவர் என சரத் வீரசேகர குறிப்பிடுகின்றார்.

வீடு புகுந்து குழந்தைகளை தூக்கிச் சென்ற குரங்குகள்!

வீடு புகுந்து குழந்தைகளை தூக்கிச் சென்ற குரங்குகள்!
minnambalam : தஞ்சாவூர் அருகே வீட்டிலிருந்த இரு பச்சிளம் குழந்தைகளைக் குரங்குகள் தூக்கிச் சென்றதில் ஒரு குழந்தை இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மேல அலங்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி புவனா. இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் இரட்டை பெண் குழந்தை பிறந்துள்ளது. இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் புவனா தனது இரட்டை குழந்தைகளை வீட்டினுள் பாயில் படுக்க வைத்துவிட்டு கழிப்பறைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டுக்குள் புகுந்த குரங்குகள், பாயில் படுக்க வைத்திருந்த குழந்தைகளை தூக்கி சென்றுள்ளது. சத்தம் கேட்டு கழிவறையில் இருந்து வந்த புவனா கத்தவே ஒரு குழந்தையை மேற்கூரையில் போட்டு விட்டு மறு குழந்தையை வீட்டின் பின்னே உள்ள பெரிய கோட்டை அகழியில் தூக்கிப் போட்டுவிட்டு குரங்குகள் சென்றுள்ளன.

ராமகிருஷ்ண மடம் ஒரு அரசியல் கூடம்... விவேகானந்தர் ஒரு அரசியல்வாதி

May be an image of 2 people
Sathishsr Karat Tamilan: Osho on_Ramakrishna Mission. Ramakrishna and Vivekananda. இந்த இரு பெயர்களை ஒரே நேர்கோட்டில் பயன்படுத்துவதே தவறு. இருவரும் வெவ்வேறு தரத்தை கொண்டவர்கள். ராமகிருஷ்ணா மிஷன் என்பதை ராமகிருஷ்ணர் உருவாக்கவில்லை. விவேகானந்தரின் படைப்பு அது. அதனால் அது ஞானமடைந்த மனிதரால் உருவாக்கப்படவில்லை. விவேகானந்தர் ஒரு அறிவார்ந்த அரசியல்வாதி. கிறிஸ்தவர்கள் மத்தியில் பேசும்போது ஜீசசை உயர்த்தி பேசுவார். புத்த மதத்தை பற்றி பேசும்போது புத்தரை உயரத்தி பேசுவார். இயேசுவிடமோ புத்தரிடமோ உள்ள வெளிப்படையான முரண்பாடுகளை அவர் பேசவே மாட்டார். அவர்கள் வேதங்களின் தவறுகளைப் பற்றி அவர் பேச மாட்டார். நான் அப்படியல்ல.. தவறுகளை சுட்டிக்காட்ட நான் தயங்கமாட்டேன். ராமகிருஷ்ண மடம் எல்லா மதங்களின் சங்கமாம்..!!.

நெய்வேலி சுரங்க பொறியிலாளர்கள் தேர்வு . ஆறு இலட்சம் பேர் தேர்வு எழுதி 1558 பேர் தேர்ச்சி .. அதில் வெறும் 8 தமிழர் மட்டுமே தேர்ச்சி

May be an image of text that says 'நெய்வேலி நிலக்கரி சுரங்க பொறியாளர் தேர்வு! தேர்வு எழுதியவர்கள் 6 லட்சம் நபர்கள் தேர்ச்சி பெற்றவர்கள் 1558 நபர்கள் தேர்ச்சி பெற்றவர்களில் தமிழர்கள் 8 நபர்கள் மட்டுமே! தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுக்க மீண்டுமொரு சுதந்திர போராட்டத்தை நாம் முன்னேடுக்க வேண்டும்!'

Venkat Ramanujam : ஆட்சிக்கு வந்துவிட்டால் திமுக எல்லா பிரச்சனையும் தீர்த்து விடுமா . . கடந்த 10 ஆண்டு காலமாக "எல்லா பிரச்சனையும்" என் ஏற்று கொண்டதே #ஆட்சி மாற்றத்தின் அவசியமாக மட்டுமல்ல அறிகுறியாகவும் தங்களுக்கு படவில்லையா? .. முதல் தீர்வாக செய்யப்பட வேண்டிய பிரச்சனை என்பது compromise for state rights by ADMK என்பது தானே need of the hour.. மாநில உரிமைகளை தாரைவார்த்து அதிமுக அமைச்சர்கள் தங்களது பதவிகளை கட்டியாக பிடித்து வைத்து கொண்ட அதிமுக வின் செய்கைகளை மக்கள் விரும்பவே இல்லை என்பது தானே உண்மையின் முகம் பார்க்கும் கண்ணாடி?

தமிழக மக்களின் வேலை வாய்ப்புகளை இந்தி பேசும் வடக்கர்களுக்கு தாரைவார்த்து அதிமுக வருவது இன்று படித்து வேலையின்றி அல்லலுறும் பல் மில்லியன் தமிழக இளைஞர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை தருகிறது என #அதிமுக ஆட்சியாளர்கள் ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் ..

22 தொகுதிகளில் போட்டியிட முடிவு!" - சட்டமன்றத் தேர்தல்... இஸ்லாமிய ஜனநாயகக் கூட்டணி அறிவிப்பு!

Competing in 22 constituencies in the Assembly elections

  nakkeeran :மதுரை மாவட்டம், கே.கே. நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் அரங்கத்தில் இந்திய ஜனநாயகக் கூட்டணியின் தென் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு இந்திய ஜனநாயகக் கூட்டணியின் பொதுச்செயலாளர் சுலைமான் சேட் தலைமை தாங்கினார். அதேபோல், தலைவர் அப்துல் நாசர் ஜமாலி, மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முகமது ரஃபிக், முகமது பிலால், திண்டுக்கல் அணஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

 இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மதுரை, சேலம், கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து வந்திருந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.   பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பொதுச்செயலாளர் சுலைமான் சேட், "இந்திய ஜனநாயகக் கூட்டணி ஒட்டுமொத்த முஸ்லிம்களை ஒருங்கிணைத்தும், பிளவுபட்டு இருக்கின்ற இயக்கங்கள், அமைப்புகள் மற்றும் கட்சிகளை ஒன்றிணைத்தும் பலம் வாய்ந்த அமைப்பாக உருவாக்கப்படும்.முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்ற 22 தொகுதிகளில் போட்டியிடுவதாக முடிவு செய்துள்ளோம். 

பஞ்சாபில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் CA 6.1 Earthquake In Amritsar, Tremors Felt In Delhi, Parts Of North India

annachinews.com :நில நடுக்கத்தின் தாக்கம் அண்டை மாநிலங்களான டெல்லி, காஷ்மீர், ஹரியானா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் ராஜஸ்தானிலும் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே இரவு சுமார் 10.34 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.அமிர்தசரஸில் இருந்து 21 கிமீ தொலைவில் மையமாக வைத்து இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது எனவும் 10 கிமீ ஆழத்தில் நில அதிர்வின் மையப்புள்ளி இருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. நில நடுக்கத்தின் தாக்கம் அண்டை மாநிலங்களான டெல்லி, காஷ்மீர், ஹரியானா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் ராஜஸ்தானிலும் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பூமி அதிர்ச்சியால் வீடுகளை விட்டு அலறியடித்து சாலைகளில் அதாவது நடு வீதிகளில் மக்கள் தஞ்சம் அடைந்தனர்.

முதல் தமிழ் தாத்தா ஜி.யு.போப்.... 11 பிப்ரவரி, ஜியூ போப் நினைவு நாள்.

May be an image of 1 person
Sundar P : · முதல் தமிழ் தாத்தா ஜி.யு.போப் . உவேசா-வுக்கும் முன்பே, ஊர் ஊராக அலைந்து, சுவடிகள் திரட்டி புறநானுறை பதிப்பித்த ஜியு போப்தான் முதல் தமிழ் தாத்தா. உவேசா 1894 ல் புறநானூறை இரண்டாம் பதிப்பு செய்தார். ஆனால் ஜியு போப் 1886 ல் முதல் பதிப்பு செய்தார். ஏராளமான தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தமிழுக்கு அருந்தொண்டாற்றிய ஜார்ஜ் உக்லோ போப்..... அவரைப் பற்றி: கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் 1820-ல் பிறந்தவர்.
• தந்தை வணிகர். இவர் குழந்தையாக இருந்தபோது குடும்பம் இங்கிலாந்துக்கு குடியேறியது.
• ஹாக்ஸ்டன் கல்லூரியில் பயின்ற பிறகு, சமயப் பணிக்காக 1839-ல் தமிழகம் வந்தார்.
• கப்பலில் பயணம் செய்த அந்த எட்டு மாதங்களிலேயே தமிழை நன்கு கற்றார்.
• தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரத்தில் ஆரியங்காவுப் பிள்ளை, ராமானுஜக் கவிராயர் ஆகியோரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார்.
• தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், மலையாளம், கன்னடம் ஜெர்மன் ஆகிய மொழிகளைக் கற்றார்.
• தஞ்சை, உதகமண்டலம், பெங்களூரு நகரங்களில் சமயப் பணியோடு, கல்விப் பணியும், தமிழ்ப்பணியையும் மேற்கொண்டார்.
• மேலைநாட்டு மெய்ஞானிகளின் கருத்துக்கள் திருவாசகத்தில் இருப்பதைக் கண்டு மகிழ்ந்தார்.

வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

அதானி தஞ்சை பெரிய கோவில். ஜிண்டால் திருவரங்கம். டிவிஎஸ் திருப்பதி....

May be an image of text that says 'K METRO'
பா. சரவண காந்த்  : அதானி தஞ்சை பெரிய கோவில். ஜிண்டால் திருவரங்கம். டிவிஎஸ் திருப்பதி. படிக்க எப்படி இருக்கு ? கற்பனை செஞ்சு பாருங்க.... ஒவ்வொரு கோவில் வாசல்லயும் இப்படி போர்டு இருந்தா, ஆலய புத்தங்கள்ல் இப்படி எழுதப்பட்டால் என்ன ஆகும் ? ஆனா இத நோக்கி தான் நாடு போய்கிட்டு இருக்குனு உங்களுக்கு தெரியுமா ? அத தொடங்கி கிட்டதட்ட ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதாவது உங்களுக்கு புரியுமா ? சமீபத்தில் கோயம்பேடு மெட்ரோ நிலையத்திற்கு பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ னு பேரு வச்சாங்க. அது யாருடா பாஷ்யம்... சுதந்திர போராட்டா வீரரா இருப்பாரோனு தேடுனா.. அது அந்த கட்டுமான நிறுவன பெயராம். அத ஏண்ட வச்சிங்கனு கேட்டா... இல்லைங்க.. ஏற்கனவே நந்தனம் - முத்தூட் நந்தனம் .செனாய் நகர்- பில்ரூத் செனாய் நகர் சைதாப்பேட்டை -சியூஐ சைதாப்பேட் என செமிநேம் வைக்க ஒரு தொகை வாங்கி கொண்டது மெட்ரோ ரயில் நிர்வாகம். கோயம்பேடுக்கு இன்னும் யாரும் வராததால் ஒரு டம்மி நேமாக அந்த காண்டிராக்ட் நிறுவமன பெயரையே வைத்திருக்கிறார்கள். நல்ல விலைக்கு காத்திருக்கிறார்கள்.
உலகிலே இப்படியாரும் நிலத்தின் அடையாளத்தை மாற்றமாட்டார்கள்.

பெளத்த விகாரை தென்பட்டால் அது சிங்களவர்களினுடையதா ?

