சனி, 6 ஆகஸ்ட், 2011

உள்பாவாடை காணாமல் போய்விட்டால் கூட எங்கள் மீது கேஸ் போடுகிறான் : கே.என்.நேரு பேச்சு


திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கலைவாணன் கைதை கண்டித்து திருவாரூரில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.; திமுக தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கே.என்.நேரு கலந்துகொண்டு பேசினார்.
அவர்,’அதிமுக அரசு போடப்படுகின்ற வழக்குகளில் முதன் முதலில் ஆரம்பித்தது திருச்சியில்தான்.நீதிமன்றங்களில் தீர்ப்பு உங்களுக்கு எதிராகவும், எங்களுக்கு சாதகமாகவும் வரும் காலம் வரும்.

சினிமாவில்,’உள்பாவாடை காணாமல் போய்விட்டால் கூட எங்கள் மீது கேஸ் போடுகிறான்’’ என்று சொல்லுவான். அது மாதிரி நீங்கள் உண்மை நிரூபிக்கப்படாமல் யார் மீதும் அபாண்டமாக குற்றம் சுமத்தி வழக்கு போடுகிறார்கள்.
அதனால்தான், இவர்களுக்கு வேறு வேலையே இல்லையா? இதுதான் வேலையா? என்று மக்கள் கேட்கிறார்கள்.
திமுக அரசை நசுக்க பார்க்கிறீர்கள்.& எவ்வளவுக்கு எவ்வளவு எங்களை நசுக்குகிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு பந்து போல எழுந்திருப்பான் திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவன்’’ என்று பேசினார்.

புத்தக விநியோகம் மும்முரம உச்சநீதிமன்ற உத்தரவை காலில் போட்டு மிதிக்கும் தனியார் பள்ளிகள்

சென்னை: சமச்சீர் கல்வி வழக்கில் தீர்ப்பை ஒத்தி வைத்தாலும், வரும் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் சமச்சீர் கல்வி புத்தகங்கள் வழங்கப்பட்டுவிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் இதைக் காலில் போட்டு மிதிக்கும் விதமாக பெரும்பாலான தனியார் பள்ளிகள் பழைய மெட்ரிக் முறை புத்தகங்களை பெரும் விலைக்கு மாணவர்கள் தலையில் கட்டி வருகின்றன.

சென்னை மாநகரில் கிட்டத்தட்ட அனைத்து தனியார் பள்ளிகளிலுமே மெட்ரிகுலேஷன் பாடப்புத்தகங்கள் தரப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

புரசைவாக்கம் பகுதியில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் மெட்ரிகுலேஷன் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து விசாரிக்க முற்படும் பெற்றோர்களை இந்தப் பகுதி தனியார் பள்ளிகள் செக்யூரிட்டிகளை வைத்து விரட்டியடிக்கும் கொடுமையும் அரங்கேறி வருகிறது.

சென்னை வேளாங்கண்ணி குழும பள்ளிகளில் மெட்ரிக் பாடப் புத்தகங்களை வழங்கியுள்ள நிர்வாகம், இடைத் தேர்வையும் அறிவித்துவிட்டதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுகுறித்து விசாரித்தபோது, நாங்கள் புத்தகங்களை வழங்கவே இல்லை என சாதிக்க ஆரம்பித்துவிட்டார் கேகே நகரில் உள்ள இந்த பள்ளியின் நிர்வாகி. ஆனால் இந்தப் பள்ளிக் குழந்தைகள் அனைவரிடமும் மெட்ரிக் பாடப் புத்தகங்கள் இருப்பதைப் பார்க்க முடிந்தது.

இதேபோல மடிப்பாக்கம் பகுதியில் உள்ள அனைத்துப் பள்ளிகளுமே மெட்ரிக் பாடப் புத்தகங்களை ஆயிரக்கணக்கான ரூபாயை பிடுங்கிக் கொண்டு மாணவர் தலையில் கட்டியுள்ளன (சமச்சீர் கல்வி புத்தகம் ரூ 300-க்குள்தான்). மடிப்பாக்கத்தின் பிரபல பள்ளியான பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அனைத்து வகுப்புகளுக்கும் மெட்ரிகுலேஷன் வழி பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பள்ளியின் நங்கநல்லூர் உள்ளிட்ட கிளைகளிலும் இதே நிலைதான்.

இந்தப் பகுதியில் உள்ள சாய், கிங்க்ஸ், ஹோலி பேமிலி போன்ற அனைத்துப் பள்ளிகளிலும் இதே போல புத்தகங்களை தன்னிச்சையாக வழங்கி பாடங்களை நடத்தி வருகின்றனர்.

புறநகர்ப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் இதே நிலைதான். தாம்பரம் பகுதியில் எந்த தனியார் பள்ளியும் சமச்சீர் கல்வி புத்தகங்களுக்காக காத்திருக்கவில்லை. தங்கள் விருப்பப்படி தனியார் பதிப்பாளர்களிடம் வாங்கிக் குவித்துள்ளனர்.

சமச்சீர் கல்வி புத்தகங்கள் கிடையாது என்று நிர்வாகம் கூறிவிட்டதாக தங்கள் பெற்றோரிடம் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பெற்றோர் நேரடியாகப் போய் விசாரித்த போது, இனி சமச்சீர் கல்வி கிடையாது. அடுத்த ஆண்டும் வராது. நீங்கள் வேண்டுமானால் அரசுப் பள்ளியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என முகத்திலடித்தது போல பதில் கூறி அனுப்பி வருவதாக தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர்.

சென்னை மற்றும் புறநகர்களில்தான் இந்த நிலை என்றில்லை. கல்வியை கார்ப்பொரேட் வியாபாரமாக மாற்றிவிட்ட ராசிபுரம், நாமக்கல், திருச்செங்கோடு, ஊத்தங்கரை, சேலம், கோவை, கரூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள பெரிய தனியார் பள்ளிகளும் எந்த அச்சமுமின்றி மெட்ரிகுலேஷன் பாடத் திட்டப் புத்தகங்களை வழங்கிவிட்டன.

தனியார் பள்ளிகள் விஷயத்தில் எதையும் கண்டுகொள்வதில்லை என அரசு முடிவெடுத்திருப்பதாகவே பலரும் குற்றம்சாட்டுகின்றனர். இதனை மெய்ப்பிக்கும் விதத்தில், தனியார் பள்ளிகள் குறித்த பெற்றோரின் புகார்களை எந்த அதிகாரியும் கண்டுகொள்வதே இல்லை. முதல்வரின் தனிப்பிரிவுக்கு இது தொடர்பாக அனுப்பப்படும் புகார்கள் மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை.

குறிப்பாக கட்டண விவகாரத்தில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிப்பவை மிகமிகக் குறைந்த எண்ணிக்கையிலான தனியார் பள்ளிகளே. புரசைவாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிகள் நன்கொடையாக சில லட்சங்களையும், கல்விக் கட்டணம் என பெயருக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தையும் வாங்கி ஏமாற்றி வருகின்றன. இதுகுறித்த புகார்கள் எதையும் அரசுத் தரப்பு கண்டு கொள்ளவே இல்லை.

இதனால் தனியார் பள்ளி நிர்வாகங்களை எதிர்த்து கேள்வி எழுப்ப முடியாத நிலையில் பெற்றோர் தவிக்கின்றனர்.

டக்ளஸ் சம்பந்தனுக்கு அறிவுரை இருண்ட வீட்டிற்குள் கறுப்பு பூனையை தேட முடியாது!

தமிழ் மக்கள் சார்பாக உண்மையை பேசவேண்டும் என்பதற்காக தமது பக்கம் வருமாறு தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் என்னையும் அழைத்திருப்பது வேடிக்கையானதொரு கூற்றாகும். இது இருண்ட வீட்டிற்குள் இருந்து கொண்டு கறுப்பு பூனையை தேடிக் கண்டு பிடிக்க என்னையும் வருமாறு கேட்பது போல் இருக்கிறது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில் எது உண்மை?...
சங்கிலியன் சிலையை உடைத்து புத்தர் சிலை நிறுவப்போகின்றார்கள் என்று நீங்கள் கூறியது உண்மையா?.

அல்லது, இடிந்து சிதைந்து போன சங்கிலியன் சிலையை நாம் சொன்னது போலவே இன்று புதிதாக கட்டி நிமிர்த்தியிருக்கும் நாங்கள் சொல்வது உண்மையா?... .
உண்மையை பேசுவது யார்?... நாங்களா?... அல்லது நீங்களா?... நீங்கள் அரசாங்கத்தின் பின்கதவு தட்டி அரச உயர் மட்ட பிரதிநிதிகளோடு கனிவாகவும், குழைவாகவும் பேசி உங்கள் சொந்த சலுகைகளை மட்டும் பெறுவதற்காக கூறிவரும் கருத்துக்களை உண்மை என்று ஏற்பதா?...


அல்லது தேர்தல் காலங்களில் வாக்குகளை மட்டும் அபகரிப்பதற்காக எமது மக்கள் மத்தியில் அரச எதிர்ப்புக் காட்டும் உங்களது சுயலாப வீரப்பேச்சுக்களை உண்மை என்று ஏற்பதா?.... இதில் எது உண்மை?... எம்மை பொறுத்தவரையில் அங்கொரு பேச்சும், இங்கொரு பேச்சும் ஒரு போதும் இருந்ததில்லை. எமது மக்கள் மத்தியில் எதை நான் பேசுகின்றேனோ அதையே அரசாங்கத்திடமும் பேசி வருகின்றேன்.
எமது மக்களின் அன்றாட அவலங்களுக்கான தீர்வு முதற்கொண்டு அபிவிருத்திப்பணிகள் மற்றும் அரசியல் தீர்வு குறித்த விடயங்களையே நான் அரசாங்கத்துடன் இணக்கமாகப் பேசி அதில் எமது அரசியல் பலத்திற்கு ஏற்ற வகையில் முடிந்தளவு வெற்றிகளையும் ஈட்டி வந்திருக்கின்றேன்.

இது தவிர உங்களைப் போல் எமது சொந்த சலுகைகளுக்காக அரச உயர் மட்டப் பிரதிநிதிகளின் முன்பாக கை கட்டி குனிந்து வளைந்து நின்று ஒரு போதும் எதையும் நாம் கேட்டதில்லை.
அர்த்தமற்ற அரச எதிர்ப்பு அறிக்கைகளை அடிக்கடி வெளியிட்டாலும், அதே அரசுடன் பேசித்தான் எமது மக்களுக்கான சகல பிர்ச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும். இதை உணர்ந்துதான் நாம் அரசாங்கத்தோடு வெளிப்படையாகவே கை குலுக்கி இணக்கமாகப் பேசி எமது மக்களுக்காக வாதாடியும், உண்மைகளை எடுத்துரைத்தும் வருகின்றோம்.

தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினையை சுமுகமாக பேசித்தீர்ப்பதற்கு மாறாக அதை வைத்து எமது இன சமூகத்தின் இரத்தங்களை சூடேற்றி வாக்குகளை மட்டும் அபகரித்து வருவதும், தேர்தல் காலங்களில் பொய்களும், புரட்டுக்களுமாக பரப்புரை செய்து எமது மக்களை தவறாக வழி நடத்தி அவர்களின் வாக்குகளை பெற்று தமிழ் மக்களின் ஆணையை பெற்று விட்டதாக பெருமிதம் கொள்ளவதுமே உங்களது அரசியலாக இருந்து வருகின்றது.
இது வரை நீங்கள் தமிழ் மக்களை ஏமாற்றி பெற்று வந்த அரசியல் அதிகாரங்களை வைத்து எதை சாதித்தீர்கள்?... உரிமையை பெற்று கொடுத்தீர்களா?... அல்லது உரிமை கிடைக்கவில்லை என்று உங்களால் ஏமாந்த மக்களுக்கு ஒரு வேளை உணவாவது கொடுத்தீர்களா?...


77 இல் தனி நாடு பெற்றுத்தருவோம் என்று ஆணை கேட்ட நீங்கள் 18 ஆசனங்களை பெற்றீர்கள். தமிழ் மக்களை இரத்த வெள்ளத்தில் தவிக்க விட்டு நீங்கள் மட்டும் இந்தியாவிற்கு ஓடிச்சென்று தமிழ் நாட்டில் தனிவீடு பெற்று உங்கள் குடும்பங்களோடு குதூகலித்து வாழ்ந்தீர்கள்.
தமிழர்களில் ஒற்றுமையை உலகுக்கு காட்டுமாறு கோரி 2004 இல் 22 நாடாளுமன்ற உறுப்புரிமையை பெற்றீர்கள். இதனால் எமது மக்களுக்கு நீங்கள் பெற்றுத்தந்தது என்ன?... முள்ளிவாய்க்கால் படுகுழி வரை எமது மக்கள் இழுபட்டு செல்வதற்கு துணை போய், அதை பார்த்து இரசித்துக்கொண்டிருந்தீர்கள்.

ஆகவே, உண்மையை பேசவும், உரிமையை பெறவும் நீங்கள்தான் சரியான திசை வழிக்கு வந்து சேரவேண்டியவர்களே அன்றி நாமல்ல. எமது மக்களின் அரசியல் உரிமைகளை பெறுவதற்கு நாம் சொல்வதை விடவும் நடைமுறைச் சாத்தியமானதொரு பாதையை நீங்கள் காட்டுவீர்களேயானால் அதை நோக்கி நாம் வருவதுபற்றிப் பரீசீலிப்பதற்கு தயாராகவே இருக்கின்றோம்.

ஆனால் நீங்கள் காட்டும் திசை வழி என்பது தமிழ் மக்களை இன்னொரு அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லவே வழி வகுக்கின்றது.


எமது அரசியலுரிமை பிரச்சினையை தீராப்பிரச்சினையாக இன்னமும் நீடித்து செல்லும் இருண்ட திசையினையே உங்கள் வழிமுறை காட்டி நிற்கிறது.

புழுக்கள் நெழியும் சாக்கடைக்குள் இருந்து நீங்கள் ஒருபோதும் விடுபட்டு வரத்தயாரில்லை என்பதே உங்கள் வரலாறு.

வாக்குகளை மட்டும் அபகரிப்பதற்கான வெறும் தேர்தல் கூட்டு முயற்சிகளை நாம் அடியோடு வெறுக்கின்றோம்.

ஆனாலும், தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினை குறித்து பொது உடன்பாட்டு தளத்தில் இருந்து அரசாங்கத்துடன் பேசுவதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்.