May be an image of 1 person, outdoors, temple and text that says 'புத்த விகாரை தென்பட்டால் சிங்களவருடையதா?? அது Vinoth VinhBalda Balach andran வரலாற்று கட்டமைப்புகளுக்கான ரக்கான அமைப்புகள் அவசியம்'
Vinoth Balachandran : · விகாரை தென்பட்டால் அது சிங்களவர்களினுடையதா ?? வரலாற்றை நோக்குகின்ற பொழுது விகாரைகள் தென்பட்டால் அது சிங்களவர்களினுடையது என்று தமிழர்களுக்கு இருக்கும் பார்வையும், சிங்களவர்களு நாம் உருவாக்கிய அந்த பார்வையும் மிக பிழையானது. சமயத்தின் கொள்கைகளுக்கான யுத்தம், குடிகளுக்கான யுத்தம், சாதிகளுக்கான யுத்தம் என்பது ஆரம்ப காலம் தொட்டே இருந்து வருகிறது. இன்றைய காலத்தில் இருந்து ஒரு விடையத்தை அணுகுகின்ற பொழுது இன்று இருக்கும் மனநிலை, பழக்கவழக்கம், நடைமுறை மற்றும் அரசியல் நிலை கொண்டு நாம் வரலாற்றை அணுகுகிறோம். இது உண்மையில் பிழையான ஒரு விடையத்தையே தருகின்றது. ஒரு விடையத்தை நாம் பொது மேடையில் வைக்கின்ற பொழுது அதன் உண்மை தன்மையை எந்தவொரு தரப்பும் கேள்வி கேற்கும் வண்ணம் அமைய கூடாது. அவ்வாறான சந்தர்ப்பங்கள் பல அமைந்துவிட்டால் நாம் முன்வைக்கும் அனைத்து விடயங்களும் பிழை என்ற ஒரு மனநிலையை பொதுவெளி அமைந்துவிடும். நம்முடைய குரல்கள் பல இடங்களில் எடுபடாமல் இருப்பது இதனாலையேயாகும்..

அமெரிக்காவில் 133 வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்து: 6பேர் உயிரிழப்பு!

athavannews.com :அமெரிக்கா- டெக்சாஸின் ஃபோர்ட் வொர்த்தில் உள்ள இன்டர்ஸ்டேட் 35 வெஸ்டில், சிறிய கார்கள், எஸ்யூவிகள் முதல் 18 லொரிகள் வரை மொத்தமாக 133 வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக வொர்த் பொலிஸ்துறை தெரிவித்துள்ளது. நேற்று (வியாழக்கிழமை) காலை 6 மணியளவில் சி.டி. மற்றும் சுமார் ஒரு மைல் தொலைவிற்கு இந்த விபத்து பதிவானது. டல்லாஸ்-ஃபோர்ட் வொர்த் மற்றும் ஆஸ்டின் பகுதிகளில் மோசமான வானிலை நிலவரங்களில் இந்த சம்பவம் ஒன்று. இதில் உறைபனி மழை மற்றும் பனிக்கட்டி ஆகியவை அடங்கும். ஒரே இரவில் 300க்கும் மேற்பட்ட விபத்துக்கள் பதிவாகியுள்ளன. 103 பெரிய விபத்துக்கள், தனிவழிப்பாதையில் 133 பெரிய விபத்துக்கள், 86 சிறு விபத்துக்கள், நான்கு சிறு நகர உபகரண விபத்துக்கள், இரண்டு பெரிய நகர உபகரண விபத்துக்கள் மற்றும் ஒரு பெரிய நகர உபகரண விபத்துக்கள் ஆகியவை தனிவழிப்பாதையில் பதிவாகியுள்ளன.

கமல்-காங்கிரஸ்: பாலம் போடும் பழ. கருப்பையா

minnambalam.com : மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் நேற்று (பிப்ரவரி 11) காலை முதல் மதியம் வரை முதல் அமர்வாகவும் மதிய உணவுக்குப் பின் பிற்பகல் தொடங்கி மாலை 7 மணி வரை இரண்டாம் அமர்வாகவும் நடந்தது.காலை அமர்வு கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உரையோடு நிறைவுபெற்றது. பொதுக்குழுவின் இரண்டாவது அமர்வாக மதியம் கலை நிகழ்ச்சிகளோடு தொடங்கியது. மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் அரைமணி நேரம் நடந்தது. அதன்பின் தேர்தல் நேரத்தில் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நிர்வாகிகளுக்கு வகுப்புகள் நடந்தன.அதன் பின் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மூத்த அரசியல்வாதியுமான பழ.கருப்பையா கலந்துகொண்டு பேசினார். அவர் பேசும்போது கமல்ஹாசன் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்து கவனித்தார்.

பழ.கருப்பையா பேசும்போது, “1980 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர்.ஆட்சி கலைக்கப்பட்டதும், நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி போட்டியிட்டது. அந்த தேர்தலில் திமுக 112இடங்களிலும்,காங்கிரஸ் 114தொகுதிகளிலும் போட்டியிட்டன. இப்படி சட்டமன்றத் தேர்தலிலேயே 114 இடங்கள் போட்டியிடும் அளவுக்கு தமிழகத்தில் பலமாக இருந்த காங்கிரஸ் இப்போது பாதிக்குப் பாதி அதில் பாதி என ஆகி பத்து, பதினைந்து, இருபது சீட்டுகளில் போட்டியிட வேண்டிய நிலைமைக்கு ஆளாகிவிட்டது.

சாத்தூர் பட்டாசு ஆலை திடீர் தீ விபத்து 16 பேர் உயிரிழந்தனர்

இ.கார்த்திகேயன்- ஆர்.எம்.முத்துராஜ்
பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து
பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து

சாத்தூரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயம் அடைந்த 30-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறியதும் பெரியதுமாக 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் உள் தொழிலாளர்களாக மூன்று லட்சம் தொழிலாளர்களும், பட்டாசு உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருள்கள் உற்பத்தியில் ஐந்து லட்சம் தொழிலாளர்களும், பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டுவருகின்றனர். நாட்டின் ஒட்டுமொத்த பட்டாசுத் தேவையில் 95 சதவிகிதத் தேவையை இப்பகுதிகளிலுள்ள பட்டாசு ஆலைகளே பூர்த்திசெய்கின்றன.

விவசாயிகள் பம்புசெட்டுகளுக்கு தடை இல்லாமல் மும்முனை மின்சாரம் 24 மணிநேரமும் வழங்கப்படும்- முதலமைச்சர்

விவசாயிகள் பம்புசெட்டுகளுக்கு தடை இல்லாமல் மும்முனை மின்சாரம் 24 மணிநேரமும் வழங்கப்படும்- முதலமைச்சர்
maalaimalar :விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு 24 மணி நேரமும் விவசாயிகளின் பம்புசெட்டுக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். உடுமலை: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று அவர் திருப்பூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அவினாசியில் பிரசாரத்தை தொடங்கிய அவர் திருப்பூர், காங்கயம், தாராபுரம், மடத்துக்குளம் என மாவட்டத்தின் பல பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். மேலும் இஸ்லாமியர்கள், விவசாயிகளையும் சந்தித்து பேசினார்.இன்று 2-வது நாளாக அவர் திருப்பூர் மாவட்டத்தில் பிரசாரத்தை தொடர்ந்தார். உடுமலை பஸ்நிலையம் அருகே அவர் இன்று காலை பிரசாரத்தை தொடங்கினார். அங்கு திரண்டு இருந்த மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

காலம் தாழ்த்தும் திமுக., தந்திரம்; காலை வார தயாராகும் காங்.,

DMK, Congress, TN election, காங்கிரஸ், திமுக
dhinalaral : எந்த நேரத்திலும் கூட்டணியில் இருந்து, தி.மு.க., கழற்றி விடக்கூடும் என்ற பதற்றம் தெரிகிறது, காங்., தலைவர்களிடம். 'லோக்சபா தேர்தலில், காங்கிரசுக்கு நாம், 10 தொகுதிகளை கொடுத்தது தப்பு. காங்கிரசை கழற்றி விட்டிருந்தாலும், தி.மு.க., அமோகமாக ஜெயித்திருக்கும்' என, கட்சிக்காரர்களுடன் உதயநிதி பகிர்ந்து கொண்ட தகவல், தமிழக காங்., தலைவர்களை சூடாக்கி விட்டது. சட்டசபை தேர்தல் அறிவிப்பு நெருங்கி வரும் சூழலில், கூட்டணி தொடர்பாக, இதுவரை காங்கிரசில் யாரையும், தி.மு.க., தரப்பு அழைத்து பேசவில்லை. இதனால் அவர்களுக்கு, தி.மு.க., தலைமை மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. 'சும்மா சந்தேகம் வரலைங்க. காரணம் இருக்கு' என்றார், ஒரு மேலிட நிர்வாகி. 'புதுச்சேரியில், தி.மு.க, ஆதரவுடன், காங்., ஆட்சி நடக்கிறது. தேவையே இல்லாமல், அங்கே ஜெகத்ரட்சகன் எம்.பி.,யை, தி.மு.க., வின் முதல்வர் வேட்பாளராக சித்தரித்தனர்.

அவரும் பந்தாவாக, புதுச்சேரி, தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தினார். 'பிரமாண்டமாக ஏற்பாடு செய்த, அந்த கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் அனைவரும், ஜெகத்ரட்சகனை முன்னிறுத்தி, புதுச்சேரியில், தி.மு.க., தனித்து போட்டியிட வேண்டும் என, பேசினர். 'அவர்களுக்கு உற்சாகம் அளித்தார் ஜெகத்ரட்சகன். பிரச்னை பெரிதாகி, சோனியா டில்லியில் இருந்து ஸ்டாலினிடம் விசாரித்த பிறகு தான், அதை கைவிட்டனர்' என, சமீபத்திய சம்பவத்தை நினைவுபடுத்தினார் அவர். உடன் இருந்த மற்றொரு தலைவர் தொடர்ந்தார்...

ராஜஸ்தானில் திருப்பதியை மிஞ்சும் உண்டியல் வசூல்: பணத்தை எண்ணமுடியாமல் சோர்வடைந்த கோயில் ஊழியர்கள்!

திருப்பதியை மிஞ்சும் உண்டியல் வசூல்: பணத்தை எண்ணமுடியாமல் சோர்வடைந்த கோயில் ஊழியர்கள்!
tamil.news18.com:  திருப்பதியை மிஞ்சும் உண்டியல் வசூல்: பணத்தை எண்ணமுடியாமல் சோர்வடைந்த கோயில் ஊழியர்கள்! முதல் நாள் முடிவில் உண்டியலில் இருந்த 6 கோடியே 17 லட்சத்து பன்னிரெண்டாயிரத்து இருநூறு ரூபாய் எண்ணப்பட்டுள்ளது. இது தவிர 91 கிராம் தங்கமும், 4 கிலோ 200 கிராம் வெள்ளியும் உண்டியலில் இருந்துள்ளது. < ஸ்ரீ சன்வாலிய சேத் உண்டியலில் கோடிக்கணக்கில் பணம் வசூல் ஆனதால் அதனை எண்ண முடியாமல் கோவில் ஊழியர்கள் சோர்வடைந்ததுடன் பணம் எண்ணும் பணியை அடுத்த நாளைக்கு ஒத்திவைத்திருக்கும் சம்பவம் ராஜஸ்தானில் நடைபெற்றுள்ளது. உண்டியல் வசூலில் திருப்பதி ஏழுமலையான் கோவிலை மிஞ்சிவிடும் வகையில் இக்கோவிலின் வசூல் அமைந்துள்ளதாக கூறுகின்றனர்.

எ.வ.வேலுவுக்கு எதிராக பேசியவர் தற்காலிகமாக நீக்கம்... துரைமுருகன் அறிவிப்பு... (

nakkheeran.in - நக்கீரன் செய்திப்பிரிவு :

 ddd

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதியில் வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக போட்டியிட்டே ஆக வேண்டும் என முடிவு செய்த திருவண்ணாமலை தெற்கு மா.செ.வான முன்னாள் அமைச்சர் மா.செ.வேலு, இதற்காக தொகுதியின் பொறுப்பாளராக, தனது மகனும் மருத்துவரணி மாநில துணைத்தலைவருமான டாக்டர் கம்பனை சில ஆண்டுகளுக்கு முன்பு களமிறங்கினார்.இந்த நிலையில் எ.வ.வேலு ஆதரவாளர்கள் சிலர், கம்பனை அங்கு வேட்பாளராக்க வேண்டும் என முடிவு செய்தனர். இது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. முக்கியமாக அந்த தொகுதியில் சீட்டை எதிர்பார்த்த திமுக பிரபலங்கள் மறைமுகமாகப் புலம்பத் துவங்கினார்கள்.... எ.வ.வேலு குறித்தும், அவரின் மகனும் கம்பன் குறித்து தானிப்பாடி பகுதியைச் சேர்ந்த கட்சி நிர்வாகியான இளைஞர் ஒருவரிடம், மாவட்ட துணைச் செயலாளர் சாவல்பூண்டி மா.சுந்தரசேன் செல்ஃபோனில் பேசியது வைரலாகி அதகளப்படுத்தியுள்ளது. 

சாத்தான்குளம்: `8 மாதங்களாகியும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வரலை’ - பென்னிக்ஸ் சகோதரி வேதனை

vikatan -பி.ஆண்டனிராஜ்:  ஜெயராஜ் மகள் பெர்சி
ஜெயராஜ் மகள் பெர்சி

`ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் போஸ்ட்மார்ட்டம் நடந்து எட்டு மாதங்களாகியும் இன்னும் ரிப்போர்ட் கொடுக்கப்படவில்லை' என ஜெயராஜ் மகள் பெர்சி வேதனை தெரிவித்திருக்கிறார்.தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்கள் ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் இருவரும் கொரோனா ஊரடங்கில் கூடுதல் நேரம் கடையைத் திறந்து வைத்திருந்ததாக, கடந்த ஆண்டு ஜூன் 19-ம் தேதி காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ்
சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ்

சாத்தான்குளம் காவல் நிலையத்தில்வைத்து இருவரையும் போலீஸார் கொடூரமாகத் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்திவருகிறது.  நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரின் உடல்களும் ஜூன் 24-ம் தேதி, நீதிமன்ற உத்தரவுப்படி மூன்று அரசு மருத்துவர்கள் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.

ஜாக்கி வாசுதேவின் பேட்டியில் மறைந்திருக்கும் விஷக்கருத்துக்கள்

May be an image of 2 people, motorcycle and road

Abilash Chandran : · இந்து மதத்தை தலைகீழாக்க ஜக்கியின் புதிய பிரம்மாண்ட திட்டம் ஜக்கி வாசுதேவ் சாணக்யா யுடியூப் சேனலுக்கு அளித்த ஒரு பெட்டியைக் கண்டேன். இரண்டு விதங்களில் அது முக்கியமானது எனப் பட்டது:
ஜக்கி போன்று பாஜகவுக்கு அணுக்கமான மதத்தலைவர்களின் அடுத்த கட்ட திட்டத்தை அது அம்பலப்படுத்தியது. இந்து மதம் முழுமையாக கார்ப்பரேட்மயமாக்கப்பட்டு, பக்தி என்பது நுகர்வு மட்டுமே எனும் இடத்திற்கும் நாம் செல்லும் போது (பிராமணர்களின்) சாதி மேலாண்மை என்னவாகும் எனும் பாண்டேவின் கவலை வெளிப்பட்டது.
இந்த ஒட்டுமொத்த பேட்டியும் ஒரு செட் அப் ஆகவும் இருக்கலாம் என்றாலும் கூட அது ஒரு முக்கியமான பேட்டிதான்.
முதல் விசயத்துக்கு முதலில் வருகிறேன். 1. அது என்ன புதிய திட்டம்? கோயில்களை தனியார்மயமாக்குவதைப் பற்றி ஜக்கி பேசுகிறார். ஆனால் அது கார்ப்பரேட்மயமாவதாக, ஒரு சில தனிமனிதர்களிடம் செல்லுவதாக தோன்றக் கூடாது என்பதால் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள கோயிலை அப்பகுதியின் சமூகத்தை சேர்ந்த முக்கியஸ்தர்கள் இணைந்து ஒரு குழுவை உருவாக்கி அதன் பரிந்துரைகளின் பேரில் கோயில் விழாக்களை நடத்துவது, வருமானத்தை பராமரிப்பது, பெருக்குவதே தனது பரிந்துரை என சுற்றி வளைத்து சொன்னார்.

முதல் மலையாள இலக்கண நூலில் ”தமிழ்ச் சூத்திரங்கள்”

May be an image of text
Sundar P : · முதல் மலையாள இலக்கண நூலில் சூத்திரங்கள். மலையாள மொழிக்கு முதல்முதலாக எழுதப்பட்ட இலக்கண நூல் ”லீலாதிலகம்” என்ற நூலாகும். இந்நூலின் காலத்தை 16 ம் நூற்றாண்டு என்று குறிப்பிடுகின்றனர். இந்த நூலில் மலையாள மொழிக்கான இலக்கணங்களை எழுதும் போது தமிழ் இலக்கண நூல்களையே அந்த ஆசிரியர் மேற்கோளாகக் காட்டுகின்றார். தொல்காப்பியம், நன்னூல், வீரசோழியம், அகத்தியம் போன்ற நூல்கள் அவற்றுள் அடங்கும். இவர் எடுத்துக்காட்டுகின்ற அகத்தியச் சூத்திரம்,
””எகர ஒகர ஆய்த ழகர
றகர னகரம் தமிழ், பொது மற்றே””
என்பதாகும்.
இந்நூற்பா தமிழ் நூல்கள் எவற்றிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நூலை பேராசிரியர் இளைய பெருமாள் 1971 இல் மிக அற்புதமாக தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
மலையாள மொழியின் அடிப்படைத் தன்மைகள் தமிழ்மொழியின் தன்மையில் இருந்து பெரியளவில் வேறுபடவில்லை என்பதை இந்நூலின் வழியாக நாம் புரிந்துகொள்கிறோம்.
இந்த விவரங்கள் உள்ள படங்களை இத்துடன் இணைத்துள்ளேன்.

நடிகர் திலகத்துக்கு வாய்த்த பாஜக ராம்குமார்

May be an image of A Somasundaran and standing
மறைந்தும் மறையாத மாபெரும் நடிக மேதை சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் பாஜகவில் சேர்ந்திருக்கிறார் . பராசக்தி கணேசனின் கதை உலகெங்கும் வாழும் தமிழர்களின் வாழ்வில் பின்னி பிணைந்து இருக்கிறது.. சாதாரண மக்களின் நாவில் நல்ல தமிழை கொண்டு சென்றதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பங்கு சாதாரணமானது அல்ல. சொந்த வாழ்வில் மிகவும் கௌரவமாக வாழ்ந்தவர். இவரின் பேத்தியின் திருமணம் இவருக்கு ஒரு சாபம் போல அமைந்து விட்டது என்று தோன்றுகிறது . இவரின் சொல்லை மீறி இவரது குடும்பத்தினர் பணத்துக்கு ஆசைப்பட்டு ஒரு திருட்டு குடும்பத்திற்கு இவரை சம்பந்தி ஆக்கியது.
அந்த சுதாகரன் மகாலக்ஷ்மியின் வரலாற்று திருமணத்தில் தங்கம் வைரமும் பட்டும் பீதாம்பரமாக ஷோ காட்டிய வேளையில் வெறும் கதர் சட்டையோடு காட்சி அளித்து தான் யார் என்பதை சொல்லாமல் சொல்லியவர் இந்த காமராஜரின் அன்பர்.
பின்பு ஜெயலலிதாவின் பணத்தை கையாடல் பண்ணியதாக சுதாகரனை ஜெயிலில் போட்டார் ஜெயலலிதா.
சிவாஜி நேரில் வேண்டுகோள் விடுத்தால் ஜெயா அவனை விட்டுவிட கூடும் என்று குடும்பத்தினர் சிவாஜியை துன்புறுத்தியதாக செய்திகள் வந்தன .
அதை அடியோடு மறுத்து தனக்குள்ளேயே குறுகிப்போனார் அந்த சிம்ம குரலோன் . 

வவுனியா யாழ் அகற்றி சங்கம் . ஒரு வரலாற்று செய்தி

Maniam Shanmugam : · பகிரங்கமாக அலுவலகம் வைத்து செயல்பட்ட “யாழகற்றுச் சங்கம்”! கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில், யாழ்ப்பாணத்தவர்களுக்கு எதிரான உணர்வுகளைச் சிலர் தூண்டி விடுகிறார்கள் என யாழ்ப்பாணியர்கள் சிலர் ஆதங்கப்படுவதை அவதானிக்க முடிகிறது. மட்டக்களப்பில் சில பகுதியினரிடையே யாழ்ப்பாண எதிர்ப்பு அல்லது வெறுப்பு உணர்வு இருப்பது இரகசியமான விடயமல்ல. அது இன்று நேற்று ஏற்பட்டதுமல்ல. நான் அறிய அந்த உணர்வு இருப்பதை நான் எமது புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி வேலைகளுக்காக முதன்முதலாக 1960களின் பிற்பகுதியில் அங்கு சென்றபோதே அவதானித்திருக்கிறேன். சரி, அது ஒருபுறமிருக்க - ஆனால் இனி நான் சொல்லப்போவது இன்று தமிழ் தேசியப் போராட்டம் நடத்தும் பலருக்கும் தெரியாததும், அதேநேரத்தில் ஆச்சரியம் தரும் விடயமாகவும் இருக்கும். ஏன் நாம் மட்டக்களப்புக்கு ஓடுவான்? வன்னியில் யாழ்ப்பாண எதிர்ப்பு உணர்வு இருப்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? அதுமட்டுமின்றி, 60கள் 70களில் வவுனியா பஸ் நிலையத்தில் “யாழகற்றுச் சங்கம்” என்ற பெயர் பலகையுடன் யாழ்ப்பாணத்தாருக்கு எதிராக ஒரு அலுவலகம் செயற்பட்டது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? ஆனால் உண்மை. அதை நான் நேரடியாகவே கண்டிருக்கிறேன்.

வியாழன், 11 பிப்ரவரி, 2021

கோவை முஸ்லீம் இளைஞரை திடீரென்று கத்தியால் குத்திய இந்து முன்னணியினர்.. கோவையில்

 Youth attacked by Hindu Munnani persons in Coimbatore
Hemavandhana - tamil.oneindia.com : கோவை: தோழியுடன் ஒருத்தர் பேசிக் கொண்டு இருந்திருக்கிறார்.. அப்போது, திடீரென அங்கு வந்த இந்து முன்னணியை சேர்ந்த 2 பேர், அவரை குத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டார்கள்.. அவர்களைதான் போலீசார் தேடி வருகிறார்கள். கோவை கோட்டைமேடு அருகே எஸ்எஸ் கோவில்வீதியை சேர்ந்தவர் முகமது முபாரக்... இவருடைய மகன் அகில் அகமது.. 27 வயதாகிறது.. எம்பிஏ படித்துள்ளார்.. இவர் பைக்குகள், கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்... இவர், ராமநாதபுரம் தன்வந்திரி கோவில் பக்கத்தில் தன்னுடைய தோழி ஒருவருடன் நின்றுகொண்டு பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு, இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த, கார்த்திக், சஞ்சய் என்ற 2 பேர் வந்துள்ளனர்.

அவர்கள் திடீரென அகில் அகமதுவிடம் சென்று வம்பிழுத்தனர்.. எதுக்காக இந்த பெணணுடன் இங்கே நின்று பேசிக்கொண்டு இருக்கிறாய் என்று கேட்டனர்.. இது வாக்குவாதமாக உருமாறியது.. தகராறாக முற்றியது.. இதில் ஆத்திரம் அடைந்த அந்த 2 பேரும், அகில் அகமதுவை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது... 
இதில் சஞ்சய் என்பவர் இரும்பு கம்பியால் அவரை தாக்கியதாக சொல்கிறார்கள். இதில் ரத்த வெள்ளத்தில் அகில் அகமது கீழே சரிந்து விழுந்தார்.. 