இவ்வாறு தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா சம்பந்தன் அவர்களை நோக்கி கருத்து தெரிவித்திருக்கும் ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்களுக்கான சகல உரிமைகளையும் அடைவதற்கான உண்மையான வழிமுறை எது என்பதை வரலாறு நிரூபித்து வருகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இலங்கையர்களின் பாதுகாப்பு அதிகரிப்பு

இலங்கை யாத்திரிகர்கள் சிலர் சென்னையில் அச்சுறுத்தப்பட்டதையடுத்து சென்னைக்குச் செல்லும் இலங்கை சுற்றுலா பயணிகளுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எக்மோரின் கென்னத் லேனிலுள்ள மஹாபோதி நிலையத்தைச் சூழ ரோந்து நடவடிக்கைகளை பொலிஸார் பலப்படுத்தியுள்ளனர். அத்துடன் எல்.ரி.ரி.ஈ. அனுதாபிகள் மற்றும் இலங்கையர்களின் செயற்பாடுகளை கண்காணித்துவரும் கியூ பிரிவினரும் பொலிஸாருடன் இணைந்து கண்காணிப்புகளை மேற்கொண்டுள்ளனர். இலங்கையர்கள் அதிகமாக செல்லும் தி.நகர் போன்ற பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மஹாபோதி நிலையத்தைச் சேர்ந்த வண. மஹாநாம தேரர் இது தொடர்பாக கூறுகையில், "இப்போது அமைதி நிலவுகிறது. பொலிஸாரின் பிரசன்னத்தையடுத்து யாத்திரிகர்கள் பாதுகாப்பாக உணர்கின்றனர். கியூ பிரிவினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். தாக்கப்பட்ட குழுவினர் இன்று கொழும்புக்கு புறப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்தார். இந்நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக சென்னையிலுள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி திருப்தி தெரிவித்துள்ளார். "மேற்படி சம்பவம் துரதிஷ்டவசமானது. இலங்கை யாத்திரிகர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியமைக்காக தமிழ் நாடு அரசாங்கத்திற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்" என அவர் கூறியுள்ளார்.

உங்கள் கையில் அகப்பட்டு விட்டேன். இனியென்னன்ன, நீங்கள் நினைத்ததை

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் – 8
என்னை ஏற்க மறுத்த புலி முகாம்கள்!
jailபுலிகளின் புலனாய்வுப் பொறுப்பாளன் சின்னவனை மீண்டும் அங்கே கண்டதும், இன்னமும் ஏதோ விபரீதங்கள் தொடரப் போகின்றன எனத் தோன்றியது. சின்னவன் என்னைக் கண்டதும், “எப்படி ஐயா இருக்கிறியள்?” என ‘மிகுந்த அக்கறையுடன்’ வினவினான். நான், “இருக்கிறேன்” என சுருக்கமாகப் பதிலளித்தேன். உண்மையில் அவனது கேள்வியின் அர்த்தம,; ‘ எப்படி எங்கள் சிறை உபசரிப்பு?’ என்ற கிண்டலும், எனது பதிலின் அர்த்தம், ‘உங்கள் கையில் அகப்பட்டு விட்டேன். இனியென்னன்ன, நீங்கள் நினைத்ததைச் செய்ய வேண்டிது தானே?’ என்பதும்தான். ஆனால் அதை நாம் இருவரும் போலியான நாகரீக முலாம் பூசிக் கதைத்துக் கொண்டோம். பின்னர் அவன,; அங்கிருந்தவனிடம் ஏதோ இரகசியமாகக் கேட்டான். அங்கிருந்தவன் அறையொன்றின் உள்ளே சென்றுவிட்டு, கையில் ஒரு கறுப்புத் துணியுடன் வந்தான். அதன் பின்னர் சின்னவனும், அவனுடன் வந்த இன்னொருவனும், அவர்கள் வந்த சைக்கிளின் அருகே என்னைக் கூட்டிச் சென்றனர்.  (மேலும்

அஜீத்:படிங்க, வேலைக்குப் போங்க படம் நல்லா இருந்தா பாருங்க

ஆட்சி மாற்றம் பற்றி அஜீத் பரபரப்பு கருத்து!

Ajith talks about government change
ஆட்சி மாற்றம் பற்றி நடிகர் அஜீத் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார். டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் அஜீத் ஹீரோவாக நடித்திருக்கும் மங்காத்தா படம் விரைவில் ரிலீஸ் ஆகவிருக்கிறது. இதையொட்டி பத்திரிகைகளுக்கு சிறப்பு பேட்டியளித்து வரும் அஜீத், தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார். அவர் அளித்துள்ள பேட்டியொன்றில் ஆட்சி மாற்றம் பற்றிய கேள்விக்கு தனது கருத்தினை பதிலாக தெரிவித்திருக்கிறார். என்னுடைய கடமை... ஓட்டுப் போடுவது. நான் அதை ஒழுங்கா செய்து வருகிறேன். மக்களின் மனதுக்கு ஏற்ப ஆட்சி மாற்றங்கள் நடக்கிறது, ரெகுலரான விஷயம்தானே? நான் ஒரு நடிகனா இருந்துட்டு, என்னுடைய சொந்த அரசியல் கருத்துகளை வெளிப்படையா சொல்ல முடியாது. அப்புறம் என்னை, இவங்க ஆள், அவங்க ஆள்னு முத்திரை குத்திடுவாங்க, என்று அஜீத் கூறியிருக்கிறார்.

ரசிகர் மன்றத்தை கலைத்தது பற்றிய கேள்விக்கு, இதுதான் காரணம்னு சொல்ல முடியாது. அதை இப்போ போஸ்ட்மார்ட்டம் பண்ண விரும்பலை. நான்தான் பெரிசாப் படிக்கலை. ஆனால், என் ரசிகர்கள் நல்லாப் படிக்கணும்னு விரும்புறேன். படிங்க, வேலைக்குப் போங்க. உங்களுடைய தினசரி வேலைகளைப் பாருங்க. என் படம் நல்லா இருந்தா, தியேட்டரில் வந்து பாருங்க. அது போதும், என்று பதில் அளித்திருக்கிறார் அஜீத்!

முதலாவது சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் 8ம் திகதி திறப்பு



முதலாவது சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் 8ம் திகதி திறப்பு கொரிய அரசின் நிதி உதவியுடன் ஹம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் எதிர்வரும் திங்கட்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்த மின் உற்பத்தி நிலையத்தை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ திறந்து வைக்கவுள்ளார்.

500 கிலோ வோட் மின்சாரத்தை தேசிய மின் தொகுதிக்கு வழங்கும் இந்த சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்திற்கு 412 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

வவுனியா காட்டு மரங்களை கடத்த வீதி அமைத்த கடத்தல்காரர்கள்

மடு வனத்தின் நடுவில் 60 அடி அகலமான புதிய வீதி!

மடு வனத்தின் நடுவில் 60 அடி அகலமான புதிய வீதி!
21000 ஹெக்டேயர் நிலப்பரப்பைக் கொண்ட மன்னார் மடு வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவந்த சட்டவிரோத மரக்கடத்தல் குறித்து அதிகாரிகள் சிலர் இன்று ஆராய்ந்துள்ளனர்.

வவுனியா மாவட்ட செயலக அதிகாரிகள் மற்றும் மடு தேவாலயத்தின் மதகுரு ஆகியோர் சென்று ஆராய்ந்துள்ளனர்.

மடு வனத்தின் நடுப்பகுதியில் இதற்கு முன்னர் வீதி ஒன்று அமைக்கப்பட்டிருக்கவில்லை எனவும் புதிதாக வீதி ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அது 60 அடி அகலத்தில் காணப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வீதியை அமைத்தே மர்ம நபர்கள் சட்டவிரோத மரக்கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படுகிறது.

கடந்த 28ம் திகதி குறித்த வீதியை அமைத்துக் கொண்டிருந்த நால்வர் கைது செய்யப்பட்டதோடு அதற்கென பயன்படுத்தப்பட்ட பெக்கோ இயந்திரம் மற்றும் டிரக் வண்டி என்பவற்றை வனவள அதிகாரிகள் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

மாணவிகளை ஈவ்டீசிங் செய்த மாணவர்கள் கைது

கோவை கவுண்டம்பாளையத்தில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்க வரவேற்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் கடந்த 28ந் தேதி நடைபெற்றது.
விழாவிற்கு வருபவர்களை வரவேற்க 2ம் ஆண்டு மற்றும் 3 ஆண்டு மாணவிகள் சிலர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த மாணவிகள் நேர்த்தியாக சேலை அணிந்து, மேக்கப் மற்றும் சிகை அலங்காரம் செய்து கொண்டு பங்கேற்றனர்.
அப்போது விழாவில் கலந்து கொண்ட அதே கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சிலர், மாணவிகளை பார்த்து "அழகாக இருக்கீங்க, பயமாக இருக்கிறது'' என்று சொல்லியதோடு மட்டுமல்லாமல், ஆபாச வார்த்தைகளால் பேசி கேலி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் இதுபற்றி கல்லூரி முதல்வர் தேவியின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதையடுத்து புகாரில் சிக்கிய மாணவர்களை அழைத்து கல்லூரி முதல்வர் விசாரித்தார். அப்போது அவர்கள் தங்களது குற்றங்களை ஒப்புக்கொண்டனர். அதை தொடர்ந்து மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் சார்பில் துடியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் ராக்கிங் தடுப்பு சட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்கள் தங்கமுத்து, விஜயகாந்த், லலித்குமார், மணிகண்டன் மற்றும் பிரபாகரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் கோவை 1வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு சத்திய மூர்த்தி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் அவர்கள் கோவை ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

புலிகளின் வலையமைப்பின் மதிவாணன் மலேசியாவில் கைது

விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பின் இரண்டாம் நிலை தலைவர் எனக் கூறப்படும் திருகனக சம்பந்தன் மதிவாணன் என்பவரை மலேசிய புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். இவர் புலிகளின் சர்வதேச வலையமைப்பின் தலைவராக உள்ள கஸ்ரோ என்பவருக்கு அடுத்ததாக செயற்பட்டு வந்துள்ளார். கைதுசெய்யப்பட்டுள்ள மதிவாணனை இலங்கைக்கு நாடு கடத்த மலேசிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மலேசிய உள்துறை அமைச்சர் நிஷாமுதீன் உசேன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். கே.பி. மலேசியாவில் வைத்து கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து மதிவாணன் தலைமறைவாகியிருந்தாக கூறப்படுகிறது.

ஒவ்வொருவரும் சுமார் 27 பேரை தாக்கியிருக்கிறார்கள். மாவீரர்களப்பா!

சென்ற வாரம் சென்னையில் வைத்து சிங்கள யாத்திரீகர்கள் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்டிருக்கிறார்கள். 80 யாத்திரீகர்களை சுமார் 50 பேர் கொண்ட கும்பல் தாக்கியுள்ளது.
தமிழக காவல்துறையினர் வெறும் மூன்று குண்டர்களை மட்டும் பேருக்கு கைது பண்ணி நாடக மாடியுள்ளனர்.
புனித யாத்திரைக்கு வந்தவர்களை தாக்குவது தமிழன் பண்பாடுகளில் ஒன்றான விபரம் உலகுக்கு இதுவரை தெரியாமல் இருந்தது.

மிக்ஸி, கிரைண்டருக்கு பதிலா, தினமும் இலவச இட்லி, தோசை

தமிழக அரசின் நடப்பாண்டிற்கான வரவு – செலவு திட்டம் (பட்ஜெட்) தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 8,900 கோடி ரூபாய்க்கு புதிய திட்டங்களும், சலுகைகளும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
* மோனோ ரயில் திட்டப் பணிகள் இந்த வருடமே ஆரம்பிக்கப்படும்
* புதிய மேம்படுத்தப்பட்ட மருத்துவ காப்பீடுத் திட்டம் ஆரம்பிக்கப்படும்
* நடமாடும் மருத்துவமனைகள் செயல்படுத்தப்படும்
* புதிதாக மூவாயிரம் பேருந்துகள் வாங்கப்படும்
* வணிக வரித்துறை கணினி மயமாக்கப்படும்
* ஸ்ரீரங்கம் தொகுதியில் தேசிய சட்டபள்ளி அமைக்கப்படும்
இவை தவிர வறுமை ஒழிப்புத் திட்டம், காவல் துறை நவீன மயமாக்கல் என்பது போன்று சுதந்திர காலத்திலிருந்து அனைத்து பட்ஜெட்டுகளிலும் தாக்கல் செய்யப்படும் திட்டங்களும் உள்ளது.
மாணவர்களுக்கு இலவச லேப்டாப், ஏழைகளுக்கு இலவச மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டம், அரசு கேபிள் டிவி என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் நகலாக இருக்கிறது பட்ஜெட்.
கிட்டத்தட்ட 16,800 கோடி ரூபாய் நிதிப்பற்றாக்குறை பட்ஜெட்டாக சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இலவசங்கள் தேவையா என்று யோசிக்காமல் அள்ளி வழங்குகிறார்கள். போன ஆட்சியில் என்ன தான் அள்ளி அள்ளி இலவசத் திட்டங்களாக வாரி வழங்கினாலும் கடைசியில் மக்கள் மொத்தமாக ஆப்பு வைத்ததை முதல்வர் நினைவில் கொள்ள வேண்டும். இலவசங்கள் மட்டுமே மக்களை செம்மைப்படுத்தி விடாது. “மீனை இலவசமாகக் கொடுப்பதை விட, மீன் பிடிக்கக் கற்றுக் கொடுங்கள்” என்ற ஹைதர் அலி காலத்து பழமொழியை இன்னமும் எத்தனை காலத்திற்கு தான் சுதந்திர இந்தியாவில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டுமோ! “ஆமாமாம்.. மிக்ஸி, கிரைண்டருக்கு பதிலா, தினமும் இலவச இட்லி, தோசை கொடுத்திடலாம்” என்று கோரிக்கை எழாத வரை சரி!