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 'நீட்' தேர்வு ரத்து செய்யப்படும்!” - உதயநிதி ஸ்டாலின்!

nakkeeran :‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ எனும் தேர்தல் பிரச்சாரத்திற்காக, திண்டுக்கல் வருகை தந்த திமுக மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திண்டுக்கல் சீலப்பாடி பிரிவில், 40அடி உயரமுள்ள கொடிக் கம்பத்தில், திமுக கொடியை ஏற்றிவைத்து வேன் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்திலேயே திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் திமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தீர்கள். அதேபோல் சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெறச் செய்யவேண்டும்.
தமிழகத்தில் 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் திமுக வெற்றிபெற்றுள்ளது. அதனால், தமிழகத்தின் மீது மோடிக்குக் கோபம். இதன் காரணமாக, தமிழகத்திற்கு எதுவும் செய்து
 தரமறுக்கிறார்.
பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல், அரிசி, கோதுமை, சர்க்கரை
போன்ற பொருட்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தமிழகத்திற்கு தரவேண்டிய  15,000 கோடி ஜிஎஸ்டி வரி பணத்தையும், புயல் மற்றும் தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையை வழங்க மறுக்கிறார், 

அரசு நிலம், நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிப்புகளை இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

minnambalam.com :அரசு நிலம், நீர்வழித் தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை இடித்து தள்ளும்படி அரசு அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ராமாபுரம் பகுதியில் இருந்த சாலையை கோவில் நிர்வாகம் ஆக்கிரமித்துள்ளதாக கூறி அறப்போர் இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று (பிப்,11) விசாரணைக்கு வந்தது. அப்போது, கோவில் நிர்வாகம் சாலையை ஆக்கிரமித்ததா? எப்போது இந்த ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டன? என்பன உள்ளிட்ட கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். அவற்றுக்கு அரசுத்தரப்பில் பதிலளிக்காததால், அரசு நிலத்தை கோவில் நிர்வாகம் ஆக்கிரமித்திருந்தாலும், அவற்றை இடித்து தள்ள வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், குறிப்பிட்ட அந்தப்பகுதியை நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டனர்.

இந்த ஆய்வுக் குழுவில், மனுதாரர் பிரதிநிதியும், கோவில் நிர்வாக பிரதிநிதியும் இடம் பெற வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

மக்களவையில் திரிணாமுல் எம்.பி மஹூவா மொய்த்ரா அனல் பறக்கும் பேச்சு . .. தமிழாக்கம்

பா.சுபாஷ் சந்திர போஸ் : · இந்தநாடு கோழைகளால் உருவாக்கப்பட்டதல்ல. கோழைகளால் இந்த நாட்டைப் பாதுகாக்க முடியாது. மஹூவாமொய்த்ரா முழக்கம் .

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா வழக்கம்போல அவையில் அனல் பறக்கும் பேச்சால் கவனம் ஈர்த்தார். அவர் பேசியதின் தமிழாக்கம் இங்கே...         `அவைத்தலைவருக்கு வணக்கம். நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், நாடாளுமன்றம் வழங்கிய அதிகாரத்தின் அடிப்படையில், மக்கள் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி, மக்கள் கேட்க விரும்பும் கேள்விகளை கேட்கவும், அவர்களின் எண்ணங்களுக்கு குரல் கொடுக்கவும் விரும்புகிறேன்.             என்னுடைய சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நான் பேசும்போது இடைமறிக்கவோ, கூச்சலிடவோ மாட்டார்கள் என்றும், நீங்கள் (அவைத்தலைவர்) எனக்கு கொடுத்த நேரத்துக்கு என்னைப் பேச அனுமதிப்பீர்கள் என்றும், மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் இந்த மக்களவை தொலைக்காட்சி தனது ஒளிபரபப்பை நிறுத்தாது என்றும் நம்புகிறேன்.

வீட்டில் உள்ள தங்கத்தின் மீது கண்வைக்கும் பாஜக அரசு .. புதிய திட்டம் வருகிறது Gold Monetization Scheme

zeenews.india.com/tamil ": Gold Monetization Scheme: நீங்கள் வீட்டில் அதிக தங்கத்தை வைத்திருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
விரைவில் தங்கத்தை வீட்டில் வைத்திருப்பதற்கான விதிகளில் அரசாங்கம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது.
தங்கத்தை பணமாக்கும் திட்டத்தில் (Gold Monetization Scheme) அரசாங்கம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. இந்த திட்டத்தில் அனைத்து அரசு வங்கிகளும் சேர்க்கப்படுகின்றன.
தங்கத்தை பணமாக்கும் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வங்கியின் குறைந்தபட்சம் 50% கிளைகளில் ஜிஎம்எஸ் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கப்படுவதை அரசாங்கம் கட்டாயமாக்கக்கூடும்.
இந்த திட்டத்தின் கீழ் நகைக்கடைக்காரர்களுக்கும் தங்க வைப்பு பெறும் உரிமை கிடைக்கக்கூடும்.
மேலும், இந்த திட்டத்தின் கீழ், வங்கிகள் நகை விற்பனையாளர்கள் மூலம் தங்க டெபாசிட்டைப் பெற முடியும்.
புதிய மாற்றங்களின் கீழ், இந்தத் திட்டத்துடன் அதிக வாடிக்கையாளர்களை இணைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
இந்த திட்டத்தின் கீழ், வங்கிகளில் 10 கிராம் வரை தங்கத்தை டெபாசிட் செய்ய வசதி பெறலாம். தங்கத்தை பணமாக்கும் திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்யப்பட்ட தங்கத்தின் மீது கடன் வாங்குவதும் எளிதாக இருக்கும்.

அதிமுக 125 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்குமாம் .. குமுதம் கருத்து கணிப்பு

Arivalagan St /tamil.oneindia.com ": சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் 125 இடங்களில் வெற்றி பெற்று அ.தி.மு.க மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்று குமுதம் ரிப்போர்ட்டரில் வெளிவந்துள்ள சர்வே முடிவுகள் தெரிவித்துள்ளன.
தமிழக அரசின் நிர்வாக திறனுக்காக கிடைத்த விருதுகள் மற்றும் 2,500 ரூபாய் பொங்கல் பரிசு ஆகியவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கை அதிகரித்துள்ளதாகவும் சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.
2021 - தமிழக சட்டமன்ற தேர்தலில் வென்று ஆட்சி அமைக்கப் போவது எந்த கட்சி என்று தமிழகம் முழுவதும் ஜியோன் ஆய்வு அமைப்பு (Zion Research) என்ற தனியார் ஆய்வு நிறுவனம் சர்வே நடத்தியுள்ளது.
சர்வே முடிவுகளில் சாதகம் இந்த சர்வே முடிவுகள் குமுதம் ரிப்போர்ட்டர் வாரஇதழில் வெளிவந்துள்ளது. தமிழகம் முழுவதும் 58,500 பேரை நேரில் சந்தித்து இந்த சர்வே நடத்தப்பட்டுள்ளது. இதில் அ.தி.மு.க 45% வாக்குகளை பெற்று 125 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று சர்வே முடிவுகள் தெரிவித்துள்ளன

சசிகலாவின் 300 கோடி சொத்து அரசுடமை .. இளவரசி, சுதாகரன் சொத்துகளை தொடர்ந்து ... தமிழக அரசு நடவடிக்கை

dhinakaran :  திருவாரூர்: சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி சசிகலாவின் 300 கோடி சொத்துகளை தமிழக அரசு நேற்று அதிரடியாக அரசுடமையாக்கியது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை முதல்வராக இருந்தார். இந்த காலக்கட்டத்தில் ஜெயலலிதாவுடன் அவரது தோழி சசிகலா, அண்ணன் மனைவி இளவரசி, வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இவர்களில், ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, மற்ற 3 பேரும் 2017 பிப்ரவரியில் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். 3 பேரில் சசிகலா, இளவரசி ஆகியோர் விடுதலையாகி நேற்று முன்தினம் சென்னை வந்தனர்.

சுதாகரன்-இளவரசிக்கு சொந்தமான 23 சொத்துகள் பறிமுதல்

சுதாகரன்-இளவரசிக்கு சொந்தமான 23 சொத்துகள் பறிமுதல்
.maalaimalar.com : தூத்துக்குடி மாவட்டத்தில் சசிகலா உறவினர்களான இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான 23 சொத்துகள் மற்றும் தஞ்சையில் 26 ஆயிரம் சதுரஅடி காலிமனை அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.
சுதாகரன்- இளவரசி
தூத்துக்குடி: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து சசிகலா, இளவரசி ஆகியோர் அண்மையில் விடுதலையாகினர். சுதாகரன் இதுவரை விடுதலையாகவில்லை. இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இளவரசி, சுதாகரனின் சொத்துகளை தமிழக அரசு அரசுடைமையாக்கியது. இதைதொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா சேரகுளம், வல்லகுளம், கால்வாய், மீரான்குளம் ஆகிய கிராமங்களில் சுதாகரன், இளவரசி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ரிவர்வே அக்ரோ புரோடக்ட்ஸ் பிரைவேட் லிட் என்ற நிறுவனத்தின் பெயரில் உள்ள 23 சொத்துகள் அரசுடைமையாக்கப்பட்டு உள்ளன. இந்த சொத்துகளை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

யாழ்மையவாதம் பற்றி சமூகவலையில் கருத்து பரிமாற்றம்

Chinniah Rajeshkumar  :   யாழ் மையவாதம் விமர்சிக்கப்பட வேண்டிய விடயம் மட்டுமல்ல அதற்கான மாற்றும் அவசியம். ஆனால் ஓரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழ்பவர்களை பொதுமைப்படுத்தி யாழ்ப்பாணி என அடையாளம் சூட்டும் அரசியல் பொதுமைப்படுத்தும் அரசியல் மட்டுமல்ல ஆபத்தானதும் கூட.   
நேற்று ஒரு சந்திப்பில் பிள்ளையான் இரு முறை யாழ்ப்பாணி என்ற பதத்தை பாவித்து அவர்கள் மட்டக்களப்பை நாசம் செய்யவந்திருக்கிறார்கள் என்ற தொனியில் பேசியுள்ளார்.
வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட சமூகம் மேலாகவோ இனம் மேலாகவோ இவ்வாறான வெறுப்புணர்வு ஊட்டப்படுவதன் பின் விளைவுகள் மிக பயங்கரமானவை.
யூதர்களுக்கெதிரான கருத்தியலில் இருந்து ருவண்டா , பொஸ்னியா வரைக்கும் இந்த வெறுப்பு அரசியலின் விளைவை நாம் பார்த்திருக்கிறோம்.  
தமிழர்களுக்கெதிரான இன அழிப்பு, முஸ்லிம் மக்களுக்கெதிரான புலிகளின் இனச்சுத்தீகரிப்பு ஆகியவை இலங்கையர்கள் நேரடியாக அனுபவித்தவை. பிள்ளையான் இருந்த அமைப்பும் இப்போ சேர்ந்த இடமும் கருத்தியலைப்பொறுத்தவரை  ஒரே சிந்தனை மட்டத்தில் இருப்பதும் ஓரு காரணமாக இருக்கலாம். நாட்டின் தலைவர் நான் சிங்கள பௌத்தன் என்னும் போது பிள்ளையான் யாழ்ப்பாணி என விளிப்பதில் ஆச்சரியமேதுமில்லை.
குறுகிய அரசியல் நலன்களுக்காக எதிரிகளை கண்டுபிடிப்பதும் பிரித்தாளும் அரசியலை செய்வதும்  நல்லதல்ல.

புதன், 10 பிப்ரவரி, 2021

சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் பாஜகவில் சேர்ந்தார் ..

Hemavandhana - tamil.oneindia.com : சென்னை: குறி வைத்து ஒவ்வொருவரையும் தன் கட்சியில் சேர்த்து வருகிறார்...!
எல்.முருகன் பொறுப்புக்கு வந்ததில் இருந்தே, பலவித அதிரடிகளை கையில் எடுத்து வருகிறார்.. குஷ்பு உட்பட பலதரப்பட்ட பிரமுகர்களை கட்சியில் இணைத்தும் வருகிறார்..
அதிலும் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களை கட்சியில் இணைப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.. பிரபலங்கள் பலரும் பாஜகவில் தங்களை தானாகவே இணைத்து கொண்டும் வருகிறார்கள். இந்த பிரமுகர்களால் தாமரை எதிர்பார்த்தபடி மலர போவதில்லை என்றாலும், பிரச்சார நேரங்களில் நிச்சயம் இவர்கள் அனைவரும் திரும்பி பார்க்க வைப்பார்கள் என்று நம்பப்படுகிறது..
அந்த வகையில், இப்போது நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமாரையும் பாஜகவில் இணைக்கும் முயற்சி நடந்துள்ளது... இதுதான் தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது .காமராஜர் இதற்கு காரணம், சிவாஜி கணேசன் ஆரம்பத்தில் திராவிட இயக்க அரசியலில் ஆர்வம் கொண்டிருந்தவர்..

KOO செயலிக்கு மாறும் அமைச்சர்கள்: ட்விட்டர் - இந்திய அரசு மோதல் காரணமா?

டுவிட்டர்
BBC  : இந்தியாவில் அரசுக்கு எதிரான விஷம கருத்துகளை பதிவிடுவதாகக் கூறி ஆயிரத்துக்கும் அதிகமான கணக்குகளை முடக்குமாறு ட்விட்டர் நிறுவனத்தை கேட்டுக் கொண்டிருந்த மத்திய அரசுக்கு அந்த நிறுவனம் பதில் அனுப்பியிருக்கிறது. அதில், மத்திய அரசு கேட்டுக்கொண்டபடி எல்லா கணக்குகளையும் ஒட்டுமொத்தமாக முடக்க முடியாது. வேண்டுமானால், அவதூறு மற்றும் விஷம தகவல்களை பதிவிடுவதாகக் கருதப்படும் கணக்கு வைத்திருப்போரின் பக்கங்களையோ பதிவுகளையோ இந்தியாவில் பார்க்க முடியாதவாறு கட்டுப்படுத்துகிறோம் என்று டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் தனது வலைப்பக்கத்தில் இந்திய அரசின் வேண்டுகோளை எந்த வகையில் ஏற்றுக்கொள்கிறோம் என்பதை விளக்கும் தகவல்களை பதிவிட்டிருக்கிறது.

ஜெயலலிதா, சசிகலா சொத்துகளை ஏன் பறிமுதல் செய்யவில்லை : திமுக கேள்வி!

minnambalam : ொத்துக்குவிப்பு வழக்கில் மூன்றாம், நான்காம் குற்றவாளிகளான இளவரசி, சுதாகரனின் சொத்துகளை பறிமுதல் செய்துள்ள தமிழக அரசு, முதல் குற்றவாளியான ஜெயலலிதா மற்றும் இரண்டாம் குற்றவாளியான சசிகலா ஆகியோரது சொத்துகளை ஏன் பறிமுதல் செய்யவில்லை என திமுக சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், நாற்பது லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய திறந்தவெளி அரங்கத்தினை அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா. சுப்பிரமணியன் இன்று (பிப்,10) காலை திறந்து வைத்தார்.அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, சொத்துக்குவிப்பு வழக்கில் மூன்றாம், நான்காம் குற்றவாளிகளான இளவரசி, சுதாகரனின் சொத்துகளை பறிமுதல் செய்யும் தமிழக அரசு, முதல் குற்றவாளியான ஜெயலலிதா மற்றும் இரண்டாம் குற்றவாளியான சசிகலா ஆகியோரது சொத்துகளை ஏன் பறிமுதல் செய்யாமல் உள்ளது என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

குட்கா கொண்டுவந்த வழக்கு- உரிமை குழுவின் நோட்டீசை ரத்து செய்தது ஐகோர்ட்

malaimalar : சென்னை: தமிழ்நாட்டில் குட்கா விற்பனை செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. என்றாலும் தடையை மீறி பல்வேறு இடங்களில் குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபையின் கூட்டத்தொடரில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் தமிழகத்தில தாராளமாக கிடைப்பதாக குற்றம் சாட்டி அவற்றை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சபைக்குள் கொண்டு சென்றனர். அவர்களது செயல் உரிமை மீறல் என்று கூறி பேரவை உரிமை மீறல் குழு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, அந்த நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் விதிமுறைகளைப் பின்பற்றி புதிய நோட்டீசை அனுப்ப விரும்பினால், அனுப்பலாம் என்று உரிமை மீறல் குழுவுக்கு உத்தரவிடப்பட்டது.

சசிகலாவால் அதிமுகவை கைப்பற்ற முடியாது என்று அடித்து சொல்கிறார்கள் ...... முக்கியமானவர்கள்?

Veerakumar -tamil.oneindia.com​ :சன்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிதான் சசிகலாவுக்கு நிரந்தரம், என்று அரசியல் வட்டாரத்தில் உள்ள பலரும் தெரிவிக்கிறார்கள்.
அதிமுகவை அவர் கைப்பற்ற முடியாது.. அதிமுகவில் சசிகலா ஆதரவாளர்கள் அவர் பக்கம் சாய்ந்தால் கூட, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோரை விட்டு கட்சி நழுவாது என்று ஆணித்தரமாக அடித்துச் சொல்கிறார்கள்.
இதன் பின்னணியில் சில அரசியல் சதுரங்க காய் நகர்த்தல்கள் இருக்கின்றன. எனவே தான் இவ்வளவு உறுதியாக அரசியல் பார்வையாளர்கள் அழுத்தம் திருத்தமாக கூறுகிறார்கள்.
சசிகலா திட்டம் என்ன?    சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, கடந்த மாதம் சிறையில் இருந்து ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், இன்று அதிகாலை சென்னை வந்து சேர்ந்தார்.
வழிநெடுகிலும் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மலேசியா ஓரின சேர்க்கையாளர்கள் மீது கடும் போக்கு

BBC : மலேசியாவை சேர்ந்த ஓரின சேர்க்கையாளர் ஒருவர் வெளிநாட்டில் உள்ள தனது 'வாழ்க்கை துணை'யை சந்திக்கும் நோக்கத்துடன், பயண அனுமதி கோரி மலேசிய குடிவரவு (இமிகிரேஷன்) துறையிடம் அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும், நிராகரிப்புக்கு காரணம் குறிப்பிடப்பட வேண்டிய பகுதியில் "மனம் வருந்துங்கள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகவலை அந்த ஆடவர் தெரிவித்ததாக மலேசிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலான விவாதங்களை தூண்டியிருக்கிறது. மலேசியாவில் பொது நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்ட பிறகு, இதுவரை வெளிநாடு செல்வதற்காக தாம் 30 முறை குடிவரவுத்துறையிடம் அனுமதி கோரி விண்ணப்பம் அளித்ததாக அந்த ஆடவர் தெரிவித்துள்ளார். ... முறையும் தமது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும், அச்சமயங்களில் 'போதுமான துணை ஆவணங்கள் இல்லை' அல்லது 'தேவையற்ற பயணம்' என்பதே நிராகரிப்புக்கான காரணமாக குறிப்பிடப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

மன்மோகன் சிங் அரசில் திமுக சாதித்த தமிழக நன்மைகள் .. பட்டியல்

May be an image of 3 people, people standing and people sitting

செங்குட்டுவன் பொறியாளர் : · மத்திய மந்திரி சபையில் இடம் பெற்ற திமுகவால் தமிழகம் அடைந்தது என்ன என்று கேட்பவர்களே இதோ பட்டியல்:    1. Indian Maritime University, Chennai - 11/14/2008.

https://t.co/hqUuwCxlDG
2. Tiruvarur Central University (CUTN) - 03/20/2009.
https://t.co/oBZx17cgQf
3. Indian Institute of Management Trichy - 2011.
https://t.co/1J0BizLev6
4. National Institute for Empowerment of Persons w/ Multiple Disabilities, Chennai - 2005. First in Asia.
https://t.co/yOZ1pwTS3N
https://t.co/BJl75NI1AY

செவ்வாய், 9 பிப்ரவரி, 2021

அப்பாவு கோஸ்வாமி என இருந்தால்தான் நீதி கிடைக்குமா? ராதாபுரம் தேர்தல் வழக்கு குறித்து திமுக அப்பாவு

Mathivanan Maran - tamil.oneindia.com : சென்னை: தம்முடைய பெயரும் அப்பாவு கோஸ்வாமி என இருந்தால்தான் நீதி கிடைக்குமோ? என ராதாபுரம் தேர்தல் வழக்கை சுட்டிக்காட்டி திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான அப்பாவு சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
2016 சட்டசபை தேர்தலில் ராதாபுரம் சட்டசபை தொகுதியில் திமுகவின் அப்பாவு போட்டியிட்டார்.
இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து அப்போதே இன்பதுரையின் வெற்றிக்கு எதிராக அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கில் 203 தபால் வாக்குகளை எண்ணவில்லை என்பதை அப்பாவு சுட்டிக்காட்டி இருந்தார். ..மீண்டும் எண்ணப்பட்டன
இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 3 சுற்றுகளில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஊழல் கண்காணிப்பு பதிவாளர் சாய் சரவணன் முன்னிலையிலேயே இந்த வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டன.

இனி 4 நாட்கள் மட்டுமே வேலை: மத்திய அரசுத் திட்டம்!

May be a Twitter screenshot of 1 person and text that says 'Srivatsa @srivatsayb Market Cap In 2014 ONGC: ₹3,60,000 cr RELIANCE: 60,000 cr Market Cap In 2020 ONGC:₹1 20,000, cr RELIANCE: ₹16,00,000 cr ONGC's Worth has fallen by 1/3rd while Reliance has increased 7x But if you question such things, #AmbaniJivi will call you #AndolanJivi 5:48 PM 09 Feb 21. Twitter for Android'
minnambalam : வேலைநாட்கள் தொடர்பாக வரும் நாட்களில் மத்திய அரசு புதிய நெறிமுறைகளை அமல்படுத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தற்போது அலுவலகங்களில் தினமும் 8 மணிநேரம் என்ற அடிப்படையில் வாரத்திற்கு ஆறு நாட்கள் அதாவது 48 மணி நேரம் ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த சூழலில் கொரோனா காலகட்டத்தில், வீடுகளிலிருந்தே பணி புரிய அனுமதிக்கப்பட்டதால் வேலை நேரமும் அதிகரிக்கப்பட்டது. நாளொன்றுக்கு 10 முதல் 12 மணி நேரம் வரை வேலை செய்ய நேர்ந்தது. இந்நிலையில் ஊழியர்களின் வேலை நேரம் தொடர்பாக மாற்றங்களைக் கொண்டுவர மத்திய தொழிலாளர் அமைச்சகம் தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இனி வரும் நாட்களில் வாரத்துக்கு நான்கு நாள் மட்டுமே வேலை செய்தால் போதும் என்ற புதிய விதிமுறைகளை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தஞ்சாவூரிலும் சசிகலா சுதாகரன் இளவரசி சொத்துக்கள் அரசுடமை ..இன்று அதிரடி

nakkheeran.in - பகத்சிங் ; சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் சொத்துக் குவிப்பு வழக்கில்
சம்மந்தப்பட்டுள்ள ஏராளமான சொத்துகளை அரசுடைமையாக்க நீதிமன்றம்
உத்தவிட்டிருந்த நிலையில், தற்போது ஒவ்வொரு சொத்துகளாக
அரசுடைமையாக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம் ஆகிய  மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் உள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.&>தஞ்சை-1 சார்பதிவாளர் அலுவலக எல்லைக்கு
உட்பட்ட தஞ்சை நகரம், 6 வார்டு, பிளாக் நம்பர் 75-ல், வ.உ.சி தெருவில்,
26540 சதுர அடி மனையைக் கடந்த 1995ஆம் வருடம் ரூ.11 லட்சத்திற்கு சுதாகரன் -
 இளவரசி பங்குதாரர்களாக உள்ள லெக்ஸ் பிராப்பர்டி டெவலப்மெண்ட் நிறுவனம்   வாங்கியுள்ளது.....தஞ்சையில் வாங்கப்பட்ட சொத்துகள் வடசென்னை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த  சொத்துகளை நீதிமன்ற உத்தரவுப்படி அரசு சொத்தாக மாற்றப்பட்டுள்ளதாக தஞ்சை   மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதே போல இன்னும் பல சொத்துகள்   அரசு சொத்துகளாக மாற்றப்பட உள்ளன

15 நாட்களில் பயிர் கடன் தள்ளுபடி ரசீது வழங்கப்படும்- எடப்பாடி பழனிசாமி

15 நாட்களில் பயிர் கடன் தள்ளுபடி ரசீது வழங்கப்படும்- எடப்பாடி பழனிசாமி

maalaimalar :  அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கைனூரில் எடப்பாடி பழனிசாமி இன்று தனது 5-வது பிரசார பயணத்தை தொடங்கினார்.அப்போது அங்கிருந்த மகளிர் குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்ற காலத்திலிருந்து கிராமப்புறத்தில் இருக்கின்ற மகளிர் முதல் அனைத்து மகளிருக்கும் சொந்தமாக தொழில் துவங்க சுய உதவி குழு உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டத்தில் மட்டும் 7404 குழுக்கள் உள்ளது. ரூ.288 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. கடன் பெற்ற அனைத்து மகளிர் சுயஉதவி குழு மிக சிறப்பாக செயல்பட்டு வாங்கிய கடனை சரியான முறையிலே உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்துகின்றனர்.