காஞ்சனா-சரத்குமாரைக் கொண்டாடும் அரவாணிகள்

தியேட்டர் வழியாக நடந்து சென்று கொண்டிருக்கிறேன்.காஞ்சனா படம் ஓடிக்கொண்டிருக்கிறது.நல்ல கூட்டம்.மூன்று அரவாணிகள் சந்தோஷமாக நடனமாடுகிறார்கள்.போஸ்டரில் உள்ள சரத்குமார் முகத்துக்கு திருஷ்டி கழிக்கிறார்கள்.மூவருக்கும் முகத்தில் ஏக சந்தோஷம்.காஞ்சனா அரவாணிகளை பெருமைப்படுத்திவிட்ட்தாக நினைக்கிறார்கள்.
  சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவன் ஒருவனை பற்றிய செய்தியை படித்தேன். தனது உடலில் ஏற்பட்ட மாற்றத்தை அறிந்த பின்பு அவன் இந்த முடிவை எடுத்திருக்கிறான்.வீட்டை விட்டு ஓடிப்போய் அரவாணியாக மாறி வாழ்ந்திருக்க வேண்டும்.ஆனால் அவனுக்கு அப்படி வாழ விருப்பமில்லை.அவனுக்கு நேர்ந்த உடல் மாற்றம் இயற்கையானது.
நான்கு பேர் மத்தியில் ஒரு அரவாணியாக மதிப்புடன் வாழமுடியுமென்றால் அவன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்? கேலி,கிண்டலுக்கும் உள்ளாகி ஒரு செக்ஸ் பொம்மையாக மட்டுமே மதிக்கும் சமூகத்தில் வாழ்வதற்கு கொஞ்சம் துணிவு வேண்டும்.பையனுக்கு அவ்வளவு தைரியமில்லை.
                     அக்வாராணியும் நிர்வாண அரவாணியும் என்ற தலைப்பில் ஒரு பதிவை முன்பு தந்திருக்கிறேன்.கடைகடையாக பணம் கேட்டுச்செல்வதை கடை கேட்பது என்பார்கள்.தொடர்வண்டிகளிலும் இது சகஜம்.பொது மக்கள் இதை ஒரு பெரும் தொல்லையாகத்தான் கருதுகிறார்கள்.சில இடங்களில் பணம் இல்லை என்றால் மிரட்டுவதும் உண்டு. அரவாணிகள் கல்லாவில் கை வைத்தால் தொழில் நசிந்து போகும் என்று நம்புபவர்கள் இருக்கிறார்கள்.ஒரு கடையில் தொடர்ந்து நான் பார்க்கும் ஒரு விஷயம்.அரவாணி நேராக கடைக்கு வந்தவுடன் பூஜை அறைக்கு சென்றுஒரு ரூபாயோ,இரண்டு ரூபாயோ பணத்தை வைத்து வணங்குவார்.அப்பணத்தை கொண்டு வந்து கல்லாவில் போடுவார்.பின்னர் கடைக்கார்ர் அரவாணிக்கு பணம் கொடுப்பார்.வியாபாரம் செழிக்கும் என்று நம்பிக்கை. சினிமா ஒரு மிகப்பெரும் ஊடகம்.அனைத்து மக்களையும் சென்றடையும் கலை.பெரும்பாலான தமிழ் சினிமாக்களிலும் கேலியாகவும்,பாலியல் விளையாட்டு பொருளாகவுமே சித்தரிக்கப்பட்டு வந்தார்கள்.நெகடிவ்வாக சித்தரிக்கப்படுவதுஅரவாணிகளுக்கே தங்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தக்கூடியது. சில காலம் முன்பு நர்த்தகி படம் வந்த்து.தெனாவெட்டு படமும்,பாசிட்டிவாக காட்டியது.
  காஞ்சனா பெரிய அளவில் தங்களை பெருமைப்படுத்தி விட்ட்தாக கருதுகிறார்கள்.அதிலும் சரத்குமார் எம்.எல்.ஏ நடிப்பை புகழ்ந்து தள்ளுகிறார்கள்.உண்மையில் சிறப்பாக நடித்திருக்கிறார் என்பதை மறுக்க முடியாது.வசூலில் களைகட்டிக்கொண்டிருப்பதாக கேள்வி.ராகவா லாரன்ஸ்க்கும் நல்ல பெயர்.

                                     இந்தியில்  ரீமேக் செய்யப்போவதாக தகவல்.அமீர்கான் அதிகம் விரும்புவதாக படித்தேன்.சல்மானுக்கும் ஆசையாம்.முனி-3 பற்றிய ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறாராம் ராகவா லாரன்ஸ்.ஒரு ரவுண்டு கட்டுவார் போலிருக்கிறது.வாழ்த்துவோம்.

3 வினாடிகளுக்கு ஒரு குழந்தை திருமணம்



உலகளவில் குழந்தை திருமணம் மூலம் பெண் குழந்தைகளின் வாழ்வு பல வகையில் சீரழிக்கப்படுகிறது. பெரும்பாலும் இப்பெண் குழந்தைகளின் ஏழ்மை, அறியாமையைக் காட்டி குழந்தை திருமணம் என்னும் பாழும் கிணற்றில் தள்ளி அவர்களின் முன்னேற்றம் மறுக்கப்படுகிறது.
பெரும்பாலும் குழந்தை திருமணத்திற்கு தள்ளப்படும் பெண் குழந்தைகளின் வயது 14-18 க்குள் இருக்கிறது. மேலும், இப்பெண் குழந்தைகளை வயதான பணக்காரர்களுக்கே மணம் முடிக்கப்படுகிறது.
இத்தகைய குழந்தை திருமணங்கள் அதிகமாக ஆப்பிரிக்கா, மத்திய மற்றும் தெற்காசிய நாடுகளில் தான் நடத்தப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உலகளவில் லண்டனைச் சேர்ந்த பிரேக்கிங் வவ் என்ற அமைப்பின் தலைவர் மேரிடெளண்டன் குரல் கொடுத்துள்ளார்.

3 நொடிகளுக்கு ஒரு பால்ய விவாகம் வீதம் உலகளவில் ந்டைபெறுகிறது என்றும், இது இன்னும் 10 வருடத்தில் இருமடங்காகும் என் தாம்ஸன் ராய்டர் என்னும் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

தீக்குளிக்க தயார்: ராமதாஸ் திராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை

: திராவிட கட்சிகளோடு, இனி கூட்டணி வைக்க மாட்டேன் என்பதை, தீக்குளித்து நிரூபிக்கவும் தயார் என்று, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார். விழுப்புரத்தில்,

நேற்று மாலை நடந்த பா.ம.க., பொதுக்குழுக் கூட்டத்தில், அவர் பேசியதாவது: பொதுக்குழு கூட்டி, இனி திராவிட கட்சிகள், தேசிய கட்சிகளுடன் கூட்டணியில்லை என்ற, தீர்மானத்தை நிறைவேற்றினோம். நமது கொள்கையைப் பின்பற்றும் கட்சியோடு, அணிவகுப்போம். திராவிடன் என கூறுவதை விட, தமிழன் என்பதில் பெருமை கொள்வோம். திராவிடம் எனக் கூறி நம்மையும், மக்களையும் ஏமாற்றினர், ஏமாந்தோம். அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு என்றனர். அந்தக் கொள்கையை, சுடுகாட்டுக்கு அனுப்பியது தான் மிச்சம்.
"மானாட மயிலாட' பார்க்க, கட்சிக்கு ஒரு "டிவி' துவக்கியுள்ளனர். திராவிட கட்சிகள் ஆட்சியில் சினிமா, அரசியல் காரணமாக சீரழிவுகள் தான் அதிகம். நீங்களும் திராவிட கட்சிகளிடம், கூட்டணி வைத்தீர்களே என கேட்கிறார்கள். கூட்டணியில் இருந்த, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் நான்கு ஆண்டுகளும் எதிர்க்கட்சியாகவே இருந்து, எதிர்த்து கேள்வி கேட்டோம். தி.மு.க.,வினர் கூட பயந்திருந்தனர். தி.மு.க., ஆட்சியில், நாம் கொடுத்த தொல்லையில், கருணாநிதி தலையில் அடித்துக்கொண்டு, தொலைந்து போ என்றதால் வெளியேறினோம்.
தனித்து நிற்க நல்ல முடிவெடுத்துள்ளீர்கள், உறுதியாக இருப்பீர்களா என்று கேட்கின்றனர். உறுதியாக இருப்போம் என்று நிரூபிக்க, தீக்குளிக்கனுமா.. எங்கிருந்தாவது குதிக்கனுமா, சொல்லுங்க தயார். இவர்களிடம், இனி எக்காலத்திலும் உறவும் இல்லை; ஒட்டும் இல்லை என்பது உறுதி. தனித்து நிற்கும் முடிவை வரவேற்று, தென்மாவட்டங்களில் இருந்தும், அதிகக் கடிதங்கள் வருகின்றன. மதுவைப் பற்றி ஏன் பேசுகிறீர்கள், ஓட்டு போய்விடும் எனலாம். போகட்டும் நமக்கு ஓட்டு வேண்டாம். இவ்வாறு, பா.ம.க., ராமதாஸ் பேசினார்.

கல்வி கட்டண குழு புதிய தலைவரை நியமிக்க அரசுக்கு 19 வரை கெடு

தனியார் பள்ளி கல்வி கட்டண கமிட்டிக்கு புதிய தலைவரை வரும் 19&ம் தேதிக்குள் நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பண்ருட்டியை சேர்ந்த சேஷாசைலம் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில்  தாக்கல் செய்துள்ள பொது நல வழக்கில் கூறியிருப்பதாவது: தமிகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயிக்க, கல்விக் கட்டணம் ஒழுங்குமுறை சட்டத்தை கடந்த அரசு கொண்டு வந்தது.

இதன்படி, கல்விக் கட்டணம் நிர்ணயிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கமிட்டி அமைத்தது. இந்தக் கமிட்டி ஆய்வு நடத்தி 10 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயித்தது. உடல்நிலையை காரணம் காட்டி நீதிபதி கோவிந்தராஜன், கமிட்டியில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து நீதிபதி ரவிராஜபாண்டியன், புதிய தலைவரானார். கடந்த ஜூன் மாதம் 13ம் தேதியன்று அவரும் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

கமிட்டியின் உறுப்பினர் செயலாளராக இருந்த பள்ளி கல்வி இணை இயக்குனர் கடந்த ஜூன் மாதம் 3ம் தேதியுடன் பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அதன்பிறகு கமிட்டி தலைவர் மற்றும் உறுப்பினர் செயலாளர் நியமிக்கப்படவில்லை. தற்போது பள்ளிகள் தங்கள் இஷ்டத்துக்கு கட்டணத்தை வசூலித்து வருகின்றன.

பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கல்விக் கட்டண கமிட்டிக்கு புதிய தலைவரையும், உறுப்பினர் செயலாளரையும், தனி  அதிகாரியையும்   நியமிக்க வேண்டும். அதுவரை கல்வி கட்டணம் குறித்து குவித்துள்ள மனுக்களை விசாரிக்க இடைக்கால கமிட்டியை உயர்நீதிமன்றம் அமைக்க வேண்டும்.  இவ்வாறு பொதுநல வழக்கு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர்.

 மனுதாரர் சார்பாக மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, ‘‘கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுத்து மாணவர்கள் நலனை பாதுகாக்க நீதிமன்றம்  நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏனெனில் கூடுதல் கட்டணம் செலுத்தாக மாணவர்களை பள்ளியை விட்டு பள்ளி நிர்வாகம் நீக்குகிறது, மாணவர்கள் படிப்பு பாதிக்கப்படுகிறது, ஒரு மாணவன் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டான்,

அவனை மீண்டும் பள்ளியில் சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது, அந்த அளவுக்கு மாணவர்கள் நிலை பரிதாபமாக உள்ளது , இதில் நீதிமன்றம் அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும், பள்ளிகள் மீதான புகார் குறித்து கமிட்டி விசாரித்து பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கமிட்டி பரிந்துரை செய்தால் தான் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க முடியும்.  ‘ என்றார்.

தமிழக அரசு சார்பாக ஆஜரான அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், ‘‘கல்விக் கட்டண கமிட்டிக்கு புதிய தலைவரை விரைவில் நியமித்து விடுவோம்‘‘ என்றார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ‘‘வரும் 19&ம் தேதிக்குள் புதிய தலைவரை நியமிக்க வேண்டும், அதற்கான அரசாணையை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும்‘‘ என உத்தரவிட்டனர்.

சிவகாசி பட்டாசு ஆலையில் கோர விபத்து 5 பெண் தொழிலாளர்கள் உடல் கருகி பலி

சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார்குறிச்சி பட்டாசு ஆலையில் நேற்று பகலில் நடந்த வெடி விபத்தில் 5 பெண் தொழிலாளர்கள் உடல் கருகி பலியாகினர். ஒரு பெண் மதுரை ஆஸ்பத்திரியில் இறந்தார். 6 பேர் தீ காயத்துடன் கவலைக்கிடமான நிலையில் மதுரை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிவகாசி காளையார்குறிச்சியில் கனகபிரபுக்கு சொந்தமான "சுப்ரீம் பைரோ ஒர்க்ஸ்' பட்டாசு ஆலை உள்ளது. இங்குள்ள 50 தனி அறைகளில் 200 தொழிலாளர்கள் வேலை செய்தனர். நேற்றுமதியம் 1.45 மணிக்கு தொழிலாளர்கள் அனைவரும் மதிய உணவிற்காக, பட்டாசு தயாரிப்பு அறைகளை விட்டுவெளியே வந்து, ஆலை முன்பகுதியில் உள்ள மரத்தடியில் உட்கார்ந்திருந்தனர்.

ஆலையின் நுழைவு வாயில் இடது பகுதியில் வேதிப்பொருட்கள் வைப்பதற்காக அடுத்தடுத்து ஐந்து அறைகள் உள்ளன. ஒவ்வொரு அறையிலும் கரித்தூசி, அலுமினியப்பவுடர், பச்சை உப்பு என தனித்தனியாக வைத்து இருந்தனர். அங்கு தொழிலாளி ஒருவர் பேன்சிரக பட்டாசுக்கு தேவையான வேதிப் பொருட்களை எடைபோட்டு கொண்டிருந்தார். இதனால் அறைகளின் முன்பு வேதிப் பொருட்கள் சிதறி இருந்தது. அப்போது வேதிப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்த பாத்திரம் ஒன்று தவறி விழுந்ததில் வெடி விபத்து ஏற்பட்டது. இதன் வெடி விபத்தால் ஏற்பட்ட தீயானது , மற்ற வேதிப்பொருட்கள் மீது பட, பயங்கர சத்தத்துடன் வெடித்து தீயுடன் சிதறியது. விபத்திற்கு பயந்து ஓடிய பெண் தொழிலாளர்கள் அறையின் ஒரு மூலையில் ஒதுங்கியபோது அவர்களை தீ சூழ்ந்ததில் ஐந்து பேர் சம்பவ இடத்திலே கருகி இறந்தனர்.

வெடி விபத்தில் 50 அடி தூரத்திற்கு தீ பற்றியதால் அறைக்கு முன் இருந்த மற்ற தொழிலாளர்களும் விபத்தில் சிக்கி காயம் அடைந்தனர். சிவகாசி தீயணைப்பு படை அலுவலர் சண்முக நாதன் தலைமையிலான வீரர்கள் தீயை அணைத்தனர்

விபத்தில் உடல் கருகி இறந்த புதுக்கோட்டையை சேர்ந்த முத்தையா மனைவி சண்முகத்தாய்(45) சின்னாத்தேவர் மனைவி அங்கம்மாள், பீகாரை சேர்ந்த மம்தா(26) காடனேரி முத்து மனைவி வீரம்மாள்(50) காடனேரி அய்யாவு மனைவி ஆவுடைத்தாய்(53) ஆகியோரின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். குல்லூர் சந்தையைச்சேர்ந்த அம்மாபொண்ணு(40) என்ற பெண் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இறந்தார். காயம் அடைந்த புதுக்கோட்டையை சேர்ந்த முருகன் (45) முனியாண்டி(45) சித்தமநாயக்கன்பட்டி பாண்டி(53) குல்லூர் சந்தை பத்மாவதி(50) வீரம்மாள்(50) பீகாரை சேர்ந்த உஷ்மா(20) ஆகியோர் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்øகாக மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் 90 சதவீத தீக்காயத்துடன் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

அமைச்சர் உதயகுமார், கலெக்டர் பாலாஜி, நஜ்மல்கோதா எஸ்.பி., முனுசாமி ஆர்.டி.ஓ., ஆகியோர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

போர்மேன் கைது: பட்டாசு வெடி விபத்தில் எம்.புதுப்பட்டி போலீசார் ஆலை உரிமையாளரான சிவகாசியை சேர்ந்த கனகபிரபு, செவலூரை சேர்ந்த மேலாளர் பழனிச்சாமி, விருதுநகரை சேர்ந்த போர்மேன் செந்தில் ரமேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து ,போர்மேன் செந்தில் ரமேஷ் என்பவரை கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

உடல் கருகி 6 பெண்கள் பலி; 6 பேர் கவலைக்கிடம் : கரிக்கட்டையான உடல்கள்

* ஒரே இடத்தில் கருகி இறந்த ஐந்து பெண் தொழிலாளர்கள் உடல்களை கரிக்கட்டைகளைபோல் ஆம்புலன்சில் அள்ளி போட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர்.
* விபத்து நடந்த ஒரு அறையில் அலுமினியபவுடர் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. அதில் தண்ணீர் பீச்சி அணைத்தால் மீண்டும் வெடிக்கும் என்பதால், தானாகவே வலுவிழுக்க (நமத்து போக) வேண்டும் என்பதற்காக இரண்டு மணிநேரமாக தீயணைப்பு படையினருடன் போலீசாரும் எச்சரிக்கையுடன் காத்திருந்தனர்.
* அலுமினிய பவுடர் அறையில் ஒருவர் பிணமாக உள்ளார் என கிராமத்தினர் கூற, அந்த அறையில் சிறு அசைவு
ஏற்பட்டாலும் மீண்டும் வெடிக்கும் என கூறி அறை கதவை திறக்க தீயணைப்பு வீரர்கள் முன் வரவில்லை. நீண்டநேர இடைவெளிக்கு பின் அங்கு பிணம் இல்லைஎன அதிகாரிகள் உறுதிசெய்தனர்.
* இறந்த உடல்களை பிரேத பரிசோதனை அறையில் வைத்திருந்த போது, இறந்தது யார் என உறவினர்களால் அடையாளம் காண முடியாமல் தவித்தனர். இதனிடையே ,மைக் மூலம் பேசிய சக்திவேல் டி.எஸ்.பி., ""இறந்தவர்களின் உறவினர்கள் உடனே வந்தால், உடல்களை உடனடி பிரேத பரிசோதனை நடத்தி கொடுக்கப்படும்,'' என கூறி, இறந்தவர்களின் பெயர்களை வாசித்தார். அதன்படி பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன.
* சட்டசபை கூட்டம் நடப்பதால் விபத்து விபரங்களை முதல்வருக்கு தெரிவிக்க, , சம்பவ இடத்தில் இருந்த எஸ்.ஐ., மொபைலில் பேசியபடி, சென்னை உயர் அதிகாரிகள் விபரம் சேகரித்தனர்.