சுய உதவி குழு பெண்கள் சொந்தக்காலில் நின்று குடும்ப பாரத்தை சுமந்து வருகின்றனர்.  தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். 12.5 லட்சம் மகளிருக்கு ஒரு சவரன் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனாவை கண்டறியும் சிப்பிப்பாறை வகை நாய்கள் -செயல்விளக்க வீடியோ

   malaiamalar :புதுடெல்லி: சிறுநீர் மற்றும் வியர்வை மாதிரிகளை வைத்து கொரோனா தொற்றை கண்டறிதவற்கு, இந்திய ராணுவத்தின் மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சிப்பிப்பாறை மற்றும் காக்கர் ஸ்பேனியல் வகை நாய்களுக்கு அளிக்கப்படும் இந்த பயிற்சி நல்ல பலனை கொடுத்துள்ளது. டெல்லி மற்றும் சண்டிகர் முகாம்களில் இதுவரை 3806 வீரர்களின் மாதிரிகளை பரிசோதித்ததில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. மோப்ப சக்தி மூலம் கொரோனா தொற்றை கண்டறிவது தொடர்பாக செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில், காஸ்பர் என்ற பெயருடைய காக்கர் ஸ்பேனியல் வகை நாய், நொடிப்பொழுதில் கொரோனா பாதிப்பு உள்ள மாதிரியை அடையாளம் காட்டி வியக்க வைத்தது. 

இதேபோன்று பயிற்சி பெற்ற சிப்பிப்பாறை வகை நாய்களான ஜெயா, மணி ஆகிய நாய்களும் உடனிருந்தன மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் கர்னல் சுரேந்தர் சைனி இதுபற்றி கூறுகையில், ‘வியர்வை மற்றும் சிறுநீர் மாதிரிகளைப் பயன்படுத்தி கொரோனாவைக் கண்டறிவதற்கு  இந்திய ராணுவ நாய்கள் பயிற்சி பெற்றிருக்கின்றன. 

திமுக.,வினர் அளித்த வேல் வாங்க மறுத்த கனிமொழி

dinamalar : மதுரை : மதுரையில் தேர்தல் பிரசாரத்தின் போது தி.மு.க.,வினர் அளித்த முருகப்பெருமான் வேலை கனிமொழி எம்.பி., வாங்க மறுத்து தள்ளிவிட்டார். மதுரையில் கனிமொழி இரண்டு நாள் தேர்தல் பிரசார பயணம் மேற்கொண்டுள்ளார். சிம்மக்கல் பகுதியில் கருணாநிதி சிலை அமைக்கும் பணி நடக்கிறது. அதை பார்வையிட சென்ற போது வடக்குமாசி வீதி தி.மு.க., வட்ட செயலாளர் பாலு, பகுதி செயலாளர் சரவணன் ஆகியோர் கனிமொழிக்கு வெண்கலத்தால் ஆன வேல் கொடுக்க முயன்றனர். டென்ஷன் ஆன கனிமொழி முகத்தை சுளித்துக்கொண்டு வாங்க மறுத்தார்.

latest tamil news
பாலு கூறுகையில் “திருப்புவனம் அருகே எங்கள் ஊரில் உள்ள கோயிலுக்கு கொண்டு செல்ல வேல் செய்தோம். அதை ஆட்டோவில் கொண்டு சென்றோம். கனிமொழியை பார்க்க செல்லும்போது ஆட்டோவிலேயே வேலை வைத்திருந்தால் அதை யாராவது எடுத்துச் சென்றுவிடுவார்கள் என்ற அச்சத்தில் கையில் கொண்டு சென்றோம். ஆனால் அதை அவருக்கு தான் கொடுக்க நினைத்தோம் என கனிமொழி நினைத்து விட்டார். நாங்கள் அவருக்கு வேல் கொடுக்கவில்லை” என்றார்.

அண்ணா பல்கலை ரத்து செய்யப்பட்ட படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை

minnambalam : ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. எம்.டெக் பயோடெக்னாலஜி மற்றும் கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரு துறைகளுக்கான மேற்படிப்புக்கு இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை ரத்து செய்யப்படுவதாக அண்மையில் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. இதனிடையே இத்துறை படிப்புகளில் சேர்வதற்காக நுழைவுத்தேர்வு எழுதி விண்ணப்பித்திருந்த மாணவிகள் சித்ரா மற்றும் குழலி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில் தமிழக அரசின் 69% இட ஒதுக்கீட்டுக்கு முறைக்குப் பதில் மத்திய அரசின் 49.9% இட ஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்ற நிர்ப்பந்தித்தது நடப்பு கல்வியாண்டில் இரு மேற் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் மத்திய அரசு தலையிட முடியாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

வியக்க வைக்கிறார் விஜய்சேதுபதி!

May be an image of 3 people, beard and text
சாவித்திரி கண்ணன் : · தகுதிக்கு மீறிய வகையில் தன் பிம்பங்களை கட்டமைத்து வித்தை காட்டும் சினிமா ஹீரோக்கள் மத்தியில் கதாபாத்திரத்திற்குள் தன்னை கச்சிதமாக பொருத்திக் கொள்வதற்கு மேலாக எதையும் மிகையாக முயற்சிக்கமாட்டார்! கதாநாயகனுக்குரிய அனைத்து மாயைகளையும் கட்டுடைத்த இயல்பான மனிதன்! இந்த வகையில் தான் விஜய் சேதுபதி மக்களின் விருப்பத்திற்குரிய ஒரு கலைஞனாக வலம் வருகிறார் என்று தோன்றுகிறது! பொதுவாக சினிமா என்ற மீடியாவால் பொய்யானவர்கள் நல்லவர்களாகவும், அயோக்கியர்கள் உத்தமர்களாகவும் தோற்றம் பெற்று விடுகின்றனர்! இப்படி அவர்கள் தோற்றம் பெற பத்திரிகைக்காரர்களும் தங்கள் பங்கிற்கு துணை போவார்கள்! அப்படி கட்டமைக்கப்படும் மாயையைக் கொண்டு அரசியல் அதிகாரத்தை நோக்கி நகரவும் நடிகர்கள் தைரியம் பெற்றுவிடுகின்றனர்!

நமது மன்னர்களும் செல்வந்தர்களும் அந்த அழகான வெளிநாட்டுப் பெண்கள் அழகில் மயங்கினர்.

Kathir RS : · அவர்கள் வெளிநாட்டுக்காரர்கள்! பல தலைமுறைகளுக்கு முன் நம் நாட்டில் வந்து குடியேறியவர்கள். சிவப்பானவர்கள்! அழகானவர்கள்! வசீகரமானவர்கள்! நமது மன்னர்களும் செல்வந்தர்களும் அந்த அழகான வெளிநாட்டுப் பெண்கள் அழகில் மயங்கினர். அவர்கள் மூலம் பெரிய இடங்களில் அந்த வெளிநாட்டுக்காரர்கள் இடம் பிடித்தனர். அவர்களின் பண்பாட்டை நமது பண்பாட்டுடன் கலந்தனர்.அவர்கள் வழிபாட்டை நமது வழிபாட்டுடன் கலந்தனர்.
ஒரு கட்டத்தில் அதற்கு அவர்களே தலைவர்களானார்கள்.
அந்த ஆதிக்கம் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து சிறிது சிறிதாக பரவி ஒட்டு மொத்த நாட்டின் தலைமையை ஆட்டுவிக்கும் இடத்தை அவர்கள் பிடித்தார்கள்.
இன்றும் நம்மை அவர்கள் ஆள்கிறார்கள்.
அரசியலில்
கோவில்களில்

திங்கள், 8 பிப்ரவரி, 2021

அழகிரி குறித்து ஸ்டாலின் முடிவுசெய்வார்" - கனிமொழி பேட்டி!

nakkheeran.in - அண்ணல் : தி.மு.க.வின் முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரியை தி.மு.க.வில் இணைப்பது குறித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முடிவு செய்வார் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற தலைப்பில் தி.மு.க. கட்சியின் மகளிரணிச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, மதுரையில் இன்று (08/02/2021) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். 

அதற்கிடையே மதுரை அழகர்கோவில் சாலையில் அமைந்துள்ள தனியார் உணவு விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.;அப்போது பேசிய கனிமொழி, "அ.தி.மு.க. அரசின் மீது தமிழக மக்களுக்கு அதிருப்தி நிலவுகிறது. ஆகையால், அவர்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். இன்று மதுரையில் பல்வேறு தரப்பினரை சந்தித்துப் பேசியபோது இதைத்தான் உணர முடிந்தது. பத்தாண்டுகளாக எந்தவித நல்ல திட்டங்களையும் இவர்கள் கொண்டு வரவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வோம் எனக் கடந்த ஜனவரி மாதம் முதலே ஸ்டாலின் கூறி வருகிறார். சசிகலாவை அ.தி.மு.க.வினர் தான் 'சின்னம்மா' என்றெல்லாம் பாராட்டி பேசினார்கள். இன்று தி.மு.க.வின் 'பி' டீம் என்று கூறுவது நகைப்பாக உள்ளது. தி.மு.க. என்றும் நேரடி அரசியல்தான் செய்யும்.

இந்த ஆட்சியின் அவலங்களை மக்களிடம் சொல்கின்ற அதே நேரத்தில், கடந்த தி.மு.க. ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட பல நல்ல திட்டங்களை நாங்கள் சொல்லியே மக்களைச் சந்திக்கிறோம். 110 விதியின் கீழ் பல்வேறு திட்டங்களை அறிவிக்கிறார்கள். ஆனால் அதனைச் செயல்படுத்துவது இல்லை என்பதுதான் உண்மை.

சசிகலாவின் ஓப்பனிங் ஸ்பீச்.. அடிபணிய மாட்டேன் - சசிகலா ஆவேசம்!

May be an image of fire and outdoors
சசிகலாவுக்கு வரவேற்பு வெடி வெடித்தபோது தீப்பற்றி 2 கார்கள் நாசம்!
nakkheerannewseditor - நக்கீரன் செய்திப்பிரிவு : சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, தனது தண்டனை காலத்தை நிறைவு செய்த நிலையில், இன்று (08/02/2021) காலை சென்னை திரும்ப, பெங்களூருவிலிருந்து கிளம்பினார். காலை 07.30 மணி அளவில் அ.தி.மு.க. கொடி பொருத்தப்பட்ட காரில் பயணத்தைத் தொடங்கிய அவர், 10.30 மணி அளவில் தமிழக எல்லையை வந்தடைந்தார். தமிழக எல்லைக்குள் அ.தி.மு.க. கொடியுடன் வந்தால், சசிகலா மீது நடவடிக்கை எடுப்பது உறுதி எனக் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் தமிழக கர்நாடக எல்லையில், காரில் உள்ள அ.தி.மு.க. கொடியை அகற்ற அவகாசம் கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், கிருஷ்ணகிரி பகுதியில் சசிகலா, அ.தி.மு.க. நிர்வாகி ஒருவரின் காரில் மாறி, அந்த காரில் சென்னை நோக்கி வந்தார். பின் வரும் வழியில் சில இடங்களில் கோவிலில் தரிசனமும் நடந்தது.