தமிழ் கட்சிகளுக்கு ஈ.பி.டி.பி. அழைப்பு!யாழ் தொகுதிகள் குறைப்பு விவகாரம்

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்துக்கான பாராளுமன்ற ஆசனங்கள் குறைக்கப்படுமென வெளியாகியிருக்கும் செய்தி  தொடர்பாக தமிழ் கட்சிகளோடு கலந்துரையாடுவதற்கு ஈ.பி.டி.பி. அழைப்பு விடுக்கின்றது. பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் குறைக்கப்படுமானால் அதனால் யாழ்.மாவட்டத்துக்கான நிதி ஒதுக்கீடுகள், பல்கலைக்கழகத்துக்கு மாணவர்களை அனுமதி, அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகள் என்பன குறைக்கப்படும். இதுதவிரவும் பல்வேறு பின்னடைவுகளைச் சந்திக்க நேரிடும். அவ்வாறான நிலையில் போரினால் அழிந்த பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்புவதும், இழப்புக்களைச் சந்தித்த எமது மக்களின் வாழ்வை மேம்படுத்துகின்ற முயற்சிகளும் பாதிப்பாகவே அமையும். எனவே அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் அரசியல் பேதங்களுக்கப்பால் இவ்விவகாரத்துக்கு தீர்வொன்றைக்கான முன்வரவேண்டும். அனைவரும் ஒருமித்த கருத்தில் பதிலளித்தால் நிச்சயம் சாதகமான தீர்வொன்றைப் பெறமுடியுமென்று ஈ.பி.டி.பி நம்புகின்றது. இவ்விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்து பாராளுமன்ற ஆசனக்குறைப்பு விடயத்தில் போருக்குப் பின்னரான நிலையைக் கருத்தில் கொண்டு விஷேடமான ஏற்பாட்டின் அடிப்படையில் நியாயமான தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எமக்கு நிறையவே உண்டு. கடந்த காலத்தில் தீர்வைப் பெற்றுக் கொள்ள கிடைத்த நல்ல சந்தர்ப்பங்களையும், அழிவு யுத்தத்தைத் தடுத்து நிறுத்தியிருக்கக் கூடிய வாய்ப்பையும் தவறவிட்டதுபோல் ஒற்றுமையீனத்தால் மீண்டுமொரு தவறு நடந்துவிடக்கூடாது என்பதையும் நாம் சிந்திக்கவேண்டும்.

KP: போராட்டம் வெற்றியடைந்திருந்தால் இந்த சுதந்திரம் எனக்கிருந்திருக்காது.

அரசாங்கத்தை பழிவாங்க எண்ணுபவர்கள் பலவீனப்பட்டுள்ளனர்: கே.பி
- தமிழ்மிரருக்கு வழங்கிய பேட்டி
இன்றைய சூழ்நிலையில் அரசாங்கத்தை பழிவாங்கவேண்டும் என்று கூறுபவர்கள் பலவீனப்பட்டுப்போய் இருக்கிறார்கள். சனல் -4 விவகாரம் அல்லது அரசினை பழிவாங்கும் எண்ணம் என்பது அர்த்தமற்றதொன்றாகவே நான் பார்க்கிறேன். இந்த யதார்த்தத்தை புரிந்துகொண்டு இப்படியான குரோத போக்குகளையும் கோபமூட்டும் செயல்களையும் நிறுத்தவேண்டும் என புலம்பெயர்ந்த தமிழர்களிடம் தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன்' என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேசப் பொறுப்பாளரும் நேர்டோ (NERDO)அமைப்பின் பொதுச் செயலாளருமான கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன், தமிழ்மிரருக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்தார்.
இதேவேளை, 'இந்தியா தன்னால் முடிந்த உச்சகட்ட உதவிகளை இலங்கைத் தமிழர்களுக்கு செய்துவருகிறது. இதற்கு மேலதிகமாக இந்தியாவால் இலங்கை தீர்வு விடயத்திலோ தமிழர்களின் சுயநிர்ணயத்திலோ தலையிடுவதற்கு ஒன்றும் இல்லை. அதனால் எடுத்ததற்கெல்லாம் இந்தியாவை நாடும் வரலாற்று தவறினை நாம் இனிமேலாவது நிறுத்த வேண்டும்' என்றும் அவர் தனது செவ்வியில் மேலும் குறிப்பிட்டார்.
செவ்வியின் முழு விபரம் பின்வருமாறு :-
    கேள்வி: வணக்கம் கே.பி. அவர்களே... நேர்டோ (NERDO) அமைப்பினூடாக பல பணிகளை இப்பொழுது நீங்கள் செய்து வருகிறீர்கள். குறிப்பாக அவ்வமைப்பினுடைய பணிகள் பற்றியும் அன்பு இல்லத்தின் நோக்கம் பற்றியும் கூறுவீர்களா?
பதில்: நேர்டோ அமைப்பு மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அதன் ஒரு மனிதாபிமான செயற்றிட்டம்தான் முத்தையன்கட்டில் அமைந்துள்ள இந்த அன்பு இல்லம். கடந்த முப்பது வருட போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீள வாழவைப்பதுதான் எமது குறிக்கோள். அதிலும் குறிப்பாக எமது இளம் சந்ததியினர் நன்றாக கல்விகற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதுதான் எமது ஒரே குறிக்கோள். இதில் எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லை.
    கேள்வி: : NERDOஅமைப்பு என்பது வடக்கு, கிழக்கு நல்வாழ்வு மற்றும் அபிவிருத்தி அமைப்பு. இருந்தபோதிலும் உங்களுடைய இந்த பணிகள் வடக்குக்கு மட்டுமாக மட்டுப்படுத்தப்பட்டிருப்பது ஏன்?
பதில்: நாங்கள் ஏற்கெனவே கிழக்கில் சில வேலைத்திட்டங்கள் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம். குறிப்பாக எம்மைப் பொறுத்தவரை நிதி பற்றாக்குறை காணப்படுகின்றது. நாம் முடிந்தவரை எமது நண்பர்களினூடாக புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலிருந்து நிதியினை பெற்று இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். வெகுவிரைவில் கிழக்கு மாகாணத்திலும் மனிதாபிமான திட்டங்களை முன்னெடுக்கவிருக்கின்றோம்.
    கேள்வி: நிதி பற்றாக்குறை என்று கூறுகிறீர்கள். ஆனால், இந்த NERDO அமைப்பு உங்களின் பிரத்தியேக பணத்திலேயே இயங்குகிறது என்று சிலர் கூறுகிறார்களே..?
பதில்: இதில் உண்மை கிடையாது. எமக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்கள், உயரிய நல்ல மனப்படைத்தவர்களின் ஆதரவினூடாகத்தான் மனிதாபிமான நடவடிக்கைகளை தொடர்ந்து வருகின்றோம். என்னுடைய சொந்த நிதியினை போடுமளவுக்கு என்னிடம் பெரியளவில் பணம் இல்லை. முடிந்தளவில் எங்களால் எடுக்கமுடிந்தவர்களிடம் பணம் எடுத்துத்தான் இந்த மனிதாபிமான பணிகளை தொடர்கின்றோம். சில சமயங்களில் என்னுடைய மனைவியிடமிருந்துகூட பணத்தினை பெற்று சில பணிகளை செய்து வருகின்றேன்.
    கேள்வி: உங்களுடைய வாழ்க்கையில் புலம்பெயர் தமிழர்களின் ஆதிக்கம் அதிகமாகவே காணப்பட்டிருக்கிறது. நீங்கள் விடுதலைப் போராட்டத்தில் இணைந்திருந்த சமயத்திலாகட்டும் அல்லது இந்த நேர்டோ அமைப்பினால் முன்னெடுத்துச் செல்கின்ற மனிதாபிமான நடவடிக்கைகளிலாகட்டும் புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பு அதிகமாகவே காணப்படுகிறது. இந்த நேர்டோ அமைப்புக்கு புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் எவ்வகையான பிரதிபலிப்புகள் காணப்படுகின்றன?
பதில்: நேர்டோ அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம்தான் ஆகின்றது. ஆனால் இந்த காலத்திற்குள் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தினை நாங்கள் அடைந்திருக்கின்றோம். புலம்பெயர் தமிழர்கள் எங்களுடன் முழுமையாக ஈடுபடுவதற்கு சில காலம் தேவைப்படும். காரணம் என்னவெனில் அங்கிருக்கின்ற அரசியல் சூழ்நிலைகள், அதேநேரம் புலம்பெயர் உறவுகளை தொடர்ந்தும் இருட்டுக்குள் வைத்துக்கொண்டு சில கும்பல்கள் தமது நன்மைக்காக, தமது வருமானத்திற்காக தொடர்ந்தும் பொய் சொல்லிக்கொண்டிருப்பவர்களின் நடவடிக்கை என பல இருக்கின்றன.ஆகவே உண்மைகள் எப்போதாவது வெளிவரும் அவை கசப்பாகவும் இருக்கும். உண்மைகள் இந்த மக்களுக்குத் தெரியவரும்போது இந்த மக்கள் கண்டிப்பாக எம்மோடு இணைவார்கள், எமக்கு உதவுவார்கள். இதற்கு சில காலம் எடுக்கும். உண்மைகளை தெளிவுபடுத்துவதற்கான முயற்சிகளை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம். அந்த ஆரம்பம் நன்றாக இருக்கிறது. தொடர்ந்தும் புலம்பெயர் உறவுகள் எம்மோடு இருப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது.
    கேள்வி: உங்களுடைய கடந்தகால பேட்டிகளில் முரண்பாடுகளை அவதானிக்கக்கூடியதாகவிருந்தது. ஆரம்பத்தில் நீங்கள் கூறியிருந்தீர்கள் யுத்தம் முடியும்வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையுடன் உங்களுக்கு தொடர்பு இருந்ததாக. ஆனால், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தலைமையுடன் தொடர்பினை ஏற்படுத்த முடியவில்லை, நடேசனூடாகவே தகவல் பரிமாற முடிந்தது என குறிப்பிட்டிருந்தீர்கள். இந்த முரண்பாடான கருத்து எதற்காக?
பதில்:இந்த கருத்துக்களை வெளிக்கொணர்ந்தவர்களில் தவறிருக்கிறது. என்னை பேட்டி கண்டவர்கள் நான் சொன்னதை சரியான கோணத்தில் சொல்லாமல் வேறுவிதமாக கூறியிருக்கிறார்கள். சில சமயங்களில் நான் சில முக்கிய தகவல்களை நடேசனூடாக தலைவருக்கு பரிமாறுவது வழக்கம். அதற்காக எனக்கும் தலைருக்கும் தொடர்பில்லை என்பது அர்த்தமல்ல. எனக்கும் தலைவருக்குமான தொடர்பு இறுதிவரை இருந்தது. நீண்ட விடயங்களை தலைவருடன் உரையாட கால அவகாசம் கடைசி யுத்தகளத்தில் இருக்கவில்லை. காரணம் உக்கிரப் போர், எங்கும் குண்டுமழை. இதனால் நிதானமாக நீண்ட விடயங்களை ஆலோசிக்க கால அவகாசம் கிடைக்கவில்லை. அதனால்தான் நடேசனை ஒரு மீடியேற்றராக நானும் தலைவரும் பயன்படுத்தினோம். இதுதான் உண்மை.
கேள்வி: யுத்தம் நிறைவுறும்வரை விடுதலைப் புலிகளின் தலைமையுடன் தொடர்புகளை வைத்திருந்தீர்கள், அப்படித்தானே..?
பதில்:ஆம், நிச்சயமாக.
    கேள்வி: அப்படியென்றால் இறுதிக்கட்டத்தில் நடந்ததாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாகவும் அறிந்திருப்பீர்கள் அல்லவா? அதுதொடர்பாக வெளிவந்த சனல் - 4 வீடியோ தொடர்பாகவும் அறிந்திருப்பீர்கள். 'இலங்கையின் கொலைக்களங்கள்' என்ற அந்த போர்க்குற்ற வீடியோ தொடர்பான உண்மைத்தன்மை என்ன?
பதில்: நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். யுத்தம் முடிந்துவிட்டது. இப்பொழுது புதிய அத்தியாயத்தின் முதல்படியில் நாங்கள் காலடி எடுத்து வைத்திருக்கிறோம். இந்த நாட்டினுடைய வரலாற்றை எடுத்துப் பார்ப்பீர்களேயானால் நாங்கள் மிகவும் அந்நியோன்யமாக வாழ்ந்திருக்கிறோம். பெரும்பான்மை மக்களும் சிறுபான்மை மக்களும் அன்போடும் பாசத்தோடும் பழகியிருக்கிறார்கள். இடைப்பட்ட காலங்களில் சில அரசியல்வாதிகளின் சூழ்ச்சியினால்தான் இரண்டு இனங்களும் முரண்பட்டிருக்கின்றன. எனவே அந்த முரண்பாடுகள், இடைவெளிகளை குறைக்கவேண்டும், இரண்டு சமூகமும் மீண்டும் ஒன்றிணைந்து வாழவேண்டும் என்பதுதான் எமது இலட்சியம்.
சனல் - 4 மற்றும் ஐ.நா. சபையினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்பது இதற்கு பாதிப்புகளை ஏற்படுத்துவதுபோல் தோன்றுகிறது. எப்பொழுதும் ஒரு நாட்டில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் புனர்வாழ்வு அல்லது தீர்வு, நாட்டை எவ்வாறு முன்னேற்ற வேண்டும் என்பதுபற்றி சிந்திக்க வேண்டும். அதாவது பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி நிவாரணம் வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட சமூகத்தை எவ்வாறு உயர்த்த வேண்டும் என்பது பற்றியே சிந்திக்க வேண்டும். ஆனால் எமது நாட்டில் நாம் திரும்பத்திரும்ப நடந்தவற்றையே பேசிக்கொண்டிருக்கிறோம்.
கடந்தகாலத்தைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கிறோம். இது யாருக்குமே பிரயோசனமற்ற விடயமாகவே இருக்கிறது. வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான நடவடிக்கைகள்தான் இன்றைக்கு அவசியம். இப்படி, மனிதாபிமான தேவைகள் இருக்கின்ற இந்த நிலையில் இந்த சனல் - 4 வீடியோவை வெளியிடுவதனூடாக எதனை சாதிக்கப்போகிறார்கள்? ஒன்றுமே சாதிக்க முடியாது.
திரும்பத்திரும்ப சனல் -4 பல வீடியோக்களை வெளியிடுகிறது. ஆனால் இந்த மக்களுக்கு ஏதாவது நன்மை செய்திருக்கிறார்களா? இப்படியான வீடியோக்கள் வெளிவருவதன் மூலமாக இரு இனங்களுக்கிடையிலான முரண்பாடு மேலும் ஆழமாகிக்கொண்டு போவதாகவே நான் கருதுகிறேன்.
என்னைப் பொறுத்தவரை இந்த நாட்டு மக்களுக்கிடையில் இருக்கின்ற உறவுகள் எப்பொழுதும் பாதிக்கப்படக்கூடாது. நாம் படித்ததிலிருந்து, பட்ட அனுபவங்களிலிருந்து நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும். இருதரப்பிலும் பிழைகள் நடந்திருக்கலாம், நடந்திருக்கும். அதில் நாங்கள் ஒருதரப்பினரில் மட்டும் குற்றம் கண்டுபிடிப்பதால் யாருக்கு என்ன நன்மை கிடைக்கப்போகிறது? வெளிநாடுகளில் இருக்கின்ற சில தீவிரவாத போக்குடையோர் இலங்கை அரசாங்கத்தை வழிவாங்க வேண்டும் அல்லது முக்கியமான ஆட்களை பழிவாங்கவேண்டும் என்ற குரோத மனப்பாங்குடன் திரிகிறார்கள்.
இதனால் பாதிக்கப்படப்போவது யார் என்பதை இவர்கள் சிந்திக்கத் தவறுகிறார்கள். எமது நாட்டிலுள்ள எம் மக்களைப் பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும். இயேசுநாதர் கூறியதுபோல் ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்ட வேண்டும். பழிவாங்க நினைப்பதென்பது புத்திசாலித்தனமானதோ அல்லது ஆரோக்கியமானதோ அல்லது நல்லதொரு மனிதன் செய்கின்ற காரியமோ அல்ல. பழிவாங்குவதிலும் பார்க்க மன்னிக்கத் தெரிந்தவன் அல்லது மன்னிக்கக் கூடிய சிந்தனைக்கு சக்தி அதிகம். எனவே, இன்றைய சூழ்நிலையில் அரசாங்கத்தை பழிவாங்க வேண்டும் என்று கூறுபவர்கள் பலவீனப்பட்டுப்போய் இருக்கிறார்கள் என்றே நான் பார்க்கிறேன்.
சனல் -4 விவகாரம் அல்லது அரசினை பழிவாங்கும் எண்ணம் என்பன அர்த்தமற்றவையாகவே நான் பார்க்கிறேன். இந்த நாட்டில் நாம் அனைவரும் ஒற்றுமையாக ஒன்றாக வாழ வேண்டும். இந்த யதார்த்தத்தை புரிந்துகொண்டு இப்படியான குரோத போக்குகளையும் கோபமூட்டும் செயல்களையும் நிறுத்தவேண்டும் என புலம்பெயர் தேசத்தவர்களிடம் தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன்.
    கேள்வி: புலம்பெயர் தமிழர்கள் பற்றி பல கருத்துக்கள் கூறப்படுகின்றன. நாட்டில் நிலவுகின்ற சுமூக நிலையை புலம்பெயர் தமிழர்கள் குழப்புகின்றார்கள் என்றும் சிலர் குற்றம்சாட்டுகிறார்கள். உங்களுடைய பார்வையில் புலம்பெயர் தமிழர்களின் நிலைப்பாடு எப்படியிருக்கிறது?
பதில்:புலம்பெயர் உறவுகளில் வித்தியாசமான வெவ்வேறு குழுக்கள் இருக்கின்றன. பெரும்பான்மையானவர்கள் இருட்டில் வாழ்பவர்கள்போன்றே இருக்கின்றார்கள். அவர்களுக்கு உண்மை தெரியாது. பிரபாகரன் உயிரோடு இருக்கின்றார், அடுத்தவருடம் ஆயுதப் போராட்டம் தொடங்கும் போன்ற பொய் வதந்திகளை நம்பிக்கொண்டிருக்கிறார்கள். சில தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், வெளிநாட்டில் இருக்கின்ற தீவிரப் போக்குடைய சிலர் இந்த விடயங்களை தொடர்ந்து பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் எவருக்கும் எந்தவித நன்மையும் கிடைக்கப்போவதில்லை.
இந்த நாட்டினுடைய யதார்த்தத்தைப் புரிந்துகொண்டவர்கள் இப்படி குரோத மனப்பாங்குடன் நடந்துகொள்ள மாட்டார்கள். உண்மையில் எமது மக்களுக்கு ஏதாவது செய்ய விரும்பினால் இங்கு வாருங்கள். இலங்கைக்கு வந்து உண்மையை பார்த்து, எமது மக்களுக்கு என்ன தேவையோ அதனை நிவர்த்தி செய்யுங்கள்.
தீவிரவாதம் பேசுகிறவர்கள் அல்லது அரசுக்கு எதிராக செயற்படுகிறவர்கள் இந்த மக்களுக்கு அல்லது பாதிக்கப்பட்ட இந்த குழந்தைகளுக்கு ஏதாவது செய்தார்களா? மக்கள் கஷ்டப்படுகின்றபோது, இந்த குழந்தைகள் வாடுகின்றபோது உதவத் தவறியவர்கள் 'நாம் சமூகத்திற்காக குரல் கொடுக்கின்றோம்' என்று கூறுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? இது எல்லாம் ஒரு ஏமாற்றுவேலை. ஒரு குழந்தை அழுகின்றபோது அந்தக் குழந்தையை தூக்கி அரவணைக்க மறந்தவர்கள், அக்குழந்தைக்கு பாலூட்ட மறந்தவர்கள், அந்தக் குழந்தையின் உரிமைபற்றி பேசுவதற்கு என்ன அருகதையிருக்கிறது!
எனவே, புலம்பெயர் தமிழர்களில் இருக்கின்ற குறுகிய மனப்பாங்குடைய தீவிரவாத போக்குடைய சில குழுக்களின் நடவடிக்கைகள்தான் இன்று நாங்கள் அனுபவிக்கின்ற துன்பநிலைக்கும் குழப்பத்துக்கும் காரணமாக இருந்திருக்கின்றன. புலம்பெயர் சொந்தங்களுக்கு யதார்த்த நிலை புரியாமல் இருக்கிறது. அவர்கள் யாதார்த்தத்தை புரிந்துகொள்வதற்கு சிறிது காலம் எடுக்கும். எனவே, புலம்பெயர் சொந்தங்கள் யதார்த்தத்தை புரிந்து செயற்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
    கேள்வி: இலங்கை தமிழர்களின் தீர்வு விடயத்தில் இந்தியாவின் பங்களிப்பு எவ்வாறுள்ளது என நீங்கள் கருதுகிறீர்கள்?
பதில்: இலங்கையில் இருக்கின்ற பிரச்சினை என்பது இரு இனங்களுக்கிடையில் உள்ள உள்நாட்டு பிரச்சினை. இந்த விடயத்தில் இந்தியா அண்டையிலுள்ள பிராந்திய வல்லரசு என்ற ரீதியிலும் ஆரம்பகாலம் தொட்டு இலங்கை மக்களுக்கும் இந்திய மக்களுக்கும் வரலாற்று தொடர்புகள் காணப்படுவதாலும் தலையிடுகிறது.
இலங்கைத் தீவில் இருக்கின்ற பெரும்பான்மையினராகட்டும் அல்லது சிறுபான்மையினராகட்டும் அனைவரும் இந்தியாவினோடு பூர்வீக தொடர்புகளை உடையவர்கள் என்பது வரலாறு. இந்தியாவைப் பொறுத்தமட்டில் இலங்கையிலுள்ள மக்கள் சந்தோஷமாக, ஒற்றுமையாக வாழவேண்டும் என்ற நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறது. இலங்கை மக்களுக்கான தீர்வினை இலங்கையின் உயர்மட்டமே வழங்கவேண்டுமென இந்தியா விரும்புகிறது. ராஜீவ்காந்தியின் சம்பவத்தின் பின்னரான இந்தியாவின் ராஜாங்க முடிவுகளில் எந்தவித மாற்றமும் இதுவரை வந்ததில்லை.
இலங்கையிலுள்ள அரசியல் தலைமையும் கட்சிகளும் பேசி தீர்க்கமான தீர்வை முன்னெடுப்பதையே இந்தியா விரும்புகிறது. அதற்காகத்தான் பேச்சு மேசைக்கு அவர்களை அழைத்து வந்திருக்கிறது. ஆனால் அதற்குமேல் இந்தியாவினால் எதுவும் செய்ய முடியாது. காரணம் இது உள்நாட்டுப் பிரச்சினை.
நாங்கள் மீண்டும் மீண்டும் வரலாற்று ரீதியான தவறினை செய்து வருகிறோம். எடுத்ததற்கெல்லாம் இந்தியாவை நாடுகிறோம். இதனை வரலாற்று தவறாகவே நான் கருதுகிறேன். பெரும்பான்மை மக்களுக்கும் ஒரு பயமிருக்கிறது. இதனை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். இலங்கையில் ஒரு கோடி பெரும்பான்மையினர் இருக்கின்றார்கள் என்றால் தமிழ் நாட்டில் 6 கோடி தமிழர்கள் வாழ்கிறார்கள்.
இங்குள்ள பெரும்பான்மையினருக்கு இருக்கின்ற பயம் என்னவெனில் தமிழ்நாட்டிலுள்ள தமிழர்கள் வந்து தங்களை அள்ளிக்கொண்டு போய்விடுவார்கள் அல்லது தங்களது உரிமையை பறித்துவிடுவார்கள் என்பதே. எனவே, இந்த பெரும்பான்மையினரின் இப்படியான பயத்திற்கு எண்ணெய் ஊற்றுவதுபோல் எமது செயற்பாடுகள் அமையக்கூடாது. எடுத்ததெற்கெல்லாம் இந்தியாவிடம் ஓடக்கூடாது. தமிழ்நாட்டில் சீமான், வைகோ, நெடுமாறன் போன்றவர்களும் இலங்கையின் பெரும்பான்மையினரை சீண்டும் விதத்தில் பேசி வருகிறார்கள். இப்படியான சம்பவங்கள் இன முரண்பாட்டை மீண்டும் தூண்டிவிடுவதாக அமையக்கூடாது.
இந்தியா தன்னால் முடிந்த உச்சகட்ட உதவிகளை செய்துவருகிறது. இதற்கு மேலதிகமாக இந்தியாவால் இலங்கை தீர்வு விடயத்திலோ தமிழர்களின் சுயநிர்ணயத்திலே தலையிடுவதற்கு ஒன்றும் இல்லை. எனவே இந்த விடயத்தினை புரியவேண்டியவர்கள் புரிந்து நடக்கவேண்டும். இனங்களுக்கிடையே ஒற்றுமையை உருவாக்க வேண்டுமானால் தமிழ் தலைமைகள் சிங்கள மக்களின் மனங்களை வெல்ல வேண்டும்.
அதனைவிடுத்து சனல் - 4 விடயத்திற்காகவோ ஐ.நா. அறிக்கைக்காகவோ அரசுக்கெதிராக போர்க்கொடி தூக்கினால் அதை சிங்கள மக்களுக்கெதிரான எதிர்ப்பாகவே சிங்கள மக்கள் கருதுகிறார்கள். ஆகவே, எதிர்காலத்திலாவது தமிழ் தலைமைகளின் நடவடிக்கைகள் சிங்கள மக்களின் மனங்களை புண்படுத்தாத விதத்தில் அமையவேண்டும் என வேண்டுகிறேன்.
    கேள்வி: ஜனநாயக நீரோட்டத்தில் நீங்கள் இணைந்து நேர்டோ போன்ற அமைப்புகளினூடாக மக்களுக்கு உதவிகளை செய்துவருகின்றமை எதிர்கால வடமாகாண சபை தேர்தலுக்காகவே என்று சிலர் கூறுகிறார்களே?
பதில்:உண்மையில் இப்பொழுது நாங்கள் செய்துகொண்டிருக்கின்ற இந்த சேவைகூட ஒரு வகையான அரசியல்தான். ஆனால் நீங்கள் குறிப்பிடுகின்ற நாடாளுமன்ற அரசியலிலோ மாகாணசபை அரசியலிலோ ஈடுபடுகின்ற எண்ணம் எனக்கு இல்லை. அதனை மக்களிடமே விட்டுவிடுகிறேன். அவர்கள் எதனை எதிர்பார்க்கிறார்களோ அது நடக்கட்டும். என்னைப் பொறுத்தமட்டில் இந்த அன்பு இல்லத்தில் இருக்கின்ற குழந்தைகளுடன் வாழவேண்டும் என்பதே அவா.
    கேள்வி: இறுதியாக உங்களிடம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன். தமிழீழ விடுதலைப் போராட்டம் தோல்வியடைந்தமையால் இன்று நீங்கள் இந்த நிலைமையில் இருக்கின்றீர்கள். ஒருவேளை, தமிழீழ போராட்டம் வெற்றிபெற்றிருந்தால் எப்படி இருந்திருப்பீர்கள்...?
பதில்: (சிரிப்பினை அடக்கமுடியாமல் சிரித்துக்கொண்டே....) போராட்டம் தோல்வியடைந்தமையால் இன்று நான் இந்த அன்பு இல்ல சின்னப் பிஞ்சுகளுடன் சந்தோஷமாக உரையாடி மகிழக்கூடியதாகவிருக்கிறது. ஒருவேளை போராட்டம் வெற்றியடைந்திருந்தால் இந்த சுதந்திரம் எனக்கிருந்திருக்காது.