பாலக்காடு அருகே தோஷம் நீங்க 6 வயது சிறுவன் நரபலி- கர்ப்பிணி தாய் கைது

பாலக்காடு அருகே தோஷம் நீங்க 6 வயது சிறுவன் நரபலி- கர்ப்பிணி தாய் கைது

maalaimalar :பாலக்காடு: பாலக்காடு அருகே தோஷம் நீங்குவதற்காக 6 வயது சிறுவனை நரபலி கொடுத்த கர்ப்பிணி தாயை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுலைமான் (வயது 40). இவருடைய மனைவி சபிதா (38). இவர் அங்குள்ள மதரசாவில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அத்துடன் அவர் 4 மாத கர்ப்பிணி ஆவார். இவர்ளுக்கு 3 மகன்கள் உள்ளனர். 3-வது மகன் ஆமிலின் (6). இவன் அங்குள்ள ஒரு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் நேற்று காலையில் பாலக்காடு தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தொடர்பு கொண்ட சபிதா, தனது 3-வது மகனை கொலை செய்துவிட்டதாகவும், அவனுடைய உடல் குளியலறையில் இருப்பதாகவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

ஒரே ஒரு நாள் Facebook ல இருந்து பாருங்க அப்ப புரியும் எங்க வலி என்னனு..???


செங்குட்டுவன் பொறியாளர்
: · பார்க்க பெரிய மனுஷன் போல இருக்கீங்க, எப்ப பாரு #Facebook லையே இருக்கிங்களே உங்களுக்கு வேற வேலை வெட்டியே இல்லையா.. தம்பி புள்ளி விபரம் தெரியாம பேசக்கூடாது. ஒருநாள் நீ வந்து பாரு .. ஒரே ஒரு நாள் Facebook ல நீ இருந்து பாரு அப்ப புரியும் எங்க வலி என்னனு.. எவ்வளவு  post
எவ்வளவு டென்ஷன்
எத்தனை லைக்
எத்தனை கமெண்ட்
எத்தனை ஷேர்
எத்தனை சண்டை
எத்தனை பஞ்சாயத்து
எத்தனை group call
எத்தனை கெஞ்சல்கள்
எத்தனை கொஞ்சல்கள்
இதெல்லாம் அனுபவிச்சு பார்த்தான்யா தெரியும் ...
கரெக்டா பிறந்தநாள் வாழ்த்து சொல்லனும்,
திருமண நாள் வாழ்த்து சொல்லனும்,

தோழி ஒருத்தி சொன்னாள் " நம்மளையும் சிஸ்டராக சொல்றாங்கடி" !

Shalin Maria Lawrence : · படித்தது கிறிஸ்தவ கல்லூரியில்.அங்கே வருடத்திற்கு ஒரு முறை தியான வகுப்புகள் மூன்று நாட்களுக்கு நடக்கும். கிறிஸ்தவ மாணவிகளுக்கு தியானத்தில் கலந்து கொள்ளுவது கட்டாயம். முதல் வருட தியானம் நிகழ்ந்த போது கல்லூரிக்கே செல்லவில்லை.இரண்டாம் வருடம் தியானத்தன்று கட் அடித்துவிட்டு கும்பலாக பெசன்ட் நகர் பீச்சில் சுற்றி கொண்டிருந்தோம். க்ரிஸ்த்வ தியான நிகழ்வுகள் இளம் வயதுக்கு ஏற்றதல்ல.த்யானக்கூடங்களின் உள்ளே சென்றால் குற்றஉணர்வை வைத்து கல்லங்கோல் ஆடி கொண்டிருப்பார்கள். நாமே ஏசுநாதரை இழுத்து கொண்டு போய் சிலுவையில் அறைந்தது போல பழியை போட்டு மூளையை பிரண்டுவது பாதிரியார்களின் பழக்கம். அதற்கு பயந்தே 18 வயதுக்கு மேல் அவைகளை அதிகமாக புறக்கணித்தோம்.
கல்லூரியின் மூன்றாம் வ்ருடம் மீண்டும் தியான வகுப்பு வந்தது.இந்த முறை இரண்டு சாய்ஸ்கள் கொடுக்கபட்டன.Charismatic and Non-charismatic. அதாவது எப்பொழுதும் போல நெஞ்சை குத்தி கொண்டு "என் பாவமே,என் பெரும்பாவமே" எனும் வகை,இன்னொன்று ஆட்டம் ,பாட்டம் ,விளையாட்டு கொண்டு ஆன்மீகத்தை அடைதல்.
முதல் நாள் இந்த புது வகை தியானத்திற்கு சென்றவர்கள் அதை பற்றி அங்களாய்த்து வைக்க இரண்டாம் நாள் கலந்து கொள்ளலாம் என்று ஆசையுடன் முடிவெடுத்தோம். கூடவே திங்க கேக்கும் ,பிஸ்கெட் பாக்கெட்டும், சமூசாவும் தருகிறார்கள் என்று கேள்வி பட்டதும் உற்சாகம் தொற்றி கொள்ள.கட் அடிப்பதாக இருந்த அத்தனை தோழிகளையும் ஒன்று சேர்த்து கும்பலாக சென்றோம்.

ஜாதி உளவியலை பயன்படுத்தி RSS தமிழ் நாட்டை சீரழிக்க வந்துள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள்!!!

Kandasamy Mariyappan : · நேற்று, அரசு ஊழியர்களைப் பற்றிய பதிவு ஒன்றை எழுதுகினேன். பலர் ஆதரித்தனர், சிலர் எதிர்த்தனர்! எதிர்ப்புக்கான காரணம்..... 1970க்கு முன்பு இது போன்ற குற்றச்சாட்டுகள் மக்களிடமோ, ஊழியர்களிடமோ, அதிகாரிகளிடமோ, அரசிடமோ இருந்ததில்லை! பிறகு ஏன் இப்பொழுது..!!!?? அதுதான் நம்மிடம் இருக்கும் உளவியல்!!! ஒரு அருந்ததியர் ஆசிரியராக இருப்பதை, ஒரு புதரை வண்ணாரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை! ஒரு புதரை வண்ணார் அரசு வக்கீலாக இருப்பதை
ஒரு பறையரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!
ஒரு பறையர் நீதிபதியாக இருப்பதை, ஒரு பள்ளரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை!
ஒரு பள்ளர் மின் துறை பொறியாளராக இருப்பதை ஒரு அம்பட்டரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை!
ஒரு அம்பட்டர் வருவாய் துறை அதிகாரியாக இருப்பதை, ஒரு வண்ணாரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!
ஒரு வண்ணார் மருத்துவராக இருப்பதை, ஒரு வளையரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!
ஒரு வளையர் பொதுபணித்துறை பொறியாளராக இருப்பதை, ஒரு வன்னியரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!
ஒரு வன்னியர் துணை வேந்தராக இருப்பதை, ஒரு கள்ளரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!

அதிமுக கொடி பொருத்திய காரில் சசிகலா பெங்களூருவில் இருந்து சென்னை புறப்பட்டுள்ளார்.

nakkeeran  : சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா தற்போது அவரின் தண்டனை காலத்தை நிறைவு செய்து உள்ளார். கரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் குணமானதையடுத்து இன்று காலை சென்னை திரும்ப பெங்களூருவில் இருந்து கிளம்ப இருந்தார். இதையடுத்து அவரது காலில் மீண்டும் அதிமுக கொடி கட்டப்பட்டுள்ளது. காலை 7.30 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்ட அவர் இன்னும் சில மணி நேரத்தில் தமிழக எல்லையை அடைவார் என்று எதிர்பார்க்கப்பட்டுகிறது

சசிகலா தமிழகம் திரும்புகிறார் 57 இடங்களில் உற்சாக வரவேற்பு கொடுக்க தொண்டர்கள்...

Vishnupriya R -   tamil.oneindia.com :  சென்னை: 4 ஆண்டுகள் கழித்து சென்னை வரும் சசிகலாவுக்கு இன்று வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து பெங்களூருவில் தங்கியிருக்கும் சசிகலா திங்கட்கிழமை காலை சென்னை திரும்புகிறார். தமிழகம் வரும் சசிகலாவிற்கு வழிநெடுக 57 இடங்களில் வரவேற்பு கொடுக்க அமமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர். கர்நாடகா - தமிழக எல்லையான ஜூஜூவாடியில் மேளதாளம் முழங்க 5 ஆயிரம் பேர் சசிகலாவை வரவேற்கிறார்கள். அதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் வழியாக சென்னை அழைத்து வரப்படுகிறார். சென்னை எல்லையான செம்பரம்பாக்கம் தொடங்கி நசரத்பேட்டை, குமணன்சாவடி, போரூர், கிண்டி கத்திப்பாரா என தியாகராய நகர் வரை 32 இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

சுவரொட்டிகள் சசிகலாவை வரவேற்று சென்னையின் பெரும்பாலான இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. தியாகராய நகரில் உள்ள கிருஷ்ணபிரியாவின் இல்லத்தில் தங்க உள்ள சசிகலா அங்கேயே தொண்டர்களை சந்தித்து பேச உள்ளார்.

கியூபாவில் பெரும்பாலான தொழில்களில் தனியாருக்கு அனுமதி

கம்யூனிச கோட்டையான கியூபாவில் பெரும்பாலான தொழில்களில் தனியாருக்கு அனுமதி
BBC :கியூபாவின் வரலாற்றில் முதல் முறையாக பொருளாதாரத்தில் மிகப் பெரிய சீர்திருத்தமாக, தன் நாட்டின் பெரும்பாலான தொழில்களில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.கியூபாவில் 127 வகையான தொழில்களில் மட்டுமே தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி இருந்து வரும் நிலையில், அது தற்போது 2,000க்கும் மேற்பட்ட தொழில்களாக அதிகரித்து அனுமதி வழங்கப்படுவதாக கியூபாவின் தொழிலாளர் துறை அமைச்சர் மார்டா எலெனா ஃபிடோ கூறினார்.

இதன் மூலம், மிகக் குறைவான தொழில்துறைகள் மட்டுமே அரசின் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.   முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் விதித்த பொருளாதாரத் தடை மற்றும் கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்றால் கியூபா பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் வரை தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும்!"- முன்னாள் முதல்வர் ரங்கசாமி பேச்சு...

puducherry former cm rangasamy speech

.nakkheeran.in :அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 11- ஆம் ஆண்டு தொடக்க விழா ஈசிஆர் சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதுச்சேரியின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துக் கொண்டனர்.    கட்சியின் கொடியை ஏற்றி வைத்த ரங்கசாமி, தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். அப்போது பேசிய ரங்கசாமி, "புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் வரை அனைத்து கட்சிகளும் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும். மாநில அந்தஸ்து பெற்றால் மட்டுமே புதுச்சேரி வளரும். அதனால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற அனைத்து கட்சிகளும் வலியுறுத்த வேண்டும். மாநில அந்தஸ்து வழங்கினால் மட்டுமே தேர்தலைச் சந்திப்போம் என அனைத்து கட்சிகளும் அறிவிக்க வேண்டும். இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாரா? என சவால் விடுத்தார்.

இலங்கையில் குடியேறிய தென்னிந்திய மக்கள் .. . ..அறுபதுகள் வரை படகுகளை மூலம் வந்தவர்கள் !

இலங்கைநெற் :  இலங்கை தமிழர்களின் வரலாற்றை எழுதும் போது சங்கிலியன் பண்டாரவன்னியன் ராஜராஜ சோழன் ராஜேந்திர சோழன் என்றெல்லாம் நீட்டி முழுக்குவார்கள்.
இதில் வரலாற்று ஆய்வாளர்களும், ஆண்ட பரம்பரை அரசியல்வாதிகளும். பேச மறுக்கும் ஒரு முக்கிய விடயம் உள்ளது.
தென்னிந்திய மாநிலங்களில் இருந்து காலத்திற்கு காலம் படகுகளில் வந்து குடியேறிய மக்களின் வரலாறு பற்றி ஒருவருமே பேசவதில்லை .
ஆங்கிலேயர்களால் தேயிலை ரப்பர் கோப்பி தோட்டங்களுக்கு அழைத்து வரப்பட்ட மலையக மக்கள் பற்றி எல்லோருக்கும் தெரியும். மலையகத்திலும் கூட எல்லோருமே ஆங்கிலேயர்களால் அழைத்து வரப்பட்டவர்கள் அல்ல .
ஏராளமானோர் வியாபார நோக்கத்திற்காக இலங்கையில் குடியேறியவர்களாகும் .
இதில் தமிழர்கள் மட்டுமல்லாது இதர தென்னிந்திய மாநிலங்களையும் தாண்டி சிந்தி குஜராத்தி மக்களும் உண்டு .
எனது வகுப்பிலேயே ஒரு சகமாணவன் குஜராத்தியை தாய்மொழியாக கொண்டவர் . அவரது வீட்டில் குஜராதியே பேசினார்கள் .
இன்னொருவர் வீட்டில் தெலுங்கை பேசினார்கள்.
இன்னொருவர் வீட்டில் மலையாளம் பேசினார்கள். இது வெறும் கட்டுக்கதை அல்ல ஆராய்ந்து பார்க்கலாம்!