ஜேர்மனியில் அதி திறமையுள்ளவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் மாணவி



ஜேர்மனி தேசத்தில் அண்மையில் நடைபெற்ற வரலாற்று ஆய்வுக் கட்டுரைப் போட்டியொன்றில் முதலிடத்தைப் பெற்று அதி திறமையுள்ளவராக ஈழத்தமிழ் மாணவி செல்வி ஷறீகா சிவநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஜேர்மனியின் வேல்பெனின் மாநிலத்தில் செல்ம் நகரத்தில் தனது பெற்றோருடன் வசிக்கும் மேற்படிச் செல்வி ஷறீகா அண்மையில் ஜேர்மன் மாணவர்களுக்கு இடையில் ஜேர்மனிய பிரதமரால் நடாத்தப்பட்ட வரலாற்று ஆய்வுக் கட்டுரைப் போட்டியொன்றில் முதல்பரிசைப் பெற்று சிறந்த திறமையுள்ள மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவரைப் பாராட்டும் முகமாக 04.08.11 அன்று செல்ம் (Selm) நகர மேயர் மாறியோ லோ தமது நகரத்தின் அதி திறமையுள்ள (talent) மாணவியாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்து பாராட்டுக் கேடயமும் வழங்கி கௌரவித்தார்.
இதற்கு முன்னர் கடந்த 18 யூலை மாதம் நோத்ரைன் வெஸ்பாலின் மாநிலத்தின் இளையோர் கலை கலாச்சார பாராளுமன்ற உறுப்பினர் ஊற்றே சேபர் அவர்கள் ( Ute Schäfter) ஷறீகா சிவநாதனுக்கு இப்பரிசை பொன் நகரத்தில் வழங்கியிருந்தார்.
இம் மாணவி ஜோ்மனியில் உள்ள செல்ம் நகரத்தில் பெற்றோருடன் வாழ்கின்றார்.
இங்கே காணப்படும் படத்தில் செல்வி ஷறீகா சிவநாதன் ஜேர்மனியின் செல்ம் நகரத்து மேயருடன் காணப்படுகின்றார்.

கீரிமலைக் கடலில் கற்பாறைகள் விழுந்து எழுந்து காலில், கையில், தலையில் எனக் காயப்பட்டு கெந்தி, நொந்து

கீரிமலைக் கடலில் நீராடுவதற்காக இறங்கி அங்கு பல்கிப்பெருகிக் கிடக்கும் பாறைக் கல்லுகளுடன் நடத்தும் போராட்டம் போதுமென்றாகி விடுகின்றது.

இந்த வருடத்தோடு கீரிமலைக்கடலில் தீர்த்தமாடுவதை தவிர்த்துவிட வேண்டும் என்ற முடிவை எடுக்குமளவிற்கு நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. ஆடி அமாவாசை தினத்தில் கீரிமலைக் கடலில் தீர்த்தமாட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பது தெளிவாகத் தெரிந்த உண்மை.

அதேபோல் கீரிமலைக் கடலில் கற்பாறைகள் தீர்த்தமாடக்கூடிய இடம் முழுவதிலும் பரந்திருப்பதும் தெரிந்த விடயம். அப்படியானால் கீரிமலைக் கடலில் தீர்த்தமாடுவதற்கு வசதியாக ஒரு பகுதிக்கேனும் கல்லுகளை அகற்றி பிதிர்க்கடன் தீர்ப்பவர்களுக்கு உதவி செய்யலாம் அல்லவா? எதுவுமே நடக்கவில்லை. தீர்த்தமாடியவர்கள் கடலில் விழுந்து எழுந்து காலில், கையில், தலையில் எனக் காயப்பட்டு கெந்தி, நொந்து நடப்பதைத்தான் காணமுடிகின்றது.

பெற்ற தாயை கொலை செய்த மகன்: மட்டக்களப்பில் சம்பவம் _

இராணுவ புலனாய்வு பிரிவில் கடமையாற்றி வந்த ஒருவர் தன் தாயை அடித்துக் கொலை செய்த சம்பவமொன்று இன்று அதிகாலையளவில், மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்முனைப்பற்று பிரதேச செயலக கிரான்குளத்தில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின் போது குறித்த சந்தேக நபர் மது போதையில் இருந்ததாகவும், தற்போது அவர் தப்பியோடியிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் சந்தேக நபரை தேடி வருவதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

பேராசிரியர் கூலை கைதுசெய்ய நீதிமன்று உத்தரவு Professor S. Ratnajeevan H. Hoole


- நமது நிருபர்
Hooleயாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ரட்ணஜீவன் கூலை கைது செய்யுமாறு ஊர்காவல்துறை மாவட்ட நீதிபதி திருமதி ஜோய்மகிழ் மகாதேவா இன்று உத்தரவிட்டுள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அவருடைய அலுவலகத்தில் வேலைபார்க்கும் ஆண் பெண் ஊழியர்கள், கட்சி அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள், அனுதாபிகள் ஆகியோருக்கு எதிராக தொடர்ச்சியாக இணையத்தளங்கள் மூலம் அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபட்டு சமாதானத்திற்குப் பங்கம் விளைவிக்க முயன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே பேராசிரியர் கூலை கைதுசெய்யுமாறு நீதிமன்று இன்று உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு ஜனாதிபதியிடம் தன்னை சிபார்சு செய்ய தவறியிருந்தார் என அமைசசர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வந்த பேராசிரியர் கூல் அண்மைக்காலங்களில் அமைச்சரிற்கு எதிராக அவதூறுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்திருந்தார். அண்மையில் இவர் எழுதியிருந்த கட்டுரையொன்றில் அமைச்சரும் அவரைச் சேர்ந்தவர்களும் கிறிமினல்கள் எனவும், அவருடன் இருப்பவர்கள் பலர் முன்னாள் புலி உறுப்பினர்கள் எனவும், இலங்கை ஜனாதிபதி அமைச்சருடனான தொடர்புகளை துண்டிக்காதுவிட்டால் மீண்டும் போராட்டம் வெடிப்பது தவிர்க்கப்படமுடியாதது எனவும் எச்சரிக்கை செய்திருந்தார். பேராசிரியரின் இந்த அவதூறுக் கட்டுரைக்கு எதிராக அமைச்சரின் ஆதரவாளர்கள் போராட்டம் ஒன்றிற்கு முஸ்தீபுகள் செய்யத் தொடங்கியதைத் தொடர்ந்து, பொலிசார் தலையிட்டதன் பின்னணியிலேயே தற்போது பேராசிரியர் கூலை கைது செய்ய நீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளதாக அறியவருகிறது.
பேராசிரியர் கூலுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவர் 2 வருடகாலம் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடலாம் என சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

ஸ்ரேயா கோஷல் மட்டும் ஓரளவுக்குத் தனியாக தெரிகிறார்


முதன்மையாக இந்தியிலும், பிறகு அநேக தேசிய மொழிகளிலும் பாடிவரும் ஸ்ரேயா கோஷலை நாம்  அதிகமும் தமிழ் வழியாகத்தான் கேட்டிருப்போம். அநேகமாக கடந்த பத்தாண்டுகளில் தமிழ்த் திரையிசை அறிமுகமப்படுத்தியிருக்கும் குரல்களில், தனிச்சிறப்பான அழகுகள் என்று கண்டு லயிப்பது சிரமம். ஒரே மாதிரியான குரல்கள், சலித்துப் போன ஃபார்முலா உணர்ச்சிகள், குரலிசையை மிஞ்சும் கருவியிசைகள், பாடல் வரிகளை மென்று தீர்க்கும் சப்தநுட்பங்கள்…
உலகமயமாக்கம் பண்பாட்டுத் துறையில் அனைத்தையும் ஒரே படித்தானவைகளாக  மாற்றுகிறது. தேசிய இனங்களின் தனியழகுச் சிறப்பான பண்பாட்டு அம்சங்கள், சாதனைகள் அனைத்தும் உலகச்சந்தையின் அகோரப் பசியில் இறந்து போகின்றன. தமிழ் சினிமாவும் சில விதிவிலக்குகளைத் தவிர இந்த அனைத்துலக திணிக்கப்பட்ட மேட்டுக்குடி வாழ்வை காட்சிப்படுத்துகிறது, இசையும் படுத்துகிறது.
தமிழ் சினிமாவை மொழிமாற்றி தெலுங்கிலோ, இந்தியிலோ வெளியிட்டால் கூட அது பண்பாட்டு மாறுபாட்டால் தடுமாறுவதில்லை. அங்கனமே மற்ற மொழிப் படங்களும். செல்பேசி, கோக், ஷாப்பிங்  மால்கள், பல்சர் பைக், ஜீன்ஸ் பேண்ட், உதட்டுச்சாயம் இத்தியாதிகளில் விதவிதமான தேசிய இனங்கள் வாழவா முடியும்? இந்த ஒருமைப்பாடு, வேறுபட்ட மக்களின் வாழ்க்கை உணர்ச்சியில், அழகான வேற்றுமைகளை இணைக்கும் ஆன்மாவாக மிளிரவில்லை. மாறாக நுகர்வை மாபெரும் அகோரப் பசிவெறியாக்கி நசுக்கி வருகிறது.
சென்னை சத்யம் திரையரங்கு சென்றால் மேட்டுக்குடி சீமான்களும், சீமாட்டிகளும் ஒரே உடையில், ஒரே மணத்தில், ஒரே உடல் மொழியில், ஒரே நாசுக்கில், கோக்கை இழுப்பது கூட ஒரே அளவில் இருப்பதைப் பார்க்கலாம்.  ஆனால் சென்னை மாநகராட்சியின் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பள்ளி முடிந்து வீடு திரும்பும் காட்சியைக் கண்டால் நூற்றுக்கணக்கான அழகுகளையும், உடல்மொழிகளையும், குதூகலத்தையும் அறியலாம். உழைக்கும் மக்களிடத்தில் இருக்கும் அந்த வேற்றுமையான தனித்தனி அழகு ,வார்க்கப்படும் பார்பி பொம்மை போன்ற கனவான்களிடம் கடுகளவு கூட உணர முடியாது.
ஆகவேதான் தமிழ் பின்னணி பாடகர்களும் அப்படி ஒரு படித்தானவர்களாக பாடுவதால் நமக்கு எல்லாம் ஒரே குரலாய், இசையாய் தெரிகிறது. நட்சத்திரங்களின் இமேஜை வைத்தே வெற்றியடையும் பாடல்கள் அடையாளம் காணப்படுகின்றன. முந்தைய தலைமுறையைச் சேர்ந்த , டி எம் சௌந்தரராஜன் பி பி ஸ்ரீநிவாஸ் எ எம் ராஜா பி சுசீலா எல் ஆர் ஈஷ்வரி வாணி ஜெயராம் உமா ரமணன் முதலானவர்களின் தனியழகு நினைவுகளை இப்போது யாரிடம் தேடினாலும் கிடைப்பது கடினம்.
இத்தகைய கடினமான உலகமய மோல்டிங் கலைச் சூழலில்தான் ஸ்ரேயா  கோஷல் மட்டும் ஓரளவுக்குத் தனியாக தெரிகிறார். எனினும் ஊடகப் பெருவெளி உருவாக்கி வரும் அழகுப் பெண்ணின் குரல் மாதிரியோடு ஸ்ரேயா கோஷலின் குரலும் பெருமளவு ஒத்துப்போவது கண்கூடு.  சமகால நாயகிகளுக்கு டப்பிங் குரல்தான் என்றாலும் அது தனித்தனி வேறுபாடுகளைக் கொண்டிருப்பதில்லை.  அது ஒரு வகையான நகரத்து மேட்டுக்குடி நடுத்தரவர்க்க பெண்ணின் ரோல் மாடலான குரல். அந்த வகையில் ஸ்ரேயா கோஷலின் குரலும் சினிமாவில் இன்று தேவைப்படுகிறது. என்றாலும் அவரது தனித்திறமைகள் அந்த மாதிரித் தோற்றத்தை கொஞ்சம் வெற்றி கொண்டிருப்பதும் நிஜம்.
இயக்குநர் பாலுமகேந்திரா, ஹாலிவுட் படமொன்றை ஷாட்டுக்கு ஷாட் சுட்டு எடுத்த ஜூலி கணபதியில்தான் ஸ்ரேயா கோஷலை “ எனக்குப் பிடித்த பாடல்” மூலம் கேட்டதாக நினைவு. பிறகு விருமாண்டி, சில்லுனு ஒரு காதல், நான் கடவுள், செல்வராகவன் படங்கள், படமே தெரியாத பாடல்கள் என்று தொடரும்போது அவரது குரல் எனக்கு தனித்து தெரியத் தொடங்கியது. ஆர்வத்துடன் தேடிப் பிடித்துக் கேட்டேன். கேட்கிறேன்.
வரம்புக்குட்பட்ட கலைத்தூண்டுதலில், திட்டவட்டமான வகைமாதிரிகளையே விதிகளாக கொண்டு இயங்கும் தமிழ் இசையில் இந்த பெண் மட்டும் ஏதோ ஒரு விதத்தில் அதை கொஞ்சம் தனது சாயலோடு பாடுகிறாரோ என்று தோன்றியது. ஆலாபனைகளில் அவர் தோய்ந்து பாடும் போது தெரியும் உணர்ச்சிகளில் இழையோடும் அசாத்தியத் திறமை ஆச்சரியப்படுத்தியது. இசை, பாடல் வரிகள், உப்புமா கதைகள் அத்தனையும் ஸ்ரேயா கோஷலின் குரலிசையில் மண்டியிடுகின்றனவோ என்று கூட தோன்றியது.
1984-இல் வங்கத்தில் பிறந்த கோஷல் அவரது தந்தையின் அணு உலை பொறியாளர் பணி காரணமாக ராஜஸ்தானில் வளர்கிறார். பெற்றோர் இருவரும் படித்தவர்கள் என்பதோடு கூட இசையார்வமும் உள்ளவர்கள். காரணமாக  ஸ்ரேயாகோஷல் அங்கே மகேஷ் சந்திர ஷர்மா என்ற இந்துஸ்தானி கலைஞரிடம் இசை பயில்கிறார். ராஜஸ்தான், இந்துஸ்தானி இரண்டும் மிக வளமான இசைப் பின்னணி கொண்டவை. ராஜஸ்தானின் நாட்டுப்புறப் பாடல்களில் பாலைவனத்தின் சோகமும், கம்பீரமும், உச்சஸ்தாயில் பாடும் பெண்களது வலிமையும் எவரையும் சுண்டி இழுக்கும்.
பாரசீகத்திலிருந்து ராஜஸ்தான் வரையிலும் இசைக்கு ஒரு வரலாற்றுரீதியான இழையும் தொடர்பும் காலந்தோறும் இருந்து வருகிறது. மொகலாயர்களது பங்களிப்பாக வளர்ந்த இந்துஸ்தானி இசை, செவ்வியல் இசையறிவு இல்லாத பாமரர்களையே சுண்டி இழுக்கும். தமிழிசையிலிருந்து திருடப்பட்ட கர்நாடக இசையும் ஒரு செவ்வியல் இசைதான் என்றாலும் இதில் பாடுபவர்கள் இசையை கணிதம் போல பாடுவார்கள். மனோபாவத்துக்கு முக்கியத்துவம் தருவதாக கூறப்படும் கர்நாடக இசையில் உணர்ச்சியை விட தாளத்தின் ஸ்வர வரிசையே மேலோங்கி இருக்கும். இந்துஸ்தானியில் கணிதம் இருந்தாலும் உணர்ச்சிதான் முதன்மையானது.
அதற்கும் ஒரு வரலாற்றுக் காரணம் உண்டு. ஹிந்துஸ்தானி இசை அடிப்படையில் மதச்சார்ற்ற இசை. வாழ்வின் மகிழ்ச்சியை, கேளிக்கையை பாடுவதற்காக உருவான இசை. கர்நாடக இசை பக்தியை மட்டுமே கொண்ட மதச்சார்பு இசை. வாழ்வின் மற்ற உணர்ச்சிகளுக்கு இங்கே இடமில்லை.
அதனால்தானோ என்னமோ இசையறிவு அற்ற பாமரர்களும் ஹிந்துஸ்தானி இசையில் மயங்குவது போல கர்நாடகத்திடம் நெருங்குவதில்லை. இன்னதென்று சொல்லத் தெரியாத இனிமை ஹிந்துஸ்தானி இசையிடம் இருக்கிறது என்று ஒரு இசையமைப்பாளரான நண்பர் சொன்னார்.