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2021

வீட்டு கிணற்றில் வரும் கியாஸ் மூலம் சமையல் செய்யும் பெண்

வீட்டு கிணற்றில் வரும் கியாஸ் மூலம் சமையல் செய்யும் பெண்
maalaimalar.com : திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழாவை அடுத்த ஆராட்டுவளியை சேர்ந்தவர் ரமேசன். இவரது மனைவி ரத்தினம்மா. இத்தம்பதியினர் தங்கள் வீட்டில் குடிநீருக்காக கடந்த 10 ஆண்டுக்கு முன்பு கிணறு தோண்டினர். அந்த கிணற்றில் தண்ணீர் நிறம் மாறி காணப்பட்டது.... இதனால் அவர்கள் அந்த கிணற்றை மூடிவிட்டு அதன் அருகில் வேறொரு கிணறு தோண்டினர். அந்த கிணற்றில் இருந்து வித்தியாசமான வாயு வெளியானது. அந்த வாயு சமையல் எரிவாயு போன்று வாடை அடித்தது... இதனால் ரமேசன் தம்பதியினர் அந்த வாயுவை பற்றவைத்து பார்த்தனர். அது எரிந்ததை கண்டு ஆச்சரியம் அடைந்தனர். உடனே அவர்கள் அந்த வாயுவை ஒரு குழாய் மூலம் வீட்டு சமையல் அறைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டனர்.

உதவி கோரிய ஒடிசா மாணவி: நேரில் சென்று நிதியுதவி அளித்த தருமபுரி தி.மு.க எம்.பி செந்தில்குமார்

Janani - kalaignarseithigal.com :மேற்படிப்பு படிக்க உதவி கோரிய ஒடிசா மாணவியை நேரில் சந்தித்து ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்த தருமபுரி தி.மு.க எம்.பி செந்தில்குமார்.
மேற்படிப்பு படிக்க உதவி கோரிய ஒடிசா மாணவி: நேரில் சென்று நிதியுதவி அளித்த திமுக MPக்கு குவியும் பாராட்டு!
ஒடிசாவின் புரி மாவட்டத்தின் காரடிபிதா கிராமத்தைச் சேர்ந்தவர் லோஜி பெகேரா (20). பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவியான இவர் கடந்த 2019ம் ஆண்டு கட்டிட பொறியியலில் டிப்ளமோ படிப்பை படித்துள்ளார்.
அதற்கு 24 ஆயிரத்து 500 ரூபாய் நிலுவைத் தொகை கட்ட முடியாத காரணத்தால் டிப்ளமோ முடித்ததற்கான சான்றிதழை அவரால் பெற முடியவில்லை.      

இளவரசி, சுதாகரனின் 6 சொத்துகள் அரசுடைமை.. சென்னை டிடிகே சாலை ஸ்ரீராம் நகரில் உள்ள லெக்ஸ் பிராப்பர்டி...

ilavarasi, sudhakaran properties chennai district collector
nakkeeran : இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான 6 சொத்துகள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.    சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கில் 14/02/20217 அன்று வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பின் படி, சென்னை வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட இளவரசி, சுதாகரனின் பெயரிலுள்ள 6 சொத்துகள் அரசின் சொத்து என உரிமை மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, சென்னை டிடிகே சாலை ஸ்ரீராம் நகரில் உள்ள லெக்ஸ் பிராப்பர்டி, டெவலப்மெண்ட் நிறுவனத்தின் பெயரில் உள்ள சொத்துகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. சென்னை வாலஸ் தோட்டத்திலுள்ள 5 சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.    நாளை (08/02/2021) சசிகலா தமிழகம் திரும்ப உள்ள நிலையில் அவரது உறவினர்களுக்கு சொந்தமான சொத்துகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் .. பனிமலை உடைந்து உருகியதால் ஏற்பட்ட

maalaimalar : டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டம் ஜோஷிமாத் பகுதியில் உள்ள நந்தாதேவி பனிமலை இன்று திடீரென உடைந்துள்ளது. ரேனி கிராமத்தில் ரிஷிகங்கா மின்நிலையம் அருகே பெரிய அளவில் பனிப்பாறைகள் சரிந்து, வேகமாக உருகியதால் தவுலிகங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதும் ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மீட்பு பணி நடைபெற்று வருகிறது. ரேனி கிராமத்தின் அருகே முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ராணுவ வீரர்களிடம் பாதிப்பு நிலவரம் குறித்து கேட்டறிந்தார். ஆற்றங்கரையோரத்தில் உள்ள ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. 100 முதல் 150 பேர் வரை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இத்தகவலை மாநில தலைமைச் செயலாளர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் என்பது வணிகம் மட்டுமே! Adv Manoj Liyonzon

May be an image of 1 person and text that says 'Pranav Dhanwade Age: 15 World Record: 1009runs.in327balls S/O: Auto Driver REJECTED Arjun Tendulkar Age: 15 Record: TILNoW S/O: Sachin Tendulkar SELECTED'
Adv Manoj Liyonzon ; · என் வாழ்நாளில் இதுவரை நான் ஒரே ஒரு முறை மட்டும் தான் கிரிக்கெட் மேட்ச் பார்த்திருக்கிறேன். அது இந்தியா vs இலங்கை semi finals. அது 98-99 காலகட்டம் என்று நினைக்கிறேன். அதையும் கூட பாதி மேட்ச் தான் பார்த்தேன். எனக்கு கிரிக்கெட் விளையாட்டில் எப்போதும் ஈர்ப்பு ஏற்பட்டதே இல்லை. நான் ஒரு கபடி விளையாட்டுக்காரன். கால்பந்து, பேட்மிண்டன் மற்றும் பைக் ரேஸர். விளையாட்டில் ஆர்வம் இருந்தும் கூட கிரிக்கெட் மீது ஆர்வம் ஏற்பட்டதே இல்லை. உண்மையில் என்னுடன் இருந்த பலரும் தங்களை ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகர்களாக காட்டிக் கொண்டார்கள். கிரிக்கெட் மீது ஆர்வம் உண்டாகும்படிக்கு என்னை சுற்றியிருந்த ஒவ்வொருவருக்கும் கடுமையான Peer Pressure இருந்தது. இப்போதும் இருக்கிறது.
முன்பெல்லாம் கிரிக்கெட் பற்றி நண்பர்கள் விவாதிக்கும் போது எனக்கு அது பற்றி தெரியாது என்று அவர்கள் அறிக்கையில் கடுமையான கிண்டல் கேலிக்கு உள்ளாகியிருக்கிறேன். (...இப்போது அப்படி நடந்தால் காரி மூஞ்சியில் துப்பி விடுவேன் என்பது வேறு விசயம்)...

நடிகர் ரஜினிகாந்த் யாருக்குமே ஆதரவு தரபோவதில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது

 முற்றுப்புள்ளி

Hemavandhana tamil.oneindia.com சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் யாருக்குமே ஆதரவு தரபோவதில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது..! 

உடல்நிலையை காரணம் காட்டி ரஜினிகாந்த் அரசியலில் இருந்து பின்வாங்கி கொண்டார்.. இந்த முடிவு அவரது ரசிகர்களைவிட, ரஜினியே நம்பிக் கொண்டிருந்த, ரஜினியை வைத்தே தங்கள் எதிர்காலத்தையும் நினைத்து கணக்கு போட்டுக் கொண்டிருந்த அவரது ஆதரவாளர்களுக்கு, தலையில் பெருத்த இடியாய் விழுந்தது. மற்றொரு புறம் கூட்டணிக்காக காத்திருந்த கட்சிகளுக்கும் ஏமாற்றத்தையே அளித்தது... அதிலும் பல வருடமாக காத்திருந்தது பாஜகதான்.. எத்தனையோ வகைகளில் ரஜினியை உயர்த்தி பிடித்தும், தாங்கி பிடித்தும் விருதுகளை தந்தும், அவரது ஆதரவை பெற முயற்சித்து வந்தது. அதாவது, குருமூர்த்தியை ரஜினியின் வாய்ஸை பெற முயற்சித்தது. ... 

கூலித்தொழிலாளி தாக்கப்பட்ட சம்பவம்... நான்குபேர் சிறையில் அடைப்பு.... மேலும் 6 பேருக்கு வலைவீச்சு!!

thanjai papanasam video incident
.nakkheeran.in - கலைமோகன் : தஞ்சை பாபநாசம், அம்மாபேட்டை, பூண்டி மேலத்தெருவைச் சேர்ந்த விவசாயக் கூலித்தொழிலாளி ராகுல் என்பவரை, பச்சைத் துணியால் கண்ணைக் கட்டி அதே பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் மரத்தில் கட்டி வைத்து பிரம்பால் அடித்துள்ளனர். வலியைத் தாங்க முடியாமல் அந்த கூலித் தொழிலாளி ''வேணாம் அண்ணா... வேணாம் அண்ணா...'' என கதறி, மயக்கமடைந்த நிலையிலும் கடுமையாக தாக்கப்பட்டார். அதுதொடர்பான வீடியோ காட்சிகள் அண்மையில் சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் கண்டனங்களைப் பெற்றது. செய்யாத குற்றத்திற்காக தான் தாக்கப்பட்டதாக கூறிய கூலித்தொழிலாளி ராகுல், இதனால் மனமுடைந்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது அவர் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

''வள்ளலார்' வைரமுத்துவின் தமிழாற்றுப்படை! வள்ளலார் மீது ஆறுமுக நாவலர் தொடுத்த அவதூறு வழக்கு,...

கவிஞர் வைரமுத்து அவர்கள்  வடலூர் ராமலிங்க வள்ளலாரின் வரலாற்றை தனது தமிழாற்று படையின் தொடர்களில் ஒன்றாக மேடையேற்றி உள்ளார்  அந்த ஆற்று நீரில் சற்று நனைந்து பாருங்கள் .   கிழக்கிந்திய கம்பனியோடு வந்த கிறித்துவம் ஒரு கோடி மக்களை மதம் மாற்றியதற்கும் ராமலிங்கரின் மனமாற்றத்திற்கு உள்ள தொடர்பு ஊன்றி உணரத்தக்கது .
மதமாற்றம் இந்த மண்ணில் எந்தவழி நுழைந்தது? அந்நியர் இம்மண்ணில் எவ்வழி புகுந்தனர்?
வருணங்களென்றும் குலங்கள் என்றும் ஜாதிகள் என்றும் பிளந்து வைத்த சந்து வெளி புகுந்தது.           அந்நியரை ஓட்டவேண்டும்  அதற்கு முன்னால் அந்நியரை வரவழைத்த மதச்சண்டைகளின் பிற்போக்குத்தனத்தின் பிடரியை பிடித்து ஆட்டவேண்டும் என்று சிந்தித்த முதல் புரட்சி துறவி வள்ளலார் என்றே சொல்ல தோன்றுகிறது.
இந்து மதம் துறவின் நிறம் காவி என்றது   வள்ளாளரோ வெள்ளை என்றார்.
இந்துமதம் உருவ வழிபாடு என்றது  . வள்ளலாரோ ஒளி வழிபாடு என்றார்.
இந்துமதம் மக்கள் தொகை போல கடவுள் என்றது   வள்ளலாரோ ஒரே கடவுள் அருட் பெரும் சோதி என்றார்.           
இப்படி வள்ளலாரின் வரலாற்றை சுருக்கமாக அழகாக கூறுகிறார் கவிஞர்      வள்ளலார் புகழ் பெறுவதையும் அவர் கருத்துக்கள் கவனம் பெறுவதையும் கோயில் உற்சவங்களில் திருவாசகத்திற்கு பதிலாக அருட்பா ஓதப்படுவதையும் கண்டு கன்று வந்த சில சைவ மடங்கள் வள்ளாளருக்கு எதிராக கள்ள களம் கண்டன .