மாப்பிள்ளை விவகாரம் : அம்மா - மகள் மோதல்...?!!

அம்மா -மகள் என்று இல்லாமல் தோழிகளை போல் ஒன்றாக சுற்றி வந்தவர்கள் த்ரிஷாவும், அவரது அம்மா உமா கிருஷ்ணனும். பார்டியாகட்டும், பொது நிகழ்ச்சிகள் ஆகட்டும் இருவரும் ஒன்றாகத்தான் தெரிவார்கள். இப்படி இணக்கமாக இருந்த இருவருக்கும், இப்போதும் கடும் மோதல் ஏற்பட்டிருக்கிறதாம். இந்தமோதலுக்கு காரணம் த்ரிஷா பற்றிய திருமணம் செய்திதானாம்.

இருதினங்களுக்கு முன்னர் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் அல்லது சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவரை த்ரிஷா திருமணம் செய்ய இருப்பதாகவும், செப்டம்பரில் இவர்களது நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாகவும் த்ரிஷாவின் தாயார் உமா ‌கூறியிருந்தார். ஆனால் இந்த செய்தி வெளியான அன்றிரவே தனது டிவிட்டர் வலைதளத்தில் இதனை மறுத்துள்ளார் த்ரிஷா. இதற்கு காரணம் மாப்பிள்ளை யார் என்பதில், த்ரிஷாவுக்கும், உமாவுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் மோதல் தான்.

காதல் திருமணம்தான் செய்வேன் என்று அடிக்கடி கூறிவரும் த்ரிஷா, இப்போது தனது மனதுக்கு பிடித்தமான ஒருவரை தேர்வு செய்து வைத்துள்ளாராம். ஆனால் உமாவோ, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறாராம். அதனால் தான் த்ரிஷாவுக்கு மாப்பிள்ளை பார்த்திருப்பதாகவும், அவர் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் என்றும் உமா பத்திரிகைகளுக்கு செய்தி கொடுத்திருக்கிறார். இதில் கடுப்பான த்ரிஷா, மீண்டும் தன் திருமண செய்திக்கு ட்விட்டரில் மறுப்பு தெரிவித்துள்ளார்.

த்ரிஷா திருமணத்தால் அம்மா-மகளுக்கு இடையே புகைச்சல் ஏற்பட்டு இருக்கிறது
ரஜனிகாந்த் நலம் பெற 1008 ரசிகர்கள் பழனியில் மொட்டை போட்டுக்கொண்ட மாதிரி திரிஷாவின் நல்வாழ்வுக்காகவும் 10008 பேராவது மொட்டை போடுங்களேன் நாவிதர்கலாவது பிழைத்து போகட்டும்.

U.P 165 பேரை கொன்ற கூலிப்படை தலைவன் கைது



உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த, பல வருடங்களாக பணத்திற்காக கொலை செய்யும் கூலிப்படைக் கூட்டத்தின் தலைவன் ஜக்கு பெஹெல்வான் என்பவனை மாநில போலீசார் சுற்றிவளைத்துப் பிடித்தனர்.

இந்த கொலைக்காரன் பணத்திற்காக இதுவரை சுமார் 165 க்கும் மேற்பட்டவர்களை கொன்றதாகவும், கொல்லப்பட்டோரில் பல தொழிலதிபர்களும், வர்த்தக காண்டிராக்டர்களும், ஓட்டல் முதலாளிகளும் அடங்குவர் என்றும், இவனை பிடித்த உயர் போலீஸ் அதிகாரி அனில் கபர்வான் தெரிவித்துள்ளார்.

முதன்முதலில் 1998 ஆம் ஆண்டு டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை பணத்திற்காக கொல்ல ஆரம்பித்த இவன்,  இதுவரை 165 க்கும் மேற்பட்டவரைக் கொன்றிருப்பதாக போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த கொலைகார கூலிப்படைத்தலைவனின் மனைவி காசியாபாத்தில் உள்ள ஒரு கிராமத்தின் கவுன்சிலர் தலைவராக எதிர்ப்பு ஏதுமின்றி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

An alleged contract killer believed to be responsible for the deaths of more than 150 people has been arrested in India following a manhunt lasting more than a decade.
Jaggu Pehelwan was detained by armed police in the city of Ghaziabad, in the poor and lawless northern state of Uttar Pradesh, on Monday night. Five shots were fired during his arrest but no one was hurt.
Pehelwan, the leader of one of the most notorious criminal gangs in the city, has been formally charged with 30 murders over a 15-year criminal career and police believe he is responsible for around 130 more. Victims have included his own gang members suspected of disloyalty, rival criminals and scores of others, whom Pehelwan is accused of killing for cash…
The case has revealed the deep problems of India’s law enforcement and justice system, where criminals routinely intimidate or bribe witnesses and judges. Kaparwan said that obtaining a conviction and getting his detainee imprisoned could be difficult.
There are hardly any witnesses [prepared to testify] against him…”
Pehelwan charged between £12,500 and £32,500 to kill, officials said, and had recently done a deal for two dozen murders for £200,000. Targets included a telecoms operator, a building contractor and a local party activist…
Officials said those who had commissioned the killings would now be tracked down and brought to justice.
Pehelwan ranged over hundreds of miles in the north-west, but his base remained Ghaziabad. Like many wealthy criminals in India, he apparently hoped to use his riches to move into politics, a favoured means of laundering earnings, bolstering power and accessing lucrative contracts.
His wife was elected – unopposed – as head of his local council. Pehelwan himself was reported to have hoped to stand in local state elections next year.

என் கணவர் பல பெண்களை ஏமாற்றி கற்பழித்தவர்: தயாரிப்பாளர் மனைவி புகார்

தனது கணவன் பல பெண்களை ஏமாற்றி கற்பழித்துள்ளதாக திரைப்பட தயாரிப்பாளர் கோபாலின் மனைவி போலீசில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

திருச்சியைச் சேர்ந்தவர் கோபால். தகப்பன்சாமி, உச்சக்கட்டம் ஆகிய படங்களைத் தயாரித்தவர். அவரது மனைவி ராதிகா. அவர்களுக்கு 14 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.

இந்நிலையில் இன்று ராதிகா திருச்சி கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு கமிஷனர் மாசானமுத்துவை சந்தித்து தனது கணவன் கோபால் மீது புகார் ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில் தனது கணவன் பல பெண்களை ஏமாற்றி கற்பழித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 2009-ம் ஆண்டு உச்சக்கட்டம் படபிடிப்பின்போதே கோபால் தினமும் குடித்துவிட்டு வந்து நடிகைகளை இம்சிக்கிறார் என்று கிடைத்த புகாரின்பேரில் இயக்குனர் சங்கம் அவரைக் கண்டித்தது என்பது குறிப்பிடத்தகக்து.

சோனியா காந்திக்கு நியூயார்க்கில் ஆபரேஷன் முடிந்தது- தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு

டெல்லி: நியூயார்க் புற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு ஆபரேஷன் முடிவடைந்து தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு ஏற்பட்டுள்ள உடல் நலப் பிரச்சினை குறித்து சோனியா குடும்பத்தாரோ அல்லது காங்கிரஸ் கட்சியோ அல்லது மத்திய அரசோ எந்தத் தகவலையும் முழுமையாக வெளியிடாமல் ரகசியம் காப்பதால் காங்கிரஸ் மத்தியில் பெரும் குழப்பம் நிலவுகிறது.
நியூயார்க் மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார் சோனியா காந்தி. அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை நடந்துள்ளது. ஆபரேஷனுக்குப் பின்னர் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவருக்கு வயிற்றில் ஆபரேஷன் நடத்தப்பட்டதாகவும்,அது வெற்றி பெற்றுள்ளதாகவும், தற்போது சோனியா காந்தி நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் என்ன நோய்க்கான சிகிச்சை இது என்பதை டாக்டர்கள் தெரிவிக்கவில்லை.
மேலும், சோனியா காந்தியின் நோய் குறித்த விவரங்களை தாங்கள் வெளியிட முடியாது என்றும் மருத்துவமனை வட்டாரம் மறுத்து விட்டது.

அவருடன் மகள் பிரியங்கா காந்தி உடன் இருக்கிறார். வேறுயாரும் சோனியாவைப் பார்க்க அனுமதி வழங்கப்படவில்லை.
கடந்த வாரத்தில் காய்ச்சலால் அவதி:
கடந்த ஒரு வாரமாகவே சோனியா காந்தியைக் காணவில்லை. அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக முதலில் காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் அறுவைச் சிகிச்சை அளவுக்கு அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக திடீரென தகவல்கள் வந்து அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது. அதுவும் அமெரிக்காவில் போய் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய அளவுக்கு நிலைமை போயுள்ளதை திடீரென காங்கிரஸ் தரப்பு கூறியிருப்பதால் காங்கிரஸார் குழப்பமடைந்தனர்.
அவரது உடலுக்கு என்ன பிரச்சினை என்பதும் தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை. இதற்கிடையே டெஹல்கா இணையதளம் தனது ட்விட்டர் தகவலில் கூறுகையில், சோனியா காந்தி நியூயார்க் ஸ்லோவன் கேட்டரிங் புற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உலகிலேயே மிகப் பெரிய புற்றுநோய் மருத்துவமனை இது என்று தெரிவித்துள்ளது. இதனால் காங்கிரஸார் மத்தியில் பெரும் பரபரப்பு கிளம்பியது.
மேலும், புகழ் பெற்ற புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் தத்தாத்ரேயுடு நோரி என்பவர் தான் சோனியாவுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவலைக்கிடமான நிலைக்குப் போன சோனியா:
சோனியா காந்தியின் உடல் நலம் குறித்து தெளிவான தகவல்கள் தெரியவில்லை என்றபோதிலும் அவர் சில நாட்களுக்கு முன்பு கவலைக்கிடமான நிலைக்குப் போய் விட்டதால்தான் உடனடியாக அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டு அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டதாக அவரது குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் மூலம் தகவல்கள் கசிந்துள்ளன.
உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்தே ஆக வேண்டிய நிலைக்கு சோனியா காந்தியின் நிலை இருந்ததாகவும், இதையடுத்தே அவர் நியூயார்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அத்தகவல்கள் கூறுகின்றன.

இதுகுறித்து இங்கிலாந்தின் டெலிகிராப் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், சோனியா காந்தியின் உடல் நிலை மிகவும் மோசமானதால் உடனடியாக அவர் நியூயார்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உடனடியாக அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டது. இருப்பினும் அவரது குடும்பத்தினர் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சோனியா காந்திக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் நோரி உலகப் புகழ் பெற்ற புற்றுநோய் மருத்துவர் ஆவார். குறிப்பாக பெண்களுக்கான புற்றுநோய் சிகிச்சையில் அவர் மிகவும் திறமையானவர். உலகளவில் புகழ் பெற்ற வெகு சில பெண்கள் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் நோரி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஆந்திர மாநிலம் கர்னூலைச் சேர்ந்தவர். தற்போது அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கு மருத்துவ நிபுணராகப் பணியாற்றி வருகிறார்.
2 ஆண்டுக்கு முன்பே சிகிச்சை பெற்றார் சோனியா:
ரகசியமாக டெல்லியை விட்டு சோனியா காந்தி மருத்துவ காரணங்களுக்காக செல்வது கடந்த 2 மாதங்களில் 2வது முறையாகும். இதற்கு முன்பு அவர் மருத்துவப் பரிசோதனைக்காக யாருக்கும் தெரிவிக்காமல் அமெரிக்கா சென்றிருந்தார். தற்போது சிகிச்சைக்காக அவர் சென்றுள்ளார்.
2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். அப்போது கூட அவருக்கு என்ன பிரச்சினை என்பது தெரிவிக்கப்படவில்லை.

காங்கிரஸார் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சிகிச்சைக்காக சோனியா காந்தி அமெரிக்கா சென்றுள்ளார் என்று நேற்று காங்கிரஸ் தரப்பில் வெறுமனே ஒரு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் அவர் திரும்பி வரும் வரை ராகுல் காந்தி உள்ளிட்ட நான்கு பேர் குழு காங்கிரஸ் நிர்வாகத்தைப் பார்த்துக் கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சோனியா காந்தியுடன் அவரது பிள்ளைகளான ராகுல் காந்தியும், பிரியங்காவும் உடன் உள்ளனர். இருப்பினும் ராகுல் காந்தி இன்று திரும்பி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சோனியா காந்தியின் உடல் நலம் குறித்து முழுமையான தகவல்கள் வெளியாகாமல் இருப்பதாலும், புற்றுநோய் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாலும் காங்கிரஸார் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

சோனியா குணமடைய கருணாநிதி வாழ்த்து:

இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விரைவில் குணமடைய வேண்டுவதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேலுக்கு அவர் அனுப்பிய தந்தியில்,

சோனியா காந்தி உடல் நலமில்லாமல் இருக்கும் செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவர் விரைவாக குணமடையவும், நல்ல ஆரோக்கியத்துடன் விரைவிலேயே நாடு திரும்பி, மக்களுக்கு சிறப்பான சேவைகளை தொடர்ந்து செய்யவும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

சமையலறையில் அணு உலை அமைத்த வாலிபர்!சுவீடன்: வீட்டில்

Nuclear Kitchen
ஸ்டாக்ஹோம்: வெளிநாடுகளில் இருந்து கதிர்வீச்சு கொண்ட தனிமங்களை வாங்கி வீட்டிலேயே அணு உலையை அமைத்த சுவீடன் நாட்டு வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சுவீடனின் மேற்குப் பகுதியில் கடலோர நகரமான ஏஞ்சல் ஹோல்ம் நகரை சேர்ந்தவர் ரிச்சர்ட் ஹேண்டில் (31). ஒரு அபார்ட்மெண்ட்டில் குடியிருந்து வரும் இவர் கடந்த 6 மாதமாக தனது வீட்டின் சமையல் அறையில் அணு உலையை உருவாக்கி வந்துள்ளார்.

இதற்காக சில வெளிநாடுகளில் இருந்து கதிர்வீச்சு தனிமங்களை வரவழைத்துள்ளார். மேலும் தனது வீட்டின் மின்சார அலார்ம் கருவியில் இருந்த Americium-241 என்ற கதிர்வீச்சு கொண்ட தனிமத்தையும் பிரித்தெடுத்துள்ளார். இந்த கதிர்வீச்சு கொண்ட தனிமங்களின் உதவியோடு அணு உலையை உருவாக்கி வந்துள்ளார்.

ஆனால், திடீரென இவருக்கு ஒரு சந்தேகம் வந்துள்ளது. அதாவது, வீட்டிலேயே அணு உலையை அமைப்பது சட்டப்படி சரியா என்பதே அந்த சந்தேகம். இது குறித்து விளக்கம் கேட்டு சுவீடனின் அணு ஆராய்ச்சி ஆணையத்துக்கு ஒரு இ-மெயில் அனுப்பினார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து அணு விஞ்ஞானிகள் மற்றும் ராணுவத்தினர் அணுக் கதிர்வீச்சைக் கண்டறியும் கருவிகளுடன் இவரது வீட்டை முற்றுகையிட்டனர். சோதனையில் இவரது வீட்டின் சமையல் அறையில் கதிர்வீச்சு கொண்ட Americium-241 இருந்தது தெரியவந்தது. கதிர்வீச்சை கண்டறியும் Geiger counter கருவியும் இவரது வீட்டில் இருந்தது.

இவற்றைக் கைப்பற்றிய ராணுவத்தினர், அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த தனிமம் தவிர வேறு என்னென்ன கதிர்வீச்சு கொண்ட தனிமங்கள் வீட்டில் இருந்தன என்ற தகவலை சுவீடன் அரசு வெளியிடவில்லை. ஆனால், இவரது வீட்டிலிருந்து பெரிய அளவில் கதிர்வீச்சு ஏதும் வெளியாகவில்லை என்று மட்டும் அரசு தெரிவித்துள்ளது.

மின்சார அலார்ம்களில் Americium-241 என்ற செயற்கையாக உருவாக்கப்பட்ட கதிர்வீச்சு கொண்ட தனிமம் இருப்பது சாதாரணம் தான். ஆனால், இதை தனியே பிரித்தெடுப்பது சட்டப்படி குற்றமாகும். இந்த தனிமத்தை நுகர்ந்தாலோ அல்லது அதை தெரியாமல் உண்டாலோ பெரிய அளவில் உடல் நல பாதிப்புகள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர், எந்தெந்த நாடுகளில் இருந்து கதிர்வீச்சு கொண்ட தனிமங்களை வாங்கினார் என்ற விசாரணையும், அதை இவருக்கு அனுப்பியவர்கள் குறித்த விசாரணையும் தொடங்கியுள்ளது. இந்த விசாரணைகளில் அமெரிக்காவின் சிஐஏயும் களமிறங்கியுள்ளது.

தான் செயது வரும் ஆராய்ச்சி குறித்த விவரங்கள், படங்கள் சிலவற்றையும் ஹேண்டில் கடந்த சில மாதங்களாகவே இன்டர்நெட்டில் வெளியிட்டு வந்துள்ளார். ஆனால், அதை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் இருந்துள்ளனர்.

Ambani will lose his palace?அம்பானியின் உலகபெரும் மாளிகை பறிபோகும் அபாயம்


TheIndian richest man faces the possibility of losing the world's most expensive family home as it was claimed to be built on charity land sold illegally.
The world's ninth wealthiest man Mukesh Ambani moved his wife and three children into Antilia 27-storey tower block home on Mumbai's Arabian seafront last year.
The construction of this house had cost more than $1 billion which consist of three helipads, a 50-seat cinema, several swimming pools, a ballroom, six floors of parking for 160 cars and space for 600 domestic staff.
It was built as symbol of his rise from the son of a petrol pump worker to the India's most powerful man with a personal fortune of more than £16 billion. But the petro-chemical magnate could lose his house if the case is proved.
The local minority affairs minister Mohammed Arif Naseem Khan has told the state assembly that the plot had been illegally sold by a children's charity which ran an orphanage on the site to Ambani.
He said the land was owned by the Waqf Board, a trust which controls Muslim heritage properties and charitable institutions throughout India

இந்திய ஊடகங்களின் பொய் பித்தலாட்டம் சங்கிலியன் வாளை காணவில்லையாம்

தட்ஸ்தமிழ் என்ற இணையம் அடுக்கி இருக்கும் புழுகு மூட்டையை வாசியுங்க.
யாழ்ப்பாணம்: இலங்கையை ஆட்சி செய்த கடைசி தமிழ் மன்னரான சங்கிலியனின் சிலையில் இருந்த வீரவாளை அகற்றியுள்ளது இலங்கை அரசு.

இலங்கையை ஆட்சி செய்த கடைசி தமிழ் மன்னரான சங்கிலியனின் சிலை யாழ்ப்பாணத்தில் நல்லூர் முத்திரைச் சந்திப் பகுதியில் வைக்கப்பட்டிருந்தது. வீரவாளை உயர்த்தி பிடித்தப்படி சங்கிலியன் குதிரையில் பாய்ந்து செல்வது போன்று அந்த சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது.

இறுதிக்கட்டப் போருக்கு பிறகு தமிழர்கள் வாழும் வடக்கு, மற்றும் கிழக்கு பகுதிகள் சிங்கள அரசின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. இதையடுத்து யாழ்ப்பாணத்தில் உள்ள மன்னர் சங்கிலியன் சிலை அகற்றப்பட்டது. அதற்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து தற்போது அந்த சிலையை அதே இடத்தில் வைத்துள்ளனர்.

இதை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்தார்.

ஆனால், சங்கிலியனின் சிலையின் வலது கையில் விண்ணை நோக்கி உயர்த்தி பிடித்து இருந்த வீரவாள் இல்லை. அதை இலங்கை அரசு அகற்றியுள்ளது.

மேலும் அவரது வலது கை மடக்கி வைக்கப்பட்ட நிலையில் மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது. சங்கிலிய மன்னன் சரணடைவது போன்று மாற்றி அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிலை. இதற்கு தமிழ் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

அந்த அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், சங்கிலியன் கையில் இருந்த வீரவாளைக் கண்டு பயந்த( ஆஹா யார் யாரை பார்த்து பயந்தார்கள் என்பது இவர்களுக்கு இன்னும் புரியல்ல என்னங்கட ஒட்டுமொத்தமாக கீழ்பாக்கத்துக்கு போய்ட்டாங்க?) இலங்கை ராணுவம், சிங்கள அரசியல்வாதிகள், மந்திரிகள், யாழ்ப்பாண நகரபிதா, வட மாகாண அரசாங்க அதிபர், அமைச்சர் டக்ளஸ், அந்த வீரவாளை எடுத்து விட்டு புதிய சங்கிலியன் சிலையை அதே இடத்தில் வைத்திருக்கிறார்கள்.

முழுப்பித்தலாட்டம் என்பதன் பொருள் இதுதான். பிரசுரிக்கப்பட்ட புதிய படத்தில்கூட வீரவாள் தெளிவாக தெரிகிறது. ஆனாலும் அரசியல் விபச்சாரம் செய்வோம் என்று அடம்பிடிக்கும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளையும் மிஞ்சும் அளவுக்கு ஊடகங்களும் கிளம்பியிருப்பது என்ன வென்பது?
இந்திய ஊடகங்களின் பொய் பித்தலாட்டம் சங்கிலியன் வாழை கானவில்லியாம்.
மேலே உள்ள நல்லூர் கொடிசீளை பவனி கானொளியில் சங்கிலியனும் தெரிகிறான் அவனது வாழும் தெளிவாக தெரிகிறது கண் உள்ளவர் காணீர்.

KP:This is an internal problem. We are blundering again and again

KP urges Diaspora to help


Former LTTE arms procurer and the present head of NERDO organisation Kumaran Pathmanathan at an orphanage in Mullaitivu called ‘Ambu Illam’ (Home of Love). Pic by Manoj Ratnayake
Says don’t run to India over minor ills

By A.P. Mathan in Mullaitivu
Former chief arms procurer of the LTTE KP yesterday called on the Tamil Diaspora to stop their campaign that provokes anger and hatred.
Kumaran Pathmanathan, the former chief arms procurer now heads the North East Rehabilitation and Development Organisation (NERDO) 
“I think talking about Channel 4 as a means of revenge is absurd. I plead to the Tamil Diaspora to stop their campaign that provokes anger and hatred.
They have to know the reality. We must live in peace,” he said in an interview with the Daily Mirror in Mullaitivu.
“There are different groups amongst them. They (The Diaspora) are in dark. They are completely ignorant and gullible. They believe Prabhakaran is alive and an armed struggle is to start soon.
“Some Tamil Nadu politicians and a section of Tamil Diaspora are spearheading this campaign of falsehood to hoodwink the expatriates.
“I call upon the Tamil Diaspora to see about our people living in poverty. Have these extremists and those who are in the forefront of a vicious campaign against the government done anything for these people or children? It is a clear case of duplicity when they say they are speaking for the society while doing nothing to mitigate the suffering of these children.”
Mr. Pathmanathan met the Daily Mirror at an orphanage run by the NERDO in Muththaiyankattu in Mullaitivu.
When asked about the role of India in formulating a political solution in Sri Lanka he said:  “This is an internal problem. We are blundering again and again. We run to India for everything. This is a historical blunder. “I think, the majority of the people have a fear. We must understand this. There are a little over ten million Sinhalese in Sri Lanka and  60 million Tamils in Tamil Nadu. They are afraid that the Tamils in Tamil Nadu could overrun Sri Lanka. We should not fuel this fear. We should not run to India complaining over minor matters. In Tamil Nadu people like Seeman, Vaiko, and Nedumaran make fiery speeches that can provoke the majority. This should be stopped.
“India is doing its maximum. India would not go further than this and propose a solution. So this should be understood by the responsible people.”

சீனாவின் அணைக்கட்டால் இந்தியாவுக்கு பாதிப்பு? இல்லையாம் பிரதமர் மன்மோகன் சிங்

புதுடில்லி: "பிரம்மபுத்திரா ஆற்றில் நாங்கள் கட்டும் அணையால், இந்தியாவின் நலன் பாதிக்கப்படாது என, சீனா உறுதி அளித்துள்ளது. சீனாவின் இந்த உறுதிமொழி மீது, இந்தியா மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது' என, பிரதமர் மன்மோகன் சிங் நேற்று ராஜ்யசபாவில் கூறினார். பிரம்மபுத்ரா ஆற்றில், ஜாங்கு என்ற இடத்தில், புதிய அணையை சீனா கட்டி வருகிறது. நீர் மின் திட்டத்துக்காக கட்டப்படும் இந்த அணையால், இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படும் என, புகார் எழுந்தது. இது தொடர்பான கேள்விக்கு, வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா, ராஜ்யசபாவில் நேற்று பதில் அளித்தார்.

அப்போது குறுக்கிட்ட பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது: இந்தியாவும், சீனாவும் அண்டை நாடுகள். ஏதாவது ஒரு விவகாரத்தில், ஒருவரைப் பற்றி மற்றொருவர் பேசும்போது, இரு நாடுகளுக்கு இடையேயான உறவு பாதிக்கப்படும். பிரம்மபுத்திரா ஆற்றில், சீனா கட்டி வரும் அணை குறித்து, அந்த நாட்டு அதிகாரிகளிடம், நாம் கவலை தெரிவித்தோம். இதை ஏற்றுக்கொண்ட சீன அரசு, இந்த அணையால், இந்திய நலனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என, உறுதி அளித்துள்ளது. சீனாவின் இந்த உறுதி மீது, நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். அதே நேரத்தில், அணையால் நமக்கு பாதிப்பு எதுவும் வருமா என, ஆய்வு செய்வதற்கான முயற்சியிலும் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

முன்னதாக அமைச்சர் கிருஷ்ணா பேசுகையில், "புதிதாக கட்டப்படும் அணை, நீர் மின் உற்பத்திக்காகவே கட்டப்படுவதாகவும், நீரை தேக்கி வைப்பதற்காக கட்டப்படவில்லை என்றும் சீனா தெரிவித்துள்ளது' என்றார்
இந்தியாவுக்கு அந்த அணையால் பாதிப்பு என்றாலும் கூட ஒண்ணும் பண்ணமுடியாது என்பது தான் உண்மை. நிலைமை இப்படி இருக்க சதா நாம வல்லரசாவோம் என்று பாமர ஜனங்களுக்கு ரீல் விட்டு விட்டே முட்டாள்களின் ராஜ்யமாகிவிட்டோம்லே 

தமிழக நதிகளை இணைப்பதே அரசின் முதல் பணி

: தமிழகத்தில் நதிகளை இணைப்பதே, அரசின் முதன்மைப் பணியாகக் கருதப்படுகிறது. இதனால், பாசன வசதிகளை மேம்படுத்துவது, வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவது, உள் நாட்டு நீர் போக்குவரத்து போன்ற பல பயன்கள் ஏற்படும். பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகம் நீர் பற்றாக்குறை உள்ள மாநிலம். பாசன வசதிக்கு முற்றிலும் பருவ மழையை நம்பியிருக்கிறது. தமிழகத்தில் உள்ள நதிகளை இணைப்பதை, இந்த அரசு முதன்மைப் பணியாகக் கருதுகிறது. நதிநீர் இணைப்பால், பாசன வசதிகள் மேம்படுத்துவது, வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவது, உள் நாட்டு நீர் போக்குவரத்து போன்ற பல பயன்கள் ஏற்படும். முதற்கட்டமாக, காவிரி ஆற்றை வைகை, குண்டாறு ஆறுகளுடன் இணைப்பதற்காக, காவிரி ஆற்றில் கட்டளைக் கதவணை அமைக்கும் பணி, 189 கோடி ரூபாயில் ஏற்கனவே நடைபெற்று வருகிறது. இதற்காக, 2011-12ம் ஆண்டில், 93 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். இதன் அடுத்த கட்டமாக, கட்டளைக் கதவணையை குண்டாறு ஆற்றுடன் இணைக்கும் பணியை இந்த அரசு துவங்கும். மத்திய அரசு உதவியுடன், வெள்ள மேலாண்மைப் பணியாக, இரண்டாம் கட்டத்தில் இப்பணி செய்யப்படும். முதற்கட்டமாக, கட்டளை அணைக்கட்டிலிருந்து கால்வாய் அமைத்து, அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, மணிமுத்தாறுடன், 3,787 கோடி ரூபாய் செலவில் இணைக்கப்படும். இரண்டாவது கட்டத்தில், மணிமுத்தாறு, வைகை ஆற்றுடன் குண்டாறு, 1,379 கோடி ரூபாய் செலவில் இணைக்கப்படும். இந்த வெள்ளத்தடுப்புப் பணிகளுக்கு, 5,166 கோடி ரூபாய் மதிப்பில், விரிவான அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்படும். எனினும், மத்திய அரசின் உதவிக்காகக் காத்திருக்காமல் , மாநில அரசே இப்பணியினை உடனடியாகத் தொடங்கும். இப்பணிக்காக, 2011-12ம் ஆண்டில், 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நம்பியாறுடன் தாமிரபரணி ஆற்றை இணைக்கும் பணி, 369 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. 2011-12ம் ஆண்டில், இப்பணிக்காக 90 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.